2202QA035
கேள்வி :
இந்து மதத்தில் இருந்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றலாமா?
பதில் :
இஸ்லாத்தின் முக்கிய அடிப்படைகள் ஐந்து. இதை ஏற்று நடப்பவனே முஸ்லிமாக கருதப்படுவான்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 9)
8- حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى قَالَ : أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ ، وَإِقَامِ الصَّلاَةِ ، وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ ، وَصَوْمِ رَمَضَانَ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.
1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
2. தொழுகையை நிலைநிறுத்துவது.
3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.
4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
5. ரமளானில் நோன்பு நோற்பது.
நூல் புகாரி (8)
இந்த ஐந்து அடிப்படையில் ஓரிறைக் கொள்கை ஏற்றிருப்பது மிக மிக முக்கியமானதாகும்.
இவ்வுலகத்தை படைத்து அதில் மனித மற்றும் ஜீவராசிகளை உருவாக்கியவன் ஏக இறைவன் ஒருவன் மட்டுமே. அவனை மட்டுமே வணங்க வேண்டும். இந்த கொள்கை ஏற்காதவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது.
இந்து மதம் பல தெய்வ கொள்கை உடையது, இது இஸ்லாத்தின் கொள்கைக்கு நேர் எதிரானது.
பல தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் ஓரிறைக் கொள்கை பின்பற்ற முடியாது. அவர் பின்பற்றினால் பல தெய்வ கொள்கையை விட நேரிடும். பல செய்வ கொள்கையை விட்டு விட்டு ஓரிறைக் கொள்கை நம்பினால் அவர் இஸ்லாத்தை ஏற்றவராக மாறிவிடுவார்.
ஓரிறைக் கொள்கை அல்லாமல் ஏரளமான அறிவுரைகள் இஸ்லாத்தில் உண்டு.
உண்மையே பேச வேண்டும். பொய்யை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
புறம் பேசக்கூடாது. அவதூறு சொல்லக் கூடாது.
உயர்நதவன், தாழ்ந்வன் என்ற பாகுபாடு காட்டக்கூடாது.
பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும்.
சோதனை காலங்களில் பொறுமையாக இருக்க வேண்டும்.
அந்நியப் பெண்களை தவறான எணத்துடன் பார்க்கக்கூடாது.
ஆண்,பெண் இருபாலாரும் கற்பொழுக்கம் பேண வேண்டும்.
பொருளாதாரத்தில் தன்னை விட உயர்ந்தவனை பார்ப்பதைவிட்டுவிட்டு தனக்கும் கீழ் நிலை இருப்பவனை பார்க்க வேண்டும்.
ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் தன்னால் முடிந்த அளவு அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்.
அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவ வேண்டும்.
இன்னும் ஏராளம் உண்டு.
இவற்றை யாரும் பின்பற்றலாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு உள்ள வாழ்க்கையில் இறைவனின் அருளை பெற வேண்டுமானால் ஓரிறைக் கொள்கை கண்டிப்பாக ஏற்றிருக்க வேண்டும்.
ஒரு சில முஸ்லிம் அல்லாதவர்கள் நோன்பு நோற்பது, முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபடுவது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
நோன்பு, தொழுகை போன்ற காரியங்களுக்கான கூலி கிடைக்க வேண்டுமானால் அவர் நிச்சயம் இறைவன் ஒருவனே எனும் cயை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் இஸ்லாத்தில் கூறப்பட்ட விஷயங்களை பின்பற்றுவதன் முழுமையான கூலியை பெற முடியும்.