12:946 அச்சநிலைத் தொழுகை

பாடம் : 5 எதிரிகளைத் தேடிச் செல்பவரும் எதிரி களால் தேடப்படுபவரும் வாகனத்தில் பயணித்தவாறே சைகை மூலம் தொழுவது. வலீத் பின் முஸ்லிம் அல்குறஷீ அவர்கள் கூறுகிறார்கள்: நான், அவ்ஸாயீ (அப்துர் ரஹ்மான் பின் அம்ர்-ரஹ்) அவர்களிடம், ஷுரஹ்பீல் பின் சம்த் அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வாகனத்தின் மீது அமர்ந்து தொழுதது பற்றிக் கேட்டேன். அதற்கு அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள், (எதிரிகள்) தப்பிவிடுவதை அஞ்சினால் இவ்வாறு (வாகனத்தின் மீது பயணித்தவாறு சைகை மூலம்) தொழுவது கூடும் என்பதே எமது கருத்தாகும் என்று பதிலளித்தார்கள். வலீத் (ரஹ்) அவர்கள் பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம் எனும் நபிமொழியை தமது கருத்தாகும் என்று பதிலளித்தார்கள். வலீத் (ரஹ்) அவர்கள் பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழவேண்டாம் எனும் நபி மொழியை தமது கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். 
946. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் ‘பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்’ என்று கூறினார்கள். 
வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். ‘பனூ குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும் வரை நாம் அஸர் தொழவேண்டாம்’ என்று சிலர் கூறினர். வேறு சிலர் ‘இந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; எனவே நாம் தொழுவோம்’ என்றனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி(ஸல்) அவர்கள் குறை கூறவில்லை. 
Book : 12