தலையங்கம்
தேர்தல் முடிந்தது தேனிலவும் முடிந்தது
முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தருவதாக வாக்குறுதியளித்து, அதற்கான ஆணையம் அமைத்ததற்காக, 2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அணியை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் ஆதரித்தது. அந்த அணியின் வெற்றிக்காகப் பாடுபட்டது. எனினும் அந்த அணி தோல்வியடைந்து ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் ஆனது.
அதன் பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது. இந்த உத்தரவு வந்தவுடன் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை தவ்ஹீது ஜமாஅத் ஆதரிக்கும் என்று எழுத்துப்பூர்வமாக தமிழக முதல்வரிடம் உறுதியளித்தோம்.
அது போல் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியின் வெற்றிக்காகக் களமிறங்கினோம். அல்லாஹ் அந்த அணிக்கு மகத்தான வெற்றியளித்தான். தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு இது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தது.
அதிலும் குறிப்பாக, அல்லாஹ்வின் விதியை மறந்தும், மறுக்கும் வகையிலும் மாமாகாவினர், “தவ்ஹீது ஜமாஅத் சேர்ந்ததால் திமுக அணி உருப்படாது’ என்ற பிரச்சாரத்தை முன்வைத்தனர். ஏளனமும் ஏகடியமும் பேசிக் கொண்டிருந்தோரின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போடும் விதமாக அல்லாஹ் இந்த அணிக்கு சிறந்த ஒரு வெற்றியை வழங்கினான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இரண்டு அணிகளுக்காகவும் நாம் பாடுபட்டதன் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது தான் இட ஒதுக்கீடு!
அதற்காகத் தான் நாம் தேர்தலில் பாடுபடவே செய்தோம். இதைத் தவிர நமக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது.
நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிப் பதவிகள், வாரியப் பதவிகள் என அரசியல் ஆதாயத்தை, சுய லாபத்தை நோக்கமாகக் கொண்டு நாம் களப்பணி ஆற்றவில்லை. இட ஒதுக்கீட்டை லட்சியமாகக் கொண்டு தான் களப்பணியாற்றினோம். அந்தத் தேர்தல் பணி முடிந்தது. அத்துடன் திமுக அணியுடன் கொண்டிருந்த தேனிலவும் முடிந்து விட்டது.
ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், தேர்தலுக்கு முன்பு எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்திப்பது, அவரிடம் கோரிக்கை வைப்பது, மனு கொடுப்பது, இவற்றுக்கு உரிய மரியாதை இல்லாவிட்டால் ஆர்ப்பாட்டம், போராட்டம் என களங்கள் வாயிலாக உரிமைக் குரல் எழுப்புவோமோ அதே பாணியைத் தான் இப்போது நாம் கடைப்பிடிக்க வேண்டும். அந்தப் பாணியைத் தான் எப்போதும் கைக்கொள்ள வேண்டும்.
நாம் ஆளுங்கட்சிக்காரர்களாகி விட்டோம்; நாம் அமைச்சரைப் பார்த்து நமது கோரிக்கைகளைச் சரி செய்து விடுவோம் என்ற அபார நம்பிக்கை, அலட்சிய எண்ணம் வேண்டாம்.
அமைச்சர்கள் இன்று இருப்பார்கள்; நாளை போய் விடுவார்கள். ஆனால் அதிகாரிகள் இன்றும் இருப்பார்கள்; நாளையும் இருப்பார்கள். ஒரு காரியத்திற்காக உளவுத் துறை அதிகாரி ஒருவரை அணுகிய போது, இனிமேல் அமைச்சரை வைத்துக் காரியத்தை முடித்துக் கொள்ளலாமே என்று குத்திக் காட்டியுள்ளார். எனவே கொள்கைச் சகோதரர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதற்காக அமைச்சர்கள் மூலமாக ஆக வேண்டிய காரியங்களுக்காகக் கூட அமைச்சர்களையோ, ஆளுங்கட்சியினரையோ சந்திக்க வேண்டாம் என்று கூறவில்லை.
சமுதாயக் காரியங்களுக்காக, தவ்ஹீது ஜமாஅத்தின் தனித்தன்மைக்கு ஆபத்தில்லாத வகையில் அவர்கள் மூலம் நிறைவேறும் கோரிக்கைகளுக்காகச் சந்திப்பதில் தவறில்லை.
ஆனால் அது ஒன்று தான் வழி என்று எண்ணி, அதிகாரிகளை அணுகாமல் ஆளுங்கட்சியினர் மூலமாகவே காரியத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்று விடக் கூôது என்பதே இந்த வேண்டுகோளின் மிக முக்கிய நோக்கம்.
மாவட்ட அளவில், நகர அளவில் முடிக்க வேண்டிய காரியங்களைக் கூட நாம் அமைச்சரை வைத்து முடித்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மிகக் குறைந்த சிலரிடம் தோன்றியிருப்பதை மறுக்க முடியாது. இந்த எண்ணம் – எப்போதும் ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் – நம்மை மற்றொரு தமுமுகவாக மாற்றி விடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் தேர்தல் முடிந்ததுடன் அரசியல் கட்சியினருடனான தேனிலவும் முடிந்து விட்டது; அன்பால் ஆகும் காரியத்தை அன்புடன் அணுகிக் கேட்போம். ஆர்ப்பரித்துக் கேட்க வேண்டியதை அலைகடலென ஆர்ப்பரித்துக் கேட்போம், எப்போதும் போல்!
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதெல்லாம் பதவியை விரும்புபவர்களுக்குத் தான். நாம் எப்போதுமே மக்களுக்காக உழைக்கின்ற சமுதாயக் கட்சி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
காலத்தின் மீது சத்தியமாக!
மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
அல்குர்ஆன் 103வது அத்தியாயம்
இந்த வசனங்களின் அடிப்படையில் சமுதாயப் பணிகள் மற்றும் ஏகத்துவப் பிரச்சாரப் பணிகளின் போது ஏற்படும் சோதனைகளைப் பொறுமையுடன் எதிர்கொள்வோம்.
நம்முடைய இலக்கு ஏகத்துவம். அதை மக்களிடம் கொண்டு செல்வதற்குரிய வழிப்பாதை தான் சமுதாயப் பணிகள் என்ற இலட்சியத்துடன் நமது பயணத்தைத் தொடர்வோமாக!
————————————————————————————————————————————————
நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும்
எம். ஷம்சுல்லுஹா
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தாவூத் நபியின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன்களும் இருந்தனர். அவ்விருவரில் ஒருவனை ஓநாய் கொண்டு சென்று விட்டது. உடனே அவர்கüல் ஒருத்தி, தன் தோழியிடம், “உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது” என்று கூற, மற்றொருத்தி அவüடம், “உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது” என்று கூறினாள். ஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்கüடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்கüல்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பüத்தார்கள். (அதில் திருப்தியில்லாத) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்கüடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்கüடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்கüருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், “அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் “அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது‘ என்று தீர்ப்பüத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3427
இந்தச் சம்பவத்தில், அந்தக் குழந்தை யாரிடம் இருந்தாலும் உயிரோடு இருக்கட்டும் என்று தான் ஒரு உண்மைத் தாய் விரும்புவாள். அது தான் ஒரு உண்மையான தாயின் இலக்கணம் என்ற யுக்தியை அடிப்படையாகக் கொண்டு சுலைமான் (அலை) அவர்கள் இப்படியொரு அழகான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்போது இது போன்ற ஒரு வழக்கு இன்றைய நீதிபதிக்கு முன்னால் வரும் போது இதே யுக்தியை முன்மாதிரியாகக் கொண்டு தீர்ப்பளிக்க முடியாது. ஏனெனில் உண்மையான தாய் மட்டுமல்ல, தாயைப் போன்று நடிக்கும் நாடகத் தாயும் “அந்தக் குழந்தையை வெட்டாதீர்கள்; அந்தக் குழந்தை உயிருடன் இருந்தால் போதும்’ என்ற கருத்தில் மேலே கண்ட அதே பாணியில் உணர்ச்சி பொங்க உள்ளத்தைத் தொடும் வகையில் வசனம் பேசி விடுவாள். அப்படி அவள் கூறினால் வழக்கை உன்னிப்பாக விசாரிக்கும் நீதிபதிக்கும், உற்று நோக்கிக் கொண்டிருக்கும் உலகத்திற்கும் உண்மை தெரியாமல் போய் விடும்.
அப்படியானால் இதற்கு மாற்றுத் தீர்வு கண்டாக வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். ஆம்! காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் மாற்றுத் தீர்வு கண்டாயிற்று!
பிரச்சனைக்குரிய குழந்தை, அந்தக் குழந்தைக்கு உரிமை கொண்டாடும் இரண்டு தாய்மார்களின் இரத்தம் சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்படுகின்றது. மரபணு சோதனை செய்யப்படுகின்றது. பெற்ற தாயின் இரத்தம் குழந்தையின் இரத்தத்துடன் ஒத்துப் போகின்றது. உண்மைத் தாய் யாரென்று விபரம் உலகுக்குத் தெரிகின்றது. போலித் தாயின் முகத்திரை கிழிக்கப்படுகின்றது. இம்மாபெரும் தீர்வு இன்றைய அறிவியல் புரட்சியின் விளைவாகும்.
இது போன்ற வழக்குகளில் மார்க்கத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படும் போது, அறிவியல் வளர்ச்சியின் துணையின்றி தீர்ப்புகள் வழங்க முடியாது என்பதை அறிகிறோம். அப்படியானால் அறிவியல் வளர்ச்சியும் மார்க்கத்தின் நிலைப்பாடும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து அமைந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது.
இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு அறிவியலை அப்புறப்படுத்தினால் அதன் விளைவுகள் படுபாதகமானவையாக அமையும்.
வேதத்தை விட்டு விலகியதால் விளைந்த விபரீதங்கள்
அல்குர்ஆனை, அல்லாஹ்வின் மார்க்கமான இந்த இஸ்லாத்தை அணுவளவு கூட அறிவியலை விட்டுப் பிரிக்கக்கூடாது. அப்படிப் பிரித்து வைத்தால் வேதத்தை விட்டு மக்கள் பிரிந்து, விபரீதமான சித்தாந்தங்களில் செல்ல வேண்டிய நிலை உருவாகி விடும்.
அறிவியல் உலகில் மனித அறிவு கருத்தரித்துப் பிரசவித்த கண்டுபிடிப்புக்கள் ஏராளம்! ஏராளம்!! மனிதன் பயணம் செய்யும் அறிவியல் வண்டியின் சக்கரத்தின் வேகமான சுழற்சிக்கும், அறிவியலின் அபார வளர்ச்சிக்கும் அல்குர்ஆன் முட்டுக்கட்டையாக முன்னால் வந்து நிற்பதாகக் கூறினால், அதை முட்டித் தள்ளிவிட்டு அறிவியலாளர்கள் முன்னேறிச் செல்லத் தயங்க மாட்டார்கள்.
சூரியன் மற்றும் அதன் கோள்கள் பூமியைச் சுற்றுகின்றன என்று கிறித்தவ திருச்சபை நம்பிக் கொண்டிருந்த கருத்துக்கு மாற்றமாக, அதாவது “சூரியனைத் தான் பூமியும் மற்ற கோள்களும் சுற்றுகின்றன’ என்ற கருத்தைக் கொண்டிருந்த கோபர் நிக்கஸ், கலீலியோ, புருனோ போன்றோர் திருச்சபையின் தண்டனைக்கு உள்ளானார்கள். புருனோ உயிருடன் கொளுத்தப்படுகின்றார்.
விவிலியத்தை (பைபிளை) வேதமாகக் கொண்ட திருச்சபை, வளர்ந்து வரும் வேகமான விஞ்ஞான வளர்ச்சிக்கு விவிலியத்தின் மூலம் விடையும், விளக்கமும் சொல்லாமல் தடையும், தடையை மீறுவோருக்குத் தண்டனையும் கொடுத்தது. விடையும் விளக்கமும் தராத வேதம் இனி நமக்கு எதற்கு என்று வேத உலகத்திற்குப் பிரியா விடை கொடுத்து விட்டு வெளியேறினர் விஞ்ஞானிகள்.
வேதத்தை விட்டு அறிஞர் உலகம் விரைவாக வெளியேறிப் போனதால் விளைந்த விளைவுகளில் முதல் விளைவு நாத்திகம்! நாத்திகம் என்ற விஷ வாயு மனித நாசிகளில் நுழைந்து அவனது சுவாசப் பைகளை நச்சுப் பைகளாக மாற்றின.
மனிதனை, மதத்தை விட்டுப் பிரிக்கும் மிகப் பெரிய சீர்கேட்டைக் கொண்ட மதச்சார்பின்மை என்ற சித்தாந்தம் தோன்றியது.
முதலாளி – தொழிலாளி, வலியவன் – எளியவன் என்ற இரு சக்திகள் ஒரு சேரச் செயல்படும் போது தான் உலகம் சீராக இயங்கும் என்ற நடைமுறை வாழ்க்கைச் சித்தாந்தத்திற்கு மாற்றமான பொதுவுடைமை (கம்யூனிஸம்) எனும் புற்று நோய் புறப்பட்டு மனித சமுதாயத்தை அரிக்க ஆரம்பித்தது.
அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம் அப்படியே அப்பழுக்கற்றதாக, பாதிரிகளின் கரை படிந்த கைவரிசை படியாத பரிசுத்த வேதமாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட பாதகமான விளைவுகளை பைபிள் சந்தித்திருக்காது.
அல்குர்ஆனும் அறிவியலும்
ஐரோப்பாவிலுள்ள அன்றைய அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் தங்கள் பார்வைகளை அல்குர்ஆனில் செலுத்தியிருப்பார்களானால் தங்கள் அறிவியல் பயணத்தின் பாதையில் அறிவுச் சுடரைப் பிரகாசிக்க வைக்கும் அல்குர்ஆனின் வெளிச்சத்தைக் கண்டு அதிசயித்துப் போயிருப்பார்கள்.
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன? பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
அல்குர்ஆன் 88:17-20
ஒட்டகத்தைப் பற்றி, அகன்று நீண்டு கிடக்கும் வானத்தைப் பற்றி, ஓயாது சுழன்று கொண்டிருக்கும் பூமியைப் பற்றி, அந்தப் பூமி பொதிந்து நிற்கும் மலைகளைப் பற்றி ஆராயச் சொல்லி மனிதனின் அறிவுக் கண்களை அல்குர்ஆன் திறந்து விடுகின்றது.
(அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
அல்குர்ஆன் 55:17
கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.
அல்குர்ஆன் 70:40
பூமி தட்டையாக இருந்தால் சூரியன் ஒரு இடத்தில் உதித்து மறு இடத்தில் மறைந்து விடும். ஒரு கிழக்கு, ஒரு மேற்கு தான் இருக்கும்.
பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.
பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது.
பூமி உருண்டையானது என்ற புதுக் கருத்தை, புரட்சிக் கருத்தை முதன் முதலில் புரிய வைத்தது உலகப் பொதுமறையான அல்குர்ஆன் தான்.
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 55:33
பரந்த வானப் பெருவெளியில், பறவைகள் பறப்பதைக் கண்டு மட்டுமே பழக்கப்பட்ட மனித சமுதாயத்தைப் பார்த்து, “இந்த ஆகாய வெளியில் பலம் கொண்ட கலங்கள் மூலம் பறந்து செல்லுங்கள்’ என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பறை சாற்றியது இந்தத் திருக்குர்ஆன்.
இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.
அல்குர்ஆன் 55:19, 20
கடல் ஆராய்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத அன்றைய மக்களிடம் திருக்குர்ஆன் கூறிய இந்த வார்த்தைகள் இன்றைய காலத்துக் கண்டுபிடிப்பானது.
இந்த வசனங்களிலிருந்து நாம் கிடைக்கப் பெறும் உண்மை, அறிவியலுக்குத் திருக்குர்ஆன் தடை போடவில்லை என்பதே! மாறாக அறிவு ஆராய்ச்சிக்கு ஆர்வத் தீயை மூட்டி அதன் ஒளி வெள்ளத்தை உலகம் முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது.
அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆர்வமூட்டும் வசனங்கள் அல்குர்ஆன் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. தலைப்பிற்காக இங்கு ஓரிரு வசனங்களை மட்டும் சுட்டிக் காட்டுகின்றேம்.
கிறித்தவ திருச்சபையும் இஸ்லாமிய திருச்சபையும்
அறிவுத் தேடலை அல்குர்ஆனும் அணை போட்டுத் தடுத்திருக்குமானால் கிறித்தவ உலகம் சந்தித்த அதே விளைவுகளை இஸ்லாமும் சந்தித்திருக்கும். ஆனால் இது அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்ட வேதமல்லவா? அதனால் கிறித்தவ உலகம் சந்தித்த விளைவுகளைச் சந்திக்கவில்லை. சந்திக்கவும் செய்யாது.
இருப்பினும் கிறித்தவ திருச்சபை செய்த அதே கைங்கரியத்தை இங்குள்ள இஸ்லாமிய உலமா திருச்சபை அரங்கேற்றியது தான் மிகப் பெரிய வேதனையாகும்.
நான்கு மத்ஹபுகள் என்ற நான்கு சுவர்களை எழுப்பி இந்தக் கட்டத்தைத் தாண்டி இஜ்திஹாத் (குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குதல்) கூடாது என்ற ஒரு முடிவை எடுத்து விட்டனர்.
இவர்களின் இந்த முடிவுக்குத் தோதான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ ஆதாரமாகக் காட்டவில்லை. மாறாக, தங்கள் முடிவுக்குத் தக்க குர்ஆன், ஹதீஸைச் சாதகமாகவும் மிகச் சாதுரியமாகவும் வளைக்கின்றனர்.
ஆட்சி, அதிகாரம் இவர்களது கைகளில் இருந்திருக்குமானால் அந்தக் கிறித்தவ திருச்சபை செய்த வேலைகளை, கொளுத்துவது, கொல்வது போன்ற கொடூரத் தண்டனைகளை இவர்களும் கோலாகலமாக நிறைவேற்றியிருப்பார்கள்.
நான்கு இமாம்களும் நவீன அறிவியல் புரட்சிகளும்
எல்லாப் பிரச்சனைகளுக்கும் இந்த நான்கு இமாம்களும் தீர்வுகளைக் கண்டு விட்டார்கள். இனி மேல் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள் எதுவுமில்லை. இனி மேல் யாரும் இஜ்திஹாத் செய்ய வேண்டியதில்லை. இஜ்திஹாதின் கதவு மூடப்பட்டு விட்டது என்று இந்த உலமா சபை ஒரேயடியாகச் சாதித்து வருகின்றது.
இமாம்கள் காலத்தில் இல்லாத, உருவாகாத எத்தனையோ அறிவியல் புரட்சிகள் இன்றைய உலகில் அடுக்கடுக்காக, அடுத்தடுத்து உருவாகிக் கொண்டிருப்பதை இவர்கள் வெளிப்படையாகவே கண்டு வருகிறார்கள்.
பறவைகளின் கால்களில் கடிதங்களைத் தொங்க விட்டுச் செய்தி அனுப்பும் காலம் மலையேறிப் போய் இன்று, இங்கிருந்து அனுப்பப்படும் செய்தியை அடுத்த நொடியில் அடுத்த கண்டத்தில் அச்சாக்கி, செய்தியாக்கும் சாதனங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன.
ஆசியாக் கண்டத்திலிருந்து ஒருவர் பேசும் பேச்சை ஐரோப்பாக் கண்டத்திலிருக்கும் ஒருவர் செவியுற்று பதில் தந்து கலந்துரையாடும் தொலைத் தொடர்புக் கருவிகள், இண்டர்நெட் வகையறாக்கள்.
ஒரு மனிதன் குழிக்குள் போய் பல ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் அவனது உருவத்தை உடைசல் இல்லாமலும், குரலைப் பிசிறில்லாமலும் பதிந்து வைத்திருக்கும் ஒளி, ஒலிப் பதிவுகள்.
இவையெல்லாம் செய்தி, ஒலி, ஒளிபரப்புத் துறையில் உருவாகி விட்ட அறிவியல் புரட்சிகள்.
உடலின் வெளிப்புறத்தில் ஒரு புண் பட்டு விட்டால் அதற்கு மூலிகையை அரைத்துத் தேய்ப்பான் மனிதன். உடலுக்குள் உள்ள நோயைக் குணப்படுத்த மூலிகையைக் கரைத்துக் குடிப்பான்.
இந்த நிலை மாறிப் போய், துடித்துக் கொண்டிருக்கும் இதயத் துடிப்பு அடங்கிப் போகாத வகையில் இதயக் கூட்டைத் திறந்து, இதயம் மற்றும் இதர உதிரிப் பாகங்களைத் தொட்டு அதன் கோளாறுகளைக் களையும், தேவைப்பட்டால் அவற்றை மாற்றி விட்டு வேறு பாகங்கள் பொருத்தும் புரட்சியுகமாக மருத்துவ உலகம் மாறி விட்டது.
இவையெல்லாம் நான்கு இமாம்களுக்குப் பின்னாலுள்ள காலத்தில் மனிதன் கண்ட மாபெரும் அறிவியல் புரட்சிகளாகும். இப்படிப் புதிது புதிதாக உலகத்தில் புறப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியல் புரட்சிகளுக்கும் பிரச்சனைகளுக்கும் ஈடுகட்டும் வகையில் ஷரீஅத் தரப்பிலிருந்து சளைக்காமல் தீர்வுகளைத் தரக்கூடிய சட்ட வல்லுனர்கள் இருந்தாக வேண்டும். இல்லையேல் இஸ்லாமிய ஷரீஅத் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதல்ல; இவற்றிற்கான தீர்வுகள் இஸ்லாத்தில் இல்லை என்ற நிலை தோன்றி விடும். இந்த நிலையை விட்டும் அல்லாஹ் ஷரீஅத்தைப் பாதுகாத்திருக்கின்றான்.
கல்வியறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 12:76)
அறிவியல் உலகில் எவ்வளவு பெரிய அறிவியலாளர்கள் தோன்றினாலும் அதை விட மேலான அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் இந்த ஷரீஅத்திலும் இருந்து கொண்டே இருப்பார்கள்.
இறுதி நாள் வரை தோன்றக் கூடிய எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதைத் தீர்த்து வைக்கும் திறனாய்வாளரை அல்லாஹ் தந்து கொண்டேயிருப்பான் என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிகின்றோம். இறுதி நாள் வரை இஜ்திஹாத் எனப்படும் ஆய்வின் வாசல் திறந்தே இருக்கின்றது; திறந்து தான் இருக்க வேண்டும்.
இஜ்திஹாதின் வாசல் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டு விட்டது என்று முழக்கமிடும் இந்த உலமா திருச்சபையை நோக்கி நாம் சில கேள்விகளை முன்வைக்கிறோம்.
நான்கு இமாம்களுக்குப் பிறகு உருவான, அறிவியல் வளர்ச்சியுடன் தொடர்புடைய மார்க்கப் பிரச்சனைகளுக்கு, அந்த இமாம்களின் நூல்களிலிருந்து தீர்வுகளைத் தர வேண்டும். நான்கு இமாம்களுக்குப் பின் வந்த மத்ஹபு அறிஞர்களின் தீர்ப்பைத் தரக் கூடாது.
இந்தப் பிரச்சனைகளுக்கு நான்கு இமாம்கள் அளித்த தீர்ப்பிலிருந்து, அல்லது அவர்கள் எழுதிய நூற்களிலிருந்து தீர்வுகளைக் காட்டினால் அவர்களின் பாதைக்குச் செல்ல நாம் தயாராக இருக்கிறோம். அல்லது நாம் செல்லும் இந்தச் சரியான பாதைக்கு அந்த ஆலிம்கள் வர வேண்டும்.
குறைந்தபட்சம், “நான்கு இமாம்களைப் பின்பற்றாதவர்கள் வழிகேடர்கள்’ என்ற வெற்றுக் கோஷத்தையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போது அறிவியல் வளர்ச்சியுடன் தொடர்புடைய மார்க்கப் பிரச்சனைகளுக்கு வருவோம்.
- ஆடியோ, வீடியோ கேஸட்டுகள் மூலம் ஒளிபரப்பப்படும் கிராஅத்தில் இடம் பெற்றுள்ள ஸஜ்தா வசனங்களைச் செவியுறும் போது அவற்றுக்கு ஸஜ்தா செய்ய வேண்டுமா?
- பெண், மாப்பிள்ளை இருவரும் பார்த்துக் கொண்டாயிற்று. திடீரென்று மாப்பிள்ளை வெளிநாட்டுக்குப் புறப்பட்டுப் போய் விடுகின்றார். இதன் பிறகு, திருமணத்திற்குத் தேவையான மற்ற நிபந்தனைகளை தொலைபேசி அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நிறைவேற்றி திருமணம் செய்யலாமா?
- தொலைபேசி அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விவாகரத்துச் செய்யலாமா?
- சவூதியா விமானம் சென்னையிலிருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குப் புறப்படுகின்றது. சவூதி நேரப்படி 4 மணிக்குத் தரையிறங்குகின்றது. அப்போதைய இந்திய நேரம் 6.30 மணி, சென்னையில் சூரியன் மறையும் நேரமாகும். நோன்பு நோற்று விட்டுப் பயணம் செய்த ஒருவர் இந்த நேரத்தில் நோன்பு துறக்க வேண்டுமா? அல்லது சவூதியில் சூரியன் மறையும் நேரத்தில் தான் நோன்பு துறக்க வேண்டுமா?
- இரத்த தானம் செய்யலாமா?
- கண் தானம் செய்யலாமா?
- கிட்னி செயலற்றுப் போன ஒருவருக்கு கிட்னி தானம் செய்யலாமா?
- தற்போது கிட்னி திருட்டு நடைபெற்று வருவதை நாம் அறிவோம். கிட்னி திருடியவன், விலை மதிப்பு மிக்க ஒரு பொருளைத் திருடி விட்டான் என்ற அடிப்படையில் அவனது கையை வெட்ட வேண்டுமா? கண்ணுக்குக் கண், காதுக்குக் காது என்ற அடிப்படையில் அவனது கிட்னியை எடுக்க வேண்டுமா?
- தொழுகை நேரம் சூரியனை அடிப்படையாகக் கொண்டே பூமியில் கணிக்கப்படுகின்றது. இந்தப் பூமி என்ற வட்டத்தை விட்டு வெளியேறி விண்வெளிக்கு ஒருவன் சென்று விட்டால் தொழுகை அவனுக்குக் கடமையா? நேரங்குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் குறிப்பிடும் இந்த நிபந்தனை நீங்கி விடும் போது தொழுகை என்ற கடமையும் நீங்கி விடுமா?
- சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறச் செய்யலாமா?
- குளோனிங் மூலம் மனிதனை, மற்ற உயிரினங்களை உருவாக்கலாமா?
இது போன்ற பிரச்சனைகளுக்கு நான்கு இமாம்களின் தீர்ப்புகளிலிருந்து பதிலைத் தருவார்கள் என்று எதிர்பார்ப்போமாக!
————————————————————————————————————————————————
இறைநேசர்களை நாமே தீர்மானிக்க இயலுமா?
கே.எம். அப்துந் நாஸிர் கடையநல்லூர்
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மாற்றுதல் என்பது இல்லை. அதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 10:62-64
இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறை நேசராக வாழ முயல வேண்டும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை.
மேலும் அடுத்த வசனத்தில் இறை நேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.
ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.
யார் இறை நேசர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே மகான்களைக் கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை.
மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையிலும் அவர் நல்லவர் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. இதற்கு நாம் பல்வேறு சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பார்க்கலாம்.
உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மரணம்
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்” எனக் கூறினேன்.
உடனே நபி (ஸல்) அவர்கள் “அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.
நூல்: புகாரி 1243
உஸ்மான் பின் மள்வூன் (ரலி) மிக நல்லவராகவும், வணக்கசாலியாகவும் வாழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பலகாலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்மு அலா அவர்கள் “அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்” எனக் கூறும் போது நபியவர்கள் அதைக் கடுமையாக கண்டிக்கிறார்கள்.
நம்முடைய பார்வைக்கு நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நபியவர்கள் கூட ஒரு ஸஹாபி இறந்த பிறகு அவர்களின் நிலையை அவர்களாக அறிய முடியாது என்று சொன்னால் இன்று நாம் யார் யாருக்கெல்லாமோ அவுலியாக்கள் என்று பட்டம் சூட்டுகின்றோமே இதை எப்படித் தீர்மானிக்க முடியும்?
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த ஸஹாபி. ஹிஜ்ரத் செய்தவர். வெளிப்படையைப் பார்த்து ஒருவரை இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால் இவரைச் சொல்லலாம். ஆனாலும் அவர் மரணித்த பிறகு “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான்’ என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிந்தவன். அவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.
நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நல்லவன் தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்துகிறது.
ஸஹாபாக்களின் பார்வையில் நல்லவராகத் தென்பட்டவர் நரகத்தில்…
சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கüன் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகüல்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)” என்று சொல்லி விட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாüன் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாüன் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அüக்கிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி “அவர் நரகவாசி‘ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்கüடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாüன் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கüன் வெüப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்கüன் வெüப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 2898
ஸஹாபாக்கள் ஒரு மனிதரை நல்லவர் என்று தீர்மானிக்கின்றார்கள் . ஆனால் அவர் இறைவனின் பார்வையில் கெட்டவராக இருக்கின்றார்.
யாரையும் இவர் நல்லவர் தான், இறைநேசர் தான் என்ற தீர்மானிக்க இயலாது என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.
மக்களின் பார்வையில் நல்லவர்கள் இறைவனின் பார்வையில் நரகவாசிகள்
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.
இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்‘ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) “அறிஞர்‘ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்‘ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்‘ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது எண்ணம் நிறைவேறி விட்டது)” என்று கூறி விடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3865
மக்களால் மிகப் பெரும் தியாகி என்றும், இறைவனின் பாதையில் வாரிவழங்கிய வள்ளல் என்றும், மாபெரும் அறிஞர் என்றும் பாராட்டப் பெற்றவர்கள் இறைவனின் பார்வையில் நரகவாசிகளாகக் காட்சியளிக்கின்றனர் என்றால் இன்றைக்கு யார் யாரையெல்லாமோ நாம் எப்படி “இவர்கள் அவுலியாக்கள்’ என்று தீர்மானிக்க இயலும் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
ஒன்றுமறியாக் குழந்தையின் நிலையைக் கூட நாம் தீர்மானிக்க இயலாது
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்” என்று கூறினார்கள்
நூல்: முஸ்லிம் 5175
நாம் ஒருவரை நல்லவர் என்று தீர்மானிக்கலாமா?
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!
அல்குர்ஆன் 9:19
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
அல்குர்ஆன் 2:221
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
அல்குர்ஆன் 9:113
மேற்கண்ட வசனங்களில் நாம் உண்மையான முஃமின்களுடன் வாழ வேண்டும் என்றும், இணை வைக்கும் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்றும், முஃமினான இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குத் தான் நம்முடைய பெண்களைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், இணை கற்பித்தவர்களுக்குப் பாவமன்னிப்பு தேடக் கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். இது போன்று பல்வேறு கட்டளைகள் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் காணப்படுகின்றன.
ஒருவர் நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் நாம் தீர்மானித்தால் தானே மேற்கண்ட கட்டளைகளை நாம் பின்பற்ற இயலும் என்ற எண்ணம் நம்மிடம் தோன்றலாம்.
நம்முடைய பார்வையில் இஸ்லாமியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை நாம் நல்லவர்கள் என்றே தீர்மானிக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறந்த பிறகும், இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அதைத் தான் நாம் மேலே விரிவாகக் கண்டோம்.
நம்முடைய பார்வையில் யார் முஃமினாகத் தெரிகிறாரோ அத்தகைய உண்மையாளருடன் நாம் வாழவேண்டும். அதே நேரத்தில் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர அவருடைய உண்மையான நிலையை இறைவனே அறிந்தவன் என்பதையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவனும் இவ்வாறு தான் தீர்மானிக்கச் சொல்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.
அல்குர்ஆன் 60:10
நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து வந்த பெண்களின் ஈமானை சோதித்துப் பார்க்குமாறு மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். ஒருவருடைய உண்மையான இறை நம்பிக்கையை அல்லாஹ் தான் அறிந்தவன். நாம் அதை அறிய முடியாது. நாம் வெளிப்படையான செயல்களை வைத்துத் தான் தீர்மானிக்க முடியும். இதன் காரணமாகத் தான் இறைவன் அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! என்று கட்டளையிடுகிறான்.
இதிலிருந்தே நாம் வெளிப்படையில் இணை கற்பிக்கும் காரியங்களைச் செய்யாமலும் இஸ்லாமிய ஒழுங்களைப் பேணி வாழ்பவர்களை நல்லவர்கள் என்றும் இதற்கு மாற்றமாக வாழ்பவர்களைக் கெட்டவர்கள் என்றும் நாம் தீர்மானித்து, நல்லவர்களுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் கெட்டவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகிறானோ அவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும்.
அவுலியாக்களைத் தீர்மானிக்கும் கப்ரு வணங்கிகள்
நீங்கள் முஃமின்களோடு வாழுங்கள், உண்மையாளர்களோடு இருங்கள் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் வரும் கட்டளைகளின் அடிப்படையில், நம்முடைய பார்வையில் இஸ்லாமியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை நாம் நல்லவர்கள் என்றே தீர்மானிக்க வேண்டும்.
அதே நேரத்தில் நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறந்த பிறகும், இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது.
நம்முடைய பார்வையில் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு மாற்றமாக வாழ்பவர்கள் கெட்டவர்கள் என்றும் அதே நேரத்தில் அவர்கள் இறந்த பிறகும் இறைவனுடைய பார்வையிலும் கெட்டவர்கள் தான் என்று நாம் தீர்மானிக்க இயாலாது என்பதையும் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.
ஆனால் இந்த அடிப்படையை உணராத கப்ரு வணங்கிகள் மேற்கண்ட வசனங்களை ஆதாரம் காட்டி நம்முடைய பார்வைக்கு நல்லவர்களாகத் தெரிபவர்களை நாம் அவர்கள் இறந்த பிறகும் நல்லவர்கள் எனத் தீர்மானிக்கலாம் எனக் கூறுகின்றனர். இது அவர்களின் மார்க்க அறிமையையே காட்டுகிறது.
மேலும் ஒருவரை அவர் இறந்த பிறகு அவரை நல்லவர் தான் என்று மக்கள் தீர்மானிக்க இயலும் என்பதற்கு பின் வரும் ஹதீஸை ஆதாரம் காட்டுகின்றனர்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். உமர் (ரலி) “எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்” எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1367
மேற்கண்ட ஹதீஸில் மக்கள் ஒருவரை நல்லவர் என்று புகழ்ந்தால் அவர் சொர்க்கவாசி என்றும் மக்கள் ஒருவரைக் கெட்டவர் என்று புகழ்ந்தால் அவர் நரகவாசியென்றும் தீர்மானிக்கலாம் என்பது போல் தெரிகிறது
மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் கூறிய முழுமையான சில வாசகங்கள் விடுபட்டுள்ளன. இதன் காரணமாகத் தான் மக்கள் தீர்மானிக்கலாம் என்பது போன்ற கருத்து வருகிறது. நபியவர்கள் கூறிய முழுமையான வாசகங்கள் மற்ற ஹதீஸ்களில் வந்துள்ளன.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், “இது யார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்றும் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள்.
பிறகு மற்றொரு ஜனாஸா கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார் என்றும் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “பூமியில் அல்லாஹ்விற்கென்று மலக்குமார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள்” என்று கூறினார்கள்.
நூல் : ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 533
மக்கள் தாமாகப் பேசுவதில்லை. மாறாக மலக்குமார்கள் தான் மக்களின் நாவுகளில் ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று பேசுகிறார்கள். நபியவர்கள் இறைத் தூதர் என்பதால் தான் மக்கள் நாவில் பேசியது மலக்குகள் என்பதை அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். இதன் காரணமாக மக்கள் புகழ்ந்தவரை சொர்க்கவாசி என்றும் மக்கள் இகழ்ந்தவரை நரகவாசி என்றும் நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
ஆனால் மக்கள் ஒருவரைப் பற்றி கூறும் வார்த்தைகள் மலக்குமார்கள் பேசியதா என்பதை நம்மில் யாரும் தீர்மானிக்க இயலாது. எனவே மக்கள் ஒருவரைப் புகழ்ந்து பேசினால் அவர் நல்லவர் தான், இறைநேசர் தான் என்று தீர்மானித்தால் அவர் இணை கற்பிக்கும் காரியத்தைச் செய்தவராவார்.
மக்கள் புகழ்ந்து பேசிய தியாகியும், வள்ளலும், மார்க்க அறிஞரும் நரகவாசியானார்கள் என்ற ஹதீஸ், மக்களின் வார்த்தைகளால் ஒருவரை அவர் இறந்த பிறகு நல்லவர் தான் என்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதற்குத் தெளிவான சான்றாகும்.
————————————————————————————————————————————————
கூத்தாடும் குறைக் குடங்கள்
மார்க்கச் சட்டம் பற்றிக் கேள்வி கேட்கப்படும் போதும், மார்க்கச் சொற்பொழிவாற்றும் போதும் மார்க்கச் சட்ட ஆய்வில் இருப்பவர்களே அலறவும் அரளவும் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக அவர்களது உரை தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது என்றால் அவர்களது அலறலுக்கும் அரட்சிக்கும் அளவில்லை. மார்க்க விஷயத்தில் அவசரப்பட்டு தீர்ப்பு வழங்கிவிடக் கூடாது என்ற அல்லாஹ்வின் அச்சம் தான் இதற்குக் காரணம்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
அல்குர்ஆன் 35:28
விபரம் தெரியாமல், விளக்கம் புரியாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மடையர்கள் என்று பட்டம் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: புகாரி 100
அரை குறை வைத்தியனும் அரை குறை ஆலிமும் உலகத்திற்குக் கேடு என்பார்கள். அந்த ஆசாமிகள் பொய்யன்டிஜே வர்க்கம் தான் என்பதைத் தொண்டியப்பாவின் நொண்டித் தீர்ப்பைப் பார்த்து புரிந்து கொள்ளலாம். கோட்டு சூட்டு மாட்டிக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு என்ற பெயரில் கண்டதையும் டிவியில் தோன்றிக் கூறி விடுகின்றார்கள். அது வாசகர்களின் முகங்களைச் சுழிக்கச் செய்கின்றது. குமட்டலைக் கொடுக்கிறது.
சைகை காட்டிக் கொண்டு, குரலையும் மாற்றிக் கொண்டு, வாயில் வந்ததைச் சொல்லி விட்டால் போதும், அது மார்க்கமாகி விடும் என்பது இவர்களின் நினைப்பு. இவர்களின் டிவி நிகழ்ச்சி இதே பாணியில் தொடர வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அப்போது இவர்களின் நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் நஞ்சம் பார்க்கும் கூட்டமும் வெகுண்டு வெகுவிரைவில் வெகு தூரத்திற்குச் செல்லும்.
இப்போது மார்க்க மேதை தொண்டியப்பாவின் நொண்டித் தீர்ப்பைப் பார்ப்போம்.
பள்ளிவாசல் பணம் ரூபாய் ஐம்பதாயிரத்தை வாயில் போட்ட பாக்கர் விஷயத்திற்கு தொண்டியப்பா பக்காவாக வக்காலத்து வாங்கி வக்கனை பேசுவதைப் பாருங்கள். ஹதீஸை வளைக்கும் அநியாயத்தைப் பாருங்கள்.
கீழக்கரையைச் சேர்ந்த நசூர்தீன் என்ற சகோதரர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியாக பாக்கர் இருந்த போது அவரிடம் பள்ளிவாசல் கட்டுவதற்காக ரூ. 50,000ஐ நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
பள்ளிவாசல் கட்டுவதற்குச் செலவிட வேண்டும் என்ற தனது அண்ணனுடைய நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக பாக்கரிடம் இந்தத் தொகையை அவர் வழங்கியிருக்கிறார். அவர் வழங்கிய இந்தத் தொகைக்கு பாக்கர் எந்த ரசீதும் வழங்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், பாக்கர் நடத்தும் ஹஜ் சர்வீஸ் சார்பாக ஹஜ் பயண விளக்கக் கூட்டம் சென்னையில் பாண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற போது பாக்கரை நேரில் சந்தித்த கீழக்கரை நசூர்தீன், “நான் எனது அண்ணன் சார்பாக பள்ளிவாசல் கட்டுவதற்காக கொடுத்த பணம் என்ன ஆனது” என்று வினவியிருக்கிறார். அதற்கு பாக்கர், “ஆம்! நீங்கள் கொடுத்த பணம் செலவிடப்படாமல் இருக்கிறது. இன்னும் எதுவும் செய்யவில்லை; சொல்றேம்மா” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் பாக்கர், பாலியல் மற்றும் பொருளாதார மோசடி காரணமாகத் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட செய்தியை அறிந்த நசூர்தீன், தான் பாக்கரிடம் கொடுத்த ரூ. 50,000த்தின் நிலை என்ன ஆனதோ என்ற அதிர்ச்சியில் இராமநாதபுரத்தில் இது தொடர்பாக விசாரித்த போது, டிஎன்டிஜே தலைமையகத்தில் உள்ள வரவு – செலவு கணக்குகளில் பள்ளிவாசல் வகைக்காக ரூ. 50,000 பாக்கர் மூலமாக வரவு வைக்கப்படவில்லை என்ற உண்மை தெரிய வந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நசூர்தீன், பாக்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, “நீங்கள் என்னிடம் பணம் தரவே இல்லை. நீங்கள் சொல்வது பொய். நீங்கள் என்னிடம் பணம் கொடுப்பதற்கு நான் உங்கள் மாமனுமில்லை; மச்சானுமில்லை” என்று பாக்கர் பதில் கூறியது நசூர்தீனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
மேலும் பாக்கர் பேசும் போது, “நேரில் வந்து நிரூபியுங்கள்” என்று தொலைபேசியில் கூறியதால், நேரில் சென்னைக்கு வந்திருக்கிறார் நசூர்தீன். பாக்கரிடம் பணம் கொடுத்த போது அதை நேரில் பார்த்த சாட்சியான சேதுகரையைச் சேர்ந்த பவுசுல் என்பவரும் வந்து சாட்சி கூறியுள்ளார்.
நேரிலும் மறுத்த பாக்கர்
நேரில் வந்து கேட்ட போதும், சாட்சியை வைத்து நிரூபித்த பிறகும் தான் பணம் வாங்கியதை பாக்கர் மறுத்து விட்டு, வழக்கம் போல் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் இடும் ஆயுதத்தை கையிலெடுக்கத் துணிந்துள்ளார். நசூர்தீனிடம், “நான் இப்போது ஒளுவுடன் இருக்கிறேன். சத்தியம் செய்து விடுவேன்” என்று பாக்கர் கூற, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய ஒளுவுடன் இருக்க வேண்டுமோ என்று நினைத்த நசூர்தீனும் சாட்சியாக வந்த பவுசுலும் “நாங்களும் ஒளு செய்து வருகிறோம்” என்று சொல்லி ஒளு செய்து வந்திருக்கிறார்கள். ஒளு செய்து வந்தவர்களிடம் அல்லாஹ்வின் மீதெல்லாம் சத்தியம் செய்ய முடியாது என்று அந்தர் பல்டி அடித்த பாக்கர், “ஐம்பதாயிரம் நான் வாங்கவே இல்லை. இது சுத்தப் பொய்” என்று கூறி அவர்களை வெளியேற்றி விட்டார்.
பகிரங்க அறைகூவல்
பாக்கரிடம் அல்லாஹ்வுடைய ஆலயம் கட்ட ஐம்பதாயிரத்தை கொடுத்து ஏமாந்த நசூர்தீன், “பாக்கர் உண்மையானவராக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் பணம் வாங்கவில்லை என்று மறுக்கத் தயாரா?” என்றும், “நான் கூறும் உண்மையை ஏற்காத பாக்கர், நான் கொண்டு வரும் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளாத பாக்கர், என்னிடத்தில் முபாஹலா செய்யத் தயாரா?” என்றும், “பாக்கர் உண்மையாளராக இருந்தால், அவர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளோடு வரட்டும். நானும் எனது மனைவி மக்களோடு வந்து முபாஹலா செய்கிறேன்” என்று பகிரங்க அறைகூவலை விடுத்துள்ளார்.
தொண்டியப்பாவின் குர்ஆன் – ஹதீஸ் ஆதாரம்
கீழக்கரை நசூர்தீன், தொண்டியப்பாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அறைகூவலுக்குப் பின்வாங்கி ஓடிய பாக்கர், தொண்டியப்பாவின் மூலம் நசூர்தீனிடத்தில் பேச வைத்துள்ளார்.
நசூர்தீனிடம் பேசிய தொண்டியப்பா, “சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் சத்தியம் செய்ய முடியாது. பாக்கர் ஆயிரம் பேரிடம் பணம் வாங்கி இருப்பார். ஆயிரம் பேரிடமும் போய் சத்தியம் செய்ய முடியுமா?” என்று சால்ஜாப்பு பதிலைக் கூறியதுடன், “முபாஹலாவுக்கெல்லாம் வர முடியாது. அதிலெல்லாம் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பணத்தைக் கொடுத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு போய்க் கொண்டே இருங்கள்” என்று திமிரான பதிலையும் கூறியுள்ளார்.
மேலும், குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையில் மூன்று ஆதாரங்களை நசூர்தீனிடம் முன் வைத்துள்ளார் தொண்டியப்பா. இந்த ஆதாரங்களே இவர்கள் எப்படிப்பட்ட கேடு கெட்டவர்கள் என்பதையும், குர்ஆன் – ஹதீஸை இவர்கள் பண மோசடி செய்வதற்கு எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகின்றது.
ஆதாரம்: 1
“ஒரு முஃமினான சகோதரனுடைய குறையை இந்த உலகில் மறைத்தால், அல்லாஹ் உங்களது குறையை மறுமையில் மறைப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பாக்கருடைய குறையை பகிரங்கப்படுத்தாமல் மறைத்தால் அல்லாஹ் உங்களுடைய குறையை மறுமையில் மறைப்பான் என்று பாக்கரது மோசடிக்கு ஆதாரமாக நபிமொழியை எடுத்து வைத்துள்ளார் தொண்டியப்பா.
ஆதாரம்: 2
“இரண்டு முஃமின்கள் மத்தியில் அவர்களை ஒன்று சேர்ப்பதற்காக பொய் சொல்லலாம். அவ்வாறு பொய் சொல்வது பொய் ஆகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “ஏற்கெனவே எங்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை என்று இருக்கின்ற நிலையில், நீங்கள் இந்த நேரத்தில் இந்த விஷயத்தைக் கூறி மேலும் பிரிவினையை அதிகமாக்கலாமா? முஸ்லிம்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த பொய் சொல்வதும் ஹலால் எனும் போது நீங்கள் இப்போது பாக்கர் மீது மோசடி செய்து விட்டதாக உண்மையைச் சொல்லி பிரிவினையை அதிகமாக்குகிறீர்கள்” என்று ஒரு அபாயகரமான வாதத்தை தொண்டியப்பா முன் வைத்துள்ளார்.
ஆதாரம்: 3
“நீங்கள் அல்லாஹ்வுக்காகக் கொடுத்து விட்ட பிறகு, அல்லாஹ் உங்களுக்கு அதற்குரிய கூலியை நிச்சயமாக கொடுத்து விடுவான். நீங்கள் அந்தப் பணம் என்ன ஆனது என்று ஆராயத் தேவையில்லை” என்ற அற்புதமான (?) வாதத்தையும் தொண்டியப்பா முன் வைத்துள்ளார்.
இதிலிருந்தே இவர்கள் தாங்கள் செய்யக் கூடிய அனைத்து பித்தலாட்டங்களுக்கும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் ஆதாரமாகக் காட்டுவார்கள் என்பதும் இவர்கள் குர்ஆன் – ஹதீஸை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
இந்த ஹதீஸ் அடிப்படையில் பாக்கரின் குறைகளை மறைக்க வேண்டும் என்ற தொண்டியப்பாவின் தூர நோக்குத் தீர்ப்பை இங்கே அலசுவோம்.
தொண்டியப்பாவுடன் இக்பால், இத்ரீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு அறைக்குள் ஒன்றாக இருக்கிறார்கள் என்று உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். பேசி விட்டுக் கலைந்து சென்ற பின் பார்த்தால், தொண்டியப்பாவின் சட்டையில் இருந்த பத்தாயிரம் ரூபாயைக் காணவில்லை.
“அதை இக்பால் தான் எடுத்தார். நான் பார்த்தேன்’ என்று இத்ரீஸ் கூறுகிறார். “அதை என்னிடத்தில் நீ சொல்லியிருக்க வேண்டாமா?’ என்று தொண்டியப்பா இத்ரீஸைக் கண்டிக்கும் போது, “ஒரு முஃமினுடைய குறையை மறைக்க வேண்டாமா? அதனால் தான் நான் சொல்லவில்லை’ என்று இத்ரீஸ் பதிலளிக்கிறார். இத்ரீஸ் அளிக்கும் இந்தப் பதிலை தொண்டியப்பா ஏற்றுக் கொள்வாரா?
அப்படியானால் இந்த ஹதீஸிற்கு இவர்கள் கூறும் பொருள் கிடையாது என்பதை மார்க்க விஷயம் தெரிந்த யாரும் அறிந்து கொள்ளலாம்.
இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்கüல் ஒருவர், “எங்கிளுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பüயுங்கள்” என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் “ஆம். அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பüயுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “பேசுங்கள்” என்றார்கள். அந்த மனிதர், “என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். ஆகவே, மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு” என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்கüடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், “(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்து விட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவருடைய மனைவிக்குத் தான் என்றும் தெரிவித்தார்கள்” என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பüக்கிறேன்: “உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்கüடமே திருப்பித் தரப்படும்” என்று கூறிவிட்டு, அவருடைய மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப் பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப் பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். ஆகவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.
அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி)
நூல்: புகாரி 6634
மெத்தப் படித்த மேதாவி, முற்றிலும் தெரிந்த முஃப்தீ தொண்டியப்பாவின் கருத்துப்படி நபி (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரின் குறையை மறைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மறைக்காமல் நபி (ஸல்) அவர்கள் மக்கள் மன்றத்தில் போட்டு இதை உடைக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் காலத்தில் மக்கா வெற்றிப் போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டாள். ஆகவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கüடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்கüடம்) அவளுக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகüல் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்தி விடும் படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள். உடனே உஸாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும் போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளது கையையும் நான் வெட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டாள்; மேலும் மணம் புரிந்தும் கொண்டாள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர், நூல்: புகாரி 4304
தூர நோக்குப் பார்வை கொண்ட (?) தொண்டியப்பாவின் கருத்துப்படி தூதர் (ஸல்) அவர்கள் திருடிய அந்த முஸ்லிம் பெண்ணின் குறையை மறைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அப்பெண்ணிற்காகப் பரிந்துரை செய்ய வந்த உஸாமாவை நபி (ஸல்) அவர்கள் வெளுத்துக் கட்டுகிறார்கள். அதுவும் சொற்பொழிவு நிகழ்த்தி உஸாமா செய்த தவறையும் சேர்த்து வெளிப்படுத்துகின்றார்களே!
இவர்களின் வாதப்படி பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் வெளுத்துக் கட்டாமல் சொற்பொழிவு நிகழ்த்தி வெளிப்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
நபி (ஸல்) அவர்கள் “அஸ்த்‘ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் “இப்னுல் லுத்பிய்யா‘ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பüப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பüப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கüல் யாரேனும் அந்த “ஸகாத்‘ பொருüல் இருந்து (முறை கேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாüல் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்கüன் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி)
நூல்: புகாரி 2597
பொது நிதி வசூலிக்கச் சென்றவர் அன்பளிப்பு வாங்கியதைக் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இது எனக்குரியது என்று கூறிய அந்த மனிதரின் தவறை நபி (ஸல்) அவர்கள் மறைக்கவில்லை. மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் அம்பலப்படுத்துகின்றார்கள். ஆனால் இவர்களோ பொது நிதியைக் கையாடல் செய்வதைக் கூட மறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட முஃப்தீ தொண்டியப்பாவின் விளக்கப்படி பார்த்தால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தில் ஒரு சட்டம் கூட தேராது.
பொய்யன்டிஜே மேடையில் பேசியது போல் மறு ஆய்வு செய்து குற்றவியல் சட்டத்தைத் தூக்கி விடுவது இடம் பெற்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஹதீஸை விளங்க வேண்டிய விதத்தில் விளங்காதது தான் இந்தக் குறைக் குடங்களின் குருட்டு விளக்கத்திற்கும் கூறு கெட்ட வியாக்கியானங்களுக்கும் அடிப்படைக் காரணம்.
இனி, குறையை மறைப்பது சம்பந்தப்பட்ட ஹதீஸின் சரியான விளக்கம் என்ன? என்பதைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாüன் துன்பங்கüல் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாüல் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 2442
இந்த ஹதீஸ் கூறுவதென்ன?
- ஒருவர் கடந்த காலத்தில் சில தவறுகளைச் செய்திருப்பார். பின்னர் அவர் திருந்தி நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பார். மக்கள் அவரை இப்போது நல்லவர் என்று பாராட்டவும் செய்வார்கள். அப்படி மக்கள் அவரை பாரட்டும் போது, கடந்த காலத்தில் அவர் செய்த தவறை இப்போது வெளிப்படுத்துவது இந்த ஹதீஸின் அடிப்படையில் தவறாகும்.
- ஒரு முதலாளியிடம் ஒரு தொழிலாளி பணி புரிகின்றார். தொழிலாளி திருடி விடுகின்றார். இதைப் பார்த்த முதலாளி தனது தொழிலாளியை மன்னிக்கவும் செய்யலாம். தண்டிக்கவும் செய்யலாம். தண்டித்தால் அது நிச்சயம் வெளியே தெரியவரும். இப்போது அவர் மன்னிப்பைத் தேர்வு செய்து தொழிலாளியின் குறையை மறைத்துக் கொள்ளலாம்.
- ஒருவருக்கு எய்ட்ஸ் அல்லது கேன்ஸர் போன்று ஏதாவது நோய் ஏற்பட்டு அது வெளியே தெரியக் கூடாது என்று அவர் நினைப்பார். பொதுவாக சமுதாயத்தில் யாருக்காவது நோய் ஏற்பட்டு அது மற்றவருக்குத் தெரிந்து விட்டால் அதை பிறரிடத்தில் சொல்வதில் ஒரு அற்ப சந்தோஷம். இது மாதிரியான கட்டத்தில் ஒருவரின் குறையை மற்றவரிடம் சொல்லாமல் மறைத்தால் அல்லாஹ் அவரின் குறைகளை மறைக்கிறான்.
ஆனால் அதே சமயம் ஒரு எய்ட்ஸ் நோயாளி ஒரு பெண்ணை மனம் பேசி தனது குறையை அப்பெண்ணிடம் தெரிவிக்காமல் திருமணம் முடிக்கப் போகிறார் என்றால் இப்போது அவரது குறையை மறைக்க முடியாது. மறைக்கக் கூடாது. காரணம் இது ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைப் பாதிக்கச் செய்துவிடும்.
(விவாகரத்துச் செய்யப்பட்ட) நான் “இத்தா‘வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்” என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உசாமாவை மணந்து கொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அறிவிப்பவர்: ஃபத்திமா பின்த் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம்
எனவே இது போன்ற கட்டத்தில் உண்மையைச் சொல்லித் தான் ஆக வேண்டும். குறைகளை மறைத்தல் என்பது சில பிரச்சனைகளிலும் சூழ்நிலைகளிலும் வருமே தவிர எல்லா நிலைகளிலும் வராது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பிறரின் உயிர், மானம், பொருளாதாரத்தைப் பறிக்கும் விஷயத்தில் குறையை மறைத்தல் என்பது வராது. குற்றவியல் சட்டங்களில் குறையை மறைத்தல் வராது.
நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள, அன்பளிப்பைத் தனக்கு என்று சொந்தம் கொண்டாடியவரின் ஹதீஸ், திருடிய பெண்ணுக்கு உஸாமா பரிந்துரை செய்த ஹதீஸ் ஆகியவை இதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
இந்த விளக்கத்தையும் வேறுபாட்டையும் தெரியாத தொண்டியப்பா, பாக்கர் தன் பையில் போட்டுக் கொண்ட பள்ளிப் பணத்திற்கு வக்காலத்து வாங்கி தனக்குச் சாதகமாக இந்த ஹதீஸை வளைக்கின்றார்.
இப்படி இவர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் வளைக்கும் போது இவர்களைத் தோலுரித்துக் காட்ட நாமும் தயங்க மாட்டோம்; தாமதிக்க மாட்டோம்.
————————————————————————————————————————————————
ஷாகுல் ஹமீது மவ்லிது தொடர்: 2
பறவைக்குக் கடிதம்
மவ்லிதுகள் கட்டுக் கதைகளின் தொகுப்பாகவும், இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்த்தெறியும் நச்சுக் கருத்துக்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. இந்த வரிசையில் ஷாகுல் ஹமீது மவ்லிதில் இடம் பெற்றுள்ள கட்டுக் கதைகளின் பெரும் பகுதியை ஏகத்துவம் மே 2009 இதழான நாகூர் கந்தூரி விமர்சன இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
ஒரு பறவையின் இறைச்சியை உண்பதற்காக ஒரு மனிதர் அதன் மீது (ஒரு கல்) எறிந்தார். அதனால் அந்தப் பறவை ஓடிவிட்டது. ஷாகுல் ஹமீது ஒரு சொல்லால் அதை அழைத்தார். அப்பறவை உடனே வந்து சேர்ந்தது.
ஷாகுல் ஹமீது மவ்லிதில் காணப்படும் இந்தப் பாடலுக்கு விளக்கவுரையாக அமைந்துள்ள உரைநடைப் பகுதியில் கூறப்பட்டுள்ளதையும் அறிந்து விட்டு இது குறித்து ஆய்வு செய்வோம்.
நாகூரின் கடற்கரையில் ஷாகுல் ஹமீது தங்கியிருந்த போது கவலையின்றி வாழ்ந்த ஒரு வகைப் பறவையைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவருடன் இருந்த பக்கீர்களில் ஒருவர் அந்தப் பறவையைக் கல்லால் எறிந்தார். உடனே அப்பறவை மாவாவுன் கைர் என்ற இடத்துக்கு (அல்லது ஆற்றுக்கு அப்பால்) ஒரேயடியாகப் பறந்தோடி விட்டது. அந்தப் பறவையைக் காணவில்லையே என்று கேட்டார். நடந்த விபரம் அவரிடம் கூறப்பட்டது. உடனே அப்பறவைக்கு ஷாகுல் ஹமீது கடிதம் எழுதினார். அதை ஷாஹ் ஹஸன் என்பாரிடம் கொடுத்தனுப்பி அப்பறவையிடம் படித்துக் காட்டச் சொன்னார். அப்பறவையிடம் அக்கடிதம் படித்துக் காட்டப்பட்ட போது உடனே தனது வசிப்பிடத்தை நோக்கித் திரும்பி வந்து விட்டது.
ஷாகுல் ஹமீதின் கட்டளைக்குப் பறவைகள் கூடக் கட்டுப்பட்டு நடந்தன. அதன் பாஷையும் அவருக்குத் தெரிந்திருந்தது என்று சித்தரிப்பதே இக்கதையின் நோக்கம்.
பறவை காணாமல் போய் விட்டதற்கான காரணம் ஷாகுல் ஹமீதுக்குத் தெரியாமல் மற்றவர்களிடம் விசாரித்து அறிந்து கொண்டதாகவும் இக்கதை ஒப்புக் கொள்கிறது. பறவை ஏன் காணாமல் போய் விட்டது? என்பதை அறிய முடியாத ஷாகுல் ஹமீது அதற்கு எப்படிக் கடிதம் எழுதினார்?
பறவைகளில் பல வகைகள் உள்ளன. ஒரு வகையைச் சேர்ந்த பறவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவும் தனித்து அடையாளம் காண முடியாததாகவும் அமைந்திருக்கும். இந்த வகைப் பறவை என்று இனம் காண முடியுமே தவிர தனிப்பட்ட பறவையை அறிந்து கொள்ள முடியாது.
பறவைக்குக் கடிதம் கொண்டு சென்றவர் அந்தப் பறவை இருக்குமிடத்தை எப்படிக் கண்டு பிடித்தார்? நாகூரிலிருந்து தப்பி வந்த பறவை இது தான் என்பதை எப்படி அறிந்து கொண்டார்?
ஒரு பறவையின் அமைப்பு நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தலாம். அந்தப் பறவை நம்மை விட்டுக் கடந்து விட்டால் அதை மறந்து விட்டு மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவோம். ஒரு நல்லடியார், திருமணம் கூடச் செய்யாமல் ஆசாபாசங்களைத் துறந்தவர், ஒரு பறவை காணாமல் போனதற்காக, அதை வரவழைப்பதற்காக தனது சீடரை அனுப்பி வைப்பாரா? அந்தப் பறவை இல்லாமல் வாழ முடியாதா? அல்லது இறை தியானத்தில் ஈடுபட முடியாதா? இது ஒன்றும் தலை போகின்ற விவகாரம் இல்லையே!
நல்லடியார்கள் ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் ஆயிரம் இருக்க ஒரு பறவையைத் தேடி தம் சீடரின் பொன்னான நேரத்தை வீணடிப்பது தான் நல்லடியாரின் பணியா?
பறவைகள் தமக்கிடையே பேசிக் கொள்ளும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். அந்த மொழியை, அதே பறவை இனத்தைச் சேர்ந்த ஏனைய பறவைகள் தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது. தாவூத் நபி, சுலைமான் நபி ஆகியோருக்குப் பறவைகளின் மொழியைக் கற்றுக் கொடுக்கப்பட்டதாகக் குர்ஆன் கூறுகின்றது.
தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 27:16
இது இந்த இரண்டு நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய தனிச் சிறப்பாகும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அந்தத் தனிச் சிறப்பு ஷாகுல் ஹமீதுக்கும் இருப்பதாகக் காட்டுவது ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும்.
மேலும் பறவைகள் தமக்கிடையே பேசிக் கொண்டாலும் அந்தப் பேச்சை எழுத்தில் கொண்டு வர முடியாது. எறும்புகள் பேசிக் கொண்டதை சுலைமான் நபி புரிந்து கொண்டதாகக் குர்ஆன் கூறுகின்றது. அந்த மொழியை எழுத்தில் கொண்டு வர முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது.
இவர் பறவைக்குக் கடிதம் எழுதினார் என்று கூறப்படுவதால் மனித மொழியால் தான் அதை எழுதியிருக்க முடியும். மேலும் அந்தக் கடிதத்தை அவரது சீடர் தான் பறவையிடம் வாசித்துக் காட்டியதாகவும் இந்தக் கதை கூறுகின்றது. எனவே மனித மொழியில் எழுதப்பட்ட கடிதம் தான் என்பதை இது மேலும் ஊர்ஜிதப்படுத்துகின்றது. அப்படியானால் மனிதர்களின் மொழியை பறவைகள் அறிய முடியுமானால் ஷாகுல் ஹமீதை விட அப்பறவைக்கு அதிக சிறப்பு இருக்கின்றது என்று தான் கருத வேண்டும்.
ஏனெனில் மனிதர்களின் மொழியை அப்பறவை புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தியும் உள்ளது.
நல்லவேளை! அப்பறவையின் அடக்கத்தலம் தர்கவாதிகளுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனித மொழியைத் தெரிந்த அப்பறவைக்கும் ஒரு தர்காவைக் கட்டி பறவை அவ்லியாவாக ஆக்கியிருப்பார்கள்.
இப்போதும் குடிமுழுகி விடவில்லை. அந்தப் பறவை அவ்லியா இங்கே தான் அடக்கமாகியுள்ளார் என்பதைக் கனவில் காட்டப்பட்டது என்று யாராவது கூறி தர்கா கட்டலாம். அதையும் நம்புவதற்குத் தமிழகத்தில் பக்தர்கள் உள்ளனர்.
————————————————————————————————————————————————
முதஷாபிஹாத் தொடர்: 10
முதஷாபிஹ் வசனங்கள் எவை?
முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நாம் கூறும் போது, “முதஷாபிஹ் வசனங்கள் யாவை? அவை எத்தகைய தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்?’ என்பதையும் கூறுவது அவசியமாகும்.
முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறும் போது, கல்வியில் சிறந்தவர்கள் என்றால் யார் என்பதையும் கூற வேண்டும்.
இன்னின்ன வசனங்கள் முதஷாபிஹ் வசனங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் பட்டியல் போட்டுச் சொல்லவில்லை. எனினும் முதஷாபிஹ் வசனங்கள் எத்தகையது என்பதற்கான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்தக் குறிப்புகளைக் கொண்டு முதஷாபிஹ் வசனங்கள் யாவை என்பதை நாம் அறிய முடிகின்றது. அதன் சரியான பொருளையும் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஒரு சில வசனங்கள் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடம் தரும் வகையில் அமைந்திருக்கும். அந்த முரண்பாடு எத்தகையது என்றால், ஒரு கருத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது அது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதமாகவும் மற்றொரு கருத்தைக் கொள்ளும் போது அது இஸ்லாத்தின் அடிப்படையை நிலைநிறுத்துவதாகவும் அமைந்திருக்கும். முதஷாபிஹ் வசனங்களின் முக்கியமான அம்சம் இது!
இது போன்ற அம்சம் திருக்குர்ஆனில் மட்டுமல்ல! மனிதர்கள் பயன்படுத்துகின்ற சொற்களில் கூட இந்த நிலைமை இருப்பதை நாம் உணரலாம்.
உதாரணமாக, “இமாம்களைப் பின்பற்றக் கூடாது’ என்று நாம் கூறுகிறோம். இதைப் பிடித்துக் கொண்டு, இமாம்களை நாம் இழிவுபடுத்துவதாகச் சிலர் புரிந்து கொள்கின்றனர். இமாம்களைப் பற்றி நாம் கூறியுள்ள நற்சான்றுகளைக் கவனிக்கத் தவறியதால் இவ்வாறு புரிந்து கொள்கின்றனர்.
“கப்ருகளைத் தரை மட்டமாக்குங்கள்; கப்ருகளில் விழா நடத்தாதீர்கள்’ என்று நாம் கூறும் போது, இதை மட்டுமே பார்க்கக் கூடிய சிலர், “இறை நேசர்களை இழிவுபடுத்துவது தான் இதற்குப் பொருள் என்று சாதிக்கின்றனர். இவ்வாறு இவர்கள் சாதிப்பதற்குக் காரணம் என்ன? இறை நேசர்கள் பற்றி நாம் கொண்டுள்ள கருத்துக்களை இவர்கள் முழுமையாக ஆராய்வதில்லை. இறை நேசர்களை மதிப்பதற்காகவே இவ்வாறு கூறுகிறோம் என்பதை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.
“பாங்குக்கு முன்னால் ஸலவாத் கூறக் கூடாது’ என்று நாம் கூறினால், ஸலவாத்தையே நாம் மறுப்பதாகத் தவறான அர்த்தம் கற்பிக்கின்றனர். விபரமுடையவர்கள் தான் இது போன்ற கூற்றுக்களின் சரியான பொருளை அறிந்து கொள்வார்கள்.
இதை இங்கே நாம் எதற்காகக் குறிப்பிடுகின்றோம் என்றால், குர்ஆன் வசனங்களுடன் மற்ற மனிதர்களின் சொற்களை ஒப்பிடுவதற்காக அல்ல! முக்கியமான சந்தேகம் ஒன்றை நீக்குவதற்காகவே இந்த உதாரணங்களை நாம் கூறுகிறோம்.
அதாவது திருக்குர்ஆனில் முரண்பட்ட இரண்டு அர்த்தங்களுக்கு இடமளிக்கும் வகையில் சில வசனங்கள் அமைந்திருப்பது திருக்குர்ஆனுக்குப் பலவீனம் அல்லவா? யாவும் அறிந்த வல்ல இறைவனால் அருளப்பட்ட வசனங்களிலேயே இப்படி முரண்பட்ட இரு கருத்துக்களுக்கு இடமிருப்பது எந்த வகையில் நியாயமாகும்? இப்படி ஓர் ஐயம் சிலரது உள்ளங்களில் உருவாகலாம்.
முரண்பட்ட இரு கருத்துக்களையும் தெரிவிப்பதற்காக இறைவன் அவ்வசனங்களை அருளவில்லை. குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்கே அருளினான். ஆனாலும் மூடர்கள் தங்கள் அறியாமையினாலும், வழிகேடர்கள் குழப்பம் விளைவிப்பதற்காகவும் அல்லாஹ் கூறாத பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கோளாறு வசனங்களில் இல்லை. சிலரது உள்ளங்களில் தான் உள்ளது.
இமாம்களைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறும் வாசகத்தில் இமாம்களை இழிவுபடுத்தும் எந்த அம்சமும் இல்லை. இதன் கருத்து, சிந்தனையாளர்களால் தெளிவாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. இவ்வளவு தெளிவான வாசகத்தைக் கூட அறிவீனர்கள் தங்கள் அறியாமையினால் தவறான கருத்தைக் கொண்டதாக எண்ணுகிறார்கள். அறிந்து கொண்டே வழிகேட்டில் இருப்பவர்கள் வேண்டுமென்றே இதன் அர்த்தத்தை அனர்த்தமாக்கி விடுகின்றனர்.
மனிதனால் பேசப்படும் எந்த மொழியானாலும் ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாகப் புரிந்து கொள்வது சகஜமானது தான். திருக்குர்ஆனில் இவ்வாறு இடம் பெற்றிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமில்லை. ஏனெனில் அன்றைய மனிதர்கள் பேசிக் கொண்டிருந்த அரபு மொழியிலேயே திருக்குர்ஆன் அருளப்பட்டது.
உண்மையில் முதஷாபிஹ் வசனங்களும் குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்காகவே இறைவனால் அருளப்பட்டன. இன்றளவும் அந்த ஒரு கருத்தைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்த வசனம் சொல்லாத ஒரு கருத்தை அதற்குக் கற்பித்துக் கொண்டு வழிகேடும், அறியாமையும் நிறைந்த உள்ளங்கள் திசைமாறிச் சென்று விடுகின்றன.
திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்காகவே வல்ல இறைவனால் அருளப்பட்டன. அவற்றில் பல வசனங்கள் அந்த ஒரு கருத்தைத் தெளிவாகச் சொல்வதுடன் அதில் விஷமம் செய்வதற்கு அறவே இடமளிக்காமல் இருக்கும்.
மற்றும் சில வசனங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதற்காகவே அருளப்படடிருந்தாலும் மாற்றுக் கருத்துக்கு அதில் இடமில்லாவிட்டாலும், விஷமிகள் அதற்குத் தப்பர்த்தம் செய்து கொள்வதற்கு இடமிருக்கும். அவர்கள் செய்யும் அர்த்தம் விஷமத்தனமானது; அந்த வசனத்தில் சொல்லப்படாத அர்த்தம் அது என்பதைச் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வர்.
உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர்.
அல்குர்ஆன் 3:7
இறைவனின் இந்த ரத்தினச் சுருக்கமான வார்த்தைப் பிரயோகம் இதனை நமக்கு நன்றாகப் புரிய வைக்கின்றது. எவரது உள்ளத்தில் வழிகேடு ஆழமாகப் பதிந்து விட்டதோ அவர்கள் தங்களின் வழிகேட்டை நியாயப்படுத்துவதற்கும் அதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்க முயற்சிப்பர்.
உண்மையில் இப்படி விஷமத்தனமான அர்த்தத்திற்கு அந்த வசனத்தில் இடமே இல்லை. அப்படியானால் அவர்கள் செய்யும் அர்த்தம் விஷமத்தனமானது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
இது ஒன்றும் சிரமமானதல்ல! “இமாம்களைப் பின்பற்றக் கூடாது’ என்று நாம் கூறுவதற்குத் தவறான பொருள் கற்பிக்கச் சிலர் முயலும் போது என்ன செய்கிறோம்?
“இமாம்களைப் பின்பற்றக் கூடாது’ என்று சொல்பவர்கள் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன? இந்தக் கருத்தைச் சொல்பவர்கள் பேசியவை, எழுதியவை, அதில் அவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்களுக்கு இந்த வாசகத்தின் உண்மையான பொருள் தெளிவாகத் தெரிந்து விடும்.
இது போலவே திருக்குர்ஆனின் குறிப்பிட்ட ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தங்கள் தவறான கருத்தை நிலைநாட்ட சிலர் முயன்றால், இவர்களின் கருத்து சரியா? தவறா என்பதைப் புரிந்து கொள்வதற்குத் திருக்குர்ஆன் இது பற்றி மற்ற இடங்களில் கூறியிருப்பவை என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது பற்றி அளித்துள்ள விளக்கம் என்ன என்று ஆராய வேண்டும்.
ஏனைய வசனங்களின் கருத்துக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விளக்கத்திற்கு முரணாக இவர்கள் கொடுக்கும் அர்த்தம் இருந்தால் இந்தக் கருத்தைத் தள்ளி விட வேண்டும்.
ஆக, முதஷாபிஹ் வசனங்களின் சரியான பொருளை அறிந்து கொண்டு, தவறான கருத்தை நிராகரிப்பதற்கு முக்கியமான தகுதி என்னவென்றால், திருக்குர்ஆன் அந்த விஷயத்தைப் பற்றி மற்ற இடங்களில் என்ன கூறுகின்றது என்பதைப் பற்றிய தெளிவேயாகும். இதை அரபு மொழியில் தான் அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் மொழியிலேயே திருக்குர்ஆன் கூறும் அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொண்டாலே போதும். இத்தகைய வசனங்களின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளலாம்.
“முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் “இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே” எனக் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 3:7
கல்வியில் சிறந்தவர்கள் கூறும் வார்த்தைகளைக் கவனியுங்கள். முதஷாபிஹ் பற்றிய பிரச்சனை ஏற்படும் போது, “இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே” என்பார்கள். “இவை அனைத்தையும் நம்பினோம்” என்பார்கள்.
“இந்த ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தப்பான அர்த்தம் செய்யாதீர்கள். இந்த முழுக் குர்ஆனும் இறைவனிடமிருந்து தான் வந்துள்ளது. முழுக் குர்ஆனும் என்ன போதனையை வலியுறுத்துகின்றதோ அதற்கு மாற்றமான ஒரு கருத்தை நீங்கள் கூறாதீர்கள். குர்ஆனின் மற்ற சில வசனங்கள் கூறும் ஒரு கருத்துக்கு நேர் மாற்றமான ஒரு கருத்தை இந்த வசனத்திற்குக் கொடுப்பதன் மூலம், குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுக்காதீர்கள். நாங்கள் அனைத்தையும் நம்பினோம். எந்த வசனத்துடனும் எந்த வசனத்தையும் மோதச் செய்ய மாட்டோம்”
கல்வியாளர்களின் கூற்றில் இத்தனையும் அடங்கியிருப்பதைச் சிந்திக்கும் எவருமே உணர முடியும்.
முதஷாபிஹ் வசனங்களுக்குச் சரியான பொருளைச் செய்யத் தகுந்த கல்வியாளர்கள் யாரென்றால், அவர்களிடம் மேற்கண்ட தன்மைகள் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு சிலர் தப்பர்த்தம் செய்யும் போது கல்வியாளர்களின் பார்வை முழுக் குர்ஆனையும் அலச வேண்டும். முழுக் குர்ஆனின் போதனைகளுக்கு உட்பட்டு இந்த அர்த்தம் அமைந்துள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
முதஷாபிஹ் வசனத்திற்குச் செய்யப்படும் பொருள் ஏனைய வசனங்களின் பொருளை மறுக்கும் விதமாக இருந்தால், குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுக்கும் நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படாத வகையில், “இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை; இவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம்’ என்று எவர்களது உள்ளத்தில் ஆழமான நம்பிக்கை உள்ளதோ அவர்களே கல்வியாளர்கள். அவர்களால் தான் இவற்றின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.
இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறோம். முதஷாபிஹ் பற்றிக் கூறும் 3:7 வசனம் எந்தச் சந்தர்ப்பத்தில் இறங்கியது என்பதே அந்த எடுத்துக்காட்டு!
திருக்குர்ஆனில் பல இடங்களில் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி இறைவன் கூறும் போது, “கலிமத்துல்லாஹ்’ (இறைவனின் வார்த்தை), “ரூஹுன் மின்ஹு’ (இறைவன் புறத்திலிருந்து வந்த உயிர்) என்றெல்லாம் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த கிறித்தவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஈஸாவை இறைவனின் வார்த்தை என்றும், இறைவனின் உயிர் என்றும் நீர் ஒப்புக் கொள்கிறீரா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்’ என்றார்கள். அதற்கு அந்தக் கிறித்தவர்கள், “இது எங்களுக்குப் போதும்” என்று கூறி விட்டுச் சென்றனர். உடனே 3:7 வசனம் இறங்கியது. (தப்ரீ)
முதஷாபிஹ் பற்றிக் கூறும் 3:7 வசனம் இந்தச் சந்தர்ப்பத்தில் இறங்கியது என்றால் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் உயிர், இறைவனின் வார்த்தை என்றெல்லாம் வர்ணிக்கின்ற வசனங்கள் முதஷாபிஹ் என்பது தெளிவாகின்றது.
அதாவது, ஈஸா (அலை) அவர்களை கலிமத்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று இறைவன் குறிப்பிடுவது உண்மையே! அன்றைய கிறித்தவர்கள் இந்த வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு, “இறைவனின் குமாரர்’ என்பதையே இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன என்று வேண்டுமென்றே வியாக்கியானம் செய்தார்கள்.
திருக்குர்ஆனில் ஏனைய வசனங்களில், “அவன் யாரையும் பெறவில்லை’ என்றும், “அவன் தனக்கென மனைவியையோ, மக்களையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை’ என்றும், “அளவற்ற அருளாளனுக்கு மகன் இருந்தால் அந்த மகனை வணங்குவதில் நான் முதன்மையானவனாக இருப்பேன் என்று கூறுவீராக’ என்றும் இறைவன் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றான்.
இறைவனுக்குப் பிள்ளைகள் இல்லை என்று தெளிவாகக் கூறக் கூடிய, இரண்டாவது கருத்துக்கு இடமின்றி ஆணித்தரமாகக் கூறக்கூடிய இந்த வசனங்களையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, இறைவனின் மகன் என்ற அர்த்தத்தைத் தராத “கலிமத்தில்லாஹ்’ என்ற வார்த்தைக்கு “இறை மகன்’ என்று வழிகெட்டவர்கள் பொருள் கொண்டனர்.
“உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர்” என்று இறைவன் இதைக் கண்டிக்கிறான்.
கலித்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று இறைவன் கூறுகின்ற இந்த வசனங்களின் சரியான பொருளை நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். நபித்தோழர்கள் அனைவருமே அறிந்திருந்தார்கள். ஒரு நபித்தோழர் கூட, “கலிமத்துல்லாஹ்’ என்றால் “இறைவனின் மகன்’ என்று பொருள் கொள்ளவே இல்லை. இவர்கள் அனைவரும் இதன் சரியான பொருளை எப்படிப் புரிந்து கொண்டனர்?
“இந்த ஒரு வசனம் மட்டும் இறைவனிடமிருந்து வந்தது அல்ல! முழுக் குர்ஆனும் அந்த இறைவனிடமிருந்து தான் வந்தது’ என்று அவர்கள் நம்பினார்கள். இதற்குச் சரியான பொருளைக் கண்டு கொள்ள ஏனைய வசனங்களின் துணையை நாடினார்கள்.
இறைவனுக்கு மனைவி மக்கள் இல்லை என்று தெளிவாக இறைவன் வேறு பல இடங்களில் குறிப்பிடும் போது, அதற்கு மாற்றமாக “கலிமத்துல்லாஹ்’ என்பதற்கு இறைவனின் மகன் என்று பொருள் கொண்டால் மற்ற வசனங்களை மறுக்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். இதன் காரணமாகவே நபித்தோழர்களில் எவருமே, “இறைவனின் வார்த்தை’ என்பதற்கு இறைவனின் மகன் என்று பொருள் கொள்ளவில்லை.
ஆதம் (அலை) அவர்கள் தவிர மற்ற மனிதர்கள் அனைவரும் ஆணுடைய விந்துத் துளி மூலம் பிறந்திருக்கும் போது ஈஸா (அலை) அவர்கள் மட்டும் விஷேசமான முறையில், இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் பிறந்ததால், தன்னுடைய வார்த்தை, தன்னுடைய உயிர் என்று இறைவன் சிறப்பித்துச் சொல்கிறான் என்று அவர்கள் தெளிவாகவே புரிந்திருந்தார்கள்.
தங்களுக்குச் சாதகமாக ஏதேனும் கிடைத்தால் அதை மட்டும் பிடித்துக் கொள்வோம் என்ற மனப்பான்மை கொண்ட அன்றைய கிறித்தவர்கள் மட்டுமே இப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
இன்றைக்கும் கூட இறைவனுக்கு மகன் இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கும் எவரும், கலிமத்துல்லாஹ் என்ற வார்த்தைக்கு இப்படி விபரீதமான பொருளைக் கொள்ள மாட்டார்கள்.
* கிறித்தவர்கள் இந்த வசனத்தில் விளையாட முற்பட்ட போது அவர்களின் போக்கை அடையாளம் காட்டும் விதமாக 3:7 வசனம் இறங்கியதால், கலிமத்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று ஈஸா நபியைப் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள் அனைத்தும் முதஷாபிஹ் என்பது தெளிவு.
* அந்த முதஷாபிஹ் வசனங்களை நபித்தோழர்கள் அனைவரும் சரியாகப் புரிந்து கொண்டார்கள் என்பதும் தெளிவு.
* இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக அறிந்து வைத்திருக்கும் இன்றைய முஸ்லிம்களில் யாரும் அந்த வசனங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதும் தெளிவு.
* கிறித்தவர்கள் புரிந்து கொண்ட அர்த்தத்தில் அந்த வசனம் அமைந்திருக்கவில்லை என்பதும் தெளிவு.
இந்த அம்சங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது முதஷாபிஹ் எத்தகையது? அதை விளங்கும் கல்விமான்கள் யார் என்பதை அறியலாம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————
நிர்வாகவியல் தொடர்: 5
தொடர்புத் திறன்
நிர்வாகவியல் தொடரில் இதுவரை, ஒரு நிர்வாகம் வெற்றிகரமாக இயங்குவதற்கு அந்நிர்வாகத்தின் அங்கங்களான நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய ஆளுமைப் பண்புகள் பற்றிப் பார்த்தோம்.
எப்படி ஒரு தனி மனிதர் தன்னளவில் சிறந்த பண்பாளராக, ஒழுக்கம் உடையவராக, திறமைகள் நிறைந்தவராகத் திகழ வேண்டுமோ அது போல் அவர் பிறரிடம் உள்ள தொடர்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அந்த அடிப்படையில் தற்கால நிர்வாகவியல் கல்வியின் இன்னொரு பகுதியான தொடர்புத் திறன் (ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ள்ந்ண்ப்ப்ள்) பற்றி இனி பார்ப்போம்.
ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பதை, அந்நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கத்தை வைத்துத் தான் முடிவு செய்ய முடியும். அதனால் தான் மக்கள் ஆதரவு இல்லாத கட்சிகள் லட்டர் பேடு கட்சிகள் என்று ஏளனம் செய்யப்படுகின்றன. மக்கள் ஆதரவு இல்லாத தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. ஒருவரோடு ஒருவருக்குள்ள தொடர்புகள் சீராக இல்லாத காரணத்தால் குடும்பங்கள் சீரழிகின்றன. வெற்றி பெற்ற நிர்வாகம் என்பது, நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கமான, விரைவான தொடர்பில் தான் உருவாகின்றது.
தலைவர்கள் எனப்படுவோர் சிறந்தத் தொடர்பாடல் திறமை கொண்டவர்கள். தங்களது கொள்கைகளையும் எண்ணங்களையும் திட்டங்களையும் மக்களின் உணர்வுகளைத் தொடும் வண்ணம் பரப்பத் தெரிந்தவர்கள்.
தற்கால ஆய்வுகளின்படி சிறந்த நிர்வாகி அல்லது தலைவர்கள் பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகிய இரண்டிலுமோ அல்லது இரண்டில் எதாவது ஒன்றிலோ சிறந்து விளங்குகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பேசும் போது அடுக்கு மொழிகளை உயர்ந்த இலக்கிய நடையில் உரையாற்றி சிறந்த பேச்சாளர் என்று பெயர் வாங்குவது பெரிதல்ல. உங்கள் பேச்சைக் கேட்டவர்கள் உங்கள் கருத்தை நோக்கி எந்த அளவு நகர்கின்றார்கள் என்பது தான் நீங்கள் எவ்வளவு சிறந்த பேச்சாற்றல் கொண்டவர் என்பதை முடிவு செய்யும்.
வளவளவெனப் பேசி மக்களுக்கு எரிச்சலூட்டி, சோர்வடையச் செய்யும் வகையில் தெரிந்த விஷயங்களையெல்லாம் கொட்டித் தீர்ப்பது, அல்லது படபடவென குறுஞ்செய்தி போல் முடித்து விடுவது சிறந்ததல்ல.
பேசப் போகும் விஷயத்தை முன் கூட்டியே தயாரித்தல், நமக்கு முன் அமர்ந்திருக்கும் மக்களின் அறிவுத் திறன், கல்வித் தகுதி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் புரியும் விதத்தில் செய்திகளை எளிமையாக விளக்குதல் அவசியம்.
கேட்பவர்களை ஆர்வமூட்டுதல், இடைவெளி விட்டுப் பேசுதல், வார்த்தைக்குத் தகுந்தாற்போல் உடல் பாவனைகளுடன் குறைந்த நேரத்தில் முடித்துக் கொள்வது போன்றவை சிறப்பு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சு, கேட்கும் அனைவரும் எளிதில் விளங்கும் விதத்தில் தெளிவான வார்த்தைகளாக இருந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத்
நபி மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை சந்திக்கப் பல முன்னேற்பாடுகளைச் செய்தார்கள். அதில் ஒன்று, மிகத் தெளிவாகப் பேசும் ஆற்றலுடைய தமது சகோதரர் ஹாரூனை உதவியாக அனுப்பும்படி அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றார்கள்.
“என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
அல்குர்அன் 28:34
மற்றவர்களைப் புரிந்து கொள்தல்
ஒரு நிர்வாகி, தலைவர் தன் நிலையிலிருந்து பணியாற்றுதல், மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமை போன்ற காரணங்களால் சர்வாதிகாரம் செலுத்துபவர் போல் தோன்றும். நாளடைவில் அவரை சக நிர்வாகிகளும் மக்களும் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும்.
அதனால் இன்று மற்றவர்களைப் புரிந்து கொள்வது தொடர்புத் திறனின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. இது பெரும்பாலும் தனக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புத் தகுதி என்று பெரும்பாலானோர் எண்ணுவதைப் பார்க்க முடியும். பிறரைப் புரிந்து கொள்வதென்பது அறிவுக்குப் புலப்படாத அற்புதம் ஒன்றும் இல்லை.
பிறரைப் புரிந்து கொள்ள அவர் பேசுவதை நன்றாகக் கேட்பது, அவருடைய நடவடிக்கைகள் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனிப்பது, அவரைப் பற்றி விசாரிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் பேசுவதைச் செவிமடுப்பது
சிலர் பேசிக் கொண்டேயிருப்பார்கள். பிறரைப் பேசவும் விட மாட்டார்கள். எதிரில் அமர்ந்திருப்பவர் சிரமப்பட்டுப் பேசத் துவங்கினாலும் இடையில் குறுக்கிட்டு மீண்டும் தனது பேச்சை தொடருவர். எனவே பிறர் பேசுவதை செவிமடுக்க வேண்டும். அவ்வாறு கேட்கும் போது, அவருடைய சிந்தனை ஓட்டம், அனுபவம், பலம், பலவீனங்கள் முதலியவை தெளிவாகப் புரிந்துவிடும். எனவே உரையாடும்போது எதிரிலிருப்பவரை முழுமையாகப் பேசவிட்டு உங்கள் பேச்சைத் துவங்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம் மற்றவர்களுடைய பேச்சுக்குச் செவிசாய்ப்பதை, கவனித்தல், உள்வாங்கிக் கொள்ளுதல், கேட்பதைப் போல் நடித்தல் எனப் பல வகைகளாகப் பிரிக்கின்றனர். இதில் நீங்கள் எந்த வகை?
திருக்குர்ஆன் கூறுகின்றது:
அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள்.
அல்குர்ஆன் 39:18
நடவடிக்கைகள் பழக்க வழக்கங்களைக் கவனித்தல்
ஒருவருக்கு நெருக்கமாக இருக்கும் அளவுக்கு அவரைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். ஒரு மனிதனின் பொறுமை, வாக்குறுதிகளைக் காப்பாற்றும் திறன், உதவி செய்தல், உடல் வலிமை போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அழகான வழிமுறைகளைக் காட்டினார்கள்.
அதாவது ஒருவருடன் பயணம் செய்வது, கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வது இந்த இரண்டு தொடர்புகளும் வைத்துக் கொண்டாலேயே பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் மனதில் சம்பந்தப்பட்ட நபரைப் பற்றிய முடிவுக்கு வந்துவிடுவீர்கள்.
மற்றவர்களைப் பற்றி விசாரித்து அறிதல்
பல நேரங்களில் ஒரு தனி நபர் சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு ஒரு நிர்வாகமோ அல்லது தனி நபர்களோ தள்ளப்படுகின்றோம். அப்போது அவரை நன்றாகத் தெரிந்தவர்களிடம் முறையாக விசாரிப்பது அவரைப் பற்றி அறிந்து கொள்ள வழிவகுக்கும்.
(விவாகரத்துச் செய்யப்பட்ட) நான் “இத்தா‘வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்” என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உசாமாவை மணந்துகொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அறிவிப்பவர்: ஃபத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2709
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுபவர்களில் நான் யாரைத் தேர்வு செய்யட்டும் என்று கேட்ட போது நபி அவர்கள் தெளிவாகக் கருத்துக் கூறியது ஒரு சிறந்த முன்மாதிரி.
ஆகையால் ஒருவருக்கு இருக்க வேண்டிய தொடர்புத் திறனில் மற்றவர்களைப் புரிந்து கொள்வது முதல் நிலை என்பதை அறிந்து தொடர்பு கொள்வோம்.
ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறரை எடை போடுகின்றோம் என்று நமக்குப் பிடிக்காதவர்களின் குறைகளைப் பேசித் திரியக் கூடாது.
மனதைத் தூண்டுதல்
ஒரு நிர்வாகம் எப்பொழுது சீராக இயங்கும் என்றால் சாதாரண மனிதர்களைக் கொண்டு மாபெரும் பணிகளை செய்து முடிக்கக் கூடிய நிர்வாகிகளைப் பெற்றிருப்பதன் மூலமே!
ஒரு இயக்கத்தை அல்லது நிறுவனத்தை வழி நடத்தும் நிர்வாகி தானே தூங்கிக் கொண்டிருந்தால் நிறுவனத்தின் அல்லது அந்த இயக்கத்தின் எந்த பணிகளும் நடைபெறாது.
சுயமாக, தானே சிந்தித்து, வசதியிருந்தால் சுற்றியிருக்கும் நடப்புகளைக் கவனித்துத் தகவல் கூற உதவியாகச் சிலரை வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்தின், இயக்கத்தின் அங்கங்களை ஓயாமல் இயக்க வேண்டும்.
இத்தகையோர் தலைவர்களாக இருக்கும் இயக்கமோ நிர்வாகமோ தான் எதிர்காலத்தில் தனது இலக்கை அடையும். இவர்களது சிந்தனையில் வேகம், விவேகம், வீரியம், சுறுசுறுப்பு, உரிய நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு, எப்போதுமே சக ஊழியர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, அவர்கள் சோர்வடையும் நேரங்களில் புத்துணர்ச்சியூட்டுதல் என ஒரு நிர்வாகியின் அத்தனை நடவடிக்கைகளும் அவரது சக நிர்வாகிகளைத் தூண்டி பணிகளை முடிப்பதிலேயே குறியாக இருக்கும்.
இந்தத் திறமைகளை, ஆற்றலை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முழுவதும் நாம் காண முடிகின்றது. எந்த வகையிலும் ஒப்பிட முடியாத பலம் கொண்ட ஒரு படையை எதிர்த்துப் போரிட பத்ருக் களத்தை நோக்கிப் படை நடத்திய போது தம்முடனிருந்த தோழர்களை நபியவர்கள் தயார் படுத்திய விதம், உற்சாகப்படுத்திய விதம், அவர்களுக்கு ஆர்வமூட்டிய விதத்தை நாம் கூறவும் முடியுமா?
இதோ அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.
அல்குர்ஆன் 9:128
ஆக ஒரு சிறந்த தலைவன் என்பது தடையில்லா மின்சாரம் பாய்ச்சும் மனதுக்குச் சொந்தக்காரன்.
மனித வளம்
உலகில் எத்தனை புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும், விதவிதமான ரோபோக்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் மனிதனின் அறிவுக்கு இணையான ஒன்றை மனிதனால் உருவாக்க முடியாது. ஆகையால் எந்த ஒரு நிர்வாகத்திற்கும் அந்த நிர்வாகத்திற்காக உழைக்கும் ஊழியர்கள் தான் முதல் வளமும் முழு வளமும் ஆகும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் நிர்வகிக்கும் நிர்வாகம் சண்டைகளின் கூடாரமாகக் காணப்படும்.
மனித வளங்களைத் திரட்டுவதும், தேர்வு செய்வதும், அவர்களைப் பயிற்றுவிப்பதும், பணிகளைப் பகிர்ந்தளித்து அதை நேர்த்தியாக நிறைவேற்றுபவராக மாற்றுவதும் ஒரு தலைவனின் திறமைகளில் முதல் திறமையாக இருக்க வேண்டும்.
பெரும் பெரும் தொழில் நிறுவனங்களைப் பொறுத்த வரை இது உலகெங்கும் நடக்கின்றது. இஸ்லாமிய இயக்கங்களுக்கு இது பெரும்பாலும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதனால் தான் நிலைக்காது என்று தெரிந்தும் பொய்யைக் கூறி தங்கள் கொள்கைகளை மறந்து கட்சிக்கு ஆள் சேர்க்கின்றனர்.
பல தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ள உறுப்பினர்களை அதிகாரம் செய்வது தான் தலைவரின் வேலை என நினைக்கின்றார்கள். மேலும் பலர் தங்களது கட்சிகளின் பாரம்பர்யம் பற்றிப் பேசுவார்கள். ஆனால் மக்கள் இருக்க மாட்டார்கள்.
ஆகையால் மனித வளம் நிறைந்த ஒரு நிறுவனம், ஒரு கட்சி அல்லது இயக்கம் தான் உயிரோட்டமுள்ளதாக இயங்கும். இத்தகைய சிறந்த வளத்தைத் தங்கள் பேச்சால், எழுத்தால், நடைமுறையால், முன்மாதிரி ஒழுக்க வாழ்க்கையால் மக்களைச் சுண்டி இழுப்பவர்கள் தான் தலைவர்கள், நிர்வாகிகள்.
இப்படி இணைபவர்களின் சுக துக்கங்களில் நிர்வாகிகள் பங்கு வகிக்க வேண்டும். அவர்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். முடிந்த வரை உதவிகள் செய்ய வேண்டும். அவர்களைப் பயிற்றுவித்துத் திறமையானவர்களாக (ஊச்ச்ண்ஸ்ரீண்ங்ய்ற்) மாற்ற வேண்டும்.
இதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் காண முடியும். நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் தூதுத்துவத்தை அறிமுகப்படுத்தும் போது அவ்வூரில் சூதாட்டம், மது, விபச்சாரம், வன்முறை இன்னும் என்னென்ன சமூகக் கொடுமைகள் உள்ளனவோ அத்தனையும் சூழ்ந்து கிடந்தது.
அங்கு தனது பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரையும் தொண்டர்களாக அல்லாமல் தோழர்களாக மாற்றி, அற்ப விஷயங்களுக்காக அடித்துக் கொண்டிருந்தவர்களை அடி வாங்கும் போதும் பொறுமை காப்பவர்களாக மாற்றி, பொறுமையின் உச்சக்கட்டத்தை அடைந்தவர்களைப் போர் வீரர்களாகவும் மாற்றி உலக வரலாற்றைப் புரட்டிப் போட்டதன் பின்னணி, நபி (ஸல்) அவர்கள் மனித வளத்தைப் பயன்படுத்திய விதம் தான்.
இறைவன் நாடினால் இன்னும் வரும்
————————————————————————————————————————————————
ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 16
நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா?
“சூனியம் என்பது கற்பனையல்ல; மெய்யான அதிசயமே! அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம்’ என்றெல்லாம் பல அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிக்கச் சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.
புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. தங்களின் கருத்தை மெய்யாக்குவதற்கு இவற்றை ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ்கள் வருமாறு:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். “எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டி விட்டான் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். “இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன?’ என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். “இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது‘ என்று மற்றவர் விடையளித்தார். “இவருக்குச் சூனியம் செய்தவர் யார்?’ என்று முதலாமவர் கேட்டார். “லபீத் பின் அல்அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான்‘ என்று இரண்டாமவர் கூறினார். “எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?’ என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர், “சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது‘ என்று விடையளித்தார். “எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?’ என்று முதலாமவர் கேட்டார். “தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது‘ என்று இரண்டாமவர் கூறினார்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். “அங்குள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது” என்று என்னிடம் கூறினார்கள். “அதை அப்புறப்படுத்திவிட்டீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள், “இல்லை! அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3268
தம் மனைவியிடத்தில் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 5765
நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக ஒரு செய்தி கூறுகிறது.
நூல்: அஹ்மத் 23211
நபி (ஸல்) அவர்களே தன்னிலை மறக்கும் அளவிற்கு ஆறு மாத காலம் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸைப் பார்க்கும் போது இது சரியான கருத்து போன்று தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்திற்குத் தான் வந்தாக வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தான் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.
திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது பாதிப்பாகும். சூனியம் வைக்கப்பட்டதன் காரணமாக, தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ (இறைச் செய்தி) சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.
தம் மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபட்டதை அல்லது ஈடுபடாமல் இருந்ததைக் கூட நபி (ஸல்) அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இறைவனிடம் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம். தமக்கு வஹீ வந்திருந்தும் வரவில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும்.
எந்த ஆறு மாதம் என்று தெளிவாக விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். திருக்குர்ஆனில் பொய்யோ கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தை தான் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆன் 15:9
அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)
அல்குர்ஆன் 39:28
இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.
அல்குர்ஆன் 41:42
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் 4:82
பாதுகாப்பு ஏற்பாடுகள்
குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். இது இறை வேதமாக இருக்காது என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காகப் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.
நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். முஹம்மது தனது புலமையைப் பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார் என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு இறைவன் எழுத்தறிவை வழங்கவில்லை என்று கூறுகிறான்.
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் 29:48
எழுத்தறிவு வழங்குவது பெரும் பாக்கியமாக இருந்தும் அந்தப் பாக்கியத்தை வேண்டுமென்றே நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கவில்லை. திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்துள்ளான் என்று மேலுள்ள வசனம் கூறுகிறது.
திருக்குர்ஆன் இறைவனுடைய வார்த்தையா? அல்லது மனிதனின் கற்பனையா? என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறியது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே நபி (ஸல்) அவர்களின் மன நிலை பாதிக்கப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்குவதற்குப் பலர் முயற்சித்த போதும் அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. அழைப்புப் பணிக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மக்கள் செய்யும் தீமைகளிலிருந்து நபி (ஸல்) அவர்களைக் காத்துக் கொள்வதாக அல்லாஹ் உத்தரவாதம் தருகிறான். எனவே நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்குரியதாக ஆக்கும் சூனியத்தை எந்த முஸ்லிமும் நம்பிவிடக் கூடாது.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 5:67
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————
ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் – 13
மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்
அபூஉஸாமா
ஷியாக்களின் நூலான அல்அன்வாருன் நுஃமானியா என்ற நூலில் இடம் பெற்ற இரண்டு செய்திகளைக் குறிப்பிட் டிருந்தோம். இந்த இரண்டு செய்திகளிலும், அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதுடன் நிற்காமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீயை மிக அதிகமாக உயர்த்துகின்றனர் ஷியாக்கள்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி) அவர் களைப் பாராட்டுகின்ற விதம், வர்ணிக்கின்ற வர்ணனைகள் அனைத் தும், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்று பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளன.
அது போல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி)யிடம், அலீயைப் பற்றித் தெரிவித்ததாக இந்நூலில் கூறப்படும் கருத்துக்கள், தம்மை விட அலீ உயர்ந்தவர், அலீ கோபப்பட்டால் அல்லாஹ் கோபப்படுவான்; அவர் கோட்டையை உலுக்கினால் அல்லாஹ் வானத்தை உலுக்குவான்; அந்த அளவுக்கு அலீ உயர்ந்தவர் என்று குறிப்பிடுவது போல் அமைந்திருக்கின்றன.
இப்படித் தான் இந்த ஷியா ஷைத்தான் அந்தச் செய்திகளில் எழுதி வைத்துள்ளான்.
ஷியாக்களின் வேலையே அலீயை உயர்த்தி, நபிமார்கள், மலக்குமார்கள் அத்தனை பேரையும், நபி (ஸல்) அவர்கள் உட்பட அத்தனை பேரையும் மட்டம் தட்டுவது தான்.
வெளிப்படையில் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்களை உயர்த்துவது போல் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் தாக்குவது தான் இவர்களது வேலை.
இது தொடர்பாக நிஃமத்துல்லாஹ் அல்ஜஸாயிரி என்பவன் கூறுவதைக் கேளுங்கள்.
தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஹதீஸ்களின் அடிப்படையில் நம்முடைய நபி தான் மற்ற நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு கிடையாது. இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அலீ, தூய்மையான (?) ஷியா இமாம்கள் ஆகியோர் நபிமார்களை விடச் சிறந்தவர்களா என்பதில் தான் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஆனால் ஷியா இமாம்களின் பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்கள் விஷயத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் நிலவவில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அலீ மற்றும் இமாம்களை விடச் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உலுல் அஸ்ம் என்ற தரத்தில் உள்ள நபிமார்களைத் தவிர மற்ற நபிமார்களை விட இந்த இமாம்கள் சிறந்தவர்கள் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலுல் அஸ்ம் தரத்திலுள்ள நபிமார்களும் இந்த இமாம்களும் சமமானவர்கள் என்று வேறு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பிந்திய காலத்து அறிஞர்கள் நமது இமாம்கள், உலுல் அஸ்ம் நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்ற கருத்துக் கொண்டிருக்கின்றனர். அது தான் சரியான கருத்தாகும்.
நூல்: ஜஸாயிர் எழுதிய அல் அன்வாருன் நுஃமானியா, பக்கம்: 128
நிஃமத்துல்லாஹ் (லஃனத்துல்லாஹ்) ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விடத் தங்கள் இமாம்கள் சிறந்தவர்கள் என்று கூறத் துணிந்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்து அவர்களுக்குக் கண்ணியம் சேர்த்திருக்கிறான் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல!
இந்த விதிவிலக்கை அவன் வேண்டா வெறுப்பாகவே கொடுத்திருக்கிறான். இதை முல்லா முஹம்மது பாக்கிர் என்பவன் எழுதிய பிஹாருல் அன்வார் என்ற நூலில் இடம் பெறும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் அலீயை நோக்கி, “அலீயே! எனக்குக் கிடைக்காததெல்லாம் உனக்குக் கிடைத்திருக்கிறது. ஃபாத்திமா உன் மனைவி! ஃபாத்திமாவைப் போன்று எனக்கு மனைவி இல்லை. உனக்கு ஃபாத்திமா மூலம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவ்விருவர் போல் எனக்குப் பிள்ளைகள் இல்லை. கதீஜா உன் மனைவியின் தாயார். எனக்கு அவரைப் போன்று அன்பான மாமியார் இல்லை. நான் உனது அன்பாளன். உன் போன்ற அன்பாளன் எனக்கு இல்லை. உறவு முறையில் ஜஃபர் உன் சகோதரர். ஜஃபர் போன்ற சகோதரர் எனக்கு இல்லை. மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் ஹாஷிமி கிளையைச் சார்ந்தவருமான ஃபாத்திமா உனது தாயார். (அலீயின் தாயார் பெயர் ஃபாத்திமா) அவர் போன்ற தாயாரை நான் அடைவது எப்போது?” என்று கூறினார்கள்.
நூல்: பிஹாருல் அன்வார், பக்கம்: 129
பொய்யன் முஹம்மது பாக்கிர் அளக்கும் இந்தச் சம்பவம் தெரிவிப்பது என்ன?
நபி (ஸல்) அவர்களை விட அலீ பன்மடங்கு உயர்ந்தவர்; பல்வேறு கிடைப்பதற்கரிய பாக்கியங்களைப் பெற்றவர் என்று சித்தரித்து நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகின்றான். அவர்களது தரத்தை அலீயின் தரத்திற்குக் கீழே தாழ்த்தியிருக்கிறான். எனவே ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விட ஷியா இமாம்கள் உயர்ந்தவர்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்திருப்பது வெறும் வேஷம் தான்.
முஃபீத் என்ற ஷியாக்களின் தலைவன் தெரிவிக்கின்றான்.
“(ஹுதைபாவே!) என்னிடம் குறுக்கிட்ட மனிதரை நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஆம்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர் ஒரு வானவர். இந்த நேரத்திற்கு முன்னர் பூமியில் அவர் இறங்கியதே கிடையாது. அலீக்கு ஸலாம் சொல்ல வேண்டும் என்று கண்ணியமிக்க அல்லாஹ்விடம் அவர் அனுமதி கேட்டார். அல்லாஹ் அவருக்கு அனுமதி கொடுத்ததும் அலீக்கு வந்து ஸலாம் சொன்னார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா
நூல்: முஃபீத் எழுதிய அல் ஆமாலி
இந்த மலக்கு நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்ல வருகிறார் என்றால் அது நபி (ஸல்) அவர்களுக்குரிய மரியாதை எனலாம். ஆனால் அவர் அலீக்கு ஸலாம் சொல்ல வருகின்றார். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து ஹுதைபாவிடம் தெரிவிக்கின்றார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்த பதவியில் இருப்பது போலவும், நபியவர்கள் அலீக்கு தனிச் செயலாளர் போலவும் இவன் சித்தரிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்களை இந்த முஃபீத் என்ற ஷியா ஷைத்தான் எந்தத் தரத்தில் கொண்டு நிறுத்துகிறான் என்று பாருங்கள். எந்தத் தகுதியை அவர்களுக்குக் கொடுக்கிறான் என்று பாருங்கள்.
ஷியா என்பது பொய் என்ற புற்று நோயைப் பின்னணியாகக் கொண்டது. அந்தப் புற்று நோய் எப்படிப் பன்மடங்காக விரிந்து வேகமாகப் பரவுகின்றது என்று பார்ப்போம்.
தமது தோழர்களின் கூட்டத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி அலீ (ரலி) வந்த போது, “ஆதமின் படைப்பையும், நூஹின் ஞானத்தையும், இப்ராஹீமின் சகிப்புத் தன்மையையும் காண விரும்புவோர் அலீயைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு தன் தந்தை வழியாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். இதை முஃபீத், தனது ஆமாலி நூலில் 132ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றான்.
ஷியா ஷைத்தான்களுக்கு அலீயைப் புகழ்ந்து அழகு பார்க்க வேண்டும். அந்தப் புகழை நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.
தன்னை விட அலீ தான் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களே சொல்வது போன்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
வளரும் இன்ஷா அல்லாஹ்