ஏகத்துவம் – ஜனவரி 2018

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை

கொல்லப்படும் முஸ்லிம்கள்! கொதிக்கும் நடுநிலையாளர்கள்!

2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரைச் சார்ந்த அஃப்சல் குருவுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறு அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. அது அரசாங்கம் ஒரு முஸ்லிம் மீது நடத்திய படுகொலை என்றே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்லாது நடுநிலைவாதிகளும் பார்த்தனர்.

காவல்துறையினர் அஃப்சல் குருவின் உண்மையான வாக்குமூலத்தை மறைத்து, அவரை சித்திரவதை செய்து தங்களுக்கேற்ற வகையில் வாக்குமூலத்தை வாங்கிக் கொள்கின்றனர். முறையான நீதிமன்ற விசாரணையும், சட்ட உதவியும் அவருக்கு மறுக்கப்படுகிறது.

காவல்துறை சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், அவருக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இவ்வாறு ஒப்புக் கொண்ட நீதிமன்றம் அஃப்சல் குருவை விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு விடுதலை செய்யவில்லை. மாறாக, மரண தண்டனை விதிக்கப்பட்டால் தான் இந்திய சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும் என்று கூறி அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

இது ஒரு திட்டமிட்ட படுகொலையாகும். இந்திய காவல்துறை, அரசுத் துறை, மனு சாத்திர மனப்பான்மை கொண்ட சாதிய நீதித்துறை அத்தனையும் கூட்டாகச் சேர்ந்து, தங்களது இந்துத்துவ சிந்தனையை முழுமையாக வெளிப்படுத்தி, கூட்டு மனசாட்சி என்ற குருட்டுத் தத்துவத்தின் அடிப்படையில் அஃப்சல் குருவை திகார் சிறையில் 09.02.2013 காலை 7.56 மணிக்கு தூக்கிலிட்டுக் கொன்று தீர்த்தார்கள்.

அஃப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட இந்தத் தண்டனை ஓர் அநியாயமான தண்டனை என்பதால் தான் சமூக நல ஆர்வலர்  அருந்ததி ராயும், சிவில் குடியுரிமை அமைப்புக்களும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு போராடினர்.

இதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, உலக மகா பொய்யர் மோடி தலைமையிலான பாசிச பிஜேபி ஆட்சிக்கு வந்தது.

2014ல் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்கள், முஸ்லிம் என்பதற்காக அடித்தே கொல்லப்படுகின்றார்கள்; அல்லது எரித்துக் கொல்லப்படுகின்றார்கள்.

பாசிச சங்கப்பரிவாரங்கள் மாட்டின் பெயரால் அடித்துக் கொன்றார்கள். வீடுகளைத் தீக்கிரையாக்கினார்கள். முஸ்லிம்கள் மட்டுமின்றி தலித்துகளையும் அடித்துக் கொல்கின்றார்கள்.

அவர்களால் தாக்குதலுக்குள்ளானவர்கள், அடித்துக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் ஆடிய அராஜக வன்முறை வெறியாட்டங்களைப் பற்றிய பட்டியலைப் பார்ப்போம்.

  • ஜூன் 2014, முஹ்சின் சாதிக் சேக், வயது 24 – புனேவில் கொல்லப்பட்டார்.
  • மார்ச் 2015, செய்யது ஷரீபுத்தீன் கான், நாகலாந்தில் மாட்டுக்காக ஒரு கும்பலால் கொல்லப்பட்டார்.
  • 2015ஆம் ஆண்டு, மே 30ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டிற்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்று கூறி தாத்திரியில் 70 வயதான முகம்மது அக்லக் என்ற முதியவரை பசுக் குண்டர்கள் அடித்துக் கொன்றார்கள்.
  • 2015ஆம் ஆண்டு, அக்டோபர் 9ம் தேதி, காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார்.
  • 2015ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், உதம்பூர் தாக்குதல் நடந்த 10 நாட்களுக்குப் பிறகு, அதைக் கண்டித்து காஷ்மீர் மாநிலத்தின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் அப்துர்ரஷீது என்பவர் மீது கருப்பு மை ஊற்றித் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • அக்டோபர் 2015 ல் ஹிமாச்சல் பிரதேசத்தில் நோமன் அக்தார், வயது 28, மாட்டிறைச்சிக்காகக் கொல்லப்பட்டார்.
  • மணிப்பூரில் நவம்பர் 2015, முஹம்மது ஹம்சாத் அலி, வயது 55, அதே காரணத்திற்காகக் கொல்லப்படுகின்றார்.
  • 2016, ஜனவரி 13ல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகப் பொய் சொல்லி கணவர் மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது
  • 2016 ஆம் ஆண்டு மார்ச் 18ல் ஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளைக் கொண்டு சென்றதாகக் கூறி முஹம்மது மஜ்லூம், வயது 35, மற்றும் முஹம்மது இனாயத்துல்லாஹ் கான், வயது 12, முஸ்லிம் இளைஞர்களை பசுக் குண்டர்கள் சிறை பிடித்தனர். கொடூரமாகத் தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரையும் தூக்கிட்டுப் படுகொலை செய்தனர்.
  • 2016ஆம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி, ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக வேறு மாநிலத்திற்கு மாடுகளைக் கொண்டு சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவர் கொல்லப்பட்டார்.
  • 2016ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 2ம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
  • 2016ஆம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி, ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 2 பேரை மாட்டு சாணத்தை உண்ண வைத்தனர்.
  • 2016ஆம் ஆண்டு, ஜூலை 15ல் குஜராத்தில் உள்ள ஊனாவில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
  • 2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 18ம் தேதி, கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுவின் பெயரால் பசுக் குண்டர்களால் கொல்லப்பட்டார்.
  • 2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 24ல் ஹரியானா மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
  • 2016ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வாரில் பெஹ்லுகான் அடித்துக் கொல்லப்படுகின்றார். பெஹ்லுகான் வாகனத்தில் பண்ணைக்காக மாடுகளை எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களைக் காட்டிய பிறகும் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஏப்ரல் 2017, அஸ்ஸாம் மாநிலத்தில் அபூ ஹனீஃபா மற்றும் ரியாசுத்தீன் அலி
  • மே 2017, ஜார்க்கண்டில் முன்னா அன்சாரி வயது 39
  • ஜூன் 2017, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாஃபர் ஹுசைன்
  • ஜூன் 2017ல் மேற்கு வங்கத்தில் நஸீருல் ஹக், முஹம்மது சமீருத்தீன், முஹம்மது நசீர் ஆகியோர் கொல்லப்படுகின்றார்கள்.
  • 2017ஆம் ஆண்டு, ஜூன் 23ல் தில்லி அருகில் மாட்டிறைச்சியைக் கொண்டு சென்றதாகக் கூறி 3 பேர் தாக்கப்பட்டனர். ஜுனைத் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
  • 2017, ஜுன் 28ம் தேதி, ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமியரின் வீட்டின் அருகில் பசுவின் தலை கிடந்தது என்று கூறி அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

இவை அனைத்தும் மாட்டின் பெயரால் நடந்த படுகொலைகள், தாக்குதல்கள் ஆகும். அதிலும் குறிப்பாக கடந்த மே மாதம் மாடுகள் விற்பனைக்குத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அது பாசிச பசுக் குணடர்களுக்கு முரட்டுத் தனமான தைரியத்தையும் சட்டத்தைக் கையில் எடுக்கின்ற கண் மூடித்தனமான துணிச்சலையும் கொடுத்தது. இதை பாசிச சக்தியின் தலைவன் மோடி கண்டு கொள்ளவே இல்லை.

மாட்டின் பெயரால் ஆடிய வேட்டையின் போதும், வெறித்தனத்தின் போதும் துடிதுடிக்க செத்து வீழ்ந்தவர்களின் பிணங்களிலிருந்து கொப்பளித்துத் தெறித்த இரத்தத் துளிகளின் ஈரம் காய்வதற்கு முன்னாலே ராஜஸ்தான் மாநிலம் ராம்சமந்த் மாவட்டத்தில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் சம்புலால் ரெய்கார் என்ற இந்துத்துவா வெறி நாய், வேட்டை நாய் ஒருவன், 50 வயதான அஃப்ரசுல் கான் என்ற பாட்டாளித் தொழிலாளி முஸ்லிமை விறகு பிளக்கும் கோடரியாலேயே கொடூரமாகக் கொத்திக் குதறி, உயிருடன் தீ வைத்துக் கொளுத்திக் கொன்றிருக்கின்றான். இதில் வேதனை என்னவென்றால் கோடரி கொண்டு கொல்கின்ற அந்தக் கோரக் காட்சியை அந்த வெறி நாயின் உறவினன் 14 வயதுச் சிறுவன் மொபைல் வீடியோவில் பதிவு செய்கின்றான். அது சமூக வலை தளங்களில் பதிவும் செய்யப்படுகின்றது.

ஒரு பெண்ணை லவ் ஜிஹாதிலிருந்து காப்பாற்றுவதற்காகவும், றிரி (இந்தி சினிமா)படத்தைப் போன்று திரைப்படங்களில் இரு மதங்களைச் சார்ந்தவர்களின் காதல் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்பதற்காகவும், இந்த கோரக் கொலையைச் செய்ததாகவும் சம்புலால் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றான். அதில் பத்மாவதி திரைப்படத்தையும், பாபரி மஸ்ஜித் விவகாரத்தையும் பேசுகின்றான். அந்தக் கொலையைச் செய்வதற்கு அவன் தேர்வு செய்த நாள், இந்தியாவில் வாழுகின்ற 20 கோடி முஸ்லிம்களின் இதயங்களில் வேல் பாய்ச்சி, பாபரி மஸ்ஜிதை வீழ்த்திய நாளாகும்.

அந்த டிசம்பர் நாளில் படுகொலை செய்யப் பட்ட 50 வயது நிறைந்த அஃப்ரசுல் கானுக்கும், லவ் ஜிஹாதுக்கும் எள்ளளவும் எள்முனையளவும் சம்பந்தமே இல்லை. அவருக்குச் சொந்த ஊர் மேற்கு வங்காளம் மால்டா மாவட்டம் சய்யித் பூர் கிராமத்தைச் சார்ந்தவர். அவருக்கு 3 பெண் குழந்தைகள். 2 பெண் குழந்தைகள் கல்யாணம் முடிக்கப்பட்டுள்ளனர். 80 வயதில் ஒரு தாயார் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றார். 20 வருடமாக ராஜஸ்தானில் கூலித் தொழில் செய்து நாளொன்றுக்கு 500 அல்லது 600 சம்பாதிப்பவர்.

இந்த வருவாய், தனது மனைவி, மக்களின் குடும்பச் செலவுக்கும், படுக்கையில் கிடக்கும் 80 வயது தாயாரின் மருத்துவச் செலவுக்கும் போதாத நிலையில் அன்றாட வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு பாட்டாளி. இவர் இந்நிலையில் எந்தப் பெண்ணைக் காதலிக்கப் போகின்றார்? அல்லது இவரை இந்த வயதில் எந்தப் பெண் காதலிக்கப் போகின்றாள் என்ற சிந்தனை கூட இல்லாமல் அந்தக் காண்டுமிராண்டி கொன்றிருக்கின்றான். இதையெல்லாம் பார்க்கும் போது நாட்டில் வாழ்கின்றோமா? மிருகங்கள் வாழ்கின்ற காட்டில் வாழ்கின்றோமா? என்று எண்ணத் தோன்றுகின்றது.

சரி! கொல்லப்பட்டு விட்டார். இந்துத்துவா வெறியன் ஷம்புலால் ரெய்காரும், அவன் உறவினனும் உடன் கைது செய்யப்பட்டு விட்டார்கள். சட்டம் தன் கடமையைச் செய்கின்றது என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது அந்த நம்பிக்கையிலும் அடி விழுந்தால் பரவாயில்லை. இடியே விழுகின்றது. ஆம்! முதல் நோக்கில், குற்றவாளி மனநிலை சரியில்லாதவராகத் தெரிகின்றார் என்று கூறும் மாநில காவல்துறைத் தலைவர் ஓ.பி. கல்ஹோத்ரா இந்த வழக்கு கிடப்பிலும், கிணற்றிலும் போடப்பட்டு விட்டது என்ற மாநில இந்துத்துவா அரசின் முடிவை பகிரங்கமாகப் போட்டு உடைக்கின்றார்.

இதே செயல் ஒரு முஸ்லிமால் செய்யப் பட்டிருந்தால் இந்துத்துவா சக்திகள் ராஜஸ்தான் மாநிலத்தை ரணகளப்படுத்தி, ஒரு வகுப்புக் கலவரத்தை உருவாக்கி, முஸ்லிம் சமுதாயத்தை நரவேட்டை ஆடியிருப்பார்கள். அப்போது காவல் துறை தன் பங்கிற்கு முஸ்லிம்களை வேட்டையாடி சிறையில் கொண்டு போய் தள்ளியிருக்கும். ஆனால் கொல்லப்பட்டவர் ஒரு முஸ்லிம் என்பதால் அந்த உயிர் கிள்ளுக்கீரை போல் ஆகி விட்டது.

இந்தக் கொடூரக் கொலை விவகாரமாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், இந்துத்துவாவின் ஊதுகுழல், முக்தார் அப்பாஸ் நக்வி என்ற முஸ்லிம் பெயர் தாங்கி, அஃப்ரசுல் கான் கொலையை மதரீதியில் தூண்டப்பட்ட கொலையாகப் பார்க்கக் கூடாது; ஒரு தனி நபர் செய்த குற்றச் செயலாகத் தான் பார்க்க வேண்டும் என்று கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கின்றார்.

ஆனால் திரிபுராவின் இந்துத்துவா ஆளுநர் ததஹாட்டா ராய், அது மத ரீதியிலான கொலை தான் என்று வக்காலத்து வாங்குகின்றார். ‘உலக முழுவதிலும் ஜிஹாதிகள், பல்லாயிரக் கணக்கானோரைக் கொலை செய்து, உடல்களைத் துண்டித்து, சிதைத்து, சின்னபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதை நீ கேட்க மறுக்கின்றாய். ஓர் ஆளைக் கொன்றதைப் போய் கேட்கின்றாய்’ என்று டிவிட்டரில் ஒரு பெண் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கின்றார்.

ஜிஹாதிகளை எப்படி தடுத்து நிறுத்துவது? என்று திரிபுரா ஆளுநர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு அந்தப் பெண், ராஜஸ்தானில் கொலை செய்தானே அந்த பைத்தியக்காரன் என்ன ஜிஹாதியா? என்று கேட்டிருந்தார். அதற்கு தான் இப்படிப்பட்ட பதிலை இந்துத்துவா வெறிபிடித்த ஆளுநர் இந்தப் பதிலைச் சொல்லியிருக்கின்றார். அப்படியானால் இவர்களின் மனநிலை எப்படியிருக்கின்றது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே இவர், இந்து முஸ்லிம் பிரச்சனை தீர வேண்டுமானால் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட வேண்டும் என்று சொன்னவர். அதாவது முஸ்லிம்களைக் கருவறுக்க வேண்டும் என்று குறிப்பிட்டவர். ராஜஸ்தான் கொலையும் இந்த நோக்கில் தான் நடத்தப்பட்டது என்பது இவரது பதிவிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.

உதிரத்தை உறைய வைக்கின்ற அடுக்கடுக்கான கொலைகள் நாடெங்கிலும் உள்ள முஸ்லிம்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. முஸ்லிம்கள் கொள்கின்ற கவலையிலும், கண்ணீரிலும், கொந்தளிப்பிலும், கொதிப்பிலும் நியாயமிருக்கின்றது.

முஸ்லிம்கள் ஒன்றை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும். மாட்டின் பெயராலும் லவ் ஜிஹாதின் பெயராலும் முஸ்லிம்களை அடித்து, எரித்துக் கொல்வது நாட்டில் மனசாட்சி உள்ள நடுநிலையான மக்களின் மனக் கதவுகளைத் தட்டி, ஏன் முஸ்லிம்களை இப்படிக் கொல்கின்றார்கள்? என்று அவர்களின் சிந்தனைப் பொறிகளை இஸ்லாத்தின் பக்கம் திருப்பி உள்ளது என்பது தான் அந்த ஆறுதலாகும்.

முஸ்லிம்களை இவர்கள் ஏன் அழிக்க நினைக்கின்றார்கள்? அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.

இந்துத்துவாவின் பிராண வாயுவே சாதிய அடக்குமுறை தான். அந்த சாதிய அடக்குமுறையை அடியிலிருந்து பிடுங்கி அதை அதள பாதாளத்தில் தள்ளி அழித்து விடுகின்ற அபார சக்தி உலகில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மட்டுமே உள்ளது.

நேற்று வரை பள்ளன், பறையன் என்று தூற்றப்பட்டவன் இஸ்லாம் மார்க்கத்தில் நுழைந்த மாத்திரத்தில் அந்த சாதி அடையாளமே அவனை விட்டு மறைந்து போகின்றது. அவன் பரம்பரை முஸ்லிம்களின் சகோதரனாகவும், அவர்களுக்குச் சரிநிகர் சமமானவனாகவும், சம்பந்தம் பண்ணுகின்ற மாப்பிள்ளையாகவும் ஆகிவிடுகின்றான். அதற்குக் காரணம் உயிர் துடிப்புடன் உள்ள திருக்குர்ஆன் தான். இதோ அந்தத் திருக்குர்ஆன் முழங்குகின்றது.

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 49:13

திருக்குர்ஆன் சங்கநாதம் செய்கின்ற இந்த சகோதரத்துவம், சமத்துவம் கிறிஸ்துவத்திலும் கிடையாது. ஏனைய எந்த மதங்களிலும் கிடையாது.

அப்படி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு தன் வயப்படுத்துகின்ற இந்த சகோதரத்துவம், சமத்துவம் தங்களது சாதிய சனாதனத்திற்கு சமாதிகட்டி விடும்; மனிதனை மனிதனுக்கு அடிமையாக்குகின்ற தங்களின் மனு தர்ம சாத்திரத்தில் மண்ணள்ளிப் போட்டு விடும் என்று இந்துத்துவா சக்திகள் கதி கலங்குகின்றனர்.

அதனால் தான் இஸ்லாத்தை இந்த நாட்டை விட்டும் தடம் தெரியாமல், தடயம் தெரியாமல் அழித்து விட வேண்டும் என்று துடிக்கின்றார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள்; கருவறுத்துத் தள்ளுகின்றார்கள். இதன் மூலம் இஸ்லாம் இந்த மண்ணை விட்டும் அழிந்து விடும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

ஆனால் அது அவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாற்றமாக எதிர் வினையாற்றி, நடுநிலையாளர்களை இந்த இஸ்லாத்தின் பக்கம் திரும்ப வைக்கின்றது. இறுதியில், இஸ்லாம் அவர்களைத் தன் பக்கம் ஈர்த்தே விடுகின்றது. அந்த நாள் இன்ஷா அல்லாஹ் வெகு தொலைவில் இல்லை.

வரப் போகும் இந்த வெற்றியைத் தங்களது வேதனைக்கு அருமருந்தாகவும், ஆறுதலாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இவர்கள் ஒரு கணக்குப் போடுகின்றார்கள். இறைவன் வேறொரு கணக்குப் போட்டு இவர்களின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போட்டு விடுகின்றான். அந்த நாளுக்காக முஸ்லிம்கள் பொறுமையுடன் காத்திருப்பார்களாக!

திருக்குர்ஆன் கூறும் சகோதரத்துவ, சமத்துவத்தை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காகத் தான் இன்ஷாஅல்லாஹ் 2019, ஜனவரி 27ல் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது. அதற்காக இன்றே நமது பணிகளைத் துவக்குவோமாக!


தீண்டாமைக்குத் தீர்வு  திருக்குர்ஆன் மட்டுமே!

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு, ஜனவரி 27ல் நடைபெறவுள்ள திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு, பிற சமுதாய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏகத்துவ மாத இதழ் ஆக்கங்களை வெளியிட உள்ளது.

அதன் அடிப்படையில் இந்த இதழில் “தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!” என்ற தலைப்பில், பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகின்ற தீண்டாமையின் கொடுமை, பொருளாதார ரீதியில் ஏற்படுகின்ற தீண்டாமை, ஆட்சி அதிகார ரீதியில் ஏற்படுகின்ற தீண்டாமை, பல்வேறு சமூகக் காரணிகளால் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றையும் அவை அத்தனைக்கும் திருக்குர்ஆன் அளிக்கும் தீர்வையும் பார்க்கவிருக்கின்றோம்.

சாதியப் படுகொலைகள்

டிசம்பர் 25, 1968. காவிரிக் கரையின் சரித்திரத்தில் காலத்துக்கும் அழியாத ரத்தக்கறை படிந்த நாள்.

தஞ்சை, கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் 44 தலித்துகள் ஒரே குடிசைக்குள் வைத்து தீமூட்டிக் கொன்றழிக்கப்பட்ட நாள்.

கருகி இறந்தவர்களில் 19 பேர் குழந்தைகள் என்பது அந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்களிடம் நிறைந்திருந்த குரூரத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

பண்ணையார்களின் வீட்டிலிருந்து அதிகாலை மூன்று மணிக்குக் கொம்பு ஊதப்படும். உடனே பண்ணையில் அடிமைகளாக இருக்கும் தலித்துகள் எழுந்து, ஏர் மாட்டைப் பூட்டிக்கொண்டு வயலுக்குக் கிளம்பிவிட வேண்டும். நாலரை மணிக்குள் உழவைத் தொடங்கியாக வேண்டும். காலைக் கஞ்சி பதினோரு மணிக்கு. அதன் பிறகு, இரவு எட்டு மணி வரை மற்ற வயல் வேலைகளைப் பார்த்துவிட்டுத்தான் குடிசைக்குத் திரும்ப வேண்டும். அந்தக் குடிசையும்கூட பண்ணையார் ஒதுக்கித்தந்த இடத்தில்தான்.

இந்த எழுதப்படாத விதிமுறைகளை மீறும் தொழிலாளிகளைத் தண்டிப்பதற்கென்றே கொடுமையான தண்டனை முறைகள் வழக்கத்தில் இருந்தன. அதில் ஒன்று சாணிப்பால்.

மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் குழலில், சாணத்தைக் கரைத்து குடிக்கச் செய்வார்கள். சாட்டையின் பிரிகளுக்கு நடுவில் கூழாங்கல்லை வைத்து ரத்தம் சொட்டச் சொட்ட அடிப்பது, சுட்டுப் பொசுக்கும் மணலில் ஒற்றைக் காலில் நிற்கவைப்பது, கால்களுக்குக் கிட்டிப் போடுவது என்று உடலை வதைக்கச் செய்யும் பல்வேறு கொடுமைகளை இழைப்பதே தினசரி நிகழ்வாயிருந்தது.

1937 டிசம்பரில் நீடாமங்கலத்தில் நடந்த தென்தஞ்சை மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சமபந்தி போஜனத்தில் சாப்பிட்டார்கள் என்பதற்காக நிலவுடைமையாளர்கள் தலித்துகளை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். அவர்களின் தலையை மொட்டையடித்து, வாயில் சாணிப்பால் ஊற்றினார்கள்.

இறுதியாக 1968ம் ஆண்டு கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்ற காரணத்திற்காக 44 தலித்துக்களை, உயர்ஜாதி நிலச் சுவான்தார்கள் எரித்துக் கொன்ற நாள் தான் டிசம்பர் 25.

1991ல் ஆந்திர மாநிலம், டி சுண்டூரில் ஒரு திரையரங்கில் ஒரு தலித் சிறுவனின் கால் உயர் சாதியான ரெட்டியார் ஒருவரின் மேல் பட்டுவிடுகின்றது. இதன் பின்னணியில் 1991, ஆகஸ்ட் 6ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் 8 தலித்துகள் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்படுகின்றார்கள். அவர்களின் உடல்கள் சாக்குப் பையில் போடப்பட்டு துங்கப்பத்ரா நதியில் வீசப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 212 பேர் கைது செய்யப்படுகின்றார்கள். 56 பேருக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது.

இறுதியில், 2014ல் ஆந்திர உயர்நீதி மன்றத்தின் மூலம் வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர்களும் விடுதலை செய்யப்படுகின்றார்கள். இந்தக் கலவரத்தின் போது அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த தலித் டாக்டர் ரவிகுமார், தங்கள் சமுதாயத்தவர்கள் கருவறுக்கப்படுகின்ற காட்சியைத் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றார். அந்த அளவுக்கு உயர் சாதிக்காரர்களின் சாதிவெறி எல்லை மீறிச் சென்றது.

2002ஆம் ஆண்டு, அக்டோபர் 15, ஹரியானா மாநிலத்திலுள்ள துலினி கிராமத்தில், இறந்து விட்ட மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக 5 தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.

2006ஆம் ஆண்டு, செப்டம்பர் 29 அன்று மகராஷ்ட்ரா மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள கைர்லாஞ்சியில் நான்கு தலித்துக்கள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். யாரால்? பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால்!

ஏன் இந்த மிருக வெறித் தாக்குதல்? இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கின்றதா என்று கேட்க வைக்கும் இந்தக் கோரச் சம்பவம் எதற்காக நடைபெற்றது?

பையா லால் போட்மாங்கே என்பவரின் மனைவி சுரேகா (வயது 45), மகள் பிரியங்கா (வயது 17), மகன்கள் ரோஷன் (23), சுதீர் (21) ஆகிய நால்வரும் படிப்பறிவு பெற்றுள்ளனர். இதுதான் இந்த தலித்துகள் செய்த பாவமாகும். இதுதான் கொலையாளிகள் இவர்களைக் கொல்வதற்குக் காரணம் என்று நாம் சொல்லவில்லை. 20.11.06 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான தலையங்கம் இதைத் தான் தெரிவிக்கின்றது. தினமணியில் நீரஜா சவுத்ரி என்ற கட்டுரையாளர் கூறுவதையும் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.

தலித் சமூகத்தில் மஹர் பிரிவைச் சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தினர் ஓரளவுக்கு வசதியானவர்கள்; படிப்பறிவு பெற்றவர்கள். அக்கிராமத்தில் குன்பி மராத்தா என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கின்றனர். அவர்களில் சிலர் மீது போட்மாங்கேவின் மனைவி சுரேகா அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார். இதனால் குன்பி மராத்தா சமூகத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்கள் அவர் மீது கோபமாக இருந்தனர்.

செப்டம்பர் 29ஆம் தேதி இரவு போட்மாங்கே வீட்டில் இல்லாத போது அவர்களது வீட்டிற்குக் குடிபோதையில் சிலர் வந்துள்ளனர். சுரேகாவையும், அவருடைய மகள் பிரியங்கா, மகன்கள் ரோஷன், சுதீர் ஆகியோரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். இரும்புக் கம்பிகளாலும், சைக்கிள் செயின்களாலும் அவர்களை அடித்தனர். இரு பெண்களையும் நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்து வந்தனர். பிறகு அடித்துக் கொன்று விட்டு கிராமத்துக்கு வெளியே சடலங்களைப் போட்டு விட்டனர். இரு பெண்களும் கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீடு திரும்பிக் கொண்டிருந்த போட்மாங்கே வேதனையுடனும், அச்சத்துடனும் அந்த அக்கிரமங்களை ஒரு புதரின் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கிராம நிர்வாகமும், காவல்துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசும் மெத்தனமாகவே இருந்தது.

(தினமணி 5.12.06)

செப்டம்பர் 11, 2011 அன்று தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளின் போது பரமக்குடியில் வெடித்த கலவரத்தில் 6 தலித்துகள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார்கள். அதற்குப் பதிலடியாக தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள டாடா சுமோவில் வந்த தேவர் சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்தே பரமக்குடியில் மட்டுமல்லாது ராமநாதபுரம், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை கலவரம் வெடித்தது.

22.10.2015 அன்று அரியானா மாநிலம் சோனேபட் மாவட்டத்தில் கோசுனா பகுதியைச் சேர்ந்த கோவிந்த் என்ற 15 வயதுடைய தாழ்த்தப்பட்ட சிறுவன் கொல்லப்பட்டுள்ளான்.

வீடு புகுந்து புறா ஒன்றைத் திருடினான் என்று பழி சுமத்தப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறையிடம் சிறுவனின் தாயார் கண்ணீரோடு முறையிட, அவரிடம் ரூபாய் 10 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும் தாயாரிடம் அந்தச் சிறுவனை உயிரோடு ஒப்படைக்காமல் அவனது பிணத்தையே ஒப்படைக்கின்றனர்.

அவன் கொலை செய்யப்படவில்லை; மாறாக, தற்கொலை செய்து கொண்டான் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறியது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது

அதே ஹரியானா மாநிலம், 2015ஆம் ஆண்டு, சன்பெட் கிராமத்தில் ஒரு கும்பல் தலித் குடும்பத்தைச் சார்ந்த வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தி விடுகின்றனர். அதில் 3 வயது குழந்தையும், 8 வயது சிறுமியும் கொல்லப்பட்டனர். குழந்தைகளின் தாய் 50 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 பேர்கள் பலத்த காயமடைந்தனர். உயர் சாதியான தாக்கூர் இனத்தாருடன் ஏற்பட்ட மோதல் தான் இந்தச் சம்பவத்திற்கு காரணமாகும்.

2016ஆம் ஆண்டு ஜூலை 15ல் குஜராத்தில் உள்ள ஊனாவில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

அடிப்படைக் காரணங்கள்

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

உயர்சாதியினரின் வேத நூலான மனு சாஸ்திரம் தான்.

மனுவின் தாக்கம்

மனுசாத்திரம் என்று நாம் சொன்னதும், இந்தியாவில் மனுவின் ஆட்சி நடக்கவில்லையே; மனுவின் சட்டங்கள் பின்பற்றப்படவில்லையே; மதச்சார்பின்மை அடிப்படையில் அமைந்த அரசியல் சட்டத்தின் ஆட்சி தானே நடக்கின்றது என்று கேள்வி இங்கு எழலாம். அதற்குரிய பதிலைப் பார்ப்போம்:

  1. மனுவின் சட்டம் இந்தியாவில் பின்பற்றப்படவில்லை தான். ஆனால் ஆட்சி செலுத்துவோர், நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு சொல்வோரின் மனங்கள் மனுவின் தாக்கத்திலிருந்து வெளியே வரவில்லை என்பதற்கு நீட் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு சான்றாகும். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் கல்வி படிக்கின்ற வாய்ப்பு பறிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
  2. மனுநீதி மனித உயிரை, மனித உயிராகப் பார்க்கவில்லை. மனித உயிர் அதனிடம் ஒரு மயிருக்குக் கூட சமமாக இல்லை. பிராமணர்களுக்கு மனு ஒதுக்கியிருக்கின்ற பணிகளை சூத்திரன் செய்து விட்டாலோ, அல்லது அவன் பிராமணனைத் திட்டி விட்டாலோ அல்லது சாதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவனது உறுப்புகளை அறுத்து எறியச் சொல்கின்றது. அவனைக் கண்ட துண்டமாக வெட்டி வீசச் சொல்கின்றது. இன்று தலித்துகள் மாட்டின் பெயரால் பசுக்குண்டர்களால் தாக்கப்படுவதற்குக் காரணம் இது தான்.

முஸ்லிம்கள் மாட்டின் பெயரால் தாக்கப் படுவதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கமும், அவர்களை வழி நடத்துகின்ற திருக்குர்ஆனும் தீண்டாமையை ஒழித்துக் கட்டுகின்றது என்பதுதான். அதனால் கிறிஸ்தவர்களை விடவும் முஸ்லிம்கள் மிகக் கொடுமையாக மாட்டின் பெயரால் மட்டுமல்லாமல் லவ்ஜிஹாத் போன்ற போலியான காரணங்களால் தாக்கப்படுகின்றார்கள்.

  1. பெயரில் பிரதிபலிக்கும் சாதி – பிரகடனப்படுத்தும் மனு நீதி

இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று மறைந்தவர் கிருஷ்ண ஐயர் அவர்கள். அவருடைய பெயரில் பின்னொட்டாக ஐயர் என்று அவரது சாதிப் பெயர் அமைந்துள்ளது. இதுபோல் இந்தியாவில் உயர் பதவி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களின் பெயர்களில் சாதிப் பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும்.

டாக்டர் சங்கர் தயாள் ஷர்மா, கேஷு பாய் படேல், லல்லு பிரசாத் யாதவ், பிரணாப் முகர்ஜி, சோம்நாத் சட்டர்ஜி என்று சில பெயர்களை இந்திய அளவில் குறிப்பிடலாம். தமிழக அளவில் முதலியார், மூப்பனார், நாடார், செட்டியார், படையாச்சி, பிள்ளை, கோனார், தேவர் என்று பெயர்களில் பின்னொட்டாக அமைந்திருக்கின்றது.

பாமரர்கள் முதல் பண்டிதர் வரை அத்தனை பேர்களும் இப்படி சாதியை தங்கள் பெயர்களுடன் சேர்த்துக் கொள்வதை பெருமையாகவே கருதுகின்றார்கள்.

இது இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சாதிய படிமானத்தையும், பிடிமானத்தையும் பறைசாற்றுகின்ற அதே வேளையில் இந்தியாவில் சாதி ஒழிப்பு என்பது நடைமுறை சாத்தியமில்லை என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. இதற்குக் காரணம் என்ன? டாக்டர் அம்பேத்கர் மனுவை மேற்கோள் காட்டிக் குறிப்பிடுவதை இப்போது பார்ப்போம்:

இந்துக்களின் பெயர்கள் நான்கு வகைகளாக அமைகின்றன. அவை..

குல தேவதை சம்பந்தப்பட்டதாகவோ

குழந்தை பிறந்த மாதம் சம்பந்தப்பட்டதாகவோ

குழந்தை பிறந்த நேரம் தொடர்பானதாகவோ

முற்றிலும் தொழில் சார்ந்தவையாகவோ அமைகின்றன.

இந்த நான்காம் வகைப் பெயர் மனுவின் கூற்றுப்படி, இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். அந்தப் பகுதிகள் இரண்டும் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளையும் மனு தருகின்றார்.

இதில் இரண்டாம் பகுதிப் பெயர் பிராமணனுக்கு மகிழ்ச்சியைக் குறிப்பதாகவும், க்ஷத்திரியனுக்கு பாதுகாவலைக் குறிப்பதாகவும், வைசியனுக்கு செழிப்பைக் குறிப்பதாகவும், சூத்திரனுக்கு தொண்டூழியம் செய்வதைக் குறிப்பதாகவும் அமைய வேண்டும்.

எனவே இதன்படி பிராமணர் பெயரில் தேவ என்ற முன்பகுதியும், சர்மா (மகிழ்ச்சி) என்ற பின்பகுதியும்,

க்ஷத்திரியர் பெயரில் ராஜா (அதிகாரம்) என்ற முன்பகுதியாகவும், வர்மா (வீரம்) என்ற பின்பகுதியாகவும்.

வைசியர் பெயரில் குப்தா (கொடை) என்பது முன்பகுதியாகவும், தத்தா (கொடையாளி) என்பது பின்பகுதியும் அமையும்.

மனுவின் கூற்றுப்படி பெயரின் முற்பகுதி பிராமணனுக்கு மங்களத்தையும், க்ஷத்திரியனுக்கு அதிகாரத்தையும், வைசியனுக்கு செல்வத்தையும், சூத்திரனுக்கு வெறுப்பு தரும் சொல்லையும் குறிக்க வேண்டும். இதை நம்ப மறுப்பவர் தக்க ஆதாரத்தைக் கேட்கலாம். மனு பெயரிடு விழாவைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறார்.

மனு கூறுகிறார்:

2:30. தந்தையானவன், குழந்தை பிறந்து பத்து அல்லது பன்னிரெண்டாவது நாளில் பெயர் சூட்டக் கடவன். அல்லது வளர்பிறைப் புண்ணிய தினத்தில் நல்ல முகூர்த்தத்திலும் வானில் நல்ல நட்சத்திரக் கூட்ட நாளிலும் பெயரிடலாம்.

2:31. பிராமணனது பெயரின் முதல் பகுதி மங்களத்தைக் குறிக்கும் வகையிலும், க்ஷத்திரியனது பெயர் அதிகாரத்தைக் குறிக்கும் வகையிலும், வைசியனது பெயர் பொருள் வளத்தைக் குறிக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். ஆனால் சூத்திரனது பெயரோ அருவருக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

2:32. அவ்வாறு சூட்டப்படும் பெயரின் இரண்டாவது பகுதி பிராணமராயின் மகிழ்ச்சியைக் குறிக்கும் வகையிலும், க்ஷத்திரியனாயின் பாதுகாப்பைக் குறிக்கும் வகையிலும், வைசியனாயின் வளத்தைக் குறிக்கும் வகையிலும் சூத்திரனாயின் பணிவிடையைக் குறிக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.

இந்தியாவில் சாதிக்காரர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்குத் தாக்கத்தைக் கொண்டது என்பதை இது தெளிவாக விளக்குகின்றது.

  1. கீதை கோர்ட்டுக்கு வந்த பாதை

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் இருந்த போது இந்தியாவில் ஓர் இந்து, நீதிமன்றத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் மூன்று பொருட்களைத் தொட்டு உறுதிமொழியைச் சொல்ல வேண்டும். ரிக்வேதம், கங்கை நீர், துளசி இலை – ஆகியவையே அந்த மூன்று பொருட்கள்.

இப்பொழுது ஒரு கேள்வி எழுந்தது. ஒரு பார்ப்பனர் அல்லாத, வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவர், இந்துக்களின் சாஸ்திரமாகிய ரிக் வேதத்தைத் தொடலாமா? என்பது தான் அந்தக் கேள்வி. கூடாது; கூடவே கூடாது. ஆகவே, ரிக் வேதத்தின் இடத்தில் வைக்கத் தகுந்த வேறு ஒரு நூலைப் பற்றி யோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் சாதாரண மக்கள் நெருங்க முடியாத அளவுக்குக் காலத்தால் பழமை உடையதாக ரிக் வேதம் இருப்பதைப் போல – அத்தகைய பழமை மரபை உடையதாக அந்த நூல் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. அப்படி முடிவு செய்யப்பட்ட நூல்தான் கீதை. அதன் பிறகு கீதை இந்தியாவின் பைபிள் ஆகிவிட்டது.

டாக்டர் சகுந்தலா ராவ் சாஸ்திரி

ஆதார நூல். பகவத் கீதை, பக்கம் – 1

பாரதிய வித்யா பவன், பம்பாய்

நீதிமன்றங்களில் பகவத் கீதையின் மீது சத்தியம் செய்வதற்குக் காரணம், தீண்டத்தகாதவர்கள் இந்துக்களின் புனித நூலான ரிக் வேதத்தைத் தீண்டக்கூடாது என்பதற்காகத் தான்.

  1. கவுரவக் கொலைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கவுசல்யா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்தார். இதைப் பொறுக்காத கவுசல்யா குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி, கூலிப்படைக் கும்பல் சங்கரை வெட்டிக்கொலை செய்தது. அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றே முக்கால் ஆண்டுகள் நடந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் டிசம்பர் 12, 2017 அன்று தீர்ப்பு வழங்கியது. 6 பேருக்குத் தூக்குத்தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மூன்று பேரை விடுதலை செய்தும், மீதியுள்ளவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது.

தீர்ப்புக்குப் பின்னர் அதை வரவேற்ற கவுசல்யா அளித்த பேட்டியில், மற்ற மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்தார். அம்மூவரில் கவுசல்யாவின் தாயும் அடங்குவார். அதாவது தன் தாய்க்கு எதிராகவும் அவர் மேல் முறையீடு செய்து தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார். இந்த கவுரவக் கொலைக்கு அஸ்திவாரமாகவும் ஆணி வேராகவும் இருப்பது எது? மனு நீதி தான். இது சமீபத்திய நிகழ்வாகும்.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயை அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் இளவரசன். காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்ட இவர், மனைவியைப் பிரிந்து சென்ற நிலையில் கடந்த 2013 ஜூலை 4ஆம் தேதி ரயில் பாதையில் மர்மமாக இறந்து கிடந்தார். இந்தச் சம்பவத்தின் போது வீடுகள் சூறை, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகள் திவ்யாவைக் காதல் திருமணம் செய்தது தான் இளவரசனின் மரணத்திற்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்திற்கும் காரணம்.

இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? மனு உருவாக்கிய சாதிப்பிரிவினை தான்.

3:13 சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருக்க வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திரப் பெண்கள். க்ஷத்திரியனுக்கு க்ஷத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்கள். பிராமணர்க்கு பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்கள்.

அதாவது, பிராமணர் மற்ற சாதிப் பெண்களைத் திருமணம் முடிக்கலாம். மற்ற சாதியினர் யாரும் பிராமண சாதிப் பெண்களை மணம் முடிக்கக் கூடாது. அது போலவே, க்ஷத்திரியன் தனக்குக் கீழாக உள்ள சாதிப் பெண்களை முடிக்கலாம். ஆனால் கீழ்சாதியினர் க்ஷத்திரியப் பெண்களை மணம் முடிக்கக் கூடாது. சூத்திரனுக்கு வேறு கதியே கிடையாது. சூத்திரப் பெண்ணை மட்டுமே மணம் முடிக்க வேண்டும்.

  1. ஆலய மறுப்பு

பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் மவுண்ட் பேட்டன் என்ற ஆங்கிலேயரால் நுழைய முடிந்தது. ஆனால் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அந்தக் கோயிலுக்குள் முடியவில்லை. காரணம் அவர் ஒரு சூத்திரர். அவர் கோயிலுக்குள் நுழைந்தால் கோயில் தீட்டாகிவிடும் என்ற நிகழ்வை இதற்கு எடுத்துக் காட்டாகப் பார்க்கலாம்.

  1. தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் தேவர், தலித் மோதல்கள்.
  2. டீக்கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்னும் தனிக்குவளைகள்.
  3. பிணம் புதைத்தல், துப்புறவு போன்ற பணிகளை ஒரு குறிப்பிட்ட சாதியினரே செய்தல்.
  4. தாழ்த்தப்பட்டவர்களின் பிணம் உயர் சாதிக்காரர்களின் தெரு வழியாகக் கொண்டு செல்லத் தடை.

மனுசாத்திரத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இந்தியாவில் வேரூன்றிப் போயிருக்கின்றது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகளாகும்.

மனு எப்படி தீண்டாமையை இந்தியாவில் வேர் விட்டு, பரவச் செய்தது என்பதை இப்போது பார்ப்போம்:

மனு ஓர் அறிமுகம்

மனுதர்ம சாத்திரம் உருவாக்கப்பட்ட கதையை அதன் ஆசிரியரான மனுவே விவரிக்கிறார்.

படைப்புச் செயலில் ஈடுபட்ட பரம்பொருளின் வாரிசாகத் தன்னை அவர் அடையாளங்காட்டிக் கொள்கிறார். தாம் பிரம்மனிடமிருந்து விதிகளையும், நியமங்களையும் கற்றுக் கொண்டதாகவும், தான் கற்றுக் கொண்டதைத் தனது மகனான பிருகு முனிவருக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மனுவை தேவரிஷிகள் பின்வருமாறு கேட்டனராம்! ‘நான்கு வருணத்தாரும் மற்றோரும் கடைப்பிடிக்கத்தக்க செயல்கள், கடமைகளை எமக்கு உணர்த்துவீராக!’ என்று கேட்டனராம். உலகின் தோற்றம், உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை மட்டும் தேவரிஷிகளுக்கு விளக்கிய மனு பின்வரும் கட்டளையை வெளியிட்டார்.

எனது குமாரரான பிருகு, இந்த தர்ம சாஸ்திரத்தைச் சற்றும் பிறழாமல் உங்கட்கு உபதேசிக்கக் கடவர். ஏனெனில் முறையாக என்னிடம் பிருகு முனிவரே இதனைப் பயின்று கைவரப் பெற்றவராகிறார்.

மனுவின் கட்டளையை ஏற்றுக் கொண்ட பிருகு முனிவர் நால் வருணத்தாரின் கடமைகள், ஆண் – பெண்களின் அறம், இல்லறவியல், அரச நீதி, குற்றங்கள் – தண்டனைகள், சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்தல் உள்ளிட்ட சமுதாயத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த சட்டதிட்டங்களை தேவரிஷிகளிடம் விளக்கிக் கூறினார். இவையே 12 அத்தியாயங்களைக் கொண்ட நூலாக மனுதர்ம சாஸ்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

குறிப்பு: இங்கு மேற்கோளாகக் காட்டப்படும் மனுதர்ம நூலின் சுலோகங்கள் பெரும்பாலானவை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய ‘இந்து மதத் தத்துவமும் மனு தர்மமும்’ (தமிழாக்கம்) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.


சூத்திரன் வேதம் கற்க முடியாது! மனு மறுக்கின்ற கல்வி உரிமை

இன்று அகில இந்திய அளவில் நீட் தேர்வை மோடி அரசு கொண்டு வந்து விட்டது. நாட்டின் உச்ச நீதிமன்றம் நீட் எழுதியாக வேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டது. இதன் விளைவாக அரியலூரைச் சார்ந்த கூலித் தொழிலாளியின் மகள், 17 வயது அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டாள். அவள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள். அந்த மாணவி 1200க்கு 1176 மதிப்பெண் எடுத்திருந்தாள். மருத்துவத்திற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 196.75 ஆகும். மருத்துவராவது அவளது குறிக்கோள். மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அதில் மண்ணள்ளிப் போட்டதால் அவள் மண்ணில் போய் சேர்ந்து விட்டாள். அது இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலைகளையும், தமிழகளவில் ஆர்ப்பாட்ட அலைகளையும் ஏற்படுத்தியது.

என்ன அதிர்வலைகள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து என்ன பயன்? இனி தாழ்த்தப்பட்ட மக்கள் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க முடியாது என்று உறுதியாகி விட்டது. இதற்கு அடிப்படைக் காரணமே சூத்திரர்கள் கல்வி அறிவு பெற்று விடக்கூடாது என்ற மனு தர்ம சிந்தனை தான். மனு தர்மம், சூத்திரன் கல்வியைக் கற்று விடக் கூடாது என்பதில் கடுமை காட்டுகின்றது! வேதத்தைப் படிக்கக் கூடாது; வேதத்தின் வார்த்தைகளைக் காதால் கேட்டு விடக் கூடாது. அப்படி வேதத்தைக் காதால் கேட்டு விட்டால் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று சொல்கின்றது. அதை விடவும் ஒரு படி தாண்டி, வேதம் ஓதினால் நாக்கு துண்டிக்கப்பட வேண்டும். வேதத்தில் முழுத் தேர்ச்சி பெற்று விட்டால் அவனது உடம்பு துண்டு துண்டாக வெட்டிச் சிதைக்கப்பட வேண்டும் என்று மனு கூறுகின்றார்.

திருடுபவர்களின் கையை வெட்ட வேண்டும்; மணமுடிக்காத நிலையில் விபச்சாரம் செய்த ஆண், பெண்ணுக்குக் கசையடி கொடுக்க வேண்டும்;  கொலை செய்த ஆண், பெண்ணுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பன திருக்குர்ஆனின் குற்றவியல் சட்டம்.

இதனால் உலக நாடுகளிலேயே, சவூதியில் தான் குற்றங்கள் குறைவாக உள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சட்டத்தை சவூதி அரசாங்கம் நிறைவேற்றும் போது இந்தியாவிலிருந்து கடுமையான எதிர்ப்புக் குரல்களும் ஏவுகணைகளும் கிளம்புகின்றன.

குற்றச் செயல்களைத் தடுத்து மக்களைக் காப்பதற்காகத் திருக்குர்ஆன் கூறுகின்ற இந்த உன்னத சட்டங்களை, காட்டுமிராண்டிச் சட்டங்கள் என்று கடுமையாக விமர்சிக்கின்ற சங்கப்பரிவாரங்கள் தங்கள் மனு சாத்திரம், கல்வி கற்கின்ற சூத்திர சாதியினருக்கு இப்படி ஒரு கொடுமையான சித்திரவதை நிறைந்த கொலையை விதித்திருக்கின்றது. அதை அவர்கள் கண்டு கொள்வதேயில்லை. அதை விமர்சித்தால் இருக்கின்ற சூத்திரர்கள் தங்களின் இந்து மதத்திலிருந்து வெளியே விரண்டு ஓடி விடுவார்கள் என்ற பயம் தான். இப்போது மனு சொல்கின்ற அந்த பயங்கரவாத சட்டங்களைப் பார்ப்போம்.

1:88. வேதம் கற்றலும் கற்றுத் தருவதும் கடவுளால் பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்டவையாகும்.

1:89. க்ஷத்திரியருக்கு வேதத்தைக் கற்பது கடமையென (கடவுள்) பணித்தார்.

2:116. குருவுக்குத் தெரியாமல் அவரிடமிருந்து வேத ஞானத்தைக் கிரகித்துக் கொள்பவன் வேதத்தைத் திருடிக் கொண்டவனாகி நரகத்தில் வீழ்ச்சியுறுவான்.

4:99. சூத்திரன் அருகில் இருக்கும் போது பிராமணன் வேதம் ஓதக் கூடாது.

9:18. பெண்களுக்கும், வேத பாடங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

9:199. முறையற்ற வகையில் (அதாவது சூத்திரருக்கும் பெண்களுக்கும்) வேதம் போதிக்கும் பிராமணன் பாவம் செய்தவனாகின்றான். இதற்காக ஓராண்டு காலம் பார்லி உணவு உண்பதே அந்தப் பாவத்திற்குக் கழுவாயாகும்.

இந்தத் தொடர்களில் நன்கு வரையறுக்கப்பட்ட மூன்று கருத்துரைகள் பொதிந்துள்ளன. பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தினர் மட்டுமே வேதங்களைக் கற்பதற்கு உரியவர்கள். இந்த மூவரிலும் பிராமணர் மட்டுமே வேதங்களைக் கற்றுக் கொடுப்பதற்கு உரிமை பெற்றவர்கள். சூத்திரர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் வேதங்களைப் படிக்கவோ, வேதம் ஓதுவதைக் கேட்கவோ கூடாது.

மனுவுக்குப் பின் வந்தவர்கள், சூத்திரன் வேதம் படித்தால் விதிக்க வேண்டிய தண்டனைகளை வகுத்து, தடைகளைப் பெருக்கினர். உதாரணமாக, கவுதமர் கூறுவதாவது:

3:4. சூத்திரன் வேதங்களை மனப்பாடம் செய்யும் நோக்கத்தோடு அவற்றை விரும்பிக் கேட்பானாயின் அவன் காதுகளில் காய்ச்சி உருக்கிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்ற வேண்டும். அவன் வேதம் ஓதினால் அவனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அவன் வேதங்களைக் கற்றறிந்து அவற்றில் புலமை பெற்றால் அவனது உடலைக் கண்டதுண்டமாக வெட்டி எறிய வேண்டும்.

இது மனு மற்றும் அவரைப் பின்பற்றுவோரின் சிந்தனையாகும். ஆனால் அல்குர்ஆன் உலக மக்களுக்காக அருளப்பட்ட பொது வேதமாகும். அது சாதிப்பாகுபாடு என்ற பேதமில்லாமல் உலக மக்கள் அனைவரையும் நோக்கி ஓதத் தூண்டுகின்றது.

அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலைநாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோர் நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர்.

அல்குர்ஆன் 35:29

திருக்குர்ஆன் உலக மக்களை நோக்கி, இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? 54வது அத்தியாயம், 17வது வசனத்தில் கேட்கின்றது. இவ்வாறு இந்த அத்தியாயத்தில் மட்டும் இந்த வசனத்துடன் சேர்த்து மொத்தம் நான்கு இடங்களில் கேட்கின்றது. இதல்லாமல், பொதுவாகவும் மக்கள் தன்னைச் சிந்திக்க வேண்டும் என்று கூறுகின்றது. இதற்குப் பின்வரும் வசனம் ஓர் எடுத்துக் காட்டாகும்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

அல்குர்ஆன் 47:24

குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 7:204

தன்னை செவி தாழ்த்திக் கேட்கும்படியும் உலக மக்களை நோக்கிக் கட்டளையிடுகின்றது. அப்படிச் செவியுற்றால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று இந்த வேதம் எந்த ஓரிடத்திலும் கூறவில்லை. மாறாக செவிமடுக்காமல் இருப்பதையும், சிந்திக்காமல் இருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனைத் தாமும் கற்று, பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)

நூல்: புகாரி 5027

அகில உலகத்திற்கும் இறைவனால் அனுப்பப் பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குர்ஆனைக் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரை மக்களில் சிறந்தவர் என்று பாராட்டுகின்றார்கள்.

மனுவைப் போன்று வேதம் கற்கும் உரிமையை ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமாக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், குர்ஆனை மக்களை விட்டும் மறைப்பவர் இறைவனின் சாபத்திற்குரியவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:159

திருக்குர்ஆன் என்ற இந்த வேதம் மனிதகுலம் அனைத்திற்கும் வழிகாட்டியாக அருளப்பட்ட வேதமாகும். உலகத்தில் எந்த ஒரு சாராருக்கும் மறுக்கப்படக்கூடிய அல்லது மறைக்கப்படக்கூடிய வேதமில்லை என்பதை மேற்கண்ட இந்த விளக்கங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட புனித வேதத்தைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது படித்தால் நாக்கை அறுத்து விடுவேன்; செவியுற்றால் காதில் ஈயத்தையும், அரக்கையும் ஊற்றுவேன்; முழுமையாகக் கற்றுவிட்டால் மொத்த உடலையும் கண்டதுண்டமாக வெட்டி விடுவேன் என்று சொல்கின்ற ஒரு வேதத்தைப் பின்பற்ற வேண்டுமா? என்பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாத்தைப் பொறுத்தமட்டில் வேதம் படிப்பது மட்டும் கல்வி என்று பார்க்கவில்லை. அது வரலாறு, புவியியல், உயிரியல், வானவியல் எனக் கல்வி தொடர்பான அனைத்து வகை கல்வியையும் அது கற்றுக் கொள்ளத் தூண்டுகின்றது. இதோ திருக்குர்ஆன் கூறுகிறது…

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?

வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?

மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?

பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)

அல்குர்ஆன் 88:17-20

இவ்வசனங்கள் கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் கற்கச் சொல்லித் தூண்டுகின்றது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனுவின் பாதையில் மகாபாரதம்!

கீழ்க்காணும் சம்பவம் மகாபாரதத்தில் இடம் பெறுகின்றது. கீழ் சாதியினருக்குக் கல்வி உரிமை இல்லை என மறுக்கின்றது. அதை இப்போது பார்ப்போம்.

ஏகலைவன் என்ற வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவன் வில் வித்தையில் திறமை உள்ளவனாக இருந்தான். நாய் குரைக்கும் ஒலியைக் கணித்து அம்பு எய்து கொன்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன்.

குரு துரோணாச்சாரிக்கு மிகப் பெரிய ஆச்சரியம். தன் சீடன் அர்ச்சுனனால் தானே இது இயலக் கூடியது. இதனை எய்தவன் யார் என்று அவர் யோசித்த போது அம்பை எய்த அந்த ஏகலைவன் துரோணாச்சாரியின் முன் வருகிறான். அவனிடம் உனது குரு யார் என்ற கேள்வியைத் தொடுக்கிறார்.

‘சுவாமி! நான் உங்களிடம் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது, நான் தாழ்ந்த ஜாதி குலத்தில் பிறந்தவன் என்று கூறி வில்வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்தீர்கள்.

மனம் நொந்து போனேன்; ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை; உங்களைப் போல உருவம் செய்து தங்களையே என் குருவாகக் கருதி இந்த வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தேன்’ என்றான் பவ்யமாக.

அப்படியானால் ‘எனக்குக் குருதட்சணை கொடுக்க வேண்டாமா? கொடுப்பாயா?’ என்று துரோணாச்சாரி கேட்டார்.

‘எது கேட்டாலும் கொடுப்பேன்’ என்றான் ஏகலைவன். ‘உன் கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு!’ என்றார் இரக்கம் துளியும் இல்லாத அந்தக் குரூர துரோணாச்சாரி.

அக்கணமே வெட்டிய கட்டை விரலைக் காணிக்கையாகத் தந்தான் ஏகலைவன். கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றால், அவன் வில்லை வளைத்து அம்பை எய்ய முடியாதல்லவா? அதற்காக குரு தட்சணை என்ற பெயரில் இப்படி ஒரு சூழ்ச்சி!

இது உணர்த்தும் பாடம் என்ன? வித்தைகள், வித்தியாசமான கலைகள் தங்களைத் தவிர வேறு யாரும் கற்கக் கூடாது என்பது தானே! இன்று அந்த மனு தர்ம வழியில் தான் நீட் என்ற தடைக்கல் உயர் கல்வி படிப்பவர்களுக்கு எதிராக அறிமுகமாகி உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மனித குல வழிகாட்டியான திருக்குர்ஆனை நோக்கி இந்தியா திரும்பாத வரை இதற்கு விமோச்சனமில்லை. சூத்திரர்கள் என்றழைக்கப் படக்கூடிய இந்த மக்கள் திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டால் அவர்களது இன இழிவு நீங்கி சமத்துவத்தில் சரித்திர நாயகர்களாகி விடுவார்கள்.

மனு மறுக்கின்ற பெண்கள் கல்வி

9:18. பெண்களுக்கும் வேத பாடங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

9:199. முறையற்ற வகையில் (அதாவது சூத்திரருக்கும் பெண்களுக்கும்) வேதம் போதிக்கும் பிராமணன் பாவம் செய்தவனாகின்றான். இதற்காக ஓராண்டு காலம் பார்லி உணவு உண்பதே அந்தப் பாவத்திற்குக் கழுவாயாகும்.

திருக்குர்ஆனைப் பொறுத்தமட்டில், வேதம் படிப்பது தொடர்பாக ஆண்களுக்குரிய சட்டம் தான் பெண்களுக்கும்! பெண்கள் இதிலிருந்து விதிவிலக்கு இல்லை. அதனால் பெண்கள் வேதம் படிப்பதில் ஆண்களுக்குச் சமமானவர்கள் ஆவர்.

(நபியின் மனைவியரே!) உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:34

இந்த வசனம் பெண்களை நோக்கி, குர்ஆனை ஓதும்படி கட்டளையிடுகின்றது.

இஸ்லாம் மார்க்கத்தில் திருமணத்தின் போது பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாப்பிள்ளை நன்கொடையாகக் கொடுக்க வேண்டும். அப்படி ஒருவர் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு மணமகனை நோக்கி, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கச் சொல்லி அதையே நன்கொடையாக ஆக்குகின்றார்கள். அதைக் கீழ்க்காணும் செய்தி விளக்குகின்றது

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை’ என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் ‘இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு (‘மஹ்ர்’ எனும் விவாகக் கொடையாக)க் கொடு!’ என்று (அந்த மனிதரிடம்) கூறினார்கள். அவர், ‘என்னிடம் இல்லை’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவளுக்கு (மஹர்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே’ என்று கூறினார்கள். இதைக்கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், ‘குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (மனனமாக) இருக்கிறது?’ என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடன் இருக்கும் (குர்ஆன்) அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 5030

திருக்குர்ஆன் எனும் வேதக் கல்வி மட்டுமல்ல; பெண்கள் வேறெந்த கல்வியையும் ஆண்களைப் போலவே கற்பு நெறிக்குக் களங்கம் இல்லாமல் கற்கலாம். பெண்களுக்குக் கல்வியின் வாசல் கதவை இஸ்லாம் மார்க்கம் சாத்தவில்லை.


சூத்திர சாதிக்கு சுதந்திரம் இல்லை! சொத்துரிமை இல்லை!

இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் சுதந்திரம் அடைந்தது. ஆனால் சாதிய ஆதிக்கத்திலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் இன்னும் சூத்திரர்கள் சுதந்திரம் அடையவில்லை. இந்த ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத் தளையிலிருந்தும் எளிதில் விடுதலை அடைய முடியாது.

காரணம், இது தெய்வீகத் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடிமைத் தனமாகும். பொருளாதார அடிப்படையில் உள்ள அடிமைத்தனம் என்றால் அதிலிருந்து சீக்கிரம் விடுதலையாகி விடலாம். இது புனிதம் என்ற அடிப்படையில் ஏற்பட்ட அடிமைத்தனம் என்பதால் இதை எளிதில் ஒழிக்க முடியாது.

அவ்வாறு ஒழிக்க வேண்டுமென்றால் ‘மனிதன் ஒரு போதும் கடவுளாக முடியாது’ என்ற தெளிவான சிந்தனை மனிதனுக்கு ஏற்பட்டாக வேண்டும். அப்போது தான் இதை ஒழிக்க முடியும். உயர்சாதியினர் கடவுளின் பெயரால் சூத்திர சாதியினரை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சூத்திரர்கள் இன்னும் அடிமைச் சாதிகளாகவே இருந்து கொண்டிருக்கின்றனர்.

சூத்திரர்கள் இந்த அடிமைத் தளையிலிருந்து இன்னும் விடுதலையாகவில்லை என்பதற்கு 29.9.2017 அன்று ஆங்கில இந்து நாளேட்டில் இடம் பெற்ற கட்டுரை ஓர் எடுத்துக் காட்டாகும். அந்தக் கட்டுரையை எழுதியவர் பெஸ்வாடா வில்சன் என்பவர்.

‘‘ஐயா மோடி அவர்களே! தூய்மை இந்தியா, துப்புறவு இந்தியா என்ற பெயரில் வீடியோ கேமராக்கள் முன்னால் ஒரு விளக்குமாற்றுக் கட்டையை தூக்கிக் கொண்டு தூர்ப்பது போலவும், துப்புறவு செய்வது போலவும் போஸ் கொடுக்கின்றீர்களே? நீங்களும், உங்கள் பரிவாரங்களும் கொஞ்சம் சாக்கடையில் இறங்கி சங்கு குளிக்கத் தயாரா? அது என்ன அலுங்காமல் குலுங்காமல் வீடியோ கேமராக்களுக்கு முன்னால் விளக்குமாறுகளைத் தூக்கி, ஆட்டிக் காட்டிக் கொண்டு போகின்றீர்கள்?’’ என்று அவர் கேள்வி தொடுக்கின்றார்.

சுவச் பாரத் என்ற பெயரில் தூய்மை இந்தியா என்று முழங்குகின்றீர்களே! அந்தப் பணியை ஏற்கனவே 4000 ஆண்டுகளாக சில குறிப்பிட்ட சாதியினர் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் 365 நாட்கள் இந்தப் பணியை செய்கின்றனர். ஒரு மணி நேரம் தரிசனம் தந்து விட்டு தூர்த்து, துடைத்து விட்டுப் போகின்ற நீங்கள் இந்தத் திட்டத்தில் உண்மையில் கரிசனம் இருந்தால் வருடம் 365 நாட்கள் செய்யத் தயாரா?

அது என்ன? அந்தக் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று ஆக்கி வைத்திருக்கின்றீர்கள்? உண்மையில், இதில் உங்களுக்கு உளப்பூர்வமான ஈடுபாடு இருக்குமானால் சுத்தம் சுகம் தரும் என்று வெற்றுப் பிரச்சாரம் செய்து விட்டுப் போகாமல் இந்த நாலாயிரமாண்டு சாதி சங்கிலியை அறுத்தெறியுங்கள் என்று அவர் மோடியை, நாக்கைப் பிடுங்குகின்ற மாதிரி கேட்கின்றார்.

‘‘கழிப்பறை கட்டச் சொல்கின்றீர்கள்; சரி! அதற்கு செப்டிக் டேங்க் கட்டப்படும். அதை இந்த சாதியினர் தானே சுத்தம் செய்ய வேண்டும்? நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களை தலைமுறை, தலைமுறையான துப்புரவுப் பணியிலிருந்து மீட்பதற்குப் பதிலாக, சாதிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்குப் பதிலாக சுவச் பாரத் என்ற பெயரில் மீண்டும் அவர்கள் மீது பாரத்தையும், பளுவையும் ஏற்றி அவர்களை அவமானத்திற்கும் அவமதிப்பிற்கும் உள்ளாக்குகின்றீர்கள்’’ என்று கேட்டு சாதிய கொடுமைக்குச் சாட்டையடி கொடுக்கின்றார்.

இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம், மனு சாத்திரத்தின் இந்த வரிகள் தான்.

10:122. பிராமணரைப் பேணிப் பணி செய்க!

10:121. சூத்திரன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பிராணமருக்குப் பணிவிடை செய்து தக்க ஊதியம் பெற இயலாத போது, க்ஷத்திரியரைச் சார்ந்து பிழைக்கலாம். அதனாலும் வாழ முடியாத போது செல்வ வளமுள்ள வணிகனுக்குப் பணிகள் செய்து பிழைக்கலாம்.

1:91. மேலே சொன்ன மூவருக்கும் அடக்க ஒடுக்கமாகப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவதென சூத்திரருக்குக் கடவுள் விதித்தார்.

மனு சாத்திரம் ஏற்படுத்திய இந்த அடிமைத் தளையிலிருந்து சூத்திர சாதிகளுக்கு இன்னும் விமோசனமோ, விடுதலையோ கிடைக்கவில்லை. அப்படியானால் அவர்களது சுதந்திரத்திற்கு வழி என்ன? வகை என்ன? இஸ்லாம் மட்டும் தான் அதற்கான வழியாகும்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

மனிதர்கள் அனைவரும் ஒரு தந்தை, தாய் வழியாக வந்தவர்கள் தான். கடவுளின் உடலிலிருந்து எந்த மனிதனும் உருவாகவில்லை. மாறாகக் கடவுளால் அவர்கள் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மத்தியில் நான்கு வருணங்கள், நான்கு சாதிகள் என்பது கிடையாது. அப்படியிருந்தால் தானே சூத்திரன் என்ற ஒரு வருணம், ஒரு சாதி இருக்கும். அது அறவே கிடையாது.

அவர்களில் யாரும் யாருக்கும் அடிமைகள் கிடையாது. அவர்கள் சமநிலையில் உள்ள சகோதர, சகோதரிகள்! அவர்களுக்கு மத்தியில், திருக்குர்ஆனின் இந்த வசனத்தின் மூலம் சகோதரத்துவமும் சமத்துவமும் மலர்ந்து விடுகின்றது.

தனக்கு மேலே இருக்கும் மூன்று சாதிகளுக்கு அடக்க ஒடுக்கமாகப் பணி புரிய வேண்டும் என்ற அடிமைத்தனம் அடித்து நொறுக்கப்படுகின்றது. மூவர்ணத்திற்கும் பணி புரிய வேண்டும் என்று கடவுள் சொன்னதாக மனு கூறுகின்ற செய்தி, அவர் கூறுகின்ற மற்ற செய்திகளைப் போன்று கடவுள் மீது இட்டுக்கட்டிச் சொல்கின்ற பச்சைப் பொய்யாகும். உண்மையான கடவுள் சொன்ன உண்மையான செய்தி மேலே இடம்பெற்ற திருக்குர்ஆன் செய்தி தான்.

சொத்துரிமைக்குச் சொந்தக்காரன்

எப்போது இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்து விடுகின்றதோ அப்போது அவர்கள் சுதந்திரமானவர்களாக ஆகி விடுகின்றார்கள். அவர்கள் சுயமாக, சுயமரியாதையுடன் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.

10:124. பிராமணர்கள் தமக்குப் பணிபுரிவோனுடைய (சூத்திரன்) திறமை, உழைப்பு ஆகியவற்றைக் கருதியும், அவன் காப்பாற்றுவதற்குக் கடமைப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் அவனது பராமரிப்புக்குத் தேவையான ஊதிய உயர்வு தங்கள் குடும்பச் சொத்திலிருந்து வழங்க வேண்டும்.

10:125. (பிராமணன்) தான் உண்டு, எஞ்சிய உணவு, உடுத்துக் கிழித்த பழைய உடைகள், தானியங்கள், சலித்து எஞ்சிய நொய், வீட்டுப் பழைய பாத்திரங்கள் ஆகியவற்றை (தன்னிடம் பணி செய்யும் சூத்திரனுக்கு) கொடுக்க வேண்டும்.

மனு குறிப்பிடுவது போன்று சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் பிராமணனிடம் கையேந்த வேண்டிய அவசியம் அறவே இல்லை. அவர்கள் வீசியெறிந்த கந்தல் ஆடைகளை அணிய வேண்டிய அவசியமும் இல்லை. கை நிறைய சம்பாதித்து, கண்ணியமான ஆடைகளை அணியலாம்.

இந்த உரிமை அனைத்தையும் மனுதர்மம் பறித்து விடுகின்றது. பொருளாதார ரீதியிலான எந்த ஒரு சுதந்திரத்தையும் அது சூத்திரனுக்கு வழங்கவில்லை என்பதோடு அவன் சேர்த்து வைத்த சொத்தையும் பிராமணன் பறிமுதல் செய்ய அனுமதிக்கின்றது

பறிக்கப்படும் சொத்துரிமை

7:248. யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால் அதைக் கொள்ளையிடுவது தர்மமாகும்.

8:413. பிராமணன் (சம்பளம்) கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில் அவன் பிராமணனின் வேலைக்காகவே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கிறான் அல்லவா?

8:414. சூத்திரன் எஜமானனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது. இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன் தான் நீக்குவான். ஆதலால் அவன் மறுமைக்காகவும் பிராமணனுக்குப் பணிவிடை செய்ய வேண்டியது.

8:415. யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பத்தியினால் வேலை செய்பவன், தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாகத் தொன்று தொட்டு வேலை செய்பவன், குற்றத்திற்காக வேலை செய்பவன் என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.

8:416. மனையாள், பிள்ளை, வேலைக்காரன் இவர்களுக்குப் பொருளில் சுவாதீனமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவை அவர்களின் எஜமானரையே சாரும். அதாவது எஜமானின் உத்தரவின்றி தர்ம விஷயத்திற்கும் தங்கள் பொருளை செலவழிக்கக் கூடாது என்று கருத்து.

8:417. பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரனிடமிருந்து பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். எஜமானன் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரன் தனது பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரனல்ல.

10:129 சூத்திரன் தன்னால் பெருள் திரட்ட முடியும் என்றாலும் அவ்வாறு திரட்டிச் செல்வம் சேர்க்கக் கூடாது. ஏனெனில் செல்வந்தனான பிறகு சூத்திரன் பிராமணர்களுக்குத் துன்பம் தருகிறான்.

மனு குறிப்பிடுகின்ற ஏழு வகை தொழிலாளி களிடமிருந்து பொருளாதாரத்தை மட்டுமல்ல! கொண்ட பெண்டாட்டியையும் வலிமையைப் பயன்படுத்தி பறித்துக் கொள்ளலாம்.

இது கொஞ்சமாவது சூடு சொரணை, மானம் மரியாதை உள்ள எந்த மனிதாலும் ஜீரணிக்க முடியாத ஒரு கொடிய செய்தியாகும்.

மனித குல வழிகாட்டியான திருக்குர்ஆனோ பூமியில் பரந்து விரிந்து சென்று சம்பாதிக்கச் சொல்கின்றது.

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!

அல்குர்ஆன் 62:10

மக்காவுக்குப் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள், அங்கும் சம்பாதிப்பதில் தப்பில்லை என்று திருக்குர்ஆன் சம்பாதிக்கச் சொல்கின்றது.

(ஹஜ்ஜின்போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை.

அல்குர்ஆன் 2:198

சம்பாத்தித்த, பூமியில் அலைந்து திரிந்து திரட்டிய பொருளை தங்களது வாரிசுகளுக்கு வழங்குகின்றது.

இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானவர்கள்.

அல்குர்ஆன் 8:75

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் சொந்த ஊரான மக்காவை விட்டு மதீனாவுக்கு விரட்டப்பட்டனர். அவ்வாறு விரட்டப்பட்டு அகதிகளாக வந்தவர்களையும், உள்ளூர்வாசிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். அதாவது மதீனாவைச் சேர்ந்த ஒருவர் மக்காவிலிருந்து அகதியாக வந்தவரைத் தமது சகோதரராக ஆக்கிக் கொள்ள வேண்டும் எனப் பணித்தார்கள்

இதன் பின்னர் மதீனாவாசி ஒவ்வொருவரும் தமது வீடு, தொழில், நிலம், ஆடை மற்றும் அனைத்து உடமைகளையும் மக்காவாசிகளான அகதிகளுக்கு சரிபாதியாகக் கொடுத்து சகோதரத்துவத்தை நிலைநாட்டினார்கள்.

இது தற்காலிகமாகச் செய்யப்பட்ட ஏற்பாடு தான். இது தொடர்ந்து விடக்கூடாது; தங்கள் வாரிசு அடிப்படையிலான குடும்பத்தார்கள் புறக்கணிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மனிதருக்கும் தனது குடும்பத்தினர் தான் வாரிசுகளாவர். நெருக்கடியான நேரத்தில் கொள்கைச் சகோதரர்களுக்காக சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்தாலும் இனி அவ்வாறு செய்யக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் அறிவித்து விட்டான். தங்களது கொள்கைச் சகோதரர்களான முஸ்லிம்களையும், ஹிஜ்ரத் செய்தோரையும் விட, இரத்த உறவினர்களே ஒருவருக்கு முன்னுரிமை பெற்றவர் என்று கூறி முந்தைய நடைமுறையை அல்லாஹ் மாற்றி விட்டான்.

இரத்தப் பந்தங்கள், சொத்து பெறுவதற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறுவதன் மூலம், ஒருவர், தான் திரட்டிய சொத்தை தனது வாரிசுகளுக்கு வழங்கச் சொல்கின்றது. ஒருவர் இறக்கும் போது தனது மனைவி மக்களுக்கு வழங்காமல் பிறருக்குத் தாரை வார்ப்பதை அனுமதிக்கவில்லை.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும், ‘வேண்டாம்’ என்றே பதிலளித்தார்கள். நான், ‘மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)’ என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தர்மமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவளம் (உணவு) கூட (தர்மமேயாகும்.) மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான். உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2742

முஹம்மது நபியவர்கள், இரத்த பந்தங்களுக்கு போய்ச் சேர வேண்டிய சொத்தைப் பிறருக்கு தானமாக வழங்குவதைக் கூட மறுத்து விடுகின்றார்கள். அப்படியே வழங்குவதாக இருந்தால் மூன்றில் ஒரு பாகத்தைத் தான் வழங்க வேண்டும் என்று சட்டமாக்கி விட்டார்கள்.

ஒருவர் இறந்த பிறகு அவரது சொத்தில் அவரது ஆண், பெண் மக்கள், மனைவி, சகோதர சகோதரிகளுக்கு எவ்வளவு என்று பாகப் பிரிவினை சட்டத்தையும் அல்குர்ஆன் 4:11,12 மற்றும் 4:176 ஆகிய வசனங்களில் மக்களுக்குத் தெளிவாகச் சொல்லி விட்டது.

இப்போது நீங்கள் மனுதர்மத்தையும், மனித குல வழிகாட்டியான திருக்குர்ஆனையும் ஒரு நிமிடம் பாருங்கள். மனுதர்மத்திற்கு வேதம் என்பதற்குரிய எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. இருப்பினும் இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பளிச்சென்று உண்மை உங்களுக்குப் புரியும். மனுவின் கூற்றுப்படி உங்களுக்கு சம்பாதிப்பதற்கே உரிமையில்லை. அப்படியே சம்பாதித்தாலும் அதை நீங்களும் உங்கள் சந்ததியினரும் அனுபவிப்பதற்கு உரிமையில்லை. மாறாக, அது பிராமணன் அபகரிப்பதற்கும் அப்படியே பறித்துக் கொள்வதற்கும் உரிய சொத்தாகும்.

கொள்ளையடிப்பதை சட்டப்பூர்வமாக்குகின்ற வேதம் இருக்குமேயானால் அது மனுதர்மமாகத் தான் இருக்க முடியும்.

இதோ அகில உலக இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?’ என்றார்கள். அதற்கு ‘ஆம்’ என்றோம். அடுத்து, ‘இது எந்த மாதம்?’ என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது துல்ஹஜ் மாதமல்லவா?’ என்றார்கள். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். அடுத்து ‘(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும் உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்’ என்று கூறிவிட்டு, ‘இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்’ என்றார்கள்.

இதை அபூபக்ரா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 67

அடுத்தவர் சொத்தை அபகரிப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அப்படி அபகரித்தால் திருக்குர்ஆனின் கட்டளைப்படி திருடியவர்களின் கைகளை வெட்டவேண்டும்.

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 5:38

உங்களுக்கு உங்களது தன்மானத்துடன் விளையாடுகின்ற மதம் வேண்டுமா? அல்லது உங்களது தன்மானத்தைக் காக்கின்ற மார்க்கமான இஸ்லாம் வேண்டுமா? சிந்தியுங்கள்.


சூத்திர சாதிக்கு சந்நியாசம் இல்லை! மனு மறுக்கின்ற சந்நியாச உரிமை

சந்நியாசம் அல்லது துறவு நிலை என்பது மனைவி, மக்கள், சொத்து சுகம் என்று அனைத்தையும் துறந்து விட்டு வனத்திற்குச் சென்று தவம் செய்வதாகும். இஸ்லாம் மார்க்கத்தில் துறவு நிலை தடுக்கப்பட்டுள்ளது. (இது குறித்துக் கீழே விளக்கியுள்ளோம்.)

இந்து மதத்திலும், மற்ற மதங்களிலும் துறவு நிலை மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகின்றது. இந்த மதங்களில் மதத் தலைவர்களாகவும், போதகர்களாகவும் செயல்படுவதற்கு அடிப்படைத் தகுதியாக துறவு நிலை கருதப்படுகின்றது.

சூத்திரன் பணம் சம்பாதிக்கக் கூடாது; சொத்து சேர்க்கக் கூடாது; கல்வி கற்கக் கூடாது; வேதம் படிக்கக் கூடாது; வேள்வி நடத்தக் கூடாது; உயர் ஜாதியினருக்கு சரிநிகர் சமமாக வாழக் கூடாது; உயர் ஜாதியினரைப் பழிக்கக் கூடாது என்று மனுதர்மம் போடுகின்ற தடைகளை நாட்டில் வாழும் போது தான் மீற வேண்டியது வரும்.

அதனால் வாழ்வே மாயம் என்று ஒட்டுமொத்த சுக வாழ்க்கையையும் மாய்த்து விட்டு, காட்டுக்குப் போய் விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று நினைத்து காட்டுக்கும் அவன் ஓட முடியாது. அதற்கும் மனுதர்மம் முட்டுக்கட்டை போடுகின்றது.

உடுத்தும் உயர் ரக ஆடைகளைக் கூட இழந்து, உலகத்தைத் துறந்து, காடோ செடியோ கதி என்று காட்டை நோக்கி ஓடுகின்ற சூத்திரனுக்கு, அந்த உரிமை கூட இல்லை என்று மனுதர்மம் கூறுகின்றது.

ஒருவன் சந்நியாசியாகின்றான் என்றால் அவனது நிலை, இறந்தவனின் நிலையைப் போன்றது தான். அந்தச் சாவு நிலையைக் கூட அவன் சுதந்திரமாக அனுபவிக்கக் கூடாது என்றால் அதை விட வேறு என்ன அநியாயம் இருக்க முடியும்?

6:1 இல்லறத்தில் அறநெறிகளில் வாழ்ந்த துவிஜர்கள் (இருபிறவியாளர்கள் என்ற பிராமணர்கள்). தூயராய், புலனடக்கிப் பின்னர் வானப்பிரஸ்த ஆஸ்ரமம் அடைந்து வனங்களுக்குச் சென்று (பின்வரும் விதிகளின் படி) வாழக்கடவர்.

6:2 தன் உடலில் நரையும், திரையும் தன் பிள்ளை வயிற்றில் பிறக்கும் பிள்ளையையும் பார்க்கின்ற இல்வாழ்வான் அந்த வயதில் வானப்பிரஸ்தம் மேற்கொள்ள வேண்டும்.

6:3 விவசாயம் செய்து கிடைத்த உணவுப் பொருள், சொத்து, சுகங்கள் அனைத்தும் விட்டு மனைவியைப் பிள்ளையிடம் ஒப்புவித்து அல்லது அவன் விரும்பினால் அவளையும் தன்னுடன் வனம் செல்ல வேண்டியது.

6:4 காட்டில் வாழ்வதான மூன்றாம் நிலையைக் கழித்து, நான்காம் நிலையில் ஆசைகளை வென்று உலகத் தொடர்பனைத்தும் நீத்து துறவியாகி விடலாம்.

6:81 சம்மார பந்தங்களையும், மான அவமானங்களையும் நீக்கினவன் (சந்நியாசி) பிரம்மசாயுஜ்யம் பெறுவான்.

6:85 இவ்விதம். சந்நியாசம் பெறும் துவிஜன், மேலே கூறிய கடமைகளை முறையே செய்து பாவமனைத்தையும் இம்மையிலேயே நீத்து மேலாம் பிரம்ம நிலையை எய்துவான்.

மேற்கண்ட இந்த வசனங்களில் சந்நியாசம் என்பது பிராமணர்களின் ஏகபோக உரிமை; அதை சூத்திரர்கள் உரிமை கொண்டாட முடியாது என்று மனு குறிப்பிடுகின்றார்.

சந்நியாசம் என்பது துறப்பது; உலகியல் தொடர்புகளிலிருந்து நீங்குவது என்று பொருள் படுகின்றது. சட்ட மொழியில் சொல்வதென்றால் சந்நியாசம் என்பது உறவு உரிமை அற்றுப் போதல் ஆகும். எனவே, ஒருவன் சந்நியாசியாகின்றான் என்றால் அந்த கணத்திலேயே அவன் இறந்ததற்குச் சமமாகி அவனுக்குரியவற்றை அவனது வாரிசுகள் பெறுவதற்குரியவர்களாகி விடுகின்றனர்.

ஒரு சூத்திரன் சந்நியாசியானால், இந்த விளைவு தான் உடனடியாக நிகழக்கூடியது. இதனால், அந்த சூத்திரனுக்குத் தான் பாதிப்பே ஒழிய வேறெவருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.

பிறகு ஏன் இந்த விலக்கி வைப்பு? காரணம் சூத்திரன் சன்னியாசியானால் பிராமணனுக்குத் தொண்டு செய்ய மாட்டான். சூத்திரன் சன்னியாசியானால் அதன் பலனாக அவன் கடவுளை அல்லது பிரம்மனை அடைந்து விடுவான்; இது பிராமணர்களுக்கு உரிய சிறப்புரிமையை மீறுவதாகும். இவ்வாறு இந்து மதத் தத்துவமும் மனு தர்மமும் என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர் கூறுகின்றார்.

அவர் கூறுவது போலவே சூத்திரர்களுக்குத் துறவு வாழ்க்கை கிடையாது என்பதை இராமாயணமும் உறுதி செய்கின்றது.

உதாரணத்திற்கு, இராமாயணத்திலிருந்து சம்பூகன் வதை என்ற எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

ஒரு நாள் ஒரு பிராமணன், இறந்துபோன தனது பிள்ளையின் உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, ‘உனது கொடுங்கோலாட்சியில் நடந்த கதியைப் பார்’ என்று பலவிதமான வசை மொழிகளைப் பொழிந்து கதறினான்.

அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும் பொழுது, ‘சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணுகிறான்; அவனைக் கொல்லாமலிருந்த குற்றத்தால் இக்குழந்தையின் உயிர் நீங்கியது. அதனால் காலம் கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும்’ என்று அசரீரி வார்த்தை மொழிந்தது.

உடனே இராமன் காட்டிற்குச் சென்று, அந்தத் துறவியைப் பார்த்து, ‘நீ எதற்காக தவம் செய்கிறாய்?’ என வினவ, அதற்கு அவர், ‘இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை. உண்மை நிலை ஒன்றினையே விரும்புகிறேன்’ என்று விடை பகர்ந்தார்.

ராமன் சற்றுத் தயங்கினாலும் உடனே, ‘சூத்திரன் தவம் செய்யலாமா? இதனால் தானே பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்வது பாவமாகாது.இவனைக் கொல்வதால், இறந்துபோன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால், பெரும் புண்ணியத்தை அடைவோமே!’ என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து, ‘ஓ! வலக் கையே, இறந்து போன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர் பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்று அல்லவா?’ என்றான்.

இவ்வாறு இராமனால் சூத்திரன் சம்பூகன் வெட்டப்பட்டதும் செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பெற்றது என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

வழிபாடு ஒரு பொது உரிமை

வழிப்பாட்டு உரிமையை திருக்குர்ஆன் எந்த ஒரு சாராருக்கும் அல்லது எந்த ஒரு சாதிக்கும் தனியுடைமையாக்கவில்லை. அதைப் பொதுவுடமையாக்கி அதற்கு ஒரு பொதுப் பிரகடனத்தையும் உலகில் உள்ள ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் அது பிரகடனப்படுத்துகின்றது. இதோ அந்த உலகப் பிரகடனம்:

மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:21

துறவை வெறுக்கும் தூய இஸ்லாம்

வணக்கத்தைப் பொதுவுடைமையாக ஆக்கிய இஸ்லாம் மார்க்கம் சந்நியாச வாழ்க்கைக்குக் கதவு சாத்தி விடுகின்றது. அகில உலக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சம்சார வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கின்றார்கள். அந்த வாழ்க்கைக்கு மாற்றமாக வாழ்கின்ற வாழ்க்கை தனது வழி இல்லை என்று மறுத்து விட்டார்கள். அதாவது இஸ்லாத்தில் இதற்குத் தடை விதித்து விட்டார்கள்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினா தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?’ என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்’ என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்’ என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணந்து கொள்ள மாட்டேன்’ என்று கூறினார்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையைக் கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5063

இந்தத் திருக்குர்ஆன் உலக மக்களை நோக்கி அழைத்து, தன்னைப் படிக்கச் சொல்கின்றது.

மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், அருளும் வந்து விட்டன.

அல்குர்ஆன் 10:57

அல்குர்ஆனின் இந்த அழைப்பை ஏற்று அபிசீனிய நாட்டைச் சார்ந்த கன்னங்கருத்த அடிமையான பிலால், இஸ்லாத்தில் இணைந்த பிறகு குர்ஆன் எனும் வேதத்தைப் படிப்பது, மக்களைத் தொழுகைக்கு அழைப்பது போன்ற உயரிய பொறுப்பு வழங்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அவரது அந்தஸ்து ஆகாயத்திற்கு உயர்ந்தது.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின் போது பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பின் நிர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 1149

முஸ்லிம்கள் இறந்த பிறகு நிரந்தரமாகத் தங்கப் போகின்ற சொர்க்கத்தில் பிலால் (ரலி) அவர்களின் செருப்போசையை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றதாகக் கூறுகின்றார்கள். அந்த அளவுக்கு அவருடைய மரியாதையை இஸ்லாம் உயர்த்தியிருக்கின்றது. தீண்டாமையை எப்படி திருக்குர்ஆன் ஒழித்திருக்கின்றது என்று இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


மனு கூறும் சாதிக்கொரு நீதி

உலகத்தில் உள்ள எந்தச் சட்ட நூலாக இருந்தாலும் அந்த நூல்களில் உயிர் மூச்சாக இருப்பது ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாடு தான். செயல்பாட்டளவில் இல்லாவிட்டாலும் பெயரளவிலாவது இந்தக் கோட்பாடு ஏட்டில் இடம் பெற்றிருக்கும். அந்தக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைக்கின்ற ஒரு நூல் உலகத்தில் இருக்கின்றது என்றால் அது மனுதர்மம் என்ற அதர்ம நூல் தான்.

வைசியனுக்கு ஒன்று! சூத்திரனுக்கு ஒன்று!

8:277. புரோகிதனுக்கு அவதூறு இழைக்கும் க்ஷத்திரியனுக்கு நூறு பணமும், அவ்வாறு தவறு இழைக்கும் வைசியனுக்கு நூற்றைம்பது அல்லது இருநூறு பணமும், ஒரு அடிமையோ, தொழிலாளியோ தவறிழைத்தால் கசையடியும் விதித்தல் வேண்டும்.

பிராமணனுக்கு ஒன்று! க்ஷத்திரியனுக்கு ஒன்று!

8:276. பரஸ்பர பழித்தலைச் செய்த பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் அரசன் தண்டனை விதிக்க வேண்டும். பிராமணனுக்கு மிகக் குறைவாகவும், க்ஷத்திரியனுக்கு மிதமாகவும் விதித்தல் வேண்டும்.

மூன்று சாதிகளுக்கு ஒன்று!  முதன்மை சாதிக்கு வேறொன்று!

8:123. க்ஷத்திரியர் முதலான மூவகைக் கீழ் வர்ணத்தார் பொய் சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்து விட்டுப் பிறகு அவர்களை நாடு கடத்த வேண்டும். ஆனால் பிராமணராயின் நாடு கடத்தல் மட்டுமே செய்ய வேண்டும். இதிலும் மனு ஒரு விதிவிலக்கு அளித்துள்ளார்.

விபச்சாரத் தண்டனையில் வித்தியாசம்

8:377. மேன்மை மிக்கவளும் பிராமணனின் காப்பில் உள்ளவளுமான மனைவியை (க்ஷத்திரியன், வைசியன்) இவ்விரு சாதியைச் சேர்ந்தவரும் சேர்ந்தால் அவர்களுக்கு சூத்திரருக்குரிய தண்டனையே வழங்குதல் வேண்டும். அல்லது உலர்ந்த புல்லும் நாணலும் நிறைந்த படுக்கையிலிட்டு எரிக்கப்பட வேண்டும்.

8:374. இரு பிறப்பாளனின் மனைவியுடன் சோரம் போகும் சூத்திரன், அப்பெண் இல்லத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், காக்கப்படாவிடினும் பின்வரும் தண்டனைக்குள்ளாவான். காக்கப்படாத பெண்ணாயின் தன் சொத்துக்களை இழப்பதுடன் ஆண் குறியையும் வெட்டப்பட வேண்டியவனாகின்றான். காக்கப்பட்ட பெண்ணாயின் அவன் உயிரையும் பிற அனைத்தையும் அனைத்தையும் இழத்தல் வேண்டும்.

8:383. பிராமணர் இவ்விரு சாதியைச் சேர்ந்த காப்பிலுள்ள மனைவியுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும், சூத்திரப் பெண்ணுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும் அபராதம் விதிக்கப் பெறுதல் வேண்டும். க்ஷத்திரிய, வைசியருக்கும் அப்படியே!

மரண தண்டனையில் பாரபட்சம்!

8:379. பிராமணன் எத்தகைய பாவமோ, கலப்போ செய்த போதிலும் அவனைக் கொல்லக் கூடாது. ஏனையோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

8:380. எத்தகைய பாவத்தைச் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமலும், அவன் பொருளைக் கவர்ந்து கொள்ளாமலும் ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.

8:381. பிராமணனைக் கொல்வதை விட உலகத்தில் வேறு பெரிய பாவம் எதுவும் இல்லை என்பதால், பிராமணனைக் கொல்வதற்கு அரசன் மனத்தளவில் கூட நினைக்கக்கூடாது.

அனைத்து மனித உயிரும் ஒரு புனித உயிர் தான்

மனு தர்மம், பிராமணனின் உயிரைத் தான் புனிதமான உயிராகப் பார்க்கின்றது. சூத்திரனின் உயிரை உயிராகவே பார்க்கவில்லை. அதை மட்டமானதாகவும் மலிவானதாகவும் பார்க்கின்றது. இன்னும் சொல்லப் போனால் ஒரு சூத்திரனின் உயிருக்கு அவர்கள் ஒரு மயிர் அளவு மரியாதை கூட கொடுப்பது கிடையாது. ஆனால் அகில உலக மனித குலத்திற்கும் வழிகாட்டியான திருக்குர்ஆனோ ஒட்டு மொத்த உயிரையும் புனித உயிராகப் பார்க்கின்றது.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்” என்றும், “ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.

அல்குர்ஆன் 5:32

யூத சமுதாயம் தங்களைக் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்பவர்கள். தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதுபவர்கள். அவர்கள் விஷயத்தில் இறைத்தூதர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பாருங்கள்:

யூதன் ஒருவன், சிறுமி ஒருத்தியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கி விட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், “உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?’’ என்று கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (ஆம் என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டுத் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி (ஸல்) அவர்கள் அவனது தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனது தலை நசுக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2413

மரண தண்டனையை நிறைவேற்றுவதில் இறைத்தூதர் மாநபி முஹம்மது (ஸல்) அவர்கள் சிறுமி, முதியவர் என்ற வித்தியாசம் பார்க்கவில்லை. சிறுமியின் உயிர் புனிதமானது என்ற பார்வையைத் தான் பார்த்திருக்கின்றார்கள் என்பதை இந்தச் செய்தியில் நாம் பார்க்க முடிகின்றது.

உயிர் மட்டுமல்ல! உறுப்பும் புனிதமானது!

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம்.

அல்குர்ஆன் 5:45

இந்த வசனத்தின்படி மனித உறுப்பு ஒவ்வொன்றுமே புனிதமானது. பல்லை உடைத்து விடுவேன் என்பது நம்மிடம் சர்வ சாதாரணமாக உலா வரும் பேச்சாகும். இது பேச்சுடன் நின்று விட்டால் பரவாயில்லை. உண்மையில், உடைத்து விட்டால் அதற்குத் தண்டனையாக உடைத்தவனுடைய பல்லை உடைக்க வேண்டும். இதில் உயர் குலத்தவனுக்கு ஒரு நீதி தாழ்குலத்தவனுக்கு வேறு ஒரு நீதி என்பது இஸ்லாத்தில் கிடையாது.

8:383. பிராமணர் இவ்விரு சாதியைச் சேர்ந்த காப்பிலுள்ள மனைவியுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும், சூத்திரப் பெண்ணுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும் அபராதம் விதிக்கப் பெறுதல் வேண்டும். க்ஷத்திரிய, வைசியருக்கும் அப்படியே!

மனுவின் இந்த வசனத்தின்படி உயர் சாதிக்காரனான பிராமணன், சூத்திரப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் அபராதம் மட்டும் தண்டனை! அதே சமயம் சூத்திரன், பிராமணப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் ஆண் குறியை அறுக்க வேண்டும்!

என்ன அபத்தமான சிந்தனை! அபாயகரமான தண்டனை! உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு தண்டனை இருப்பதாகத் தெரியவில்லை. மனு தர்மத்தில் தான் இந்தத் தண்டனை கூறப்பட்டிருக்கின்றது.

இந்துமதமும் யூத மதமும்

யூத மதத்தினர் உலகில் தங்களை உயர் சாதியினராகக் கருதக் கூடியவர்கள். அவர்களுக்கு தவ்ராத் வேதம் வழக்கப்பட்டிருந்தது. திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது அந்த வேதம் கூறும் சட்டமாகும். முஹம்மது நபி (ஸல்) ஆட்சி செய்த இஸ்லாமிய அரசாங்கத்தின் சட்டமும் அது தான்.

ஆனால் யூதர்கள் விபச்சாரத்திற்கு மரண தண்டனை கொடுக்காமல் விபச்சாரம் செய்தவர்களின் முகங்களில் கரி பூசி, கேவலப்படுத்தி, கசையடி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு தடவை முகத்தில் கரி பூசப்பட்டு, கசையடி கொடுக்கப்பட்ட ஒரு யூதர், நபி (ஸல்) அவர்களைக் கடந்து அழைத்துச் செல்லப்படும் போது நபி (ஸல்) அவர்கள் அந்த யூதர்களைக் கூப்பிட்டு, “விபச்சாரம் செய்தவர்களுக்குரிய தண்டனை உங்கள் வேதத்தில் இப்படித் தான் உள்ளதா?” என்று கேட்டார்கள். அதிலும் குறிப்பாக அவர்களில் உள்ள அறிஞர் ஒருவரைக் கூப்பிட்டு “(உங்கள் இறைத்தூதர்) மூஸாவின் மீது தவ்ராத் வேதத்தை இறக்கிய அந்த இறைவனை முன்னிறுத்திக் கேட்கின்றேன். தவ்ராத்தில் இப்படித் தான் உள்ளதா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்டிருக்காவிட்டால், உங்களுக்கு (பின்வரும்) உண்மையைச் சொல்லியிருக்க மாட்டேன். ‘கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்’ என்று தான் தவ்ராத்தில் உள்ளது. ஆனால் எங்களில் உயர் குலத்தார்களிடம் விபச்சாரம் அதிகமாகி விட்டது. விபச்சாரக் குற்றத்தில் உயர் குலத்தாரை நாங்கள் பிடிக்கும் போது அவர்களை விட்டு விடுவோம். பலவீனமானவர்களை (அதே குற்றத்தில்) பிடித்தால் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுவோம். (இது அநியாயமாகத் தெரிகின்றதே என்று கருதி) நாங்கள், ‘மக்களே! வாருங்கள். உயர் குலத்தார், பலவீனர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை ஏற்படுத்தி அதை நாம் அனைவருக்கும் பொதுவாக நிறைவேற்றுவோம்’ என்று கரி பூசி, கசையடி கொடுப்பதைத் தண்டனையாக ஆக்கினோம்” என்று அவர் பதிலளித்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்துவிட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்” என்று கூறிவிட்டு, சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: பர்ரா பின் ஆஸ்ஃப் (ரலி)

நூல்: முஸ்லிம் 3505

உயர் குலத்திற்கு ஒரு நீதி, கீழ் குலத்தாருக்கு ஒரு நீதி என்பதில் யூதர்களும் இந்துக்களும் ஒரே மாதிரியாக உள்ளனர் என்பதை இந்தச் செய்தி விளக்குவதுடன் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கொள்கையில் சமரசமில்லா உறுதியான நிலைப்பாட்டை கடைபிடித்திருப்பதைப் பார்க்கின்றோம். இந்த அடிப்படையில் திருமணம் முடித்த ஒரு பிராமணன் விபச்சாரம் செய்தாலும் கல்லெறி தண்டனை தான். ஒரு சூத்திரன் விபச்சாரம் செய்தாலும் கல்லெறி தண்டனை தான்.

திருமணம் முடிக்காதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு 100 கசையடிகள் கொடுக்க வேண்டும். இதைத் திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்ஆன் 24:2

இதுதான் திருக்குர்ஆனின் சட்டம். இந்தச் சட்டத்தின் நோக்கம் சமூகத்திலிருந்து விபச்சாரம் ஒழிக்கப்படவேண்டும். அதற்குச் சட்டம், அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

ஆனால் மனு சொல்கின்ற சட்டம் பிராமணன் மட்டும் மேய்ந்து கொண்டிருப்பான்! அவனைத் தண்டிக்காமல், கண்டு கொள்ளாமல் விட்டு விடவேண்டும். ஆனால் சூத்திரன் விபச்சாரம் செய்தால் அவனது ஆண்குறி அறுக்கப்படவேண்டும், கொல்லப்பட வேண்டும். இது என்ன நியதி? என்ன நீதி?

இப்போது உங்களுக்கு எந்த வேதம் வேண்டும்? அனைவருக்கும் ஒரே குற்றவியல் சட்டத்தை அளித்து, சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக்கி, தீண்டாமையை ஒழித்துக் கட்டுகின்ற திருக்குர்ஆன் வேண்டுமா? அல்லது குற்றவியல் சட்டத்திலும் தீண்டாமையை நிலை நாட்டுகின்ற மனு சாத்திரம் வேண்டுமா? என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

ஒட்டுமொத்தக் குலத்திற்கும் ஒரே நீதியைச் சொல்வதை விட்டு விட்டு, மனு சாத்திரம் ஒரு குலம் சார்ந்த (அ)நீதியை மட்டும் சொல்கின்றது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற சமநீதிக் கொள்கை, கோட்பாட்டை காற்றில் பறக்க விடுகின்றது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நெறியை வலுவாகப் பற்றிப் பிடித்து நிற்கின்றது.

மனிதர்கள் அனைவரும் கடவுளின் அடிமைகள்! அந்த அடிமைகளில் ஆள்வோருக்கு ஒரு சட்டம்; ஆளப்படுவோருக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை. மனுதர்மத்தைப் போல் பிராமணர்களுக்கு ஒரு சட்டம்; சூத்திரர்களுக்கு ஒரு சட்டம் என்று வேறுபாடு காட்டவில்லை.

திருக்குர்ஆனின் சட்டத்தைச் செயல்படுத்திக் காட்டிய திருத்தூதர் (ஸல்) அவர்கள், சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதைக் கடுகளவு கூட அனுமதிக்கவில்லை.

குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)

இதுபற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?” என்று கருதினார்கள். உஸாமா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?” என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.

உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்” என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3475

உயர் குலத்தவர்களாக இருந்தால் அவர்களுக்குத் தனிச் சட்டம் இல்லை; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை, தன் மகளை முன்னிறுத்தி அகில உலகத்தின் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கின்றார்கள். அகில உலகத்தின் பொதுவேதம் திருக்குர்ஆன், நீதி வழுவாமல் நடக்க வேண்டும் என்று ஒரு வலுவான கட்டளையை இடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:8

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்தத் திருக்குர்ஆனின் கட்டளை அடிப்படையில் நீதி வழுவாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்தார்கள். இதற்குக் காரணம், திருக்குர்ஆன் வேதம் ஒரு குலத்துக்கு மட்டும் வழிகாட்டியல்ல; அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வழிகாட்டியாகும்.


கடவுளாக்கப்பட்ட பிராமணன்! காலில் மிதிக்கப்படும் சூத்திரன்

பிராமணன் கடவுள் தன்மை கொண்டவன். அவனை மற்ற சாதியினர் வணங்க வேண்டும் என்று மனு சாத்திரம் கூறுகின்றது.

7:73. அரசன் காலையில் துயிலெழுந்து, மூன்று வேதங்களையும், அறநூல்களையும் ஆய்ந்துணர்ந்து பிராமணனை வணங்கி, வழிபட்டு, அவர் அறிவுரையையும் பின்பற்றி நடப்பானாக!

7:38. வேதங்களைக் கற்றுணர்ந்தவராகவும், தூயவராகவும் உள்ள முதிய பிராமணனை மன்னன் நாள்தோறும் வழிபடுவானாக!

உலகைப் படைத்த பிராமணன்?

11:35. பிராமணனே இந்த உலகைப் படைத்தவன் என இதன் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் இருந்து எல்லா உயிர்களுக்கும் புரவலனாக விளங்குபவன் என்பதால் அவனை எடுத்தெறிந்து பேசுதலும், பழித்துரைத்தலும் ஆகாது.

இருமுறை பிறக்கும் பிராமணன்

2:169. துவிஜனுக்கு முதல் பிறப்பு தாயாலும், இரண்டாவது பிறப்பு உபநயனத்தாலும், மூன்றாவது பிறப்பு வேள்வி முயல்வதாலும் உண்டாகிறதென்று வேதம் கூறுகின்றது.

உபநயனம்: சமீபத்தில் அழைத்துச் செல்தல்

உபநயனம் என்றால் சமீபத்தில் அழைத்துப் போகிறது. எதற்கு, அல்லது யாருக்கு சமீபத்தில்? குருவுக்கு சமீபத்தில்தான்.

பிராமணனைத் திட்டினால் நாக்கை வெட்ட வேண்டும்

8:270. சூத்திரன், இரு பிறப்பாளரைக் கடுஞ்சொற்களால் நிந்தித்தால், அவன் நாக்கை அறுத்தல் வேண்டும். ஏனெனில் பிரம்மனின் கீழான பாகத்தில் அவன் பிறந்தவன்.

பழுக்கக் காய்ச்சிய கம்பியை வாயில் திணிக்க வேண்டும்

8:271. அவன் பெயரையும், சாதியையும் நிந்தித்தால் உதாரணமாக, “தேவதத்தா, பிராமணக் குப்பையே!” என்றால் பத்து விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஆணியை அவன் வாயில் நுழைத்தல் வேண்டும்.

பிராமணனுக்கு கட்டளையிட்டால் காதில் ஈயத்தை ஊற்ற வேண்டும்

8:272. கர்வத்தால், பிராமணன் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பது பற்றிக் கட்டளையிட்டால், அவன் வாயிலும், காதிலும் காய்ச்சிய எண்ணெயை ஊற்றுமாறு அரசன் கட்டளையிடுதல் வேண்டும்.

அங்கத்தால் தாக்கினால்  தாக்கிய அங்கத்தைத் துண்டிக்க வேண்டும்

8:279. இழிகுலத்தில் பிறந்தவன் உயர் குலத்தானை எந்த அங்கத்தினால் தாக்கினானோ அல்லது புண்படுத்தினானோ அந்த அங்கத்தைத் துண்டித்தல் வேண்டும். அல்லது காயத்தின் அளவுக்குத் துண்டிக்க வேண்டும். இதுவே மனு விதித்த நீதி.

கையோங்கினால் ஓங்கிய கையை வெட்ட வேண்டும்

8:280. சினத்தினால் கை ஓங்கியோ, தடி எடுத்தோ ஒருவனை அடித்தால், அடித்தவன் கையையும் உதைத்த காலையும் வெட்ட வேண்டியது.

சரியாசனத்தில் அமர்ந்தால் இடுப்பில் சூடு போடவேண்டும்

8:281. உயர்சாதிக்காரனுடன் இழிசாதிக்காரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அந்த ஆணவச் செயலுக்காக இடுப்பில் சூடு போடுதல் வேண்டும். அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். அல்லது அவனது ஆசனத்தில் ஒரு வெட்டுப்புண் ஏற்படுத்திட அரசன் ஆணை பிறப்பித்தல் வேண்டும்.

துப்பினால் உதடுகளை வெட்ட வேண்டும்

8:282. ஆணவத்தால் அவன் துப்பினால், அரசன் அவனது இரு உதடுகளையும் வெட்டிடல் வேண்டும். அவன் மீது சிறுநீர் பெய்தால் ஆண்குறியை வெட்டிடல் வேண்டும். அவன் மீது குசு விட்டால் ஆசனத்தை வெட்டிடல் வேண்டும்.

8:283. பிராமணனின் முடியைப் பிடித்து இழுத்தாலோ, காலைப் பிடித்து வாரினாலோ, தாடியை, கழுத்தை, விதையைப் பிடித்து இழுத்தாலோ அவன் கையை வெட்டி விடுமாறு அரசன் தயங்காமல் ஆணையிடுதல் வேண்டும்.

தீயைப் போன்ற தெய்வீகத் தன்மை

9:317. எவ்வாறு நெருப்பானது வைதீகக் காரியங்கள் செய்வதற்குப் பயன்பட்டாலும், பயன்படாவிட்டாலும் தெய்வத் தன்மையுடன் விளங்குகிறதோ அவ்வாறே ஒரு பிராமணன் கற்றறியாதவனாகவோ, மூடனாகவோ இருந்தாலும் மேன்மையானவனாகவே இருக்கிறான்.

9:319. பிராமணர்கள் எவ்வகையான இழிந்த தொழில்களைச் செய்த போதிலும் அனைத்திலும் அவர்கள் போற்றுதற்கு உரியவராவர். ஏனென்றால் அவர்கள் மனித அறிவுக்கு எட்டாத ஒரு வகைத் தெய்வீகத் தன்மை பெற்றவராவார்.

மேற்கண்ட மனுவின் சுலோகங்கள் அத்தனையும் பிராமணன் ஒரு கடவுள்; அதனால் அவனை வணங்க வேண்டும். மற்ற சாதியினர் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும்; பிராமணனை எதிர்த்துப் பேசக் கூடாது; எதிர்த்துப் பேசினால் மேற்கூறப்பட்ட கொடுமையான, காட்டுமிராண்டித்தனமான முறையில் தண்டிக்க வேண்டும். இது தான் இந்த சுலோகங்களின் சாராம்சம்.

அதாவது, மனிதன் கடவுளாக்கப்பட்டுள்ளான். மனிதன் கடவுளாக முடியுமா? கடவுள் என்றால் யார் என்ற கேள்விக்கு  விடை கண்டு விட்டால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு விடும்.

கடவுள் என்றால் யார்? இதோ திருக்குர்ஆன் அதற்கான விடையைத் தருகின்றது.

அல்லாஹ் ஒருவன்’’ எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன், அத்தியாயம் 112

இவை கடவுளுக்குரிய குறைந்தபட்ச இலக்கணம். இந்த இலக்கணத்தில் எவன் இருக்கின்றானோ அவன் தான் கடவுள். இத்தகைய தன்மைகளைக் கொண்டவன் ஒரே ஒருவனாகத் தான் இருக்க முடியும்! பலராக இருந்தால் அந்தக் கடவுள்களுக்கு மத்தியில் யார் உயர்ந்தவன் என்ற பிரச்சனை ஏற்பட்டு விடும். அது கடவுள்களுக்கு மத்தியில் சண்டையையும், போரையும் உருவாக்கி விடும். கடவுள் என்றால் அது ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்றும், கடவுள் என்றால் அவனுக்கு மனைவி, மக்கள் இருக்கக் கூடாது என்றும் அவன் யாருக்கும் பிள்ளையாக இருக்கக் கூடாது என்றும் திருக்குர்ஆன் திட்டவட்டமாகக் கூறுகின்றது.

அவன் உணவு உண்ணுபவனாக இருக்கக் கூடாது; அவனே உணவு அளிப்பவன்.

அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை.

அல்குர்ஆன் 6:14

அவன் உறங்குபவனாக இருக்கக் கூடாது. அவனுக்கு அசதியோ, தூக்கமோ இருக்கக் கூடாது. அவன் என்றும் எப்போதும் உயிருள்ளவனாக இருக்க வேண்டும்; சாகக் கூடியவனாக இருக்கக் கூடாது.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

அல்குர்ஆன் 2:255

இவ்வாறு கடவுள் தன்மையைப் பற்றி திருக்குர்ஆன் விளக்குகின்றது.

இஸ்லாத்தின் கொள்கை முழக்கமான லாயிலாஹ இல்லல்லாஹு (வணக்கத்திற்குரிய ஒரே ஒரு கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்ற கொள்கைப் பிரகடனம், ஒப்பற்ற இறைவனின் இந்த தனித் தன்மைகளையும், தனிப்பண்புகளையும் உள்ளடக்கிய சாராம்சமாகத் திகழ்கின்றது.

தன்னைக் கடவுள் என்று வாதிடுபவன் அல்லது கடவுளின் உடலிலிருந்து உருவானவன் அல்லது கடவுளின் முகத்திலிருந்து படைக்கப்பட்டவன் என்றால் அவனுக்கு மேற்குறிப்பிட்ட பலவீனங்கள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவன் கடவுள் கிடையாது. அவன் ஓர் அற்பமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்ட மனிதன். அவனை ஒருபோதும் வணங்க முடியாது.

உயிருள்ள மனிதனே கடவுளாக முடியாது எனும் போது கல், மண், மரம், மட்டை எல்லாம் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதை இந்த இடத்தில் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திருக்குர்ஆன் இப்படிப்பட்ட உடைக்க முடியாத கடவுள் கொள்கை மூலமாகத் தான் மக்களிடமிருந்த சாதிய, குல ஏற்றத் தாழ்வுகளைத் தவிடுபொடியாக்கியது. இதன் மூலம் மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது என்பதை ஐயத்திற்கு அப்பாற்ப்பட்ட முறையில் நிரூபித்து, மனு தர்மத்தின் அசத்தியக் கொள்கையையும் அண்டப் புளுகையும் அடித்து வீழ்த்தி விடுகின்றது.

முகத்திலிருந்து படைக்கப்பட்ட முதன்மைப் படைப்பா பிராமணன்?

1:93. பிராமணன் பிரஜாபதியின் முகத்திலிருந்து தோன்றியவன் என்பதாலும், முதலாவதாகத் தோன்றி யவன் என்பதாலும், வேதங்களைப் பெற்றிருப்பதாலும், படைக்கப்பட்ட யாவற்றை விடவும் தலைவனாகும் உரிமையைப் பெற்றிருக்கிறான்.

1:94. தேவர்களுக்கு நெய்சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் இந்த உலகத்தை அழிவிலிருந்து காக்கவும் தக்கவனாகப் பிராமணனைச் சுயம்புவான பிரம்மா தமது முகத்திலிருந்து முன்னதாகப் படைத்தார்.

2:35. பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார்.

இது மனு தர்மத்தின் அடுத்த அசத்தியக் கொள்கை மற்றும் அண்டப்புளுகாகும்.

கடவுளின் மொத்த உடலும் புனிதமானது. ஒரு பேச்சுக்கு மனு சொல்வது போன்று கடவுளின் முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளிலிருந்து மனிதர்கள் உருவாகியிருந்தால் அவர்கள் அத்தனை பேர்களும் புனிதமானவர்கள் தான்.

பாதத்திலிருந்து பிறந்ததால் அவர்கள் கேவலமானவர்களாக ஆக மாட்டார்கள். என்னதான் இருந்தாலும் அவர்கள் கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள். கடவுளின் புனிதத்தில் முகம் உயர்ந்தது; பாதம் தாழ்ந்தது என்று பேதம் கற்பிக்க முடியாது. இதனால் தான் கடவுள் சிலையின் காலில் விழுந்து வணங்குகிறார்கள். இந்த லாஜிக்கின்படியும் இது சுத்தப் பொய்யும் புளுகும் ஆகும்.

மொத்தத்தில், மனிதர்களின் மூலம் கடவுள் அல்ல! அப்படியானால் மனிதர்களின் மூலம் என்ன? இதை இஸ்லாத்தின் அடிப்படையில் பார்ப்போம்.

மனிதன் ஒரு மண்பாண்டமே!

மனிதனின் மூலம் மண்ணால் ஆனதாகும். இதோ உண்மையான கடவுள், திருக்குர்ஆனில் சொல்வதைக் கேளுங்கள்:

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.

பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

அல்குர்ஆன் 23:12, 13, 14

மனிதனைக் கடவுள் படைத்தது களி மண்ணிலிருந்து தான் என்று இவ்வசனம் ஆணித்தரமாகச் சொல்கின்றது.

இப்லீஸே! எனது இரு கைகளால் நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’’ என்று (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 38:75

மனிதனைத் தன் இரு கைகளால் படைத்தேன் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் கடவுளின் நெற்றி, தோள், தொடை, பாதம் ஆகியவற்றிலிருந்து மனிதர்கள் உருவானார்கள் என்ற போலித் தத்துவத்தையும் பொய்யான சித்தாந்தத்தையும் திருக்குர்ஆன் சுக்குநூறாக உடைத்துத் தள்ளுகின்றது.

மனிதனின் மூலம் கடவுளின் உடல் என்று வரும்போது தானே இந்தப் பேதம் வருகின்றது. அப்படியொரு வாதமே எழாத அளவுக்கு இஸ்லாம் மனிதனின் மூலத்தைத் தெளிவாக விளக்கி விடுகின்றது.


ஒருவனே தேவன்! ஒன்றே குலம்!

ஒரே கடவுள் என்ற வட்டத்திற்குள் உலக மக்கள் வந்து விட்டால் கடவுள் நம்பிக்கையில் அவர்களுக்கு மத்தியில் ஓர் இணக்கம், ஐக்கியம் ஏற்பட்டு அதன் மூலம் தத்துவ ரீதியில் அவர்கள் ஒரே குலமாகி விடுகின்றனர். அந்த ஒற்றுமை வெறும் சிந்தனையாக ஏட்டளவில் இருக்கக்கூடாது. அது செயல்பாட்டளவில் வந்து விட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அதைத் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 49:13)

மனித இனம் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஜோடியிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இனம், நிறம், நாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

ஒரு மனிதனுக்கு மரியாதை, அந்தஸ்து, தகுதி அனைத்தும் அவன் தன்னைப் படைத்த இறைவனை எந்த அளவுக்கு அஞ்சுகின்றானோ அதைப் பொறுத்து தான். பிறப்பால், பணத்தால், நிறத்தால், இனத்தால் உயர்வு, தாழ்வு ஏற்படுவதில்லை என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

இறைவனின் அன்பு, ஒரு குறிப்பிட்ட நாட்டவருக்கு – இனத்தவருக்கு – குடும்பத்தாருக்கு – மொழியினருக்குத் தான் கிடைக்கும் என்பதில்லை.

ஒரு வெள்ளையன் இறைவனுக்கு மாற்றமாக நடந்தால் அவன் இறைவனின் அன்பை, மரியாதையைப் பெற முடியாது. அதே சமயம் ஒரு கருப்பன் இறைவனை அஞ்சி நடந்தால் அவன் இறைவனின் அன்பை, மரியாதையைப் பெற முடியும்.

அதே போல் வெள்ளையனும் இறைவனைப் பயந்து நடக்கும் போது இறைவனிடம் உயர்ந்தவனாகி விடுகின்றான். ஒரு கருப்பன் இறைவனுக்கு மாற்றமாக நடந்தால் அவன் இறைவனிடம் தாழ்ந்தவனாகி விடுகின்றான்.

தூய்மையான துலாக்கோல்

ஒரு சாராரை நெற்றியில் பிறக்க வைத்து, அவர்களுக்கு உயர்வையும் மற்றொருவரைக் காலில் பிறக்க வைத்து அவர்களுக்குத் தாழ்வையும் கொடுப்பது இறைப்பண்பு அன்று! இது ஓர் அநியாய அளவுகோல் ஆகும். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதோ தூய்மையான துலாக்கோல் ஆகும்.

மனு தர்மம், பைபிள் போன்று இறைவனை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் திருக்குர்ஆன் சொந்தமில்லை. உலகில் உள்ள மனித இனம் அனைத்தும் அவனது படைப்பு! அந்த மனித இனம் ஒரேயொரு ஜோடியிலிருந்து பிறந்திருக்கின்றது என்று கூறி ஒரு நொடியில் உலகில் உள்ள நிறம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்து பேதங்களையும் தகர்த்தெறிந்து விடுகின்றது.

குலம், கோத்திரம்

மனிதன் ஒரு சமூகப் பிராணி! அவன் கூட்டாகத் தான் வாழ்ந்தாக வேண்டும். அந்தக் கூட்டு வாழ்க்கைக்கு யாராவது ஒருவன் தலைமைப் பொறுப்பேற்கின்றான். சமூகத்தில் இதனால் அவனது குடும்பத்திற்கு ஒரு மதிப்பு கிடைக்கின்றது. பிறகு அந்த ஊரை, அந்த நாட்டை, தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பம் ஆண்டு வருகின்றது. அது மன்னர் பரம்பரை என்று அழைக்கப்படுகின்றது.

அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் ஒரு சீர்திருத்தச் சிந்தனைவாதி தோன்றியிருப்பான். அதனால் அந்தக் குடும்பம் மதிக்கப்படும். இந்தச் சமூக அந்தஸ்து, தலைமுறை தலைமுறையாகத் தொடரும்.

இப்படிப் பல்வேறு காரணங்களால் ஒரு குடும்பம் சமுதாயத்தில் மரியாதையைப் பெறுகின்றது. இப்படி மரியாதை பெறும் இந்தக் குடும்பம் தங்களுக்கு மத்தியில் மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்கின்றது. மற்ற குடும்பங்களில் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்வது கிடையாது. தங்கள் குடும்பங்களுக்கென்று சில மரபுகளையும், விதிமுறைகளையும் வைத்துக் கொண்டு, வரம்புகளை வகுத்துக் கொண்டு தங்களைச் சிறந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

குரைஷிகளின் குலவெறி!

இதற்கு உதாரணமாக, அரபியாவின் குரைஷிக் குலத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர்.

இவர்கள் தங்களை ஹுமுஸ் என்று அழைத்துக் கொண்டனர். ஹுமுஸ் என்றால் கடுமை, கடினம் என்று பொருளாகும். குரைஷிகள் தங்கள் மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர். (நவவீயின் முஸ்லிம் விரிவுரை)

இவர்கள் ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டால் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்; முடி, கம்பளியினால் ஆன ஆடைகளை அணிய மாட்டார்கள். மக்காவுக்கு வந்தால் இந்த ஆடைகளைக் களைந்து விடுவர். (இது அப்துல் அஜீஸ் பின் இம்ரான் அல்மதனீ என்பார் கூறும் விபரமாகும்.)

குரைஷிகளிடம் குரைஷி அல்லாதவர் யாரேனும் பெண் பேசி வந்தால், தங்கள் பிள்ளை தங்கள் மார்க்கத்தில் தான் இருப்பாள் என்று நிபந்தனையிட்டே திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் சம்பந்தம் கொள்கின்ற கிளையாரில் தாய்கள் மட்டும் ஹுமுஸைச் சார்ந்தவர்கள் ஆவர். (பத்ஹுல் பாரி)

தகர்க்கப்பட்ட தனித்துவம்

ஆரம்ப காலத்தில் இவர்களது முன்னோர்கள் சீர்திருத்தவாதிகளாக, இறைத்தூதர்களாக இருந்ததால் கஅபா எனும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெறுகின்றனர். அதை வைத்துத் தங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஹஜ் என்பது மக்கள் அனைவரும் மக்காவில் ஒன்று கூடுவதாகும். அப்படி ஒன்று கூடும் மக்கள், மக்காவில் கஅபா எனும் ஆலயத்திற்கும், முஸ்தலிபா என்ற இடத்திற்கும், அரஃபா என்ற இடத்திற்கும் கண்டிப்பாக வருகையளிக்க வேண்டும்.

ஆனால் இந்தக் குரைஷிகளோ மற்ற மக்களைப் போன்று அரஃபாவுக்கு வர மாட்டார்கள். முஸ்தலிபா என்ற இடத்திற்கு மட்டும் வருகையளிப்பார்கள்.

மக்காவில் தூய இஸ்லாம் வருவதற்கு முன்னால் ஹும்ஸ் கிளையாரைத் தவிர மற்ற மக்கள் நிர்வாணமாகவே கஅபாவைச் சுற்றி வந்துள்ளனர். ஹும்ஸ் என்றால் குரைஷிகளும் அவர்களது சந்ததிகளும் ஆவர். அவர்களில் ஓர் ஆண் இன்னோர் ஆணுக்கு தவாஃப் (கஃபாவை சுற்றி வருவதற்காக) செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும் மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1665

(தவாஃப் என்றால் கஃபாவை வலம் வருதலாகும்)

அல்குர்ஆன் அடிக்கும் சாவுமணி

இந்த அறியாமைக் காலப் பழக்கத்திற்கு, அகந்தைக்கு, குலவெறிக்குத் தான் அல்குர்ஆன் சாவுமணி அடிக்கின்றது.

மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! (2:199) என்ற வசனம் குரைஷிகள் தொடர்பாக இறங்கியது தான். (புகாரி 1665)

அல்குர்ஆனின் இந்த ஆணைப்படி குரைஷிகளின் குடும்ப வெறி அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப்படுகின்றது. அதன்படி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும் போது அவர்கள் குரைஷிக் குடும்பத்தவராக இருந்தாலும் அரஃபாவில் வந்து நிற்கின்றார்கள்.

அதைப் பார்த்து மற்ற குரைஷிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், “இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம் (ரலி)

நூல்: புகாரி 1664

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரஃபாவில் தங்காமல் தங்கள் வழக்கத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வார்கள் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக் காலத்துப் பழக்கத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப முடிவு கட்டிவிடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்; அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

ஹஜ் – ஒரு தீண்டாமை ஒழிப்பு மாநாடு

குரைஷிக் குலத்தைச் சார்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மற்ற மக்களைப் போன்று அரஃபாவிற்குச் சென்று குலவெறியை உடைத்தெறிகின்றார்கள். இதற்குக் காரணம் ஹஜ் ஒரு தீண்டாமை ஒழிப்பு மாநாடாகும்.

இஸ்லாம், உலகத்தில் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஐந்து நேரத் தொழுகைகளின் போது மக்களைக் கூட்டாக தொழச் செய்கின்றது. அதாவது அந்த கூட்டுத் தொழுகையின் போது ஏழை ஒரு பணக்காரரின் பக்கத்தில் நிற்பார். பணக்காரர் ஏழையின் பக்கத்தில் நிற்பார். ஒரு சிவப்பு நிறத்தவர் கருப்பு நிறத்தவர் பக்கத்தில் நிற்பார். அவர் மேனி இவர் மேனியில் உரசும்; இவர் மேனி அவர் மேனியில் உரசும். வரிசையில் ஒருவர் பின் ஒருவர் நின்று தொழும்போது ஒருவரது கால் பின்னால் நிற்பவரின் தலையில் படும். முந்தி நிற்பவர் ஏழையாகவும் பிந்தி நிற்பவர் பணக்காரராகவும் இருப்பார்; முந்தி நிற்பவர் பணியாளராக இருப்பார். பிந்தி நிற்பவர் முதலாளியாக இருப்பார். இப்படி ஒரு சந்திப்பை ஐந்து நேரத் தொழுகையின் போது அன்றாடம் அந்தந்த ஊர் பள்ளிவாசல்களில் இஸ்லாம் அமைத்துக் கொடுத்து உள்ளூர் அளவில் தீண்டாமையை ஒழிக்கின்றது.

உலக அளவில் பல மொழி பேசுபவர்களை, பல நிறத்தவர்களை பல நாட்டவர்களை உலகின் பல பாகங்களிலிருந்து வரவழைத்து, அவர்கள் பிரதமர்களாக இருக்கலாம்! ஜனாதிபதிகளாக இருக்கலாம்! அவர்களை சாமானிய மக்களுடன் கஅபா எனும் ஆலயத்தில் வலம் வரச் செய்து தீண்டாமையை ஒழிக்கின்றது. அன்று முஹம்மது நபி அவர்கள் ஒழித்த அந்தத் தீண்டாமை ஒழிப்பு இன்னும் தொடர்கின்றது. உண்மையில் இது இஸ்லாம் தீண்டாமை ஒழிப்புக்கு எதிராக இதுவரை நடைமுறைப்படுத்துகின்ற செயல் திட்டமாகும்

சம்பந்தியும் சமபந்தியும்

தீண்டாமை தொடர்வதற்கு உயர் குலத்தார், உயர் குலத்தாருடன் மட்டுமே திருமண சம்பந்தம் கொள்வது ஓர் அடிப்படைக் காரணமாக அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் இந்தக் குடும்ப வெறியைத் தகர்க்கும் வகையில், தன்னிடம் வளர்ந்த ஸைத் என்ற அடிமைக்கு, குரைஷிக் குலத்தைச் சார்ந்த தனது அத்தை மகள் ஸைனபைத் திருமணம் செய்து வைக்கின்றார்கள். இது அரபுலகிற்கு ஓர் அதிசய நிகழ்வாகும். இவ்விருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு விவாக விலக்கு நிகழ்ந்தாலும், அரபகத்தில் நிலவிய ‘உயர் குலத்தவர்கள் தங்களுக்குள் தான் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும்’ என்ற மரபு உடைக்கப்பட்டு விட்டது.

அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுவது போல் குலம் குறுக்கே நிற்காத வண்ணம், இறையச்சம் தான் சம்பந்தத்திற்குரிய அளவுகோல் என்று நிலைநாட்டி, தீண்டாமையைத் தகர்த்தெறிந்தார்கள்.

1980களில், நெல்லை மாவட்டம், மீனாட்சி புரத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மதத்தை விட்டு வெளியே போய் விடக் கூடாது என்பதற்காக இந்து மதத் தலைவர்கள் சமபந்தி போஜனம் நடத்தினார்கள்.

அப்போது அந்த மக்கள் எழுப்பிய கேள்வி இது தான். சமபந்தி போஜனம் வேண்டாம்! சம்பந்தி போஜனம் நடத்த முடியுமா? இந்தக் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் ஒருபோதும் பதில் சொல்ல முடியாது. காரணம் அவர்களின் திருமணம், மனுசாத்திரம் சொல்வது போன்ற குலரீதியான, சாதி அடிப்படையிலான திருமணம். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதோ கொள்கை அடிப்படையிலான திருமணமாகும்.

தாழ்த்தப்பட்டவர் தளபதியான அதிசயம்

தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3730

இதுவரை நாம் கண்டது உயர்குலம் என்ற ரீதியில் ஏற்பட்ட தீண்டாமையாகும். இனி இதர காரணிகளால் ஏற்படுகின்ற தீண்டாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளையும் அவற்றிற்குத் திருக்குர்ஆன் தருகின்ற தீர்வுகளையும் இப்போது பார்ப்போம்.

ஆட்சியாளர்களும் அடிமைகளும்

அடுத்து, தீண்டாமையை உருவாக்குவதில் ஆட்சியதிகாரம் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. பொதுவாக ஒருவனுக்கு அதிகாரம் வந்தவுடனேயே அவன் மற்றவர்கள் தனக்குப் பணிய வேண்டும்; பாதத்தில் விழ வேண்டும் என்று நினைக்கத் துவங்கி விடுகின்றான்.

எனவே ஆள்பவன் கடவுள் நிலைக்கும், ஆளப்படுபவன் அடிமை நிலைக்கும் போய் விடுகின்றான். இதனால் ஆள்பவனின் குடும்பத்தார் உயர் ஜாதியினராகவும், ஆளப்படுபவனின் குடும்பத்தார் தாழ்ந்தவர்களாகவும் கருதப்படும் நிலை உருவாகி விடுகின்றது. இந்த வாசலையும் இஸ்லாம் அடைக்கின்றது

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் இருந்த அரபிகள், பாரசீகர்கள், ரோமாபுரியினர், கிரேக்கர்கள், இந்தியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிடம் ஈரடுக்கு வர்க்கங்கள், மூன்றடுக்கு வர்க்கங்கள், நான்கடுக்கு வர்க்கங்கள் இருந்தன. எனவே, அப்போது அருளப்பெற்ற திருக்குர்ஆன் அரபகத்தை மட்டும் கவனத்தில் கொள்ளவில்லை. முழு மனித சமுதாயத்தையும் கவனத்தில் கொண்டது.

மனித குலத்தில் உள்ள இந்த வேறுபாடுகளின் வேரை நோக்கி, குர்ஆன் தனது தூர நோக்குப் பார்வையை, தீர்க்கமான சிந்தனையைச் செலுத்தியது. தீண்டாமை என்ற நோயின் காரணத்தைக் கண்டறிந்தது.

அன்றிருந்த ஆளும் வர்க்கங்கள் தங்களிடம் தெய்வீகத் தன்மை இருப்பதாகப் பறைசாற்றினர். குடிமக்களின் உள்ளங்களிலும், உணர்வுகளிலும் அதை உறையச் செய்தார்கள். இதன் விளைவாக அந்த மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை, சாதாரண ஆட்சியாளர்கள் என்று பார்க்காமல் கடவுளர்களாகப் பார்த்தனர். அவர்களுக்கு வணக்கமும் செலுத்தினார்கள்.

ஆட்சியாளர்கள் தெய்வங்கள் ஆயினர்; மக்கள் அடிமைகளாயினர். ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கையில் திளைத்தார்கள்; குடிமக்களோ சுரண்டப்பட்டார்கள்.

ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை

அவனன்றி (உண்மையான அந்த கடவுளன்றி) நான் தான் வணக்கத்திற்குரியவன்” என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

(அல்குர்ஆன் 21:29)

மேற்கண்ட திருக்குர்ஆனின் இந்த வசனம் மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; எனவே அவையும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றது.

தான் ஒருவன் மட்டுமே கடவுள்! தன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; எதுவுமில்லை என்று இறைவன் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

ஏற்கனவே மேலே நாம் சுட்டிக் காட்டிய கடவுளுக்குரிய பண்புகளை, ஆட்சித் தலைவர்களுக்குப் பொருத்திப் பார்த்தோம் என்றால் ஆட்சித் தலைவர்களைக் கடவுளாக்கும் அநியாயம் தடுக்கப்பட்டு, அதனால் ஏற்படுகின்ற தீண்டாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் தலைகாட்டாமல் தவிர்க்கப்படும்.

ஆள்கின்ற ஆட்சியாளர்களும் மனிதர்கள் தான்; அவர்களும் அல்லாஹ்வின் அடிமைகள் என்று ஆகிவிடும் போது மக்கள் அனைவரும் வெள்ளையர், கருப்பர், ஆள்வோர், ஆளப்படுவோர் என்று வேறுபாடு எதுவுமின்றி அல்லாஹ்வின் அடிமைகள் என்றாகி விடுகின்றனர். வல்ல இறைவனைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எஜமானர்கள் யாரும் இல்லை. அவன் ஒருவன் தான் அவர்களுக்கு எஜமானன். அதாவது அவன் ஒருவனே தேவன்; மற்றவர்கள் அனைவரும் அடிமைகளே!

தரை மட்டமாக்கப்படும் தனி மனித வழிபாடு

அரசனுக்குச் சிரம் பணிதல் என்ன? அவன் வரும் போது எழுந்து கூட நிற்கக் கூடாது என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாம் மார்க்கம்.

மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமக்காக மற்றவர்கள் எழுந்து நிற்பதைத் தடை செய்கின்றார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன், ‘‘பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க, மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்’’ என்று கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 701

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை என்றாலும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மது 12068, திர்மிதி 2678

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். “தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.

நூல்: அபூதாவூத் 4552

தொண்டன் எப்படி இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றானோ அப்படித் தான் தலைவனும் படைக்கப்பட்டிருக்கிறான். எனவே ஒரு குடிமகன் தன்னுடைய ஆட்சியாளனிடம் ஒரு நொடிப் பொழுது கூடத் தனது தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்கின்ற தூய மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான். உலகில் எந்தவொரு மார்க்கமும் சொல்லாத ஓர் உயரிய, ஒப்பற்ற தன்மான உணர்வை இஸ்லாம் போதிக்கின்றது.

பிரஞ்சுப் புரட்சி

குலம், கோத்திரத்தால் தீண்டாமை ஏற்படுவது போல் செல்வத்தாலும் தீண்டாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்டதற்குக் காரணம், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏற்பட்ட வேறுபாடு தான். பிரான்ஸ் தேசிய சட்டசபையில் பாதிரியார்கள், பிரபுக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என மூன்று சாரார் இருந்தனர். இம்மூன்று சாராரில் ஆளும் வர்க்கத்தினருக்கும், பணக்கார வர்க்கத்தினருக்கும் ஜால்ரா போடும் பாதிரியார்கள் மற்றும் பிரபுக்கள் ஆகியோருக்குத் தான் வாக்குரிமை இருந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கு வாக்களிக்க உரிமை இல்லை.

வாக்களிக்கும் போது தலைகளை எண்ணுங்கள்; தரத்தை எண்ணாதீர்கள் என்று நடுத்தர வர்க்கத்தினர் கோரினர். ஆனால் மன்னர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தோன்றியது தான் பிரஞ்சுப் புரட்சி!

இப்படி செல்வம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்களால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளையும் இஸ்லாம் தகர்க்கின்றது.

தடுக்கப்பட்ட தனி அவை

முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் மக்காவில் உள்ள உயர்குலத்துத் தலைவர்கள், ‘எங்களுக்கு ஒரு சந்திப்பை நீங்கள் அளிக்க வேண்டும்; ஆனால் அந்த சந்திப்பின் போது உங்களுடைய கொள்கையை ஏற்றுக் கொண்ட இந்த ஏழைகள், அடிமைகள் உங்களுடன் இருக்கக் கூடாது’ என்று நிபந்தனையிட்டனர். அவ்வாறு நிபந்தனையிட்டதற்கு உயர்சாதி மனப்பான்மை தான் காரணம். காலா காலம் இந்த ஏழைகளையும், அடிமைகளையும் தங்கள் பக்கம் அண்டவிடாமல் தூரத்திலேயே வைத்திருந்தனர்.

உயர்குலத்துத் தலைவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஏழைகளும், அடிமைகளும் நபியவர்களுடன் இருப்பது அவர்களுக்கு ஒரு தடைக்கல்லாக இருந்தது. அதனால் இந்தக் கோரிக்கையை நபி (ஸல்) அவர்களிடம் வைக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களை அந்த நிபந்தனையின் அடிப்படையில் சந்திப்பதற்கு முடிவு செய்து விடுகின்றார்கள். அதைக் கண்டித்து இறைவனிடமிருந்து கண்டனக் கட்டளை வருகின்றது. அந்த கண்டனம் இதோ:

(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன் 6:52)

ஏழைகளுக்கு ஓர் அவை; செல்வந்தர்களுக்கு ஓர் அவை என்று ஈரவை அமைக்கும் உயர்சாதி மனப்பான்மையை இந்த வசனம் அடித்து நொறுக்கி விடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களுக்கு நபிகளாரின் நாணயத்தின் மீது நம்பிக்கை இருந்தது. நாற்பது வருடங்களாக அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையைப் பார்த்த அம்மக்கள், இறைத்தூதர் என்று முஹம்மது பொய் சொல்கின்றார் என நினைக்கவில்லை.

அவர்களிடம் உள்ள முக்கியமான தயக்கம் காலா காலம் கட்டிக் காத்து வந்த சாதி அமைப்பை இவர் உடைத்தெறிகின்றார். உயர் குலத்தைச் சேர்ந்த இவர், தங்களால் இழிகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்ளை தம்மோடு சமமாக அமர வைக்கின்றார். இவரோடு நாமும் சேர்ந்தால் அனைவரையும் சமமாக ஆக்கி விடுவார் என்ற அச்சம் தான் நபிகள் நாயகத்தை ஏற்பதற்குப் பெரிய தடையாக அம்மக்களுக்கு இருந்தது.

எனவே தான் அவர்களுக்குத் தனிச் சபையையும், தங்களுக்குத் தனிச் சபையையும் ஏற்படுத்தினால் இஸ்லாத்தை ஏற்கத் தயார் என்று அவர்கள் கோரினார்கள்.

செல்வமும், செல்வாக்கும் மிக்கவர்கள் இஸ்லாத்தில் சேர்வது பலம் சேர்க்கும் என்று நினைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதைச் சரி என நினைத்தார்கள். இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம் என்பது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நினைத்தார்கள் என்பதை முஸ்லிம் என்ற நூலில் 2413 எண்ணில் பதிவான ஒரு செய்தி இதைத் தெரிவிக்கின்றது. அதைக் கண்டிக்கும் விதமாகத் தான் மேற்கண்ட வசனம் இறங்கியது என்று அந்த ஆதாரப்பூர்வமான செய்தி தெரிவிக்கின்றது.

ஆனால் இறைவனுக்கு அதில் உடன்பாடில்லை. இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் அனைவரும் சமம் என்ற அடிப்படையையும் சேர்த்து ஏற்றாக வேண்டும். தமக்கு வசதியானதை மட்டும் ஏற்று, மற்றதை ஏற்க மறுப்பவர்களுக்காக வளையத் தேவையில்லை. அவர்கள் வரத் தேவையில்லை என்பது தான் அல்லாஹ்வின் நிலையாக இருந்தது.

எனவே தான் மேற்கண்ட வசனத்தில் கடுமையாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான். ஏற்கனவே முழு இஸ்லாத்தை ஏற்றவர்களுடன் தான் இருக்க வேண்டுமே தவிர பாதி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவோரின் செல்வம், செல்வாக்கு போன்றவற்றால் கவரப்பட்டுவிட வேண்டாம் என்று கண்டிக்கின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

கண் தெரியாத தோழருக்குக் கண்ணியம் கொடுத்த குர்ஆன்

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் 10 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.

ஆதாரம் : திர்மிதி – 3452, 3328,

முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

(அல்குர்ஆன் 80:1-10)

ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்ற பலவீனரை விட, இஸ்லாத்தை ஏற்காதவர் பிரமுகர் என்பதற்காக நபிகள் நாயகம் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதால் எவ்வளவு கடுமையான சொற்களால் இறைவன் கண்டிக்கிறான் என்பதைக் காணும் போது பெரும் பாவமான இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக, குலத்தால் உயர்வு கற்பித்தல் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் காரியம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த விஷயத்திற்காக மிகவும் கடுமையாகக் கண்டிக்கப் பட்டுள்ளதால் தான் முஸ்லிம்கள் சாதி, குலம், நிறம், மொழி, இனம், தேசம் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பதைக் காண முடியவில்லை. எத்தனையோ சட்டங்கள் போட்டு ஒழிக்க முடியாத தீண்டாமையை அடியோடு இஸ்லாம் ஒழித்துக் கட்டியதற்கு இத்தகைய கடுமையான நிலைபாடே காரணமாக இருக்கின்றது.

சாதாரண மக்களுக்காகத் தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்பதால் தான் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது என்பது முஸ்லிம்களின் இரத்தங்களில் இரண்டறக் கலந்து விட்டது.

தொண்டருக்கு ஸலாம் கூறும் தலைவர்

செல்வம், செல்வாக்கு மிக்கவர்களுக்காக ஏழைகளின் உணர்வைக் காயப்படுத்தும் அந்தக் காட்டுத்தன்மை, ஏழைகளின் இயக்கமான இஸ்லாம் மார்க்கத்தை உலகுக்குக் கூற வந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக அதை முளையிலேயே கிள்ளி எறிகின்றான். ஒரு தலைவர் தொண்டரிடத்தில் பார்க்க வேண்டியது இறையச்சம், மார்க்கப் பற்று ஆகிய அம்சங்களைத் தானே தவிர செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை அல்ல என்று வல்ல அல்லாஹ் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறான். அத்துடன் இன்னொரு விஷயத்தையும் தன் தூதரிடம் அழுத்தமாகப் பதிவு செய்கின்றான்.

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:54)

இன்று உலகில் தொண்டர்கள் தான் தலைவருக்கு முகமன், வாழ்த்துச் சொல்ல வேண்டும். மாணவர் தான் ஆசிரியருக்கு முகமன் சொல்ல வேண்டும். மனைவி தான் கணவனுக்கு முகமன் சொல்ல வேண்டும்.

இந்தக் கலாச்சாரத்தை மாற்றியமைத்து, தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தொண்டர்களுக்கு ஸலாம் சொல்லுமாறு இறைவன் கட்டளையிடுகின்றான்.

ஏழைகளுக்கு இஸ்லாம் மார்க்கம் கொடுக்கும் மரியாதையைப் போன்று வேறு எந்த இயக்கமும் மரியாதை வழங்குமா? இந்த இயக்கத்தில் தீண்டாமை எள்ளளவு, எள் முனையளவாவது தலை காட்ட முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

அடிமைத் தளையை அகற்றிய குர்ஆன்

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 7:157)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது பணிகளைப் பட்டியலிடும் போது அடிமைத்தளைகளை, விலங்குகளை அகற்றுவதையும் குறிப்பிடுகின்றான். ஆம்! அடிமைத்தனத்தை அகற்றுவது என்பது அந்த இறைத்தூதரின் பணி.

அந்த அடிப்படையில் அவர்கள் பல்வேறு சட்டங்கள் மூலம் அடிமைத்தனத்தை அழித்தொழிக்கின்றார்கள். இதனால் ஏற்படுகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதனை படைக்கின்றார்கள்.

அடிமைகள் எனப்படுவோர் உலக முழுவதும் அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் இலக்காயினர். அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டு, மிருகத்தை விடவும் கீழாக நடத்தப்பட்டனர். சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டனர். மனித சுதந்திரம், நாகரிகம் பேசிய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் இந்த அநியாயத்திலும் அக்கிரமத்திலும் முன்னணி வகித்தன.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், அடிமைகள் வாழ்வில் விடுதலை என்னும் விளக்கேற்றி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார்கள். திருக்குர்ஆன் அந்தத் திட்டத்தை அவர்களுக்கு வழங்கியது.

மனிதன் பாவம் செய்யக்கூடியவன். அவன் செய்யக்கூடிய பல பாவங்களுக்கு அடிமையை விடுதலை செய்வதைப் பரிகாரமாக ஆக்கி, அடிமைத்தனத்தை அகற்றி அப்புறப்படுத்தியது.

உதாரணத்திற்குப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக, திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.

அல்குர்ஆன் 5:89

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒரு காரியத்தை ஒருவர் செய்வேன் என்றோ அல்லது செய்யமாட்டேன் என்றோ முடிவெடுக்கலாம். ஆனால் மனிதன் என்ற அடிப்படையில் இதை மீறி விட்டால் அதற்கு ஓர் அடிமையை விடுதலை செய்வதைத் திருக்குர்ஆன் பரிகாரமாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக மேற்கண்ட வசனத்தைக் கூறியுள்ளோம். இப்படிப் பல பாவங்களுக்கு அடிமை விடுதலையைப் பரிகாரமாக்கி அடிமைத் தளையை திருக்குர்ஆன் ஒழித்தது.

தேசியம் மற்றும் மொழி வெறி

மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக, தேசப்பற்றும் மொழிவெறியும் திகழ்கின்றன. இது இன்னொரு தேசத்துக்காரனையும் மொழி பேசுபவனையும் அந்நியப்படுத்திப் பார்க்க வைக்கின்றது. அவனை மட்டரகமாக நினைக்க வைத்து அதன் மூலம் ஒரு தீண்டாமையை உருவாக்குகின்றது

இலங்கை பற்றி எரிந்ததற்கும், இலட்சக் கணக்கான உயிர்கள் பலியானதற்கும் இந்த மொழி வெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழிவெறி தான் காரணம்.

இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)

நூல்: முஸ்லிம் 3440

இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம், மொழி உணர்வு!

என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். தீமைக்கும், தீண்டாமைக்கும் வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழி வெறியின் குரல்வளையைப் பிடித்து இஸ்லாம் நெறித்து விடுகின்றது.

எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும், உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”

(நூல்: அஹ்மத் 22391)

மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதர முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.

இவை அனைத்தும் உணர்த்தும் உண்மை என்ன? தீண்டாமை, ஏற்றத்தாழ்வு போன்ற சமூகக் கொடுமைகள் எந்த சந்துபொந்து வழியாகவும் நுழைந்து விடாத அளவுக்கு, அவை நுழையக் கூடிய அத்தனை வாசல்களையும் திருக்குர்ஆன் அடைத்து விடுகின்றது.


தீண்டாமை ஒழிப்பில் தோற்றுப் போன திட்டங்கள்

இந்தியாவில் புரையோடிப் போன தீண்டாமையைக் களைய, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த, பிற இனங்களைச் சார்ந்த சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தனர்.

நாத்திகம்

கடவுள், விதி, பாவம், புண்ணியம், வேதம் போன்றவற்றின் மீது கொண்ட நம்பிக்கையும் தீண்டாமைக்கு ஒரு காரணம் என்று முடிவு கட்டி, கடவுள் கிடையாது என்று நாத்திகத்தின் பால் சென்றார் ஈ.வெ. ராமசாமி.

கடவுள் கிடையாது; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; காட்டுமிராண்டி என்று அவர் தமிழக மக்களிடம் போதிக்கலானார். சாதிய ஒழிப்புக்கு அவர் எடுத்துக் கொண்ட இந்த ஆயுதத்திற்குப் படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. பல அறிஞர்கள் இந்தக் கொள்கையில் விரைவாகக் கவரப்பட்டனர்.

இதற்காக இவர் திராவிடர் கழகம் என்ற அமைப்பைக் கண்டார். அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், எம்.என். நடராஜன், கருணாநிதி போன்றோர் இந்த இயக்கத்தில் ஐக்கியமாயினர். தமிழகமெல்லாம் இந்தப் புரட்சித் தீயைக் கொண்டு சென்றனர்.

புரட்சித் தீயில் பொசுங்கிய புராணங்கள்

அவர்கள் கொளுத்திய புரட்சித் தீயில் புராணங்கள் பொசுங்கின. அவர்களின் எரிமலைப் பேச்சுக்களில் இதிகாசங்கள் எரிந்தன. பூணூல் போட்ட பார்ப்பனர்கள் இவர்களது பொறி பறக்கும் பேச்சில் பொரிந்து போனார்கள்.

அண்ணாத்துரை எழுதிய ஆரிய மாயை என்ற நூல், ஆரியத்தின் வீரியத்தை அரவமில்லாமல் அடக்கியது. நாத்திகக் கொள்கை இந்த வகையில் ஓரளவு பலனளித்தது; சாதி ஒழிப்பு இதன் மூலம் நடைபெற்றது.

சாதிக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று! ஆரியம் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அஸ்திவாரமாக இருக்கும் வர்ணாசிரம தர்மம் துடைக்கப்பட வேண்டும்; தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால் அதற்காகக் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்க முடியுமா? என்று நாத்திகக் கொள்கையைப் பலரால் ஏற்க முடியவில்லை. அந்த வகையில் அந்தக் கொள்கை தோற்றுப் போனது. அத்துடன் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டு தி.மு.க. உருவானது. அதிலிருந்து பிரிந்து அ.தி.மு.க. உருவானது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொள்கை பின்னுக்குப் போனது. ஆட்சியைத் தக்க வைப்பது தான் அதன் குறியானது. இறுதியில், ஆரியத்தை வீழ்த்தப் புறப்பட்ட திராவிடம், ஆரியத்திடம் தோற்றுப் போனது. ஆம்! ஆரிய பி.ஜே.பி.யிடம் கூட்டணி வைத்து, செயல்பாட்டில் மட்டுமல்ல! சிந்தனையளவிலும் ஆரியமெனும் ஆக்டோபஸிடம் மாட்டிக் கொண்டது.

தீண்டாமையை ஒழிப்பதற்கு நாத்திகம் என்ற வாகனத்தில் புறப்பட்டு வந்த திராவிட இயக்கங்கள் அரை நூற்றாண்டு காலத்திற்குள் சாதியத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஆரியத்திடம் சரணாகதி அடைந்தன. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றத் தான் முடிந்ததே தவிர அனைவரும் பிராணமர் ஆகலாம் என்ற மாற்றத்தைத் தர முடியாமல் ஆனது.

கல்வி

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால் சாதியம் கரைந்து விடும் என்று கருதி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண் திறப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் புரட்சியாளர்கள், புதிய சிந்தனைவாதிகள் செய்தனர்.

காலங்காலமாக அழுத்தப்பட்ட இந்த மக்கள் ஏற்கனவே முன்னேறிய சமுதாயத்தவருடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முடியாது. அதற்கு இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதி இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தனர்.

நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டைத் தாண்டி விட்டது. கல்வியாலும் தீண்டாமை ஒழிந்தபாடில்லை; ஒழியப் போவதுமில்லை. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு தான் கைர்லாஞ்சி சம்பவம். மகராஷ்ட்ரா மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள கைர்லாஞ்சியில் நான்கு தலித்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர். அவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இந்த நால்வரும் கல்வியறிவு பெற்றிருந்தது தான். (இது குறித்து “தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே” என்ற கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது,)

அவர்கள் கல்வியறிவு பெற்றது அந்தச் சமூகத்தில் கவுரவம் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை; அவர்கள் களப்பலி ஆவதற்குத் தான் வழிவகுத்திருக்கின்றது. எனவே கல்வியறிவு பெற்றுவிட்டால் சாதியம் ஒழிந்து விடும் என்று நாம் கனவு காண முடியாது.

பொருளாதாரம்

தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்று விட்டால் சாதியம் ஒழிந்து போகும் என்று கருதி, அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டன; வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களில் இன்று பொருளாதாரத்தில் சிகரத்தைத் தொட்டவர்கள் இருக்கிறார்கள்; இமயத்தில் ஏறியவர்களும் இருக்கிறார்கள்.

என்ன தான் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் ஒரு பிராமண வீட்டில் போய் திருமணம் செய்ய முடியுமா? பிராமண ஆச்சாரம் அவர்களிடத்தில் சம்பந்தம் கொள்ள அனுமதிக்குமா? ஆசீர்வதிக்குமா? ஒரு போதும் அனுமதிக்காது.

ஒரு தாழ்த்தப்பட்டவரிடம் சரியான பண வசதியிருக்கலாம். ஆனால் அதன் மூலம் பிராமண குடும்பத்தில் சம்பந்தம் பண்ண உதவாது. எனவே இந்த வகையில் பொருளாதார முன்னேற்றத்தினால் சாதியம் ஒழிந்து விடாது. சமூக அந்தஸ்து கிடைத்து விடாது.

ஆட்சியதிகாரம்

இவ்வளவு காலம் அடங்கிப் போன மக்களிடம் ஆட்சி, அதிகாரம் வந்து விட்டால் இந்த இழிநிலை மாறிப் போய் விடும்; தீண்டாமையெனும் கோட்டை தகர்ந்து போய் விடும் என்றெண்ணி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் உயர் பதவிகள் அளித்தன. இட ஒதுக்கீட்டிலும் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றால் எதிர்பார்த்த தீர்வைத் தர முடியவில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர், இந்திரா காந்தி அமைச்சரவையில் இராணுவ அமைச்சராகப் பணி புரிந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள்.

இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும். இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், ஒரு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததால் அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, உயர்ஜாதிக்காரர்கள் கங்கை நீரால் அதைக் கழுவினார்கள். இந்த நிகழ்வை இந்தியா மறந்திட முடியுமா?

இங்கே ஆட்சி, அதிகாரத்தில் இருந்து விட்டால் தீண்டாமை தொலைந்து விடும் என்பது தொலைவான கருத்து என்பதை நாம் உணரலாம். எனவே அமுக்கப்பட்ட ஓர் இனம் ஆளும் வர்க்கமாகி விட்டால் அதற்கு அந்தஸ்து வரும்! ஆனால் தீண்டாமை அகலாது; அழியாது என்பதற்கு ஜெகஜீவன் ராமின் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு!

இட ஒதுக்கீடு முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில் கூட பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியினர் ஜெயித்து விடுகின்றார்கள். அதன் பின் அவர்கள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகவே போராடுகின்றார்கள். இது தான் அரசியலில் இட ஒதுக்கீடு பெற்ற தலித்துகளின் நிலை.

கலப்புத் திருமணம்

கலப்புத் திருமணம் செய்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று கூறி அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவும் எடுபடாமல் போனது.

தமிழகத்தில் சாதியக் கட்சிகள் பெருக்கெடுத்து, அவற்றின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது. தேவர் சமுதாயம் தங்களுக்கென ஒரு அமைப்பையும், நாடார் சமுதாயம் தங்களுக்கென ஒரு பேரவையையும் வன்னியர்கள் தங்களுக்கென ஒரு கட்சியையும் உருவாக்கி சமுதாயத்தின் வாக்குகளை தங்கள் கட்சிகளுக்கு வாரிக் கொண்டிருக்கின்றனர்.

“வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை” என்பது ஒரு சமுதாயத்தின் முழக்கம். வாக்கே அடுத்தவருக்கு இல்லை எனும் போது வாழ்க்கை அடுத்த சமுதாயத்திற்கு எப்படிக் கிடைக்கும்? அது எப்படித் தாரை வார்க்கப்படும்? அதன் விளைவு தான் உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன் படுகொலைகள். கலப்புத் திருமணத்தால் பலியான உயிர்கள்.

எனவே கலப்புத் திருமணமும் கானல் நீரானது; கால வேகத்தில் சாதியக் கட்சிகளின் வெள்ளப் பெருக்கில் கரைந்து போனது.

ஆக, கல்வி, பொருளாதாரம், ஆட்சியதிகாரம், கலப்புத் திருமணம் என்று தீண்டாமைக்கு எதிராகக் கிளம்பிய திட்டங்கள் எதுவும் தீர்வாகவில்லை; திருப்புமுனை ஆகவில்லை. அதிலும் அண்மையில் தமிழகத்தில் விஷ விருட்சங்கள் போல் முளைத்துக் கிளம்பி, பெருகி வரும் சாதிக் கட்சிகளும் அவற்றின் சாம்ராஜ்யங்களும் இங்கு சாதிகள் ஒழியாது என்பதற்குச் சரியான சாட்சிகள். திராவிட இயக்கங்களின் சாதிய ஒழிப்பு தோல்வி கண்டதற்கு இவை தலைசிறந்த எடுத்துக்காட்டுகள்.

குறைபட்ட சிந்தனையும் குறுகிய வட்டமும்

தீண்டாமை என்பது தமிழகத்தில் மட்டுமோ, அல்லது இந்தியாவில் மட்டுமோ தொற்றி நிற்கும் நோயல்ல! உலகமனைத்திலும் பற்றிப் பரவி மக்களை அழிக்கும் ஒரு கொடிய, கோரத் தீ! எனவே அதற்குரிய தீர்வு ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கக் கூடாது. தீண்டாமையை ஒழிக்க நாம் மேலே கண்ட தீர்வுகள் எல்லாம் தமிழக அளவில், அல்லது இந்திய அளவில் தான் அமைந்திருக்கின்றன. உலக அளவில் தீண்டாமை ஒழிப்பிற்குப் பொருந்தக் கூடியவையாக இல்லை.

ஆப்பிரிக்கா இதுவரை தீண்டாமை எனும் தீயில் எரிந்து, கரிந்து கொண்டிருக்கின்றது. இதற்கு யார் தீர்வு தருவது? ஆப்பிரிக்கா மட்டுமல்ல! அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் அனைத்துக் கண்டங்களிலும் நிலவுகின்ற தீண்டாமையைத் துடைத்தெடுக்கும் வகையில் உலகளாவிய தீர்வாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், வட்டாரம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அது குறைவுபட்ட குறுகிய சிந்தனையாகவே அமையும்; தூர நோக்குடன் கூடிய சிந்தனையாக அமையாது.

அப்படிப்பட்ட தூர நோக்குள்ள திட்டம் எங்கு இருக்கின்றது? எதில் இருக்கின்றது?

இந்து மதம்

இந்து மதத்தில் இருக்கின்றதா? என்று பார்த்தால் அங்கு இல்லை என்று சொல்வதை விட, அதுதான் மனுசாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சாதியத்தின் வேராகவும், விருட்சமாகவும் அமைந்திருக்கின்றது என்பதை மேலே நாம் விரிவாகப் பார்த்தோம்.

புத்த மதம்

சட்ட மேதை என்று வர்ணிக்கப்படும் டாக்டர் அம்பேத்கர், தீண்டாமைக்குத் தீர்வு புத்த மதம் தான் என்று தன்னுடைய தொண்டர்களுடன் புத்த மதம் புகுந்தார்.

அக்டோபர் 2ஆம் தேதியன்று அம்பேத்கரின் புத்த மதப் பிரவேசத்தின் அடையாள நாள். ஆம்! லட்சக்கணக்கான தொண்டர்களுடன் அம்பேத்கர் புத்த மதம் புகுந்ததன் ஐம்பதாவது ஆண்டு நினைவு நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் மேலே நாம் குறிப்பிட்ட கைர்லாஞ்சி தலித் படுகொலைச் சம்பவம் நடைபெறுகின்றது. அதைத் தொடர்ந்து இரண்டு ரயில்கள் கொளுத்தப்படுகின்றன. மகராஷ்ட்ரா முழுவதும் வன்முறை பற்றி எரிகின்றது.

மகராஷ்ட்ராவில் தான் அம்பேத்கரின் புத்த மதத் தழுவல் நடைபெற்றது. இந்த மதமாற்றம் நடந்து அரை நூற்றாண்டுகள் ஆன பின்னர் அதே மகராஷ்ட்ராவில் நடைபெற்றுள்ள இந்த வன்முறைச் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? அம்பேத்கரின் புத்த மதத் தழுவல் தீண்டாமைக்குத் தீர்வாகவில்லை என்பதையே காட்டுகின்றன.

பைபிளிலும் தீண்டாமைக்குத் தீர்வில்லை!

உலகளாவிய மதங்கள் என்று எடுத்துக் கொண்டால் கிறிஸ்துவ மதத்தைக் குறிப்பிடலாம். இவர்களின் வேதமான பைபிளிலும் தீண்டாமைக்குத் தீர்வில்லை என்பது உண்மையாகும்.

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனியத்தின் மறு பதிப்பு தான் அது! பிறப்பால் தான் யூதராக முடியுமே தவிர, மத மாற்றம் அங்கு இல்லை. கிறித்தவ மதத்திலும் தீண்டாமைக்குத் தீர்வு இல்லை.

பைபிள் கூறுவதைக் கேளுங்கள்:

அன்னியன் ஒருவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. ஆசாரியன் வீட்டில் தங்கி இருக்கிறவனும் கூலி வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

(லேவியராகமம் 22:10)

ஆசாரியனுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

(லேவியராகமம் 22:12)

ஆசாரியர் (புரோகிதர்) குலத்தில் பிறந்து விட்ட பெண், அன்னிய ஜாதிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் அவளும் அந்த ஜாதியில் சேர்ந்து விடுவாள் என்று பைபிள் கூறுகின்றது.

அப்போது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடம்) வந்து, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள்” என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

அப்போது அவருடைய சீடர்கள் வந்து, “இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே! இவளை அனுப்பி விடும்” என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர் “காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப் பட்டேனே அன்றி மற்றபடி அல்ல” என்றார்.

அவள் வந்து, “ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்” என்று அவரை நோக்கிப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். அதற்கு அவள், “மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க் குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே!” என்றாள்.

(மத்தேயு 15:22-27)

இந்தச் சம்பவத்தில், இஸ்ரவேல் புத்திரர்களை பிள்ளைகள் என்றும், கானானிய இனத்தவர் நாய்களைப் போன்றவர்கள் என்றும் பைபிள் கூறுகின்றது. வர்க்க பேதத்தை, வர்ணாசிரம தத்துவத்தை பைபிள் ஆதரிப்பதற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

மேலும் இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாருக்காகவும் தாம் அனுப்பப்படவில்லை என்று இயேசு கூறியதாகவும் மேற்கண்ட வசனம் கூறுகின்றது. இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதற்குக் கிறித்தவ மார்க்கம் தயாராக இல்லை.

கடவுள் என்பவன் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தான். பூமியில் வேறு யாருக்கும் இல்லை.

(இரண்டாம் ராஜாக்கள் 5:15)

நாம் பிறப்பால் யூதர்கள். நாம் யூதரல்லாத பாவிகள் இல்லை.

(கலாத்தியர் 2:15)

உலகளாவிய அளவில் பைபிள் தன்னிடம் தீண்டாமைக்குத் தீர்வில்லை என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டது. இந்திய மற்றும் தமிழக அளவில் இதற்கு எப்படித் தீர்வு கிடைக்கும்?

இதனால் தான் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் அங்கு தலித் கிறித்தவர்களாகவே வாழ்கின்றனர். நாடார்கள் கிறித்தவ மதத்திற்குச் சென்றாலும் கிறித்தவ நாடார்களாகவே இருக்கின்றனர்.

தீண்டாமைக்கு தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

தீண்டாமையைப் பெயரளவுக்கு இல்லாமல் செயலளவில் ஒழித்து காட்டியது திருக்குர்ஆனும், அதைப் போதிக்க வந்த திருத்தூதர் (ஸல்) அவர்களும் தான் என்பதை இதுவரை கண்ட செய்திகளிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் தீண்டாமையை அல்ல! உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில், பல்வேறு கோணங்களில் பரவிப் பீடித்துள்ள இந்தத் தீண்டாமை நோயைத் தீர்க்கும் மருந்து திருக்குர்ஆனிலும், அது கூறும் திருத்தூதரின் பாதையிலும் தான் உள்ளது என்பதை இதன் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இந்தியாவில் தீண்டாமையிலிருந்தும் இதர ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு, விமோசனம் பெறுவதற்கு ஒரே ஒரு தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே என்று அந்தத் திருக்குர்ஆனின் பக்கம் மக்களை அன்புடன் அழைக்கின்றோம்.


மாற்றம் தரும் மாமறை

ஏகன் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் எனும் ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக இறைவனால் ஏராளமான தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்தூதர்களுடன் மக்களுக்கு வழிகாட்டும் நெறியாகப் பல வேதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் இறைவனால் இறுதித் தூதராக நியமனம் செய்யப்பட்டவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அவர்களுடன் இறுதி வேதமான திருக்குர்ஆன் அகில மக்கள் யாவருக்கும் ஒரு பொதுமறையாக அருளப்பட்டுள்ளது.

‘‘ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய (திருக்குர்ஆன் எனும்) வேத அறிவிப்பு தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4981

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்றும், திருக்குர்ஆனால் அதிக மக்கள் இந்த ஏகத்துவத்தின் பக்கம் வந்த வண்ணம் இருப்பார்கள் என்றும் இந்தச் செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது.

இந்த அற்புதத்தை நாம் கண்கூடாக இன்று கண்டு கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

உலக அரங்கில் ஒவ்வொரு சாராரும் தங்கள் கொள்கையைச் சார்ந்த புனித நூல் என்று சில நூற்களைச் சமர்ப்பிக்கின்ற பொழுது, அவற்றில் உள்ள முரண்பாடான விஷயங்களையும், ஒழுக்கமற்ற பல செய்திகளையும், உலக இயற்கைக்கு ஒவ்வாத பல கருத்துக்களையும் சிந்திக்கின்ற மக்கள் கண்டுகொள்கின்றனர்.

அதே சமயம் படித்தவர் முதல் பாமரர் வரை யார் குர்ஆனை எடுத்து வாசித்தாலும் அதில் அடங்கியுள்ள உண்மைகளையும், ஒழுக்கத்தைப் போதிக்கும் பல செய்திகளையும், உலக பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கண்டு “இதுவே உண்மையான இறைவேதம்” என விளங்கி இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் ஓதப்படுவதைச் செவிமடுத்து, அதை உண்மையென விளங்கிப் பலர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இஸ்லாத்திற்கு மக்களின் வருகை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஏக இறைவனை மறுப்போரின் கூடாரம் காலியாகத் துவங்கின.

அதனால், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில், “இந்தக் குர்ஆனை யாரும் செவிமடுக்காதீர்கள்” என்று காஃபிர்கள் பிரச்சாரம் செய்தனர்.

இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப் பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!’’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 41:26

ஆனால், இவர்களின் இந்தப் பிரச்சாரத்தினால் துளியளவும் இஸ்லாத்திற்குப் பங்கம் ஏற்படவில்லை. இஸ்லாம் ஆல விருட்சமாகப் பரந்து விரிந்தது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் குர்ஆனைச் செவிமடுத்ததினால் இஸ்லாம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்ததற்கு ஏராளமான சான்றுகள் இருந்தாலும் இங்கே ஒன்றைக் குறிப்பிடுவதே போதுமானதாகும்.

அபீசீனியாவிற்கு சில நபித்தோழர்கள் அடைக்கலம் தேடி ஹிஜ்ரத் செய்து செல்கின்றனர். அங்கே நஜ்ஜாஷி என்பவர் மன்னராக இருக்கிறார். அவரிடம் இஸ்லாத்தைப் பற்றியும், இஸ்லாமியர்களைப் பற்றியும் மக்கத்து இணை வைப்பாளர்கள் தவறாகக் கூறி இஸ்லாமியர்களை அபீசீனியாவை விட்டு வெளியேற்றக் கோரிக்கை வைத்தனர்.

அப்போது, இஸ்லாமியர்கள் சார்பாக ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) மன்னரிடம் உரை நிகழ்த்திவிட்டு, குர்ஆன் வசனத்தையும் வாசித்துக் காட்டுகிறார்.

நஜ்ஜாஷி மன்னர் அதைக் கேட்டதும் கடுமையாக அழுகிறார்.

இதுவே அவர் இஸ்லாத்தை ஏற்பதற்குக் காரணமாக அமைகிறது. இந்த நிகழ்வு அஹ்மதில் நீண்ட செய்தியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

நஜ்ஜாஷி மன்னரிடம் மக்கா காஃபிர்கள், ‘‘நீங்கள் நம்பும் ஈஸாவைப் பற்றி இவர்களிடம் விசாரியுங்கள்’’ என்று கேட்டுக் கொள்கிறார்கள். அது போன்றே ‘‘ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’ என்று மன்னர் நஜ்ஜாஷி நபித்தோழர்களிடம் கேட்டதற்குப் பின்வருமாறு பதில் கூறினார்கள்.

ஈஸா என்பவர் அல்லாஹ்வின் தூதர்,

அல்லாஹ்வின் மகனாக அவர் இல்லை,

அல்லாஹ்வின் வார்த்தையினால் உருவானவர்,

அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்

உடனே நஜ்ஜாஷி மன்னர், ‘‘உங்கள் நபி முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து வேதம் வருவதாகச் சொன்னீர்களே, அதை வாசித்துக் காட்ட முடியுமா?’’ என்று கேட்கிறார்.

அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள், ‘‘காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்!’’ என்ற சூரத்துல் மர்யம் (19வது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுகிறார்.

அதைக் கேட்டதும் மன்னர் நஜ்ஜாஷி அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகின்றது. ‘‘இது மூஸா நபிக்கு யாரிடமிருந்து வந்ததோ அவனிட மிருந்தே இவருக்கும் வந்ததைப் போன்றுள்ளது’’ என்று கூறிவிடுகிறார். மேலும், ‘‘நீங்கள் எங்களது நாட்டில் அடைக்கலம் பெற்று விட்டீர்கள். உங்களது மார்க்கத்தின் பிரகாரம் இங்கே நடந்து கொள்ளலாம்’’ என்றும் அனுமதியளித்து விடுகிறார்.

நூல்: அஹ்மது 1742

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆனைச் செவிமடுத்து விளங்கி இஸ்லாத்திற்குள் வந்துள்ளனர்.

இன்றைக்கும் பல தெய்வ வழிபாட்டில் அல்லது நாத்திகத்தில் இருந்த பெரும் இசையமைப்பாளர்கள், சினிமா நடிகர்கள், வட்டி, மது, சூது, விபச்சாரம் போன்ற காரியங்களில் மூழ்கித் திளைத்தவர்கள் கூட, குர்ஆனைப் படித்து, சிந்தித்துத் தங்கள் வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு இஸ்லாத்திற்குள் வந்து தூய வாழ்க்கை வாழ்ந்து வருவதைப் பார்க்கின்றோம்.

அதே சமயம், இஸ்லாத்திற்குள்ளே இருக்கின்ற முஸ்லிம்கள் பலர் இந்தக் குர்ஆனை அணுகாததினால், சிந்திக்காததினால் தங்கள் வாழ்க்கையில் பாவத்திற்கு மேல் பாவம் புரிந்துகொண்டு நல்வழியை நோக்கிய எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கின்றோம்.

மக்கள் சிந்திப்பதற்காகவும், அதை விளங்கி அவர்கள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இறைவன் குர்ஆனை வழங்கியுள்ளான்.

ஆனால், இன்று அந்த நோக்கத்தை மறந்த மக்கள் தங்களுக்கு மத்தியில் மோதல் ஏற்படும் போது சத்தியம் செய்வதற்காகவும், இறந்த வீட்டில் ஓதுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

இறைவன் வழங்கிய வேதத்தை வைத்துப் பயனடைந்து, படிப்பினை பெறுவதற்குப் பதிலாக இறைவன் தடுத்த பித்அத்தான, ஷிர்க்கான பாவங்களைச் செய்து வருகின்றனர்.

பாவங்களிலிருந்து காக்கும் பலமான கேடயம்

திருக்குர்ஆனை எடுத்துப் படித்துணர்கின்ற போது அதில் குறிப்பிடப்படும் இறைவனின் ஆற்றல், அதிகாரம், பாவங்களுக்கான தண்டனைகள் அனைத்தும் நம் மனதில் ஆழப்பதியும்.

ஆழப்பதிந்த அந்த விஷயங்கள் நம் உள்ளத்தில் இறையச்சத்தை வார்த்தெடுக்கும்.

அந்த இறையச்சம் ஷைத்தானின் வலைகளில் நாம் விழுந்துவிடாமல் நம்மைத் தடுக்கும் கேடயமாக மாறுகின்றது.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்.

அவர்கள் தாம், உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

அல்குர்ஆன் 8:2, 3, 4

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர்.

அல்குர்ஆன் 22:35

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!’’ என அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 5:83

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.

அல்குர்ஆன் 39:23

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.

அல்குர்ஆன் 59:21

மேற்கண்ட வசனங்கள் யாவும் குர்ஆன் நம் வாழ்வில் தரும் மாற்றங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது.

குர்ஆனைப் படிக்கும் போதும், செவிமடுக்கும் போதும் அல்லாஹ்வின் அச்சம் ஏற்படும்.

உள்ளங்கள் நடுங்கும்.

கண்ணீர் மழை பொழியும்.

உடலும், உள்ளமும் அல்லாஹ்வை நினைக்க விரையும்.

சிந்தனையற்ற, உயிரற்ற ஜடமான மலையின் மீது குர்ஆன் அருளப்பட்டிருந்தால் கூட அது அல்லாஹ்வுக்குப் பணிந்திருக்கும்.

இந்த மாற்றங்கள் நமக்கு ஏற்பட வேண்டுமெனில் குர்ஆனைப் பொருளுணர்ந்து படித்தால் மட்டுமே சாத்தியம்.

இன்று குர்ஆனின் போதனைகளை, வசனங்களைப் படிக்க, செவிமடுக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

புத்தக வடிவில் குர்ஆனை வைத்துள்ளோம். கைபேசிகளில் குர்ஆன் மொழிப்பெயர்ப்புகளை வைத்திருக்கின்றோம்.

சொற்பொழிவுகளின் வாயிலாகக் குர்ஆனின் அறவுரைகளைக் கேட்கலாம்.

இவ்வாறு இன்று ஏராளமான வாய்ப்புகள் நம் முன்னால் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால், அவற்றில் எதையும் நாம் சரியான முறையில் பயன்படுத்தாத காரணத்தினால் தான் மேற்சொன்ன மாற்றங்களை நம்மில் பலர் உணராமல் இருக்கின்றோம்.

ஜும்ஆ போன்ற கடமையான சொற்பொழிவு களின் போது கூட அதில் கூறப்படும் குர்ஆன் வசனங்களைக் கேட்கின்ற போது கண்களில் கண்ணீர் வருவதற்குப் பதிலாக நித்திரை மேலாடுகிறது.

நமது ஆர்வமின்மையும், அலட்சியத் தன்மையும் தான் நம்மிடையே குர்ஆன் தரும் மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

ஆனால், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அறியாமைக் கால சமூகம் எனும் பெயரெடுத்தவர்கள், இஸ்லாத்தை ஏற்றதும் பெரும் மாற்றத்தைக் கண்டார்களே அதற்குக் காரணம் என்ன?

அவர்கள் இக்குர்ஆனை ஆர்வத்தோடு அணுகியதே அவர்களின் வாழ்வில் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்ததற்குக் காரணமாக இருந்தது.

அவற்றில் சில உதாரணங்களை இங்கு காணலாம்.

பகைவருக்கும் பணவுதவி செய்த அபூபக்ர் (ரலி)

அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள்.

பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை வள்ளலாக இருப்பினும், தன் மூலம் உதவி பெறும் ஒருவர், தனக்கோ தனது குடும்பத்திற்கோ கேடு விளைவிக்கிறார் எனில் அவர் மீது கடும் கோபம் கொள்வார்; தனது உதவிகளை நிறுத்திக்கொள்வார்.

அதே போன்றுதான் அபூபக்ர் (ரலி) அவர்கள், தனது அன்பு மகளாரும் முஃமின்களின் தாயாருமான ஆயிஷா (ரலி) அவர்களின் கற்பொழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் அவதூறு பரப்பப்பட்ட போது அந்த அவதூறைப் பரப்பியவர்களில் தன்னிடம் உதவிபெறும் மிஸ்தஹ் என்பாரும் ஒருவர் என்று அறிந்து, அவருக்குச் செய்து வந்த உதவிகளை நிறுத்திக் கொண்டார்கள்.

உடனே இறைவன் திருக்குர்ஆனில், ‘உதவிகளை நிறுத்த வேண்டாம்’ என்று கட்டளை பிறப்பித்ததும், தனிப்பட்ட கோபம் எவ்வளவு இருப்பினும் இறை வசனத்துக்குப் பணிந்தார்கள். உள்ளத்தில் குடிகொண்ட குரோதமும், பகைமையும் அகன்றது.

அல்லாஹ், “அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்’’ என்று தொடங்கும் (24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிட மாட்டேன்’’ என்று கூறினார்கள்… மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்……

உடனே அல்லாஹ், “உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். ‘அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்னும் (24:22) இறைவசனத்தை அருஜனான். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2661 (ஹதீஸின் சுருக்கம்)

கோபத்தை மென்று விழுங்கிய உமர் (ரலி)

நபித்தோழர்களில் உமர் (ரலி) அதிகம் கோபம் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி.

அந்தக் கோபத்தை அல்லாஹ்வின் வார்த்தையைக் கேட்டதும் விட்டொழிப்பவராக மாறியிருக்கிறார் உமர் (ரலி).

உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார்.

முதியவர்களோ, இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும், ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா’’ என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’’ என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.

உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’’ என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள்.

உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’’ (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்’’ என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: புகாரி 4642

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி)

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்’’ என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (மறுமைக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே “அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ எனக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்’’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!’’ எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 1461

இதுபோன்று திருக்குர்ஆன், நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கும், குர்ஆனைக் கேட்டதும் அதற்கு அதிகம் கட்டுப்படுபவர்களாக அவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கும் அதிகமான சான்றுகள் உள்ளன. இருப்பினும் அவை அனைத்தையும் இங்கு கொண்டு வந்தால் பக்கங்கள் போதாது.

இதுபோன்று திருக்குர்ஆன் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நம் வாழ்விலும் இடம்பெற வேண்டுமேயானால் குர்ஆனைப் பொருளுணர்ந்து ஆர்வத்துடன் அதிகம் அணுக வேண்டும்.

அனைத்து மக்களும் குர்ஆன் ஏவுகின்ற விஷயங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, தடுக்கின்ற விஷயங்களை விட்டும் தவிர்ந்து கொண்டு, நல்லதொரு மாற்றத்தைக் காண வேண்டும் என்பதற்காகத் தான் திருக்குர்ஆன் மாநாடு வருகிறது.