கேள்வி :
வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா?
அபு வபா
பதில் :
தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு எத்திவைக்கும் பணியை ஒலிபெருக்கி செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய சப்தத்தைச் செவியுற்றால் தான் அவரை சரியாகப் பின்பற்ற முடியும் என்பதற்காக ஒலி பெருக்கி தேவை என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இமாம் வளல்லால்லீன் என்று கூறினால் பின்னால் தொழுபவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும்;
இமாம் ஓதுவதைச் செவிகொடுத்து கேட்க வேண்டும்;
இமாம் ருகூவிற்குச் சென்றால் அவரைப் பின்தொடர்ந்து ருகூவிற்குச் செல்ல வேண்டும்;
தொழுகைச் சட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒலி பெருக்கி உதவியாக இருப்பதால் இதைப் பயன்படுத்துவது தவறல்ல.
அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் மார்க்க வரம்புகளை மீற வேண்டிய சூழல் ஏற்பட்டால் மட்டும் அப்போது அவற்றை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழுகையில் ஒலி பெருக்கியைப் பயன்படுத்துவது எந்த மார்க்கச் சட்டத்திற்கும் முரணாக இல்லை என்பதால் இதைப் பயன்படுத்துவது தவறல்ல.