1396. அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. ‘என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்’ எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) ‘இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!’ (என்று கூறிவிட்டு அவரிடம்.) ‘நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.
Book :24