இறை பயம் – பயான் குறிப்பு (ரியாளுஸ் ஸாலிஹீன்)

இறை பயம்

قَالَ الله تَعَالَى : ﴿ وَإِيَّايَ فَارْهَبُونِ ﴾

எனக்கே பயப்படுங்கள்!

அல்குர்ஆன் 2 : 40

وَقالَ تَعَالَى : ﴿ إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴾

உன் இறைவனின் பிடி கடுமையானது.

அல்குர்ஆன் 85 : 12

وَقالَ تَعَالَى : ﴿ وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِمَنْ خَافَ عَذَابَ الآخِرَةِ ذَلِكَ يَوْمٌ مَجْمُوعٌ لَهُ النَّاسُ وَذَلِكَ يَوْمٌ مَشْهُودٌ وَمَا نُؤَخِّرُهُ إِلاَّ لأَجَلٍ مَعْدُودٍ يَوْمَ يَأْتِ لا تَكَلَّمُ نَفْسٌ إِلاَّ بِإِذْنِهِ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ ﴾

அநியாயம் செய்யும் ஊராரை உமது இறைவன் தண்டித்தால் அவனது தண்டனை இவ்வாறுதான் இருக்கும். அவனது தண்டனை துன்புறுத்தக் கூடியது, கடுமையானது. மறுமை வேதனையை அஞ்சுவோருக்கு இதில் சான்று உள்ளது. அது மக்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாள்; அது சாட்சி சொல்லப்படும் நாள். நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணைக்காகவே அதைப் பிற்படுத்தி வைத்துள்ளோம். அந்த நாள் ஏற்படும்போது அவனது அனுமதியின்றி எவரும் பேசமுடியாது. அவர்களில் பாக்கியமிழந்தோரும் பாக்கியமுடையோரும் இருப்பார்கள். பாக்கியமிழந்தோர் நரகில் இருப்பார்கள். அதில் அவர்கள் தேம்பியவாறும், பெருங் கூச்சலுடனும் இருப்பார்கள்.

அல்குர்ஆன் 11 : 102-106

وَقالَ تَعَالَى : ﴿ وَيُحَذِّرُكُمُ اللهُ نَفْسَهُ ﴾

தன்னைக் குறித்து அல்லாஹ் உங்களுக்கு எச்சரிக்கிறான்.

அல்குர்ஆன் 3 : 28

وَقالَ تَعَالَى : ﴿ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ﴾

அந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டும், தாயை விட்டும் , தந்தையை விட்டும், மனைவியை விட்டும் குழந்தைகளை விட்டும் ஓடுவான். அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதருக்கும் (தன் குடும்பத்தினரை விட்டும்) அவரைத் திருப்பிவிடும் ஒரு காரியம் இருக்கும்.

அல்குர்ஆன் 80 : 35-37

وَقالَ تَعَالَى : ﴿ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللهِ شَدِيدٌ ﴾

மனிதர்களே! உங்கள் இறைவனை பயப்படுங்கள்! அந்நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது. அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் ஊட்டும் குழந்தையை மறந்துவிடுவாள். கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவாள். மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர், எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல. அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.

அல்குர்ஆன் 22 : 1,2

وَقالَ تَعَالَى : ﴿ وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ ﴾

தன் இறைவன் முன்னால் நிற்பதை அஞ்சி நடப்பவனுக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.

அல்குர்ஆன் 55 : 46

وَقالَ تَعَالَى : ﴿ وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءلُونَ قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ فَمَنَّ اللهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ إِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوهُ إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ ﴾

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள். இதற்கு முன் குடும்பத்தைப் பற்றி நாம் அஞ்சிக் கொண்டிருந்தோம். அல்லாஹ் நம்மீது அருள் செய்து நெருப்பின் வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான். முன்னர் நாம் அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், அவனே மிக்க நன்மை செய்பவன், நிகரில்லா அன்புடையவன்.

அல்குர்ஆன் 52 : 25-28

நபிமொழிகளிலிருந்து…..

396- عن ابن مسعود رضي الله عنه قَالَ : حدثنا رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَهُوَ الصادق المصدوق : (( إنَّ أحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ في بَطْنِ أُمِّهِ أربَعِينَ يَوماً نُطْفَةً ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذلِكَ ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذلِكَ ثُمَّ يُرْسَلُ المَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمَرُ بِأرْبَعِ كَلِمَاتٍ : بِكَتْبِ رِزْقِهِ وَأجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ. فَوَالَّذِي لا إلهَ غَيْرُهُ إنَّ أحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أهْلِ الجَنَّةِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وبيْنَهَا إلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيهِ الكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أهْلِ النَّارِ فَيدْخُلُهَا وَإنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إلاَّ ذراعٌ فَيَسْبِقُ عَلَيهِ الكِتَابُ فَيعْمَلُ بِعَمَلِ أهْلِ الجَنَّةِ فَيَدْخُلُهَا )) مُتَّفَقٌ عَلَيهِ.

ஹதீஸ் எண் : 396
உண்மையே பேசியவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள் :
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் விந்துத் துளியாக ஒருங்கிணைக்கப்படுகின்றது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாட்களில் அட்டை – போன்று) ஒரு கருக் கட்டியாக மாறுகின்றது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகின்றது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகின்றான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்கு என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது’’ என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக் கொண்டு விடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்.) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள் : புகாரி (3208), முஸ்லிம் (5145)
குறிப்பு : விந்துத் துளியாக என்று மொழிபெயர்த்த இடத்தில் இடம்பெற்றுள்ள நுத்ஃபா என்ற சொல் புகாரி, முஸ்லிமில் இடம்பெறவில்லை. அபு அவானா அவர்களின் அறிவிப்பில் நுத்ஃபா என்ற சொல் இடம்பெற்றுள்ளது. – பத்ஹுல் பாரி

397- وعنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( يُؤتَى بِجَهَنَّمَ يَومَئذٍ لَهَا سَبْعُونَ ألفَ زِمَامٍ مَعَ كُلِّ زِمَامٍ سَبعُونَ ألْفَ مَلَكٍ يَجُرُّونَهَا )) رواه مسلم.

ஹதீஸ் எண் : 397
அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இழுத்து வருவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : முஸ்லிம் (5464)

398- وعن النعمان بن بشير رضي الله عنهما قَالَ : سَمِعْتُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : (( إنَّ أهْوَنَ أهْلِ النَّارِ عَذَاباً يَوْمَ القِيَامَةِ لَرَجُلٌ يوضعُ في أخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ. مَا يَرَى أنَّ أَحَداً أشَدُّ مِنْهُ عَذَاباً وَأنَّهُ لأَهْوَنُهُمْ عَذَاباً )) مُتَّفَقٌ عَلَيهِ.

ஹதீஸ் எண் : 398
மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். அவற்றால் அவரது மூளை கொதிக்கும். நரகவாசிகளிலேயே அவர் தாம் மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராய் இருக்க, அவரோ “தம்மைவிட வேறெவரும் மிகக் கடுமையாக வேதனை செய்யப்படவில்லை’ என எண்ணுவார் (அந்த அளவுக்கு வேதனை கடுமையாக இருக்கும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல்கள் : புகாரி (6561), முஸ்லிம் (363,364)

399- وعن سمرة بن جندب رضي الله عنه : أنَّ نبيَّ الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( مِنْهُمْ مَنْ تَأخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيهِ وَمنْهُمْ مَنْ تَأخُذُهُ إِلَى رُكْبَتَيهِ وَمنْهُمْ مَنْ تَأخُذُهُ إِلَى حُجزَتِهِ وَمِنْهُمْ مَنْ تَأخُذُهُ إِلَى تَرْقُوَتِهِ )) رواه مسلم.
(( الحُجْزَةُ )) : مَعْقِدُ الإزار تَحْتَ السُّرَّةِ وَ(( التَّرْقُوَةُ )) بفتح التاءِ وضم القاف : هي العَظمُ الَّذِي عِنْدَ ثَغْرَةِ النَّحْرِ وَللإنْسَانِ تَرْقُوتَانِ في جَانبَي النَّحْرِ.

ஹதீஸ் எண் : 399
நரகம், நரகவாசிகளில் சிலரை அவர்களின் கணுக்கால்கள் வரை தீண்டும். வேறு சிலரை முழங்கால்கள் வரை தீண்டும். மற்றச் சிலரை இடுப்புவரை தீண்டும். இன்னும் சிலரைக் கழுத்து வரை தீண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி), நூல் : முஸ்லிம் (5468)

400- وعن ابن عمر رضي الله عنهما : أنَّ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( يَقُومُ النَّاس لِرَبِّ العَالَمينَ حَتَّى يَغِيبَ أحَدُهُمْ في رَشْحِهِ إِلَى أنْصَافِ أُذُنَيهِ )) مُتَّفَقٌ عَلَيهِ.وَ(( الرَّشْحُ )) : العَرَقُ.

ஹதீஸ் எண் : 400
நபி (ஸல்) அவர்கள், “(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்’’ (எனும் (83:6ஆவது) (இறை வசனத்தை) ஓதிவிட்டு, “அன்று தம் இரு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தமது வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள் : புகாரி (4938), முஸ்லிம் (5495)

401- وعن أنس رضي الله عنه قَالَ : خطبنا رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم خطبة مَا سَمِعْتُ مِثلها قطّ فَقَالَ : ((لَوْ تَعْلَمُونَ مَا أعْلَمُ لَضحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيتُمْ كَثِيراً )) فَغَطَّى أصْحَابُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَجُوهَهُمْ وَلَهُمْ خَنَينٌ. مُتَّفَقٌ عَلَيهِ.

ஹதீஸ் எண் : 401
நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) எங்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒரு போதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், “நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’’ என்று குறிப்பிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்கள் : புகாரி (4621), முஸ்லிம் (4706)

وفي رواية : بَلَغَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم عَنْ أَصْحَابِهِ شَيْءٌ فَخَطَبَ فَقَالَ : (( عُرِضَتْ عَلَيَّ الجَنَّةُ وَالنَّارُ فَلَمْ أرَ كَاليَومِ في الخَيرِ وَالشَّرِّ وَلَوْ تَعْلَمونَ مَا أعلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيراً )) فَمَا أتَى عَلَى أصْحَابِ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَوْمٌ أَشَدُّ مِنْهُ غَطَّوْا رُؤُسَهُمْ وَلَهُمْ خَنِينٌ. (( الخَنِينُ )) بالخاءِ المعجمة : هُوَ البُكَاءُ مَعَ غُنَّة وانتِشَاقِ الصَّوْتِ مِنَ الأنْفِ

(முஸ்லிமின் 4706) மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
நபி (ஸல்) அவர்களுக்கு, தம் தோழர்கள் (ஒன்றைக் குறித்து அதிருப்தியாகப்) பேசியது தொடர்பாகத் தகவல் கிடைத்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (அதில்) அவர்கள், “(சற்று முன்னர்) எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று வேறெந்த நாளிலும் நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை. நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’’ என்று குறிப் பிட்டார்கள்.
அதைவிட (மனவேதனை அளித்த) கடினமான ஒரு நாள் நபித்தோழர்களுக்கு வந்ததில்லை. அவர்கள் தம் முகங்களை மூடிக் கொண்டு சப்தமிட்டு அழுதனர்.

402- وعن المقداد رضي الله عنه قَالَ : سمِعْتُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : (( تُدْنَى الشَّمْسُ يَوْمَ القِيَامَةِ مِنَ الخَلْقِ حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ )) قَالَ سُلَيْم بنُ عامِر الراوي عن المقداد : فَوَاللهِ مَا أدْرِي مَا يعني بالمِيلِ أمَسَافَةَ الأرضِ أَمِ المِيلَ الَّذِي تُكْتَحَلُ بِهِ العَيْنُ ؟ قَالَ : (( فَيكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أعْمَالِهِمْ في العَرَقِ فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ ومنهم من يكون إِلَى ركبتيه ومنهم مَنْ يَكُونُ إِلَى حِقْوَيْهِ وَمِنْهُمْ مَنْ يُلْجِمُهُ العَرَقُ إلْجَاماً )) قَالَ : وَأَشَارَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم بيدهِ إِلَى فِيهِ. رواه مسلم.

ஹதீஸ் எண் : 402
மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்‘’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
இதைக் கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! “மைல்’ என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக் கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மிக்தாத் (ரலி), நூல் : முஸ்லிம் (5468)

403- وعن أَبي هريرة رضي الله عنه : أن رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( يَعْرَقُ النَّاسُ يَومَ القِيَامَةِ حَتَّى يَذْهَبَ عَرَقُهُمْ في الأرضِ سَبْعِينَ ذِراعاً وَيُلْجِمُهُمْ حَتَّى يَبْلُغَ آذَانَهُمْ )) مُتَّفَقٌ عَلَيهِ.ومعنى (( يَذْهَبُ في الأرضِ )) : ينـزل ويغوص.

ஹதீஸ் எண் : 403
மறுமை நாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (6532), முஸ்லிம் (5496)

404- وعنه قَالَ : كُنَّا مَعَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إذْ سمع وجبة فَقَالَ : (( هَلْ تَدْرُونَ مَا هَذَا ؟ )) قُلْنَا : الله وَرَسُولُهُ أعْلَمُ. قَالَ : (( هذَا حَجَرٌ رُمِيَ بِهِ في النَّارِ مُنْذُ سَبْعينَ خَريفاً فَهُوَ يَهْوِي في النَّارِ الآنَ حَتَّى انْتَهَى إِلَى قَعْرِها فَسَمِعْتُمْ وَجْبَتَهَا )) رواه مسلم.

ஹதீஸ் எண் : 404
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் கேட்டோம்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள்.
நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’’ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், “இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (5466)

405- وعن عدي بن حاتم رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إلاَّ سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وبَيْنَهُ تَرْجُمَانٌ فَيَنْظُرُ أيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إلاَّ مَا قَدَّمَ وَيَنْظُرُ أشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إلاَّ مَا قَدَّمَ وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إلاَّ النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ )) مُتَّفَقٌ عَلَيهِ.

ஹதீஸ் எண் : 405
(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்கள் : புகாரி (7512), முஸ்லிம் (1846)

406- وعن أَبي ذر رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( إنِّي أَرَى مَا لا تَرَوْنَ أطَّتِ السَّمَاءُ وَحُقَّ لَهَا أنْ تَئِطَّ مَا فِيهَا مَوضِعُ أرْبَع أصَابعَ إلاَّ وَمَلَكٌ وَاضِعٌ جَبْهَتَهُ سَاجِداً للهِ تَعَالَى. والله لَوْ تَعْلَمُونَ مَا أعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيراً وَمَا تَلَذَّذْتُمْ بالنِّساءِ عَلَى الفُرُشِ وَلَخَرَجْتُمْ إِلَى الصُّعُدَاتِ تَجْأرُونَ إِلَى اللهِ تَعَالَى )) رواه الترمذي وَقالَ : (( حديث حسن ))
وَ(( أطَّت )) بفتح الهمزة وتشديد الطاءِ و(( تئط )) بفتح التاءِ وبعدها همزة مكسورة وَالأطيط : صوتُ الرَّحْلِ وَالقَتَبِ وَشِبْهِهِمَا ومعناه : أنَّ كَثرَةَ مَنْ في السَّماءِ مِنَ المَلائِكَةِ العَابِدِينَ قَدْ أثْقَلَتْهَا حَتَّى أطّتْ. وَ(( الصُّعُدات )) بضم الصاد والعين : الطُّرُقات : ومعنى : (( تَجأَرُون )) : تَستَغيثُونَ.

ஹதீஸ் எண் : 406
நான் நீங்கள் காணாததைக் காண்கிறேன். நீங்கள் கேட்காததை நான் கேட்கிறேன். வானம் சப்தமிடுகிறது. சப்தமிடுவதும் அதன் கடமையும் கூட வானத்தில் நான்கு விரல் அளவு இடம் இருந்தாலும் அதிலும் ஒரு வானவர் அல்லாஹ்வுக்காகத் தம் நெற்றியை வைத்து ஸஜ்தா செய்யாமல் இருப்பதில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள். படுக்கையில் பெண்களிடம் சுகம் காண மாட்டீர்கள். இறைவனிடம் இறைஞ்சிட, திறந்த வெளிகளுக்கு ஓடுவீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : திர்மிதீ (2234)
குறிப்பு : இச்செய்தியில் இடம்பெறும் இப்ராஹீம் பின் அல்முஹாஜிர் என்பவர் நினைவாற்றல் குறைவுடையவர் என்ற விமர்சிக்கப்பட்டுள்ளார்.

407- وعن أَبي برزة – براء ثُمَّ زاي – نَضْلَة بن عبيد الأسلمي رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( لا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَومَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَ أفنَاهُ ؟ وَعَنْ عِلمِهِ فِيمَ فَعَلَ فِيهِ ؟ وَعَنْ مَالِهِ مِنْ أيْنَ اكْتَسَبَهُ ؟ وَفيمَ أنْفَقَهُ ؟ وَعَنْ جِسمِهِ فِيمَ أبلاهُ ؟ )) رواه الترمذي وَقالَ : (( حديث حسن صحيح ))

ஹதீஸ் எண் : 407
வாழ்நாளை எப்படிச் செலவிட்டான்? கற்றவைகளில் எதைச் செயல்படுத்தினான் செல்வத்தை எவ்வாறு திரட்டி எவ்வாறு செலவழிதான்? உடலை எவ்வாறு பயன்படுத்தினான்? என்று நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை கியாமத் நாளில் ஆதமுடைய மகனின் கால்கள் நகர முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபர்ஸா (ரலி), நூல் : திர்மிதீ (2341)
குறிப்பு : இந்த செய்தியில் ஹுஸைன் பின் கைஸ் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

408- وعن أَبي هريرة رضي الله عنه قَالَ : قرأ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا [ الزلزلة : 4 ] ثُمَّ قَالَ : (( أتَدْرونَ مَا أخْبَارهَا )) ؟ قالوا : الله وَرَسُولُهُ أعْلَمُ. قَالَ : (( فإنَّ أخْبَارَهَا أنْ تَشْهَدَ عَلَى كُلّ عَبْدٍ أَوْ أمَةٍ بما عَمِلَ عَلَى ظَهْرِهَا تَقُولُ : عَملْتَ كَذَا وكَذَا في يَومِ كَذَا وكَذَا فَهذِهِ أخْبَارُهَا )) رواه الترمذي وَقالَ : (( حديث حسن صحيح ))

ஹதீஸ் எண் : 408
அன்றைய தினம் இந்த பூமி தன் செய்திகளை அறிவிக்கும் என்ற (99:4) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். “பூமியின் செய்திகள் எவையென நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தன் மீது இருந்து செய்த செயல்களை பூமி கூறுவதுதான் அதன் செய்திகள்! இன்னின்ன காரியத்தை இன்னின்ன நாளில் செய்தான் என அது கூறும். இதுதான் அதன் செய்திகள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ (2353)
குறிப்பு : இந்த செய்தியில் யஹ்யா பின் அபீ சுலைமான் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

409- وعن أَبي سعيد الخدري رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( كَيْفَ أنْعَمُ ! وَصَاحِبُ القَرْنِ قَدِ التَقَمَ القَرْنَ وَاسْتَمَعَ الإذْنَ مَتَى يُؤمَرُ بالنَّفْخِ فَيَنْفُخُ )) فَكَأنَّ ذلِكَ ثَقُلَ عَلَى أصْحَابِ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَقَالَ لَهُمْ : (( قُولُوا : حَسْبُنَا الله وَنِعْمَ الوَكِيلُ )) رواه الترمذي وَقالَ : (( حديث حسنٌ ))
(( القَرْنُ )) : هُوَ الصُّورُ الَّذِي قَالَ الله تَعَالَى : وَنُفِخَ في الصُّورِ كذا فسَّره رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم.

ஹதீஸ் எண் : 409
ஸுர் ஊதுபவர் கொம்பைத் தம் வாயில்வைத்திருக்கும்போது, ஊதுமாறு கட்டளையிடப்படுவதை எதிர்பார்த்து கட்டளையிடப்படப்பட்டதும் ஊதத் தயாராக இருக்கும்போது நான் எவ்வாறு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்று நபி(ஸல்) கூறினார்கள். இது நபித்தோழர்களுக்கு கடுமையான விஷயமாகத் தெரிந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் (அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன், அவனே சிறந்த பாதுகாவலன்) “ எனக்கூறுங்கள் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : திர்மிதீ (2355)

410- وعن أَبي هريرة رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( مَنْ خَافَ أدْلَجَ وَمَنْ أدْلَجَ بَلَغَ المَنْزِلَ. ألا إنَّ سِلْعَةَ اللهِ غَالِيَةٌ ألاَ إنَّ سِلْعَةَ الله الجَنَّةُ )) رواه الترمذي وَقالَ : (( حديث حسن ))
وَ(( أدْلَجَ )) : بإسكان الدال ومعناه سار من أول الليلِ. والمراد التشمير في الطاعة والله أعلم.

ஹதீஸ் எண் : 410
பயணம் செய்யும்) யாரேனும் (கொள்ளையர்களைப்பற்றி) அஞ்சினால் முன்னிரவிலேயே பயணத்தை மேற்கொள்வான். யார் முன்னிரவில் பயணம் செய்கிறாரோ அவர் இலக்கை அடைகிறார். அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பொருள் உயர் மதிப்புள்ளதாகும். அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பொருள் சொர்க்கமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியனார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ (2374)
குறிப்பு : அபூஃபர்வா யஸீத் பின் ஸினான் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

411- وعن عائشة رضي الله عنها قَالَتْ : سَمِعْتُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : (( يُحْشَرُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلاً )) قُلْتُ : يَا رَسُول الله الرِّجَالُ وَالنِّساءُ جَمِيعاً يَنْظُرُ بَعضُهُمْ إِلَى بَعْض ؟! قَالَ : (( يَا عائِشَةُ الأمرُ أشَدُّ مِنْ أنْ يُهِمَّهُمْ ذلِكَ ))

ஹதீஸ் எண் : 411
“நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே நான் “அல்லாஹ்வின் தூதரே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’’ என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்‘’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : புகாரி (6527), முஸ்லிம் (5491)

وفي رواية : (( الأَمْرُ أهمُّ مِنْ أنْ يَنْظُرَ بَعضُهُمْ إِلَى بَعض )) مُتَّفَقٌ عَلَيهِ.(( غُرلاً )) بِضَمِّ الغَينِ المعجمة أيْ : غَيرَ مَختُونينَ

(முஸ்லிமின் 5491) அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :
“சிலர் வேறு சிலரைப் பார்க்கும் எண்ணம் ஏற்படாத அளவுக்கு (அப்போதைய) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்‘’