வேலூர் பள்ளிவாசல் விவகாரம்

வேலூர் பள்ளிவாசல் விவகாரம்

பாலியல் பேரவையின் பொய்களை பாரீர்

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை எனும் பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டி 2014 ல் மர்கஸ் ஒன்று அமைக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் மர்கஸில் நடைபெறத்துவங்கிய போது அருகாமையில் உள்ள எதிர்க் கொள்கையை சார்ந்த முஸ்லிம்கள் சிலர் மர்கஸை இழுத்து மூடும் வகையில் சில பிரச்சனைகளை உண்டு பண்ணினர்.

இறுதியில் பல்வேறு பொய்களை கூறி அரசின் துணையுடன் மர்கஸை மூடவும் செய்தனர்.

இச்சம்பவம் நடைபெற்றது 2015 ம் ஆண்டின் துவக்கத்திலாகும்.

மக்கள் தந்த நன்கொடையில் அமையப்பெற்ற மர்கஸ் எவ்வித செயல்பாடுகளுமின்றி நீண்ட நெடுங்காலம் பூட்டப்பட்டிருப்பது சரியல்ல என்று அப்பகுதி கிளை மக்கள் கருதியதால்

ஒன்று மர்கஸை திறக்க உடனடி வழிவகை காண்பது அல்லது அவ்விடத்தை விற்று விட்டு அந்த தொகையில் வேறு இடத்தை வாங்கி அதில் செயல்பாடுகளை துவக்குவது.

இரண்டில் ஒன்றை விரைவாக செய்திட வேண்டும் அதுவே நன்கொடை தந்த மக்களின் நோக்கத்தை பூர்த்தி செய்வதாக அமையும் என்று கருதினர்.

எதிர்க்கொள்கையை சார்ந்தவர்கள் பல்வேறு பொய்களை கூறி புகார் பதிவு செய்துள்ளதால் மர்கஸை திறப்பதற்கு இன்னும் நீண்ட அவகாசங்கள் எடுக்கும் எனும் நிலை உள்ளது.

இப்போதே மர்கஸ் மூடப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது.

எதிர் தரப்பு ஒத்துழைப்பு தராத நிலையில் சட்டப்படி இயங்க பல ஆண்டுகள் ஆகும் என்ற நிலை.

இதற்கு பிறகு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே காலதாமதமின்றி மக்கள் தந்த நன்கொடையை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் அவ்விடத்தை விற்று விட்டு வேறொரு இடத்தை வாங்குவது என்ற முடிவை ஏற்று செயல்பாடுகள் துவங்கப்படட்டன.

விற்பனை செய்து மறு இடத்தில் வாங்கி கட்டுகின்றோம் என்ற உத்தரவாதத்தினால் தான் அரசு இயந்திரம் ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்தார்கள்.

அல்லாஹ்வின் அருளால் அதன் அடிப்படையில் தற்போது மர்கஸூக்கு போடப்பட்ட சீல் அகற்றப்பட்டு விற்பனைக்கு தயாராகி விட்டது.

இதில் தான் பாலியல் பேரவையினர் பொய்களை பரப்பி வருகின்றனர்.

பாலியல் பேரவை தலைவர் சொல்வது போல முந்திய கால கட்டத்தில் விற்பனை செய்து கொள்ளலாம் என்று அரசு தரப்பில் அனுமதி தரப்படவில்லை.

அப்படி அரசு தரப்பில் சொல்லப்பட்டு இருந்தால் இப்போது வந்த முடிவை நோக்கியே வரும் நிலை ஏற்பட்டு இருக்கும்.

பாலியல் பேரவை தலைவரின் வழமையான அண்ட பொய்களில் இதுவும் ஒன்றாகும்.

பேரவையை துவங்கி ஓரிரு ஆண்டுகளைக்கூட நிறைவு செய்திடவில்லை. தனி நபர் வழிபாட்டை நோக்கியே அழைத்து செல்கின்றார். அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்து ஆட்டம் போடுகின்றார்.

என அவரது சகாக்களே குற்றம் சுமத்தி வெளிவர துவங்கி விட்டார்கள்..

இந்த விவகாரங்களை தங்களது மற்ற சகாக்களிடமிருந்து திசை திருப்பவே வேலூர் பள்ளிவாசல் விவகாரத்தை கையிலெடுத்து பொய்களை பரப்புகிறார்.

பார்த்தீர்களா? பள்ளிவாசல் இடத்தை விற்கப் போகிறார்கள். அந்த காசை தின்று தீர்க்க பார்க்கிறார்கள் என்கின்றார்.

முறையற்ற வருமானத்தால் தன் குடும்பத்தை வளப்படுத்தி கொண்டது போலவே,

மற்றவர்களைப் பற்றி எழுதும் போதும் , பேசும் போதும்,

விற்கிறார்கள் ,திண்கின்றார்கள் என்றெல்லாம் பாலியல் பேரவை தலைவருக்கு மட்டுமே நினைக்க தோன்றும்.

ஓரிடத்திலுள்ள மர்கஸ் இடத்தை விற்று அந்த தொகையில் வேறொரு இடத்தில் மர்கஸ் பயன்பட இடம் வாங்கும் சூழல் உருவானால் அதன் காரண காரியத்தை கண்டறிந்து ஒப்புதல் வழங்குவது நிர்வாக வழி முறையில் ஒன்றாகும்.

ஒரு இடத்தில் பிரச்சனை ஏற்படும் போது அவ்விடத்தை விற்று விட்டு வேறொரு இடத்தில் மர்கஸ் வாங்கும் நிலை இன்றளவும் பல மாவட்டத்தில் நடை முறையில் உள்ளதாகும்.

குறிப்பாக பேரவையின் தலைவர் பொறுப்பு வகித்த காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஜமாஅத்திற்கென்று உள்ள ஓரிடத்தை குறிப்பிட்ட காரணத்திற்காக விற்று விட்டு அந்த தொகையில் வேறொரு இடம் வாங்கப்பட்டது. அந்த இடம் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

அதே கோவையில் சாரமேடு பகுதியிலும் இவ்வாறே மர்கஸ் இடத்தை விற்று விட்டு வேறொரு பகுதியில் இடம் வாங்கப்பட்டு இப்போது மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி நிறைய உதாரண நிகழ்வுகளை கூற முடியும்.

இப்படியான ஒன்று தான் இவர்கள் பரப்பும் வேலூர் சைதாப்பேட்டை மர்கஸிலும் நடைபெற்றுள்ளது.

மர்கஸ் விற்பனையை விமர்சனம் செய்யும் இந்த பொய்யர்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே இன்னும் பல ஆண்டுகள் உருண்டோட வேண்டும் என்று விரும்புகின்றார்களா ?

அது மாத்திரம் நன்கொடை தந்த மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்வதாகி விடுமா?

வேறொரு பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ் அமைந்து
விட்டால் தங்கள் பேரவையின் பாலியல் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று அஞ்சிகின்றார்களோ.?

பள்ளிவாசலை விற்று காசு பார்க்க போகிறார்கள் என்ற அவதூறை பரப்புவது ஏன் ?

மர்கஸை விற்று காசு பார்க்க விரும்புபவர்கள் பப்ளிக்காக விற்பனைக்கு என்று போர்டு மாட்டி செய்வார்களா?

இவர்களது சிந்தனை எந்த அளவு வற்றிப்போயுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஓரிடத்தில் வாங்கப்பட்ட இடத்தை விற்றாலே அது தின்பதற்கு தான் என்றால் இந்த பேரவையினர் பொறுப்பு வகித்த காலத்தில் விற்கப்பட்ட இடங்களுக்கும் இதே அளவு கோல் தானா?

இதில் உச்சகட்ட காமெடி என்னவெனில் வேலூர் பள்ளிவாசல் மேட்டரையும் பாபர் மசூதி விவகாரத்தையும் இணைத்தது தான்.

பாபர் மசூதி விஷயத்தில் பள்ளியின் மீது கைவைத்தால் உயிரைக் கொடுத்து காப்போம் என்று சொன்னீர்களே?

இப்போது உங்கள் வீரம் என்ன ஆனது? என்று தவ்ஹீத் ஜமாஅத்தினரை பார்த்து பாலியல் பேரவையைச் சார்ந்தவர்கள் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்.

சைதாப்பேட்டை மர்கஸ் இழுத்து மூடப்பட்டது, பல வருடங்களாக அது திறக்கப்பட அரசு அனுமதிக்காதது என அனைத்தும் பேரவையின் தலைவர் அங்கம் வகிக்கும் காலத்தில் தான் நடைபெற்றது.

எனவே பாபர் மசூதி விஷயத்தில் பல மேடைகளில் கர்ஜித்த அவர்களது பேரவையின் தலைவரிடம் தான் இக்கேள்வியை முதலில் கேட்க வேண்டும்.

தான் அங்கம் வகித்த காலத்தில் இழுத்து மூடப்பட்டு, பயன்படுத்த அனுமதிக்காமல் நெடுங்காலம் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜமாஅத்தின் தலைவராக பொறுப்பேற்று பல வருடங்கள் உருண்டோடிய போதும் இந்த அதிவேக சாகச வீரரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. மூடப்பட்ட மர்கஸை திறக்க வழிகாண முடியவில்லை.

இதர பலப்பல விஷயங்களில் அவரது தீவிர கவனம் குவிக்கப்பட்டு செயல்பட்டதால் மூடப்பட்ட மர்கஸை திறப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை போலும்.

பாபர் மசூதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை இடித்தது முஸ்லிம்கள் அல்ல, இந்துத்துவத்தினர்.

ஆனால் நமது மர்கஸிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எதிர்க்கொள்கையில் உள்ள முஸ்லிம்கள்.

இந்துத்துவாவினர் பள்ளிவாசலை இடிப்பதும் முஸ்லிம்களில் எதிர்க்கொள்கையில் உள்ள சிலர் பள்ளிவாசல் அமைய எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒன்றா?

வேலூர் சைதாப்பேட்டை பள்ளியின் சொத்து யாருக்குரியது என்பது அல்ல பிரச்சனை .

இங்கு தவ்ஹீத் பள்ளி அமையக் கூடாது என்று ஒரே சமூகத்தில் ஏற்பட்ட பிரச்சினையாகும்.

அதனால் பல ஆண்டுகள் மூடப்பட்டு கிடக்கின்றது.

மர்கஸ் இடத்தை விற்று விட்டு வெறாரு இடத்தை வாங்குவது பாபர் மசூதிக்கு ஒப்பானது என்றால் வேலூர் மர்கஸ் பூட்டப்பட்டது இவர்கள் அங்கம் வகித்து வந்த காலத்தில் தான். பிறகு பொறுப்பு வகித்து அந்த நிலையிலேயே பல ஆண்டுகள் கழிந்தது.

பூட்டப்பட்ட நிலையிலேயே பல ஆண்டுகள் கழிவது மட்டும் பாபர் மசூதிக்கு ஒப்பானது இல்லையா?

பூட்டப்பட்டது தங்கள் அங்கம் வகித்த நிலையில் என்றால் அது வீரத்தின் அடையாளமாகி விடுமா? மூளை வெந்து போய் பிதற்றுகிறார்கள்.

ஒன்று தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸை பூட்டியே கிடக்க முயற்சிப்பது அல்லது தவ்ஹீத் ஜமாஅத் மீது பொய்களை பரப்பி வெறுப்பை தீர்த்துக் கொள்வது. இதை தாண்டி இந்த பேரவைக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

( நிர்வாகத்திற்காக)

C V இஃர்பான்
முன்னால் மா. தலைவர்
வேலூர் மாவட்டம்.