குர்பானி தொடர்பான பலவீனமான செய்திகள்

குப்ரானி தொடர்பான பலவீனமான செய்திகள் குறித்த விளக்கம்

سنن الدارقطني ـ تدقيق مكتب التحقيق (5/ 506)

4747- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ بْنِ سُلَيْمَانَ الْخَلاَّلُ ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ سَهْلٍ ، حَدَّثَنَا الْمُسَيَّبُ بْنُ شَرِيكٍ ، حَدَّثَنَا عُبَيْدٌ الْمُكْتِبُ عَنْ عَامِرٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نَسَخَ الأَضْحَى كُلَّ ذَبْحٍ وَصَوْمُ رَمَضَانَ كُلَّ صَوْمٍ وَالْغُسْلُ مِنَ الْجَنَابَةِ كُلَّ غُسْلٍ وَالزَّكَاةُ كُلَّ صَدَقَةٍ

خَالَفَهُ الْمُسَيَّبُ بْنُ وَاضِحٍ عَنِ الْمُسَيَّبِ وَكِلاَهُمَا ضَعِيفَانِ وَالْمُسَيَّبُ بْنُ شَرِيكٍ مَتْرُوكٌ

குர்பானி (கொடுப்பது) அனைத்து அறுக்கும் கடமைகளையும் (அவசியமில்லை என்று) மாற்றிவிட்டது. ரமலான் நோன்பு அனைத்து நோன்பையும் மாற்றிவிட்டது. கடமையான குளிப்பு, அனைத்து குளிப்பையும் மாற்றிவிட்டது. ஜகாத் அனைத்து தர்மத்தையும் மாற்றிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்கள்: தாரகுத்னீ (4747), பைஹகீ (1949)

இச் செய்தியில் இடம்பெறும் முஸய்யப் பின் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி இச்செய்தியை பதிவு செய்த தாரகுத்னீ ,பைஹகீர் ஆகியோர் அந்த செய்தியின் இறுதியில் இவர் மத்ரூக் (விடப்பட வேண்டியவர்-பொய்யர்) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 304)

3126- حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ , حَدَّثَنِي أَبُو الْمُثَنَّى ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ : مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلاً أَحَبَّ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ ، مِنْ هِرَاقَةِ دَمٍ ، وَإِنَّهُ لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ ، بِقُرُونِهَا ، وَأَظْلاَفِهَا ، وَأَشْعَارِهَا ، وَإِنَّ الدَّمَ ، لَيَقَعُ مِنَ اللهِ عَزَّ وَجَلَّ ، بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الأَرْضِ ، فَطِيبُوا بِهَا نَفْسًا.

அறுக்கும் நாளில் (துல்ஹஜ் 10ல்) ஆதமின் மகன் செய்யும் அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான அமல் இரத்தத்தை ஓட்ட செய்வதாகும். (குர்பானி கொடுப்பதாகும்)

(குர்பானி கொடுக்கப்பட்ட பிராணி) அதன் கொம்புகளுடனும் கால் குழம்புகளுடனும் அதன் முடிகளுடனும் மறுமை நாளில் வரும். (அதன்) இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்  அல்லாஹ்விடம் சென்றுவிடும். எனவே அதை மனமுவந்து செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: இப்னு மாஜா (3126)

இச் செய்தியில் இடம்பெறும் அபுல் முஸன்னா என்பவர் பலவீனமானவராவார். மேலும் அவருக்கு அடுத்த அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா என்பவரிடமிருந்து எந்த செய்தியை செவியுறவில்லை. எனவே இது தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

أن الله يعتق بكل عضو من الضحية عضوا من المضحي

அல்லாஹ் தஆலா குர்பானி பிராணியின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பகரமான குர்பானி கொடுத்தவரின் உறுப்புகளை (நரகத்திலிருந்து) விடுதலை செய்கிறான்.

இந்த செய்தி தொடர்பாக இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

تلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير (4/ 343)

وقال ابن الصلاح: هذا حديث غير معروف، ولم نجد له سندا يثبت به

அது (நபிமொழி வழியாக)அறியப்படாத செய்தியாகும். இதற்கு உறுதியான அறிவிப்பாளர் வரிசையை நாம் பெற்றுக் கொள்ளவில்லை.

நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம்: 4, பக்கம் 343

المعجم الكبير للطبراني (3/ 142، بترقيم الشاملة آليا)

2670- حَدَّثَنَا أَحْمَدُ بن مُحَمَّدٍ النَّخَعِيُّ الْقَاضِي الْكُوفِيُّ ، حَدَّثَنَا عَمَّارُ بن أَبِي مَالِكٍ الْجَنْبِيُّ ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ النَّخَعِيُّ ، عَنْ عَبْدِ اللَّهِ بن حَسَنِ بن حَسَنٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ ضَحَّى طَيِّبَةً بِهَا نَفْسُهُ ، مُحْتَسِبًا لأُضْحِيَّتِهِ ، كَانَتْ لَهُ حِجَابًا مِنَ النَّارِ “.

யார் தூய்மையான மனதுடன் (நன்மையை) எதிர்பார்த்து குர்பானி கொடுப்பாரோ அவருக்கு அது நரகை விட்டும் தடுக்கும் திரையாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் (ரலி), நூல்: தப்ரானீ – கபீர் (2670)

இச் செய்தியில் இடம்பெறும் அபூதாவுத் அந்நகயீ என்பவர் பொய்யர் ஆவார்.

سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 305)

3127- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ ، حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ مِسْكِينٍ ، حَدَّثَنَا عَائِذُ اللهِ ، عَنْ أَبِي دَاوُدَ ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ ، قَالَ : قَالَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : يَا رَسُولَ اللهِ ، مَا هَذِهِ الأَضَاحِيُّ ؟ قَالَ : سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا : فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللهِ ؟ قَالَ : بِكُلِّ شَعَرَةٍ ، حَسَنَةٌ قَالُوا : فَالصُّوفُ ؟ يَا رَسُولَ اللهِ ، قَالَ : بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ ، حَسَنَةٌ.

இந்த குர்பானி என்ன? என்று நபித்தோழர்கள் நபிகளாரிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது உங்கள் நபி இப்ராஹீம் அவர்களின் சுன்னதாகும். இதில் நமக்கு (நன்மைகள்) ஏதும் உண்டா? என்று கேட்டார்கள். (குர்பானி பிராணியின்) ஒவ்வொரு முடிக்கும் நன்மை உண்டு என்று பதிலளித்தார்கள். செம்மறி ஆட்டில்? என்று கேட்ட போது செம்மறியாட்டின் ஒவ்வொரு முடிக்கும் நன்மை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி), நூல்: இப்னுமாஜா (3127)

இதில் இடம்பெறும் ஆயிதுல்லாஹ், அபூதாவுத் என்ற இருவரும் பலவீனமானவர்கள் ஆவார்.

المعجم الأوسط (8/ 176)

8319 – حدثنا موسى بن زكريا نا عمرو بن الحصين نا محمد بن عبد الله بن علاثة عن عبد الملك بن أبي غنية عن الحكم عن حنش الكناني عن علي عن النبي صلى الله عليه و سلم قال يا أيها الناس ضحوا واحتسبوا بدمائها فإن الدم وإن وقع في الأرض فإنه يقع في حرز الله جل وعز

மனிதர்களே! குர்பானி கொடுங்கள். அதன் இரத்தின் மூலம் நன்மையை எதிர்பாருங்கள். அந்த இரத்தம் பூமியில் விழுந்தாலும் அது அல்லாஹ்வின் பாதுகாப்பில்-சேமிப்பில் விழுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பர் அலீ (ரலி), நூல் தப்ரானீ – அவ்ஸத் (8319)

இச் செய்தியில் அம்ர் பின் ஹுஸைன் என்பவர் பொய்யர் ஆவார்.

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (4/ 247)

 7524 – أخبرنا أبو بكر بن إسحاق الفقيه ثنا إسماعيل بن قتيبة ثنا أبو بكر بن أبي شيبة ثنا النضر بن إسماعيل البجلي ثنا أبو حمزة الثمالي عن سعيد بن جبير عن عمران بن حصين رضي الله عنه : أن رسول الله صلى الله عليه و سلم قال : يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإنه يغفر لك عند أول قطرة تقطر من دمها كل ذنب عملتيه

பாத்திமாவே எழுந்து உமது குர்பானி பிராணிற்கு அருகில் ஆஜராகு, அதன் இரத்தத்திலிருந்து விழக்கூடிய  முதலாவது துளியின் போதே நீர் செய்த பாவம் மன்னிக்கப்பட்டுவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: ஹாகிம் (7524)

இச் செய்தியில் இடம்பெறும் அபூஹம்ஸா அஸ்ஸிமாலீ என்பவர் பலவீனமானவராவார்.

السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (9/ 262)

19493- أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِىُّ وَأَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ الأَصْبَهَانِىُّ قَالاَ أَخْبَرَنَا عَلِىُّ بْنُ عُمَرَ الْحَافِظُ حَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِىُّ حَدَّثَنَا رِفَاعَةُ بْنُ هُرَيْرٍ حَدَّثَنِى أَبِى عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا قَالَتْ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ أَسْتَدِينُ وَأُضَحِّى. قَالَ :« نَعَمْ فَإِنَّهُ دَيْنٌ مَقْضِىٌّ ». {ج} قَالَ عَلِىٌّ : هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ وَهُرَيْرٌ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ وَلَمْ يَسْمَعْ مِنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا وَلَمْ يُدْرِكْهَا.

அல்லாஹ்வின் தூதரே நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாக இதை அறிவிக்கும் ஹுரைர் என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது தொடர்பு அறுந்த பலவீனமான ஹதீஸாகும் என்று பைஹகீ அவர்களே இதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : பைஹகீ (19493)

سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 302)

3123- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ : مَنْ كَانَ لَهُ سَعَةٌ ، وَلَمْ يُضَحِّ ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاَّنَا.

யாருக்கு வசதியிருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழுமிடத்திற்கு வரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நூல்கள் இப்னுமாஜா (3123),அஹ்மத் (8256),ஹாகிம் (7565)

இச் செய்தியில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் அய்யாஷ் என்பவர் பலவீனமானவராவார்.