11:880 ஜும்ஆத் தொழுகை

பாடம் : 3 ஜுமுஆவுக்காக நறுமணம் பூசுவது. 
880. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 
‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் ‘குளிப்பது அவசியம்’ என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது’ என்று குறிப்பிட்டார்கள். 
Book : 11