உறவினரை வெறுத்தவன் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று ஜாமிவுஸ்ஸகீர் என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதா?
முஹம்மது ஸலீம், ஈரோடு
ஜாமிவுஸ்ஸகீர் என்பது ஒரு ஹதீஸ் நூலல்ல. பல்வேறு ஹதீஸ் நூற்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூல் தான். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் அல்அதபுல் முஃப்ரத் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் ஸைத் அபூ இதாம் என்பவர் பொய்யர் ஆவார். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.