ஏகத்துவம் – நவம்பர் 2015

தலையங்கம்

அம்பேத்கார் கண்ட ஆலய மறுப்பு

இந்துத்துவ பாஜக ஆளுகின்ற  அரியானா மாநிலத்தில் அண்மையில் இரு தலித் குழந்தைகள் உயர் ஜாதிக்காரர்களால்  உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்தது.

பீகாரில் தேர்தல் களத்தை எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ, பாசிச பாஜகவுக்கு இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இதைப் பற்றி மத்திய அமைச்சர் வி.கே. சிங் பேசும் போது “யாராவது தெருவில் போகின்றவர் நாயின் மீது கல்லெறிந்தால் அதற்கு மத்திய அரசு பொறுப்பாகுமா?” என்ற தலித்துகளை நாயுடன் ஒப்பிட்டு பேசினார்.

அதே அரியானா மாநிலம் சோனேபட் மாவட்டத்தில் கோசுனா பகுதியைச் சேர்ந்த கோவிந்த் என்ற 15 வயதுடைய தாழ்த்தப்பட்ட சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். (22.10.2015) வீடு புகுந்து புறா ஒன்றைத் திருடினான் என்று பழி சுமத்தப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறையிடம் சிறுவனின் தாயார் கண்ணீரோடு முறையிட, அவரிடம் ரூபாய் 10 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும் தாயாரிடம் அந்தச் சிறுவனை உயிரோடு ஒப்படைக்காமல் அவனது  பிணத்தையே ஒப்படைக் கின்றனர்.

அவன் கொலை செய்யப்பட வில்லை மாறாக, தற்கொலை செய்து கொண்டான் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறியது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது. இப்படி வளர்ச்சி நாயகன் (?) மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் மட்டும் தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளின் எண்ணிக்கை ஒரு புள்ளி விபரப்படி 43 ஆயிரத்தைத் தாண்டுகின்றது.

தலித்துகளுக்கு எதிராக வடக்கே தான் கொடுமைகள் நடக்கின்றன என்றால் தெற்கேயும் அது போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இதற்குச் சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

சாதியின் படிநிலைகள் பற்றி எழுதிய கன்னட தலித் எழுத்தாளர் ஹுச்சங்கி பிரசாத் தாக்கப்பட்டுள்ளார். இது கர்நாடகாவில் நடந்த கொடுமையாகும்.  தமிழகத்தில் நடக்கின்ற கொடுமைகளை இப்போது பட்டியலிடுவோம்.

ஆகஸ்ட் 29, 2015 அன்று தமிழ் இந்து பத்திரிக்கையில் “தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி” என்ற தலைப்பில் எவிடென்ஸ் கதிர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகில் சேஷசமுத்திரத்தில் நடந்த சாதி வெறியாட்டத்தைப் படம் பிடித்திருந்தார்.

சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித்துகள் வழிபடும் மாரியம்மன் கோயிலின் திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். முதல் முறையாகக் கடந்த 2012-ல் இந்தக் கோயிலுக்காகத் தேர் ஒன்றை உருவாக்கி, வீதியுலாவுக்குச் சாமியை எடுத்து வர முயன்றபோது, பொதுப் பாதையில் தலித்துகள் தேர் ஊர்வலம் நடத்தக் கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர் ஆதிக்கச் சாதியினர்.

அது தொடங்கி, மாரியம்மன் கோயில் திருவிழா சமயத்தில் இங்கு அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பிப்பது வழக்கமாகிஸ்விட்டது. இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், 14 ஆகஸ்ட் அன்று கோயில் திருவிழாவில் தேர் பவனி நடத்துவதற்கு அனுமதி அளித்தார். அரசு நம்முடைய உரிமையை மதித்திருக்கிறது என்று மகிழ்ந் திருந்தனர் தலித்துகள்.

ஆனால், 14 ஆகஸ்ட் அன்று சேஷசமுத்திரம் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் சங்கராபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று, தேர் பவனி நடந்தால் உயிர்ச் சேதம் எற்பட வாய்ப்பிருக்கிறது என்று புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, கலவரம் ஏற்படலாம் என்று அச்சமடைந்த வட்டாட்சியர் இரண்டு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, “நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட மாட்டோம்” என்று வாக்களித் திருக்கிறார்கள் இரு தரப்பினரும். ஆனால், நடந்தது வேறு.

திருவிழா தினத்தன்று இரவு பெட்ரோல் குண்டு, கத்தி, அரிவாள், கடப்பாரை, உருட்டுக்கட்டை எனப் பயங்கர ஆயுதங்களுடன் பெருந் திரளான ஆதிக்க சாதியினர் தலித்துகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். குடியிருப்புகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கின்றனர்; இதில் 5 வீடுகள் தீக்கிரையாயின. தொடர்ந்து, தேரை எரித்ததுடன் இதைத் தடுக்க முற்பட்ட – அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த – போலீஸாரையும் தாக்கியிருக்கின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாரையும் ஊருக்குள் விடாமல் வழி மறித்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் களில் 8 போலீஸார் உட்பட 11 அரசு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

இது தான் சாதியத்தைப் பற்றிய எவிடன்ஸ் கதிர் அவர்களின் படப்பிடிப்பாகும்.

இது எப்போது நடந்தது? இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்டு 15, 2015 அன்று தான்! இது எதை உணர்த்துகின்றது? ஆதிக்க ஆங்கி லேயரின் அடிமைத்தனத்திலிருந்து நாடு விடுதலை பெற்றிருக்கின்றது. ஆனால் ஆதிக்க சாதியத்திடமிருந்து தலித்துகள் இது வரை விடுதலையும் விமோசனமும் பெறவில்லை என்பதைத் தான்.

இந்தந் கலவரம் நடந்து முடிந்து அதன் காயம் கூட ஆறவில்லை. அதற்குள்ளாக  உசிலம்பட்டி அருகே உத்தமபுரம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயிலில் அக்டோபர் 13 முதல் 23 தேதி வரை விழா நடைபெறும். அந்த விழாவின் போது தலித்கள் வழிபாட்டு உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. தலித் மக்கள் கோயில் வளாகத்தில் உள்ள அரச மரத்தில் மாலை போட்டுள்ளனர். அதை சாதி இந்துக்கள் கழற்றி வீசி எறிந்துள்ளனர்.  இதனால் அங்கு கலவரம் உருவாகி ஊரே பதற்றமாக உள்ளது. இந்த மோதல் செய்தி அக்டோபர் 22ஆம் தேதி இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியானது.

இவ்விரண்டு நிகழ்வுகளும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். தலித் மக்கள் கோயிலில் போய் வழிபட உரிமை கோருகின்றார்.

இந்த மோதல்களுக்குக் காரணம் என்ன?

தலித்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லை என்பதை சாதி இந்துக்களா சொல்கின்றார்கள்? அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வேதங்கள் அவ்வாறு சொல்கின்றன!  உதாரணத்திற்கு இராமாயணத்திலிருந்து  சம்பூகன் வதை என்ற எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

ஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளையின் உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங் கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசை மொழிகளைப் பொழிந்து கதறினான்.

அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்பொழுது, “சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணுகிறான். அவனைக் கொல்லாமலிருந்த குற்றத்தால், இக்குழந்தையின் உயிர் நீங்கியது. அதனால் காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும்” என்று அசரீரி வார்த்தை மொழிந்தது.

உடனே  இராமன் காட்டிற்குச் சென்று, அந்தத் துறவியைப் பார்த்து, “நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய்?” என வினவ, அதற்கு அவர், “இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை. உண்மை நிலை ஒன்றினையே விரும்புகிறேன்” என்று விடை பகர, ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, “சூத்திரன் தவம் பண்ணலாமா? இதனால் தானே பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லுவது பாவமாகாது. எதிர்மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்துபோன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால், பெரும் புண்ணியத்தை அடைவோமே!” என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து, “ஓ! வலக் கையே, இறந்துபோன  பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர் பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்று அல்லவா?” என்றான்.  இவ்வாறு இராமனால் சூத்திரன் சம்பூகன் வெட்டப்பட்டதும் செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பெற்றது என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

தலித்துகளின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதற்கு இந்த இதிகாசங் கள், புராணங்கள், பொய்யான வேதங்கள் தான் காரணம். இந்த இலட்சணத்தில் வேதங்களைப் படித்தால் தாழ்த்தப்பட்டவரின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று வேறு கூறுகின்றது.

இவர்களது  வேத இதிகாசங்கள் இவ்வாறு வேதம் கற்பதை மட்டும் மறுக்கவில்லை. வித்தை, கல்வி, கலை கற்பதையும் மறுக்கின்றது. அதற்கு ஓர் எடுத்துக் காட்டை மகாபாரதத்திலிருந்து பார்ப்போம்:

இதற்கு மகாபாரதத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுப்பது நமது கடமை.

ஏகலைவன் என்ற வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவன் வில் வித்தையில் திறமை உள்ளவனாக இருந்தான். நாய் குரைக்கும் ஒலியைக் கணித்து அம்பு எய்து கொன்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன். துரோணாச்சாரிக்கு மிகப் பெரிய ஆச்சரியம். தன் சீடன் அர்ச்சுனனால் தானே இது இயலக் கூடியது. இதனை எய்தவன் யார் என்று அவன் யோசித்தபோது அம்பை எய்த அந்த ஏகலைவன் துரோணாச்சாரியின் முன் வருகிறான். உனது குரு யார் என்ற கேள்வியைத் தொடுக்கிறான்.

“சுவாமி நான் உங்களிடம் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது, நான் தாழ்ந்த ஜாதி குலத்தில் பிறந்தவன் என்று கூறி வில் வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்தீர்கள்.

மனம் நொந்து போனேன்; ஆனால், முயற்சியைக் கைவிட வில்லை; உங்களைப் போல உருவம் செய்து தங்களையே என் குருவாகக் கருதி இந்த வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தேன்” என்றான் பவ்யமாக.

அப்படியானால் எனக்குக் குரு தட்சணை கொடுக்க வேண்டாமா? கொடுப்பாயா? என்று துரோணாச்சாரி கேட்டார்.

எது கேட்டாலும் கொடுப்பேன் என்றான் ஏகலைவன். உன் கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு! என்றான் இரக்கம் துளியும் இல்லாத அந்தக் குரூரனான துரோணாச்சாரி.

அக்கணமே வெட்டிய கட்டை விரலைக் காணிக்கையாகத் தந்தான் ஏகலைவன். கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றால், அவன் வில்லை வளைத்து அம்பை எய்ய முடியாதல்லவா? அதற்காக குரு தட்சணை என்ற பெயரில் இப்படி ஒரு சூழ்ச்சி!

சாதிய இந்துக்களின் இந்தச் சகிக்க முடியாத சாதி வெறிக்கும் சகோதரத்துவச் சிந்தனை மறுப்புக்கும் பின்னால் இருப்பது வேதங்களும், இதிகாசங்களும் எனபது தான் இது உணர்த்துகின்ற, உரக்கச் சொல்கின்ற உண்மையாகும்.

அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொன்னதன் மர்மமும் மறைமுக ரகசியமும் இது தான். இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண்களை திறக்கின்றதே! அதை உயர் சாதிக்காரர்கள் எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்?

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைப் படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல் செய்ய முயற்சி செய்த போது அதைத் திருப்புவதற்கு பாபர் மஸ்ஜித் விவகாரத்தைக் கையில் எடுத்தார்கள். கடைசியில் ஒருவாறாக பள்ளியையும் உடைத்துத் தள்ளினார்கள்.

அந்த அளவுக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் வெறுப்பு! கீழ்ச் சாதிக்காரன் மேலே வந்து விடக்கூடாது என்பதில் ஒரு முனைப்பு!

இப்படி ஒரு வெறி உள்ளவர்கள் எப்படித் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் தலித்துகளுக்கு இடம் அளிப்பார்கள்?

இப்போது தலித் மக்களுக்கு முன்னால் உள்ள ஒரே ஒரு வழி அவர்களைப் படைத்த உண்மையான ஒரே ஓர் இறைவனைக் கடவுளாக நம்பி ஏற்று இஸ்லாத்தில் இணைவது தான்.

தலித் சமுதாயம் குடியிருக்கின்ற ஓட்டையும் உடைசலுமான ஒழுக்குகள் நிறைந்த, வேதத்தைப் படிக்க அனுமதி மறுக்கின்ற, தீண்டாமையினால் ஒதுக்கி வைக்கின்ற, மனிதனை மனிதனாக மதிக்காத வீட்டிலிருந்து வெளியேறி அமைதி வீட்டிற்கு வாருங்கள் என்று இதோ திருக்குர்ஆன் அழைக்கின்றது.

அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.

அல்குர்ஆன் 10:25

பிரம்மனின் முகத்திலிருந்து பிராமணன் பிறந்தான்; தோள் களிலிருந்து சத்திரியன் பிறந்தான்; தொடைகளிலிருந்து வைசியன் பிறந்தான்; பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்ற வருணாசிரம அடிப்படையில் மனிதனைக் கூறு போடுவதை இஸ்லாம் தகர்த்தெறிந்து ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஓர் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப் பட்டவர்கள் என்று திருக்குர்ஆன் முழக்கமிடுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை யொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இன்று மாட்டிறைச்சி என்ற பெயரில் சங்கபரிவாரங்கள் கைகளில்  மாட்டிக் கொண்டிருப்பது இஸ்லாமியச் சமுதாயம் என்று தலித் மக்கள் நினைக்கலாம். மாட்டிறைச்சியைக் காரணம் காட்டி இன்று கண்டவரும் குலை நடுங்குகின்ற வகையில் சங்கப் பரிவாரங்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வதற்குப்  பின்னால் உள்ள காரணம் முஸ்லிம்கள் அதைச் சாப்பிடுகின்றார்கள் என்பது மட்டும் இல்லை.

அவர்களது கணக்குப்படி பார்த்தால் முஸ்லிம்கள் ஒரு 13 சதவிகிதம் தான். ஆனால்  90  சதவிகிதம் தலித்துகள் தான் அதைச் சாப்பிடுபவர்கள். இந்த வகையில் தலித்கள் உணவிலும் அடிப்பதற்கு இந்த இந்துத்துவா சக்திகள் ஆயத்தமாகவே உள்ளார்கள். எனவே தலித்துகள் தங்களுக்குரிய வழிபாட்டுரிமையை மட்டுமல்ல; வாழ்வுரிமையைப் பெறுவதற்கும் உலகளாவிய இந்த சகோதரத்துவ சமத்துவ மார்க்கத்தில் தங்களை ஐக்கியமாக்கிக் கொள்வது தான் அவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே ஒரு வழியாகும்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத்தின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பேச்சு பீகார் தேர்தலில் பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. இது பீகார் தேர்தலின் போக்கையே மாற்றி பிஜேபிக்கு எதிரான அலையை உருவாக்கி விட்டது. இதன் எதிரொலியாகப் பிரதமர் நரேந்திர மோடி, பாபாசாகிப் அம்பேத்கார் அவர்களால் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமைகள் தனது கட்சியால் பறிக்கப்படாது என்று பேசியிருக்கின்றார்.

அண்மைக் காலமாக  மோடிக்கும் சங்பரிவார் கும்பல்களுக்கும் தலித்துகள் மீது பாசம் பொங்கி வழிவதைப் பார்க்க முடிகின்றது. காயத்ரி மந்தரத்தை விட இப்போது அம்பேத்கார் மந்திரத்தை அதிகம் அதிகம் மந்திரிக்க ஆரம்பித்து விட்டனர்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் கோயேசன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிலையைத் திறந்து வைத்தார். மும்பை தாதர் இந்து மில்லில் அம்பேத்கார் நினைவாலயம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியிருக்கின்றார். லண்டனில் அம்பேத்கார் தங்கிப் படித்த வீட்டை 31 கோடி ரூபாய்க்கு வாங்கி அதை மியூசியமாக ஆக்கி பிரதமர் நரேந்திர மோடியை வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஓநாய்க்கு எப்படி  ஆட்டின் மீது பாசமும் பரிவும் ஏற்பட்டது என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். எல்லாம் தேர்தலை முன்னிட்டுத் தான்!

அம்பேத்கார் மீது மரியாதை காட்டும்  இவர்கள் வழிப்பாட்டுத் தலத்தில் இடம் அளித்தார்களா?

பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் மவுண்ட் பேட்டன் போனபோது தடுக்காத பார்ப்பனீயம். அண்ணல் அம்பேத்கரைத் தடுத்தது ஏன்?

இவ்வளவுக்கும் மவுண்ட்பேட்டன் இன்னொரு மதக்காரர்; அண்ணல் அம்பேத்காரோ இந்து மதத்தைச் சேர்ந்தவர்; அப்படி இருந்தாலும் இன்னொரு மதக்காரருக்கு கொடுக்கும் மரியாதை, சொந்த மதக்காரருக்கு அளிக்காதது ஏன்?

இப்போது இவர்கள் அம்பேத் காருக்கு இவ்வளவு மரியாதை அளிப்பதற்குக் காரணம் தலித்துகளின் வாக்குகளை வாங்கி ஆட்சியைப் பிடிப்பதற்காகத் தான். ஆட்சியைப் பிடித்த பின்பு ஒரேயடியாக தலித்துகளைத் தலைகீழாகக் கவிழ்ப்பதற்காகத் தான்.

நாடாளுமன்றத் தேர்தலில் மோடி போட்ட வேஷம் இப்போது ஒவ்வொன்றாகக் கலைந்து வருகின்றது. ஒவ்வொரு பசப்பு மொழியும் பாசாங்கு, நடிப்பு என இப்போது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றது. எனவே தலித் சமுதாயமே! இந்துத்துவாவின் ஏமாற்று வேலைகளில் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் தன்மானத்தை இழந்து விடாதீர்கள். நாளைய தலைமுறைக்கு அவமானத்தையும் அசிங்கத்தையும் அனந்தரச் சொத்தாக விட்டுச் செல்லாதீர்கள்.

அபிசீனிய நாட்டைச் சார்ந்த கன்னங்கருத்த அடிமையான பிலால், இஸ்லாத்தில் இணைந்த பிறகு குர்ஆன் எனும் வேதத்தைப் படிப்பது, மக்களைத் தொழுகைக்கு அழைப்பது போன்ற உயரிய பொறுப்பு வழங்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அவரது அந்தஸ்து ஆகாயத்திற்கு உயர்ந்தது.

முஸ்லிம்கள் இறந்த பிறகு நிரந்தரமாகத் தங்கப் போகின்ற சொர்க்கத்தில் பிலால் (ரலி) அவர்களின் செருப்போசையை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றதாகக் கூறுகின்றார்கள். (நூல்: புகாரி 1149) அந்த அளவுக்கு அவருடைய மரியாதையை இஸ்லாம் உயர்த்தியிருக்கின்றது.

இந்த உயர்வையும் அந்தஸ்தையும் தலித்துகள் அடையவும், அனுபவிக் கவும் தலித் என்ற அடையாளத்தைத் தடந்தெரியாமல் அழித்து முஸ்லிம் சகோதரர்களுடன் ஒரு சகோதரனாக உங்களை இணைத்துக் கொள்ளுங் கள். உங்களை அரவணைத்துக் கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம் என்று அன்புடன் அழைக்கிறோம்.

இன்று தலித்துகள் பவுத்த மதத்தைத் தழுவுகின்றனர். பவுத்த மத்தைத் தழுவிய பின்னரும் தீண்டாமை அவர்களை விட்டும் நீங்கிய பாடில்லை. அம்பேத்கார் பவுத்த மதத்தைத் தழுவினார். ஆனால் அது இன்றைக்கும் அவரது தாழ்த்தப்பட்ட அடையாளத்தைத் துடைத்திடவில்லை. ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்து விட்டால் தலித், தாழ்த்தப்பட்டவர் என்ற சாதியத் தடயமே அழிந்து விடுகின்றது. தலித் சமுதாயத்தினர் இதைத் தங்கள் சிந்தனையில் கொள்வார்களாக!

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 28

காட்சிப் பொருளாகும் கன்னியர்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி

அலுவலங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களில் பாதி பேரைத் தான் வேலை பார்ப்பதற் கென்று சேர்க்கிறார்கள். இன்னொரு பாதி பெண்களைச் சேர்ப்பது அவர்களைக் காட்டி ஆள் பிடிப்பதற்குத் தான்.

வேலை பார்க்கும் இடத்தில் ஆண்களை உட்கார வைத்தால் ஆண்கள் கூட்டம் வராது. பெண்களை மேக்கப் போட்டு உட்கார வைத்து விட்டால் அவளிடம் வழிவதற்காக வருகிறவர்கள் அதிகம் பேர் உள்ளனர். வருகின்ற வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகத்தான் பெண்களை வேலைக்கு வைக்கிறார்கள். அப்படியெனில் பெண்களை, ஆண்கள் ரசிக்கும் போகப் பொருளாக ஆக்கிவிட்டனர் என்பது தான் இதன் பொருள்.

உதாரணத்திற்கு ஐ.டி. நிறுவனங் களில் பெண்களை வேலைக்குச் சேர்க்கும் போது, விண்ணப்பத் திலேயே சில கேள்விகளைக்  கேட்டிருப்பார்கள்.

நீங்கள் மாதந்தோறும் பியூட்டி பார்லருக்கு (அழகு நிலையத்திற்கு)ப் போவீர்களா? என்ற கேள்வி கேட்பார்கள். அதற்கு அப்பெண் ஆம் என்று பதில் சொன்னால்தான் வேலை கிடைக்கும்.

வேலை பார்ப்பதற்கும் பியூட்டி பார்லருக்குப் போவதற்கும் என்ன சம்பந்தம்? அப்படியெனில் வேலை பார்ப்பதற்குப் பெண்களைத் தேர்ந் தெடுப்பதில்லை. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

விமானங்களிலும், விமான நிலையங்களிலும் வேலை பார்க்கும் பெண்களை இதற்குச் சரியான உதாரணமாகக் கொள்ளலாம். விமானத்தில் எதற்கு பணிப்பெண்? அவர்கள் விமானத்தை இயக்கு கிறார்களா? அங்கு எந்தப் பணியும் கிடையாது.

ஆண்களின் பார்வைகளுக்குத் தீனி போடுவதற்காகத் தான் விமானப் பணிப் பெண்கள் என்று வைத்துள்ளனர். விமானத்தில் பணி யாற்றுவதற்குப் பெண்களை விடவும் ஆண்கள் மிகத் தகுதியானவர்கள். எந்த வேலையையும் விரைவாகவும் எளிமையாகவும் செய்து முடித்து விடுவார்கள். வருகிற வாடிக்கை யாளர்களைக் கவரும் விதமாக, வரவேற்பதற்காகவே பெண்களை வைத்திருக்கிறார்கள். அவர்களைத் தொட்டுப் பேசலாம், நெருக்கமாக நின்று கொள்ளலாம் அதையெல்லாம் அப்பெண் கண்டு கொள்ளக் கூடாது. இப்போது நிறைய சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் விமானத்தில்  பணிப்பெண்ணாக வேலைக்குப் போகிறவள் பாலியல் சேட்டை செய்வதற்குரிய கருவி என்றாக்கி வைத்திருந்தார்கள்.

எனவே நிறைய நிறுவனங்களில் பெண்களை வேலைக்குச் சேர்ப் பதற்குக் காரணம், வருகிற ஆண்களை ஏமாற்றுவதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே சேர்ப்பது கிடையாது. பெண்கள் போகிற வேலைகளில் பாதி வேலை இப்படித்தான் இருக்கும். ரிஷப்ஷன் என்ற வரவேற்பறையில் நிறுத்தப் பட்டிருப்பார்கள். சிரிப்பு வந்தாலும் வராவிட்டாலும் சிரித்தால்தான் வேலை.

ஆட்களைச் சந்திப்பதற்கு பெண்களை வேலைக்கு வைத்திருப் பார்கள். அங்கெல்லாம் சிரித்து சிரித்துப் பேச வேண்டும். கோபமே படக் கூடாது. அவர்கள் வேறு மாதிரி இரட்டை அர்த்தங்களில் பேசினாலும், அப்போதும் சிரித்துக் கொள்ள வேண்டியதுதான். கோபப்பட்டால் வேலை போய்விடும் என்றெல்லாம் கூட பயிற்சி கொடுக்கிறார்கள்.

இது ஒரு பிழைப்பா? சம்பாத்தியம் என்ற பெயரில் இந்தப் பிழைப்புக்குப் பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?

அவர்களது பயிற்சியே இதுதான்; வாயைத் திறந்து எந்த வார்த்தையையும் பேசிவிடக் கூடாது. உன்னை நம்பித்தான் தொழிலையே ஆரம்பித்துள்ளேன் என்று முதலாளி கறாராகச் சொல்லி வேலைக்குச் சேர்ப்பார்கள். இதுபோன்ற நிலைதான் பெண்கள் வேலைக்குச் செல்வதில் பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

இதை விளங்காமல் இது பெண்களின் உரிமை என்று பேசுகிறார்கள். இதற்குப் பெயர்தான் உரிமையா? ஒரு பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவார்கள், அதைச் சகித்துக் கொண்டு போவதற்குப் பெயர்தான் உரிமையா? இப்படிப் பேசுபவர்களைச் செருப்பைக் கழட்டி அடிக்க வேண்டும் என்பது உரிமையா? பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று வரட்டுத் தத்துவம் பேசுபவர்கள் பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களைக் கேவலப்படுத்துகிறார்கள். இதனையெல்லாம் பெண்ணுரிமை என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். எனவே இப்படியெல்லாம் வேலைக்குப் போகும் பெண்கள் தேவையில்லாத விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.

அதேபோன்று எந்தப் பெண்ணும் வேலைக்குப் போகும் போது நல்ல மனநிலையில் தான் போவார்கள். பதவி உயர்வு தேவைப்படும் என்றால் தானாகவே முன்வந்து குழைந்து விடுவார்கள். சில பெண்கள், கிளர்க் என்றளவில் வேலை பார்த்தால், மேனேஜர் என்ற பதவி வேண்டும் என்றால், அதற்குத் தகுந்த மாதிரி பல்லைக் காட்டி குழைந்துவிட்டால் வெகு சீக்கிரமாக மேனேஜர் பதவி கிடைத்துவிடும். எவன் மேனேஜர் பதவியை வழங்குவானோ அவனை அதிகமாக அனுசரித்தால் போதுமானது.

சில பெண்கள் அலுவலகத்தில் வெகு சீக்கிரத்திலேயே சரசரவென உயர் பதவிக்கு வந்துவிடுவார்கள். பல ஆண்கள் பல ஆண்டுகளாக சாதித்துப் பெறமுடியாததை ஒரு பெண் வெகு சீக்கிரத்திலேயே பெற்று விடுவாள். எப்படி என்று கேட்டால், வெளிப்படையில் ஆணுக்கு நிகர் பெண் என்று பிதற்றிக் கொள்வார்கள். உள்ளுக்குள் ஆய்வு செய்து பார்த்தால் விசயம் வேறு விதமாகத்தான் இருக்கும்.

இப்படித் தான் நடக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது. வல்லூறுகள் போன்று இருக்கக் கூடிய இடத்தில், 8 மணி நேரம் 10 மணி நேரம் தனியாக ஒரு பெண்ணை வேலைக்கு அனுப்புவது நியாயமா? இதற்குப் பெயர் வாழ்க்கையா? உனது பிள்ளைகளை ஒழுக்கமாகவும், பண்பாட்டுடனும், கலாச்சாரத்துடனும் வளர்த்து ஆளாக்குவதையும், ஒரு விஞ்ஞானியாக அறிஞனாக இன்ஞினியராக மருத்துவராக ஒரு மார்க்க அறிஞராக ஏதோ பெற்றோர்கள் ஆசைப்படுகிற மாதிரியோ அல்லது பிள்ளைகள் விரும்பிய மாதிரியோ வளர்ப்பதற்கு பெண்கள் குடும்பங்களில் இருந்து பணிபுரிய வேண்டாமா? இது பெரிய நிர்வாகம் இல்லையா? இது என்ன அடிமைத்தனமா? ஒரு பிள்ளையை வளர்த்து வார்த்து எடுப்பது என்பது சிறிய விஷயமா? எவ்வளவு பெரிய பொறுப்புணர்வுமிக்க காரியம்!

இவ்வளவு பெரிய பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதை விளங்காமல் தனக்கும் தனது குடும்பத்திற்கும் அவப்பெயரைச் சேர்ப்பதை சிறப்பாக நினைத்துச் செயல்படுகிற பரிதாபத்தைப் பார்க்கிறோம்.

இதுபோக வேலைக்குப் போகிற பெண்கள், தங்களது செலவில் 20 சதவீதம் அழகுக்காகவும் கவர்ச்சிக்காவும் செலவிடுவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்குள் இருந்தால் இவ்வளவு தொகைக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். வெளியே போக வேண்டிய சூழலை உருவாக்கிக் கொண்டதால், பூ வைப்பதிலிருந்து, பியூட்டி பார்லருக்கு செலவு செய்வது, வேலைக்குத் தகுந்த மாதிரியெல்லாம் ஜோடிப்பதற்காக, வாங்குகிற சம்பளத்தில் பெருந்தொகையை இப்படி வீணடிக்கிற நிகழ்வுகளையும் அன்றாடம் பார்க்கிறோம்.

இதுபோக தற்போது அதிகமான சம்பளத்துடன் வரக்கூடிய தொழில் நுட்ப வேலைகளுக்கு பெண்கள் சென்ற பிறகு, மது குடிப்பவர் களாகவும், ஆண்களுடன் சேர்ந்து உல்லாசமாக ஊர் சுற்றக் கூடியவர் களாகவும் ஆகும் அளவுக்குக் காலம் கெட்டுவிட்டது. கல்யாணம் பண்ணாத பெண்களைக் கூட வீடுகளில் ஏன் எதற்கு என்றெல்லாம் பெற்றோர்களால் கேள்வி கேட்க முடியவில்லை.

ஏனெனில் 40,000 என்றும், 50,000 என்றும் சம்பளம் வாங்கிக் கொண்டு வருகிறாள். அவளைச் சார்ந்துதான் பெற்றோர்கள் இருக்கிற போது அவளை ஒன்றும் கண்டிக்க முடியாது. கண்ட்ரோல் பண்ணவும் முடியாது. அப்படி அக்கறையோடு கண்டித்தால், உனது வேலைப் பார்த்துக் கொண்டு போ, நான் தனியாக ரூம் போட்டு தங்கிக் கொள்கிறேன் என்று திரும்பப் பெற்றோரை மிரட்டுகிறாள்.

ஆக இப்படியெல்லாம் பெண்கள் வேலை என்றும், சம்பாத்தியம் என்றும் போய் சீரழிந்து கற்பையும் மானத்தையும் இழந்து, வாழ்க்கை நாசமாவதைப் பார்க்கிறோம். இதனால் பலவிதமான பால்வினை நோய்களுக்கும் ஆளாகிற பலரது கதைகளையும் பத்திரிக்கைகளில் அன்றாடம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆக, இத்தனை கேடுகளுக்கும், விளைவுகளுக்கும் அடிப்படை, பெண்கள் பொருளாதாரத்திற்கு பொறுப்பாளர்கள் என்று நினைப்பது தான். பெண்ணும் அப்படி நினைக்கிறாள். இதுவல்ல பெண்ணுரிமை. இதுவல்ல சுதந்திரம்.

இஸ்லாமிய மார்க்கம் பெண் களுக்கு எப்படிப்பட்ட உரிமையைத் தந்திருக்கிறது எனில், குடும்பப் பொருளாதாரம் அனைத்தும் கணவன் தலையில்தான் சுமத்தியிருக்கிறது.

இன்னும் இதை விட முக்கியமாகச் சொல்வதாக இருப்பின், ஆண்கள் சம்பாதிப்பதற்கும் பெண்கள் சம்பாதிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. ஆண்களைப் பொறுத்தளவுக்கு சம்பாத்தியத்தில் உடமையில் என்னுடையது என்று கூடுதலாக எடுத்துக் கொள்ளவே மாட்டான். நம்முடையது. நமக்குரியது என்று பொதுவாக வைத்துவிடுவான்.

பெண்கள் சம்பாத்தியம் செய்தால், அவள் தனக்கு என தனிக் கணக்கு வைத்திருப்பாள். சில கணவன்மார்கள் மிரட்டி அவளது சம்பாத்தியத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

அடங்கிப் போகிறவளாக இருந்தால் கொடுத்து விடுவாள். கொஞ்சம் எகிறிப் போகிறவளாக இருந்தால் இவளது சம்பாத்தியத்தில் சல்லிக் காசுகூட கணவனிடமோ கணவரது குடும்பத்தாரிடமோ கொடுக்க மாட்டாள். குடும்பத்திற்குப் பொதுவாக ஆக்கிக் கொள்ள மாட்டாள். இது என் காசு, அது உன் காசு என்று பிரித்துத்தான் தனி ராஜ்ஜியம் செய்வாள். இப்படியெல்லாம் பேசுகிற பழக்கம் வேலைக்குப் போகிற பெண்களிடம்தான் அதிகமாக இருக்கும்.

ஆனால் குடும்பத்துடன் இருக்கிற வாழ்கிற பெண்களில் பெரும்பாலும் என்ன மனநிலையில் இருப்பார்கள் எனில், கணவன் தொழிலுக்காக யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது மருத்துவத்திற்காக தேவைப்பட்டாலோ, அவனது மனைவி, “நீங்கள் தந்தவற்றையெல்லாம் சேர்த்து வைத்துள்ளேன். அதை உங்களது தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று விட்டுக் கொடுத்துவிடுவாள். என் பணத்தை எடுத்து தொழில் செய்யுங்கள்; எனது நகையை விற்று உங்களது தேவைகளை நிறைவு செய்யுங்கள் என்று சொல்வாள். இந்தத் தன்மையெல்லாம் குடும்பத்தில் அங்கமாக இருக்கிற பெண்களுக்குத் தான் வரும்.

நானும் பணம் சம்பாதிப்பேன், என்னாலும் சுயமாக சொந்தக் காலில் நிற்க முடியும் என்பவர்கள் ஆண்களைப் போன்று சம்பாதிக்கவும் முடியவில்லை. அதே நேரத்தில் கணவன் மனைவிக்குள்ள நெருக்கம் கெட்டுவிடும். நமது குடும்பம் என்பதற்கான நெருக்கம், இணக்கம் எல்லாமே நாசமாகி விடுவதையும் அன்றாடம் காண்கிறோம்.

இதையெல்லாம் ஆய்வு செய்து, மனநோய்க்கு ஆளாகுபவர்களில் ஆண்கள் அதிகமா? பெண்கள் அதிகமா? என்று புள்ளி விபரக் கணக்கை எடுத்தால் பெண்களில்தான் அதிகமானோர் மனநோய்க்கு ஆளாகுகிறார்கள் என்று நிரூபித்துள்ளார்கள்.

கர்ப்பப்பை புற்று நோய்க்குக் காரணம் அதிக வேலைப் பளு என்று கண்டறிந்துள்ளார்கள். பால் கட்டி நோய் பிடித்து அது நாளடைவில் மார்பகக் கேன்சர் போன்ற நோய்களை உருவாக்குகிறது, அதேபோன்று பெண்களுக்கு கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிக்கிறது, படுத்தால் தூக்கம் வராது, டென்ஷன், ஆண்களைப் போன்று பெண்களுக்கும் இன்றைய காலத்தில் கோபம் வருகிறது என்றெல்லாம் மருத்துவ ஆய்வில் வெளியிடுகிறார்கள்.

விமானப் பணிப் பெண் போன்ற பொம்மை வேலை பார்க்கிற பெண்களுக்கு பெரும்பாலும் கோபம் வருவது குறைவு, உடல் ரீதியாக சிந்தனை ரீதியாக வேலை செய்யும் பெண்களைப் பார்த்தால் ஆண்களை விடவும் கடுமையாகக் கோபமடை வதைப் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு, அரசு அலுவலகங் களில் பணி புரிகிறவர்களையும், பேங்குகளில் பணிபுரிகிற பெண்களையும் பார்த்தால், அவ்வளவு திமிராகவும் கோபமாகவும் பேசுவார்கள். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கச் சென்றால், ஆண்களை விடவும் திமிராகவும் கோபமாகவும் பெண்கள் திட்டுவதை நேரடியாகக் காணலாம். இதுவெல்லாம் வேண்டுமென்றே செய்வது கிடையாது; அதிகமான வேலைப் பழுவால் செய்கிறார்கள்.

பிள்ளை குட்டிகளை விட்டு விட்டு வந்திருப்பாள், பால் கொடுக்கும் நேரமாக இருக்கும், பிள்ளையின் மீது மனம் ஏங்கிக் கொண்டிருக்கும், பால் சுரக்கும் வேதனையில் இருப்பாள், அந்த நேரத்தில் நாம் போனால் நம்மீது அவளது ஆத்திரத்தைக் காட்டுவாள். ஏதேனும் கையெழுத்து வாங்கச் சென்றால் ஆண்களை விடவும் பன்மடங்கு கொடூரமாகப் பெண் ஊழியர்கள் நடப்பதை அன்றாடம் நம்மால் காணமுடிகிறது. இதற்கெல்லாம் காரணம் மனநோய் தான் என்று இன்றைய மனோதத்துவ ஆய்வாளர் களும், மனிதவள ஆய்வாளர்களும் சொல்வதைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் ஆய்வு செய்து விட்டுத் தான், பெண்களுக்கு அதிகப்படியான வேலைப் பளுவைக் குறைத்தால் அவர்கள் தெளிவான மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்றும் பரிந்துரை செய்கின்றனர் ஆய்வாளர்கள். அதிகப்படியான வேலைப் பளு என்பதில் முதல் முக்கியமானது, சம்பாதிப்பதற்காகப் பெண்கள் குடும்பங்களைப் பிரிந்து வேலைக்குச் செல்லாமல் இருந்தா லேயே போதுமானது என்கிறார்கள்.

கணவன்தான் மனைவிக்கும், பிள்ளை குட்டிகளுக்கும் குடும்பத் திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் அனைத்துத் தேவைகளுக்காவும் சம்பாதிக்கிற போது பெண்கள் ஏன் சம்பாதிக்க வேண்டும்? இன்னும் சொல்வதாக இருப்பின், பெண்கள் வீட்டிலும் ஆண்கள் வெளியிலும் உழைப்பதால் மிகவும் ஈடுபாட்டுடன் ஒவ்வொருவரும் தத்தமது பணிகளைச் செய்வார்கள்.

இரண்டு பேரும் வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால் சம்பாதிக்கும் வேலையையும் ஒழுங்காக நிறைவேற்ற முடியாமல், குடும்பப் பொறுப்புக்களையும் தட்டிக் கழிக்க நேரிடும். இரண்டு வேலைகளையுமே பதறிப் பதறி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதுவே கணவன் வெளியில் சென்று சம்பாத்தியம் செய்துவிட்டு வந்தால், அவர் எவ்வளவோ சிரமங்களை நமக்காகத் தாங்கிக் கொண்டு பணி செய்கிறார், அவர் வந்ததும் நாம் அனுசரித்து அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செவ்வனே செய்யலாம் என்று அவர் வருவதை வரவேற்று, சிரித்து, மகிழ்வித்து, அவனைக் கவர்ந்து அவனை ஆறுதல் படுத்தி, அவனை சந்தோஷப்படுத்த வேண்டும் என இதுபோன்ற குடும்பத்தை சீர்செய்யும் வேலையைச் செய்தால், கணவனின் கோபதாபத்தைக் குறைக்கிற அருமருந்தாகப் பெண் ஆகிவிடுவாள். அவளுக்கும் மனஇறுக்கம் குறைந்து விடும், அந்தக் குடும்பத்தில் சந்தோஷம் மிகைத்து, பொங்கி வழியும்.

இதுவே கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால், தொழிலை முடித்துவிட்டு கணவன் மன இறுக்கத்திலேயே வருவான். இவளும் அலுவலகத்தில் பணிகளை முடித்தோ முடிக்காமலோ ஒரு வகையான இறுக்கத்துடன் தான் வருவாள். இருவரும் இந்த மனநிலையில் வந்தால், வீட்டிலும் அதுபோன்று ஒருவருக்கொருவர் எள்ளும் கொள்ளுமாய் வெடிப்பதைப் பார்க்கிறோம்.

இவள் ஒன்று சொன்னால் அவன் ஒன்று சொல்வான். இயல்புக்கு மாற்றமாக இரண்டும் பற்றிக் கொண்டு எரியும். குடும்பத்தில் எந்தவிதமான நிம்மதியும் இருக்காது.

அதன் பிறகு மாமனார், மாமியார் பேச்சுக்களின் மூலம் கூடுதலாகக் குத்திக் குத்திக் காட்டுவது, நீ எங்கே போய்விட்டு வருகிறாய்? என்று எங்களுக்குத் தெரியாதாக்கும் என்பாள். உடனே அதற்கு இவள், நான்தான் இந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்தியுள்ளேன் என்று மறுமொழி உரைப்பாள். அதற்கு மாமியாரும் உடனே விட்டு விடமாட்டாள், நீ எப்படி காப்பாற்றினாய் என்று எங்களுக்குத் தெரியாதா? என்று குத்திக் காட்டி ஒரு பொடி வைத்து கேட்பாள். இப்படியெல்லாம் ஒரு பெண் இவ்வளவு சிரமத்தை அனுபவிக்க வேண்டும் என்று என்ன தேவை வந்தது?

எனவே இஸ்லாமியக் குடும்ப அமைப்பில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய அடிப்படை செய்தி, எந்தக் காரணத்தைக் கொண்டும் பெண்களின் சம்பாத்தியத்தை எதிர்பார்க்காதீர்கள். வேறு வழியே இல்லையென்றால் அதற்கு மார்க்கம் அனுமதியளிக்கிறது. ஆண்களின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்த வழியிருந்தால் பெண்களை சம்பாதிப்பதற்காக வெளியில் அனுப்பக் கூடாது.

பெண்கள் சம்பாதித்து அதில் வாழ்வது கேவலம்; அது பெண்களுக்குச் செய்யும் அநியாயம்; பெண்களுக்கு நாம் செய்யும் கொடுமை. அது உரிமை கிடையாது; உரிமை என்ற தேனை மேல் பூச்சாகத் தடவி பெண்களுக்கு விஷத்தைக் கொடுக்கிறீர்கள்; உண்மையில் அவர்களுக்கு அது நல்லது கிடை யாது; அவர்களின் உடலும், மனமும் அதைத் தாங்காது என்பதை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தை மாற்றி ஆண்களை பெண்கள் இடத்தில் நிறுத்திப் பாருங்கள். வெளியில் ஆண்கள் வேலை செய்து கொண்டு, பிள்ளை சுமப்பதையும் பால் கொடுப்பதையும் தவிர்த்து, பெண்கள் வீட்டில் செய்கிற எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றால் ஆண்களால் இயலுமா?

ஆண்கள்தான் டீ போட்டு பெண்களுக்குக் கொடுக்க வேண்டும், சோறு குழம்பு காய்ச்ச வேண்டும், பிள்ளைகளைக் குளிப்பாட்டி ஆடை அணிவித்து விடவேண்டும், வீட்டுச் சாமான்களைக் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும், மதிய உணவையும் தயாரித்து டிபனில் பாதுகாப்பு செய்ய வேண்டும், பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளை விடவேண்டும், பிறகு தன்னைத் தயாராக்கிக் கொண்டு வேலைக்கு ஓடவேண்டும், வேலை முடித்துவிட்டு மாலையில் வந்து டீ போட வேண்டும், இரவு உணவைத் தயாரிக்க வேண்டும்… இப்படியெல்லாம் சம்பாதிக்கும் வேலைகளையும் வீட்டைப் பராமரிக்கும் வேலைகளையும் ஆண்களிடம் கொடுத்தால் ஆண்களால் முடியுமா? பெண்களை விட உடல் பலமும், அறிவாற்றலும் உடைய ஆண்களால் முடியாவிட்டால் எல்லா வகையிலும் பலவீனமான பெண்களால் மட்டும் எப்படி இரட்டைச் சுமைகளை சுமக்க முடியும்? இது நியாயமானதா? நிச்சயம் நியாயமானது கிடையாது.

எனவே பெண்களுக்கு வேலைச் சுமையை முடிந்தளவுக்கு இலகுவாக்கி விட வேண்டும். இன்னும் சொல்லப் போனால் இல்லறத்தில் ஈடுபடப் போனால் பெண்களிடத்தில் ஒரு இயற்கையான கலை இருக்க வேண்டும். வெளியில் சுற்றித் திரியும் பெண்களுக்கு இயற்கை கலை மாற்றப்படும். வெளியில் செல்லும் போது சூரிய வெளிச்சம் அவர்களது இயற்கைத் தன்மையை மாற்றும். சூரியனிடமிருந்து வருகிற அல்ட்ரா வைலட் கதிர்கள் பெண்களின் முகத்தில் படும் போது அளவுக்கு அதிகமான முதுமைத் தோற்றத்தை பெண்களுக்கு ஏற்படுத்திவிடும்.

முஸ்லிம் சமூகப் பெண்களைப் பாருங்கள், வேறு சமூகங்களிலிருந்து தான் இஸ்லாத்திற்கு மாறியிருக் கிறோம். மாறும் போது ஆரம்பத்தில் கருப்பு நிறத் தோற்றம் மிகைத்துத்தான் இருந்தோம். இரண்டு தலைமுறை கடந்த பிறகு இன்று பெண்கள் கருப்பு நிறம் மாறி இயற்கைக் கலையோடு இருப்பதைப் பார்க்கிறோம்.

வெளியே சுற்றுவது, நாற்று நடுவதற்கும் களையெடுப்பதற்கும் வயல்வெளிகளில் அலையாமல் வேலைக்குச் சென்று சம்பாதிக்காமல் இருப்பதால் தான் இந்தப் பெண்களிடம் அழகு மிளிர்கின்றது.

இப்படியெல்லாம் இருந்தால் தான் இயற்கை அழகு கூடி, ஒரு ஆண் ரசிக்கும் தன்மையில் பெண் இருப்பாள். இல்லற வாழ்வில் ஆண் தன் மனைவியை ரசித்தால் தான் குடும்ப வாழக்கை சந்தோஷமாக அமையும்.

வெளியில் சுற்றி அலைந்து ஆண்கள் முகத்தைப் போன்று பெண்களும் தங்கள் முகத்தை முரடாக்கி வைத்துக் கொண்டிருந்தால் ஆண்கள் எப்படி பெண்களை விரும்புவார்கள்? பெண்ணின் மீது இருக்கிற நாட்டம் ஆணுக்குக் குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது.

எனவே பெண்கள் இப்படி யெல்லாம் வேலைக்குச் செல்லாமலும் அதிகப்படியான பளுவை நம் மீது ஏற்றிக் கொள்ளாமலும் இருந்தால்தான் பெண்களுக்கென இருக்கிற இயற்கை கலை கிடைக்கும். மனதில் நிம்மதி இருக்கும். அதனால் கணவன் நம்மைப் பார்த்ததும் நம்மீது பாசம் நேசம் கொண்டு ஆசைப்படுவதற்கு அது வழிவகுக்கும், கணவனின் கோபத்தையும் தாபத்தையும் குறைக்கிற பெண்களாக மாறலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, பெண்கள் நடக்க வேண்டும்.

இஸ்லாமிய குடும்ப அமைப்பில் இரண்டாவது அம்சம், பொருளா தாரத்திற்கு ஆண்கள் தான் பொறுப்பு என்பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

என்னென்ன மாதிரியெல்லாம் அந்தப் பொறுப்புக்கள் இருக்கின்றன என்பது பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

உத்தம  நபி உயிருடன்  உள்ளார்களா?

ஸபீர் அலீ எம்.ஐ.எஸ்.சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள்.

2043 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ حَدَّثَنَا الْمُقْرِئُ حَدَّثَنَا حَيْوَةُ عَنْ أَبِى صَخْرٍ حُمَيْدِ بْنِ زِيَادٍ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَىَّ إِلاَّ رَدَّ اللَّهُ عَلَىَّ رُوحِى حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ. رواه أبو داود

எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி அபூதாவூத் (2041), அஹ்மத் (10815), பைஹகியின் தஃவாதுல் கபீர் (178) உள்ளிட்ட நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் மீது ஸலாம் சொல்லும் போதெல்லாம் அவர்களுக்கு உயிர் திரும்ப வழங்கப்படுகிறது என்றால், உலகத்தில் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வின் தூதர் மீது யாரேனும் ஒருவர் ஸலாம் சொல்லிக் கொண்டு தான் இருப்பார். எனவே, அல்லாஹ்வுடைய தூதர் தனது கப்ரில் எப்பொழுதும் உயிரோடு தான் உள்ளார்கள் என்று கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்தை இந்த செய்தியைக் கொண்டு நிறுவுகிறார்கள்.

இச்செய்தியின் கருத்திலும் கோளாறு இருக்கிறது; அறிவிப்பாளர் தொடரிலும் குறை இருக்கிறது.

முதலில் அறிவிப்பாளர் தொடர் ரீதீயான குறையைப் பார்ப்போம்.

இந்தச் செய்தி நபியவர் களிடமிருந்து பின்வரும் அறிவிப் பாளர் தொடரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 1. அபூஹுரைரா (ரலி)
 2. யஸீத் இப்னு அப்தில்லாஹ் பின் குஸைத்
 3. அபூஸக்ர் ஹுமைத் பின் ஸியாத்
 4. ஹயாத்
 5. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ
 6. முஹம்மது பின் அவ்ஃப்

இவர்களில் அபூஹுரைரா (ரலி) நபித்தோழர் என்பதால் அவரைப் பற்றி ஆய்வு செய்யத் தேவையில்லை.

அவருக்கு அடுத்து வரக்கூடிய ஐந்து நபர்களில் அபூஸக்ர் ஹுமைத் பின் ஸியாத் என்பவரைத் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள்.

அபூஸக்ர் என்பவரைப் பற்றி இமாம்களின் விமர்சனம் நம்பக மானவர் என்றும் பலவீனமானவர் என்றும் இருவிதமாக வந்துள்ளது.

و قال المزى :

قال عبد الله بن أحمد بن حنبل : سئل أبى عن أبى صخر ، فقال : ليس به بأس .

و قال عثمان بن سعيد الدارمى : سألت يحيى بن معين عن حميد الخراط ، فقال : ثقة ليس به بأس .

و قال إسحاق بن منصور ، عن يحيى بن معين : أبو صخر حميد بن زياد ضعيف .

و قال أحمد بن سعد بن أبى مريم ، عن يحيى بن معين : أبو صخر حميد بن زياد الخراط ضعيف الحديث .

و قال النسائى : حميد بن صخر ضعيف .

و قال أبو أحمد بن عدى : حميد بن زياد أبو صخر الخراط مدينى .(تهذيب الكمال)

இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று இமாம் அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவர் நம்பகமானவர். இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், இவர் பலவீனமானவர் என்றும், இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்றும் (வேறுபட்ட விமர்சனங்களை) யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(தஹ்தீபுல் கமால் 7/368)

سمعت ابن حماد يقول : حميد بن صخر يروى عنه حاتم بن إسماعيل : ضعيف.(تهذيب الكمال)

இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹம்மாத் கூறியுள்ளார்.                                                   (தஹ்தீபுல் கமால் 7/370)

و قال الدارقطنى : ثقة . و ذكره ابن حبان فى ” الثقات ” .(تهذيب التهذيب)

இமாம் தாரகுத்னியும், இப்னு ஹிப்பானும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 3/37)

وقال ابن عدى: هو عندي صالح الحديث، إنما أنكر عليه حديثان.

ثم إن ابن عدى ذكر حميد بن صخر في موضع آخر فضعفه.(ميزان الإعتدال)

இவர் என்னிடத்தில் ஹதீஸ் விஷயத்தில் நல்லவர். அவரிடத்தில் இரண்டு ஹதீஸ்களே மறுக்கப் பட்டுள்ளது என்று இப்னுஅதீ கூறியுள்ளார்.

பிறகு மற்றொரு இடத்தில் கூறும் போது அவர் பலவீனமானவர் என்று கூறினார். (மீஸானுல்இஃதிதால்3/612)

وهو الذي يروى عنه حاتم بن إسماعيل ويقول حميد بن صخر وإنما هو حميد بن زياد أبو صخر لا حميد بن صخر (الثقات لابن حبان)

ஹுமைத் பின் ஸியாத் (ஸியாதின் மகன் ஹுமைத்) என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஹாதிம் பின் இஸ்மாயீல் இவரது பெயரை ஹுமைத் பின் ஸக்ர் (ஸக்ருடைய மகன் ஹுமைத்) என்று கூறுகிறார். ஆனால் அவர் ஹுமைத் பின் ஸியாத் அபூ ஸக்ரு தான். ஹுமைத் பின் ஸக்ரு இல்லை என்று இப்னு ஹிப்பான் தனது ஸிக்காத் (6/189) எனும் நூலில் கூறியுள்ளார்.

هو أبو صخر من غير هاء في آخره واسمه حميد بن زياد وقيل حميد بن صخر وقيل حماد بن زياد ويقال له أبو الصخر الخراط صاحب العباء المدني سكن مصر(شرح مسلم)

ஹுமைத் பின் ஸியாதுடைய பெயர் ஹுமைத் பின் ஸக்ர் என்றும், ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறப் பட்டுள்ளது.

(ஷரஹ் முஸ்லிம் 3/117)

حميد بن صخر المدني

 يروي عنه حاتم بن إسماعيل

 قال أحمد ضعيف وقال النسائي ليس بالقوي(الضعفاء والمتروكين)

ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பலவீனமானவர் என்று அஹ்மத் இமாம் கூறியுள்ளார்.

மேலும் இவர் பலமானவர் இல்லை என்று நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(அல்லுஅஃபா வல் மத்ரூகீன் 1/238)

மேற்கூறப்பட்ட விமர்சனங் களிலிருந்து ஹுமைத் பின் ஸியாதுடைய பெயரிலும் குழப்பம் இருக்கிறது. அவரைப் பற்றிய விமர்சனங்களிலும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

மேலும் இந்தச் செய்தியை இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.

இது போன்று கருத்து வேறுபாடுள்ள நபர் ஒரு செய்தியைத் தனித்து அறிவித்தால் அச்செய்தி முதன்மை ஆதாரமாக எடுக்கின்ற அளவுக்கு ஆதாரப்பூர்வமானதாகக் கொள்ள முடியாது.

இது அறிவிப்பு ரீதியாக உள்ள குறையாகும்.

இந்தச் செய்தியில் கருத்து ரீதீயில் உள்ள தவறு என்னவென்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து மனிதர்களும் தங்களது இறப்பிற்குப் பின் பர்ஸக் எனும் திரைமறைவு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வாழ்க்கைக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அங்குள்ளவர்கள் இங்குள்ளவர்களை அறிய முடியாது. இங்குள்ளவர்கள் அங்குள்ளவர்களை அறிய முடியாது. இப்படிப்பட்ட மறைமுகமான வாழ்க்கையை இறைவன் இறந்து விட்ட அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கின்றான்.

முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்பு!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்பிக்கப் படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன் 23:100)

பர்ஸக் எனும் வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய தூதர் உட்பட அனைவரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அப்படியிருக்க யாரேனும் ஸலாம் சொல்லும் போது நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ரூஹைத் திரும்ப வழங்குவதாக ஏன் இச்செய்தி கூற வேண்டும்?

பர்ஸக்கில் ஏற்கனவே உயிருடன் இருக்கின்ற அல்லாஹ்வுடைய தூதருக்கு இறைவன் மீண்டும் உயிரை வழங்குவதாக வருவது இந்த ஹதீஸில் உள்ள கருத்துப் பிழையாகும்.

இவ்வாறு முரண்படும் விதமாக அல்லாஹ்வுடைய தூதர் நிச்சயமாக கூற மாட்டார்கள்.

ஒரு வாதத்திற்கு இறைவன் ரூஹைத் திரும்ப வழங்குவதாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது பர்ஸகில் இருப்பதைப் போன்ற ரூஹ் அல்ல. இவ்வுலகில் செயல்படுவதைப் போன்ற உயிர் நபியவர்களுடைய உடலுக்கு வழங்கப்படுகிறது என்று அவர்கள் கூறுவார்களேயானால், அல்லாஹ்வுடைய தூதர் நாம் சொல்லும் ஸலாமைச் செவியுற வேண்டும்.

செவியுற்றது மட்டுமல்லாமல் நமக்குப் பதில் ஸலாம் சொல்ல வேண்டும்.

அவர்கள் சொல்லும் ஸலாம் நமக்குக் கேட்க வேண்டும். இவ்வாறெல்லாம் நடைபெறுகின்றதா என்றால் இல்லை.

நபியவர்களுடைய உடலுக்கு இறைவன் ரூஹை திரும்ப வழங்கி விட்டான் என்றால் அவர்கள் மண்ணறையில் அடங்கியிருக்கத் தேவையில்லை சாதாரணமாக எழுந்து நடமாடலாம், இவ்வுலகில் இஸ்லாத்தின் பெயரால் மக்கள் செய்யும் அனாச்சாரங்களைத் தடுத்து நிறுத்தலாம்.

இவ்வாறு நடைபெறுகின்றதா? இல்லை.

இந்த அடிப்படைகளில் இச்செய்தி கருத்து முரண்பாடு மிக்கதாக இருக்கிறது. மேற்சொன்ன விதத்தில் அறிவிப்பாளர் ரீதியாகவும் விமர்சனம் உள்ளது.

எனவே இந்தச் செய்தி இவர்களின் கருத்திற்கு துளியும் ஆதாரமாகாது.

மேலும், அல்லாஹ்வுடைய தூதர் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு எதிர் தரப்பினர் பின்வரும் செய்தியையும் சான்றாகச் சமர்ப்பிக்கின்றார்கள்.

“பூமியில் சுற்றித்திரியும் வானவர் கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமுதாயத்திடமிருந்து ஸலாமை எனக்கு எத்தி வைக்கின்றார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த செய்தி நஸாயீ(1282), அஹமத்(4320) உட்பட பல நூற்களில் இடம்பெற்றிருக்கும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

அல்லாஹ்வுடைய தூதரின் மீது மக்கள் சொல்லும் ஸலாமை வானவர்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார்கள் என்றால் அல்லாஹ் வுடைய தூதர் மண்ணறையில் உயிரோடு தானே இருக்கிறார்கள் என்று தங்களது வாதத்தை இந்தச் செய்தியைக் கொண்டு நிறுவுகிறார்கள்.

வானவர்கள் மக்களின் ஸலாமை நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று தான் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நாம் ஏற்கனவே சொன்னது போல் பர்ஸக்கில் அல்லாஹ்வுடைய தூதர் உட்பட அனைவரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அங்கு வாழ்கின்ற அல்லாஹ் வுடைய தூதருக்கு மக்கள் சொல்லும் ஸலாமை வானவர்கள் எடுத்துச் சொல்வார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸின் கருத்து தருகிறது.

பர்ஸக்கில் ஷஹீத்கள் பறவை வடிவில் அல்லாஹ்வின் அர்ஷைச் சுற்றி வருவார்கள் என்று ஷஹீத் களுக்கு எப்படி ஓர் தனிச்சிறப்பை இறைவன் வழங்கியிருக்கின்றானோ, அதுபோன்று பர்ஸக்கில் வாழும் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய சமுதாயத்தின் ஸலாமை வானவர்கள் எடுத்துச் சொல்வது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பாகும்.

இவ்வாறு விளங்குவதுதான் எதார்த்தமானதாகும். இதைத்தான் இந்த ஹதீஸின் கருத்து தருகின்றதே தவிர இந்த உலகத்தில் கப்ரில் அல்லாஹ்வுடைய தூதர் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

எனவே, இந்தச் செய்தியும் அல்லாஹ்வுடைய தூதர் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆகாது என்பது நிருபனமாகி விட்டது.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் உள்ளார்கள் என்று வாதிடுபவர்கள் பின்வரும் செய்தியை யும் ஆதாரமாகக் காண்பிக்கின்றார்கள்.

1925- حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادَ ، عَنْ سُفْيَانَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ ، عَنْ زَاذَانَ ، عَنْ عَبْدِ اللهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلاَمَ قَالَ : وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ ، فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ ، وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ.

وَهَذَا الْحَدِيثُ آخِرُهُ لاَ نَعْلَمُهُ يُرْوَى عَنْ عَبْدِ اللهِ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ بِهَذَا الإِسْنَادِ.(مسند البزار)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

எனது வாழ்வு உங்களுக்கு நன்மையே. நீங்கள் உரையாடு கிறீர்கள். நானும் உங்களுடன் உரையாடுகிறேன். எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. உங்கள் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அதில் நன்மையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.

இச்செய்தி முஸ்னதுல் பஸ்ஸாரில் (1925) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியின் அறிவிப் பாளர்களில் ஒருவரான அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவராவார்.

وَقَال أبو حاتم (1) : ليس بالقوي ، يكتب حديثه (2).

وَقَال الدَّارَقُطنِيّ (3) : لا يحتج به ، يعتبر به ، (تهذيب الكمال 18/275)

இவர் பலமானவர் இல்லை என்று இமாம் அபூஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவர் ஆதாரமாக எடுக்கத் தகுந்தவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(தஹ்தீபுல் கமால் 18/275).

منكر الحديث جدا، يقلب الاخبار ويروي المناكير عن المشاهير فاستحق الترك،

(المجروحين 2/160)

இவர் ஹதீஸில் மிகவும் மறுக்கப்படக்கூடியவர், செய்திகளை மாற்றியறிவிப்பவர். மேலும் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கப் படும் செய்திகளை அறிவிப்பார். இன்னும் இவர் விடப்படுவதற்குத் தகுதியானவர் என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(மஜ்ரூஹீன் 2/160)

எனவே, இந்தச் செய்தி இந்த அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் என்பவரால் பலவீனமடைகிறது.

இவரை ஒரு சிலர் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும். இவரின் மீதும் குறையும் அதிகமாக சொல்லப்பட்டிருப்பதால், நிறையை விட குறை முற்படுத்தப்படும் என்ற ஹதீஸ்கலை விதியின் படி இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்குச் சரியான வலுவான எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் சமர்பிக்கவில்லை. இறுதி நாள் வரை அவர்களால் சமர்ப்பிக்கவும் இயலாது.

—————————————————————————————————————————————————————-

எத்தி வைக்கும் யுக்தி      

ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல வெட்கம் தடையாகலாமா?

எம்.எஸ். ஜீனத் நிஸா

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்

தாயீக்கள் (அழைப்பாளர்கள்) மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக எவ்வளவு சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தங்களது சொற்பொழிவுகளை அவர்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இவ்விதழில் நாம் காண இருக்கின்றோம்.

மார்க்கத்தை எத்தி வைக்க வெட்கம் தடையாக இருக்கக்கூடாது.

வெட்க உணர்வை இஸ்லாமிய மார்க்கம் வரவேற்கின்றது. அகிலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அதிகம் வெட்கப்படுபவர்களாகவும், வெட்க உணர்வைப் பிறருக்கு வலியுறுத்துபவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக் கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறை நம்பிக்கையின்  ஒரு கிளையே.

நூல்: புகாரி 9

அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறினார்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள், “நாணம் நன்மையே தரும்என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 6117

அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும்  அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்.

நூல்: புகாரி 3562

இருப்பினும் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கோ, அதனை எத்தி வைப்பதற்கோ வெட்க உணர்வு தடையாக இருந்துவிடக் கூடாது. கடுமையாக வெட்க உணர்வு கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இல்லறம், மாதவிடாய், கணவன் மனைவி உறவு தொடர்பாக ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவது போன்ற விஷயங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி எடுத்துரைத்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இரு கை, இரு கால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்து விட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகா விட்டாலும் சரியே!)

நூல்: புகாரி 291

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரிஃபாஆ அல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து,  “நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கி விட்டார்.  ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதி யின்றித்  தொங்கும்) முந்தானைத் தலைப்பைப் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், “நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதைய உன் கணவரான)  அவரது இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உனது இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வ தென்பது முடியாதுஎன்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டி ருந்தார்கள்.  கா-த் பின் சயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள், தமக்கு உள்ளே நுழைய அனுமதி யளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாச-ல் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள், “அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பகிரங்கமாகச் சொல்-க் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?” என்று (வாச-ல் நின்றபடியே)  சொன்னார்கள்.

நூல்: புகாரி 2639

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்தி-ருந்த போது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்என்று கூறினார்கள். பிறகு,

 1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
 2. சொர்க்கவாசி முத-ல் உண்ணும் உணவு எது?
 3. குழந்தை தன் தந்தையை (சாய-ல்) ஒத்திருப்பது எதனால்? அது (சாய-ல்) தன் தாயின் சகோதரர் களை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவரா யிற்றே!என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கி-ருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முத-ல் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனது நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனது சாய-ல் பிறக்கின்றது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கின்றதுஎன்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “தாங்கள் அல்லாஹ் வின் தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்என்று கூறினார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்என்று பதிலளித்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதி-ருந்து காப்பாற்று வானாக!என்று சொன்னார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.

நூல்: புகாரி 3329

மேலும் மார்க்கச் சட்டங்களைக் கேள்வி கேட்காமல் அறிந்து கொள்ள இயலாது. எனவே இது போன்று கேட்கப்படும் கேள்விகளுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக் குடன்) இருக்கும் நிலையில் உறங்கலாமா?” என்று  கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருந்தாலும்  அவர் உளூ செய்துவிட்டு உறங்கலாம்என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 287

இல்லறம், மாதவிடாய் போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு பெண்கள் பெரிதும் தயங்குவார்கள். அந்தத் தயக்கமும் நியாயமானது தான். ஏனெனில் ஆபாசத்தைத் தூண்டக்கூடிய வார்த்தைகளைப் பேசுவதையோ, அந்தரங்கத்தை வெளிப்படுத்திப் பேசுவதோ கூடாது என்பது உட்பட நமது மார்க்கத்தில் நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்க்கச் சட்டங்களை மக்களுக்கு எத்திவைக்கும் நோக்கில் இவ்வாறு பேசுவது தவறல்ல. ஆனால் இதனைப் பேசுவதில் ஒரு சந்தோஷம், ஜாலி என்ற நோக்கில் பேசுவது குற்றமும் தண்டணைக்குரிய செயலுமாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

நூல்: புகாரி 6612

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதே ஆகும்.

நூல்: முஸ்லிம் 2833

ஆனால் பிரச்சாரம் என்று வருகின்ற போது மார்க்கச் சட்டங்களைச் சொல்வதற்கு நமக்குத் தயக்கம் அவசியமில்லை. ஏனெனில் ஆயிஷா, உம்மு சலமா, மைமூனா போன்ற நபியவர்களின் மனைவி மார்கள் நபிகளாரின் வீட்டில் நடந்த பல விஷயங்களை அறிவித்துள் ளார்கள். இது போன்ற விஷயங்களில் அவர்கள் தயக்கம் காட்டியிருந்தால் தொழுகை, நோன்பு, மாதவிடாய் பெண்களுக்குரிய சட்டங்கள் மற்றும் கணவன் மனைவி பேணவேண்டிய ஒழுங்கு முறைகள், கடமையான குளிப்பு போன்ற பல மஸாயில் (மார்க்க) சட்டங்களில் தீர்வு தெரியாமல் தவித்திருப்போம்.

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்குக் குளிப்பதற்காக தண்ணீர் கொண்டு வந்து வைத்தேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுவரை) இரண்டு அல்லது மூன்று தடவை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் கையை நுழைத்து (தண்ணீரை அள்ளி) பிறவி உறுப்பின் மீது ஊற்றி, தமது இடக் கையால் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையை பூமியில் வைத்து நன்கு தேய்த்துக் கழுவினார்கள்.

பின்னர் தொழுகைக்கு உளு செய்வதைப் போன்று உளு செய்தார்கள். பிறகு தம் கைகள் நிரம்ப மூன்று முறை தண்ணீர் அள்ளித் தமது தலையில் ஊற்றினார்கள். பின்னர் மேனி முழுவதையும் கழுவினார்கள். பிறகு அங்கிருந்து சற்று நகர்ந்து (நின்று) தம் கால்களைக் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களுக்காகத் துவாலையைக் கொண்டுவந்தேன். ஆனால், அவர்கள் அதை வாங்கி(த் துடைத்து)க்கொள்ள மறுத்து விட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 528

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (“விடைபெறும்ஹஜ்ஜிற்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெ தையும் நாங்கள் எண்ணவில்லை. (மக்காவிற்கு அருகிலுள்ள) “சரிஃப்என்ற இடத்தில் நாங்கள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான், “ஆம்என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்) அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு விதியாக்கிய விஷய மாகும். ஆகவே நீ, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நிறைவேற்று! ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும்  சுற்றி (தவாஃப்) வராதே என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின் போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள்.

நூல்: புகாரி 294

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்குத் தலை வாரிவிடுவேன்.

நூல்: புகாரி 295

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

நூல்: புகாரி 297

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து)கொண்டேன் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.

நூல்: புகாரி 298

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.

நூல்: முஸ்லிம் 505

மேற்கண்ட ஹதீஸ்களை நபிகளாரின் மனைவிமார்கள் அறிவித்திருக்கவில்லையென்றால் நாமும் யூதர்களைப் போலவே மாதவிடாய் ஏற்பட்ட நமது பெண்களை ஒதுக்கி வைத்திருப்போம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, “(நபியே!)  அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். “அது ஓர் (இயற்கை) உபாதைஎன்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்…என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, “நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?” என்று கேட்டனர். (இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம்.

நூல்: முஸ்லிம் 507

வெட்கப்படுவோர் கல்வியைக் கற்க முடியாது என்று கூறப்படுவது போல மார்க்கத்தைக் கற்பதற்கோ பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்கோ வெட்கம் ஒரு தடையாக ஆகிவிடக்கூடாது என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் சான்றாகும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம் தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்து விட்டேன். பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை “நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்என்றார்கள்.

நூல்: புகாரி 131

—————————————————————————————————————————————————————-

ஆஷுராவும் அனாச்சாரங்களும்

ஆஷுரா என்பது அஷ்ர – பத்து என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தையாகும். பத்தாவது என்பது இதன் பொருள்.

முஹர்ரம் மாதம் பத்தாவது நாளை இது குறிக்கின்றது. இந்நாள் தான், தன்னைக் கடவுள் என்று கொக்கரித்த, இஸ்ரவேலர் சமுதாயத்தைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு, அதே கடலில் மூஸா நபியும் அவர்களது இஸ்ரவேலர் சமுதாயமும் காப்பாற்றப் பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க நாளாகும்.

இந்தச் சிறப்புமிக்க அதே நாளில் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்ட சோக நிகழ்வு நடந்ததால் மூஸா நபியின் புகழ்மிக்க அந்த வரலாற்று நிகழ்வு மறக்கடிக்கப் பட்டு விட்டது. அந்த முழு நிலவை மூடுமேகமாக இடைமறித்து கர்பலா என்ற காரிருள் மறைத்து விட்டது.

ஃபிர்அவ்ன் என்ற கொடுங் கோலன் கொல்லப்பட்ட அந்த மகிழ்ச்சியான நாளை கர்பலா உள்ளே நுழைந்து கருப்புநாளாக ஆக்கி விட்டது. ஷியாக்களின் ஐந்து விரல் படமும் கைங்கரியமும் சேர்ந்து அந்த உண்மை வரலாற்றைக் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டது.

கர்பலா என்ற பெயரில் ஒரு கருப்பு தினம், சோக தினமாக அனுஷ்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை. கந்தூரி நாளாகவும் அனுஷ்டிக்கப் படுகின்றது. ஒருபுறம் சோக தினம் என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் கோலாகல கொண்டாட்ட தினமாக, கோலாட்ட தினமாக அனுஷ்டிக்கப் படுகின்ற இந்த நாளுக்குரிய நிகழ்ச்சி நிரல் முஹர்ரம் முதல் நாளே துவங்கி விடுகின்றது.

சோகம், சந்தோஷம் என்ற முரண்பட்ட அந்த நிகழ்வு நிரல்கள் முற்றி, முறுகி, முடிவுறுகின்ற உச்சக்கட்ட கிளைமாக்ஸ் தான் பத்தாம் நாள்.

பத்தாம் நாளில் கொண்டாட்டம், கோலாட்டம், குத்தாட்டம், குலுக்கல் ஆட்டம் மேள தாளங்களுடன் கூடிய சிலம்பாட்டமும் நடக்கின்றது.

இந்நாளில் நல்லது நடக்கும் என்பது பஞ்சா எடுக்கும் பரேலவிய கூட்டம் நம்புகின்றது. அதனால் அந் நாளில் பவனி வருகின்ற பஞ்சாவின் நடு மையத்தில் வீற்றிருக்கும் கைச்சின்னத்தில் பூ எறிந்து பூஜை செய்தால் தனது கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறது.

காரியம் நடக்கும் கர்பலா நாள்

ஆஷுரா தினத்தில் அபிவிருத்தி உண்டா?

இந்த கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவை அனத்தும் பலவீனமானவையாக உள்ளன.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

இது அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பாக ஷுஅபுல் ஈமான் (ஹதீஸ் எண் 3795), ஜுஸ்உ காஸிம் பின் மூஸா (பக்கம் 17) உள்ளிட்ட இன்னும் சில நூற்களில் பதிவாகி உள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் அபூஹாதம் குறிப்பிட்டுள்ளார்.

இவரது ஹதீஸ்கள் செல்லாததாக ஆகி விட்டன என்று அலீ இப்னுல் மதீனீ விமர்சித்துள்ளார்.

தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 167

இவர் உறுதியானவர் அல்ல, பலவீனமானவர் என்று நஸாயியும் இப்னு மயீனும் விமர்சித்துள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப் 2/183)

மேலும் இவர் பற்றிய விமர்சனம் பார்க்க: தஹ்தீபுல் கமால் 5/461

அடுத்து இந்தச் செய்தியில் இடம் பெறும் முஹம்மத் பின் தக்வான் என்பவரும் பலவீனமானவரே.

இவரை இமாம் புகாரி மற்றும் இமாம் அபூஹாதம் உள்ளிட்டோர் இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று விமர்சித் துள்ளார்கள். நஸாயி இவர் உறுதியானவர் அல்ல என்று நஸாயி குறிப்பிட்டுள்ளார்.

தஹ்தீபுல் கமால் 25/182

மேலும் இதில் இடம் பெறும் சுலைமான் பின் அபீ அப்தில்லாஹ் என்பவரது நம்பகத்தன்மையும் அறியப்படவில்லை என்பதால் அபூஹுரைரா அறிவிக்கும் இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிப்பு

மேற்கண்ட அதே செய்தி நபிகள் நாயகத்திடமிருந்து அப்துல்லாஹ்  பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்  அறிவிப்பதாக ஷுஅபுல் ஈமான் 3513, அல்லுஅஃபாஉல் கபீர் 1408, பழாயிலு அவ்காத் 244 உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவாகி உள்ளது.

இதன் அனைத்து அறிவிப்பு களிலும் ஹைசம் பின் ஷத்தாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

மோசமான செய்திகளை இவர் அறிவித்துள்ளார். எனவே இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.

மீஸானுல் இஃதிதால், பாகம் 4, பக்கம் 326

ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர், மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அஸதீ விமர்சித்துள்ளார். அல்லுஃபாஃஉ வல்மத்ரூகீன் 3/180

எனவே இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் இந்த அறிவிப்பும் பலவீனமாகிறது.

ஆஷுரா நாளில் நல்லது நடக்கும் என்று வரும் இந்த ஹதீஸ் கர்பலா நாளை மையமாகக் கொண்டதல்ல. அது உண்மையான ஆஷுரா நாளை, அதாவது மூஸா (அலை) காப்பாற்றப்பட்ட நாளை மையமாகக் கொண்டு வருகின்ற செய்தியாகும்.

இதேபோன்று ஆஷுரா நாளில் குளித்தவருக்கு நோய் ஏற்படாது, கண்ணில் சுருமா தீட்டியவருக்குக் கண்வலி வராது என்ற இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களும் உள்ளன. இவை அனைத்துமே பலவீனமான ஹதீஸ்களாக இருந்தாலும் அவை உண்மையான ஆஷுராவை மையமாகக் கொண்டவை தான்.

பூ மிதித்தல் தீ கொளுத்துதல்

அண்மையில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதை மேலே பிரசுரித்துள்ளோம். பெயர் தான் பூ மிதித்தல். ஆனால் உண்மையில் அது தீ மிதித்தல் ஆகும். கோயில் கொடைகளில் தீ மிதித்தல் திருவிழா நடைபெறுவது போன்று இந்தப் பஞ்சாவிலும் நடைபெறுகின்றது.

நவராத்திரி என்ற பெயரில் தீபமேற்றுதல் போன்ற தீக்கொளுத்தும் சமாச்சாரங்கள் பஞ்சா தினத்திலும் அரங்கேறுகின்றன.

பஞ்சாவில் சிலம்பாட்டம் ஆடுவோர் மண்ணெண்ணையை வாயில் ஊற்றிக் கொண்டு தீ ஊதுதல், தீ வளையங்களைச் சுற்றுதல் போன்ற சாகசங்களைச் செய்வார்கள்.

சப்பர அணிவகுப்பு

ஆஷுரா பத்தாம் நாளில் பஞ்சா அணிவகுப்பு நடைபெறும். இந்துக் களின் கோயில் திருவிழாவில் நடப்பதைப் போன்று அலங்கரிக்கப் பட்ட சப்பரத்தை, தெருத்தெருவாக இழுத்துச் செல்வது தான் இங்கு பஞ்சா ஊர்வலமாக நடைபெறுகின்றது.

கொலு வைத்தல்

இந்துக்கள் கொலு வைப்பதைப் போல் பஞ்சாவும் பந்தாவாக தனது ஆலயத்தில் அலுவலகத்தில் பரேலவிச பக்தர்கள் பத்து நாள் தரிசனத்திற்காக திறந்து கொலுவாகக் காட்சியளிக்கும்.

தடைக்குள்ளாகும் மாமிசம் – மனைவி

இந்துக்கள் சில நாட்களில் கறி மீன் சாப்பிட மாட்டார்கள். முஹர்ரம் பத்து நாட்களில் பரேலவிச பூசாரிகள் புத்திசாலித்தனமாக மீனை மட்டும் தடுத்துக் கொண்டார்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்வோ கடல் உணவுகள் அனைத்தையும் ஹலாலாக்கி இருக்கின்றான்.

உங்களுக்கும், ஏனைய பயணி களுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.

அல்குர்ஆன் 5:96

இவர்களுக்கு எப்படி இந்தப் பத்து நாட்களும் மீனைத் தடை செய்யும் அதிகாரம் வந்தது?

இது அப்பட்டமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைக்கின்ற அநியாயமும் அக்கிரமும் நிறைந்த செயலாகும். சம்சாரத்தையும் சேர்த்தே தடை செய்கிறார்கள். அதாவது, முஹர்ரம் பத்து நாட்களும் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதையும் தடை செய்கிறார்கள். இவ்வாறு தடை செய்கின்ற அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் உள்ளது.

நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங் களில் அல்லாஹ் தாம்பத்தியத்தைத் தடை செய்கிறான்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2:187

ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது.

அல்குர்ஆன் 2:197

அல்லாஹ் தடை செய்வதற்கு நிகராக இந்தப் பரேலவிகளும் தாம்பத்தியத்தைத் தடை செய்கிறார்கள்.

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

அல்குர்ஆன் 42:21

தனக்கு நிகரானவர்கள் யாரும் இருக்கிறார்களா? என்று இந்த வசனத்தில் அல்லாஹ் சவால் விடுகின் றான். இந்த ஷியா சாட்ஜாத்துகளோ, நாங்கள் இருக்கிறோம் என்று அல்லாஹ்வுடன் சண்டையிடக் களம் கண்டிருக்கின்றனர்.

பஞ்சாவின் போது தங்களுக்கு ஆண் பிள்ளை வேண்டும் என்ற தேட்டம் உள்ளவர்கள் ஆண் உறுப்பைப் போன்று கொளுக்கட்டை செய்து வினியோகிப்பதையும், விளம்புவதையும் பார்க்கிறோம். வெள்ளியில் ஆண்குறி போன்று செய்து அதை பஞ்சாவுக்குக் காணிக்கையாக்கும் நடைமுறையும் உள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தில் ஆபாசம் அறவே இல்லை என்று கூறுகின்றான்.

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும்போது “எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 7:28

அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக, பரேலவிகள் இஸ்லாத்தில் ஆபாசம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

கன்னியரும் காளையரும் பஞ்சா ஊர்வலத்தில் சங்கமிக்கின்றனர்; சந்திக்கின்றனர். பஞ்சாவைப் பார்க்கிறார்களோ இல்லையோ அங்கு வந்திருக்கும் பாவைகளைப் பார்வை களால் மாறி மாறிச் சந்திக்கின்றனர். பெரிய அளவுக்கு விபச்சாரம் எதுவும் இங்கு நடக்கவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி கண்களால் செய்யப்படுகின்ற விபச்சாரத்தைச் செய்கின்றனர்.

இப்படிப் பல்வேறு வகைகளில் ஆஷுரா தினத்தில் நடத்தப்படுகின்ற பஞ்சா ஊர்வலம் பிற மதக் கலாச்சாரத்துடன் முழுமையாக ஒப்பாகின்றது.

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 3512

இந்த ஹதீஸின் அடிப்படையில் இந்தப் பஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிற மதக் கலாச்சாரத்தை ஓர் எள்ளளவு, எள் முனையளவு ஒப்பாகி இருந்தால் கூட அதை மறுத்து விடுவார்கள்.

இதற்கு “தாத்து அன்வாத்’ சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்என்று அதற்குச் சொல்லப்படும்.

நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்துஎன்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங் கள்என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்என்று பதிலளித் தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலி)

நூல்: திர்மிதீ (2106), அஹ்மத் (20892)

ஆயுதங்களைத் தொங்க விடுவதைத் தான் நபித்தோழர்கள் வேண்டுகிறார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இஸ்ரவேல் சமுதாயம் மூஸா நபியிடம் சிலைகளைக் கேட்ட நிகழ்வுடன் ஒப்பிடுகின்றார்கள்.

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!” என்று கேட்டனர். “நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின் றீர்கள்” என்று அவர் கூறினார்.

அவர்கள் எதில் இருக்கிறார் களோ, அது அழியும். அவர்கள் செய்து வந்தவையும் வீணானது.

அல்குர்ஆன் 7:138, 139

இதில் நபி (ஸல்) அவர்கள் எந்த அளவுக்குக் கடுமையான பார்வை பார்க்கின்றார்கள் என்பதைத் தெரிய முடிகின்றது. அந்த அடிப்படையில் இந்தப் பஞ்சா ஒழிக்கப்பட வேண்டும்.

அடுத்து, முஹர்ரம் ஊர்வலம், விநாயகர் ஊர்வலத்தைப் போன்று கலவரங்களை உருவாக்கி விடுகின்றது. 23.10.2015 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலமங்கலத்தில் நடைபெற்ற பஞ்சா ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. விநாயகர் ஊர்வலத்தில் நடப்பது போன்று கலவரங்கள் நடப்பதாலும் இந்தப் பஞ்சா ஊர்வலம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இந்தியாவில் உள்ள சூழ்நிலை கலவர மேகமாகவே உள்ளது. ஒரு சிறு பொறியும் பெருந்தீயாக மாறும் அபாயம் உள்ளது. இந்துத்துவா சக்திகள் சந்து முனை இடை வெளியில் கந்தகப் பொடி தூவி, கலவரத்தீயை மூட்டுவதற்கு அனுதினமும் ஆயத்தமாக இருக் கின்றர். எனவே இதுபோன்ற தேவையற்ற ஊர்வலங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் தற்போது ஆங்காங்கே கலவரத்தீயை மூட்டி வரும் விநாயகர் ஊர்வலத்திற்கு விஷ வித்தாக அமைந்தது இந்தப் பஞ்சா தான். மும்பையில் இந்தப் பஞ்சா ஊர்வலம் படு விமரிசையாக நடைபெறும். அதில் முஸ்லிம்களும் இந்துக்களும் பெருமளவில் பங்கேற்பார்கள்.

இப்படி இந்து, முஸ்லிம் சங்கமம் நடப்பதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத பாலகங்காதரத் திலகர் என்பவர் 1893ல் ஆரம்பித்து வைத்தது தான் விநாயகர் ஊர்வலம்.

ஆக, இன்றைய கலவரத்திற்கு வித்திட்ட வெடி மருந்து இந்தப் பஞ்சா தான். பால கங்காதரத் திலகருக்கு முன்மாதிரியாக அமைந்தது இந்தப் பஞ்சா தான்.

பஞ்சா முடிந்ததும் அதை ஆற்றில் கொண்டு போய்க் கரைப்பதைப் பார்க்கிறோம். அதுபோல் விநாயகர் சிலைகளையும் ஆற்றில் கொண்டு போய் கரைப்பார்கள். அனேக, அதிகமான அனாச்சாரங்கள் இந்து மதத்திலிருந்து முஸ்லிம்கள் காப்பியடித்ததாக இருக்கும். ஆனால் விநாயகர் ஊர்வலமோ பஞ்சா ஊர்வலத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட அனாச்சாரமாகும். எது எப்படியோ இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள்; அனாச்சாரங்கள்.

பஞ்சா என்பது இஸ்லாமியப் பெயரில் பரேலவிகளின் பின்புலத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத் தலையெடுத்த பிறகு மேலப்பாளையம், ஏர்வாடி போன்ற ஊர்களில் எடுக்கப்பட்டு வந்த பஞ்சாக்கள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலே நாம் வெளியிட்டுள்ள பூமிதித்தல் நோட்டீஸ், அடையாளம் தெரியாத ஊர்களில் பஞ்சா இருப்பதைக் காட்டுகின்றது.

இந்தப் பஞ்சா, ஹுஸைன் மவ்லிது போன்ற ஷியாக் கலாச்சாரம் எங்கிருந்தாலும் அவை அழிக்கப்படுகின்ற வரை தவ்ஹீத் ஜமாஅத்தின் பணி ஓயாது. பஞ்சா போன்ற இணை வைப்புக் காரியங்களைப் பாடை ஏற்றுவதற்கு இன்ஷா அல்லாஹ் திருச்சியில் நடைபெறவுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு பாதை வகுக்கும் என்று எதிர்பார்ப்போமாக!

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்  தொடர்: 35

அல்லாஹ்வும் அவ்லியாவும் ஒன்றா?

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

அல்லாஹ் மனிதனுக்கென்று சுயமாக அற்புதம் செய்ய எந்த ஆற்றலையும் கொடுக்கவில்லை. அல்லாஹ் வேறு, மனிதன் வேறு தான். நபிமார்களுக்குக் கூட அல்லாஹ் தான் அற்புதங்களையே வழங்கினான்.

நபிமார்களும் சில நேரங்களில் செய்த தவறுகளுக்காக அல்லாஹ் விடத்தில் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இருக்கும் போது சாதாரண மனிதர்களை எப்படி அவ்லியாக்கள் என்றும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும் அவர்களுடைய கை, கால்கள், செவிப் புலன்கள், பார்வைப் புலன்கள் அனைத்தும் அல்லாஹ்வுடையது என்றும் சொல்ல எப்படி மனது வருகின்றது?

சரி! அல்லாஹ்வின் கையும் அவ்லியாக்களின் கையும் ஒன்று என மேற்கண்ட ஹதீஸிற்கு ஒரு தவறான வியாக்கியானத்தை – விளக்கத்தைக் கொடுக்கிறார்கள் என்றால்  பின்வரும் ஹதீஸிற்கு என்ன விளக்கத்தைக் கொடுப்பார்கள்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய் வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

மேலும் “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

நூல்: முஸ்லிம் 5021

இந்த ஹதீஸையும் இவர்கள் நேரடியாக விளங்குவார்கள் என்றால் பிச்சைக்காரர்கள் அனைவரும் அல்லாஹ்வா? அப்படியானால் அவர்கள் அனைவருக்கும் கப்ரு கட்டுவீர்களா?

அதாவது இந்த ஹதீஸை நேரடியாகப் புரிந்து கொள்வதாக இருந்தால் இவர்களுடைய வாதப்படி நோயாளியாக இருந்தது, பசியாக இருந்தது, தாகமாக இருந்தது அனைவரும் அல்லாஹ் தான். ஏனென்றால் அந்த ஹதீஸிலேயே அல்லாஹ், அவனை நலம் விசாரிப்பது என்னை நலம் விசாரிப்பது போலாகும்; அந்த பிச்சைக்காரனுக்கு உண வளிப்பது எனக்கு உணவளிப்பதாகும்;  அவனுக்கு தாகத்துக்கு நீர் கொடுப்பது எனக்குத் தாகம் தீர்ப்பதாகும் என்று சொல்லிவிட்டான்.

நாம் கேட்பது என்னவென்றால், இதற்கு முன் நாம் சொன்ன ஹதீஸை நீங்கள் நேரடியாக விளங்கியதைப் போன்று இந்த ஹதீஸையும் நீங்கள் நேரடியாக விளங்கிக் கொள்வீர்களா?

அவ்வாறு நீங்கள் இதையும் நேரடியாக விளங்கிக் கொள்வீர்கள் என்றால் உங்களுடைய வாதப்படி அவ்லியாக்களுக்கெல்லாம் மிகப் பெரிய அவ்லியா பிச்சைக்காரர்கள் தான் என்று சொல்வீர்களா?

அப்படியானால் இந்த ஹதீஸை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? அல்லாஹ்விற்கு எதுவும் தேவை யில்லை. அவன் அனைத்துத் தேவைகளை விட்டும் தூய்மையான வன். எந்தத் தேவைகளுமற்றவன்.

ஆக, எனக்கு வழங்கினால் எந்த அளவுக்குக் கூலியை நான் தருவேனோ அந்த அளவுக்கு கூலியை பிச்சைக்காரனுக்கு நீ வழங்கினால் உனக்குத் தருவேன் என்று  நாம் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி விளங்க வேண்டிய விஷயங்களை ஒரு சில ஹதீஸ்களை வைத்துக் கொண்டு வழிகெட்டுப் போவதற்கு ஆதாரம் காட்டுகின்றார்கள்.

அது போன்று,  நபிகளாரை ஒளி என்று அல்லாஹ் சொல்கிறான்.

அந்த வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம், நபிகளார் மதீனாவில் நடந்து சென்றால் அந்தத் தெரு முழுவதும் வெளிச்சமாகி விடும் என்று சொல்வார்கள்.

அல்லாஹ் சொல்லக்கூடிய ஒளிக்கு இதுதான் அர்த்தமா? ஒளி என்றால் கல்வி, ஞானம், நேர்வழி என்று அர்த்தம்.

அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடந்தார்கள் என்று நாம் சொல்வோம். இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம். இருட்டாக இருக்கும் போது எப்படி எதுவும் தெரியாதோ, அது போன்று அறியாமையிலும் ஒன்றும் தெரியாத வர்களாக இருந்தார்கள் என்றுதான்.

அறிவு என்றால் வெளிச்சம் என்று சொல்வார்கள். அதாவது வெளிச்சம் என்றால் எப்படி எல்லாம் தெரிகிறதோ அது போன்று கல்வி ஞானம் இருந்தால் எல்லாம் தெரியும் என்று அர்த்தம்.

குர்ஆனை அல்லாஹ் (நூர்) வெளிச்சம் என்று சொல்கிறான். அப்படியானால் இந்த வசனத்தை நபிகளாருக்கு சொன்ன விளக்கத்தைப் போன்று இதற்கும் சொல்வீர்களா? குர்ஆனைத் திறந்தால் இருட்டாக இருப்பது எல்லாம் வெளிச்சமாகும். நம்முடைய வீடு, அறைகளில் நாம் குர்ஆனை திறந்தால் போதும் வெளிச்சமாகி விடும் என்று சொல்வீர்களா?

அப்படியானால் இனிமேல் பள்ளிவாசலில் லைட் பல்பு எதுவும் போட வேண்டாம். பள்ளிவாசல்களில் ஒரு பத்து குர்ஆனைக் கட்டி தொங்கப் போடுங்கள். நன்றாக வெளிச்சமாகிவிடும். கரன்ட் பில்லும் கட்ட தேவையில்லை. மின்சாரத்தையும் சிக்கனமாக்கலாம்.

இப்படிச் சொன்னால் அறிவுடைய யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அனைத்தையும் நேரடியாகத் தான் விளங்க வேண்டும் என்று சொல்கின்ற நீங்கள் தான் ஏற்றுக் கொள்வீர்களா?

குர்ஆனை அல்லாஹ் ஒளி என்று குறிப்பிடுவதற்கு விளக்கம் என்னவென்றால், அதில் உள்ள விஷயங்கள் ஒளியை, வெளிச்சத்தை ஏற்படுத்துவதைப் போன்று நமக்கு நேர்வழி காட்டும் என்பதுதான்.

நபிகள் நாயகம் (ஸல்) தொழும் போது நான் குறுக்கே படுத்து உறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது என் காலைத் தமது விரலால் தொடுவார்கள். உடனே என் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்று வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லைஎன்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 513, 519, 1209

நபிகளார் ஒளி என்பதற்கு நீங்கள் கொடுக்கின்ற விளக்கம் சரியென்றால், அவர்களுடைய வீட்டில் விளக்கு எரியாமல் ஏன் இருட்டாக இருந்தது? நபிகளார் தொழும் போது குறுக்கே படுத்துக் கிடந்த ஆயிஷா (ரலி) அவர்களுடைய காலில் கையால் குத்த வேண்டும்?

இவ்வாறு இவர்கள் இலக்கியமாக சொல்லப்பட்ட விஷயங்களையெல்லாம் நேரடி அர்த்தம் கொடுத்து தானும் வழிகெட்டு மக்களை வழி கெடுக்கின்றார்கள். நேரடியான விஷயங்களை நாம் பல எடுத்துக் காட்டியிருக்கின்றோம். உவமையாகச் சொல்லப்பட்ட சில ஹதீஸ்களை வைத்துக் கொண்டு இப்படித் தவறாக விளங்கியிருக்கின்றனர்.

வானளாவிய மரம் என்று சொல்வோம். அப்படி ஒரு மரம் உண்டா? அதே போன்று விண்ணை முட்டும் கோபுரம் என்று சொல்வோம். அது என்ன வானத்தை முட்டிக் கொண்டா இருக்கிறது? இதை நாம் எவ்வாறு உவமையாக விளங்கிக் கொள்வோமா அதை போன்று மேற்கூறப்பட்ட ஹதீஸ்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதிலும் மேற்கண்ட ஹதீஸில் நான் கையாக மாறிவிடுவேன். காலாக மாறிவிடுவேன் என்று சொல்லிவிட்டு  கடைசியாக முடிக்கும் போது, “என்னிடம் கேட்டால் அவனுக்கு நான் கொடுப்பேன்” என்று அல்லாஹ் முடிக்கின்றான்.

இவனுடைய கை கால்கள் அல்லாஹ்வுடைய கை கால்களாக மாறிவிடும் என்றால் ஏன் அல்லாஹ் விடத்தில் கேட்க வேண்டும்? அல்லாஹ் ஏன் அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும்?

கடைசியில் அந்த வார்த்தையைச் சொன்னதிலிருந்தே அல்லாஹ் வேறு; மனிதன் வேறு என்று ஆகிவிட்டதா இல்லையா?

நபிமார்கள் அல்லாதவர்கள் மூலமாகவும் சில அற்புதங்கள் நிகழும். வித்தியாசம் என்னவென்றால், நபிமார்களிடமிருந்து நிகழும் அற்புதத்தை  அவர்கள் மூலமாக அல்லாஹ் செய்ய வைப்பான். மற்றவர்களிடம் நிகழக்கூடிய அற்புதங்களெல்லாம் அவர்களிடத்தில் அல்லாஹ்வே செய்வானே தவிர அவர்களாக அறிவித்து, முடிவெடுத்து செய்வதாக இருக்காது. இந்த மாதிரியான அற்புதங்கள் எல்லா மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்க வாய்ப்பிருக் கின்றது என்பதை இதுவரை பார்த்தோம்.

இந்த அற்புதங்கள் நல்லவர் களுக்கு மாத்திரமல்லாமல் கெட்டவர்களுக்கும் நடக்குமா என்றால் கெட்டவர்களுக்கும் நடக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்னாலும் சரி! பின்னாலும் சரி! கெட்டவர்களுக்கும் அற்புதங்கள் நடக்கும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

இணைவைப்பை துடைத்தெறிவோம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

சமுதாயத்தின் பேரியக்கமாகத் திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தூய்மையான முறையில் மார்க்க மற்றும் சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. அதன் வரிசையில், வரும் 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ஆம் தேதி அன்று திருச்சியில் இணை வைப்புக்கு எதிராக, ஷிர்க் ஒழிப்பு மாநாட்டினை நடத்துவதாக அறிவிப்பு செய்துள்ளது.

இணை வைப்பு குறித்து இஸ்லாம் கூறும் செய்திகளை அறிந்து, அதை முறையாக விளங்கி இருப்பவர்களுக்கு இந்த மாநாட்டின் முக்கியத்துவம் நன்கு புரிந்து இருக்கும். காரணம், ஷிர்க் எனும் இணை வைப்பு சம்பந்தமாக அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இது குறித்து கணக்கில்லா செய்திகள் இருக்கின்றன.

இருப்பினும், இன்னும் நிறைய மக்கள் இதனை முழுமையாக அறியாமலும் சரியாக விளங்காமலும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இணை வைப்பு குறித்து சில தகவல்களை சுருக்கமாக இந்தக் கட்டுரையில் காண்போம்.

இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பு

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. இறைவன் ஒருவனைத் தவிர வேறு எந்த இறைவனும் இல்லை என்பது தான் இஸ்லாம். லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் திருக் கலிமாவின் மூலம் நாம் இதைப் புரிந்து கொள்ள முடியும். இதையே இன்னொரு கோணத்தில், அல்லாஹ்வை வணங்குவது மட்டும் இஸ்லாம் அல்ல; அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இஸ்லாம்.

இந்த வகையில், இணைவைப்பு என்பது எந்த வடிவத்தில் இருப்பினும் அது ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கு எதிரான, விரோதமான காரியம். இணைவைப்பு இல்லாமல் இருப்பதே தூய்மையான இஸ்லாமிய மார்க்கம் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்கு விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன்வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, “அல்லாஹ்வின் துதரே! “ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், “ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப் படுவதை நம்புவதும் ஆகும்என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! “இஸ்லாம்‘ (அடி பணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்கு வதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காமல் இருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடைமையான ஸக்காத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),

நூல்: புஹாரி (4777)

ஒருவர், அல்லாஹ்வையும் வணங் குகிறார்; கல்லையும் வணங்குகிறார். அவரை இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்ல மாட்டோம். அதுபோலவே ஒருவர் இறந்த மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு தர்ஹா கட்டி வணங்குவது மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார் என்றால், அவர் இஸ்லாத்தில் நிலையாக, சரியாக இல்லை என்பதே உண்மை.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம், அதையே பின்பற்றுகிறோம் என்று சொல்பவர்கள் யாராக இருப்பினும், முதலில் அவர்கள் ஷிர்க்கான காரியங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், அவர் இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்வதற்கும், பெருமிதம் கொள்வதற்கும் கடுகளவும் தகுதி கிடையாது என்பதே மார்க்கத்தின் பகிரங்கமான நிலைப்பாடு.

ஈமானை அழிக்கும் இணைவைப்பு

முஃமின்கள் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக் கூடாது? என்பது குறித்து திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன்படி நம்பிக்கையாளர்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம். அதற்கு மாறாக செயல்படுவது, இறை நம்பிக்கையின் உறுதியை வலிமையைத் தகர்த்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவேதான் மார்க்கம் எச்சரிக்கும் காரியங்களை விட்டும் விலகிவிடுமாறு நபிகளார் தமது தோழர்களுக்கு அறிவுரை சொன்னார்கள். அவைகளை விட்டுவிடும்படி அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அந்தக் காரியங்களுள் முதன்மையான ஒன்றாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இணைவைப்பைக் குறிப்பிட்டதை நாமெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(அகபா இரவில்) தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “வாருங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டீர்கள் என்றும், உங்கள் தரப்பிலிருந்து நீங்களே இட்டுக் கட்டும் அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எனக்கு நல்ல விஷயங்களில் மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள். உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்சொன்ன குற்றங் களில்) எதையேனும் ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலேயே (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிக்கப்பட்டு விட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகி விடும். இவற்றில் எதையேனும் ஒருவர் செய்து அல்லாஹ் அவரது  குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்து விட்டால் (அவரது மறுமை நிலை குறித்த) அவரது விவகாரம் அல்லாஹ்விடம் உண்டு. (மறுமை யில்) அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்என்று சொன்னார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அவற்றுக்காக உறுதிமொழி கொடுத்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி)

நூல்: புஹாரி (3892)

இணைவைப்பு என்பது ஈமானுக்கு எதிரானது என்பதை மேலிருக்கும் செய்தி மூலம் விளங்க இயலும். எனவேதான், ஒருபுறம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், மறுபுறம் இணைவைப்பு தெய்வங்களை நம்பிக் கொண்டும் இருந்த மக்கத்து மக்களை இணைவைப்பவர்கள், காஃபிர்கள் என்று அல்லாஹ் திருமறையில் கடுமையாகக் கண்டிக்கிறான்.

அந்த மக்களிடம் இருந்த அதே நிலையை இன்றைய மக்களிடமும் பார்க்க முடிகிறது. அல்லாஹ் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்குப் பதிலாக, இறந்தவர்கள், கொடிமரங்கள் போன்றவற்றிடம் கையேந்தி ஈமானை இழக்கும் காரியங்களைக் கண்மூடித்தனமாகச் செய்கிறார்கள். பின்வரும் வசனத்தைப் படித்தாவது இணை வைக்கும் மக்கள் மனம் திருந்த வேண்டும், தூய்மையான இறைநம்பிக்கையின் பக்கம் மீள வேண்டும்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர் களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்று கூறுவார்கள். “அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 39:38)

இணைவைப்பு என்பது உரிமை மீறல்

அல்லாஹ் நம்மைப் படைத்ததோடு வெறுமனே விட்டுவிடவில்லை. நமக்குத் தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறான். அன்போடும் அருளோடும் நம்மைப் பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய இறைவனுக்கு நன்றி செலுத்துவது நமது கடமை. தொழுகை, நோன்பு, பிரார்த்தனை என்று மார்க்கம் கூறும் அனைத்து விதமான வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் அவன் மட்டுமே உரிமையானவன். இந்நிலையில், அவனுக்குக் கொடுக்க வேண்டிய இந்த உரிமையை மற்றவர்களுக்குக் கொடுப்பது பகிரங்கமான வரம்பு மீறல். இறந்து போனவர்களிடம் பிரார்த்தனை செய்வது கோரிக்கை வைப்பது, மன்றாடுவது அனைத்துமே அல்லாஹ்வுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையைப் பாழ்படுத்தும் பயங்கர மான காரியம்; கொச்சைப்படுத்தும் கேவலமான செயல்.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந் திருந்தேன். அப்போது அவர்கள், “முஆதே!என்று அழைத்தார்கள். நான், “இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)என்று சொன்னேன். பிறகு இதைப் போன்றே மூன்று முறை அழைத்துவிட்டு, “மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று நீ  அறிவாயா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை (எனக்குத் தெரியாது)என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால், மக்கள் அவனையே வணங்கிட வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணைவைக்கக் கூடாதுஎன்றார்கள். பிறகு சிறிது தூரம் சென்றபின் “முஆதே!என்று அழைத்தார்கள். நான், “இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)என்று சொன்னேன். “அவ்வாறு செயல்படும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: புஹாரி (6267)

மிகப்பெரும் அநியாயம் மாபெரும் வழிகேடு

நாம் வாழும் சமுதாயத்தில் அநியாயங்களுக்குப் பஞ்சமில்லை எனுமளவிற்கு எண்ணற்ற காரியங்கள் நடக்கின்றன. நாடெங்கும் விதவிதமான வழிகேடான காரியங்கள் பரவிக் கிடக்கின்றன. இவைகளுள் மிகவும் உச்சகட்டமானது, இறைவனுக்கு இணைவைக்கும் காரியங்கள் ஆகும்.

நேர்வழியில் நிலைத்து இருக்க வேண்டும்; வழிகேட்டில் விழுந்து விடக் கூடாது; அநியாயங்களை செய்து விடக் கூடாது என்று நினைப்பவர்கள் முதலில் இணைவைப்பு காரியங்களை தூக்கியெறிய வேண்டும். காரணம், படைத்தவனுடைய இடத்தில் படைப் பினங்களை வைத்து வழிபடுவது போன்ற மிகப்பெரும் அநியாயம். மாபெரும் வழிகேடு வேறெதுவும் இல்லை.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

(திருக்குர்ஆன் 4:116)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித் தல் மகத்தான அநீதியாகும்என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

(திருக்குர்ஆன் 31:13)

மன்னிப்பே இல்லாத பெரும்பாவம்

மனிதர்கள் செய்யக் கூடாத பாவங்களை இஸ்லாம் மிக அழகாகத் தெளிவுபடுத்தி இருக்கிறது. அவை அனைத்தும் தனிமனிதனையும் சமுதாயத்தையும் நாசப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றைச் செய்பவர்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

வட்டி, வரதட்சணை, மோசடி, திருட்டு என்று பாவங்களை பெரும் பட்டியல் போடலாம். இருந்தாலும், இவைகளைக் காட்டிலும் மிகவும் பாரதூரமான பெரும்பாவம் இணை கற்பித்தலாகும். காரணம், மற்ற மற்ற பாவங்களை அல்லாஹ் நாடினால் மன்னித்துவிடுவான். ஆனால். இணைவைப்பான செயல்களை அல்லாஹ் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் மாட்டான். அதை மன்னிக்கவும் மாட்டான்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(திருக்குர்ஆன் 4:48)

அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது   தான் (பெரும் பாவம்)என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புஹாரி (4761)

(ஒரு முறை) “பெரும் பாவங் களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங் கள்)என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத்  துன்பம் தருவதும் (தான் அவை)என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்) தான்என்று கூறினார்கள். “நிறுத்திக் கொள்ளக் கூடாதாஎன்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புஹாரி (2654)

இணை கற்பித்தால் நல்லறங்கள் அழியும்

எந்தவொரு நல்ல செயலையும் மிச்சம் வைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் மார்க்கம் சொல்லிவிட்டது. இப்படியிருக்க, தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற மிகச் சில காரியங்களையே நாம் செய்து கொண்டிருக்கிறோம். கடலளவு இருக்கும் மார்க்கத்தில் கையளவு காரியங்களைக் கூட நாம் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பது இல்லை. இருப்பினும், நமது அமல்கள் அனைத்தும் அல்லாஹ் வினால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனும் ஆவல் அனைவருக்கும் இருக்கிறது.

இந்நிலையில், நாம் செய்கிற காரியங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் எனில் கண்டிப்பாக இணைவைப்புக் காரியங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும். தாயத்து கட்டுவது, தகடு மாட்டுவது என்று இணைவைப்புகளைச் செய்து கொண்டு ஒருவர் எவ்வளவுதான் சிறப்பான அமல்களைச் செய்தாலும் அவை வீணாகி விடும். அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாமல், நன்மை கிடைக்காமல் அழிந்து போய்விடும். இதோ அல்லாஹ் எச்சரிப்பதைப் பாருங்கள்.

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(திருக்குர்ஆன் 39: 66)

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(திருக்குர்ஆன் 6:88)

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களை விட்டும் இணை கற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணை வைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5708)

இறைச் செய்தியை போதித்து அதன்படி வாழ்ந்து காட்டும் நபிமார்களாக இருந்தாலும் இணை வைத்து விட்டால் அவர்களது அனைத்து நல்லறங்களும் பாழாகி விடும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான். இப்படியிருக்க, சாதாரண மக்களாக இருக்கும் நமது நிலை என்னவாகும் சிந்தித்து பாருங்கள். பல்வேறு சிரமங்கள், தியாகங்களுக்கு மத்தியில் குறைவான அமல்கள் செய்து அதற்கும் கூட நன்மை கிடைக்காத நிலையில் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. இனியாவது ஜோசியம், சகுனம் என்று இணைவைப்பில் மூழ்கி இருப்பவர்கள் பாவ மன்னிப்பு கேட்டுத் திருந்த வேண்டும். இதுவே ஏகத்துவவாதிகளின் கோரிக்கை.

இணை கற்பித்தால் நிரந்தர நரகம்

இந்த உலக வாழ்க்கை என்பது அற்பமானது, நிரந்தரம் அற்றது. மறுமை வாழ்க்கை மட்டுமே நிரந்தரமானது. அதிலும், நரக வாழ்க்கையோ கொடூரமானது; கொடுமையானது. சொர்க்க வாழ்க்கையோ கண்ணியமானது; இனிமையானது.

எனவே தான் மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக நாமெல்லாம் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம். எப்படியும் வாழலாம் என்று சொல்லும் மதங்களைப் புறக்கணித்து விட்டு, இப்படித் தான் வாழ வேண்டும் என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு களைக் கொண்டிருக்கும் மார்க்கத்திலே இருக்கிறோம்.

இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், இணைவைப்பை விட்டும் நீங்கி இருக்க வேண்டும். ஏனெனில், இணை வைப்பவர்கள் தண்டனை பெற்ற பிறகு சொர்க்கம் போக முடியாது. இவர்கள் ஒருபோதும் சொர்க்கம் செல்லாமல் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 9:17)

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(திருக்குர்ஆன் 98:6)

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனு மாகிய அல்லாஹ்வை வணங்குங் கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லைஎன்றே மஸீஹ் கூறினார்.

(திருக்குர்ஆன் 5:72)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் வந்து, “(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (151)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப் படுபவரிடம், “பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், “ஆம்என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், “நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்த போது இதை விட இலேசான ஒன்றை -எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமல் இருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லைஎன்று கூறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (3334)

இணைப்வைப்பவர்கள் இழக்கும் பாக்கியம்

ஏக இறைவன் கொடுத்திருக்கும் பகுத்தறிவு எனும் பொக்கிஷத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதே இணை வைப்பிலே வீழ்வதற்கு முக்கியக் காரணம்.

படைத்தவனின் மகத்துவத்தை, மாண்பை மறந்துவிட்டு அவனை விட அற்பமான படைப்பினங்களை மிகவும் மரியாதையாக, கண்ணியமாக நினைக்கிறார்கள். இவ்வாறு கொஞ்சமும் யோசிக்காமல் இணை வைப்பு வாசலில் நிற்பவர்களுக்கு ஈருலகிலும் பல இழப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, இங்கு வாழும் போதே நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அல்லாஹ் பல்வேறு வாய்ப்புகளை வைத்திருக்கிறான். இந்தப் பயன்கள் இணைவைக்கும் மக்களுக்கு அறவே கிடைக்காது. இவர்களின் குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கு மலக்குகள் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்; பாவமன்னிப்புத் தேட மாட்டார்கள். இன்னும் சொல்வதெனில், மறுமை நாளிலே எந்த விஷயத்திலும் இவர்களுக்காக நபிகளார் உட்பட யாரும் பரிந்துரை செய்ய மாட்டார்கள்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப் படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணை வைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது இவ்விருவரும் சமாதான மாகிக் கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்என்று கூறப்படுகிறது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: முஸ்லிம் (5014)

ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்கு வேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன். யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்கு கிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச் செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர் கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5215)

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு; எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத் தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்(338)

துரும்பளவும் பயனளிக்காத இணைவைப்பு

அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! மறுமை நாளில் அவனிடம் இருந்து இணை வைக்கும் மக்கள் எந்த வகையிலும் தப்பிக்க இயலாது. இங்கு வாழும்போது, எங்கெல்லாம் உதவி தேடிக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருந்தார்களோ அந்த மனிதர்கள், பொருட்கள் என்று எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது.

இக்கட்டான நேரத்தில் உதவி செய்வார்கள், பரிந்துரை செய்வார்கள், பாதுகாப்பு தருவார்கள் என்று முஷ்ரிக்குகளால் தப்பும் தவறுமாக எதிர்பார்க்கப்படும் எவரும் அவர் களுக்குக் கைகொடுக்க மாட்டார்கள். அல்வியாக்கள், மகான்கள், ஷேக் மார்கள் என்று எவரும் காப்பாற்ற வரமாட்டார்கள்; காணாமல் போய்விடுவார்கள்.

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!என்று கூறுவோம். அப்போது அவர் களிடையே பிளவை ஏற்படுத்து வோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லைஎன்று அவர் களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்என்றும் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன் 10:28)

இணை கற்பித்தோர் தங்கள் தெய்வங்களைக் காணும் போது “எங்கள் இறைவா! அவர்களே எங்கள் தெய்வங்கள். உன்னையன்றி அவர்களையே பிரார்த்தித்து வந்தோம்என்று கூறுவார்கள். “நீங்கள் பொய் சொல்கிறீர்கள்என்று அவர்கள் மறுமொழி கூறுவார்கள். அன்று அல்லாஹ்விடம் சரணாகதியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

(திருக்குர்ஆன் 16:86, 87)

இவை மட்டுமல்ல, அல்லாஹ் விற்கு இணை கற்பிப்பது குறித்தும், அதனால் நேரும் பாதிப்புகள் குறித்தும் இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

ஷிர்க் என்பது இஸ்லாம், ஈமான், மறுமை வெற்றி ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே தான், இதற்கு எதிராக மாநாடு நடத்துவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

பொதுவாகவே, அல்லாஹ்வை தூய்மையான முறையில் வணங்க வேண்டும்; அவனுக்கு எவ்வகை யிலும் இணைக் கற்பிக்கக் கூடாது எனும் அடிப்படையில் இந்த ஜமாஅத் ஆரம்பம் முதல் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. இந்தப் பணியை வீரியப்படுத்தும் வகையில் இந்த மாநாடு திட்டமிடப் பட்டுள்ளது.

நாம் மட்டுமல்ல! நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து மக்களும் ஏக இறைவனை மட்டும் வணங்கு பவர்களாக வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெற வேண்டும். இதற்காக நாம் தன்னலம் பாராமல் இயன்றளவு உழைக்க வேண்டும். இந்தத் தூய இலக்கை மையமாக வைத்து நடத்தவிருக்கும் இந்த மாநாடு வெற்றியடைய அல்லாஹ் உதவி புரிவானாக!

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?               தொடர்: 22

பலவீனமான ஹதீஸைப் பின்பற்றி அமல் செய்யலாமா?

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? என்ற தலைப்பிட்டு விட்டு, பலவீனமான ஹதீஸ் பற்றிய ஆய்வுக்குள் நூலாசிரியர் மக்ராவி சென்றதற்குக் காரணம், இஹ்யாவில் பலவீனமான ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன.

அமல்களின் சிறப்பு பற்றிய ஹதீஸ்களைப் பொறுத்தவரை அது ஆதாரப்பூர்வமான செய்தியா? அல்லது பலவீனமான செய்தியா? என்று பார்க்கத் தேவையில்லை, அதைப் பின்பற்றி அமல் செய்யலாம் என்ற கருத்து ஆரம்ப காலம் முதல் பரவலாக இருந்து வருகின்றது. இந்தக் கருத்தை மையமாக வைத்தே கஸ்ஸாலி தனது இஹ்யாவில் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்.

இஹ்யாவில் உள்ள மார்க்கத்திற்கு முரணான, பலவீனமான செய்திகளை விமர்சிப்பதற்கு முன்னால் அமல்கள் விஷயத்தில் பலவீனமான ஹதீஸைப் பின்பற்றலாம் என்ற தவறான நம்பிக்கையை உடைத்தாக வேண்டும். எனவே தான் இதைப் பற்றிய அறிஞர்களின் கருத்தை இங்கு குறிப்பிட்டு விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் கூறுவதாவது:

பலவீனமான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.

 1. பலவீனம் மிகக் கடுமையானதாக இருக்கக் கூடாது. இந்த நிபந்தனையின்படி, பொய்யான அறிவிப்பாளர் தனித்து அறிவித்த ஹதீஸ், பொய்யர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ், மிக அதிகமாக தவறான ஹதீஸ்களையே அறிவிக்கும் அறிவிப்பாளரின் ஹதீஸ் ஆகியவை மிகவும் பலவீனமான ஹதீஸ் என்ற வரையறைக்கு உட்பட்டதாகும்.
 2. அந்த ஹதீஸ் பொதுவான அடிப்படையின் கீழ் நுழைந்திருக்க வேண்டும். இதன்படி எந்த ஓர் அடிப்படையில் இல்லாத ஹதீஸை அமல் செய்வதற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
 3. ஒரு பலவீனமான ஹதீஸை வைத்து அமல் செய்கின்ற போது அது உறுதியான செய்தி என்று நம்பிவிடக் கூடாது. அவ்வாறு நம்பினால் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு ஹதீஸை, அவர்கள் சொன்னதாகக் கூறி அவர்கள் மீது பொய் சொன்ன பாவத்தில் விழுந்து விடுவோம்.

இது அமல்களின் சிறப்பு விஷயத்தில் பலவீனமான ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தெரிவிக்கின்ற விளக்கமாகும்.

இப்படிக் கூறுவதற்கு இப்னு ஹஜர் எந்த ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை. பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யலாம் என்ற கருத்துடைய யாரும் அதற்கான தக்க ஆதாரத்தைக் காட்டாமல் அவர்களின் சுய கருத்தாகவே கூறுகின்றனர்.

பலவீனமான ஹதீஸ் என்பதன் கருத்து, அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் சொல்லி இருப்பார்களா என்பதில் சந்தேகம் உள்ளது என்பது தான். எல்லா பலவீனமான ஹதீஸ்களிலும் இந்தச் சந்தேகம் உள்ளது.

ஹதீஸ்களில் கடுமையான பலவீனம், இலேசான பலவீனம் என்று பிரித்து, இலேசான பலவீனம் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை அமல்களின் சிறப்பு மற்றும் எச்சரிக்கை விஷயங்களில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிலும் அறிஞர்களில் ஒரு சாரார் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த நிலைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது.

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவையாகும்.

(அல்குர்ஆன் 17:36)

பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யக் கூடாது என்பதற்கு இவ்வசனம் போதிய ஆதாரமாக உள்ளது.

சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதை நோக்கிச் செல் என்ற நபிமொழியும் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யக் கூடாது என்று சொல்லும் போது இதற்கு மாற்றமாகவும் எவ்வித ஆதாரம் இல்லாமலும் அறிஞர்கள் கூறியதை நாம் ஏற்கக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இலலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.

உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)

நூல்: திர்மிதீ 2442

நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப் பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும் ஆதாரப்பூர்வமான ஹதீசும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றி அமல் செய்யக் கூடாது. அது குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானதாகும்.

அடைக்கலம் கொடுத்தவர் இஸ்லாத்தில் ஐக்கியமான வரலாறு

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவில் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். இதிலிருந்து தங்களையும் தங்கள் கொள்கையையும் காத்துக் கொள்வதற்காக அபீசீனியாவிற்கு ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.

அப்போது அவர்களுக்கு அங்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது  என்று சூழ்ச்சி செய்து, தடுப்பதற்காக மக்காவின் இணை வைப்பாளர்கள் ஒரு குழுவினரை அபீசீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் நஜ்ஜாஷி மன்னர், மக்கா இணை வைப்பாளர்களின் கோரிக்கையை நிராகரித்து முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னர் முஸ்லிம்களின் இந்த ஹிஜ்ரத் அமைந்ததால் இது முதல் ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த முதல் ஹிஜ்ரத் தொடர்பாக முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்றுள்ள செய்தியைப் பார்ப்போம்.

அபீசீனியாவிற்கு நபித்தோழர்கள் அடைக்கலம் சென்றதும், மக்கத்துக் காஃபிர்கள் அபீசீனியாவிற்கு அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ இப்னுல் முகீரா அல்மக்ஸும்மிய்யி என்பவரையும், அம்ருப்னுல் ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மிய்யி என்பவரையும் தூதுக்குழுவாக அனுப்பி வைக்கிறார்கள். மக்காவில் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அபிசீனியா வரை சென்றும் தொந்தரவு கொடுத்தனர்

இந்தக் காஃபிர்கள். கீழுள்ள அதிகாரிகளுக்கு காணிக்கைகளை கொடுத்து முன்கூட்டியே அவர்களை சரிக்கட்டி வைத்துக் கொண்டு, பிறகு அங்குள்ள மன்னரிடம் பேசுவதாகவும், காணிக்கைகள் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நமக்குச் சாதகமாகப் பேசுவார்கள் என்பதுதான் இந்த மக்கத்து காஃபிர்களின் திட்டம். அதேபோன்று கீழுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் காணிக்கைகள் கொடுக்கப்பட்டு, அவர்களும் நீங்கள் அரசவையில் உங்களது கோரிக்கை களை வையுங்கள். நாங்கள் அதற்குரிய ஆதரவைத் தெரிவிக்கிறோம் என்றும் பேசி முடிக்கப்பட்டது.

பிறகு அரசரிடம் பேசுகிறார்கள். மன்னரே! எங்களது ஊரிலிருந்து சில முட்டாள் சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களது சமூக மார்க்கத்தையும் விட்டு விட்டார்கள். உங்களது மார்க்கத்திலும் சேராமல் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பிரிவினர் உங்களது ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்று அவர்களிடம் தூபம் போடுகிறார்கள் இந்த மக்கத்து காஃபிர்கள்.

இவர்கள் புதிதாக ஒரு மார்க்கத்தைக் கொண்டு வந்துள் ளார்கள். அதனை நாங்களும் அறியவில்லை. உங்களுக்கும் அது தெரியாது என்றும் இவர்கள் நம்மைக் கெடுக்க வந்திருக்கிறார்கள் என்று நஜ்ஜாஷி மன்னரிடம் சொல்லிவிட்டு, நாங்கள் இவர்களின் சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் தான் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மற்றபடி அந்நியர்கள் அல்ல. வெறுத்துப் போய் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்று கூறினர். அங்கு சபையிலிருந்த அதிகாரிகளும் அப்படியே மொழிந்தனர்.

மக்கத்துக் காஃபிர்கள் நம்மை இங்கிருந்து கொண்டு செல்வதற்காக மன்னரிடம் பேசியிருக்கிறார்கள் என்கிற இந்தச் செய்தி ஜஃபர் பின் அபீதாலிபுக்குக் கிடைக்கிறது. மன்னர் நம்மைக் கூப்பிட விடுவார். மன்னர் நம்மைத் திருப்பியனுப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜஃபர் பின் அபீதாலிப் தான் இந்தக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்கிறார். மன்னர் நம்மிடம் விசாரணை செய்தால் என்ன சொல்வது? என்ற அவர் தலைமையில் ஆலோசனை நடக்கிறது. அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள், எதையெல்லாம் இதுவரை நாம் சொல்லிக் கொண்டிருந்தோமோ அதையே இங்கேயும் சொல்வோம். அதில் ஒளிவு மறைவு தேவையில்லை. என்ன விளைவுகள் வந்தாலும் பரவாயில்லை என்கிறார்.

மார்க்கத்தில் இரகசியம் என்பது கிடையாது. அவ்வாறு நபியவர்கள் நம்மை வழி நடத்தவில்லை என்று முடிவு செய்தார்கள்.

இதுவரை நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோமோ அதைத்தான் நாம் அல்லாஹ்வின் மீதாணையாகச் சொல்வோம். நபியவர்கள் நமக்கு எதை ஏவினார்களோ அதைச் சொல்வோம். இந்த நாட்டின் கொள்கைக்கு மாற்றமாக இருந்தாலும் சரி! அல்லாஹ்வைத்தான் வணங்கு கிறோம். சிலைகளைத் தான் எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு, என்ன நடந்தாலும் பரவாயில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள்.

அதே போன்று  மன்னர்  நபித்தோழர்களை அழைத்து  விசாரிக்கிறார்.

மன்னரே! நாங்கள் எதையும் அறியாத மக்களாக இருந்தோம்.

சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம்.

செத்த பிணங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்,

அசிங்கமான, மானக்கேடான காரியங்களைச் செய்து கொண்டு இருந்தோம்.

சொந்த பந்தங்களான உறவுகளைப் பகைத்துக் கொண்டிருந்தோம்,

அண்டை வீட்டார்களுக்குத் தொந்தரவு செய்து வந்தோம்,

பலமானவர்கள் பலவீனமான வர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் எங்களுக்கு ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பினான். அவரது பாரம்பரியத்தை நாங்கள் அறிவோம். அவரது உண்மை யையும் நாங்கள் அறிவோம். அவரது நேர்மையும் பரிசுத்தமான வாழ்க்கையும் எங்களுக்குத் தெரியும்.

அவர் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என எங் களுக்குச் சொன்னார். மற்றவைகளை விடச் சொன்னார்.

மரம், செடி, கொடிகள், சிலைகள் போன்ற எதையும் வணங்கக் கூடாது என்று சொன்னார்.

உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார்.

அமானிதத்தைக் காப்பாற்றச் சொல்கிறார்.

சொந்த பந்தங்களைச் சேர்த்து வாழவேண்டும் என்றார்.

அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஏவினார்.

இறைவனால் தடை செய்யப் பட்டதைத் தவிர்க்கச் சொன்னார்.

உயிரைக் கொலை செய்யக் கூடாது என்றார்.

அசிங்கமான காரியத்தைத் தடுத்தார்.

பொய் சொல்லக் கூடாது என்றார்.

அனாதை சொத்தைச் சாப்பிடக் கூடாது என்றார்.

பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்று எங்களுக்கு ஏவினார்.

தொழச் சொன்னார்.

ஜகாத் கொடுக்கச் சொன்னார்.

நோன்பு வைக்கச் சொன்னார்

இவ்வாறு ஜஃபர் பின் அபீதாலிப்  (ரலி) அவர்கள் அப்படியே பட்டியல் போட்டு பேசுகிறார்கள்.

இவ்வளவும் சொன்னார் என்று மன்னரிடம் அவரை இஸ்லாத்திற்கு அழைக்கிற அளவுக்கு ஒரு இஸ்லாமியப் பிரச்சாரத்தையே செய்து விட்டார். இதையெல்லாம் நாங்கள் நம்பியதாலும், செயல்படுத்தியதாலும் எங்களை இந்த மக்காவாசிகளான காஃபிர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டனர். அதனால்தான் நாங்கள் எங்கள் ஊரிலிருந்து உங்கள் நாட்டுக்கு வந்துவிட்டோம். உங்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம். உங்களது அடைக்கலத்திற்குத் தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். மன்னரே! உங்களது ஆட்சியில் எங்களுக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம் என்று கூறினார்கள்.

இப்படியெல்லாம் நஜ்ஜாஷி மன்னரிடம் ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் பேசியதும் அவர், “மக்காவிலிருந்து வந்தவர்களிடம் நான் விசாரித்து விட்டுத்தான் சொல்ல முடியும்’ என்று சொல்லி விடுகிறார். உங்களிடம் இவர்களை ஒப்படைக்க முடியாது என்று மறுத்து விடுகிறார்.

மறுநாள் மன்னரிடம் மக்கா காஃபிர்கள், “நீங்கள் நம்பும் ஈஸாவைப் பற்றி இவர்களிடம் விசாரியுங்கள்’ என்று கேட்டுக் கொள்கிறார்கள். அது போன்றே, “ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று மன்னர் நஜ்ஜாஷி நபித்தோழர்களிடம் கேட்டதற்கு,

ஈஸா என்பவர் அல்லாஹ்வின் தூதர்,

அல்லாஹ்வின் மகனாக அவர் இல்லை,

அல்லாஹ்வின் வார்த்தையினால் உருவானவர்,

அவர் அல்லாஹ்வின் மார்க் கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்.

என்று சொன்னார்.

உடனே நஜ்ஜாஷி மன்னர், உங்கள் நபி முஹம்மதுக்கு இறைவனிட மிருந்து வேதம் வருவதாகச் சொன்னீர்களே, அதை வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்கிறார்.

அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள், காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! என்ற சூரத்துல் மர்யம் என்ற 19வது அத்தியாயத்தை ஓதிக் காட்டுகிறார். அதைக் கேட்டதும் மன்னர் நஜ்ஜாஷி அவர்கள், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகின்றது. இது மூஸா நபிக்கு யாரிடமிருந்து வந்ததோ அவரிடமிருந்தே இவருக்கும் வந்ததைப் போன்றுள்ளது என்று கூறிவிடுகிறார். மேலும் நீங்கள் எங்களது நாட்டில் அடைக்கலம் பெற்று விட்டீர்கள். உங்களது மார்க்கத்தின் பிரகாரம் இங்கே நடந்து கொள்ளலாம் என்றும் அனுமதியளித்து விடுகிறார்.

இந்தச் சம்பவம் தான் நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்க அடிப்படையாக அமைந்தது.

பிற்காலத்தில் நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்காக காயிஃப் ஜனாஸா தொழுகை நடத்தியதற்கும் இதுதான் காரணம்.

அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது “உங்கள் சகோதரருக் காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1328

இது பற்றி மற்றொரு அறிவிப்பில் “நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்’என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன்

நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559