21:1199 தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

பாடம் : 2 தொழுகையில் பேசக்கூடாது 
1199. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
காலத்தில்) நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸினியாவின் மன்னர்) நஜ்ஜாஷியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) ‘நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன’ என்று கூறினார்கள். 
Book : 21