ஒவ்வொரு வியாழன் இஷா தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக ஹதீசுல் காஷியா அல்லது சூரத்துல் ஜும்ஆ ஆகிய மூன்று அத்தியாயங்களை மட்டும் ஓதுவது சுன்னத்தா?

 ஒவ்வொரு வியாழன் இஷா தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக ஹதீசுல் காஷியா அல்லது சூரத்துல் ஜும்ஆ ஆகிய மூன்று அத்தியாயங்களை மட்டும் ஓதுவது சுன்னத்தா? விளக்கவும்.
பி. ஹஸன் முஹம்மது, விழுப்புரம்

வியாழக்கிழமை இஷா தொழுகையில் மேற்கண்ட சூராக்களையோ அல்லது வேறு குறிப்பிட்ட சூராக்களையோ ஓத வேண்டும் என்று வலியுறுத்தி ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை. குர்ஆனில் எந்த அத்தியாயத்தையும் எந்தத் தொழுகையிலும் ஓதலாம் என்ற அடிப்படையில் மேற்கண்ட சூராக்களையும் ஓதுவதில் தவறில்லை. எனினும் இது நபிவழி என்று கூறுவதற்கு ஆதாரமில்லை.