20:1189 மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு

1189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: 
‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
Book :20