ஏகத்துவம் – நவம்பர் 2016

தலையங்கம்

தலையே போனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை இழக்க மாட்டோம்

நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில்  பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.  (அல்குர்ஆன்  2:109)

யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்’’ எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.  

அல்குர்ஆன் 2:120

அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்’’ என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! 

 அல்குர்ஆன்  4:89

வேதம் கொடுக்கப் பட்டவர்கள் தங்கள் பங்கிற்கும், இறை மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள் தங்கள் பங்கிற்கும் முஸ்லிம்களைத் தங்கள் கொள்கையின் பால்  தடம் மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் உணர்த்துகின்றன. இது வரலாற்றில் நடந்து முடிந்த விஷயம் என்று கருதக் கூடாது. வரலாற்றின் ஒவ்வொரு காலக் கட்டத்திலும், இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும். அதன் ஒரு கட்டமாகத் தான் இன்று  இந்தியாவில்  முஸ்லிம்களை வழித் தடம் மாற்றுவதற்குரிய அனைத்து ஆயத்த வேலைகளையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையிலான சங்கப் பரிவாரங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தர்ஹா வழிப்பாட்டின் மூலம்  தங்கள் தனித்துவத்தை இழந்து தடந்தெரியாமல் உள்ளார்கள். இணை வைப்பாளர்களுக்கும், தங்களுக்கும் இடையே வேறுபாடும், வித்தியாசமும் இல்லாமல் உள்ளார்கள்.

அங்கு கோயில்; இங்கு தர்ஹா! அங்கு தேர்; இங்கு சந்தனக் கூடு! அங்கும் உண்டியல்; இங்கும் உண்டியல்! அங்கு திருநீறு – அதாவது சாம்பல்; இங்கு சந்தனம்! அங்கும் கோபுரம்; இங்கும் கோபுரம்! அங்கும் கொடி; இங்கும் கொடி! அங்கும் யானை ஊர்வலம்; இங்கும் யானை ஊர்வலம்! அங்கு கச்சேரி, மேள தாள வாத்தியம் மற்றும் வெடி முழக்கம்; இங்கும்  கச்சேரி, மேள தாள வாத்தியம் மற்றும் வெடி முழக்கம்! கோயிலிலும் முடி காணிக்கை; தர்ஹாவிலும் முடிக் காணிக்கை! அங்கும் பிறந்த தின விழாக்கள் நீத்தார் நினைவு நாட்கள்; இங்கும் பிறந்த தின விழாக்கள், நினைவு நாட்கள்!

இப்படி சடங்கு சம்பிரதாயங்கள் சகலத்திலும் சரி நிகர் சமம், சங்கமம், எம்மதமும் சம்மதம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு மத்தியில் தூய இஸ்லாத்தை நிலைநாட்டுவோர் மீது  காவிக்கறை படிந்தவர்கள் மட்டுமின்றி, மதச் சார்பற்ற சிந்தனை உள்ளவர்கள் கூட வன்முறை, பயங்கரவாதப் பழிகளைச் சுமத்துகின்றனர். வளரும் பயங்கரவாதச் சிந்தனைக்கும்  செயல்களுக்கும் அப்பழுக்கற்ற  இந்தத் தூய இஸ்லாமிய சிந்தனை தான் காரணம் என்று அபாண்டமாகப் பேசுகின்றனர். உண்மையான ஓரிறைக் கொள்கை தான் பயங்கரவாதச் செயல்களுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கின்றது என வாய் கூசாமல் புரட்டு வாதம் புரிகின்றனர்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் தெளிவான விஷயம், நடுநிலை வாதிகள் முதல் நயவஞ்சகர்கள், சங்கப் பரிவாரங்கள் வரையிலான அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் தாம் கொண்டிருக்கின்ற கொள்கை அடிப்படையில் வாழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். அவர்களை அவர்களுடைய ஏகத்துவக் கொள்கையிலிருந்து இணை வைப்பின் பக்கம் திருப்பி விட வேண்டும் என்பது தான் அவர்கள் அனைவரின் நோக்கமாகும்.

இப்போது இந்திய முஸ்லிம்களிடம் முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களாக      எஞ்சியிருப்பதும் மிஞ்சியிருப்பதும்  திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, இறந்தவர்களின் அடக்க முறை ஆகியவை தான். இந்த அடையாளங்களையும் தொலைத்து விட்டால் முஸ்லிம்களையும், மற்றவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றி ஒருங்கிணைந்து விடலாம் என்ற தப்புக் கணக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பரிவாரங்கள் களமிறங்கியிருக்கின்றன.

முஸ்லிம்களிடம் உள்ள மிச்ச, சொச்ச அடையாளங்களை அப்புறப்படுத்துவதற்கும், அகற்றுவதற்கும் உச்ச நீதி மன்றம் உரிய சந்தர்ப்பத்தை நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதனுடைய எதிர்பார்ப் பிற்கும், ஏக்கத்திற்கும் தக்க வகையில் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் முஸ்லிம் விரோத பாசிஸ அரசு மத்தியில் அமர்ந்துள்ளது.

‘நீ ஏன் வாய் பொத்திக் கொண்டு வாளாவிருக்கின்றாய்? அதற்கான வாசலை நான் திறந்து விடுகின்றேன்; நீ புகுந்து விளையாடு’ என்று பாசிஸ பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. அதற்கேற்ப மத்திய அரசு இந்த சந்தடி இடைவெளியில் தனது மதச்சார்பின்மை என்ற பெயரில் தனது பச்சோந்தித்தனத்தை வெளிக்காட்டுகின்றது,

உச்ச நீதிமன்றம் கருத்துக் கேட்டவுடன் மத்திய அரசு சட்ட ஆணையத்திடம் கருத்துக் கேட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு 16 கேள்விகள் அடங்கிய தாள் ஒன்றை வெளியிட்டு அதன்மீது வாக்கெடுப்பு நடத்துகின்றது.

பெரும்பான்மை மக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்புகின்றார்கள் என்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவதற்கு இந்த ஆயுதத்தை சட்ட ஆணையம் கையில் எடுத்துள்ளது. மோடி எப்படி ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் மோடி வித்தை காட்டி மோசடியாக மக்கள் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டுகின்றார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அது போல் இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையைக் காட்டி சிறுபான்மையினரின் உரிமையியல் சட்டங்களைப் பறிப்பதற்கு சட்ட ஆணையம் சதி செய்கின்றது. உச்ச நீதிமன்றம் உரிமையியலை ஓய்ப்பதற்கும், ஒழிப்பதற்கும் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றது. அப்படி ஒரு நெருக்கடியும், நிர்ப்பந்தமும் வந்தால் முஸ்லிம்கள் தங்கள் உயிர் போனாலும்  உரிமையியலை ஒரு போதும் இழக்க மாட்டார்கள் என்பதை உரக்கத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதில் வேடிக்கை  என்னவெனில், மத்திய அரசு தலாக் விஷயத்தில் பச்சோந்தித்தனத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்தியிருப்பது தான்.

‘‘தலாக் நடைமுறையை, மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாகத் திகழும், இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது’’ என்று கூறியுள்ளது.

மதச்சார்பின்மையில் உண்மையிலேயே பாஜகவுக்கு நம்பிக்கை இருக்குமானால் உ.பி.யில் ராமர் கோயில் விவகாரத்தைக் கிளப்பியிருக்கக் கூடாது. ஆனால் தேர்தலுக்காக இப்போது அதைக் கிளப்பியிருக்கின்றது.

பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை பகிரங்கமாக அறிவித்து,  அதே கொள்கையில் தான் பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்கள் உறுதியாக உள்ளன. தற்போது காவிரி விவகாரத்திலும் மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அதைச் சொல்ல உச்ச நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்று திமிர் வாதம் பேசினார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கருத்தை நீதிமன்றம் வெளியிடும் போது மட்டும் சட்டத்திற்கு அப்படியே கட்டுப்பட்டு நடப்பது போன்று வேஷம் போடுகிறார்கள் என்பதையும் நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்

உம்மை ஒருபோதும் நான் மறவேன்…

நாகூர் இப்னு அப்பாஸ்

இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம்.

நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில் ஒன்றான “உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்று துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய விரோதக் கருத்துக்களைப் பார்ப்போம்.

இந்தப் பாடலை அவர் துவங்குவதற்கு முன்னால் “திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து” என்று துவங்கும் குணங்குடி மஸ்தான் பாடிய ஓர் நீண்ட பீடிகையைப் பாடுவார்.

அந்தப் பீடிகை சொல்லும் கருத்து என்னவென்றால், உலகத்தில் இருக்கின்ற கோடான கோடி மக்கள் நாகூர் மீரானுடைய அருளை எதிர்ப்பார்த்துக் காத்து நிற்கின்றனர் என்பதாகும்.

அருள் புரிவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம்; அதில் எவருக்கும் எவ்விதப் பங்கும் இல்லை. அல்லாஹ்வை விடுத்து ஏனையோர் அருள் புரிவார்கள் என்று வாதிட்டால் அது தெளிவான இணைகற்பித்தலே என்ற தகவலை இதற்கு முந்தயை தொடர்களில் அறிந்திருக்கின்றோம்.

ஆகையால், இப்பாடலின் முதல் அடியிலிருந்து இப்பாடல் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிரானது என்பதைப் பார்ப்போம்.

உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா; ஷாஹே மீரா

எம்மான் நபி நாதர் வாஞ்சை மிகும் பேரா; நாகூர் மீரா

நாகூர் ஷாகுல் ஹமீதை, தான் ஒரு போதும் மறக்காமல் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் நபிகள் நாயகத்தின் பாசத்திற்குரிய பேரனாக இருக்கின்றார் என்றும் கூறுகின்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி),  ஹுசைன் (ரலி) என்ற தன்னுடைய பேரர்கள் மீது அதிக அளவு பாசம் வைத்திருந்தார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்கின்றோம். இன்னும் ஸைனப் (ரலி) என்ற தன்னுடைய மகள் வழிப் பேத்தியான உமாமாவை, தொழும்போது தோளில் சுமந்திருக்கிறார்கள் என்று அறிந்திருக்கின்றோம்.

அவ்வாறிருக்க, ஷாகுல் ஹமீது என்ற பேரன் நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வழியில் வந்தார்? அவர் மீது நபிகளார் எப்போது பாசத்தோடு நடந்தார்கள்?

பாடலின் முதல் அடியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி தன்னுடைய கப்ரு வணக்க விசுவாசத்தை கவிஞர் நிரூபித்திருக்கிறார்.

அவ்லியாக்கள் என்று இவர்களால் அழைக்கப்படும் அனைவருக்கும் நபிகள் நாயகத்தின் பரம்பரையில் வந்தவர் என்ற பட்டத்தை வழங்கி பக்தி ஊட்டுவது கப்ரு வழிபாடு செய்வோரின் வழிமுறையாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அடுத்து இப்பாடலின் அடி, “துன்பங்கள் எழும் போது உன் புகழ் பாடி; நிம்மதி அடைவனே தினம் தினம் நாடி; அன்புடன் ஆளுகின்ற அன்னலே மீரா; அடியாரின் குறை தீர்க்கும் அன்னலே மீரா” என்பதாகும்.

அனைத்து மனிதர்களுக்கும் இன்பம், துன்பம் என்பது இறைவனின் ஏற்பாடான விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது.

ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்வில் இன்பம் ஏற்பட்டால் இறைவனைப் புகழ வேண்டும். துன்பம் ஏற்பட்டால் பொறுமையோடு நிராசை கொள்ளாமல் துன்பத்தை நீக்க இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இதுதான் உண்மையான ஓர் இறைநம்பிக்கையாளன் செய்ய வேண்டிய கடமை.

ஆனால், இப்பாடலின் இவ்வரி சொல்லக்கூடிய செய்தி, துன்பம் ஏற்படும் போது ஷாகுல் ஹமீதை தினம் தினம் புகழ்ந்தால் நிம்மதி கிடைக்கும் என்பதாகும்.

அனைவரின் துன்பங்களையும் நீக்கக் கூடிய ஆற்றல் அல்லாஹ்வின் வசமே இருக்கின்றது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17:56

இறை வசனம் இவ்வாறு கூற தனது துன்பத்தை நாகூராரே நீக்குகிறார் என்று இப்பாடல் கூறுகிறது.

இன்னும், மக்கத்து காஃபிர்கள் கூட தங்களுக்குப் பெரும் துன்பங்கள் ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடம் முறையிடுவார்கள் என்றும், அந்தத் துன்பத்தை இறைவன் நீக்கியவுடன் நன்றி  மறந்து இணை கற்பிப்பார்கள் என்றும் இறைவன் கூறுகின்றான்.

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்

அல்குர்ஆன் 17:67

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்த வனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன

அல்குர்ஆன் 10:12

ஆனால், இந்தப் பாடலின் வரிகளோ துன்பத்தின் போது கூட அல்லாஹ்விடம் கையேந்துவது பற்றிக் கூறாமல் நாகூர் மீரானிடம் தான் புகழ்பாடி பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்கிறது.

இந்த அடிப்படையில் மக்கத்து முஷ்ரிக்கீன் களுடைய கருத்தை விட மிகவும் மோசமான கருத்துக்களைத்தான் இந்தப் பாடல்வரிகள் எடுத்துரைத்து, இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கின்றது என்பதை அறியலாம்

நாகூராரைப் புகழ்ந்ததினால் நிம்மதி அடைவதாகவும் அதே வரியில் தெரிவிக்கின்றார்.

மன நிம்மதி இறை நினைவாலே ஏற்படும்

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் 13:28

இறை நினைவால் தான் மன அமைதி ஏற்படும் என்று இறை வசனம் தெரிவிக்க நாகூராரை நினைத்துப் புகழ் பாடுவதால் தனக்கு நிம்மதி கிடைக்கிறது என்று கூறி இறை அந்தஸ்தை நாகூர் மீரானுக்கு இந்தக் கவிஞர் வழங்குகிறார்.

அன்புடன் ஆளக்கூடியவராகவும் நாகூரார் இருக்கின்றார் என்றும் இம்முதல் அடியில் தெரிவிக்கின்றார்.

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

அல்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

அல்குர்ஆன் 25:2

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

அல்குர்ஆன் 35:13

எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 67:1

ஆளுகின்ற அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே; அவனுக்கு அதிகாரத்தில் எவ்வித பங்காளியும் இல்லை என்று இத்தனை வசனங்களும் கூற அதற்கு மாற்றமாக இறைவனுடைய அதிகாரத்தில் நாகூராருக்குப் பங்கு இருக்கிறது என்று வாதிட்டு தெளிவான இணைவைப்பை ஏந்தி நிற்கக்கூடியதாக இப்பாடல் இருக்கிறது.

இப்பாடலின் அடுத்த அடிகளில் இடம்பெறும் ஒரு வரியில் “கருணையின் வடிவாக விளங்கிடும் கோணே” என்று இடம்பெறுகிறது.

கருணையின் வடிவாக நாகூர் மீரான் இருக்கின்றார் என்று இவ்வரியும் அவர் கருணைக் கண் கொண்டு அருள் புரிய வேண்டும் என்று அதற்கடுத்தடுத்த வரிகளும் எடுத்துரைக்கிறது.

உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர் தவிர (மற்றவருக்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று கொடுக்கப்படும் என்றோ, உங்கள் இறைவனிடம் அவர்கள் உங்களை வென்று விடுவார்கள் என்றோ, நம்பாதீர்கள்!’’ (எனவும் கூறுகின்றனர்.) நேர் வழி அல்லாஹ்வின் வழியே’’ என்று கூறுவீராக! “அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்’’ என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 3:73

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:268

மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

அல்குர்ஆன் 2:243

அடியார்களுக்கு அருள் புரிகின்ற கருணை யாளனாக அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான் இந்த வசனங்கள் கூறுகின்றன.

இறை விசுவாசிகள் இறை அருளையே எதிர்பார்க்க வேண்டும் என்று பின்வரும் வசனம் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:218

இப்பாடல் முழுவதிலுமுள்ள கருத்துக்கள் திருமறைக்குர்ஆனுக்கு எதிராகவும், இறைவனுக்கு எதிராகப் போர்கொடி தூக்கக் கூடியதாகவும் விளங்குகிறதே தவிர இஸ்லாத்தின் அடிப்படைக்கு ஒத்த ஒரு கருத்துக் கூட இடம்பெறவில்லை.

இவ்வாறிருக்க இதை எந்த அடிப்படையில் இஸ்லாமியப் பாடல்கள் என்று நம்பி வருகின்றனர் என்று புரியவில்லை.

—————————————————————————————————————————————————————-

தொடர்: 3

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தி இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

வலதுபுறத்தை அல்லாஹ் விரும்புவதாக ஹதீஸ் உள்ளதா?

உளூவில் விரும்பத்தக்க செயல்கள் என்று சிலவற்றை ஹிதாயா நூலாசிரியர் பட்டியலிடுகிறார்.

அதில் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பது சிறப்பிற்குரியது என்று கூறிவிட்டு எல்லாவற்றிலும் வலப்புறத்திலிருந்து துவக்குவதை அல்லாஹ் விரும்புவதாக நபி சொன்னார்கள் என்று புளுகியுள்ளார். இதோ அதற்கான ஆதாரம்:

الهداية شرح البداية – (1 / 13)

والبداءة بالميامن فضيلة لقوله عليه الصلاة والسلام إن الله تعالى يحب التيامن في كل شيء حتى التنعل والترجل

செருப்பணிதல், தலைவாருதல் என அனைத்திலேயும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை அல்லாஹ் விரும்புவதாக நபிகள் நாயகம் கூறியுள்ளதால் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பது சிறப்பானதாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம்  13

நாம் பார்த்த வரை எந்த ஹதீஸ் நூலிலும் வலதிலிருந்து துவங்குவதை அல்லாஹ் விரும்புகிறான் என்ற ஹதீஸ் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலதை விரும்புவார்கள் என்று தான் ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யும்போதும், தலை வாரும்போதும், செருப்பணியும் போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 426

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்புவார்கள் எனும் செய்தியை உல்டா செய்து அல்லாஹ் விரும்புவதாகச் சொல்வதே தவறு. அதிலும் இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியமைக்கு எந்த ஆதாரமும் இல்லாமலிருக்கும் போது அதை நபியின் பெயரில் பதிவு செய்வது மகா தவறல்லவா?

இதை விட சிறியதொரு வார்த்தை மாற்றத்தை பேச்சின் வேகத்தில் நாம் மாற்றிச் சொல்லி விட்டால் போதும்! நபி நேசம் கட்டுப்பாடற்று பொங்கியெழுந்து அதை (வீடியோ) படமாக்கி, கட்டிங் வேலைகள் செய்து, ‘பார்த்தீர்களா!  தில்லுமுல்லை’ என ஊர் ஊராகப் படம் ஓட்டி விடுவார்கள் இந்த மத்ஹப்வாதிகள்.

ஆனால் அவர்கள் மதிக்கும் மத்ஹபு இமாம்கள் அதை விடப் பெரும் பிழையைச் செய்தால், இல்லாத செய்தியை நபியின் மீது இட்டுக்கட்டிக் கூறினால் அப்போது மட்டும் இவர்களது பார்வை செயலிழந்து போகும். நபி நேசம் வற்றிவிடும். ஆஹா என்னே நபி நேசம்? என்னே மத்ஹபு பற்று?

ஹதஸ் பற்றி ஹதீஸ் உண்டா?

ஹதஸ் என்பது காற்று பிரிதல், மலம் – ஜலம் கழித்தல் ஆகியவைகளைக் குறிக்கும் சொல்லாகும்.

காற்று பிரிதல், மலஜலம் கழித்தல் இவைகளைப் பற்றித்தான் நபிகள் நாயகம் கூறிய ஹதீஸ் உள்ளதே? பிறகேன் இப்படியொரு தலைப்பு என புருவத்தை உயர்த்தி விட வேண்டாம்.

இது தொடர்பாகப் பல ஹதீஸ்கள் இருந்தாலும் நூலாசிரியர் கூறும் ஹதீஸ் (?) இல்லாததால் இந்த சிறு தலைப்பை இட்டுள்ளோம்.

சரி! விஷயத்திற்கு வருவோம்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14ல் உளூவை முறிக்கும் காரியங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் முன்பின் துவாரங்களிலிருந்து வெளியேறுபவை உளூவை முறித்து விடும் என்று துவக்கமாகச் சொல்கிறார். அதற்கு ஆதாரங்களாக திருக்குர்ஆன் 5:6 வசனத்தையும், அதைத் தொடர்ந்து பின்வரும் செய்தியையும் எடுத்தெழுதுகிறார்.

இதில் வசனத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி நாம் விமர்சனம் செய்யவில்லை. செய்யவும் முடியாது.  ஏனெனில் அவர் குறிப்பிட்ட வசனம் இது தான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக் காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 5:6

கழிப்பறையிலிருந்து வந்தால் தண்ணீர் கிடைக்காத போது தயம்மும் செய்ய வேண்டும் என்ற இறைவசனம் நூலாசிரியரின் கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுகிறது.

கழிவறைக்குச் செல்பவர் முன் பின் துவாரங்களிலிருந்து வெளியேறுகிற சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவே செல்வார். அவற்றை வெளியேற்றி விட்டு வரும்போது தொழுகைக்குத் தயாராவதாக இருந்தால் உளூ செய்ய வேண்டும் என்ற கருத்தை மேலுள்ள வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

எனவே தம் கருத்துக்கு நூலாசிரியர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டியது மிகச் சரியானதே!

ஆனால் அதையடுத்து அவர் கூறுகிறார்.

الهداية شرح البداية – (1 / 14)

وقيل لرسول الله صلى الله عليه وسلم ما الحدث قال ما يخرج من السبيلين

ஹதஸ் என்றால் என்னவென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முன்பின்) இரு துவாரங்களிலிருந்து வெளியேறுபவையே ஹதஸ் ஆகும் என்றார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14

அவர் சொன்ன இந்த நபிமொழி (?) குறித்து தான் நாம் கேள்வி எழுப்புகிறோம். இப்படியொரு ஹதீஸ் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹதஸ் என்றால் என்னவென்று கேட்கப்பட்டதாகக் கதை கட்டும் இச்சம்பவம் எந்த நூலில் பதிவாகியுள்ளது?

அபூஹுரைராவிடம் இது பற்றி கேட்கப்பட்டதாக புகாரியில் ஹதீஸ் உள்ளது. ஆனால் அதிலும் கூட நூலாசிரியர் நபி சொன்னதாகச் சொன்ன பதிலை அபூஹுரைரா (ரலி) கூறியதாக இல்லை.

ஹம்மாம் பின் முனப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறுதுடக்கு (ஹதஸ்) ஏற்பட்டவர் உளூசெய்யாத வரை அவருடைய தொழுகை ஏற்கப்படாது’’ எனக் கூறியதாக அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் “அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறுதுடக்கு என்பது என்ன?’ என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 135)

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு நடந்த சம்பவத்தை கொஞ்சம் டிங்கரிங் செய்து அப்படியே நபிகள் நாயகத்திற்கு நடந்த ஒன்றைப் போன்று சித்தரித்துக் காட்டுகின்ற நூலாசிரியரின் இச்செயல் மத்ஹபினருக்குக் கோபத்தை வரவழைக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் நூலாசிரியர் தவ்ஹீத் ஜமாஅத் காரர் அல்லவே!

நபிகளார் வாந்தி எடுத்த பின் உளூ செய்யவில்லை என்ற ஹதீஸ்

வாந்தி எடுப்பது உளூவை முறிக்காது என்பதில் இரு கருத்துக் கொள்ள இடமில்லை. எனினும் ஒரு கருத்தை நபியின் பெயரில் சொல்வதாக இருந்தால் தகுந்த ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்.

ஹிதாயாவில் வாந்தி உளூவை முறிக்காது என்பதற்கு ஆதாரம் என்ற பெயரில் ஒரு செய்தியைப் பதிவிடுகிறார்கள்.

الهداية شرح البداية – (1 / 14)

روي أنه عليه الصلاة والسلام قاء فلم يتوضأ

நபி (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள்; ஆனால் உளூச் செய்யவில்லை என்று ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 14

ஹதஸ் தொடர்பாக நபியின் வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்வை நடந்தததாக நூலாசிரியர் கட்டிய கதையை மேலே பார்த்தோம் அல்லவா? அந்தக் கதையின் வடு கூட மாறாத நிலையில் அதற்கு அடுத்த வரியில் இப்படிப் பொய்யை அவிழ்த்து விடுகிறார்.

நபிகளார் வாந்தி எடுத்தார்கள்; பிறகு உளூ செய்தார்கள் என்று பலவீனமான செய்திகள் உள்ளன. ஆனால் ஹிதாயா ஆசிரியர் குறிப்பிடுவதைப் போன்று நபிகள் நாயகம் வாந்தி எடுத்து உளூ செய்யவில்லை என்று எந்தச் செய்தியும் கிடையாது.

அடிப்படை ஆதாரமற்ற ஒரு செய்தியைப் புனைந்து அல்லது யாரோ புனைந்து கூறியதை அப்படியே வாந்தி எடுத்து, நபிகள் வாந்தி எடுத்து உளூ செய்யவில்லை என்று கூறினால் இது நியாயமா? தகுமா? இதற்கு மத்ஹபினர் என்ன பதிலை அளிக்கப் போகின்றார்கள்?

குளிப்பின் பர்ளு?

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது அவசியம் செய்ய வேண்டிய காரியங்களென சிலவற்றை ஹிதாயா நூலாசிரியர் பட்டியலிடுகிறார்.

அவற்றில் வாய் கொப்பளிப்பது, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்துவது என இவ்விரண்டையும் குளிப்பின் பர்ளு என குறிப்பிடுகிறார்.

இதற்கு நபிமொழி ஆதாரம் என இவர் முன்வைப்பது ஹதீஸ் நூல்களில் இல்லாததாகும்.

وَالْمُرَادُ بِمَا رُوِيَ حَالَةَ الْحَدَثِ بِدَلِيلِ قَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ       { إنَّهُمَا فَرْضَانِ فِي الْجَنَابَةِ سُنَّتَانِ فِي الْوُضُوءِ } “ .

கடமையான குளிப்பின் போது வாய் கொப்பளிப்பது, மூக்கை சிந்துவது இரண்டும் பர்ளாகும். உளூ செய்யும் போது இவ்விரண்டும் சுன்னத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 16

இப்படி ஒரு நபிமொழி எங்கும் இல்லை.

வாய் கொப்பளிப்பது மூக்கிற்கு தண்ணீர் செலுத்துவது இயற்கை மரபு என்று நபி சொன்ன செய்திகள் உண்டு. (முஸ்லிம் 436)

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது இவ்விரண்டையும் நபிகளார் செய்துள்ளார்கள் என்றும் ஹதீஸ்கள் உள்ளது. (புகாரி 259)

ஆனால் மேலே நாம் கண்டதைப் போன்று வாய் கொப்பளிப்பது, மூக்கைச் சிந்துவது கடமையான குளிப்பின் போது பர்ளு, உளூவின் போது சுன்னத்  என்று எந்த ஹதீஸும் கிடையாது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஹதீஸ் நூல்களில் இல்லாத இந்தச் செய்தியை இரண்டு நபித்தோழர்கள் அறிவித்திருப்பதாக வேறு குறிப்பிடுகிறார்.

ஆம்! இனாயா ஷரஹ் ஹிதாயா, பக்கம் 70ல் இந்தச் செய்தியைப் பற்றிக் குறிப்பிடும் போது ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் இதை அறிவித்திருப்பதாகக் கூறுகிறார்.

என்னவொரு வினோதமிது? இப்படி ஒரு செய்தியை நபி சொன்னதாக ஆதாரமே இல்லை என்று நாம் கூறுகையில் இதை இரண்டு நபித்தோழர்களின் தலையில் சுமத்தி விடுவது பொய்யின் மேல் பொய்யை வீசும் செயலல்லவா?

இது தான் நபிமொழிகளை அறிவிப்பதில் உள்ள பேணுதலா? இது மத்ஹபினர்களுக்கு நபி மீது பொய்யுரைப்பதாகத் தெரிய வில்லையா?

இப்படியெல்லாம் இரண்டு நபித்தோழர்களின் பெயரைப் பயன்படுத்தி நபி சொன்னார்கள் என்று சொல்கிறாரே வேறு எங்கும் இச்செய்தி உள்ளதா என்று முடிந்த மட்டும் தேடிப்பார்த்தாலும் பின்வரும் செய்தி ஒன்றே கிடைக்கின்றது.

கடமையான குளிப்பின் போது வாய் கொப்பளிப்பதையும், மூக்கை சிந்துவதையும் மூன்று முறை அவசியம் செய்ய வேண்டும் என நபி உத்தரவிட்டுள்ளார்கள் என்று அபூஹுரைரா அறிவிப்பதாக ஒரு செய்தி தாரகுத்னீ (ஹதீஸ் எண் 409) உள்ளிட்ட சில நூல்களில் உள்ளது.

இமாம் தாரகுத்னீ அவர்களே இதைப் பதிவு செய்து விட்டு இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று குறிப்பிட்டுள்ளது தனி விஷயம்.

ஆனால் இந்தச் செய்தி நூலாசிரியர் குறிப்பிட்ட பொய்யான செய்தியை ஒத்ததாக இல்லை. அவர் பதிவிட்ட அடிப்படையே இல்லாத பொய்யான செய்திக்கும் இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கும் அதிக வேறுபாடு உள்ளது தெளிவு.

நபியின் பெயரால் சொல்லப்படும் செய்தியை உறுதிப்படுத்தி விட்டுச் சொல்ல வேண்டும் என்ற நியதிக்கு மாற்றமாக, கேட்டதையெல்லாம் தன் நூலில் கொண்டு வந்துள்ளார் என்றே இதைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது.

மேலும் ஆதாரப்பூர்வமான இதர நபிமொழிகள் கடமையான குளிப்பை நிறைவேற்ற வாய் கொப்பளிப்பது, மூக்கைச் சிந்துவது ஆகியவை அவசியம் இல்லை. இவற்றைச் செய்யாமலேயே குளிப்பு நிறைவேறிடும் என்ற கருத்தைத் தருகின்றன.

அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 497

கடமையான குளிப்பு நிறைவேற உடலும், தலையின் அடிபாகமும் நனைவதே போதுமானது என்பதை இச்செய்தி தெரிவிக்கின்றது.

உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் இவ்விரண்டைத்தான் போதிக்கிறார்கள். மூக்கைச் சிந்துவது வாய் கொப்பளிப்பதை வலியுறுத்தவில்லை என்பதிலிருந்து இதை அறியலாம்.

எனவே நூலாசிரியர் நபியின் பெயரால் அவிழ்த்து விட்ட பொய்ச் செய்தி எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை என்பதோடு, இதர நபிமொழிகளுக்கு மாற்றமாக உள்ளதையும் கவனத்தில் கொள்வது சாலச் சிறந்தது.

—————————————————————————————————————————————————————-

மறுமைக்காக வாழ்வோம்

அப்துர்ஹ்மான் இஸ்லாமியக் கல்லூரி

இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கின்ற அறிவுரைகளில் மிக முக்கியமான அறிவுரை, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மறுமையை இலக்காகக் கொண்டு மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடியவர்களாக  –  விரும்பக்கூடியவர்களாக இருந்தால் அவர்கள் மறுமைக்காகவே வாழ வேண்டும்.

இறைவன் தன்னுடைய திருமறையில், ஓரிரு இடங்களில் அல்ல திருமறைக் குர்ஆன் நெடுகிலும் மனிதர்கள் மறுமைக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதை அற்புதமான முறையில் நமக்குப் பாடம் நடத்துகின்றான்.

மனிதர்கள் மறுமைக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதைப் பற்றி இறைவன் வலியுறுத்துகின்ற இறைவனின் போதனைகள், அறிவுரைகள் ஏராளமாக இருந்தாலும் ஒரு சில அறிவுரைகள் நம்முடைய உள்ளங்களைத் தட்டி எழுப்புபவையாக உள்ளன.

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்காப்பாட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.

இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு சொல்லட்டுமா? என்று கேட்பீராக! இறைவனை அஞ்சுவோருக்கு தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களை பார்ப்பவன்.

அல்குர்ஆன் 3:13, 14

இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 3:185

ஏக இறைவனை மறுப்போர் ஊர்கள் தோறும் சொகுசாக திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதிகளே பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். தங்குமிடத்தில் அது கெட்டது.

அல்குர்ஆன் 3:196,197

இவ்வுலகின் வசதி குறைவு தான். இறைவனை அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது.

அல்குர்ஆன் 4:77

மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.

அல்குர்ஆன் 9:38

மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 13:26

இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.

அல்குர்ஆன் 40:39

நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கின்றீர்கள். மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும். 

அல்குர்ஆன் 87:16,17

இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.

அல்குர்ஆன் 93:4

இது போன்ற ஏராளமான வசனங்கள் திருமறைக் குர்ஆன் நெடுகிலும் மனிதர்களுக்குரிய அறிவுரைகளாக இறைவன் கூறுகின்றான். நம்முடைய வாழ்க்கையை மறுமையின் பக்கம் திருப்புவதற்கு இவையே போதுமான வசனங்கள்.

இது மாத்திரமல்லாமல், மறுமையை நேசித்த, மறுமைக்காகவே வாழ்ந்த ஏராளமான சஹாபாக்களை வரலாறு நெடுகிலும் நம்மால் பார்க்க முடிகின்றது. அவற்றில் ஒரு சில சம்பவங்களை நாம் காண்போம்.

மறுமைக்காகவே வாழ்ந்த தோழர்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பல போர்கள் நடைபெற்றுள்ளன  அவற்றில் மிக வித்தியாசமான ஒரு போர் தான் முஅத்தா என்ற போர்.

இந்தப் போரில் அல்லாஹ்வின் தூதர் கலந்து (ஸல்) கொள்ளவில்லை. ஆனால் போரில் மக்களைத் தலைமை ஏற்று அழைத்து செல்லக்கூடிய, படையினுடைய தலைவர்களை நியமித்துப் போருக்கு அனுப்புகிறார்கள். போர் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே இந்தப் படைத்தளபதிகளை நியமிக்கின்றார்கள். ஒரு நாளுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை கூடியிருந்த அத்தனை தோழர்களையும் மிகுந்த கவலையிலும், வருத்தத்திலும் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு  கவலைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி அந்த இடத்தில் நடக்கின்றது.

அது என்ன நிகழ்ச்சி என்பதைப் பின்வரும் ஹதீஸ் வர்ணிக்கின்றது.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூத்தா போரின்போது ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் கொல்லப்பட்டால் ஜஅஃபர் (தலைமையேற்கட்டும்!) ஜஅஃபர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தலைமையேற்கட்டும்)என்று கூறினார்கள்.

ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 4261

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தப் போரிலும் பயன்படுத்தாத ஒரு வார்த்தையாக, ‘கொல்லப்பட்டுவிட்டால்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள். இதன் மூலம் பெயர் சொல்லி அறிவிக்கப்பட்ட அந்தத் தோழர்கள் போர் முடிந்து திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை விளங்க முடிகின்றது.

ஆனாலும், நான் மறுமைக்காகவே வாழ்கின்றேன், மறுமையைக் காதலிக்கின்றேன் என்பதை அவர்கள் இந்தப் போரில் மிகத் தைரியமாக நிருபித்துக் காட்டினார்கள்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்;

(மூத்தா போரின்போது போர்கள் நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்தபடியே நேர்முக வர்ணணையாக விவரித்து) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில் ‘‘இப்போது (இஸ்லாமிய சேனையின்) கொடியை ஸைத் இப்னு ஹாரிஸா எடுத்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் இப்னு ரவாஹா எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு காலித் இப்னு வலீத் (நம்முடைய) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்தார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்துவிட்டான் என்று கூறிவிட்டு ‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது என்றோ (இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது என்றோ சொன்னார்கள். மேலும் இதைச் சொல்லும்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தன.

ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 3063

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  நியமித்த மூன்று தோழர்களும் வீறுநடை போட்டுப் போரில் கலந்து கொண்டு, நான் மறுமைக்காக மட்டும் தான் வாழ்கின்றேன் என்பதைப் பறைசாற்றுகிறார்கள்.

‘நாளை உன்னை எதிரிகள் கொன்றாலும் கொன்று விடுவார்கள்’ என்று சொன்னால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? வீட்டை விட்டு  வெளியே வர மாட்டோம். பயந்து நடுங்குவோம். பாதுகாப்புக்காகப் பல இடங்களை அணுகுவோம். இது தான் நம்முடைய நிலைமை.

ஆனால், நபித்தோழர்களிடம், ‘நாளை நீ போருக்குப் போ. உன்னை எதிரிகள் வெட்டி வீழ்த்தக்கூடும்’ என்று சொன்ன பிறகும் கூட கொஞ்சம் கூடப் பின்வாங்காமல், நான் மறுமைக்காகவே வாழ்கின்றேன் என்பதை உளப்பூர்வமாக நிரூபித்திருக்கின்றார்கள். எனக்கு உயிரோ, குடும்பமோ, பொருளாதாரமோ, மனைவியோ, பிள்ளைகளோ, பெற்றோர்களோ இவர்களையெல்லாம் என்னுடைய மறுமையை விடப் பெரிதாக நான் நேசிக்கவே இல்லை என்று கூறி தங்களது மறுமைப் பற்றை பறைசாற்றியுள்ளது நம் அனைவருக்கும் சிறந்ததொரு முன்னுதாரணமாகும்.

ஸஹாபாக்கள் மறுமைக்காகவே வாழ்ந்த மற்றொரு அற்புதமான சம்பவத்தை, நம்முடைய உள்ளங்களையெல்லாம் உருக வைக்கும் சம்பவத்தை வரலாறுகளில் நம்மால் பார்க்க முடிகின்றது.

இஸ்லாமிய வரலாறுகளில் நடைபெற்ற போர்க் களங்களில் கண் கலங்க வைக்கும் வித்தியாசமான ஒரு போர்க்களம் தான் அகழ் போர்.

இதை ஹன்தக் போர் என்றும், அஹ்சாப் போர் என்றும் சொல்லப்படும்.

இந்தப் போரில் கொள்கைக்காக இஸ்லாமியர்கள் பட்ட துன்பங்களை வார்த்தைகளாலோ, எழுத்துக்களாலோ வர்ணிக்க முடியாது என்று சொல்கின்ற அளவுக்குக் கடுமையான சோதனை. இந்தப் போரில் ஈடுபட்ட அனைத்து தியாகங்களுக்கும் காரணம் மறுமைக்காக வாழ்ந்த ஒரே காரணத்தினால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்குக் கடுமையான தியாகங்கள்.

அனஸ் (ரலி) கூறினார்கள்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்னுடைய ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு கெட்டுப் போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும்.

ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 4100

மறுமைக்காகவே வாழ்ந்த காரணத்தினால், சமைக்கப்படாத, கெட்டுப் போன கடுமையாக நாற்றமடிக்கக் கூடிய கொழுப்பை, தொண்டையிலேயே சிக்கிக்கொண்ட ஒரு உணவை உண்டிருக்கின்றார்கள்.

கெட்டுப் போன உணவு நம் வீட்டிலே இருந்தால் கூட நம்மால் அதனுடைய துர்நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் அதை உடனே அப்புறப்படுத்தி விடுவோம். ஆனால் கடுமையான பசியின் காரணத்தினால், மறுமைக்காக வாழும் பொழுது இதுவெல்லாம் பெரிது கிடையாது என்பதை இந்தச் சம்பவம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. அதையும் உண்டு விட்டுப் போரில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் மறுமைக்காக மட்டுமே நபித்தோழர்கள் வாழ்ந்து மரணித்தார்கள் என்பதற்கு இதை விடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.

இந்த உலகத்திற்காக வாழாமல் மறுமைக்காகவே வாழ்ந்து மரணிப்பதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!

—————————————————————————————————————————————————————-

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியக மாணவியர்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர் ஆன் 9:100

மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் ஸஹாபாக்களைப் பற்றி சிறப்பித்துக் கூறுகின்றான்.அப்படி சிறப்பித்துக் கூறும் வகையில் தியாக வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

அவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களில் ஒருவர் தான் அஸ்மா பின்த் அபூபக்ர்.

அஸ்மா பின்த் அபூபக்ர்

அபூபக்ர் (ரலி)யின் மூத்த மகளும், சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட சுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி)யின் மனைவியும், பிரபலமான நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு சுபைரின் தாய் தான் அஸ்மா (ரலி).

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற அஸ்மா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பாடுபட்டார்கள். மக்காவில் இஸ்லாத்தின் அழைப்புப் பணி பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இணைவைப்பாளர்களான குறைஷிகளின் உள்ளத்தில் முஸ்லிம்களை முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும் என்ற வெறி மூண்டது.

இக்கொடுமைகளிலிருந்து அல்லாஹ்வின் தூதர் கூட விடுபடமுடியவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் பொறுமையுடன் எதிர்பார்த்திருந்தார்கள். இறுதியில் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்வதற்கு இறைவன் தன் தூதருக்கு அனுமதி வழங்கினான்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்பயணம் வெற்றி பெற அஸ்மா (ரலி) அவர்களின் பங்களிப்பும் அதில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனா புறப்பட்ட இச்சம்பவம் வெளித்தோற்றத்தில் இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தோன்றலாம். ஆனால் அந்த ஹிஜ்ரத் எனும் பயணம் சாதாரணமான பயணம் அல்ல!

மாறாக, ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின் இறைத்தூதரின் உயிரே கேள்விக்குறியாகியிருக்கும்.

அஸ்மா (ரலி) அவர்கள், மற்ற சாதாரண பெண்களைப் போல் இல்லாமல் ஹிஜ்ரத் பற்றிய அனைத்து இரகசியங்களும் தனக்குத் தெரிந்திருந்தும் அதை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. மேலும் அல்லாஹ்வின் தூதரும், தனது தந்தை அபூபக்ர் (ரலி)யும் ஹிஜ்ரத் மேற்கொள்வதினால் தங்களுக்கு ஏற்படப் போகின்ற பின்விளைவுகளை உணர்ந்து அதற்கேற்றாற்போல் பொறுப்புடன் செயல்பட்டார்கள்.

மேலும் இஸ்லாத்தின் கட்டளைகளை ஏற்று நடப்பவர்களாகவும் அஸ்மா இருந்தார்கள். கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் தன்னைப் பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் அவர்கள் விஷயத்தில் மார்க்கம் என்ன கூறுகின்றதோ  அதன்படியே செயல்படக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள்.  நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்.  என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?’’ என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2620

தனது தாய் ஒரு இணைவைப்பாளர் என்றதும் அவரது உறவைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள் அஸ்மா (ரலி) அவர்கள். தாயைப் போல பிள்ளை  என்று கூறுவார்கள். அது போல தாய் எந்த மார்க்கத்தில் இருப்பாளோ அந்த மார்க்கத்தில் தான் குழந்தையும் இருக்கும். இந்த சித்தாந்தத்தை உடைத்தவர்கள் தான் அஸ்மா.

அஸ்மாவின் தாயார் இணைவைப்பாளர். அஸ்மாவோ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தார்கள். இணை வைப்பாளரான தனது தாயிடம் உறவைப் பேண நபியவர்களை அணுகி அனுமதி கேட்கக் காரணம் அவர்களது தாயாரிடத்தில் இருந்த இணை வைப்பு தான். ஒரு வேளை நபிகளார் கூடாது என்று கூறியிருந்தால் உறவை கூட அல்லாஹ்வின் கட்டளைக்காக முறிக்கத் தயாராக இருந்திருப்பார்கள்.

மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைச் செய்யும் படி வலியுறுத்தும் போது தாய்ப் பாசத்தைக் காரணம் காட்டி மார்க்கத்தில் வளைந்து கொடுக்கும் இன்றைய பெண்கள் அஸ்மா (ரலி) அவர்களின் வரலாறு மூலம் படிப்பினை பெறவேண்டும். இந்த விதத்தில் குர்ஆனின் கட்டளைக்கு ஏற்ப அவர்களது நடைமுறை இருந்துள்ளது.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே!

அல்குர்ஆன்  58:22

—————————————————————————————————————————————————————-

நீதியை  நிலைநாட்டிய நபிகளார்

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி.

மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளைக் குறித்தும் இஸ்லாம் நமக்குப் போதித்து இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனும் அவன் அங்கம் வகிக்கும் சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவற்றைக் களைவதற்குரிய அழகிய தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறது. இதன்படி, பல்வேறு அறிவுரைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று, எந்த விஷயத்திலும் எப்போதும் நாம் நீதமாக, நியாயமாக நடக்க வேண்டும் என்பதாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:135

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

நமது விவகாரமாக இருந்தாலும், நமக்கு நெருக்கமானவர்களின் விவகாரமாக இருந்தாலும், நம்முடன் ஒட்டுறவு இல்லாத மற்றவர்களுடைய விவகாரமாக இருந்தாலும், நம்முடைய எதிரிகளின் விவகாரமாக இருந்தாலும் அதிலே நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த நீதியானது நமது பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் என்று எவருக்கு எதிராக இருந்தாலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் ஏன்? அது நமக்கு எதிராக இருந்தாலும் சரியே என்று அல்லாஹ் ஆணையிடுகிறான்.

இந்தக் கட்டளைகளை மெய்ப்படுத்தும் வகையில் நபிகளாரின் வாழ்க்கை இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் நீதியை நிலைநாட்டுபவர்களாக இருந்தார்கள். இதற்குரிய சான்றுகளாகச் சில சம்பவங்களை மட்டும் இங்கு காண்போம்.

நீதியை நிலைநாட்டும் நிலைபாடு

சமீப காலங்களில் தனிமனிதர்கள், சமூகம், அரசாங்கம் என்று எல்லா இடத்திலும் பலரிடம் ஒருதலைபட்சமான நிலைபாடுகள், கருத்துகள் ஒளிந்து கிடக்கின்றன. அவை அவ்வப்போது அவர்களின் செயல்கள் மூலம் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். இதன் அடையாளமாக நீதிக்குப் புறம்பான காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவை நிகழாமல் இருப்பதற்கு முதலில் மக்களின் தவறான எண்ண ஓட்டம் மாற வேண்டும். அனைவரும் சமம்; அனைவருக்கும் சமநீதி எனும் சிந்தனை மேலோங்க வேண்டும். இதற்குரிய போதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருக்கிறது.

குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷ் குலத்தவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும் என்று கருதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) இது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரைக்கிறீரா?’ என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள், ‘உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன் எனப் பிரகடனம் செய்தார்கள்.

நூல்: புகாரி 3475, 3733, 4304, 6787, 6788

திருட்டுக் குற்றத்திற்கு தண்டனை தருவதிலே தமது பிரியத்திற்குரிய வளர்ப்பு மகனின் மகன் பரிந்து பேசும்போதும் கூட நபிகளார் மறுத்து விடுகிறார்கள். அவரைக் கண்டிக்கிறார்கள். நீதி தவறியதே முந்தைய சமுதாய மக்களின் அழிவுக்குக் காரணம் என்று எடுத்துரைத்து எச்சரிக்கை செய்கிறார்கள்.

தமது சொந்த மகள் பாத்திமா திருடினாலும் அவரின் கையை வெட்டுவேன் என்று சொல்வதன் மூலம் நீதியை நிலைநாட்டும் தமது நிலைபாட்டினை நபிகளார் பிரகடனம் செய்கிறார்கள். அவ்வாறுதான் அண்ணலார் அவர்களின் அனைத்து செயல்களும் இருந்தன.

மக்களிடமோ, சிறிய விஷயம் முதல் பெரிய விஷயம் வரை பாரபட்சமாக நடக்கும் குணம் குடிகொண்டிருக்கிறது. உதாரணமாக, மற்றவர்கள் மூலம் தமது பிள்ளைக்குப் பாதிப்பு ஏற்பட்டால் தீர விசாரிக்காமல் ஆர்ப்பரிக்கிறார்கள். அதேசமயம் தமது பிள்ளை மூலம் அடுத்தவருக்குப் பாதிப்பு நிகழ்ந்தால் ஊமைகளாகி விடுகிறார்கள்; அதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

இதுபோன்று பக்கம் பக்கமாகப் பட்டியல் போடுமளவுக்கு சமூகம் பாகுபாடான அணுகுமுறை களாலும், நடத்தைகளாலும் கெட்டுக் கிடக்கின்றது. இந்நிலை இனியாவது மாற வேண்டும்.

முஸ்லிம்களிடையே நபியின் நீதம்

நீதி செலுத்துவதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு ஒருபோதும் தடுமாற்றமோ, தயக்கமோ வந்துவிடக்கூடாது. ஆளுக்கு ஏற்ப நியாயத்தை வளைத்துவிடக் கூடாது. யாராக இருப்பினும் சட்டமும் தீர்ப்பும் ஒன்றுதான் என்பதைப் புரியவைக்கும் வகையில்தான் நபிகளாரின் வாக்கும் வாழ்வும் இருந்தது என்பதை என்றும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. அதில் சிறிதளவு அவர்கள் அருந்தினார்கள். அவர்களின் வலப்புறத்தில் குறைந்த வயதுடைய ஒரு இளைஞர் இருந்தார். இடப்பக்கம் பெரியவர்கள் பலர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இளைஞரே! பெரியவர்களுக்கு முதலில் கொடுக்க எனக்கு அனுமதி தருகிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு இளைஞர் உங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் பாக்கியத்தை மற்றவருக்கு நான் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இளைஞருக்கு முதலில் கொடுத்தார்கள் மற்றவர்களுக்குப் பின்னர் கொடுத்தார்கள்.

நூல்: புகாரி 2351, 2366, 2451, 2602, 5620

அனஸ் (ரலி) வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டிலிருந்து பால் கறந்து நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டது. அனஸ் (ரலி) வீட்டில் உள்ள கிணற்று நீர் அத்துடன் கலக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரம் தரப்பட்டது. அதை அவர்கள் பருகினார்கள். அவர்களின் இடப் புறம் அபூபக்ர் (ரலி) இருந்தார். வலப் பக்கம் ஒரு கிராமவாசி இருந்தார். அந்தக் கிராமவாசிக்கு நபிகள் நாயகம் (ஸல்) முதலில் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சிய உமர் (ரலி) அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள் என்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலப்புறம் இருந்த கிராமவாசிக்கு முதலில் கொடுத்தார்கள். மேலும் ‘வலப்புறம் வலப்புறமாகத் தான் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 2352

மேற்கண்ட இரு சம்பவத்தையும் நன்கு கவனியுங்கள். இடது புறத்தில் இருப்பவர் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள். தமது உடலாலும், உடமைகளாலும் இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பக்கபலமாகத் துணை நின்ற பிரபலமான நபித்தோழர். வலது பக்கம் இருப்பவர்கள், ஒரு சம்பவத்தில் கிராமவாசி, மற்றொரு சம்பவத்தில் இளைஞர் ஒருவர்.

பொதுவாக சபையில் பரிமாறும் போது, விநியோகிக்கும் போது வலது பக்கம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். அது அவர்களுக்குரிய உரிமை என்று நபிகளார் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அந்த உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில் அண்ணலார் நடந்து கொள்ளவில்லை.

தமது உற்ற தோழருக்காக வழக்கத்திற்கு மாற்றம் செய்யவில்லை. வலது பக்கம் இருப்பவரிடம் அனுமதியைக் கேட்கிறார்கள். நியாயத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதேபோன்று மற்றொரு சம்பவம் பாருங்கள்.

பத்ருப் போர் அன்று ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தோம். நபிகள் நாயகத்துடன் அபூ லுபாபா, அலீ பின் அபீதாலிப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபிகள் நாயகத்தின் முறை வந்த போது உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம் என இருவரும் கூறினார்கள். ‘நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 3706, 3769, 3807, 3834

மூன்று பேரில் ஒருவர் வீதம் மாறி மாறி அமர்ந்து பயணிப்பதாக ஒப்புக்கொண்டு பயணம் தொடர்கிறது. தாங்களின் உடன்பாட்டுக்கு மாற்றமாக உடனிருக்கும் நபித்தோழர்கள் முடிவெடுக்கும் போது அதற்கு நபிகளார் உடன்படவில்லை. இரு நபித்தோழர்களும் சுயமாக முடிவெடுத்து வாய்ப்பு கொடுப்பது தமக்குச் சாதகமாக இருந்தபோதிலும் அதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் அனைவருக்கும் பாடம் இருக்கிறது.

தமது தோழர்கள் தம்மீது பற்றும், பாசமும் கொண்டு கொடுத்த உரிமையையே நபிகளார் ஒத்துக் கொள்ளவில்லை. இவ்வாறிருக்க, தங்களது சுயநலத்துக்காக, பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறுசெய்பவர்கள், பிறர் சொத்தைப் பறிப்பவர்கள், அநீதி இழைப்பவர்கள் மற்றும் இவர்களை ஆதரித்துப் பேசுபவர்கள் எல்லாம் ஒருகணம் சிந்திக்க வேண்டும்.

தமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலோ, அல்லது மற்ற இருவர்களுக்கு மத்தியிலோ பிணக்கு ஏற்படும் போது முடிவு எடுப்பதிலும், கருத்துச் சொல்வதிலும் நேர்மையாக இருப்பது அவசியம்.

—————————————————————————————————————————————————————-

அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

நீதியை நிலைநாட்டிய சவூதி அரசு!

ஆண்டிக்கு ஒரு சட்டம்! அரசனுக்கு ஒரு சட்டம்! வலியவனுக்கு ஒரு சட்டம்! எளியவனுக்கு ஒரு சட்டம்! இது தான் உலகெங்கிலும் நடை முறையில் இருந்து வருகின்ற அநியாயமும் அக்கிரமமும் ஆகும். ஆனால் இதற்கு நேர்மாற்றமாக சவூதியில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டத்தின் ஆட்சியும், மாட்சியும் நடந்தேறி உள்ளது.

பசுவைக் கொன்ற தன் மகனை தேரில் ஏற்றிக் கொன்றதாகச் சொல்லப்படும் – மாட்டுக்காக மனிதனைக் கொன்ற மனு நீதிச் சோழன் போன்ற கற்பனைக் கதை அல்ல! உலகத்தை உலுக்கி, உள்ளத்தைத் தொட்டு நிற்கின்ற உண்மை நிகழ்ச்சியாகும். அதை  இப்போது பார்ப்போம்.

சவூதியின் ஆளும் அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசர் துர்கீ பின் சவூத் அல் கபீர்!  இவருக்குக் கடந்த அக்டோபர் 18, செவ்வாய்கிழமை  அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏன்?

அவர் ஆதில் பின் சுலைமான் என்பவரை ஒரு கூட்டத்தில் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கியால் சுட்டு விட்டார். கொலையாளி ஆளும் ஆட்சியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று சவூதியக் காவல்துறை பேதம் பார்க்காமல் உடனே கைது செய்து,  சிறையில் அடைத்து வழக்கு தொடர்கின்றது. கீழ்நீதி மன்றத்திலிருந்து மேல் முறையீட்டு உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து செல்கின்றது.

அரசின் தலையீடும் குறுக்கீடும் இல்லாமல் இவ்வழக்கு நடத்தப்படுகிறது. வழக்கு தொடுக்கப் பட்ட உடன் காவல் துறையும் நீதித்துறையும் அரச குடும்பம் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்டிவிடக் கூடாது என்பதற்காக மன்னர் சல்மான், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரச குடும்பம் என்பதற்காக சட்டம் வளையாது’ என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

நமது நாட்டைப் போன்று கால் நூற்றாண்டுக்கு மேல் வழக்கு  இழுத்துக் கொண்டு போகவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது 2012. நான்காண்டுகளில் நடு வீதியில் மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டு இளவரசரின் வழக்கு மட்டுமல்ல; வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

அனைத்து மட்ட நீதிமன்றங்களிலும் குற்றவாளியின் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவின் காரணமாகவே நான்கு ஆண்டுகள் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைக்கோல் போர் தீயை மிஞ்சிய  வைரலாகப் பறந்து கொண்டிருக்கின்றது.

இளவரசரின் மரண தண்டனை நிறைவேறுவதற்கு முன்னால் நடந்த அவரது இறுதி நிமிடத்துளிகளை சஃபா மஸ்ஜிதின் இமாம், கதீப் டாக்டர் முஹம்மது அல் மஸ்லூகி குறிப்பிடுவதைக் கேளுங்கள்.

இளவரசரின் குடும்பத்தினர் இறுதியாகத் திங்கள் கிழமை மாலையில் சிறைச் சாலையில் சந்தித்து  கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்துச் சென்றனர்.  இது காண்போரின் உள்ளங்களை கவலையுறச் செய்தன. கண்களை அருவியாக்கின. இளவரசர் இதன் பின்னர் தனது இரவைத் தொழுகையிலும் இறை வேதமான குர்ஆன் ஓதுவதிலும் கழிக்கின்றார். கடைசியில் ஃப்ஜர் தொழுகையையும் நிறைவேற்றுகின்றார்.

இந்தக் கட்டுரையை எழுதுகின்ற எனது எழுது கோல் கூட குற்றம் சாட்டப் பட்டவருக்கு ஒரு மரியாதையைக் கொடுத்து இளவரசர் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அரசு மற்றும்  செய்திக் குறிப்புகள் இளவரசரை குற்றவாளி (அல்ஜானி) என்று தான் குறிப்பிடுகின்றது என்றால் சட்டத்தின் முன்னால் சமம் என்ற நீதி நியாயக் கொள்கை கோட்பாடு வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் செயல்பாடாகவும் இருக்கின்றது என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

காலைத் தொழுகையை முடித்த அவரை சிறைக் காவலர் காலை 7 மணிக்கு அழைத்துச் சென்று இறுதி விருப்பங்களை எழுதுமாறு வேண்டிக் கொள்கின்றார். அவர் தன்னால் எழுத இயலவில்லை என்று சொன்னதும் அடுத்தவர் அவரது விருப்பத்தை பதிவு செய்கின்றார். பிறகு அவர் குளித்ததும் தண்டனை நிறைவேற்றப்படும் பொது வெளிக்கு, காலை 11 மணி அளவில் அழைத்து வரப்படுகின்றார். அங்கே  அவரது குடும்பத்திலிருந்து 10க்கு மேற்பட்ட அவரது உறவினர்கள் வருகின்றார்கள்.

நிதி நிவாரணம் வேண்டாம்;   நீதி பரிபாலனமே வேண்டும்

கொலையுண்டவரான ஆதில் உடைய தந்தை மற்றும் அவரது குடும்பத்தார்களும் வருகின்றார்கள். அரசவையைச் சார்ந்த அந்த 10 இளவரசர்களும் நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டு கொலையாளியை மன்னிக்கும் படி பரிந்துரை செய்கின்றார்கள். வெறும் பேச்சளவில் இல்லாமல், கோடிக்கணக்கில் ரியால்களையும் தந்தையிடத்தில் சமர்ப்பித்துத் தான் கேட்கின்றார்கள். ஆனால், கொலை செய்யப்பட்ட இளைஞனின் தந்தையோ பணத்தையோ பரிந்துரையையோ ஏற்க மறுத்து, அல்லாஹ்வின் சட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

கொலை செய்யப்பட்ட இளைஞருடைய தந்தை முகத்தில் படப்படப்பு, பதட்டம் எதுவும் பிரதிபலிக்கவில்லை. மன்னிப்பு கிடையாது;  நீதி மற்றும் நியாயத் தண்டனை நிறைவேற்றம் தான் என்று, தான் கொண்ட  நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து விட்டார். அதே சமயம் கொலையாளியும் குற்றவாளியுமான இளவரசரின் தந்தையோ பிரிகின்ற தன் மகனின் பிரிவை எண்ணி கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருந்தார். நஷ்ட ஈடு செலுத்துவதற்கான பேரங்கள், பரிந்துரை படலங்கள் எல்லாம் முடிந்த பின் மாலை 4:15 மணிக்கு வாளுடன் வெட்டுநர் வருகின்றார். ஒரு வீச்சு தான். பளிச்சிட்டு மறைந்த அந்த வாள் வீச்சில், பீறிட்டு பீச்சுகின்ற இரத்த வெள்ளத்துடன் அடுத்த கணம் அவரது தலை தரையில் விழுகின்றது. தண்டனை தயவு தாட்சண்யமின்றி நிறைவேற்றப்படுகின்றது.

சட்டத்தின் முன் சமம்! சடங்கு வார்த்தையல்ல!!

ஆம்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இஸ்லாமிய சமத்துவக் கொள்கை  சரியாக நிலை நாட்டப்படுகின்றது. சவூதியின் சாதாரண குடிமகனும், சவூதிய மன்னர் குடும்பத்துக் குடிமகனும் சட்டத்தின் முன் சமம் என்று நிலைநாட்டிய சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களுக்கு வலைத்தளங்களில்  ஹேஷ் டேக்குகளுடன் வாழ்த்து மழைகள் குவிகின்றன.

உலக நாடுகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட கட்டுப்பாடற்ற சுதந்திரம் சவூதியில் வழங்கப்படவில்லை. கேள்வி கேட்க சட்டமன்றமோ, பாராளுமன்றமோ இல்லை. ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு அனுமதி இல்லை. இவ்வழக்கை இளவரசர் தப்பிக்கும் வகையில் மோடி, அமீத் ஷா வழக்குகள் போல் நடத்தி குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தால் அந்த நாட்டில் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.

யாருக்கும் பயப்பட வேண்டிய நிலைமை இல்லாவிட்டாலும் படைத்த இறைவனுக்கு மன்னர் பயப்படுகிறார். மன்னர் குடும்பத்தினர் பயப்படுகின்றனர். இந்தக் குற்றத்துக்கு இதுதான் தண்டனை என்பது அல்லாஹ்வின் சட்டம்; அதை மீறினால் அல்லாஹ் கேள்வி கேட்பான் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம்.

முந்தைய சமுதாயம் சீரழிந்து போனதற்குக் காரணம் சாதாரண மனிதன் குற்றம் செய்யும் போது அவனை சட்டத்தின்படி தண்டித்து விட்டு, பிரமுகர்கள் குற்றம் செய்யும் போது சட்டத்தின் பிடியில் இருந்து அவரை தப்புவிப்பதும் தான் காரணம் என்று நபிகள் நாயகம் செய்த எச்சரிக்கை இதற்கு மற்றொரு காரணம்.

என் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது நபியை வழிகாட்டியாக ஏற்றது தான் காரணம்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் மன்னர் மன்னித்து இருந்தால் உலகில் அதுதான் சட்டமாக உள்ளதால் எவனும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டான். அந்த அதிகாரத்தை மன்னருக்கு வழங்காமல் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு வழங்கியதால் தான் மன்னர் மன்னிக்கவில்லை.

இப்போது நமது இந்தியத் திருநாட்டையும் நினைத்துப் பார்க்கிறோம்.

விபச்சாரியின் காம வலையில் விழுந்து இந்தியாவின் ராணுவ ரகசியங்களைக் கசிய விட்ட வருண் காந்தியின் காம, சரச, சல்லாப சமாச்சாரத்தை ஆளுகின்ற பச்சோந்தி பாஜக பொத்தி மறைத்துக் கொண்டிருக்கும் வேளையில், முஸ்லிம் விவகாரம் என்றால் அடுப்பங்கரை வரை தனது ஆதிக்கக் கேமராவை அனுப்பி வளைத்து வளைத்துப் படம் பிடித்து, அக்கு வேறாக ஆணி வேறாக அலசுகின்ற  ஊனமான ஊடகங்கள் வருண்காந்தி பிரச்சனையில் தங்கள் வாய்களுக்குப் பூட்டு போட்டு விட்டு ஊமையாகக் கிடக்கின்ற வேளையில், கண்களுக்குத் திரைபோட்டு உறங்கிக் கொண்டு கிடக்கும் இந்தத் தருணத்தில் சவூதியில் சட்டத்தின் ஆட்சியும் மாட்சியும் நிறைவேற்றப்பட்டிருப்பதும், நிலை நாட்டப்பட்டிருப்பதும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாமனியனையும் சாதாரண குடிமகனையும் சவூதியை நோக்கி  திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது.

நடுநிலை சொம்புகள் என்ற பெயரில் கருத்துக் குருடுகள், இலங்கை ரிஸானா மரண தண்டனை விஷயத்தில் சவூதிய சட்டத்தை, அதாவது அல்லாஹ்வின் சட்டத்தை எவ்வித நியாய, நீதி உணர்வின்றி கழுவி ஊற்றின! கடித்துக் குதறித் தள்ளின! பகுத்தறிவுப் பகலவன் கருணாநிதி அதைக் கடுமையாகக் கண்டித்தார். காட்டுமிராண்டிச் சட்டம் என்றார். தவ்ஹீத் ஜமாஅத் அவரை இதுகுறித்து நேரடி விவாதத்துக்கும் அழைப்பு விட்டது. இப்போது அந்த  கருத்துக் குருடுகள், தங்கள் நாற வாய்களைத் திறக்காமல் கும்மிருட்டில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து மட்டுமல்ல! உலகெங்கிலும் முஸ்லிம் அல்லாத சிந்தனையாளர்கள் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களுக்குப் பாரட்டு மாலைகளை சூடிக் கொண்டிருக்கின்றனர். பாராட்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருக்கின்றர்.

உண்மையில், இந்தப் பாராட்டு மாலைகளும் பாராட்டு மழைகளும் யாருக்குச் சொந்தம் தெரியுமா? சல்மானையும் சவூதியையும் ஆளுகின்ற அல்குர்ஆனுக்குத் தான்! காரணம் அது தான் நீதியை சார்பு வெறுப்பு பார்வையின்றி நிலை நாட்டச் சொல்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:135

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:8

அல்குர்ஆன் கூறும் நீதியை நிலை நாட்டிய நீதி நாயகர், நியாய ஆட்சியாளர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசு வார்கள்?’’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்கஜல் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’’ என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்கஜடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கஜடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை கஜல் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), “உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்ட தெல்லாம் அவர்கஜல் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்கஜல் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையஜத்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3475

சாமானியனிடத்தில் கெஞ்சிய சவூதி குடும்ப இளவரசர்கள்

இந்த நிகழ்வில் எல்லோருடைய இதயத்தைத் தொட்டதும், சுட்டதும் பத்துக்கு மேற்பட்ட சவூதிய மன்னர் குடும்பத்தைச் சார்ந்த இளவரசர்கள் கொலையுண்டவரின் தந்தையிடம் கெஞ்சிய கெஞ்சலும் கேட்டுக் கொண்ட பரிந்துரையும் தான்!

நமது நாட்டில் குடியரசுத் தலைவரிடத்தில் போய் தண்டனையை ரத்து செய்யக் கோரி கெஞ்ச வேண்டும். ஆனால் இங்கு சாதாரணக் குடிமகனிடத்தில் சவூதிய குடியரசுத் தலைவர்கள் கெஞ்சிக் கேட்கின்றார்கள் ஆனால் அந்த சாதாரண குடிமகனோ மிஞ்சுகின்றார். பரிந்துரைகளை ஏற்க மறுக்கின்றார். பணக் குவியலை ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன் என்கின்றார். ஏன்?

நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலைசெய்த) சுதந்திர மானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் அவனிடம் (இழப்பீடு) வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்

அல்குர்ஆன் 2:178,179

பாதிக்கப்பட்டவருக்கு இந்த வசனங்கள் கொடுத்த அதிகாரமும் அடித்தட்டு மக்களுக்கு அல்குர்ஆன் அளித்த அற்புதமான உரிமையும் தான்.

இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தால் போதும். சாட்சி சொல்லி விட்டு வெளியே வந்த மாத்திரத்தில் தடயம் தெரியாமல்  அவனை அழித்து விடுகின்றார்கள். இத்தனைக்கும் சவூதிய மன்னர்களுடன் ஒப்பிடுகின்ற போது இவர்கள் செல்வத்தில் பிச்சைக்காரர்கள். இவர்களுக்கு இந்த தெனாவெட்டும் திமிறும் இருக்குமேயானால் அவர்களுக்கு என்ன தெனாவெட்டும் திமிறும் இருக்கும்? அவர்கள் நினைத்தால் இந்தச் சாதாரண குடிமகனை உருத் தெரியாமல் அழித்திருக்க முடியும். அப்படியிருந்தும் அவர்களை அடங்கிப் போகச் செய்தது எது?

அல்குர்ஆனும் அது ஊட்டிய மறுமை சிந்தனையும் தான்!

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:92,93

இந்த இறை வசனங்கள்  கொலைக் குற்றத்திற்குரிய தண்டனை அதற்குரிய பரிகாரம், கொலையுண்டவரின் குடும்பத்திற்கு மன்னிப்பதற்கோ தண்டிப்பதற்கோ உரிய அதிகாரம் ஆகியவற்றைப் பேசுவதுடன் கொலை செய்தவர் ஏதாவது ஏமாற்று வேலைகள் செய்து இந்த உலகில் தப்பித்து விட்டால் மறுமையில் அவர்களுக்கு நிரந்தர நரகம் என்று எச்சரிக்கை செய்கின்றன. இவை தான் இந்த ஆட்சியாளர்களை சாதாரண குடிமக்களிடம் இவ்வளவு இறங்கியும் இணங்கியும் போகச் செய்திருக்கின்றன.

சவூதி அரபியாவின் அரச குடும்பத்தைச் சார்ந்த அரசர் கொல்லப்படுவது இது தான் முதல் நிகழ்வு என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இது இரண்டாம் நிகழ்வாகும்.

1975ஆம் ஆண்டு சவூதி மன்னர் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்களை அவர்களது மருமகன் இளவரசர் ஃபைசல் பின் முஸாயித் கொலை செய்து விடுகின்றார்.  அவருக்கு அப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது சவூதி அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை. அதன் பின் 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரச குடும்பத்தைச் சார்ந்த துர்கீ பின் சவூத் அல் கபீர் கொல்லப்பட்டிருக்கின்றார். ஆனால் இந்நிகழ்வை உலகறியச் செய்து  இஸ்லாம் மனித  உயிருக்கு அளித்திருக்கின்ற மாண்பையும் மகிமையையும் உணர்த்தியிருக்கின்றது.

மன்னர் சல்மான்  2015ல் பதவிக்கு வந்தார். அந்த 2015ல் மட்டும் 158 பேர்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு 2016ல்  மே வரைக்கும் 94 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது இவ்வாறு ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் குறிப்பிடுகின்றது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சவூதி அரசு, குர்ஆனிய பாதையில் கம்பீரமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. உலகுக்கு ஒரே ஓரு விமோசனம் இஸ்லாம் தான் என்பதை உலகுக்கு இது பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

—————————————————————————————————————————————————————-

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?

அப்துந்நாஸிர்

பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர்.

தொழுகையின் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்குத் தடை உள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகின்றது. ஆனால் தொழுகைக்கு வெளியே இவ்வாறு ஊன்றி உட்கார்வதை தடை செய்தது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன.

இது தொடர்பான செய்திகளையும், அந்த அறிவிப்புகள் எவ்வாறு பலவீனமாக உள்ளன என்பதையும் காண்போம்.

அபூதாவூதின் அறிவிப்பு :

அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். ‘‘அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா?” என்று கேட்டார்கள்.

நூல் : அபூதாவூத். (4850)

இடது கையை முதுகிற்குப் பின்புறமாக ஊன்றி உட்காருவது கூடாது என்று கூறுபவர்கள் மேற்கண்ட செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் மேற்கண்ட அறிவிப்பு பலவீன மானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘‘இப்னு ஜுரைஜ்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் முதல்லிஸ் ஆவார். அதாவது அதாவது தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார். இத்தகைய அறிவிப்பாளர்கள் நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும.

இப்னு ஜுரைஜ் என்பார் தத்லீஸ் செய்யக் கூடியவர் என்று பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இமாம் அஹ்மத் கூறுகிறார் : ‘‘இன்னார் கூறினார், இன்னார் கூறினார்” என்றோ ‘‘எனக்கு அறிவிக்கப்பட்டது” என்றோ இப்னு ஜுரைஜ் அறிவித்தால் நிராகரிக்கத்தக்க செய்திகளைக் கொண்டுவருவார். ‘‘(அஹ்பரனீ) இன்னார் எனக்கு அறிவித்தார்” என்றோ (ஸமிஃத்து) ‘‘நான் செவியேற்றேன்” என்றோ கூறினால் அதுதான் அவர் (செய்திகளில்) உனக்கு போதுமானதாகும். .

இப்னு ஜுரைஜ் ‘‘உண்மையாளர்” ஆவார். அவர் ‘‘ஹத்தஸனீ” என்று கூறினால் அது அவர் நேரடியாகச் செவியேற்றதாகும். அவர் ‘‘அஹ்பரனீ” என்று கூறினால் அது அவர் ஆசிரியரிடம் படித்துக் காட்டியதாகும். அவர் ‘‘கால” (சொன்னார்) என்று கூறினால் அது அவர் செவியேற்காதவையும், அல்லது ஆசிரியரிடம் படித்துக் காட்டாதவையும் ஆகும்.

இமாம் தாரகுத்னீ கூறுகிறார்: இப்னு ஜுரைஜ் தத்லீஸாக அறிவிப்பவற்றை விட்டும் தூர விலகி விடுங்கள். ஏனெனில் அவர் மிக மோசமாகத் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் ஆவார். அவர் குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்களிமிடருந்து தாம் செவியேற்றவற்றில் தான் தத்லீஸ் செய்வார்.

இவர் தத்லீஸ் செய்பவராக இருந்தார் என இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் . பாகம் 6 பக்கம் 359

மேற்கண்ட அறிஞர்களின் விமர்சனங்களிலிருந்து இப்னு ஜுரைஜ் தம்முடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாக செவியேற்றதற்கான வாசகங்களைப் பயன்படுத்தினால் தான் அது ஸஹீஹான ஹதீஸாகும். இல்லையென்றால் அது பலவீனமானதாகும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் மேற்கண்ட செய்தியின் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.

இந்தச் செய்தி இடம் பெற்ற அனைத்து அறிவிப்புகளையும் கீழே கொடுத்துள்ளோம்.

அஹ்மதுடைய அறிவிப்பு

مسند أحمد ط الرسالة (32/ 204)

19454 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ شَرِيدٍ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ قَالَ: “ مَرَّ بِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي، وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي فَقَالَ: “ أَتَقْعُدُ قَعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ

பைஹகி குப்ராவின் அறிவிப்பு

سنن البيهقي الكبرى (3/ 236)

 5713 – أخبرنا الحسين بن محمد الفقيه أنبأ محمد بن بكر ثنا أبو داود ثنا علي بن بحر ثنا عيسى بن يونس ح وأخبرنا علي بن أحمد بن عبدان أنبأ أحمد بن عبيد الصفار ثنا عبيد بن شريك ثنا عبد الوهاب ثنا عيسى بن يونس عن بن جريج عن إبراهيم بن ميسرة عن عمرو بن الشريد عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه و سلم وأنا جالس هكذا وقد وضعت يدي اليسري خلف ظهري واتكأت على ألية يدي فقال أتقعد قعدة المغضوب عليهم لفظ حديث علي بن بحر وفي رواية عبد الوهاب قال وأنا جالس في المسجد واضع يدي اليسرى خلف ظهري متكىء على أليه يدي قال أبو داود قال القاسم أليه الكف أصل الإبهام وما تحته

அல்ஆதாப் லில்பைஹகியின் அறிவிப்பு

الآداب للبيهقي (ص: 105)

256 – أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أَنْبَأَنَا أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْحٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي فَقَالَ: «أَتَقْعُدُ قِعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ؟யு . قَالَ أَبُو دَاوُدَ، وَقَالَ الْقَاسِمُ: أَلْيَةُ الْيَدِ: الْكَفُّ أَصْلُ الْإِبْهَامِ وَمَا تَحْتَهُ

இப்னு ஹிப்பான் அறிவிப்பு

صحيح ابن حبان بتحقيق الأرناؤوط – مطابق للمطبوع (12/ 488)

 5674 – أخبرنا أبو عروبة بحران قال : حدثنا المغيرة بن عبد الرحمن الحراني قال : حدثنا عيسى ين يونس عن ابن جريج عن إبراهيم بن ميسرة عن عمرو بن الشريد عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه و سلم وأنا جالس قد وضعت يدي اليسرى خلف ظهري واتكأت فقال النبي صلى الله عليه و سلم : ( أتقعد قعدة المغضوب عليهم )  قال ابن جريج : وضع راحتيه على الأرض وراء ظهره

அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானியின் அறிவிப்பு

المعجم الكبير للطبراني (6/ 478، بترقيم الشاملة آليا)

7092 – حَدَّثَنَا مُحَمَّدُ بن عَمْرِو بن خَالِدٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا عِيسَى بن يُونُسَ، عَنِ بن جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بن مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بن الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ قَاعِدٌ هَكَذَا مُتَّكِئٌ عَلَى أَلْيَةِ يَدِهِ خَلْفَ ظَهْرِهِ، فَقَالَ:”هَذِهِ قَعْدَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ.

அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானியின் மற்றொரு அறிவிப்பு

المعجم الكبير للطبراني (6/ 478، بترقيم الشاملة آليا)

7093 – حَدَّثَنَا الْحُسَيْنُ بن إِسْحَاقَ التُّسْتَرِيُّ، حَدَّثَنَا يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا مِنْدَلٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بن مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بن الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَبْصَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلا قَدْ جَلَسَ , فَاتَّكَأَ عَلَى يَدِهِ الْيُسْرَى، فَقَالَ:”هَذِهِ جِلْسَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ.

அல்அஹ்காமுஸ் ஷரயிய்யா லில் இஸ்பீலி

الأحكام الشرعية للإشبيلي 581 (3/ 125)

أبو داود : حدثنا علي بن بحر ، حَدَّثَنا عيسى بن يونس ، حَدَّثَنا ابن جريج ، عن إبراهيم بن ميسرة ، عن عمر بن الشريد ، عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه وسلم وأنا جالس هكذا ، وقد وضعت يدي اليسرى خلف ظهري ، واتكأت على ألية يدي ، فقال : أتقعد قعدة المغضوب عليهم ؟.

முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பு

مصنف عبد الرزاق (2/ 198)

 3057 – عبد الرزاق عن بن جريج قال أخبرني إبراهيم بن ميسرة أنه سمع عمرو بن الشريد يخبر عن النبي صلى الله عليه و سلم أنه كان يقول في وضع الرجل شماله إذا جلس في الصلاة هي قعدة المغضوب عليهم

தொழுகையில் இருப்பில் இருப்பவர் தன்னுடைய இடது கையை (பின்புறமாக ஊன்றி) வைக்கும் விசயத்தில் ‘‘இது எவர்கள் மீது கோபம் கொள்ளப்பட்டதோ அவர்களுடைய இருப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ரு இப்னு அஸ்ஸரீத்

நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (3057)

மேற்கண்ட அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் தம்முடைய ஆசிரியரான ‘‘இப்ராஹிம் இப்னு மய்ஸரா” என்பாரிடமிருந்து நேரடியாக கேட்டதற்கான ‘‘அஹ்பரனீ” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அறிவித்ததாக வந்துள்ளது.

ஆனால் மேற்கண்ட அறிவிப்பு நபித்தோழர் விடுபட்ட முர்ஸலான அறிவிப்பாகும். அம்ரு இப்னு அஸ்ஸரீத் என்பார் நபியவர்களிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தாபியீ (இரண்டாம் தலைமுறை) ஆவார். இவர் நபியவர்களைச் சந்தித்தவர் கிடையாது. எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தியை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் மேற்கண்ட செய்தியில் தொழுகையின் இருப்பில் கைகளை ஊன்றி வைப்பது கூடாது என்றுதான் வந்துள்ளது. எனவே தொழுகை அல்லாத நிலைகளில் அவ்வாறு ஊன்றி இருப்பதைத் தவறு என்று கூறமுடியாது.

தொழுகையின் அத்தஹிய்யாத் இருப்பில் இடது கையைப் பின்புறமாக ஊன்றி இருப்பதைத் தான் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள் என்பது ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் மிகத் தெளிவாக வந்துள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தொழுகையின் இருப்பின் போது ஒருவர் தனது இரண்டு கைகளின் மீது ஊன்றி இருப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்.

நூல்: அஹ்மத் (6347)

மேற்கண்ட  ஹதீஸ் ஸஹீஹானதாகும்.

பின்வரும் அறிவிப்பில் இடது கையின் மீது ஊன்றி இருப்பதைத் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது.

தொழுகையிலே தமது இடது கையின் மீது ஊன்றி இருந்த ஒரு  மனிதரை நபியவர்கள் தடுத்து ‘‘இது யூதர்களின் தொழுகை என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: ஹாகிம் (1007)

இதுவும் அறிவிப்பாளர்கள் தொடர் வலிமையான ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.

எனவே தொழுகையின் இருப்பில் இடது கையை ஊன்றி அமர்வது தான் தடை செய்யப்பட்டுள்ளதே தவிர தொழுகை அல்லாத நேரங்களில் அவ்வாறு இருப்பது தவறு கிடையாது. அது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்: 29

குருநாதர் கஸ்ஸாலியின் குர்ஆனிய வெறுப்பு

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

“வாரிசுரிமைச் சட்டம், விவாகரத்து, குற்றவியல் தண்டனைகள் மற்றும் இன்ன பிற சட்டங்கள் இடம் பெறுகின்ற வசனங்களும் இவ்வாறு  பொருத்தமாக அமையாது. உள்ளத்தை உருக்குகின்ற ஒரே ஆயுதம் அதற்குப் பொருத்தமாக அமைகின்ற இசை பாடல்கள்  தான். கவிஞர்கள் வடிக்கின்ற கவிதைகள் அனைத்தும் வெறும் கவிதைகள் அல்ல! கவிஞன் உள்ளத்தின் நிலைகளைத் தான் வார்த்தைகளின்  வாயிலாக வெளியே கொண்டு வருகின்றான். இந்த அடிப்படையில் அவனது கவிதைகள் உள்ளத்தின் வெளிப்பாடுகளாகும். அதனால் சோகத்தில் உள்ளவன் அதை விளங்குவதற்கு சிரமப் பட வேண்டியதில்லை” என்ற கஸ்ஸாலியின் வாதத்தைக் கடந்த இதழில் பார்த்தோம்.

குர்ஆனை விட இன்னிசைக் கவிதைகள் தான் எளிமையானவை; இனிமையானவை என்பதைத் கஸ்ஸாலியின் இந்த வாதம் நிறுவுகின்றது.

கவிதை பற்றிய குர்ஆனின் மதிப்பீடு

கஸ்ஸாலியின் இந்த வாதத்தைக் குர்ஆனும், ஹதீஸும் தகர்த்தெறிகின்றது. இதோ அல்லாஹ் சொல்கின்றான்:

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழிதீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் பின்னர் அறிந்து கொள்வார்கள்.

அல்குர்ஆன் 26:224-227

இந்த வசனங்களின் மூலம் கவிதைக்கு அல்லாஹ் மரண அடி கொடுக்கின்றான்.

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:  புகாரி 6154

கவிதைக்கு நபி (ஸல்) அவர்களும் சாவு மணி அடிக்கின்றார்கள். அதிகப்பட்சமாக நபி (ஸல்) அவர்கள் கவிதைக்கு கொடுத்த மரியாதை போர்க்களத்தில் வசை பாடுவதற்காகத் தான். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா போரின் போது ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘இணை வைப்பவர்களைத் தாக்கி வசைக் கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறு துணையாக) இருப்பார்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பர்ரா பின் ஆஸிஃப் (ரலி)

நூல்:  புகாரி 4124

(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே’’ என்னும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3841

இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கின்ற கவிதை வரிகள் போன்று சில கவிதைகள் உண்மையைப் பேசுகின்றன. அதனால் நபி (ஸல்) அவர்கள்  நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு என்று கூறிப் பாராட்டுகின்றார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

 நூல்: புகாரி 6145

இந்த அளவுக்குத் தான் நபி (ஸல்) அவர்கள் கவிதைக்கு மரியாதை கொடுக்கின்றார்கள். ஒரு நல்ல கருத்தை ஒரு கவிதை சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று தான் குறிப்பிடுகின்றார்களே தவிர அதற்கென்று நேரம் காலத்தைச் செலவழித்து அதைத் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்ற அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு மரியாதை அளிக்கவில்லை. அதற்கு அந்த அளவுக்கு மதிப்பும் கொடுக்கவில்லை.

கஸ்ஸாலி வைக்கும் விநோதமான வாதம் 

கவலையில் இருப்பவனிடம் மேற்கண்ட இரு வசனங்களை ஓதும் போது அவை அவனுடைய இதயத்தை ஈர்க்காது என்று குறிப்பிடுகின்றார்.  குர்ஆன் மனிதனுடைய வார்த்தைகள் இல்லை. அல்லாஹ்வின் வார்த்தைகள்! ஒரு மனிதனுடைய சூழ்நிலைக்கு ஏற்ப இந்தப் பாகப் பிரிவினை சம்பந்தப்பட்ட வசனம் இருக்கலாம். அவதூறுக்குரிய தண்டனை பற்றிய வசனமாக இருக்கலாம். இந்த இடத்தில் அவை பொருத்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த வசனங்கள் ஒரு தூண்டில் போன்று அவனது சிந்தனையை இழுத்துக் கொண்டு போய் பொருத்தமான இடத்தில்  இதயத்தை கட்டிப் போட்டு விடும்.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் 13:28

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’’ என்று அவர்கள் கூறுவார்கள்.

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.

 அல்குர்ஆன் 2:156,157

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

 அல்குர்ஆன் 57 : 22,23

இதுபோன்ற வசனங்களில் மனம் லயித்து விட்டால் அவனுடைய கவலைகள் அப்படியே பறந்து போய் விடும். இவனும் அந்தக் கவலையை விட்டும் மறந்து போய் விடுவான். இது தான் குர்ஆனின் ஈர்ப்பு மற்றும் இழுப்பு சக்தியாகும். இது அல்லாஹ்வின் விந்தைமிகு வித்தியாசமிகு வழிமுறையாகும்.

இந்த பாக்கியம் இறை நம்பிக்கையில் உறுதியில்லாத சூஃபியாக்கள் என்ற பைத்தியங்களுக்கு வாய்க்கப் பெறாது; வழங்கப்படாது. இதற்குத் தான் இந்தக் கல்விக் கடல் வாரி வரிந்து கட்டிக் கொண்டு வாய் கிழியப் பேசுகின்றார்.

கஸ்ஸாலி வாதப் படியே கவிதை தான் கவலையின் வடிகால் வாரியம் என்று வைத்துக் கொண்டு பார்ப்போம். வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருப்பவன் முன்னால் இன்னிசை பாடல் படித்தால் அது அவனுக்கு ஆறுதல் தருமா? அருமருந்தாகுமா? என்றால் நிச்சயமாகக் கிடையாது.  அதனால் கஸ்ஸாலியின் இந்த வாதம் ஒரு கவைக்கும் உதவாத வாதமாகும்;  அர்த்தமற்ற பிதற்றலாகும்.

கஸ்ஸாலியின் பித்தர்கள், இந்தப் புத்திசாலிக்குத் தான் கல்விக் கடல் என்று பட்டம் சூட்டி மகிழ்கின்றார்கள். இதில் அவர் கொண்டு வந்திருக்கின்ற புறா கவிதை வேடிக்கையிலும் வேடிக்கையாகும்; விநோதத்திலும் விநோதமாகும்.

அதில் என்ன அவர்கள் உள்ளங்கள் நெகிழ்ந்து போயின? அதில் அந்த சன்னிதானங்கள்  உள்ளங்கள் உருகிப் போயின? அந்த  வானத்து புறாக்கள் இவர்களிடம் என்ன கவலைக்குரிய வசனத்தை புலம்பித் தள்ளின? எல்லாமே சுத்த புலம்பலும் புரட்டலும் தவிர்த்து இதில் எந்த உண்மையும் இல்லை. அந்தக் கவிதைகளில் அர்த்தமும் இல்லை; ஆக்கப்பூர்வமான கருத்துமில்லை. மாறாக, அரைவேக்காட்டுத்தனமும் அபத்தமும் தான் அடங்கியிருக்கின்றன.

இதோ ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்…

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். “எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப் பட்டார்களா? அல்லது அவர்களே படைப்பவர்களா? அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள். அல்லது உமது இறைவனின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா? அல்லது அவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்களா?’’ எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது

நூல்: புகாரி 4854

ஜுபைர் பின் முத்இம் (ரலி)யின் காதில் விழுந்த வசனங்கள் முன் பின் தொடர்பில்லாதவை தான். இந்தக் காந்தமிகு வசனங்கள் தான் அவர்கள் சிந்தனையில் பட்டுத் தெறித்து, இதயத்தைத் தொட்டு விட்டன. இறுதியில், அவர்களை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டன. இது தான் குர்ஆனின் ஈர்ப்பு, இழுப்பு சக்தியாகும். ஆனால் கஸ்ஸாலியோ கவிதைகளுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கின்றது என்று குர்ஆனின் மீதுள்ள வெறுப்பைப் பதிய வைக்கின்றார். இன்னிசை பாடலை தூக்கிப் பிடிக்கின்றார்.

அவர் கூறிய இந்தக் கவிதை வரிகளில் இந்தக் காந்த சக்தி இருக்கிறதா? இருக்கத் தான் முடியுமா?  ஒரு போதும் இருக்காது; இருக்கவும் முடியாது. மொத்தத்தில், கஸ்ஸாலியின் இந்த வாதம் அவர் குர்ஆன் மீது கொண்டிருக்கின்ற வெறுப்பை வெளிப்படுத்தி விட்டது. இதன் பின்னராவது கஸ்ஸாலியின் பித்தர்கள் கஸ்ஸாலியின் இந்தப் பிதற்றலை உணர்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

எல்லோருக்கும் புரிகின்ற எளிய குர்ஆன் வேதம்

கஸ்ஸாலி நிறுவுகின்ற இரண்டாவது வாதம் சிந்தனைத் திறன் மிக்க பண்டிதற்கு மட்டும் தான் குர்ஆன் புரியும். சாதாரண பாமரனுக்கு அது எளிதில் புரியாது என்பதாகும். இந்த வாதத்தையும்  எல்லாம் வல்ல அல்லாஹ் இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17) என்ற வசனத்தின் மூலம்  தகர்த்தெறிகின்றான்.

இந்த வேதம் அருளப்பட்ட தூதரும் மக்களும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்பதே பண்டிதருக்கும் பாமரருக்கும் விளங்கும் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அறிஞர் கஸ்ஸாலியின் அறிவார்ந்த  வாதம் (?)

அடுத்து குர்ஆனைப் பற்றிய கஸ்ஸாலியின் மற்றொரு உளறல் வாதத்தைப் பாருங்கள்…

‘‘இரண்டு பெண்களின் (சொத்து) பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்ற அல்லாஹ்வின் வார்த்தை, ஓர் ஆண் பெண்ணை விட சிறந்தவன் என்பதால் இந்தச் சிறப்பை அல்லாஹ்  இந்த உலகத்தில் அல்லாஹ் அளித்திருக்கின்றான்; மறுமையில் ஆண்களுக்குச் சிறப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அவர்களை  அல்லாஹ்வின் நினைவிலிருந்து வர்த்தகமோ, வணிகமோ திசை திருப்பாதது தான்.

அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் திசை திருப்பிய  ஒரு பொருள், அல்லாஹ் அல்லாத ஒரு சக்தி உலகத்தில் இருக்குமானால் அது  நிச்சயமாக இந்தப் பெண்கள் தான்! அது ஆண்கள் அல்ல என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை இப்படி உலகப் பொருளாதாரத்தில் பெண்கள் பின்னுக்கு தள்ளப்பட்டது போன்று தான் மறுமையின் அருள்கொடையிலிருந்து பின்னுக்கு தள்ளப்படலாம் அல்லது அருளிலிருந்து தடுக்கப் படலாம் என்று அவர் பயப்பட நேரிடலாம்….

கஸ்ஸாலியின் இவ்வாதத்தில் ‘பெண்களுக்கு மறுமையில் சிறப்பில்லை. அதற்கு காரணம் அவர்கள் ஆண்களை அல்லாஹ்வின் நினைவிலிருந்து திசை திருப்பியது தான்’ என்று கூறுகின்றார். உண்மையில் ஆண்களை அல்லாஹ்வின் நினைவிலிருந்து திசை திருப்புவது பிள்ளைகளும், பொருளாதாரமும் தான். இதை நாம் சொல்லவில்லை. அல்லாஹ்வே சொல்கின்றான்.

‘‘நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் 63:9

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் நினைவை விட்டும் திசை திருப்பும் ஒரு பொருள் இருக்குமானால் அது பொருட்செல்வமும், மக்கள் செல்வமும் என்று தான் குறிப்பிடுகின்றான்.

கஸ்ஸாலி வைக்கின்ற இந்த அபத்த வாதத்தின் படி பார்த்தால் நாம் பெற்ற பிள்ளைகளுக்கும் மறுமையில் சிறப்பு இல்லாமல் போய் விடும். அதனால் பெண்களுக்கு மறுமையில் சிறப்பில்லை என்று சொல்வது கஸ்ஸாலியின் அதீதமான யூகத்தைத் தவிர வேறு எதுவுமிருக்க முடியாது. அத்துடன், பெண்கள் வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் எந்த தடையுமில்லை.

‘‘(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனைச் சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

அல்குர்ஆன் 24:36,37

இந்த வசனத்தில் அல்லாஹ் ஆண்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றான். அதை வைத்துத் தான் கஸ்ஸாலி இந்த வாதத்தை நிறுவுகின்றார். இங்கு ஆண்கள் என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தாலும் இதில் வரும் சிறப்பு பெண்களையும் சேர்த்து தான் குறிக்கும். விதிவிலக்கு என்றால் அதை அல்லாஹ்வோ அவனுடைய திருத்தூதரோ தெரிவித்திருப்பார்கள். அவ்வாறு தெரிவிக்காத வரை இந்தச் சிறப்பு இரு பாலருக்கும் பொதுவானது தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் படி, பெண்களுக்கு மறுமையில் சிறப்பு  கிடையாது என்ற கஸ்ஸாலியின் வாதம் ஓர் அபத்தமான வாதம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மவ்லிதுகளின் தலைமை பீடத்தில் இருப்பது சுப்ஹான மவ்லிது. அந்த சுப்ஹான மவ்லிதை இயற்றியவரின் பெயரை துவக்கத்தில் குறிப்பிடும் போது கதீபி என்ற பெயருடன் சேர்த்து ஒரு கீலின் படி – அதாவது ஒரு கருத்தின் படி – ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் கஸ்ஸாலி என்று எழுதப்பட்டுள்ளது.

கஸ்ஸாலிக்கும் இந்த மவ்லிதுக்கும் என்ன சம்பந்தம்? என்று பார்ப்பவரின் உள்ளத்தில் சந்தேகம் வரும். கஸ்ஸாலியின் இஹ்யாவுடைய அரபி நடையுடன் இந்த மவ்லிதை ஒப்பிடும் போது இந்த மவ்லிதின்  அரபி  நடை வெறும் குப்பை நடை; குமட்டல் நடை.  அந்த மவ்லிதை கஸ்ஸாலி  இயற்றவில்லை என்பதும் அவருக்கு அதில் சம்பந்தமில்லை என்பதும் இதிலிருந்தே நன்றாக விளங்கி விடுகின்றது. இருப்பினும், அவரது பெயரை அவர்கள் வலுக்கட்டாயமாக நுழைப்பதற்குக் காரணம் குர்ஆனை விட கவிதைக்கு ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கின்றது என்று கவிதைக்கு பச்சைக் கொடி காட்டியதற்கு நன்றிக் கடனாகத் தான்! கஸ்ஸாலியின் பித்தர்கள்  குர்ஆனை விட மவ்லிதை தூக்கிப் பிடிப்பதற்குரிய காரணத்தையும் இதிலிருந்து  நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அதனால் தான் குருவின் வழியில் சிஷ்ய கோடிகள் மவ்லிதுகள் என்ற கவிதை மாலைகளை, குர்ஆனை விட அதிகமதிகம் நேசிக்கின்றார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் இழவு வீடுகளில் தான்  குர்ஆன் ஓதப்படும். அதே சமயம் வீடு குடி புகுதல் போன்ற சுப காரியங்களில் மவ்லிதுகள் தான் ஓதப்படும். இதற்கெல்லாம் காரணம் கஸ்ஸாலி தான் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்

எம்.ஐ. சுலைமான்

இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்று ஹஜ் கடமை. இந்தக் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.

தூய்மையான இந்த வணக்கத்தை பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதை பார்க்க முடிகிறது. ஹஜ் பயணத்திற்கு முன்னால் விருந்தளித்தல், மாலை அணிதல், சுவரொட்டிகளில் விளம்பரம் செய்தல் என்று பல வகைகளில் விளம்பரம் செய்கின்றனர். இறைக்கடமையைச் செய்பவர் போன்று இல்லை. ஒரு கடையை திறப்பவர் செய்யும் விளம்பரம் போன்று உள்ளது. இதன் மூலம் நன்மைகளை இழக்கிறார்கள்.

இன்னும் பல நூதனங்களையும் செய்கிறார்கள். ஹஜ் செய்தவர் வீடு திரும்பும் போது அவர் வீட்டிற்கு நுழைவதற்கு முன்னரே அவரைச் சந்தித்து அவரிடம் நமக்காக துஆச் செய்யச் சொல்ல வேண்டும் என்றும், அதனால் நிறைந்த பலன் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இதற்கு ஒரு செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

مسند أحمد بن حنبل – (2 / 69)

5371- حَدَّثَنَا عَفَّانُ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْحَارِثِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ ، وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ ، فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ.

நீ ஹாஜியைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்பு தேடுவதற்குக் கேட்டுக் கொள். ஏனெனில், அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அஹ்மத் 5371, 6112

இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து ஹாஜிகள் ஊர் திரும்பினால் அவரைக் கட்டாயம் சந்தித்து அவரிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

இந்தச் செய்தி அஹ்மதில் இரண்டு இடங்களில் வந்துள்ளது. அந்த இரண்டு செய்திகளிலும் முஹம்மத் பின் அப்துர்ஹ்மான் அல்பைலமானீ என்பவர் இடம்பெறுகிறார்.

இவர் நபிகளார் பெயரில் இட்டுக்கட்டி பொய்யான செய்திகளைச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.

تهذيب التهذيب ـ محقق – (9 / 261(

قال عثمان الدارمي عن ابن معين ليس بشئ وقال البخاري وأبو حاتم والنسائي منكر الحديث وقال البخاري وكان الحميدي يتكلم فيه لضعفه وقال أبو حاتم أيضا مضطرب الحديث.

وقال ابن عدي وكل ما يرويه ابن البيلماني فالبلاء فيه منه وإذا روى عنه محمد ابن الحارث فهما ضعيفان.

قلت: وقال ابن حبان حدث عن ابيه بنسخة شبيها بمائتي حديث كلها موضوعة لا يجوز الاحتجاج به ولا ذكره إلا على وجه التعجب وقال الساجي منكر الحديث وقال العقيلي روى عنه صالح بن عبد الجبار ومحمد بن الحارث مناكير

இவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி, அபூஹாத்திம், நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர்.

இவர் பலவீனமானவராக இருப்பதினால் ஹுமைதீ இவரை விமர்சித்துள்ளதாக புகாரி குறிப்பிடுகிறார்கள்.

இப்னுல் பைலமானீ அறிவிக்கும் செய்தியில் ஏதாவது பிரச்சனை என்றால் அது இவராகத் தான் இருக்கும்.  இவரிடமிருந்து முஹம்மத் பின் ஹாரிஸ் அறிவிக்கிறார். இவ்விருவரும் பலவீனமானவர்களே என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர் தனது தந்தை வழியாக இருநூறு செய்திகளை அறிவித்துள்ளார். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையே என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.

இவர் மறுக்கப்பட வேண்டியவர் என்று ஸாஜி குறிப்பிட்டுள்ளார்.

ஸாலிஹ் பின் அப்துல் ஜப்பார், முஹம்மத் பின் ஹாரிஸ் ஆகியோர் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை இவர் அறிவித்துள்ளார் என்று உகைலீ குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 231

எனவே இந்தச் செய்தி பலவீனமானதும் இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இதைக் கொண்டு செயல்படுவது கூடாது.

எனினும் அடுத்தவர்களுக்காக நாம் துஆச் செய்வது நபிகளார் காட்டித் தந்த வழிமுறையாகும். எனவே மற்றவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யலாம். அதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (8 / 86)

5279 – حَدَّثَنِى أَحْمَدُ بْنُ عُمَرَ بْنِ حَفْصٍ الْوَكِيعِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا أَبِى عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلاَّ قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ யு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!’’ என்று கூறாமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல் முஸ்லிம் 5279

—————————————————————————————————————————————————————-

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்

இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் முறையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.

கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்ய அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு தடவை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாம். பின்னர் மீண்டும் விவாகரத்து செய்தால் மீண்டும் சேர்ந்து வாழலாம். இதன் பின் மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் இஸ்லாமிய தலாக்.

(இது பற்றிப் பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.)

முத்தலாக்

முஸ்லிம்களில் சிலர் தமக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டதை அறியாமல் ஒரே தடவையில் மூன்று தலாக் எனக் கூறி மூன்று தலாக் நிகழ்ந்து விட்டதாகக் கருதி கணவன் மனைவியைப் பிரித்து விடுகின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் மூன்று தலாக் எனக் கூறினால் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் கருதப்பட்டது. அதற்கு மாற்றமாக ஒரு சமயத்தில் மூன்று தலாக் கூறி அதை மூன்றாகக் கருதுவது அமைந்துள்ளது.

(இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)

இந்திய முஸ்லிம்களில் மத்ஹப் எனும் கோட்பாட்டை (அறிஞர்களின் சொந்தக் கருத்தை) பின்பற்றுவோரும் உள்ளனர். இவர்கள் தான் மூன்று தலாக் எனக் கூறினால் அது மூன்று தலாக் நிகழ்ந்து விடும் என்ற கருத்தில் உள்ளவர்கள்.

மத்ஹபுக் கோட்பாட்டை எதிர்க்கும் அஹ்லே ஹதீஸ், முஜாஹித், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஜமாஅத்துகளைச் சேர்ந்தவர்கள் மூன்று தலாக் என்று சொன்னாலும் ஒரு தலாக் தான் என்ற கொள்கையில் உள்ளவர்கள்.

1937ஆம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு மதத்தினருக்குமான சிவில் சட்டங்கள் புணரமைக்கப்பட்ட போது ஒரு சமயத்தில் மூன்று தலாக் கூறி முற்றாகப் பிரிந்து விடும் சட்டத்தை நீக்க அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அன்றைக்கு செல்வாக்கு பெற்றிருந்த தேவ்பந்த் மதரஸாவின் எதிர்ப்பு காரணமாக வெள்ளையர்களின் முயற்சி பலிக்கவில்லை. அதுவே சுதந்திர இந்தியாவிலும் நீடிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் முஸ்லிம் விரோதப் போக்கு

மூன்று தலாக் முறையால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தக்க முறையில் அணுகாததே இப்போது எழுந்துள்ள குழப்பத்துக்குக் காரணம்.

அந்த விபரம் இதுதான்:

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாயிரா பானு, ராஜஸ்தான் மானிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பெண், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய மூவர் முத்தலாக்கை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இவர்கள் தொடுத்த வழக்கு முத்தலாக் என்பது இஸ்லாத்தில் இல்லை என்பதேயாகும்.

இவ்வழக்குகள் கீழ் நீதிமன்றங்களைக் கடந்து முடிவில் ஒரே வழக்காக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இதை முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும், சில முஸ்லிம் அமைப்புகளும் எதிர்த்தன.

அஹ்லே ஹதீஸ் பிரிவினரிடம் முத்தலாக் முறை இல்லை; நபிகள் நாயகத்தின் காலத்திலும் இல்லை. வழக்குத் தொடுத்த பெண்கள் நபிகள் நாயகத்தின் காலத்து இஸ்லாமிய சட்டத்தைக் கோரி வழக்கு போட்டுள்ளதால் முத்தலாக் என்பது ஒரு தலாக் தான் என்று  நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருக்க முடியும். அப்படி பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் உள்ளன.

இப்படி தீர்ப்பு அளித்து இருந்தால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அதிகமான முஸ்லிம்கள் கருத மாட்டார்கள். மாறாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஒரு பிரிவினரின் சட்டப்படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக்க் கருதப்பட்டு இருக்கும்.

ஹனபி பிரிவினரும், அஹ்லே ஹதீஸ் பிரிவினரும் பல விஷயங்களில் மோதிக் கொண்டு நீதிமன்றங்களை அணுகிய போது அஹ்லே ஹதீஸ் பிரிவினர் அவர்களின் கோட்பாட்டுப்படி நடக்க உரிமை உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

மேலும் கேரளாவிலும், காரைக்காலிலும் ஷாஃபி மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டப்படி நீதிமன்றங்களில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இங்கே ஷாஃபி கோட்பாட்டைப் பின்பற்றுவோர் தான் அதிகம் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஹனஃபி மத்ஹபின் படி தீர்ப்பளிக்கப்படுகின்றன.

இப்படி இஸ்லாமியப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்குரிய சட்டப்படி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தால் அது தனியார் சட்டத்தில் தலையிடுவதாக ஆகாது. முஸ்லிம்களும் அப்படிக் கருத மாட்டார்கள்.

ஆனால் உச்சநீதிமன்றம் இந்த அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கையாளாமல் மத்திய அரசிடம் தேவையில்லாமல் கருத்து கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் கருத்தைக் கேட்காமலே இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையில் நின்று அப்பெண்களுக்கு நியாயம் வழங்க வழி இருந்தும் நீதிமன்றங்கள் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டது அறிவீனமாகும்.

இதன்படி மத்திய அரசும் பின்வரும் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தலாக் நடைமுறையை, மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாகத் திகழும், இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது.

மூன்று தலாக் பிரச்சனைக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டால் அது பற்றி மட்டும் கருத்து சொல்லாமல் ஒட்டு மொத்த தலாக் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது மடத்தனமானதாக உள்ளது.

ஒரு செய்தியில் முரண்பட்டு அறிக்கை தாக்கல் செய்யும் அளவுக்கு மத்திய அரசுக்கு மூளை வறட்சி ஏற்பட்டுள்ளதை முதலில் நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

  • தலாக் நடைமுறையை, மதநம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை.
  • இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது.

இவ்விரு வாக்கியங்களையும் பாருங்கள்!.

தலாக் என்பதை மத நம்பிக்கையின் ஓரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை என்று முதல் வாசகம் கூறுகிறது. இரண்டாம் வாசகம் மத அடிப்படையிலான சட்டங்களுக்கு மதச்சார்பற்ற நாட்டில் இடமில்லை என்று நேர்முரணாகக் கூறுகிறது.

தலாக் மத நம்பிக்கை தான்; ஆனால் மத நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு நிகரான மடமை எதுவும் இருக்குமா?  அரசியல்வாதிகளுக்குத் தான் அறிவு போதாது என்றால் சட்டம் படித்த மேதாவிகளுக்காவது முரண்பாடு இல்லாமல் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய அறிவு இருக்க வேண்டாமா?

அடுத்து மத்திய அரசின் சட்ட அறிவு சந்தி சிரிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

மதச்சார்பற்ற நாடு என்பதால் மத அடிப்படையிலான தலாக் சட்டத்துக்கு இடமளிக்கக் கூடாது என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

மதச்சார்பற்ற நாடு என்று மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்படவில்லை. அரசியல் சாசனம் உருவாக்கப்படும் போதே அறிவிக்கப்பட்டது. அரசியல் சாசனத்திலும் இவ்விதி சேர்க்கப்பட்டது. மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கும் போதே பல்வேறு மதத்தினருக்க்காக 1937ல் உருவாக்கப்பட்ட தனிச்சட்டத்தையும் அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்கிறது.

அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவதென்ன?

குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்.

என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுகிறது.

இதன் பொருள் என்ன? அனைவருக்கும் தற்போது ஒரே சிவில் சட்டம் இல்லாமல் உள்ளது. அதை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இவ்வாசகம் தனியார் சிவில் சட்டங்களை ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளிக்கிறது. இருந்தாலும் அனவருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக முயற்சிக்க வேண்டும் என்றுதான் அறிவுரை கூறப்படுகிறது.

சில தனியார் சிவில் சட்டங்கள் அனுமதிக்கப்பட்டது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்று அன்றைய அரசியல் சாசன சிற்பிகள் கருதி இருந்தால் அன்றைக்கே அனைத்து தனியார் சிவில் சட்டங்களையும் அரசியல் சாசனம் மூலம் ரத்து செய்திருப்பார்கள்.

பொது சிவில் சட்டத்துக்காக முயற்சிக்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அது கட்டாயம் நிறைவேற்ற வேண்டியதில்லை என்பதும் மத்திய அரசுக்கு விளங்கவில்லை. இதை அரசியல் சாசனமே தெளிவாக்குகிறது.

அடிப்படை உரிமையும் அறிவுரைகளும்

ஐந்து தலைப்புகளின் கீழ் அரசியல் சாசணம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கொள்கை விளக்கம் என்பது ஒரு தலைப்பாகும். இத்தலைப்பில் 36 முதல் 51 வரை உள்ள விதிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் உள்ள 36 முதல் 51 வரை உள்ள விதிகள் அறிவுரைகள் தான். கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை அல்ல.

‘இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது’

என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.

நீதிமன்றம் தலையிடக் கூடாது; தலையிட முடியாது என்ற தரத்தில் உள்ள கொள்கை விளக்கம் பகுதியில் தான் பொது சிவில் சட்டத்துக்கு முயற்சிக்க வேண்டும் என்ற 44வது பிரிவு அடங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு சட்ட அறிவும், அரசியல் சாசன அறிவும் இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இது குறித்து கருத்து கேட்கவும், தலையிடவும் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அரசியல் சாசனத்தைக் காப்பாற்றி இருக்க வேண்டும்.

அடுத்து முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் சில தனியார் சட்டங்கள் உள்ளன என்பதை மாற்றத் துடிக்கும் மத்திய அரசு முஸ்லிமல்லாத மக்களுக்கும் இது போல் சில சட்டங்கள் உள்ளதை அறியவில்லை.

இந்துக்களுக்கான தனியார் சட்டங்கள்

மதச்சார்பற்ற நாடு என்பதற்காக தலாக் கூடாது என்றால் இந்துக்களுக்கு மட்டும் தனியான சிவில் சட்டங்கள் உள்ளனவே அவற்றை நீக்க மத்திய அரசுக்குத் துணிவு உண்டா? நீக்குவோம் என்று பேசுவதற்காகவாவது துணிவு உண்டா?

இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வருமான விலக்கு உண்டு. இது முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிமுக்கு அதிக வரியும், இந்துக்களுக்கு குறைந்த வரியும் என்ற நிலை இருந்தும் இது போல் இந்துக்களுக்கு மட்டும் சலுகை உள்ளது.

தத்தெடுக்கும் குழந்தை சொந்தப் பிள்ளையாகக் கருதப்படுவான் என்று இந்துக்களுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளது.

நிர்வாணமாகத் திரிவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர். பிரதமரே நேரில் சென்று அம்மண சாமிகளிடம் ஆசி வாங்குகிறார். இது இந்து தனியார் சட்டம் காரணமாகவே சாத்தியமாகிறது.

இப்படி பொதுசிவில் சட்டத்துக்கு மாற்றமாக இந்துக்களுக்கு மட்டும் உள்ள தனிச்சட்டம் எவ்வளவு தெரியுமா?

முன்னாள் சட்ட அமைச்சரும் அறிவுஜீவியுமான வீரப்ப மொய்லி சொல்கிறார்:

இந்தியாவில் மொத்தம் 300 தனியார் சட்டங்கள் உள்ளன. அவற்றில் முஸ்லிம்களுக்கு நான்கு, கிறித்தவர்களுக்கு நான்கு தனியார் சட்டங்கள் உள்ளன. மீதமுள்ள 292 சட்டங்களும் இந்துக்களுக்கு மட்டும் உரியதாகும்.

292 சட்டங்கள் நாட்டின் பொதுவான சட்டப்படி இல்லாமல் இந்துக்களுக்கு மட்டும் தனியாக உள்ளதே அது மதச்சார்பற்ற நாட்டுக்கு அழகா? மத்திய அரசு இது குறித்து வாய் திறக்க முடியுமா?

இந்துக்களுக்கு 292 சட்டங்களும், முஸ்லிம் களுக்கு நான்கு சட்டங்களும், கிறித்தவர்களுக்கு நான்கு சட்டங்களும் பொதுசிவில் சட்டத்தில் இருந்து வெள்ளையர்கள் காலத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இதை சுதந்திர இந்தியாவும் ஏற்றுக் கொண்டது.

வம்சாவளி சொத்து (மிழிபிணிஸிமிஜிகிழிசிணி), சாதி (சிகிஷிஜிணி) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772ஆம் ஆண்டில் வகை செய்யப்பட்டது. மேலும் இந்தியக் குற்றவியல் சட்டம் (மிழிஞிமிகிழி றிணிழிகிலி சிளிஞிணி) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் முழுமையாக மாற்றப்பட்டது. பின்னர் 1937ஆம் ஆண்டில் ‘ஷரீஅத் சட்டம்‘ இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் சரத்துகளில் விவாகரத்து, வாழ்க்கைப்படி (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம்  ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

பிராமண சட்டம் தலித்துக்குப் பொருந்துமா?

இந்து மதம் பல மதங்களின் தொகுப்பாகும். சாதிகள் அடிப்படையிலும் தனித்தனியான சட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட இந்து சாதியினருக்கு ஒரு வழக்கம் மதச் சடங்காக இருந்தால் அந்தப் பிரிவினர் அதைக் கடைப்பிடிப்பார்கள்.

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நீதிமன்றம் தலையிடும் வாசலை மத்திய அரசு திறந்து வைத்தால் என்ன ஆகும்? பிராமணருக்கு உள்ள சட்டம், அல்லது ஏதேனும் ஒரு பிரிவுக்கு உள்ள சட்டம் மற்ற அனைத்து சாதியினருக்கும் என்று ஒரே சட்டத்தைக் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு இனத்தவரும் புரட்சியில் இறங்கும் நிலை ஏற்படும். இது சாதாரணமான விஷயம் அல்ல.

இதனால் தான் வெள்ளையன் அதை அங்கீகரித்து வைத்தான். அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகள் இதை உணர்ந்து இருந்தார்கள். முஸ்லிம்களுக்கு உள்ள நான்கு சட்டங்கள் பற்றியதாக மட்டும் இப்பிரச்சனை இருந்திருந்தால் பாகிஸ்தான் பிரிவினையின் பழியைச் சுமந்திருந்த முஸ்லிம்களுக்கு எதிராக இதைச் செய்வது அன்று எளிதானது தான்.

யாதவரும், ஜாட்டும், பட்டேலும், நாடாரும், தேவரும், தலித்தும், ஒவ்வொரு சாதியினரும் தம்மீது பிற சாதியின் சட்டம் திணிக்கப்பட்டால் பொங்கி எழுவார்கள். இதை நாடு தாங்காது. இதைக் கருத்தில் கொண்டே பொதுசிவில் சட்டம் பற்றி வெறும் அறிவுரையாக மட்டுமே கூறி அரசியல் நிர்ணய சபை ஒதுங்கிக் கொண்டது.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தமது மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது.

மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது.

வெள்ளையர்களும், மொகலாய முஸ்லிம் மன்னர்களும் வழங்கிய தனி சிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்படும்.

புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது.

புத்தமத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது.

கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனிச் சட்டம் இல்லை என்று சிலர் அறியாமையால் கேள்வி எழுப்புகின்றனர். சவூதி அரேபியாவில் முஸ்லிம்களைத் தவிர யாரும் சொந்த நாட்டவர் அல்லர். பிழைக்கச் சென்றவர்கள் ஆவர். ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்களைப் போல் முஸ்லிம்களும் குடிமக்களாவர். இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இக்கேள்வி எழாது.

மத்திய அரசின் மடமை வாதம்

அடுத்து தலாக் பற்றி மத்திய அரசுக்கு கடுகளவு அறிவும் இல்லை என்பதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை மூலம் இனம் காட்டிவிட்டது.

தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

தலாக் என்பதை பாலின பாகுபாடு என்ற அடிப்படையிலும், இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையிலும் அணுக வேண்டுமாம்.

இஸ்லாத்தில் ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை அறிவு மத்திய அரசுக்கு இல்லை. இதைப் பின்னர் விரிவாக விளக்கியுள்ளோம்.

இந்து மதத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லையே? இது பாலின பாகுபாடு இல்லையா? இதற்காக இந்துச் சட்டத்தை மத்திய அரசு திருத்துமா?

ஆணுடைய உணவுக்கு ஆண் பொறுப்பு. பெண்ணின் உணவுக்கு பெண் பொறுப்பு. எனவே கணவன் மனைவிக்கு செலவினம் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தையும் பாலின சமத்துவ அடிப்படையில் மத்திய அரசு அணுகுமா? இதுபோல் ஆயிரக்கணக்கான சட்டங்கள் உள்ளன.

அவற்றில் பாலின சமத்துவம் பேசத் திராணியில்லாத மத்திய அரசு, இஸ்லாத்தில் விவாகரத்து செய்யும் உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் போது பாலின சமத்துவம் என்று காரணம் காட்டுவது கெட்ட நோக்கம் கொண்டதாகும்.

தலாக் சட்டத்தின் நன்மைகள்

இஸ்லாத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்ட தலாக் எனும் விவாகரத்து உரிமையும், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள குலா எனும் விவாகரத்து உரிமையும் இரு பாலருக்கும் அதிக நன்மை தருவது என்பதை விளங்கிக் கொண்டால் தலாக்கும், குலாவும் இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டமாக இருக்கக் கூடாதா என்று பிறமத மக்களும் ஆசைப்படுவார்கள்.

திருக்குர்ஆனின் 2:227, 2:228, 2:229, 2:230, 2:231, 2:232, 2:236, 2:241, 4:20, 4:34, 65:1, 33:49 ஆகிய வசனங்களில் மனைவியரை விவாகரத்துச் செய்ய கணவர்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளன.

ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை, பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

கணவனுக்கு மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்ய அனுமதி இல்லாவிட்டாலோ, அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும். இதனால் கீழ்க்காணும் தீமைகள் நிலவுவதை சமுதாயத்தில் நாம் காண்கிறோம்.

  1. விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலையையும் சந்திக்கும் ஒருவன் மனைவியோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன்புறுத்துவான்; அவளைப் பராமரிக்கவும் மாட்டான்.
  2. அல்லது எளிதில் விவாகரத்து பெறுவதற்காக நடத்தை கெட்டவள் என்று மனைவியின் மீது பொய்யாகப் பழியைச் சுமத்துவான்.
  3. அல்லது மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தற்கொலை என்றோ, விபத்து என்றோ நாடகமாடித் தப்பித்துக் கொள்வான்.

இஸ்லாம் அல்லாத மதங்களில் விவாகரத்தை அனுமதிக்காததாலும், விவாகரத்தின் விதிகள் கடுமையாக இருப்பதாலும், நீதிமன்றங்கள் வழியாகவே விவாகரத்து பெற முடியும் என்ற நிலை இருப்பதாலும் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை நாம் கண்டு வருகிறோம்.

எனவே பெண்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று கருதி விவாகரத்துக்கு அனுமதி வழங்கி அதன் விதிகளையும் இஸ்லாம் எளிதாக்கியிருக்கிறது.

தலாக்கின் விதிமுறைகள்

விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப் பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. பின்வரும் வழிகாட்டுதலை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது.

முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.

அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.

அதுவும் பயன் தராதபோது இலேசாக அடித்துத் திருத்த வேண்டும்.

விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.

இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு 4:35 வசனம் வழிகாட்டுகிறது.

இந்த நான்கு நடவடிக்கைகள் மூலமும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழியின்றி விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.

“உன்னை விவாகரத்துச் செய்கிறேன்’’ என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பின் பெண்களுக்குப் பாதுகாப்புத் தொகை வழங்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளதால் அதைத் தீர்மானித்து பெற்றுத் தருவதற்கேற்ப ஜமாஅத்தினர் முன்னிலையில் இதை உறுதி செய்ய வேண்டும். வேறு எந்தச் சடங்குகளும் இல்லை.

முத்தான மூன்று வாய்ப்புகள்

விவாகரத்துச் செய்திட ஒவ்வொரு கணவனுக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் திருமண உறவு அடியோடு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (பார்க்க: திருக்குர்ஆன் 65:4)

இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

முதல் தலாக் கூறி இருவரும் சேர்ந்து கொண்ட பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.

முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அந்தக் காலக்கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும்போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இதுதான் இறுதி வாய்ப்பாகும்.

மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.

ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை முறைப்படி விவாகரத்துச் செய்துவிட்டால் முதல் கணவன் மறுபடியும் அவளது சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

(திரும்பவும் அழைத்துக் கொள்ளத்தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான் என்று கூறும் 2:229 வசனத்திலிருந்து இதை அறியலாம்.

தலாக் – தலாக் – தலாக்

இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதற்கு வழி இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு தடவைதான் விவாகரத்து நிகழ்ந்துள்ளது. ஒரு தடவை விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அதுபோல் இப்போதும் செய்து கொள்ளலாம்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 2932, 2933, 2934

ஒரு நேரத்தில் கூறப்பட்ட மூன்று தலாக் மூன்று தலாக்காகவே கருதப்படுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.

விவாகரத்துச் செய்த உடன் மனைவியை ஆதரவற்ற நிலையில் விட்டு விடக் கூடாது. அவளது எதிர்காலப் பாதுகாப்புக்காக போதுமான பாதுகாப்புத் தொகை வழங்க வேண்டும். இதைச் செய்து கொடுப்பது ஜமாஅத்தார்களின் கடமையாகும்.

இது ஆண்கள் விவாகரத்துச் செய்வது குறித்த சட்டமாகும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

பெண்களின் விவாகரத்து உரிமை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூறமாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறுசெய்வதை நான் வெறுக்கிறேன்’’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்றார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’’ என்றார்கள்.

நூல்: புகாரீ 5273, 5275, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த பெண்களுக்கான விவாகரத்து நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்கா விட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து அவள் பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும். இதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவர்களுக்குத் தான் நல்லது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின் அதிகச் சிரமத்துக்கு பெண்களே ஆளாவதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வரக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் பெண்களுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே பெண்களுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழியை உலகில் எங்குமே காணமுடியாது. இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியுள்ளனர்.

திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாக இஸ்லாம் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.

அப்பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்து, ஒருவர் மற்றொருவருடன் கலந்து விட்டீர்களே (4:21) என்றும்

கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு (2:228) என்றும்

திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கப்படாவிட்டால் தீய விளைவுகள் ஏற்படுவது போல் பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படாவிட்டாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.

கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.

விஷம் கொடுத்துக் கணவரைக் கொல்கிறார்கள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, விரும்பியவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.

எனவேதான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் எளிமையாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது. இதை 2:228-232 ஆகிய வசனங்களில் காணலாம்.

உயிரை இழந்தாலும் உரிமையை இழக்க மாட்டோம்

அற்புதமான விவாகரத்துச் சட்டம் இஸ்லாத்தில் வழங்கப்பட்டு இருக்கும் போது அதை ரத்து செய்து விவாகரத்துக்காக நீதிமன்றங்களுக்கு ஆண்டுக் கணக்கில் அலைய நாங்கள் தயாராக இல்லை.

விவாகரத்துக்காக காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்க நாங்கள் தயாராக இல்லை.

கள்ளக் காதல் கொலைகள் எங்கள் சமுதாயத்திலும் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

எவ்விதச் செலவும் இல்லாமல் ஜமாஅத்துகள் முன்னிலையில் எளிதாக மறுவாழ்வை அமைக்க வழி இருக்கும் போது எங்களின் பொருளாதாரத்தை வழக்குக்காகவும், வழக்கறிஞருக்காகவும் வாரி இறைத்து ஆண்டுக்கணக்கில் அலைவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

(சில விவாகரத்து வழக்குகளில் 70 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு அளிக்கப்பட்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளது.)

விவாகரத்து பெறுவதற்காகக் குடும்ப ரகசியங்களைக் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தி அவமானப்பட நாங்கள் தயாராக இல்லை.

எனவே பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எங்களின் எளிமையான சட்ட உரிமை பறிக்கப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

இஸ்லாம் எங்களைப் படைத்த இறைவனின் மார்க்கம். அதில் குறைமதி உள்ள நீதிபதிகள் உள்ளிட்ட யாரும் கை வைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

—————————————————————————————————————————————————————-

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம் தொடர்: 4

அன்னையார் மறுத்த ஹதீஸ்கள்

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

‘திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி, ஆயிஷா (ரலி) அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுத்துள்ளார்களே!  இதை ஆதாரமாக வைத்து நீங்கள் ஆயிஷா (ரலி) அவர்களைக் காஃபிர் என்று சொல்வீர்களா?’ என விவாதத்தில் நாம் கேள்வி எழுப்பினோம்; இது குறித்து விளக்கமளித்தால் வசமாக மாட்டிக் கொள்வோம் என்று பயந்த பரலேவிக் கும்பல் கடைசி வரைக்கும் இது குறித்து வாய்திறக்கவே இல்லை.

திருக்குர்ஆனுக்கு முரண்படும் காரணத்தால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இன்னும் சில ஹதீஸ்களை இந்த விவாதத்தில் நாம் எடுத்துக் காட்டினோம்.

பத்ருப் போரில் நபி கூறியதாக வந்த செய்தியை மறுத்த ஆயிஷா (ரலி)

பத்ரு போரில் கொல்லப்பட்ட காஃபிர்களது பிணங்களைப் பாழுங்கிணற்றில் வீசிய பிறகு அந்தப் பிணங்களை நோக்கி, “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் பெற்றுக்கொண்டோம்; உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா?” என்ற கருத்துப்பட நபிகளார் பேசினார்கள் என்று வரக்கூடிய செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இது எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது அவர்கள் செவியேற்கிறார்கள் என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

பிறகு, ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (27:80)

(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது. (35:22)

நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும் போது (இந்நிலை ஏற்படும்) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 3979

பாழும் கிணற்றில் போடப்பட்ட காஃபிர்கள் செவியேற்றார்கள் என்ற கருத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஆதாரப்பூர்வமான ஹதீஸை ஆயிஷா (ரலி) மறுத்துள்ளார்கள். இது புகாரி (3979) முஸ்லிம் (1697) மற்றும் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

அப்படியானால் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸ்களை மறுத்தது குறித்து உங்கள் நிலை என்ன? ஆயிஷா (ரலி) அவர்களை யூதக் கைக்கூலி என்று சொல்வீர்களா என்று கேள்வி எழுப்ப, பரலேவிக் கூட்டம் விழி பிதுங்கியதே தவிர வாய்திறக்கவே இல்லை.

மூன்று விஷயங்களில் சகுனம் உள்ளது என்ற ஹதீஸை மறுத்த ஆயிஷா (ரலி)

சகுனம் மூன்றில் இருக்கிறது என்ற ஹதீஸை குர்ஆனுக்கு முரண் என்று ஆயிஷா (ரலி) மறுத்துள்ளார்கள் என்ற செய்தியை அடுத்த ஆதாரமாக எடுத்து வைத்தோம்.

இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபியவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்)

நூல்: அஹ்மத் 24894

ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் 2858, 5093, 5753, 5772 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் 4127, 4128 ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது

புகாரியில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப் பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் எப்படி மறுக்கலாம்? அவர்கள் ஒரு முஸ்லிமா? என்று இது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை?

தெள்ளத்தெளிவாக சகுனம் உண்டு என்று நபிகளார் சொன்னதாக வரக்கூடிய செய்தியை 57:22 என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண் என்ற அடிப்படையில் மறுத்துள்ளார்களே எனக் கேள்வி எழுப்ப இதற்கும் பரலேவிக் கூட்டம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

நாய், கழுதை, பெண் ஆகியவை தொழுகையை முறிக்கும் என்ற செய்தியை மறுத்த ஆயிஷா (ரலி)

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது சிலர், ‘(தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்லும்) நாயும், கழுதையும், பெண்ணும் தொழுகையை முறித்துவிடுவன என்று கூறினர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ‘(பெண்களாகிய) எங்களை நாய்களுக்குச் சமாமாக்கி விட்டீர்களே? நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கையில் நான் அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையே கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். (தொழுது கொண்டிருக்கும்) அவர்களுக்கு முன்னால் செல்ல விருப்பமில்லாமல் (நான் கட்டிலிலிருந்து) ஒரே நழுவு நழுவிவிடுவேன் என்று கூறினார்கள்

நூல் : புகாரி 511

மேற்கண்ட செய்தியில் எந்த திருக்குர்ஆன் வசனத்தையும் கூட ஆதாரமாகக் கூறாமல் ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளார் சொன்னதாக சொல்லப்பட்ட ஒரு ஹதீஸைப் பொய் என்று சொல்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியதாக வரக்கூடிய கூற்றுக்கு மாற்றமாக அவர்களே நடந்துள்ளார்கள் என்பதுதான். அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும்போது நான் குறுக்கே படுத்துக் கிடப்பேன். பெண் குறுக்கே படுத்துக்கிடப்பதால் தொழக்கூடியவரது தொழுகை முறிந்திருக்கும் என்று நபி சொன்னதாக வரும் செய்தி உண்மையென்று இருக்குமேயானால் என்னை குறுக்கே படுக்க நபிகளார் அனுமதித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் வைக்கும் தர்க்க ரீதியான சான்று.

இந்த அடிப்படையிலும் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸ்களை மறுத்ததாக வருகின்றதே! இதற்கு உங்கள் பதில் என்ன என்று நாம் கேட்க அதற்கும் வாய்திறக்கவில்லை இந்த ஹதீஸ் காப்பாளர்கள்(?).

இவர்கள் உண்மையிலேயே ஹதீஸ் காப்பாளர்களாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?

திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லியும்,

உமூமுல் பல்வா என்ற நடைமுறையில் உள்ள செய்திகளுக்கு முரண்படுவதாகச் சொல்லியும்,

வேறு பல ஹதீஸ்களுக்கு முரண்படுவதாகச் சொல்லியும்,

நமது அறிவுக்கு முரண்படுவதாகச் சொல்லியும்,

ஹதீஸ்களை மறுத்த சஹாபாக்கள், ஹனஃபி மத்ஹபு அறிஞர்கள், மாலிக் இமாம், ஷாஃபி இமாம் உள்ளிட்ட பல அறிஞர்கள், இன்னும் கஸ்ஸாலி, ஸர்ஹசீ, பஹ்ருத்தீன் ராஸி உள்ளிட்ட அனைவருமே காஃபிர்கள்;  இவர்கள் அனைவருமே ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று ஃபத்வா வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர்கள் சொல்லவில்லை. இதிலிருந்தே திருக்குர்ஆனுக்கு முரண்படுகின்றது எனக்கூறி ஆதாரப்பூர்வமான செய்திகளாக வந்துள்ள செய்திகளில் ஒரு சில செய்திகளை மத்ஹபு இமாம்களும் மறுத்துள்ளார்கள் என்பதும், இது ஒன்றும் புதிய கொள்கையோ, அல்லது யூதக்கொள்கையோ இல்லை என்பதும் நிரூபணமானது.

தக்க காரணங்களையும், சான்றுகளையும் காட்டி திருக்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஹதீஸ்களே அல்ல; அது நபி சொன்னதே இல்லை என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சரியானதுதான் என்பது மீண்டும் இந்த விவாதத்தின் வாயிலாக நிரூபணமானது.

அல்ஹம்துலில்லாஹ்.

அடுத்ததாக உம்மு ஹராம் (ரலி) என்ற சஹாபியப் பெண் நபிகளாருக்கு பேன் பார்த்துவிட்டார்களா?

நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதா?

அந்நியப் பெண்ணிடத்தில் தாடி வைத்த இளைஞர் ஒருவரை பால்குடிக்கச் சொல்லி நபிகளார் கட்டளை போட்டார்களா? என்பன குறித்து வரக்கூடிய திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய செய்திகள் பற்றி நாம் எடுத்து வைத்த வாதங்களையும் அதற்கு பரலேவிக்கும்பல் எப்படி எப்படியெல்லாம் உளறியது என்பது குறித்தும் இந்தத் தொடரின் அடுத்த பாகத்தில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

படைத்தவன் சட்டத்தை பரிகாசப் பொருளாக்காதீர்!

எம். ஷம்சுல்லுஹா

தொலைபேசி தலாக்!

குறுஞ்செய்தி தலாக்!

மின்னஞ்சல் தலாக்!

என்று நவீன சாதனங்கள் மூலம் சொல்லப்படும் தலாக் சரியானது தான் என மார்க்கமறியா மூட அறிஞர்கள் வழங்கும் பத்வாக்கள் தற்போது  தலாக் சட்டம் குறித்த வெறுப்புணர்வை அதிகமாக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண் வழக்கு தொடுத்தார்.

இந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த தலாக் கடிதத்தில் வரவில்லை. மாறாக, தொலைபேசியில் வந்தது. 2015 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்  அதிகாலை கணவனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ‘தலாக் தலாக் தலாக்’ என்று சொல்லி விட்டு தொலைபேசி அழைப்பை கணவர் துண்டித்து விட்டார். ஆம்! தொலைபேசியில் வார்த்தைகளை மட்டுமல்ல!  வாழ்க்கையையும் சேர்த்தே கணவர் துண்டித்து விட்டார்.

இதன் பின்னர் அவரிடமிருந்து நான்கு குழந்தைகளையும் கணவர் பறித்துக் கொண்டார்.  இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வந்து இந்த தலாக் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் நீதி மன்றத்தில் கோருகின்றார்.

மார்க்க அறிஞர்கள், இது தலாக் அல்ல; செல்லாது என்று தீர்ப்பு அளித்திருந்தால் ஜமாஅத்திலேயே இவருக்கு நியாயம் கிடைத்திருக்கும். இஸ்லாத்துக்கு எதிரான தவறான ஃபத்வாவின் காரணமாக நீதிமன்றங்கள் தலாக் சட்டத்தில் தலையிட வழி ஏற்படுத்தி விட்டனர்.

கடித தலாக்குகள், தொலைபேசி தலாக்குகள், ஸ்கைப் தலாக்குகள், வாட்ஸ்அப் தலாக்குகள். ஃபேஸ்புக் தலாக்குகள், மின்னஞ்சல் தலாக்குகள் என்று தலாக்கிற்கான விளையாட்டு அரங்குகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.

இஸ்லாமியச் சட்டப்படி இந்த தலாக்குகள் செல்லுமா?

கணவன் மனைவிக்கிடையே பிணக்கு ஏற்பட்டால் உடனே தலாக் சொல்ல இஸ்லாம் வழிகாட்டவில்லை.

அறிவுரை கூற வேண்டும். அதில் இணக்கம் ஏற்படாவிட்டால் படுக்கையில் இருந்து பிரிக்க வேண்டும்.

அதிலும் இணக்கம் ஏற்படாவிட்டால் தலாக் என்ற நிலைக்குப் போகாமல் இருக்க இலேசாக அடித்து அறிவுரை கூற வேண்டும்.

இதன் பின்னரும் இணக்கம் ஏற்படாவிட்டால் இரு குடும்பத்தைச் சேர்ந்த நடுவர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி இணக்கம் காண வேண்டும்.

அதன் பின்னர் தான் ஒரு தலாக் கூற வெண்டும்.

மேற்கண்ட நவீன தலாக் சொன்னவன் இவற்றில் எந்த ஒன்றையும் கடைப்பிடிக்க முடியாது. இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் போது இவற்றில் எந்த ஒன்றையும் செய்திருக்க மாட்டான்.

மேலும் இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் போது உடனடியாக தலாக் கூறும் அவசரம் எதுவும் இல்லை.

இஸ்லாமிய நெறியைப் பேணாமல் சொன்ன தலாக் செல்லாது என்று மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுக்கவில்லை.

இதைவிட முக்கியமாக தலாக் சொல்லும் போது இரு சாட்சிகள் அவசியம். இது பற்றிய அறிவும் மார்க்க அறிஞர்களுக்கு இல்லாததால் இது செல்லத்தக்க தலாக் எனக் கூறியுள்ளனர்.

அல்லாஹ் தலாக் விடும் போது இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றான்.

அவர்கள் (அந்த பெண்கள்) தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் 65:2

இவ்வசனத்தில் விவாகரத்துக்குரிய முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும்போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை.

இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தபால் எழுதி, அல்லது இரண்டு சாட்சிகளின் முன்னால் தொலைபேசியில் பேசி தலாக் என்பதைத் தெரிவித்தால் இந்த நிபந்தனையைப் பேணிவிட்டதாக நினைக்கின்றனர்.

விவாகரத்துச் செய்பவனையும், செய்யப் பட்டவளையும், இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும்.

எனவே எதிர்த்தரப்பில் உள்ள பெண் யார் என்பது தெரியாமல், அவள் இவனுக்கு மனைவி தானா என்பதையும் அறியாமல், தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறானா என்பதையும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்து விவாகரத்துச் செய்தால் செல்லுமா என்ற சந்தேகமும் சிலருக்கு உள்ளது. வீடியோ மூலம் ஒருவன் விவாகரத்துச் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.

ஒரு திரையில், தலாக் சொல்பவனையும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுயநினைவுடன் அதைச் சொல்கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால் இந்த தலாக்கும் செல்லத்தக்கதல்ல.

எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேரிடையான இரு சாட்சிகளுக்கு முன்னால் தான் விவாகரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது தலாக் சொன்னதாக ஆகாது.

தற்காலிகமாகப் படுக்கையைப் பிரித்தல், அறிவுரை கூறுதல், இரு குடும்பத்து நடுவர்கள் மூலம் நல்லிணக்கத்துக்கு முயற்சி செய்தல் ஆகியவற்றைச் செய்த பிறகுதான் விவாகரத்து செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் ஒருவன் செய்தானா என்பதை அறிந்தவர் தான் சாட்சியாக இருக்க முடியும்.

இரு குடும்பத்துக்கும் நெருக்கமானவன் அல்லது இரு குடும்பத்துடனும் இது குறித்து பேசியவனுக்குத் தான் மேற்கண்ட நடைமுறைகளை அவன் செய்தானா என்பதை அறிய முடியும்.

மேலும் விவாகரத்துக்குப் பின்னர் மனைவிக்கு நியாயமான ஈட்டுத் தொகை வழங்கும் கடமை விவாகரத்துச் செய்தவனுக்கு உள்ளது. இதை இஸ்லாமிய அரசு அல்லது ஜமாஅத்துகள் தான் பெற்றுத் தர முடியும். எனவே ஜமாஅத்தார் முன்னிலையில் தான் இரு சாட்சிகள் சாட்சி சொல்ல வேண்டும்.

இதில் இருந்து தபால் மூலமோ, எஸ்.எம்.எஸ். மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, வீடியோ கான்பரன்சிங் மூலமோ தலாக் சொல்லுதல் அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்குரியதாக்குவதாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது குர்ஆனில் தலாக் சம்பந்தபட்ட விஷயங்களை கூறி விட்டு,  ‘‘அல்லாஹ்வின் வசனங்களை கேலிக்குரியதாக ஆக்கி விடாதீர்கள்  என்று சொல்கின்றான்.

அல்குர்ஆன் 2:231

மேற்கண்ட வகையில் தலாக் சொல்பவர்கள் மற்றும்  அது சரி என மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்கள் இதைவிட அல்லாஹ்வின் சட்டத்தை யாராவது கேலிக்குரியதாக்க முடியுமா?

தலாக்குக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை ஒருவன் கடைப்பிடித்தானா இல்லையா என்பதை அறியாமல் சாட்சி சொல்பவன் அநியாயத்துக்குத் தான் சாட்சி கூறுகிறான். எனவே இருவரின் பிரச்சினைகள் பற்றி அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.

ஒரு மகனுக்கு மட்டும் சொத்தைக் கொடுத்து மற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருந்த நபித்தோழர் ஒருவர், இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கியபோது நான் அநியாயத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். (பார்க்க : புகாரி 2650)

ஒரு ஆண் மார்க்கத்தின் நெறியைப் பேணாமல் தலாக் சொல்லும்போது அதற்குச் சாட்சியாக இருப்பதும் இது போன்றது தான்.

எனவே இந்த விதியைக் கவனத்தில் கொண்டால் அவசரப்பட்டுச் செய்யும் பல விவாகரத்துக்கள் தவிர்க்கப்படும்.

தலாக் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய இந்த நிபந்தனைகளை சமுதாய ஆலிம்கள் கடைப்பிடிக்காமல் போனதால் தான் இது உச்ச நீதிமன்றம் வரை போய் அல்லாஹ்வின் சட்டங்கள் பரிகசிப்படுவதற்கு வழி வகுத்து விட்டன.

நீதிபதிகளிடம் காவிச் சிந்தனை படிந்திருப்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் காவிச் சிந்தனையில்லாத, நடுநிலை உள்ள ஒரு நீதிபதி இதை அநியாயமாகத் தான் பார்ப்பார்.

அப்படி ஓர் அநியாயம் அல்லாஹ்வின் வேதத்திலோ அவனது தூதரிடத்திலோ இல்லை. ஆனால் இந்த ஆலிம்களாக உருவாக்கிக் கொண்ட மத்ஹபு சட்டங்களில் இருக்கின்றது.  இவர்கள் செய்யும் தவறுக்காக குர்ஆன் பரிகாசத்திற்குள்ளாகின்றது.

இனியாவது உலமாக்கள் திருந்துவார்களா?