கேள்வி :
நான்கு மத்ஹப்கள் இல்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் வஹ்ஹாபிகளின் ஆட்சி சவூதியில் அமைவதற்கு முன்னர் கஅபாவில் நான்கு மத்ஹபுகளுக்கும் தனித்தனி தொழும் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும், வஹ்ஹாபிகள் தான் அதை மாற்றி விட்டார்கள் என்றும் நண்பர் கூறுகிறார். அது உண்மையா?
இம்ரான் கான்
பதில்:
அவர் சொல்வது உண்மைதான். சவூதி மன்னர்களின் ஆட்சி அமைவதற்கு முன்னால் ஷாஃபி முஸல்லா, ஹனஃபி முஸல்லா, மாலிகி முஸல்லா, ஹம்பலி முஸல்லா என நான்கு திசைகளிலும் நான்கு தொழும் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
ஒரே நேரத்தில் ஒரே தொழுகை நான்கு திசைகளில் நான்கு இமாம்களைப் பின்பற்றி நடக்கும். ஒரே நேரத்தில் ஒரே பள்ளியில் இருந்து நான்கு பாங்குகள் சொல்லப்பட்டன. இந்த அக்கிரமத்தை ஒழித்துக்கட்டிய சவூதி ஆட்சியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இஸ்லாம் ஒரே மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு ஒரு பள்ளியில் ஒரு நேரத்தில் நான்கு தொழுகைகள் நான்கு தலைமையின் கீழ் நடந்து இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வந்தது. இஸ்லாமிய வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் குந்தகம் விளைவித்து வந்தது.
இந்த நான்கு முஸல்லாக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்ததா? இல்லவே இல்லை.
சமாதியை வணங்கும் துருக்கி ஷைத்தான்களின் ஆட்சியில் தான் இந்த அலங்கோலம் அறங்கேற்றப்பட்டது. அதற்கு முன்னர் ஒரே முஸல்லா தான் இருந்த்து. எனவே சவூதி அரசாங்கம் புதிதாக ஒன்றையும் செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் துருக்கி ஷைத்தான்கள் ஆட்சிக்கு முன்புவரை எந்த நடைமுறை இருந்ததோ அதைத் தான் சவூதி அரசங்கம் செய்தது.
பாராட்ட வேண்டிய அற்புதமான ஒரு நடவடிக்கையை எதிர்த்து கஅபாவில் கூட ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்று வாதிடுவோர் மிகவும் ஆபத்தானவர்கள்.