தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா?

கேள்வி :

தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். வறுமை நீங்க்கும் என்கிறார்கள். இது சரியா?

காஜா மைதீன்

பதில் :

வாகிஆ அத்தியாயத்தை ஓதினான் வறுமை வராது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பொய்யான ஹதீஸ்களாகும். அவற்றை ஆதாரமாக எடுக்கக் கூடாது.

شعب الإيمان للبيهقي – تخصيص سور منها بالذكر

أخبرنا أبو طاهر الفقيه ، أخبرنا أبو حامد بن بلال ، حدثنا أبو الأحوص إسماعيل بن إبراهيم الإسفراييني ، حدثنا العباس بن الفضل البصري ، حدثنا السري بن يحيى ، حدثناابو شجاع ، عن أبي ظبية ، عن ابن مسعود ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا ” ” وكان ابن مسعود يأمر بناته يقرأن بها كل ليلة ” وكذا رواه يونس بن بكير ، عن السري 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு இரவும் வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : பைஹகீ 2392

இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து

அபூ ளப்யா என்பவரும்,

அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்

அறிவிக்கின்றனர்.

இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

ميزان الإعتدال في نقد الرجال ج: 7 ص: 380

10292 أبو شجاع نكرة لا يعرف عن أبي ظبية ومن أبو ظبية عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا رواه الربيع بن طارق وابن وهب عن السري بن يحيى أن هذا حدثه أخرجه ابن وهب في جامعه وأبو عبيد في فضائل القرآن والسري ثقة

583 أبو شجاع نكرة لا يعرف عن أبي طيبة عن بن مسعود في قراءة سورة الواقعة

அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 7 பக்கம் : 380

நூல் : லிசானுல் மீஸான் பாகம் : 7 பக்கம் : 60

العلل المتناهية – (1 / 112)

151 – اخبرنا المبارك بن خيرون قال اخبرنا احمد بن الحسن قال انا ابو طاهر بن العلاف قال انا عثمان بن محمد قال انا ابو بكر بن ابي داؤد قال انا محمد بن احمد بن المثنى قال انا خالد بن خداش قال حدثني عبدالله بن وهب قال حدثني السري بن يحيى ان شجاعا حدثه عن ابي ظبية عن ابن مسعود قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من قرأ سورة القارعة في كل ليلة لم تصبه فاقه قال احمد بن حنبل هذا حديث منكر وشجاع والسري لا أعرفهما

இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது; இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மை தெரியவில்லை என அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார்கள். இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா பாகம் : 1 பக்கம் : 112

எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன. அவற்றை அறிய துஆக்களின் தொகுப்பு நூலை வாசிக்கவும்