புறம் பேசுவதைச் செவியேற்பது தடைசெய்யப்பட்டதாகும்
யார் தடைசெய்யப்பட்ட புறம் பேசுதலை செவியேற்கிறாரோ அவர் அதனை மறுத்து, புறம் பேசியவரை நிராகரிக்க வேண்டும். அவருக்கு இயலாவிட்டால், அல்லது அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சபையை விட்டும் அவருக்கு வெளியேறுவது சாத்தியமானால் வெளியேறிவிடவேண்டும்.
قال اللَّه تعالى: ﴿وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ ﴾
அல்லாஹ் கூறுகிறான் :
இன்னும் அவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதனைப் புறக்கணிப்பார்கள்.
அல்குர்ஆன் 28 : 55
وقال تعالى: ﴿ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ﴾
அல்லாஹ் கூறுகிறான் :
(இறைநம்பிக்கையாளர்களான) அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்.
அல்குர்ஆன் 23 : 3
وقال تعالى: ﴿ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا ﴾
அல்லாஹ் கூறுகிறான் :
செவி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றும் அது குறித்து விசாரிக்கப்படுவதாகும்.
அல்குர்ஆன் 17 : 36
وقال تعالى: ﴿ وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ﴾
அல்லாஹ் கூறுகிறான் :
நமது வசனங்களைப் பற்றி (விதண்டாவாதத்தில்) மூழ்குவோரை நீர் கண்டால் அவர்கள் அதை விட்டும் வேறு பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்து விட்டால் நினைவு வந்த பின்னர் அந்த அநியாயக்கார கூட்டத்தாருடன் அமராதீர்!
அல்குர்ஆன் 6 : 68
1528- وعنْ أبي الدَّرْداءِ رضي اللَّه عَنْهُ عنِ النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قالَ : « منْ ردَّ عَنْ عِرْضِ أخيهِ ردَّ اللَّه عنْ وجْههِ النَّارَ يوْمَ القِيَامَةِ – رواه الترمذي وقالَ : حديثٌ حسنٌ
ஹதீஸ் எண் : 1528
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“யார் தன்னுடைய சகோதரனின் மானத்தைப் பாதுகாக்கின்றாரோ, கியாமத் நாளில் அல்லாஹ் அவருடைய முகத்தை நரகத்திலிருந்து பாதுகாப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி), நூல் : திர்மிதீ (1854)
குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “மர்சூக் அபீ பக்ர் அத்தைமீ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவருடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை.
1529- وعنْ عِتْبَانَ بنِ مالِكٍ رضي اللَّهُ عنْهُ في حدِيثِهِ الطَّويلِ المشْهورِ الَّذي تقدَّم في باب الرَّجاءِ قَالَ : فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ فَصَفَفْنَا فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ.فَقَالَ قَائِلٌ مِنْهُمْ أَيْنَ مَالِكُ بْنُ الدُّخْشُنِ فَقَالَ بَعْضُهُمْ ذَلِكَ مُنَافِقٌ لَا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُلْ أَلَا تَرَاهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ قُلْنَا فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ إِلَى الْمُنَافِقِينَ فَقَالَ فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ متفق عليه
« وعِتبانُ யு بكسر العين على المشهور وحُكِي ضمُّها وبعدها تاء مثناةٌ مِنْ فوق ثُمَّ باء موحدةٌ و « الدُّخْشُمُ யு بضم الدال وإسكان الخاءِ وضمِّ الشين المعجمتين
ஹதீஸ் எண் : 1529
இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
(இது பிரபல்யமான நீண்ட ஹதீஸ் ஆகும். “ஆதரவு வைத்தல்” என்ற பாடத்தின் கீழ் இது முன்னரே வந்துள்ளது.)
நபி (ஸல்) அவர்கள் (இத்பான் பின் மாலிக் (ரலி) வீட்டில் ஓரிடத்தில்) நின்று தக்பீர் (தஹ்ரீமா) சொன்னார்கள். நாங்கள் (அவர்களுக்குப் பின்னே) அணி வகுத்து நின்று கொண்டோம். அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். மக்களில் ஒருவர், மாலிக் பின் துஹ்சன் எங்கே? என்று கேட்டார். அதற்கு அவர்களில் மற்றொருவர், “அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் “அப்படிச் சொல்லாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக அவர் லா இலாஹ இல்லல்லாஹு (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொன்னதை நீங்கள் பார்க்க வில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மிக அறிந்தவர்கள் என்று சொன்னார். அப்போது நாங்கள் (அல்லாஹ்வின் தூதரே!) அவர் (மாலிக் பின் துஹ்சன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர்கள் மீது அபிமானம் கொண்டிருப்பதையும் காண்கிறோம். (அதனால்தான் அவ்வாறு சொல்லப்பட்டது) என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் திருப்தியை நாடி லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான் அல்லவா?” என்று கேட்டார்கள்.
நூல்கள் : புகாரி (5401), முஸ்லிம் (1165)
1530- وعَنْ كعْبِ بنِ مالكٍ رضي اللَّه عَنْهُ في حدِيثِهِ الطَّويلِ في قصَّةِ توْبَتِهِ وقد سبقَ في باب التَّوْبةِ قال : قال النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وهُو جَالِسٌ في القَوْم بِتبُوكَ : « ما فعل كَعْبُ بنُ مالك ؟ – فقالَ رجُلٌ مِنْ بَني سلِمَةَ : يا رسُولَ اللَّه حبسهُ بُرْداهُ والنَّظَرُ في عِطْفيْهِ فقَال لَهُ معاذُ بنُ جبلٍ رضي اللَّه عنْه : بِئس ما قُلْتَ واللَّهِ يا رسُولَ اللَّهِ ما عَلِمْنا علَيْهِ إلاَّ خيْراً فَسكَتَ رسُولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّممتفق عليه
« عِطْفَاهُ – جانِباهُ وهو إشارةٌ إلى إعجابه بنفسهِ
ஹதீஸ் எண் : 1530
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
(இது கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்தது தொடர்பாக வரக்கூடிய நீண்ட ஹதீஸ் ஆகும். இது “பாவமன்னிப்பு” என்ற பாடத்தின் கீழ் முன்னதாகவே கூறப்பட்டுவிட்டது)
. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண்டிருக்கும் போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅப் என்ன ஆனார்? என்று கேட்டார்கள். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அவரின் இரு சால்வைகளைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதுதான் அவரை வரவிடாமல் தடுத்து விட்டன என்று கூறினார். உடனே, முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், (அந்த மனிதரை நோக்கி), தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள்.
நூல்கள் : புகாரி (4418), முஸ்லிம் (5346)
புறம் பேசுவதற்கு ஆகுமாக்கப்பட்டவை பற்றிய விளக்கம்
اعلم أن الغيبة تباح لغرض صحيح شرعي لا يمكن الوصول إليه إلا بها وهو ستة أسباب:
الأول التظلم فيجوز للمظلوم أن يتظلم إلى السلطان والقاضي وغيرهما ممن له ولاية أو قدرة على إنصافه من ظالمه فيقول: ظلمني فلان بكذا.
الثاني الاستعانة على تغيير المنكر ورد العاصي إلى الصواب فيقول لمن يرجو قدرته على إزالة المنكر: فلان يعمل كذا فازجره عنه ونحو ذلك ويكون مقصوده التوصل إلى إزالة المنكر فإن لم يقصد ذلك كان حراماً.
الثالث الاستفتاء فيقول للمفتي: ظلمني أبي أو أخي أو زوجي أو فلان بكذا فهل له ذلك؟ وما طريقي في الخلاص منه وتحصيل حقي ودفع الظلم؟ ونحو ذلك فهذا جائز للحاجة ولكن الأحوط والأفضل أن يقول: ما تقول في رجل أو شخص أو زوج كان من أمره كذا؟ فإنه يحصل به الغرض من غير تعيين ومع ذلك فالتعيين جائز كما سنذكره في حديث هند (انظر الحديث رقم 1532) إن شاء اللَّه تعالى.
الرابع تحذير المسلمين من الشر ونصيحتهم وذلك من وجوه؛ منها جرح المجروحين من الرواة والشهود وذلك جائز بإجماع المسلمين بل واجب للحاجة. ومنها المشاورة في مصاهرة إنسان أو مشاركته أو إيداعه أو معاملته أو غير ذلك أو مجاورته ويجب على المشاوَر أن لا يخفي حاله بل يذكر المساوئ التي فيه بنية النصيحة. ومنها إذا رأى متفقهاً يتردد إلى مبتدع أو فاسق يأخذ عنه العلم وخاف أن يتضرر المتفقه بذلك فعليه نصيحته ببيان حاله بشرط أن يقصد النصيحة وهذا مما يُغلط فيه وقد يحمل المتكلم بذلك الحسد ويلبِّس الشيطان عليه ذلك ويخيل إليه أنه نصيحة فليُتَفطن لذلك. ومنها أن يكون له ولاية لا يقوم بها على وجهها إما بأن لا يكون صالحاً لها وإما بأن يكون فاسقاً أو مغفلاً ونحو ذلك فيجب ذكر ذلك لمن له عليه ولاية عامة ليزيله ويولي من يصلح أو يعلم ذلك منه ليعامله بمقتضى حاله ولا يغتر به وأن يسعى في أن يحثه على الاستقامة أو يستبدل به.
الخامس أن يكون مجاهراً بفسقه أو بدعته كالمجاهر بشرب الخمر ومصادرة الناس وأخذ المكس وجباية الأموال ظلماً وتولي الأمور الباطلة فيجوز ذكره بما يجاهر به ويحرم ذكره بغيره من العيوب إلا أن يكون لجوازه سبب آخر مما ذكرناه.
السادس التعريف فإذا كان الإنسان معروفاً بلقب كالأعمش والأعرج والأصم والأعمى والأحول وغيرهم جاز تعريفهم بذلك ويحرم إطلاقه على جهة التنقص ولو أمكن تعريفه بغير ذلك كان أولى.
فهذه ستة أسباب ذكرها العلماء وأكثرها مجمع عليه. ودلائلها من الأحاديث الصحيحة المشهورة؛ فمن ذلك:
நீ அறிந்து கொள் : சரியான நோக்கத்திற்காக, புறம்பேசினால் மட்டுமே அந்த நோக்கத்தை அடைவது சாத்தியமாகும் என்ற நிலையில், மட்டுமே மார்க்க அடிப்படையில் புறம்பேசுதல் ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவை ஆறு காரணங்களாகும்:
1. அநீதியை முறையிடும்போது :
அநீதி இழைக்கப்பட்டவன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்குவதற்கு ஆற்றலுடைய, அல்லது அதிகாரமுடைய அரசர், நீதிபதி அல்லது மற்றவர்களிடம் “எனக்கு இன்னார் இவ்வாறு அநீதி இழைத்துவிட்டார்” என்று கூறி தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிடுவது கூடும்.
2. ஒரு தீமையை தடுப்பதற்காகவும், மாறு செய்பவனை சரியானபாதைக்கு திருப்புவதற்காகவும் உதவி தேடும் போது.
தீமையை தடுப்பதற்கு ஆற்றல் பெற்றவராக யாரை நம்புகிறாரோ அவரிடம் “இன்னார் இப்படிச் செய்கிறார். அதைவிட்டும் அவரைக் கண்டிப்பீராக” என்றோ அல்லது இது போன்றோ கூறுவது கூடும். தீமையான காரியத்தை நீக்குவதற்காக உதவி தேடுவதே அவருடைய நோக்கமாக இருக்க வேண்டும். இந்த நோக்கம் இல்லையென்றால் அவ்வாறு கூறுவது ஹராமானதாக ஆகிவிடும்.
3. மார்க்கத் தீர்ப்பு வேண்டும்போது :
மார்க்கத் தீர்ப்பு வழங்குபவரிடம் “என்னுடைய தகப்பனார், அல்லது சகோதரன், அல்லது கணவன் அல்லது இன்னார் எனக்கு இவ்வாறு அநியாயம் செய்து விட்டார். இவ்வாறு செய்வது அவருக்கு கூடுமா? அவரிடமிருந்து விடுபவடுவதற்கோ, என்னுடைய உரிமையை பெறுவதற்கோ, அல்லது எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை தடுப்பதற்கோ எனக்கு எந்த வழியும் இல்லை? என்றோ அல்லது இது போன்ற முறைகளிலோ தேவை ஏற்படும் போது கூறுவது ஆகுமானதாகும். என்றாலும் யாரையும் குறிப்பிட்டுக் கூறாமல் “இந்த மனிதர், அல்லது இன்னார், அல்லது ஒரு கணவன் இவ்வாறு செய்துவிட்டார்?” என்று கூறுவதே சிறந்ததும் பேணுதலானதும் ஆகும். இதன் மூலம் யாரையும் குறிப்பிட்டுக் கூறாமலேயே நோக்கத்தை அடைந்து கொள்ளலாம். இத்துடன் குறிப்பிட்டுக் கூறுவதும் அனுமதிக்கப்பட்டதே. இதனை நாம் இன்ஷா அல்லாஹ் ஹின்த் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸில் (எண் 1532) ல் கூறஇருக்கின்றோம்.
4. தீமையிலிருந்து முஸ்லிம்களை எச்சரிக்கை செய்து அவர்களுக்கு அறிவுரை கூறுதல் :
இது பலமுறைகளில் உள்ளதாகும்.
அறிவிப்பாளர்கள் மற்றும் சாட்சியாளர்களின் குறைகளை குறைகூறுவது. இது முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவின் படி ஆகுமானதாகும். அதுமட்டுல்ல தேவை ஏற்படின் கட்டாயமும் ஆகும்.
ஒருவருக்கு பெண்கொடுத்தல் அல்லது அவருடன் கூட்டுச் சேருதல், அல்லது ஒருவரிடம் அமானிதமாக ஒரு பொருளை ஒப்படைத்தல், கொடுக்கல் வாங்கல் செய்தல் மற்றும் இதுவல்லாதவை அல்லது ஒருவருக்கு அருகில் வாழ்தல் தொடர்பாக ஆலோசனை கேட்கப்பட்டால் ஆலோசனை வழங்குபவர் தன்னிடம் யாரைப்ற்றி கேட்கப்பட்டதோ அவரின் நிலையை மறைப்பது கூடாது. அதுமட்டுமல்ல நலம் நாடுதல் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவரிடம் உள்ள தீமைகளைப் பற்றிக் கூறவும் வேண்டும்.
மார்க்கக் கல்வியை கற்கும் மாணவர் ஒருவர் கல்வி கற்பதற்காக ஒரு பித்அத்வாதியிடமோ அல்லது ஒரு தீயவனிடமோ மீண்டும் மீண்டும் செல்வதைக் கண்டால், இதனால் அந்த மாணவருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால் நலம் நாடுதல் என்ற அடிப்படையில் அந்த பித்அத்வாதி அல்லது தீயவனின் நிலைமையை தெளிவுபடுத்தி அம்மாணவருக்கு நலம்நாடுவது அதைக்காண்பவர் மீது கடமையாகும்.
இதுவாகிறது (பேணுதல் இல்லையென்றால்) தீமையில் வீழ்த்தாட்டிவிடும். சிலநேரங்களில் இது பற்றிப் பேசுபவர் பொறாமைக்கு உள்ளாக்கப்படலாம். ஷைத்தான் அவரிடத்தில் இது விசயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இது நலம் நாடுதல்தான் என்று போலித்தோற்றத்தை அவரிடத்தில் ஏற்படுத்திவிடுவான். எனவே இது விசயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒருவரிடம் ஆட்சி அதிகாரம் இருந்து அவர் அதற்குரிய முறைப்படி ஆட்சி செய்யவில்லையென்றால் அவரைப் பற்றியும் புறம் பேசலாம். “அவர் ஆட்சி செய்வதற்கு தகுதியானவராக இல்லை என்றோ, அல்லது அவர் தீயவராக, அல்லது கவனமற்றவராக இருக்கிறார் என்றோ, அல்லது இது போன்ற அடிப்படைகளில் அவருடைய குறைகளைப் பற்றி புறம் கூறலாம். இதனை யாரிடம் ஒட்டுமொத்த அதிகாரம் இருக்கிறதோ அவரிடம் கூறுவதுதான் அவசியமாகும். அப்போதுதான் அவர் அவரை நீக்கிவிட்டு தகுதியானவரை அதிகாரியாக நியமிப்பார். அல்லது அவரிடம் அக்குறை இருப்பதை அறிந்து அவருடைய நிலைமைக்குத் தகுந்தவாறு அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கும், அவரிடம் ஏமாறாமல் இருப்பதற்கும், அவரை உறுதியாக நடப்பதின் மீது தூண்டுவதற்கு முயற்சிப்பதற்கும், அல்லது அவரை மாற்றி மற்றொருவரை நியமிப்பதற்கும் சரியாக அமையும்.
5. பாவமான காரியங்களையும், பித்அத்துகளையும் பகிரங்கமாகச் செய்யும் போது :
மது அருந்துவது, மக்களைச் சுரண்டுவது, அநியாயமாக வரிவசூலித்தல், அநியாயமாக சொத்துக்களை பறிமுதல் செய்தல், தவறான காரியங்களுக்கு தலைமையேற்றல், இது போன்ற பாவங்களை ஒருவன் பகிரங்கமாகச் செய்தால் அவன் பகிரங்கமாகச் செய்தவற்றை கூறுவது ஆகுமானதாகும். இது அல்லாத குறைகளை கூறுவது தடைசெய்யப்பட்டதாகும். நாம் முன்னர் கூறிய வேறு காரணங்களின் பிரகாரம் ஆகுமானதாக இருந்தால் பிற குறைகளையும் கூறலாம்.
6. ஒருவர் பற்றி அறிமுகம் செய்தல் :
மாலைக் கண் உள்ளவர், நொண்டி, செவிடர், குருடர், மாறுகண் உடையவர் போன்ற பட்டப் பெயர்களால் ஒருவர் அறியப்பட்டவராக இருந்தால் அதன் மூலம் அவர்களை அறிமுகப் படுத்துவது கூடும். குறைப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் அதைப் பொதுவாகக் கூறுவது ஹராமாகும். இது அல்லாதவற்றை கொண்டு அவரை அறிமுகப்படுத்த இயலுமென்றால் அதுவே ஏற்றமானதாகும்.
இந்த ஆறும் உலமாக்கள் கூறியவை ஆகும். இவற்றில் பெரும்பாலானவை அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியவை ஆகும். பிரபல ஹதீஸ்களில் இதற்குரிய ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சில.
குறிப்பு : மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் நூலாசிரியரின் கருத்தாகும்.
1531- عَنْ عَائِشَةَ رضي اللَّه عَنْهَا أن رَجُلاً استأْذَن عَلى النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فقَالَ : « ائذَنُوا لهُ بئس أخو العشِيرَةِ ؟ – متفقٌ عليهاحْتَجَّ بهِ البخاري في جَوازِ غيبةِ أهلِ الفسادِ وأهلِ الرِّيبِ
ஹதீஸ் எண் : 1531
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர் உள்ளே வர அனுமதி கொடுங்கள், இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : புகாரி (6032), முஸ்லிம் (5051)
குழப்பவாதிகளையும், சந்தேகத்திற்குரியவர்களையும் பற்றி புறம் பேசுவது கூடும் என்பதற்கு புகாரி இதனை ஆதாரமாகக் கொண்டுள்ளார்
1532- وعنْهَا قَالَتْ : قَالَ رسُولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَا أَظُن فُلاناً وفُلاناً يعرِفَانِ مِنْ ديننا شَيْئاً – رواه البخاريُّ قال الليثُ بنُ سعْدٍ أحدُ رُواةِ هذا الحَدِيثِ : هذَانِ الرَّجُلانِ كَانَا مِنَ المُنَافِقِينَ
ஹதீஸ் எண் : 1532
“இன்னாரும் இன்னாரும் நாம் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அதில் எதையும் அறிந்திருப்பதாக நான் எண்ணவில்லை” என்று (நயவஞ்சகர்களாக இரு மனிதர்கள் குறித்து) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (6067)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான “அல்லைஸ் பின் ஸஃத்” அவர்கள் கூறுகிறார்கள் : அந்த இரு மனிதர்களும் நயவஞ்சகர்களில் உள்ளவர்கள் ஆவர்.
1533- وعنْ فَاطِمةَ بنْتِ قَيْسٍ رضي اللَّه عَنْها قَالَتْ : أَتيْتُ النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فقلت : إنَّ أبا الجَهْمِ ومُعاوِيةَ خَطباني ؟ فقال رسول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « أمَّا مُعَاوِيةُ فَصُعْلُوكٌ لا مالَ له وأمَّا أبو الجَهْمِ فلا يضَعُ العَصا عنْ عاتِقِهِ – متفقٌ عليه
وفي روايةٍ لمسلمٍ : « وأمَّا أبُو الجَهْمِ فضَرَّابُ للنِّساءِ – وهو تفسير لرواية : « لا يَضَعُ العَصا عَنْ عاتِقِهِ – وقيل : معناه : كثيرُ الأسفارِ
ஹதீஸ் எண் : 1533
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அபூ ஜஹ்ம் (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஆவியா, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. அபூஜஹ்மோ தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்”) என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (2953)
முஸ்லிமுடைய மற்றொரு (2964வது) அறிவிப்பில் “அபூஜஹ்மோ மனைவியரை அதிகமாக அடிக்கக்கூடியவர்” என்று வந்துள்ளது. இதுதான் “தமது கைத்தடியை தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார்” என்பதற்குரிய விளக்கமாகும். இதன் பொருள் “அதிகம் பயணம் செய்யக்கூடியவர்” என்றும் கூறப்படுகிறது.
1534- وعن زيْد بنِ أرْقَمَ رضي اللَّه عنهُ قال : خَرجْنَا مع رسولِ اللِّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم في سفَرٍ أصاب النَّاس فيهِ شِدةٌ فقال عبدُ اللَّه بنُ أبي : لا تُنْفِقُوا على منْ عِنْد رسُولِ اللَّه حتى ينْفَضُّوا وقال : لَئِنْ رجعْنَا إلى المدِينَةِ ليُخرِجنَّ الأعزُّ مِنْها الأذَلَّ فَأَتَيْتُ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَأَخْبرْتُهُ بِذلكَ فأرسلَ إلى عبد اللَّه بن أبي فَاجْتَهَد يمِينَهُ : ما فَعَل فقالوا : كَذَب زيدٌ رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَوقَع في نَفْسِي مِمَّا قالوهُ شِدَّةٌ حتى أنْزَل اللَّه تعالى تَصْدِيقي: ﴿ إذا جاءَك المُنَافِقُون ﴾ ثم دعاهم النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم لِيَسْتغْفِرَ لهم فلَوَّوْا رُؤُوسَهُمْ متفقٌ عليه
ஹதீஸ் எண் : 1534
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் உபை (எனும் நயவஞ்சகன்) தம் நண்பர்களிடம், “அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள் என்றும், நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்” என்றும் சொன்னான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் அறிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்கு ஆளனுப்பி, அவனிடம் (அது பற்றிக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான். அன்சாரிகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார் என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சென்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.
அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது… என்று தொடங்கும் (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் இறக்கினான். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளாமல்) தங்கள் தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் அர்கம் (ரலி), நூல் : புகாரி (4903), முஸ்லிம் (5353)
1535- وعنْ عائشةَ رضي اللَّه عنها قالتْ : قالت هِنْدُ امْرأَةُ أبي سُفْيانَ للنبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : إنَّ أبا سُفيانَ رجُلٌ شَحِيحُ ولَيْس يُعْطِيني ما يَكْفِيني وولَدِي إلاَّ ما أخَذْتُ مِنه وهَو لا يعْلَمُ ؟ قال : « خُذِي ما يكْفِيكِ ووَلَدَكِ بالمعْرُوفِ – متفقٌ عليه
ஹதீஸ் எண் : 1535
அபூ சுஃப்யான் (ரலி) அவர்களின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கஞ்சத்தனமுடைய ஒரு மனிதர். நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5364), முஸ்லிம் (3530)