64:3952 (நபிகளார் காலத்துப்)போர்கள்


3952. 
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
நான் மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் அவைக்குச் சென்றேன். நான் அவர்களின் அவையில் (பங்கெடுத்த, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான(மற்ற அனைத்)தை விடவும் எனக்கு விருப்பானதாயிருக்கும். 
(மிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி – அவர்கள் என்னிடம் கூறினார்கள்:) 
நான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், ‘(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், ‘நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்’ என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்’ என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது. 
Book :64