25:1513 ஹஜ்

பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தையும் கொடுங்கள்! (2:43, 2:83, 2:110). நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவினருடன் இணக்கமாக இருத்தல்,சுயமரியாதை ஆகியவற்றைக் கட்டளையிட்டார்கள் என்று அபூசுஃப்யான் (ஹிர்கல்-ஹெராக்ளியஸ் மன்னரிடம்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். 
1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது ‘கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்!’ என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது. 
Book : 25