ஏகத்துவம் – ஜூலை 2007

இனியும் வேண்டாம் இந்த இரவல் தாயீக்கள்

இன்று அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவ்ஹீது மர்கஸ்கள் (ஏகத்துவப் பிரச்சார மையங்கள்) சொந்தமாகவோ, அல்லது வாடகைக் கட்டடங்களிலோ அமையப் பெற்றிருக்கின்றன.

ஓர் ஊர் என்றால் அந்த ஊரிலுள்ள மக்களுக்கு ஏற்படும் உடல் நோய்களைத் தீர்க்க ஒரு மருத்துவர் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அது போல் தவ்ஹீத் மர்கஸ் என்றால் அங்குள்ள மக்களின் உள்ளத்தில் ஏற்படும் சந்தேக நோய்களைத் தீர்ப்பதற்கு மார்க்க அறிஞர் ஒருவர் தேவை! ஏகத்துவக் கொள்கை வளர்ந்து வரும் ஊர்களில் இதைப் புரிந்தே வைத்துள்ளனர். ஆனால் அதற்காக இரவலாக வெளியூரிலிருந்து தாயீக்களை (மார்க்க அறிஞர்களை) தேடுகின்றனர். அந்த அழைப்பாளர் களும் ஜும்ஆவிற்கு மட்டும் வந்து செல்லும் சூழல் தான் உள்ளது.

ஒரு ஜமாஅத்தின் செயல்பாடு, பிரச்சாரப் பணி என்பது ஜும்ஆவுடன் நின்று விடுவதில்லை. அது பல்வேறு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில் அமைய வேண்டும்.

குழந்தைகள் மதரஸா

குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்கும் பகுதி நேர மதரஸாக்களை காலையிலும், மாலையிலும் நடத்த வேண்டும். இது தான் நம்முடைய சந்ததிகள் சத்திய வார்ப்புகளாக உருவாகும் படைக் களமாகும்; பயிற்சித் தளமாகும்.

வயது வந்தோர் கல்வி

மாலை, இரவு நேரங்களில் வயது வந்தவர்கள் மற்றும் முதியோருக்காக குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுப்பதுடன், அவர்களைக் கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக ஆக்க முடியும்.

குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள்

வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களைத் தேர்வு செய்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்க வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

இது போன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் தான் நமதூர் மக்களை ஏகத்துவத்தில் பிடிமானம் கொண்டவர்களாக மாற்ற முடியும். ஊரில் ஒரு தாயீ இருந்தால் தான் இந்தக் காரியங்களைத் தடையின்றிச் செயல்படுத்த முடியும்.

இதற்கு நாம் வெளியூரிலிருந்து தாயீக்களை இரவலாகத் தருவிக்காமல் சொந்த ஊரிலேயே உருவாக்க வேண்டும். இந்த ஏகத்துவக் கொள்கையை நாம் இறந்த பிறகும் நமது மக்களிடம் என்றென்றும் தொடரச் செய்ய வேண்டும்.

————————————————————————————————————————————————

மார்க்கக் கல்வி

மதிப்பிழந்தது ஏன்?

எம். ஷம்சுல்லுஹா

(அல்லாஹ்) தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 2:269

இந்த வசனம் கல்வியின் மதிப்பை மிகச் சிறப்பாகத் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். நான் விநியோகிப்பவன் தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)

நூல்: புகாரி 71

இவ்வாறு மார்க்கக் கல்வியின் மகிமையைச் சொல்லும் வசனங்களும், ஹதீஸ்களும் அதிகமாகவே உள்ளன. இத்தகைய மதிப்பையும், மரியாதையையும், மாண்பையும் பெற்ற இந்த மேன்மை மிகு கல்வி, தமிழகத்தில் உரிய மதிப்பை இழந்தது ஏன்? என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்காக நாம் பெரிய ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. மதரஸாக்களின் சட்ட திட்டங்களையும், பாடத்திட்டங்களையும் மேலோட்டமாகப் பார்த்தாலே அந்தக் காரணங்களை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

மதரஸாக்களின் சட்டதிட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

மொட்டை அடித்தல்

மார்க்கக் கல்வி பயில வருகின்ற ஒரு மாணவனுக்கு முதன் முதலில் மதரஸா நிர்வாகம் இடுகின்ற கட்டளை மொட்டையடிக்க வேண்டும் என்பது தான். அவ்வாறு மொட்டை அடிக்கவில்லையெனில் அந்த மாணவன் மதரஸாவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டான்.

மொட்டையடித்த மாணவன் மதரஸாவிலிருந்து வெளியே வருவதற்கே வெட்கப்படுகின்றான். தன்னுடைய சக வயதினர் தலை முடி வைத்துக் கொண்டு அழகாகக் காட்சியளிக்கையில் இவர்கள் மட்டும் ஏதோ பிராணிகள் போன்று ஒதுங்கி, ஒடுங்கி நடக்க வேண்டிய நிலை!

பொதுவாக மனிதனுக்கு அழகே தலை முடி தான். அதை ஓய்த்துக் கட்டும் வழக்கத்தை இவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த வழக்கத்தை மார்க்கம் என்று இவர்கள் காட்ட முயல்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை மழிப்பதைப் பழித்துத் தான் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறி விடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்என்று சொன்னார்கள். “அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)து தான் (அவர்களின் அடையாளம்)என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 7562

மார்க்கத்தில் இல்லாத இந்தச் சட்டத்தை இவர்கள் கடுமையாகக் கடைப்பிடிப்பதால் அதிகமான மாணவர்கள் இதன் பக்கம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

ஜிப்பா

மதரஸா நிர்வாகம் மாணவர்களை ஜிப்பா அணியச் சொல்கிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் கலாச்சாரம் சட்டை, லுங்கி, கால்சட்டை போன்றவற்றை அணிவது தான். மற்றவர்கள் சட்டை, பேண்ட் சகிதத்துடன் காட்சியளிக்கும் போது தாங்கள் மட்டும் ஜிப்பாவுடன் தோன்றுவது இவர்களுக்குப் பெருத்த வெட்க உணர்வையும், வேதனையையும் தோற்றுவிக்கின்றது.

ஜிப்பா போடும் மதரஸா என்ற காரணத்தாலேயே அங்கு போய்ச் சேராமல் சட்டை போட அனுமதிக்கும் மரஸாவைத் தேடிப் பிடித்துச் சென்று படித்த ஆலிம்கள் உள்ளனர். இதனால் தான் ஆலிம்களில் சட்டை போடும் ஆலிம்கள், ஜிப்பா போடும் ஆலிம்கள் என்று இரு வகைகளாக உள்ளனர். அந்த அளவுக்கு இவர்கள் ஜிப்பா அணிவதை வெறுத்துள்ளனர்.

ஜிப்பா என்ற ஆடையைத் தான் அணிய வேண்டும் என்பதாலும், தலையில் மொட்டை அடிக்க வேண்டும் என்பதாலும் பல வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகள் இந்தக் கல்விக்கு வருவதில்லை. மார்க்கத்தில் இல்லாத நடைமுறையை மார்க்கம் என்ற பெயரில் செயல்படுத்துவது மார்க்கக் கல்வி பயில்வதற்குத் தடையாக அமைந்துள்ளது.

பாடத் திட்டம்

இது கணிணி (கம்ப்யூட்டர்) யுகம்! அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த புரட்சி உலகம்! வியத்தகு மாற்றத்தைக் கண்ட இந்த உலகத்தில், அதற்கு ஈடு கொடுக்கும் கல்வித் திட்டம் அரபு மதரஸாக்களில் இல்லை. மதரஸாவிலிருந்து வெளிவந்த மாணவர்களுக்கு, ஆங்கில விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்குக் கூட ஆங்கில அறிவு இருப்பதில்லை.

இன்றைய அரபுலகம், அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான அரபி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கும் பாடத் திட்டம் இன்னும் மதரஸாக்களில் அறிமுகமாகவில்லை. இதனால் மதரஸாக்களில் பயின்று வெளிவரும் ஆலிம்கள் பிழைப்புக்காகப் புரோகிதத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் நிலை!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மதரஸாவில் படித்து வெளிவரும் ஆலிம்கள் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துதல், குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல் போன்ற வட்டத்தைத் தாண்டி கத்தம் ஃபாத்திஹா ஓதுதல், கல்யாணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல், தாயத்து கட்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இவை அத்தனைக்கும் மக்களிடம் கை நீட்டிக் காசு வாங்குவதால்  மற்றவர்கள் இந்தத் துறையை அறவே வெறுக்கின்றனர்.

இன்னும் பல ஊர்களில் ஆலிம்கள் தான் ஜனாஸாவைக் குளிப்பாட்ட வேண்டும் என்ற பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இதனால் ஊரில் யார் இறந்தாலும் உடனே கதவு தட்டப்படுவது அங்குள்ள பேஷ் இமாமின் வீடு தான். அவர் நள்ளிரவில் என்ன நிலையில் இருப்பார்? என்றெல்லாம் இந்தச் சமுதாயம் பார்க்காது. இறந்தவர் வீட்டில் உடனே இமாம் வந்து நிற்கவில்லை என்றால், அவருக்கு உயிர் போனது போன்று இவருக்கு வேலை போய் விடும் என்ற நிலை!

கையேந்தும் நிலையில் கண்ணியமிக்க ஆலிம்கள்

இறந்த வீட்டில் போய் காரியத்தை நடத்திக் கொடுத்தால் இந்தப் புரோகிதப் பணிக்காக ஜனாஸாவுடன் தட்டில் வரும் அரிசி, முட்டை, சேவல்   போன்ற காணிக்கைகள் இமாமுக்கு வழங்கப்படும். ஜனாஸா தொழுகை துவங்கும் முன்பே, தொழுகை நடத்துவதற்காக அவரது கையில் அழுக்கடைந்த 5 ரூபாய் தாளை இறந்தவரின் வாரிசு இரகசியமாக அல்ல! அஸ்ஸலாமு அலைக்கும் என்று உரத்தக் குரல் கொடுத்தவராகக் கொடுப்பார்.

ஒரு துளி சுய மரியாதை உள்ளவன் கூட இந்தச் சோதனையைத் தாங்கிக் கொள்ள மாட்டான். அதை இந்த ஆலிம் தாங்கிக் கொள்வார், தன்னுடைய குடும்பத்தைக் காப்பதற்காக! இதை விட்டு வெளியே வந்தால் வேறு துறை அவருக்குத் தெரியாது என்பதற்காக!

இதில் இன்னும் வேதனை என்னவென்றால் இந்த ஆலிம், பெண் குழந்தைகளைப் பெற்றிருப்பார். இவர்களைக் கட்டிக் கொடுக்கும் காலம் வரும். அதற்காக அவர் சிங்கப்பூர் செல்வார். கடை கடையாக ஏறுவார். நமது நாட்டில் வீட்டு வாசல்களில் நிற்கும் யாசகர்களுக்குச் சில சில்லரைக் காசுகளை விட்டெறிவது போல் அங்கு அவருக்கு வீசியெறியப்படும்.

பாவம் அவர் என்ன செய்வார்? பணத்திற்காக மணம் முடிக்கும் ஈனப் பிறவிகள் இருக்கையில் அவர் யாசகம் என்ற எல்லைக்குச் செல்கின்றார். இப்படிப்பட்ட ஓர் இழிநிலைக்குத் தள்ளப்படும் போது இந்தக் கல்வியை யார் தான் ஏறெடுத்துப் பார்ப்பார்கள்?

தன்மானத்தைத் தரும் தவ்ஹீது

இதனால் தான் மார்க்கக் கல்வி மக்களிடத்தில் மரியாதை இழந்து நிற்கின்றது. மக்கள் தங்கள் பிள்ளைகளை இந்தத் துறைக்கு அனுப்புவதற்குத் தயங்குகின்றனர். அதிலும் குறிப்பாகச் செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப முன்வருவதில்லை. இலவச உணவு என்பதால் ஏழைப் பிள்ளைகள்    தான் இந்தக் கல்வி கற்பதற்கு அனுப்பப்படுகிறார்கள்.

மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டுமானால் இது வரை காணப்பட்டு வரும் குறைகள் களையப்பட வேண்டும். சட்ட திட்டங்கள் மற்றும் பாடத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.

இன்று தவ்ஹீது ஜமாஅத்தினரால் நடத்தப்படும் இஸ்லாமியக் கல்லூரி இது போன்ற குறைகளை ஓரளவு களைந்திருக்கின்றது. நான்காண்டு பாடத் திட்டத்தில் தரமிக்க ஆலிம்களை உருவாக்கியிருக்கின்றது. தவ்ஹீது (ஏகத்துவக் கொள்கை) இருப்பதால் அது தன்மானத்தை ஊட்டியிருக்கின்றது.

எனவே தவ்ஹீது வட்டத்தில் உள்ள சகோதரர்கள், குறிப்பாகச் செல்வந்தர்கள் மார்க்கக் கல்வியைப் பற்றி ஏற்கனவே கொண்டிருந்த அதே தவறான மதிப்பீட்டை இப்போது கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட தவறான மதிப்பீட்டை மாற்றிக் கொண்டு உங்கள் பிள்ளைகளை மார்க்கக் கல்வி பயில அனுப்புங்கள்.

இவ்வாறு உங்கள் பிள்ளைகளை நீங்கள் அனுப்பும் போது அவர்களைக் கண்டிப்பாக +2 வரை படிக்க வையுங்கள். இது அவர்களுக்கு இரு வகையில் பயன் தரும்.

ஒன்று, அவர்கள் மார்க்கக் கல்வியைக் கற்பதற்கு இந்தத் தகுதி பின்புலமாக அமையும். ஏனென்றால் இந்த மார்க்கக் கல்வி ஒரு பட்டப் படிப்புக்கு நிகரான பாடத்திட்டத்தை உள்ளீடாகக் கொண்டுள்ளது. எனவே +2 முடித்திருந்தால் தான் இதை நன்கு விளங்கிக் கற்பதுடன் மற்றவர்களுக்கும் விளக்கும் திறமையைப் பெற முடியும்.

அடுத்ததாக, +2 முடித்தவர் ஆலிம் படிப்பை முடித்து விட்டு, அஞ்சல் வழி தொலை தூரக் கல்வி மூலம் பட்டப் படிப்பு முதற் கொண்டு, எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி. போன்ற படிப்புகளையும் படித்து முனைவர் (டாக்டர்) பட்டம் பெறுவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன.

தற்காலத்தில் பட்டப் படிப்பில் அரபிப் பாடத்தை எடுத்தவர்கள், எம்.பில்., பி.ஹெச்.டி. முடித்தவர்கள் கூட அரபு மொழியைச் சரியான முறையில் வாசிப்பதற்குத் தாளம் போடுகின்றனர். இதில் அவர்கள் காட்டுகின்ற பந்தாக்களும் தாங்க முடிவதில்லை. ஆனால் இவ்வாறு இஸ்லாமியக் கல்லூரியில் பயின்ற பின் பட்டப் படிப்பை முடிப்பவர்கள் இந்தத் துறையில் மின்னுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இப்படி வெளிவருபவர்கள், சமுதாயத்தை எதிர்பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது. அவர்கள் சத்தியத்தை யாருக்கும் அடிமைப் படாதவாறு சொந்தக் காலில் நின்று சொல்லலாம்.

இன்று மார்க்கக் கல்வி பயில வரும் பெண்களுக்கும் +2 கல்வித் தகுதி இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் 10வது வகுப்பாவது முடித்திருப்பது அவசியமாகும். மார்க்கக் கல்வி பயில அனுப்பும் பெற்றோர்கள் இதைக் கவனத்தில் கொள்வதேயில்லை.

இந்தக் கல்வித் தகுதி நிச்சயமாக அவர்களை மார்க்கத்தை நன்கு விளங்குவதற்கும், உலக விஷயங்களில் சிறந்து விளங்குவதற்கும் துணை புரியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பெண்களையும் குறைந்தபட்சம் மேற்கண்ட கல்வித் தகுதி முடித்த பின்னரே மார்க்கக் கல்வி பயில அனுப்ப வேண்டும்.

இந்த அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டு, ஏகத்துவ சகோதரர்கள் தங்கள் பிள்ளைகளை மார்க்கக் கல்வி பயில அதிகமாக அனுப்பி வைக்க வேண்டும்.

பல சகோதரர்கள் தங்கள் ஊருக்கு தாயீ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து மார்க்கக் கல்வி பயில்வதற்கு ஆட்களை அனுப்புவதில்லை. எனவே தாயீக்கள் பற்றாக்குறையைத் தீர்க்க உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை இஸ்லாமியக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மார்க்கக் கல்வி படிக்க வேண்டும் என்று ஆர்வமுள்ள ஏழைகள் இருப்பார்கள். வசதி படைத்தவர்கள் அவர்களை எல்லா வகையிலும் தத்தெடுத்துப் படிக்க வைத்து, உங்கள் ஊரில் ஏகத்துவத்தை நிலை நாட்டுங்கள்.

நமது இந்த அணுகுமுறையின் காரணமாக சுன்னத் வல் ஜமாஅத்திலுள்ள ஆலிம்களையும் இந்தக் கொள்கைக்கு ஈர்க்க முயல வேண்டும். இதன் மூலம் மார்க்கக் கல்வியின் மதிப்பை உயர்த்த வேண்டும்.

————————————————————————————————————————————————

 புகை பிடித்தல் ஒரு பாதகச் செயல்

Dr.  P.M.S. மீரான், , M.S., F.C.G.P.

நமது மார்க்கம் அனுமதிக்காத காரியங்களில் ஒன்று புகை பிடிக்கும் பழக்கமாகும்.

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29)

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள் என்று இந்த வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆனால் புகை பிடிப்பவர் தானும் கெட்டு, தன் உடல் நலத்தையும் கெடுப்பதோடு மட்டுமன்றி தனது சுற்றுப்புறச் சூழல், குடும்பத்தினர், அண்டை அயலாரின் நலனையும் கெடுத்து விடுகின்றனர்.

புகையிலையிலிருந்து 300க்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் (பர்ஷ்ண்ய்ள்) வெளியாகின்றன. அவற்றில் அதிகம் கேடு விளைவிப்பவை,        1. நிகோடின், 2. கார்பன் டை ஆக்ஸைடு, 3. கார்பன் மோனாக்ஸைடு, 4. கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவையாகும். இவை அனைத்தும் கரியமில வாயுடன் தொடர்புடையவை.

புகை பிடிப்பதால் உதடுகள், நாக்கு, வாயின் உட்பகுதி, கன்னம், மூக்கின் இரு பகுதியில் உள்ள சைனஸ் (நண்ய்ன்ள்), தொண்டை, பேரிங்ஸ் (டட்ஹழ்ஹ்ய்ஷ்), லாரிங்ஸ் (கஹழ்ஹ்ய்ஷ்), உணவுக்குழாய், காற்றுக் குழாய், நுரையீரலுக்குள் செல்லும் சிறு காற்றுக் குழாய்கள், நுரையீரல், நுரையீரலைச் சுற்றியுள்ள உறை, இரைப்பை, கல்லீரல், சிறு குடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், ஆண் பெண் ஜனன உறுப்புக்கள், இதயம், மூளை, கண்கள் ஆகிய உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட எல்லா உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன.

பெரிய, சிறிய, நடுத்தர இரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள சிறிய தசைகளை (நம்ர்ர்ற்ட் ம்ன்ள்ஸ்ரீப்ங்ள்) நிக்கோடினும், பிற நச்சுப் பொருட்களும் சுருங்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன. இதனால் உடல் உறுப்புக்கள் படிப்படியாகச் செயலிழக்கின்றன.

மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோடிட் இரத்தக் குழாய்களும், அதன் கிளைகளும் சுருங்கி மூளையின் செல்களுக்குக் குறைவான இரத்தம் செலுத்தப் படுவதால் பக்க வாதம் ஏற்படுகின்றது.

கண்களுக்கு இரத்தம் அளிக்கும் முக்கியக் குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டு விழித்திரை பழுதடைந்து, திடீர் பார்வையிழப்பு ஏற்படுகின்றது.

காதுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுவதால் ஆக்ஸிஜன் சப்ளையின்றி கேட்கும் திறன் பாதிக்கப்படுகின்றது.

ஒரு வீட்டில் கணவரோ, அல்லது தந்தையோ, சகோதரனோ புகை பிடிப்பவராக இருப்பாரானால் அவர்கள் ஆஸ்ரீற்ண்ஸ்ங் நம்ர்ந்ங்ழ்ள் ஆவர். இவர்களது மூச்சிலிருந்து வெளிப்படும் நச்சுப் பொருட்களை வீட்டில் உள்ள பெண்கள் அல்லது மற்ற ஆண்கள் சுவாசிப்பதால் அவர்கள் டஹள்ள்ண்ஸ்ங் ள்ம்ர்ந்ங்ழ்ள் ஆகிறார்கள்.

தாயிடம் பால் அருந்தும் குழந்தைகளும் இந்த நச்சுக் காற்றைச் சுவாசிப்பதிலிருந்து தப்பிப்பதில்லை. அந்தப் பச்சிளம் குழந்தைகள் நுரையீரல் நோய்களாலும், அஜீரணம், வயிற்றுப் போக்கு போன்ற பல்வேறு வியாதிகளாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

கருவுற்ற தாய்மார்களின் கருவில் உள்ள சிசு போதிய இரத்த சப்ளையின்றி குறைப் பிரசவமாகி விடுகின்றன. தப்பித் தவறி முழு வளர்ச்சி அடைந்தாலும் மன நலம், உடல் நலம் குன்றிய குழந்தைகளாகப் பிறக்கின்றன. ஆண்களுக்கு ஆண் தன்மை குறைந்து மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது. கருச் சிதைவுக்கு முக்கிய காரணமே கணவன்மார்களின் புகைப் பழக்கம் தான். கர்ப்பப்பை, கருப்பை கட்டிகளுக்கும் மூல காரணம் கணவன் புகைப் பிடிப்பது தான்.

ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் காரணி புகை தான். புகைப் பழக்கத்தால் இரத்தக் குழாய்கள் அனைத்தும் சுருங்கி அடைப்பு ஏற்படுகின்றது. இதயத்திற்குச் சுத்தமான இரத்தத்தை விநியோகிக்கும் மூன்று முக்கிய பெரிய இரத்தக் குழாய்களும் அவற்றின் கிளைகளும் சுருங்கி விடுகின்றன. இதனால் இதயத்தின் தசைக்குப் போதுமான சுத்த இரத்தம் கிடைக்காமல் இதயத் தசை கெட்டு, மாரடைப்பு ஏற்படுகின்றது.

புகை பிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் ஆஸ்துமா, அலர்ஜி, பிராங்கேடிஸ், நிமோனியா, காச நோய் ஆகியவை விரைவில் தொற்றிக் கொள்கிறது. நாக்கு, தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோய்க்கு புகையே மூல காரணமாகும்.

இரண்டு கால்களுக்கும் செல்லும் பெரிய இரத்தக் குழாய் மற்றும் கிளைக் குழாய்களின் சுருக்கத்தால் “துராம்போ ஆன்ஜைடிஸ் ஒப்லிட்டிரான்ஸ்’ (பழ்ர்ம்க்ஷர் ஆய்ஞ்ண்ற்ண்ள் ஞக்ஷப்ண்ற்ங்ழ்ர்ய்ள்) என்ற அடைப்பு நோய் ஏற்பட்டு கால்களிலும், கால் விரல்களிலும் அடைப்பு உண்டாகிறது.

இதனால் தாங்க முடியாத வலி ஏற்படுவதுடன், நாளடைவில் இரத்தம் செல்வது முற்றிலும் தடைப்பட்டு ஒவ்வொரு விரலாகக் கருகி விடுகின்றது. இது போன்று கருகிய விரல்களை ஒவ்வொன்றாக வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. தொடர்ந்து புகை பிடித்தால் கணுக்கால், நடுக்கால், நடுத் தொடை, இடுப்பு என காலை வெட்டி எடுக்கும் நிலை தொடரும் என்பது கண்கூடு! தொடர்ந்து புகை பிடிக்கும் ஓர் ஆண் மகனுக்கு ஆண் தன்மை குறைவதுடன் விந்துவிலுள்ள உயிரணுக்கள் உற்பத்தியின்றி இரண்டு விதைகளும் சுருங்கி விடுகின்றன.

கடுமையான பொருளாதாரச் சீர்குலைவிற்கும், உடலின் ஒவ்வொரு பாகமாக உறுப்புகளை இழப்பதற்கும், எதிர்பாராத நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கும் முழு முதற் காரணமான புகைப் பழக்கம் தேவை தானா? புகை உங்கள் உடலுக்குப் பகை என்பதைச் சிந்தியுங்கள்; செயல்படுங்கள். இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

———————————————————————————————————————————————–

கேள்வி பதில்

? கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா? ஆதாரத்துடன் விளக்கவும்.
ரசீதா, அதிராம்பட்டிணம்

கணவனை இழந்த பெண்கள் தமது இத்தா காலம் முடியும் வரை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. ஆபரணங்கள் அணிவதும் இதில் அடங்கும்.

உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப் பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டோம். ஆனால் (கணவன் இறந்த பின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.) எங்களில் ஒரு பெண் மாதவிடாயிலிருந்து நீங்குவதற்காகக் குளிக்கும் போது “ளிஃபார்நகரத்து குஸ்த் (கோஷ்டம் அல்லது அகில்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. மேலும் நாங்கள் ஜனாஸாவைத் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்றும் தடை விதிக்கப்பட்டிருந்தோம்.

நூல்: புகாரி 313

இந்த ஹதீஸ் பொதுவாக அலங்காரங்கள் கூடாது என்று கூறினாலும் அபூதாவூதில் இடம் பெறும் மற்றொரு ஹதீஸில் நகை அணியக் கூடாது என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிகப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: அபூதாவூத் 1960

? கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா? சுனாமி போன்ற சமயங்களில் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இருவர் மட்டும் எப்படி விசாரணை செய்ய முடியும்?
பி. ஃபாத்திமா அஷ்ரப், திருவிதாங்கோடு

உங்களில் ஒருவர் (இறந்து) அடக்கம் செய்யப்பட்டு விட்டால், கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) “இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?” என்று கேட்பார்கள். “அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளிமயமாக்கப் படும்.  பின்னர் அவரை நோக்கி, “உறங்குவீராகஎன்று கூறப்படும்….

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 991

இந்த ஹதீஸில் “உங்களில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டால்…” என்று கூறப்படுவதிலிருந்து ஒவ்வொரு நபருக்கும் முன்கர், நகீர் என்ற இரு வானவர்கள் விசாரணை நடத்துவார்கள் என்பதை அறிய முடியும். விசாரிக்கும் மலக்குகளின் பெயர் முன்கர், நகீர் என்று தான் விளங்க வேண்டும்.

ஏனெனில் சுனாமி போன்ற நேரங்களில் மட்டுமல்ல! ஒவ்வொரு வினாடியும் உலகில் பல்லாயிரம் பேர் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் இரண்டு பேர் மட்டுமே விசாரிப்பார்கள் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூரத்துல் கஹ்ஃபை ஓதி வரும் வீட்டில் ஷைத்தான் வெருண்டு ஓடுகின்றான் என்றும், வெள்ளிக் கிழமைகளில் இந்த சூராவிற்கென்று தனிச் சிறப்பு உள்ளதாகவும் கூறுகின்றனரே! குர்ஆன், ஹதீஸில் இது பற்றி ஏதேனும் குறிப்புள்ளதா?
எஃப். ரியாஸ் அஹ்மத், காயல்பட்டிணம்

பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு  எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை மேகம் சூழ்ந்து வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதி தான் அதுஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5011, 3614, முஸ்லிம் 1325, திர்மிதி 2810, அஹ்மத் 17776

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் பெரும் குழப்ப வாதியான தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.

நூல்: முஸ்லிம் 1475, திர்மிதி 2811, அபூதாவூத் 3765, அஹ்மத் 20720

இவையே கஹ்ஃப் எனும் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்து இடம் பெறும் ஹதீஸ்களில் சரியான ஹதீஸ்களாகும். இவை தவிர மற்ற அனைத்து செய்திகளும் குறையுடைய, பலவீனமான செய்திகளாகவே அமைந்துள்ளன.

வெள்ளிக்கிழமை அன்று சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது தொடர்பாக ஹதீஸ் நூற்களில் இடம் பெறும் செய்திகளும் ஆதாரப்பூர்வமானவையாக இல்லை.

? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?
எஸ்.எம். அப்துல் ஹமீது, வி. களத்தூர்

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும் தடுக்கப் பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “கூடாது! அது ஹராம்!எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, “அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 2236

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி), “அவரை அல்லாஹ் சபிப்பானாக! “யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாகஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2223

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது.

தடை என்று வந்து விட்டால் மாற்று மதத்தவர்களுக்கோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ விற்பதற்கும் அனுமதியில்லை.

பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது.

இது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது.

உமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே!என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும்என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களேஎன்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 948

இது போல் உண்பது மட்டும் தடுக்கப்பட்டு வேறு வகையில் பயன்படுத்தத் தடை இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அதையும் விற்கலாம்.

உதாரணமாக, இறந்த ஆட்டை நபித்தோழர்கள் பயன்படுத்தாமல் இருந்த போது, “இந்த ஆட்டின் தோலை நீங்கள் பயன்படுத்தலாமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண் ஒருவருக்கு ஓர் ஆடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அது இறந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து சென்ற போது, “அதனுடைய தோலை எடுத்து, அதைப் பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே?” என்று கேட்டார்கள். அதற்கு, “அது செத்ததுஎன்று (தோழர்கள்) பதிலளித்தனர். “அதைச் சாப்பிடுவது தான் உங்களுக்குத் தடுக்கப் பட்டுள்ளதுஎன்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1492, முஸ்லிம் 542

எனவே உண்பதற்கு மட்டும் தடுக்கப்பட்டு, வேறு வகையில் பயன்படுத்தத் தடையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவற்றையும் விற்கலாம்.

? நோன்பு திறந்த பின் ஓதப்படும் தஹபள்ளமவு… என்ற துஆ ஆதாரப்பூர்வமானதா? அல்லது அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க… என்று துவங்கும் துஆவை ஓதலாமா?
இஸ்லாமிய சகோதரிகள், நிரவி

நோன்பு திறந்த பின் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மர்வான் பின் ஸாலிம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிரஹ்மதிக்கல்லதீ வஸிஅத் குல்ல ஷையின் அன் தக்ஃபிரலீ” என்ற துஆவை இப்னு உமர் (ரலி) அவர்கள் செய்ததாக இப்னுமாஜாவில் 743வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கவில்லை. இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றாகவே இடம் பெற்றுள்ளது.

நபித்தோழர்களின் கூற்று மார்க்க ஆதாரமாக முடியாது என்பதால் இந்த ஹதீஸின் அடிப்படையில் செயல்பட முடியாது.

நோன்பு திறக்கும் போது ஓத வேண்டிய துஆக்கள் என்று ஹதீஸ்களில் இடம் பெறும் அனைத்தும் பலவீனமான செய்திகளாக இருப்பதால் இதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.

? பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?  விளக்கவும்.
எம். அரஃபாத்துந் நிஸா, கொடிக்கால் பாளையம்

அந்நிய ஆண்களுக்கு முன்னால் முகம், முன் கைகள் தவிர மற்ற உறுப்புகளை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. பாங்குக்காகவோ அல்லது உளூ, குர்ஆன் ஓதுதல் போன்ற செயல்களுக்காகவோ பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தராத நடைமுறைகள், நிபந்தனைகள் நமது சமுதாயத்தில் குறிப்பாக தமிழக முஸ்லிம்களிடம் வேரூன்றிப் போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று!

எந்த அளவுக்கென்றால் அந்நிய ஆண்களுக்கு முன்னால் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்காமல் சர்வ சாதாரணமாகக் காட்சி தரும் பெண்கள் கூட பாங்கு சொல்லும் போது தலையில் மட்டும் துணியைப் போட்டுக் கொள்கின்றனர்.

சில இடங்களில் பாங்கு சொல்லப்படும் போது பெண்கள் சிறிய துண்டுப் பேப்பர் அல்லது வேறு ஏதேனும் குச்சியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்கின்றனர். மார்க்கத்தைப் பற்றிய அறியாமையே இதற்குக் காரணம்.

? பிற மதத்தவர்கள் நமக்கு உணவளித்தால் அவர்களுக்காக நாம் எப்படி துஆச் செய்ய வேண்டும்?
ஏ. மெஹர் நிஸா,அம்மாப்பட்டிணம்

உணவளித்தவர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃக்ஃபிர் லஹும் வர்ஹம்ஹும்.

(பொருள்: இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்குக் கருணை காட்டுவாயாக.

நூல்: முஸ்லிம் 3805

இது அனைவருக்கும் பொதுவான துஆ என்றாலும் முஸ்லிமல்லாத மற்றவர்களுக்குப் பாவ மன்னிப்புத் தேடுவதற்குத் தடை உள்ளது என்பதால் இந்தப் பிரார்த்தனையை மாற்று மதத்தவர்களுக்குச் செய்ய முடியாது. அவர்களுக்கு பரக்கத் ஏற்படவும், நேர்வழிக்காகவும் பிரார்த்திக்கலாம்.

? நாங்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து ஒரு பந்து வாங்கி, எதிரணியினருடன் விளையாடுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்களது பந்து எங்களுக்கு; அவர்கள் வெற்றி பெற்றால் எங்களது பந்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். மார்க்க அடிப்படையில் இது சூதாட்டமா?
மேலும் டோர்னமென்ட் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் 26 அணிகளிடமும் தலா ரூ. 150 வீதம் போட்டி அமைப்பாளர்கள் வசூலிப்பார்கள். மொத்த ரூபாய் 3600ல் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2000, 2ம் இடத்தை அடைபவர்களுக்கு ரூ. 1000, போட்டியை நடத்துபவர்களுக்கு ரூ. 600 என்று வழங்குவார்கள். தோல்வியடையும் அணிகளுக்கு எதுவும் கிடையாது. இவ்வாறு விளையாடுவது கூடுமா?
ஏ. அக்பர் அலீ, மதுரை

உடற்பயிற்சி, விளையாட்டு என்ற அடிப்படையில் கிரிக்கெட் விளையாடுவதில் தவறில்லை. எனினும் நீங்கள் குறிப்பிடுவது போன்று வெற்றி பெறுபவர்களுக்கு, தோற்றவர்கள் பந்தைக் கொடுக்க வேண்டும் என்பது கண்டிப்பாக சூதாட்டம் என்ற வகையில் தான் சேரும். சூதாட்டம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட செயலாகும்.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் 5:90, 91

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து பணம் வைத்துப் பந்தயம் கட்டி விளையாடும் போது, வெற்றி பெறுபவர்கள் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வதும், தோற்றவர்கள் நஷ்டம் அடைவதும் சூதாட்டம் எனப்படுகின்றது.

பணமாக இல்லாமல் கிரிக்கெட் பந்தாக இருந்தாலும் அது சூதாட்டம் தான். இதே போன்று டோர்னமெண்ட் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முறையும் தெளிவான சூதாட்டமாகும்.

வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாகப் பரிசுகள் வழங்கலாம். ஆனால் அந்தப் பரிசை போட்டி நடத்துபவர்கள் தங்களது சொந்தச் செலவிலோ, அல்லது மூன்றாவது நபரோ வழங்கினால் தவறில்லை. பத்துப் பேர் சேர்ந்து பணம் போட்டு, முதலிடத்தைப் பிடிப்பவர்களுக்கு மட்டும் அந்தப் பணத்தைக் கொடுப்பதற்குப் பெயர் தான் சூதாட்டம்.

கிரிக்கெட் என்பதால் இது விளையாட்டு, பரிசு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது. இதையே சீட்டு விளையாட்டுக்குப் பொருத்திப் பார்த்தால் நீங்கள் குறிப்பிடும் முறையும் சூதாட்டம் தான் என்பதை விளங்க முடியும்.

சீட்டு விளையாட்டில் ஐந்து பேர் பணம் கட்டி விளையாடுவார்கள். தோற்பவர்கள் வெளியேறிய பின் இறுதியில் வெற்றி பெறுபவர் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வார். இது சூதாட்டம் எனும் போது மேற்கண்ட கிரிக்கெட் போட்டியும் சூதாட்டம் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

———————————————————————————————————————————————–

ஆடைகள்                  சென்ற இதழின் தொடர்ச்சி…

அனுமதிக்கப்பட்ட ஆடைகளும்

தடுக்கப்பட்ட ஆடைகளும்

எஸ். யூசுப் பைஜி

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்று விட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர் கொண்டேன். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு ஜுப்பா அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய் கொப்பளித்து, நாசிக்குத் தண்ணீர் செலுத்தி விட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் சட்டைக் கையிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால் சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. ஆகவே தமது இரு கைகளையும் அவர்கள் ஜுப்பாவின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும் தலையையும், காலுறையையும் மஸஹ் செய்தார்கள்.

நூல்: புகாரி (5798)

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்கள், “உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், இருக்கிறதுஎன்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவு நடந்தார்கள். பிறகு வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி ஜுப்பா  அணிந்திருந்தார்கள். இதனால் ஜுப்பாவிலிருந்து தமது முழங்கைகளை எடுக்க முடியவில்லை. ஆகவே அங்கியின் கீழிலிருந்து எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை மஸஹ் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், “அவற்றை விட்டு விடுவீராக! ஏனெனில் நான் கால்கள் இரண்டையும் தூய்மையான நிலையிலேயே நுழைத்திருந்தேன்என்று சொல்லி அவற்றைத் தடவி மஸஹ் செய்து கொண்டார்கள்.

நூல்: புகாரி (5799)

சால்வை ஆடை

நபி (ஸல்) அவர்களிடம் புர்தா ஒன்றை ஒரு பெண்மணி கொண்டு வந்தார்என்று ஸஹ்ல் கூறி விட்டு, “புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அங்கிருந்தோர், “ஆம், புர்தா என்பது சால்வை தானேஎன்றனர். ஸஹ்ல் ஆம் என்று கூறிவிட்டு, “மேலும் அப்பெண்மணி, “நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன்; இதனை உங்களுக்கு அணிவிக்கவே கொண்டு வந்தேன்என்றதும், அது தேவையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்த போது ஒருவர், “இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை எனக்கு அணிவித்து விடுங்கள்என்று கேட்டார். அங்கிருந்தோர், “நீர் செய்தது சரியா? நபி (ஸல்) அவர்களுக்குத் தேவைப்பட்டதால் தான் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரேஎனக் கூறினார்கள் அதற்கவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அதை அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை. அது எனக்கு (இறந்த பின் போர்த்தும்) கஃபனாக ஆகி விட வேண்டும் என்றே கேட்டேன்என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாக ஆகி விட்டதுஎன்று ஸஹ்ல் கூறினார்.

நூல்: புகாரி 1277

சட்டை, பேண்ட்

இப்னு உமர் (ரலி) கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளை இடுகிறீர்கள்?” என்று ஒரு மனிதர் எழுந்து கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகையையும், தொப்பிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளை கரண்டைக்குக் கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக் கொள்ளட்டும். குங்குமப்பூ சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள். இஹ்ராம் அணிந்த பெண் முகத் திரையையும், கையுறைகளையும் அணியக் கூடாதுஎன்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 1838

இந்த ஹதீஸிலிருந்து ஹஜ் காலம் அல்லாத மற்ற காலங்களில் சட்டை மற்றும் கால் சட்டைகள் அணிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஹஜ் உடைய காலங்களில் சட்டை அணியக் கூடாது என்பதற்குக் காரணம் அது தைக்கப்பட்ட ஆடையாக இருப்பதால் தான். தைக்கப்பட்ட ஆடைகளை ஹஜ் காலங்களில் அணியக் கூடாது.

வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை

நபி (ஸல்) அவர்களிடம் சில ஆடைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிற கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் பதில் கூறாமல் மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்என்று சொல்ல அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டு வரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும் இந்த ஆடையை நீ (பழையதாக்கி) கிழித்து நைந்து போகச் செய்து விடுஎன்று கூறிவிட்டு, “உம்மு காலிதே! இது ஸனாஹ் (அழகாக) இருக்கிறதுஎன்று சொன்னார்கள். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நூல்: புகாரி 5823

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க சதுரமான கருப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) ஸலாம் கொடுத்தவுடன், “எனது இந்தக் கருப்புக் கம்பளி ஆடையை (எனக்கு அன்பளிப்பு அளித்த) அபூஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் சற்று முன்பு அது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பி விட்டது. அபூஜஹ்மின் மற்றொரு (சாதாரண) ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5817

இந்த ஹதீஸிலிருந்து இது போன்ற தொழுகையின் கவனத்தை திருப்பக் கூடிய ஆடைகளை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆடைகளைத்  தொழுகை அல்லாத மற்ற நேரங்களில் பயன்படுத்தலாம் என்றும் அறிய முடிகின்றது.

அரைக்கை சட்டை

அரைக்கை சட்டை அணிந்து தொழுதால் மக்ரூஹ் என்று சில உலமாக்கள் கூறி வருவதைப் பார்க்கிறோம். இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. ஹதீஸை சரியாகப் படிக்காத அல்லது விளங்காத உலமாக்கள் தான் இப்படிச் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் கூறுவது உண்மைக்கு மாற்றமானது என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜூது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்கு இரு கைகளையும் விரித்து வைப்பார்கள்.

நூல்: புகாரி 390, 807, 3564

இந்த ஹதீஸில் அக்குள் தெரியும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து இது ஹராமோ, மக்ரூஹோ அல்ல என்பதை அறியலாம். எனவே அக்குள் தெரியும் அளவுக்கு ஆடை அணியலாம். ஆனால் தொழும் நிலையில் தோளில் துண்டு இல்லாமல் தொழக் கூடாது என்பதைப் பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தமது தோள்களில் எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம்.

நூல்: புகாரி 359

அரைக்கால் டவுசர்

நபி (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவது பற்றி ஒருவர் வினவினார். அப்போது, “உங்களில் எல்லோரும் இரு ஆடைகளை வைத்திருக்கிறார்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் இது விஷயமாக வினவினார். அதற்கு,  “உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். சிலர் எல்லா ஆடைகளும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு சட்டையும் அணிந்து தொழுதனர். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டை மேல் போர்வை அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து தொழுதனர். முழுக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து சிலர் தொழுதனர். சிலர் அரைக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து தொழுதனர். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள்.

நூல்: புகாரி 355

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள துப்பான் என்ற அரபி வார்த்தைக்கு அரைக்கால் டவுசர் என்று தான் பொருள். இதைப் பற்றி விரிவாக ஏகத்துவத்தில் முந்தைய இதழ்களில் விளக்கப்பட்டுள்ளது.

உயர் ரகமான ஆடை

சிலர் உயர் ரகமான ஆடை அணிவதை, பகட்டுக்குரியது; அவ்வாறு அணிவது கூடாது என்பது போல் பேசி வருகின்றனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாற்றமானது ஆகும்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன மனிதரிடம் சென்றேன். அவர் எனக்கு விருந்து தரவில்லை. அவர் என்னிடம் வரும் போது அவரைப் போல் நானும் நடந்து கொள்ளலாமா?” என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று சொல்லி விட்டு, நான் மட்டமான ஆடை அணிந்திருப்பதைப் பார்த்த நபியவர்கள், “உன்னிடம் வசதி இருக்கிறதா?” எனக் கேட்டார்கள். ஆடு, ஒட்டகம் மற்றும் அனைத்து செல்வங்களையும் அல்லாஹ் எனக்குக் கொடுத்திருக்கிறான்என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தச் செல்வம் உம் மீது தென்படட்டும்என்றார்கள்.

நூல்: திர்மிதி 1929

வசதி படைத்தவர்கள் உயர் ரகமான ஆடைகளை அணிவது தவறில்லை என்பதுடன் அது விரும்பத்தக்கது என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்கு அறிவிக்கின்றன.

பட்டாடை அணிதல்

பட்டாடை அணிவதும்தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண் களுக்கு ஹலால் (அனுமதிக்கப் பட்டது) ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: திர்மிதி 1642

சாதாரண பட்டோ, அலங்காரப் பட்டோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் (காஃபிர்களாகிய) அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர் களான) நமக்கும் உரியதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)

நூல்: புகாரி 5426

பட்டாடையின் மீது அமர்வதை நபியவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபதுல்யமான்(ரலி)

நூல்: புகாரி 5837

நபி (ஸல்) அவர்கள் “இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 5830

இந்தச் செய்திகள் அனைத்தும் பட்டாடை அணிவது ஆண்களுக்கு ஹராம் என்று சொன்னாலும் பின்வரும் செய்திகள் சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர! (என்று கூறி) பெரு விரலை அடுத்துள்ள (சுட்டு விரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 5828

இன்னும் சில நோய்களுக்காக பட்டாடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும் நபி ஸல் அவர்கள் நமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கு இருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2919

——————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு                       தொடர் – 6

முஹம்மது நபிக்குத் தெரியாதது

முஹய்யித்தீனுக்குத் தெரிகிறது?

அபூஉஸாமா

ஷியாக்கள் பற்றிய இந்த ஆய்வுத் தொடரில், ஷியாக்களின் கொள்கைகளை அப்படியே உரித்து வைத்திருக்கும் தமிழகத்தின் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்பவர்களைப் பற்றியும், அவர்கள் வேதமாக ஓதி வரும் மவ்லிது கிதாபுகள் எப்படியெல்லாம் இஸ்லாத்திற்கு முரணான வகையில் ஷியாக்களை ஒத்திருக்கின்றன என்பது பற்றியும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்லும் மவ்லிது வரிகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் வரை காஃபிர்கள் என்ற ஒரு சாராரை மட்டும் தான் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் மதீனா வந்ததும் யூதர்கள், கிறித்தவர்கள், மக்கத்துக் காஃபிர்கள் என்று அவர்களுக்குரிய எதிர்ப்புகள் மும்முனையானது.

இம்மூன்று அணியினரின் எதிர்ப்பும் வெளிப்படையானது. இவர்கள் அல்லாத இன்னொரு மறைமுக அணியும் இருந்தது. அந்த அணி தான் நபி (ஸல்) அவர்கள் எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமமான அணியாக இருந்தது. அதற்குக் காரணம் நான்காவது அணி என்று அவர்களை எதிரணியில் சேர்க்க முடியவில்லை; நம்பிக்கைக்குப் பாத்திர மான முஸ்லிம்களின் அணியிலும் அவர்களைச் சேர்க்க முடியவில்லை.

ஏன்? இவர்கள் முஸ்லிம்களிடம் வந்தால் தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். காஃபிர்களிடம் போய் தங்களைக் காஃபிர்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டார்கள். இது தான் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த சாராரில் அபாயகரமான அணியினராய் இருந்தனர். இவர்களை எதிர் கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் அவசியமாய் தேவைப்பட்ட ஒன்று, உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல்! அல்லாஹ் இந்த      ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கவில்லை.

உங்களைச் சுற்றியுள்ள கிராம வாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள் கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அல்குர்ஆன் 9:101

இந்த ஒரு ஞானம் மட்டும் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்கள் நயவஞ்சகர்களை இனங்கண்டு களையெடுத்திருப்பார்கள். அதற்குரிய வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கவில்லை. ஆனால் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் வேதமாகக் கருதும் முஹய்யித்தீன் மவ்லிதோ, அப்துல் காதிர் ஜீலானிக்கு இந்த ஞானத்தைத் தாராளமாக வழங்கி, பரவசப்படுகின்றது.

முஹ்யித்தீன் மவ்லிதின் திமிர் பிடித்த திரு வாசகங்களைப் பாருங்கள்.

தெளிவான அல்லாஹ்வின் ஆணையின் உறுதிப்பாட்டுடன் நான் கூறுகின்றேன்: பேச வைக்கப்படுகிறேன்; (அதனால்) பேசுகிறேன். வழங்கப்படுகிறேன்; வினியோகிக்கிறேன். கட்டளையிடப்படுகிறேன்;  (அதனால்) காரியம் ஆற்றுகிறேன். செலவு செய்ய வைக்கப்படுகிறேன்;  (அதனால்) செலவு செய்கிறேன்.

காப்புறுதி என் மீது கட்டளையிடப்பட்டிருக்கின்றது. என்னை வெறுப்பவருக்கும் (என்னைத்) தொடர்தல் உள்ளது. என்னை உண்மைப்படுத்துவதே உங்கள் வியாபாரத்தில் சிறந்தது. நீங்கள் என்னைப் பொய்ப்பிப்பது இறுதி நாளின் விஷமாகும். உங்கள் அழிவிற்குக் காரணமாகும். உங்கள் மறு உலகில் வேதனையாகும்.

ஷரீஅத் என்ற கடிவாளம் இல்லையெனில் நீங்கள் வீட்டில் என்ன சாப்பிடுகிறீர்கள்? உங்கள் வீட்டில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்பதையெல்லாம் நான் அறிவித்து விடுவேன். நீங்கள் எனது முன்னிலையில் பளிங்குக் கண்ணாடி போல் இருக்கிறீர்கள். அதனால் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அப்படியே பார்க்கிறேன். உங்கள் அந்தரங்கத்தில் உள்ளவற்றை நான் அப்படியே காண்கிறேன்.

இவ்வாறு முஹ்யித்தீன் கூறியதாக அபுல் லதீப் அறிவிக்கின்றார்.

இது தான் முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெறும் வாசகம்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

இந்த வசனம் வஹீ நின்று விட்டது என்பதற்கான அல்லாஹ்வின் பிரகடனம். ஆனால் முஹ்யித்தீன் தன்னிடம் அல்லாஹ் பேசுவதாக புருடா விடுகின்றார். (அவ்வாறு மவ்லித் கூறுகின்றது) இவரை நம்பவில்லை எனில் அது உலக அழிவிற்குரிய காரணமாம். மறுமையில் வேதனையாம். இவ்வாறு கதையளக்கின்றது இந்த மவ்லிது!

இது முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் முஹ்யித்தீனின் அத்துமீறிய பிரவேசமாகும். நாம் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் அந்தச் செய்தி முஹ்யித்தீன், அல்லாஹ்வின் அதிகாரத்தில், ஆதிக்கத்தில் வரம்பு மீறி அடியெடுத்து வைப்பதாகும்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப் படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 64:4

உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. 5:7, 8:43, 11:5, 28:69, 31:23, 29:10, 35:38, 39:7, 40:19, 42:24, 57:6, 67:13 ஆகிய வசனங்களும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றன. இந்தப் பண்புகளைத் தான் முஹ்யித்தீன் தனக்கு இருப்பதாகக் கூறுகின்றார். அல்லது அவரது பெயரால் இந்த மவ்லிது பிதற்றுகின்றது.

உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் ஒரு கடுகளவு கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்திருந்தால் எத்தனையோ எதிரிகளை, இஸ்லாத்தின் விரோதிகளை மிகவும் எளிதில் கண்டுபிடித்துக் கதையை முடித்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த ஆற்றல் அணுவளவும் கொடுக்கப்படவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட நிகழ்வு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமாரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்.

இவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும், அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கை கடனை நிறைவேற்று வதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது.

ஆகவே நான் திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடலானேன். அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதைச் சுமந்து சென்று நான் சவாரி செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர்.

அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். ஆகவே சிவிகையைத் தூக்கிய போதும் அதைச் சுமந்த போதும் அது கனமில்லாமல் இருந்ததை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன்.

அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள்.  படையினர் சென்ற பிறகு (தொலைந்து போன) எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்று விட்டிருந்தனர்.) அங்கு அவர்களில் அழைப்பவரோ, பதில் கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை.

நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு படையினர் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மிகைத்து விட, நான் தூங்கி விட்டேன்.

படை புறப்பட்டுச் சென்றதற்குப் பின்னால் (படையினர் தவற விட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் அங்கே தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னைக்) கண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். ஆகவே என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து கொண்டார்.

அவர் என்னை அறிந்து கொண்டு, “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கின்றோம்என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே எனது முகத்திரையால் எனது முகத்தை மறைத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் “இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்என்று கூறியதைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து கேட்கவுமில்லை.

பிறகு அவர் விரைவாக தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்ள வசதியாக) அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில் ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு செய்வதில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப் பட்டிருந்த போது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அந்தத் தீய சொல்லில் ஒரு சிறிதும் நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும் வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்ற பகுதியை நோக்கிச் சென்றோம்.

நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னர் இவ்வாறு நாங்கள் புறநகர் பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதி வந்தோம்.

நானும் உம்மு மிஸ்தஹும் சென்று கொண்டிருந்தோம். அவர் அபூ ருஹ்ம் பின் முத்தலிப் பின் அப்து மனாஃப் அவர்களின் மகளாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ஸல்மா) பின்த் ஸக்ர் பின் ஆமிர் தான் உம்மு மிஸ்தஹின் தாயார் ஆவார். மிஸ்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் முத்தலிப் என்பார் உம்மு மிஸ்தஹின் மகன் ஆவார்.

உம்மு மிஸ்தஹும், நானும் எங்கள் இயற்கைத் தேவைகளை முடித்துக் கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன் ஆடையில் இடறிக் கொண்டார்.  உடனே அவர், “மிஸ்தஹ் நாசமாகட்டும்என்று (தன் மகனைச் சபித்தவராகக்) கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லி விட்டீர். பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகின்றீர்?” என்று கூறினேன்.

அதற்கு அவர், “அம்மா! அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார்.  என்ன சொன்னார்? என்று நான் கேட்க, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அந்தச் செய்தியை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு, என் நோய் இன்னும் அதிகரித்து விட்டது.

நான் என் இல்லத்திற்குத் திரும்பி வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து ஸலாம் கூறி விட்டு, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.  அப்போது நான், “என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?” என்று கேட்டேன்.

உண்மையிலேயே அப்படி ஒரு செய்தி நிலவுகின்றதா? என்று விசாரித்து என் பெற்றோரிடம் உறுதி செய்து கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள். 

நான் என் தாய் வீட்டிற்குச் சென்று என் தாயாரிடம், “அம்மா! மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கின்றார்கள்என்று கேட்டேன்.  என் தாயார், “அன்பு மகளே! உன் மீது சொல்லப்படும் இந்த விஷயத்தைப் பற்றி பெரிது படுத்திக் கொள்ளாதே!  அல்லாஹ்வின் மீதாணையாக!  சக்களத்திகள் பலரும் இருக்க, தன் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து, அவளுடைய சக்களத்திகள் அதிகமாக வதந்திகள் பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமல் இருப்பது மிகவும் குறைவேயாகும்என்று கூறினார்கள்.

நான், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலை வரை அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை. உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை) பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் அவர்களையும், உஸாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது.  உஸாமா அவர்கள், நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீது உள்ளத்தில் தான் கொண்டிருந்த பாசத்தையும் வைத்து ஆலோசனை சொன்னார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியரிடம் நல்ல குணத்தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லைஎன்று உஸாமா கூறினார்கள்.

அலீ அவர்களோ, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். பணிப் பெண் பரீராவைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்என்று கூறினார்கள்.

ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, “பரீராவே! நீ (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் எதையாவது பார்த்திருக்கின்றாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, “தங்களை சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய் விடுவார். வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும். அத்தகைய கவனக் குறைவான இள வயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லைஎன்று பதில் கூறினார்.

அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு தமக்கு உதவும்படி தோழர்களிடம் கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் வதந்தி கிளப்பி எனக்கு மன வேதனை அளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நான் நல்லதையே அறிவேன்.  அவர்கள் ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால் அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன்.  என்னோடு தான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கின்றார். (தனியாக வந்ததில்லை)என்று கூறினார்கள்.

உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அவனைத் தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகின்றேன். அவன் எங்கள் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகின்றோம்.  எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். நாங்கள் தங்களது உத்தரவை நிறைவேற்றுகிறோம்என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவரான ஸஅத் பின் உபாதா ஆவார். ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்களின் தாயார் இவரது குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரரின் மகளும் ஆவார்.  இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார்.  ஆயினும் குலமாச்சரியம் அவரை உசுப்பி விடவே ஸஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லி விட்டீர்.  அவனை நீர் கொல்ல மாட்டீர்.  அது உம்மால் முடியாது.  அவன் உமது குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப்படுவதை நீர் விரும்ப மாட்டீர்என்று கூறினார்.

உடனே, ஸஅத் பின் முஆத் அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து, ஸஅத் பின் உபாதா அவர்களிடம், “நீர் தாம் தவறாகப் பேசினீர்.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம்.  நீர் ஒரு நயவஞ்சகர்.  அதனால் தான் நயவஞ்சகர் சார்பாக வாதிடுகின்றீர்என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேடை மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டனர்.  நபி (ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி, அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமாகி விட்டார்கள்.

அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன்.  என் கண்ணீரும் நிற்கவில்லை. என்னை உறக்கமும் தழுவவில்லை.  காலையானதும் என் தாய், தந்தையர் என் அருகேயிருந்தனர்.  நானோ, இரண்டு இரவுகள் ஒரு பகல் முழுக்க, என் ஈரல் பிளந்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன்.  என் கண்ணீரும் நிற்கவில்லை.  என்னை உறக்கமும் தழுவவில்லை.  என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுது கொண்டிருந்த போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள்.  நான் அவளுக்கு அனுமதி அளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள்.

நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ஸலாம் கூறி அமர்ந்து கொண்டார்கள்.  என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை.  ஒரு மாத காலம் என் விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப் படாமலேயே இருந்து வந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்து விட்டு, “நிற்க! ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது.  நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான்.  நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி, அவன் பக்கம் திரும்பி விடு, ஏனெனில் அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்பு கோரினால் அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது.  அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் உணரவில்லை.  நான் என் தந்தை அபூபக்ர் (ரலி) யிடம், “அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்என்று கூறினேன்.  அதற்கு என் தந்தை, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லைஎன்று கூறினார்கள்.

நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், “அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்என்று கூறினேன்.  அதற்கு என் தாயார், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லைஎன்று கூறினார்கள்.

அதற்கு நான், “நானோ வயது குறைந்த இளம் பெண் ஆவேன்.  குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன். இந்நிலையில் அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்ட இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை.  நான் குற்றம் ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் – நான் குற்றமற்றவள் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும் – (நான் சொல்வதை உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக!  எனக்கும் உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை நபி யஃகூப் (அலை) அவர்களையே உவமையாகக் கருதுகின்றேன்.  (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது.  நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்பு கோர வேண்டும் (அல்குர்ஆன் 12:18)” என்று கூறினேன்.

நான் அப்போது குற்றமற்றவள் என அல்லாஹ் அறிவான் (அந்த அல்லாஹ்) நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் வேறு பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகின்ற வஹீ – வேத வெளிப்பாட்டை (திருக்குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, “என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள்என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்படத் தொடங்கி விட்டன. உடனே (வஹீ வரும் நேரத்தில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது. அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அவர்கள் மீது அருளப் பட்ட (இறைச்) சொற்களின் பாரத்தினால் தான் இந்தச் சிரம நிலை ஏற்பட்டது.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, “ஆயிஷா! அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்து விட்டான்என்று கூறினார்கள்.

உடனே என் தாயார், “அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், “மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து அவனுக்கே நன்றி செலுத்துவேன்என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்என்று தொடங்கும் (அல்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவு படுத்தி அல்லாஹ் இதை அருளினான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2661

  1. ஆயிஷா (ரலி) அவர்களின் கழுத்தணி காணாமல் போய் அதை அவர்கள் தேடிச் செல்கிறார்கள்
  2. ஒட்டகத்தில் தம்முடன் ஆயிஷா (ரலி) பயணிக்கவில்லை என்ற விபரம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் போனது.
  3. ஆயிஷா (ரலி) மீது அவதூறு கிளம்பியதும் உண்மை நிலவரம் தெரியாமல் தமது மனைவியைப் பற்றி அலீ (ரலி) அவர்களிடமும், உஸாமா (ரலி) அவர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். அதற்கு அலீ (ரலி), ஆயிஷா (ரலி) அவர்களை விவாகரத்துச் செய்து விடுமாறு கூறுகிறார்கள்.
  4. நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி பற்றி பரீரா (ரலி)யிடம் ஆலோசனை செய்கிறார்கள்.
  5. நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்து மிம்பரில் நின்று இது தொடர்பாக விசாரித்த போது, அன்சாரிகளில் உள்ள அவ்ஸ், கஜ்ரஜ் என்ற இரு அணியினர் மோதிக் கொள்ளத் துவங்கினார்கள்.
  6. இன்னின்ன தகவல் உன்னைப் பற்றி வந்துள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறி, பாவ மன்னிப்புத் தேடுமாறு கூறுகிறார்கள்.
  7. ஆயிஷா (ரலி) அவர்களைத் தூய்மைப்படுத்தும் வசனம் இறங்கும் வரை நபி (ஸல்) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் பெரும் மனக் கஷ்டத்திற்கு உள்ளானார்கள்.

நபித்தோழர்கள் இரு அணியினராகப் பிரிந்து வெட்டிக் கொள்ள முனைகின்ற அளவுக்கு ஆயிஷா (ரலி) மீது அவதூறு கூறப்பட்ட விவகாரம் முற்றிப் போனது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் ஒரு நொடிப் பொழுது இருந்திருக்குமானால் அவர்கள் இவ்வளவு பெரிய சோதனைக்கு உள்ளாகியிருக்க வேண்டியிருக்குமா? ஆனால் அவர்களுக்கு அந்த ஆற்றல் இல்லை. அதனால் தான் இந்த வேதனையை அனுபவித்தார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிட்டுக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு எங்கோ உள்ள முஹ்யித்தீன், தனக்கு முன்னால் உள்ளவரின் உள்ளத்தை அப்படியே கண்ணாடியில் உள்ளதைப் போல் பார்க்கிறாராம். அதாவது, அல்லாஹ்வின் தூதருக்குத் தெரியாதது, முஹ்யித்தீனுக்குத் தெரியும் என்பது தான் இவர்களது நம்பிக்கை.

இதிலிருந்தே இவர்கள் ஷியாக்களை விடப் பன்மடங்கு வழி கெட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

——————————————————————————————————————————————

அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள்

அப்துந் நாஸிர் கடையநல்லூர்

கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு!

இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் அப்பாவிகளைப் போன்றும் காட்சி தரும் இவர்களின் பின்புற வேலைகளைப் பார்த்தால் படு பயங்கரமானதாக இருக்கும். காசுக்காகவும், காழ்ப்புணர்ச்சியினாலும் எதையும் செய்யத் துணிபவர்கள் தான் இவர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும் உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 158

இது போன்று தான் இன்றைய  ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் இருக்கின்றனர். தாயத்து, தட்டு புத்தகங்களையும், மத்ஹபு புத்தகங்களையும் வைத்து விற்பனை செய்யக்கூடியவர்களும், காயிதே மில்லத்திற்குப் பிறந்த நாள் கொண்டாடி ஃபாத்திஹா ஓதி சாப்பிடக் கூடியவர்களும், வரதட்சணை திருமணங்களில் முன்னிலை வகிக்கக் கூடியவர்களும், தர்ஹா எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடக் கூடியவர்களும் தான் இன்றைக்குப் பல ஊர்களில் பெயரளவில் உள்ள ஜாக் அமைப்பின் நிர்வாகிகளாக உள்ளனர்.

இவர்கள் இந்த அமைப்பில் ஒட்டிக் கொண்டிருப்பதின் நோக்கமே மாதா மாதம் வருகின்ற சல்லிகளுக்காகத் தான். இந்த சல்லிகள் நின்று விட்டால் இவர்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

படம் காட்டி வெளிநாட்டில் பணம் பறித்து வயிறு வளர்க்கும் இந்த இயக்கத்தினர், தவ்ஹீத் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்களையெல்லாம் தங்கள் இயக்கச் சொத்து என்றும், சங்கங்கள் என்றும் அங்கு தொழுகையே நடைபெறவில்லையென்றும் நீதி மன்றங்களில் பொய்களைத் துணிந்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். இது போன்ற வேலைகளுக்காகவே இத்தகையோரை மாநில நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானை, தானே நிர்வகித்து வருவதாகவும், ஷம்சுல்லுஹா வந்து தன்னிடம் சண்டை போட்டதாகவும் கூசாமல் பொய்யெழுதி நீதிமன்றத்தில் கொடுத்தவரெல்லாம் தற்போது ஜாக்கில் மாநில நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

அது மட்டுமல்ல! 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மவ்லவி எம். ஷம்சுல்லுஹா அவர்களுக்குச் சம்பளம் கொடுத்ததாகவும், இனிமேல் சம்பளம் கிடையாது என்றும் பச்சைப் பொய்யை, ஜாக் லெட்டர் பேடில் கடிதமாக எழுதி, கையெழுத்திட்டு அந்தப் போர்ஜரி கடிதத்தை நீதிமன்றத்தில் கொடுத்தவர் தான் மாநில அமீர் எஸ். கமாலுத்தீன் மதனீ!

மேலே நாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் அவர்களே கையெழுத்திட்ட ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.

மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் பிரச்சனையில் இவர்களது மோசடிகள் அம்பலமாகி விட்டதால் அதைத் திசை திருப்புவதற்காக இவர்கள் நடத்திய பைக் எரிப்பு நாடகத்தைப் பற்றி ஏற்கனவே ஏகத்துவம் இதழில் எழுதியிருந்தோம். இந்த பைக் எரிப்பைச் செய்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்று காவல்துறையில் பொய்ப் புகார் கொடுத்து, தற்போது வழக்கும் நடைபெற்று வருகின்றது. தங்களது அல்ஜன்னத் என்ற பத்திரிகையிலும் பைக்கை எரித்தது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்று கூசாமல் எழுதியிருந்தார்கள்.

ஆனால் தற்போது ஜாக் சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “பைக்கை எரித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்கள். ஆக, தங்கள் சுயநலத்திற்காக எப்படிப்பட்ட பொய்யையும் சொல்லி, யாரையும் சிறைக்கு அனுப்பத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் உதாரணம்.

உண்மை அவர்களிடம் வந்த போது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் அவர்களிடம் வந்து சேரும்.

அல்குர்ஆன் 6:5

தமக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் கற்பனை செய்த யாவும் அவர்களை விட்டு மறைந்து போகும்.

அல் குர்ஆன் 6:24

நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லைஎன்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களேஎன்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

அல் குர்ஆன் 9:107

நயவஞ்சகர்கள் பொய்யர்களேஎன்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.

அல்குர்ஆன் 63:1

சல்லடை ஊசியைப் பார்த்துக் கேட்டதாம், உனக்கு பின்னால் ஒரு துளையிருக்கிறதே என்று! அது போலத் தான் இன்றைய ஜாக் இயக்க நிர்வாகிகள் நம்மைப் பார்த்து செய்கின்ற விமர்சனங்களும் இருக்கின்றன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிரச்சினையைத் தொட்டுப் பேசியுள்ளனர். ஜாக் இயக்க நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் பண மோசடியில் நிரூபிக்கப் பட்டவர்கள். தவறான தொடர்பில் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டவர்கள். திருமணம் செய்து அபலைப் பெண்களை ஏமாற்றியவர்கள். பணத்திற்காகக் கொள்கையில் தடம் புரண்டவர்கள்.

இவையெல்லாம் சாட்சிகளுடன் அந்தந்த நேரங்களில் நிரூபிக்கப்பட்டும், உண்மை தெரிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிப் பெருமைப்பட்ட இவர்கள் நம்மை பார்த்து விமர்சனம் செய்வது வேடிக்கையிலும் வேடிக்கையே!

(இது பற்றி ஆதாரங்களுடன் நாம் வெளியிட்ட ஐந்து சிடிக்களைக் காண்க!)

தடம் மாறும் ஜாக்

நாங்கள் தான் கொள்கைவாதிகள் என்றும், குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள் என்றும்  கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை ஆட்டம் காணத் துவங்கி விட்டது. ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பு, மார்க்க விஷயத்திலும் கொள்கையிலும் கூட இவர்களை தடுமாறச் செய்துள்ளது. இவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களும் இவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

களியக்காவிளை விவாதம் தொடர்பாக இவர்கள் தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் இதற்குத் தெளிவான சான்றாகும். இவர்களுடைய மாநில அமீர் பேசிய சில பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டு ஆதாரமாக இருக்கும் போதே, இவர்கள் கப்ரு வணங்கிகளுக்கு உதவி செய்ய மறுத்ததாக தங்களுடைய பத்திரிகைகளில் எழுதியுள்ளனர். இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இது ஒன்றே மாபெரும் சான்றாகும்.

இவர்கள் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள காழ்ப்புணர்வின் காரணமாக களியக்காவிளை சம்பவம் மட்டுமல்லாது பல நிலைகளில் கொள்கையில் தடம் புரண்டு அசத்தியத்திற்குத் துணை சென்றுள்ளனர் என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்.

ஆரம்ப காலத்தில் மார்க்க விஷயங்களில் திருமறைக் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு மட்டும் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறி வந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது ஏற்பட்ட பொறாமையின் காரணமாக “உலக, மார்க்க விஷயங்களில் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்” எனும் மார்க்கத்திற்குப் புறம்பான புதுக் கொள்கையைப் புகுத்தினார்கள்.

குர்ஆனும், நபிவழியும் தான் மார்க்கத்தின் அடிப்படைகள் என்று கூறி வந்தவர்கள், “ஸஹாபாக்களுடைய கருத்துக்களையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று திருமறைக் குர்ஆனிலும், நபிவழியிலும் இல்லாத ஈமானுக்கு மாற்றமான மூன்றாவது அடிப்படைக்குச் சென்றார்கள். இன்று வரை அதைத் தங்கள் பத்திரிகையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.

ஆதாரப்பூர்வமான ஸஹீஹான நபிமொழிகளைத் தான் மார்க்கமாகக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக இன்றைக்குப் பலவீனமான செய்திகளையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் நிலைக்குச் சென்று விட்டனர்.

தன்னுடைய உறவினர் என்பதற்காக, கொள்கையற்றவர்களை தங்களுடைய மதரஸா நிகழ்ச்சிகளில் பங்கு பெறச் செய்து “உமறுப் புலவர் கனவில் நபிகள் நாயகம் வந்தார்கள்” என்று அவர் உளறியதையெல்லாம் ரசித்துக் கேட்ட கொள்கை வீரர்கள் தான் இவர்கள்.

அது மட்டுமல்ல! அதே பிர்தவ்சியா மதரஸா ஆண்டு விழாவில், “வந்தே மாதரம்’ பாடுவதை ஆதரித்து, அதாவது இணை வைப்பை ஆதரித்து ஒருவர் பேசுகிறார். அவரை இறுதி வரை பேச வைத்து, வந்தே மாதரம் என்பது எவ்வளவு பெரிய இணை வைப்பு வரிகள் என்பதை அந்தக் கூட்டத்தைக் கேட்டவர்களுக்குக் கூட விளக்காமல் அனுப்பி வைத்த இந்தக் கொள்கைச் சிங்கங்கள் தான் சத்தியவாதிகளாம்.

குர்ஆன் அனைவருக்கும் விளங்கும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருவதால், “16 கலைகளைக் கற்றவர்கள் தான் குர்ஆனை விளங்க முடியும்” என ஜாக்கின் மாநில அமீர், தான் என்ன பேசுகிறோம் என்று கூட அறியாமல் தனிமனித வெறுப்பில் குராபிகளை விட மோசமாகப் பேசியுள்ளார்.

இவர்கள் தனி மனிதக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தான் கொள்கையில் தடம் புரண்டுள்ளார்கள் என்பதற்கு நாம் இன்னும் பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.

ஸஹர் நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டுள்ளன. அதை நாம் நம்முடைய பள்ளிகளில் நடைமுறைப் படுத்த வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால் வெறுப்புற்ற இவர்கள் ஹதீஸை மறுக்கின்றோமே என்பதைக் கூட அறியாமல் “ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்வது குழப்பமானது” என குராபிகளைப் போன்று அறிவித்தனர்.

பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுவது தான் நபிவழி; எனவே திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால், “திடல் தொழுகை என்று ஒரு தொழுகையே மார்க்கத்தில் கிடையாது’ என்று தமிழக முதல்வரையே மிஞ்சும் அளவிற்கு தங்களின் தமிழ் மொழிப் புலமையை வெளிப்படுத்தி, திடலில் தொழ வேண்டும் என்ற சுன்னத்தை மறுத்தனர்.

பெண் வீட்டு விருந்து என்பது நபிவழித் திருமணத்தில் இல்லாத ஒன்று; எனவே பெண் வீட்டுத் திருமண விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என தவ்ஹீத் ஜமாஅத் கூறியதால் “பெண் வீட்டு விருந்து வைக்கக் கூடாது என ஹதீஸில் வருகிறதா?” என்ற அபாரக் கேள்வியைக் கேட்டு இன்று ஜாக் இயக்கத்தினர் பெருவாரியாகப் பெண் வீட்டு விருந்தில் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டி வருகின்றனர்.

தவ்ஹீத் பெயரில் ஆடம்பரத் திருமணம் நடத்தக் கூடியவர்கள், பெண் வீட்டு விருந்திற்குத் தவ்ஹீத் போர்வை போர்த்தியவர்கள் வர வேண்டும் என விரும்பக் கூடியவர்கள் ஜாக் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டுத் திருமணத்திற்குத் தங்கள் ஜமாஅத்தின் பேச்சாளரை அனுப்பி வைத்து திருமணத்தையும் நடத்தி வைப்பார்கள். அந்தச் சபையில் என்ன நடந்தாலும் வந்த வேலையை மட்டும் பார்த்து விட்டுச் சென்று விடுவார்கள். அதைக் கண்டித்துக் கூட பேச மாட்டார்கள். இவை நாம் கற்பனை செய்து எழுதவில்லை. ஜாக் இயக்க நிர்வாகிகள் எடுத்த அவதாரங்களை விபரமாகக் கேட்டறிந்து தான் எழுதுகிறோம்.

உணர்வு வார இதழில், “அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, உழவர் சிலை போன்றவை வரலாற்று சிறப்பு வாய்ந்தவை” எனத் தவறாக எழுதி விட்டோம். பிறகு இதற்கு மறுப்பு வெளியிட்டு மன்னிப்பும் கேட்டு விட்டோம்.

ஆனால் பரிசுத்த வேடம் போடும் இந்தக் கொள்கை வேடதாரிகள், “சமாதி வழிபாட்டை ஆதரிக்கும் ததஜ” என்று தங்கள் பத்திரிகையிலே எழுதி அகமகிழ்ந்து கொண்டனர். ஆனால் என்ன வேடிக்கை என்றால் அதற்கு மறு பக்கத்திலேயே, “கண்ணகிக்குச் சிலை வைத்து பூம்புகாரை அழகு பார்த்தவர் நீங்களல்லவா?” என கலைஞரைப் புகழ்ந்து எழுதி சிலை வழிபாட்டை ஜாக் இயக்க நிர்வாகிகள் ஆதரித்துள்ளனர். இவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ள முறையற்ற தனி மனித வெறுப்பு தான் இவர்களை இப்படியெல்லாம் தடுமாறச் செய்துள்ளது.

விரலசைப்பது நபி வழி என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து பணப் பட்டுவாடா செய்யக்கூடிய சில சவூதிகள் சரியான ஆய்வில்லாமல் இது தவறு என்று கூறியதாலும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அனைவரும் விரலசைத்து இந்த நபிவழியை நிலைநாட்டி வருவதாலும் வெறுப்புணர்வின் காரணமாக இவர்களின் ஆதரவுப் பத்திரிகைகளில் எந்த விதமான முறையான ஆய்வுமில்லாமல் விரலசைப்பது நபிவழியல்ல, அது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும் என எழுதியுள்ளனர்.

இட ஒதுக்கீட்டை ஆதரித்து இவர்கள் தங்கள் பத்திரிகைகளில் அதிகமதிகம் எழுதியுள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு தர மறுத்தவர்களைக் கண்டித்தும் எழுதியுள்ளனர். பல மாநாடுகளில் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளனர். ஏன்? ஜாக் மாநில நிர்வாகியாக இருந்து தற்போது அவர்களாலேயே தூக்கியெறியப் பட்டுள்ள கோவை அய்யூப் அவர்கள், “முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காகக் கை சின்னத்தில் வாக்களிப்பீர்” என நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரசியல் மேடையில் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் செய்தார்.

ஆனால் பாருங்கள், இவர்களின் கயமைத்தனத்தை! ஜனவரி 29 அன்று கும்பகோணம் மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு கொடுத்த போது, “உரிமைகளை இவர்களிடம் கேட்கலாமா?” என மாநில அமீர் கொள்கை வெறி (?) மேலோங்கி பல இடங்களில் முழங்கியுள்ளார். பல இடங்களில் ஜாக் இயக்கப் பேச்சாளர்கள் வெள்ளிக்கிழமை பயான்களில், இட ஒதுக்கீடு கேட்பது மார்க்கத்திற்கு முரணாணது என்றும் சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றும் உளற ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ஆதரித்த ஒன்றையே தவ்ஹீத் ஜமாஅத் சொல்கிறது என்பதற்காக மறுத்துப் பேசுவது கொள்கைப் பிடிப்பா? இல்லை தடுமாற்றமா?

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையின் அடிப்படையில் தவ்ஹீது ஜமாஅத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அதைக் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதே சமயம், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு இயக்கங்களிலிருந்தும் விரட்டப்பட்ட ஒருவருக்கு, பாளை தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வழங்கக் கோரி தங்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இவர்களின் கொள்கைத் தடுமாற்றங்கள் இது மட்டுமல்ல! சுருக்கமாகக் கூறினாலே பல பக்கங்களுக்கு எழுதிக் கொண்டே போகலாம். எனவே அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள் யார் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். காசுக்காகவும், தனி மனித வெறுப்பு வழிபாட்டினாலும் தடம் புரண்ட இவர்கள் இனிமேலாவது தங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

——————————————————————————————————————————————

இணை வைக்கும் இமாம்களைப் புறக்கணிப்போம்

எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 60:8, 9

இணை கற்பிப்பவர்களுடன் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் போன்ற உலக விஷயங்களில் உறவு கொள்வதை இந்த வசனங்கள் அனுமதிக்கின்றன.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப் படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப் படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

அல்குர்ஆன் 31:15

நமது பெற்றோர்கள் இணை வைப்பில் இருந்தாலும் அவர்களிடம் உலக விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள இந்த வசனம் சொல்கிறது. அத்துடன் இந்த வசனம் தான் “ஃபித்துன்யா – இவ்வுலகில்’ என்று குறிப்பிட்டு, முஷ்ரிக்குகளுடன் நாம் கொள்ள வேண்டிய தொடர்பை இம்மை, மறுமை என்று பிரித்துக் காட்டுகின்றது.

இணை கற்பிப்பவர்களிடம் மறுமை, மார்க்க விஷயத்தில் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று ஒரு பட்டியலையே போடுகின்றது.

  1. திருமணம்
  2. பள்ளிவாசல் நிர்வாகம்
  3. பாவ மன்னிப்புத் தேடுதல்
  4. ஜனாஸா தொழுகை

போன்ற மார்க்க விஷயங்களில் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது. இதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம்.

திருமணம்

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

ஒரு முஸ்லிமான ஆண், இணை வைக்கும் பெண்ணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது; ஒரு முஸ்லிமான பெண், இணை வைக்கும் ஆணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகக் கட்டளையிடுகின்றது.

பள்ளிவாசல் நிர்வாகம்

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்குத் தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரைக் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:17, 18, 19

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை யார் நிர்வகிக்க வேண்டும்? யார் நிர்வகிக்கக் கூடாது? என்பதையும், நிர்வகிப்பவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன என்பதையும் இந்த வசனங்கள் தெளிவுபடுத்தி விடுகின்றன. இன்று தமிழகத்தில் அதிகமான பள்ளி வாசல்கள் இத்தகைய இணை வைப்பவர்களிடம் தான் சிக்கித் தவிக்கின்றன. இந்த வசனத்தின்படி அவர்கள் இப்பள்ளிகளை நிர்வகிக்கும் தகுதியை இழக்கின்றனர்.

பாவ மன்னிப்புத் தேடுதல்

இணை கற்பிப்பவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அல்லாஹ் தடை விதித்து விட்டான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

அல்குர்ஆன் 9:113

இந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை நாம் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். இந்த வசனம் இறங்கிய காரணங்கள், பின்னணிகள் ஆகியவற்றைப் பார்ப்போம். அந்தக் காரணமும், பின்னணியும் இதன் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கத் துணையாக அமையும்.

(நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்என்று சொன்னார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் “அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, “நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்என்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் எனும் உறுதி மொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்என்று சொன்னார்கள். அப்போது தான், “இணை வைப்போருக்காகப் பாவ மன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லைஎனும் (9:113வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ், “நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான்எனும் (28:56வது) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி 4772

இணை வைப்பில் இறந்தவர்களுக்கு முஸ்லிம்கள் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாக விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தமது தாயாரின் கப்ரைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் தாமும் அழுது, தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்து விட்டார்கள். “என்னுடைய தாய்க்குப் பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரப்படவில்லை. எனது தாயின் கப்ரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏனெனில் அது மரணத்தை நினைவூட்டுகின்றதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1622

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே, அவர்களது தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி கிடையாது எனும் போது ஷிர்க் (இணை) வைத்து விட்டு இறந்த மற்றவர்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் பாவ மன்னிப்புக் கேட்க அனுமதியில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஜனாஸா தொழுகை

இணை வைப்பில் இறந்து போனவர்களுக்கு நாம் பாவ மன்னிப்புத் தேட முடியாது என்றாகி விடுகின்றது. ஒரு முஸ்லிம் இறந்தவுடன் நாம் தொழுகின்ற ஜனாஸா தொழுகை தான் நாம் அவருக்காகச் செய்யக் கூடிய தலையாய  பாவ மன்னிப்புத் தேடுதலாகும். எனவே ஜனாஸா தொழுகை என்ற இந்தப் பாவ மன்னிப்புப் பிரார்த்தனையை, முஷ்ரிக்காக அதாவது இணை வைத்து விட்டு இறந்தவருக்காக நாம் செய்ய முடியாது. இதற்குப் பின்வரும் வசனங்களும் வலுவூட்டுபவையாக அமைந்துள்ளன.

(முஹம்மதே!) அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:80

அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.

அல்குர்ஆன் 9:84

நாம் மேலே பட்டியலிட்ட நான்கு விஷயங்களில் பள்ளிவாசல் நிர்வாகம் என்பது ஏகத்துவ வாதிகளை நேரடியாகப் பாதித்து விடுவதில்லை. ஆனால் திருமணம், மரணம் போன்ற விஷயங்கள் ஒவ்வொரு ஏகத்துவ வாதியையும் நேரடியாகப் பாதிக்க வைப்பவையாகும்.

ஏகத்துவவாதிகள் காணும் இரசாயனப் பரிசோதனை

ஏகத்துவவாதியின் கொள்கைப் பிடிப்பு அவரது திருமணத்தின் போது இரசாயனப் பரிசோதனைக்கு உள்ளாகின்றது. ஏகத்துவக் கொள்கையில்லாத அவரது உறவினர்கள், தத்தமது மகளை திருமணம் முடிக்கச் சொல்லி அவரை அலைக்கழிப்பர்.

அது போன்று பகிரங்கமான இணை வைப்பில் உள்ள தந்தை அல்லது தாய் இறந்ததும் ஓர் ஏகத்துவவாதி இரசாயனப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றான். தன்னைப் பெற்ற தாய், தந்தையருக்காக அவர் செய்கின்ற இறுதிக் கட்டப் பிரார்த்தனையைச் செய்ய முடியாமல் ஆகும் போது அவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றார்.

இந்தச் சமயத்தில் அவர் எதைத் தேர்வு செய்ய வேண்டும்?

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தான் தேர்வு செய்ய வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன்பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:23, 24

ஏகத்துவ வட்டத்தைத் தாண்டி, இணை வைக்கும் தனது உறவினரிடம் அல்லது இணை வைக்கும் அந்நியரிடம் திருமண உறவு வைத்துக் கொண்டார் எனில் அவர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தனது உறவை முன்னிறுத்துகின்றார்.

அது போன்று பகிரங்க இணை வைப்பில் இருந்த தாய், தந்தையர் இறந்து விட்டால் அவர்கள் மீதுள்ள அன்பு மேலிட்டு அவர்களுக்காக ஜனாஸா தொழுகை தொழுவாரானால் அவர் நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்னுக்குத் தள்ளியவராவார். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

திருமணத்தின் போதும், மரணத்தின் போதும் இந்த இரசாயனப் பரிசோதனையில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முன்னிலைப் படுத்தி, அவர்களைத் தேர்வு செய்தால் அவர் தான் உண்மையான ஏகத்துவவாதியாவார். அவர் தான் இந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றவர் ஆவார்.

மறுமை உறவுக்குப் பயன் தராத உறவுப் பந்தங்கள்

ஓர் ஏகத்துவவாதி, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, தனது உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரானால் அவருக்கு அல்லாஹ் ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றான்.

கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 60:3

எனவே இந்த வசனத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஏகத்துவவாதி, இணை வைப்பவர்களிடம் தனது உறவு முறையைக் கொள்ள வேண்டும். இதற்குச் சிறந்த ஒரு முன்மாதிரியாகத் தான் இந்த அத்தியாயத்தில் மேற்கண்ட வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் அல்லாஹ், இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தையும் குறிப்பிடுகின்றான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை)

எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (என்றும் பிரார்த்தித்தார்.)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

அல்குர்ஆன் 60:4, 5, 6

இபாதத் – வணக்கம் என்பது மறுமை சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும். அந்த மறுமை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரைப் பின்பற்றியவர்களும் தங்கள் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் புறக்கணிக்கின்றார்கள். பகிரங்கமாகப் பகைத்துக் கொள்கிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த நிலைப்பாட்டில் தான் அழகிய முன் மாதிரி இருக்கின்றது என்று கூறி அல்லாஹ் பாராட்டுகின்றான். அந்த முன்மாதிரியைத் தான் நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்புகின்றான். ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்களின் நிலைப்பாட்டில் ஒரேயொரு தவறு ஏற்பட்டு விடுகின்றது.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்

அல்குர்ஆன் 19:47

தமது தந்தைக்காக அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுவேன் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியது தான் அந்தத் தவறாகும். ஆனால் அது தவறு என்று விளங்கியதும் இப்ராஹீம் (அலை) அவர்கள் அதிலிருந்து விலகி விடுகின்றார்கள்.

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

அல்குர்ஆன் 9:113

இணை வைப்பவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பது இறைவனின் விருப்பம். இதை இப்ராஹீம் (அலை) அவர்கள் அப்படியே நிறைவேற்றுகின்றார்கள். இதனால் அவரைப் பணிவுள்ளவர், சகிப்புத் தன்மையுள்ளவர் என்று இறைவன் பாராட்டுகின்றான்.

இணை வைக்கும் இமாம்களைப் பின்பற்றுதல்

இணை வைப்பவர்களை மறுமை மற்றும் இபாதத் விஷயத்தில் புறக்கணிப்பது தான் அல்லாஹ்வின் விருப்பம் என்றிருக்கும் போது இன்றைய இணை வைக்கும் இமாம்களை நாம் புறக்கணிக்காமல் இருப்பது நியாயமாகுமா?

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 6:106

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 15:94

இணை வைப்பவர்களைப் புறக்கணியுங்கள் என்று இந்த வசனங்களில் அல்லாஹ் கூறிய பிறகு அவர்களைப் புறக்கணிக்காமல் இருக்க முடியுமா?

புறக்கணிப்பு என்றால் அது உலக விஷயங்களில் கிடையாது என்பதை மேலே நாம் கண்டோம். எனவே இணை வைப்பவர்களைப் புறக்கணித்தல் என்பது மறுமை தொடர்பான விஷயங்களில் தான் என்பது நமக்கு நன்கு தெளிவான பிறகு எப்படி இணை வைக்கும் இமாம்களை நாம் தொழுகையில் பின்பற்ற முடியும்?

அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுவது கூடுமா? கூடாதா? என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய விஷயம். நாம் மேலே கண்ட வசனங்களின் அடிப்படையில் முதன் முதலில் நம் மீதுள்ள கடமை அவர்களது இமாமத்தைப் புறக்கணிப்பது தான்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் புறக்கணிப்பில் முன்மாதிரி இருக்கின்றது என்று சொன்ன இறைவன், இணை வைப்பவர்களிடம் இருந்து நம்மை விலகச் சொன்ன ரப்புல் ஆலமீன், தானும் அவர்களிடமிருந்து விலகி விட்டதாகக் கூறுகிறான்.

இணை கற்பிப்போரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக் கொண்டனர். இது, இம்மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய பிரகடனம். நீங்கள் திருந்திக் கொண்டால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் புறக்கணித்தால் நீங்கள் அல்லாஹ்வை வெல்ல முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! துன்புறுத்தும் வேதனை பற்றி (ஏக இறைவனை) மறுப்போரை எச்சரிப்பீராக!

அல்குர்ஆன் 9:3

இப்படி அல்லாஹ் எவர்களை விட்டும் நீங்கி விட்டானோ அவர்களுடன் எப்படி நாம் உறவு கொள்ள முடியும்? அதிலும் குறிப்பாக, தொழுகை என்ற முக்கியமான வணக்கத்தில் அவர்களை எப்படிப் பின்பற்ற முடியும்?

நாம் எதைச் சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுச் சித்தாந்தத்தில் சிலர் உள்ளனர். இவர்கள் தான் இணை வைக்கும் இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்ற பிரச்சாரத்தை இப்போது செய்து வருகின்றனர். இந்த ஆசாமிகள் ஷிர்க் என்ற மாபாதகச் செயலைப் பார்க்கவில்லை. மக்கத்துக் காஃபிர்கள் செய்தால் அது ஒரு ஷிர்க்; இன்று முஸ்லிம்கள் என்ற பெயரில் செய்தால் அது வேறு ஷிர்க் என்று ஷிர்க்கில் வேறுபாடு காட்டுகின்றனர். ஆனால் இவர்களின் இந்தக் கருத்தை அல்லாஹ் தகர்த்தெறிகின்றான்.

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

அல்குர்ஆன் 39:65

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

அல்குர்ஆன் 6:88

இந்த முஸ்லிம்கள் மறுமையை, வேதத்தை, இறைத் தூதர்களை நம்புகிறார்கள். ஐந்து வேளை தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கிறார்கள்; ஹஜ் செய்கிறார்கள்; ஜகாத் கொடுக்கிறார்கள். எனவே இவர்களை எப்படி முஷ்ரிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இவர்களைப் பின்பற்றித் தொழலாம் என்ற வாதத்தை வைக்கின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

அல்குர்ஆன் 12:106

அல்லாஹ்வை நம்பிய ஒருவன் இணை கற்பித்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதைத் தான் இந்த வசனம் காட்டுகின்றது.

எனவே இணை வைக்கும் இமாம்களைப் பின்பற்றலாமா? என்ற ஆய்வுக்கே நாம் போக வேண்டியதில்லை. இணை வைக்கும் இந்த இமாம்கள், அல்லாஹ்வை மட்டும் ஈமான் கொள்கின்ற வரை அவர்களைப் புறக்கணிப்போம். அவனை மட்டும் தனித்துப் பிரார்த்திக்கின்ற வரை அந்த இமாம்களைப் பின்பற்றித் தொழவும் மாட்டோம்.

——————————————————————————————————————————————

ஹதீஸ் கலை ஆய்வு                சென்ற இதழின் தொடர்ச்சி…

கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை

குர்ஆனுக்கு ஒரு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் அதில் ஏதோ நமக்குத் தெரியாத பிழை ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளாமல் குர்ஆனிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். இந்தக் கருத்தை சிலர் மறுப்பதால் உண்மை நிலை எது என்பதைச் சென்ற இதழ்களில் விரிவாக, தெளிவாக எழுதியுள்ளோம். ஒரு ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அது போல ஹதீஸின் கருத்தும் சரியாக இருப்பது முக்கியம் என்பதை அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை முறையாகப் படித்தவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொள்வார்கள். இதற்கான சான்றுகள் சிலவற்றைக் காண்போம்.

இமாம் இப்னு ஹஜர்

ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நோன்பு வைத்தவராக இரத்தம் குத்தி எடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்ற போது “இவ்விருவரும் நோன்பை முறித்துக் கொண்டார்கள்என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதில் நோன்பாளிக்குச் சலுகை வழங்கினார்கள். அனஸ் நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: தாரகுத்னீ, பாகம்: 6, பக்கம்: 24

இப்னு ஹஜர் கூறுகிறார்கள்: இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியின் அறிவிப்பாளர்கள் என்றாலும் இச்செய்தியில் மறுக்கப்பட வேண்டிய அம்சம் உள்ளது. ஏனென்றால் இந்நிகழ்வு மக்கா வெற்றியின் போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. ஆனால் ஜஃபர் மக்கா வெற்றிக்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார்.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 4, பக்கம்: 178

ஜஃபர் (ரலி) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்பே போல் கொல்லப்பட்டு விட்டார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகு ஜஃபர் (ரலி) அவர்கள் உயிருடன் இருந்தார்கள் என்று தாரகுத்னீயில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் கூறுகிறது. எனவே இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியில் இடம்பெற்ற நம்பகமானவர்களாக இருந்தாலும் நிரூபிக்கப்பட்ட வரலாற்றுக்கு மாற்றமாக இருப்பதால் இதன் கருத்தை மறுக்க வேண்டும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.

(தாரகுத்னீயின் மேற்கண்ட அறிவிப்பில் இது மக்கா வெற்றியின் போது நடந்ததாகக் கூறப்படவில்லை. இப்னு ஹஜர் அவர்கள் எந்த அறிவிப்பின் படி இப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து அந்த ஹதீஸின் கருத்து தவறாக இருந்தால் அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற கருத்து இப்னு ஹஜர் அவர்களிடம் இருந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தவே இதைக் குறிப்பிடுகிறோம்.)

இமாம் நவவீ

நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 3570

இந்தப் பாடத்தில் ஷரீக் என்பார் அறிவிக்கும் இந்த ஹதீஸில் பல தவறுகள் உள்ளன. இவற்றை அறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள். “அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால்’ என்ற வார்த்தையை (கூறாமல்) சுருக்கிப் பதிவு செய்ததில் உள்ள தவறை இமாம் முஸ்லிம் சுட்டிக் காட்டுகிறார். “அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால்’ என்ற இந்த வார்த்தை தவறாகும். இதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் விண்ணுலகப் பயணம் தொடர்பாக (கூறப்படும் கால அளவில்) மிகவும் குறைவாகச் சொல்லப்படுவது என்னவென்றால் நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு தான் விண்ணுலகப் பயணம் செய்தார்கள் என்பதாகும். (ஆனால் இச்சம்பவம் விண்ணுலகப் பயணம் நடைபெறும் வரை வஹீ அருளப்படவில்லை என்று கூறுகிறது.) இன்னும் விண்ணுலகப் பயணத்தின் இரவின் போது தான் தொழுகை கடமையானது என்று அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படுவதற்கு முன்னால் தொழுகை எப்படி கடமையாக்கப்பட்டிருக்க முடியும்?

“விண்ணுலகப் பயணம் நடைபெறுவதற்கு முன்பு வரையும் அப்பயணத்தின் போதும் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை; மாறாக அப்பயணத்திற்குப் பின்பு தான் வஹீ அருளப்பட்டது” என்று இந்த ஹதீஸின் வார்த்தை உணர்த்துகிறது. இதனால் பெரும்பெரும் அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றிப் பேசாமல் உறுதி பெற்ற விஷயத்திற்கு இதன் கருத்து மாற்றமாக இருப்பதால் இதை மறுக்கிறார்கள்.

ஹதீஸைச் சரி காணுவதற்கு அறிவிப்பாளர் தொடரை மட்டும் பார்த்தால் போதும் என்றால் ஏன் இந்த அறிஞர்கள் ஹதீஸின் கருத்தைப் பார்க்க வேண்டும்? அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தால் மட்டும் போதாது. அதன் கருத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதையே அறிஞர்களின் இந்த வழிமுறை உணர்த்துகிறது.

இமாம் ஹாகிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவு மற்றும் பகல் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்துகள் தான். வித்ரு என்பது இரவின் கடைசியில் ஒரு ரக்அத் ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: திர்மிதி 543

இமாம் ஹாகிம் கூறுகிறார்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் உறுதிமிக்க நம்பகமானவரைத் தவிர வேறு யாரும் இல்லை. இதிலே பகல் என்ற வார்த்தையைக் கூறியிருப்பது தவறாகும்.

நூல்: மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம்: 1 பக்கம்: 94

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் அனைவரும் நல்லவர்கள் தான் என்று ஹாகிம் ஒத்துக் கொள்கிறார். மற்ற நம்பகமானவர்கள் பகல் என்ற வார்த்தையைக் கூறாமல் இரவு என்பதை மட்டும் கூறுவதால் பகல் என்ற வார்த்தை தவறுதலாக வந்துள்ளது என்று ஹாகிம் முடிவு செய்கிறார்.

இமாம் தஹபீ

  1. இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் என்பவர் கூறுகிறார்: அஹமது பின் ஹம்பல் அவர்கள் (என்னிடம்), “இந்த ஹாரிஸ் உங்களிடம் அதிகமான நேரம் இருக்கிறார். இவரை உங்கள் வீட்டிற்கு (ஒரு முறை) வரவழைத்து இவரது பேச்சைக் கேட்பதற்காக என்னை ஒரு இடத்தில் அமர வைக்கலாமே!” என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். ஹாரிஸும் அவரது மாணவர்களும் வந்து சாப்பிட்டு விட்டு இஷா தொழுதார்கள். பின்பு அவர்கள் சுமார் இரவின் பாதி வரை ஹாரிஸின் முன்பு அமைதியாக அமர்ந்தார்கள். அவர்களில் ஒருவர் கேள்வி கேட்டு ஆரம்பித்து வைத்தார். ஹாரிஸ் பேசத் தொடங்கினார். அவர்களுடைய தலையில் பறவை தங்கும் அளவிற்கு (கவனத்துடன் கேட்டார்கள்) ஹாரிஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களில் சிலர் அழுது விட்டார்கள். சிலர் திடுக்கத்திற்குள்ளானார்கள். அப்போது நான் மேல் அறைக்குச் சென்று அஹ்மத் இமாமைப் பார்த்த போது அவர்கள் மயக்கமுறுகிற அளவிற்கு அழுது கொண்டிருந்தார்கள். இவர்கள் சென்ற பிறகு அஹ்மத் அவர்கள் “நான் இவர்களைப் போன்று யாரையும் பார்த்தில்லை. இவரது பேச்சைப் போன்று எவரது பேச்சையும் கேட்டதில்லை” என்று கூறினார்கள்.

இமாம் தஹபீ கூறுகிறார்: இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட சம்பவம். ஆனாலும் மறுக்கப்பட வேண்டியது. எனது உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாது. அஹ்மத் போன்ற (பெரிய அறிஞரிடமிருந்து) இது போன்ற நிகழ்வு ஏற்படுவதை நான் அசாத்தியமானதாகக் கருதுகிறேன்.

நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம்: 1 பக்கம்: 430

ஹாரிஸ் என்பாரின் பேச்சில் சாதாரண மக்கள் மயங்குவதைப் போல் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்த அஹ்மத் இமாம் மயங்கினார்கள் என்று இச்சம்பவம் கூறுவதால் இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அஹ்மதின் தன்மைக்கு மாற்றமாக இருப்பதால் இதை ஏற்க மாட்டேன் என்று தஹபீ கூறுகிறார்.

ஞானத்தைத் தொலைத்து விட்ட அறிஞர்களே! இமாம் அஹ்மதை விட நபி (ஸல்) அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவர்களா? அஹ்மது இமாமின் கண்ணியத்தைப் பாதுகாக்க அவர்களின் செய்திக்கு இந்த அளவுகோல் என்றால் ஏன் உத்தமத் தூதரின் கண்ணியத்தைப் பாதுகாக்க இந்த அளவுகோலை கையில் எடுக்கத் தயங்குகிறீர்கள்?

  1. 2. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவர் சொல்கிறார்: எனது நண்பர் ஒருவர் பிரயாணியாக இருக்கும் போது மரணித்து விட்டார். அவருடைய மண்ணறையில் நானும் இப்னு உமர் அவர்களும் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களும் இருந்தோம். (அப்போது) எங்களுடைய பெயர் அல்ஆஸ் என்றிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களது பெயர் அப்துல்லாஹ்வாக இருக்கும் நிலையில் இவரது கப்ரில் இறங்குங்கள்என்று எங்களுக்குக் கூறினார்கள். நாங்கள் எங்களது சகோதரரை அடக்கம் செய்துவிட்டு எங்கள் பெயர் மாற்றப்பட்ட நிலையில் மேலே ஏறி வந்தோம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்

நூல்: பைஹகீ, பாகம்: 9, பக்கம்: 307

இமாம் தஹபீ கூறுகிறார்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய கருத்தாகும். (ஏனென்றால்) இப்னு உமர் அவர்களின் பெயர் ஹிஜ்ரீ ஏழு வருடத்திற்குப் பிறகு வரை மாற்றப்படாமல் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கிறது. இக்கருத்து ஏற்கத் தகுந்ததல்ல.

நூல்: சியரு அஃலாமின் நுபலா, பாகம்: 3, பக்கம்: 209

இப்னு உமர் (ரலி) அவர்களின் பெயர் ஹஜ்ரீ 7 வரை மாற்றப்படவில்லை என்பது தவறான கருத்து. இந்தக் கருத்தை மேலுள்ள ஹதீஸ் சொல்வதால் இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தஹபீ கூறுகிறார்.

இது போன்று அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் ஹதீஸின் கருத்தில் பிழை இருப்பதால் பல ஹதீஸ்களை தஹபீ மறுத்துள்ளார். இதைப் பின்வரும் செய்திகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

  1. ஹாகிமில் 1868வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ அவர்கள் பின்வருமாறு விமர்சனம் செய்கிறார்.

மரண வேளையில் தவித்துக் கொண்டிருந்த எனது உறவினருக்கருகில் நான் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்த கவலையைப் பார்த்த போது “உனது உறவினருக்காக நீ கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்தச் சிரமமும் அவரது நன்மைகளில் ஒன்றாகி விடுகிறதுஎன்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: இப்னு மாஜா 1441

தஹபீ கூறுகிறார்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் நம்பகமானவர்கள் என்றாலும் இது மறுக்கப்பட வேண்டிய செய்தி.

நூல்: தத்கிரதுல் ஹுஃப்பாள், பாகம்: 2, பக்கம்: 688

  1. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (குறையை விட்டும்) தூய்மையாக இருப்பதுடன் இது மறுக்கப்பட வேண்டிய செய்தியாகும். இது இட்டுக்கட்டப் பட்டதாக இருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன்.

நூல்: தல்ஹீஸுல் முஸ்தத்ரக், பாகம்: 1, பக்கம்: 506, 507

  1. ஹாகிமில் 3387வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.

இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக உள்ளது. செய்தி மறுக்கப்பட வேண்டியதாக உள்ளது.

நூல்: தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம்: 2 பக்கம்: 366, 367

  1. ஹாகிமில் 4640 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்ட செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.

இந்த ஹதீஸை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டியது. இட்டுக்கட்டப்பட்ட வகையை விட்டும் தூரமானதாக இது இல்லை.

நூல்: தல்ஹீஸுல் முஸ்தத்ரக், பாகம்: 3, பக்கம்: 127, 128

  1. ஹாகிமில் 6738வதாகப் பதிவுசெய்யப்பட்ட ஹதீஸை அதன் கருத்தைக் கவனித்து மறுக்கிறார்.

இதன் அறிவிப்பாளர் தொடர் தரமாக இருப்பதுடன் இது மறுக்கப்பட வேண்டியதாகும்.

  1. ஹாகிமில் 7048வதாகப் பதிவாகியுள்ள செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.

இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய ஹதீஸாகும்.

நூல்: தல்ஹீஸுல் முஸ்தத்ரக், பாகம்: 4, பக்கம்: 99

இமாம் அல்பானியின் பார்வை

  1. எனது சமுதாயத்தில் அப்தால்கள் (என்ற நல்லடியார்களை அறிந்து கொள்வதற்கான) அடையாளம், அவர்கள் யாரையும் எப்போதும் சபிக்க மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்தில் பர் என்பவர் கிதாபுல் அவ்லியா என்ற தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அல்பானீ அவர்கள் குறைகளைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இதன் கருத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு குறை காணுகிறார். ஹதீஸைச் சரி காணுவதற்கான இரண்டு அளவுகோலையும் இங்கே அல்பானீ பயன்படுத்துகிறார்.

எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி இந்தச் செய்தி மோசமான கருத்தைக் கொண்டதாக உள்ளது. ஏன்? இது இட்டுக்கட்டப்பட்டது (என்று கூட சொல்லலாம்). ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பல முறை சபித்துள்ளார்கள். இதை அவர்களே பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். (நபியவர்கள் சபித்ததாக வரும்) பல ஹதீஸ்களை இன்னொரு சில்சிலாவில் நான் பதிவு செய்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட இந்த அப்தால்கள் (நல்லடியார்கள்) முழுமையடைந்தவர்களா?

நூல்: சில்சிலதுல் லயீஃபா, பாகம்: 3, பக்கம்: 474

ஹதீஸின் கருத்தைப் பார்க்கக் கூடாது என்பது ஹதீஸ் கலையின் விதியாக இருக்குமானால் எந்த ஹதீஸையும் அதன் கருத்தைக் கவனித்து விமர்சிப்பது கூடாது என்று கூற வேண்டும்.  ஆனால் அறிஞர்கள் அவ்வாறு செய்யவில்லை.  குறையுள்ள தொடரைக் கொண்ட செய்திக்கும் குறையில்லாத தொடரைக் கொண்ட செய்திக்கும் இந்த அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இப்னு சய்யிதின்னாஸ்

நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது ஆபூதாலிபுடன் ஷாம் நாட்டிற்குக் கூட்டமாக வியாபாரத்திற்காகச் சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு பாதிரியார் நபி (ஸல்) அவர்களின் தன்மைகளைக் கவனத்தில் கொண்டு இவர் நபியாவார் என்ற தகவலை அவர்களுக்கு அறிவித்தார். ரோம் நாட்டிற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றால் அவர்கள் நபியைக் கொன்று விடுவார்கள் என்பதால் அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினார். ரோம் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களை அழைத்துச் செல்வதற்காக ஏழு நபர்கள் அங்கு வந்தார்கள். அவர்களுடன் நபியவர்களை அனுப்புவதற்கு அபூதாலிப் ஒத்துக் கொண்டார். அபூபக்ர் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிலாலை அனுப்பினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)

நூல்: திர்மிதி 3553, ஹாகிம் பாகம்: 1, பக்கம்: 672

இவ்வாறு திர்மிதி, ஹாகிம் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சய்யித் அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாவிட்டாலும் இதன் கருத்தில் குறை உள்ளது என்று கூறுகிறார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. இத்துடன் இந்த செய்தியில் தவறான கருத்து உள்ளது. நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்கர் பிலாலை அனுப்பினார்கள் என்பதே அந்தத் தவறாகும். அபூபக்கர் அன்றைக்குப் பத்து வயதைக் கூட அடையாமல் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்?

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரை விட இரண்டு வயது மூத்தவர்கள். தப்ரீ போன்றோரின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களுக்கு அன்றைய நேரத்தில் வயது ஒன்பதாக இருந்தது. மற்றவர்களின் கூற்றுப்படி 12 ஆக இருந்தது. மேலும் பிலால் அவர்கள் இச்சம்பவம் நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு தான் அபூபக்ரின் பொறுப்பில் வருகிறார். (ஆனால் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருக்கும் போதே அபூபக்ரின் பொறுப்பில் பிலால் இருந்ததாக உள்ளது.)

இதற்கு முன்பு பிலால், பனூஹலஃப் என்ற கூட்டத்தாரிடம் இருந்தார். இஸ்லாத்திற்காக பிலால் அல்லாஹ்வின் விஷயத்தில் கொடுமை செய்யப்பட்ட போது அவர் மீது இரக்கப்பட்டும், அவரை அவர்களின் கையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் அபூபக்கர், பிலாலை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார்.

நூல்: உயூனுல் அஸர், பாகம்: 1, பக்கம்: 105

ஒரு ஹதீஸைச் சரி காணுவதாக இருந்தால் அதன் தொடர் மற்றும் தகவல் ஆகிய இரண்டையும் உரசிப் பார்க்க வேண்டும் என்பதை அறிஞர்களின் இந்தக் கூற்றுக்கள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேற்கண்ட செய்திகள் அல்லாமல் இன்னும் இது போன்று அறிஞர்கள் பல இடங்களில் நடந்துள்ளார்கள். இதனடிப்படையில் நம்பகமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்ற செய்திகளில் உள்ள பிழையினால் அச்செய்தி மறுக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பும் வழங்கியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்களை எடை போடுவது கூட செய்தியைச் சரி காணும் நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதனால் தான் பல அறிவிப்பாளர்களுக்கு அவர்கள் அறிவிக்கும் செய்திகளைக் கவனித்து வலிமையானவர் என்றும் மோசமானவர் என்றும் அறிஞர்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.

ஒரு அறிவிப்பாளர் நல்லவராக இருந்தாலும் அவர் வழியாகப் பல மோசமான தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் இவர் மோசமான செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என்று கூறி அவரை நிராகரித்து விடுவார்கள். அதே நேரத்தில் மற்றவர்கள் அறிவிப்பதைப் போல் கூட்டாமல் குறைக்காமல் ஹதீஸ்களை அறிவித்தால் அவர் உயர்ந்த மனனத்தன்மை கொண்டவர் உறுதி மிக்கவர் என்று தீர்ப்பு சொல்வார்கள்.

இதிலிருந்து அறிஞர்கள் ஹதீஸின் கருத்தைக் கவனிப்பதில் எவ்வளவு அக்கரைக் காட்டியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.