நபித்தோழர்கள் எவரையும் பின்பற்றலாமா?
என்தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள். அவர்களில் எவர்களை பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழியடைவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில செய்திகள் நபிமொழி தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது.
இந்த செய்திகள் அறிவிப்பாளர் வரிசையை கவனித்தும் கருத்தை கவனித்தும் சரியானதா? என்பதைக் காண்போம்.
மேற் சொன்ன கருத்தை பிரதிபலிக்கும் வகையில் சில வாசகங்கள் கூடுதல் குறைவாக பின்வரும் ஆறு நபித்தோழர்கள் வழியாக இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இப்னு உமர் (ரலி)
- ஜாபிர் (ரலி)
- அபூஹுரைரா (ரலி)
- உமர் (ரலி)
- அனஸ் (ரலி)
- இப்னு அப்பாஸ் (ரலி)
இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள செய்தி
المنتخب من مسند عبد بن حميد (ص: 250)
783- أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يُونُسَ ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ ، عَنْ حَمْزَةَ الْجَزَرِيِّ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : مَثَلُ أَصْحَابِي مَثَلُ النُّجُومِ يُهْتَدَى بِهِ فَأَيُّهُمْ أَخَذْتُمْ بِقَوْلِهِ اهْتَدَيْتُمْ.
என்னுடைய தோழர்கள் வழிகாட்டும் நட்சத்திரத்தைப் போன்றவர்கள். அவர்களின் எவருடை சொல்லை எடுத்துக் கொண்டாலும் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: அப்து இப்னு ஹுமைத் (782)
இதே செய்தி அல்இபானத்துல் குப்ரா என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
الإبانة الكبرى لابن بطة (2/ 563)
701 – وَحَدَّثَنِي أَبُو يُوسُفَ يَعْقُوبُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا [ص:564] أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ , قَالَ: حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ , قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ , قَالَ: حَدَّثَنَا أَبُو شِهَابٍ , عَنْ حَمْزَةَ الْجَزَرِيِّ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا أَصْحَابِي بِمَنْزِلَةِ النُّجُومِ , فَأَيُّهُمْ أَخَذْتُمْ بِقَوْلِهِ اهْتَدَيْتُمْ»
இப்னு அதீ அவர்களில் அல்காமில் ஃபில் லுஅஃபா என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع (2/ 377)
حدثنا عبد الله بن محمد بن عبد العزيز ثنا عمرو الناقد ثنا عمرو بن عثمان الكلابي ثنا أبو شهاب عن حمزة الجزري عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أصحابي مثل النجوم يهتدي بهم فأيهم أخذتم بقوله اهتديتم
இச் செய்தியில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹம்சா பின் அபீ ஹம்சா அல்ஜஸரீ அந்நஸீபீ என்பவர் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்.
ميزان الاعتدال (1/ 606)
2299 – حمزة بن أبى حمزة الجزرى النصيبى.
قال ابن معين: لا يساوى فلسا.
وقال البخاري: منكر الحديث.
وقال الدارقطني: متروك.
وقال ابن عدى: عامة ما يرويه موضوع.
ஒரு பைசாவிற்கும் பெருமதி இல்லாதவர் என்று இப்னு மயீன் அவர்களும் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி அவர்களும் விடப்படவேண்டியவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும். இவருடைய பெரும்பான்மையான அறிவிப்புகள் இட்டுகட்டப்பட்டவை என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,பாகம்:1, பக்கம்: 606
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்தி
المؤتلف والمختلف للدارقطني ـ مقابل على المطبوع (4/ 1778)
أمّا غُصَيْن , فهو الحَارِث بن غُصَيْن أبو وهب الثَّقَفيّ , يَرْوي عن مَنْصُور , والأعمش , وحصين , ولَيْث بن أبي سُلَيْم , وغَيْرهم , رَوَى عَنْه سلام بن سُلَيْمان المدائني , ويَحْيَى بن يَعْلَى الأَسْلَمي , وغيرهما.
حَدَّثَنا القاضي أحمد بن كامل بن خلف , حَدَّثَنا عَبد الله بن روح , حَدَّثَنا سلام بن الحَارِث , حَدَّثَنا الحَارِث بن غُصَيْن , عن الأَعْمَش , عن أبي سُفْيان , عن جَابِر , قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم “.
எனது தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள் அவர்களில் யாரை பின்பற்றினாலும் நேர்வழியடைவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: அல்முஃதலிஃப் வல்முக்தலிஃப், பாகம்: 4, பக்கம்: 1778
இதே செய்தி இப்னு முன்தா அவர்களின் அல்ஃபாயித் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது,
الفوائد لابن منده (ص: 29)
11 أخبرنا أبو الحسين عمر بن الحسن بن علي ثنا عبد الله بن روح المدائني ثنا سلام بن سليمان ثنا الحارث بن غصين عن الأعمش عن أبي سفيان عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم مثل أصحابي في أمتي مثل النجوم بأيهم اقتديتم اهتديتم
இப்னு ஹஜர் அவர்களின் முவஃபகத்துல் குபுருல் கபர் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
موافقة الخبر الخبر في تخريج أحاديث المختصر (1/ 146)
وأما حديث جابر فأخبرنا أبو هريرة بن الذهبي إجازة أخبرنا القاسم بن عساكر سماعا عليه عن محمود بن إبراهيم أخبرنا أبو الرشيد أحمد بن محمد أخبرنا عبد الوهاب بن محمد بن إسحاق أخبرنا أبي أخبرنا عمر بن الحسن حدثنا عبد اللَّه بن روح حدثنا سلام بن سليمان حدثنا الحارث بن غصن حدثنا الأعمش عن أبي سفيان عن جابر بن عبد اللَّه رضي اللَّه عنهما قال: قال رسول اللَّه -صلى اللَّه عليه وسلم-: “مَثَلُ أَصْحَابي في أُمَّتي مَثَلُ النُّجومِ فَبِأَيِّهمُ اقْتَدَيْتُمْ اهْتَديْتُمْ”.
இப்னு ஹஸ்ம் அவர்களின் அல்இஹ்காம் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
الإحكام في أصول الأحكام لابن حزم (6/ 82)
أبو العباس أحمد بن عمر بن أنس العذري قال أنا أبو ذر عبد بن أحمد بن محمد الهروي الأنصاري قال أنا علي بن عمر بن أحمد الدارقطني ثنا القاضي أحمد كامل بن كامل خلف ثنا عبد الله بن روح ثنا سلام بن سليمان ثنا الحارث بن غصين عن الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم قال أبو محمد أبو سفيان ضعيف والحارث بن غصين هذا هو أبو وهب الثقفي وسلام بن سليمان يروي الأحاديث الموضوعة وهذا منها بلا شك فهذا رواية
இப்னு ஹஜர் அவர்களின் அல்அமாலியில் முத்லகா என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
الأمالي المطلقة (ص: 60)
وَقَدْ وَقَعَ لَنَا مِنْ حَدِيثِ جَابِرٍ وَإِسْنَادُهُ أَمْثَلُ مِنَ الْإِسْنَادَيْنِ الْمَذْكُورَيْنِ أَخْبَرَنَا أَبُو هُرَيْرَةَ بْنُ الذَّهَبِيِّ إِجَازَةً قَالَ أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ أَبِي غَالِبٍ عَنْ مَحْمُودِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ أَخْبَرَنَا أَبُو الرَّشِيدِ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْأَصْبَهَانِيُّ قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ قَالَ أَخْبَرَنَا أَبِي قَالَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَوْحٍ قَالَ حَدَّثَنَا سَلَّامُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ غُصْنٍ قَالَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسلم قَالَ ميل أَصْحَابِي فِي أمتِي ميل النُّجُومِ بِأَيِّهمُ اقْتَدَيْتُمُ اهْتَدَيْتُمْ
الضعفاء الكبير للعقيلي (3/ 429، بترقيم الشاملة آليا)
سلام بن سليمان المدائني في حديثه عن الثقات مناكير
இச் செய்தியில் இடம்பெறும் ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் நம்பகமானவரிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகள் இவருடைய செய்திகளில் உள்ளது என்று உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்லுஅஃபாவுல் கபீர், பாகம்: 3, பக்கம்: 429
الجرح والتعديل (4/ 259)
1120 – سلام بن سليمان بن سوار المدائني ابن اخى شبابة بن سوار أبو العباس الدمشقي الضرير روى عن ابى عمرو بن العلاء ومغيرة بن مسلم السراج وقيس بن الربيع ومسلمة بن الصلت روى عنه هشام ابن عمار وسمع منه ابى بدمشق في الرحلة الاولى.
حدثنا عبد الرحمن قال سئل ابى عنه فقال: ليس بالقوى
ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் வலிமையானவர் இல்லை என்று அபீஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்,பாகம்:4,பக்கம்: 259
الكامل في ضعفاء الرجال (4/ 323)
772- سلام بن سليمان بن سوار الثقفي المدائني الضرير.ويقال له الدمشقي ، يُكَنَّى أبا المنذر وإنما قيل له الدمشقي لمقامه بدمشق حدث عنه أهل دمشق ، وَهو عندي منكر الحديث
ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் என்னிடம் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம்: 4, பக்கம்: 323
الإحكام في أصول الأحكام لابن حزم (6/ 82)
أبو العباس أحمد بن عمر بن أنس العذري قال أنا أبو ذر عبد بن أحمد بن محمد الهروي الأنصاري قال أنا علي بن عمر بن أحمد الدارقطني ثنا القاضي أحمد كامل بن كامل خلف ثنا عبد الله بن روح ثنا سلام بن سليمان ثنا الحارث بن غصين عن الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم قال أبو محمد أبو سفيان ضعيف والحارث بن غصين هذا هو أبو وهب الثقفي وسلام بن سليمان يروي الأحاديث الموضوعة وهذا منها بلا شك
ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர். எந்த சந்தேகமும் இல்லாமல் இந்த செய்தியும் அதில் உள்ளதாகும் என்று இப்னு ஹஸ்ம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்இஹ்காம், பாகம்: 6, பக்கம்: 82
மேலும் ஸல்லாம் பின் சுலைமான் என்பவரின் ஆசிரியர் அல்ஹாரிஸ் பின் குஸைன் என்பவரின் நம்பத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
جامع بيان العلم وفضله (2/ 925)
1760 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ قَالَ: نا عَبْدُ بْنُ أَحْمَدَ، ثنا عَلِيُّ بْنُ عُمَرَ، ثنا الْقَاضِي أَحْمَدُ بْنُ كَامِلٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ رَوْحٍ، ثنا سَلَّامُ بْنُ سُلَيْمٍ، ثنا الْحَارِثُ بْنُ غُصَيْنٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصْحَابِي كَالنُّجُومِ بِأَيِّهِمُ اقْتَدَيْتُمُ اهْتَدَيْتُمْ» ، قَالَ أَبُو عُمَرَ: «هَذَا إِسْنَادٌ لَا تَقُومُ بِهِ حُجَّةٌ؛ لِأَنَّ الْحَارِثَ بْنَ غُصَيْنٍ مَجْهُولٌ»
இந்த அறிவிப்பாளர் தொடர் ஆதாரத்திற்கு நிற்க தகுதியில்லாததாகும். ஏனெனில் (இச் செய்தியில் இடம்பெறும்) அல்ஹாரிஸ் பின் குஸைன் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னு அப்துல் பர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: ஜாமிவு பயானில் இல்ம், பாகம்: 2, பக்கம்: 925
لسان الميزان لابن حجر(اتحقيق أبو غدة) (2/ 524)
2052 – ذ الحارث بن غصين عن الأعمش وعنه سلام بن سليم قال بان عبد البر في كتاب العلم مجهول قلت وذكره الطوسي في رجال الشيعة
அல்ஹாரிஸ் பின் குஸைன் என்பவர் ஷியா கொள்கையுடைய அறிவிப்பாளரில் ஒருவர் என்று தூஸீ அவர்கள் சொன்னதாக இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 2, பக்கம்: 524
மேலும் இச்செய்தியில் இடம்பெறும் அஃமஷ் அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அபூ சுஃப்யானிடமிருந்து எந்த செய்தியையும் செவியுவில்லை என்று பஸ்ஸார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
كشف الأستار عن زوائد البزار على الكتب الستة (1/ 435)
أَنَّ الأَعْمَشَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي سُفْيَانَ
அஃமஷ் அவர்கள் அபூசுஃப்யான் அவர்களிடமிருந்து (எதையும்) செவியுறவில்லை.
நூல்: கஷ்புல் அஸ்தார், பாகம்: 1, பக்கம்: 435
எனவே இந்த அறிவிப்பாளர் தொடர், தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகவும் ஆகிறது.
ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றொரு அறிவிப்பு
(غرائب مالك) للدارقطني (ص: 56)
208) “ما وجدتم في كتاب الله فالعمل به ولا يسعه تركه إلى غيره … الحديث، وفيه أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم”، أخرجه الدارقطني في (غرائب مالك) من طريق الحسن بن مهدي بن عبدة المروزي عن محمد بن أحمد السكوني عن بكر بن عيسى المروزي أبي يحيى عن جميل بن يزيد عن مالك عن جعفر بن محمد عن أبيه عن جابر به مرفوعاً. قال الدارقطني: لا يثبت عن مالك ورواته مجهولون
இமாம் மாலிக் அவர்கள் வழியாக இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியின் கீழ் இமாம் தாரகுத்னீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
மாலிக் அவர்களிடமிருந்து இந்த செய்தி உறுதியாகவில்லை, இதன் அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: கராயிப் மாலிக், பக்கம்: 56
تلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير (4/ 463)
ورواه الدارقطني في “غرائب مالك” من طريق جميل بن زيد، عن مالك، عن جعفر بن محمد، عن أبيه، عن جابر، وجميل لا يعرف، ولا أصل له في حديث مالك
இந்த செய்தியை ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதில் இடம்பெறும் ஜமீல் என்பவர் யாரென அறியப்படாதவர். மாலிக் இமாமுடைய ஹதீஸ் என்று சொல்வதில் எந்த அடிப்படையும் இல்லை என்று இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம்: 4, பக்கம்: 463
அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தி
مسند الشهاب القضاعي (2/ 275)
1346 – أَخْبَرَنَا أَبُو الْفَتْحِ مَنْصُورُ بْنُ عَلِيٍّ الْأَنْمَاطِيُّ، ثنا أَبُو مُحَمَّدٍ الْحَسَنُ بْنُ رَشِيقٍ، ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، ثنا جَعْفَرٌ يَعْنِي ابْنَ عَبْدِ الْوَاحِدِ، قَالَ: قَالَ لَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ أَصْحَابِي مَثَلُ النُّجُومِ، مِنَ اقْتَدَى بِشَيْءٍ مِنْهَا اهْتَدَى»
எனது நபித்தோழர்கள் நட்சத்திரத்தைப் போன்றவர்கள். அவற்றிலிருந்து எந்த ஒன்றை பின்பற்றினாலும் அவர் நேர்வழியடைவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்னத் ஷிஹாப், பாகம்: 2, பக்கம்: 275
இச் செய்தியில் இடம்பெறும் ஜஅஃபர் பின் அப்துல் வாஹித் அல்ஹாஷிமீ என்பவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.
المجروحين (1/ 215)
جعفر بن عبد الواحد الهاشمي (1) من ولد العباس بن عبدالمطلب وكان على قضاء الثغر يروى عن العراقيين، حديث (2) روى عنه أهل الثغر، كان ممن يسرق الحديث ويقلب الاخبار، يروى المتن الصحيح الذى هو مشهور بطريق واحد يجئ به من طريق آخر حتى لا يشك من الحديث صناعته أنه كان يعملها
ஜஅஃபர் பின் அப்துல் வாஹித் அல்ஹாஷிமீ என்பவர் ஹதீஸ்களை திருடுபவர்களில் உள்ளவர். செய்திகளை புரட்டி அறிவிப்பார் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
تلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير (4/ 463)
ورواه القضاعي في مسند الشهاب له من حديث الأعمش، عن أبي صالح، عن أبي هريرة، وفي إسناده جعفر بن عبد الواحد الهاشمي، وهو كذاب
முஸ்னத் ஷிஹாபில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறும் செய்தியில் ஜஅஃபர் பின் அப்துல் வாஹித் அல்ஹாஷிமீ என்பவர் இடம்பெறுகிறார் அவர் பொய்யர் என்று இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம்: 4, பக்கம்: 463
உமர் (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள செய்தி
المدخل إلى السنن الكبرى للبيهقي (1/ 113، بترقيم الشاملة آليا)
112 – أخبرنا أبو عبد الله الحافظ ، ثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا بكر بن سهل ، وأخبرنا أبو بكر بن الحارث الفقيه ، أبنا أبو محمد بن حيان الأصبهاني ، ثنا حمزة أبو علي البغدادي ، قالا : ثنا نعيم بن حماد ، ثنا عبد الرحيم بن زيد العمي ، عن أبيه ، عن سعيد بن المسيب ، عن عمر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « سألت ربي عز وجل فيما يختلف فيه أصحابي من بعدي ، فأوحى إلي : يا محمد ، إن أصحابك عندي بمنزلة النجوم في السماء ، بعضها أضوء من بعض ، فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم ، فهو عندي على هدى »
எனக்கு பிறகு என் தோழர்கள் கருத்துவேறுபாடு கொள்வதைப் பற்றி என் இறைவனிடம் கேட்டேன். அதற்கு முஹம்மதே! உன் தோழர்கள் என்னிடத்தில் வானத்தில் உள்ள நட்சத்திரத்தை போன்றவர்கள். அவற்றில் சிலது சிலதைவிட ஒளிமிக்கதாகும். கருத்துவேறுபாடு கொண்ட அவர்களின் (கருத்தில்) ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் அவர் என்னிடத்தில் நேர்வழியில் இருப்பவராவார் என்று அல்லாஹ் வஹீச் செய்தி அறிவித்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
நூல்: அல்மத்கல், பாகம்:1, பக்கம்:113
இதே செய்தி இப்னு அதீ அவர்களில் அல்காமில் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع (3/ 200)
قال بن عدي وهذا البلاء فيه أظنه من محمد بن الفضل بن عطية وهو خراساني أضعف من زيد ثنا حمزة الكاتب ثنا نعيم بن حماد ثنا عبد الرحيم بن زيد العمي عن أبيه عن سعيد بن المسيب عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي فيما اختلف فيه أصحابي من بعدي فأوحى عزوجل إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضهم أضوأ من بعض فمن أخذ بشئ مما هم عليه من اختلافهم فهو عندي على هدى قال الشيخ وهذا منكر المتن يعرف بعبد الرحيم بن زيد عن أبيه
الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع (5/ 281)
ما ذكرت من اسمه عبد الرحيم عبد الرحيم بن زيد العمي البصري يكنى أبا زيد حدثنا بن حماد ثنا العباس سمعت يحيى يقول عبد الرحيم بن زيد العمي ليس بشئ سمعت بن حماد يقول قال البخاري عبد الرحيم بن زيد أبو زيد البصري عن أبيه تركوه سمعت بن حماد يقول قال السعدي عبد الرحيم بن زيد العمي غير ثقة
கதீப் பக்தாதீ அவர்களின் அல்ஃபகீஹ் வல்மத்தஃபக்கிஹ் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
الفقيه والمتفقه للخطيب البغدادي (1/ 443)
أنا أَبُو الْحَسَنِ , مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ رِزْقَوَيْهِ , نا أَبُو مُحَمَّدٍ عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدِ بْنِ الْوَاثِقِ الْهَاشِمِيُّ , أنا حَمْزَةُ بْنُ مُحَمَّدٍ الْكَاتِبُ أَبُو عَلِيٍّ , نا نُعَيْمُ بْنُ حَمَّادٍ , نا عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِّيُّ , عَنْ أَبِيهِ , [ص:444] عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: سَأَلْتُ رَبِّي تَعَالَى فِيمَا اخْتَلَفَ فِيهِ أَصْحَابِي مِنْ بَعْدِي , فَأَوْحَى اللَّهُ إِلَيَّ: «يَا مُحَمَّدُ إِنَّ أَصْحَابَكَ عِنْدِي بِمَنْزِلَةِ النُّجُومِ فِي السَّمَاءِ بَعْضُهَا أَضْوَأُ مِنْ بَعْضٍ , فَمَنْ أَخَذَ بِشَيْءٍ مِمَّا هُمْ عَلَيْهِ مِنَ اخْتِلَافِهِمْ فَهُوَ عِنْدِي عَلَى هُدًى» وَالْوَجْهُ الثَّانِي: أَنَّ الْفَرِيقَ الَّذِي فِيهِ أَبُو بَكْرٍ وَعُمَرُ , أَوْ أَحَدُهُمَا أَوْلَى لِمَا
இப்னு அஸாகிர் அவர்களின் தாரீக் திமிஷ்க் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
تاريخ دمشق لابن عساكر (19/ 383)
[4507] أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا أبو محمد الجوهري أنا أبو الحسن علي بن محمد بن أحمد بن نصر بن عرفة أنبأ أبو علي حمزة بن محمد بن عيسى الكاتب نا نعيم بن حماد الخزاعي نا عبد الرحيم بن زيد العمي عن أبيه عن سعيد بن المسيب عن عمر بن الخطاب قال قال رسول الله ص – سألت ربي عز وجل فيما اختلف فيه أصحابي من بعدي فأوحى الله إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أضوأ من بعض فمن أخذ بشئ مما هم عليه من اختلافهم فهو عندي على هدى
இச்செய்தயில் இடம்பெறும் அப்துர்ரஹீம் பின் ஸைத் அல்அம்மீ என்பவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர்.
الضعفاء الكبير للعقيلي (5/ 274، بترقيم الشاملة آليا)
حدثني محمد بن عيسى قال : حدثنا عباس قال : سمعت يحيى قال : عبد الرحيم بن زيد العمي ليس بشيء
யஹ்யா பின் மயீன் அவர்கள். அப்துர்ரஹீம் பின் ஸைத் அல்அம்மீ என்பவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: பாகம்:5 பக்கம்:274
الجرح والتعديل (5/ 340)
نا عبد الرحمن قال سمعت ابي يقول: عبد الرحيم بن زيد العمى ترك حديثه، كان يفسد (1) اباه يحدث عنه بالطامات. نا عبد الرحمن قال سئل أبو زرعة عن عبد الرحيم ابن زيد فقال: واهى ضعيف الحديث.
அப்துர்ரஹீம் பின் ஸைத் அல்அம்மீ என்பவரின் ஹதீஸ் (ஆதாரத்திற்கு ஏற்கப்படாமல்) விடப்பட்டும். இவர் தம் தந்தைவழியாக (ஆதாரமற்ற) பிரமாண்டமான செய்திகளை அறிவிப்பவர் என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அபூஸுர்ஆ அவர்கள் இவர் மிகவும் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்ஜரஹு வத்தஃதீல், பாகம்:5, பக்கம்:340
الضعفاء الصغير للبخاري (ص: 81)
(235) عبد الرحيم بن زيد العمي أبو زيد البصري عن أبيه تركوه
அப்துர்ரஹீம் பின் ஸைத் அல்அம்மீ என்பவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் (ஆதாரத்திற்கு தகுதியில்லாதவர் என்று) விட்டுவிட்டார்கள் என இமாம் புகாரி குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்லுஅஃபாவுஸ் ஸகீர், பக்கம்:81
الضعفاء والمتروكين للنسائي (ص: 207)
(368) عبد الرحيم بن زيد العمي متروك أبو زيد البصري
அப்துர்ரஹீம் பின் ஸைத் அல்அம்மீ என்பவர் (ஆதாரத்திற்கு தகுதியில்லாதவர் என்று) விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்லுஅஃபாவு வல்மத்துருகீன், பக்கம்:207
இப்னுல் ஜவ்ஸீ இந்த செய்தியைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
العلل المتناهية (1/ 283)
وهذا لا يصح نعيم مجروح قال يحيى بن معين عبدالرحيم كذاب
இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது கிடையாது. இதில் இடம்பெறும் நுஐம் என்பவர் குறை சொல்லப்பட்டவர். (மற்றொரு அறிவிப்பாளர்) அப்துர்ரஹீம் என்பவரைப் பற்றி யஹ்யா பின் மயீன் அவர்கள் பொய்யர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்இலலுல் முத்தனாயிய்யா, பாகம்:1, பக்கம்:283
இந்த செய்தியைப் பற்றி தஹபீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
ميزان الاعتدال (2/ 102)
فهذا باطل.وعبد الرحيم تركوه.ونعيم صاحب مناكير.
இந்த செய்தி பொய்யானதாகும், (இதில் இடம்பெறும்) அப்துர் ரஹீம் என்பவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் (ஆதாரத்திற்கு தகுதியில்லாதவர் என்று) விட்டுவிட்டார்கள். (இதில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளர்) நுஐம் என்பவர் மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவரில் உள்ளவர்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:2, பக்கம்:102
அனஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தி
المطالب العالية بزوائد المسانيد الثمانية (17/ 63)
4158 – وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَلِيٍّ، عَنْ سلام الطَّوِيلِ، عَنْ زَيْدٍ / العمي، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ الله عَنْه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَثَلُ أَصْحَابِي فِي أُمَّتِي مَثَلُ النُّجُومِ يَهْتَدُونَ بِهَا إِذَا غَابَتْ تَحَيَّرُوا.
إِسْنَادُهُ ضَعِيفٌ.
என் சமுதாயத்தில் என் தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள். அவர்களைக் கொண்டு (மற்றவர்கள்) நேர்வழிபெறுவார்கள். (அது) மறைந்துவிட்டால் தடுமாறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: அல்மதாலிபுல் ஆலிய்யா, பாகம்:17, பக்கம்:63
இச் செய்தியில் இடம்பெறும் யஸீத் அர்ரகாஷீ, ஸைத்துல் அம்மீ, ஸல்லாம் அத்தவீல் ஆகிய மூவரும் பலவீனமானவர்களாவர்.
تقريب التهذيب (1/ 261)
2702- سلام بتشديد اللام ابن سليم أو سلم أبو سليمان ويقال له الطويل المدائني متروك من السابعة مات سنة سبع وسبعين ق
ஸல்லாம் என்பவர் (ஆதாரத்திற்கு தகுதியற்றவர் என்று) விடப்பட்டவர் என்று இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்:1, பக்கம்: 261
الجرح والتعديل (3/ 560)
حدثنا عبد الرحمن قال ذكره ابى عن اسحاق بن منصور عن يحيى بن معين انه قال: زيد العمى لا شئ.
ஸைத்துல் அம்மீ என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று யஹ்யா பின் மயீன் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம்:3,பக்கம்:560
الضعفاء للعقيلي (4/ 373)
حَدَّثَنَا محمد بن أحمد ، حَدَّثَنَا معاوية بن صالح ، قال : سَمِعْتُ يحيى يقول يزيد الرقاشي ضعيف
யஸீத் அர்ரகாஷீ என்பவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்லுஅஃபாவு- உகைலீ, பாகம்:4, பக்கம்:373
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தி
الكفاية في علم الرواية للخطيب البغدادي (ص: 48)
وَأَخْبَرَنَا الْقَاضِي أَبُو بَكْرٍ الْحِيرِيُّ , أَيْضًا ثنا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْأَصَمُّ , ثنا بَكْرُ بْنُ سَهْلٍ الدِّمْيَاطِيُّ , ثنا عَمْرُو بْنُ هَاشِمٍ الْبَيْرُوتِيُّ , ثنا سُلَيْمَانُ بْنُ أَبِي كَرِيمَةَ , عَنْ جُوَيْبِرٍ , عَنِ الضَّحَّاكِ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَّ: «مَهْمَا أُوتِيتُمْ مِنْ كِتَابِ اللَّهِ تَعَالَى فَالْعَمَلُ بِهِ لَا عُذْرَ لِأَحَدٍ فِي تَرْكِهِ , فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ فَسُنَّةٌ مِنِّي مَاضِيَةٌ , فَإِنْ لَمْ تَكُنْ سَنَةٌ مِنِّي مَاضِيَةٌ فَمَا قَالَ أَصْحَابِي , إِنَّ أَصْحَابِي بِمَنْزِلَةِ النُّجُومِ فِي السَّمَاءِ , فَأَيُّهَا أَخَذْتُمْ بِهِ اهْتَدَيْتُمْ , وَاخْتِلَافُ أَصْحَابِي لَكُمْ رَحْمَةٌ»
என் தோழர்கள் வானத்தின் நட்சத்திரத்தைப் போன்றவர்கள். அவர்களில் யாரை (பின்பற்ற) எடுத்துக் கொண்டிருந்தாலும் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள், என் தோழர்கள் கருத்து வேறுபாடு கொள்வது உங்களுக்கு அருளாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே செய்தி பைஹகீ இமாம் அவர்களின் அல்மத்கல் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
المدخل إلى السنن الكبرى للبيهقي (1/ 114، بترقيم الشاملة آليا)
113 – أخبرنا أبو عبد الله الحافظ ، وأبو بكر أحمد بن الحسن ، قالا : ثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا بكر بن سهل الدمياطي ، ثنا عمرو بن هاشم البيروتي ، ثنا سليمان بن أبي كريمة ، عن جويبر ، عن الضحاك ، عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم : « مهما أوتيتم من كتاب الله فالعمل به ، لا عذر لأحد في تركه ، فإن لم يكن في كتاب الله ، فسنة مني ماضية ، فإن لم يكن سنتي ، فما قال أصحابي ، إن أصحابي بمنزلة النجوم في السماء فأيما أخذتم به اهتديتم ، واختلاف أصحابي لكم رحمة »
இப்னு அஸாகிர் அவர்களின் தாரீக் திமிஷ் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
تاريخ دمشق لابن عساكر (22/ 359)
عبد الله الحافظ وأبو بكر أحمد بن الحسن وأخبرنا أبو عبد الله محمد بن علي بن أبي العلاء وأبو محمد طاهر بن سهل قالا أنا أبو بكر أحمد بن علي الخطيب أنا القاضي أبو بكر الحيري قالا ثنا محمد بن يعقوب نا بكر بن سهل الدمياطي نا عمرو بن هاشم البيروتي نا سليمان بن أبي كريمة عن جويبر عن الضحاك عن ابن عباس قال قال رسول الله (صلى الله عليه وسلم) مهما أوتيتم من كتاب الله فالعمل به لا عذر لأحد في تركه فإن لم يكن في كتاب الله فسنة مني ماضية فإن لم يكن سنة مني فما قال أصحابي إن أصحابي بمنزلة النجوم في السماء فأيما وفي حديث الخطيب فأيما أخذتم به اهتديتم واختلاف أصحابي لكم رحمة
இதில் இடம்பெறும் ஜுவைபிர் என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார்.
تقريب التهذيب (1/ 143)
987- جويبر تصغير جابر ويقال اسمه جابر وجويبر لقب ابن سعيد الأزدي أبو القاسم البلخي نزيل الكوفة راوي التفسير ضعيف جدا من الخامسة مات بعد الأربعين خد ق
ஜுவைபிர் என்பவர் முற்றிலும் பலவீனமானவாரார் என்று இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்:1, பக்கம்:143
الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع (2/ 121)
ثنا عثمان بن سعيد الدارمي قلت ليحيى بن معين فجويبر كيف حديثه قال ضعيف ثنا بن أبي بكر وابن حماد قالا ثنا عباس عن يحيى قال جويبر ليس بشئ…وقال النسائي جويبر بن سعيد الخراساني متروك الحديث
இப்னு மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் மற்றொரு இடத்தில் எந்த மதிப்பும் அற்றவர் என்றும் குறிப்பிட்டுளார்கள். ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று நஸாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்காமில் ஃபில் லுஅஃபா ,பாகம்:2, பக்கம்:121
மேலும் இச்செய்தியில் இடம்பெறும் ளஹ்ஹாக் பின் முஸாஹிம் என்பவரும் பலவீனமானவராவார். மேலும் தொடர்பு அறுந்த செய்தியாகும்.
تلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير (4/ 463)
ورواه أبو ذر الهروي في “كتاب السنة” من حديث مندل، عن جويبر، عن الضحاك بن مزاحم منقطعا، وهو في غاية الضعف،
இந்த செய்தி ஜுவைபிர், ளஹ்ஹாக் வழியாக வருவது தொடர்பு அறுந்த செய்தியாகும். இவர் பலவீனத்தின் எல்லையாவார் என்று இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபித்தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள் என்ற செய்தி தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்து.
அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்
المنتخب من علل الخلال (1/ 143)
69 – أخبرني مُوسَى بْنُ سَهْلٍ: ثنا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الأَسَدِيُّ: ثنا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ سَعِيدٍ، قَالَ: سَأَلْتُ أَحْمَدَ عَنْ مَنِ احْتَجَّ بِقَوْلِ النَّبِيِّ (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ): “أَصْحَابِي كَالنُّجُومِ بِأَيِّهِمِ اقْتَدَيْتُمُ اهْتَدَيْتُمْ”؟.
قَالَ: لا يصح هذا الحديث.
என்தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள். அவர்களில் எவர்களை பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழியடைவீர்கள் என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றை ஆதாரமாக கொள்பவர்கள் பற்றி அஹ்மத் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள். இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதில்லை என்று பதிலளித்தார்கள் என இஸ்மாயீல் பின் ஸயீத் அவர்கள் குறிப்பிடார்கள்.
நூல்: முன்தகப் மின் இலலில் கல்லால், பாகம்:1, பக்கம்:143
இமாம் பைஹகீ அவர்கள்
المدخل إلى السنن الكبرى للبيهقي (1/ 115، بترقيم الشاملة آليا)
114 – أخبرنا أبو بكر بن الحارث الأصبهاني ، أبنا أبو محمد بن حيان الأصبهاني ، ثنا الحسن بن محمد التاجر ، ثنا أبو زرعة ، ثنا إبراهيم بن موسى ، ثنا يزيد بن هارون ، عن جويبر ، عن جواب بن عبيد الله قال : قال رسول الله صلى الله عليه وسلم : « إن مثل أصحابي كمثل النجوم ، ههنا وههنا ، من أخذ بنجم منها اهتدى ، وبأي قول أصحابي أخذتم ، فقد اهتديتم » قال البيهقي رحمه الله : هذا حديث متنه مشهور ، وأسانيده ضعيفة ، لم يثبت في هذا إسناد والله أعلم
இந்த ஹதீஸின் செய்தி பிரபலியமானதாகும். அதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும். இது தொடர்பாக எந்த அறிவிப்பாளர் தொடரும் உறுதியானதாக வரவில்லை என்று பைஹகீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: அல்மத்கல்,பாகம்:1, பக்கம்:115
இப்னு தைமிய்யா அவர்கள்
منهاج السنة النبوية (8/ 257)
وأما قوله أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم فهذا الحديث ضعيف ضعفه أهل الحديث قال البزار هذا حديث لا يصح عن رسول الله صلى الله عليه وسلم وليس هو في كتب الحديث المعتمدة
இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். ஹதீஸ்கலை அறிஞர்கள் இதை பலவீனமானது என்று சொல்லியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதாக வரவில்லை. நம்பகமான ஹதீஸ் நூல்களிலும் இது இடம்பெறவில்லை என்று பஸ்ஸார் அவர்கள் கூறுவதாக இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மின்ஹாஜுஸ் ஸுன்னா, பாகம்:8, பக்கம்:257
இப்னுல் கைய்யூம் அவர்கள்
إعلام الموقعين عن رب العالمين ت مشهور (3/ 543)
الوجه الخامس والأربعون: قولهم يكفي في صحة التقليد الحديث المشهور: “أصحابي كالنُّجوم بأيهم اقتديتُم اهتديتُم” (2) جوابه من وجوه:
أحدها: أن هذا الحديث قد روي من طريق الأعمش، عن أبي سُفيان، عن جابر، ومن حديث سعيد بن المسيب عن عمر (3)، ومن طريق حمزة الجزري عن نافع عن ابن عمر، ولا يثبت شيء منها
இந்த செய்தி, ஜாபிர் (ரலி),உமர் (ரலி),இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் எந்த ஒன்றும் உறுதியான வழியில் வரவில்லை என்று இப்னுல் கைய்யூம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: இஃலாமுல் மூகிஈன், பாகம்:3, பக்கம்:543
இப்னு கஸீர் அவர்கள்
تحفة الطالب بمعرفة أحاديث مختصر ابن الحاجب (ص: 138)
ال رسول الله, صلى الله عليه وسلم: “سألت ربي فيما اختلف فيه أصحابي من بعدي, فأوحى الله إلي: يا محمد, إن أصحابك عندي بمنزلة النجوم في السماء، بعضها أضوأ من بعض، فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى”.
هذا الحديث لم يروه أحد من أهل الكتب الستة, وهو ضعيف
ஆதாரப்பூர்வமான ஆறு நூல்களின் ஆசிரியர்களில் எந்த ஒருவரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. இது பலவீனமாதாகும் என்று இப்னுகஸீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: துஹ்ஃபத்துத் தாலிப், பக்கம்:138
இப்னு ஹஸ்ம் அவர்கள்
الإحكام في أصول الأحكام لابن حزم (6/ 83)
فمن المحال أن يأمر رسول الله صلى الله عليه وسلم باتباع كل قائل من الصحابة رضي الله عنهم وفيهم من يحلل الشيء وغيره منهم يحرمه ولو كان ذلك لكان بيع الخمر حلالا اقتداء بسمرة بن جندب ولكان أكل البرد للصائم حلالا اقتداء بأبي طلحة وحراما اقتداء بغيره منهم ولكان ترك الغسل من الإكسال واجبا اقتداء بعلي وعثمان وطلحة وأبي أيوب وأبي بن كعب وحراما اقتداء بعائشة وابن عمر ولكان بيع الثمر قبل ظهور الطيب فيها حلالا اقتداء بعمر حراما اقتداء بغيره منهم وكل هذا مروي عندنا بالأسانيد الصحيحة
நபித்தோழர்களில் ஒவ்வொருவரின் சொல்லையும் பின்பற்றுமாறு நபிகளார் கட்டளையிடுவது சாத்தியமற்றதாகும். ஏனெனில் அவர்களில் சிலர் ஒன்றை ஹராமாக்கியதை இன்னும் சிலர் ஹலாலாக்கியுள்ளனர்.
இந்த (நபிமொழி) சரியானதாக இருந்தால், சமுரா பின் ஜூன்தப் (ரலி) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் மதுவை விற்பனை செய்வது ஹலாலாக ஆகிவிடும். அபுதல்ஹா (ரலி) அவர்களை பின்பற்றுவதன் மூலம் நோன்பு நோற்பவர் பனிக்கட்டியை சாப்பிடலாம் என்பது ஹலாலானதாக ஆகிவிடும். அவர் அல்லாதவர்களை பின்பற்றினால் அது ஹராமானதாகும்.
அலி(ரலி), உஸ்மான்(ரலி), தல்ஹா(ரலி), அபு அயூப்(ரலி), உபை பின் கஃப் (ரலி) போன்றவர்களை பின்பற்றுவதன் அடிப்படையில் உறவு கொண்டு இந்திரியம் வெளிபடாவிட்டால் அவர் குளிக்க வேண்டிய அவசியமில்லை என்று நிலை ஏற்படும்.
இப்னு உமர் (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களை பின்பற்றுவது (குளிக்காமல் தொழுவது) ஹராம் என்ற நிலைபாட்டிற்கு வர வேண்டும்.
உமர் (ரலி) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் பழங்கள் உறுதியாவதற்கு முன்னால் விற்பனை செய்வது ஹலாலாகிவிடும். அவர் அல்லாத மற்றவர்களை பின்பற்றினால் அது ஹராமாகிவிடும்.
இவைகள் அனைத்தும் நம்பகமான அறிவிப்பாளர் தொடர்களோடு நம்மிடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நூல்: அல்இஹ்காம், பாகம்:6,பக்கம்:83
“என்தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள். அவர்களில் எவர்களை பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழியடைவீர்கள்” என்று வரும் நபிமொழி ஆதாரப்பூர்வமானது அல்ல. அதன் அறிவிப்பாளர்கள் பலரும் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள். ஹதீஸ்கலை அறிஞர்களின் முடிவும் இது ஆதாரத்திற்கு ஏற்ற செய்தி இல்லை என்பதாகும்.