ஏகத்துவம் – நவம்பர் 2012

தலையங்கம்

அபாய உலகில் ஓர் அபய பூமி

இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன.

அத்துடன் உலக நாடுகள் புரட்சிகளையும் போராட்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, டிசம்பர் 2010ல் துனிசியாவில் ஒரு முஸ்லிம் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது அந்நாட்டில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்தது.

அந்தப் புரட்சி அக்கம்பக்கத்து நாடுகளான எகிப்து, சிரியா, யமன், லிபியா என்று பற்றிக் கொண்டது. அந்தக் கொடிய, கோரத் தீயில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி இரையானது. லிபியாவில் கதாபியையும் அவரது ஆட்சியையும் பலியாக்கியது. இப்போது சிரியாவும் சீக்கிரத்தில் பலியாக உள்ளது. ஏற்கனவே இராக் எரிந்து கொண்டிருக்கின்றது. பஹ்ரைனும் இதன் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது.

சுற்றியும் சூழவும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மக்கா நகரம் மட்டும் அமைதி, அபய நகரமாகத் திகழ்ந்து  கொண்டிருக்கின்றது. ஏன்? இதற்கு அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

அல்குர்ஆன் 29:67

இந்த அற்புத உண்மையை உற்று நோக்குமாறு உலக மக்களை அல்குர்ஆன் கூறுகின்றது. இதன் மூலம் தன்னை ஓர் இறைவேதம் என்றும் தன்னையே வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளுமாறும் மக்களுக்கு இந்தக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது.

தனது அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் பல மில்லியன் கணக்கில் மக்கள் கூடுகின்ற ஹஜ் என்ற மாநாட்டையும், அந்த மாநாடு நடைபெறும் ஆலயத்தையும், அந்த ஆலயம் அமைந்துள்ள மக்கா நகரையும் உற்று நோக்குமாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.

முஸ்லிம்களானாலும் சரி! முஸ்லிமல்லாதவர்களானாலும் சரி! இந்தத் திருக்குர்ஆன் வழி நடந்தால் அவர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் இல்லை என்ற பாடத்தைப் போதிக்கின்றது. வெள்ளையர்கள், கறுப்பர்கள் அனைவரையும் அரஃபா எனும் ஒரு வெட்டவெளியில் ஒன்று திரட்டி, மனித குலத்திற்கு இடையே இன, மொழி, நிற, நாடு பாகுபாடுகள், வேறுபாடுகள் இல்லை என்ற உண்மையை ஹஜ் எனும் இந்த மாநாடு உணர்த்துகின்றது. தீண்டாமைக்குத் தீர்வு இஸ்லாம் தான் என்பதையும் ஐயத்திற்கு இடமின்றி இந்த மாநாடு தெரிவிக்கின்றது.

கர்நாடகாவில் வாழும் கன்னடனே! உன் அண்டை மாநிலத்தவன் –  தமிழ்நாட்டுக்காரன் வேறு யாருமல்ல! ஆதம் என்ற ஒரே தந்தைக்குப் பிறந்த உன் உடன்பிறந்த சகோதரன் தான். அவன் தமிழ் மொழி பேசுவதால் தண்ணீர் கொடுக்க மறுக்காதே என்ற பந்த பாசத்தை ஊட்டி வேற்றுமை உணர்வை வேரறுக்கச் செய்கின்றது இந்த மாநாடு!

இந்தியாவில் 626 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிக்கின்றனர். இது மிகப்பெரிய சுகாதாரக் கேடாகும். இதனால் தான் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஒரு ஊரில் கோயில் இருப்பதை விட கழிப்பறை இருப்பது மிக மிக அவசியம் என்று குறிப்பிடுகின்றார்.

கழிவறை இல்லாத வீட்டு மாப்பிள்ளையை கைப்பிடிக்காதீர், கல்யாணம் முடிக்காதீர் என்றும் அவர் மணப்பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது இந்தியாவில் சுகாதார நிலையின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து சுமார் 37 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்காவில் கூடியுள்ளனர். ஆனால் ஒரு நபர் கூட திறந்த வெளியில், மக்களின் நடைபாதையில் மலம் கழிப்பதைக் காண முடியாது.

இந்தியாவில் கோயில் மற்றும் தர்ஹாக்களின் சுவர்களைச் சுற்றி மக்கள் மலம் கழித்து அசுத்தப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. ஆனால் இந்த நிலை மக்காவில் இல்லையே! ஏன்?

உலக மக்களை இந்தச் சுகாதார விஷயத்திலும் சுண்டியிழுக்கின்ற வகையில் ஹஜ் மாநாடு அமைந்திருக்கின்றது. இப்படிப் பல்வேறு பயன்பாட்டுப் பரிமாணங்களைக் கொண்டிருப்பதால் தான் ஹஜ் பற்றி வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்” (என்றும் கூறினோம்.) அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.)

அல்குர்ஆன் 22:27,28

உலக மக்களுக்கு சமத்துவம், சகோதரத்துவம், பாதுகாப்பு, சுகாதாரம் என்பன மட்டுமில்லாமல் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுவதால் அகிலத்தின் வழிகாட்டி என்று மிகப் பொருத்தமாகவே அல்லாஹ் கூறியுள்ளான்.

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.

அல்குர்ஆன் 3:96, 97

இதன் மூலம் திருக்குர்ஆன் உலகிற்கு உரக்கச் சொல்லும் உண்மை இதுதான்:

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 25

வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை

வணிகப் பேரத்தில் பொய் சத்தியம்

ஒரு மனிதர் அவருடைய பொருளில் இல்லாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விற்றார். இதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கி வைத்தான்.

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)

ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பினார்; அப்போது அவர் (கொள்முதல் செய்யும்போது) கொடுக்காத (பணத்)தைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். முஸ்லிம்களைக் கவர்(ந்து அவர்களிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது “யார் தங்களுடைய உடன்படிக்கை மூலமும் சத்தியங்களின் மூலமும் அற்பக் கிரயத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ….’ என்னும் (3:77) இறைவசனம் இறங்கியது!

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி), நூல்: புகாரி 377, 2088, 2675

வியாபாரத்தில் தன்னுடைய நேர்மையை வெளிப்படுத்தி விற்க வேண்டும். அல்லாஹ் மீது சத்தியத்தைச் செய்து வியாபாரத்தை அதிகப்படுத்த விரும்பினால் அதில் எந்த பரக்கத்தும் கிடையாது. அதில் எந்தத் தேவையும் நிறைவேறாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும். ஆனால், பரக்கத்(எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2087

குறையை மக்கள் பார்க்கும்படி வைத்தல்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 164

ஒட்டகம், மாடு, ஆடு மற்றும் கால்நடைகளை விற்பவர், பாலைக் கறக்காமல் விட்டு, கனத்த மடியுடன் காட்டி விற்பனை செய்வது கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற்றின் பாலைக் கறக்காமல் விட்டுவைத்திருந்து) மடி கனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணிகளை வாங்கியவர் விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக் கொள்ளலாம்! விரும்பாவிட்டால் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம். இந்த இரண்டில் எதைச் செய்வதற்கும் அவருக்கு அனுமதி உண்டு.

மற்றோர் அறிவிப்பில் “(விரும்பாவிட்டால்) ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளிலிருந்து) மூன்று நாட்கள் வரையிலும் தான்என்றும் காணப்படுகிறது.

பேரீச்சம் பழத்தின் ஒரு “ஸாஉஎன்பதே அதிகமான அறிவிப்புக்களில் காணப்படுகின்றது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2148, 2150

மூன்று நாட்கள் என்பதைப்  பின்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவருக்கு மூன்று நாட்கள் விருப்ப உரிமை உண்டு. அதைத் திருப்பிக் கொடுப்பதானால், ஒரு “ஸாஉஉணவுப் பொருளுடன் அதைத் திருப்பிக் கொடுக்கட்டும். (உணவு என்பது) கோதுமையாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. (பேரீச்சம் பழமாகக் கூட இருக்கலாம்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3054

தனது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தனது உடைமையல்லாத வற்றையும் அளவோ, தரமோ, தன்மையோ தெரியாதவற்றையும் விற்பதும் (பய்உல் ஃகரர்), பிறக்காத உயிரினத்தை விற்பதும் கூடாது.

ஒருவர் ஒரு பொருளை விற்கிறார் என்றால் அந்தப் பொருள் அவர் முன்பாக  இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் விலை பேசப்பட வேண்டும். மாறாக தன்னிடம் இல்லாமல் இருக்கும் போது அதற்கு விலை பேசக்கூடாது. உதாரணமாக ஒரு ஆடு இருக்கிறது. அந்த ஆட்டுக்குத் தான் விலை பேச வேண்டும். மாறாக அதனுடைய குட்டிக்கு விலை பேசக் கூடாது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். “இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)’ என்று செய்யப்படும் வியாபாரமே இது!

நூல்: ஆதாரம் புகாரி 2143

விற்கும் போது தெளிவுபடுத்துதல்

நாம் ஒரு தோட்டத்தை விற்கிறோம் என்றால் அதைக் கொடுக்கும் போதே தெளிவுபடுத்திக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, தோட்டத்தைக் கொடுக்கும் போது முழுவதுமாகக் கொடுத்து விட வேண்டும். அப்படி இல்லாமல் கொடுத்ததன் பின்னால் நல்லதை மட்டும் திருப்பி எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹாகலா‘, “முஸாபனா‘, “முஆவமா‘, “முகாபராஆகியவற்றையும், “ஒரு பகுதியைத் தவிரஎன்று கூறி விற்பதையும் தடை செய்தார்கள். “அராயாவில் மட்டும் (இவற்றுக்கு) அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் அபுஸ் ஸுபைர் (ரஹ்), சயீத் பின் மீனா ஆகிய இருவரில் ஒருவர் ” “முஆவமாஎன்பது, (மரத்திலுள்ள) பழங்களின் பல்லாண்டு விளைச்சலை விற்பதாகும்என்று கூறினார்.

நூல்: முஸ்லிம் 3114

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹாகலா‘, “முஸாபனா‘, “முகாபராஆகிய வியாபாரங்களையும், கனிவதற்கு முன் மரத்(திலுள்ள பழ)த்தை (உலர்ந்த பழத்திற்குப் பதிலாக) விற்பதையும் தடை செய்தார்கள். “கனிதல்‘ (“இஷ்காஹ்‘) என்பது, பழம் சிவப்பாகவோ மஞ்சளாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும். “முஹாகலாஎன்பது, (அறுவடை செய்யப்படாத) பயிர்களை அளவு அறியப்பட்ட (அறுவடை செய்யப்பட்ட) உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதாகும்.

முஸாபனாஎன்பது, பேரீச்ச மரத்(திலுள்ள பழத்)தை (பறிக்கப்பட்ட) குறிப்பிட்ட அளவிலான உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். “முகாபராஎன்பது, விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தை அல்லது நான்கில் ஒரு பாகத்தை அல்லது அது போன்றதை (தனக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் ஒரு நிலத்தை)க் கொடுப்பதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 3112

முலாமஸா எனும் வியாபாரம்

முலாமஸா என்பது துணியை விரித்துப் பார்க்காமலேயே அதைத் தொட்டவுடன் வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன் விற்பனை செய்வதாகும். இதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

அபூசயீத்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் “முனாபதாவியாபாரத்தைத் தடை செய்தார்கள். “முனாபதாஎன்பது, ஒருவர் தமது துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து(விட்டால் அதை அவர் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன்)அவரிடம் விற்பதாகும். மேலும் முலாமஸா எனும் வியாபாரத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

நூல்: புகாரி 2144

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள்.

வியாபாரத்தில் “முலாமஸா’ மற்றும் “முனாபஃதா’ ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். “முலாமஸா’ என்றால், இரவிலோ பக-லோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டுவிட்டாலே வியாபாரம் உறுதியாகி விடும் என்ற நிபந்தனையின் பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக் கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும்.

முனாபதாஎன்பது, ஒருவர் மற்றொருவரை நோக்கித் தமது துணியை எறிய அந்த மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார(ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 5820

லிமாஸ் அல்லது முலாமஸா என்பதற்குத் தொடுதல் என்று பொருள். ஒருவர் தாம் வாங்க விரும்பும் துணியைக் கையால் தொட்டுப் பார்த்துவிட்டாலே வியாபார ஒப்பந்தம் நிறைவேறியதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்க்கும்போது குறையிருந்தாலும் வியாபாரத்தை ரத்துச் செய்ய முடியாத வணிக முறைக்கே “முலாமஸா’ என்று பெயர்.

நபாத் அல்லது முனாபஃதா என்பதற்கு எறிதல் என்று பொருள். வாங்க வந்தவர் மீது துணியைத் தூக்கி எறிந்துவிட்டாலே அதை அவர் வாங்கி விட்டதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்த்த பின் குறை தென்பட்டாலும் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத முறைக்கே “முனாபஃதா’ என்பர்.

இந்த இரு முறைகளாலும் நுகர்வோர் பாதிக்கப்பட இடமுண்டு என்பதால் இவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன?

இப்னு ஸைன்

எகிப்தில் ஹசனுல் பன்னா என்பவர் இக்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை உருவாக்கினார்.  “இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும்’ என்பதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்று இவர்கள் கூறிக் கொள்கிறார்கள்.

ஆனால் இவர்களின் பிரச்சாரத்தையும் செயல்பாட்டையும் கவனித்தால் இவர்கள் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் பாடுபடவில்லை. தங்களை ஆட்சியாளர்களாக ஆக்கிக்கொள்ள, மார்க்கத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் என்பதை அறியலாம்.

குர்ஆன் ஹதீஸில் ஆட்சி அதிகாரம் பற்றி வரும் வசனங்களை மட்டும் இவர்கள் படிப்பார்கள். இதைத் தங்களுடைய கொள்கைக்கு ஆதாரங்களாகக் கூறிக் கொள்வார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், கடமைகள், வணக்க வழிபாடுகள், இஸ்லாம் வன்மையாக கண்டித்த பாவங்கள் ஆகியவற்றைப் பற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறைய கூறப்பட்டிருக்கும்.

இவர்கள் அதைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். சிந்திக்க மாட்டார்கள். மக்கள் இஸ்லாத்துக்கு மாற்றமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் உண்மையான இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் மக்களிடத்தில் கூட இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

இந்த இயக்கத்தில் இருப்பவர்களிடம் கூட இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும், நெறிமுறைகளையும் பார்க்க முடியாது. இஸ்லாமியப் போதனைகளில் பிடிப்பில்லாத இவர்கள் இஸ்லாமிய ஆட்சியை எப்படி உருவாக்க முடியும்? அப்படி உருவாக்கினால் அந்த ஆட்சி இஸ்லாமிய ஆட்சியாக இருக்குமா? என்று சிந்திக்க வேண்டும்.

இவர்கள் மக்களிடம் இஸ்லாத்தைக் காட்டி ஓட்டுக் கேட்பதால் கேவலத்தில் மற்ற அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டனர்.

இவர்கள் தங்கள் இயக்கத்துக்கு இக்வானுல் முஸ்லிமீன் இஸ்லாமிய சகோதர இயக்கம் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்தப் பெயருக்கு ஏற்ப இவர்கள் நடப்பதில்லை. இவர்களின் அறியாமையை யாராவது ஒரு முஸ்லிம் சகோதரன் தெளிவுபடுத்தினால் அவனைக் கொல்வதற்குக் கூட தயங்க மாட்டார்கள். ஜிஹாத் என்ற பெயரால் இவர்கள் கொன்று குவித்த இஸ்லாமியர்களின் பட்டியல் ஏராளம்.

ஆட்சி அதிகாரத்தைப் பற்றி பேசும் இவர்கள் ஆட்சி அதிகாரத்தை  இஸ்லாம் எந்த இடத்தில் வைத்திருக்கின்றது? எந்தச் சூழ்நிலையில் அதற்காகப் பாடுபடச் சொல்கிறது? என்பதைச் சிந்திக்க மாட்டார்கள். இது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய நெறிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

இந்த இயக்கத்தின் அசத்தியக் கொள்கையை அச்சுப் பிசகாமல் பின்பற்றக் கூடியவர்கள் வேறு பெயர்களில் நம் நாட்டில் இருக்கின்றார்கள். மார்க்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இப்போது கூட மனிதச் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்காக எகிப்து தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர். இத்துடன் இஸ்லாமிய ஆட்சி கோஷத்தை சவப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விட்டார்கள்.

? யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?

சுந்தரேசன்

யானை உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று அதிகமானோர் கூறுகின்றனர்.

யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாக்க் கூறுகிறார்கள்.

கோரைப் பற்கள் உள்ள பிராணிகளை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

அபூ ஸஅலபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.

நூல்: புகாரி 5530

யானையின் வாயில் வளரும் இரண்டு தந்தங்களையும் கோரைப் பற்கள் என்று கருதுவோர் இந்த ஹதீஸின் அடிப்படையில் அதை உண்ணக்கூடாது என்று கூறுகின்றனர்.

இதை கோரைப் பல்லாகக் கருதாதவர்கள் யானையின் இறைச்சியை உண்ண மார்க்கத்தில் எந்தத் தடையும் சொல்லப்படவில்லை. எனவே இது அனுமதி என்று வாதிடுகின்றனர்.

தந்தம் என்பது யானையின் மேல் தாடையில் வளரும் பல் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

யானையின் தந்தத்திற்கு அரபு மொழியில் நாப் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. மேற்கண்ட ஹதீஸில் கோரைப் பல் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் நாப் என்ற இந்த வார்த்தையைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே நாப் (கோரைப் பல்) உள்ள பிராணிகளை உண்ணக்கூடாது என்ற நபியின் கூற்று அடிப்படையில் யானை உண்ணத் தகுந்த பிராணி இல்லை என்பதே சரியான கருத்தாகத் தெரிகின்றது.

காண்டாமிருகம், சிங்கம் புலியைப் போன்று கோரைப் பற்கள் உள்ள பிராணியாகும். எனவே மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இதுவும் உண்ணத் தகுந்த பிராணியில்லை.

? உடலையும், உடலின் கண், கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா

ரிஸ்வான்

கண், கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்குப் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.

எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும்.

கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாகக் கொடுத்து பிறரை வாழ வைப்பதைத் தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும்.

சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.

அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.  ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல.  உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்துப் பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை.

மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),

நூல்: புகாரி 2474, 5516

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம்.

உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.

ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி)

நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315

இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாகக் காணும் நிலை ஏற்படும்.

மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.

? நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா?

முஹம்மத் இர்ஷாத் கான்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் நமக்காக தனிப்பட்ட முறையில் துஆ செய்தால் அது பற்றிப் பேசும் போது நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறலாம். ஏனெனில் இதில் உண்மை உள்ளது. இதில் எந்தக் குற்றமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காகப் பொதுவாக துஆ செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் பரக்க்கத் எங்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இப்படி கூறுகிறார்கள் என்றால் அதுவும் தவறாகும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மக்களுக்காக சில துஆக்களைச் செய்துள்ளார்கள். நாம் அந்த நன்மக்கள் பட்டியலில் இருக்கிறோமா என்பது நமக்குத் தெரியாது.  இவ்வாறு திருமணப்பத்திரிகை அடிக்கக் கூடியவர் அந்தப் பட்டியலில் இருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படிக் கூறினால் நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டிய குற்றம் சேரும். நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினால் அதற்கான பரிசு நரகமாகும்.

நல்ல முஸ்லிமாக வாழ்பவர்களின் நிலையே இது தான். ஆனால் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று திருமணப் பத்திரிகை அடிப்பவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதில்லை. எந்த திருமணத்துக்காக பத்திரிகை அடிக்கிறார்களோ அந்த திருமணத்தையாவது நபிகள் நாயகம் காட்டிய வழியில் நட்த்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

அல்லாஹ் மஹர் கொடுக்கச் சொன்னால் இவர்கள் வரதட்சணை வாங்கி திருமணம் நடத்திக் கொண்டு நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத் என்று போட்டால் இவர்கள் நபிகள் நாயகத்தைக் கேலிப் பொருளாக ஆக்குகிறார்கள் என்று தான் பொருள்.

வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் உடன் பிறப்புக்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் ஷைத்தானின் தம்பிமார்களாக இருக்கும் வகையில் இவர்களின் நடத்தை இருக்கும் போது நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறுவதும் நபிகள் நாயகத்தை மேலும் அவமரியாதை செய்யும் செயலாகும்,

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் பரக்கத்துக்கு உரியது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்திருக்க பரக்கத்தின் வாசலை இழுத்து மூடும் வகையில் நடந்து கொண்டு நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறினால் அது நபிகள் நாயகத்தை இவர்கள் கேலிப்பொருளாக ஆக்குகிறார்கள் என்று தான் பொருள்.

திருடச்செல்லும் ஒருவன் பிஸ்மில்லாஹ் கூறி திருடுவது போல், பிஸ்மில்லாஹ் கூறி பன்றி இறைச்சி சாப்பிடுவது போல், அல்லாஹும்ம ஜன்னிப்னா என்ற துஆவை ஓதி விபச்சாரியுடன் செல்வது போல் இவர்களின் முரண்பாடு அமைந்துள்ளது. திருமணத்தில் நபி வழியை மீறுவதுடன் நபிகள் நாயகத்தைக் கேலி செய்த குற்றத்துக்கும் இவர்கள் ஆளாகிறார்கள்.

—————————————————————————————————————————————————————-

புறக்கணிப்பு ஒரு போர்க் கவசம்

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி அவர்களுடைய சமுதாயத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களது புறக்கணிப்பு என்ற வியூகத்தில் முன்மாதிரி இருக்கின்றது என்று பாராட்டிச் சொல்கின்றான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று நிலைகுலையாமல் இருப்பதற்கும், ஒரு நெடிய வளர்ச்சியைக் காண்பதற்கும் இப்ராஹீம் நபியின் இந்த முன்மாதிரி அடிப்படையாக அமைந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

தமிழகத்தில் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்குப் போட்டியாக சுன்னத் ஜமாஅத் ஆலிம்களும் குரல் கொடுத்தனர். ஆங்காங்கே பல்வேறு ஊர்களில் வரதட்சணை ஒழிப்பு இயக்கங்கள் செயல்பட்டன. பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், கண்டனக் கூட்டங்கள் என்று பல்முனைப் போர்கள் வரதட்சணைக்கு எதிராக நடந்தன. அவை அனைத்தும் தடயம் தெரியாமல் அழிந்து போயின. கால நீரோட்ட வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டு விட்டன. என்ன காரணம்? போர்க்குரல் எழுப்பிய சுன்னத் வல் ஜமாஅத் போன இடமே தெரியவில்லை. ஏன்?

அவர்கள் தாங்கள் சொன்னபடி நடக்கவில்லை. வரதட்சணைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தாங்கள் திருமணம் முடிக்கும் போதோ அல்லது தங்களது குடும்பத்தில் தங்கள் மகன்களுக்கோ, சகோதரர்களுக்கோ திருமணம் நடக்கும் போதோ தங்களின் பிரச்சாரத்திற்கு நேர்மாற்றமாக நடந்தனர்.

வரதட்சணை வாங்குகின்ற, கொடுக்கின்ற திருமணங்களில், அது எளிய திருமணமாக இருந்தாலும் சரி, ஆடம்பரத் திருமணமாக இருந்தாலும் சரி அதில் கலந்து கொண்டு, அங்கு நடைபெறுகின்ற விருந்துகளில் எந்தவித உறுத்தலும், குற்ற உணர்வும் இல்லாமல் பங்கெடுத்தனர்.

இது அந்தக் குற்றத்தைப் பற்றிய பார்வையை மழுங்கவும் மறக்கடிக்கவும் செய்தது. நெருப்பாக இருந்தவர்களை நீறு பூக்க வைத்தது. அதனால் அவர்களது முயற்சிகள், உழைப்புகள் அனைத்தும் விழலுக்கு இழைத்த நீராயிரன.

இன்று தப்லீக் இயக்கத்தினர் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியைத் தாங்கள் தான் ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்தது போன்று பேசுவார்கள். இதற்கு அவர்கள் தான் தனி ஏஜெண்டுகள் போல் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் வரதட்சணை திருமணங்களில், விருந்துகளில் போய் சர்வ சாதாரணமாகக் கலந்து கொள்வார்கள். அதனால் அவர்களாலும் இந்தத் தீமையை ஒழிக்க முடியவில்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இறைவனின் அருளால் இந்த வரதட்சணை ஒழிப்பில் சாதனை படைத்து வருகின்றது. இதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?

இந்த ஜமாஅத்தினர் தங்களது பிரச்சாரத்திற்கு மாற்றமாக நடக்கவில்லை.

எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்என்று (ஷுஐப்) கூறினார்.

அல்குர்ஆன் 11:88

இது, தீமையை ஒழிப்பதற்கு இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகின்ற இலக்கணமாகும்.

தான் செய்யாத ஒன்றை மக்களுக்கு ஏவுவதை அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.

அல்குர்ஆன் 61:2,3

இந்தப் பிரச்சாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நிலைத்து நிற்பதற்கு அடுத்த காரணம், இதுபோன்ற தீமைகளை இப்ராஹீம் (அலை) அவர்களின் பாணியில் புறக்கணித்தது.

வரதட்சணை எனும் கொடிய தீமை நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் மிக வலிமையாகப் போதிப்பதாலும், இந்தத் திருமணங்களைப் புறக்கணிப்பதாலும் வரதட்சணை ஒழிப்பில் இந்த ஜமாஅத் சாதனை படைத்து வருகின்றது.

புறக்கணிப்பின் பூரண பலன்கள்

பொதுவாக ஒரு தீமையைப் புறக்கணிக்கும் போது அதில் மிகப் பெரிய பலன்கள் உள்ளன.

நாம் அந்தத் தீமைக்குப் பலியாகாமல் இருப்பது அதில் முதலாவதாகும்.

தடுக்கப்பட்ட ஒரு தீமையில் பங்கெடுப்பது அந்தத் தீமையின் கடுமையை நம்மிடம் குறைத்து விடும். கடைசியில் நாமும் அந்தத் தீமையைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

பனூ இஸ்ரவேலர்களிடம் இது தான் நடந்தது. அதனால் அவர்கள் இறைத்தூதர்களின் சாபத்திற்கு ஆளாயினர்.

தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம். அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 5:78, 79

தீமையான காரியங்களில், குறிப்பாக இணை வைப்பு என்ற கொடிய தீமையில் ஒரு கவர்ச்சியும் கவிழ்த்து விடும் தன்மையும் உள்ளது.

பனூ இஸ்ரவேலர்கள் இந்தக் கவர்ச்சிக்குப் பலியானதை அல்லாஹ் இரண்டு இடங்களில் கூறுகின்றான்.

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!என்று கேட்டனர். “நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்என்று அவர் கூறினார்.

அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக் கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது.

அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 7:138-140

பிளந்த கடல் சேர்ந்து, காய்ந்த இடம் கூட நனைந்திருக்காது. ஆனால் அதற்குள் அவர்களுடைய நிலை அவ்வளவு பெரிய பாவத்தை நோக்கி விரைகின்றது.

ஏதோ சிறு குழந்தைகள் பொம்மைகளை வாங்கிக் கேட்பது போன்று சிலைகளைத் தங்களுக்கு ஏற்படுத்தித் தருமாறு கேட்கின்றனர்.

கடவுளான காளை மாடு

மூஸா (அலை) அவர்கள் இறைவனிடத்தில் வேதம் பெறுவதற்காகச் செல்கின்றார்கள். அதற்குள்ளாக சாமிரி என்பவன் அந்தச் சமுதாயத்திற்குள் ஒரு விளையாட்டை விளையாடி விட்டான். இதை அல்லாஹ் மிகவும் சுவையாக விவரிக்கின்றான்.

மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டு விட்டு அவசரமாக வந்தது ஏன்?” (என்று இறைவன் கேட்டான்.)

அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகின்றனர். என் இறைவா! நீ திருப்திப் படுவதற்காக உன்னிடம் விரைந்து வந்தேன்என்று அவர் கூறினார்.

உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்என்று (இறைவன்) கூறினான்.

உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார். “என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?” என்று கேட்டார்.

நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் “இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்என்றனர்.

அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்என்று அவர்கள் கூறினர்.

ஹாரூனே! அவர்கள் வழி கெட்டதை நீர் பார்த்த போது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை? எனது கட்டளையை மீறி விட்டீரே!என்று (மூஸா) கேட்டார்.

என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன்என்று (ஹாரூன்) கூறினார்.

ஸாமிரியே! உனது விஷயமென்ன?” என்று (மூஸா) கேட்டார்.

அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியதுஎன்றான்.

நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் “தீண்டாதேஎன நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 20:83-97

மூஸா (அலை) அவர்கள் தனது சகோதரர் ஹாரூனைக் கண்காணிக்கும்படிச் செய்து விட்டு, சில நாட்கள் இறைவனிடம் வேதம் பெறுவதற்காகச் சென்று திரும்புவதற்குள்ளாக இவ்வளவு பெரிய விளையாட்டை சாமிரி என்பவன் விளையாடித் தள்ளிவிட்டான். இத்தனைக்கும் ஹாரூன் என்ற இறைத்தூதர் ஊரில் இருக்கின்றார். அப்படியாயின் இந்த இணை வைப்பு என்ற விஷம் எப்படிப்பட்டது? அதன் வீரியமும் கவர்ச்சியும் எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இன்று இந்துக்களிடம் உள்ள பொங்கல் பண்டிகையை எடுத்துக் கொள்வோம். இது சூரியனைக் கடவுளாக வழிபடுகின்ற ஒரு பண்டிகையாகும். அந்தப் பண்டிகைக்கு நம்மை அழைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் இதில் போய் கலந்து கொள்வோம் என்றால் இந்தப் பாவத்தின் வீரியம் நம்மிடமிருந்து எடுபட்டுப் போய் நாளடைவில் நாமும் சமத்துவப் பொங்கல் கொண்டாட ஆரம்பித்து விடுவோம். இங்கு தான் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பு நமக்குக் கைகொடுக்கின்றது. நம்மை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுகின்றது. கலாச்சாரக் கலப்பு என்ற பெயரில் இணை வைப்பில் வீழ்ந்து விடாமல் நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் இந்தப் புறக்கணிப்பு காப்பாற்றுகின்றது.

எதிரிகள் திருந்துதல்

என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நான் விலகியவன். அவன் எனக்கு நேர் வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கூறியதை நினைவூட்டுவீராக!

இதையே அவரது வழித்தோன்றல்களிலும் நிலைத்திருக்கும் கொள்கையாக்கினான். இதனால் அவர்கள் திருந்தக்கூடும்

அல்குர்ஆன் 43:26-28

இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பில் முன்மாதிரி இருக்கின்றது என்று 60:4 வசனத்தில் சொன்ன அல்லாஹ், இந்தக் கொள்கைப் பிரகடனத்தைப் பிந்தைய சமுதாயத்திற்குத் தொடரும் கொள்கையாக ஆக்கியிருப்பதாகக் கூறுகின்றான். ஏகத்துவக் கொள்கை எங்கெல்லாம் உதயமாகியிருக்கின்றதோ அங்கு இந்தப் புறக்கணிப்பு தொடரும் என்று கூறுகின்றான். இதன் மூலம் மக்கள் இந்தக் கொள்கைக்குத் திரும்புவார்கள் என்றும் கூறுகின்றான். ஆம்! இந்தப் புறக்கணிப்பின் மூலம் மக்கள் திருந்துவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

உதாரணத்திற்கு, பொங்கல் பண்டிகைக்காக அழைப்பவர்களிடம், “நாங்கள் ஒரே இறைவனை வணங்குபவர்கள்; அவன் அல்லாதவர்களுக்காகப் படைக்கப்பட்டதை நாங்கள் சாப்பிட மாட்டோம்’ என்று கூறும் போது அது அவர்களைச் சிந்திக்க வைக்கின்றது. இறுதியில் அவர்களை மனம் மாற வைக்கின்றது.

நம்முடைய தாய், தந்தை அல்லது பிள்ளைகள் போன்ற உறவினர்கள் இணை வைப்பில் இருந்தால் அவர்களிடம் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பு என்ற போர் கவசத்தை நாம் பயன்படுத்த வேண்டும். இப்படி நாம் இருக்கும் போது, நாம் அவர்களுடைய கொள்கையில் ஒருபோதும் இறங்கப் போவதில்லை. ஆனால் சத்தியவாதிகளைப் போன்று அசத்தியவாதிகளால் உறுதியாக இருக்க முடியாது. அவர்கள் பாசத்திற்குப் பலியாகி விடுவார்கள். அதன் மூலம் சத்தியத்திற்கு வந்து விடுவார்கள். இது புறக்கணிப்பின் மூலம் கிடைக்கும் மிகப் பெரும் வெற்றியாகும்.

மறுமையில் இது ஒரு காவல் அரண்

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக்கொண்டு) சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லைஎன்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்:

(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்என்று அழைப்புவிடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்(கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்கள் அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும்.

அப்போது யூதர்களிடம், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லைஎன்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், “இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கவர்கள், “எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), “குடியுங்கள்என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்துவிடுவார்கள்.

பின்னர் கிறிஸ்தவர்களிடம், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லைஎன்று கூறப்பட்ட பின் “நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) “குடியுங்கள்!என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர் அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் “மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றுவிட்டார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கப்படும்.

அதற்கு அவர்கள், “(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர் “ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகவாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும்என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்என்று கூறுவார்கள்.

அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து, “நானே உங்கள் இறைவன்என்று கூறுவான். அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், “நீயே எங்கள் இறைவன்என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, “அவனை இனங் கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், “(இறைவனின்) கால் (பாதம்)தான்என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தனது காலை வெளிப்படுத்துவான். இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிர வணக்கம் செய்ய முடியாது).

நூல்: புகாரி 7439

புகாரி 4581வது எண்ணில் இடம் பெற்றுள்ள இதே அறிவிப்பில், “உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக்கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிலளிப்பதாக இடம் பெற்றுள்ளது.

மறுமையில் இந்தப் பதில் நம்முடைய வாயிலிருந்து வர வேண்டும் என்றால் இந்த உலகில் புறக்கணிப்பு என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால் தான் வரும். இல்லையென்றால் இந்த வார்த்தை நம்மிடம் வராது.

இந்த அடிப்படையில் புறக்கணிப்பு என்பது இம்மையிலும் மறுமையிலும் நம்மைக் காக்கும் ஒரு கவசமாக அமைந்திருக்கின்றது. இப்ராஹீம் நபியின் தியாகங்களை நினைவுகூருகின்ற இந்த நாட்களில் அவர்களின் புறக்கணிப்பு என்ற போர்க்கவசத்தை நமது கொள்கையாகக் கொள்வோமாக!

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்      தொடர்: 6

இறைநேசர்களை இறைத்தூதரால் அறிய முடியுமா?

ஒருவரை நல்லடியார், மகான் என்று நபித்தோழர்களால் கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அதுபோல் நபி (ஸல்) அவர்களால் கூட, அல்லாஹ் அவர்களுக்கு இவர் நல்லவர், இவன் கெட்டவன், இவன் முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று வஹீ அறிவித்துக் கொடுத்தாலே தவிர ஒருவரை நல்லடியார் என்றும் மகான் இறைநேசர் என்றும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அதை ஒவ்வொன்றாக நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நூல்: புகாரி 2680

தம்மிடம் வழக்குகள் கொண்டு வரப்படும் போது வெளிப்படையான வாதங்களையும் ஆதாரங்களையும் வைத்துத் தீர்ப்பளிப்பதாகவும் சில நேரங்களில் அந்தத் தீர்ப்பு தவறாக அமைந்து விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை நல்லவன் என்று கருதினார்களோ அவன் மறுமையில் கெட்டவானகவும், கெட்டவன் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள். தன் முன்னால் நின்று வழக்குரைக்கும் இருவரில் யார் உண்மையாளன் என்பதை நபியவர்களால் கண்டுபிடிக்கமுடியாது என்றால் மற்றவர்களுக்கு அது இயலுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்

நபியவர்கள் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பதை மட்டும் அறிபவர்களாக இருந்தால் அவ்விருவரில் யார் பொய் சொல்கிறார், யார் உண்மை சொல்கிறார் என்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்யாமல் அந்தப் பொருள் யாருக்குரியதோ அவரிடம் கொடுத்திருப்பார்கள். எனவே நபியவர்களால் கூட நல்லவர் யார். கெட்டவர் யார் என்பதை அறிய முடியவில்லை என்பதற்கு இந்தச் செய்தி சான்றாகும்.

இப்படி நபிகள் தம்முடைய வாழ்நாளில் எத்தனையோ பேருக்கு இப்படி தீர்ப்பளித்திருப்பார்கள். எத்தனையோ நல்லவனை, கெட்டவன் என்று முடிவு செய்திருப்பார்கள். எத்தனையோ கெட்டவனை நல்லவன் என்று முடிவு செய்திருப்பார்கள். ஆக நபியவர்களாலேயே ஒரு மனிதரின் உள்ளத்தில் உள்ளதைக் கண்டறிய முடியவில்லை என்றால் நாம் எப்படி ஒருவரை இவர் அவ்லியா, இறைநேசர், மகான் என்று கண்டுபிடிக்க முடியும்? அவ்வாறு முடியும் என்று சொன்னால், நபியவர்களை விட நமக்கு அதிகமான அறிவு ஞானம் இருக்கிறது என்றாகிவிடும். நபிகள் நாயகத்துக்குத் தெரியாதது எங்களுக்குத் தெரியும். நபியவர்களுக்கு உள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடிக்கத் தெரியாது; ஆனால் எங்களுக்கு உள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடிக்கத் தெரியும் என்றாகிவிடும். இதை நாம் புரிந்து கொண்டால் நாம் யாரையும் அவ்லியா என்றோ மகான் என்றோ சொல்ல மாட்டோம்.

நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான்உஸய்யாபனூ  –ஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர். மேலும்தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பி உதவும்படியும் நபி (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி  (ஸல்)  அவர்கள், அன்சாரிகளிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் “காரீகள்‘ (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், “பீரு மஊனாஎன்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்-ம்களை ஏமாற்றிக்  கொன்று விட்டனர். உடனேநபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3064

மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 1002, 3170, 4088, 4090, 4096 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இதில் நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபியவர்களிடம் வந்த நான்கு கூட்டத்தாரும் மகா கெட்டவர்கள் என்று நபியவர்களுக்குத் தெரியவில்லை. 70 முஸ்லிம்களைக் கொன்ற பிறகு தான் அந்தக் கூட்டத்தினர் கெட்டவர்கள் என்பது தெரிய வருகிறது. முதலில் வரும்போதே அவர்கள் கெட்டவர்கள் என்று தெரிந்திருந்தால் நபியவர்கள் உஷாராக இருந்திருப்பார்கள். இவர்கள் 70 பேரையும் அழைத்துச் சென்று வஞ்சமாகக் கொலை செய்ய வந்திருக்கிறார்கள் என்பதை முதலிலேயே அறிந்திருந்தால், அந்தக் கூட்டத்தினரைக் கைது செய்திருப்பார்களா? இல்லையா?

ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை. 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் சாதாரணமான விஷயம் அல்ல. மிகவும் பயங்கரமான விஷயம். கொல்லப்பட்ட 70 ஆட்களும் காரிகள், குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள். குர்ஆனை மிகவும் அறிந்த ஆலிம்கள். மார்க்க அறிஞர்களாக இருந்த ஸஹாபாக்கள்.

நபியவர்கள் அத்தகைய ஸஹாபாக்களை முத்துக்களைப் போல பொறுக்கி எடுத்து அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் வெறுங்கையுடன் சென்ற அந்த 70 பேரையும் நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் நபியவர்களுடைய கணிப்பு தவறாக இருந்திருக்கிறது. அதாவது நபியவர்களும், மற்ற ஸஹாபாக்களும் யாரை முஸ்லிம்கள், நல்லவர்கள் என நினைத்தார்களோ அவர்கள் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெளிப்படையான தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பி ஏமாந்துள்ளார்கள். இது வஹீ வராததின் போது நடந்தது. அந்த 70 பேரும் கொல்லப்பட்டது வஹீயின் மூலம் வந்தபோது தான் அவர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தது. அவர்களுடைய கண்ணுக்கு முன்னால் கூட்டிச் சென்ற போது அவர்களுக்குத் தெரியவில்லை. இதிலிருந்தே அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்து கொடுத்தால்தான் மறைவானதைக் கூறுவார்களே தவிர தாமாக அவர்களால் மறைவானதை அறிந்து கொள்ள முடியாது என்பது விளங்குகிறது.

ஆக நபியவர்களைக் கூட ஒரு கூட்டம் ஏமாற்றியிருக்கிறது என்றால் நம்மை ஒருவன் ஏமாற்றுவது பெரிய விஷயமே அல்ல. பெரிய தலைப்பாகை, ஜுப்பா போட்டு வந்தால் அவரைப் பார்த்து நாம் ஏமாந்து விடுகிறோம். ஒருவன் பள்ளிவாசலே கதி என்று இருப்பான். நாள் முழுவதும் கையில் தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டு இருப்பான். அடுத்தவனிடம் பேசாமல் இறைநினைவில் மூழ்கி இருப்பான். 24 மணி நேரமும் குர்ஆனையே ஓதிக் கொண்டிருப்பான். இவ்வாறு செய்பவரை நாம் பார்த்த உடனேயே யோசிக்காமல் நம் ஊருக்கு அவ்லியா வந்து விட்டார் என்று கூறிவிடுவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே ஒரு கூட்டம் ஏமாற்ற முடியும் என்றால், நம்மைப் போன்ற சாதாரண மக்களை ஏமாற்ற முடியாதா?

இதே போன்று, இன்னும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது.

உக்ல்குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. ஆகவே அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்என்று கேட்டார்கள்.  அதற்கு  நபி  (ஸல்) அவர்கள், “நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லைஎன்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்)  உடல்  நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்ட படி  நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி  (ஸல்)  அவர்கள் “உக்ல்குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்)  கொண்டு வரப்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக்  கொண்டு வரச் சொல்- உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களுடைய கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) “ஹர்ராஎனுமிடத்தில் எறிந்து விட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப் படவில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3018

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 1051, 4192, 4610, 5685, 5686, 5728, 6802, 6804, 6805, 6899 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில், அந்தக் கூட்டத்தினர் வந்த நோக்கம் ஒட்டகத்தைத் திருடுவதற்காக தான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று பொய் சொல்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளத்தை அறிந்து, இவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறியக் கூடியவர்களாக இருந்தால் ஏமாந்திருக்க மாட்டார்கள். ஒரு காவலரைப் ப- கொடுத்திருக்கவும் மாட்டார்கள். ஒட்டகத்தையும் இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் துரோகம் செய்த பிறகுதான் இவர்கள் துரோகிகள் என்று நபியவர்களுக்குத் தெரிகிறது.

நாமும் இவ்வாறு தான் கண்டுபிடிக்க முடியும். நமக்கு ஒருவன் துரோகம் இழைக்க நினைக்கிறான் என்றால், கடைசி நிமிடம் வரைக்கும் நமக்கு இவன் துரோகம் இழைப்பான் என்று நம்மால் அறிய முடியாது. துரோகம் இழைத்த பிறகு தான் இவன் துரோகி என்று நம்மால் கண்டறிய முடிகிறது. அல்லாஹ்வுடைய தூதரையே இவ்வளவு எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள் என்றால், நம்மை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்கள் நபித்தோழர்களைப் போல் நடித்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

இதை நாம் எதற்காக இங்கே சுட்டிக்காட்டுகிறோம் என்றால் நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து, அவருக்கு விழா நடத்துகிறோம். கந்தூரி கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர் அவ்லியா என்பதற்கு என்ன ஆதாரம்? அவரை அவ்லியா என்று சொன்னது யார்? அவ்லியா என்ற ஒருவர் இந்த கப்ரில் அடங்கியிருக்கிறாரா? அப்படி ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்தாரா? அப்படியே வாழ்ந்து அவர் நல்ல செயல்களைத் தான் செய்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா? அப்படியே நல்ல செயல் செய்தாலும், அதை வெளிப்படையாகச் செய்திருக்கலாம். ஆனால் அது அவருடைய உள்ளத்தில் இருந்ததா? அல்லது நல்லவனைப் போல் நடிப்பதற்காகச் செய்தாரா? இது போன்ற ஏராளமான கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம்.

இவ்வாறு ஒருவரை அவ்லியா என்று சொல்ல, அல்லாஹ்வுடைய அதிகாரத்தை நாம் கையில் எடுக்க வேண்டுமா? நாம் அல்லாஹ்விடம் பாவியாக வேண்டுமா? இப்படி நாம் சிந்திக்க வேண்டும். எனவே இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம், யாராலும் அவ்லியாவை கண்டுபிடிக்க முடியாது என்பது தான்.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதி-ருந்து (சிறிது) உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது.  அவர்கள், “வேண்டாம்என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2617

இந்தச் செய்தியில், தன்னைக் கொல்வதற்காகத் திட்டம் தீட்டி வந்த ஆளையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நல்லவள் என நம்பித்தான் அந்த இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டார்கள். தன்னைக் கொல்வதற்காக இதைத் தருகிறாள் என அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. எனவே நம்மிடத்தில் வெளிப்படையாக எவன் நல்ல செயல் செய்கிறானோ அவன் நம்மிடம் நல்லவனாக முடியும். ஆனால் அல்லாஹ்விடத்தில் வெளிப்படையாகவும் நல்ல செயல்கள் இருந்து, உள்ளமும் பரிசுத்தமாக இருந்தால்தான் அவன் நல்லவனாக முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நீங்கள் (மறுமை நாளில் கா-ல்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, “நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்” (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், “இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்என்று (அவர்களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, “தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததி-ருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்என்று கூறுவார்கள். அப்போது, நல்லடியார் (ஈஸா நபி) கூறியதைப் போல், “நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்என்னும் (5:117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.

நூல்: புகாரி 3349

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 3447, 4740 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்று சொல்வேன். அதற்கு, “இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல் “நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்” என்று பதிலளிப்பேன். அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததி-ருந்து இவர்கள் தங்கள் குதிகால்(சுவடு)களின் வழியே தம் மார்க்கத்தி-ருந்து விலகிச் சென்றுகொண்டே யிருந்தார்கள்” என்று கூறப்படும். (புகாரி 4740) என்று இடம்பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில், “அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள்தாம்” என்று நபியவர்கள் கூறியதற்கு, “உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். உடனே நான், “எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப் படுத்துவானாக!” என்று சொல்வேன். (புகாரி 7051) என்று இடம்பெற்றுள்ளது.

மேலே சொன்ன மூன்று ஹதீஸ்களிலும் மார்க்கத்தை விட்டுத் தடம்புரண்டு சென்றவர்களையெல்லாம்  நல்லடியார்கள் என்று நினைத்து, அதே நிலையில் நபியவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். நபியவர்கள் யாரை நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அதை மறுமையில் வெளிப்படுத்தும் போது அது பொய்யென்று ஆகிவிடுகின்றது.

அதே மாதிரி மூஸா (அலை) அவர்களுடைய சம்பவத்தையும் நாம் இதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். மூஸா நபி அவர்கள் பிர்அவ்னிடத்தில் சென்று அழைப்பு பணி செய்கிறார்கள். அதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறும்போது,

மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?” என்று அவன் கேட்டான். “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்என்று அவர் கூறினார். “முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?” என்று அவன் கேட்டான். “அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 20:49-52

இவ்வசனத்தில் ஃபிர்அவ்ன், மூஸா (அலை) அவர்களிடம், “நீ புதிய மார்க்கத்தைச் சொல்கிறாய். ஆனால் இதற்கு முன்னால் சென்ற நம்முடைய அப்பன், பாட்டன்மார்கள், முன்னோர்களுடைய நிலை என்ன? அவர்களெல்லாம் நீ சொன்ன மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லையே? அவர்களுடைய கதி என்ன?’ என்று ஃபிர்அவ்ன் கேட்கிறான். அதற்கு மூஸா நபியவர்கள் “அதைப் பற்றி எனக்கு எந்த ஞானமும் கிடையாது. அது அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளதாகும். அது அவன் எடுக்க வேண்டிய முடிவு. அவனுடைய முடிவைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது’ என்று கூறிவிடுகின்றார்கள். இதுதான் முஸ்லிம்களுடைய நிலைபாடாகவும் இருக்க வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறை மதியினர்

அப்துந் நாசிர், கடையநல்லூர்

ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றப்படும் முக்கியமான வணக்கம் குர்பானி கொடுப்பதாகும். இதற்கு அரபி மொழியில் உழ்ஹிய்யா என்றும் கூறப்படும். உழ்ஹிய்யா கொடுப்பதற்குத் தகுதியான பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவையாகும்.

ஒட்டகம், மாடு ஆகியவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்தும் குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி அவர்கள் அனைவரின் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.

ஒரு ஒட்டகத்தில் அதிகப்பட்சம் பத்துக் குடும்பங்கள் வரை கூட்டாகச் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

ஆனால் இலங்கையைச் சேர்ந்த யஹ்யா சில்மி என்பவர் கூட்டு முறையில் குர்பானி கொடுப்பது கூடாது என்று ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடைய வாதங்களை அலசுவதற்கு முன்பாக ஆணவம் தலைக்கேறி தன்னுடைய அகந்தையினால் பிற அறிஞர்களையும் அவர்களுடைய ஆய்வுகளையும் மிகவும் மட்டமாக நினைக்கும் இவருடைய தற்பெருமையை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

கூட்டு முறையில் குர்பானியை நிறைவேற்றலாம் எனக் கூ,றும் அறிஞர்களைப் பற்றி பின்வருமாறு தன்னுடைய பிரசுரத்தில் குறிப்பிடுகிறார்.

இஸ்லாமிய மார்க்கம் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா என்று இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர்ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென சில அடிப்படைகள் இருக்கின்றன. ஏனெனில் அரபி மொழி தெரிந்தவர்கள் எல்லாம் இன்று ஆலிம்களாகி, ஹதீஸ்களை விளங்குவதெற்கென கணக்கிட முடியாத பல நூல்கள் காணப்படும். அவைகளை ஆழமாக அறிந்த கொள்ளும் முன்னர் தப்ஸீர் என்றும் சாரா என்றும் எல்லா விஷயத்திலும் தத்தமது கெட்டித்தனங்களைக் காட்டிட இன்று பலர் முனைந்திருப்பதனாலேயே இப்படியான பிரச்சினைகள் காலத்திற்குக் காலம் தோற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஹதீஸ்களை விளக்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணு அணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்து கொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விஷயங்களைச் சரியாகவும் நேராகவும் புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும் கதைதான் நமது கதையாகிவடும்.

மேற்கண்ட அனைத்து விமர்சனங்களுக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் யஹ்யா சில்மி தான் என்பதை அவருடைய ஆய்வைக் காண்பவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

இவர் ஹதீஸ்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தன்னுடைய அரைகுறைத்தனத்தை எப்படியெல்லாம் வெளிக்காட்டியுள்ளார் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

யஹ்யா சில்மி பின்வருமாறு தனது மறுப்பைத் தொடங்குகிறார்.

சில்மியின் ஆய்வு 1 (?)

நாம் ஆராய வேண்டிய அம்சத்திற்கு வருவோம். சில எழுத்தாளர்கள் உழ்ஹிய்யாவை கூட்டுச் சேர்ந்து கொடுக்க முடியும் என்ற தமது கருத்துக்கு முன்வைத்துள்ள ஹதீஸை இப்போது நோக்குவோம்.

ஹுதைபிய்யா என்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்.

(முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

ஹுதைபிய்யா என்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ் செய்ய தடுக்கப்பட்ட போது நடந்த நிகழ்வினை எடுத்துக் கூறும் இந்த ஹதீஸ் உழ்ஹிய்யாவைப் பற்றி எந்த ஒரு செய்தியையும் குறிப்பிடவில்லை. எனினும் இந்த ஹதீஸ் தெளிவாகவே ஹத்யுல் முஹ்ஷர் (தடுக்கப்பட்டதற்கான குர்பானி) பற்றியே கூறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி ஹுதைபிய்யா என்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஹஜ் பயணம் தடைப்பட்டபோதே ஹத்யுல் முஹ்ஷர் நடைபெற்றது. எனவே எந்த வகையில் உழ்ஹிய்யாவை கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றுதல் என்பதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை முன்வைக்க முடியாது

நமது விளக்கம்

யஹ்யா சில்மி என்பவருக்கு ஹதீஸ்கள் பற்றிய அறிவு இல்லை என்பதற்கு இந்த வாதம் ஆதாரமாகும்.

ஹுதைபியாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கப்பட்டது உண்மை. ஆனால் அவர்கள் ஹஜ் செய்யச் சென்ற போது தடுக்கப்படவில்லை. மாறாக உம்ராச் செய்யச் சென்ற போது தான் தடுக்கப்பட்டனர். ஆனால் இவர் ஹஜ் செய்யப் போன போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷிக் காஃபிர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தமது தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு) விட்டுத் தமது தலையை மழித்துக் கொண்டார்கள். மேலும், அவர்களுடன், “வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களிடம் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின்படியே (அடுத்த ஆண்டு மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்ட போது, குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை (மக்காவை விட்டு) வெளியேறும்படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெளியேறி விட்டார்கள்.

நூல்: புகாரி 2701, 4252

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் உம்ராச் செய்ய புறப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

நபியவர்கள் ஹுதைபியாவில் உம்ராவை நிறைவேற்றுவதை விட்டும் தான் தடுக்கப்பட்டார்கள். நபியவர்கள் உம்ராவிற்காகத் தான் சென்றார்கள். ஆனால் இந்த ஆய்வாளரோ (?) ஹஜ்ஜை நிறைவேற்றுவதை விட்டும் தடுக்கப்பட்டதாகக் கூறுகிறார். இது தான் இவர் ஹதீஸை அணு அணுவாக ஆய்வு செய்கின்ற லட்சணம்.

உழ்ஹிய்யாவை கூட்டு முறையில் நிறைவேற்றலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீசும் ஆதாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனைப் பின்னால் நாம் விரிவாக விளக்க இருக்கின்றோம். ஆனால் மேற்கண்ட ஹதீஸை மட்டும் தான் நாம் கூட்டுக் குர்பானிக்கு ஆதாரமாகக் காட்டுகிறோம் என்பது தவறானதாகும்.

ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றும் உழ்ஹிய்யாவையும் கூட்டு முறையில் நிறைவேற்றலாம் என்று தெளிவாகவே வேறு ஹதீஸ்களில் வந்துள்ளது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டுச் சேர்ந்தோம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதி (829)

மேலும் இதே ஹதீஸ் திர்மிதி (1421), இப்னு மாஜா (3122), நஸாயீ (4316), அஹ்மத் (2354) இன்னும் பல நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகும். மேற்கண்ட ஹதீஸில்  “ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது”  என்ற வாசகம் கவனிக்கத் தக்கதாகும். இதிலிருந்து நபியவர்கள் காலத்தில் நபியவர்கள் முன்னிலையில் ஸஹாபாக்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நிறைவேற்றப்படும் உழ்ஹிய்யாவிலும் கூட்டுச் சேர்ந்து நிறைவேற்றியுள்ளார்கள் என்பது மிகத் தெளிவாகி விட்டது.

அனைத்து ஹதீஸ்களையும் முறையாக ஆய்வு செய்யாமல், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் சரியாக விளங்காமல் சட்டம் கூறுவதினால் தான் பல வழிகெட்ட கருத்துகள் உருவாகி விட்டன என்பதை இந்த ஆய்வாளரின் மூலம் நாம் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

சில்மியின் ஆய்வு 2 (?)

ஆம், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோ அல்லது அவர்களது தோழர்களான உத்தம சஹாபாக்களோ தமது வாழ்நாளில் உழ்ஹிய்யாவைக் கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்தால் நாமும் அப்படியே செய்வோம். எனினும் அவர்களது வாழ்க்கையில் இவ்வாறு நடந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லலை.

என்று சில்மி கூறுகிறார்

நமது விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களும், அவர்களது தோழர்களும் உள்ஹிய்யாவைக் கூட்டாக நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே உள்ஹிய்யாவை கூட்டு முறையில் நிறைவேற்ற எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது ஆய்வில் ஏற்பட்ட குறைபாடு தானே தவிர உண்மை நிலை அவ்வாறல்ல.

சில்மியின் ஆய்வு 3 (?)

ஹத்யு என்பது அல்லாஹ்வின் புனிதமான வீட்டைத் தரிசிக்க ஹஜ் உம்ராவை நிறைவேற்ற செல்லும் ஹாஜிகளின் மீது கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் இந்த ஹத்யு என்பதனைக் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறுமிடத்து அதற்குப் பரிகாரமாக ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், தமது இருப்பிடம் திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். என திருமறை வசனம் எடுத்துக் கூறுகிறது. (பார்க்க அல்பகறா 196) ஹாஜிகள் நிறைவேற்ற வேண்டியது. இந்த ஹத்யில் தான ஏழுபேர் கூட்டுச் சேர்ந்து கொடுக்க முடியும். எனவே ஹத்யு என்பது எந்த வகையிலும் உழ்ஹிய்யாவின் சட்டத்துடன் சேராது.

நமது விளக்கம்

மேற்கண்டவாறு இவர் கூறுவதற்கு காரணம் இவரது அறை குறை அறிவு தான்.

உள்ஹிய்யா என்பதற்கும் ஹத்யு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது உண்மை தான். ஆனால் இவர் சொல்லுகின்ற வித்தியாசம் அல்ல. உள்ஹிய்யா விரிந்த அர்த்தம் உள்ளது. ஹத்யு என்பது சுருங்கிய அர்த்தம் உடையதாகும். மனிதன் என்ற சொல்லுக்கும் உயிரினம் என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம் உள்ளதோ அதே வித்தியாசம் உள்ளது.

மனிதர்கள் அனைவரும் உயிரினம் என்று சொல்லலாம். உயிரினம் அனைத்தும் மனிதன் என்று சொல்ல முடியாது.

ஹாஜிகள் கொடுக்கின்ற குர்பானியை ஹத்யு என்றும் சொல்லலாம் உள்ஹிய்யா என்றும் சொல்லலாம்.

ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் பெருநாள் அன்று அல்லது அதற்கடுத்த மூன்று நாட்களில் கொடுக்கும் குர்பானியை உள்ஹிய்யா என்று சொல்லலாமே தவிர ஹத்யு என்று சொல்ல முடியாது.

அதாவது உள்ஹிய்யா என்ற வார்த்தை ஹாஜிகள் கொடுக்கின்ற குர்பானியையும், ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கின்ற குர்பானியையும் குறிக்கின்ற பொதுவான வார்த்தையாகும்.

இதற்குரிய ஆதாரங்களை நாம் பின்னால் குறிப்பிடவிருக்கின்றோம்.

எனவே ஹாஜிகள் கொடுக்கும் குர்பானிக்குக் கூறப்படும் சட்டம் ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கும் குர்பானிக்கும் பொருந்தக் கூடியதாகும்.

ஆனால் மேற்கண்ட ஆய்வாளரோ (?) தன்னுடைய அரைகுறை ஆய்வினால் ஹத்யு என்பது எந்த வகையிலும் உள்ஹிய்யாவின் சட்டத்தில் சேராது எனக் குறிப்பிடுகின்றார்.

ஹாஜிகள் கொடுக்கும் குர்பானியும் உள்ஹிய்யாவில் உள்ளடங்கியது தான் என்பதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

சான்று: 1

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் (“விடைபெறும்ஹஜ்ஜிற்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணவில்லை. (மக்காவிற்கு அருகிலுள்ள) “சரிஃப்என்ற இடத்தில் நாங்கள் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்என்றேன்.

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்) ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் விதியாக்கிய விஷயமாகும். ஆகவே நீ, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நிறைவேற்று! ஆனால், இறையில்லமாகிய கஅபாவை மட்டும்  சுற்றி (தவாஃப்) வராதேஎன்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின் போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை உள்ஹிய்யா கொடுத்தார்கள்.

நூல்: புகாரி 294, 5548

நபியவர்கள் ஹஜ்ஜின் போது கொடுத்த குர்பானிக்கும் உள்ஹிய்யா  என்று கூறலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் தெளிவான சான்றாகும்.

இதனுடைய அரபி மூலத்தில்   நுóஹீóøரூ   (உள்ஹிய்யா கொடுத்தார்கள்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

சான்று: 2

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உள்ஹிய்யா பிராணியை அறுத்துவிட்டு, “ஸவ்பான்! இந்த இறைச்சியை (பயணத்தில் கொண்டு செல்வதற்கேற்ப) தயார் செய்என்று கூறினார்கள். நான் (அவ்வாறே தயார் செய்து) மதீனா வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன்.

நூல்: முஸ்லிம் (3993)

இங்கு உள்ஹிய்யா பிராணி என்பதற்கு அரபி மூலத்தில் நுóஹீöலூóøனீ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இது நபியவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் தமக்குரிய பலிப் பிராணியை அறுத்து விட்டுக் கூறியதாகும்.

சான்று: 3

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (ஹஜ்ஜின் போது அறுக்கப்படும்) உள்ஹிய்யா பிராணிகளின் இறைச்சிகளை (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு(ச் செல்லும் போது) பயண உணவாக எடுத்துச் செல்வோம்

நூல்: புகாரி (2980)

இதன் அரபி மூலத்தில் ளீகூúரீóநுóளீஹீöலூöø  (உள்ஹிய்யா பிராணிகள்) என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

ஹஜ்ஜை நிறைவேற்றும் போது கொடுக்கப்படும் குர்பானிக்கு உள்ஹிய்யா என்றும் கூறலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸும் தெளிவான சான்றாகும்.

மேற்கண்ட ஹதீஸில் “ஹஜ்ஜின் போது” “மக்காவிலிருந்து” என்ற வார்த்தைகள் அடைப்புக் குறிக்குள் இடம் பெற்றுள்ளது. மூலத்தில் அவ்வாறு இல்லையென்றாலும்  ஜாபிர் அவர்களின் பிற அறிவிப்புகளிலிருந்து இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணாமல் இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இப்போது நீங்கள் உண்ணலாம்; சேமித்தும் வைக்கலாம்என்று கூறி, எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள். “நாங்கள் மதீனா வரும்வரை (சேமித்து வைத்தோம்)” 

நூல்: முஸ்லிம் (3988)

மேற்கண்ட ஹதீஸிலிருந்து ஜாபிர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜில் அறுக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சியை மக்காவிலிருந்து மதீனாவிற்கு கொண்டு வருவதைத் தான் புகாரி 2980வது ஹதீஸ் குறிப்பிடுகிறது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேற்கண்ட சான்றுகளிலிருந்து உள்ஹிய்யா என்ற வார்த்தை ஹாஜிகள் கொடுக்கும் குர்பானிக்கும், ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கும் குர்பானிக்கும் உரிய பொதுவான வார்த்தை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

எனவே உள்ஹிய்யாவை ஹாஜிகளும், ஹாஜிகள் அல்லாதவர்களும் நிறைவேற்ற வேண்டும் எனும் போது ஹாஜிகள் உள்ஹிய்யாவில் கூட்டுச் சேரலாம் என்றால் ஹாஜிகள் அல்லாதவர்களும் உள்ஹிய்யாவில் கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம் என்பது தான் தெளிவான முடிவாகும்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி “தல்பியாசொன்னவர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் இறையில்லத்தைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடினோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலால் ஆகி)க் கொள்ளட்டும்என்றார்கள். நாங்கள், “எந்த வகையில் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எல்லா வகையிலும் இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள்என்றார்கள். ஆகவே, நாங்கள் மனைவியரிடம் சென்றோம் (தாம்பத்திய உறவு கொண்டோம்); (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்; நறுமணம் பூசிக் கொண்டோம். துல்ஹஜ் எட்டாவது நாள் (யவ்முத் தர்வியா) வந்த போது, ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறினோம். (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து “இஹ்ராம்கட்டியிருந்த) நாங்கள் ஏற்கெனவே ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடியதே எங்களுக்குப் போதுமானதாக அமைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்) கொள்ள உத்தரவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் (2325)

இது பல்வேறு வார்த்தை மாற்றங்களுடன் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப் பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் (2538)

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றபோது, ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அறுத்துப் பலியிட்டோம்.

நூல்: முஸ்லிம் (2539)

மேலும் முஸ்லிம் 2540, 2541, 2542 ஆகிய எண்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

ஹாஜிகள் அல்லாதவர்களும் கூட்டு முறையில் குர்பானி கொடுக்கலாம் என்பதற்குரிய ஆதாரத்தை நாம் முதலில் பார்த்து விட்டோம்.

மேலும் உள்ஹிய்யா என்பதில் ஹாஜிகளும், ஹாஜிகள் அல்லாதவர்களும் ஒன்றுபடுவதால் ஹாஜிகளுக்குக் கூறப்படும் சட்டம் ஹாஜிகள் அல்லாதவர்களுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் கூட்டு முறையில் மாடு, ஒட்டகக் குர்பானியை நிறைவேற்றுவதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமாகும்.

பொதுவாக ஹாஜிகள் கொடுக்கின்ற ஹத்யு என்ற குர்பானியிலும், ஹுதைபியா ஆண்டில் உம்ராச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்ட போது ஹத்யாக கொடுக்கப்பட்ட குர்பானியிலும், ஹஜ்ஜுப் பெருநாள் அன்று ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கின்ற குர்பானியாக இருந்தாலும் கூட்டு முறையில் நிறைவேற்றலாம் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

எனவே கூட்டு முறையில் குர்பானி கொடுப்பது கூடாது என்று கூறுவது நபிவழிக்கு எதிரானதாகும்.

நபியவர்கள் பலிப் பிராணிகள் கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டு முறையில் கொடுக்கச் சொன்னார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. ஹுதைபியாவின் போது கொடுக்கப்பட்டதை ஒருவர் ஆதாரமாகக் காட்டினால் அதுவும் தவறானதாகும். நபியவர்கள் ஹஜ்ஜின் போதும் அவ்வாறு கூட்டு முறையில் நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒருவர் விரும்பினால் தனியாகவும் நிறைவேற்றலாம். கூட்டு முறையிலும் நிறைவேற்றலாம். அவரவரின் மனத் தூய்மைக்கும் தகுந்தவாறும், செலவீனங்களுக்குத் தகுந்தவாறும் அல்லாஹ் நன்மைகனை வழங்குவான்.

மேலும் ஒருவர் ஒரு ஆட்டைத் தனியாகக் குர்பானி கொடுப்பதும் கூட்டு முறையில் பத்து பேர் ஒரு ஒட்டகத்தில் பங்கு சேர்வதும் சமமானது தான்.

நபியவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள்.

அறிவிப்பவர்: ராஃபிவு பின் ஹதீஜ் (ரலி)

நூல்: புகாரி (2488)

சில்மியின் ஆய்வு 4 (?)

அபு அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறுவதாவது

நாங்கள் ஒரு ஆட்டை அறுப்பவர்களாக இருந்தோம். அதனை ஒருவர் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் அறுப்பார். பின்னவர் மக்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் அது பெருமைப்படக்கூடியதாக மாறிவிட்டது.

(ஸஹீஹ் இமாம் மாலிக்கின் முஅத்தாஃ, கிதாப் இலக்கம் 23, மிருகங்கள் குர்பான் கொடுத்தல் பாடம், இன்னும் எத்தனை பேர் மாட்டிலும் ஒட்டகத்திலும் பங்கெடுப்பது. ஹதீஸ் இலக்கம் 10)

நமது விளக்கம்

மேற்கண்ட ஹதீஸில் ஒருவர் தனது குடும்பத்தின் சார்பாக ஒரு ஆட்டை அறுத்தால் போதுமானது என்ற கருத்து தான் உள்ளடங்கியுள்ளது. இது ஒரு போதும் கூட்டுக் குர்பானி கூடாது என்பதற்கு ஆதாரமாகாது. ஒருவர் தமது குடும்பத்தினர் சார்பாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பது கூடும் என்றே நாமும் கூறி வருகிறோம்.

சில்மியின் ஆய்வு 5 (?)

மேற்குறித்த ஹதீஸை தனது நூலில் எடுத்து வைத்த இமாம் மாலிக் அவர்கள் அதனை தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறாகள்.

ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய உழ்ஹியாக் கொடுக்கும் பிராணிகளில் நான் செவிமடுத்தவைகளில் மிகவும் சிறப்பானது எதுவெனில் ஒரு மனிதன் தனக்காவும் தனது குடும்பத்தினருக்காவும் ஒரு ஒட்டகத்தை அறுப்பதாகும். இன்னும் ஒரு மனிதன் தனக்குச் சொந்தமான மாட்டையோ அல்லது ஆட்டையோ அறுப்பதாகும். அதனை அவரது குடும்பத்தினருக்காவும் அறுத்து அவர்களையும் அதில் சேர்த்துக் கொள்வார். இன்னும் சிலர் ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு போன்ற ஏதேனும் ஒன்றை வாங்கி குர்பானி (நுஸ்க்) கொடுப்பதற்கு உழ்ஹிய்யாவில் கூட்டுச் சேர்ந்து கொள்கிறர்கள். அதன் பின்னர் அவரவர் தனது பங்கிற்குரிய தொகையை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் அவரவருக்கு அதனது இறைச்சியிலிருந்து ஒரு பங்கை பெற்றுக் கொள்கிறர்கள். நிச்சயமாக இது வெறுக்கத்தக்கதாகும். நாங்கள் ஹதீஸில் செவிமடுத்ததில் வணக்கமாக செய்யப்படும் குர்பானியில் கூட்டுச் சேரமுடியாது. நிச்சயமாக ஒருவர் தனது பொறுப்பிலுள்ள குடும்பத்திற்காக மட்டுமே முடியும்   (முஅத்தா)

இமாம் மாலிக் அவர்களின் பத்வா இந்த விஷயத்தில் மிக உறுதியான பத்வாவாகும்.

நமது விளக்கம்

இங்கு தான் யஹ்யா சில்மி எப்படிப்பட்ட சில்மிஷக்காரர் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இமாம் மாலிக் அவர்களின் கருத்து சில்மியின் கருத்திற்கு எதிரானதாகும். ஆனால் இந்த மார்க்க வியாபாரிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக எத்தகைய புரட்டுதல்களை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இமாம் மாலிக் அவர்களின் கருத்தை சில்மி மாற்றி மொழிபெயர்த்திருப்பது தெளிவான சான்றாகும்.

சில்மியின் கருத்துப்படி ஹாஜிகள் குர்பானி கொடுக்கும் போது கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கும் குர்பானி உள்ஹிய்யாவாகும். அதில் கூட்டுச் சேர்வது கூடாது என்று அவர் கூறியிருந்ததை முன்னால்  கண்டோம்.

அரபி மொழியில் பலிப் பிராணிகளைக் குறிக்கும் போது நுஸ்க் என்றால் ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கும் பிராணியாகும்.

உள்ஹிய்யா என்றால் இரண்டையும் குறிக்கும் என்றாலும் இங்கே இமாம் மாலிக் அவர்கள் ஹஜ் செய்யாதவர்கள் கொடுக்கும் குர்பானியைக் குறிக்க உள்ஹிய்யா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இமாம் மாலிக் அவர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் சிலர் ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு போன்ற ஏதேனும் ஒன்றை வாங்கி ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப் பிராணியிலும்  உள்ஹிய்யாவிலும் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் அவரவர் தனது பங்கிற்குரிய தொகையை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் அவரவருக்கு அதனது இறைச்சியிலிருந்து ஒரு பங்கைப் பெற்றுக் கொள்கிறார்கள். நிச்சயமாக இது வெறுக்கத்தக்கதாகும்.

இது தான் சரியான மொழிபெயர்ப்பாகும். ஆனால் சில்மி இங்கு கள்ளத்தனம் செய்து தனது சில்மிஷத்தைக் காட்டியுள்ளார்.

குர்பானி கொடுப்பதற்கு (நுஸ்க்) உழ்ஹிய்யாவில் கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள் என்று சில்மி மொழிபெயர்த்துள்ளார். இது முற்றிலும் தவறானதாகும். இவ்வாறு மொழிபெயர்க்க இங்கு இயலவே இயலாது. இங்கே நுஸ்க் என்பதற்கு குர்பானி கொடுத்தல் என்று மொழிபெயர்த்துள்ளார். இந்த இடத்தில் இவ்வாறு மொழிபெயர்க்கக் கூடாது.

ஏனென்றால் இங்கே நுஸ்க் என்பதற்கு ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப் பிராணி என்ற சரியான பொருளைச் செய்தால் அதைத் தொடர்ந்து இமாம் மாலிக் கூறுகின்ற கருத்து சில்மிக்கு எதிராக அமைந்து விடும்.

இதோ இமாம் மாலிக் கூறுவதைப் பாருங்கள்:

நிச்சயமாக நாம் ஹதீஸில் செவியேற்றிருப்பது ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப்பிராணியில் கூட்டுச் சேர்தல் என்பது கிடையாது. நிச்சயமாக அது ஒரு குடும்பத்திற்கு மட்டுமே உரியதாகும்.

இது தான் சரியான மொழிபெயர்ப்பாகும். அதாவது இமாம் மாலிக் அவர்கள் ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப் பிராணியில் கூட்டுச் சேர்வது கூடாது என்று தான் கூறியுள்ளார்கள். (அது தவறானது என்பது தனி விஷயம்) இதிலிருந்து ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கின்ற உள்ஹிய்யாவில் கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம் என்பது தான் இமாம் மாலிக் அவர்கள் கூற வருகின்றார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் சில்மி தனது சில்மிஷத்தினால் இந்தச் சரியான மொழிபெயர்ப்பைத் திரித்து வணக்கமாகச் செய்யப்படும் குர்பானியில் கூட்டுச் சேர முடியாது என்று மொழி பெயர்த்துள்ளார்.

ஒரு வாதத்திற்கு இந்த மொழிபெயர்ப்பு சரியென்று வைத்துக் கொண்டால் ஹாஜிகள் கொடுக்கின்ற குர்பானி வணக்கம் கிடையாதா? ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கின்ற உள்ஹிய்யா மட்டும் தான் வணக்கமா? என்ற கேள்விகள் எழும்.

இரண்டுமே வணக்கம் என்றால் நபியவர்கள் ஹாஜிகள் குர்பானியில் கூட்டுச் சேரலாம் என்று கூறியுள்ளார்களே நபியவர்கள் தவறாகக் கூறி விட்டார்களா? என்ற கேள்விக்கு பதில் கூறியாக வேண்டும்.

எப்படி வைத்துக் கொண்டாலும் இந்த மொழிபெயர்ப்பு தவறானதாகும்.

தனக்கு எதிரான மாலிக் இமாமின் கருத்தை வளைத்து, தவறாக மொழி பெயர்த்து தனக்குச் சாதகமான கருத்தைப் போன்று கூறியுள்ளார்.

மார்க்கச் சட்டத்தில் கள்ளத்தனம் செய்யும் இத்தகையவர்கள் விஷயத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இமாம் மாலிக் அவர்கள் ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப்பிராணியில் கூட்டுச் சேரக்கூடாது என்று கூறியிருப்பது நபியவர்களின் தெளிவான ஹதீஸிற்கு எதிரானதாகும். எனவே அதன் பக்கம் திரும்ப வேண்டிய அவசியமில்லை.

இமாம் ஷாஃபி அவர்கள் இமாம் மாலிக் அவர்களின் கருத்து தவறு என்று தன்னுடைய அல்உம்மு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சில்மியின் ஆய்வு 6 (?)

எவரிடம் உழ்ஹிய்யா கொடுக்க சக்தியிருந்தும் அறுத்துப் பலியிடவில்லையோ கண்டிப்பாக அவர் தொழுமிடத்தை நெருங்க வேண்டாம்.   (இப்னுமாஜா 2. 123, ஹகிமா 2/289, அஹ்மத்)

இந்த ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில் உழ்ஹிய்யாவுக்குரிய மிருகத்தை பெற்றுக் கொள்ள சக்தியுள்ளவர், வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் இந்த உழ்ஹிய்யாவை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பதாகும்.

நமது விளக்கம்

இது நபியவர்களின் கூற்று கிடையாது. இது (மவ்கூஃப்) நபித்தோழரின் சொந்தக் கூற்றாகும்.

இதனை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரி என்று நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த ஹதீஸிலிருந்து உள்ஹிய்யா கட்டாயக் கடமை என்பதை விளங்கிக் கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார்கள்.

உள்ஹிய்யா கட்டாயக் கடமை என்பதற்கு ஆதாரமாக எடுக்கத் தக்கது அபூஹுரைரா அவர்கள் மர்ஃபூவாக அறிவிக்கூடிய, “யார் வசதியைப் பெற்றும் உலுஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய தொழுமிடத்தை நெருங்க வேண்டாம்’ என்ற ஹதீஸாகும்.

இதனை இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இதனுடைய அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இது நபியவர்களின் கூற்றா? ஸஹாபியின் கூற்றா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது ஸஹாபியின் சொந்தக் கூற்று என்பது தான் சரியானதாகும். தஹாவீ மற்றும் சில அறிஞர்கள் இதனைக் கூறியுள்ளனர். அத்துடன் கட்டாயக் கடமை என்ற கருத்து இதில் மிகத் தெளிவாக இல்லை.

நூல்: ஃபத்ஹுல் பாரி, பாகம்: 10 பக்கம்: 3

சரியாக ஆய்வு செய்யாமல் ஆதாரத்திற்கு எடுக்க முடியாத செய்திகளையும் இந்த ஆய்வாளர் (?) மிக நுணுக்கமாக ஆய்வு செய்து கூறியுள்ளார். இதன் மூலம் இவருடைய ஆய்வின் தரத்தை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மொத்தத்தில் கூட்டுக் குர்பானி கூடாது என்பதற்கு அவர் தன்னுடைய பிரசுரத்தில் எடுத்து வைத்துள்ள வாதங்கள் நபியவர்களின் தெளிவான வழிகாட்டுதல்களுக்கு எதிரானதாகும். மேலும் ஹதீஸ்களில் ஆழ்ந்த ஞானமின்றி அரை குறை ஆய்வுடன் எழுதப்பட்ட ஒன்றாகும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

—————————————————————————————————————————————————————-

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்      தொடர்: 8

தாம்பத்தியத்திற்குத் தடை?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மாநபி வழி

கணவன், மனைவி இருவரும் இல்லற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு ஒழுங்குகளை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதில் மனைவியுடன் உறவு கொள்ளக்கூடாத நாட்கள் எவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் வரும் நாட்களில் மட்டும் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது, இதை தவிர வேறு எந்த நாளிலும் உறவு கொள்ளலாம் என்பது இஸ்லாத்தின் அறிவுரை ஆகும். இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான் எனக் கூறுவீராக!  (அல்குர்ஆன் 2:222)

மாதவிலக்கு ஏற்பட்ட நாட்களை தவிர ஒருவர் தம் மனைவியுடன் தாம் விரும்பிய எந்த நாளிலும் எந்த நேரத்திலும் உறவு கொள்ளலாம். இஹ்ராம் அணிந்த நிலையிலும், நோன்புக் காலங்களில் பகலிலும் உறவு கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர உறவு கொள்ளத்தகாத நாட்கள் என்று இஸ்லாம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

மத்ஹபு வழி

மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று இஸ்லாத்திற்கு எதிராக மத்ஹபு போதிக்கின்றது.

மாதத்தில் முதல் நாள் இரவிலும் கடைசி இரவிலும் மாதத்தின் நடு இரவிலும் உடலுறவு கொள்வது வெறுப்பிற்குரியதாகும். காரணம் இந்த இரவுகளில் உடலுறவு கொள்ளும் போது ஷைத்தான் விஜயம் செய்கின்றான் என்று இஹ்யாவில் வருவதாக முக்னி என்ற நூலில் பதிவாகியுள்ளது.

நூல்: இஆனா, பாகம் 3, பக்கம் 273

பொதுவாக, மாதவிலக்கு ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்று இறைவன் கூறியிருக்கும் போது இந்த நூலாசிரியர் தனக்கு ஏதோ வஹீ வந்தது போன்று தன் இஷ்டத்திற்கு சில நாட்களைக் குறிப்பிட்டு அதில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிக்கின்றார்.

அது மட்டுமின்றி அந்த நேரத்தில் ஷைத்தான் விஜயம் செய்வதாகக் காரணம் வேறு.

இந்த நாட்களில் உறவு கொள்ளக்கூடாது என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் உள்ளதா? அல்லது  இச்சட்டத்தை இறைவன் இயற்றினானா? இச்சட்டத்திற்கு குர்ஆனையோ, நபிவழியையோ குறிப்பிடாமல் அந்த நூலில் உள்ளது, இதில் உள்ளது என்று குறிப்பிடுவதிலிருந்தே இது இறைச்சட்டம் அல்ல என்பது தெளிவாகிறது.

இறைவன் நேரடியாகவோ, தன் தூதர் மூலமாகவோ இயற்றாத சட்டம் ஒரு போதும் செல்லாது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கின்றார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது, (செல்லாது) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனை தான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2155

அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ தடுக்காத ஒன்றை, கூடாது என்று சொல்லும் இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. இதை இறைவன் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

“இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது” என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)

அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்!என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சியமளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, மறுமையை நம்பாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர். (அல்குர்ஆன் 6:150)

இறைவன் தடுக்காததை தம் அளவில் தடுத்த நபிகள் நாயகத்தையே இறைவன் கண்டித்துள்ளான்.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் (66:1)

ஆனால் மத்ஹபோ இன்னின்ன நாட்களில் உறவு கொள்ளக்கூடாது என்று அர்த்தமற்ற, ஆதாரமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கின்றது. எனவே குறிப்பிட்ட நாட்களில் உறவு கொள்ளக்கூடாது என்று இறைவன் தடுக்காததைத் தடை செய்து நபிவழியுடன் மோதுகின்ற மத்ஹபைப் புறக்கணிப்போம். குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுவோம்.

ஆலிம்களுக்காக எழுந்து நிற்பது

மத்ஹபு வழி

ஆலிம்களுக்காக எழுந்து நிற்பதைப் போன்று குர்ஆனிற்காக எழுந்து நிற்பது சுன்னத்தானது. மாறாக ஏற்றமானது.

(ஃபத்ஹுல் முயீன் பாகம்: 1 பக்கம்: 69)

குர்ஆனிற்காகவும், ஆலிம்களுக்காவும் எழுந்து நிற்க வேண்டும், அது சுன்னத் என்று ஷாஃபி மத்ஹபின் சட்டவிளக்க நூலில் கூறப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாக வைத்தே சுன்னத் ஜமாஅத் மத்ரஸாக்களில் ஆசிரியர்களுக்காக மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக வைத்திருக்கிறார்கள். மார்க்கத்தை (?) போதிக்கும் அந்த ஆசான்களும் அதைப் பெருமையோடு ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு மனிதர்களுக்காக எழுந்து நிற்பதை மாநபி வழி அனுமதிக்கின்றதா?

மாநபி வழி

முஆவியா (ரலி) அவர்கள் வெளியே செல்வதற்காகப் புறப்பட்டார்கள். அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களும், இப்னு ஸஃப்வான் (ரலி) அவர்களும் அவரைக் கண்ட போது எழுந்து நின்றார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், “நீங்கள் இருவரும் உட்காருங்கள். “மனிதர்கள் தனக்காக எழுந்து நிற்பது யாருக்கு மகிழ்ச்சியளிக்குமோ அவர்கள் தங்களது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்என்று நபியவர்கள் கூறியதை நான் கேட்டேன்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ், நூல்: திர்மிதி 2679

நபியவர்களை விடவும் நபித்தோழர்களுக்கு மிகவும் நேசத்திற்குரியவர் யாரும் இருக்கவில்லை. தமக்காக எழுந்து நிற்பதை நபியவர்கள் வெறுத்த காரணத்தினால் நபித்தோழர்கள் யாரும் நபியவர்களை காணும் போது எழுந்து நிற்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), திர்மிதி 2678

பிறர் தனக்காக எழுந்து நிற்பதை நபியவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், அவ்வாறு விரும்புவன் நரகத்திற்குரியவன் என்றும் மேற்கண்ட ஹதீஸ்கள் எடுத்துரைக்கின்றன. நபிகள் நாயகத்திற்காகவே எழுந்து நிற்கக் கூடாது என்றால் ஏனைய மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறிருக்கும் போது ஆலிம்களுக்காக எழுந்து நிற்பது சுன்னத் என்று மத்ஹபு போதிக்கின்றதே? இது நபிவழியைப் பிரதிபலிக்கும் போதனையா? இது சரிதானா?

நபிகளார் எதை விரும்ப மாட்டார்கள் என்று ஹதீஸில் வந்துள்ளதோ அதையே சுன்னத் என்று சட்டம் சொல்வதிலிருந்து மத்ஹபு நபிவழிக்கு முரணானதே என்பது தெள்ளிய நீரோடையைப் போன்று தெளிவாகிறது.

இதில் குர்ஆனிற்காக எழுந்து நிற்பதையும் சுன்னத் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நமது காலத்தில் உள்ளதைப் போன்று குர்ஆன் தொகுக்கப்பட்ட புத்தமாக நபிகள் நாயகத்தின் காலத்தில் இல்லை என்பதை அறிந்தாலே இச்சட்டத்திற்கும் நபிவழிக்கும் சம்பந்தமில்லை என்பதை அறியலாம். மேலும் நபிகளார் காலத்தில் குர்ஆனுடைய வசனங்களை தோலிலும், எலும்பிலும் ஸஹாபாக்கள் எழுதி வைத்திருந்தார்கள். இதற்காக எழுந்து நிற்க வேண்டும் என நபிகளார் கூறியதுமில்லை. யாரும் இவற்றிக்காக எழுந்து நிற்கவும் இல்லை.

எனவே இவர்கள் கூறிய சட்டம் யாவும் நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் மாபாதகச் செயலே அன்றி துளியும் உண்மையில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறாத ஒன்றை, நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி), நூல்: புகாரி 109

கத்னா விருந்து

மத்ஹபு வழி

கத்னாவிற்கு செய்யப்படுவதைப் போன்று ஏனைய விருந்துகளுக்குப் பதிலளிப்பது சுன்னத்தாகும்

(ஃபத்ஹுல் முயீன் பாகம்: 3 பக்கம்: 363)

கத்னா விருந்துக்கு யாரேனும் அழைத்தால் அவ்வழைப்பை ஏற்று, விருந்தில் கலந்து கொள்வது நபிவழி என்று மத்ஹபு கூறுகின்றது.

மாநபி வழி

ஆண்கள் கத்னா செய்வது இயற்கை மரபு என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5889

கத்னா செய்வது இயற்கை மரபு என்று கூறியுள்ளார்களே தவிர இதற்கு விருந்தளிக்க வேண்டும் என்றோ, அந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றோ நபிகள் நாயகம் எங்கும் கூறவில்லை.

மேலும் கத்னா செய்வதென்பது நகம் வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற சாதாரண செயலே. இவைகளுக்கு எப்படி விருந்தளிப்பது அவசியமற்றதோ அது போன்று கத்னாவிற்கு விருந்தளிப்பது அவசியமற்றது என்பதை நபிகள் நாயகம் இந்த செய்தியின் வாயிலாக உணர்த்துகின்றார்கள்.

கத்னாவிற்கு விருந்தளித்தல் என்ற நடைமுறை நபியவர்களின் காலத்தில் அறவே இல்லை. நபிகளாரின் காலத்தில் இல்லாததை மத்ஹபு சுன்னத் என்கிறதே? இது தான் நபிவழியைப் பின்பற்றி சட்டம் இயற்றுவதா?

மத்ஹபைப் பின்பற்றும் பல முஸ்லிம்கள் கத்னா விருந்தை ஏதோ மார்க்கக் கடமை போன்று எண்ணி தங்கள் பொருளாதாரங்களை விரையம் செய்வதற்கு மத்ஹபின் இந்தச் சட்டமே தூண்டுதலாக உள்ளது.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 17: 27

நம்மை ஷைத்தானின் நண்பர்களாக மாற்றும் வீண் விரையத்தை செய்யத் தூண்டும் மத்ஹபு சட்டங்கள் நபிவழி அடிப்படையில் நம்மை அழைத்துச் செல்லுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்த விருந்தழைப்புக்குப் பதிலளிப்பது சுன்னத் என்று சொல்லி நம்மை இறைவனின் கோபத்திற்குரியவர்களாக மாற்றும் வேலையைத் தான் மத்ஹபு செய்கின்றது. எனவே இதிலிருந்து தப்பிக்க மத்ஹப் என்ற மாயையிலிருந்து விலகுவோமாக.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)

பிறையை சுட்டிக்காட்டுதல்

மத்ஹபு வழி

பிறையைப் பார்த்தால் அதன் பக்கம் சுட்டிக் காட்டுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனென்றால் இது அறியாமைக்கால பழக்கவழக்கங்களில் உள்ளதாகும்

(துர்ருல் முஹ்தார் பாகம்: 2 பக்கம்: 433)

பிறையை சுட்டிக்காட்டுவது அறியாமைக்கால பழக்கம் என்பதால் அது கூடாது என்று இதில் சொல்லப்பட்டுள்ளது.

மாநபி வழி

இஸ்லாத்தில் உள்ள சில வணக்க வழிபாடுகளுக்கும் பிறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ரமலான் மாத நோன்பு, பெருநாள் ஆகியவைகளை பிறையைப் பார்த்து தீர்மானிக்க வேண்டும் என்று நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1909

மினாவில் தங்குதல், ஸயீ, கல்லெறிதல் போன்ற ஹஜ்ஜின் கிரியைகள் அனைத்தும் பிறையை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகின்றது. மேலும் அரஃபா மற்றும் ஆஷுரா நோன்பு, மாதத்தில் 13, 14, 15 நோன்பு போன்ற சில நஃபிலான நோன்புகளை நோற்பதற்குப் பிறை பார்க்கப்பட்டு கணக்கிடப்படுவது அவசியமாகிறது.

இவ்வாறு இஸ்லாத்தின் பல காரியங்களுக்கும் பிறை பார்க்கப்படுவது அவசியம் எனில் பிறையைப் பார்த்த ஒருவர் மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக அதை சுட்டிக்காட்டுவது எப்படி தவறாகும்? பிறை அதோ அங்கு உள்ளது என்று சுட்டிக் காட்டினால் தானே மற்றவர்கள் பார்க்க முடியும்?

இதை அறியாமைக் கால பழக்கம் என்றால் நபியவர்கள் இவ்வாறு கூறினார்களா?

நாங்கள் “ஒரு போரில்அல்லது “ஒரு படையில்இருந்துகொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி “அன்சாரிகளே! (உதவுங்கள்.)என்று கூறினார். அந்த முஹாஜிர் “முஹாஜிர்களே! உதவுங்கள்!என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, “இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குல மோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 4905

தங்களுக்கு ஏற்படும் பிரச்சனையில் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்துள்ள குலத்தைக் குறிப்பிட்டு உதவிக்கு அழைப்பது அறியாமைக்கால பழக்கம் என்று நபிகளார் இதில் கூறியுள்ளார்கள். இவ்வாறு பிறையை சுட்டிக் காட்டுவதைப் பற்றி நபிகளார் எங்காவது கூறியிருக்கின்றார்களா? பிறையை சுட்டிக்காட்டுவது கூடாது என்று மத்ஹபு சொல்வதற்கு நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை. இது அடிப்படை ஆதாரமற்ற, அர்த்தமற்ற சட்டம்.

நபிவழிக்கு துளியும் சம்பந்தமில்லாத, அர்த்தமற்ற சட்டங்களை மத்ஹபு மக்களுக்குப் போதிப்பது இது ஒன்றும் புதிதல்ல. மாறாக எத்தனையோ மூடத்தனமான சட்டங்களைப் போதித்துள்ளது என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இதற்கு இன்னும் ஒரு உதாரணமாக பின்வரும் சட்டத்தை சொல்லலாம்.

மனிதன் அல்லது ஒரு நாய் சோப்பு பாத்திரத்தில் விழுந்து சோப்பாக மாறிவிட்டால் அது தூய்மையானதாகும். (மனிதன் மற்றும் நாயின்) தன்மை மாறிவிட்டதின் காரணத்தினால் (ரத்துல் முஹ்தார் பாகம்: 2 பக்கம்: 465)

இதைப் பற்றி விரிவாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை. படிக்கும் போதே இது எவ்வளவு முட்டாள்தனமான சட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

எப்படித்தான் இவர்களுக்கு இப்படியெல்லாம் கற்பனை வருகின்றதோ தெரியவில்லை. இது தான் மத்ஹபு சட்டங்களின் நிலை என்பதைப் புரிந்து கொண்டால் சரி.

—————————————————————————————————————————————————————-

மலையின்றி மழையில்லை

செப்டம்பர் இதழின் தொடர்ச்சி…

தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகளின் பயன்களையும் அதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்ற மதில் சுவர்கள் போன்ற பாதுகாப்புகளையும் கடந்த தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மலைகளின் இன்னபிற பயன்களைப் பார்ப்போம். இந்த மலைகள் உண்மையில் வானிலிருந்து பொழிகின்ற மழைக்கு மட்டுமல்ல! பனிப்பொழிவின் வங்கிகளாகவும் திகழ்கின்றன.

தென்மேற்குப் பருவமழை, நிலப்பகுதிகளில் இடைவிடாத அடைமழையை அள்ளிப் பொழியும் அதேவேளையில் மலைகளின் உச்சிகளில் பனிமழையைப் பொழிகின்றது.

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.  (அல்குர்ஆன் 77:27)

மலையையும் மழைநீரையும் இணைத்துக் கூறும் இந்த இறைவசனம் எவ்வளவு பொருத்தமாக, பொருள் பொதிந்ததாக அமைந்திருக்கின்றது என்பதை நினைத்து நம்முடைய நாவுகள் ஆச்சரிய மேலீட்டால் சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன் என்ற திக்ரு மழையில் நனைகின்றன.

உலகிலேயே உயரமான மலைத்தொடரான இமயமலை, மியான்மரில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை 2000 கி.மீ. வரை பரந்து விரிந்திருக்கின்றது. இதன் பெரும்பகுதி தெற்காசிய நாடுகளில் தான் உள்ளது.

இவ்வளவு பெரிய மலைப் பரப்பில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இமயத்தின் மத்திய, கிழக்கு மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஆரம்பித்து, அவை பனிப்பாறைகளாகப் பாதுகாக்கப்படுகின்றன.

புவியின் இரு துருவத்தின் பனிமலைகளுக்கு அடுத்த பெரிய பனிமலைகளாக இந்த மலைப்பரப்பு அமைந்திருக்கின்றது.

கங்கை, பிரம்மபுத்திரா, இண்டஸ், சல்வீன், மேகாங், யாங்டெஸ், ஹுவான் ஹோ ஆகிய ஏழு நதிகள் வற்றாத நதிகளாக ஓடிக் கொண்டிருக்கக் காரணம் இந்த மலைத் தொடர் தான். இந்த ஆறுகள் தான் தெற்காசியாவில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர், வேளாண்மைக்கான விளைநீர், மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவைத் தருகின்ற உயிர் நீர்.

இந்த மலையில் 33,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் படர்ந்திருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால் தான் இந்த நதிகளுக்குத் தண்ணீர் கிடைக்கிறது.

இதற்கு இப்போது ஒரு பெரிய ஆபத்து, மனிதர்கள் ஏற்படுத்தும் புவி வெப்பத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை இப்போது பார்ப்போம்.

இந்தப் பனிப்பாறைகள் அளவுக்கு அதிகமாக உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இன்னும் 30 ஆண்டுகளில் வற்றிப் போய் விடும் என்று எச்சரிக்கின்றார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.

பனிப்பொழிவு பனிப்பாறையாக மாறி அது உருகி ஆறாக ஓடி வந்தால் அது இயற்கை. அந்த இயற்கையான நியதி மாறி, பனிப்பாறைகள் வழக்கத்துக்கு மாறாக, படுவேகமாக உருக ஆரம்பித்திருப்பது தான் பேரழிவைத் தரும் என்று சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படிப் பனிப்பாறைகள் வேகமாக உருகக் காரணம் புவியின் வெப்பநிலை அதிகரிப்பு. இதை குளோபல் வார்மிங் என்கிறார்கள்.

வழக்கமாக இந்த மலைப்பகுதியில் ஆண்டுக்கு 0.06 டிகிரி செல்சியஸ் தான் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் பனிப்பாறைகள் உருகுவது அதிகரித்தாலும், மலைத் தொடரிலேயே உள்ள பனிப்பாறை ஏரிகள் நிரம்பி, பிறகு தான் தண்ணீர் வழிந்தோடும். அதனால் பெரிய அளவில் ஆபத்தில்லை.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இமயமலைப் பகுதியின் வெப்பநிலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு டிகிரி செல்சியசுக்கும் மேல் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது.

இந்த வெப்பநிலையின் அளவு, கடந்த சில மாதங்களில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றது. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருக ஆரம்பித்திருப்பதால் அங்கு உருவாகியிருக்கும் ஏரிகள் உடைந்து தண்ணீர் பெருக்கெடுக்கும். அந்தத் தண்ணீரின் சீற்றத்தைத் தடுக்க எந்தத் தடுப்பும் உதவாது. வெள்ளப் பெருக்கையும் கட்டுப்படுத்த முடியாது.

இதற்கு உதாரணம், 1985ஆம் ஆண்டு நேபாளத்தின் கும்பு பகுதியில் உள்ள பனிப்பாறைகள் ஏரிகள் உடைந்தது. அப்போது மக்கள் பலர் உயிரிழக்க நேரிட்டது. மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள், வீடுகள் என ஏகப்பட்ட இழப்புகள்.

அதற்குப் பிறகு தெற்காசிய நாடுகள் தனித்தனியாக புவியின் வெப்பநிலையையும் சுற்றுச்சூழல் மாறுபாட்டையும் கண்காணிக்க இமயமலைத் தொடரில் ஆய்வு நிலையங்களை அமைப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கின.

பனிப்பாறை ஏரிகள் எந்தப் பகுதியில் உடையும், எந்தப் பகுதியை நோக்கித் தண்ணீர் சீறிப் பாயும் என்பதைக் கணிக்கவே முடியாது. பல உடைப்புகள் ஏற்படலாம். ஒரே நேரத்தில் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால் அதன் பாதிப்பை நினைத்துப் பார்க்கவே முடியாது.

தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, வீணாகக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயரும். இதனால் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கடற்கரைப் பகுதிகள் காணாமல் போய்விடும் அபாயமும் இருக்கின்றது. அதன் பின், இமயமலைத் தொடரில் பனிப்பாறைகளே இல்லாமல், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படலாம். அப்படி நடந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

வெப்பநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் உருகும் போது பனிப்பொழிவு பனிப்பாறையாக மாறுவதும் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் காரணம், புவியின் வெப்பநிலை உயர்வு மற்றும் பருவ மாற்றம் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த வெப்பநிலை உயர்வுக்கு, காற்றில் கலக்கும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற நச்சுப் புகை தான் பெருமளவில் காரணம். இந்த அளவு, கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருப்பதை எச்சரித்தும் யாரும் அதில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கக்கூடிய சக்தியைப் பயன்படுத்துவது அதிகரிக்க வேண்டும். நிலக்கரி மூலம் இயங்கும் ரயில் போக்குவரத்தைத் தவிர்த்து, சாலை வழிப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். அதைப் போலவே, தேவைகளுக்கு ஏற்ப மின்சக்தி, எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும்.

முடிந்த அளவு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே, புவியின் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தலாம்.

குறைந்த அளவில் அதிகரித்து வந்த புவியின் வெப்பநிலை திடீரென அதிகரிக்க இன்னொரு காரணத்தையும் இமயமலையில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள ஜப்பானிய சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலின்போது பயன்படுத்திய வெடிமருந்துகள் வீரியமிக்கவை. இவை ஏற்படுத்திய தாக்கம் தான், இமயமலையின் வடகுதிகளில் பனிப்பொழிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு வழக்கமான பனிப்பொழிவு இல்லாததால் தான் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகின்றது என்ற அதிர்ச்சியை ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

புவியின் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான அறிவுரைகளை சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வழங்கினாலும், அதை யாரும் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆலோசனை மட்டும் நடத்தி விட்டு, ஆபத்து என்றவுடன் இப்போது கையைப் பிசைந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. காரணம், 1985ல் இதற்கான எச்சரிக்கையை ஜப்பானிய ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இனியாவது ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டால் இமயமலையைக் காப்பாற்றலாம். அதன் மூலம் வற்றாத நதிகளை வருங்கால தலைமுறைக்கு விட்டுச் செல்லலாம்.

—————————————————————————————————————————————————————-

குர்ஆனில் எழுத்துப் பிழைகளா?

தூத்துக்குடி விவாதம்: தோல்வியை ஒப்புக்கொண்ட ஜமாஅத்துல் உலமா

கடந்த செப்டம்பர் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையினருக்கும் இடையில் “குர்ஆனில் எழுத்துப் பிழைகளா?’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர உலமா சபை ஈரோட்டில் உள்ள தாவூதிய்யா அரபிக் கல்லூரியை தலைமை இடமாகக் கொண்டது. தாவூதிய்யா அரபிக் கல்லூரி தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை அடிப்படையில் இயங்கக்கூடியது. இந்தக் கல்லூரியை தலைமை இடமாகக் கொண்ட தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையினரும் தப்லீக் கொள்கையில் இருப்பார்கள் என்று நாம் நினைத்திருந்தோம்.

ஆனால் விவாதத்தின் போது தப்லீக் ஜமாஅத்தைக் கடுமையான முறையில் எதிர்த்து வரும் அப்துல்லாஹ் ஜமாலியை இவர்கள் அழைத்து வந்திருந்தனர். அப்துல்லாஹ் ஜமாலி தவ்ஹீத்வாதிகளை அரை வஹ்ஹாபிகள் என்றும் தப்லீக் ஜமாஅத்தினரை முழு வஹ்ஹாபிகள் என்றும் கூறி, தப்லீக் ஜமாஅத்தினர் தவ்ஹீத்வாதிகளை விட மோசமானவர்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது கூட்டமான பரேலவிகள், தப்லீக் ஜமாஅத்தினரை வழிகேடர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

அசத்தியவாதிகள் நம்மை அழிப்பதற்காக எப்படிப்பட்ட பரம விரோதிகளோடும் கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என்று நினைப்பதா? அல்லது இவர்கள் தப்லீக் என்ற போர்வையில் பரேலேவிகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களுக்கே உண்மை வெளிச்சம்.

ஜமாஅத்துல் உலமா சபையினரின் நிலைபாடு

திருக்குர்ஆன் தர்ஜுமாவில் புனிதக் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளதாக   பதிவுசெய்துள்ளார்கள். திருக்குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருக்கின்றது என்ற நச்சுக்கருத்தையும் யூதக்கருத்தையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரும் ஏற்று ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் புனிதக் குர்ஆனில் எவ்வித எழுத்துப் பிழைகளும் இல்லை. எழுத்துப் பிழைகள் உள்ளதாகக் கூறுவது குர்ஆனைக் கேவலப்படுத்துவது மட்டுமல்ல அதை எழுதிய எழுத்தர்களையும் சேர்த்து கேவலப்படுத்தியும் குர்ஆனுக்கு முரணாகவும்  டிஎன்டிஜே அறிஞர்கள் பல தவறான யூத நச்சுக் கருத்துக்களையும் கூறி இஸ்லாமியர்களின் ஈமானை பறிக்கக்கூடிய மாபெரும் விஷமக் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள் என்பது எங்களின் நிலைபாடாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு

அல்லாஹ்விடமிருந்து வந்த திருக்குர்ஆன் எல்லாவிதமான குறைகளை விட்டும் அப்பாற்பட்டது. அது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக ஓசை வடிவில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அதில் எவ்விதமான குறைகளும் பிழைகளும் இல்லை.

மனித எழுத்தர்கள் பிரதி எடுக்கும் போது அதில் சில எழுத்துப் பிழைகள் நிகழ்ந்துள்ளன. எனினும் அல்லாஹ் அருளியது போன்றே கல்வியாளர்களின் உள்ளங்களில் குர்ஆன் இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இது நச்சுக் கருத்தோ யூதர்களின் கருத்தோ இல்லை. குர்ஆனைக் கேவலப்படுத்துவதுமல்ல. யூத நச்சுக் கருத்துக்களையும் குர்ஆனைக் கேவலப்படுத்தும் கருத்துக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் சொல்வதில்லை. எதிர் தரப்பின் அறிஞர்கள் தான் குர்ஆனுக்கு எதிராக நச்சுக் கருத்துக்களையும், யூதக் கருத்துக்களையும், முஸ்லிம்களின் ஈமானைப் பறிக்கக்கூடிய மாபெரும் விஷமக் கருத்துக்களையும், குர்ஆனைக் கேவலப்படுத்தும் கருத்துக்களையும் கூறி குர்ஆனை இழிவுபடுத்துகின்றனர். முஸ்லிம்களின் ஈமானைப் பறிக்கவும் செய்கின்றனர் என்பது எங்களின் நிலைபாடாகும்.

குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை

முதலில் யார் பேசுவது என்பதை முடிவு செய்ய மேடையில் டாஸ் போடப்பட்டது. இதில் எதிரணியினர் முடிவு செய்யும் உரிமையைப் பெற்றனர். நாமே முதலில் விவாதத்தைத் தொடங்கலாம் என்று கூறினர். எனவே நாம் துவக்க உரையை ஆரம்பித்தோம். அதில் பின்வரும் உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தினோம்.

அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் புத்தக வடிவில் அருளப்படவில்லை. மாறாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஓதிக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்து கொண்டார்கள். இவ்வாறு குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஓசை வடிவில் தான் அருளப்பட்டது. இதே வழியில் தான் நபி (ஸல்) அவர்களும் குர்ஆனை நபித்தோழர்களுக்கு எத்திவைத்தார்கள்.

“குர்ஆன் ஓசை வடிவில் தான் அருளப்பட்டது; எழுத்து வடிவில் அருளப்படவில்லை’ என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.  இந்தக் குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இறக்கி வைத்தார் என்று குர்ஆன் கூறுகின்றது.

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார். (அல்குர்ஆன் 26:195)

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.  (அல்குர்ஆன் 2:97)

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை எழுதிக் கொடுக்கவில்லை. மாறாக ஓதிக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை மனனம் செய்துகொண்டார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் குர்ஆனை ஓதிக்காட்டும்போது அவர்கள் ஓதியதை மறந்துவிடுவோமோ என்ற பயத்தில் நபி (ஸல்) அவர்கள் தனது நாவால் வேகமாக ஓதினார்கள்.

இதன் பிறகு அல்லாஹ், இவ்வாறு செய்ய வேண்டாம்; அவர் ஓதும் போது அமைதியாகக் கேட்க வேண்டும்; உங்களுக்கு குர்ஆன் மறக்காதவாறு உள்ளத்தில் குர்ஆனைப் பதிய வைப்பது நம் கடமை என்று கூறினான்.

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது. (அல்குர்ஆன் 75:16)

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த குர்ஆனை மறுத்தவர்கள் தங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து புத்தக வடிவில் வேதம் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இவர்களின் இந்தக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்கவில்லை.

(முஹம்மதே!) “வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள்ளனர். “அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டுஎன்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. பின்னர் தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பு, காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தார்கள். அதை மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான சான்றை அளித்தோம். (அல்குர்ஆன் 4:153)

அல்லாஹ் காகிதத்தில் குர்ஆனை அருளவில்லை. அப்படி அருளியிருந்தாலும் நிராகரிப்பாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் “இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லைஎன்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள். (அல்குர்ஆன் 6:7)

அல்லாஹ் முதன்முதலில் மனித உள்ளங்களில் தான் குர்ஆனைப் பாதுகாத்தான். இனி வரும் காலங்களிலும் மனித உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கும் என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.  (அல்குர்ஆன் 29:49)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் குர்ஆன் ஓசை வடிவில் தான் நபிக்கு அருளப்பட்டது. எழுத்து வடிவில் வரவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அல்லாஹ் அன்று ஓசை வடிவில் அருளிய குர்ஆன் சமுதாய சங்கிலித் தொடரின் மூலம் அப்படியே மாறாமல் இன்று நம்மை வந்து அடைந்துள்ளது. இந்தக் குர்ஆன் பிழைகளுக்கும் தவறுகளுக்கும் அப்பாற்பட்டது.

அல்லாஹ் அருளிய இந்தக் குர்ஆனில் பிழைகள் இருக்கின்றன என்று சொன்னால் தான் ஈமான் பறிபோகும். எழுத்துப் பிரதிகளை அல்லாஹ் இறக்கவில்லை. எனவே நாம் கைகளில் வைத்திருக்கக்கூடிய குர்ஆன் எழுத்துப் பிரதிகளில் பிழைகள் இருக்கின்றன என்று சொல்வதால் ஈமான் பறிபோய்விடாது.

எழுத்துப் பிரதிகள் என்பது குர்ஆனை ஓதுவதற்குரிய உதவி சாதனமாகும். இந்த சாதனத்தை தங்கள் வசதிக்காக மனிதர்கள் தான் ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே மனிதர்கள் ஏற்படுத்திய பிரதிகளில் தவறு இருக்கின்றது என்று சொல்வது மனிதர்கள் தவறு செய்துள்ளார்கள் என்ற கருத்தையே தரும்.

இந்தக் கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானதல்ல. எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்களாவர். நல்லவர்களானாலும் வல்லவர்களானாலும் தவறு செய்யாத மனிதர் யாரும் இல்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. எழுத்துப் பிரதிகளில் சில தவறுகள் உள்ளன என்ற நம்முடைய கூற்று இந்த அடிப்படைக் கொள்கையுடன் ஒத்துப்போகின்றது. இந்த விளக்கங்களை நாம் தெளிவாகக் கூறி துவக்க உரையை நிறைவு செய்தோம்.

தோல்வியை ஒப்புக்கொண்ட எதிர் தரப்பினர்

மேலே நாம் கூறிய விளக்கங்கள் விவாதத்தின் தலைப்புக்குள் உட்பட்டு இருப்பதுடன் நமது நிலைபாட்டுக்கு ஆணிவேராகவும் அஸ்திவாரமாகவும் உள்ளது என்பதை அறிவுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.

நாம் மிக வலுவான வாதத்தை எடுத்து வைத்திருக்கும் போது, எதிர் தரப்பினர் நம்முடைய வாதத்தைத் தகர்க்கும் வகையில் ஆதாரங்களை அள்ளிப் போட்டு அல்லாஹ்விடமிருந்து எழுத்து வடிவில் தான் குர்ஆன் வந்தது என்று நிரூபித்திருக்க வேண்டும். அப்படி நிரூபித்து இருந்தால் நாம் ஈமானை பறிக்கக்கூடிய பாரதூரமான தவறான கருத்தைக் கூறுகிறோம் என்பது உண்மையாகும்.

ஆனால் எதிர் தரப்பினர் என்ன செய்தார்கள் தெரியுமா? குர்ஆன் ஓசை வடிவில் வந்ததா? எழுத்து வடிவில் வந்ததா? என்பது தலைப்பு இல்லை. இது விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். எனவே இதைப் பற்றி இங்கு பேச வேண்டாம் என்று கூறினர்.

இவ்வாறு கூறியதன் மூலம் விவாதம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தங்களுடைய தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். எழுத்துப் பிழைகள் இருப்பதாக நாம் கூறுவதால் நாம் குர்ஆனை இழிவுபடுத்துகிறோம்; ஈமானை பறிக்கக்கூடிய கருத்தைக் கூறியுள்ளோம் என்று எதிர்த் தரப்பினர் நம் மீது வைத்த குற்றச்சாட்டு பொய்யானது, போலியானது என்பதை மக்கள் தெளிவாக அறிந்துகொண்டனர்.

அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் ஓசை வடிவில் தான் வந்தது. எழுத்து வடிவில் வரவில்லை என்று நாம் வைத்த வாதத்தை இவர்களால் மறுக்க முடியவில்லை. எனவே அல்லாஹ்விடமிருந்து வந்தது ஓசை தான். எழுத்து இல்லை என்பது விவாதத்தின் துவக்கத்திலேயே தெளிவானது.

அல்லாஹ்விடமிருந்து வராத ஒன்றில் பிழைகள் இருந்தால் என்ன? பிழைகள் இல்லாவிட்டால் என்ன? இது விவாதம் செய்யும் அளவுக்கு மிக முக்கியமான பிரச்சனை இல்லை. எதிர் தரப்பினர் தான் தேவையில்லாமல் கூக்குரலிடுகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் நிலை இந்த விவாதத்தில் ஏற்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)