பேரீத்தம் பழத்தைக் கொண்டு  நோன்பு துறத்தல் சுன்னத்தா?

பேரீத்தம் பழத்தைக் கொண்டு  நோன்பு துறத்தல் – ஆய்வுக் கட்டுரை

நோன்பு துறக்கும் போது முதலில் பேரீத்தம் பழத்தைச் சாப்பிட்டு நோன்பு துறக்கும் வழக்கம் உலகளாவிய அளவில் முஸ்லிம்களிடையே உள்ளது. பேரீத்தம் பழத்தைச் சாப்பிட்டு நோன்பு துறப்பது நபிவழி என்ற அடிப்படையிலேயே உலகெங்கிலும் உள்ள அதிகமான முஸ்லிம்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது பற்றிய நபிமொழி பலவீனமானது என்ற கருத்து சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தமிழகத்தில் சில சகோதரர்களால் முன்வைக்கப்படுகிறது. எனவே இதுபற்றி ஒரு முழுமையான ஆய்வை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறக்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்றும், பேரீத்தம் பழத்தைக் கொண்டு நபியவர்கள் நோன்பு துறந்தார்கள் என்றும் பல்வேறு அறிவிப்புகள் நபிமொழி நூல்களில் இடம்பெற்றுள்ளன.

ஒன்று நபியின் கட்டளை தொடர்புடையது

இன்னொன்று நபியின் செயல் தொடர்புடையது

அந்த அறிவிப்புகளில் எவை சரியானவை? எவை பலவீனமானவை? என்பது பற்றி இந்த ஆய்வுக் கட்டுரையில் காண்போம்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளை தொடர்பான செய்தி இதுதான்.

  1. அர்ரபாப் என்ற பெண்மணியின் அறிவிப்பு

695 – حدثنا محمود بن غيلان حدثنا وكيع حدثنا سفيان عن عاصم الأحول ح وحدثنا هناد حدثنا أبو معاوية عن عاصم الأحول وحدثنا قتيبة : قال أنبأنا سفيان بن عيينه عن عاصم الأحول عن حفصة بنت سيرين عن الرباب عن سلمان بن عامر الضبي عن النبي صلى الله عليه و سلم قال إذا أفطر أحدكم فليفطر على تمر زاد ابن عيينه فإنه بركة فمن لم يجد فليفطر على ماء فإنه طهور . قال أبو عيسى هذا حديث حسن صحيح (رواه الترمذي(

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். ஏனெனில் அது பரக்கத் (அருள் வளம் நிறைந்தது) ஆகும். யார் (அதைப்) பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும்.

அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி)

நூல்: திர்மிதி (695)

இச்செய்தியை ஸல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து “அர்ரப்பாப்” என்ற அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

இச்செய்தி பின்வரும் நூல்களிலும் இதே அறிவிப்பாளர் வழியாக இடம் பெற்றுள்ளது.

திர்மிதீ (658)

سنن الترمذي – شاكر + ألباني (3/ 46)

658 – حدثنا قتيبة حدثنا سفيان بن عيينة عن عاصم الأحول عن حفصة بنت سيرين عن الرباب عن عمها سلمان بن عامر : يبلغ به النبي صلى الله عليه و سلم قال إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يجد تمرا فالماء فإنه طهور  وقال الصدقة على المسكين صدقة وهي على ذي الرحم ثنتان صدقة وصلة قال وفي الباب عن زينب امرأة عبد الله بن مسعود و جابر و أبي هريرة

 قال أبو عيسى حديث سلمان بن عامر حديث حسن و الرباب هي أم الرائح بنت صليع وهكذا روى سفيان الثوري عن عاصم عن حفصة بنت سيرين عن الرباب عن سلمان بن عامر عن النبي صلى الله عليه و سلم نحو هذا الحديث وروى شعبة عن عاصم عن حفصة بنت سيرين عن سلمان بن عامر ولم يذكر فيه ( عن الرباب ) وحديث سفيان الثوري و ابن عيينة أصح وهكذا روى ابن عون و هشام بن حسان عن حفصة بنت سيرين عن الرباب عن سلمان بن عامر

இப்னு மாஜா (1699)

سنن ابن ماجة ـ محقق ومشكول (2/ 596)

1699- حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ، وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ (ح) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ، عَنِ الرَّبَابِ أُمِّ الرَّائِحِ بِنْتِ صُلَيْعٍ ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ , قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ , فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ ، فَإِنْ لَمْ يَجِدْ , فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ ؛ فَإِنَّهُ طَهُورٌ.

முஸ்னத் அஹ்மத் (16270,16271, 16273, 16276, 16277, 16282,17903,17906, 17908,17909,17912)

مسند أحمد بن حنبل (4/ 17)

 16270 – قال حدثنا عبد الله حدثني أبي ثنا محمد بن جعفر قال ثنا هشام عن حفصة عن الرباب الضبية عن سلمان بن عامر الضبي انه قال : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد فليفطر على الماء فان الماء طهور قال هشام وحدثني عاصم الأحول ان حفصة رفعته إلى النبي صلى الله عليه و سلم قال

مسند أحمد بن حنبل (4/ 17)

 16271 – حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان بن عيينة عن عاصم عن حفصة عن الرباب عن عمها سلمان بن عامر الضبي عن النبي صلى الله عليه و سلم قال : فليفطر على تمر فان لم يجد فليفطر على ماء فإنه طهور ومع الغلام عقيقته فأميطوا عنه الأذى وأريقوا عنه دما والصدقة على ذي القرابة اثنتان صدقة وصلة قال

مسند أحمد بن حنبل (4/ 17)

 16273 – حدثنا عبد الله حدثني أبي قال ثنا وكيع قال ثنا سفيان عن عاصم الأحول عن حفصة عن الرباب أم الرائح ابنة صليع عن سلمان بن عامر الضبي قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد فليفطر على ماء فإنه طهور قال

مسند أحمد بن حنبل (4/ 18)

 16276 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو معاوية قال ثنا عاصم عن حفصة عن الرباب عن سلمان بن عامر الضبي قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد فليفطر على ماء فإنه طهور قال

مسند أحمد بن حنبل (4/ 18)

 16277 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرزاق قال أنا هشام عن حفصة ابنة سيرين عن الرباب عن سلمان بن عامر قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد فليفطر بماء فان الماء طهور وقال مع الغلام عقيقته فاهريقوا عنه دما وأميطوا عنه الأذى وقال الصدقة على المسكين صدقة وهى على ذي الرحم اثنتان صلة وصدقة

مسند أحمد بن حنبل (4/ 18)

 16282 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو معاوية قال ثنا عاصم عن حفصة عن الرباب عن سلمان بن عامر الضبي قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد تمرا فليفطر على ماء فإنه له طهور

مسند أحمد بن حنبل (4/ 213)

17903 – حدثنا عبد الله حدثني أبي ثنا محمد بن جعفر قال ثنا هشام عن حفصة عن رباب الضبية عن سلمان بن عامر الضبي انه قال : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد فليفطر على الماء فان الماء طهور قال هشام وحدثني عاصم الأحول ان حفصة رفعته إلى النبي صلى الله عليه و سلم

مسند أحمد بن حنبل (4/ 214)

 17906 – حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان بن عيينة عن عاصم عن حفصة عن الرباب أم الرائح بنت صليع عن سلمان بن عامر الضبي قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد فليفطر على ماء فإنه طهور

مسند أحمد بن حنبل (4/ 214)

17908 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو معاوية قال ثنا عاصم عن حفصة عن الرباب عن سلمان بن عامر الضبي قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد تمرا فليفطر على ماء فإنه له طهور

مسند أحمد بن حنبل (4/ 214)

 17909 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرزاق ثنا هشام عن حفصة بنت سيرين عن الرباب عن سلمان بن عامر الضبي قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد فليفطر بماء فان الماء طهور وقال مع الغلام عقيقته فاهرقوا عنه دما وأميطوا عنه الأذى وقال الصدقة على المسكين صدقة وعلى ذي الرحم اثنتان صلة وصدقة

مسند أحمد بن حنبل (4/ 214)

 17912 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو معاوية ثنا عاصم عن حفصة عن الرباب عن سلمان بن عامر الضبي قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فان لم يجد تمرا فليفطر على ماء فإنه له طهور

இப்னு குசைமா (2067)

صحيح ابن خزيمة -موافق للمطبوع (3/ 278)

 2067 – حدثنا عبد الجبار بن العلاء حدثنا سفيان و حدثنا سفيان و حدثنا أحمد بن عبدة حدثنا حماد ـ يعني ابن زيد ـ كلاهما عن عاصم و حدثنا علي بن المنذر حدثنا ابن فضيل حدثنا عاصم عن حفصة بنت سيرين عن الرباب عن عمها سليمان بن عامر الضبي قال : سمعت النبي صلى الله عليه و سلم يقول : الصدقة على المسكين صدقة و هي على القريب صدقتان : صدقة و صلة و قال صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يجد فماء فإنه طهور و قال صلى الله عليه و سلم : إذبحوا عن الغلام عقيقته و أميطوا عنه الأذى و أهريقوا عنه دما

 هذا حديث عبد الجبار  و قال الآخران : قال رسول الله صلى الله عليه و سلم : إذا أفطر أحدكم فليفطر على تمر فإن لم يجد فليفطر على ماء فإنه طهور و لم يذكرا قصة الصدقة و لا العقيقة

இப்னு ஹிப்பான் (3515)

صحيح ابن حبان مع حواشي الأرناؤوط كاملة (8/ 282)

[ 3515 ] أخبرنا محمد بن أحمد بن أبي عون، حدثنا سلمة بن شبيب، حدثنا عبد الرزاق، حدثنا هشام بن حسان، عن حفصة بنت سيرين، عن الرباب عن سلمان بن عامر، قال: قال رسول الله صلى الله عليه وسلم: “إذا أفطر أحدكم، فليفطر على تمر، فإن لم يجد، فليحس حسوة من ماء”

அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ (3305, 3306, 3307, 3308, 3309, 3310, 3311, 3312, 6675, 6676)

السنن الكبرى للنسائي (3/ 372)

3305- أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادٌ ، عَنْ عَاصِمٍ ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ، عَنِ الرَّبَابِ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

3306- أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَاصِمٍ ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ، عَنِ الرَّبَابِ ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ ، فَإِنَّهُ بَرَكَةٌ ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَالْمَاءُ فَإِنَّهُ طَهُورٌ

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ : هَذَا الْحَرْفُ فَإِنَّهُ بَرَكَةٌ لاَ نَعْلَمُ أَنْ أَحَدًا ذَكَرَهُ غَيْرُ ابْنِ عُيَيْنَةَ وَلاَ أَحْسِبُهُ بِمَحْفُوظٍ.

3307- أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ ، عَنْ هِشَامٍ ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ، عَنِ الرَّبَابِ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

3308- أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ ، قَالَ : أَخْبَرَنَا قُرَّانُ بْنُ تَمَّامٍ ، عَنْ هِشَامٍ ، عَنْ حَفْصَةَ ، عَنِ الرَّبَابِ ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا صَامَ أَحَدُكُمْ فَأَفْطَرَ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ أَوْ عَلَى مَاءٍ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

السنن الكبرى للنسائي (3/ 373)

3309- أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا خَالِدٌ ، عَنْ هِشَامٍ ، عَنْ حَفْصَةَ ، عَنْ أُمِّ الرَّائِحِ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَفْطَرْتَ فَأَفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ تَجِدْ فَعَلَى مَاءٍ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

3310- أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ الْهَيْثَمِ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ ، عَنْ هِشَامٍ ، عَنْ حَفْصَةَ ، عَنِ الرَّبَابِ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ : إِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّ الْمَاءَ هُوَ الطَّهُورُ

3311- أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ الْهَيْثَمِ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادٌ ، عَنْ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي عَاصِمٌ ، بِهَذَا الْحَدِيثِ يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

3312- أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ الْهَيْثَمِ ، قَالَ : حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ ، قَالَ : حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ حَفْصَةَ ، عَنِ الرَّبَابِ ، عَنْ سَلْمَانَ ، أَنَّهُ قَالَ : إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

قَالَ هِشَامٌ : وَحَدَّثَنِي عَاصِمٌ الأَحْوَلُ أَنَّ حَفْصَةَ تَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

السنن الكبرى للنسائي (6/ 246)

6675- أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَاصِمٍ ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ، عَنِ الرَّبَابِ ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ ، فَإِنَّهُ بَرَكَةٌ ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَالْمَاءُ ، فَإِنَّهُ طَهُوَرٌ أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَالَ : لاَ نَعْلَمُ أَنَّ أَحَدًا ذَكَرَ فِي هَذَا الْحَدِيثِ فَإِنَّهُ بَرَكَةٌ غَيْرَ سُفْيَانَ.

6676- أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ الْهَيْثَمِ بَصْرِيٌّ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادٌ ، عَنْ هِشَامٍ ، عَنْ حَفْصَةَ ، عَنِ الرَّبَابِ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ ، قَالَ : إِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ ، فَإِنَّ الْمَاءَ هُوَ الطَّهُوَرُ قَالَ هِشَامٌ : وَحَدَّثَنِي عَاصِمٌ الأَحْوَلُ بِهَذَا الْحَدِيثِ ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

மஃரிஃபத்துஸ் ஸுனன் வல் ஆஸார் – பைஹகீ (2637, 2638)

معرفة السنن والآثار للبيهقي (موافق) (6/ 287)

2637 – وقد ورد في الإفطار بالتمر حديث سلمان بن عامر : قال الشافعي في رواية حرملة : أخبرنا سفيان بن عيينة ، عن عاصم ، عن حفصة بنت سيرين ، عن الرباب ، عن عمها سلمان بن عامر الضبي قال : سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول : ” إذا أفطر أحدكم فليفطر على تمر ، فإنه بركة ، فإن لم يكن له تمر فماء ، فإنه طهور “

معرفة السنن والآثار للبيهقي (موافق) (6/ 288)

2638 – وأخبرنا أبو عبد الله الحافظ قال : حدثنا أبو العباس بن يعقوب قال : حدثنا أحمد بن عبد الجبار قال : حدثنا حفص بن غياث ، عن عاصم الأحول ، عن حفصة ، عن الرباب ، عن سلمان بن عامر الضبي قال : سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول : ” إذا أفطر أحدكم فليفطر على تمر ، فإن لم يجد فليفطر على ماء ، فإنه طهور “

அஸ்ஸுனனுஸ் ஸகீர் – பைஹகீ (1393)

السنن الصغرى للبيهقي (نسخة الأعظمي) (3/ 365)

1393 – وأخبرنا أبو الحسن علي بن أحمد بن داود الرزاز ، نا أبو  عمرو بن السماك ، نا محمد بن عبد القزاز ، نا عبد الله بن بكر  السهمي ، نا هشام بن حسان ، عن حفصة بنت سيرين ، عن امرأة يقال  لها الرباب من بني ضبة ، عن سليمان بن عامر الضبي قال : قال  رسول الله [ صلى الله عليه وسلم ] ‘ إذا أفطَرَ أحدكم فليفطر على تمر ، فإن لم يجد فعلى ماء ،  فإن الماء طهور ‘

அல்முஃஜமுல் கபீர்- தப்ரானீ (6070,6071)

المعجم الكبير للطبراني (6/ 89، بترقيم الشاملة آليا)

6070- حَدَّثَنَا بِشْرُ بن مُوسَى، حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَاصِمُ بن سُلَيْمَانَ، عَنْ حَفْصَةَ بنتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بن عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:”إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ، فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَشْرَبْ مَاءً، فَإِنَّهُ طَهُورٌ”.

المعجم الكبير للطبراني (6/ 89، بترقيم الشاملة آليا)

6071- حَدَّثَنَا عَلِيُّ بن عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا مُعَلَّى بن أَسَدٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بن الْمُخْتَارِ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، حَدَّثَتْنِي حَفْصَةُ بنتُ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بن عَامِرٍ الضَّبِّيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:”إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ إِنْ وَجَدَ، فَإِنْ لَمْ يَجِدْ فَعَلَى الْمَاءِ، فَإِنَّ الْمَاءَ طَهُورٌ”.

முஸ்னத் இப்னி அபீ ஷைபா (848)

مسند ابن أبي شيبة 235 (ص: 525)

848- حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ ، عَنْ عَاصِمٍ ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ، عَنِ الرَّبَابِ ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَعَلَى مَاءٍ ، فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

முஸ்னத் அல்ஹுமைதி (859)

مسند الحميدي – مكنز (2/ 469، بترقيم الشاملة آليا)

859- حَدَّثَنَا الْحُمَيْدِىُّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنِ الرَّبَابِ عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّىِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ :« مَعَ الصَّبِىِّ عَقِيقَتُهُ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الأَذَى ». 860- قَالَ وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ :« إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنَّهُ بَرَكَةٌ ، فَإِنْ لَمْ يَكُنْ فَمَاءٌ فَإِنَّهُ طَهُورٌ ».

முஸ்னத் அத்தாரமி (1743)

مسند الدارمي (2/ 1061)

1743- أَخْبَرَنَا أَبُو النُّعْمَانِ ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ ، حَدَّثَنَا عَاصِمٌ عَنْ حَفْصَةَ ، عَنِ الرَّبَابِ الضَّبِّيَّةِ ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

ஹாகிம் (1575)

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (1/ 597)

 1575 – أخبرني إبراهيم بن إسماعيل القاري ثنا عثمان بن سعيد الدارمي ثنا قيس بن حفص الدارمي ثنا عبد الواحد بن زياد عن عاصم الأحول عن حفصة بنت سيرين عن الرباب عن عمها سلمان بن عامر قال : قال رسول الله صلى الله عليه و سلم : إذا كان أحدكم صائما فليفطر على التمر فإن لم يجد التمر فعلى الماء فإن الماء طهور

 هذا حديث صحيح على شرط البخاري و لم يخرجاه و له شاهد صحيح على شرط مسلم

முஸ்னத் அத்தாயிலிஸி (1278,1358)

مسند الطيالسي ( دار هجر ) (2/ 503)

1278 – حدثنا يونس قال : حدثنا أبو داود قال : حدثنا شعبة ، عن عاصم ، قال : سمعت حفصة بنت سيرين ، تحدث عن الرباب ، عن سلمان بن عامر ، أن النبي صلى الله عليه وسلم قال : « إذا صام أحدكم فليفطر على التمر فإن لم يجد فعلى الماء فإنه طهور »

مسند الطيالسي ( دار هجر ) (2/ 591)

1358 – حدثنا أبو داود قال : حدثنا شعبة ، عن عاصم ، قال : سمعت حفصة بنت سيرين ، تحدث عن الرباب ، عن سلمان بن عامر ، أن النبي صلى الله عليه وسلم قال : « إذا صام أحدكم فليفطر على التمر ، فإن لم يجد فعلى الماء فإنه طهور »

“அர்ரபாப்” என்ற பெண்மனியின் அறிவிப்பின் நிலை

மேலே நாம் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்திலும் “அர்ரபாப்” என்ற அறிவிப்பாளரே இடம் பெற்றுள்ளார். இவரது முழுமையான பெயர் “அர்ரபாப் பின்த் சுலைஃ” என்பதாகும். இமாம் புகாரி அவர்கள் தமது ஸஹீஹுல் புகாரி 5472 செய்தியில் இவரது அறிவிப்பை துணைச் சான்றாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

எனினும் இந்த “அர்ரபாப்” என்ற அறிவிப்பளாரது நம்பகத்தன்மை அறியப்படவில்லை. இத்தகைய அறிவிப்பாளர்கள் ஹதீஸ் துறையில் “மஜ்ஹுல்” என்று குறிப்பிடப்படுவார்கள். இவருடைய நம்பகத் தன்மை தொடர்பான எந்தத் தகவல்களும் அறிவிப்பாளர்கள் தொடர்பான குறை நிறை நூற்களில் கூறப்படவில்லை.

இப்னு ஹிப்பான் அவர்கள் தமது “அஸ்ஸிகாத்” (நம்பகமானவர்கள்) எனும் நூலில் இவரைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்றே அறியப்படாதவர்களையும் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்க்கக்கூடிய வழமை உடையவர் ஆவார். எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அது ஆதாரத்திற்கு ஏற்கத் தகுந்தது அல்ல, இப்னு ஹிப்பான் தவிர்த்து வேறு எந்த அறிஞரும் அர்ரபாபின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யவில்லை.

எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்குத் தகுதியில்லாத பலவீனமான செய்தியாகும்.

  1. அர்ரபாப் என்ற அறிவிப்பாளர் விடுபட்ட அறிவிப்பு

مسند أحمد ط الرسالة (26/ 176(

16242 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: “ مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ، فَإِنَّ الْمَاءَ طَهُورٌ “

مسند أحمد ط الرسالة (29/ 417(

17887 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: “ مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ، فَإِنَّ الْمَاءَ طَهُورٌ “

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொண்டாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். யார் அதைப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். ஏனெனில் தண்ணீர் தூய்மையானதாகும்.

அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி)

நூல்: அஹ்மத் (16242, 17887)

இச்செய்தி ஸல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து ஹஃப்ஸா பின்த் ஷீரீன் என்பாரும்

ஹஃப்ஸா பின்த் ஷீரீன் என்பாரிடமிருருந்து ஆஸிமுல் அஹ்வல், ஹாலிதுல் ஹத்தாயி, ஹிஸாம் ஆகிய மூவரும்

ஆஸிமுல் அஹ்வல், ஹாலிதுல் ஹத்தாயி, ஹிஸாம் ஆகிய மூவருரிமிருந்து ஷுஃபா என்பாரும்

அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

ஸல்மான் – ஹஃப்ஸா – ஆஸிமுல் அஹ்வல் – ஷுஃபா என்ற தொடரில் வரும் செய்திகள்.

அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி (6073) வது செய்தி

المعجم الكبير للطبراني (6/ 90(

6073- حَدَّثَنَا عَلِيُّ بن عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا مُسْلِمُ بن إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بنتِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ بن عَامِرٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:”مَنْ وَجَدَ تَمْرًا، فَلْيُفْطِرْ عَلَيْهِ، وَمَنْ لَمْ يَجِدْ تَمْرًا، فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ، فَإِنَّ الْمَاءَ طَهُورٌ”، وَلَمْ يَذْكُرْ شُعْبَةُ الرَّبَابَ.

அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸாயீ (3301 மற்றும் 6677) வது செய்தி

السنن الكبرى للنسائي (3/ 371(

3301- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدٌ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَاصِمٍ ، عَنْ حَفْصَةَ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ ، عَنِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ ، وَمَنْ لَمْ يَجِدْ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

السنن الكبرى للنسائي (6/ 247(

6677- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدٌ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَاصِمٍ ، عَنْ حَفْصَةَ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ ، وَمَنْ لَمْ يَجِدْ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ ، فَإِنَّهُ لَهُ طَهُوَرٌ.

முஃஜமுஸ் ஸஹாபா (341வது) செய்தி

معجم الصحابة مشكول (1/ 285(

341- حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَاصِمٍ ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم : مَنْ وَجَدَ تَمْرًا ، فَلْيُفْطِرْ عَلَيْهِ ، وَإِلا فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ ، فَإِنَّهُ طَهُورٌ

முஃஜமு சுயூஹு இப்னு அஸாகிர் (1538வது) செய்தி

معجم شيوخ ابن عساكر (2/ 217)

(1538) – أخبرنا ناصر بن الحسن بن مسعود أبو الفتوح السرخسي الغساني الواعظ بقراءتي عليه بخوار الري قال أبنا والدي أبو علي الحسن بن مسعود ثنا أبو ذر عبد الرحمن بن أحمد بن محمد بن الحسين السرخسي ثنا أبو نصر الحسين بن عبد الواحد الشيرازي أبنا أبو سعيد عبد الله بن محمد بن عبد الوهاب ثنا محمد بن أيوب الرازي ثنا أبو عمر الحوضي ثنا شعبة عن عاصم الأحول عن حفصة بنت سيرين عن سلمان بن عامر أن النبي صلى الله عليه وسلم قال من وجد تمرا فليفطر عليه وإلا فليفطر على الماء فإن الماء طهور .

ஸல்மான் – ஹஃப்ஸா – ஹாலிதுல் ஹத்தாயி – ஷுஃபா என்ற தொடரில் வரும் செய்திகள்.

இப்னு ஹிப்பான் (3514வது) செய்தி

صحيح ابن حبان (8/ 281(

3514 – أخبرنا محمد بن عبد الرحمن بن محمد، حدثنا محمد بن يحيى الذهلي، حدثنا سعيد بن عامر، عن شعبة، عن خالد الحذاء، عن حفصة بنت سيرين عن سلمان بن عامر، قال: قال رسول الله صلى الله عليه وسلم: “من وجد تمرا، فليفطر عليه، ومن لا يجد، فليفطر على الماء، فإنه طهور”

அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸாயீ (3302வது) செய்தி

السنن الكبرى للنسائي (3/ 371(

3302- أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ ، قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ ، عَنْ شُعْبَةَ ، عَنْ خَالِدٍ ، عَنْ حَفْصَةَ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ ، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ ؛ فَإِنَّهُ طَهُورٌ.

மவாரிதுல் லம்ஆன் (893வது) செய்தி

موارد الظمآن إلى زوائد ابن حبان ت حسين أسد (3/ 196(

893 – أخبرنا محمد بن عبد الرحمن بن محمد ، حدثنا محمد ابن يحيى الذهلي، حدثنا سعيد بن عامر، عن شعبة، عن خالد الحذّاء، عن حفصة بنت سيرين. عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ الله-صلى الله عليه وسلم-: “مَنْ وَجَدَ تَمْراً فَلْيُفْطِرْ عَلَيْهِ، وَمَنْ لا يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ”

ஸல்மான் – ஹஃப்ஸா – ஹிஸாம் – ஷுஃபா என்ற தொடரில் வரும் செய்தி.

அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸாயீ (6678வது) செய்தி

السنن الكبرى للنسائي (6/ 247(

6678- أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، قَالَ : حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ حَفْصَةَ ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ ، وَمَنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ ، فَإِنَّهُ طَهُوَرٌ.

இந்த அறிவிப்புகளின் நிலை

இந்த அறிவிப்புகள் அனைத்திலும் ஸல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து ஹஃப்ஸா பின்த் ஷீரீன் என்பார் அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

ஆனால் ஸல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து ஹஃப்ஸா பின்த் ஷீரீன் அவர்கள் எதையும் செவியுற்றதில்லை. இருவருக்கும் இடையில் அறிவிப்பாளர் தொடர் முறிவு உள்ளது. இருவருக்கும் இடையில் “அர்ரபாப்” எனும் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.

இது பற்றி இமாம் திர்மிதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

وَهَكَذَا رَوَوْا عَنْ شُعُبَةَ عَنْ عَاصِمٍ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ سَلْمَانَ وَلَمْ يُذْكَرْ فِيهِ شُعْبَةُ عَنْ الرَّبَابِ وَالصَّحِيحُ مَا رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَاصِمٍ الْأَحَوَلِ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ الرَّبَابِ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ وَابْنُ عَوْنٍ يَقُولُ عَنْ أُمِّ الرَّائِحِ بِنْتِ صُلَيْعٍ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ وَالرَّبَابُ هِيَ أُمُّ الرَّائِحِ (رواه الترمذي(

ஸல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து ஹஃப்ஸா பின்த் ஷீரின்

ஹஃப்ஸா பின்த் ஷீரின் அவர்களிடமிருந்து ஆஸிம்

ஆஸீம் அவர்களிடமிருந்து ஷுஃபா

என்ற அறிவிப்பாளர்கள் தொடரில் இச்செய்தியை அறிவித்துள்ளனர்.

இதில் “அர்ரபாப்” என்ற அறிவிப்பாளரை ஷுஃபா குறிப்பிடவில்லை.

சுஃப்யானுஸ் ஸவ்ரி, இப்னு உயைனா, உட்பட இன்னும் பலர் பின்வரும் அறிவிப்பாளர் வரிசையில்தான் அறிவித்துள்ளனர். (அதுவாகிறது)

ஸல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து அர்ரபாப்

அர்ரபாப் அவர்களிடமிருந்து ஹஃப்ஸா பின்த் ஷீரீன்

ஹஃப்ஸா பின்த் ஷீரின் அவர்களிடமிருந்து ஆஸிம் அஹ்வல்

என்ற அறிவிப்பாளர் வரிசையாகும். இந்த அறிவிப்பாளர் தொடர்வழியாக அறிவிப்பதே சரியானதாகும்.

ஸல்மான் பின் ஆமிர் அவர்களிமிருந்து உம்மு ராயிஹ் பின்த் சுலைஃ அறிவிப்பதாக இப்னு அவ்ன் கூறுகிறார். உம்மு ராயிஹ் என்பவர்தான் அர்ரபாப் ஆவார்.

இந்த “அர்ரபாப்” என்ற அறிவிப்பாளர் யாரென்றே அறியப்படாதவர் என்பதை முன்னரே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே இச்செய்தி ஆதாரத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.

ரபாப் என்ற பெண்மணியைக் குறிப்பிட்டு ஷுஅபாவின் அறிவிப்பு

مسند الطيالسي ( دار هجر ) (2/ 503(

1278 – حدثنا يونس قال : حدثنا أبو داود قال : حدثنا شعبة ، عن عاصم ، قال : سمعت حفصة بنت سيرين ، تحدث عن الرباب ، عن سلمان بن عامر ، أن النبي صلى الله عليه وسلم قال : « إذا صام أحدكم فليفطر على التمر فإن لم يجد فعلى الماء فإنه طهور

مسند الطيالسي ( دار هجر ) (2/ 591(

1358 – حدثنا أبو داود قال : حدثنا شعبة ، عن عاصم ، قال : سمعت حفصة بنت سيرين ، تحدث عن الرباب ، عن سلمان بن عامر ، أن النبي صلى الله عليه وسلم قال : « إذا صام أحدكم فليفطر على التمر ، فإن لم يجد فعلى الماء فإنه طهور

முஸ்னத் தயாலிஸின் அறிவிப்பில் ஷுஅபா வழியாக அர்ரபாப் என்ற பெண்மணியைக் குறிப்பிட்டே இடம்பெற்றுள்ளது. எனவே அர்ரபாப் வராமல் குறிப்பிட்டுள்ள செய்தி சரியானதல்ல.

ஸயீது பின் ஆமிர் என்பாரின் அறிவிப்பு

630 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ وَمَنْ لَا فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ (رواه الترمذي)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொண்டாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். யார் அதைப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். ஏனெனில் தண்ணீர் தூய்மையானதாகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி (630)

இச்செய்தி

அனஸ் (ரலி) – அப்துல் அஸீஸ் பின் சுஹைப் – ஷுஃபா – ஸயீது பின் ஆமிர்

என்ற அறிவிப்பாளர் தொடரில் பின்வரும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸாயீ அறிவிப்பு

السنن الكبرى للنسائي (3/ 371)

3303- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ مُقَدَّمٍ ، قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ ، عَنْ شُعْبَةَ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ، عَنْ أَنَسٍ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ ، وَمَنْ لاَ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّهُ طَهُورٌ.

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ : حَدِيثُ شُعْبَةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ خَطَأٌ ، وَالصَّوَابُ الَّذِي قَبْلَهُ.

இப்னு குசைமா அறிவிப்பு

صحيح ابن خزيمة -موافق للمطبوع (3/ 278)

 2066 – حدثنا محمد بن عمر بن علي بن مقدم و أبو بكر بن إسحاق قالا : حدثنا سعيد بن عامر عن شعبة عن عبد العزيز بن حبيب عن أنس بن مالك قال : قال رسول الله صلى الله عليه و سلم : من وجد تمرا فليفطر عليه و من لا فليفطر على ماء فإنه طهور

 قال أبو بكر : هذا لم يروه عن سعيد بن عامر عن شعبة إلا هذا

சுனனுல் பைஹகீ அல்குப்ரா அறிவிப்பு

سنن البيهقي الكبرى (4/ 239)

 7919 – أخبرنا أبو عبد الله الحافظ ثنا أبو العباس محمد بن يعقوب ثنا محمد بن إسحاق الصغاني ثنا سعيد بن عامر ثنا شعبة عن عبد العزيز بن صهيب عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه و سلم : من وجد تمرا فليفطر عليه ومن لا فليفطر على الماء فإنه طهور

قال البخاري فيما روي عنه أبو عيسى حديث سعيد بن عامر وهم يهم فيه سعيد والصحيح حديث عاصم عن حفصة بنت سيرين قال الشيخ وقد روي عن أنس بن مالك من وجه آخر

ஸயீத் பின் ஆமிர் உடைய அறிவிப்பின் நிலை

அனஸ் (ரலி) – அப்துல் அஸீஸ் பின் சுஹைப் – ஷுஃபா – ஸயீது பின் ஆமிர்

என்ற அறிவிப்பாளர்கள் வரிசையில் அறிவிக்கப்படும் இச்செய்தி பலவீனமானதாகும்.

இத்தொடரில் இச்செய்தியை பதிவு செய்த திர்மிதீ, நஸாயீ, பைஹகீ ஆகிய இமாம்கள் இந்தச் செய்திக்குரிய அறிவிப்பாளர் தொடர் இதுவல்ல. இதனை அறிவிக்கும் ஸயீது பின் ஆமிர் என்ற அறிவிப்பாளர் இதில் தவறிழைத்துள்ளார் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளனர்.

இச்செய்தியைப் பதிவு செய்த பின் இமாம் திர்மிதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ لَا نَعْلَمُ أَحَدًا رَوَاهُ عَنْ شُعْبَةَ مِثْلَ هَذَا غَيْرَ سَعِيدِ بْنِ عَامِرٍ وَهُوَ حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ وَلَا نَعْلَمُ لَهُ أَصْلًا مِنْ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ وَقَدْ رَوَى أَصْحَابُ شُعْبَةَ هَذَا الْحَدِيثَ عَنْ شُعْبَةَ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ الرَّبَابِ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ عَامِرٍ

அபூ ஈஸா (திர்மிதி கூறுகிறார்):

ஸயீது பின் ஆமிர் என்பாரைத் தவிர வேறு யாரும் ஷுஃபா அவர்கள் வழியாக இது போன்று அறிவித்திருப்பதாக நாம் அறியவில்லை. இது “கைர மஹ்ஃபூள்“ (அதாவது) நம்பகமானவர்களுக்கு எதிரான (ஷாத் எனும்) அறிவிப்பாகும்.

அனஸ் – அப்துல் அஸீஸ் பின் சுஹைப் (என்ற அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும்) செய்தியில் இதற்கு எந்த அடிப்படையையும் நாம் அறியவில்லை.

ஷுஃபா உடைய மாணவர்கள் இச்செய்தியைப் பின்வருமாறு அறிவித்துள்ளனர்.

நபிகள் நாயகம் அவர்களிடமிருந்து ஸல்மான் பின் ஆமிர்

ஸல்மான் பின் ஆமிர் அவர்களிடமிருந்து அர்ரபாப்

அர்ரபாப் அவர்களிடமிருந்து ஹஃப்ஸா பின்த் ஷீரீன்

ஹஃப்ஸா பின்த் ஷீரீன் அவர்களிடமிருந்து ஆஸிமுல் அஹ்வல்

ஆஸிமுல் அஹ்வல் அவர்களிடமிருந்து ஷுஃபா

ஷுஃபா அவர்களிடமிருந்து அவருடைய மாணவர்கள்

என்ற அறிவிப்பாளர் தொடர் வரிசையிலேயே அறிவித்துள்ளனர்.

ஸயீத் பின் ஆமிர் என்பார் கூறும் அறிவிப்பாளர் தொடரை விட (ஷுஅபாவுடைய பிற மாணவர்கள் அறிவிக்கும்) இந்த அறிவிப்பாளர் தொடரே சரியானதாகும்.

இமாம் திர்மிதீ அவர்களின் மேற்கண்ட விமர்சனத்திலிருந்து ஸயீத் பின் ஆமீர் என்பார் தவறான அறிவிப்பாளர் தொடரில் இச்செய்தியை அறிவித்துள்ளார் என்பது தெளிவாகிறது.

மேற்கண்ட ஸயீத் பின் ஆமிர் என்பாரின் அறிவிப்பைப் பதிவு செய்த பிறகு இமாம் நஸாயீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ : حَدِيثُ شُعْبَةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ خَطَأٌ ، وَالصَّوَابُ الَّذِي قَبْلَهُ.

அப்துல் அஸீஸ் பின் சுஹைப் என்பாரிடமிருந்து ஷுஃபா அறிவிக்கும் செய்தி தவறானதாகும். (அர்ரபாப் வழியாக அறிவிக்கப்படும்) அதற்கு முந்தைய செய்தியே சரியானதாகும்.

(அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸாயீ 3303வது செய்தியின் அடிக்குறிப்பு)

இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் பைஹகி அவர்களும் அதன் அடிக்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

قال البخاري فيما روي عنه أبو عيسى حديث سعيد بن عامر وهم يهم فيه سعيد والصحيح حديث عاصم عن حفصة بنت سيرين قال الشيخ وقد روي عن أنس بن مالك من وجه آخر

இமாம் புகாரி கூறுகிறார்: ஸயீத் பின் ஆமீர் என்ற அறிவிப்பாளருடைய செய்தியாகத் திர்மிதி அறிவித்திருப்பது தவறானதாகும். அதில் ஸயீத் பின் ஆமிர் தவறிழைத்துள்ளார்.

ஹஃப்ஸா பின்த் ஷீரீன் என்பார் வழியார் ஆஸிம் என்பார் அறிவிக்கும் செய்தி (யின் அறிவிப்பாளர் தொடரே) சரியானதாகும்.

பைஹகீ கூறுகிறார்: அனஸ் (ரலி) அவர்கள் வழியாக வேறொரு முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. (அதுவே சரியானதாகும்)

(சுனனுல் பைஹகீ அல்குப்ரா 7919வது செய்திக்குரிய அடிக்குறிப்பு)

மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து ஸயீத் பின் ஆமீர் என்பார் குறிப்பிடும் அறிவிப்பாளர் தொடர் என்பது பிழையானது என்பதையும் ஸயீத் பின் ஆமிர் என்பாரே அந்தப் பிழையைச் செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.

ஸல்மான் பின் ஆமீர் – அர்ரபாப் – ஹஃப்ஸா பின்த் ஷுரீன் – ஆஸிமுல் அஹ்வல் – ஷுஅபா என்று வரும் அறிவிப்பாளர் தொடரே இச்செய்திக்குரிய சரியான அறிவிப்பாளர் தொடர் ஆகும். இதில் அர்ரபாப் என்பவர் யாரென்றே அறியப்படாதவர் என்பதை முன்னரே நாம் கண்டுள்ளோம். எனவே எந்த அறிவிப்பாளர் தொடரை வைத்துக் கொண்டாலும் இச்செய்தி பலவீனம் என்ற நிலையையே அடைகிறது.

  1. நபியின் செயலாக வரும் அறிவிப்பு

நோன்பு துறப்பவர் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும் என்று நபிகளாரின் கட்டளையுடன் வரும் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல.

அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு துறக்க பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறந்தார்கள் என்று அறிவிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

12676 – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: “ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَإِنْ لَمْ يَكُنْ رُطَبَاتٌ، فَتَمَرَاتٌ، فَإِنْ لَمْ يَكُنْ تَمَرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ “ (رواه أحمد)

நபி (ஸல்) அவர்கள் (மஃரிப்) தொழுவதற்கு முன்பாக பேரீச்சச் செங்காய்களைக் கொண்டு நோன்பு துறப்பவர்களாக இருந்தார்கள். பேரீச்சச் செங்காய்கள் இல்லையென்றால் பேரீத்தம் பழத்தைக் கொண்டும், பேரீத்தம் பழம் இல்லையென்றால் சில மிடறு நீரைக் குடித்தும் நோன்பு துறப்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத் (12676)

இச்செய்தி பின்வரும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

திர்மிதி (696 வது) அறிவிப்பு

அபூதாவூத் (2358 வது) அறிவிப்பு

அஸ்ஸுனனுஸ் ஸுஃரா லில் பைஹகி (1081வது) அறிவிப்பு

அஸ்ஸுனனுல் குப்ரா (7920வது) அறிவிப்பு

ஷுஅபுல் ஈமான் (3617 வது) அறிவிப்பு

முஸ்னதுல் பஸ்ஸார் (6875வது) அறிவிப்பு

சுனனுத் தாரகுத்னீ (2277, 2278) அறிவிப்புகள்.

ஹாகிம் (1576 வது) அறிவிப்பு

ஷரஹுஸ் ஸுன்னா (1742 வது) அறிவிப்பு

இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு:

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் அல்புனானீ அறிவிக்கிறார்.

ஸாபித் அல்புனானி அவர்களிடமிருந்து ஜஅஃபர் பின் சுலைமான் அறிவிக்கிறார்.

ஜஅஃபர் பின் சுலைமான் அவர்களிடமிருந்து அப்துர் ரஸ்ஸாக் என்பார் அறிவிக்கிறார்.

அப்துர் ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து இமாம் அஹ்மத் பின் ஹன்பல் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவர். எனினும் ஜஅஃபர் பின் சுலைமான் என்ற அறிவிப்பாளர் மீது மட்டும் சில விமர்சனங்கள் உள்ளன.

அந்த விமர்சனங்கள் ஜஅஃபர் பின் சுலைமான் நம்பகமானவர் என்ற தகுதியைப் பாதிக்காது. எனினும் சிலர் அந்த விமர்சனங்களை எடுத்து வைத்து இச்செய்தியை விமர்சிக்கக் கூடும் என்பதால் அது தொடர்பான விரிவான விளக்கத்தைக் காண்போம்.

ஜஅஃபர் பின் சுலைமான் மீது கொள்கை ரீதியாக வைக்கப்படும் விமர்சனமும் அதற்கான விளக்கமும்.

ஜஅஃபர் பின் சுலைமான் அவர்களை பல அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். அவரது நம்கத்தன்மைக்குச் சான்றளித்துள்ளனர்.

யஹ்யா பின் மயீன், இப்னு ஹிப்பான், இஜ்லீ, தஹபீ, உள்ளிட்ட பல அறிஞர்கள் ஜஅஃபர் பின் சுலைமான் அவர்கள் நம்பகமானவர் எனச் சான்றளித்துள்ளனர்.

எனினும் ஜஅஃபர் பின் சுலைமான் அவர்களை ஷியாக் கொள்கை உடையவர். என்றும், ராஃபிளிய்யா கொள்கையைச் சார்ந்தவர் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

وقال ابن سعد كان ثقة وبه ضعف وكان يتشيع. – تهذيب التهذيب (2/ 82(

இவர் நம்பகமானவர். இவரிடம் பலவீனமும் உண்டு. இவர் ஷியாக் கொள்கை உடையவர் உள்ளவர் என இப்னு ஸஅத் கூறியுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப்)

وقال أحمد: إنما كان يتشيع ، وكان يحدث بأحاديث في فضل علي ، وأهل البصرة يغلون في علي – (تهذيب الكمال 5/ 46(

இமாம் அஹ்மத் கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் ஷியாக் கொள்கை உடையவர் உள்ளவராக இருந்தார். அலி (ரலி) அவர்களின் சிறப்பு தொடர்பான ஹதீஸ்களை அறிவிப்பவராக அவர் இருந்தார். பஸரா வாசிகள் அலி (ரலி) அவர்கள் விஷயத்தில் வரம்புமீறுவோராகவே இருந்தனர்.

நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்:5, பக்கம்: 46

(221) جعفر بن سليمان الضبعي ثقة وكان يتشيع-معرفة الثقات للعجلي (1/ 269)

இஜ்லீ கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் நம்பகமானவர் ஆவார். அவர் ஷியாக் கொள்கை உள்ளவராக இருந்துள்ளார்.

நூல்: மஃரிஃபதுஸ் ஸிகாத் லில் இஜ்லீ, பாகம்:1, பக்கம்: 269

68 – جعفر بن سليمان الضبعي (م على): عن ثابت وخلق شيعي صدوق (من تكلم فيه وهو موثق ص: 60)

இமாம் தஹபீ கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் ஷியாக் கொள்கை உள்ளவரும் உண்மையாளரும் ஆவார்.

நூல்: மன்துகுல்லிம ஃபீஹி வஹுவ முவஸ்ஸிக்குன், பக்கம்: 60

942- جعفر ابن سليمان الضبعي بضم المعجمة وفتح الموحدة أبو سليمان البصري صدوق زاهد لكنه كان يتشيع من الثامنة مات سنة ثمان وسبعين بخ م 4 (تقريب التهذيب 1/ 140(

இப்னு ஹஜர் கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் உண்மையாளர், உலகப்பற்றற்றவர். எனினும் அவர் ஷியாக் கொள்கையைச் சார்ந்தவராக இருந்தார்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்:1, பக்கம்: 140

قال ابن حبان كان جعفر من الثقات في الروايات غير أنه ينتحل الميل إلى أهل البيت ولم يكن بداعية إلى مذهبه وليس بين أهل الحديث من أئمتنا خلاف أن الصدوق المتقن إذا كانت فيه بدعة ولم يكن يدعو إليها الاحتجاج بخبره جائز. (تهذيب التهذيب 2/ 83(

இப்னு ஹிப்பான் கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் அவர்கள் (ஹதீஸ்) அறிவிப்புக்களில் மிகவும் உறுதியானவராக இருந்தார். எனினும். அவர் அஹ்லுல் பைத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுபவராக இருந்தார். அவர் தனது கொள்கையை நோக்கி அழைப்பவராக இருக்கவில்லை.

உறுதியானவராகவும், உண்மையாளராகவும் உள்ள ஒரு அறிவிப்பாளரிடம் ஏதேனும் தவறான கொள்கை இருந்து, அவர் தனது அக்கொள்கையின் பக்கம் (மற்றவர்களை) அழைக்காதவராக இருந்தால் அவரது செய்திகளை ஆதாரமாகக் கொள்ளலாம். இதில் ஹதீஸ்கலை இமாம்களுக்கு மத்தியில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்:2, பக்கம்: 83

யஸீத் பின் சுரைஃ, ஜரீர் பின் யஸீத் பின் ஹாரூன், அத்தவ்ரீ ஆகியோர் ஜஅஃபர் பின் சுலைமான் அவர்களை ராஃபிளிய்யா கொள்கையைச் சார்ந்தவர் ஆவார் என்று விமர்சித்துள்ளனர். ஷியாக்களில் ஸஹாபாக்களைத் திட்டக்கூடியவர்களே ராஃபிளிய்யாக்கள் ஆவர். இது தொடர்பான விமர்சனங்களையும் அதற்குரிய பதிலையும் காண்போம்.

وقال أبو الأشعث أحمد بن المقدام كنا في مجلس يزيد بن زريع فقال من أتى جعفر بن سليمان وعبد الوارث فلا يقربني وكان عبد الوارث ينسب إلى الاعتزال وجعفر ينسب إلى الرفض. (تهذيب التهذيب 2/ 82)

அபுல் அஸ்அஷ் அஹ்மத் பின் மிக்தாம் கூறுகிறார்: நாங்கள் யஸீத் பின் சுரைஃ அவர்களுடைய சபையில் இருந்தோம். அப்போது அவர் கூறினார். யாரெல்லாம் ஜஅஃபர் பின் சுலைமான், அப்துல் வாரிஸ் ஆகிய இருவரிடமும் சென்றார்களோ அவர்கள் என்னை நெருங்க வேண்டாம். ஏனெனில் அப்துல் வாரிஸ் முஃதஸிலா கொள்கையைச் சார்ந்தவராக இருந்தார். ஜஅஃபர் பின் சுலைமான் ராஃபிளிய்யா கொள்கையைச் சார்ந்தவராக இருந்தார்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்:2, பக்கம்: 82

وقال ابن حبان في كتاب الثقات حدثنا الحسن بن سفيان ثنا إسحاق بن أبي كامل ثنا جرير بن يزيد بن هارون بين يدي أبيه قال بعثني أبي إلى جعفر فقلت بلغنا أنك تسب أبا بكر وعمر قال أما السب فلا ولكن البغض ما شئت فإذا هو رافضي مثل الحمار. (تهذيب التهذيب 2/ 83(

இஸ்ஹாக் பின் அபூகாமில் கூறுகிறார்: ஜரீர் பின் யஸீத் பின் ஹாரூன் அவர்கள் தனது தந்தைக்கு முன்னால் இருந்த நிலையில் எங்களுக்கு (பின்வருமாறு) அறிவித்தார். “என்னுடைய தந்தை ஜஅஃபர் பின் சுலைமானிடம் என்னை அனுப்பினார். நான் (அவரிடம் சென்று) “நீங்கள் அபூ பக்கர், உமர் ஆகியோரைத் திட்டுவதாக எங்களுக்குச் செய்தி வருகிறதே?” என்று கேட்டேன். அதற்கவர் “திட்டுதல் என்பது கிடையாது. எனினும் நான் நாடிய அளவு வெறுக்கிறேன்” என்று கூறினார். அப்போது அவர் கழுதையைப் போன்று ராஃபிளியாக இருந்தார்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்:2, பக்கம்: 83

وقال الدوري كان جعفر إذا ذكر معاوية شتمه وإذا ذكر عليا قعد يبكي. (تهذيب التهذيب 2/ 83(

அத்தவ்ரீ கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டால் அவரைத் திட்டுவார். அலி (ரலி) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டால் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவார்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்:2, பக்கம்: 83

ஜஅஃபர் பின் சுலைமான் அவர்கள் ஸஹாபாக்களைத் திட்டுகின்ற ராஃபிளிய்யா கொள்கையைச் சார்ந்தவராக இருந்தார் என்ற விமர்சனம் சரியானது அல்ல. அவர் ஷியாக் கொள்கையைச் சார்ந்தவராக மட்டுமே இருந்தார் என்பதே சரியானது.

அவர் ஸஹாபாக்களைத் திட்டுபவராக இருந்தார் என்பது சரியான விமர்சனம் அல்ல என்பதை அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். பின்வரும் கூற்றுக்களிலிருந்து அதை நாம் அறிந்து கொள்ளலாம்.

وحكى عنه وهب بن بقية نحو ذلك وقال ابن عدي عن زكرياء الساجي وأما الحكاية التي حكيت عنه فإنما عنى به جارين كانا له قد تاذى بهما يكنى أحدهما أبا بكر ويسمى الآخر عمر فسئل عنهما فقال أما السب فلا ولكن بغضا يا لك ولم يعن به الشيخين أو كما قال. (تهذيب التهذيب 2/ 82(

ஸகரிய்யா இப்னுஸ் ஸாஜி கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் அவர்களிடமிருந்து நான் எடுத்துரைக்கும் செய்தியாகிறது. (அபூ பக்ர், உமர் என்ற பெயர்களைக் கொண்டு) அவர் தனது இரு அண்டை வீட்டார்களையே குறிப்பிடுகிறார். அந்த இருவரினால் அவர் தொந்தரவிற்குள்ளானார். அவ்விருவரில் ஒருவர் அபூபக்ர் எனும் குறிப்புப் பெயராலும், மற்றொருவர் உமர் என்ற பெயராலும் குறிப்பிடப்படுவார்கள். அந்த இருவரைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அவர்களை நான் திட்டுவது கிடையாது. எனினும் வெறுப்பு உண்டு. அவர் இதைக் கொண்டு அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரை நாடவில்லை.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:2, பக்கம்: 82

وَيُرْوَى: أَنَّ جَعْفَراً كَانَ يَتَرَفَّضُ، فَقِيْلَ لَهُ: أَتَسُبُّ أَبَا بَكْرٍ وَعُمَرَ؟ قَالَ: لاَ، وَلَكِنْ بُغْضاً يَا لَكَ. فَهَذَا غَيْرُ صَحِيْحٍ عَنْهُ. وَقَالَ الحَافِظُ زَكَرِيَّا السَّاجِيُّ: إِنَّمَا عَنَى بِقَوْلِهِ: بُغْضاً يَا لَكَ: جَارَيْنِ لَهُ يُؤذِيَانِه اسْمُهُمَا: أَبُو بَكْرٍ، وَعُمَرُ. (سير أعلام النبلاء 15/ 19(

இமாம் தஹபீ கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் ராஃபிளியாக இருந்தார் என்று அறிவிக்கப்படுகிறது. அவரிடம் “நீங்கள் அபூபக்கர், உமர் ஆகியோரைத் திட்டுகிறீர்களா?” என்று கேட்கப்பட்ட போது “நான் திட்டுவது கிடையாது. ஆனால் வெறுக்கிறேன்” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரைப் பற்றிக் கூறப்படும் இக்கருத்து சரியானது அல்ல.

ஹாஃபிழ் ஸகரிய்யா அஸ்ஸாஜீ கூறுகிறார்: “நான் வெறுக்கிறேன்” என்ற வாசகத்தை அவருக்கு தொந்தரவளித்துக் கொண்டிருந்த இரு அண்டை வீட்டார் தொடர்பாகவே அவர் கூறினார். அந்த இருவரின் பெயர் அபூ பக்ர் மற்றும் உமர் என்பதாகும்.

நூல்: ஸியரு அஃலாமுன் நுபலாவு, பாகம்:15, பக்கம்: 197

ஜாஃபிர் பின் சுலைமான் அவர்கள் அவருக்குத் தொந்தரவளித்துக் கொண்டிருந்த அபூ பக்ர், உமர் எனும் பெயர் கொண்ட அண்டை வீட்டாரை வெறுத்தார். ஆனால் சிலர் இதைத் தவறாகப் புரிந்து அவர் அபூபக்ர், உமர் ஆகிய நபித்தோழர்களை வெறுத்தாக அறிவித்துவிட்டனர். அவர் ராஃபிளி என்றும் விமர்சித்துவிட்டனர். ஆனால் ஆவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பது மேற்கண்ட கருத்துக்களிலிருந்து தெளிவாகிவிட்டது.

பின்வரும் கருத்திலிருந்தும் அவர் அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைத் திட்டுபவராக இருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

قال أبو أحمد ولجعفر حديث صالح وروايات كثيرة وهو حسن الحديث معروف بالتشيع وجمع الرقاق وارجو انه لا بأس به وقد روى أيضا في فضل الشيخين وأحاديثه ليست بالمنكرة وما كان فيه منكر فلعل البلاء فيه من الراوي عنه وهو عندي ممن يجب أن يقبل حديثه. (تهذيب التهذيب 2/ 82(

அபூ அஹ்மத் கூறுகிறார்: ஜஅஃபர் பின் சுலைமான் அவர்களிடம் (ஏற்றக் கொள்வதற்குத் தகுந்த) நல்ல ஹதீஸ்களும், ஏராளமான அறிவிப்புகளும் இருந்தன. அவர் ஹதீஸ்களில் மிகவும் அழகானவர் ஆவார். அவர் ஷியாக் கொள்கையைப் பின்பற்றுபவராக அறியப்பட்டார். அவர் நெகிழ்வூட்டும் செய்திகளை ஒன்றுதிரட்டுபவராக இருந்தார். அவரிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே நான் ஆதரவு வைக்கிறேன். மேலும் அவர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் சிறப்புகள் தொடர்பான செய்திகளை அறிவிப்பவராக இருந்தார். அவரது ஹதீஸ்கள் மறுக்கத்தக்கவை அல்ல. அவரது அறிவிப்புகளில் மறுக்கத்தக்கவை உண்டென்றால் அந்தப் பிரச்சினைக்குக் காரணம் அவரிடம் இருந்து அறிவிப்பவர்கள் தான். (அவர் அதற்குக் காரணமல்ல.) அவசியம் இவருடைய ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று கருதப்படுவோரில் ஒருவராகத்தான் அவர் என்னிடத்தில் இருக்கிறார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:2, பக்கம்: 82

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் சிறப்புகள் தொடர்பான செய்திகளை ஜஅஃபர் பின் சுலைமான் அவர்கள் அறிவிப்பவராக இருந்தார் என்பதிலிருந்து அவர் ராஃபிளி இல்லை என்பது மென்மேலும் உறுதியாகிவிட்டது.

எனவே ஜஅஃபர் பின் சுலைமான், ஷியா கொள்கையைச் சார்ந்தவராக இருந்தார். ஆனால் அக்கொள்கையின் பால் மற்றவர்களை அழைப்புவிடக் கூடியவராக இருக்கவில்லை. இப்படிப்பட்ட அறிவிப்பாளர்களின் அறிவிப்புகள் அவரது கொள்கையைக் காரணமாக வைத்து மறுக்கப்படாது என்பதே அதிகமான ஹதீஸ்கலை அறிஞர்களின் முடிவு என்பதை நாம் முன்னர் கண்டோம். எனவே கொள்கையின் அடிப்படையில் ஜஅஃபர் பின் சுலைமான் அவர்களின் அறிவிப்புகள் மறுக்கத் தகுந்தவை அல்ல என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகிவிட்டது.

பேரீத்தம் பழத்தைக் கொண்டு நபிகளார் நோன்ப துறந்துள்ளார்கள் என்ற செய்தி ஆதாரப்பூர்வமானதே! இதனடிப்படையில் பேரித்தம் பழத்தை கொண்டு நோன்பு துறக்கும் நடைமுறை சரியானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.