ஆடை அணியும் போது என்ன கூற வேண்டும்? ஆடை அணிவதற்கென பிரத்தியேகமான துஆ இருந்தால் குறிப்பிடவும்.
ஜே. ரியாஸ் அஹ்மத், காயல்பட்டிணம்
நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் போது, தலைப்பாகை என்றோ, சட்டை என்றோ, துண்டு என்றோ அந்த ஆடையின் பெயரைக் குறிப்பிடுவார்கள். பின்பு இவ்வாறு பிரார்த்திப்பார்கள்.
அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக்க ஹைரஹு வஹைர மாஸுனிஅ லஹு வஅவூதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மாஸுனிஅ லஹு
(பொருள்: இறைவா! உனக்கே புகழனைத்தும்! நீயே இந்த ஆடையை எனக்கு அணிவித்தாய்! இந்த ஆடையின் நன்மையையும், இந்த ஆடை எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த ஆடையின் தீமையையும், இந்த ஆடை எந்தத் தீமைக்காகத் தயாரிக்கப்பட்டதோ அதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: திர்மிதீ 1689