14:990 வித்ருத் தொழுகை

பாடம் : 1 வித்ருத் தொழுகை பற்றி வந்துள்ளவை. 
990. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : 
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்’ என்று கூறினார்கள். 
Book : 14