கேள்வி :
மனைவியிடம் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செல்போனிலோ, அல்லது நேரிலோ பேசலாமா?
பதில் :
கணவன் மனைவிக்கு இடையில் இதுபோன்று நடப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் மற்ற ஆண்களை வர்ணித்து, அல்லது மற்ற பெண்களை வர்ணித்து உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செய்யக்கூடாது.
صحيح البخاري
5240 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُبَاشِرُ المَرْأَةُ المَرْأَةَ، فَتَنْعَتَهَا لِزَوْجِهَا كَأَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் இன்னொரு பெண்ணைக் கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம், அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 5240
உள்ளூரில் இருக்கும் கணவன் இப்படி தூண்டும்படி பேசினால் அதனால் கிளர்ந்து எழும் ஆசையை இருவரும் தீர்த்துக் கொள்ள முடியும். வெளிநாட்டில் இருப்பவர் தன் மனையிடம் உணர்ச்சியைத் தூண்டும் வண்ணம் பேசுவது சரியல்ல. ஏனெனில் அப்பெண் தவறுவதற்கும், அந்த ஆண் தவறுவதற்கும் இந்தப் பேச்சுகள் வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம்.