மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு உண்டா?

2201QA007

மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு உண்டா?

பதில் :

“(சொத்தில்) இரண்டு பெண்களின் பங்கைப் போன்றது ஓர் ஆணுக்குரியது. பெண் மக்களாகவே (இருவர் அல்லது) இருவருக்கு மேல் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்குரியது. ஒரேயொரு மகள் மட்டும் இருந்தால் அவளுக்குப் பாதி உண்டு” என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்.

அல்குர்ஆன் 4:11

இறைவன் பங்கு தொடர்பாக குறிப்பிடும் போது உங்கள் பிள்ளைகள் என்று குறிப்பிடுகின்றான்.

உங்கள் பிள்ளைகள் என்றால் அவருக்கு பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும். மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை உங்கள் குழந்தையாகாது. எனவே முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு உங்கள் சொத்தில் பங்கு வராது.

அதே நேரத்தில் உங்கள் மனைவி இறந்து விட்டால் அவரின் சொத்தில் அந்த குழந்தைக்கு பங்கு கிடைக்கும். அந்த குழந்தை வேறு கணவர் மூலாமாக பிறந்தாலும் அந்த குழந்தையின் தாய் உங்கள் மனைவிதான். எனவே அவரின் சொத்தில் பங்கு கிடைக்கும்.