நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியலாமா?

நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்களே! இது சரியா?
நிரவி சகோதரிகள்

நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்து ஹதீஸ் உள்ளது.

இந்த விரலிலும் இந்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்என்று அலீ (ரலி) அவர்கள் கூறி விட்டு, நடு விரலையும், ஆட்காட்டி விரலையும் குறிப்பிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 3911