13:949 இருபெருநாள்கள்

பாடம் : 2 பெரு நாள் தினத்தில் ஈட்டிகள், தோல்கேடயங்கள் (உள்ளிட்ட போர்க்கருவிகளால்) வீரவிளையாட்டுக்களில் ஈடுபடுவது). 
949. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
‘புஆஸ்’ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து ‘நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?’ என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி ‘அவ்விருவரையும்விட்டு விடுங்கள்’ என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர். 
Book : 13