ஏகத்துவம் – செப்டம்பர் 2011

தலையங்கம்

அல்லலூயாவின் அர்த்தம் என்ன?

இன்று உலகில் சுமார் 120 கோடி கிறித்தவர்கள் பைபிளை வேதமாக நம்பி அதன்படிச் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் நம்புகின்ற அந்த வேதம், இன்றைய நிலையில் அது உண்மையான இறை வேதமா என்று அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

ஒரு நூலை வேதம் என்று நம்ப வேண்டுமென்றால், அது இறை வாக்கு என்று ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் அவ்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதக் கூடாது; முரண்படக்கூடாது. இது தான் வேதத்தின் முழு முதல் இலக்கணம். அது கடவுளின் வார்த்தை என்பதற்கான அடிப்படை விதி.

இந்த இலக்கணம் அடிபட்டுப் போனால் அது மனித மூளையில் உற்பத்தியான மலிவுச் சரக்கு, மனித அறிவு பிரசவித்த ஓர் அற்பக் கருத்து என்பது உறுதியாகி விடும்.

இந்த அடிப்படை விதிக்கும் வேதியியல் பரிசோதனைக்கும் பைபிள் உள்ளாக்கப்படும் போது அது மனிதச் சொற்கள் அதிகமதிகம் கலந்த ஒரு கலப்படம்; மனிதக் கற்பனைகளின் சங்கமம்; உண்மையை விடப் பொய்கள் மிகைத்து நிற்கும் ஒரு சாதாரண புத்தகம் என்பது மிகத் தெளிவாகப் புலப்படும்.

இன்று உலகில் எந்த ஒரு வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் உடையாமல், ஒரு சிறு காயம் கூடத் தன் மேனியில் படாமல் சிலிர்த்துக் கொண்டு வருவது திருக்குர்ஆன் மட்டுமே! அறிவியல் உலகின் சிந்தனை சக்திக்கு ஒரு சிம்ம சொப்பனமாக, சந்திக்க முடியாத சவாலாக, சாகசமாகத் திகழ்ந்து கொண்டிருப்பது அல்குர்ஆன் எனும் அற்புதம் தான்.

இறை வார்த்தைகளைத் தன்னோடு கொண்டிருக்கும் தனித்தன்மையின் காரணத்தால் தான் அது உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

அபார அறிவியல் புரட்சியின் சிகரத்தில் இருக்கும் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் கூட இந்த அறைகூவலை ஏற்பவர், எதிர் கொள்பவர் எவருமில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இத்தகைய தூய வேதம், தனக்கு முந்தைய வேதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று சான்று கூறும் அதே வேளையில் அவற்றில் கலந்து விட்ட கலப்படத்தை, கற்பனையை, கறையை அடையாளம் காட்டி அம்பலப்படுத்துகின்றது.

என்ன தான் ஒரு வேதம் சின்னாபின்னமாக்கப்பட்டாலும், சிதைக்கப்பட்டாலும் அந்த உண்மை வேதம் உருத் தெரியாமல் ஆக்கப்பட்டாலும் அதில் ஒரு சில உண்மைகள் ஒட்டிக் கொண்டிருக்கத் தான் செய்கின்றன. அவ்வேதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று உரைக்கின்ற தடயங்கள், சான்றுகள் உடைக்கப்படாமல் ஒழிக்கப்படாமல் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இன்று கிறித்தவர்கள் தங்கள் திருச்சபைகளிலும் தெருச் சபைகளிலும் உரத்தக் குரல்களில் ஒலி பெருக்கிகளில் ஆர்ப்பரிக்கின்ற “அல்லலூயா” என்ற முழக்கமாகும். இதனுடைய அர்த்தம் என்ன? அதைக் காண்பதற்கு இந்த ஏகத்துவத்தின் பயணம் தொடர்கின்றது.

கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அஹ்மத் தீதாத் அவர்கள் செய்த ஆய்வு, “அவனது பெயர் என்ன?” – What is his name? என்ற தலைப்பில் வெளியானது. அதன் தமிழாக்கத்தைத் தான் இந்த ஏகத்துவ இதழில் நீங்கள் நுகர்கின்றீர்கள்.

இதன் இறுதியில் அல்லலூயா என்பதன் பொருளைச் சுவைக்கின்ற போது, அல்லாஹ்வின் வேதமாக இருந்த பைபிள் சிதைக்கப்பட்டுள்ளது என்பதை மெய்ப்படுத்தி சத்தியக் குர்ஆன் கூறுகின்ற சான்றாண்மையையும் சேர்த்தே பார்க்கலாம். அதிலும் திருக்குர்ஆன் இறங்கிய அருள்மிகு ரமளான் மாதத்தில் இதைப் பார்ப்பது மிகவும் சாலப் பொருத்தமான ஒன்று!

அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தன் ஆயுள் முழுவதும் கிறித்தவத்தை மட்டுமே குறியாகக் கொண்டு விவாதம் மற்றும் எழுத்து ரீதியான ஆயுதங்கள் தாங்கி இறுதி வரை அதை எதிர்த்துப் போரிட்டவர். அதன் காரணமாக அவர்களது ஆய்வுகள் அனைத்துமே கிறித்தவத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன. அதற்காக அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! அவரது ஆய்வு அந்தத் திசையை நோக்கி மட்டும் சென்றதற்கு மற்றொரு காரணம், அவர் வாழ்ந்த தென்னாப்பிரிக்கப் பகுதி, சூழல் அனைத்தும் கிறித்தவ வயமாக இருந்தது தான்.

கிறித்தவ அழைப்பாளர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஓர் அவதூறு யுத்தத்தையே துவக்கியிருந்தனர். எனவே அவர்களின் ஆதிக்கம் அஹ்மத் தீதாதின் முழுக் கவனத்தையும் ஈர்த்தது. அவரது மொத்த உழைப்பையும் அது உறிஞ்சி விட்டது. அதனால் முஸ்லிம் சமூகத்திலேயே மலிந்து கிடக்கும் இணை வைப்பை நோக்கி அவரது கவனம் திரும்ப வாய்ப்பில்லை. அல்லது அவர் வாழ்ந்த அந்தப் பகுதியில் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழகத்திலுள்ள ஏகத்துவவாதிகள் இங்கு இணை வைப்பாளர்களை எதிர்த்துப் பல்வேறு களங்களைக் கண்டிருக்கின்றனர். இங்குள்ள அறிஞர்கள் அந்த ஆய்வில் ஒரு கரையும் கண்டிருக்கிறார்கள். எனவே இணை வைப்பு தொடர்பாக அஹ்மத் தீதாதின் ஆய்வு ஏகத்துவவாதிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாமல் இருக்கலாம். அதே நேரத்தில் அவரது துறை கிறித்தவத்திற்கு எதிரானது மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவரது ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவை நமது சிந்தனைக்குச் சற்று அந்நியமாகத் தெரிந்தால் அது மனித அறிவுக்குட்பட்டது என்று பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது ஆய்வுகள், கொள்கைகள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டுக்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் தான் இதை ஒரு மொழி பெயர்ப்பாக அல்லாமல், இயன்ற வரை ஜமாஅத்தின் தூய கடவுள் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராக உள்ளவற்றைத் தணிக்கை செய்து, இந்நூலை ஒரு கருத்தாக்கத் தழுவலாக அளித்திருக்கிறோம்.

காரணம், கிறித்தவத்திற்கு எதிராக மாபெரும் போர்க்கொடி தூக்கி புரட்சி செய்த அவர் மீலாத் விழாவை ஆதரிக்கின்றார். இது குறித்து அவரிடம் ஒரு சகோதரர் கேள்வி எழுப்பும் போது, மில்லியன் கணக்கான மக்கள் மீலாது கொண்டாடுகின்றனர் என்று காரணம் கூறுகின்றார். இதே காரணம் கிறித்தவத்திற்கும் பொருந்துமல்லவா? “இயேசு கிறிஸ்துவை ஏன் வணங்குகிறீர்கள்?’ என்று கிறித்தவர்களிடம் கேட்டால் அவர்கள் இதே பதிலைத் தான் கூறுகிறார்கள். இதை அஹ்மத் தீதாத் ஏற்றுக் கொள்வாரா?

இந்த அளவுக்குத் தான் பித்அத்துக்கள் விஷயத்தில் அஹ்மத் தீதாத் அவர்களின் நிலைப்பாடு அமைந்துள்ளது என்பதை இங்கே வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

எனினும் நாம் இந்த ஆய்வின் கருத்தாக்கத்தை இங்கு தருவதற்குக் காரணம், ஒரு ஏகத்துவவாதி கிறித்துவத்தைப் பற்றி எதையும் அறியாமல் இருக்கக் கூடாது. அவர்கள் எடுத்து வைக்கும் வாதத்திற்குப் பதில் சொல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அஹ்மத் தீதாத் அவர்களின் ஆய்வை எடுத்துக் கொள்வோமாக!

—————————————————————————————————————————————————————-

அவன் பெயர் என்ன?

அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளனஎன்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

அல்குர்ஆன் 17:110

பொதுக் கடவுள் கொள்கை

அஹ்மத் தீதாத் கூறுகின்றார்:

முஹம்மத் (ஸல்) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இயற்கையான அடுத்த வாரிசு என்ற தலைப்பின் கீழ் நான் ஆற்றிய உரைக்குப் பின்னால் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது ஒரு கிறித்தவப் பிரச்சாரகர் என்னிடம் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.

அவனது பெயர் என்ன? என்பது தான் அவரது கேள்வி.

பதிலளிப்பதற்காக எழுந்தேன். நான் வாயைத் திறப்பதற்கு முன் அவர் கேள்வி கேட்பதற்காக வைக்கப்பட்டிருந்த மைக்கின் முன் வந்து, தானே பதிலளிப்பதாகக் கூறினார்.

“கேள்வி கேட்டது நீங்கள்; பதிலளிப்பது என் கடமை தானே” என்று சொன்னேன்.

“அது சரி தான். எனினும் இந்தக் கேள்விக்கு நானே பதிலளிக்கிறேன்” என்று சொன்னார். அவையில் சிரிப்பலை எழுந்தது.

உண்மையில் அவர் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். ஒரு பெரும் கூட்டம் உள்ள இந்த சபையில் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு இனி எங்கே கிடைக்கப் போகின்றது? அதுவும் முஸ்லிம்களுடைய செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரும் கூட்டம்.

தொடருங்கள் என்றேன். ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, கடவுளின் பெயர் இயேசு கிறிஸ்து என்று கூறி முடித்தார்.

இயேசு கடவுள் தானா? என்று அந்தக் கூட்டத்திலேயே விவாதிப்பதற்கு அது உரிய தருணமில்லை. இந்த இடத்தில் அதை அலசுவது உகந்ததும் அல்ல.

இப்போதைக்கு மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் (ஸல்) ஆகியோரது வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அந்த ஆற்றல் மிகக் கடவுளின் பெயர் அல்லாஹ் என்பது தான். இதற்கான ஆதாரம் பின்னர் தரப்படும்.

கடவுள் மீதுள்ள நம்பிக்கை, மனிதனின் இயற்கை குணத்துடன் ஒன்றியது; இரண்டறக் கலந்தது. அவனிடமிருந்து அந்த நம்பிக்கை ஒரு போதும் பிரியாது. மனிதன் இந்தப் புவியில் இருக்கும் வரை எல்லாம் வல்ல இறைவனின் ஞானமும் அவன் கூடவே இருந்து கொண்டு தான் இருக்கும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 35:24

இவரது இறைவனிடமிருந்து இவருக்கு ஏதேனும் சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழி காட்டி உண்டு.

அல்குர்ஆன் 13:7

பகுதிக் கடவுள் இல்லை

தூய காற்று, மழை, சூரிய ஒளி போன்ற மனித வாழ்வுக்கு அத்தியாவசியமான பொருள் வளங்களில் பாரபட்சம், பாகுபாடு காட்டாத வல்ல இறைவன், ஆன்மீக அருள் வளங்களில் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் அவன் பகுதிக் கடவுள் இல்லை. ஏதாவது ஒரு பெயரில் கடவுளை அறியாத எந்த ஒரு இனமும், சமுதாயமும் இப்பூமியில் இல்லை என்று தெளிவாகக் கூறலாம்.

படைத்த இறைவனே இந்த அறிவை, தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களின் வாயிலாக மக்களுக்கு வழங்கினான்.

நாம் தெரிந்து வைத்திருப்பது மிகக் குறைவான தூதர்களின் பெயர்களைத் தான். மற்ற பெயர்கள் தொலைந்து போயிருக்கின்றன, அல்லது ஆதாரமற்ற செய்திகளில் அமிழ்ந்து கிடக்கின்றன. கடவுளைப் பற்றிய அறிவு கடவுளிடமிருந்து வந்தாலும் மனித இனம் அந்தத் தூய, புனிதக் கடவுள் கொள்கையில் கவனமற்ற முறையில் கண்மூடித்தனமாக விளையாட ஆரம்பித்தது. அதனால் அவற்றில் கவர்ச்சிகரமான, அலங்காரக் கருத்துக்கள் கலந்து விட்டன.

“வேதத்தின் வரிகளை எளிதாக்குகிறோம் என்று கருதிக் கொண்டு, கற்றவர்கள் சில கட்டங்களில் அதன் வார்த்தைகளை மாற்றி விடுகின்றார்கள். ஆனால் உண்மையில் எளிதான வார்த்தைகளை இவர்கள் குழப்பி விடுகின்றனர்” என்று செவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கிறித்தவ இயக்கத்தின் பெண் தீர்க்கதரிசி எலன் ஜி ஒயிட் கூறுகின்றார்.

இவர்களின் இந்தக் கைவரிசை அந்த வேதம் கூற வந்த கருத்தையே குலைத்து விட்டது.

உலகத்தின் மத வரலாறுகளில் புனித பைபிள் என்று அழைக்கப்படுகின்ற யூத, கிறித்தவ வேதங்கள், கடவுளை மனிதத் தன்மையில் சித்தரிக்கும் அதிகமான உதாரணங்களைக் கொண்டிருக்கின்றன.

உலை வைக்கும் வர்ணனைகள்

கீழே இடம் பெறுகின்ற இந்த பைபிள் வசனங்கள், கடவுள் தன்மைக்கு ஊறு விளைவிக்கின்ற, உலை வைக்கின்ற வர்ணனைகள் ஆகும். கடவுளை மனிதனாகச் சித்தரிக்கின்ற வசனங்களாகும்.

மனிதன் போன்ற கடவுள்

மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.

ஆதியாகமம் 11:5

பின்பக்கத்தைப் பார்க்கும் மூஸா

பின்பு, “நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார்.

விடுதலைப் பயணம் 33:23

யாக்கோபுடன் குத்துச் சண்டை

அவர்; “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, “இஸ்ரயேல்” எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார்.

ஆதியாகமம் 32:28

குடிகாரனைப் போல..

அப்பொழுது, உறக்கத்தினின்று எழுவோரைப்போல், திராட்சை மதுவால் களிப்புறும் வீரரைப்போல் எம் தலைவர் விழித்தெழுந்தார்.

திருப்பாடல்கள் 78:65

கவலைப்படும் கடவுள்?

மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.

ஆதியாகமம் 6:6

வாசனையை முகரும் கடவுள்?

ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்”

ஆதியாகமம் 8:21

மடங்கிப் படுத்த சிங்கம்?

அவன் துயில் கொண்டான்; சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்; அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்; எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!

எண்ணாகமம் 24:9

பற்றி எரியும் நெருப்பு

மலை உச்சியில் ஆண்டவரது மாட்சியின் காட்சி, பற்றியெரியும் நெருப்புப்போன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது.

விடுதலைப் பயணம் 24:17

கடவுளை மனித நிலைக்குத் தரம் தாழ்த்துகின்ற மலிவான, மட்ட ரகமான வசனங்கள் 73 அத்தியாயங்களைக் கொண்ட ரோமர் கத்தோலிக்க கலைக் களஞ்சிய பைபிளிலும், 66 அத்தியாயங்களைக் கொண்ட புராட்டஸ்டண்ட் கலைக் களஞ்சிய பைபிளிலும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு கடவுளை மனித நிலைக்கு இறக்குகின்ற வர்ணனைகளை பைபிளிலிருந்து காட்ட வேண்டுமென்றால் அதற்கென தனியாக ஒரு நூல் வெளியிட வேண்டும். ஆனால் மேலே குறிப்பிட்ட அந்த உதாரணங்களே இந்தத் தலைப்புக்குப் போதும்.

ஆன்மீக சாம்ராஜ்யத்தில் இஸ்ரவேலர்களைப் போன்று திருந்துவதற்குரிய வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் வழங்கப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இது தொடர்பாக திரும்பத் திரும்ப எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தங்கத்தினால் செய்யப்பட்ட மாட்டை வணங்கினார்கள். மீண்டும் சிலை வணக்கத்தின் பக்கம் திரும்பினார்கள்.

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.

என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.

விடுதலைப் பயணம் 20:2-5

இதுபோல் கிறித்தவ சமுதாயத்தின் பெரும் பகுதியினர் இந்த இணை வைப்பு எனும் களங்கத்திலிருந்து விடுபடவில்லை. லண்டனிலுள்ள செயின்ட் பால் தேவாலயத்திற்கும், ரோமிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்திற்கும் சென்று பாருங்கள். அதற்கும் இந்தியாவிலுள்ள சோம்நாத் கோயிலுக்கும் எந்த வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் காண முடியாது.

—————————————————————————————————————————————————————-

கொள்கை, கோட்பாடுகள்

உலகத்தின் மதம் தொடர்பான சொல்லியலில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய பாணியில், அவனுக்கே உரிய சொல் வழக்கில் வானம், பூமியின் ரட்சகனைக் குறிப்பதற்காக அழகிய பெயர்களை வழங்கியிருக்கிறார்கள்.

ஜுலு இனத்தின் கடவுள் கொள்கை

தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற ஜுலு இன மக்கள் உடல் வலிமை மிக்கவர்கள்; போர்க் குணம் கொண்டவர்கள்; அறியாமைக் காலத்திலும் அல்லாஹ்வைத் தெரிந்து வைத்திருந்த குறைஷி சமுதாயத்தைப் போன்றவர்கள். அவர்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு UMVELINQANGI என்ற பெயரை வழங்கியிருக்கிறார்கள். இந்த வார்த்தை அதனுடைய சரியான பொருளில் உச்சரிக்கப்படும் போது “அல்லாஹ் செல்வந்தன்’ என்ற அர்த்தத்தைக் கொண்ட “வல்லாஹு கனி’ என்ற அரபி வார்த்தையை ஒத்திருக்கின்றது.

வட அமெரிக்காவில் அல்கனி (Allegany) என்ற செவ்விந்தியர்கள் உள்ளனர். அந்த வார்த்தைக்கும் இது ஒத்திருக்கின்றது. (Allegany)  அல்கனி என்ற வார்த்தையின் மூலச் சொல் பொதுவாக அமெரிக்கர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஜுலு இனத்தைச் சார்ந்த ஒருவரிடம் UMVELINQANGI யார் என்று கேட்டுப் பாருங்கள். அவர் தெளிவாக தனது மொழியில், “அவன் தூய்மையானவன்; புனித ஆன்மா; அவன் பெறவுமில்லை; பெறப்படவுமில்லை. மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை” என்று குறிப்பிடுவார்.

இஸ்லாமியக் கொள்கை

இதை அப்படியே அல்குர்ஆன் 114வது அத்தியாயத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசத்தைக் காண முடியாது. தென் ஆப்பிரிக்காவில் ஸம்பாஸி ஆற்றுக்குத் தெற்கே உள்ள ஒவ்வொரு இனமும் இறைவனுக்குப் பல்வேறு பெயர்களைக் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, TIXO, MODIMO, UNKULUNKU ஆகிய பெயர்களைக் குறிப்பிடலாம். இந்த வார்த்தைகளுக்கு ஆப்பிரிக்க மொழியைச் சார்ந்த எவரும் ஜுலு இனத்தினர் கூறும் அதே தூய கடவுள் பண்புகளைத் தான் கூறி விளக்குவர்.

இவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களை அவர்களால் பட்டியல் போட முடியாது. காரணம் அவர்களது மொழியில் எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் இல்லை. வெள்ளையர்கள் வருகின்ற வரை அந்த இனத்தவர்களில் ஒருவர் கூட சிலைகள் அல்லது மனித, விலங்குகளின் உருவப் படங்களைப் பார்த்து ஒருபோதும் குனிந்தது கிடையாது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தங்களது கிறித்தவ மதத்தை அங்கு அறிமுகப்படுத்தினர்.

தந்தை, மகன், புனித ஆவி என்று கடவுளுக்கு மனிதத் தன்மையைக் கற்பிக்கின்ற கடவுள் கொள்கையையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இதன் காரணமாக அவர்களை இயேசு, மேரி, செயின்ட் ஜோசப், செயின்ட் கிறிஸ்டோபர் இன்னும் மற்றவர்களின் சிலைகளுக்கு முன்னால் வணங்கும்படி செய்தனர்.

உலகத்தில் வாழ்கின்ற பல்வேறு ஆப்பிரிக்க இனத்தவர்களில் எவரும் தங்களுடைய கடவுள் உருவத்தை வரைந்ததே இல்லை. இதனால் அவர்களுக்கு இந்தக் கலை தெரியாது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

மரத்திலிருந்து யானை, சிங்கம் போன்றவற்றைப் படைக்கின்ற, களி மண்ணிலிருந்து ஆண் பெண் சிலைகளை வடிக்கின்ற கலை வண்ணமும் கலை நுணுக்கமும் நன்கு தெரிந்தவர்கள். உலோகத்திலிருந்து வடிவமைக்கும் உலோகத் தொழிற்கலையும் ஓரளவு அவர்கள் தெரிந்திருக்கிறார்கள்.

நீங்கள் ஏன் உங்களுடைய கடவுளர்களின் சிலைகளைச் செய்வதில்லை? உருவமாக வடிப்பதில்லை என்று ஒரு வயது முதிர்ந்த ஜுலுவிடம் வினவிய போது அவர் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “அவன் (கடவுள்) ஒரு மனிதனைப் போன்றவனல்லன். அவன் ஒரு குரங்கைப் போன்று அல்லது ஒரு பாம்பைப் போன்றவனல்லன். அவன், நாம் கற்பனை செய்கின்ற அல்லது சிந்திக்கின்ற எந்த உருவத்தையும் தோற்றத்தையும் போன்றவனல்லன். அவன் தூயவன்; ஒரு புனித ஆத்மா! இத்தகைய பண்பைக் கொண்ட அவனை எப்படி வடிவமைக்க முடியும்?” என்று பதிலளித்தார்.

உலகில் வாழும் மக்கள் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு ஒவ்வொரு பெயரைக் கொடுத்திருந்தாலும் நம்மை மிக அதிகமாகத் திகைக்க வைத்த, திக்குமுக்காடச் செய்த பெயர் ATNATU என்ற பெயர் தான். இந்த வெளியீட்டிற்கு What is his name? என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக ATNATU என்றே தலைப்பிடலாம்.

அப்படியென்ன ATNATU என்ற பெயரில் ஒரு வினோதம்? புதுமை?

தென் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமகன் தன்னுடைய கடவுளை ATNATU என்று அழைக்கிறான். இதற்குக் காரணம் என்ன?

வானத்தில் உள்ள தந்தை (இறைவன்), முழுமையாக, முற்றிலும் அனைத்துத் தேவைகளை விட்டும் நீங்கியவன்; அனைத்துத் தேவைகளை விட்டும் தூய்மையானவன்; அவன் தனித்தவன்; அவன் உணவு அல்லது குடிநீர் சாப்பிட மாட்டான்.

இவ்வாறு அவனுக்கு ஓர் இறைத் தூதர் பாடம் படித்துக் கொடுத்திருக்கலாம்; போதித்திருக்கலாம்.

தன்னுடைய முற்றிலும் பழமை வாய்ந்த, தங்கு தடையற்ற மொழியில் இந்தத் தூய தன்மைகளைக் குறிப்பதற்கு ஒரு வார்த்தையைத் தேர்வு செய்கிறான். அது தான் ATNATU.

Anus ஏனஸ் (மலக் கழிவு வாய்) இல்லாதவன்; அசுத்தம் ஏற்படாதவன்; மாசு, தவறு இல்லாதவன்.

இந்தப் புதுக் கருத்தை இந்து, முஸ்லிம், கிறித்தவ நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்களது உடனடியான எதிர் விளைவு (இது ஒரு முட்டாள்தனமான கருத்து என்பது போல்) மகிழ்ச்சியுடன் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். பாவம்! பரிகாசத்திற்குரியவர்கள் அவர்கள் தான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

Anus (மல வாய்) என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சிறிய வார்த்தையாக இருந்தாலும் அதிகமான மக்கள் அதைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்குப் பகரமாக பேச்சு நடையில் உள்ள ஒரு வார்த்தையைப் பயன்படுத்த எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் மக்களின் அதிகப்பட்ச தவறான உணர் திறன் தான்.

அப்துல்லாஹ் யூசுப் அலீ அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், “ஒரு கட்டத்தில் அழகாயிருந்த தங்களது மொழியை வெறும் கவர்ச்சி மிகு பிதற்றலாகவும் அர்த்தமற்ற உளறலாகவும் மாற்றி விட்டனர்” என்று தான் குறிப்பிட வேண்டும்.

எனவே இந்தச் சொல் பிரயோகத்தின் மூலம் ஏற்படும் பிரச்சனையைத் தவிர்க்க, பதட்டத்தைத் தணிக்க சுற்றி வளைத்து ஒய்ல்ன்ற் (உள்ளிடுகை), ஞன்ற்ல்ன்ற் (வெளியிடுகை) என்று ஒரு நாகரீக வார்த்தையில் குறிப்பிடலாம்.

உணவு உட்கொண்ட ஒருவர் கண்டிப்பாக தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றியாக வேண்டும்; கழிவறைக்குச் சென்றே தீர வேண்டும். மனிதனின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து தான் பழங்கால நண்பன் (தென் ஆஸ்திரேலிய குடிமகன்) இந்த குறைத் தன்மையை இறைவனுக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து ATNATU அதாவது மலம் கழிக்கும் தன்மை இல்லாத நாயன் என்று அழைக்கிறான்.

உண்ணாத உன்னதக் கடவுள்

பூர்வீக மனிதனின் கடவுள் பற்றிய இந்தப் புதுமைக் கொள்கை உண்மையில் புதுமையில்லை. இந்த உண்மையை இறைவன் தன்னுடைய இறுதி வேதமான புனிதக் குர்ஆனில் மனித குலத்திற்குத் தெரிவிக்கின்றான். தனித் தகுதியுள்ள, தன்னிகரில்லாத அந்த ஆசிரியனின் தகுதிக்கேற்ப அதை உயர்தர நடையில் தெளிவுபடுத்துகின்றான்.

அதன் அழகு, நயம் காரணமாக அதை ரசிப்பதுடன் மட்டும் நின்று விட்டு அதனுடைய செய்தியின் ஆழத்தை ஏனோ நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம்.

உண்மையான அந்த ஓர் இறைவனை வணங்குவதை விட்டும் மறக்கடிக்கச் செய்ய முயல்வோருக்கு எதிராகத் திருக்குர்ஆன் நம்மை முழங்கச் சொல்கிறது.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லைஎன்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூôது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்எனவும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:14

ஆம்! வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் பொறுப்பாளனாக ஆக்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துமாறு நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.

யாருக்கேனும் மனிதக் கடவுள்கள் விஷயத்தில் நம்பிக்கை இருக்குமானால் அவர்களைக் கூட்டி வாருங்கள். சோதித்துப் பார்ப்போம். எங்கள் கடவுள் உணவளிப்பவன்; பிறரால் உணவளிக்கப்படுபவன் அல்லன். அவன் உணவு சாப்பிடுகின்ற தேவையில் இல்லை. உங்களுடைய மனிதக் கடவுள்கள் சாப்பிடுகிறார்களா? இல்லையா? அப்படிச் சாப்பிட்டால் அவர் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். எங்களுடைய கடவுளுக்கு அந்த அவசியம் இல்லை. காரணம் எங்கள் கடவுள் சாப்பிட மாட்டான்.

எவ்வளவு அழகிய, எளிய வாதம். ஆனால் அதே சமயம் திகைக்க வைக்கின்ற வாதம். வேதனைக்குரிய விஷயம்! நாம் பெற்றிருக்கின்ற இந்த ஆயுதத்தின் வலிமையை நமக்கு தென் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள் நினைவுபடுத்த வேண்டிய பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறோம்.

பிரச்சாரக் கலையை, அழைப்புப் பணியின் திறமையை நாம் முற்றிலும் இழந்து விட்டோம். காரணம், பல நூற்றாண்டுகளாக நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதையே நிறுத்தி விட்டோம்.

கிறித்தவர்கள் நம்முடைய வாசல் கதவுகளை வரிசையாக வந்து தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகக் குருட்டுத்தனத்தால் நம்மிடையே உள்ள எதிரிகளை எதிர் கொள்வதற்குப் பயப்படுகின்ற பயந்தாங்கொள்ளிகளை அந்தக் கிறித்தவர்களிடம் பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்னால் குவைத்தில் ஒரேயொரு கிறித்தவக் குடும்பம் தான் இருந்தது. இன்றைய தினம் அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் 35 கிறித்தவ தேவாலயங்கள் உருவாகி விட்டன.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் உருவான “யேஹோவா சாட்சிகள்’ என்றழைக்கப்படுகின்ற ஒரு கிறித்தவ அமைப்பினர், அமெரிக்காவுக்கு வெளியே இரண்டாவது பெரிய சமுதாயமாக வாழ்கின்ற நாடு நைஜீரியா எனும் முஸ்லிம்களின் நாடு தான் என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்.

உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற நாடான இந்தோனேஷியாவில் மட்டும் 6,000 முழுநேர கிறித்தவப் பிரச்சாரகர்கள் இருக்கின்றனர். அவர்கள் தத்தமது தேவாலயங்களுக்குக் கீழ் இயங்கும் பாதிரியார்கள் கிடையாது. மாறாக, கிறித்தவர் அல்லாதவர்களை, அதாவது Heathen ஹீதன் என்று அழைக்கப்படுபவர்களை சதாவும் தொந்தரவு செய்கின்ற, அவர்களுடன் புனிதப் போர் தொடுக்கின்ற போராளிகள்.

இந்தோனேஷியா அரசாங்கத்திடம் இருப்பதை விட இவர்களிடம் அதிகமான தனியார் விமானத் தளங்கள் உள்ளன. இவர்களிடம் பிரச்சாரக் கப்பல்கள் உள்ளன. இந்தோனேஷியா இண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு. அந்த நாட்டில் கப்பல்களை நிறுத்துவதற்குத் துறைமுகங்கள் ஏதுமில்லை என்பதால் இந்தப் பிரச்சாரக் கப்பல்கள் எந்தத் தீவில் வேண்டுமானாலும் நங்கூரம் பாய்ச்சி நிற்கின்ற வசதியைப் பெற்றிருக்கின்றன.

கப்பல்களை அந்தத் தீவுகளில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு அங்குள்ள மக்களை கப்பலில் வந்து உணவு சாப்பிடுவதற்கும் உல்லாசம் அனுபவிப்பதற்கும் அழைக்கின்றார்கள். அங்கே தங்களின் இஸ்லாத்திற்கு எதிரான நிந்தனைப் பிரச்சாரத்தையும் இகழாரத்தையும் ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுடைய கள்ளப் பிரச்சாரத்தை, கள்ளங்கபடமற்ற மக்களின் மூளையில் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களது இந்த அதிரடி நடவடிக்கைக்கு Operation Overkill “உச்சக்கட்ட ஒழிப்பு’ அல்லது “அதிகப்பட்ச அழிப்பு’ என்று ரகசியப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக இந்தோனேஷியாவை ஒரு கிறித்தவ நாடாக மாற்றி விட வேண்டும் என்பது அவர்களின் குறியிலக்கு!

உலகம் முழுவதும் புழுதி பரப்புகின்ற அறுபதாயிரம் போராளிகளில் பாதிக்கும் அதிகமானோர் ஆப்பிரிக்காவில் தான் மையம் கொண்டிருக்கின்றனர். ஆப்பிரிக்கா இன்று முஸ்லிம் கண்டம். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக அதைக் கிறித்தவக் கண்டமாக மாற்றுவதற்காக இந்தப் போராளிகள் போர் விமானங்களிலும் போர்க் கப்பல்களிலும் வந்திறங்கி புனிதத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நம்பிக்கை என்ற போரில் நம்முடைய வாளும் கேடயமும் என்ன? அவை அல்குர்ஆனில் தான் இருக்கின்றன. நன்மைகளை வேட்டையாடுவதற்கு மட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பயன்படுத்திய நாம், அந்த வசனங்களை இந்தப் போர்க்களத்திற்கும் கொண்டு வர வேண்டும்.

இயேசு உணவு உண்டாரா?

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

அல்குர்ஆன் 5:75

மர்யமின் மகனான இயேசு கிறிஸ்து கடவுளின் தூதர்களில் வலிமை மிக்க ஒரு தூதர் என்று இஸ்லாமிய மார்க்கம் ஒப்புக் கொள்கின்றது. எந்த ஓர் ஆடவரின் தொடர்பும் இன்றி ஓர் அற்புதமாக அவரை, அவரது தாயார் மர்யம் (அலை) பெற்றெடுத்தார்கள். அவர் தான் மஸீஹ். அல்லாஹ்வுடைய அனுமதியுடன் இறந்தவருக்கு அவர் உயிர் கொடுத்தார். அல்லாஹ்வின் அனுமதியுடன் குருடர்களைப் பார்க்கச் செய்தார். அல்லாஹ்வின் அனுமதியுடன் குஷ்டரோகிகளுக்குக் குணமளித்தார் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்கின்றது. ஆனால் அவர் உணவு உண்ணவில்லையா?

அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார்.

லூக்கா 24:42, 43

அத்துடன் இயேசுவின் தாயார் உண்மை பேசுகின்ற, பக்தி மிக்க தூய பெண் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர் உணவு உண்ணவில்லையா?

இதன் அர்த்தம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா? நமக்கு தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமகன் வந்து இது தொடர்பாக நினைவூட்ட வேண்டுமா? அவனது நினைவூட்டல் அவசியம் தேவை தான். இந்தப் போர்க்களத்தில் நம்முடைய உள்ளத்திற்கும் அறிவுக்கும் ATNATU என்ற ஆயுதம் நமக்குத் தேவைப்படுகின்றது.

அவனுடைய எளிய கிராமத்து மொழியில், அவனுடைய சிறு பிள்ளைத்தனமான குழந்தை மொழியில் தன்னுடைய கடவுள் உண்ண மாட்டான்; சாப்பாடு சாப்பிட மாட்டான் என்று தெரிவிக்கின்றான்.

உணவு சாப்பிடுபவன் கடவுளாக இருக்க முடியாது. காரணம் அவன் ATNATU இல்லை. இதைச் சொல்வதற்கு இந்தப் பூர்வீகக் குடிமகனுக்கு எந்தத் தடையும் தயக்கமும் இல்லை. உலக மக்களுக்கு அவன் எந்தவொரு ஒளிவு மறைவுமற்ற உண்மையைப் போட்டு உடைக்கின்றான்.

முஹம்மதியர்?

பெயர்களை இட்டுக் கட்டிப் புனைவதில் மேற்கத்தியவர்கள் கைதேர்ந்தவர்கள். அவன் ஒளி வீசுகின்ற மின் விளக்கைக் கண்டு பிடித்தவுடன் அதற்கு ஙஹக்ஷ்க்ஹ கஹம்ல்ள் – மஜ்டா விளக்கு என்று சொன்னான். பார்சி மதத்தவர்களின் ஒளிக் கடவுள் தான் மஜ்டா.

ஐரோப்பியர்கள், தென்னாப்பிரிக்காவில் செயற்கை வெண்ணைக்கு தஹம்ஹ ஙஹழ்ஞ்ஹழ்ண்ய்ங் என்று பெயரிட்டு அதன் விற்பனையில் பெரும் வெற்றி கண்டு விட்டான். இந்தியாவில் கணிசமான மக்கள் தொகையினர் ராமரை மனிதக் கடவுள் என்று கூறுகின்றனர்.

இந்த வெள்ளையன் தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறான். காரணம் அவன் கிறிஸ்துவை வணங்குவதால்! புத்தரை வணங்குபவர்களை புத்திஸ்ட் என்று குறிப்பிடுகிறான். இதே வாதத்தின் அடிப்படையில், முஸ்லிம்கள் முஹம்மது நபியை வணங்குகிறார்கள் என்று கருதிக் கொண்டு முஹம்மதியர் என்று அழைக்கின்றான். ஆனால் உலகில் வாழும் ஆயிரம் மில்லியன் முஸ்லிம்களில் ஒருவர் கூட முஹம்மதை வணங்குபவர் அல்ல என்பது தான் உண்மை.

முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கக்கூடிய முட்டாள் ஒருவன் இருக்கின்றான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அவனை வேண்டுமானால் முஹம்மதியன் என்று அழைக்கலாம். ஆர்வக் கோளாறில் முஹம்மதை வணங்கும் ஒரு முட்டாள், தெற்கு ஆஸ்திரேலியா பூர்வீகக் குடிமகனிடம் போய் தனது கடவுள் முஹம்மது என்று சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பூர்வீகக் குடிமகனின் பதில் என்னவாக இருக்கும்? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். குழந்தைத் தன்மையை ஒத்த அந்தப் பூர்வீக மக்கள் இந்த முஹம்மதியரிடம் கேட்கப் போகும் கேள்வி, முஹம்மது ATNATUவா? அதற்கு இந்த முட்டாளிடமிருந்து வரப் போகும் பதில், இல்லை என்பது தான்.

இது தான் உண்மை நிலை எனும் போது படித்த, பண்டித, நாகரீகமிக்க பல மில்லியன் மக்களால் வழிபாடு செய்யப்படுகின்ற கதாநாயகர், கதாநாயகிகளின் நிலைமை என்ன?

நீங்கள் கடவுளாக வழிபடுகின்ற ஆண், பெண் கடவுளர்களை, தேவர்களை, தேவிகளை இந்தப் பூர்வீகக் குடிமகனுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள். தங்களிடம் வருகின்ற கடவுளர்களிடம் ATNATU என்ற மட்டையால் அடித்து ஒரு சிக்ஸர் விளாசி விடுவான்.

உண்மையில் இந்தப் பூர்வீகக் குடிமகன், தன்னுடைய கடவுள் கொள்கையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் வாழ்கின்ற மில்லியன் கணக்கான மக்களின் கடவுள் கொள்கையை விட உயர்ந்து நிற்கவில்லையா?

பின்னடைவில் ஒரு முன்னேற்றம்

சந்திரனில் இறங்கி தடம் பதித்து, நடை பயில்கின்ற அமெரிக்கனையும் செயற்கைக் கோள்கள் போன்ற சாதனங்கள் வாயிலாக அங்குள்ள நிலப்பரப்பில் நடக்கும் நிகழ்வுகளை தன் வீட்டிலிருந்து கொண்டே கண்காணித்துக் கொண்டிருக்கும் அவனுடைய இனத்தாரையும் பாருங்கள். அருமையிலும் அருமை தான்.

வங்காள விரிகுடா துயரச் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். கடலில் நிகழவிருக்கின்ற சுனாமி அலைத் தாக்குதலைப் பற்றி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததை நினைத்துப் பாருங்கள். அரபுகள் விரைவில் உங்கள் நாட்டைத் தாக்கப் போகிறார்கள் என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரிக்கை செய்ததை எண்ணிப் பாருங்கள். 1973ல் ரமளானில் நடக்கவிருந்த போரைப் பற்றி அமெரிக்கா முற்கூட்டியே எச்சரித்ததை சிந்தித்துப் பாருங்கள்.

பல்வேறு சீர்கேடுகளைக் கொண்டிருந்தாலும் இந்த அமெரிக்கர்கள் ஒட்டு மொத்த அனைத்து மனிதக் கடவுள்களை விடவும் மாபெரும் அதிகாரம், ஆதிக்கம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இத்தகைய பலமான, வலிமையான இந்த அமெரிக்கர்களும், இவர்களுடைய ஐரோப்பா மற்றும் இதர நாடுகளின் கூட்டாளிகளும் மனிதனையும் குரங்கையும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை! அந்த ஷைத்தானை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 16:63

தனி நபர் வழிபாடு மனிதனுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் ஓர் உணர்வு. உண்மையான கடவுளை வணங்கவில்லையெனில் வேறு எதையாவது அவன் வணங்குவான். கண்டிப்பாக வணங்கியே தீருவான்.

கண்டதையும் வணங்குவதை விட தன் இனத்தைச் சார்ந்த அழகிய ஆண் அல்லது பெண்ணைக் கடவுளாக்கி வணங்குவது அவனுக்கு முன் சிறந்த வழிமுறையாகத் தெரிகின்றது. கடவுளுக்கு மனிதப் பண்பு அல்லது வடிவம் கற்பிக்கும் கொள்கை (Anthropomorphism) அதாவது தன்னுடைய விருப்பத்திற்குத் தக்கவாறு மனிதன் கடவுளைக் கற்பனை செய்கின்ற வழிமுறை மனித சமுதாயத்தில் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. இதில் நவீன காலம், பழைய காலம் என்ற வேறுபாடு இல்லை. தன்னைப் போலவே, தன்னுடைய உருவத்தைப் போன்றே மனிதன் கடவுளைப் பற்றிச் சிந்திக்கிறான்.

அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.

ஆதியாகமம் 1:26

மேலே நாம் மேற்கோள் காட்டியிருக்கும் பைபிளின் ஆரம்ப அத்தியாயத்தில் உள்ள வசனத்தில் இடம் பெறுகின்ற உருவம் மற்றும் நாம் என்ற வார்த்தைகளை பரிதாபத்திற்குரிய, இருளில் மூழ்கிக் கிடக்கின்ற கிறித்தவர்கள் தவறாக விளங்கிக் கொண்டனர்.

பிதா, மகன், புனித ஆவி ஆகிய மூவரும் ஒன்றாகச் சங்கமிப்பதால் தான் நாம் என்று வருகின்றது என்று ஒரு கிறித்தவர் விளக்கமளிக்கின்றார். அரபியிலும் ஹிப்ருவிலும் இரண்டு விதமான பன்மைகள் இருக்கின்றன என்பதை அவர் விளங்கத் தவறி விட்டார். ஒன்று, ஒருவருக்கு மேற்பட்டவரை (நாம் என்று குறிக்கும்) பன்மையாகும். மற்றொன்று, ஒருவரை மட்டுமே குறிக்கின்ற மரியாதைப் பன்மையாகும்.

“இவர்களுக்கு சான்றுகளை (நாம்) எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக” என்று திருக்குர்ஆன் 5:75 வசனத்தில் வருகின்ற “நாம்’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். உண்மையில் இது மரியாதைப் பன்மையாகும்.

நாம் என்று வருவதால் கடவுள் தன்மையில் பலர் இருப்பதாக எந்தவொரு முஸ்லிமும், அரபுக் கிறித்தவரும், யூதரும் ஒருபோதும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

தவ்ராத்தின் (பழைய ஏற்பாட்டின்) ஆரம்பத்தில் வருகின்ற “நாம்’ என்ற வார்த்தை எத்தனை கடவுள்களைக் குறிக்கிறது என்று ஹிப்ரு மொழி தெரிந்த ஒரு யூதரிடம் கேட்டால் அவர் நாம் சொல்வதைப் போன்று தான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பதில் சொல்வார்.

இன ஒதுக்கீடு கடவுள்கள்

மனித சமுதாயத்தில் தவறான சிந்தனையுடையவர்கள் கடவுளைத் தங்கள் உடல் அமைப்பு ரீதியில் மட்டும் கற்பனை செய்யவில்லை. கடவுளுக்கும் இன ஒதுக்கீடு அடிப்படையிலான பாகுபாட்டையும் வித்தியாசத்தையும் கற்பித்து விட்டனர்.

எத்தியோப்பிய கடவுளுக்கு எத்தியோப்பியர்களைப் போன்ற உதடுகள், வெண்கலக் கன்னங்கள், கம்பளி மயிர் போன்றவற்றைக் கொடுத்தார்கள். கிரேக்கக் கடவுள்கள் கிரேக்கர்களைப் போன்றே கூரிய கண்கள், பழமை மிக்க, பார்ப்பதற்கு அழகு மிக்க தோற்றம் கண்டார்கள்.

இப்படிக் கடவுளுக்கு மத்தியிலும் இன ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டு வந்து விட்டனர்.

கிரேக்கர்களும் ரோமர்களும் தங்களுடைய அறிவுக் கடவுள் (ஙண்ய்ங்ழ்ஸ்ஹ) ஒளி மற்றும் சூரியக் கடவுள் (ஆல்ர்ப்ப்ர்) மகத்தான சாதனை புரிந்த ஹெர்குலிஸ் போன்றவர்களைக் கழற்றி விட்டு விட்டு, கைவிட்டு விட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கடவுளான இயேசு கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள முன்வந்து விட்டனர்.

தங்களுடைய புராணக் கடவுளர்களை மேற்கத்திய ஐரோப்பாவிற்கு இறக்குமதி செய்தவர்களின் முன்னணி வகித்தவர்கள் ரோமானியர்கள் தான். அவர்களில் ஸ்காண்டிநேயர்கள் போர் மற்றும் உழவுக்குரிய இடி மின்னல் தெய்வத்தை (பட்ர்ழ்) வணங்கிக் கொண்டிருந்தனர். ஆங்கில சாக்சானியர்களின் கடவுள் தான் எல்லாக் கடவுள்களுக்கும் தலைமைக் கடவுள். அறிவு மற்றும் போருக்குரிய கடவுளான இவர் ஒற்றைக் கண் கொண்ட ஆண் கடவுள். இவரது பெயர் ஓடின் (ரர்க்ங்ய்) என்பதாகும். அவர்கள் தோர், ஓடின் போன்ற கடவுள்களை விட்டு விட்டு, அந்த மனிதக் கடவுளை (இயேசுவை) மிக்க மகிழ்ச்சியுடன் விரைந்து ஏற்றுக் கொண்டனர். இதற்குப் பதிலாக ஐரோப்பியர்கள் தாங்கள் ஆதிக்கம் செலுத்திய ரோமானிய காலனிகளில் முக்கடவுள் கொள்கையை அறிமுகம் செய்தனர். மண்ணின் மைந்தர்கள் வணங்கிய, கண்ட கண்ட கடவுள்களை விட அழகு நிறைந்த மனிதக் கடவுள்களைக் கொடுத்தனர்.

படங்களிலும் சிற்பங்களிலும் திரைப்படங்களிலும் எப்படி இயேசுவை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

கிங் ஆஃப் கிங்ஸ் என்ற படத்தில் ஜெஃப்ரி ஹன்டர் என்ற நடிகர் வருவது போன்ற ஓர் அழகிய கோணத்தில் தங்க நிறத் தலைமுடிகளுடனும், நீல நிறக் கண்களுடனும் அவரைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு யூதரைப் போன்று அவரது தோற்றம் இல்லை. யூதருக்கு மூக்கு சற்று வித்தியாசமாக அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் காட்சிப்படுத்திய கடவுள் உடல் அமைப்பில் எலும்பு கட்டமைப்பில் ஓர் ஆங்கில, ஜெர்மானிய, ஸகாண்டிநேவிய தோற்றத்தில் தான் தெரிகிறாரே தவிர ஓர் யூதரைப் போல் காட்சியளிக்கவில்லை.

வெள்ளையர்களின் மனிதக் கடவுள் நீல நிற மனிதக் கடவுளுக்கு மாற்றமாக அமைந்திருப்பார். (இந்து மதக் கடவுள் படங்களில் ராமர், கிருஷ்ணர் ஆகியோரை நீல நிறத்தில் வரைந்திருப்பார்கள்.)

இப்படி இவர்களது கதை, சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக, ஏற்கனவே இருந்த இணை வைப்பை விடக் கொடூரமான இணை வைப்பிற்கு மாறி விட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் கடமை

இருளில் கிடக்கின்ற பல மில்லியன் கிறித்தவர்கள் விஷயமாக நாம் எதுவுமே செய்யவில்லை. நாம் அவர்களை அவர்களது இணை வைப்புக் கொள்கையிலிருந்து கரையேற்ற வேண்டும். அல்லது அவர்கள் நம்மை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாசத்தில் கொண்டு போய் தள்ளி விடுவார்கள்.

அல்லாஹ்வின் பூமியில் உண்மையான அந்த இறைவனை வணங்குபவர்களை விட மிக அதிகமான கோடிக்கணக்கான மக்கள் மனிதக் கடவுள்களையே வணங்குகின்றனர். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் காட்டுகின்ற அலட்சியத்தினால் தான் முஸ்லிம் நாடுகளில் துன்பங்கள் தொடர்கின்றன.

தூய இஸ்லாத்தின் நம்பிக்கையைப் பரப்புவது தான் ஒரு முஸ்லிமுடைய கடமையாகும். இந்த இஸ்லாத்தை நாம் குறைத்து மதிப்பீடு செய்தால் அது நமது அழிவுக்குக் காரணமாகும். அல்லாஹ்வின் சாட்டை எந்தச் சப்தமும் இல்லாமல் நம்மைச் சாய்த்து விடும்.

இந்தத் தூய அழைப்புப் பணியில் உங்கள் பங்கு என்ன? பணி என்ன? அது மிக எளிது தான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (அல்குர்ஆன் 5:75)

இந்த வசனத்தை மனனம் செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய அட்டைத் துண்டில் இந்த வசனத்தை எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். பார்க்கும் போதெல்லாம் அதை, இறைவன் கொடுத்த இயற்கை கம்ப்யூட்டரான மூளையில் பதிய வையுங்கள்.

இந்த ஒரு வசனத்தை ATNATU என்ற ஆயுதத்தைக் கொண்டு, கடவுளுக்கு மனிதப் பண்பு கற்பிக்கும் (Anthropomorphism) கொள்கையின் அடிவேரை, ஆணி வேரை அறுத்தெறியுங்கள். இது உங்களுடைய உரிமையும் இஸ்லாமிய மார்க்கத்தின் விதியும் ஆகும். அல்லாஹ் சொல்கின்றான்:

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122)

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

—————————————————————————————————————————————————————-

அல்லாஹ்வை அழைக்கும் கிறித்தவர்கள்

யூதர்களும் கிறித்தவர்களும் தத்தமது பங்கிற்கு, தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களில் திணிக்க வேண்டியதைத் திணித்தும், தணிக்கை செய்ய வேண்டியதைத் தணிக்கை செய்தும் கொண்டனர். ஆனால் அவர்களது அத்தனை திருகுதாளங்களையும் தில்லுமுல்லுகளையும் தாண்டி, அவர்களது கத்தரிக்கோல்களையும் கடந்து “அல்லாஹ்’ என்ற வார்த்தை பைபிளில் மட்டுமல்ல! அவர்களது அன்றாட ஜெபங்களிலும் பிரச்சாரத்திலும் பிரார்த்தனையிலும் ஆழமான, அழுத்தமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இப்போது அவர்களுக்கு முன்னால் இருப்பது இரண்டே இரண்டு வழிமுறைகள் தான். ஒன்று, அல்லாஹ் என்ற வார்த்தையை இவர்கள் தவிர்க்க வேண்டும். அது ஒரு போதும் இவர்களால் முடியாது. அல்லது இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

அவர்கள் எப்படி, எங்கே அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

பைபிள் என்பது இரண்டு ஏற்பாடுகளைக் கொண்டது. ஒன்று பழைய ஏற்பாடு! இதன் மூல மொழி ஹிப்ரு மொழியாகும்.

மற்றொன்று புதிய ஏற்பாடு! இதன் மூலமொழி கிரேக்க மொழியாகும்.

ஹிப்ரு மொழியில் தோரா என்றழைக்கப்படும் தவ்ராத் வேதத்தில் யூதர்கள் செய்த திருத்தத்தைப் பார்ப்போம். அதற்கு முன், ஹிப்ரு மொழிக்கும் அரபு மொழிக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமையைப் பார்ப்போம்.

  1. வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக எழுதுதல்
  2. யூதர்கள் இஸ்ஹாக் நபியின் வழியில் வந்தவர்கள்; அரபிகள் இஸ்மாயீல் நபியின் வழியில் வந்தவர்கள். இரு இனங்களுமே இப்ராஹீம் நபி அவர்களின் வழி வந்தவர்கள்.
  3. இரு மொழிகளிலும் படர்க்கை மற்றும் முன்னிலையில் மரியாதைப் பன்மை இல்லாவிட்டாலும் தன்னிலையில் மரியாதைப் பன்மை உண்டு. உதாரணத்திற்கு அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன். குர்ஆனை இறக்கியதைப் பற்றிக் குறிப்பிடும் போது, “நான் இறக்கினேன்’ என்று சில இடங்களிலும், “நாம் இறக்கினோம்’ என்று சில இடங்களிலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இங்கு நாம் என்றால் அல்லாஹ்வுடன் கூட யாரும் இருப்பதாக விளங்க மாட்டோம். மாறாக மரியாதைப் பன்மையில் “நாம்’ என்று அல்லாஹ் தன்னை அழைக்கிறான் என்று விளங்கிக் கொள்வோம். இதே போன்ற மரியாதைப் பன்மை ஹிப்ரு மொழியிலும் உண்டு.

அடுத்து, இந்த இரு மொழிகளிலும் ஒரே விதமாக, சிறிய மாற்றங்களுடன் அமைந்த வார்த்தைகளைப் பார்ப்போம்.

ஹிப்ரு       அரபி         ஆங்கிலம்

எலாஹ்               இலாஹ்              God – கடவுள்

எகுத்                     அஹத்       One – ஒருவன்

யவ்ம்                    யவ்ம்        Day – நாள்

சாலோம்             ஸலாம்      Peace – அமைதி

யாஹுவா    யாஹுவா    Oh, He – அவனே

இதில் யா ஹு வஹு (Y.H.W.H.) என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதிலுள்ள யா என்பது அழைப்புக் குறியாகும். நாம் ஒரு நண்பனை அழைக்கும் போது, “நண்பனே!’ என்று அழைக்கின்றோம். நண்பன் என்ற வார்த்தையுடன் “ஏ’காரம் சேர்ந்து விட்டால் அது அழைப்பு வார்த்தையாகி விடுகின்றது. தமிழில் ஒரு வார்த்தையின் பின்னால் அழைப்புக்குறி வருவது போன்று அரபியில், “யா’ என்ற வார்த்தையை முன்னால் சேர்க்க வேண்டும்.

அல்லாஹ் என்ற வார்த்தையுடன் “யா’ என்பதை முன்னால் சேர்த்து “யா அல்லாஹ்’ என்றால் “அல்லாஹ்வே!’ என்று அழைப்புக் குறியாக மாறி விடும். ஹிப்ரு மொழியிலும் இவ்வாறு “யா’ என்பதை முன்னால் சேர்ப்பது தான் அழைப்புக்குறியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இதன் படி ஹுவ என்றால் அவன் என்று பொருள். யா என்பது அழைப்புக் குறி! இரண்டையும் இணைத்துப் (யாஹுவ) பொருள் கொள்ளும் போது, “அவனே!’ என்ற அழைப்புச் சொல்லாகி விடுகின்றது. சிலர் இதற்கு, எங்கள் கடவுள் என்றும் பொருள் கொள்கின்றனர்.

யாஹுவ என்பதற்கு என்ன அர்த்தமும் இருந்து விட்டுப் போகட்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்த யாஹுவ என்ற வார்த்தையை மொழியக் கூடாது என்று யூத குருமார்கள் தடை விதித்திருக்கிறார்கள் என்பதைத் தான். ஏனெனில் அது கடவுள் பெயராகும்; எனவே அதை மொழியக் கூடாது. அவ்வாறு மொழிந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். கடவுளுடைய வேதத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கு உரிமையில்லை என்பது வேடிக்கைக்குரிய விஷயமாகும்.

இவ்வாறு அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்குத் தடை என்பதால் யாஹுவ என்பதற்கு முன்னால் அடோனாய் அல்லது எலோஹிம் என்ற வார்த்தையை இடையில் திணித்துள்ளார்கள். இலாஹ் என்றால் கடவுள். இம் என்றால் மரியாதைப் பன்மையாகும். அதாவது “கடவுள் அவர்கள்’ என்று சொல்லலாம். ஐரோப்பிய மொழிகளில் மரியாதைப் பன்மை கிடையாது. அதனால் கிறிஸ்துவை இதை ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கும் போது பன்மையாகவே மொழிபெயர்த்து உண்மையிலேயே மூன்று கடவுள்கள் இருப்பதாக நம்பி விட்டனர். யாஹுவா என்பதை எழுத்தளவில் தணிக்கை செய்யாவிட்டாலும் வாயளவில் சொல்வதைத் தடை செய்து விட்டனர்.

பத்துக் கட்டளைகள்

செய்! செய்யாதே! என்ற பத்துக் கட்டளைகள் வெற்றி பெற்றதை விட இந்தக் கட்டளை வெற்றி பெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். யாஹுவா என்பது கடவுள் பெயர். அது கடவுள் பெயர் எனும் போது பழைய ஏற்பாட்டில் இடம் பிடித்தது போன்று புதிய ஏற்பாட்டிலும் இடம் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் புதிய ஏற்பாடு என்ற பெயரில் 27 நூல்களும் பழைய ஏற்பாட்டுடன் இணைக்கப்பட்ட கடவுளின் வெளிப்பாடு தான். தெய்வீக அறிவிப்பு தான். இதை இறைவனிடமிருந்து வந்த புத்தம் புதிய கடவுள் வார்த்தை என்று கிறித்தவர்கள் மார் தட்டிக் கொள்கின்றனர்.

அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. தங்கள் கைவசம் கிரேக்க மொழியிலுள்ள புதிய ஏற்பாட்டின் 24 ஆயிரம் மூல ஏடுகள் இருப்பதாகவும் பீற்றிக் கொள்கின்றனர். ஆனால் அந்த ஏடுகளில் ஒரு இடத்தில் கூட கடவுளின் பெயரான யாஹுவா இடம்பெறவில்லை. மாறாக அந்தப் பெயர் ஃஹ்’ழ்ண்.ர்ள் மற்றும் பட்ங்.ர்ள்’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இதன் பொருள் God கடவுள், கர்ழ்க் எஜமான் என்பதாகும்.

இவர்களுடைய ஆந்தைப் பார்வையிலிருந்தும் அடித்தல் வேலையிலிருந்தும் அல்லாஹ் என்ற வார்த்தை மட்டும் தப்பி விட்டது.

ஜே கலாச்சாரம்

அரபி, ஹிப்ரு மொழியில் யா என்ற தொடங்கும் வார்த்தைகளை ஜே என்று மாற்றும் கலாச்சாரம் மேற்கத்தியர்களிடம் முளைத்தது.

யூனுஸ் – ஜோனா

யூசுப் – ஜோசப்

யஹுதா – ஜுதா (ஜுடாஸ்)

ஏஸஸ் – ஜீஸஸ்

என்று மாற்றினர். இந்த அடிப்படையில் பழைய ஏற்பாட்டில் வந்த யாஹுவாவை ஜேஹுவா என்று மாற்றி, கடவுள் பெயர் ஜேஹுவா என்று அமெரிக்காவிலுள்ள கிறித்தவர்களில் ஒரு சாரார் அழைக்கத் துவங்கினர். அவன் பெயர் என்ன? என்று கடவுளின் பெயரைப் பற்றி சாதாரணமாக ஒரு கிறித்தவரிடம் கேட்டால் God கடவுள் என்று பதில் சொல்வான். இப்படிப் பதில் சொல்லும் அந்தக் கிறித்தவனை நோக்கி, “கடவுள் என்றால் வழிபடும் ஒரு பொருள்” என்று கூறி அந்தக் கூட்டத்தினர் அதை மறுத்தனர். அடுத்து அந்தக் கிறித்தவன், Father தந்தை என்று சொன்னதும், உன்னுடைய தந்தை என்ன கடவுளா? என்று கேட்டுக் கிண்டல் பேசினர். இதுவெல்லாம் கடவுள் பெயர் கிடையாது; கடவுள் பெயர் ஜேஹுவா தான் என்று இவர்கள் குறிப்பிட்டனர்.

பழைய ஏற்பாட்டில் யாஹுவா (ஜேஹுவா) 6823 இடங்களில் தனியாகவும், Genesisல் மட்டும் எலோஹிம் என்ற வார்த்தையுடன் சேர்ந்து 156 இடங்களிலும் இடம்பெறுகின்றது என்று இவர்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

கடவுளின் பெயர் அல்லாஹ் என்ற வார்த்தை பைபிளில் இடம் பெற்றுள்ளது. இது தெரியாத குருடர்களாக இவர்கள் எப்படித் தட்டழிகின்றனர்?

அத்துடன் புதிய ஏற்பாடும் கடவுளின் வாக்கு தான் என்பது கிறித்தவர்களின் நிலைப்பாடு. ஆனால் இந்த சாரார் பழைய ஏற்பாட்டில் வருகின்ற கடவுள் பெயரை ஏற்றுக் கொண்டு புதிய ஏற்பாட்டில் வருகின்ற கடவுள் பெயரை ஏற்க மறுக்கின்றார்கள். இரண்டில் எது கடவுளின் வாக்கு? எது சரி? என்பதை வினவுவதற்காக இதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

பழைய ஏற்பாட்டில் அல்லாஹ்

இங்கே Rev. C.I. Scofield, D.D. (இறைமையியல் முனைவர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்ட ஆங்கில பைபிளில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே அளிக்கின்றோம். இவர் கிறித்தவ உலக அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். அவரது புதிய, திருத்தப்பட்ட பதிப்புக்குக் கீழ்க்கண்ட கிறித்தவ இறைமையியல் முனைவர்கள் குழுமம் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.

Rev. Henry G. Weston, D.D., LL.D., President Crozer Theological jeminary.

Rev. W. G. Moorehead, D.D., President Xenia (U.I,) Theological Seminary.

Rev. lames M. Gray, D.D., President Moody Bible Institute.

Rev. Elmore Harris, D.D., President Toronto Bible Institute.

Rev. William !. Erdman, D.D., Author “The Gospel of John,” etc.

Rev. Arthur T. Pierson, D.D., Author, Editor, Teacher, etc.

Rev. William L. Pettingill, D.D., Author, Editor, Teacher.

Arno C. Gaebelein, Author “Harmoney of Prophetic Word,” etc.

இதை நாம் இங்கு வெளியிட்டிருப்பது அவர்களது பட்டங்களைக் கண்டு உங்கள் புருவத்தை உயர்த்துவதற்காக அல்ல! இந்தத் திருத்தப்பட்ட பைபிளில் அவர்கள் கொண்டிருக்கும் ஏகோபித்த கருத்தொற்றுமையைத் தெரிவிப்பதற்காகத் தான் இவர்களது பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

Elohim – எலோஹிம் சில வேளைகளில் El – எல் அல்லது Elah –  எலாஹ் என்று உச்சரிக்கப்படும். இவற்றின் பொருள் God கடவுள் என்பதாகும். மாற்றாக Allah அலாஹ் என்று உச்சரிக்கப்படும். (அதாவது அல்லாஹ் என்பதில் ஒரேயொரு “ல்’ என்பதை மட்டும் நீக்கியிருக்கின்றார்கள்.)

அலாஹ் என்பதற்கும் அல்லாஹ் என்பதற்கும் இவர்கள் ஓர் எழுத்து தூரத்தில் தான் இருக்கின்றார்கள்.

இந்த பக்கம் அண்மையில் The New scofield Reference Bible இண்க்ஷப்ங் என்ற பெயரில் வெளியான, மன்னர் ஜேம்ஸின் அதிகாரப்பூர்வ பைபிள் பதிப்பில் “அலாஹ்’ என்ற வார்த்தையைக் கன கச்சிதமாக, படு கவனமாகத் தூக்கி விட்டார்கள். மேலே நாம் எடுத்துக் காட்டியிருக்கும் இறைமையியல் முனைவர்களை விட அதிகம் பட்டம் பெற்ற முனைவர்கள் ஒன்று சேர்ந்து முந்தைய பதிப்பில் இடம் பெற்றிருந்த அலாஹ் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள்.

மூலப் பிரதியில் Elohim அல்லது El அல்லது Elah அல்லது அலாஹ் என்றிருந்ததை இவர்கள் God என்று மொழிபெயர்ப்புச் செய்தனர்.

முஸ்லிம்கள் “அல்லாஹ்’ என்று அழைக்கின்றனர். அதற்கு இது ஒத்திருந்து, உண்மை வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை இவர்கள் உருத் தெரியாமல் ஆக்கினாலும் அதை ஒரு போதும் மூடி மறைத்து விட முடியாது. இந்த உண்மையைப் படம் பிடித்துக் காட்டுவதற்காக அரபி பைபிளின் பதிப்பையும் இதே புத்தகத்தின் ஆங்கிலப் பக்கத்தின் பதிப்பையும் தருகின்றோம்.

1:1 In the beginning, when God created the heavens and the earth,

1:2 the earth was a formless wasteland, and darkness covered the abyss, while a mighty wind swept over the waters.

1:3 Then God said, “Let there be light,” and there was light.

1:4 God saw how good the light was. God then separated the light from the darkness.

Genesis 1:1-4

பாதிரிகளுக்குப் பகிரங்க அழைப்பு

6823 தடவை யாஹுவா என்று தனியாகவும், எலோஹிம் என்ற வார்த்தையுடன் சேர்த்து 156 தடவையும் ஹிப்ரு மொழியில் பழைய ஏற்பாட்டில் வருவதை ஸ்காஃபீல்டு தலைமையிலான முனைவர்களின் குழுமம் “அல்லாஹ்’ என்று ஒப்புக் கொள்கின்றது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு நாயனை வணங்கும் அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.

நீங்கள் ஒப்புக் கொள்கின்ற அந்த அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போல் பாதிரிகளாகிய உங்களையும் உங்களை நம்பியிருக்கின்ற ஒட்டு மொத்த கிறித்தவர்களையும் நோக்கி இந்த அழைப்பை விடுகின்றோம்.

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!எனக் கூறி விடுங்கள்!  (அல்குர்ஆன் 3:64)

தனி நாயனுக்கு ஒரு தனிப் பெயர்

அல்லாஹ் என்பதற்கு God கடவுள் என்று மொழி பெயர்க்கிறார்கள். இந்த God என்ற வார்த்தை எப்படியெல்லாம் தவறாகவும் தப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்று பாருங்கள்.

உதாரணத்திற்கு இந்துக்களின் கோயில்களில் உள்ள சிலைகளைப் பற்றி நம்முடைய குழந்தைகளுக்கு நாம் சொல்லும் போது, Gods of Hindus இந்துக் கடவுள்கள் என்று குறிப்பிடுகின்றோம். இதை ஓர் இந்து கேட்டால் அதைக் குறையாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவர்களுடைய நம்பிக்கையைத் தான் அப்படிச் சொல்கிறோம்.

இதுபோல் கிரேக்க ஆண் கடவுள் (God) பெண் கடவுள் (Goddess) ஆகியோரை எடுத்துக் கொண்டால் குடித்து விட்டுக் கும்மாளம் போடும் Godகளும் இருக்கின்றனர். இவ்வளவு ஏன்? சதி செய்து, சூழ்ச்சி வலைகள் பின்னி சூட்சுமமாக அடுத்த Godகளின் மனைவிகளைக் கடத்திக் கொண்டு போகும் Godகளும் இருக்கின்றனர்.

God Father

ஒரு குழந்தையை ஒருவர் எடுத்து வளர்க்கின்றார் என்றால் அவருக்குத் தமிழில் வளர்ப்புத் தந்தை – பொறுப்பாளர் என்று குறிப்பிடுவோம். இதுபோல் ஒரு குழந்தையை ஒரு பெண் எடுத்து வளர்த்தால் வளர்ப்புத் தாய் என்று சொல்வோம். இதுபோல் அந்தக் குழந்தைக்கு வளர்ப்புப் பிள்ளை, வளர்ப்பு மகன் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் இதற்கு God Father, God Mother, God Child என இதற்கும் கடவுளை இழுத்து விடுகின்றனர்.

Tin – God

இல்லாத தகுதிகளை இருப்பதாகக் காட்டிக் கொள்வோருக்கு தமிழில் பந்தா பேர்வழி என்போம். இதற்கு ஆங்கிலத்தில் கடவுளைத் தான் வம்புக்கு இழுக்கின்றனர். இந்தப் போலிப் பேர்வழிகளை Tin – God என்று அழைக்கின்றனர்.

இதுவே கடவுள் தன்மையில் பல தரங்கள் இருப்பதாக, கடவுளில் பல கூறுகள் இருப்பதாக உணர்த்துகின்றது. இதே வார்த்தைக்குப் பின்னால் ஒரு “s’ சேர்த்து, அதாவது Gods என்றால் கடவுள்கள் என்று பன்மையாக்கி கடவுளுக்கு இணை கற்பிக்கலாம். God என்பதற்குப் பின்னால் dess சேர்த்து விட்டால் கடவுளைப் பெண்ணாக்கி விடலாம்.

God என்பதற்குப் பின்னால் ling என்று சேர்த்து விட்டால் கடவுளுக்கு ஒரு குட்டிக் கடவுளை உருவாக்கி விடலாம். ஆனால் இந்த விளையாட்டுக்களெல்லாம் Allah என்ற வார்த்தையில் அறவே நடக்காது. Allah Father, Allah Mother, Allah Child என்றெல்லாம் சொல்ல முடியாது.

மேற்கத்தியர்கள் கடவுள் தன்மையில் எப்படியொரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டை விளையாடுகின்றார்கள் என்று பாருங்கள். கடவுள் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி தரும் பொருளைப் பாருங்கள். கிரேக்கர்களின் கடவுள்களைப் பற்றி அகராதி தரும் பொருள் இதோ:

ஜூபிடர் – வியாழன் – விண் கடவுள்

புளூட்டோ – ஒன்பதாவது கோள் – நரகக் கடவுள்

மார்ஸ் – செவ்வாய் – போர்க் கடவுள்

நெப்டியூன் – ஒரு கோள் – கடல் கடவுள்

சியஸ் – இவை அனைத்திற்கும் தந்தை அல்லது தலைமைக் கடவுள்

அப்போலோ, ஹோரஸ், ஹெர்குலிஸ் என்று கிரேக்கர்களின் கடவுள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

ஒரு பெண் புனித மைக்கேலுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் ஷைத்தானுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் ஏற்றிக் கொண்டாளாம். சுவனத்திற்குப் போனாலும் ஒரு கூட்டாளி கிடைப்பார்; நரகத்திற்குப் போனாலும் ஒரு கூட்டாளி கிடைப்பார் என்பதற்காக வேண்டி இவ்வாறு செய்தாளாம்.

இந்தப் பெண்ணைப் போன்று இஷ்டத்திற்குக் கடவுள்களைத் தேர்வு செய்கின்ற அளவுக்கு மேற்கத்தியர்களின் நிலை அமைந்துள்ளது.

ஆனால் அல்லாஹ் என்ற பெயரைக் கறைப்படுத்த முடியாது. குறை காண முடியாது. புனித நாயனுக்கு ஏற்ற புனித வார்த்தையாக அமைந்திருக்கின்றது. தனித்த நாயனுக்குரிய தனியொரு பெயராக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வுக்கு அணி சேர்க்கின்ற அழகுப் பெயர்களை திருக்குர்ஆன் தருவதைப் பாருங்கள்.

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படை யானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன். நிம்மதியளிப்பவன்; அடைக்கலம் தருபவன்; கண்காணிப்பவன்; மிகைத்தவன்; ஆதிக்கம் செலுத்துபவன்; பெருமைக்குரியவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்; உருவாக்குபவன்; வடிவமைப்பவன்; அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்

அல்குர்ஆன் 59:22-24

அனைத்து பைபிள்களிலும் அல்லாஹ்வின் பெயர்

படைத்த இறைவனுக்கு அவனது தனித்தன்மையைக் குறிக்கின்ற வகையில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு பெயரைக் கொடுக்கின்றனர். ஆனால் செமட்டிக் மொழிகளில் அதாவது மோஸே, ஏசு, முஹம்மது ஆகிய தூதர்களின் மொழிகளில் அல்லாஹ் என்று அழகுற அமைந்த வார்த்தையைப் போன்று அமையவில்லை. அல்லாஹ் என்ற இந்த வார்த்தை (அல்லது அதன் வேர்ச் சொல்லாக அமைந்திருக்கும் இலாஹ்) பைபிளின் அனைத்து மொழியாக்கங்களிலும் தனஓக்குரிய இடத்தைப் பிடித்திருக்கின்றது.

உலகத்தில் பேசப்படும் மொழிகளில் 1500 மொழிகளுக்கு மேற்பட்ட மொழிகளில் பைபிளை மொழிபெயர்த்து விட்டதாகக் கிறித்தவ உலகம் மெச்சிக் கொள்கின்றது.

அந்த மொழியாக்கங்களிலெல்லாம் அல்லாஹ் என்ற வார்த்தை நுழைந்து தன்னுடைய ஆளுமையை, அழகை அற்புதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மேற்கத்தியர்கள் கூறுவது போன்று இது விவிலிய உண்மை (Gospel Truth). அப்படியானால் உலகில் வாழும் 120 கோடி கிறித்தவர்களுக்கு இது ஏன் தெரியாமல் போய் விட்டது என்று கேட்கலாம். இதற்குக் காரணம் அவர்களுக்குச் செய்யப்பட்ட மூளைச் சலவை தான்.

அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை.

மத்தேயு 13:13

இந்த பைபிள் வசனம் கூறுவது போல் அவர்கள் பார்ப்பதில்லை, செவியுறுவதில்லை, சிந்திப்பதும் இல்லை.

ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள்

சிலுவையில் தொங்கியதாகக் கருதப்படும் ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள் இதோ:

பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” என்று உரக்கக் கத்தினார். “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது அதற்குப் பொருள்.

மாற்கு 15:34

புனித மார்க்கின் கருத்துப்படி இது எபிரேய மொழியின் மூல, கையெழுத்துப் பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். காரணம், மூல நூல்கள் என்றழைக்கப்பட்ட இவ்வேதங்கள் எபிரேய மொழியில் தான் எழுதப்பட்டன.

அதே சமயம் மத்தேயு சொல்வதை சற்றுக் கவனியுங்கள். அவர்கள் யூதர்களை இலக்காகக் கொண்டு பைபிளை எபிரேய மொழியிலேயே எழுதியதாகக் கருதப்படுபவர்.

புனித ஜீரோம் என்பவர் கி.பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவத் தந்தை ஆவார். இவர் மத்தேயு பற்றிக் குறிப்பிடுவதாவது:

லெவி (Levi) என்று அழைக்கப்படக் கூடிய மத்தேயு வரி வசூல் செய்யும் பொது அதிகாரி. அனைத்து நற்செய்தியாளர்களை விடவும் முதன் முதலில் வந்து தூதரானவர். ஏசு கிறிஸ்துவுடைய விவிலியத்தை நம்பிக்கை கொண்ட, விருத்த சேதனம் செய்த யூதர்களின் எபிரேய மொழியிலும் அவர்களது தன்மைக்கு ஒப்பவும் இயற்றினார். உண்மையில் மத்தேயுவின் மொழி உச்சரிப்பு, மார்க்கின் உச்சரிப்பை விட அதிகமாக செமட்டிக் மொழி உச்சரிப்புக்கு ஒத்திருக்கும். இதைப் பின்வரும் வசனத்தை, முன்னால் இடம் பெற்ற வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.

மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்.

மத்தேயு 27:46

ஏலி, ஏலி லெமா சபக்தானி என்ற வார்த்தைகளை தயவு செய்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

ஏசு சிலுவையில் அறையப்படும் போது ஜேஹுவா, ஜேஹுவா என்று சொன்னாரா? என்று ஒரு உண்மை கிறித்தவரிடம் கேளுங்கள். இல்லை என்றே பதிலளிப்பார். தந்தையே, தந்தையே என்று சொன்னாரா? என்று கேளுங்கள். அதற்கும் அவர் இல்லை என்றே பதிலளிப்பார். நிச்சயமாக அவரது பிரார்த்தனை இலீ, இலீ – இலாஹ், இலாஹ் என்று தான் அமைந்திருந்தது. ஒரு கண்ணியமிக்க கிறித்தவர் இந்த உண்மையில் உங்களுடன் உடன்படாமல் இருக்க மாட்டார்.

அல்லலூயா

உங்களுடைய கிறித்தவ நண்பரிடம் அல்லலூயா என்ற வார்த்தையைப் பற்றிக் கேளுங்கள். கிறித்தவர் என்று பெயர் பெற்ற எவரும் இந்த வார்த்தையைத் தெரியாமல் இருக்க மாட்டார். அல்லாஹு அக்பர்; அல்லாஹு அக்பர் என்று முஸ்லிம்கள் தக்பீர் கூறுவது போன்று அவர்கள் அல்லலூயா என்று சொல்வார்கள். அல்லலூயாவின் அர்த்தம் என்ன? இதற்குப் புதிய ஏற்பாட்டின் 27வது புத்தகமான இறுதிப் புத்தகம் திருவெளிப்பாடு (வெளிப்படுத்தின சுவிஷேசம்) செல்வோம்.

ஏசுவுடைய மாணவர் ஒரு காட்சியைக் காண்கிறார். அதை இப்போது பார்ப்போம்.

  1. இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது; “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.

2 ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.”

3 மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.

4 அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி, “ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.

5 அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.

6 பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த போரொலியைக் கேட்டேன். அது சொன்னது; “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார்.

7 எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.

8 மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”

9 அந்த வானதூதர் என்னிடம், “ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.

10 நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தேன். ஆனால் அவரோ என்னிடம், “வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த உனக்கும் உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார். ஏனெனில் இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்கு உயிர்மூச்சு.

திருவெளிப்பாடு 19:1-10

இதற்கு அரபி பைபிளில் அமைந்த வார்த்தை:

அரபி பைபிளில் இடம் பெறும் சொற்களுக்காக திருச்சபை வழக்குச் சொற்கள் அகராதி என்று ஓர் அகராதியை இணைத்திருக்கின்றார்கள்.

அதில் இதற்குப் பொருள் கூறும் போது, “இது எபிரேய வார்த்தை. இவ்வாறு தான் (இவ்விரு விதமாகத் தான்) அனைத்து மொழிகளிலும் மொழியப்படுகின்றது. அதாவது “ஹல்லிலூ (தூய்மைப்படுத்துங்கள்) யாஹுவா (யாஹுவாவை)’ அதாவது இறைவனைத் தூய்மைப்படுத்துங்கள்; அல்லது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் என்பது இதன் பொருளாகும்” என்று இந்த அகராதி குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து நாம் தெளிவாக விளங்குவது, அல்லலூயா என்பதே அல்லாஹ்வைத் துதிப்பது தான்.

இங்கே இந்த அத்தியாயத்தின் அரபியாக்கத்தை அரபிப் பிரதியிலிருந்து தருகிறோம்.

தமிழ் பைபிளில் கடவுள், கர்த்தர் என்ற வார்த்தைகள் வந்த இடத்தில் அல்லாஹ் என்ற வார்த்தை வருகின்றது. இதில் நான்காவது வசனத்தில் அரபியில் அர்ஷ் என்ற வார்த்தை இடம்பெறுகின்றது. இதற்குத் தமிழ் மொழி பெயர்ப்புகளில் சிம்மாசனம், அரியணை என்று அர்த்தம் செய்யப்பட்டிருக்கின்றது. அரியணையில், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற… என்ற வாசகம் அமையப் பெற்றிருக்கின்றது.

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

திருக்குர்ஆன் 25:59

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. குர்ஆனில் இதுபோன்ற அதிகமான வசனங்கள் இடம் பெற்றாலும் இங்கு உதாரணத்திற்காக ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக் காட்டியுள்ளோம்.

இவையெல்லாம் அல்லாஹ்வை மட்டும் தான் சந்தேகமில்லாமல் குறிப்பிடுகின்றன. ஒருபோதும் ஏசுவைக் குறிக்காது. அவ்வாறு குறிக்காது என்பதற்கு இதிலுள்ள 10வது வசனமும் ஒரு சான்றாகும்.

யோனா வானவரின் காலில் விழும் போது, “நீ அல்லாஹ்விற்கு மட்டும் தான் சிரம் பணிய வேண்டும்; நான் உன்னுடனும் உனது சகோதரர்களுடனும் உள்ள ஓர் அடிமை தான்” (அதாவது, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று) ஏசு அளித்த சான்று தான் தூதுச் செய்தியின் உயிர் மூச்சு என்று இந்த 10வது வசனமும் குறிப்பிடுகின்றது.

இதுவும் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அர்ஷில் இருக்கும் அல்லாஹ்வைத் தான் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையில் கிறித்தவ நண்பர்களே! அல்லலூயா என்று நீங்கள் அழைப்பது உங்களையும் எங்களையும் படைத்த உண்மையான அல்லாஹ்வைத் தான்.

அல்குர்ஆன் 3:64 வசனத்தின்படி உண்மையான அல்லாஹ்வை வணங்க வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: அஹ்மத் தீதாத் அவர்கள், “அல்லலூயாவில் “அல்ல’ என்பது அல்லாஹ்வைக் குறிக்கின்றது; யா என்பது ஓர் ஆச்சரியக் குறி” என்று குறிப்பிட்டு விட்டு அந்த “யா’வை முன்னால் கொண்டு வந்து, “யா அல்லாஹ்’ என்பது தான் அல்லலூயாவின் பொருள் என்று தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் “யா’ என்பது அரபியிலும் எபிரேயுவிலும் முன்னால் தான் இடம் பெறுகின்றது என்று அஹ்மத் தீதாத் அவர்களே மற்றொரு இடத்தில் குறிப்பிடுகின்றார். அல்லலூயாவில் அது பின்னால் இடம் பெறுகின்றது. இதை எப்படி முன்னால் கொண்டு வர முடியும் என்ற விளக்கத்தை அவர் தரவில்லை. அத்துடன் அரபியில் “யா’ என்பது அழைப்புக் குறியாகத் தான் வருகின்றது. ஆச்சரியக் குறியாக வருவதில்லை.

எனவே அல்லலூயாவிற்கு அரபி பைபிள் கொடுக்கின்ற விளக்கம் தான், “ஹல்லிலூ (தூய்மைப்படுத்துங்கள்) யாஹுவா (யாஹுவாவை)” அதாவது “இறைவனைத் தூய்மைப்படுத்துங்கள்” என்ற விளக்கம் தான் ஓரளவுக்குப் பொருத்தமாக இருக்கின்றது என்பதால் அந்த விளக்கமே இங்கே அளிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடவுள் தந்தை

குர்ஆனிலும் பைபிளிலும் கடவுளுக்கென்று பொதுவான பெயர்கள் இருக்கின்றன. ஆனால் குர்ஆனில் அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தப் பெயர்களில் “அப்’ – தந்தை என்ற வார்த்தை அறவே இடம்பெறவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக “ரப்’ என்ற வார்த்தை மிக அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு இறைவன், எஜமான் என்று பொருள்.

குர்ஆனில் தந்தை என்ற வார்த்தை இடம் பெறாததற்கு ஒரே காரணம், கிறித்தவர்கள் வானத்தில் உள்ள தந்தைக்கு மகனாக ஏசுவை ஆக்கியது தான். இது புனித மிக்க கடவுளின் தரத்தை பாலியல் தேட்டத்திற்கு உட்பட்ட மனித, மிருக இனங்களின் தரத்திற்கு இறக்கும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லைஎன்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்கு மாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூôது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்எனவும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:14

உணவு சாப்பிடுகின்ற எவரும் எவனும் ATNATUஆக, கடவுளாக இருக்க முடியாது. இந்த ஓர் உரை கல்லை வைத்து மனிதக் கடவுளை வணங்குகின்ற கோடிக்கணக்கான படித்த, பண்டித அறிவிழந்த ஜென்மங்களை மீட்டெடுத்து நரகத்திலிருந்து காத்து விடலாம்.

இந்த அடிப்படையில் கடவுளை ATNATU என்று கூறும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள், இனத்தால் பழங்குடியினராக இருந்தாலும் கடவுள் பற்றிய தங்களது சரியான சிந்தனையினால் கிழக்கத்திய, மேற்கத்திய நாகரீக (?) மக்களை விட விஞ்சி விட்டார்கள் என்பது தான் உண்மை.

—————————————————————————————————————————————————————-

பொருளியல்    தொடர்: 15

சந்தேகமானதை விட்டு விலகுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிட மானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர்  வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடை விதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல்: புகாரி 52

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. யார் சந்தேகமானதை விட்டுவிடுகிறாரோ அவர் ஹராமை அதைவிட அதிகமாக விட்டு விடுவார். வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர்  வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி), நூல்:  அஹமத் 17624

சந்தேகமானதை விட்டுவிடுவதில் ஸஹாபாக்கள் முன்னோடிகளாக இருந்தார்கள். சந்தேகம் என்று வந்துவிட்டால் அதைக் கொஞ்சம் கூட யோசிக்கமல் விட்டுவிடுவார்கள். அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி தான்; பெரிய விஷயமாக இருந்தாலும் சரி தான்.

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது: நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து “நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்” (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் “நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே!என்று கேட்டேன்.  ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?” என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்து விட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள். (நூல்: புகாரி 88)

இந்த ஹதீஸில், சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்வதற்காக ஒரு நபித்தோழர் மக்காவிலிருந்து மதினாவிற்குப் பயணித்திருக்கிறார். தான் மணமுடித்த பெண்ணைக் கூட தொடாமல் மணக்கோலத்திலேயே பிரிந்திருக்கிறார். ஸஹாபாக்கள் சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்வதிலே முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள் என்பதற்கு மற்றோர் நிகழ்ச்சி

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன்.  அதற்கு அவர்கள், பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே.  ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்என்றார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! (வேட்டைக்காக) நான் எனது நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் எனது நாயுடன் மற்றொரு நாயையும் நான் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் சாப்பிடலாமா?)” எனக் கேட்டேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சாப்பிடாதே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறியது உனது நாயை அனுப்பும்போது தான்.  மற்றொரு நாய்க்கு நீ அல்லாஹ்வின் பெயர் கூறவில்லைஎன விடையளித்தார்கள். (நூல்: புகாரி 2054)

ஒரு பொருளில் சந்தேகத்தின் சாயல் தென்பட்டால் அது மோசடி அல்லது ஏமாற்றுவதற்குச் சமம். இது போன்ற சந்தேகத்திற்கு இடமான பொருட்களை விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “அஸ்த்என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூ-ப்பவராக நியமித்தார்கள். அவர் “இப்னுல் லுத்பிய்யாஎன்று அழைக்கப்பட்டு வந்தார்.  அவர் ஸக்காத் வசூ-த்துக் கொண்டு வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுஎன்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், “இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த “ஸகாத்பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “இறைவா!  (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள். (நூல்: புகாரி 2597)

நம்முடைய காலத்தில் வரதட்சணை என்பது பெரும் கொடுமையாக முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ளது. ஆனால் தவ்ஹீதை முழுமையாக ஏற்று நடப்பவர்கள் வரதட்சணை வாங்குவதில்லை. ஆனால் சில தவ்ஹீத்வாதிகள், “நாங்களாகக் கேட்பதில்லை; அவர்களுடைய பெண்ணிற்கு அவர்களாகத் தருகிறார்கள்; அல்லது அன்பளிப்பாகத் தருகிறார்கள் என்று சொல்லி வாங்குகிறார்கள்.

உண்மையில் இது அன்பளிப்பு இல்லை. அவர்களுடைய பெண்ணை நாம் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகக் கொடுக்கின்ற லஞ்சம். நாம் அவருடைய பெண்ணைத் திருமணம் செய்யாமல் இருந்தால் தருவார்களா? அல்லது ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் பாதியில் நின்றால் நாங்கள் தந்த அன்பளிப்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா? மாட்டார்கள். “என் பெண்ணே உன்னுடன் வாழாத போது உனக்கு எதற்கு இந்தப் பொருட்கள்?’ என்று சொல்லி பிடுங்கி விடுவார்கள். அதனால் திருமணத்திற்கு அவர்களாகத் தருகிறார்கள் என வாங்கினால், வரி வசூல் செய்பவர் (மக்கள்) எப்படி அவர்களாகத் தருகிறார்கள் என வாங்கி, மறுமையில் அதைச் சுமந்து கொண்டு வருவாரோ அதே போன்று துôக்கிக் கொண்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

அதே நேரத்தில் திருமணம் முடிந்து ஐந்தாறு வருடங்கள் கழித்து இதுபோன்ற அன்பளிப்புக்களைக் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்வதில் தவறில்லை. அது அன்பளிப்பு தான். இது திருமணத்திற்காகக் கொடுக்கப்பட்டதில்லை. மாறாகக் குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் கொடுக்கப்பட்டதாகும்.

நபி (ஸல்) அவர்கள் சந்தேகமான எல்லா விஷயங்களையும் தடுப்பவர்களாக இருந்தார்கள்.

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். “அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அஹ்மத் 16012

அந்த இடத்தில் வணங்கப்படக்கூடிய சிலைகள் இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். அவர் அல்லாஹ்வுக்கே நேர்ச்சை செய்திருந்தாலும் பார்ப்பவர்களுக்கு அது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார்கள்

தொழுகை விஷயத்தில் கூட சந்தேகமானதை விட வேண்டும் என்று  மார்க்கம் நமக்குக் கட்டளையிடுகிறது.

உங்களில் ஒருவருக்கு தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் 990

நபி (ஸல்) அவர்களுடைய பேரன் ஹசனுக்கு இதைத் தான்  கட்டளையிட்டார்கள்.

நீ சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகம் இல்லாததின் பக்கம் திரும்பி விடு. நிச்சயமாக உண்மை என்பது நிம்மதியாகும். பொய் என்பது சந்தேகமானதாகும்என நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹசன் (ரலி), நூல்: திர்மிதி 24420

சந்தேகமானதை விடுவதில் நபி (ஸல்) அவர்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “இது ஸதகா (தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2431)

தர்மப் பொருள்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஹராம். அதனால் கீழே கிடக்கின்ற பேரீச்சம் பழம் ஸதகவாக இருக்குமோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்ததால் அதைவிட்டு விலகிவிட்டார்கள்.

எது ஹராம்? எது ஹலால்? என்பது பற்றி நபி (ஸல்) அவர்களுடைய விளக்கத்தை பார்ப்போம்.

அல்ஹுஸனிய்யு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஹலாலாவது மற்றும் என் மீது ஹராமாவது எது? என்பதை பற்றி எனக்கு அறிவியுங்கள்” என்றேன். நபியவர்கள் என் மீது பார்வையை ஏற்றி இறக்கினார்கள். (பிறகு) “நன்மை என்பது தன் பக்கம் உள்ளம் அமைதியடையுமோ இன்னும் எதன் பக்கம் உள்ளம் நிம்மதி பெறுமோ அதுவாகும். பாவம் என்பது உள்ளம் எதன் பக்கம் அமைதி பெறாதோ இன்னும் உள்ளம் எதன் பக்கம் நிம்மதியடையாதோ அதுவாகும். முஃப்திகள் உனக்குத் தீர்ப்பு வழங்கினாலும் சரியே. நாட்டுக் கழுதையின் இறைச்சியின் பக்கமும், கோரைப் பற்களுள்ள விலங்கினங்களின் பக்கமும் நெருங்காதே!” என்று கூறினார்கள்.  (நூல்: அஹ்மது 17076)

நாம் அல்லாஹ்விற்கு பயந்து சந்தேகமானதை விட்டால் இந்த உலகத்தில் நஷ்டம் வரும். ஆனால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.

நீ அல்லாஹ்விற்கு பயந்து ஏதேனும் விஷயத்தை விட்டால் அதை விட சிறந்ததை அல்லாஹ் உனக்கு தருவான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது 19819)

உலகத்தில் நாம் வாழ்கின்ற போது ஒரு தெருவில் நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வழியில் கலவரம் அல்லது போலீஸ் தடியடி நடக்கிறது என்று யாராவது சொன்னால் அந்த வழியில் செல்ல மாட்டோம்.  நாம் நேரில் பார்க்காவிட்டாலும் சந்தேகம் என்று வந்துவிட்டால் ஓதுங்கிக் கொள்வோம். அதே போலத் தான் மார்க்க விஷயத்தையும் நாம் அணுக வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

சிறுவர்களைப் பாதிக்கும் சின்னத்திரை

டி.வி.யை அணையுங்கள்

அபூ உஸாமா

விஷால் களைப்பாகவும் வெண் திரையில் மூழ்கிப் போன உறக்கமிழந்த கண்களுடன் காட்சியளித்தான். அவன் ஏதோ அலைக்கழிப்புக்கு ஆட்பட்டிருப்பது அப்படியே அப்பட்டமாகத் தெரிந்தது.

படிப்பில் தொடர் புறக்கணிப்பு, அக்கறையின்மை, ஆர்வமின்மை, ஒரு வித்தியாசமான பழக்கவழக்கம் எல்லாம் அவனிடத்தில் குடிகொண்டுள்ளன என்று அவனது பெற்றோர், தாத்தா பாட்டி ஆகியோர் கவலையுடன் தெரிவித்தனர்.

இதற்குக் காரணம் என்ன? இரவில் அதிகமான நேரத்தை டி.வி. பார்ப்பதில் செலவழிக்கின்றான் என்று விஷாலின் தாயார் தெரிவிக்கின்றார். தன்னுடைய வகுப்பு மாணவர்களைப் பற்றி, சக நண்பர்களைப் பற்றிப் பேச வேண்டிய விஷால் பென்-10, போக்மேன் (டி.வி. காட்சிகள்) பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான். விஷால் வகுப்பில் யாருடனும் பேசாமல் இல்லை. ஆனால் பேசினால் இந்தக் காட்சிகளை, இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்களிடம் மட்டுமே பேசுகிறான். இதில் ஆர்வம் இல்லாதவர்களிடம் பேசுவதில்லை. விஷாலுக்கு நிஜ உலக நண்பர்கள் இல்லை. நிழல் உலக நண்பர்கள் தான் இருக்கிறார்கள். இது ஒரு விதமான பழக்கத்திற்குக் குழந்தைகள் ஆட்பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை விட, பேயாட்டத்தின் ஆட்டிப் படைப்பில், அலைக்கழிப்பில் சிக்கிக் கிடக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

திமித்ரி கிறிஸ்டாகிஸ் என்பவர் சியாட்டில் நகரில் அமைந்திருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகள் பற்றிய ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் தனது ஆய்வில் தெரிவிப்பதாவது:

சிறு வயதுக் குழந்தைகளிடம் தொற்றிக் கொண்டிருக்கின்ற தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தால் பிந்தைய கால கட்டத்தில் அக்குழந்தைகளின் கவன சக்தி பாதிப்புக்குள்ளாகின்றது.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் டி.வி. பார்க்கின்ற 1 வயது முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் 7 வயதை அடையும் போது பெரும்பாலும் அக்குழந்தைகளின் பத்து சதவிகித கவனத்திறன் பாதிப்புக்குள்ளாகி விடுகின்றது.

இதே குழந்தைகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் டிவி பார்த்தால் அவர்கள் ஏழு வயதை அடையும் போது 30 சதவிகித கவனத் திறன் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

அளவுக்கு அதிகமான டி.வி. பார்த்தல் குழந்தைகளின் கூரிய பார்வையில் மட்டுமல்லாமல் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில், செயல்பாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கவனக்குறைவு, உண்மையான சாத்தியமான வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளாத தன்மை, நண்பர்களிடமிருந்து இயற்கைக்கு மாற்றமான சக்தியை எதிர்பார்க்கும் மனநிலை போன்ற பாதிப்புகள் இதில் உள்ளடங்கும்.

குழந்தைகளின் இரண்டு வருடம்

குழந்தைகளின் முதல் இரண்டு வருட வாழ்க்கை, மூளை வளர்ச்சியின் மிக இன்றியமையாத கால கட்டமாகும். ஒவ்வொன்றுக்கும் விடை காணத் துடிக்கும் வினா சிந்தனை, விளையாட்டு, பெற்றோர்களுடனும் மற்றவர்களுடனும் அது கொள்கின்ற கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் உலகில் வாழும் மனித சமூகத்தின் ஓர் அங்கமாக அந்தக் குழந்தை பரிணமிக்கின்றது.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அறவே டி.வி. பார்க்கக் கூடாது. இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் கண்டிப்பாக எக்காரணத்தை முன்னிட்டும் டி.வி. பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவர்களின் சங்கம் பரிந்துரை செய்கின்றது.

குழந்தைகளின் மூளையை அளவுக்கு அதிகமாக உந்தித் தள்ளி, அதைத் தூண்டி, கிளறி விடக் கூடிய வேலையை டி.வி. நிகழ்ச்சிகள் செய்கின்றன. இது மிகப் பெரிய பிரச்சனையாகும். எந்த அளவுக்கு அதிகமதிகம் குழந்தைகள் டி.வி. பார்க்கின்றனவோ அந்த அளவுக்கு அந்தக் குழந்தைகள் உணர்ச்சிவசப்படுகின்றன. ஒருவிதமான அமைதியின்மைக்கும், கலவரத்திற்கும் கட்டுப்பாடற்ற தன்மைக்கும் உள்ளாகின்றன. எதிலும் கவனம், சிந்தனை செலுத்துகின்ற பக்குவத்தை முற்றிலும் அந்தக் குழந்தைகள் இழந்து விடுகின்றன.

குழந்தைகளின் இப்படிப்பட்ட மனநிலை, செயல்பாட்டுக்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு,

யதார்த்த வாழ்க்கையில் செயல்களுக்கும் சம்பவங்களுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கும். உதாரணமாக, ஒரு மனிதனை மற்றொருவன் தாக்குகிறான் என்றால் பாதிக்கப்பட்டவன் மருத்துவமனைக்குச் செல்வான், அதன் பிறகு தனது வீட்டுக்குச் செல்வான். அங்கு அவனது உறவினர்கள் ஆறுதல் கூறுவார்கள். இப்படியாக ஒரு யதார்த்த வாழ்க்கையில் சம்பவம் நடந்தால் அதன் தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஒருவன் மற்றொருவனைத் தாக்கினால் உடனே அவன் பழிவாங்கப் புறப்படுவான். துரத்துவான். அல்லது அவனது சந்ததி பழிவாங்க வருவான். இப்படியாக அடுத்தடுத்து விளைவுகள், நிகழ்வுகள் சென்று கொண்டேயிருக்கும். இதுபோன்று டி.வி. நிகழ்ச்சியில் உடனுக்குடன், திடீர் திடீரென்று காட்டப்படுகின்ற காட்சி மாற்றம் உண்மையானதல்ல.

இப்படி அவசரமான, அதிரடியான, யதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான காட்சி மாற்றங்கள், அதைக் காணும் குழந்தைகளின் மூளையில் நியூரான் (மூளைக்கும் உடலின் இதர பகுதிகளுக்கும் செய்தியைக் கொண்டு செல்லும் நரம்பு செல்) இணைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு குழந்தை டி.வி.க்கு முன்னால் வசீகரம் செய்யப்பட்டு அமர்ந்திருக்கும் போது நரம்பு மண்டலப் பாதைகள் உருவாக்கப்படுவதில்லை.

டி.வி. என்பது குடும்ப உறுப்பினர் இல்லை

பிரதான உணவு நேரம் குடும்ப நேரமாக அமைய வேண்டும். இந்த உணவு வேளையின் போது தான் குடும்பம் ஒன்றாக உட்கார்ந்து அன்றாட முக்கிய நிகழ்வுகளைப் பரிமாறிக் கொள்கின்றது. ஒரு நகைச்சுவை நேரமாகவும் இது ஆகிக் கொள்கின்றது. இந்தக் கலந்துரையாடல் ஒரு குழந்தையின் உளவியல் ரீதியிலான வளர்ச்சிக்குரிய ஒரு முக்கிய கட்டமாகும்.

குழந்தைகளின் படிப்பு நேரத்தில் பெற்றோர்கள் டி.வி. பார்க்கின்றனர். இது குழந்தைகளைப் படிப்பிலிருந்து திசை திருப்பி விடுகின்றது. எனவே பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் டி.வி.யை அணைப்பது பெற்றோர்களின் முழு முதல் கடமையாகும்.

டி.வி. பார்ப்பதை வரையறுத்தல்

பள்ளிக்கூட வேலை, விளையாட்டுப் பணி தொடர்பான கடமைகள் போன்றவை குடும்பத்திற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்குவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. டி.வி. பார்க்கும் நேரங்களை வரைமுறைப்படுத்துங்கள் அல்லது அதை முழுமையாகத் தவிர்த்து விட்டு அந்த நேரத்தைச் சேமியுங்கள். உங்களால் அதிக நேரம் குடும்பத்திற்கு ஒதுக்க முடியும்.

மாற்றுப் பரிகாரம், வழிமுறைகள்

புத்தகங்கள், மாத இதழ்கள், விளையாட்டுச் சாமான்கள், புதிர்கள், அட்டை விளையாட்டுக்கள் (செஸ், தாயம், குறுக்கெழுத்து போன்றவை) போன்ற சின்னத்திரை சாராத அதிகமான விளையாட்டுக்களை ஊக்குவியுங்கள். கண்ணாமூச்சு விளையாட்டு, வீட்டுக்கு வெளியே உள்ள விதவிதமான விளையாட்டுக்கள், ஹாபி எனப்படும் விருப்ப வேலைகள் போன்றவற்றில் நேரத்தைக் கழிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

நிகழ்ச்சிகளை நிரல்படுத்துதல்

கல்வி, படிப்பு, விருப்ப வேலைகளில் ஆர்வத்தை வளர்க்கின்ற டி.வி. நிகழ்ச்சிகளில் உட்காருங்கள். அந்த நிகழ்ச்சி நிரல்களை எடுத்து எல்லோருடைய பார்வை படும் விதத்தில் உங்கள் வீட்டிலுள்ள ஃபிரிட்ஜ், அலமாரி போன்ற இடங்களில் ஒட்டுங்கள். அதன்படி அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு டி.வி.யை உடனே அணைத்து விடுங்கள்.

குழந்தைகளுடன் கூட்டாக உட்கார்தல்

குழந்தைகள் டி.வி. பார்ப்பதற்கு அனுமதிக்க முடிவு செய்து விட்டால் நீங்களும் முழு நிகழ்ச்சி முடியும் வரை குழந்தைகளுடன் அமருங்கள். முழுமையாக உட்கார முடியாவிட்டால் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் அந்தக் காட்சியைக் காணுங்கள். டிவியின் ஓசை, நிறங்களின் தகவு ஆகியவற்றைச் சரியாக அமைத்து விட்டு இடையிடையே நிகழ்ச்சிகளைக் கண்காணித்துக் கொள்ளுங்கள்.

குடும்ப விதி

குழந்தைகளின் வீட்டுப் பாடம் முடிந்த பிறகும் அன்றாடம் பார்க்கும் பணியில் சலிப்பு ஏற்பட்ட பிறகும் மட்டுமே டி.வி. பார்ப்பது என்பதை குடும்ப விதியாக்கி அதைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்.

குழந்தைகள் அடிக்கடி தங்களுக்கு விருப்பமான சேனல்களை யாருக்கும் தெரியாமல், சப்தத்தைக் குறைத்து வைத்துக் கொண்டு டிவிக்கு மிக அருகில் உட்கார்ந்து கொண்டு பார்க்கின்றனர். இது கண்டிப்பாகக் குழந்தைகளின் பார்வை சக்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதைப் பெற்றோர்கள் கண்காணிப்பதுடன் மோசமான சேனலை குழந்தைகள் கையில் கிடைக்காமல் இருப்பதற்கு, கண்ணில் படாமல் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட சேனலை லாக் செய்து விடுங்கள்.

சின்னத் திரையில் வந்து கொட்டுகின்ற தகவல்கள், செய்திகள் போன்றவற்றை விளங்குகின்ற ஆற்றல் திறனை, உணர்வதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள். டிவியில் உள்ள அறிவுகளை குழந்தைகள் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் அது கட்டிக் கிடக்கும் கழிவு நீர் போன்று ஆகிவிடும்.

ஆனால் நாம் குறிப்பிட்ட அந்த வயது வரம்புக்குக் கீழ் உள்ள குழந்தைகள் டிவி பார்க்க ஆரம்பித்தால் மூளை வளர்ச்சி பரிமாணத்தின் பயங்கரமான பெரும் விளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்டுத்தி விடும்.

பெற்றோர்கள் இதற்குப் பெரிய முக்கியத்துவத்தை அளித்து, குழந்தைகளின் உடல் நலன், எதிர்கால நலன், வளர்ச்சி, முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு டிவி சுவிட்சுகளை அணைத்து விடுவோமாக!

(Source: The Hindu, Sunday Magazine – 26.07.2011)

—————————————————————————————————————————————————————-

தொடர்: 2

திருக்குர்ஆன் விளக்கவுரை

அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும் அந்த நாள் நெருங்க, நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளனர். அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புக்கள் நமக்கு உதவும் என்பதால் அவற்றில் சிலவற்றை அறிந்து விட்டு விளக்கவுரையைத் தொடர்வோம்.

ஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக அவள் நடத்தப்படுவாள் என்பது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும்.

ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4777

இந்த நிலையை இன்றைக்குப் பரவலாகப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.

பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியவர்களில் சிலர் மிகவும் உயர்ந்த வசதியைப் பெறுவது உலகம் தோன்றியது முதல் நடந்து வரும் நிகழ்ச்சிகளே! ஆயினும் அத்தகைய பின்தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைவதென்பது கியாமத் நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமாகும்.

வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிகவும் உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் யுக முடிவு நாளின் அடையாளமாகக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50

இன்றைக்கு அரபியர்களுக்குக் கிடைத்திருக்கும் வசதியான வாழ்வும், இன்னபிற பகுதிகளில் நடக்கும் புரட்சிகரமான மாறுதலும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.

குடிசைகள் கோபுரமாகும்

அன்றைய மனிதன் பெரும்பாலும் குடிசைகளிலேயே வாழ்ந்தான். பணம் படைத்தவர்கள் ஓட்டு வீட்டில் வசித்தனர். உயரமாக அடுக்கு மாடிக் கட்டிடங்களை எழுப்பும் மூலப் பொருட்கள் அன்று கண்டு பிடிக்கப்படவில்லை

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யுக முடிவு நாளின் அடையாளமாகக் குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி  7121 )

விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும் மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல்: புகாரி  80, 81, 5577, 6808, 5231

ஒளிவு மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த விபச்சாரம் இன்று வெளிப்படையாக, பகிரங்கமாக நடக்கின்றது.  அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும் அன்னியப் பெண்களுடன் உறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துங்கள் என்று பண்பாடு மிக்க இந்தியா போன்ற நாடுகளே செய்யும் விளம்பரமும் விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது என்பதை உணர்த்துகிறது.

மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி விட்டன. நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் உயர் ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை.

இந்தத் தீமைக்கு எதிராகப் போராடக் கடமைப்பட்ட அரபு நாடுகளில் கூட இத்தீமை தலைவிரித்தாடும் போது அந்த நாள் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதும் அப்பொறுப்புகளில் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாகும்.

“நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது, “எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  “தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள். (நூல்: புகாரி  59, 6496)

பாலைவனம் சோலைவனமாகும்

இன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார உயர் நிலை 200 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக் கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்குவதற்காக ஏழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம்.

எதற்கும் உதவாத பாலை நிலம் என்று உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில் சோலைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமே!

செல்வம் பொங்கிப் பிரவாகித்து அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும் அரபுப் பிரதேசம் நதிகளும் சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்தநாள் வராது. (நூல்: முஸ்லிம் 1681)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

காலம் சுருங்குதல்

காலம் வெகுவேகமாக ஓடுவதை இன்று நாம் காண்கிறோம். மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து அவன் கண்டு பிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கி விட்டதைக் காண்கிறோம்.

ஒரு வாரம் பயணம் செய்யும் தூரம் ஒரு நாளில் சர்வ சாதாரணமாகக் கடக்கப்படுகின்றது. ஒரு வாரத்தில் செய்யப்படத்தக்க வேலைகள் ஒரு நாளில் செய்து முடிக்கப்பட சாதனங்கள் இன்று உள்ளன. உலகில் எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு உலகையும் எட்டி விடுகின்றன. இத்தகைய முன்னேற்றங்களும் கூட அந்த நாள் சமீபித்து வருகின்றது என்பதற்கான அடையாளமே.

“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும்” என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். (நூல்: திர்மிதீ 2254)

இப்படிப் பல அடையாளங்கள் வந்து விட்டன என்றாலும் அந்த நாள் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த நாள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு நெருக்கமாக வரும் போது சில மகத்தான அடையாளங்கள் நிகழவுள்ளன. அந்த அடையாளங்கள் தோன்றி விட்டால் அந்த நாள் எவ்வளவு சமீபத்தில் இருக்கிறது என்று முடிவு செய்து விடலாம். அந்த அடையாளங்களையும் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

தவ்ஹீத்வாதிகளே!

கே.எம். அப்துந் நாசிர்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் காரியங்களில் மூழ்கிக் கிடந்தது.

இறைவனின் பேரருளால் அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவ ஒளியை மக்களின் உள்ளங்களில் பாய்ச்சினான். ஐந்தும் பத்துமாய் இருந்தவர்கள் இலட்சக்கணக்கில் கொள்கையை நோக்கி அணிதிரண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்ட தவ்ஹீத் சொந்தங்கள் வாரி வழங்கிய அற்பக் காசுகள் ஒன்று திரட்டப்பட்டு பெரும் பெரும் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

ஒன்றுமே இல்லாமல் இருந்த போது இருந்த கொள்கைப் பிடிப்பு பெரும் பெரும் சொத்துக்களைப் பார்த்தவுடன் சிலரது உள்ளங்களை இன்றைக்கு சறுகச் செய்துள்ளது. சத்தியத்தைப் போதிக்க வேண்டும், இணை வைப்பை ஒழிக்க வேண்டும், அனாச்சாரங்களை அழிக்க வேண்டும் என்று பேசிய நாவுகளில் சில இன்று ஊர் வாதம் பேசத் துவங்கியுள்ளது. கொள்கையில் சறுகத் துவங்கியுள்ளது. கொள்கைவாதிகளை வீழ்த்திட கொடுமைவாதிகளோடும் கைகோர்க்கத் தயங்கவில்லை அவர்கள்.

இத்தகைய ஷைத்தானிய சக்திகளிடமிருந்து கொள்கைவாதிகளை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். தவ்ஹீத் சொந்தங்கள் தங்களுக்கு மத்தியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

சகோதரா! இது குருதி உறவல்ல. இவ்வுலகோடு முடிந்து போவதற்கு! மாறாக இது இறப்பிற்குப் பிறகும் தொடரும் கொள்கை உறவு. நம்மை பிளவுபடுத்தத் தான் எத்தனை எத்தனை ஷைத்தானின் சதிவலைகள், அவதூறுகள்,  விமர்சனங்கள். நம்மை பிளவு படுத்துவதன் மூலம் நம் கொள்கையை நசுக்கிவிடலாம் என நாசக்காரன் நினைக்கின்றான்.

ஆனால் நம்முடைய அழகிய முன்மாதிரி, நம் உயிரினும் மேலான நாயகத்தின் வழிகாட்டல்கள் நம்மோடு இருந்தால் நம்மை யார் தான் பிரித்திட இயலும். இதோ நாயகத்தின் வழிகாட்டல்களில் நம் உள்ளங்களை லயிக்கச் செய்வோம். அதில்தான் நம் எதிர்கால வெற்றி கனியவிருக்கிறது.

கொள்கை உறவு ஒரு கட்டிடம். சிறு மழை வெள்ளத்தில் சரியக்கூடிய கட்டிடமல்ல. புயலடித்தாலும் பூமியே நடுங்கினாலும் தளராத கட்டிடம்.  இதோ நம் கொள்கைத் தலைவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள்  ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள்.  (நூல்: புகாரி 481)

நம் கொள்கை உறவு வெறும் பேச்சோடு, புன் சிரிப்போடு முடிந்து விடக்கூடியதல்ல. இது உயிரோடும். உள்ளத்தோடும் கலந்த உறவு. இதோ நம் வழிகாட்டி நன்குரைப்பதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டு வதிலும் (உண்மையான) இறைநம்பிக்கை யாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உட-ன்) ஓர் உறுப்பு சுகவீனம டைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல்: புகாரி 6011

நாம் ஓரிறையையும். இறைத்தூதர் நெறியையும் உண்மையில் பிசகற அறிந்த இறை நம்பிக்கையாளர்கள் என்றால், நம் கொள்கைச் சகோதரனை தன்னைப் போல் பாவிக்க வேண்டும் என நம் தலைவர் நமக்கு வழிகாட்டுவதைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்:  அனஸ் (ரலி), நூல்: புகாரி 13

இந்த நேசம் என்பது காசுக்காகவோ, சுய லாபத்திற்காகவோ, உலக ஆதாயத்திற்காகவோ ஏற்பட்ட நேசமல்ல. மாறாக கொள்கைச் சகோதரன் என்பதால் ஏற்பட்ட நேசம். எங்கள் இணைவும், பிரிவும் ஏகத்துவத்திற்காகவே, ஏகனுக்காகவே என்பதைப் பறைசாற்றும் நேசம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, “எங்கே செல்கிறாய்?” என்று அந்த வானவர் கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், “இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்என்று கூறினார்.

அதற்கு அவ்வானவர், “அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், “இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்என்று கூறினார்.

அதற்கு அந்த வானவர், “நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்என்று சொன்னார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5016

நம் கொள்கைக் கட்டிடம் சரிந்திடாமல் காப்பதற்காக அதன் இரும்புக் கம்பிகளாய், கான்கிரீட் கலவையாய், கற்பாறையாய் நமக்குள் மலர வேண்டியது நேசம். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதென்பது போல் அற்பமென்றாலும் அன்பைத் தருமென்றால் அம்முறையே நம் சகோதரர்களின் சுவாசமாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியேஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்:  முஸ்லிம்

கொள்கையில் ஒன்றான நாம் ஓர் உடலென்றால் நம் விரலே நம் கண்ணைக் குத்தலாகுமா? நம் பற்களே நமது நாவை பதம் பார்க்கலாமா? கூடாது. நம் உடலிற்குள் எந்த விஷக்கிருமியும் நுழைந்து விடக்கூடாது. நாமே நம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. நம் கிளைகள் முறிந்து விடக்கூடாது. இதுதான் நம் ஏகத்துவ மார்க்கத்தில் தலையாயது. இதோ நம் நேசர் விடையளிப்பதைப் பாருங்கள்.

மக்கள், “இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிப்பாகும்

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 48

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அது போல் கொள்கைக் குடும்பத்திற்குள்ளும் சில சறுகல்கள் தோன்றக்கூடும். அதில் நாம் சறுகிவிடக் கூடாது. நம் ஆணிவேரான கொள்கை அறுந்து விடக்கூடாது. நம் பிடிமானம் நம் கொள்கை உறவே. அதில் நம் பிடி தளர்ந்திடலாமா? தீயில் எரித்தாலும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் என்பார்கள். அது கற்பனையென்றாலும் நம் கொள்கையுறவில் அது உண்மையாகட்டும்.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 49:9, 10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக் கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர் தான்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி), நூல்: முஸ்லிம் 5003

நம் ஏகத்துவப் பூந்தோட்டத்தை நாசமாக்கும் எந்தக் களைகளும் முளைத்து விடக்கூடாது. களைகள் வளர்ந்தால் நம் மலர்த்தோட்டமே மணமற்றுப் போய்விடும். இறையச்சம் எனும் உரம் தான் களைகளை வேரறுக்கும் பூச்சிக் கொல்லியாகும். நம் கொள்கைத் தோட்டத்தின் செழிப்பிற்கு அடிப்படையாய் இறையச்சம் திகழ வேண்டும். இதோ இறுதித்தூதின் இறைச் செய்தி இயம்புவதைப் பாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

அல்குர்ஆன் 49:11, 12

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். “அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான் இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5010

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டுவிடவுமாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகின்றான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 6951

நம் சகோதரன் நமக்கு அநீதி இழைத்தாலும் நாம் அவருக்கு உதவியே செய்ய வேண்டும். உதவி என்பது கொட்டக் கொட்ட குனிவதல்ல. மாறாக அநியாயக்காரனின் கரம் பிடித்து அவனை நம் வழிக்கு வரவழைப்பது தானே தவிர அவனைப் பகைப்பதல்ல. அது நம் நோக்கமுமல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6952

தியாகத் திருநாளின்போது உரையாற்றிய நம் இறுதித் தூதின் இறுதியுரையில் நாம் படிப்பினை பெறுவோம். இனிவரும் காலம் நம் வசந்த காலமாக வேண்டும். இனி தென்றல் தான் தவழ வேண்டும். நம் கொள்கைச் சகோதரர்கள் ஓர் உடலாக, ஒரு கூட்டுக் கிளிகளாக என்றும் வலம் வர சபதமேற்போம்.

(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்என்றோம். அடுத்து “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் “இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் “ஆம்என்றோம். நபி (ஸல்) அவர்கள் “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 67

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? கணவன் மனைவி பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்குச் சொந்தம்?

ஸாபித்

கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டுப் பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.

  1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய் தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பாலருந்தும் பருவத்தில் தாயினுடைய கவனிப்பில் இருப்பது தான் குழந்தையினுடைய உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறு தான் (உணவுப்) பாத்திரமாகும். என்னுடைய மார்பகங்கள் தான் அவனுக்கு குடிபானமாகும். என்னுடைய மடி தான் அவனுக்கு தங்குமிடமாகும். இவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டு என்னிடமிருந்து இவனைப் பிரித்துக் கொண்டு செல்ல நாடுகிறார்என்று கூறினார். நபியவர்கள் “நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீ தான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமை படைத்தவள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி)

நூல்: ஹாகிம் பாகம்: 2, பக்கம்: 225

குழந்தை தாயிடமே இருக்கும் என்ற சட்டம் விவாகரத்துச் செய்யபட்டவள் மறுமணம் செய்யாமலிருக்கும் வரை தான். அவள் மறுமணம் செய்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தைக்கு வந்துவிடும். இதனை “நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீ தான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமை படைத்தவள்” என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

தாய் மறுமணம் முடித்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தையிடம் வந்துவிடுகிறது. என்றாலும் தாய்க்கும் அக்குழந்தைகளின் விஷயத்தில் உரிமையிருப்பதால் தாய் குழந்தைகளைச் சந்திக்க விடாமல் தடுப்பதோ, தாயைப் பற்றி குழந்தைகளிடத்தில் வெறுப்பு உண்டாக்குவதோ கூடாது. தான் பெற்றெடுத்த குழந்தைகளைச் சந்திக்க தாய்க்கு முழு உரிமையிருக்கிறது.

  1. பாலருந்தும் பருவத்தை குழந்தை கடந்து விட்டால் தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று தீர்மானிக்கின்ற விருப்பத்தை இஸ்லாம் குழந்தைக்கு வழங்குகிறது. இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ராபிஃவு பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தைத் தழுவ மறுத்தாள். (அவர்களுக்கு) பால்குடி மறந்த அல்லது அதற்கு ஒத்த நிலையில் (ஒரு பெண் குழந்தை) இருந்தது. அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “என்னுடைய மகள்என்றாள். ராபிஃவு (ரலி) அவர்கள் “என்னுடைய மகள்என்றார். நபி (ஸல்) அவரை ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அப்பெண்ணையும் ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அக்குழந்தையை இருவருக்கும் மத்தியில் வைத்து பிறகு “நீங்கள் இருவரும் அதை அழையுங்கள்என்று கூறினார்கள். அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது. நபியவர்கள் “அல்லாஹ்வே! இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டுஎன்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார்.

அறிவிப்பவர்: ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

நூல்: அபூதாவூத் 1916

இந்த ஹதீஸிலிருந்து குழந்தை பால் குடிப்பருவத்தைக் கடந்து விட்டதென்றால் அதனுடைய விருப்பப்படி தாயையோ அல்லது தந்தையையோ தேர்ந்தெடுக்கும்படி செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு தாய் மற்றும் தந்தை இருவருக்கு மத்தியில் (யாருடன் வசிக்க அவன் விரும்புகிறானோ அவரை) தேர்ந்தெடுக்கும் உரிமையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 1277

இந்த ஹதீஸில் வந்துள்ள “சிறுவன்” என்ற வார்த்தைக்கு அரபி மூலத்தில் “குலாம்” என்ற சொல் வந்துள்ளது. இது குழந்தைப் பருவம் முதல், பருவ வயதை அடைகின்ற வரை உள்ள நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இதிலிருந்து பால்குடிப் பருவம் கழிந்ததிலிருந்து பருவ வயதை அடையும் நிலையிலுள்ள குழந்தைகளின் விருப்பத்தைப் பொறுத்தே அது தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று முடிவு செய்யப்படும். குழந்தை யாரை விரும்புகிறதோ அவர்களிடம் தான் அது ஒப்படைக்கப்படும்.

குழந்தைக்கு விபரம் தெரிந்த பிறகு அதனுடைய விருப்பத்தைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதே குழந்தைக்கு நன்மை பயக்கும். குழந்தை விரும்பாத நபர்களிடம் அது ஒப்படைக்கப்பட்டால் இங்கு குழந்தையின் உரிமை பறிக்கப்படுவதோடு அதற்கு இதனால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே தான் விபரமறிந்த குழந்தைகளுக்கு இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.

மேலும் குழந்தைகள் தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் அதற்குச் செலவு செய்கின்ற பொறுப்பு தந்தையைச் சார்ந்ததாகும். பின் வரும் திருமறை வசனத்திலிருந்து இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.

அல்குர்ஆன் 2:233

குழந்தை தாயிடம் இருக்கும் காலத்தில் தந்தை குழந்தையைச் சந்திப்பதற்கோ அதனுடன் பழகுவதற்கோ யாரும் தடைவிதிக்க முடியாது. தன் குழந்தையை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ள தந்தைக்கு முழு உரிமை உள்ளது.