17:1071 குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்

பாடம் : 5 முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களுடன் சேர்ந்து (ஒதலுக்கான) சஜ்தாச் செய்தல். இணைவைப்பாளர் அசுத்தமானவர் என்பதால் அவர் உளூச் செய்ய முடியாது. இப்னு உமர் (ரலி) அவர்கள் உளூவுடன் (ஓதலுக்கான) சஜ்தாச் செய்வார்கள். 
1071. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர். 
Book : 17