20:1191 மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு

பாடம் : 2 குபா பள்ளிவாசல். 
1191. நாஃபிவு அறிவித்தார். 
இப்னு உமர்(ரலி) இரண்டு நாள்கள் தவிர வேறு நாள்களில் லுஹாத் தொழ மாட்டார்கள். மக்காவுக்கு அவர்கள் வரக்வடிய நாளில் லுஹா நேரத்தில் வந்து கஅபாவைத் வலம்வந்து மக்காமே இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். குபாப் பள்ளிக்கு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சென்று பள்ளிக்குள் நுழைந்ததும் தொழாமல் வெளியே வர மாட்டார்கள். மேலும் ‘நபி(ஸல்) அவர்கள் குபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வரும் வழக்கம் உடையவராக இருந்தனர்’ என்றும் கூறினார்கள். 
Book : 20