தடுக்கப்பட் காரியங்கள் – ரியாளுஸ்ஸாலிஹீன்

كتاب الأمور المنهي عنها
தடுக்கப்பட் காரியங்கள்

புறம் பேசுவது தடைசெய்யப்பட்டதாகும் என்பதும் இன்னும் நாவைப் பாதுகாத்துக் கொள்வது பற்றிய கட்டளையும்

قال اللَّه تعالى: ﴿ وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ ﴾

அல்லாஹ் கூறுகிறான் :
(நம்பிக்கை கொண்டோரே!) உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசாதீர்கள். உங்களில் யாராவது இறந்துவிட்ட தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவீர்களா? நீங்கள் அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்.
அல்குர்ஆன் 49 : 12

وقال تعالى:﴿وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًاً ﴾

அல்லாஹ் கூறுகிறான் :
உமக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய இவை அனைத்தைப் பற்றியும் விசாரிக்கப்படும்.
அல்குர்ஆன் 17 : 36

وقال تعالى: ﴿ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ ﴾

அல்லாஹ் கூறுகிறான் :
(பதிவு செய்வதற்குத்) தயாராக உள்ள கண்காணிப்பாளர் அவனிடம் இருக்கும் நிலையிலேயே தவிர அவன் எந்த வார்த்தையையும் பேசுவதில்லை.
அல்குர்ஆன் 50 : 18

1511- وَعنْ أبي هُريْرَةَ رضي اللَّه عنْهُ عَنِ النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : « مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَليقُلْ خَيْراً أوْ ليَصْمُتْ  وَهذا الحَديثُ صَرِيحٌ في أَنَّهُ يَنْبغي أن لا يتَكَلَّم إلاَّ إذا كَان الكَلامُ خَيْراً وَهُو الَّذي ظَهَرَتْ مصْلحَتُهُ وَمَتى شَكَّ في ظُهُورِ المَصْلَحةِ فَلا يَتَكَلَّمُ-  متفقٌ عليه

ஹதீஸ் எண் : 1511
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் (பேசினால்) நல்லதைப் பேசட்டும், அல்லது வாய்மூடி (மவுனியாக) இருக்கட்டும்.”
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (6475), முஸ்லிம் (74)

நன்மையான பேச்சைத் தவிர வேறு எதையும் பேசாமல் இருப்பதே அவசியமானதாகும் என்பதற்கு இது தெளிவான ஹதீஸ் ஆகும். நன்மையான பேச்சு என்பது எதிலே பயன் வெளிப்படுகிறதோ அதுவாகும். எப்போது பேச்சினால் பயன் வெளிப்படுவதில் சந்தேகம் ஏற்படுகிறதோ அப்போது பேசுவது கூடாது.

1512- وعَنْ أبي مُوسَى رضي اللَّه عَنْهُ قَال : قُلْتُ يا رَسُولَ اللَّهِ أيُّ المُسْلِمِينَ أفْضَلُ؟ قال : « مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِن لِسَانِهِ وَيَدِهِ – متفق عليه

ஹதீஸ் எண் : 1512
“அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர் யார்?” என நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் “எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏற்படும் தீங்குகளிலிருந்து) பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்தான் (முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்) எனப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி), நூல்கள் : புகாரி (11), முஸ்லிம் (64)

1513- وَعَنْ سَهْلِ بنِ سعْدٍ قَال : قَالَ رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَنْ يَضْمَنْ لي ما بيْنَ لَحْيَيْهِ وَمَا بيْنَ رِجْلَيْهِ أضْمنْ لهُ الجَنَّة –  متفقٌ عليهِ

ஹதீஸ் எண் : 1513
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“யார் தமது இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ள (நாவையும்), இரு கால்களுக்கு மத்தியிலுள்ள (மர்மஸ்தானத்தையும் தீமைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.”
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல் : புகாரி (6474)

1514- وَعَنْ أبي هُرَيْرَةَ رضي اللَّه عَنْهُ أَنَّهُ سَمِعَ النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَقُولُ : إنَّ الْعَبْد لَيَتَكَلَّمُ بِالكَلِمةِ مَا يَتَبيَّنُ فيهَا يَزِلُّ بهَا إلى النَّارِ أبْعَدَ مِمَّا بيْنَ المشْرِقِ والمغْرِبِ –  ومعنى : « يَتَبَيَّنُ –  يَتَفَكَّرُ أنَّهَا خَيْرٌ أمْ لا- متفقٌ عليهِ

ஹதீஸ் எண் : 1514
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.”
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (6477), முஸ்லிம் (5711, 5712)

1515- وَعَنْهُ عن النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « إنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمةِ مِنْ رِضْوَانِ اللَّهِ تَعَالى مَا يُلقِي لهَا بَالاً يَرْفَعُهُ اللَّه بهَا دَرَجاتٍ وَإنَّ الْعبْدَ لَيَتَكلَّمُ بالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ تَعالى لا يُلْقي لهَا بالاً يهِوي بهَا في جَهَنَّم – رواه البخاري

ஹதீஸ் எண் : 1515
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி எண்ணாமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.”
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (6478)

1516- وعَنْ أبي عَبْدِ الرَّحمنِ بِلال بنِ الحارثِ المُزنيِّ رضي اللَّه عَنْهُ أنَّ رَسُولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قالَ : « إنَّ الرَّجُلَ ليَتَكَلَّمُ بالْكَلِمَةِ مِنْ رِضْوانِ اللَّهِ تَعالى ما كَانَ يَظُنُّ أنْ تَبْلُغَ مَا بلَغَتْ يكْتُبُ اللَّه بهَا رِضْوَانَهُ إلى يَوْمِ يلْقَاهُ وَإنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بالكَلِمةِ مِنْ سَخَطِ اللَّه مَا كَانَ يظُنُّ أن تَبْلُغَ ما بلَغَتْ يكْتُبُ اللَّه لَهُ بهَا سَخَطَهُ إلى يَوْمِ يلْقَاهُ -.رواهُ مالك في « المُوطَّإِ – والترمذي وقال :حديثٌ حسنٌ صحيحٌ

ஹதீஸ் எண் : 1516
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“ஒருமனிதர் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வாரத்தையை அது (இறைதிருப்தியிலிருந்து) எத்தகைய உயர்ந்த மதிப்பை அடைந்து விட்டது என்பதை அறியாமல் பேசுகிறார். அதன் காரணமாக அந்த மனிதர் தன்னைச் சந்திக்கும் நாள்வரை தன்னுடைய திருப்தியை அல்லாஹ் (அவருக்கு) எழுதுகிறான். ஒரு மனிதர் அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய ஒரு வார்த்தையை அது (இறைவனின் வெறுப்பிலிருந்து) எத்தகைய உச்சகட்டத்தை அடைந்துவிட்டது என்பதை அறியாமல் பேசுகிறார். இதன் காரணமாக அல்லாஹ் அந்த மனிதர் தன்னைச் சந்திக்கும் நாள் வரை தன்னுடைய வெறுப்பை அவருக்கு எழுதுகிறான்.”
அறிவிப்பவர் : அபூ அப்திர்ரஹ்மான் பிலால் இப்னுல் ஹாரிஸ் (ரலி),
நூல்கள் : திர்மிதீ (2241) முஅத்தா மாலிக் (1562)

1517- وعَنْ سُفْيان بنِ عبْدِ اللَّهِ رضي اللَّه عنْهُ قَال : قُلْتُ يا رسُولَ اللَّهِ حَدِّثني بأمْرٍ أعْتَصِمُ بِهِ قالَ : « قُلْ ربِّي اللَّه ثُمَّ اسْتَقِمْ யு قُلْتُ : يا رسُول اللَّهِ ما أَخْوفُ مَا تَخَافُ عَلَيَّ ؟ فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ ثُمَّ قَال : « هذا – رواه الترمذي وقال : حديثٌ حسنٌ صحيحٌ

ஹதீஸ் எண் : 1517
“அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப் பிடித்துக்கொள்ளவேண்டிய ஒரு காரியத்தை எனக்கு அறிவியுங்கள்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு அவர்கள் “என்னுடைய இறைவன் அல்லாஹ் என்று கூறி பிறகு அதில் உறுதியாக இரு” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் மீது தாங்கள் மிகவும் அஞ்சும் விசயம் எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்து பிறகு “இதைத்தான் (நான் மிகவும் அஞ்சுகிறேன்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : சுஃப்யான் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல் : திர்மிதீ (2334)
குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘‘அப்துர் ரஹ்மான் பின் மாயிஸ்” என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாதவர் ஆவார். என்றாலும் இந்த ஹதீஸ் நம்பகமான வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதாரப்பூர்வமானதாகும்.

1518- وَعَن ابنِ عُمَر رضي اللَّه عنْهُمَا قَالَ : قَالَ رسُولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « لا تُكْثِرُوا الكَلامَ بغَيْرِ ذِكْرِ اللَّهِ فَإنَّ كَثْرَة الكَلامِ بِغَيْرِ ذِكْرِ اللَّه تَعالَى قَسْوةٌ لِلْقَلْبِ وإنَّ أبْعَدَ النَّاسِ مِنَ اللَّهِ القَلبُ القَاسي – رواه الترمذي

ஹதீஸ் எண் : 1518
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இறைநினைவற்ற பேச்சை அதிகப்படுத்தாதீர்கள். இறை நினைவற்ற பேச்சை அதிகம் பேசுவது உள்ளத்தை கல்லாக்குவதாகும். அல்லாஹ்விடம் மக்களிலியே (இறையருளால்) மிகவும் தூரமானவன் கல்நெஞ்சம் கொண்டவர்தான்”.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : திர்மிதீ (2335)
குறிப்பு : இச்செய்தியில் இடம்பெறும் இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் ஹாதிப் என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.

1519- وعنْ أبي هُريرَة رضي اللَّه عَنهُ قَالَ : قال رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَنْ وَقَاهُ اللَّه شَرَّ مَا بيْنَ لَحْييْهِ وشَرَّ مَا بَيْنَ رِجْلَيْهِ دَخَلَ الجنَّةَ – رَوَاه التِّرمِذي وقال : حديث حسنٌ.

ஹதீஸ் எண் : 1519
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இரு தாடைகளுக்கு இடையிலுள்ள (நாவின்) தீங்கிலிருந்தும், இரு கால்களுக்கு இடையிலுள்ள (மர்மஸ்தானத்தின்) தீங்கிலிருந்தும் யாரை அல்லாஹ் பாதுகாக்கின்றானோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிட்டார்”.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ (2333)
குறிப்பு : இந்த ஹதீசின் அறிவிப்பாளர்களில் “முஹம்மத் பின் அஜ்லான்” என்பார் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர். என்றாலும் இதே செய்தி சரியான அறிவிப்பாளர் தொடரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இது ஆதாரப்பூர்வமானதாகும். மேலும் இதே கருத்தில் புகாரி (6474) ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

1520- وَعَنْ عُقْبةَ بنِ عامِرٍ رضي اللَّه عنْهُ قَالَ : قُلْتُ يا رَسول اللَّهِ مَا النَّجاةُ ؟ قَال : « أمْسِكْ عَلَيْكَ لِسانَكَ وَلْيَسَعْكَ بيْتُكَ وابْكِ على خَطِيئَتِكَ – رواه الترمذي وقالَ : حديثٌ حسنٌ

ஹதீஸ் எண் : 1520
“அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் (தருவது) எது? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(தீயவற்றை மொழிவதிலிருந்து) உன்னுடைய நாவினை நீ தடுத்துவைத்துக்கொள். (வீட்டில் வணக்கவழிபாடுகளைச் செய்வதின் மூலம்) உன்வீடு உனக்கு (நன்மைகளைத் தருவதில்) விசாலமாக இருக்கட்டும். உன்னுடைய பாவங்களுக்காக (தவ்பாச் செய்து வருந்தி) அழுவாயாக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : திர்மிதீ (2330)
குறிப்பு : இது பலவீனமான ஹதீஸ் ஆகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “அலி பின் யசீத்” என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

1521- وعن أبي سَعيدٍ الخُدْرِيِّ رضي اللَّه عَنْهُ عن النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : « إذا أَصْبح ابْنُ آدم فَإنَّ الأعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسانَ تَقُولُ : اتِّقِ اللَّه فينَا فَإنَّما نحنُ بِكَ : فَإنِ اسْتَقَمْتَ اسَتقَمْنا وإنِ اعْوججت اعْوَججْنَا – رواه الترمذي
معنى « تُكَفِّرُ اللِّسَان – : أَي تَذِلُّ وتَخْضعُ لَهُ

ஹதீஸ் எண் : 1521
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஆதமுடைய மகன் (மனிதன்) காலை நேரத்தை அடையும் போது அனைத்து உறுப்புகளும் நாவிற்கு பணிந்து (அதனிடம்) “எங்கள் விசயத்தில் நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். நாங்கள் உன்னைக் கொண்டுதான் இருக்கின்றொம். நீ சரியாக இருந்தால் நாங்களும் சரியாக இருப்போம். நீ கோணலாகிவிட்டால் நாங்கள் கோணலாகிவடுவோம்” என்று கூறுகின்றன.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : திர்மிதீ (2331)
குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் “அபுஸ் ஸஹ்பா” என்பார் இடம் பெறுகிறார். இவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.

1522- وعنْ مُعاذ رضي اللَّه عنهُ قال : قُلْتُ يا رسُول اللَّهِ أخبرني بِعَمَلٍ يُدْخِلُني الجَنَّة ويُبَاعِدُني عن النَّارِ ؟ قَال : « لَقدْ سَأَلْتَ عنْ عَظِيمٍ وإنَّهُ لَيَسِيرٌ عَلى منْ يَسَّرَهُ اللَّه تَعَالى علَيهِ : تَعْبُد اللَّه لا تُشْركُ بِهِ شَيْئاً وتُقِيمُ الصَّلاةَ وتُؤتي الزَّكَاةَ وتصُومُ رمضَانَ وتَحُجُّ البَيْتَ إن استطعت إِلَيْهِ سَبِيْلاً ثُمَّ قَال : « ألا أدُلُّك عَلى أبْوابِ الخَيْرِ ؟ الصَّوْمُ جُنَّةٌ َالصَّدَقةٌ تطْفِيءُ الخَطِيئة كما يُطْفِيءُ المَاءُ النَّار وصلاةُ الرَّجُلِ منْ جوْفِ اللَّيْلِ யு ثُمَّ تَلا : ﴿تتجافى جُنُوبهُمْ عَنِ المَضَاجِعِ ﴾ حتَّى بلَغَ ﴿ يعْمَلُونَ ﴾ [ السجدة : 16 ] ثُمَّ قال: « ألا أُخْبِرُكَ بِرَأسِ الأمْرِ وعمودِهِ وذِرْوةِ سَنامِهِ யு قُلتُ : بَلى يا رسول اللَّهِ : قَالَ : « رأْسُ الأمْرِ الإسْلامُ وعَمُودُهُ الصَّلاةُ وذروةُ سنامِهِ الجِهَادُ யு ثُمَّ قال : « ألا أُخْبِرُكَ بـِمِلاكِ ذلكَ كله ؟யு قُلْتُ : بَلى يا رسُولَ اللَّهِ فَأَخذَ بِلِسَانِهِ قالَ : « كُفَّ علَيْكَ هذا –  قُلْتُ: يا رسُولَ اللَّهِ وإنَّا لمُؤَاخَذون بمَا نَتَكلَّمُ بِهِ ؟ فقَال : ثَكِلتْكَ أُمُّكَ وهَلْ يَكُبُّ النَّاسَ في النَّارِ على وَجُوهِهِم إلاَّ حصَائِدُ ألْسِنَتِهِمْ ؟ -رواه الترمذي وقال : حدِيثٌ حسنٌ صحيحٌ وقد سبق شرحه

ஹதீஸ் எண் : 1522
“அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழைவித்து, நரகத்தை விட்டும் தூரமாக்கும் ஒரு நற்காரியத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ மிகப்பெரும் ஒரு விசயத்தைப் பற்றி கேட்டுவிட்டாய். அல்லாஹ் யாருக்கு அதனை இலேசாக்குகிறானோ அவருக்கு அது இலேசானதாகும். (அவ்விசயமாகிறது) அல்லாஹ்விற்கு எந்த ஒன்றையும் இணைகற்பிக்காமல் அவனை நீ வணங்குவதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத்தை நிறைவேற்றுவதும், (கஅபா எனும்) அந்த ஆலயத்திற்கு பயணம் செய்வதற்கு நீ சக்தி பெற்றால் அதனை நீ ஹஜ்ஜு செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். பிறகு “நன்மையின் வாயில்களை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?” (அவையாகிறது) 1. நோன்பு (அது பாவங்களிலிருந்து தடுக்கின்ற) கேடயமாகும், 2. தர்மம், (அது) தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று பாவங்களை அழித்துவிடும், 3. மனிதன் நடுநிசியில் தொழுகின்ற தொழுகை. இதனை தொடர்ந்து (பின்வரும் வசனத்தை) ஓதினார்கள் : “அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள் அல்குர்ஆன் 32 : 16), என்று கூறிவிட்டு பிறகு இம்மார்க்கத்தின் தலையாயதையும், அதனுடைய தூணையும், அதனுடைய திமிழ் போன்ற உயர்ந்த பகுதியையும் உனக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! ஆம் அறிவியுங்கள்” என்று பதிலளித்தேன். அதற்கு நபியவர்கள் “இம்மார்க்கத்தின் தலையாயது இஸ்லாம் ஆகும். அதனுடைய தூண் தொழுகையாகும், அதனுடைய திமிழ் போன்ற உயர்ந்த பகுதி (“அல்லாஹ்வின் பாதையில்) அறப்போர் புரிவதாகும் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் “இவை அனைத்தையும் அழிக்கக் கூடிய விசயத்தை உனக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நான் : “அல்லாஹ்வின் தூதரே! ஆம், (அறிவியுங்கள்)! என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது நாவினைப் பிடித்து “இதை நீ பாதுகாத்துக் கொள்” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உனது தாய் உனக்கு பாரமாகட்டும். மக்களை முகம் குப்புற நரகத்தில் விழச் செய்வது அவர்கள் நாவுகள் செய்கின்ற அறுவடையைத் தவிர வேறு என்ன (இருக்கமுடியும்)? (அதாவது நாவினால் செய்கின்ற பாவங்களினால்தான் அவர்கள் நரகத்தில் விழுகின்றனர்) என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ரலி), நூல் : திர்மிதீ (2541)

1523- وعنْ أبي هُرَيرةَ رضي اللَّه عنهُ أنَّ رسُول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « أَتَدْرُونَ ما الغِيبةُ؟யு قَالُوا : اللَّه ورسُولُهُ أَعْلَمُ قال : « ذِكرُكَ أَخَاكَ بما يكْرَهُ –  قِيل : أَفرأيْتَ إن كان في أخِي ما أَقُولُ ؟ قَالَ : « إنْ كانَ فِيهِ ما تقُولُ فَقَدِ اغْتَبْته وإنْ لَمْ يكُن فِيهِ ما تَقُولُ فَقَدْ بهتَّهُ –  رواه مسلم

ஹதீஸ் எண் : 1523
“புறம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே! நன்கறிந்தவர்கள்” எனப் பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள் “நீ உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” எனப் பதிலளித்தார்கள். “நான் கூறுவது என்னுடைய சகோதரனிடத்தில் இருந்தாலுமா (அது புறமாகும்)? என்று நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ கூறும் குறை உன் சகோதரனிடத்தில் இருந்தால் நீ அவரைப் பற்றி புறம் பேசிவிட்டாய். நீ கூறும் குறை அவரிடம் இல்லையென்றால் நீ அவரைப் பற்றி அவதூறு கூறிவிட்டாய்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (5048)

1524- وعنْ أبي بكْرةَ رضي اللَّه عنْهُ أنَّ رسُول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال في خُطْبتِهِ يوْم النَّحر بِمنىً في حجَّةِ الودَاعِ : « إنَّ دِماءَكُم وأمْوالَكم وأعْراضَكُم حرامٌ عَلَيْكُم كَحُرْمة يومِكُم هذا في شهرِكُمْ هذا في بلَدِكُم هذا ألا هَلْ بلَّغْت –  متفقٌ عليه

ஹதீஸ் எண் : 1524
“உங்களது புனிதமிக்க இந்நகரத்தில், உங்களது புனிதமிக்க இம்மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும், உங்களின் மானமும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். நான் (உங்களுக்கு தெளிவாக) எடுத்துச் சொல்லிவிட்டேனா?” என்று ஹஜ்ஜத்துல் வதாவிலே, துல்ஹஜ் 10ஆம் நாளில் மினாவில் ஆற்றிய தம்முடைய உரையில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ பக்ரா (ரலி), நூல்கள் : புகாரி (4403), முஸ்லிம் (5467, 5468)

1525- وعنْ عائِشة رضِي اللَّه عنْها قَالَتْ : قُلْتُ للنبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم حسْبُك مِنْ صفِيَّة كذا وكَذَا قَال بعْضُ الرُّواةِ : تعْني قَصِيرةٌ فقال : « لقَدْ قُلْتِ كَلِمةً لو مُزجتّ بماءِ البحْر لمَزَجتْه – قَالَتْ : وحكَيْتُ له إنساناً فقال : « ما أحِبُّ أني حكَيْتُ إنْساناً وإنَّ لي كذا وَكَذَا – رواه أبو داود والترمذي وقال : حديثٌ حسنٌ صحيحٌ
ومعنى : « مزَجَتْهُ – خَالطته مُخَالَطة يَتغَيَّرُ بهَا طَعْمُهُ أوْ رِيحُهُ لِشِدةِ نتنها وقبحها وهَذا مِنْ أبلغَ الزَّواجِرِ عنِ الغِيبَةِ قَال اللَّهُ تَعالى : ﴿ وما ينْطِقُ عنِ الهَوى إن هُوَ إلا وحْيٌّ يوحَى ﴾ [ النجم : 4 ]

ஹதீஸ் எண் : 1525
நான் நபி (ஸல்) அவர்களிடம் “இன்னின்ன விசயங்கள் ஷஃபிய்யா அவர்களிடமிருந்து உங்களுக்கு போதுமானதாகும் (என்று அவர்கள் குள்ளமாக இருப்பதை கேலி செய்யும் விதத்தில்)” கூறினேன். அதற்கு நபியவர்கள் “கடல் நீரில் கரைத்தால் அதுவே நிறம் மாறி நாற்றமடித்துவிடும் அளவிற்குள்ள (மிகக் கெட்ட) வார்த்தையை நீ கூறிவிட்டாய்” என்று கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) கூறினார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரை பற்றி பரிகாசமாகச் சித்தரித்துக் காட்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (உலகில் மிக உயர்ந்த செல்வமாகிய) இன்னின்னவை எனக்கு (கிடைப்பதாக) இருந்தாலும் நான் எந்த மனிதரையும் பரிகாசமாக சித்தரிக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : அபூதாவுத் (4232)
இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள “மஸஜத்ஹு” என்ற வார்த்தையின் பொருள் : அதனுடைய கொடுமையான நாற்றத்தினாலும், அசிங்கத்தினாலும் கடல் நீரின் வாடையும், சுவையும் கடுமையாக மாறும் அளவிற்கு அது கடலில் கலந்து விடுகிறது என்பதாகும். ஒருவரைப் பற்றி பரிகாசமாக சித்தரித்துக் காட்டுவது புறம் பேசுதலில் மிக உச்சகட்ட வெறுப்பிற்குரியவைகளில் உள்ளதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : (நபியாகிய) இவர் (தன்) இஷ்டப்படி பேசுவதில்லை பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் வஹீ செய்தியைத் தவிர வேறில்லை”
அல்குர்ஆன் 53 : 3,4

1526- وَعَنْ أنَسٍ رضي اللَّه عنهُ قالَ : قَالَ رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « لمَّا عُرِجَ بي مررْتُ بِقَوْمٍ لهُمْ أظْفَارٌ مِن نُحاسٍ يَخمِشُونَ بهَا وجُوهَهُمُ وَصُدُورَهُم فَقُلْتُ : منْ هؤلاءِ يَا جِبْرِيل ؟ قَال : هؤلاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُوم النَّاسِ ويَقَعُون في أعْراضِهمْ –  رواهُ أبو داود.

ஹதீஸ் எண் : 1526
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் மிஃராஜ் பயணம் அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்களின் முகங்களையம், நெஞ்சுப் பகுதிகளையும் கீறிக் கொண்டிருந்தார்கள். ”ஜிப்ரீலே இவர்கள் யார்?” என்று நான் கேட்ட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இவர்கள்தான் (புறம்பேசுவதின் மூலம்) மனிதர்களின் இறைச்சியைத் தின்றவர்கள், அவர்களுடைய மானத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள்” எனப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அபூதாவுத் (4235)

1527- وعن أبي هُريْرة رضي اللَّه عنْهُ أنَّ رسُول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : « كُلُّ المُسلِمِ عَلى المُسْلِمِ حرَامٌ : دَمُهُ وعِرْضُهُ وَمَالُهُ – رواهُ مسلم

ஹதீஸ் எண் : 1527
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்”.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (5010)