சாபத்திற்குரிய யூதர்கள்…!

யூதர்களின் படுமோசமான பழிப்பிற்குரிய ஏராளமான குணநலங்களைக் கடந்த இதழில் அறிந்து கொண்டோம். உலகத்திலேயே மனிதப் படைப்புகளில் இறைவனின் புறத்திலிருந்து ஏராளமான அருட்கொடைகள் வழங்கப்பெற்ற யூதர்கள் தங்களின் மோசமான குணநலங்களின் காரணத்தினால் இறைவனின் ஒட்டுமொத்த சாபத்திற்கும் – கோபத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

இறைவன் தன்னுடைய தூதர்கள் மூலமாக அளவுக்கு அதிகமான வளங்களையும், வசதிகளையும் யூதர்களுக்கு வழங்கி இருந்த போதும் கூட, சபிக்கப்பட்டவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், இறைவனின் அருட்கொடைகளை மறுத்தவர்களாகவும், பேரருட்கொடைகளை அலட்சியப்படுத்திய வர்களாகவும், வாக்குறுதிகளை மீறுபவர்களாகவும், இறைத்தூதர்களைக் கொன்றவர்களாகவும், அகம்பாவம் பிடித்த ஆணவக்காரர்களாகவும், அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியவர்களாகவும் இருந்தார்கள்.

இவ்வாறு தங்களின் மோசமான செயல்களினால் “யூதர்கள்” பழிப்பிற்குள்ளானார்கள் என்பது குறித்து விரிவாக அறிந்து கொண்டோம்.

“யூதர்கள்” எந்தளவிற்கு மோசமான குணநலங்களைக் கொண்டிருந்தார்கள் என்பது குறித்து மேலும் தொடர்ச்சியாக அறிந்து கொள்வோம்.

நாங்கள் தான் அல்லாஹ்வின் புதல்வர்கள்:

யூதர்களின் உச்சகட்ட ஆணவப் பேச்சை அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றான்.

“நாங்கள் அல்லாஹ்வின் புதல்வர்கள், அவனது நேசர்கள்” என்று யூதர்களும் கிறிஸ்‌தவர்களும் கூறுகின்றனர். “அவ்வாறெனில் உங்கள் பாவங்களுக்காக அவன் ஏன் உங்களைத் தண்டிக்கிறான்? நீங்களும் அவன் படைத்த மனிதர்களே!” என்று கூறுவீராக! தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான்; மேலும், தான் நாடியோரை அவன் தண்டிக்கிறான். வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே மீளுதல் உள்ளது.

அல் குர்ஆன் 5:18

நாங்கள் தான் அல்லாஹ்வின் புதல்வர்கள்! அல்லாஹ்வின் நேசர்கள் என்று இறைவனின் மீது இட்டுக்கட்டக் கூடிய ஆணவத்தின் உச்சகட்டமான வார்த்தையை மொழிகின்றார்கள்.

நீங்கள் அல்லாஹ்வின் புதல்வர்களும் அல்ல! நேசர்களும் அல்ல! அவன் படைத்த மனிதர்கள் தான் என்று கூறி ஆணவக்கார யூதர்களுக்கு அல்லாஹ் உண்மையை ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றான்.

“யூதர்களே! மற்ற மனிதர்களைவிட நீங்களே அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் என்று நீங்கள் நம்பினால், (அதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!

அல் குர்ஆன் 62:6

உலக மோகத்தை நேசித்துக் கொண்டிருந்த நன்றி கெட்ட யூதர்கள், நாங்கள் தான் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் என்று கூறி பொய், பித்தலாட்டத்தில் ஈடுபட்டார்கள். அதற்கு அல்லாஹ் “நீங்கள் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் என்று நம்பினால், அதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணிப்பதற்கு ஆசைப்படுங்கள்” என்று சவாலாகப் பதிலளிக்கின்றான்.

இறைவனின் சாபத்தைப் பெற்றவர்கள்:

உலகத்தில் யூதக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் இறைவனின் ஒட்டுமொத்த சாபத்தையும் வெளிப்படையாகவே பெற்றவர்களாகத் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு சீரழிந்தார்கள். இறைவனின் புறத்திலிருந்து மிகப்பெரிய அளவில் சபிக்கப்பட்ட சமுதாயமாக யூதர்கள் ஆகிவிட்டார்கள்.

அவர்களின் (யூதர்கள்) இறைமறுப்பின் காரணமாக அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். எனவே குறைவானோரைத் தவிர இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அல்குர்ஆன் 4:46

இறைவனை ஏற்க மறுத்து, இறைவனின் கட்டளைகளைப் புறக்கணித்த காரணத்தினால் இறைவனின் ஒட்டுமொத்த சாபத்தையும் யூதர்கள் பெற்றார்கள்.

இறைவேதத்தைப் பாழாக்கிய பாவிகள்:

யூதர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்து இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் மூலமாக தவ்ராத் எனும் இறைவேதத்தை வாழ்வியல் வழிகாட்டியாகவும் – நேர்வழி காட்டியாகவும் பாக்கியமாகப் பெற்றனர். ஆனால், இறைவேதம் தவ்ராத்தைப் பாழ்படுத்தி, தவ்ராத் வேதத்தில் மிகப்பெரிய அளவில் கையாடல் செய்து, வேதத்தின் கருத்துக்களையும் – வார்த்தைகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கினார்கள்.

நேர்வழியும், ஒளியும் கொண்ட தவ்ராத்தை நாமே அருளினோம். (அல்லாஹ்வுக்குக்) கீழ்ப்படிந்த நபிமார்களும், இறைவனைச் சார்ந்தோரும், அறிஞர்களும் அதைக் கொண்டே யூதர்களுக்குத் தீர்ப்பளித்து வந்தனர். ஏனெனில் அவர்கள், அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். அவர்களே அதற்கு சாட்சிகளாகவும் இருந்தனர். எனவே மக்களுக்குப் பயப்படாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! என் வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்களே இறைமறுப்பாளர்கள்.

அல் குர்ஆன் 5:44

அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்த நபிமார்கள் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடியே தீர்ப்பளித்து, இறைவேதமான தவ்ராத்தைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். ஆனால், யூதர்கள் அற்ப விலைக்கு தவ்ராத்தை விற்று விட்ட பாவிகளாக மாறினார்கள்.

அவர்களிடம் அல்லாஹ்வின் சட்டத்தை உள்ளடக்கிய தவ்ராத் இருக்கிறது. இதற்குப் பின்னரும் அவர்கள் புறக்கணிக்கும் நிலையில், உம்மை எப்படி அவர்கள் நீதிபதியாக ஏற்றுக் கொள்வார்கள்? அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் அல்ல!

அல் குர்ஆன் 5:43

இறைவேதம் தவ்ராத்தைத் தங்களின் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், பின்னொரு காலத்தில் முஹம்மத் எனும் மனிதர் இறைத்தூதராக வருவார் என்று, தங்களின் வேதமான தவ்ராத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தும், முஹம்மத் (ஸல்) அவர்களை மறுக்கின்ற பாவிகளாக இருப்பார்கள் என்று அல்லாஹ் திட்டவட்டமாக யூதர்களின் கேடுகெட்ட குணத்தைத் தெளிவுபடுத்துகின்றான்.

வேதத்தைப் படித்துக் கொண்டே “கிறிஸ்‌தவர்கள் எதிலும் இல்லை” என யூதர்கள் கூறினர்; “யூதர்கள் எதிலும் இல்லை” எனக் கிறித்தவர்கள் கூறினர். அவ்வாறு அவர்கள் கூறுவதைப் போன்றே அறியாதவர்களும் கூறினர். அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதில் அவர்களிடையே மறுமை நாளில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான்.

அல்குர்ஆன் 2:113

வேதத்தைப் படித்துக் கொண்டே அதிகப்படியான கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த யூதர்களுக்கு மத்தியில், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் கொண்டது குறித்து மிகத்தெளிவாக அல்லாஹ் மறுமையில் தீர்ப்பளிப்பதாகப் பதிலளிக்கின்றான்.

தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவே இருந்தன. இஸ்ராயீல் (எனும் யஃகூப்) தன்மீது விலக்கிக் கொண்டவற்றைத் தவிர! “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதைப் படித்துக் காட்டுங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!

அல் குர்ஆன் 3:93

தவ்ராத் வேதத்தில் இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் யூதர்கள் இட்டுக்கட்டி, பாவிகளாக மாறினார்கள். அதன் காரணமாக யூதர்களிடம் அல்லாஹ் “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், தவ்ராத்தைக் கொண்டு வந்து படித்துக் காட்டுங்கள்!” என்று அறைகூவல் விடுக்கின்றான்.

இறைத்தூதர்களின் மீது இட்டுக்கட்டிய பாவிகள்:

இறைத்தூதர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது சந்ததிகள் யூதர்களாகத்தான் இருந்தார்கள் என்று தங்களின் ஆணவத்தினால் அநியாயமாக இட்டுக்கட்டிக் கூறினார்கள்.

“இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது தலைமுறைகள் யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா? நன்கறிந்தவர்கள் நீங்களா? அல்லது அல்லாஹ்வா?” என்று கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தனக்கு வந்த சாட்சியத்தை மறைப்பவனை விட அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.

அல் குர்ஆன் 2:140

இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. மாறாக, சத்திய நெறியில் நின்ற முஸ்லிமாகவே இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை.

அல் குர்ஆன் 3:67

இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் வழித்தோன்றல்கள் யூதர்களாகத்தான் இருந்தார்கள் என்று அவதூறு பரப்பி இட்டுக்கட்டிய யூதர்களை நோக்கி அல்லாஹ் “நன்கறிந்தவன் அல்லாஹ்வா? அல்லது நீங்களா?” என்று கூறி தன்னுடைய உச்சகட்ட கோபக்கணைகளால் கடுமையாக எச்சரிக்கின்றான்.

வார்த்தைகளைப் புரட்டிய யூதர்கள்:

தங்களின் இறைவேதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை விடுத்து, உண்மையான கருத்துக்களுக்கு மாற்றமாகத் தங்களின் அகம்பாவம் பிடித்த கருத்துக்களைக் கூறி வேதத்தில் உள்ளதை மாற்றியும், புரட்டியும் யூதர்கள் பித்தலாட்டம் செய்து வந்தனர். அவர்களின் அத்தகைய கேடுகெட்ட செயல்பாட்டை இறைவன் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

சில யூதர்கள், வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். தம் நாவுகளைச் சுழற்றியும், இம்மார்க்கத்தைக் குறை கூறியும், “செவியுற்றோம்; மாறு செய்தோம்” எனவும், “எங்களுக்குச் செவிசாய்ப்பீராக! ஆனால் உமக்கு நாங்கள் செவிசாய்க்க மாட்டோம்” எனவும் (தவறான பொருளைத் தரும்) “ராஇனா” எனவும் கூறுகின்றனர். மாறாக அவர்கள், “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்றும், “செவியேற்பீராக!” என்றும், “உன்ளுர்னா (எங்களைக் கவனிப்பீராக!)” என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும் அவர்களின் இறைமறுப்பின் காரணமாக அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். எனவே குறைவானோரைத் தவிர இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அல்குர்ஆன் 4:46

இறைவேதத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு மாற்றமாக மோசமான வார்த்தைகளை மாற்றிக் கூறிய காரணத்தினால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிய யூதர்கள்:

பரிசுத்தமான இறைவனைக் களங்கப்படுத்தும் விதமாக, இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடந்த உஸைர் என்கிற நல்ல மனிதரை இறைவனின் மகன் என்று கூறி மிகப்பெரிய அபாண்டத்தை அல்லாஹ்வின் மீது சுமத்தினர்.

யூதர்கள், ‘உஸைர் அல்லாஹ்வுடைய மகன்’ என்று கூறுகின்றனர். கிறித்தவர்களோ, ‘மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன்’ என்று கூறுகின்றனர். இது, தமது வாயளவில் அவர்கள் கூறும் கூற்றாகும். அவர்கள் இதற்கு முன்பிருந்த இறைமறுப்பாளர்களின் கூற்றுக்கு ஒத்துப் போகின்றனர். அவர்களை அல்லாஹ் அழிப்பானாக! அவர்கள் எங்கே திசை திருப்பப்படுகின்றனர்?

அல்குர்ஆன் 9:30

இறைவனின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் நோக்கில் “உஸைர்” மற்றும் “மஸீஹ்” ஆகியோரை அல்லாஹ்வின் மகன் என்று கூறி, இறைமறுப்பாளர்களின் கூற்றுக்கு ஒத்துப் போகின்ற கூற்றை வெளிப்படுத்திய யூதர்களை அல்லாஹ் அழிப்பானாக! என்று இறைவன் மிகக் கடுமையான முறையில் கோபத்தால் கொந்தளிக்கின்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி சபிக்கின்றான்.

காளைக்கன்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டவர்கள்:

இறைவனின் புறத்திலிருந்து ஏராளமான அருட்கொடைகளை அனுபவித்த யூதர்கள் அநியாயமான முறையில் இறைவனுக்கு இணைவைக்கும் காரியங்களில் ஈடுபட்டு மிகப்பெரிய சாபத்திற்குரிய காரியங்களைச் செய்தார்கள்.

நாற்பது இரவுகளை மூஸாவுக்கு நாம் வாக்களித்ததையும் பின்னர் (அதற்காக) அவர் சென்ற பிறகு நீங்கள் அநியாயம் செய்து, காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பாருங்கள்.

அல்குர்ஆன் 2:51

“என் சமுதாயத்தினரே! காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டதால் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொண்டீர்கள். எனவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமனிப்புக் கோரி, உங்களையே மாய்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் படைத்தவனிடம் அதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று மூஸா தமது சமூகத்தாரிடம் கூறியதை நினைத்துப் பாருங்கள். எனவே அவன் உங்களை மன்னித்தான். அவன் மன்னிப்புமிக்கவன். நிகரிலா அன்பாளன்.

அல்குர்ஆன் 2:54

(நபியே!) தங்கள்மீது வானத்திலிருந்து ஒரு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் இதைவிடப் பெரியதை மூஸாவிடம் கேட்டனர். “எங்களுக்கு அல்லாஹ்வை நேரடியாகக் காட்டுவீராக!” என்று கூறினர். அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடிமுழக்கம் தாக்கியது. பிறகு தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டனர். அதை நாம் மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தை வழங்கினோம்.

அல்குர்ஆன் 4:153

உங்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவருக்குப் பிறகு நீங்கள் அநியாயம் செய்து, காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்.

அல்குர்ஆன் 2:92

உங்களுக்கு மேல் தூர் மலையை உயர்த்தி, “நாம் வழங்கியதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிசாயுங்கள்!” என்று உங்களிடம் நாம் உடன்படிக்கை ஏற்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். “நாங்கள் செவியுற்றோம்; மாறு செய்தோம்” என்று அவர்கள் கூறினர். அவர்கள் மறுத்த காரணத்தால் காளைக் கன்று (மீதான நேசம்) அவர்களின் உள்ளங்களில் ஊட்டப்பட்டது. நீங்கள் இறைநம்பிக்கை கொண்டோராக இருந்தால் உங்களின் (காளைக் கன்றின் மீதான) நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது கெட்டது.

அல்குர்ஆன் 2:93

மேற்கண்ட வசனங்களில் காளைக்கன்றைக் கடவுளாக எடுத்துக் கொண்ட யூதர்கள் குறித்து இறைவன் மிகக்கடுமையாகக் கண்டிக்கின்றான்.

மூஸா சென்ற பிறகு அவரது சமுதாயத்தினர் தமது ஆபரணங்களாலான (வெறும்) உடலைக் கொண்ட காளைக் கன்றை (கடவுளாக) எடுத்துக் கொண்டனர். அதற்கு சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது; அவர்களுக்கு வழியையும் காட்டாது. என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் அதை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டு, அநியாயக்காரர்களாகி விட்டனர்.

அல்குர்ஆன் 7:148

* அவர்கள் கடவுளாக எடுத்துக் கொண்ட காளைக்கன்று அவர்களிடம் பேசாது! அவர்களுக்கு வழியையும் காட்டாது என்பதை உணராத யூதர்கள்!

* காளைக்கன்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டு அநியாயம் செய்த யூதர்கள்!

* இறைவனின் புறத்திலிருந்து தெளிவான சான்றுகள் வந்த பின்பும் காளைக்கன்றை கடவுளாக எடுத்துக் கொண்டு அநியாயம் செய்த யூதர்கள்!

* காளைக்கன்றின் மீதான நேசத்தில் ஊறித் திளைத்த யூதர்கள்!

இவ்வாறு காளைக்கன்றை கடவுளாக எடுத்துக் கொண்டு இறைவனுக்கு அநியாயம் செய்த யூதர்களின் கேடுகெட்ட குணத்தை இறைவன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றான்.

காளைக் கன்றை யார் (கடவுளாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்கள்மீது, அவர்களுடைய இறைவனின் கோபமும் இவ்வுலக வாழ்வில் இழிவும் வந்தடையும். இட்டுக்கட்டுவோருக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.

அல் குர்ஆன் 7:152

காளைக்கன்றைக் கடவுளாக எடுத்துக் கொண்ட யூதர்கள், இறைவனின் கோபமும், இவ்வுலக வாழ்வில் கடுமையான இழிவும் வந்தடைவதாக இறைவன் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றான்.

மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்:

யூதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி அழிவை சந்தித்தார்கள் என்று அல்லாஹ் தெளிவாக பட்டியலிடுகின்றான்.

பின்னர் நீங்களே உங்களைச் சார்ந்தோரைக் கொலை செய்கிறீர்கள். உங்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது உங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும் அவர்களின் ஊர்களிலிருந்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள். பாவத்திலும், பகைமையிலும் அவர்களுக்கு எதிராக உதவி செய்கிறீர்கள். அவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால் (உங்கள் வேதத்தின்படி) நஷ்டஈடு கொடுத்து அவர்களை விடுவிக்கிறீர்கள். வேதத்தில் சிலவற்றை நம்பி, சிலவற்றை மறுக்கிறீர்களா? உங்களில் இதைச் செய்வோருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. அவர்கள் மறுமை நாளில் கடும் வேதனையின் பக்கம் திருப்பப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:85

உலகத்தில் யூதர்களைப் போன்று வேறு எவராலும் குழப்பத்தை ஏற்படுத்த இயலாது என்று சொல்கின்ற வகையில் உலகத்தில் மிகப்பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.

* அவர்களைச் சார்ந்தோரையே கொலை செய்து குழப்பம் ஏற்படுத்தினார்கள்.

* பாவத்திலும், பகைமையிலும் உதவி செய்கின்றார்கள்.

* வேதத்தில் சிலவற்றை நம்பி, சிலவற்றை மறுத்து குழப்பம் ஏற்படுத்தினார்கள்.

இத்தகைய குழப்பவாதிகளுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு இல்லை என்றும் மறுமை நாளில் கடுமையான வேதனையின் பக்கம் திருப்பப்படுவார்கள் என்றும் அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றான்.

குரங்குகளாக – பன்றிகளாக உருமாற்றப்பட்டவர்கள்:

இறைவனுக்குக் கட்டுப்பட மறுத்து, இறைக் கட்டளைகளைப் புறக்கணித்த யூதர்களுக்கு இறைவன் தன்னுடைய புறத்திலிருந்து ஏராளமான வாய்ப்புகளை வழங்கினான். ஆனால், அநியாயக்கார யூதக்கூட்டம் திருந்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், இறைவனுக்கு மாறு செய்கின்ற காரியங்களில் ஈடுபடுவதிலேயே மிகக் குறிக்கோளாக இருந்தார்கள்.

உங்களில் (ஒரு பகுதியினர்) சனிக்கிழமை வரம்பு மீறினர். எனவே “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களிடம் கூறினோம். இதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்.

அல்குர்ஆன் 2:65

“அல்லாஹ்விடம் இதைவிட மோசமான பலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யாரை அல்லாஹ் சபித்து, அவர்கள்மீது கோபமுற்று, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் சிலரைப் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வணங்கியோருமே தரங்கெட்டவர்கள்; நேர்வழியிலிருந்து தவறியவர்கள்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 5:60

எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை அவர்கள் மீறியபோது “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்!” என அவர்களுக்குக் கூறினோம்.

அல்குர்ஆன் 7:166

இறைவன் எவற்றை விட்டும் தடுத்தானோ அவற்றை மீறிய காரணத்தினாலும், நேர்வழியிலிருந்து தவறிய காரணத்தினாலும் மிக மோசமான பலனை அடைந்து அல்லாஹ்வின் சாபத்தை பெற்றார்கள். இழிவடைந்த குரங்குகளாகவும் – பன்றிகளாகவும் உருமாற்றப்பட்டார்கள்.

பெரும்பாவங்களைக் கட்டவிழ்த்து விட்டவர்கள்:

இறைவன் தடுத்திருக்கின்ற பெரும் பாவங்களைக் கட்டவிழ்த்து விட்ட பெரும்பாவிகளாக யூதர்கள் தங்களின் வாழ்க்கை முழுவதையும் அமைத்துக் கொண்டார்கள்.

யூதர்களின் அநியாயத்தாலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரைத் தடுத்ததாலும், வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடுக்கப்பட்டிருந்தும் அதை அவர்கள் வாங்கியதாலும், மக்களுடைய செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நல்லவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம்.

அல்குர்ஆன் 4:160,161

யூதர்கள் மிகப்பெரிய அளவில் அநியாயம் செய்து வட்டி வாங்கி, இலஞ்சம் வாங்கி, சூனியம் எனும் மிகப்பெரும் பாவத்தைப் பரப்புதல் இதுபோன்ற பெரும்பாவங்களைக் கட்டவிழ்த்து விட்ட யூதர்கள் சபிக்கப்பட்டவர்களாக மாறினார்கள்.

யூதர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற வரை:

தங்களின் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என இறைத்தூதர் (ஸல்) அவர்களை யூதர்கள் மிகவும் வற்புறுத்தினார்கள். இறைவனின் மார்க்கதிற்கு மாறு செய்வதற்கு முஹம்மத் (ஸல்) அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அநியாயக்காரராக மாற்ற அரும்பாடுபட்டார்கள்.

நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரை யூதர்களும், கிறித்தவர்களும் உம்மைப் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே நேர்வழி” என்று கூறுவீராக! உமக்கு ஞானம் வந்த பிறகு அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பவனோ, உதவி செய்பவனோ இல்லை.

அல்குர்ஆன் 2:120

“நீங்கள் யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்” என (வேதமுடையோர்) கூறுகின்றனர். “அவ்வாறல்ல! சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்போருள் ஒருவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 2:135

உமக்கு ஞானம் வந்த பிறகு அவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றினால் அப்போது அநியாயக்கார்களுள் ஒருவராக ஆகிவிடுவீர்.

அல்குர்ஆன் 2:145

யூதர்களின் மனவிருப்பங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தால், நீங்கள் அநியாயக்காரர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்கள் என்று அல்லாஹ் யூதர்களின் கேடுகெட்ட குணத்தை மிக வன்மையாகக் கண்டிக்கின்றான்.

குழப்பத்தில் மூழ்கடிக்கப்பட்ட கூட்டம்:

அநியாயக்கார யூதர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டதாகவும், இவ்வுலகிலும் – மறுமையிலும் இழிவும் வேதனையும் கடுமையாக இருக்கும் என்று அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கின்றான்.

தூதரே! அவர்களின் உள்ளங்கள் இறைநம்பிக்கை கொள்ளாத நிலையில் தமது உதட்டளவில் ‘இறைநம்பிக்கை கொண்டோம்’ என்று கூறுவோரும், யூதர்களும் இறைமறுப்பில் விரைந்து செல்வது உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் பொய்யையே அதிகம் செவியேற்பவர்கள். உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்திற்காகவே அதிகம் செவியேற்கின்றனர். சொற்களை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றுகின்றனர். “(நீங்கள் விரும்பக்கூடிய) அது உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்! அது உங்களுக்கு வழங்கப்படா விட்டால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!” என்று கூறுகின்றனர். யாரை அல்லாஹ் குழப்பத்தில் ஆழ்த்த நாடிவிட்டானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து எந்த ஒன்றுக்கும் நீர் சக்தி பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்த அல்லாஹ் விரும்பவில்லை. இவ்வுலகில் அவர்களுக்கு இழிவும், மறுமையில் அவர்களுக்குக் கடும் வேதனையும் உள்ளது.

அல்குர்ஆன் 5:41

சாதகமானதாக இருந்தால் ஏற்பதும், இறைவார்த்தைகளின் சொற்களை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றுவதுமாக அதிகப்படியான குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். அத்தகைய இழிவு நிறைந்த கூட்டத்தை இறைவன் மிக வன்மையாகக் கண்டிக்கின்றான்.

தங்களின் பிள்ளைகளை அறிவது போன்று:

யூதர்களிடம் இருக்கின்ற வேதத்தை உண்மைப்படுத்தும் விதமாக, ஒரு தூதர் (முஹம்மத் நபி) அவர்களிடம் வந்த பிறகும் கூட, எதையும் அறியாதவர்களாய் நடித்துக் கொண்ட நிலையில் முதுகுக்குப் பின்னால் தூக்கி வீசி எறிந்தார்கள்.

அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் வழங்கப் பட்டவர்களில் ஒரு கூட்டத்தினர் எதையும் அறியாதவர்களைப் போன்று அல்லாஹ்வின் வேதத்தைத் தம் முதுகுகளுக்குப் பின்னால் வீசி எறிந்து விட்டனர்.

அல்குர்ஆன் 2:101

யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிந்து கொள்வதைப் போன்று (நபியாகிய) இவரை அறிகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் தெரிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:146

 தங்களின் பிள்ளைகளை அறிந்து கொள்வதைப் போன்று இந்த நபியாகிய முஹம்மதை யூதர்கள் அறிந்து கொண்டார்கள். அவ்வாறு இருந்தும் கூட அநியாயக்கார கூட்டமாக மாறி விட்டார்கள்.

ஜிப்ரீலுக்கும் – மீக்காலுக்கும் எதிரானவர்கள்:

 வானவர்களாகிய ஜிப்ரீல் – மீக்காயில் ஆகியவர்கள் விஷயத்திலும் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு அநியாயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.

(நபியே!) “ஜிப்ரீலுக்கு யார் எதிரியாக இருக்கிறாரோ (அவர் அல்லாஹ்வுக்கும் எதிரியாவார்). ஜிப்ரீல்தான் அல்லாஹ்வின் ஆணைப்படி இ(வ்வேதத்)தை உமது உள்ளத்தில் இறக்கி வைத்தார். (இது) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 2:97

யார் அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காலுக்கும் எதிரியாக இருக்கிறார்களோ அந்த இறைமறுப்பாளர்களுக்கு அல்லாஹ்வும் எதிரியாவான்.

அல்குர்ஆன் 2:98

நாம் தெளிவான வசனங்களையே உமக்கு அருளியுள்ளோம். பாவிகளைத் தவிர (வேறெவரும்) அவற்றை மறுக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2:99

இன்னும் இதுபோன்ற ஏராளமான சாபத்திற்குரிய குணநலன்களுக்கு உரித்தவர்களாக யூதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களின் மோசமான குணநலன்கள் குறித்து கடுமையாக எச்சரிக்கின்றார்கள். அதுகுறித்து தொடர்ச்சியாகக் காண்போம். இன்ஷா அல்லாஹ்….!