ஏகத்துவம் – டிசம்பர் 2016

தலையங்கம்

செல்லாத நோட்டுகள்! சொல்லாத சோதிடர்கள்!!

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அன்று  மத்தியில் ஆளுகின்ற பாஜக மோ(ச)டி அரசு திடுதிப்பென்று  மாலை நேரத்தில் ஓர்  அதிரடி அறிவிப்பின் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று ஆக்கியது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத் தான் இந்த அறிவிப்பு என்று அதற்கு ஒரு நொண்டிக் காரணத்தையும் கூறியது.

மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா குழுமத்திடமிருந்து 55 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடு வதாக அறிவித்த சில மணி நேரங்களில் அதை திசை திருப்பும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும் விரைவில் உ.பி.யில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் மற்ற கட்சிகள் ஆயிரம், ஐநூறு நோட்டுகளை அள்ளி வீசி  ஓட்டுகளை விலைக்கு வாங்கி விடக் கூடாது. அதன் மூலம் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. தான் மட்டும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வீசி ஓட்டுகளை விலைக்கு வாங்கி அரியணையில் ஏற வேண்டும் என்ற (கு)யுக்தியுடன் பாஜக அரசு இந்தக் கயமை வேலையில் களமிறங்கியுள்ளது.

அரசு இயந்திரம் தன்னுடைய கைவசத்தில்  இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்தி அச்சு இயந்திரத்தின் மூலம் கற்றை, கற்றையான இரண்டாயிரம் நோட்டுகளை அச்சடித்து கட்டு கட்டாகச் சுமந்து சென்று  வாக்காளர்கள் கையில் அடித்து, வாக்குகளை கட்டுக்கட்டாக அறுவடை செய்யலாம் என்று கனவு கண்டு காய் நகர்த்தியது.

ஆனால் அதன் கனவுக் கோட்டை தகர்ந்து போனதுடன் மட்டுமல்லாமல், ஆப்பசைத்த குரங்காக மாட்டிக் கொண்டு தவிக்கின்றது; தத்தளிக்கின்றது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவிஸ் வங்கியிலிருந்து கருப்பு பணத்தை மீட்டு உங்கள் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று சொன்ன மோடி மக்கள் சுருக்குப் பையில் வைத்திருந்த பணத்தைச் சுருட்டி எறியும் காகிதமாக்கியதுடன் அவர்களது கழுத்துகளுக்கு சுருக்குக் கயிறுகளையும் மாட்டிக் கொண்டிருக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. பத்திரிக்கைகளில் பதிவான செய்திகள் அடிப்படையிலேயே சொல்கின்றோம்.

அனைத்து தரப்பு மக்களின் கைகளில் புழங்கிக் கொண்டிருந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காலாவாதியாக்கிய கையலாகாத மோடியின் மீது காரித் துப்பிக் கொண்டிருக்கின்றனர். குடற்கொதிப்பில் கொந்தளிக்கும் குமுறல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். வயிற்றெரிச்சல்களை வசவு மொழிகளாக வடித்துத் தள்ளுகின்றனர்.  குருவி போல் கொஞ்சம்       கொஞ்சமாகச் சேர்த்த பணம் மோடியின் ஒரே ஒரு கூவலால் செல்லாக் காசாகி விட்டது.

உ.பி. கொரக்பூர் வங்கி முன்னால் ஒரு பெண் சலவைத் தொழிலாளி தான் சேர்த்து வைத்திருந்த சில்லரை நோட்டுகளை மாற்றி ஆயிரம் ரூபாய் தாள்களாகப் பெற்றுக் கொள்கின்றார். அந்தப் பணம் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு வெளியாகின்றது. அவ்வளவு தான் அதிர்ச்சியில் அங்கேயே இறந்து விடுகின்றார்.

இன்னொரு சம்பவத்தின் போது மஹுவா மாஃபி என்ற கிராமத்தில்  ஓர் எட்டு வயதுப் பெண் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக தகப்பனார் தனது வாகனத்தில் பெட்ரோல் பம்புக்கு ஆயிரம் ரூபாய் தாளுடன் செல்கின்றார். அங்குள்ள பணியாளர் ஆயிரம் ரூபாய் தாளை மறுத்ததால் எட்டு வயது பெண் குழந்தை மரணத்தைத் தழுவுகின்றது.

கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் – ரஞ்சிதம். இவர்களுடைய மூன்று வயதுக் குழந்தை தீபஸ்ரீ இறந்துவிட்டாள். குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். சிவக்குமார் கையிலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இன்று செல்லாதவை என மருத்துவமனையில் வாங்க மறுத்திருக்கிறார்கள். மனிதர் பணத்துக்காக அலைக்கழிந்திருக்கிறார். கையில் பணம் இல்லாத உயிருக்கு இந்நாட்டில் மதிப்பேது? பிள்ளை போய்ச் சேர்ந்துவிட்டது.

இரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் சுரின் தன் பிள்ளையைப் பறிகொடுத்தார். உடல்நலம் குன்றிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊரான மெகபாலில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அவர்கள் அங்கே பார்க்க முடியாது என்று சொல்லி சம்பல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். சுதர்சனிடம் இருந்த பழைய நோட்டுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்துவிட்டது.

மும்பை, கோவந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் – கிரண் தம்பதி. பிரசவ வலியெடுத்த கிரணுக்கு மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே குறைப் பிரசவம் ஆகிவிட்டது. மனைவியையும் சிசுவையும் தூக்கிக்கொண்டு ஓடினார் ஜெகதீஷ். தனியார் மருத்துவமனையில் ரூ.6,000 முன்பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் முன்பணமாகக் கேட்ட முழுத் தொகையும் புதிய நோட்டுகளாக ஜெகதீஷிடம் இல்லை. மருத்துவமனையில் சேர்க்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள். பணத்தை ஏற்பாடு செய்வதற்குள் அந்தச் சிசு மூச்சை நிறுத்திவிட்டது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் ரகுநாத் வர்மா இன்று இல்லை. திருமணத்தை எதிர்பார்த்திருந்த மகள் செய்வதறியாது நிற்கிறார்.

பிஹாரைச் சேர்ந்த விவசாயி சோனார் இன்று இல்லை. மகள் சித்தப்பிரமை பிடித்தவரைப் போல மூலையில் முடங்கிக் கிடக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் 11 உயிர்கள்; தெலங்கானா, பிஹார், மஹாராஷ்டிரம், கேரளம், கர்நாடகத்தில் தலா 2 உயிர்கள், ஒடிசா, ஆந்திரம், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், வங்கத்தில் 7 உயிர்கள்; அசாம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத்தில் தலா 3 உயிர்கள் என்று பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்புக்குப் பிறகு, 10 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 40 உயிர்கள் போயிருக்கின்றன. தற்போதைய தகவல்கள் படி இதுவரை செல்லாத நோட்டுகளால் இறந்தவர்கள் எண்ணிக்கை 80ஐ நெருங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரச்சாரகர் சூரிய நாராயண ராவ் என்பவர் இறந்த போது, “அவர் தன்னுடைய வாழ்வை தாய்நாட்டிற்காக அர்ப்பணித்து விட்டார். அவர் ஆத்மா சாந்தி அடையட்டுமாக!” என்று டுவீட்டரில் இரங்கல் பதிவிட்ட நரேந்திர மோடி ஆயிரம், ஐநூறு செல்லாது  என்ற  பைத்தியக்காரத்தனமும், பித்துக்குளித்தனமும் நிறைந்த அறிவிப்பால் 80 மனிதர்களின்  புனித உயிர்கள் பலியாகி உள்ளன; பறி போயுள்ளன. அதற்கு எந்த ஓர் இரங்கலையும் இரக்கத்தையும் இவர் பதிவிடவில்லை.

இரக்கமற்ற நரேந்திரமோடியின் இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் 16 பேர்கள் இறந்து போன மரணச் செய்தி தொலைக்காட்சியில் விவாதப் பொருளான போது அந்த விவாதத்தில் பங்கெடுத்த  உயர்சாதி எஸ்.வி. சேகர், ‘128 கோடி மக்களில் 16 பேர்கள் தானே இறந்திருக்கின்றார்கள்’ என்று  கேட்கின்றார்.

இதற்குக் காரணம் என்ன? மோடியும் எஸ்.வி. சேகர் கேடியும் மனுதர்ம சிந்தனை கொண்டவர்கள். அதனால் இவர்களிடம் பிராமணர்களைத் தவிர மற்றவர்களின் உயிர்களுக்கு  எந்த மாண்பும், மரியாதையும் இல்லை. இதோ அவர்களுடைய மனு சாத்திரம் சொல்வதைக் கேளுங்கள்.

‘‘ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.” அ.11. சு.131.

25(அ). “அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது.”

மோடி இந்த மனு சாத்திர தர்மத்தை நிறுவ வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர். அதனால் அவாள்  உயிர் தான் உயிர்! அடுத்தவா  உயிரெல்லாம் உயிரே அல்ல! தவளையை விடவும் தரங்கெட்டது. தவளையின் தகுதியை விட ஒரு தம்புடி கூட பார்ப்பனர் அல்லாதவரின் உயிர்கள் உயர்ந்ததல்ல!

அதனால் தான் அவாள் சாதியைச் சார்ந்த ஸ்வாதி கொல்லப்பட்டபோது கொந்தளித்தார்கள்; கொதித்தார்கள். அப்போது 128 கோடி மக்களில் ஒரு ஸ்வாதி தானே செத்துப் போயிருக்கின்றாள் என்று வாய் பொத்தி செத்துக் கிடக்கவில்லை. இந்த சேகர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து பதிவு போட்டார்கள். ஆனால் இப்போது இழந்து போன இந்த 80 உயிர்களை மிகத் துச்சமாக நினைக்கின்றார்கள். இவர்களை இப்படி நினைக்கத் தூண்டுவது அவர்களின் மனு சாத்திரம் தான்.

இதோ திருக்குர்ஆன் பிரகடனப் படுத்துகின்ற மனித உயிர் மாண்பை பாருங்கள்!

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்

அல்குர்ஆன்  5:45

மனித உயிரென்ன?  மனிதனின்  உறுப்புக்கு மனிதனின் உறுப்பு தான் பரிகாரம் என்று மனிதனின் மாண்பையும்,  புனிதத்தையும்   இறை வேதம் திருக்குர்ஆன் நிலை நாட்டுகின்றது. ஆனால் மோடிக் கும்பல் நிலைநாட்ட நினைக்கின்ற இந்து ராஜ்ஜியத்தில்  மனித உயிர் மரியாதையையும், மதிப்பையும் பாருங்கள். தவளையினும் கேடாய் தரை மட்டமாகப் பார்க்கப்படுகின்றது.

அதனால் தான் மாட்டுக்காக மனித உயிரைக் கொன்று குவிக்கின்ற மாபாதகர்களாகவும், மகா காதகர்களாகவும் தான் இவர்கள் இருக்கின்றார்கள்! ஆயிரம், ஐநூறு ரூபாய்களை  வெறுந்தாளாக்கியதால் அன்றாடம் மாளுகின்றவர்களை ஆளுகின்ற இந்த மிருக வர்க்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் இது தான் காரணம்.  கண்டு கொள்பவர்களாக இருந்தால் கறுப்புப் பணம் என்ற பெயரில்  இதுவரை மனித உயிர்களைப்  பலி வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்தக் கறுப்புச் சட்டத்தை இந்நேரம்  திரும்பப் பெற்றிருப்பார்கள். ஆனால் இவர்கள் திரும்பப் பெறமாட்டார்கள்.

அதே சமயம் அல்லாஹ் இவர்களை திரும்பப் பெறுகின்ற நேரம் நெருங்கி விட்டது என்பதை விட இவர்களைத் தூக்கி அடிக்கக் கூடிய நேரம் நெருங்கி விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் வடித்த கண்ணீர், அவர்கள் சபித்து தள்ளிய சாபங்கள் அத்தனையும் அவர்களை விட்டு வைக்கப் போவதில்லை.

ஐநூறு ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற  மோடி அறிவித்த பிறகு மக்கள் படுகின்ற அல்லல்களையும், அவஸ்தைகளையும்  ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் விமர்சித்திருக்கின்றன.  ஏகத்துவம் எதையும் உண்மையான ஓரிறைக் கொள்கை அடிப்படையில் தனது பார்வையைப் பதிய வைக்கும். அந்த அடிப்படையில் ஏகத்துவம் மாத இதழ்,  செல்லாமல் போன நோட்டுகள் விஷயத்தில் அத்தகைய பார்வையைத் தான் பதிய வைக்கின்றது.

அதிகாலையில் அரசு தொலைக்காட்சி முதல் தனியார் தொலைக்காட்சிகள் வரை உள்ள  அனைத்து தொலைக்காட்சிகளிலும் டிவி பெட்டிகளைத் திறந்த மாத்திரத்தில் அவற்றில் ஆக்கிரமித்து நிற்பவர்கள் சோதிடர்கள் தான்.

ராசி பலன் என்ற பெயரில் வான நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அன்றைய நாளின் பலன்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். மக்களை இம்மாபெரிய அளவில் அலைக்கழிக்க வைத்து அவர்களின் ஆருயிர்களைப் பறிக்கக் காரணமாக அமைந்த செல்லாத நோட்டுகளைப் பற்றி முன்கூட்டியே மக்களிடம் இந்தச் சோதிடர்கள் ஏன் சொல்லாமல் போனார்கள்?

நிச்சயமாக அவர்கள் ஒரு போதும் அதைச் சொல்ல முடியாது. அதற்கு காரணம் மறைவான ஞானம் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வாகிய அந்த ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமான தனி ஞானமாகும். அதில் அவனது படைப்பினங்கள் யாரும் எள்ளளவும் எள் முனையளவும் உரிமை கொண்டாட முடியாது. இதைத் தான் நாட்டில் நடந்த இந்தச் சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

என்ற அல்லாஹ்வின் வசனம் இதையே உண்மைப் படுத்துகின்றது.

சோதிடம் என்பது ஒரு பகிரங்க ஏமாற்று வேலை என்பதில் முஸ்லிம்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் கிடைக்கும் பாடமும் படிப்பினையாகும்.

இதில் முஸ்லிம்களுக்கு மட்டும் இன்னொரு பாடமும் படிப்பினையும் இருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித் தராத எந்த வணக்கத்தையும் செய்யக் கூடாது. காரணம் அது  பித்அத் எனும் புதிய செயலாகும்.  அவ்வாறு செய்பவர்களது வணக்க வழிபாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படாது என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2697

அத்தகைய எந்த வணக்கமும் அது  செல்லாத  நோட்டுக்குச் சமமாகும். ஆயிரம், ஐநூறு நோட்டுகள் செல்லாததாகி விட்டதால் நாம் படுகின்ற அவஸ்தையையும் அல்லலையும் கண்கூடாகக் கண்டு விட்டோம்.  இவ்வுலகத்தில் பின்வரும் காலங்களில் இந்தப் பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் நிவர்த்தி ஆகிவிடும். ஆனால் மறுமையில் நாம் ஏமாந்து விட்டால் அது நிவர்த்தியாகுமா? என்று ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று முஸ்லிம்கள் பராஅத் இரவு, மிஃராஜ் இரவு வணக்கம், அன்றைய பகல்களில் நோன்பு, கூட்டுத் துஆ, ராத்திபுகள், மவ்லிதுகள், கத்தம் ஃபாத்திஹாக்கள், மீலாது விழாக்கள் என்று எண்ணிலடங்கா புதிய, புதிய வணக்க வழிபாடுகளைச் செய்கின்றனர்.

இவை தங்களுக்கு நாளை மறுமையில் நன்மை தரும் என்ற நம்பிக்கை அடிப்படையில் தான் செய்கின்றார்கள். ஆனால் இவை மறுமையில் செல்லாதது என்று அறிவிக்கப்படும். அப்போது ஈடு செய்ய முடியாத இழப்பும் நஷ்டமும் கைசேதமும் ஆகும். மோடியைப் போன்று முட்டாள்தனமாக  திடீரென்று செல்லாது என அல்லாஹ் அறிவிக்க மாட்டான். அவன் முன்னரே அறிவித்து விட்டு அல்லது எச்சரித்து விட்டுத் தான் செய்வான்.

இதோ அந்த எச்சரிக்கைகள்…

செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.

அல்குர்ஆன் 18:104

(ஏகஇறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத்தான் காண்பான். அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

அல்குர்ஆன் 24:39

எனவே முஸ்லிம்கள், இந்தச் செல்லாத நோட்டுகளைப் பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு, அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் அங்கீகரிக்கப்படாத  பித்அத் எனும் புதிய வணக்கங்களைச் செய்யாமல் அவனும் அவனது தூதரும் அங்ககீகரித்த வணக்கங்களை மட்டும் செய்து  மறுமையில் தங்களை பெரும் நஷ்டத்திலிருந்து காத்துக் கொள்வார்களாக!

தவ்ஹீது ஜமாஅத் இந்தப் பெரும் நஷ்டத்திலிருந்து மக்களைக் காக்கின்ற தூய பணியில் தன்னை அர்ப்பணித்து அழைப்புப் பணி ஆற்றுகின்றது. அதனால் தான் மோடியின் முட்டாள்தனமான அறிவிப்பில் மற்றவர்கள் உலக ரீதியான பார்வையை மட்டும் பதிகின்ற வேளையில்  மறு உலக ரீதியிலான பார்வையை ஏகத்துவம் தனது இந்தத் தலையங்கத்தில் பதிய விடுகின்றது; மக்களிடம் பரவ விடுகின்றது.

—————————————————————————————————————————————————————-

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம்  தொடர் – 5

புகாரியில் பதிவாகியுள்ள ஒரு பொய்ச் செய்தி!

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், அவர்கள் மீது அவதூறுகளைச் சுமத்தும் வகையிலும், திருக்குர்ஆனில் அண்ணலார் குறித்து வல்ல இறைவன் சிலாகித்துக் கூறியுள்ள சிறப்பம்சங்களைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும் ஒரு சில செய்திகள் சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுக்கதைகள் திருக்குர்ஆனின் வசனங்களுக்கு முரணாக அமைந்துள்ளதால் அவற்றுக்கும் அண்ணலாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறி நாம் அவற்றை மறுக்கின்றோம்.

இந்த இடத்தில் மீண்டும் ஒன்றை நாம் நினைவூட்டிக் கொள்கின்றோம்; அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று சொல்லப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முரண்படுவதால் இத்தகைய செய்திகள் கட்டுக்கதைகள் என்பதுதான் நமது நிலைப்பாடு.

அண்ணலார் கூறிய செய்திகளை நாம் மறுக்கவில்லை; இந்தக் கட்டுக்கதைகளை அண்ணலார் கூறவே இல்லை என்றுதான் மறுக்கின்றோம்.

இப்போது இத்தகைய செய்திகள் குறித்து நாம் வைத்த வாதங்களையும், அதற்கு பரலேவி மதத்தினர் எடுத்து வைத்த மறுப்பையும், அதற்கு நாம் எழுப்பிய எதிர்க் கேள்விகளையும் இங்கே காண்போம்.

‘புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்களில் ஒரு செய்தி ஆதாரப்பூர்வமானதாகப் பதிவு செய்யப்பட்டிருக்குமேயானால் அது 100 சதவீதம் உண்மையானது; அதில் எவ்வித சந்தேகமும் இல்லை; அதை மறுக்கக்கூடாது; அதை அப்படியே நம்ப வேண்டும்’ என்பதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பவர்களின் நிலைப்பாடு.

இந்த நிலைப்பாடு எவ்வளவு தவறானது என்பதை விளங்க வைப்பதற்காக கோவை விவாதத்தில் பரலேவி மதத்தினரை நோக்கி புகாரி என்ற ஹதீஸ் கிரந்தத்தில் இருக்கும் ஒரு செய்தியை எடுத்துக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது.

புகாரியில் 3849வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு செய்தியை முன்வைத்து இந்தச் செய்தியை ஆதாரப்பூர்வமான செய்தியாக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? எனக் கேள்வி எழுப்பினோம்.

இது ஆதாரப்பூர்வமான செய்தியே அல்ல; ஆதாரப்பூர்வமான செய்தி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுக்கதை தான் என்பது இந்தச் செய்தியைப் படிக்கும் எவருக்கும் இலகுவாகத் தெரியும். முதலில் அந்தச் செய்தியைப் படியுங்கள்:

விபச்சாரம் செய்த பெண் குரங்குக்கு கல்லெறி தண்டனை(?)

அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

அறிவிப்பவர்: அம்ர் பின் மைமூன்

நூல்: புகாரி 3849

புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி குறித்து விவாதத்தின் போது கேள்வி எழுப்பினோம்.

குரங்குகள் விபச்சாரம் செய்யுமா?

ஒரு குரங்கு விபச்சாரம் செய்ததா இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?

விபச்சாரம் செய்த ஒரு குரங்கைக் கண்டுபிடிப்பதாக இருந்தால் அந்தக் குரங்கின் கணவன் குரங்கு எது என்பதையும், அந்தப் பெண் குரங்கிற்கு அந்நியக் குரங்கு எது என்பதையும் எப்படிக் கண்டறிவது?

திருமணம் முடித்த நபர்கள் விபச்சாரம் செய்தால் தான் விபச்சாரத்திற்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படுவது மார்க்கக் கட்டளை!

அப்படியானால் விபச்சாரம் செய்த அந்தப் பெண் குரங்கு திருமணம் முடித்த குரங்கு என்பதை யார், எப்படி உறுதி செய்தார்கள்?

குரங்குகளுக்கு மத்தியில் திருமண பந்தம் உள்ளதா?

அந்த குரங்குகள் விபச்சாரம் செய்ததை உறுதி செய்ய நான்கு சாட்சி குரங்குகள் வரவேண்டுமல்லவா? அந்த நான்கு சாட்சியம் கூறிய குரங்குகள் வந்து யாரிடம் சாட்சி கூறின?

இதுபோன்ற சட்டதிட்டங்கள் எல்லாமே மனிதர்களுக்குத்தானே அல்லாஹ் வழங்கியுள்ளான்?

அதை குரங்குகளுக்கு பொருத்திப் பார்த்து குரங்குகளுக்கு தண்டனை வழங்கியது யார்?

ஆதாரப்பூர்வமான செய்தியாக புகாரி என்ற தனது ஹதீஸ் கிரந்தத்தில் புகாரி இமாம் பதிவு செய்துள்ளார்களே! அப்படியானால் குரங்கு விபச்சாரம் செய்ததாக வரும் செய்தியை புகாரி இமாம் அவர்கள் நம்பித்தான் பதிவு செய்தார்களா?

விபச்சாரம் புரியும் குரங்குகளையெல்லாம் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பதுதான் புகாரி இமாமின் கொள்கை என்று சொல்லப் போகின்றீர்களா?

என்ற சராமரியான கேள்விகளால் கப்ரு வணங்கிகளின் விழி பிதுங்கியது.

புகாரி இமாம் ஆதாரப்பூர்வமான செய்தியாகப் பதிவு செய்துள்ள இந்தச் செய்தி கட்டுக்கதை தான் என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

இதுபோலத்தான் திருக்குர்ஆனுக்கு முரண்படும் வகையில் அமைந்த சில செய்திகளை, தனக்குக் கிடைத்த தகவலின்படி ஆதாரப்பூர்வமான செய்தியாக புகாரி இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். புகாரி இமாம் பதிவு செய்ததாலேயே அது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல என்பதை விளக்கி கேள்வி எழுப்பினோம்.

கடைசி வரை வாய்திறக்காத கப்ரு வணங்கிகள்

கப்ரு வணங்கிகளான பரலேவிகள் கடைசி வரைக்கும் குரங்கு குறித்த செய்திக்கு வாய் திறக்கவே இல்லை. இந்தச் செய்திக்கு நாங்கள் பிறகு பதில் சொல்லுவோம்; ஒவ்வொன்றாகப் பதில் சொல்லுவோம் என்றெல்லாம் பில்டப் கொடுத்த பரலேவிக் கூட்டம் கடைசி வரைக்கும் மூச்சுவிடவில்லை.

விவாதம் நிறைவடையப் போகும் கடைசி அமர்விற்கு முந்திய அமர்விலும் கூட இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் கூட அதற்குப் பதிலளிக்கவில்லை.

இதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த வாதம் 100 சதவீதம் சரியானது என்பதை பரலேவிக் கூட்டமே தங்களது அசாத்திய மௌனத்தின் வாயிலாக ஒப்புக்கொண்டு விட்டனர். உதாரணத்திற்குத் தான் இந்த ஒரு செய்தி.

இதுபோல பல செய்திகள் திருக்குர்ஆன் கூறும் உண்மைகளுக்கு முரணாகவும், திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு எதிரானதாகவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தையும், ஒழுக்கத்தின் உறைவிடமாகத் திகழும் அண்ணலெம் பெருமானார்  (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. அந்த கட்டுக்கதைகளைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கின்றது.

அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி வந்துள்ள ஒரு செய்திதான் உம்மு ஹராம் (ரலி) என்ற அந்நியப் பெண்ணோடு நபிகளார் தனித்திருந்தார்கள்; அந்தப் பெண்மணி நபிகளாருக்கு பேன் பார்த்து விட்டார்கள் என்று வரும் செய்தி.

இந்தக் கட்டுக்கதை குறித்து விவாதத்தின் போது நாம் எடுத்து வைத்த வாதங்களையும், அதற்கு பரலேவி மதத்தினரின் உளறல்களையும் அடுத்த இதழில் காண்போம்.

குறிப்பு: புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள, குரங்கு விபச்சாரம் செய்தது குறித்த சம்பவத்தை உண்மையென்று நீங்கள் நம்புகின்றீர்களா? இது இட்டுக் கட்டப்பட்ட செய்தி தானே என்று நமது சகோதரர்கள் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது சலஃபுக் கும்பலைச் சேர்ந்த ஒரு சலபியிடம் இதே கேள்வியை கேட்டார்கள்.

அதற்குப் பதிலளித்த அந்தக் கள்ள சலஃபு ஆலிம், ‘ஆமாம்! குரங்குகள் அதிகம் ரோஷம் உடையவை; அதனால் தான் கணவன் அல்லாத வேறு குரங்கோடு இணைந்ததற்காக அந்த மனைவி குரங்கை மற்ற குரங்குகள் கல்லால் எறிந்து கொலை செய்துள்ளன’ என்று அதி அற்புதமான(?) விளக்கமொன்றை அளித்தாரே பார்க்கலாம்.

கட்டுக்கதைகளை உண்மை என்று மக்களை நம்ப வைப்பதற்கு இவர்கள் எத்தகைய பொய்களையும் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று!

இதுபோல கேவலமான விளக்கம் சொல்லி மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான் பரலேவி மதத்தினர் இந்தக் குரங்கு செய்தி பற்றி கடைசி வரைக்கும் வாய் திறக்காமல் ஓட்டம் பிடித்திருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாமலில்லை.

—————————————————————————————————————————————————————-

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா?

ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது தொடர்பாக, இலந்தை இலை கலந்த தண்ணீரால் அல்லது கற்பூரம் கலந்த தண்ணீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது தேவைக்கேற்ப குளிப்பாட்ட வேண்டும் என  ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகள் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் தமது புதல்வி இறந்துவிட்ட போது எங்களிடம் வந்து, அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: முஸ்லிம் 1253

இதிலும் ஹிதாயா நூலாசிரியர் வழக்கம் போல தம் கைவரிசையைக் காட்டியிருக்கிறார். தண்ணீரின் தன்மையைப் பற்றி அலசும் வேளையில் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.

لِأَنَّ الْمَيِّتَ قَدْ يُغْسَلُ بِالْمَاءِ الَّذِي أُغْلِيَ بِالسِّدْرِ ، بِذَلِكَ وَرَدَتْ السُّنَّةُ ،

இறந்து போனவர் சில வேளை இலந்தை இலை கலந்து கொதிக்க வைக்கப்பட்ட நீரால் குளிப்பாட்டபடுவார். இவ்வாறு நபிமொழி வந்துள்ளது.

ஹிதாயா, பாகம் 1. பக்கம் 18

தண்ணீரில் இலந்தையிலை கலந்து குளிப்பாட்ட வேண்டும் என்பது ஹதீஸில் உள்ளது. அந்நீர் கொதிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இவர் கூறுவதை போன்று எந்த நபிமொழியும் இல்லை. இது ஹதீஸின் பெயரில் சொல்லப்பட்ட இவரின் சொந்த கைச்சரக்காகும்.

ஜனாஸாவைக் குளிப்பாட்டும் நீர் கொதிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எந்த ஹதீஸும் இல்லாத நிலையில் இது நபி மீது இட்டுக் கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவு.

ஆயிஷா (ரலி) அவர்களின் செயலை  நபியின் சொல்லாக்கிய ஹிதாயா

இதுவரை நாம் பட்டியிலிட்ட செய்திகளை வாசித்த வாசகர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்திருக்கும்.

ஹிதாயா நூலாசிரியருக்கு நிதானம் என்பது கொஞ்சங் கூட இல்லை. பொய்யான செய்திகளை நபியின் பெயரில் சொல்வது மட்டுமின்றி  இருக்கும் ஹதீஸ்களைக் கூட ஒழுங்காகக் கவனிக்காமல் முன் பின் மாற்றி, இல்லாதததை ஹதீஸில் செறுகி சொல்லிவிடும் இவரது தொடர் வழக்கத்திலிருந்து இந்தப் புரிதல் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.

இதோ மேற்கண்ட புரிதலை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியை பாருங்கள்.

விந்து அசுத்தமானது; ஈரமாக இருந்தால் அதைக் கழுவ வேண்டும்; காய்ந்து விட்டால் அதைச் சுரண்டி விட்டாலே போதுமானது என்று சட்டம் சொல்லி விட்டு வழக்கம் போல் ஆதாரம் காட்டும் இடத்தில் கோட்டை விட்டு விடுகிறார்.

لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ لِعَائِشَةَ { فَاغْسِلِيهِ إنْ كَانَ رَطْبًا وَافْرُكِيهِ إنْ كَانَ يَابِسًا }

நபிகள் நாயகம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அது ஈரமாக இருந்தால் கழுவி விடு, காய்ந்து விட்டால் அதை சுரண்டி எடுத்து விடு என்று கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 35

நபிகளார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இவ்வாறு சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி கூட இல்லை. இவர்களின் வகையறாக்கள் இட்டுக் கட்டியிருந்தாலே தவிர.

மாறாக ஆயிஷா (ரலி) அவர்களின் செயலாகவே உள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். (அந்த ஆடையோடு) நபி (ஸல்) அவர்கள் தொழச் செல்வார்கள். அவர்களின் ஆடையில் ஈரம் அப்படியே இருக்கும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 229

அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், “அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 485

ஆயிஷா (ரலி) அவர்களின் செயலாகப் பதிவு செய்யப்பட்ட ஒன்றை நபிகள் நாயகம் தான் ஆயிஷா அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் அப்படி ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று கூறும் இவரிடத்தில் நிதானம் கொஞ்சங் கூட இல்லை என நினைப்போரை குறை சொல்ல முடியாது தானே!

அடிவானம் கறுத்துப் போகும் வரை…

قَوْلُهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { وَآخِرُ وَقْتِ الْمَغْرِبِ إذَا اسْوَدَّ الْأُفُقُ }

மக்ரிப் தொழுகையின் இறுதி நேரம் அடிவானம் கறுத்து போகும் வரையிலும் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 39

ஆடையில் பட்ட இந்திரியம் தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்களின் செயலை நபிகள் நாயகம் ஆயிஷா (ரலி)க்கு கட்டளையிட்டதாகக் கூறியதன் மூலம் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததை போன்று கற்பனை செய்து பதிவிட்ட ஒரு செய்தியை சற்று முன் பார்த்தோம் அல்லவா?

அதே பாணியில் அமைந்த நூலாசிரியரின் மற்றுமொரு கற்பனை இது.

அடிவானம் கறுத்துப் போகும் வேளையில் நபிகளார் இஷா தொழுவார்கள் என்று அபூதாவூதில் 333 ஹதீஸ் உள்ளது.

இதையே கொஞ்சம் – அதிகமாகவே உல்டா செய்து நபிகள் நாயகம் சொன்னதாக நபி பெயரில் மேற்கண்டவாறு புனைகிறார்.

இப்படி நபிகளார் சொன்னார்கள் என்பதற்குரிய ஆதாரத்தை மத்ஹபின் காவலர்கள் எடுத்துரைப்பார்களா?

இது போன்ற புனைதல் ஏராளமாக ஹிதாயாவில் உள்ளதால் இனி அதன் நூலாசிரியர் – முனைவர் என்றல்ல – பூமி போற்றும் புனைவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுவார்.

பெயரை மாற்றிய நூலாசிரியர்

கருத்தாகச் சொல்லப்பட்டதை சம்பவம் நடைபெற்றதாக மாற்றிச் சொல்வது, அறவே நடைபெறாததை நடைபெற்றதாக அவிழ்த்து விடுவது இது போன்றவகளை மிகச் சாதாரணமாக நூலாசிரியர் செய்கிறார்.

ஒருவருக்கு நடைபெற்ற சம்பவத்தை இன்னொருவருக்கு நடைபெற்றதாக மாற்றி அறிவித்த நிகழ்வுகளும் அதிகமாகவே ஹிதாயாவில் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) மற்றும் அவரது தந்தையின் சகோதரர் மகன் ஆகிய இருவருக்கும் பயண நேரத்தில் பாங்கு – இகாமத் சொல்லி தொழுது கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னதாக ஹதீஸ் (திர்மிதி 189) உள்ளது.

ஆனால் ஹிதாயா நூலாசிரியரோ இதை அபீமுலைக்காவின் இரண்டு மகன்களுக்கு நடைபெற்றதாக மாற்றிப் பதிவு செய்துள்ளார்.

الهداية شرح البداية – (1 / 43)

والمسافر يؤذن ويقيم لقوله عليه الصلاة والسلام لابني أبي مليكة رضي الله عنهما إذا سافرتما فأذنا وأقيما

பயணத்தில் இருப்பவர் பாங்கு – இகாமத் இரண்டும் சொல்ல வேண்டும். ஏனெனில்  அபீமுலைக்காவின் இரண்டு மகன்களுக்கு நீங்கள் பயணத்தில் இருந்தால் பாங்கு – இகாமத் கூறிக் கொள்ளுங்கள் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம்  1, பக்கம்  43

இதே போல அபூஹுரைரா (ரலி) நபியிடமிருந்து அறிவிக்கும் ஒரு செய்தியைக் குறிப்பிட்டு இதை அபூதர் (ரலி) அறிவிப்பதாக பெயர் மாற்றி குறிப்பிட்டுள்ளார்.

பார்க்க: ஹிதாயா 1 பக் 64

மஸ்தூரா

வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல எனும் சொல் வழக்கு ஒன்று உண்டு.

யாருக்கும் தெரியாமல் ஒரு கருத்தை நிலைநாட்டுவோரை இவ்வாறு குறிப்பிடுவார்கள்.

நபிமொழிகளைக் குறிப்பிடுகையில் ஹிதாயா நூலாசிரியரின் அணுகுமுறையைப் பார்க்கும் போது இச்சொல் வழக்கு நம் நினைவுக்கு வந்து போவதைத் தவிர்க்க முடிவதில்லை.

ஹதீஸில் இல்லாத வார்த்தைகளை நைச்சியமாக செறுகி விடுவதில் கைதேர்ந்த கெட்டிக்காரராக காட்சியளிக்கிறார்.

நாம் சொல்வது மிகையான வர்ணனை அல்ல என்பதைப் பின்வரும் செய்தியை அறியும் போது தெளிவாகலாம்.

الهداية شرح البداية – (1 / 43)

 وبدن الحرة كلها عورة إلا وجهها وكفيها لقوله عليه الصلاة والسلام المرأة عورة مستورة

பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டிய அவ்ரத் என்று நபிகளார் கூறியுள்ளதால் சுதந்திரமான பெண்ணைப் பொறுத்தவரை அவளது முகம், இரு முன்கைகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளும் மறைக்கப்பட வேண்டியதே.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 43

இவர் குறிப்பிடும்படியான செய்தி எந்த நூலிலும் இல்லை.

அல்மர்அது அவ்ரதுன் – பெண் என்பவள் அவ்ரத் என்று தான் ஹதீஸ் உள்ளது. இது திர்மிதி 1093ல் உள்ளது.

ஆனால் நூலாசிரியர் ஹதீஸில் இல்லாத மஸ்தூரதுன் என்ற வாசகத்தை இருப்பதைப் போன்று சேர்க்கின்றார்.

நபிகளார் சொல்லாத வார்த்தையை நபி சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.

நபிகளார் சொல்லாததை நபியின் பெயரால் சொல்வது தானே பொய். இதைத் தானே நபிகள் நாயகம் கண்டித்தார்கள்.

சிறிய வார்த்தையாக இருப்பினும் அதை நபியோடு இணைத்துச் சொல்லும் முன் உண்மையில் அப்படி ஹதீஸ் உள்ளதா என்று ஆராய்ந்த பிறகே சொல்ல வேண்டும். அதல்லாமல் வாய்க்கு வந்ததை, ஆதாரமற்றதை நபியின் பெயரால் அவிழ்த்து விடுவது அறியாமை மட்டுமல்ல அகந்தையுமாகும்.

எல்லா உறுப்புக்களும் ஸஜ்தாவில்…

தொழுகையில் ஸஜ்தாவின் போது கால்விரல்களை கிப்லா திசை நோக்கி சற்று மடக்கி வைக்க வேண்டும் என்பது நபிவழி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும்போது தமது கைகளை தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉ செய்யும்போது தம் கைகளை முழங்கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்த்தார்கள். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது தம் ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமிர்ந்து நிற்பார்கள். சஜ்தாச் செய்யும்போது அவர்கள் தமது கைகளைப் பரப்பி வைக்கவுமாட்டார்கள்; அவற்றை விலாவுடன் ஒடுக்கி வைக்கவும் மாட்டார்கள்; தம் கால்விரல் முனைகளை கிப்லாவை நோக்கி வைப்பார்கள்.

இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக்காலை நட்டு வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது இடது காலை (குறுக்கு வெட்டில் வலப்புறம்) கொண்டு வந்து, வலக் காலை நட்டு வைத்து தமது இருப்பிடம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி 828

இப்போது இதை விவரிக்க காரணம் என்னவெனில் ஹிதாயாவின் ஆசிரியர் சஜ்தாவின் போது கால்விரல்களை கிப்லா திசை நோக்கி மடக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறார்.

அதற்கு ஆதாரமாக மேற்கண்ட புகாரி 828 ஹதீஸைக் குறிப்பிட்டிருந்தால் அல்லது வேறு ஆதாரப்பூர்வமான செய்தியைக் குறிப்பிட்டிருந்தால் இதை எழுத வாய்ப்பு நேர்ந்திருக்காது.

ஆனால் அவர் செய்தது – ஆதாரமாக குறிப்பிட்டது என்ன தெரியுமா?

இதோ அந்த ஆதாரம்…

الهداية شرح البداية

– (1 / 50)

ويوجه أصابع رجليه نحو القبلة لقوله عليه الصلاة والسلام إذا سجد المؤمن سجد كل عضو منه

(ஸஜ்தாவில்) இருகால் விரல்களும் கிப்லாவை நோக்கி முன்வைக்கப்பட வேண்டும். ஏனெனில் முஃமின் ஸஜ்தா செய்யும் போது அவனது அனைத்து உறுப்புக்களும் ஸஜ்தா செய்கின்றன. என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 50

முஃமின் ஸஜ்தா செய்யும் போது அவனது அனைத்து உறுப்புக்களும் ஸஜ்தா செய்கின்றன என்று நபி சொன்னதாக ஒரு செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார். இப்படி ஒரு செய்தி எந்த ஹதீஸ் நூற்களிலும் இல்லை.

தான் குறிப்பிடும் கருத்திற்கு எவ்வளவோ ஆதாரப்பூர்வமான செய்திகள் இருக்க பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற செய்தியை ஏன் குறிப்பிட வேண்டும்.

தான் கூறும் கருத்திற்கு பல நபிமொழிகள் இருக்கும் நிலையிலேயே  இப்படி நபி மீது இட்டுக்கட்டி அக்கருத்தை நிலைநாட்டுகிறார் எனில் நபிமொழிகளில் இல்லாத கருத்தை நிலைநாட்ட என்னவெல்லாம் செய்வார்? எத்தனை செய்திகளை இட்டுக்கட்டுவார்? நினைத்தாலே இவர்களின் நபி நேசம் புல்லரிக்கின்றது.

—————————————————————————————————————————————————————-

நன்மை செய்ய துணை புரிவோம்

மங்கலம் சலீம்

ஓரிறைக் கொள்கையில் இருக்கும் நாம், மார்க்கம் கூறும் வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அதுபோலவே, நம்மைப் போன்று அடுத்தவர்களும் அவற்றைச் செய்வதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது பற்றியும் அதிகளவு கூறப்பட்டுள்ளது.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(திருக்குர்ஆன் 5:2)

இந்த வசனத்தின் மூலம் மார்க்கம் குறிப்பிட்டுள்ள நன்மையான, இறையச்சமான விசயங்களில் முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ள வேண்டும்; உதவிக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் ஆணையிடுகிறான்.  எனவே, இது தொடர்பாக இருக்கும் சில முக்கிய கருத்துக்களை இப்போது அறிந்து கொள்வோம்.

நன்மைக்குத் தூண்டுவதும் நம்பிக்கையே!

நாம் ஈமான் கொண்டுள்ளோம் என்பதற்கு அடையாளம், கடமையான வணக்கங்களை நிறைவேற்றுவதும் நல்ல காரியங்களைச் செய்வதும் மட்டுமல்ல. நம்மைப் போன்று மற்றவர்களும் அந்த அமல்களைச் செய்வதற்கு நம்மால் முடிந்தளவு தூண்டுவதும் துணைபுரிவதும் அதிலே அடங்கும்.

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

(திருக்குர்ஆன் 107:1-3)

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

(திருக்குர்ஆன் 8:73)

முன்சென்ற வசனங்களில், ஏழைக்கு உணவளிக்க தூண்டுவதும், துன்புறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும் முஃமின்களின் பண்புகளாக அல்லாஹ் கூறியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்மைக்குத் துணைபுரிவது கடமை

நபிகளாரின் காலத்தில், மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்துவிட்ட முஸ்லிம்கள், மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்யாமல் இருக்கும் முஸ்லிம்களிடம் நட்புறவு கொள்ளக் கூடாது; நெருக்கமாக இருக்கக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டது. ஆயினும், மார்க்க விசயமாக துணைபுரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(திருக்குர்ஆன் 8:72)

இஸ்லாத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருக்கும் போது, மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இச்சட்டம் விதிக்கப்பட்டது. அந்தக் கட்டத்திலும்கூட மார்க்க விசயங்களில் உதவி செய்வது கட்டாயமெனக் கூறியதில் நமக்கு பாடம் இருக்கிறது. மார்க்க விவகாரங்களில் பிறருக்கு துணைபுரிவதின் அவசியத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நன்மைக்கு வழிகாட்டுவதும் தர்மம்

பெற்றோர், பிள்ளைகள், வாழ்க்கைத் துணை, நண்பர்கள் என்று பலரும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவ்வாறு யார் இருந்தாலும் அவர்களிடம் நாம் நன்மையான காரியங்கள் பற்றி எடுத்துரைத்து அவற்றைச் செய்யுமாறு கூறினால், அதுவும் தர்மம் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்’’ என்று கூறினார்கள். அப்போது “(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?’’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்’’ என்று சொன்னார்கள். அவருக்கு தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?’’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்‘’ என்றார்கள். “(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?’’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவர் நல்லதைஅல்லது நற்செயலை’(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்’’ என்றார்கள். “(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?’’ என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1834

தமது பொறுப்பின் கீழிருக்கும் நபர்களுக்கு மார்க்கத்தை விளக்கி வழிகாட்டுவது அனைவர் மீதும் கடமையாக இருக்கிறது. இது ஒருபக்கம் இருப்பினும், அவ்வாறு நன்மை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் அல்லாஹ் தர்மம் செய்த கூலியை வழங்குகிறான். இது ஏக இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் பெரும் பாக்கியம்.

நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி

எந்தவொரு நற்செயலாக இருப்பினும் அதைச் செய்வதற்காக வேண்டி பிறருக்குத் துணைபுரிந்தால், அதன்மூலம் செய்பவருக்கு கிடைப்பது போன்ற நற்கூலி அவருக்கு உதவியவருக்கும் கிடைக்கும்.

ஆலோசனை அளிப்பது, அறிவுரை வழங்குவது, வழிமுறை சொல்வது, பொருளுதவி செய்வது, பொருளாதாரம் கொடுப்பது என்று அதற்கு எவ்வகையில் உதவினாலும் இதுபோன்று நன்மை கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் (1848)

நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் யாசகம் கேட்பவர்அல்லது தேவையுடையவர்யாரேனும் வந்தால் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ் தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்றுகின்றான்’’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புஹாரி (6028), (7476)

ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவுசெய்தால், (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்பலன் அவளது கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (2065)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் வாகனப் பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள்’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னிடம் (வாகனப் பிராணி) இல்லை’’ என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (3846)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ லஹ்யான்குலத்தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பியபோது, “உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரிலும் ஒருவர் புறப்படட்டும்‘’ என்று கூறினார்கள். பிறகு, (படைப் பிரிவில் செல்லாமல் ஊரில்) தங்கியவரிடம் உங்களில் யார் படை வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தார் விஷயத்திலும் அவரது செல்வம் விஷயத்திலும் நலம் பேணி நடந்துகொள்கிறாரோ அவருக்கும் புறப்பட்டுச் சென்ற படைவீரருக்குக் கிடைக்கும் நற்பலனில் பாதியளவைப் போன்றது கிடைக்கும்‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (3851)

யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலன் காக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

நூல்: முஸ்லிம் (3848)

இவ்வாறு,     நற்காரியங்களைச் செய்வதற்குத் துணைபுரிவது என்பது சாதாரண ஒன்றல்ல. நாமெல்லாம் நன்மைகளைக் கொள்ளையடிக்க மார்க்கம் காட்டும் மகத்தான மாபெரும் வழிமுறை.

தொழுகையைப் பேணுவது, நோன்பு வைப்பது, குர்ஆன் படிப்பது, தர்மம் செய்வது, துஆக்களை அறிவது என்று ஏதாவது ஒன்றிலாவது ஒருவரிடம் மாற்றம் வருதற்கு ஏதோ ஒருவகையில் நாமும் காரணமாக இருந்தால், அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் அதே அளவு நன்மை நமக்கும் கிடைக்கும்.

இதைப் புரிந்துக் கொள்பவர்கள், தான் மட்டும் சத்தியத்தில் சரியாக இருந்தால் போதும்; பிறர் எப்படி இருந்தால் நமக்கென்ன என்று அலட்சியமாக, சுயநலமாக இருக்க மாட்டார்கள். குடும்பத்திலும், சொந்தத்திலும், சமூகத்திலும் தமக்குள்ள வாய்ப்பை நழுவவிடாமல் அழைப்புப் பணி செய்வதில் ஆர்வம் செலுத்துவார்கள்; அக்கறை காட்டுவார்கள்.

—————————————————————————————————————————————————————-

பலகோடியில் பகட்டுத் திருமணம் தெருக்கோடியில் பாமர மக்கள்

பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி, கடந்த 2011ஆம் ஆண்டு கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்தது தொடர்பான 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி கைதானார். இதையடுத்து இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது. 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஜனார்த்தன ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இப்படி ஜாமினில் இருக்கின்ற ஒரு விசாரணைக் கைதியான ஜனார்த்த ரெட்டி தான், கடந்த 16ஆம் தேதி தனது மகள் பிராமணிக்கு ஜமீன் போன்று ஜாம் ஜாமென்று 650 கோடியில் ஆடம்பரமாக‌த் திருமணம் செய்தார்.

நாடெங்கிலும் உள்ள மக்கள், கொடியவன் மோடியால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட   ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக  வங்கி வாசலில் வயிற்றெரிச்சலுடன் கால் கடுக்க, மணிக்கணக்கில் அல்ல நாள் கணக்கில் நிற்கும் போது ரெட்டியின் குடும்பம் மட்டும் காசு பணத்தை எப்படி தண்ணீராக வாரி இறைக்க முடிகின்றது? வைர நகை அணிமணிகளுடன் வலம் வர முடிகின்றது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்தக் கேள்விக்கு விடை காண விழைவதற்கு முன்னால் இந்தத் திருமணத்தை விமர்சனம் செய்வதற்காகவும் விளாசித் தள்ளுவதற்காகவும்  நாம் ரெட்டியின்  திருமண அரங்கத்திற்குள் ஒரு குட்டி விசிட் அடித்து விட்டு வருவோம்.

ஆறு கோடி செலவில் ஆடம்பர அழைப்பிதழ்

பார்ப்போர் கவனத்தை ஈர்க்கும் வகையில் எல்.சி.டி. வடிவத்தில் தங்க ஜரிகை வேலைப்பாட்டுடன் முப்பதாயிரம் பேர்களுக்கு  அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன. அந்த அழைப்பிதழ்களுக்கு மட்டும் ஆறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது.

அந்த அழைப்பிதழைத் திறந்தால் அதில் திருமண அழைப்பு கொடுக்கும் வீடியோ தெரியும் வகையில் ஸ்மார்ட் போன் போல் எல்.சி.டி. திரையுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது.

வெற்றிலை பாக்கில் விரயமான லட்சங்கள்

வெற்றிலை பாக்கில்லாத கல்யாணம் ஒரு கல்யாணமா? அதனால் வெற்றிலை பாக்கு விளம்புவதில் ரெட்டி சகோதரர்கள் வெற்றி முத்திரை பதிக்கும் வகையில் அதற்கென்று வெறும்  (?)  ஐம்பது லட்சத்தை ரெட்டி சகோதரர்கள் செலவழித்திருக்கின்றனர். இதில் திருமண நாளன்று 20 லட்சம் ரூபாய் ஆகி உள்ளது. வெற்றிலை மடித்துத் தருவதற்கு 500 மாடல்களும் 500 பெண்களும் வரவழைக்கப் பட்டிருந்தனர். பாக்குகளுக்கு பெயர் போனது பெல்லாரி. எனவே பாக்குகள் பெல்லாரியிலிருந்து வரழைக்கப் பட்டன

36 ஏக்கர் நிலத்தில் முகூர்த்த நிகழ்ச்சி

பெங்களூருவில் உள்ள அரண்மனையில் நடைபெறும் இந்த திருமணத்துக்காக 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் அரண்மனை போன்ற பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதே போல திருப்பதி, ஹம்பி ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரி கிராமம், தாமரை குளத்துடன் கூடிய‌கிராமிய விளையாட்டு மைதானம் போன்ற திரைப்பட பாணியிலான பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செட்டுகளை உருவாக்கிய சினிமா பட இயக்குநர்கள்

இந்த பிரமாண்டமான செட்டுகளை ஒன்றரை மாத கால உழைப்பில்  தமிழ், தெலுங்கு, இந்திப் பட இயக்குநர்கள் உருவாக்கினர். அதனால் கலைத் துறையின் கை வண்ணம் மைதானத்தின் பகட்டான படைப்புகளில் கொஞ்சியது. அரண்மனை மைதானம் எங்கிலும் பெரும் பெரும் கேமிராக்கள், பார்வைகளைப் பறிக்கின்ற எல்இடி திரைகள், பரவசமூட்டுகின்ற ராட்சத பலூன்கள், அலங்கார வளைவுகள், மின்னலாய் வெட்டுகின்ற மின்விளக்குகள் ரெட்டியின் பணக்காரத்தன்மையைப் பறைசாட்டின.

அமர்க்களமான ஐந்து நாட்கள்

12ந்தேதி இரவு நலங்கு நிகழ்ச்சியில் தொடங்கி ஒவ்வொரு இரவும் மருதாணி வைபவம் நடைபெற்றது. ஆடல், பாடல் கச்சேரிகள் என்று ஐந்து நாட்களும் அமர்க்களப்பட்டன.

சவாரி செய்த சாரட் வண்டி!

திருப்பதி வெங்கடேஷ்வரா கோயிலை போன்று அமைக்கப்பட்ட செட்டுக்கு ஜனார்த்தன ரெட்டியும் அவரது குடும்பத்தினரும்  குதிரைகள் பூட்டிய 40 சாரட் வண்டிகளிலும் மாடுகள் மாட்டிய 40 மாட்டு வண்டிகளிலும் ஊர்வலமாக வந்து சேர்ந்தனர்.

திரைப்பட பாணியில் திருமண வைபவம்

திரைப்படத்தில் காதல் ஜோடிகள் தத்தி தாவி வரும் போது அவர்கள் பஞ்சுப் பாதங்கள் கொஞ்சிக் கொஞ்சி நடப்பதற்காக, தரை நெடுகிலும் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். இது நிஜ வாழ்க்கையில் நடப்பது கிடையாது. நிஜ வாழ்க்கையில் தலைவர்களுக்கு நடத்தப்பட்ட தடபுடல் வரவேற்புக்கு  பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது என்று  சொல்வார்கள். ஆனால் ரெட்டி வீட்டுத் திருமணத்தில் உண்மையில், திரைப் படப் பாணியில்  மணமகளும் மணமகளும் நடந்து வருவதற்காக சிவப்பு பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.

திரைப் படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் வருகின்ற வழிகள் தோறும் வான் மழையாக  வசந்த மலர்கள் பொழிந்து கொண்டிருக்கும். ரெட்டி வீட்டுக் கல்யாணத்தில் இந்தக் காட்சியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மணமகள், மணமகனுக்கு  மட்டுமல்ல திருமணத்திற்கு வருகையளித்த விருந்தினர்கள் அனைவருக்கும் வான் மழையாக வசந்த மலர்கள் பொழிந்தன. அதுவும் காஷ்மீர் ரோஜாக்கள்,  ஆம்பூர் மல்லிகை பூக்கள் தூவப்பட்டன. இதற்காக மும்பை, சென்னை, பெங்களூரிலிருந்து ஆண் பெண் மாடல்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆண்களுக்கு வெள்ளை நிற வேட்டி, சட்டைகளும் பெண்களுக்கு வெள்ளை நிறப் பட்டுப் புடவை கவரிங் நகைகள் வழங்கப்பட்டிருந்தன.

வைரக்கல் பதித்த வண்ணச் சேலை

மணமகள் அணிந்த சேலையோ சாதாரண சேலையல்ல! தங்க ஜரிகையில் நெய்யப்பட்டு  இளஞ்சிவப்பு, வெண்ணிற வைர கற்கள் பதிக்கப்பட்ட சேலை. அதன் மதிப்பு 17 கோடி! அணிந்திருந்த  நகைகளின்  மதிப்பு 84 கோடி! நகைக்கும் சேலைக்குமே 101 கோடி ரூபாய்! மணப்பெண் மட்டுமல்ல ரெட்டியின் ஒட்டு மொத்த குடும்பப் பெண்களும் மணமகன் வீட்டு குடும்பத்தினரும் வைர நகைகளிலும் ஒட்டியானங்களிலும் காப்புகளிலும் ஜொலித்தனர். பளப்பளப்பான பட்டு சேலைகளில் பகட்டாக பளிச்சிட்டனர்

நடிகர், நடிகைகளின் நட்சத்திர பிரவேசம்

திருமண அரங்கமே திரைப்பட பாணியில் அமைக்கப்பட்டு மின்னிக் கொண்டிருக்கும் போது திரைப்பட நடிகர், நடிகைகள் அங்கு திரளாமல் போனால் அது இருள் சூழ்ந்த சுரங்கமாகி விடுமல்லவா? அதனால் அங்கு சூப்பர் ஸ்டார், புது இந்தியாவின் முதல் தர தேசபக்தன், பாமர ஏழைகளின் பரம நண்பன், பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலன் ரஜினிகாந்த் முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட பட நடிக, நடிகையர் வந்து கலந்து, அரங்கத்தை ஜொலிக்கவும் கலகலக்கவும் வைத்தனர். இதேபோல தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விஷால், சரத்பாபு, சாய்குமார் ஆகியோரும், கன்னட நடிகர்கள் ரவிச்சந்திரன், சாது கோகிலா உட்பட ஏராளமான திரையுலகினரும் பங்கேற்றனர்.

அணி வகுத்த அரசியல் ஆட்சித் தலைவர்கள்

கருப்புப் பண விவகாரத்தில் நாடு களேபரமாகிக் கிடக்கும் கடுமையான சூழலில் இதையெல்லாம் கண்டு கொள்ளாத, தேச பக்தியை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட பாஜகவின் பரிவாரங்கள் பெரும் படையுடன் ரெட்டியின் படோடப, பகட்டுக் கல்யாணத்தில் வந்து கலந்து கொண்டனர். கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் அசோக், ஈஸ்வரப்பா உட்பட ஏராளமான பாஜக தலைவர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியும் விதிவிலக்கு கிடையாது. கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊர்வலமாக வந்த உயர் ரக கார்கள்

ஜனார்த்த ரெட்டி மகள் திருமணத்துக்காக பெல்லாரி, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் வந்தன. இதேபோல 1800 டாக்ஸிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஐபிகளின் ஆடி, ஜாகுவார், பிஎம்டபுள்யூ போன்ற ‌விலை உயர்ந்த கார்களும் படையெடுத்தன. இதுதவிர சிங்கப்பூர், மலேசியா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த விவிஐபிகளின் வசதிக்காக 15 ஹெலிபேடுகளும் உருவாக்கப்பட்டிருந்தன. விருந்தினர்கள் தங்குவதற்காக பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 1500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பன்னாட்டு சுவைகளில் பரிமாறப்பட்ட உணவுகள்

இந்த்த் திருமணத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஆந்திரா, உடுப்பி, சீனா, இத்தாலி ஆகிய ஸ்டைலில் 152 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

வேத மந்திரம் ஓத விஷேச பூசாரிகள்

திருமணத்தில் வேத மந்திரங்கள் ஓதுவதற்கென்று  திருப்பதியிலிருந்து எட்டு விஷேச பூசாரிகள் வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் மந்திரம் ஓத ஜனார்த்தன ரெட்டி முன்னிலையில் ராஜீவ் ரெட்டி, பிரமாணியின் கழுத்தில் தாலி கட்டினார்.

உலக அடிப்படையில் ஒரு சில கேள்விகள்

ரெட்டியின் ஆடம்பரத் திருமணத்தைப் பார்த்து விட்டு இந்திய நாடே அரண்டு போயுள்ளது. அதன் அதிர்வுகள் பத்திரிக்கைகளில் பதிவாகி உள்ளன. 500 ரூபாய்க்கு வங்கிகளின் வாசலில் மக்கள் காத்திருக்கும் நிலையில் ரூ.650 கோடி செலவில் முன்னாள் பாஜக அமைச்சரின் மகள் திருமணம் என்று பத்திரிக்கைகள் தலைப்பிட்டுள்ளன என்றால் அந்த ஆடம்பர திருமணத்தின் அதிர்வுப்  பரிமாணத்தை விவரிக்கத் தேவையில்லை.

ஆயிரம், ஐநூறு நோட்டுகள் செல்லாத பட்சத்தில் ரெட்டி சகோதர்களுக்கு இம்மாபெரிய தொகையைச் செலவு எப்படி சாத்தியமாயிற்று? என்ற கேள்வியை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் அனைவரும் வெளிப்படையாகவே கேட்கின்றனர். இதே கேள்வியை எல்லோருடனும் இணைந்து நாமும் எழுப்புகின்றோம்.  இந்தக் கேள்விக்கு பாஜகவால் ஒரு போதும் பதில் சொல்லவே முடியாது.

எதற்கெடுத்தாலும் தேசப் பற்று என்று வேஷம் போடுகின்ற பச்சோந்தி பாஜக அரசு தனது  பரிவாரங்களுக்கு பணம் செல்லாது என்ற அறிவிப்பை  முன்னரே தெரிவித்ததால் தான் ஜனார்த்தன ரெட்டியால் 650 கோடிக்கு மேலான ரூபாயை அள்ளி வீச முடிந்திருக்கின்றது. ஆறாய் பெருக்கெடுத்து ஓடச் செய்திருக்கின்றது. இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. இதை பாஜக மறுக்கவே முடியாது.

நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதை விமர்சிப்பவர்களின் விமர்சனம் அனைத்தும் ‘மக்கள் ஐநூறு ஆயிரத்தை மாற்றுவதற்கு அலையாய் அலைகின்ற போது அதற்காக ஆலாய்ப் பறக்கின்ற போது ரெட்டி குடும்பம் இப்படி செலவு செய்யலாமா?’ என்ற அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கின்றது.

அப்படியானால்,  மோடி ஆயிரம், ஐநூறுகளை செல்லாது என்று அறிவிக்காதிருந்தால், ரெட்டி வீட்டுத் திருமணம் விமர்சனத்திற்குள்ளாகி இருக்காது! இது தான் உண்மை நிலையாகும். பத்திரிக்கைகள் இதைக் கண்டு கொண்டுமிருக்காது. மாறாக அதில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகார வர்க்கங்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று அத்தனை பேர்களின் படங்களைப் பல்வேறு கோணங்களில் போட்டு பத்திரிக்கைகளை அமர்களப் படுத்தியிருக்கும். இங்கு தான் ஏகத்துவம் இதழின் அதாவது இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வை வித்தியாசப்படுகின்றது; வேறுபடுகின்றது.

திருமணம் என்பது எப்போதும் ஆடம்பரமாக இருக்கக் கூடாது. அதற்காக அதிகமான காசு பணத்தை அள்ளி செலவு பண்ணக் கூடாது.

நிதானமான பார்வை –  நீதியான கோணம்

ஆடம்பரத் திருமணம் தொடர்பாக இஸ்லாமியப் பார்வையைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு நிதானமான, நீதமான பார்வையைப் பார்ப்போம்.

கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா கூறுகிறார்:

கொழுத்த பணக்கார வட்டம் நகர்ப் பகுதிகளில் திருமணக் கூடங்களில் பணத்தை வாரியிறைத்து, தங்கள் பணத்திமிரை வெளிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கின்ற கிராமப்புற ஏழை மக்கள் அந்தப் பணக்காரர்களை அப்படியே பின்பற்றி அதுபோன்று ஆடம்பரத் திருமணங்களை நடத்துகின்றனர். இருவருக்கும் உள்ள வித்தியாசம் பணக்கார வர்க்கம் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய காசு பணத்தைச் செலவழித்து திருமணத்தை நடத்துகின்றது. ஏழை வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள அசையும், அசையாச் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றனர். அதாவது கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர்.

ஒரு வேளைச் சோற்றுக்கு உணவில்லாமல் எத்தனையோ பேர் வாடுகின்றனர். ஆனால் இவர்களோ ஒரு கல்யாண அழைப்பிதழில் ஏழாயிரம் ரூபாயைக் காலி செய்கின்றனர்.

இவ்வாறு கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவிக்கின்றார்.

“கோபுரத்தில் வாழ்கின்ற பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணத்தில் வசூல் செய்யப்படும் இந்த வரிப்பணம் குடிசையில் வாழ்கின்ற ஏழையின் திருமணச் செலவுக்குத் திருப்பி விடப்படும்’’ என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்ட அமைச்சர் இதை எப்போது தெரிவித்தார்?

கடந்த ஜூன் 2014ஆம் ஆண்டில் ஆனந்த்ஜி என்ற ஒரு பெரிய வியாபாரி. தனது 22 வயது மகளுக்கு மாயாஜாலக் கதை பாணியில் திருமணம் நடத்தி முடித்தார். மயக்க வைக்கும் இந்தத் திருமண நிகழ்வு தான் தனது மகளின் நீண்ட நாள் கனவு என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

பெங்களூரில் ஒரு நட்சத்திர ஓட்டல் அளவில் நடந்த இந்த டாம்பீக, ஆடம்பரத் திருமணம் தான் அன்று  கர்நாடக அரசின் கழுகுப் பார்வையைத்   திருப்பியது. அப்போது தான் கர்நாடக சட்ட அமைச்சர் இவ்வாறு கூறினார். அத்துடன், ஐந்து லட்ச ரூபாய்க்கு மேலாக அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கின்ற திருமணங்கள் இந்த வரி வரம்புக்குள் வருகின்றன. எத்தனை சதவிகித வரி என்பது இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது அப்போது ழிஞிஜிக்ஷி சேனலில் வெளியானது.

ஆனந்த்ஜி வீட்டுத் திருமணத்தை ரெட்டி வீட்டு திருமணத்துடன் ஒப்பிடும் போது அது ஒன்றுமே கிடையாது. அதை விடக் கடுமையான வரி விதிப்பையும் கடுமையான தடையையும் போட வேண்டிய கல்யாணம் ஆகும் இது. ஆனால் கர்நாடக அரசு ரெட்டி கல்யாணத்தைக் கண்டிக்காமலும் கண்டு கொள்ளாமலும் இருப்பதுடன் இரு அமைச்சர்கள் அந்த ஆடம்பரக் கல்யாணத்தில் போய் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது கொடுமையான விஷயமாகும்.

ஆடம்பரக் கல்யாணத்தின் மீது பதிகின்ற நிதானமான, நீதமான இந்தப் பார்வையைத் தான் இஸ்லாமிய மார்க்கம் ஆழமாகப் பார்க்கின்றது. இதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை இஸ்லாமிய மார்க்கம் அழுத்தமாகப் பார்க்கின்றது.

எதிர்விளைவுகள்  –  எதிர்வினைகள்

செல்வந்தர்கள் இது போன்ற திருமணத்தை நடத்துகின்ற போது ஏழைகளும் தங்கள் பங்கிற்கு திருமணத்தை தங்கள் அளவில் பெரிதாக நடத்த முனைகின்றனர். அதனால் கடன் வாங்குகின்றனர். கடன் கிடைக்காத பட்சத்தில் வட்டிக்கு வாங்குகின்றனர். கடைசியில் தங்களிடம் இருக்கின்ற வீடு வாசல்களை, வயல் வெளிகளை, தோப்புத் துறவுகளை விற்கின்றார்கள். இதைத் தான் கர்நாடக சட்ட அமைச்சர் 2014ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பிரதிபலித்தார். இந்த விளைவை நாம் பார்த்து விட்டோம்.

ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் வாழ்கின்ற நாட்டில், வாங்கிய கடனை அடைப்பதற்கு வசதியில்லாமல் விவசாயிகளின் தற்கொலை சாவுகள் நடக்கின்ற நாட்டில், கிட்னி டயாலிஸிஸ் போன்ற வைத்தியச் செலவுகளுக்கு வகையில்லாமல் அன்றாட நோயாளிகள் உயிர் இழப்பு நடக்கின்ற ஒரு நாட்டில் ரெட்டி போன்ற வகையறாக்கள் அதிலும் ஓரிரு  வைர நகைகளில் ஜொலித்தால் பரவாயில்லை. வைர நகைகளில் குளித்தால் அது ஏழை மக்களிடம் புரட்சியைத் தான் உருவாக்கும். நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் தோன்றியது இந்த அடிப்படையில் தான்.

கல்யாணம் எளிதாகத் தான் இருக்க வேண்டும். கல்யாணம் கடுமையான செலவுகள் கொண்டதாக இருந்தால் பருவ வயது அடைந்த ஒருவன் அல்லது ஒருத்தி திருமணம் முடிப்பதற்குக் கால தாமதமானால் அது நிச்சயமாக விபச்சாரத்தில் தான் போய் முடியும்.

சொந்த பந்தங்களில் உள்ள பையன் உயர் மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பதற்குப் போதிய பொருளாதாரமின்றி தவித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு உதவி செய்ய முன் வராத சொந்த பந்தங்கள் கல்யாணப் பந்தலிலும் களறிப் பந்தியிலும் பணத்தைக் காலி செய்கின்ற ஈவு இரக்கமற்ற மனப்பான்மைக்கு இது கொண்டு செல்லும். விளம்பர மோகத்தை மென்மேலும் இது வளர்த்து விடும்.

இது போன்ற காரணங்களால் தான் இஸ்லாமிய மார்க்கம் திருமணத்தை மிக சிக்கனமாக நடத்த வேண்டும் என்று கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணத்தில் ஓர் ஆட்டை அறுத்தேனும் விருந்து வை (நூல்: புகாரி 2048) என்று கூறியிருந்தாலும் அதற்கு ஒரு கட்டுப்பாடும் விதிக்கின்றார்கள்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்‘’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 23388

நாட்டில் ஆயிரம், ஐநூறு நோட்டுகளை மோடி அரசு தடை செய்ததால் பணத் தட்டுபாடும், பரிதவிப்பும் மக்களிடத்தில் நிலவுவதால் ரெட்டியின் இந்த பகட்டான, படோடமான திருமணம் பெரிதாகப் பார்க்கப் படுகின்றது. நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றார்கள்.

இவர்கள் யாருக்கும் இப்படி ஒரு விமர்சனத்தை செய்வதற்கு அறவே தகுதியே இல்லை.  காரணம் அவர்கள் தங்களது வீட்டுத் திருமணங்களில் தங்களது தகுதிக்கேற்ப செலவு செய்கின்றார்கள். சிக்கனம் என்பது மருந்துக்குக் கூட பார்க்க முடியவில்லை.

திருமணத்தில் சிக்கனம் என்பது நடைமுறையில் இருந்து வருகின்ற தடபுடல் விருந்து போன்ற செலவுகள் கூட இல்லாத அளவுக்கு மிக எளிமையாக இருக்க வேண்டும். விருந்து என்று இறங்கி விட்டால் கண்டிப்பாக ஒரு பெரிய தொகையைக் காவு கொள்ளக் கூடியதாக ஆகி விடுகின்றது. அங்கே எளிமை என்பது அடிப்பட்டு போய் விடுகின்றது.

ரெட்டியின் திருமணத்தைப் பார்த்து சுன்னத் வல்ஜமாஅத்தினரும் முகம் சுளிக்கின்றார்கள்.  அவர்களுக்கும் முகம் சுளிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. காரணம் இவர்கள் தங்களுடைய திருமணங்களில் தங்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப அள்ளி வீசுகின்றார்கள்.

இவர்கள் தங்கள் பொருளாதாரத்திற்குத் தக்க செலவு செய்கின்றார்கள் என்றால் ரெட்டி தனது பொருளாதார அளவுக்கு செலவு செய்கின்றார். இரண்டும் ஒரு வகையில் சமம் தான்.

எனவே ரெட்டியைப் பார்த்து முகம் சுளிப்பதற்கும், விமர்சிப்பதற்கும் எந்த ஒரு தார்மீக அடிப்படையும் இவர்களுக்கு இல்லை.

அந்தத் தகுதி, யோக்கியதை, அருகதை தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டும் உள்ளது. காரணம் அது மட்டும் தான் இந்த ஹதீஸுக்கு முழு மூச்சாக முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எளிமைத் திருமணத்தைப் பிரச்சாரம் செய்து, ஏழை எளியவர்களின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கிறது.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்   தொடர்: 36

மஹர் கொடுத்து மணம் முடிப்போம்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

அன்றைய அறியாமைக் காலத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்கத்து காஃபிர்கள்கூட மஹர் கொடுத்துத்தான் திருமணம் புரிந்துவந்தனர். இருப்பினும் பெண்களுக்கு மஹர் கொடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள். என்றாலும் இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஆண் சமூகம் செய்யும் கொடுமையளவுக்கு அன்றைய அறியாமைக் காலம் செய்யவில்லை.

மாறாக, பெண்ணுக்கு மஹர் தொகையைக் கொடுக்காமல் இருப்பதற்காக, ஒரு ஆணின் சகோதரியை இன்னொரு ஆண் திருமணம் முடித்துக் கொண்டு, திருமணம் முடித்தவரின் சகோதரியை மைத்துனர் கட்டிக் கொள்வார். இவ்வாறு மாற்றி மாற்றி, பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொள்வதை ஊக்குவித்தனர்.

இதற்கு இன்றைய நடைமுறையில் சில வட்டாரங்களில் குண்டுமாத்து சம்பந்தம், சிலரது வழக்கில் கொண்டான் கொடுத்தான் என்றும் சொல்லாடல் இருக்கிறது. அதாவது எந்த வீட்டில் திருமணம் முடிப்பதற்குப் பெண் எடுக்கிறோமோ அந்த வீட்டிலுள்ள ஆணுக்கு நம்வீட்டிலுள்ள பெண்ணைக் கொடுப்பது என்ற வழக்கம். இந்தச் செயலையும் நபியவர்கள் தடைசெய்தார்கள்.

நம் காலத்தில் நடக்கும் கொடுமையுடன் ஒப்பிட்டால் இதுவெல்லாம் பெண்ணுக்குப் பெரிய கொடுமையல்ல என்றே சொல்லலாம். ஆயினும் நபியவர்கள் சிறிய வகையில் பெண் கொடுமை என்றாலும் அதையும் தடுத்தேயிருந்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஷிஃகார்முறைத் திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

ஒருவர் மற்றொருவரிடம் நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்‘’ என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ஷிஃகார்எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது.

நூல்: புகாரி 5112, 6960

மஹ்ரின்றி, பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2770, 2769, 2768, 2767, 2766

மஹர் என்பதே பெண்ணுக்குரிய ஜீவனாம்சத் தொகைதான். ஆனால் மஹர் வழங்காமல் பெண் கொடுத்து பெண் எடுக்கும் திருமணத்தில் என்ன மோசடி நடக்கிறதெனில், பெண்ணுக்குச் சேர வேண்டிய மஹரை பெண்ணின் உடன் பிறந்த சகோதரன் அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆக மஹர் கொடுப்பதை இடம் மாற்றி, அதாவது பெண்ணுக்குக் கொடுக்காமல் பெண்ணுடன் பிறந்தவனுக்குக் கொடுப்பதினால் தான் நபியவர்கள் இதுபோன்ற பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் திருமணத்தைத் தடைசெய்தார்கள்.

மஹரை மாற்றிக் கொடுப்பதையே உன்னிப்பாகக் கவனித்து நபியவர்கள் தடுத்துள்ளார்கள் எனில், நம் சமூகத்தின் தீமையாக இருக்கிற வரதட்சணை தவறு என்று சொல்லித்தான் புரிய வேண்டுமா? ஆனால் பெண்ணுக்குக் கொடுக்காமல் அவளிடம் கேட்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

பெரியோர் முன்னிலையில் ஆலிம்கள் முன்னிலையில் சபையோர் முன்னிலையில் நாங்கள் திருமணப் பதிவுப் புத்தகத்தில் 1001 மஹருக்கு என்று எழுதுகிறோமே அது பெண்ணுக்குக் கொடுப்பது தானே என்று சிலர் பிதற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால் பெண்ணிடம் வரதட்சணையாகப் பிடுங்கிய தொகையோ பல இலட்சங்கள். அதை எவரும் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்வதில்லை. அதிலும் சிலபேர் அந்த 1000 ரூபாயையும் கடன் மஹர் என்று எழுதுவார்கள். இது எப்படியிருக்கிறதெனில், பிச்சை எடுக்க வந்தவனிடம், ஒரு ரூபாயை பிச்சையாகப் போட்டுவிட்டு, அவனது தட்டிலிருந்து 100 ரூபாயை எடுத்ததற்குச் சமம். இவன் பிச்சை போடுபவன் கிடையாது. அயோக்கியன். அதுபோன்ற நிலையில் 1000 ரூபாய் மஹரைப் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டு வரதட்சணையாக பல இலட்சங்களையும், வீடு, கார் பங்களா என்று வாங்குவதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

இதில் இன்னொன்றையும் புரிய வேண்டும். கொடு என்றாலேயே நாம் தான் கொடுக்க வேண்டும் எனவும், அவர்களிடம் நாம் எதையும் வாங்கக் கூடாது என்ற கருத்தும் அந்த வசனத்திலேயே உள்ளடங்கித்தான் இருக்கிறது. அதேபோன்று வலிமா விருந்து உட்பட திருமணச் செலவு அத்துணையும் ஆண்மகனையே சாரும். பெண்ணுக்குத் திருமணத்தில் எந்த வகையிலும் செலவே இருக்கக் கூடாது என்பதே இஸ்லாத்தின் கொள்கை. இப்படியெல்லாம் சொல்லப்பட்ட மார்க்கத்தில் வரதட்சணை வாங்குபவன் திருவோட்டில் திருடியவனாகவே பார்க்கப்படுகிறான்.

அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்:

அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள்! கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை நியாயமான முறையில் அவர்களிடம் வழங்கி விடுங்கள்!…

(அல்குர்ஆன் 4:25)

நியாயம் என்றால் அவனது பொருளாதாரம், அவனது தகுதி ஆகிய எல்லாவற்றையும் கவனித்து பெண்களுக்கு வழங்குதல் என்று பொருள். இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய் என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஆயிரம் ரூபாயை வைத்து ஒரு பவுன் நகை கூட வாங்க முடியாது. அதில் ஒரு மூக்குத்தி கூட வாங்க முடியாது. எனவே காலத்திற்குத் தகுந்தாற்போல் நியாயமான முறையில் இறைவன் பெண்களுக்கு மஹர் தொகையை வழங்கச் சொல்கிறான்.

அதேபோன்று மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து நிறையப் பேர் மதினாவிற்கு வந்தார்கள். இதில் ஆண்களும் இருப்பார்கள். பெண்களும் இருப்பார்கள். இப்படி பெண்கள் ஹிஜ்ரத் செய்து வந்தால் மக்காவில் அவர்களது கணவன்மார்கள் காஃபிராக இருந்திருப்பார்கள். மார்க்கத்திற்காகக் கணவனையும் துறந்துதான் ஹிஜ்ரத்தை நபித்தோழியர்கள் செய்தனர். அப்படிப்பட்ட ஹிஜ்ரத் செய்த பெண்களை மணமுடிப்பது சம்பந்தமாக இறைவன் பேசும் வசனத்திலும் கூட, மஹர் கொடுத்துதான் திருமணம் முடிக்க வேண்டும் என்கிறான்.

அதாவது கணவன் மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று மற்றவர் மறுத்தால் இஸ்லாமிய மார்க்கத்தில் தனியாக தலாக் அல்லது குலா என்ற விவாகரத்து சட்டம் தேவையில்லை. இஸ்லாத்தை ஏற்பதே தங்களது துணையிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்துவிடும் விவாகரத்தாக ஆகிவிடும். இந்த நிலையில் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த பெண்மணிகளைப் பற்றித்தான் இவ்வசனத்தில் இறைவன் பேசுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களை தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 60:10)

ஆக, காஃபிர்களுக்கு மனைவியாக இருந்து இஸ்லாத்திற்கு வருகிற பெண்களைத் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு என்ற சட்டத்தைச் சொல்லும் போதே மஹர் கொடுத்தால் தான் திருமணம் செல்லுபடியாகும் என்கிறான்.

இன்னும் சொல்வதாக இருப்பின், பெண்ணுக்கு ஆண் தான் மஹர் கொடுத்துத் திருமணம் முடிக்க வேண்டும் என்பதற்கு நபியவர்கள் காலத்திற்கும் முன்னால் வாழ்ந்த மூஸா நபியின் வரலாற்றில் ஆதாரம் காணக் கிடைக்கிறது.

மூஸா நபியவர்கள் உள்ளூரில் இருக்கும் போது, இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் மூஸா நபியவர்கள் தன் சார்பான ஆளுக்கு ஏற்றுக் கொண்டு பேசுகிற போது, எதிரியின் சமூகத்தைச் சார்ந்தவருக்கு மூக்கில் குத்து விட்டுவிடுவார்கள். எதேச்சையாக நபி மூஸா அவர்கள் அடித்த போது அந்த நபர் இறந்துவிடுகிறார்.

இந்தச் செயல் தவறானது என்றும், இது ஷைத்தானின் வேலை என்றும் மனம் திருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் இறைவன் மன்னித்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

(பார்க்க: அல்குர்ஆன் 28:15,16,17)

இந்நிலையில் அந்தச் சமூகத்திலுள்ள பிரமுகர்கள், மூஸாவைக் கொல்ல வேண்டும் என்று கூறியதும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மூஸா நபியவர்கள் மத்யன் என்ற ஊருக்குச் சென்று அங்கே ஒரு பெரியவரிடம் அடைக்கலம் தேடுகிறார். அந்தப் பெரியவர், தனது மகளை மூஸா நபிக்குத் திருமணம் முடித்துத் தருவதாகச் சொல்கிறார். மூஸா நபியும் ஒத்துக் கொள்கிறார்கள்.

அப்போது அந்தப் பெரியவர், தனது மகளைக் கல்யாணம் முடிப்பதாக இருந்தால், என்னிடம் எட்டு ஆண்டுகள் வேலை பார்த்து அந்த உழைப்பை மஹராகத் தரவேண்டும் என்று கேட்கிறார். எட்டு ஆண்டுகள் மூஸா நபியவர்கள் வேலை செய்து, மஹரைக் கொடுத்து, பின்னர் அந்தப் பெண்மணியைத் திருமணம் முடித்ததாகவும் அல்லாஹ் சொல்கிறான்.

எட்டு வருட உழைப்பு என்பது மிகப்பெரிய மஹர். இன்றைய கணக்குப்படி சராசரியாக ஒரு நாள் உழைப்புக்கு 300 ரூபாய் என்று கணக்கிட்டால் மாதம் 9000 ரூபாய். வருடத்திற்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் ஆகும். எட்டு ஆண்டுகள் எனில் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆகிறது. நபி மூஸா அவர்கள் ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதற்கு சுமார் எட்டு இலட்சத்திற்கும் மேல் மஹர் கொடுத்துள்ளார்கள் எனில் இது மிகப்பெரிய தொகைதான்.

இந்த மொத்த சம்பவமும் இடம் பெறும் திருக்குர்ஆனின் வசனங்கள், 28வது அத்தியாயம் 15 முதல் 28 வரையிலான வசனங்களில் காணலாம்.

எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்’’ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 28:27)

இந்த வசனத்திலும் கூட மூஸா நபிக்குப் பெண் கொடுத்தவர் எட்டு ஆண்டுகள் உடல் உழைப்பை மஹராகக் கேட்கிறார்.  பத்து ஆண்டுகள் உழைத்தால் அது உங்கள் விருப்பம் என்றும் கூறுகிறார். அப்படியெனில் எட்டு ஆண்டுகள் என்பது அவர்களது பார்வையில் குறைந்த மஹராகத்தான் தெரிகிறது. அத்துடன் மூஸா நபிக்கு சிரமத்தை நாடவில்லை என்றும் கூறுகிறார்.

அப்படியெனில் அந்தச் சமூகம் எப்படியெல்லாம் பெண்ணுரிமையைப் பேணியிருக்கிறார்கள் என்று பாருங்கள். எனவே இந்தச் செய்தியும் பெண்ணுக்கு ஆண் தான் மஹர் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

—————————————————————————————————————————————————————-

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்

கதியே தாரும் எங்கோனே!

நாகூர் இப்னு அப்பாஸ்

இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம்.

இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்ற கருத்துக்கள் இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் எவ்வாறு மார்க்கத்திற்கு முரண்படுகிறது என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அறிந்து வருகிறோம்.

அந்த வகையில், நாகூர் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய “கதியே தாரும் எங்கோனே” எனும் பாடலின் விஷம கருத்துக்களைப் பற்றி இம்மாதம் அறியவிருக்கின்றோம்.

நம்முடைய வாழ்க்கைக்காக, ஆரோக்கியத் திற்காக, குடும்பத்திற்காக இன்னும் பல விஷயங்களுக்காகவும் உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ் ஒருவனிடமே தஞ்மடைந்து பிரார்த்தனைகளை முன்வைக்க வேண்டும்.

அவ்வாறின்றி, படைத்தவனை விட்டுவிட்டு படைப்பினங்களிடம் பிரார்த்திப்பது, தஞ்சம் கேட்பதெல்லாம் இறைவனுக்கு இணைகற்பிக்கின்ற காரியமாகும்; இஸ்லாத்திற்கு எதிரானதாகும்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

உங்களுக்கு வேதனை வந்து, உங்களுக்கு உதவி செய்யப்படாத நிலை வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனிடமே திரும்புங்கள்!

அல்குர்ஆன் 39:53, 54

நோய், வறுமை, கஷ்டம், பிரிவுகள், என்று எவ்விதமான சோதனைகள் இறைவன் புறத்திலிருந்து வந்தாலும் அவனது அருளை விட்டும் நாம் நிராசை அடைந்துவிடக் கூடாது. நமது கோரிக்கைகள் அனைத்தையும், நமது நம்பிக்கை முழுவதையும் அவனிடமே சமர்பிக்க வேண்டும்; சரணடைய வேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படை.

இந்த அடிப்படையைத் தகர்த்து விட்டு, இதற்கு நேர்எதிர் பாதையிலே தான் தனது “கதியே தாரும் எங்கோனே” எனும் பாடலை அரங்கேற்றியிருக்கிறார் எழுத்தர்.

கதியே தாரும் எங்கோனே;

கடல் நாகூர் மீரானே;

குணம் நாடி வந்தேனே;

கதியே தாரும் எங்கோனே.

இவ்வாறு இப்பாடலின் முதல் அடி துவங்குகிறது.

“கதி” என்ற வார்த்தை ஓரிரு அர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தஞ்சம் என்ற பொருள்.

கடலோர பகுதியான நாகூரில் அடங்கியிருக்கும் ஷாகுல் ஹமீதே நான் குணம் பெற வேண்டும் என்பதற்காக தங்களிடம் தஞ்சமடைந்துள்ளேன் என்று இம்முதல் அடியில் கூறுப்படுகிறது.

ஒரு மனிதர் எத்தகைய நற்குணத்தைப் பெற்றிருந்தாலும், நல்லடியாராகத் திகழ்ந்தாலும் அவருக்கு மனித தன்மையைத் தாண்டி வேறு எந்த ஆற்றலும் அதிகரிக்காது.

அவர் நல்லடியாரா? இல்லையா? என்பதும் கூட இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அவ்வாறிருக்க ஒரு மனிதரை இவர்களாக நல்லடியார் என்று கற்பனை செய்து கொண்டு, அவர் இறந்து மண்ணோடு மண்ணாக ஆகியிருந்தும் அவர் உயிருடன் இருக்கின்றார் என்று பகல் கனவு கண்டு இறை ஆற்றலை அவருக்கு வழங்குகின்றனர்.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அத்துடன் அவனது உலகத் தொடர்பு அனைத்தும் முறிந்து விடுகிறது என்பதை இதற்கு முந்தைய தொடரில் குறிப்பிட்டு இருக்கின்றோம்.

ஒரு வாதத்திற்கு தர்காவாதிகள் கூறுவது போல நல்லடியார்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அந்த நல்லடியார் என்ற அந்தஸ்த்திற்கு அதிகம் தகுதி படைத்தவர்கள் நபிமார்கள்.

அந்த நல்லடியார்களான நபிமார்கள் கூட நோயுறும் போது தங்களுக்குத் தாங்களே நிவாரணம் செய்துக் கொள்ள முடியவில்லை. இறைவனின் நிவாரணத்தையே எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (என்று இப்ராஹிம் கூறினார்)

அல்குர்ஆன் 26:80

இவ்வுலகில் இறைவன் புறத்திலிருந்து எத்தகைய பரீட்சைகள் தனக்கு வந்தாலும் அவற்றில் பொறுமை காத்து வென்று காட்டியவர். இறைவனது உற்ற தோழர் என்று நற்சான்று வழங்கப் பெற்றவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

அத்தகைய ஒரு நல்லடியாரே, தான் நோயுறும் போது அல்லாஹ்வே நிவாரணம் தருகிறான் என்று கூறுகிறார். இவ்வாறு கூறுவதிலிருந்தே தனக்கு அந்த ஆற்றல் இல்லையென்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இப்ராஹீம் நபிக்கே அந்த ஆற்றல் இல்லை எனும் போது, ஷாகுல் ஹமீதுக்கு இருக்கிறது என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்?

இப்ராஹீம் நபியை விட அவர் உயர்ந்து விட்டாரா? அல்லது இப்ராஹீம் நபியை விட சிறந்த நல்லடியாராக இருக்கின்றாரா?

இப்ராஹீம் நபி மட்டுமல்லாமல் அய்யூப் (அலை) அவர்கள் தான் நோயுறும் போது கூட இறைவனிடம் தான் தஞ்சம் அடைந்தார்கள்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்’’ என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

அல்குர்ஆன் 21:83, 84

இன்னும் நபி(ஸல்) அவர்கள் தமது கடைசி காலத்தில் இருவர் அடையும் துன்பம் அளவுக்கு கடுமையான நோயினால் தாக்கப்பட்டு மயக்கமுற்று விழுந்து கொண்டேயிருந்தார்கள்.

நல்லடியார்களால் நோய் நிவாரணம் தர இயலும் என்றால் இந்த நபிமார்கள் தங்களுக்குத் தாங்களே நிவாரணம் அளித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், அனைத்து நபிமார்களும் தங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தின் போதெல்லாம் அல்லாஹ்விடம் தான் கையேந்தினார்கள்.

ஆனால் இப்பாடலோ இஸ்லாத்திற்கு முரணாக நல்லடியார்கள் நிவாரணம் தருவார்கள் என்று கூறுகிறது.

அல்லாஹ்வை விடுத்து நாகூராரையே தங்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதற்கு இப்பாடல் சான்றாக இருக்கிறது.

இப்பாடலின் மற்றொரு வரி இதை இன்னும் உறுதிப்படுத்துகிறது.

“மதியில்லா மாந்தரை திருத்திய தேவா”

இந்த வரியில் “தேவா” என்று நாகூராரை அழைக்கின்றார்.

தேவன் என்றார் கடவுள் என்று அனைவருக்கும் தெரியும்.

ஷாகுல் ஹமீதை கடவுள் என்று அழைத்து இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் கருத்தை இப்பாடலின் மூலம் தெரிவிக்கின்றார்.

இது இஸ்லாமியப் பாடலா? அல்லது இஸ்லாத்திற்கு எதிரான பாடலா? என்பதை இந்த ஒரு வரியே தெரிவித்த விடுகிறது.

இன்னும் இதற்கு அடுத்த வரிகளை கவனியுங்கள்.

முஹம்மது நபியின் பேரரே

மாணிக்கப்பூர் சீரே

சுகம் தர வாரீரே

மாணிக்கப்பூரைச் சார்ந்த நாகூரார் முஹம்மது நபியின் பேரன் என்றும் அவர் தனக்கு சுகம் தருகிறார் என்றும் கூறுகிறார்.

இவர் நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வழியில் பேரர் ஆனார் என்பதைப் பற்றி சென்ற மாத இதழில் கேட்டிருந்தோம்.

மேலும், சுகம் தருவதற்காக ஷாகுல் ஹமீத் வருகிறார் என்றும் குறிப்பிடுகிறார். குணம், சுகம் தருவதெல்லாம் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்று மேலே கண்டுவிட்டோம்.

“எளியவர்க்கிறங்கும் ஈகை உள்ளாளா

எம்மதத்தோர்க்கும் அருளும் தயாளா”

ஈகை என்றால் கொடை, அருள் என்று பொருள். தயாளன் என்றாலும் கொடைவள்ளல், அருளாளன் என்று பொருள்.

எளியவர்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் அருள் பொழிகின்ற அருளாளராக நாகூர் மீரான் திகழ்வதாக இவ்வரிகளில் கூறி, தான் அல்லாஹ்விற்கு அடிமையல்ல நாகூர் மீரானிற்கே அடிமை என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கின்றார்.

அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்’’ என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 3:73

அருள் புரிதல் என்பது இறைவனது அதிகாரத்திற்குட்பட்ட விஷயம்.

அத்தகைய ஆற்றலை சாதாரண இறந்த பிரேதத்துக்கு வழங்கி, தங்களது கப்ரு பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

—————————————————————————————————————————————————————-

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

அஸ்மா பின்த் உமைஸ்

அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியக மாணவியர்

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிகளில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் ஒருவர். கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த இவர் ஜஃபர் இப்னு அபீதாலிபின் மனைவியாவார்.

இஸ்லாமிய வரலாற்றில் மக்காவிலிருந்து ஹபஷாவை நோக்கி ஒரு பயணம், மதீனாவை நோக்கி ஒரு பயணம் ஆகிய இரு ஹிஜ்ரத்கள் நடைபெற்றன. இவற்றில் இரண்டாவது ஹிஜ்ரத் தான் வரலாற்றில் பிரபலமானதாகத் திகழ்கின்றது.

ஆயினும் சத்திய அழைப்பின் வரலாற்றில் இரண்டும்  முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்த இரு ஹிஜ்ரத்களின் மூலமும் அஸ்மா (ரலி) அவர்கள் வரலாற்றில் சிறந்த பெண்மணியாகத் திகழ்கின்றார்கள்.

ஈமானை இழந்து, இணைவைப்பை ஆதரித்துத் தான் மக்காவில் உயிர் வாழவேண்டுமென்றால் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தமக்குத் தேவையில்லை என்று கருதி இணைவைப்புக் கொள்கையை எதிர்ப்பதில் ஒரு வீரியமிக்க பெண்மணியாக அஸ்மா (ரலி) இருந்தார்கள்.

நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் தொடங்கி ஆறாம் ஆண்டின் துவக்கம் வரை நூற்றிற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஹபஷா நாட்டில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும், அவர்களின் கணவர் ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும் அடங்குவார்கள்.

இவ்வாறே ஹபஷா நாட்டிற்குச் சென்ற முஸ்லிம்கள் ஏறத்தாழ 14 ஆண்டுகள் வரை அந்நியர்களாய் அங்கு வாழ்ந்து வந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் நபிகளாரும் முஸ்லிம்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அங்கு சென்ற முஸ்லிம்கள் பல யுத்தங்களைச் சந்தித்தார்கள். பத்ர், உஹத், அஹ்ஸாப் போன்ற போர்களை மேற்கொண்டார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு கைபர் யுத்தமும் நடந்தது. இந்த நேரத்தில் தான் அபீசினியாவில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் மதீனாவிற்கு (இரண்டாம்) ஹிஜ்ரத் செய்தார்கள். கைபர் போரில் வெற்றியடைந்ததால் ஏற்கனவே மகிழ்ச்சியுடன் இருந்த முஸ்லிம்களுக்கு தங்கள் சகோதரர்கள் அபீசினியாவிலிருந்து மதீனா வந்து சேர்ந்ததால் மேலும் அளவிலா மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அவர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்ம் ஆவார். நான்தான் அவர்களில் இளையவன் ஆவேன்’’ என்று கூறிவிட்டு, “என் (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன்அல்லது ஐம்பத்திரண்டு பேர்களுடன்அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன்சேர்ந்து நாங்கள் சென்றோம்‘’ என்று (அபூமூசா (ரலி) அவர்கள்) கூறினார்கள். பிறகு பின்வருமாறும் குறிப்பிட்டார்கள்:

நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனாவை நோக்கி)பயணம் செய்தோம். எங்கள் கப்பல் (திசை மாறி) அபிசீனியாவின் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அங்கு ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் நஜாஷீக்கு அருகில் சந்திக்க நேர்ந்தது. (ஏற்கெனவே அவர்கள் மக்காவிலிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்தனர்.)

அப்போது ஜஅஃபர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அனுப்பி (இங்கு) தங்கியிருக்கும்படி உத்தரவிட்டார்கள். நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்கிவிடுங்கள்’’ என்று கூறினார்கள்.

ஆகவே, நாங்களும் அவர்களுடன் (அபிசீனியாவில்) தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் (கைபர் போரில் கிடைத்த செல்வங்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். கைபர் போரில் கலந்துகொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை; தம்முடன் அதில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே பங்கிட்டுத் தந்தார்கள்.

ஆனால், ஜஅஃபர் (ரலி) அவர்களுடனும் அவர்களுடைய சகாக்களுடனும் எங்களது கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

அப்போது மக்களில் சிலர் கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, “உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம்’’ என்று கூறலானார்கள்.

-எங்களுடன் (மதீனாவுக்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார்.

ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு அருகில் அஸ்மா (ரலி) அவர்கள் இருந்தபோது, அங்கு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அஸ்மாவைக் கண்டபோது இவர் யார்?’’ என்று (தம் மகள்) ஹஃப்ஸாவிடம் கேட்டார்கள். இவர் அஸ்மா பின்த் உமைஸ்’’ என்று ஹஃப்ஸா பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இவர் அபிசீனிய (ஹிஜ்ரத் கார)ரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் ஆம்’’ என்று பதிலளித்தார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். ஆகவே, உங்களைவிட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் (நெருக்கமானவர்கள்)’’ என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, ஏதோ சொல்லிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உமரே! நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (நீங்கள் கூறியதைப் போன்று) இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களுக்கு அருகிலேயே) இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவருக்கு அவர்கள் அறிவூட்டினார்கள்.

நாங்களோ உறவிலும் மார்க்கத்திலும் வெகு தொலைவிலிருக்கும் அபிசீனிய நாட்டில் இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இவ்வாறு செய்தோம். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் நான் எதையும் உண்ணவோ, பருகவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப் பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம்.

நான் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி அவர்களிடம் (நியாயம்) கேட்கப் போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன். திரித்துப் பேசவும் மாட்டேன்; நீங்கள் சொன்னதை விடக் கூட்டிச் சொல்லவும் மாட்டேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உமர் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள்’’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர், உங்களை விட எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு)தான் உண்டு. (அபிசீனியாவிலிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவுக்கு ஒன்றும், மதீனாவுக்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு’’ என்று கூறினார்கள்.

அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூமூசாவும் அவர்களுடைய கப்பல் தோழர்களும் கூட்டம் கூட்டமாக என்னிடம் வந்து, இந்த ஹதீஸ் குறித்துக் கேட்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இந்தப் புகழுரையைவிட இந்த உலகத்தில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குரியதாகவோ அவர்களின் மனதில் பெருமிதத்துக்குரியதாகவோ இருக்கவில்லை.

என்னிடம் அபூமூசா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4915

அந்நிய நாட்டில் அகதிகளாய் வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை ஒரு கணம் பெண் வர்க்கம் சிந்தித்து பார்க்க வேண்டும். தமது சொந்தத் தேவைகளுக்காகவோ, பொருளாதார இழப்பின் காரணமாகவோ அவர்கள் இந்நிலைக்கு ஆளாகவில்லை.

இறைநிராகரிப்பு, இணைவைப்பு என்ற படுபாதக செயலை விட்டு விலகி, ஏகன் ஒருவனே என ஏற்று, அவனைக் கலப்பற்ற முறையில் வணங்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே அவர்கள் ஹிஜ்ரத்தை (நாடு துறத்தலை) மேற்கொண்டார்கள்.

ஒரு ஆண் ஒரு ஊருக்குப் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் அவர்களுக்கென்று பெரிய அளவில் (லக்கேஜ்) ஏற்பாடுகள் தேவைப்படாது. உடுத்த உடையுடனே அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம்.

ஆனால் இவ்வாறு பெண்கள் எடுத்த எடுப்பிலேயே எங்கும் செல்ல முடியாது. பல பிரச்சனைகளில் தவிக்க வேண்டிய சூழ்நிலைகள் அவர்களுக்கு ஏற்படும்.    உண்ண உணவு, உடுத்த உடை, தங்குவதற்கு பாதுகாப்பான இருப்பிடம் இவையனைத்தும் அவர்களுக்கு அவசியம்.

இவற்றையெல்லாம் எதிர்பார்த்தோ அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோ அவர்கள் ஹபஷாவிற்குச் செல்லவில்லை. எவ்வித அடிப்படையான வசதிகளும் இல்லாமல் தான் அவர்கள் ஹபஷாவிற்குச் சென்றார்கள்.

இருக்கின்ற வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு மாறும் போது அதிகம் எரிச்சலடைபவர்கள் பெண்களே! சமையலறை முதல் வீட்டு வாசல் வரை தொட்டதற்கெல்லாம் குறை காண்பவர்களும் பெண்கள் தான்.

இப்படி உலக விஷயங்களிலிலேயே தியாகம் செய்ய முன்வராத பெண்களுக்கு மத்தியில் மார்க்கத்திற்காக இரு முறை ஹிஜ்ரத் செய்த அஸ்மா பின்த் உமைஸிடமிருந்து இன்றைய இஸ்லாமியப் பெண்கள், மார்க்கத்திற்காக எதையும் தியாகம் செய்ய தயார் என்ற பாடத்தைக் கற்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

ஆய்வு

ஜும்ஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா?

அப்துந் நாசிர்

இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில்  குறிப்பிடுவார்கள்.

மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர்.

அந்தச் செய்திகள் ஸஹீஹானவை தானா? அல்லது பலவீனமானவையா? என்பதைப் பற்றி நாம் இக்கட்டுரையில் பார்க்க இருக்கின்றோம்.

முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக் காலிட்டு அமரும் முறைக்கு அரபியில் “இஹ்திபாவு” என்றும் “அல்ஹப்வா” என்றும் குறிப்பிடுவார்கள்.

இவ்வாறு அமரும் முறையை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதாக சில செய்திகள் வந்துள்ளன. ஆனால் அந்தச் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாகவே உள்ளன.

இது தொடர்பான செய்தி முஆத் இப்னு அனஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி), ஜாபிர் (ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறிவிப்பையும் அது எவ்வாறு பலவீனமானது என்பதையும் காண்போம்.

முஆத் இப்னு அனஸ் (ரலி அறிவிப்பு

514 – حدثنا محمد بن حميدالرازي وعباس بن محمد الدوري قالا حدثنا أبو عبد الرحمن المقرئ عن سعيد بن أبي أيوب حدثني أبو مرحوم عن سهل بن معاذ عن أبيه : أن النبي صلى الله عليه و سلم نهى عن الحبوة يوم الجمعة والإمام يخطب  (رواه الترمدي)

ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: முஆத் இப்னு அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி (514)

இந்த அறிவிப்பு அபூதாவூத் (1112), முஸ்னத் அஹ்மத் (15668), இப்னு குஸைமா (1815), தப்ரானிக்குரிய அல்முஃஜமுல் கபீர் (16797), சுனனுல் பைஹகி அல்குப்ரா (5704), முஸ்னத் அபீ யஃலா (1492, 1496) ஹாகிம் ( 1069), ஷரஹுஸ் சுன்னா (1082) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ்” என்பார் இடம் பெற்றுள்ளர். இவருடைய அறிவிப்பை இமாம் இப்னு மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

حدثنا عبد الرحمن انا أبو بكر بن ابى خيثمة فيما كتب إلى قال سمعت يحيى بن معين يقول: سهل بن معاذ بن انس عن ابيه ضعيف.  (الجرح والتعديل (4/ 203)

‘‘ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பை பலவீனமானவை” என இமாம் யஹ்யா இப்னு மயீன் விமர்சித்துள்ளார்கள்.

நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்.203)

மேற்கண்ட செய்தி “ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ்” தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற செய்தியாகும். எனவே இமாம் இப்னு மயீன் அவர்களின் விமர்சனத்தின் அடிப்படையில் அது பலவீனமானதாகும்.

இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்.

سهل بن معاذ بن أنس ، يروى عن أبيه روى عنه زبان بن فائد منكر الحديث جدا  (المجروحين 1/ 347)

‘‘ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ்” ஹதீஸ் துறையில் முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டியவர் ஆவார்.

(நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் 1, பக்கம் 347)

எனவே ஸஹ்ல் பின் முஆத் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் மேற்கண்ட செய்தியில் “அபூ மர்ஹும்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவருடைய பெயர் “அப்துர் ரஹீம் இப்னு மைமூன்” என்பதாகும். இவரைப் பற்றி அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

قال ابن أبي خيثمة عن ابن معين ضعيف الحديث وقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به  وقال الذهبي فيه لين

“இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர்” என இமாம் இப்னு மயீன் விமர்சித்துள்ளார். மேலும் “இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படும். ஆனால் அவை ஆதாரமாகக் கொள்ளப்படாது” என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்.

(நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம் : 2, பக்கம் 354)

‘‘இவர் பலவீனமானவர்” என இமாம் தஹபீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம் 650)

மேற்கண்ட அறிவிப்பில் ‘‘ஸஹ்ல் இப்னு முஆத்” மற்றும் அபூ மர்ஹும் ஆகிய இரண்டு பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே அது பலவீனமான அறிவிப்பு என்று உறுதியாகிவிட்டது.

ஸஹ்ல் பின் முஆத் என்பாரிடமிருந்து ஸப்பான் இப்னு ஃபாயித் என்பவர் வழியாகவும் இதே செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

16798 – حَدَّثَنَا بَكْرُ بن سَهْلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ زَبَّانَ بن فَايِدٍ، عَنْ سَهْلِ بن مُعَاذِ بن أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ:”نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ ..(المعجم الكبير للطبراني 15/ 108)

ஜும்ஆ நாளில் முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: முஆத் இப்னு அனஸ் (ரலி)

நூல்: அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானீ (16798) பாகம் 15, பக்கம் 108

இதன் அறிவிப்பாளர் தொடரிலும் பல பலவீனங்கள் உள்ளன.

முதலாவது பலவீனம்: இது ஸஹ்ல் இப்னு முஆத் தமது தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்பாகும். எனவே இது பலவீனமானதாகும். இது பற்றிய விபரத்தை முந்திச் சென்ற செய்தியின் விமர்சனத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இரண்டாவது பலவீனம் : இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஸப்பான் இப்னு ஃபாயித்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.

قال أحمد أحاديثه مناكير وقال يحيى ضعيف وقال ابن حبان لا يحتج به .( الضعفاء والمتروكين لابن الجوزي 1/ 292)

قال ابن حبان منكر الحديث جدا يتفرد عن سهل بن معاذ بنسخة كأنها موضوعة لا يحتج به وقال الساجي عنده مناكير (تهذيب التهذيب 3/ 265)

இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள். இவர் பலவீனமானவர் என இப்னு மயீன் கூறியுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.

நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்

பாகம் 1, பக்கம் 292

இவர் ஹதீஸ் துறையில் மிகவும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார். இட்டுக்கட்டப்பட்டதைப் போன்று இருக்கும் ஒரு பிரதியை இவர் ஸஹ்ல் இப்னு முஆதிடமிருந்து தனித்து அறிவிக்கின்றார். இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவரிடம் மறுக்கத்தக்க செய்திகள் உள்ளன என இமாம் ஸாஜி கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 292)

மூன்றாவது பலவீனம்: மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் “இப்னு லஹீஆ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.

 عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيفالضعفاء والمتروكين  .   بن لهيعة ضعيف الحديث– (تاريخ ابن معين) سمعت يحيى يقول بن لهيعة لا يحتج بحديثه ( تاريخ ابن معينرواية الدوري 4 /481) قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيراقال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا ( المجروحين 2 /12)

அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறினார்கள்.

நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்,

பாகம்: 1, பக்கம் : 64

இப்னு மயீன் அவர்கள், இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறினார்கள்.

நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம் 1, பக். 153

இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக  எடுத்துக்  கொள்ளப்படாது  என்று  யஹ்யா (பின் மயீன்)  கூறியதை  நான்  செவியுற்றுள்ளேன்.

நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம்: 1, பக். 481

“இப்னு லஹீஆ  வழியாக  குறைவாகவோ,  அதிகமாகவோ  (எதையும்)  எடுத்துக்  கொள்ள மாட்டேன்’’  என்று  அப்துர்ரஹ்மான்  பின்  மஹ்தி  கூறுகின்றார்கள்.  “நீ  இப்னு லஹீஆவைப்  பார்த்தால்  அவரிடமிருந்து  ஒரு  எழுத்தைக்  கூட  எடுத்துக்  கொள்ளாதே என்று  பிஷ்ர்  என்னிடம்  கூறினார்’’  என்று  யஹ்யா  பின் ஸயீத் கூறுகின்றார்கள்.

நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம் : 14

மேற்கண்ட விமர்சனங்களின் அடிப்படையில் “ஸப்பான் இப்னு ஃபாயித்” என்பாரின் இந்த அறிவிப்பு மிக மிகப் பலவீனமானது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அம்ரு இப்னு ஆஸ் அறிவிப்பு

1134 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ وَاقِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: قَالَ: نَهَى رَسُولُ اللَّهِصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَعَنْ الِاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ، يَعْنِي: وَالْإِمَامُ يَخْطُبُ (سنن ابن ماجه)

ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல்: இப்னு மாஜா (11340

இதுவும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலாவது பலவீனம்: இதன் அறிவிப்பாளர் தொடரில் “அப்துல்லாஹ் இப்னு வாகித்” என்பார் இடம் பெற்றுள்ளார். “இவர் யாரென்றே அறியப்படாதவர்” ஆவார்.

عبد الله ابن واقد شيخ لبقية مجهول (تقريب التهذيب 2/ 328) ولا أدري هو أبو رجاء الهروي ، أو أبو قتادة الحراني. أو آخر ثالث   (تهذيب الكمال  16/ 258) قال ابن عدي مظلم الحديث ) المغني في الضعفاء 1/ 362

பகிய்யத் இப்னு வலீத் என்பாரின் ஆசிரியரான அப்துல்லாஹ் இப்னு வாகித் “மஜ்ஹுல்” யாரென்றே அறியப்படாதவர் ஆவார் என தக்ரீபுத் தஹ்தீப் நூலில் இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்.

”அப்துல்லாஹ் இப்னு வாகித்” எனும் இவர் “அபூ ரஜா அல்ஹர்வீ” என்பவரா அல்லது “அபூகதாதா அல்ஹர்ரானீ” என்பவரா? அல்லது மூன்றாவதான வேறொருவரா என்பதை நான் அறியமாட்டேன் என தஹ்தீபுல் கமால் ஆசிரியர் மிஸ்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் இவர் “ஹதீஸ்களில் இருட்டடிப்பு செய்பவர்” என இப்னு அதீ அவர்கள் இவரை தமது முக்னீ ஃபில் லுஅஃபா எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள்.

எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

இரண்டாவது பலவீனம் : “இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “பகிய்யா இப்னு வலீத்” என்பது தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவார்.

بقية ابن الوليد ابن صائدصدوق كثير التدليس عن الضعفاء (تقريب التهذيب1/ 126)

இவர் பலவீனமானவர்களிமிருந்து அதிகம் தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவர் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது தக்ரீபில் (பாகம் 1, பக்கம் 126) குறிப்பிட்டுள்ளார்கள்.

தத்லீஸ் என்றால் தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வாரத்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார். இத்தகைய அறிவிப்பாளர்கள் நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால் மேற்கண்ட அறிவிப்பில் பகிய்யா இப்னு வலீத் தமது ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.

எனவே இந்த விமர்சனத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட செய்தி பலவீனமானது. இது ஆதாரமாக எடுப்பதற்கு தகுதியற்றதாகும் என்பது உறுதியாகிவிட்டது.

ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு

ثنا عبد الله بن محمد بن عبد العزيز ثنا احمد بن الأزهر أبو الأزهر النيسابوري ثنا عبد الله بن ميمون القداح عن جعفر بن محمد عن أبيه عن جابر أن النبي صلى الله عليه وسلم نهى عن الحبوة يوم الجمعة والإمام يخطب (الكامل في ضعفاء الرجال 4/ 188)

ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம் 4, பக்கம் 188

இந்தச் செய்தியும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “அப்துல்லாஹ் இப்னு மைமூன் அல்கத்தாஹ்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

قال البخاري ذاهب الحديث وقال أبو زرعة واهي الحديث وقال الترمذي منكر الحديث وقال ابن عدي عامة ما يرويه لا يتابع عليه. .. قلت: وقال النسائي ضعيف وقال أبو حاتم منكر الحديث وقال أبو حاتم يروي عن الاثبات الملزقات لا يجوز الاحتجاج به إذا انفرد وقال الحاكم روى عن عبيد الله بن عمر أحاديث موضوعة وقال أبو نعيم الاصبهاني روى المناكير. عليه. (تهذيب التهذيب 6/ 44)

இவர் ஹதீஸ்களில் சறுகியவர் என்று இமாம் புகாரியும், இவர் ஹதீஸ்களில் மிகப் பலவீனமானவர் என அபூ சுர்ஆ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் என திர்மிதி அவர்களும் விமர்சித்துள்ளனர்.

மேலும் “இவருடைய அறிவிப்புகளில் பெரும்பாலானவை மாற்று அறிவிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படாது” என இப்னு அதீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என நஸாயீ அவர்களும், இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்படவேண்டியவர் என அபூ ஹாதிம் அவர்களும் விமர்சித்துள்ளனர்.  இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக் கட்டி அறிவிப்பவர் ஆவார். இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாகக் கொள்வது கூடாது என அபூஹாதிம் விமர்சித்துள்ளார். இவர் உபைதுல்லாஹ் இப்னு உமர் என்பார் வழியாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என ஹாகிம் கூறியுள்ளார். இவர் “நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார்” என அபூ நுஐம் அல்இஸ்பஹானி விமர்சித்துள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 44)

இந்த ஜாபிர் (ரலி) அவர்களை கூறியதாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு ஆதாரத்திற்கு அறவே தகுதியில்லாத இட்டுக்கப்பட்டது என்ற தகுதியைப் பெறக்கூடிய அளவில் உள்ள மிகமிகப் பலவீனமான அறிவிப்பு என்பது உறுதியாகிவிட்டது.

இமாமுடைய உரையைக் கேட்கும் போது கைகளால் முட்டுக் கால்களை கட்டிக் கொண்டு அமரக் கூடாது என்று வரும் அறிவிப்புகள் அனைத்தும் மிகப்பலவீனமானவையாக உள்ளன. எனவே இந்தப் பலவீனமான அறிவிப்புகளை வைத்து மார்க்கச் சட்டங்களை வகுப்பது கூடாது.

ஒருவர் உரையைக் கேட்கும் போது முட்டுக் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்தால் அதில் எவ்வித தவறுமில்லை.

நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்துள்ளார்கள் என ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தமது கையை முழங்காலில் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.

நூல்: புகாரி 6272

நான் நபியவர்கள் தமது கையை முழங்காலில் கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு இருப்பதை பார்த்தேன் என அஸத் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு நபித்தோழர் அறிவித்துள்ளார்.

நூல்: அஹ்மத் 22027

அதே நேரத்தில் மர்மஸ்தானம் தெரியும் வகையில் இவ்வாறு இருப்பதை நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (584)

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல் தொடர்: 44

சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இறந்தவர்களின் கபுர்களின் மீது கட்டிடம் எழுப்புதல், அதன் மீது பூசுதல், விழா கொண்டாடுதல் போன்ற செயல்களை பற்றி நபிகளார் பல்வேறு எச்சரிக்கைகளை சமுதாயத்திற்குக் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கிய போது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.                  

நூல்: புகாரி 436

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தம் முகத்தின் மீது சதுரமான கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கினார்கள்என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.                                            

நூல்: புகாரி   3454

இந்தச் செய்தி மேலும் புகாரியில் 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்ணறை என்பது திறந்த வெளியில் தான் இருக்க வேண்டும். அதைச் சுற்றியோ அல்லது அதற்கு மேலோ எந்த ஒரு கட்டிடமும் இருக்கக் கூடாது. நிழலுக்காகக் கூட முகடாகவோ கூரையாகவோ எந்த ஒன்றையும் கட்டி விடக் கூடாது. ஏனென்றால் அது பிற்காலத்தில்  வணக்குமிடங்களாக ஆகிவிடும் என்பதற்காகவே நபிகளார் இதையும் தடைசெய்திருக்கிறார்கள். இது தான் இஸ்லாம் சொல்கின்ற மண்ணறை.

உதாரணத்திற்கு, நபி வழித் திருமணம் என்று நாம் எதைச் சொல்வோம்?  குறைந்த செலவில் சிக்கனமாக மஹர் கொடுத்து செய்கின்ற திருமணத்தைத் தான் நபிவழித் திருமணம் என்று சொல்வோம். அதற்கு மாற்றமாக வரதட்சணை வாங்கி, ஆடம்பரமாக, தாலி கட்டுவது, ஆரத்தி எடுப்பது,  பெண் வீட்டு விருந்து இப்படி நடைபெறுகின்ற திருமணத்தை நபிவழித் திருமணம் என்று சொல்வோமா? சொல்லவே மாட்டோம். நடைபெறுவது திருமணம் என்றாலும் அது நபிவழித் திருமணம் அல்ல. இது நபிவழிக்கும் இஸ்லாத்திற்கும் மாற்றமான திருமணம் என்று சொல்வோம்.

அதுபோல் தான் மண்ணறை என்றால் அது இஸ்லாம் சொன்ன அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு இவர்கள் ஜியாரத்திற்காக, சந்திப்பிற்காக செல்கின்ற மண்ணறை என்பது இஸ்லாத்திற்கு உட்பட்ட மண்ணறையாக இல்லை. அதற்கு மாற்றமாகத் தான் இருக்கிறது. அந்த கபுரைச் சுற்றி சுவர் எழுப்பியிருக்கிறார்கள். கபுரின் மீது கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. நிழலுக்காக அதன் மீது முகடு எழுப்பப்பட்டுள்ளது. இவை போதாதென்று ஆடல், பாடல் கச்சேரி, வாண வேடிக்கைகள் வேறு. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதை எப்படி மண்ணறை என்று சொல்ல முடியும்? திருவிழா நடத்தும் இடமாகத்தான் நினைப்பார்கள்.

இந்த மாதிரி தன்னுடைய கபுரையும் சுற்றி கட்டிடம் கட்டினால் நாளை நாம் இறந்த பிறகு நம்முடைய கபுரையும் விழா கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்வார்கள் என்பதற்காகத்தான் தான் நபியவர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார்கள். எவருடைய அடக்கத்தலத்திலும் கபுரைக் கட்டுவது, பூசுவது கூடாது என்றார்கள். தன்னுடைய அடக்கதலத்தையும் விழா கொண்டாடும் (வணக்கத் தலமாக) ஆக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கபுர்களின் நிலை இவ்வாறு தான் ஆகிவிட்டது. அந்த கபுர்களை வணங்குமிடமாகவும், விழாக்கள் கொண்டாடும் இடமாகவும் ஆக்கிவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது, ‘அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கி விட்டார்கள்என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத்தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். தம் அடக்கத்தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோஎன்று அவர்கள் அஞ்சினார்கள்என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 4441

தமது கடைசிக் காலகட்டத்தில் கூட நோய்வாய்ப்பட்டு கஷ்டங்களை, வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்களிடத்தில் என்னுடைய அடக்கத்தலத்தை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள் என்று எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அவ்வாறு ஆக்கி விடுவார்களோ என்று அஞ்சியும் இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்?

ஒவ்வொரு நபிமார்களும் தமது சமுதாயத்திடம் வாழ்ந்து பிரச்சாரம் செய்து இறந்த பிறகு அவர்களையே கடவுள்களாக ஆக்கிவிட்டார்கள் என்றால் நாளை நம்முடைய கபுரையும் இவ்வாறு ஆக்கிவிடுவார்கள் என்பதனால் தான். இதற்குப் பல சம்பவங்கள் ஆதாரமாக இருக்கின்றன.

நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பிறகு, கஅபாவைச் சுற்றியும் கஅபாவிற்கு உள்ளளேயும் இருந்த 360 சிலைகளை உடைத்தெறிகிறார்கள். அதில் பல சிலைகள் நபிமார்களுடைய சிலைகளாக இருந்தன. இப்படி அந்த நபிமார்கள் இறந்த பிறகு அவர்கள் மீது உள்ள நேசத்தினால், அளவு கடந்த பாசத்தினால் அவர்களையே கடவுளர்களாக ஆக்கி இணைவைப்புக் கொள்கைக்கே திரும்பச் சென்று விட்டார்கள். கொள்கையில் உறுதிமிக்க, தந்தையையும், தன் சமுதாயத்தையும் எதிர்த்து நின்ற ஏகத்துவத்தின் தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களை இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டி இணை வைப்பை வேரறுக்க வந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கே சிலை வைத்து கடவுளாக வணங்கினார்கள்.

இதை விடக் கொடுமை என்னவென்றால், நபி மூஸா (அலை) அவர்களுடைய காலத்தில் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே ஏகத்துவத்தில் உறுதியாக இருந்த அம்மக்கள் மீண்டும் இணை வைப்பிற்கே செல்ல இருந்ததை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

மூஸா நபியவர்களையும் அவரை ஏற்றுக் கொண்ட மக்களையும் அழிப்பதற்காக வந்த ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரை இறைவன் கடலில் மூழ்கடிக்கச் செய்தான். பிறகு மூஸாவும் அவருடைய கூட்டத்தாரையும் இறைவன் காப்பாற்றிய பிறகு அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தாரை காண்கின்றனர்.

அதை  பார்த்த மூஸா நபியின் கூட்டத்தார் ‘மூஸாவே! அவர்களுக்கு நிறைய கடவுள்கள் இருப்பதைப் போன்று எங்களுக்கும் நிறைய கடவுள்களை ஆக்குங்களேன்!’ என்று கேட்டனர். அதற்கு மூஸா நபியவர்கள் எந்த வழிகெட்ட கொள்கையிலிருந்து உங்களை மீட்டெடுக்க பாடுபட்டேனோ அதே வழிக்கே திரும்பி செல்ல ஆசைப்படுகிறீர்களே! நீங்கள் அறிவுகெட்ட கூட்டமாக இருக்கின்றீர்களே என்றார்.

(பார்க்க: அல்குர்ஆன் 7:138)

மேற்கண்ட சம்பவத்தில், பல அற்புதங்களை பார்த்து, ஃபிர்அவ்னின் கொலை மிரட்டலுக்கு அஞ்சாமல் இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொண்ட மூஸா நபியின் சமுதாயத்தார், மூஸா நபி உயிருடன் இருக்கும் போதே இவ்வாறு கூறுகின்றார்கள்.

இறைவனைப் பற்றியும், இணைவைப்பைப் பற்றியும் அவர்களுக்கு மூஸா நபி அவ்வப்போது பிரச்சாரம் செய்து வந்த நிலையிலும் ‘காஃபிர்களைப் போன்று எங்களுக்கும் பல கடவுள்களை உருவாக்கித் தாருங்கள்’ என்று சொல்கிறார்கள் என்றால் நபிமார்கள் உயிருடன் இல்லாத இந்தக் காலத்தில் அவர்களுக்குச் சிலை வைப்பது, அவர்களது மண்ணறைகளை வணங்குமிடமாக ஆக்குவது என்பது ஆச்சரியமான விஷயமல்ல.

—————————————————————————————————————————————————————-

பயனற்ற நோட்டுகளும் மார்க்க போதனைகளும்

எம். முஹம்மது சலீம். எம்.ஐ.எஸ்.சி

மங்கலம்மக்கள் விரோத பாஜக அரசு, மத்திய ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் தொடர்ந்து விதவிதமான பிரச்சனைகளை, தொல்லைகளை மக்களுக்குக் கொடுத்து வருகிறது. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னால் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் விளைவு, ஒட்டுமொத்த நாடே கொந்தளித்து உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து இருக்கிறது. உயிரிழப்புகள், பொருட்சேதங்கள், தொழில்கள் நலிவு என்றெல்லாம் சமூகமே பாழ்பட்டு கிடக்கிறது. இச்சூழலில் நிகழும் நாட்டு நடப்புகள் மூலம் முஃமின்கள் பெறவேண்டிய மார்க்க போதனைகள் ஏராளம் உள்ளன. அவற்றை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பரிதவிக்கும் மக்கள் கூட்டம்

மத்திய அரசின் முட்டாள்தனமான அறிவிப்பு வெளியானவுடன் எங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  நாடெங்கும் பதறும் மக்கள் கூட்டம். தினசரி வாழ்வியல் தேவையை தீர்த்துக் கொள்ள யாரிடம் உதவி கேட்பது என்று திக்குமுக்காடும் சூழ்நிலை.

இதையெல்லாம் காட்டிலும் மிகவும் பயங்கரமானது மறுமை நாள் என்பதை இந்நேரம் நினைவில் கொள்வோம்.  என்ன ஆகுமோ என்று எல்லோரும் மஹ்ஷர் மைதானத்தில் திசையெங்கும் அலைமோதுவார்கள்; பரிதவிப்பார்கள். இத்தகைய கடுமையான மரணமில்லா மறுமை வாழ்வை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கான தருணம் இது.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

(திருக்குர்ஆன் 22:1,2)

சீக்கிரம் வரவிருக்கும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.

(திருக்குர்ஆன்  40:18)

பயனளிக்க யாரும் இல்லை

சட்டைப் பையில் இருந்தும் பணம் பயன்தராத அவல நிலை இன்று. இருப்பினும், இங்கு எவரேனும் நமக்குப் பொருளாதாரம் கொடுத்து உதவி செய்ய இயலும். ஆனால், மறுமையிலோ யாரும் யாருக்கும் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது; பயனளிக்க முடியாது.

இன்னும் ஏன்? மற்றவர்களை மறந்து, தங்களை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில்தான் எல்லோரும் முனைப்புடன் இருப்பார்கள். எனவே, இங்கிருக்கும் போதே ஒவ்வொருவரும் தமது மறுமை வெற்றிக்குரிய சுயமான போதுமான தாயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும்.

ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 2:48)

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள்.

(திருக்குர்ஆன் 2:254)

தப்பிக்க முடியாத விசாரணை

குறிப்பிட்ட அளவுக்கு மேலாக பணத்தை வங்கியில் செலுத்தினால், வெளியே எடுத்துச் சென்றால் அல்லது பரிவர்த்தனை செய்தால் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவை வருவாய்த் துறை, இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் சோதிக்கப்படவும் வாய்ப்புண்டு என்றெல்லாம் அறிவிப்பு வெளியானது.

இதனால் பலரும் விழிபிதுங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே வங்கியில் இருக்கும் பணத்திற்குக்கூட கணக்கு கேட்டால் என்ன செய்வதென்று பயந்து கிடக்கிறார்கள்.

இங்காவது பணம் நமக்கு வந்தவிதம் மட்டுமே விசாரிப்பதாகச் சொல்கிறார்கள். மறுமை நாளிலோ நாம் செல்வத்தைச் சேர்த்த விதம், செலவழித்த விதம் என்று அனைத்தையும் அல்லாஹ் விசாரிப்பான். எனவே, பொருளாதார விஷயத்தில் மார்க்கச் செய்திகளைக் கவனத்தில் கொண்டு நல்முறையில் செயல்பட வேண்டும்.

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அதை அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(திருக்குர்ஆன் 102:1-8)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன் 2:267)

மறுக்கப்படும் அமல்கள்

தீடீரென நள்ளிரவு முதல் நோட்டுகள் மறுக்கப்படுகின்றன. மக்களின் இயல்பு வாழ்வு தடைபடுகிறது. இந்தப் பணத்தைச் சம்பாதிக்கவும் சேர்த்து வைக்கவும் கொடுத்த உழைப்பு, முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்கிற விரக்தி மக்களிடம் வியாபித்து விட்டது.

சிறிது யோசித்துப் பாருங்கள்! இன்று இப்படி இருப்பினும், நாளைக்கு நமக்கு வேண்டியதை இனிமேலாவது சம்பாதித்துக் கொள்ள முடியும். அல்லது மாற்று ஏற்பாடு செய்து கொள்ள இயலும். ஆனால், இம்மை எனும் அவகாச வாழ்க்கை முடிந்து மறுமையில் நிற்கும் போது நமது அமல்கள் மறுக்கப்பட்டால் ஏதும் செய்ய முடியாது; எந்த வாய்ப்பும் கிடைக்காது. இதை மனதில் கொண்டு பித்அத்தான காரியங்களை தூக்கி எறியுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

(திருக்குர்ஆன் 47:33)

பயன் தராத நற்காரியங்கள்

தங்களின் தேவைகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் சிலர் போதுமான பணத்தை வைத்து இருக்கிறார்கள். சிலரோ எந்தவொரு சேமிப்போ பணமோ இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், சிலரிடம் பணம் இருந்தும் அதன் பயனை அனுபவிக்க முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

இந்த மூன்றாவது நிலையில் இருக்கும் மக்கள், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே என்று குமுறல்களைக் கொட்டுகிறார்கள்; உள்ளம் வெதும்புகிறார்கள். இதேபோன்ற நிலை மறுமையில் சிலருக்கு இருக்கும். அதிகளவு நன்மைகளைச் செய்திருந்தும் பிறருக்குத் தீமைகள் செய்ததன் விளைவாக, இருந்தும் இல்லாத நிலையில் சிக்கிக் கொள்வார்கள். இந்நிலையில் மாட்டிக் கொள்ளாத வண்ணம் யாருக்கும் தீங்கிழைக்காமல் விழிப்போடு வாழ வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5037)

நபிகளாரின் முன்னெச்சரிக்கை

பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று எல்லா தரப்பு மக்களின் ஏகோபித்த கருத்து, இதுபற்றி முன்கூட்டியே அறிவித்திருக்கலாம் என்பதாகும். சிலவாரங்களுக்கு முன்பாகவோ அல்லது சில நாட்களுக்கு முன்பாகவோ இவ்வாறு சட்டம் வரப்போவதைத் தெரிந்திருந்தால் சுதாரித்து இருக்கலாம் என பலரும் வருத்தப்படுகிறார்கள்.

எந்தத் துன்பத்திலும் இப்படித்தான் மனிதர்களின் மனநிலை இருக்கும் என்பது படைத்தவனுக்குத் தெரியாமல் இருக்குமா? அதனால் தான், மறுமையில் எந்தெந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஏக இறைவன் தமது தூதர் மூலம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நமக்குத் தெளிவுபடுத்திவிட்டான். ஆனாலும் அநேக மக்கள் அவற்றைக் கவனிக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள்; மார்க்கத்தில் இல்லாத பொல்லாத காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (2697)

நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப்பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (3243)

கொடுத்து உதவுவோம்

பிறருக்கு உதவுவது குறித்து இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அநீதிக்கு உள்ளானவர்கள், பலவீனமானவர்கள், தேவை யுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று உதவிக்குரிய மக்கள் பலவாறாக இருக்கிறார்கள். தற்போதைய நிலையில் ஒருவருக்கு பயன்படுத்தும் வகையில் பணத்தைக் கொடுத்து உதவுவது, கடனாக கொடுப்பது, மாற்றிக் கொடுப்பது என்பது முன்சென்ற அனைத்து வகையான உதவியையும் செய்த உயர்வைப் பெறும். இதன் மூலம் மறுமையில் அல்லாஹ்வின் அளப்பறிய அன்பும் அருளும் கிடைக்கும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டார்; (பிறரது அநீதிக்கு அவன் ஆளாகும்படி) அவனைக் கைவிட்டுவிடவுமாட்டார். யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5036)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடைசெய்தார்கள். நோயாளியிடம் நலம் விசாரிக்கும் படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும் படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப் பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும் (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும் மைஸராஎனும் பட்டுமெத்தை, பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல்: புஹாரி (5175)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

பழைய நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்றதும் சிலர் மிகவும் தர்மம் செய்வதாக நினைத்து, பழைய நோட்டுகளைப் பிறருக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்; தாராளத் தன்மையோடு வாரி வழங்குகிறார்கள்.

தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவார்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், ‘‘நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே!’’  என்று கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி)

நூல்: புகாரி (1411)

பொறுப்பறிந்து நடப்போம்

ஆட்சியாளர்கள், அதிகாரிகள் தங்களது பொறுப்பினை உணர்ந்து நடக்க வேண்டும். மக்கள் நலனுக்கு பாதிப்பு இல்லாதவாறு திட்டம் வகுத்துச் செயல்பட வேண்டும். ஆள்பவர்கள் மட்டுமல்ல, குடிமக்களும் தங்களின் பொறுப்பறிந்து கொள்வது அவசியம்.

‘ஆட்சிக்கு யார் வந்தாலென்ன; நமக்கென்ன செய்யப் போகிறார்கள்’ என்று வெறுமனே கடமைக்காக எவருக்கேனும் ஓட்டுப் போடும் பழக்கத்தை இனியேனும் மாற்றிக் கொள்ள வேண்டும். நன்கு ஆராய்ந்து சிந்தித்து தகுதியானவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டுமே ஒழிய, தகுதியற்றவர்களுக்கு ஒருபோதும் அரசியல் அங்கீகாரம் கொடுத்து விடக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. அவரவர் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளி ஆவார். தமது குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டார் விஷயத்தில் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின்  செல்வத்திற்குப் பொறுப் பாளனாவான். தன் பொறுப்பிலுள்ள (எஜமானின்) செல்வத்தைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். மேலும், ‘‘ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான்’’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி (2751)

மறுமையை நம்பாதவர்கள் இம்மையை மட்டுமே கவனித்து முடிவெடுப்பார்கள். இங்குள்ள இடர்களில் இருந்து தப்பிக்கும் வழியையே தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால், மறுமையை நம்பும் முஃமின்கள் எப்போதும் ஈருலகிலும் வெற்றி பெறுவதற்குரிய வழியிலே கவனத்தைச் செலுத்த வேண்டும். இந்த வகையில், பயனற்ற நோட்டுகளால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மோசமான விளைவுகளிலும் மார்க்க போதனைகளை படிப்பினைகளை நினைவில் கொண்டு நமது வாழ்வை மெருகேற்றிக் கொள்வோமாக!

—————————————————————————————————————————————————————-

அலட்சியத்தால் ஏற்படும் குழப்பங்கள்

இரண்டாம் ஆண்டு மாணவியர்

கும்பகோணம் அந்நூர் மதரஸா

குழப்பங்கள் சூழ்ந்த காலம் என நம்முடைய மார்க்கம் எதை எச்சரித்ததோ அத்தகைய காலத்தில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

நமக்கு முந்தயை சமுதாயங்கள் எந்தெந்த பாவங்களுக்காக அழிக்கப்பட்டதோ அந்தப் பாவங்கள் அனைத்தும் நம்முடைய சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி, சமூகம் உட்பட என அனைத்து விஷயங்களிலும் நாம் குழப்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டாலும் ஓர் இறை நம்பிக்கையாளன் அந்தக் குழப்பங்களிலிருந்து தனது ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள அதிலிருந்து விலகிவிட வேண்டும்.

ஆனால், நம்மில் பலர் ஈமானுக்கு ஊறு விளைவிக்கும் அந்த ஃபித்னாக்களின் விஷயத்தில் அசட்டையாக இருக்கின்றோம்.

குழப்பங்களைக் குறித்து நபிகளாரின் எச்சரிக்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மிடையே குழப்பங்கள் மழைத் துளியைப் போல் வந்தடையும் என்று எச்சரித்துள்ளார்கள்.

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்’’ என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 5528

இந்த நபிமொழியை உண்மைப்படுத்தும் விதமாக இன்றைக்கு மனிதன் அடுக்கடுக்கான குழப்பங்களைச் சந்திக்கின்றான்.

குடும்பமும் குழப்பங்களும்

குடும்பங்களில் ஏராளமான குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கணவனின் சகோதரனால் ஏற்படும் குழப்பங்கள்தான் அதிகம்.

ஒருவன் தனது சகோதரனின் மனைவியோடு பழகுவது சர்வ சாதாரணமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இருவரும் சகஜமாக பழகிக் கொண்டு ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்து கொள்ளுதல், விளையாடுதல் போன்ற அபத்தமான காரியங்கள் மார்க்கத் தொடர்பற்ற சில குடும்பங்களில் நடந்தேறுகின்றது.

ஆனால், இஸ்லாம் அந்நிய ஆண்களின் பட்டியலில் தான் கணவனின் சகோதரனையும் சேர்க்கிறது.

மற்ற ஆடவர்கள் முன் பெண்கள் எவ்வாறு இஸ்லாம் கற்றுத்தந்த ஒழுக்கத்தைப் பேண வேண்டுமோ அவ்வாறுதான் கணவனின் சகோதரனுக்கு முன்னாலும் பேணி நடக்க வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.

இன்னும் சொல்வதென்றால், கணவனின் சகோதரர்களிடம் தான் அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், அவர்களைத்தான் நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு நிகர் என்று எச்சரித்தார்கள்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5232

ஆனால், இன்றைக்கு மக்கள் இதைக் கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்வதே இருவருக்குமிடையே தவறான உறவுக்கு வழி வகுக்கிறது. இது குடும்பங்களில் பெரும் குழப்பத்தை அரங்கேற்றி விடுகிறது.

கல்வியும் குழப்பமும்

கல்வி பறிக்கப்படுவதையும், குழப்பங்கள் அதிகரிப்பதையும் மறுமை நாளின் அடையாளம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘(உலக முடிவு நாளின் போது) கல்வி கைப்பற்றப்பட்டுவிடும். அறியாமையும் குழப்பங்களும் வெளிப்பட்டு (பரவி) விடும். கொந்தளிப்பு (ஹர்ஜ்) மிகுந்துவிடும்’’ என்று கூறினார்கள். அப்போது ‘‘கொந்தளிப்பு என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்கப்பட்டது. நபியவர்கள் தமது கையால் இப்படிஎன்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்து காட்டினார்கள்.

நூல்: புகாரி 85

கல்வி என்பது மனிதனின் அறிவையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்த உதவ வேண்டும்.

ஆனால் இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை வழி காட்டுவதற்குப் பதிலாக ஒழுங்கீனத்தையே புகட்டுகிறது.

குறிப்பாக, கோ எஜுகேஷன் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கின்ற பள்ளி கல்லூரிகள் தான் நாட்டில் ஒழுக்கக் கேடு அதிகரிப்பதற்கு முதற்காரணமாக இருக்கின்றது.

இதனால், இளம் வயதில் கல்வியைத் தொலைத்து விட்டு, காதல் என்ற காமக் களியாட்டங்களில் மாணவ மாணவியவர்கள் ஈடுபட்டு தங்களது கற்பை இழக்கின்ற பெரும் துயரம் ஏற்படுகிறது.

இந்தக் கல்வி முறை, பெரும் குழப்பத்தை விளைவிப்பதோடு கல்வியற்றவர்களாகவே மாணவர்களை உருவாக்குகிறது.

இன்றைய இளைஞர்களே எதிர்காலத் தலைவர்கள் என்று சொல்லப்படும். ஆனால் அந்த இளைய சமுதாயத்தை சரியான முறையில் வார்த்தெடுக்கின்ற கடமையில் தவறு இழைக்கிறார்கள் கல்வியை போதிக்கக் கூடியவர்கள்.

இதுபோல் சமுதாயத்தில் குழப்பங்கள் வலம் வரக் காரணம் அறிவீனர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது தான்.

இந்த நிலையும் மறுமை நாளின் அடையாளம் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), ‘‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப் பட்டுவிட்டால் மறுமை நாளை நீ எதிர்பார்க்கலாம்’’ என்று கூறினார்கள். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?’’ என்று கேட்டார். அதற்கு ‘‘(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 6496

குழப்பங்களிலிருந்து விடுபட…

மேற்சொன்ன குழப்பங்களைப் போன்று இன்னும் ஏராளமான குழப்பங்கள் இருள் சூழ்வதைப் போல் நம் சமுதாயத்தைச் சூழ்ந்துள்ளன.

இதுபோன்ற காரியங்கள் நம் மறுமை வாழ்விற்கு ஆபத்தானது, ஈமானை சீண்டிப் பார்க்கக்கூடிய குழப்பங்கள் என்று நமக்கு தெரிந்ததும் அவற்றில் விழிப்படைந்து கொள்ள வேண்டும்; விலகி நிற்க வேண்டும்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘‘ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தை (குழப்பங்களின் வடிவில் வரும்) சோதனைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மலைகளின் உச்சிக்கும் மழை பொழியும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் தனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு வெருண்டோடுவார். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக (அந்த) ஆடுகள்தான் இருக்கும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 19

எனவே, நம்முடைய மார்க்கத்திற்கும் மனசாட்சிக்கும் புறம்பான காரியங்கள், குழப்பங்கள் எதுவாயினும் அதைவிட்டு விலகியிருப்பதுதான் நாம் முஸ்லிமாக நம்முடைய வாழ்வைத் தொடர்வற்கு உகந்த செயலாக இருக்கும்.