ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா?

2201QA021

ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா?

பதில் :

ஜின்னா என்ற வார்த்தை, திருக்குர்ஆனில் இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஜின்கள், இரண்டாவது பைத்தியம்.

{الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6) } [الناس: 5، 6]

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை ஏற்படுத்துகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ளனர்”

அல்குர்ஆன் 114:5,6

{وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ (158)} [الصافات: 158]

அவனுக்கும், ஜின்களுக்குமிடையில் ஒரு வழித்தோன்றல் உறவை இட்டுக்கட்டுகின்றனர். தாம் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவோர் என்பதை ஜின்கள் அறிந்துள்ளன.

அல்குர்ஆன் 37:158

இந்த வசனங்களில் “ஜின்னா” என்ற வார்த்தை ஜின்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

{ إِنْ هُوَ إِلَّا رَجُلٌ بِهِ جِنَّةٌ (25) } [المؤمنون: 25]

இவர் ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது.

அல்குர்ஆன் 23:25

{أَمْ يَقُولُونَ بِهِ جِنَّةٌ (70)} [المؤمنون: 70]

அல்லது, அவருக்குப் பைத்தியம் என்று கூறுகிறார்களா?

அல்குர்ஆன் 23:70

{أَفْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَمْ بِهِ جِنَّةٌ بَلِ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ فِي الْعَذَابِ وَالضَّلَالِ الْبَعِيدِ (8)} [سبأ: 8]

“அல்லாஹ்வின்மீது அவர் பொய்யைப் புனைந்து கூறுகிறாரா? அல்லது அவருக்குப் பைத்தியமா?”

அல்குர்ஆன் 34:08

இந்த வசனங்களில் “ஜின்னா” என்ற சொல், பைத்தியம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பைத்தியம் என்ற பொருள் இதற்கு இருப்பதால் இந்த பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்கு வேறு பொருள்களும் உள்ளன.

ஜின்கள்,பைத்தியம் என்ற இந்த இரண்டு பொருளல்லாத வேறு பொருள்களும் உள்ளன என்று அகராதி நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

முன்ஜித் என்ற அகராதி நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

الجن والجنة * من النبت : زهره ونوره و من الشاب : أوله (المنجد في اللغة والإعلام)

“ஜின்னா” என்ற சொல், தாவரத்துடன் வரும் போது அழகு, ஒளி என்ற பொருளிலும் (ஷாப்) இளைஞர் என்ற வார்த்தையுடன் வரும் போது ஆரம்பம் என்ற பொருளிலும் வரும். (நூல் : முன்ஜித்)

இதே கருத்து அல்முஃஜமுல் வஸீத் என்ற அகராதி நூலிலும் இடம்பெற்றுள்ளது.

المعجم الوسيط (1/ 141(
( الجن ) خلاف الإنس واحده جني وهي ( بتاء ) ويقال بات فلان ضيف جن بمكان خال لا أنيس به ومن كل شيء أوله ونشاطه وشدته وجن الشباب عنفوانه وجن النبات زهره ونوره وجن الليل جنانه وجن الناس جنانهم

எனவே “ஜின்னா” என்று பெயர் வைப்பதில் தவறில்லை.