தாய்மாமாவின் மச்சினிச்சியை திருமணம் செய்யலாமா?

தாய்மாமாவின் மச்சினிச்சியை திருமணம் செய்யலாமா?

 பதில் :

தாய்மாமா என்பவர் தாயின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

தாய்மாமாவின் மச்சினிச்சி என்பவர் தாய்மாமாவுடைய மனைவியின் தங்கை ஆவார்.

ஒருவருடைய தாயின் உடன் பிறந்த சகோதரர் ஒரு பெண்ணை திருமணம் செய்த காரணத்தினால் அப்பெண்ணின் சகோதரரி அவருக்கு (அதாவது மருமகனுக்கு) திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டவராகமாட்டார்

இவர்கள் அன்னியப் பெண்களே ஆவர். திருமணம் செய்வதற்கு மார்க்கம் தடுத்துள்ள பெண்களின் பட்டியலில் இவர்கள் வரமாட்டார்கள்.

ஆனால் அப்பெண்கள் திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவுகளாகவோ அல்லது பால்குடிச் சகோதரிகளாக இருந்தால் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டதாகும்.

திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவுகளை திருமறைக்குர்ஆனும், நபிமொழிகளும் தெளிவுபடுத்தியுள்ளன.

وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلًا (22)حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (23) وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا (24) )النساء: 23(

22. உங்கள் தந்தையர் திருமணம் முடித்த பெண்களை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (இதற்கு) முன்னர் நடந்து முடிந்ததைத் தவிர! அது மானக்கேடானதாகவும், வெறுப்பிற்குரியதாகவும், கெட்ட வழியாகவும் உள்ளது.

23. உங்கள் தாய்மார்கள், உங்கள் மகள்கள், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் தாயின் சகோதரிகள், உங்கள் சகோதரனின் மகள்கள், உங்கள் சகோதரியின் மகள்கள், உங்களுக்குப் பாலூட்டிய தாய்மார்கள், உங்கள் பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியரின் (முந்தைய கணவருக்குப் பிறந்த) உங்கள் பொறுப்பில் வளரும் மகள்கள் ஆகியோர் உங்களுக்குத் (திருமணம் செய்யத்) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அந்த மனைவியருடன் உடலுறவு கொள்ளாவிட்டால் (அவர்களை மணவிலக்குச் செய்துவிட்டு அவர்களின் மகள்களை மணந்து கொள்வதில்) உங்கள்மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவியரும் (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்றிணைத்துக் கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது.) முன்னர் நடந்து முடிந்ததை தவிர. அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.94

24. உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர மற்ற பெண்களில் கணவன் உள்ளவர்களையும் (திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.) இவை உங்கள்மீது அல்லாஹ் விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர மற்றவர்களை நீங்கள் விபச்சாரம் செய்வோராக இல்லாமலும், கற்பு நெறியைப் பேணியவர்களாகவும் உங்கள் செல்வங்களைக் கொடுத்துத் (திருமணத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களிடமிருந்து அடையும் இன்பத்திற்காக அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கட்டாயமாக வழங்கி விடுங்கள். நிர்ணயித்த பின்னர் (திருமணக் கொடையில் மாற்றம் செய்து அதை) நீங்கள் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொண்டால் அதில் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:22,23,24)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا (رواه البخاري)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக்கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி (5109)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் மற்றும் நபிமொழியில் தடுக்கப்பட்டுள்ள பெண்களைத் தவிர மற்ற இறைநம்பிக்கையுள்ள பெண்களை திருமணம் செய்துகொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.