ஏகத்துவம் – டிசம்பர் 2012

தலையங்கம்

சாதி ஒழிய இஸ்லாமே வழி

கடந்த அக்டோபர் 30, 2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தின விழா நடந்தது. தேவர் ஜெயந்தி என்றழைக்கப்படும் இந்த விழாவுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த டாடா சுமோ வாகனம் வழிமறிக்கப்பட்டு கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்படுகின்றன. அதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைகின்றனர். அதில் 6 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். இது ஒரு கலவரமாக வெடிக்கின்றது.

வழக்கமாக இந்தியாவில் கலவரக் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது பேருந்துகளில் கல் வீசுவது தான். இந்தக் கலவரத்திலும் பஸ்கள் மீது கற்கள் வீசப்படுகின்றன. இந்தக் கல்வீச்சில் ஏர்வாடி தர்ஹாவுக்குக் குடும்பத்துடன் வந்த அபூபக்கர் என்பவர் காயமடைகின்றார். அங்குள்ள தனியார் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைகின்றார்.

இந்தக் கலவரத் தீயின் காரணமாக பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படுகின்றது. இதனால் மக்கள் சொல்ல முடியாத அல்லலுக்கும் அவதிக்கும் உள்ளாயினர்.

ஏற்கனவே செப்டம்பர் 11, 2011 அன்று தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளின் போது பரமக்குடியில் வெடித்த கலவரத்தில் 6 தலித்துகள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியானார்கள். அதற்குப் பதிலடியாகத் தான் தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள டாடா சுமோவில் வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதைத் தொடர்ந்தே பரமக்குடியில் மட்டுமல்லாது ராமநாதபுரம், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை வெடிக்கின்றது.

இந்தக் கலவரத் தீ ஆறி அடங்குவதற்குள்ளாக தர்மபுரியில் மற்றொரு கலவரத் தீ பற்றிக் கொள்கின்றது.

தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயில் தலித்துகளுக்குச் சொந்தமான மூன்று காலனிகள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன.

சாதி இந்துக்கள் 1800 பேர் சர்வ சாதாரணமாக இந்தக் காலனிக்குள் சென்று, சாகவாசமாகக் கொள்ளையடித்து, குடியிருப்புகளைக் கொளுத்தியிருக்கின்றார்கள்.

தாங்கள் தாக்கப்படுவோம் என்று அறிந்த இந்தக் காலனி மக்கள் இரவில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறு செல்லவில்லை என்றால் அவர்களின் உடைமைகளைப் போன்று உயிர்களும் கொளுத்தப்பட்டிருக்கும்.

இப்படிக் கொடுமையாக உடைமைகளைக் கொள்ளையடிப்பதற்கும் கொளுத்துவதற்கும் காரணம் என்ன?

நத்தம் காலனியில் வசிக்கின்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர் செல்லான் கொட்டாயில் வசிக்கும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகள் திவ்யாவைக் காதல் திருமணம் செய்தது தான் இந்தக் கலவரத்திற்குக் காரணம்.

தன் மகள் ஒரு தாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்ததை தாங்கிக் கொள்ள முடியாத மணப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்கின்றார். இந்தக் காதல் எனும் காமத்தீ கலவரத் தீயாக மாறுகின்றது.

இதனைத் தொடர்ந்து விசாரணைகள், நிவாரண நிதிகள் என்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடர்கின்றன.

இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம், மொழியால் நாம் தமிழர்கள்; அதனால் ஒன்று பட வேண்டும் என்று சொன்னார்கள்.

அதிலும் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் தமிழர் ஒற்றுமையைப் பறைசாற்றுபவர்கள்; அதைத் தூக்கிப் பிடிப்பவர்கள்.

இங்கு தமிழ் இவர்களை ஒன்றுபடுத்தவில்லை. அதுபோன்று பரமக்குடியில் தேவர்களும் தலித்துகளும் தமிழர்கள் தான். ஆனால் இந்தத் தமிழ் அவர்களை ஒன்றுபடுத்தவில்லை.

இதுபோன்று நாமெல்லாம் இந்தியர் என்று தேசத்தை வைத்து ஒற்றுமை என்பார்கள்.

கர்நாடகாவுடன் காவிரி நீர் விஷயத்தில், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகம் நடத்தும் போராட்டத்தை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவில் தென்னகத்திலுள்ள மூன்று மாநிலங்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இது உணர்த்துவது என்ன? மனிதர்களை மொழியால், இனத்தால், நிறத்தால், தேசத்தால் ஒருபோதும் ஒன்றுபடுத்த முடியாது.

ஒரே கடவுள் என்ற அடிப்படையிலும், மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஆண், பெண்ணிடமிருந்து உருவானவர்கள் என்ற அடிப்படையிலும் மட்டுமே ஒன்றுபடுத்த, ஒற்றுமைப்படுத்த முடியும் என மனித குலத்திற்கு வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன் என்ற வேதம் பிரகடனப்படுத்துகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இந்தக் கொள்கையில் ஒன்றிணைந்தவர்கள் தான் முஸ்லிம்கள். இன்று உலக அளவில் கறுப்பர்கள், வெள்ளையர்கள், பன்னாட்டவர்கள், பன்மொழி பேசுபவர்களை ஒன்றுபடுத்தும் ஓர் உன்னத நடைமுறை, வாழ்க்கைநெறி இஸ்லாம் தான்.

தென் மாவட்டங்களில் மட்டுமல்ல! தென்னிந்தியாவில் மட்டுமல்ல! ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாதியை ஒழிக்க ஒரு தூயவழி, வாழ்க்கை நெறி இஸ்லாம் தான்.

—————————————————————————————————————————————————————-

அறிவு சூன்யங்களின் அர்த்தமற்ற வாதங்கள்

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டே அடிப்படைகள் தான். அவ்விரண்டைத் தாண்டி வேறெதுவும் ஆதாரமாகாது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் தங்களைத் தாங்களே சுன்னத் வல்ஜமாஅத் என்று பிதற்றிக் கொள்கின்ற ஒரு போலி ஜமாஅத்தினர் தங்களது மாதப் பத்திரிகையில் ஒரு கேள்வி பதிலில் குர்ஆனையும் ஹதீஸையும் தூக்கி எறிந்து விட்டு தங்கள் மனோ இச்சைப்படி அளிக்கின்ற விளக்கத்தைப் பாருங்கள்.

“குத்பியத், அதாவது முஹ்யித்தீன் அவர்களின் பெயரை ஓதக் கூடாது; அவ்வாறு ஓதினால் ஷிர்க் என்று ஒரு ஆலிம் கூறுகிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?”

இவ்வாறு ஒருவர் அந்தப் பத்திரிகையில் கேள்வி கேட்கிறார்.

அதற்கு இவர்கள் அளிக்கும் பதில்:

பாத்திஹா சூராவுக்குப் பின் குல்ஹுவல்லாஹு சூரா ஓதி 12 ரக்அத்துகள் தொழுதுவிட்டு பிறகு தனிமையில் எனது பெயரை ஆயிரம் முறை கூறி அழைத்தால் அவரின் அழைப்புக்கு நான் பதிலளிப்பேன் என்று மகான் கௌதுல் அஃழம் அவர்கள் கூறியுள்ளார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே குத்புல் அக்தாப் அவர்களை அழைக்க வழிகாட்டும் குத்பிய்யா எனும் முறையாகும்.

அழைத்தால் வருவார்களா? இல்லையா என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம் காட்டலாகாது. மாறாக அழைத்தால் வருவார்கள் என்பது எனது கூற்று. ஏனெனில் நாம் நடத்தில் குத்பிய்யாக்களில் மகான் வருகை தந்துள்ளார்கள். அதற்கு சாட்சி உண்டு. நிரூபணம் செய்ய இயலும். வரமாட்டார்கள் என்று சொல்பவர் நாம் நடத்தும் குத்பிய்யத்தில் பங்கேற்று மகான் முஹ்யித்தீன் ஆண்டகையைக் கண்டு கொண்டால் அவர் ஒரு லட்சம் ரூபாய் நமது பணி சிறக்க தந்துதவ வேண்டும். அவ்வாறு காட்சி கிடைக்கவில்லையெனில் குத்பிய்யத் கூடாது என்று நாமே இதை நமது பத்திரிகையில் வெளியிடுவோம்.

முஹ்யித்தீன் அப்துல் காதிரை அழைத்தால் வருவார் என்பதற்கு இதுதான் இவர்களின் முதல் ஆதாரமாம்.

“குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆதாரம் காட்டலாகாது. ஆனால் அழைத்தால் வருவார்கள் என்பது எனது கூற்று”

இந்த வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள். எவ்வளவு விஷத்தை இவர்கள் திமிராகக் கக்குகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதில் இவர்களின் இறைமறுப்பு இரண்டு விதமாக வெளிப்படுகின்றது.

ஒன்று, குர்ஆன் ஹதீஸை ஆதாராமாகக் கொள்ள முடியாது என்ற கருத்து. அதாவது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆதாரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எந்தத் தேவையுமில்லை. எனது மனம் சொல்வது மார்க்கம் என்று வெளிப்படையாக இந்த நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா?

அல்குர்ஆன் 25:43

இந்த வசனத்தின்படி இந்த ஆசாமி தன்னைத் தெளிவான இறைமறுப்பாளன் என்று பகிரங்க வாக்குமூலம் கொடுக்கின்றார்.

இரண்டாவதாக, அல்லாஹ் திருக்குர்ஆனில் இறந்தவர்கள் வர மாட்டார்கள் என்று கூறுகின்றான்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:100

இறந்தவர்களுக்கும் உயிருடன் இருப்பவர்களுக்கும் மத்தியில் ஒரு திரை இருக்கின்றது; அந்தத் திரையைத் தாண்டிக் கொண்டு இவ்வுலகிற்கு வரமுடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆனால் இவர்களோ இறந்தவர்கள் வருவார்கள் என்பது எனது கூற்று என்று அல்லாஹ்வின் கூற்றுக்கு எதிராகச் சவால் விடுகின்றனர். இறை முழக்கத்திற்கு எதிர் முழக்கமிடுகின்றனர்.

அளவு கடந்த அகங்காரத்திலும் ஆணவத்திலும் அல்லாஹ்வுக்கு எதிராகப் பேசுகின்றனர். இறந்தவர்கள் திரும்ப வருவார்கள் என்று சொல்வது ரஜயிய்யத் எனும் ஷியாக்களின் கொள்கையாகும். இந்தக் கொள்கையை அப்படியே பின்பற்றுகின்றனர் பரேலவிகள்.

ஐயமும் தெளிவும் என்று பதிலளிக்கும் இந்த அனாமதேயம் ஓர் அறிவு சூன்யம் என்பதற்கும் அரைவேக்காடு என்பதற்கும் ஆதாரமாக, இவர்கள் எடுத்து வைக்கும் அறிவு கெட்ட வாதத்தைப் பாருங்கள்.

வரமாட்டார்கள் என்று சொல்பவர் நாம் நடத்தும் குத்பிய்யத்தில் பங்கேற்று மகான் முஹ்யித்தீன் ஆண்டகையைக் கண்டு கொண்டால் அவர் ஒரு லட்சம் ரூபாய் நமது பணி சிறக்க தந்துதவ வேண்டும்

இந்தச் சவாலும் இறைவனுக்கு எதிராக விடுக்கும் சவால் தான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194, 195

எதை அல்லாஹ் முடியாது என்று உறுதியாக மறுக்கின்றானோ அதைத் தான் இவர்கள் உறுதியாக வருவார்கள் என்று நம்பிச் சொல்வது மட்டுமல்லாமல் சவாலும் விடுக்கின்றனர். சன்மானம் தருவதாகப் பிதற்றுகின்றனர். இந்தப் பரேலவிகளுக்குப் பகிரங்கமாக நாம் மறு சவால் விடுக்கின்றோம்.

ஒரு லட்சம் என்ன? ஒரு கோடி தருகின்றோம். குறுகிய வீட்டுக்குள், கும்மிருட்டுக்குள், கும்மாளமிட்டு, கூப்பாடு போட்டு உங்கள் கடவுள் முஹ்யித்தீனை அழைத்து, மாவுக் குவியலில் யாராவது ஒருவர் காலை வைத்து எடுத்து விட்டு இது முஹ்யித்தீனின் கால் என்று கூறி உங்கள் முட்டாள் பக்தர்களை ஏமாற்றுவது போல் எங்களை ஏமாற்ற முடியாது.

நாங்கள் எங்கள் மக்களுடன் வருகிறோம்; நீங்களும் உங்கள் குருட்டு பக்தர்களுடன் வாருங்கள். திறந்த வெளியில் பகிரங்கமாக எங்களுக்கு உங்கள் அப்துல் காதிர் ஜீலானி கடவுளைக் காட்டுங்கள். இன்ன தேதியில் முஹ்யித்தீன் வருகிறார்; வந்து பாருங்கள் என்று பகிரங்கமாக உங்கள் பத்திரிகையில் தேதியைக் குறிப்பிட்டு எங்களுக்கு அழைப்பு விடுங்கள் பார்ப்போம். செத்துப் போன அப்துல் காதிர் ஒருக்காலும் வர மாட்டார் என்று நிரூபித்துக் காட்ட நாங்கள் தயார்.

இரண்டாவது ஆதாரம்?

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை உஹத் மலையைப் பார்த்து யா உஹத் என்று அழைத்திருக்கிறார்கள் என்ற தகவல் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

நமக்குத் தெரிந்து இப்படி ஒரு ஹதீஸ் முஸ்லில் இடம்பெறவில்லை. முஸ்லிமில், நபி (ஸல்) அவர்கள், உஹத் என்று அழைத்ததாக இல்லை. அதற்குப் பதிலாக ஹிரா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. அதே சமயம் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 3675, 3686

இதில் உஹதே (யா உஹத்) என்று இடம்பெறாமல், உஹத் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு நபி (ஸல்) அவர்கள், உஹதே என்று அழைத்திருந்தாலும் உஹத் மலையிடம் உதவி கேட்டு அழைக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் உஹதே என்று கூப்பிட்டதால் நாம் முஹ்யித்தீனே என்று கூப்பிடலாம் என்று வாதிடுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகும். இவர்களுக்குத் தலையில் மூளைக்குப் பதில் களிமண் தான் இருக்கின்றது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் உஹதை அழைத்ததாக ஆதாரம் காட்டும் இவர்கள் உஹதையே உதவிக்கு அழைக்கலாமே! அப்துல் காதிரை நபியவர்கள் அழைக்கவில்லை. உஹதைத் தான் அழைத்துள்ளார்கள். அப்படியானால் இருட்டில் அழைப்பதற்கு அப்துல் காதிரை விட உஹத் மலை மேலானதாகும் என்பது இவர்களின் வாதத்திலிருந்து புலப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் உஹதிடம் பேசியதால் உஹத் மலை செவியேற்கின்றது என்று இவர்கள் நம்புவதில்லை. ஆனால் செத்துப் போன முஹ்யித்தீன் செவியேற்பார் என்பதற்கு மட்டும் இதை ஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் புரட்டு வாதத்தைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) உஹதைக் குறிப்பிட்டுப் பேசுவது இலக்கியமாகச் சொல்லப்பட்டதாகும். தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு,,, என்று சொன்னால் தென்றல் காற்றுக்குக் கேட்கும் ஆற்றல் இருக்கின்றது என்று நம்பி யாரும் சொல்வதில்லை. அருள்மிகு ரமளானே வருக என்று கூறுகின்றனர். இதனால் நாம் சொல்வதை ரமளான் கேட்கிறது என்று அர்த்தமில்லை. இவ்வாறு பேச்சு வழக்கில் சொல்லப்படுவதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் இங்கு உஹத் மலையிடம் பேசுகின்றார்கள்.

மூன்றாவது ஆதாரம்?

என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!என்று இப்ராஹீம் வேண்டிய போது, “நீர் நம்பிக்கை கொள்ள வில்லையா?” என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவேஎன்றார். “நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராகஎன்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 2:260)

இறந்த பறவைகளை அதன் பெயர் கூறி, மயிலே, புறாவே, கோழியே, காகமே என்று அழைத்ததால் ஷிர்க்கை எதிர்த்துப் போராடிய இப்ராஹீம் நபி ஷிர்க் வைத்து விட்டார் என்று கூறுவார்களா?

இப்ராஹீம் நபி உதவி தேடும் நோக்கில் அழைக்கவில்லை; அல்லாஹ் அவர்களுக்குக் காட்டிய அற்புதத்தைக் காண, அவனது கட்டளைப்படி அழைத்தார்கள் என பளிச்சென்று தெரியும் இந்த விஷயத்தை சம்பந்தமில்லாமல் பொருத்துகின்ற இவர்களின் புத்தியை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை.

இப்ராஹீம் நபி செத்த பறவையை அழைத்துள்ளார்கள். சுலைமான் நபி உயிருள்ள பறவையை அழைத்துள்ளார்கள். இன்னும் பலவற்றையும் அழைத்துள்ளனர். இவை இறைத்தூதர் என்ற சிறப்புத் தகுதியின் அடிப்படையில் அழைத்ததாகும்.

இது இறைத்தூதர்களுக்கான சிறப்புத் தகுதி என்று இந்தக் கூறுகெட்டவர்களும் நினைப்பதால் தான் செத்துப் போன பறவைகளையும் பாம்பையும் பல்லியையும் உஹது மலையையும் இவர்கள் அழைப்பதில்லை. தாங்கள் எதை நம்பவில்லையோ அதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இங்கு அழைப்பவர்கள் உயர்வானவர்களாகவும், அழைக்கப்படுபவர்கள் ஆற்றல் குறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். இதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதன் மூலம் அப்துல்காதிர் ஜீலானி செத்த பறவையைப் போன்றவர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றார்கள் என்று தான் அர்த்தம்.

நான்காவது ஆதாரம்?

திருக்குர்ஆனில் யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளான். மலைகளை அழைப்பது கூடும் என்று திருமறையும் நபிமொழியும் கூறும் போது திருக்குர்ஆனைச் சுமக்க மறுத்த மலைகளையே அழைக்க அனுமதியிருக்கும் போது, திருக்குர்ஆனாகவே வாழ்ந்த மாபெரும் இறைநேசச் செல்வரின் பெயர் கொண்டு அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அல்லாஹ் மலைகளை அழைக்கின்றான்; அழைத்து, செய் என்று கட்டளையிடுகின்றான். மலைகள் அல்லாஹ்வின் படைப்பாகும். அவை அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். இது ஓர் அதிகார உத்தரவு.

முஹ்யித்தீனை உதவி கேட்டு அழைக்கும் அழைப்பும் அல்லாஹ்வின் அழைப்பும் ஒன்றா? ஒருபோதும் ஒன்றாகாது.

வானம், நெருப்பு, மலை உள்ளிட்டவைகளை அல்லாஹ் அழைத்துள்ளான். இங்கே அழைக்கப்படுவது அற்பமாகவும் அழைப்பவன் உயர்வாகவும் இருக்கும் நிலை உள்ளது. அப்துல் காதிர் எங்களை விட அற்பமானவர் என்று இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும்; அல்லாஹ்வை பின்பற்ற கூடாது. அதாவது அல்லாஹ் செய்வதையெல்லாம் நானும் செய்வேன் என்று கூறக்கூடாது. அது சாத்தியமும் இல்லை என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

அல்லாஹ் அழைப்பதால் நானும் அழைப்பேன் எனக் கூரும் இந்தக் கூறு கெட்டவர்கள், அல்லாஹ் சாப்பிடுவதில்லை என்பதால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்பார்களா? அல்லாஹ் மலஜலம் கழிப்பதில்லை; எனவே நாங்களும் மலஜலம் கழிக்க மாட்டோம் என்பார்களா?

அல்லாஹ் தூங்குவதில்லை; அவனுக்கு எந்தப் பலவீனமும் இல்லை. நாங்களும் அல்லாஹ்வைப் போன்றவர்கள் என இந்தக் கபோதிகள் சொல்வார்களா?

அல்லாஹ் சாக மாட்டான். இவர்களும் சாக மாட்டார்களா? இவர்கள் வணங்கும் அப்துல் காதிரே செத்துப் போய் விட்டாரே!

அல்லாஹ் படைப்பவன். இவர்களும் அல்லாஹ்வைப் போல் படைக்கப் போகிறார்களா?

செத்துப் போன அப்துல் காதிரை இதுவரை அல்லாஹ்வுக்கு இணையாக்கி வந்தனர். இப்போது தங்களையே அல்லாஹ்வுக்கு இணையாக்கி அல்லாஹ் செய்ததை நான் செய்வேன் எனக் கூறுகின்றனர். இதிலிருந்து இவர்கள் எத்தகைய கேடுகெட்டக் கொள்கையில் இருக்கின்றார்கள் என்பதை விளங்கலாம்.

அத்துடன், திருக்குர்ஆனை மறுத்த மலைகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் குர்ஆனை அல்லாஹ் மலைக்குக் கொடுத்து அது மறுத்ததாக இவர்களுக்கு வஹீ வந்ததா என்று தெரியவில்லை. அல்லாஹ் தனது திருமறையில் மலைகள் மறுத்ததாகக் கூறவில்லை.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.  (அல்குர்ஆன் 59:21)

ஐந்தாவது ஆதாரம்?

தூரத்தில் இருக்கும் ஒரு மனிதரை பல மைல்களுக்கு அப்பாலிருந்து அம்மனிதரின் பெயர் சொல்லி அழைப்பது கூடும். அவ்வாறு தான் சாரி என்பவர் மலையேறும் போது பல மைல்களுக்கு அப்பாலிருந்து யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்களின் குரல் சாரியாவின் காதில் விழுந்தது என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இது பலவீனமான செய்தியாகும். இந்தச் செய்தி அபூ நுஐம் உஸ்புஹானீ என்பவர் தொகுத்த தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலிலும் இமாம் பைஹகீ அவர்களின் அல்இஃதிகாத் எனும் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல்” எனக் கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

நூல்: தலாயிலுன் நுபுவ்வா 509

இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவையனைத்தும் பலவீனமாகவே உள்ளன. மேலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் கூத் என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இமாம் புகாரி, நஸாயீ, அபூஹாதிம், ஹாகிம், அஹ்மது பின் ஹம்பள், தாரகுத்னீ, அபூதாவுத் மற்றும் பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 1, பக்கம்: 402

அம்ர் பின் ஹாரிஸ் என்ற நபித்தோழர் வழியாகவும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலில் 514வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பில் அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்து லைஸ் பின் சஅத் என்பவர் அறிவிக்கின்றார். லைஸ் நம்பகமானவர் என்றாலும் இவர் அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களைச் சந்திப்பதற்கு அறவே வாய்ப்பில்லை.

அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) ஹிஜ்ரீ 51ல் மரணிக்கின்றார். லைஸ் ஹிஜ்ரீ 175ல் மரணிக்கின்றார். அம்ர் (ரலி) அவர்களின் மரணத்துக்கும் லைஸ் அவர்களின் மரணத்துக்கும் இடையே 124 வருடங்கள் வித்தியாசம் உள்ளது. இவர் அம்ர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. எனவே அம்ர் (ரலி) அவர்களுக்கும், லைஸ் அவர்களுக்கும் இடையே குறைந்தது ஒரு அறிவிப்பாளராவது விடுபட்டு இருப்பார். விடுபட்ட இந்த நபர் யார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? என்பதைப் பற்றி எந்த விபரமும் இல்லை. இதன் காரணத்தால் இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

இந்தச் செய்தி முஹம்மது பின் அஜ்லான் என்பவர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தலாயிலுன் நுபுவ்வா என்ற நூலில் 512வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பில் முஹம்மத் பின் அஜ்லான் என்ற நபர் இடம் பெற்றுள்ளார். இவரின் நினைவாற்றல் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர் நினைவாற்றல் குறைவுடையவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களைத் தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை. இவருடைய கருத்துக்கு ஏற்றவாறு நம்பகமானவர்கள் ஹதீஸ்களை அறிவித்திருந்தால் மட்டுமே இவருடைய செய்திகளைப் பதிவு செய்வார்கள்.

இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் ரீதியில் பலவீனமாக இருப்பதுடன் இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.

மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். (அல்குர்ஆன் 6:59)

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் “உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?” என்று கேட்பான். “எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 5:109)

உமர் (ரலி) அவர்களுக்கு இதை இறைவன் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று கூற முடியாது. ஏனென்றால் இறைவன் சில நேரங்களில் சில மறைவான விஷயங்களைத் தன் தூதர்களுக்கே கற்றுக் கொடுப்பான். இவ்வாறு இறைவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கூட அதை அவர்கள் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இறைவன் மறைமுகமான விஷயங்களை கற்றுக் கொடுக்க மாட்டான்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

அல்குர்ஆன் 72:26

எனவே உமர் (ரலி) அவர்கள் பல மைல் தூரத்துக்கு அப்பாலிருந்து அழைத்ததாக இடம் பெறும் செய்தி பலவீனமானதும் திருக்குர்ஆனுக்கு முரணானதுமாகும்.

ஆறாவது ஆதாரம்

நாம் யாமுஹ்யித்தீன் என்று அழைத்தால் கவ்துல் அஃலம் அவர்களுக்குக் கேட்கும் என்பதைப் பின்வரும் சம்பவம் நிரூபிக்கின்றது.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் வாழ்ந்த காலத்தில் வழிப்பறிக் கொள்ளையர்கள் ஒரு பிரயாணக் கூட்டத்தை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்பொழுது பிரயாணிகளில் ஒருவர் யா முஹ்யித்தீன் என்று சப்தமிட்டு அழைத்தார். பல மைல்களுக்கு அப்பாலிருந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காதில் விழுந்தவுடன் தாம் அணிந்திருந்த செருப்பில் ஒன்றை வேகமாக வீசினார்கள். அச்செருப்பு கொள்ளையர்களை அடிக்க ஆரம்பித்தவுடன் கொள்ளையடித்த பொருட்களை திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள்.

இது மவ்லிதுக் கிதாபில் வருகின்ற ஒரு குப்பை சம்பவமாகும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வருகின்ற செய்தியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அது பலவீனமானதாக இருந்தால் ஆய்வில் அந்தச் செய்தி கண்ணுக்குத் தெரியாத கரைசலாகி விடும் எனும் போது இந்தக் குப்பை சம்பவம் எம்மாத்திரம்? இநதக் குப்பையை ஓர் ஆதாரமாகக் காட்ட இவர்கள் முன்வருகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

இந்தக் கதையின் அடிப்படையில் முஹ்யித்தீனை அழைக்கலாம் என்றால், கல்லையும் மண்ணையும் கடவுளாக வழிபடும் மக்கள் இதை விட அற்புதக் கதைகளைச் சொல்கிறார்களே! அதை நம்பி, கல்லை வணங்கச் சொல்வார்களா?

பிள்ளையாரும் முருகனும் சிவனும் இதுபோன்று ஆபத்துக் காலங்களில் நேரில் வந்து உதவி செய்ததாக ஏராளமான கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம் நம்பி இவர்களை வணங்கப் போகிறார்களா? சமாதியை வணங்கும் இவர்கள் அதையும் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பரேலவிகள் அறிவு மழுங்கிய சூன்யங்கள் என்பதற்கு அவர்களின் அர்த்தமற்ற இந்த வாதங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 26

ஏமாற்று வியாபாரம்

பொதுவாகவே இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது எவரையும் ஏமாற்றாமல் இருப்பதாகும். பிறரை ஏமாற்றிச் சம்பாதிப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராமாகும். வியாபாரத்திலும் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சையும் திராட்சையும் இருந்தது. இதை மரத்தில் பிஞ்சாக இருக்கும் போதே, “கனியான உடன் வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி விலை பேசுவார்கள். இந்த வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் பிஞ்சை விற்பதையோ, விலை பேசுவதையோ நபி (ஸல்) தடுக்கவில்லை.

மரத்தில் உள்ள பிஞ்சை விலை பேசலாமே தவிர, காயான உடன் வாங்கிக் கொள்கிறேன் என்று பிஞ்சாக இருக்கும் போதே விலை பேசக்கூடாது. ஏனென்றால் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது என்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படை.

உதாரணத்திற்கு, ஒரு மரத்தில் பேரீச்சையோ திராட்சையோ பிஞ்சாக இருக்கிறது. இதை வாங்குபவன், இதைக் கனியான உடன் நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறான். காயாக இருக்கும் போதே அந்தப் பொருள் இவ்வளவு வரும் என்று அவன் ஒரு கணக்கை வைத்திருப்பான். அந்தக் கணக்கு வந்தால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைய மாட்டான்.

ஆனால் அவன் போட்ட கணக்கு வரவில்லை என்றால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைகின்றான். பொருளை விற்றவன் இதில் ஒரு கணக்கை வைத்திருப்பான். அதாவது, இவ்வளவு தான் இதில் லாபம் வரும் என்று பொருளை விற்றவன் போட்ட கணக்கின் அடிப்படையில் லாபம் வந்தால் அவன் நஷ்டமடைய மாட்டான். இவனது கணக்கை விட அதிகமான கனிகள் வந்தால் விற்றவனுக்கு நஷ்டமாகின்றது.

இப்படி இருவர் மனம் புண்பட்டுச் செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. இந்த வியாபாரத்தில் ஏமாற்றும் நோக்கம் இல்லாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைத் தடை செய்தார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.

நூல்: புகாரி 2194

ஹுமைத் அவர்கள் கூறியதாவது: “பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்களிடம், “பக்குவம் அடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவதுஎன்று விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 2197

பேரீச்சம்பழம் மரத்தில் பிஞ்சாக இருக்கும் போது விற்கக் கூடாது. அப்படியே விற்கவேண்டும் என்றால் கனியாக ஆனவுடன் உள்ள விலையைப் பேசக்கூடாது. பிஞ்சிற்கு என்ன விலையோ அதைத் தான் பேசவேண்டும்.

பேரீச்சம்பழத்தை பொறுத்த வரை அது மஞ்சள் நிறத்தையோ சிவப்பு நிறத்தயோ அடைந்துவிட்டால் அதற்குப் பிறகு அது மரத்திலேயே இருந்தாலும் அதற்கு விலை பேசுவது குற்றமில்லை. ஏனென்றால் அது எல்லாவிதமான ஆபத்தையும் கடந்துவிட்டது.

பயிரை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அனைத்தும் அரிசியாக வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதன் கீழ்பகுதி மஞ்சள் நிறத்தை அடைந்துவிட்டால் அதன் பிறகு அதற்கு ஆபத்தில்லை

பேரீச்சம்பழத்தைப் பொறுத்த வரை அது மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாகவோ ஆனதற்குப் பிறகு காய்க்குறிய பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கெள்ளளாம்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்தை அது கடந்துவிட்டால் அதற்குப் பிறகு எந்த இடையூறும் இருக்காது என்று தெரிந்ததற்குப் பின்னால் அதை விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை என்பது கீழ்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் “பலன் உறுதிப்படுவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. “(அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 1486

மரத்தில் உள்ள பிஞ்சைக் காட்டி, காய்க்கு விலை பேசி பணத்தை வாங்குவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒரு மனிதர் மற்றொரு மனிதனிடத்தில் மரத்தில் உள்ள பிஞ்சைக் காட்டி பணத்தை வாங்கிக் கொண்டு, இது காயான உடன் எடுத்துக் கொள் என்று சொல்கிறார். அந்த மனிதரும் சரி என்று சொல்கிறார். பிறகு பருவ நிலையாலோ அல்லது மழை வந்ததாலோ அல்லது வெயிலின் காரணமாகவோ அந்தப் பிஞ்சு காயாகவில்லை; உதிர்ந்து விடுகிறது. இப்போது ஒரு சகோதரன் தனது மற்றொரு சகோதரருடைய பணத்தை வாங்குவது எப்படிக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள்

ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பக்குவமடைவதற்கு முன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்! என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், பக்குவமடைதல் என்றால் என்ன? என்று கேட்டோம். அதற்கவர்கள், “சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்!என்று பதிலளித்தார்கள். மேலும், “அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக) கருதுவீர்!என்றும் கேட்டார்கள்.

நூல்: புகாரி 2208

இந்த ஹதீஸை வைத்து நாம் பார்க்கும் போது விற்பவன் மீது மட்டும் குற்றம் என்பதைக் காட்டுகிறது ஆனால் நபி (ஸல்) அவார்கள் சொல்லும் போது விற்பவன் மீதும் வாங்குபவன் மீதும் குற்றம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.

நூல்: புகாரி 2194

ஒரு காய் மரத்தில் இருக்கும் நிலையில் அதை அப்படியே விற்பது தவறில்லை. இந்த நிலையைக் காட்டி இதற்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விற்கக் கூடாது.

வியாபாரம் என்பது மன நிறைவாக இருக்க வேண்டும். விற்பவனும் வாங்குபவனும் பாதிக்கப்படக் கூடாது.

முஸாபனா என்கின்ற மற்றொரு வியாபாரத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். முஸாபனா என்றால் மரத்திலுள்ள பக்குவப்பட்ட பேரீச்சம்பழத்திற்கு பக்குவப்படாத பேரீச்சம்பழத்தை விற்பது. ஒரு இனத்தை அதே இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு விற்பது. இந்த வகையான வியாபாரம் தவணை முறையில் தான் நடைபெறும்.

உதாரணமாக, பேரீச்சம்பழத்திற்குப் பதிலாக பேரீச்சம்பழத்தை, திராட்சைக்குப் பதிலாக திராட்சையை, மிளகாய்க்குப் பதிலாக மிளகாயை விற்பது, அதாவது ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டை விற்பது மார்க்கத்தில் தடையில்லை.

மரத்தில் உள்ளதைக் காட்டி, “இதில் 100 கிலோ இருக்கும்; இது பழமான உடன் நீ எடுத்துக் கொள். இப்போது எனக்கு 100 கிலோ கொடு’ என்ற ஒருவர் கேட்கிறார். அவர் சொன்னதைப் போன்று 100 கிலோ கிடைத்தால் பிரச்சனையில்லை.

அப்படி இல்லாமல் வாங்கியவர் 100 கிலோவை வாங்கிவிட்டு மரத்தில் உள்ளது 90 கிலோவாகவோ 80 கிலோவாகவோ இருந்தால் மரத்தில் உள்ள பொருளை வாங்கியவர் பாதிக்கப்படுகிறார். இப்போது 100 கிலோ வாங்கியவர் கிடைக்காமல் போன 10 கிலோவிற்கு என்ன பதில் சொல்வார்? இதை நபி (ஸல்) அவர்கள் வட்டி என்று சொல்கிறார்கள்.

அப்படி மரத்தில் உள்ளது 100 கிலோவிற்கு அதிகமாக இருந்தால் விற்றவன் பாதிக்கப்படுகிறான்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். “முஸாபனாஎன்பது மரத்திலுள்ள பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதுமாகும்!

நூல்: புகாரி 2185

முஹாக்கலா வியாபாரத்தை நபி (ஸல்) தடை செய்தார்கள். முஹாக்கலா என்றால் பக்குவப்பட்ட நெல்லை அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பொருளுக்கு விற்பதாகும்.

நெற்கதிர்களை கதிரில் வைத்து விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அது மஞ்சள் நிறம் ஆனதற்குப் பின்னால் விற்பதை அனுமதித்தார்கள். நெற்கதிர்கள் பச்சையாக இருக்கும் போது விற்றால் பச்சைக்கு என்ன விலையோ அதைத் தான் விலை பேசவேண்டும். அது மஞ்சளாதனற்குப் பின்னால் உள்ள நிலைக்கு விலை பேசக்கூடாது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “முஹாகலா, முஸாபனா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.

நூல்: புகாரி 2187

நபி (ஸல்) அவர்கள் வியாபாரத்தில் ஏமாறக்கூடிய, ஏமாற்றக்கூடிய அனைத்து வாயில்களையும் அடைக்கிறார்கள். வியாபாரம் என்று வரும் போது விற்பவனும் வாங்குபவனும் நஷ்டமடையாமல் இருப்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படையாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒரு பழம் அதன் பக்குவத்தை அடையும் வரையும் இன்னும் கால்நடையின் முதுகின் மீதுள்ள முடியையும் (அறுப்பதுக்கு முன்) இன்னும் மடுவிலுள்ள பாலையும் இன்னும் பாலிலுள்ள நெய்யையும் விற்பதை நபிகள் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

நூல்: தாரகுத்னி

ஆட்டினுடைய ரோமத்திலிருந்து கம்பளி செய்யப்படுகிறது. எனவே ஆட்டின் ரோமத்தை விற்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. எப்போது தடுக்கிறது என்றால் ஆட்டை அறுப்பதற்கு முன்னாலே ரோமத்திற்கு விலை பேசுவதை இஸ்லாம் தடுக்கிறது.

அதேபோல மாட்டிலிருந்து பால் கறப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அதே சமயம், ஒருவனிடத்தில் மாட்டைக் காட்டி ஒரு 100 ரூபாய் வாங்கி விட்டு, இதிலுள்ள பாலைக் கறந்து கொள் என்று சொன்னால் அது தவறாகும்.

அந்த மாட்டின் மடுவில் 100 ரூபாய்க்கான பால் இருந்தால் இரண்டு பேருக்கும் நஷ்டம் ஏற்படாது. ஆனால் அதில் 100 ரூபாய்க்கான பால் இல்லை என்றால் வாங்கியவன் நஷ்டமடைகிறான். அதில் 100 ரூபாய்க்கும் அதிகமான அளவுக்குப் பால் இருந்தால் விற்றவன் நஷ்டமடைகிறான். இந்த வகையான வியாபாரத்தை இஸ்லாம் தடுக்கிறது.

இருவர் வியாபாரம் செய்தால் இருவர் மனதிற்கும் வருத்தம் ஏற்படாமல் மன நிறைவோடு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது.

பாலில் வெண்ணை இருக்கும். அந்தப் பாலைக் காட்டி, “எனக்கு இன்ன தொகை தா! அதன் பிறகு இந்தப் பாலைக் கடை. அதில் வரும் வெண்ணையை நீ எடுத்துக் கொள்’ என்று சொல்லி பாலைக் கடைவதற்கு முன்னரே விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கின்றார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பரேலவிகளை அறியாத பால் தாக்கரே

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குக் குரல் கொடுப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 11, 2012 அன்று மும்பை ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தஹக்ஷ்ஹ ஆஸ்ரீஹக்ஹம்ஹ், அனைத்திந்திய சுன்னத் ஜமாஅத்துல் உலமா, அனைத்திந்திய ஜமாஅத் ரஜா இ முஸ்தபா மற்றும் பல அமைப்புகள் நடத்தின. இந்த அமைப்புகள் அனைத்துமே பரேலவி அமைப்புகள்.

இப்போராட்டத்தின் போது உரையாற்றிய நியமத் நூரி, குத்து பஹாயிய்யா, அக்தர் அலீ, அமானுல்லாஹ் பரக்கத்தி, குலாம் அஹ்மத் காதிரி ஆகிய அனைவரும் பரேலவி ஆலிம்கள்.

இதில் ஐந்தாவதாகப் பேசிய குலாம் அஹ்மத் காதிரி என்பவர் கூட்டத்தைக் கண்ட குஷியிலும் குதூகலத்திலும் கொதிப்பேறிய, கொழுப்பேறிய பேச்சுக்களைக் கொப்பளிக்க ஆரம்பித்தார். இதன் விளைவாக மூவாயிரம் இளைஞர்கள் கொந்தளிக்கத் துவங்கினர். அவர்களுடன் மேலும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அணி சேர்ந்தனர்.

ஆசாத் மைதானத்தில் உள்ள பதாகைகள், கொடிகள், மூங்கில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். வாயில் வந்த கொச்சை வார்த்தைகளையும் வசை மொழி கோஷங்களையும் எழுப்பிக் கொண்டு ஓர் அசம்பாவிதத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். நிலைமையை உணர்ந்த காவல்துறை அவர்களிடம் அமைதி காக்குமாறு கெஞ்சியது.

கூட்டம் பெருத்துவிட்டால், தலைவர்களுக்குக் குருட்டுத்தனம் பெருக்கெடுக்கும். அவ்வாறு தலைவர்களுக்கே பெருக்கெடுக்கும் போது தொண்டர்களின் நிலையைக் கேட்கவா வேண்டும்? காவல்துறையின் கெஞ்சல் அவர்களின் காதுகளில் விழவில்லை.

  • ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னமான அமர் ஜோதி ஜவானை ஒரு சிலர் சேதப்படுத்தினர்.
  • 11 வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வாகனங்களில் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஞஇ (ஞன்ற்ள்ண்க்ங் இழ்ர்ஹக்ஸ்ரீஹள்ற்ண்ய்ஞ்) வேனும் அடக்கம். ஊடகத்துறையினரின் கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
  • சி.எஸ்.டி. டிப்போவில் உள்ள உயர்தரமான 31 பஸ்கள் கல்வீச்சுக்கு இலக்காகி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தெற்கு மும்பை நோக்கிச் சென்ற பஸ்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
  • காயமடைந்தவர்கள் மொத்தம் 54 பேர். அவர்களில் 45 பேர் காவல்துறையினர். இதில் 8 பேர் தலைக்காயம் பட்டவர்கள். இவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
  • பெண் காவலர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டனர். காவல்துறையினரிடமிருந்து சில ரக துப்பாக்கிகளைப் பிடுங்கினர். சில காவலர்களை வேனில் உள்ளே வைத்துப் பூட்டினர். நல்ல வேளையாக மற்ற காவலர்களின் உதவியுடன் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
  • இறுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாயினர்.
  • 74 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் சேதம் விளைவிக்கப்பட்டன. இதில் 80 சதவிகிதம் தனியார் சொத்துக்கள் தான்.
  • இந்தக் கலவரத்தின் விளைவாக மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக் பணி மாற்றம் செய்யப்பட்டார்.
  • ஆசாத் மைதானக் கலவரம் தொடர்பாக ஆரம்பத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் மீதான வழக்கு ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டு, 58 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவை பரேலவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். முஸ்லிம் அல்லாத மக்களை, குறிப்பாக முஸ்லிம்களுடன் நட்பு கொண்டிருந்த மக்களைக் கூட இது முகம் சுளிக்க வைத்தது; முணுமுணுக்க வைத்தது.

செல்லாக்காசுக்கு ஒரு செல்வாக்கு

இந்த விளைவுகள் இத்துடன் நிற்கவில்லை. மும்பையில் நாளுக்கு நாள் பலமும், வலிமையும் இழந்து கொண்டிருந்த மும்பை தாதா பால்தாக்கரேயின் பரிவாரங்களுக்கு நல்ல ஊட்டச்சத்தாக இது அமைந்தது.

சிவசேனையிலிருந்து பிரிந்து ராஜ் தாக்கரே தொடங்கிய மஹா நவநிர்மான் சேனா அமைப்பு எந்தச் செல்வாக்குமில்லாமல் செல்லாக் காசாகக் கிடந்தது. மரணப்படுக்கையில் கிடந்த அந்த எம்.என்.எஸ். அமைப்புக்கு ஓர் ஊட்டச்சத்தும் ஊக்கமும் கிடைத்தது.

உடனே ராஜ் தாக்கரே, ஓர் ஆர்ப்பாட்டத்தை அறிவிக்கின்றார். ஆகஸ்ட் 11 அன்று பரேலவிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். ஆகஸ்ட் 21ஆம் தேதி கிர்வோம் சவ்பாத்தியிலிருந்து ஆசாத் மைதானத்தை நோக்கி பேரணி நடத்தவும் அங்கு ஆர்ப்பாட்டம் செய்யவும் எம்.என்.எஸ். முனைந்தது.

முஸ்லிம்களின் ஆசாத் மைதான நிகழ்வைக் கண்டித்தே ராஜ் தாக்கரே இந்தப் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். ஆரம்பத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் அனுமதி வழங்கியது. இதில் பெருங்கூட்டம் கூடியது.

இது சட்டமன்றத் தேர்தலின் போது மகா நவநிர்மான் சேனாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விடும் என்று அந்தக் கட்சியினரும் மக்களும் கருதும் அளவுக்கு அந்தக் கூட்டம் அமைந்திருந்தது.

நிறம் மாறிய பால்தாக்கரே

பரேலவிகளின் ஆசாத் மைதான போராட்டத்தினால் ஏற்பட்ட எதிர்விளைவுகளின் உச்சக்கட்டம் பால்தாக்கரே முஸ்லிம்களுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கையாகும்.

அந்த எச்சரிக்கையைப் பார்ப்பதற்கு முன்னால் பால்தாக்கரேயைப் பற்றி சில வரிகளில் பார்ப்போம். “மராத்தியம் மராத்தியருக்கே, இங்கு அந்நியருக்கு இடமில்லை'” என்ற மண்ணின் மைந்தன் கொள்கையைக் கொண்டவர் தான் பால்தாக்கரே! இந்திய அரசியல் சட்டம் இதற்கு நேர் எதிரானது. காரணம், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே பாரதம் என்று அரசியல் சட்டம் தெளிவாகத் தெரிவிக்கின்றது. இதற்கு எதிரான மண்ணின் மைந்தன் கொள்கையைக் கொண்டவர் பால்தாக்கரே! ஆனால் அவர் தன்னுடைய கொள்கைக்கு மாற்றமாக இப்போது பேசுகின்றார். ஏன்? எதற்கு? என்பதைத் தான் அவரது பேட்டி விளக்குகின்றது.

அவர் தன்னுடைய சாம்னா பத்திரிகையில் எழுப்பிய அந்த அபாயச் சங்கொலி இதோ:

இந்திய நாட்டின் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. இனி இங்கு நாம் மராத்தியன், வங்காளியன், குஜராத்தியன், பஞ்சாபியன் என்ற அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு ஆட்டம் ஆடக் கூடாது. அந்த அட்டைகள் நமக்கு எதுவும் அறவே பலனளிக்காது. இந்த அடையாள அட்டைகள் அனைத்தையும் தூரத் தூக்கி எறிவோம். இஸ்லாத்திற்கு எதிராக அனைவரும் ஓரணி திரள்வோம்; ஒன்றாக இணைவோம்.

ஆசாத் மைதானத்தில் கூடிய முஸ்லிம்களின் கூட்டமும் ஆடிய ஆட்டமும் இந்துக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட சமிக்ஞையும் சவாலும் ஆகும். மாரத்தியர்களால் மட்டுமே இஸ்லாத்தை எதிர்க்க முடியாது. பஞ்சாபிகள் மட்டும் இஸ்லாத்தை எதிர் கொள்ளலாம் என்பது பகல் கனவு. குஜராத்தியர்கள் மட்டும் எதிர் கொள்ளலாம் என்பது குறுகிய கண்ணோட்டம். வங்காளிகள் மட்டும் எதிர்கொள்ள முடியும் என்பது வார்த்தை ஜாலம் ஆகும். அனைவரும் ஒன்றுபட்டால் தான் இஸ்லாத்தை வீழ்த்த முடியும்.

இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடாத வரை ஒருங்கிணையாத வரை ஒருபோதும் இஸ்லாத்தை எதிர்கொள்ள முடியாது.

ஊடகங்கள் அனைத்தும் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாகி விட்டன. இவை ஆசாத் மைதானத்தின் ஆர்ப்பாட்டத்தை அடக்கியே வாசிக்கின்றன. நான் நினைத்திருந்தால் மத்தியில் அல்லது மாநிலத்தில் மந்திரியாகி இருக்க முடியும். எனினும் பதவியைத் துறந்த பத்தினியாக இருப்பதற்கும் அதிகாரம் துறந்த முனிவராக இருப்பதற்கும் காரணம் எனது கொள்கையை அடைவதற்காகத் தான். அது தான் என்னுடைய மூலதனமாகும்.

இது தான் பசுத்தோல் போர்த்திய மராத்தியப் புலி இஸ்லாத்திற்கு எதிராக அடித்த எச்சரிக்கை மணியாகும்.

ஊதி அணைக்க முடியாத ஜோதி

இஸ்லாம் என்பது அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் சொல்வது போன்று ஊதி அணைக்க முடியாத ஜோதியாகும்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

மராத்தியர்கள், பஞ்சாபிகள், குஜராத்திகள், வங்காளிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகும் சேர்ந்தாலும் சரி! இந்தச் சக்திகள் அனைத்தும் சேர்ந்து இந்தச் சத்திய ஜோதியை ஊதி அணைத்து விட முடியாது. இது தான் தெளிவான உண்மையாகும்.

நாம் இங்கு பார்க்க வேண்டிய விஷயம், பரேலவிகள் தங்கள் வன்முறையின் மூலம் ஏற்படுத்திய எதிர் விளைவுகளைத் தான்.

வீரமா? விவேகமா?

ஒரு முஸ்லிம் எப்போதும் வீரனாகத் திகழ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக விவேகியாகத் திகழ வேண்டும். வீரம் என்று வருகின்ற போது, ஒரு கூட்டத்தைக் கண்டவுடன் வீரம் பிறக்கக் கூடாது; பொங்கி எழக்கூடாது. எப்போதும் வீரமாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாக, முதலில் விவேகம் இருக்க வேண்டும். எதிர் விளைவைக் கவனிப்பதும், கணிப்பதும் தலைமை தாங்கும் தலைவர்களுக்குக் கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.

உஹத் போர்க்களத்தில் நபி (ஸல்) அவர்கள், எந்தப் பொந்திலிருந்து எதிரிகளின் படை உள்ளே புகுவார்கள் என்பதைத் தெரிந்தே அந்த இடத்தில் காவலுக்கு ஒரு படையை நிறுத்தினார்கள். அந்தப் படை நபிகளாரின் கட்டளைப்படி காக்கத் தவறியது. வெற்றி உறுதியாகிவிட்டது என்றெண்ணி மற்ற வீரர்களுடன் வெற்றியைக் கொண்டாட களத்திற்குள் வந்தனர். இதனால் தான் உஹத் போர்க்களம் நிர்மூலமானது.

நிறுத்தப்பட்ட படையினர் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறைவேற்றத் தவறியது வேறு விஷயம். ஆனால் இங்கு நாம் பார்க்க வேண்டியது, நபியவர்கள் எந்த வழியாக ஆபத்து வரும் என்று கவனித்தார்களோ, சரியாகக் கணித்தார்களோ அது தான் விவேகம். இத்தனையும் தாண்டி ஏதேனும் ஏற்படுகின்றது என்றால் அதை இறை நாட்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதிரொலியும் உன்னொலி தான்

இஸ்லாம் போர்க்களத்தில் மட்டும் இந்த எச்சரிக்கை உணர்வை எடுக்கச் சொல்லவில்லை; எதிர்விளைவை கவனிக்கச் சொல்லவில்லை. சாதாரணமான பேச்சு நடவடிக்கைகளிலும் இதைக் கவனிக்கச் சொல்கின்றது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.

அல்குர்ஆன் 6:108

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இந்த எச்சரிக்கை உணர்வை எடுத்துக் கொள்ளச் சொல்கின்றான். நேரடியாகத் திட்டினால் தான் இறைவனைத் திட்டியதாகும் என்று விளங்கிக் கொள்ளாதீர்கள். பிறரை இவ்வாறு எதிர்விளைவாகத் திட்டுவதற்குத் தூண்டினாலும் அந்த எதிரொலியும் உன் ஒலி தான். அது உன்னால் விளைந்தது தான் என்று இஸ்லாம் கூறுகின்றது.

“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 5973

மேற்கண்ட ஹதீசும் இதைத் தான் தெளிவுபடுத்துகின்றது.

இந்தப் பம்பாய் பரேலவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது இந்த எதிர்விளைவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கண்மூடித்தனமான, கட்டுப்பாடற்ற, காட்டாற்று வெள்ளமாக சமுதாய மக்களை இழுத்து வந்து, அந்த மக்கள் மீது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது சேற்றை வாரி வீச வைத்து விட்டார்கள்.

இதில் பரேலவிகள் ஒட்டுமொத்தமாகக் கரித்துக் கொட்டிய கோபம் ஊடகத்தின் மீது தான். இதே ஊடகம் தான் பரேலவிகள் ஏற்கனவே முராதாபாத்தில் அக்டோபர் 2011ல் நடத்திய சூபிக்கள் மாநாட்டைப் படு அமர்க்களமாக வெளியிட்டன. ஆப்ப் ஒய்க்ண்ஹ மப்ஹம்ஹ ஹய்க் ஙஹள்ட்ஹண்ந் இர்ஹழ்க் (ஆஒமஙஇ) என்பது அடையாளம் தெரியாத ஓர் அமைப்பு. இவர்கள் நடத்திய இந்த மாநாட்டிற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்ததற்கு ஒரே காரணம், அவர்கள் வஹ்ஹாபிசத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காகத் தான். வஹ்ஹாபிசம் தான் பயங்கரவாதத்திற்கு அஸ்திவாரம் இடக்கூடியவை என்று ஊடகத் துறை நம்புவதால் தான்.

இப்போது தான் ஊடகங்களுக்கு ஓர் உண்மை புரிந்திருக்கின்றது. இந்த வெறியாட்டத்தை ஆடியிருப்பது இவர்களால் தப்பான பார்வை பார்க்கப்படுகின்ற தேவ்பந்த் மதரஸாவுடன் இணைந்த வஹ்ஹாபிச அமைப்பல்ல! முற்றிலும் இவர்கள் தூக்கிப் பிடிக்கின்ற பரேலவிச, சூபிஸ அமைப்பினர் தான் என்று!

பால் தாக்கரேவுக்குத் தெரியாத ஓர் உண்மை என்னவெனில் ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள் பரேலவிகள் என்பது தான்.

பால்தாக்கரேக்கும் பரேலவிகளுக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம், அவர் கல்லை வணங்குபவர்; இவர்கள் அல்லாஹ் தான் ஓரிறைவன் என்று சொல்லிக் கொண்டு கப்ரை வணங்குபவர்கள்.

அவர் சாமியை வணங்கினால் இவர்கள் சமாதியை வணங்குவார்கள்.

இந்த உண்மை தெரிந்திருந்தால், இவர்களும் நம்மவர்கள் தான் என்று எண்ணி பால்தாக்கரே இவர்களைக் காதலிக்க ஆரம்பித்திருப்பார். ஒட்டுமொத்த இஸ்லாத்தின் மீது வெறுப்பு இருந்தாலும் பரேலவிகளை மட்டும் பிரித்துப் பார்த்திருப்பார். பரேலவிசத்தின் இந்தப் பரம ரகசியம் பால்தாக்கரேக்குப் புரியாமலேயே போனது.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 7

இறைநேசர்களை மக்கள் தீர்மானிக்க முடியுமா?

மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நபிமார்களாலும் அறியமுடியாது என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தோம். யூசுப் (அலை) அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் இதற்கு ஆதாரமாகக் கூறலாம்.

யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, “யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்” என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். இந்த விஷயம் அவர்களின் தந்தை யஃகூப் நபியவர்களுக்கு தெரியவில்லை.

பெற்ற பிள்ளைகளே தங்களுடைய மனதில் கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள் என்ற விஷயத்தை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது. இதன் முழு விபரத்தை திருக்குர்ஆனின் 12வது அத்தியாயமான சூரா யூசுப் என்ற அத்தியாயத்தில் காணலாம்.

ஆக, யாருடைய வெளித்தோற்றத்தை வைத்தும் நாம் அவரை நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்துச் சொல்ல இயலாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு, அவ்லியாக்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது, அவர்கள் இறைநேசர்கள் தான் என்று சொல்லக் கூடியவர்கள் ஒரே ஒரு ஹதீஸை மட்டும் அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ் பல வித்தியாசமான வார்த்தைகளால் பல நூல்களில் வந்திருக்கிறது.

ஒருமுறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டதுஎன்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டதுஎனக் கூறினார்கள். உமர் (ரலி) “எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்எனக் கூறினார்கள்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1367

இந்த ஹதீஸை வைத்துப் பார்த்தால் நமக்கு என்ன விளங்குகிறது? நாம் எல்லாரும் சேர்ந்து ஒருவரைஅவ்லியா என்றால் அவர் அவ்லியாதான். சாகுல் ஹமீது அவ்லியா என்றும், அஜ்மீர் அவ்லியா என்றும் எத்தனையோ பேர் சொல்கிறார்கள். இப்படி ஏராளமான மக்கள் ஒருவரைப் பற்றி நற்சான்றிதழ் சொன்னார்களேயானால் அந்த மாதிரி அவர் அல்லாஹ்விடத்தில் இருப்பார் என்ற வாதத்தை வைக்கின்றனர்.

இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்துப் பார்க்கும் போது அவர்கள் சொல்கின்ற கருத்து சரி தான். அதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இதுவரைக்கும் நாம் எடுத்து வைத்த ஹதீஸ்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? இதுவரை நாம் எடுத்து வைத்த அத்தனை ஆதாரங்களுமே யாரையும் நாம் இறைநேசர் என்றோ, அவ்லியா என்றோ, மகான் என்றோ கூறமுடியாது. ஸஹாபாக்கள் மட்டுமல்லாமல் இறைத்தூதர்களால் கூட ஒருவரை இறைநேசர் என்று கூறமுடியாது என்பது தான் இதுவரை கண்ட ஆதாரங்களிலிருந்து விளங்கும் உண்மை. அவ்வாறு இருக்கும் போது இந்த ஒரு ஹதீஸை மட்டும் ஏற்றுக் கொண்டு, தங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு மற்ற எல்லா ஹதீஸ்களையும் மறுப்பது சரியான வாதமல்ல.

நாம் நமது நடைமுறை வாழ்க்கையில் கூட இதைக் காணலாம். நம் கண்ணுக்கு முன்னால் அயோக்கியன், கெட்டவன் என்று தெரிந்த ஒருவனை எல்லாரும் சேர்ந்து கொண்டு நல்லவன் என்று சொல்கிறார்கள். அவனை நல்லவன் என்று பாராட்டுகிறார்கள். நமக்கு நல்லவன் என்று தெரிந்தவனை அயோக்கியன் என்று சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எத்தனையோ பேர் இறந்து போனதற்காக வேண்டி, இலட்சோப இலட்ச மக்கள் அவர்களுடைய அடக்கத்தலத்திற்குச் சென்று அவரை போற்றிப் புகழ்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு முஸ்லிம் தலைவரோ அல்லது அரசியல் தலைவரோ இறந்து விட்டால் எவ்வளவோ பேர் அதில் கலந்து கொள்கிறார்கள். அவருடைய ஜனாஸாவில் சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அவர் ஆன்மீக ரீதியாகவோ, மார்க்க ரீதியாகவோ எதையும் செய்திருக்கமாட்டார். அவர் ஒரு முஸ்லீம் லீக் தலைவராக இருந்து அவர் இறந்து விட்டால் அவருடைய அடக்கத்தலத்திற்கு சென்று அவர் அப்படி, இப்படி என்று நாம் புகழ்வதின் மூலமாக அவர் சொர்க்கவாசியாக ஆகிவிடுவாரா?

மேற்கண்ட ஹதீஸைப் பார்க்கும் போது அவர் சொர்க்கவாசியாக ஆகிவிடுவார் என்பது போன்று நமக்குத் தோன்றும். ஆனால் இதற்கு முன்னால் நாம் பார்த்த அனைத்து ஹதீஸ்களிலும் அவ்வாறு சொல்லக்கூடாது என்றும் வருகிறது. ஆனால் இந்த ஹதீஸில், உள்ளத்தில் உள்ளதை அறியமுடியும் என்று வருகின்றதே? என்ற குழப்பம் நம்முடைய மனதில் எழலாம்.

ஆனால் இந்த ஐயத்தை போக்கும் விதமாக நாம் இன்னும் வேறு ஹதீஸ்களை ஆராய்ந்து, சிந்தித்துப் பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும். இந்த இரண்டு செய்திகளை மட்டும் வைத்துப் பார்க்காமல் இது சம்பந்தமாக வேறு என்னென்ன செய்திகள் வருகின்றதோ அத்தனை ஹதீஸ்களையும் ஆராய்ந்து பார்த்தோமென்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை எதற்குச் சொன்னார்கள்? அது நபிகளாருடைய காலத்துடன் முடிந்து விட்டதா? அல்லது இன்றைக்கும் அது இருக்கிறதா? என்ற விவரங்கள் நமக்குத் தெளிவாகி விடுகின்றது. அது என்ன செய்தியென்றால், நாம் மேற்கூறிய ஜனாஸா சம்பந்தப்பட்ட செய்தி தான்.

ஒரு செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்களில் ஒருவர் ஒரு செய்தியை மட்டும் கூடுதலாக அறிவிப்பார். இன்னொருவர் குறைவாக அறிவிப்பார். ஆனால் நடந்த விஷயம் நிறைய இருக்கும். 10 விஷயம் நடந்திருக்கின்றது என்றால் ஒருவர் அதில் ஏழு விஷயங்களை மட்டும் அறிவிப்பார். இன்னொருவர் ஐந்தைச் சொல்லி ஐந்தை விட்டுவிடுவார். வேறொருவர் ஒன்பது செய்திகளைச் சொல்லி ஒன்றை மட்டும் விட்டுவிடுவார். இன்னொருவர் அந்தப் பத்து செய்திகளையும் முழுவதுமாகச் சொல்லி விடுவார்.

இதை நாம் நம்முடைய வாழ்க்கையில் கூடக் காணலாம். நாம் ஒரு மணி நேர சொற்பொழிவைக் கேட்கிறோம். நம்மில் சிலர் அந்த ஒரு மணி நேர பயானை அப்படியே கேட்டபடி சொல்லக் கூடியவர்கள் இருப்பார்கள். அதில் பாதியை விட்டுவிட்டு பாதியைச் சொல்லக் கூடியவர்களும் இருப்பார்கள். அல்லது நமக்கு அந்தச் சொற்பொழிவில் எது பிடித்தமானதாக இருக்கிறதோ அதை மட்டும் சொல்வோம். இப்படி நாமே நமக்குள் பலவிதமான கருத்தில் இருக்கிறோம்.

இதைப் போன்று தான் ஸஹாபாக்களில் சிலர் கூடுதலாகவும், வேறு சிலர் குறைவாகவும் அறிவிப்பார்கள். நாம் இப்போது மேற்கண்ட ஜனாஸா குறித்த செய்திக்கு வருவோம். மற்றொரு அறிவிப்பில் கூடுதலான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதை அந்த அறிவிப்பாளர் விட்டுவிட்டார். அது என்ன வாசகம் என்றால், முதலில் ஒரு ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியாகி விட்டது என்று சொல்கிறார்கள். பிறகு இன்னொரு ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியாகி விட்டது என்று சொல்கிறார்கள். இத்துடன் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் முடித்து விடுகிறார். ஆனால் இன்னொரு அறிவிப்பாளர், இதற்குப் பின்னால் ஒரு செய்தியைக் கூடுதலாகக் கூறுகிறார்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், “இது யார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்றும் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டதுஎன்று கூறினார்கள்.

பிறகு மற்றொரு ஜனாஸா கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார் என்றும் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டதுஎன்று கூறினார்கள்.

அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “பூமியில் அல்லாஹ்விற்கென்று மலக்குமார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள்என்று கூறினார்கள்.

நூல்: ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 533

இது ஆதாரப்பூர்வமான, அறிவிப்பாளர்களில் எந்தக் குறையும் இல்லாத செய்தியாகும்.

இப்போது நாம் ஒருவரை நல்லவர், அவ்லியா என்று சொல்கிறோம். அவரை  நாமாக அவ்லியா என்று  சொன்னோமா அல்லது மலக்குமார்கள் சொல்லி அவ்லியா என்று சொன்னோமா? என்றால் நமக்கு இது தெரியாது. ஆனால் நபியவர்களுக்கு மட்டும் எவ்வாறு தெரிந்தது என்றால் அல்லாஹ் அதை அறிவித்துக் கொடுப்பான்.

இதிலிருந்து என்ன விளங்குகிறது? இந்தச் சம்பவம் நபியவர்களுடைய காலத்திலேயே முற்றுப் பெற்றுவிட்டது. இந்தக் காலத்திற்கு இது பொருந்தாது. நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் யாரேனும் ஒருவரை நல்லவர் என்று பாராட்டிச் சொன்னால் அல்லாஹ்  மலக்குமார்களை அனுப்பி பாராட்டிச் சொன்னானா? அல்லது இவர்களாகத் தங்களது குருட்டு பக்தியின் காரணமாகப் பாராட்டிச் சொல்கிறார்களா? என்பதை நபியவர்கள், மலக்குமார்களை பார்க்கக் கூடியவர்களாக இருந்ததால் கண்டுபிடித்து விடுவார்கள்.

ஆனால் நாம் ஒருவரை நல்லவர் என்று சொன்னால் அது நம்முடைய வார்த்தையா? மலக்குகளுடைய வார்த்தையா? என்பதைக் கண்டறிய நம்மால் முடியாது. காரணம், இறைச் செய்தி முற்றுப் பெற்றுவிட்டது.

இது நம்முடைய காலத்திற்குப் பொருந்தாது என்று விளங்கிக் கொண்டால் நம்மிடம் இது போன்ற தவறுகள் வராது. நாமும் யாரையும் நல்லவர் என்று சொல்லவும் மாட்டோம்.

அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் யாருடைய பெயரைக் குறிப்பிட்டு இவர் நல்லவர் என்று சொன்னானோ, அல்லது நபியவர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரைச் சொல்லி, அல்லது குறிப்பிட்ட பண்புகளை, தன்மைகளைச் சொல்லி இவர் நல்லவர் என்று அடையாளம் காட்டினார்களோ அவர்களை அவ்லியா, நல்லவர் என்று சொல்லலாம்.

நாம் ஒருவரை அவ்லியா என்று தீர்மானிப்பதாக இருந்தால் குர்ஆனில் அவர்கள் அவ்லியா என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது நபியவர்கள் வஹீயின் அடிப்படையில் ஒருவரை நல்லவர் என்று சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால் மட்டுமே அவர்களை அவ்லியா என்று சொல்லலாம்.

நபியவர்களுடைய காலத்திற்கு பிந்தி உள்ளவர்களை நாம் அவ்லியா என்று தீர்மானிக்கக்கூடாது. யாரெல்லாம் அவ்லியா, இறைநேசர் என்பதை நபியவர்கள் நமக்கு சொல்லித் தந்து விட்டார்கள். நபியவர்களுடைய காலத்திற்குப் பின்னால் ஒருவர் இறைநேசராக இருந்தாலும் அது நமக்கு தெரியாது என்பதை தெளிவாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதல் முதலில் (இறைவழியில் உயிர் துறந்த) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் “நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், “நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் “நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போரிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டதுஎன்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர் முகங்குப்புறவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.

பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ், தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் “நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் “நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் “நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டதுஎன்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்குப்புறவிழ இழுத்துச் செல்லும் படி ஆணையிடப்படும்.

அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், “நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் “நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லைஎன்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் “நீ பொய் சொல்கிறாய். வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டதுஎனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்குப்புற விழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும்.

நூல்: முஸ்லிம் 3527

உயிர்த் தியாகம் செய்தவரை சொர்க்கவாசி என்று நாம் அனைவரும் நினைத்திருப்போம். அவரும் நாம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டிருக்கிறோம்; அல்லாஹ்விற்காகத் தான் உயிரைத் தியாகம் செய்திருக்கிறோம் என்று நினைத்திருப்பார். ஆனால் அல்லாஹ், “உன்னுடைய உள்ளம் தூய்மையாக இல்லை. நாம் கொல்லப்பட்டால் வரலாற்றில் இடம்பிடிப்போம், நமது பெயர் நிலைத்து நிற்கும், நம்மை தியாகி என்று மக்கள் பாராட்டுவார்கள் என்பதற்காகத் தான் இதை செய்தாய்’ என்று அவரை நிராகரிதத்து விடுவான்.

உயிரைத் தியாகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உலகத்தில் மனிதன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொத்து, சுகம் என்று எதையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறான். உயிரை விடுவதற்கு யாரும் அவ்வளவு எளிதாக முன்வரமாட்டார்கள்.

ஆனால் தன்னுடைய உயிரையும் தியாகம் செய்த ஒருவருடைய நிலை மறுமையில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உள்ளம் தூய்மையாக இல்லாத காரணத்தினால் இவர் அல்லாஹ்விடத்தில் இறைநேசர் என்னும் சிறப்பை அடைய முடியாதவராக ஆகிவிட்டார். நம்முடைய பார்வையில், நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்து, பதவி இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காமல் போய்விட்டது. இன்று நாம் யாரையெல்லாம் அவ்லியா, இறைநேசர் என்று சொல்கிறோமோ அவர்கள் இந்த உயிர்த் தியாகிக்குச் சமமாவார்களா?

ஆக, உலகத்தில் நாம் நல்லவர், அறிஞர், மகான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் எண்ணம் சரியாக இருக்கிறதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. மறுமை நாளில் தாம் செய்த செயலுக்கு நற்பேறு கிடைக்குமா என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. நாம் உயிர்த் தியாகம் செய்து விட்டோம். கற்றறிந்த கல்வியின் மூலமாக மக்களை நேர்வழிப்படுத்தினோம். பிறருக்கும் கற்றுக் கொடுத்தோம். நல்லவற்றிற்காக தான, தர்மங்கள் வழங்கினோம். அதனால் நமக்கு அல்லாஹ்விடத்தில் பரிசு கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு என்ன நிலை என்பதை இந்தச் செய்தியின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?

ரியாஸ்

பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பெயர் சூட்டும் போது இந்த ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆனால் மாற்று மதத்தில் உள்ளவர்கள் அவர்களது நம்பிக்கை அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்கள். இஸ்லாமிய அடிப்படையில் பார்த்தால் அவை தவறான பெயர்களாக இருக்கும். இவ்வாறு தவறான அர்த்தம் தரும் பெயர் கொண்டவரை அவருடைய பெயரைக் கூறி அழைப்பது தவறல்ல.

ஏனென்றால் பிறருடைய பெயரை நாம் குறிப்பிடும் போது அவர் அந்தப் பெயருக்குப் பொருத்தமானவராக இருக்கின்றாரா? அந்த பெயரில் சரியான அர்த்தம் உள்ளதா? என்று யாரும் பார்ப்பதில்லை.

ஒருவருடைய பெயரை நாம் குறிப்பிட்டால் அந்தப் பெயரில் உள்ள அர்த்தத்தை நாம் அங்கீகரித்து விட்டோம் என்று பொருள் அல்ல. பெயர்களைப் பொறுத்தவரை அது நபர்களைக் குறிப்பிடப் பயன்படும் அடையாளச் சொல் என்ற அடிப்படையில் தான் அதைக் கூறி வருகின்றோம்.

மோசடி செய்யபவனுக்கு அமீன் (நம்பிக்கைக்குரியன்) என்று பெயர் இருக்கும். இவனைப் பற்றித் தெரிவிக்கும் போது “அமீன் மோசடி செய்து விட்டான்’ என்று கூறுவோம். இவ்வாறு கூறுவதால் இவன் நேர்மையானவன் என்று நாம் அங்கீகரித்து விட்டதாகப் புரிந்து கொள்ள மாட்டோம்.

இதே போன்று ஒருவன் நாத்திகனாக இருப்பான். அவனுடைய பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்று இருக்கும். இவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டான் என்ற அர்த்தத்தில் இவனை அப்துல்லாஹ் என்று யாரும் அழைப்பதில்லை.

அவரவருக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளதோ அதைக் கூறித் தான் அடையாளம் சொல்ல முடியும். எனவே ஒருவனுக்குத் தவறான பெயர் வைக்கப்பட்டிருந்தால் அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது குற்றமாகாது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பலருக்குத் தவறான பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெயராலேயே அவர்களை அழைத்து வந்தார்கள்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அடிமை என்ற பொருள் தரும் பெயரை வைக்கக் கூடாது. ஆனால் நபிகள் நாயகத்தின் பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிப் ஆகும். இதன் பொருள் முத்தலிபின் அடிமை என்பதாகும். முத்தலிப் என்பது அல்லாஹ்வின் பெயர் இல்லை. இவ்வாறு முஸ்லிம்கள் பெயர் வைக்கக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் நபியாவேன். இதில் பொய்யில்லை. நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன்” என்று கூறியுள்ளனர்.

பார்க்க: புகாரி 2864, 2874, 2930, 3042, 4315, 4316

அவர்களின் பாட்டனார் பெயர் தவறானது என்றாலும் அவரது பெயரை அப்படியே சொன்னால் தான் அது அவரைக் குறிக்கும் என்பதால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல் உஸ்ஸா (உஸ்ஸாவின் அடிமை) அப்து ஷம்ஸ் (சூரியனின் அடிமை) போன்ற பெயர்கள் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமானவை. இந்தப் பெயர்களைக் கொண்ட நபர்களை அந்தப் பெயரைச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் அழைத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான்; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி), நூல்: முஸ்லிம் 5269

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் இந்த (26:214) இறைவசனம் அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு, “கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 348

“அப்து ஷம்சின் மக்களே’ என்றால் சூரியனுக்கு அடிமையானவனின் மக்களே என்று அர்த்தம்.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் இது மாதிரியான தவறான அர்த்தம் கொண்ட பெயர்களைச் சூட்டியிருந்தால் அந்தப் பெயர்களை மாற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இத்தகைய பெயர்களை வைத்திருந்தால் அவர்களை மாற்றச் சொல்ல முடியாது என்பதால் அந்தப் பெயர்களாலேயே அவர்களை அழைத்து வந்தார்கள். எனவே மாற்று மதத்தினரின் பெயர்களைக் கூறி அழைப்பது தவறல்ல.

இது போல் சில ஊர்களின் பெயர் அல்லது தெருக்களின் பெயர் இணை கற்பிக்கும் அர்த்தம் கொண்டதாக இருக்கும். அந்த ஊரின் பெயர் அதுதான் என்றால், அந்தத் தெருவின் பெயர் அதுதான் என்றால் நாமும் அப்படித் தான் குறிப்பிட வேண்டும்.

கிருஷ்னன் கோவில் என்று ஒரு ஊர் இருந்தால் அப்படித்தான் கூற வேண்டும். அப்படி ஒரு கோவில் இருந்தால் அதை அப்படியே தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னதால் நாம் கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக் கொண்டோம் என்று ஆகாது. மற்றவர்கள் பெயர்களைப் பயன்படுத்துவதில் மட்டும் இஸ்லாம் விதி விலக்கு அளித்துள்ளது என்பதை மேற்கண்ட ஆதாரத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மார்க்கத்தில் தராவீஹ் என்று ஒரு தொழுகை இல்லை. இதை நாம் விமர்சிக்கும் போது தராவீஹ் 20 ரக்அத்தா என்று கூறுவோம். இதனால் நாம் தராவீஹ் தொழுகையை ஏற்றுக் கொண்டோம் என்று ஆகாது, மக்கள் எப்படிக் குறிப்பிடுகிறார்களோ அப்படிக் குறிப்பிட்டால் தான் நாம் அதைப் பற்றிப் பேசுகிறோம் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.

? பேரணி, ஆர்ப்பாட்டம் என முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா? என்று தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு நீக்கப்பட்டவர்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்புகின்றார். இதற்கு என்ன பதில் கூறுவது?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் இக்கேள்வியைப் பரப்புவோரின் பச்சை நயவஞ்சகத்தனத்தை நாம் எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.

முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த கேள்வி தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான கேள்வியா? அல்லது அனைத்து இயக்கங்களுக்கான கேள்வியா?

தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் (ஒரு இயக்கம் தவிர) தாங்கள் நடத்தும் போராட்டங்களில் பெண்களைப் பங்கேற்கச் செய்து வருகின்றனர். தமுமுக, ஜமாஅதே இஸ்லாமி, மமக, விடியல் குரூப், முஸ்லிம் லீக், தேசிய லீக், உள்ளிட்ட எல்லா இயக்கங்களும் போராட்டத்தில் பெண்களைப் பங்கெடுக்கச் செய்கின்றன.

இது போல் பெண்கள் கலந்து கொண்ட சில இயக்கங்களின் போராட்டங்களை ஜமாஅதுல் உலமா சபையும் ஆதரித்து பங்கு கொண்டுள்ளன.

கப்ரு வணங்கிக் கூட்டமான ஜமாலி குரூப் மட்டுமே பெண்களைப் போராட்டத்தில் பயன்படுத்துவது கூடாது என்று கூறுகிறது. ஆனால் தர்ஹாக்களில் ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வதை இவர்கள் கண்டிப்பதில்லை.

இக்கேள்வியைக் கேட்பவர் கப்ரு வணங்கிக் கூட்டத்தில் உள்ளவர் என்றால் தனது நம்பிக்கைக்கு ஏற்ப இக்கேள்வியைக் கேட்டுள்ளார் என்று கருதலாம். அவ்வாறு இல்லாவிட்டால் அனைவரும் ஆதரித்து நடைமுறைப்படுத்தும் ஒரு காரியத்தை தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கேட்டால் கேட்பவர் நயவஞ்சகர்களில் ஒருவர் என்பது தெளிவு.

இவர் கப்ரு வணங்கியாக இருந்து பெண்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது கோபத்தை ஏற்படுத்தினால் அனைத்து இயக்கங்களும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று இவர் கேட்டிருப்பார். இவர் அப்போஸ்தலர் பவுல் போல் ஒரு கடைந்தெடுத்த கபடதாரி என்பதால் தான் மற்ற எந்த இயக்கத்தின் செயல்களும் இவரது கண்களுக்குத் தெரியவில்லை.

பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம் கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டு வரலாம் என்பது பொதுவான அனுமதி. இதற்கு நபிவழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பெருநாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள மேலங்கி இல்லையே! (அவள் என்ன செய்வாள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்!என்றார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),  நூல்: புகாரி 351

இவர்களின் வாதப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைக் காட்சிக்கு வைத்தார்கள் என்று ஆகுமே? அதுவும் பெருநாள் தினத்தில் புத்தாடை எல்லாம் அணிந்திருப்பார்களே? என்றெல்லாம் இவர்கள் கேட்பார்களா? நபிகள் நாயகத்தின் மீது பழி சுமத்துவதால் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்க முடியும் என்றால் அதையும் செய்பவர்கள் இவர்கள்.

ஐந்து வேளைத் தொழுகையிலும் பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை.

ஆண்களும் பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர். இதனால் கைகளை மனிக்கட்டு வரை வெளிப்படுத்தும் நிலையும் தலையைத் திறக்கும் நிலையும் ஏற்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூ செய்வார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 193

போர்க்களத்திலும் பெண்கள் கலந்து கொண்டு காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும், தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்களைத் தொட்டு தூக்கும் நிலையும் ஏற்படும்.

நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.

என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா) அவரது கணவர் நபி (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.

என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:

(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!என்று சொன்னார்கள்.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது, “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா?” என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். ஆம்! நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்என்று சொன்னார்கள். உம்மு அத்திய்யா, நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதேல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.

வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள்என்றார் உம்மு அத்திய்யா (ரலி)

(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், “மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்தலிஃபா, போன்ற) இன்னின்ன இடங்களுக்கும் செல்வதில்லையா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸா பின்த் சீரீன்

நூல்: புகாரி 351, 979, 1250, 1953

சபைகளில் கேள்வி கேட்பதற்காகப் பெண்கள் வந்து நபிகள் நாயகத்திடம் கேள்வியும் கேட்டனர். அதைப் பல ஆண்களும் பார்த்தனர்.

ஹஜ் பயணத்தின் போது ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். அப்போது பெண்கள் ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர்.

(விடைபெறும்ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபழ்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபழ்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) “கஸ்அம்குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபழ்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபழ்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபழ்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அப்போது அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 6228

இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அறிவுடையோருக்கு இது போதுமானதாகும்.

மேற்கண்ட கேள்வியில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசக அமைப்பைப் பற்றியும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.

கேள்வி கேட்கும் போது இது கூடுமா என்று கேட்பது ஒருவகை. பெண்களைக் காட்சிப் பொருளாக்கலாமா? என்று கேட்டிருப்பது கேட்டவரின் வக்கிர புத்தியையும், தவ்ஹீத் ஜமாஅத் மீது உள்ள வெறுப்பின் காரணமாக சமுதாயப் பெண்களைக் காட்சிப் பொருள் என்று வர்ணிக்கும் கேவலப் போக்கையும் நாம் கண்டு கொள்ள முடியும்.

ஒரு செயலைக் குறை கூறி ஒருவர் கேள்வியைக் கேட்கிறார் என்றால் அந்தச் செயலை அவர் செய்யாமல் இருக்க வேண்டும்.

கேள்வி கேட்டவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றூலாத் தலங்களுக்கோ செல்வாரா? இல்லையா? செல்வார் என்றால் உங்கள் மனைவியைப் பலருக்கும் காட்சிப் பொருளாகக் காட்டலாமா? என்ற கேள்வி இவரை நோக்கித் திரும்புமே?

தனது மனைவி மற்றும் குடும்பப் பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிப்பாரா? இல்லையா? அனுமதிப்பார் என்றால் அப்போது பலரும் அவர்களைப் பார்க்கும் நிலை ஏற்படாதா? இதே கேள்வியைத் தனக்கெதிராக அவர் கேட்டுக் கொள்ளட்டும்.

முறையாக ஆடை அணிந்து இவரது குடும்பத்துப் பெண்கள் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்வார்களா? இல்லையா? செல்வார்கள் என்றால் பலரது பார்வையில் படுவார்களா? இல்லையா? மேற்கண்ட அதே கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளட்டும்.

பெரிய கூட்டங்களில் பெண்கள் மீது படும் பார்வையை விட ஓரிரு பெண்கள் மீது பார்வை கூர்மையாகப் படுமே அது பரவாயில்லையா?

இதில் கேள்வி கேட்பவரின் கொள்கை தான் என்ன?

மார்க்க அடிப்படையில் ஒன்றைக் கூடாது என்ற கருத்தை விதைப்பவர் அதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் தான் முன் வைக்க வேண்டும். நாம் ஆதராத்தை முன் வைத்து விட்டோம். கெட்ட நோக்கத்தில் கேள்வி கேட்டவர்கள் தமது ஆதாரங்களை எடுத்து வைக்கட்டும்.

—————————————————————————————————————————————————————-

முஸ்லிம்களைக் குறிவைக்கும்  திரைப்படங்கள்

ஓர் இனத்தை அல்லது ஒரு சமுதாயத்தை அழிக்க வேண்டுமாயின் ஒட்டுமொத்தமாக அந்த இனத்தின் மீது தாக்குதல் தொடுத்து அழித்துவிட முடியாது. ஒரேயொரு இரவில் அல்லது ஒரு பகலில் அந்த இனத்தை ஒழித்துவிட முடியாது. அதற்கென்று ஆழமான, அழுத்தமான சதித் திட்டம் தீட்டப்பட வேண்டும். அப்படிப்பட்ட சதித் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கள் மீது பிற சமுதாய மக்களிடம் பகையை ஊட்டுவதாகும்.

கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் நடந்த போர்களை மக்களுக்கு மத்தியில் ஒரு கருவியாகப் பயன்படுத்துதல்.

உண்மையில் இந்தப் போர்கள் மத ரீதியில் நடைபெற்றவை அல்ல! அவை நாடு பிடிக்கும் ஆசையில் நடந்தவை! அவற்றைத் திரித்து, கூட்டிக் குறைத்துச் சொல்லி அதன் மூலம் பகைமை நெருப்பை மூட்டுதல்.

இந்த யுக்தியை சங்பரிவார அமைப்புகள் நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பாபரி மஸ்ஜிதைக் குறிப்பிடலாம்.

இந்தியாவுக்குப் படையெடுத்து வந்த பாபர் அயோத்தியில் உள்ள கோயிலை இடித்துத் தான் பள்ளிவாசலைக் கட்டினார் என்ற ஒரு பொய்யைச் சொல்லி முஸ்லிம்கள் மீது வெறுப்பெனும் நெருப்பேற்றி ஓரளவு வெற்றியும் கண்டு விட்டனர்.

இதுபோன்ற சதித் திட்டங்களிலும் தீய யுக்திகளிலும் உள்ள ஒன்று தான் ஊடகங்களின் மூலம் முஸ்லிம்கள் மீது பகையை வளர்ப்பது!

இதுவரை நீண்ட நாட்களாக அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் போன்றவை ஏதாவது குண்டு வெடிப்பு, கொலைகள் நடந்து விட்டால் அதைப் பயன்படுத்தி முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூட்டத்திற்குக் கூட்டம் இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததன் விளைவாக ஊடகங்களில் அது ஓரளவு குறைந்திருக்கின்றது.

ஆனால் திரைப்படங்களில் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டி படம் எடுப்பது நிற்கவில்லை. இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு துப்பாக்கி என்ற திரைப்படம்.

இப்படத்தில் நடித்த விஜய் என்பவன் ஒரு கிறித்தவன். அவனது தந்தை சந்திரசேகர் என்பவனும் ஒரு கிறித்தவன். இஸ்லாத்தை அழிப்பதற்கு உலக அளவில் முன்னணியில் நிற்பது கிறித்தவப் பாதிரியார்கள் தான். இதை சமீபத்தில் வெளியான இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் என்ற திரைப்படத்தின் வாயிலாகக் கண்டோம். அதே யுக்தியில், கிறித்தவப் பாதிரிகளின் பின்னணியில், முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும், நாட்டுக்குத் துரோகம் செய்யும் தேச விரோதிகளாவும், இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டே இந்தியாவை அழிக்க வேலை செய்யும் பயங்கரவாதிகளாகவும் துப்பாக்கி என்ற படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வந்தவுடன் முஸ்லிம்கள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களை விஜயின் தந்தை சந்திரசேகர், இயக்குனர் முருகதாஸ், படத் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் சந்தித்து வடித்த நீலிக் கண்ணீரில், நடித்த நாடகத்தில் அவர்கள் ஏமாந்து, “இப்படிப்பட்ட உத்தமர்களா?” என்று வியந்து போய் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சில காட்சிகளை பெயரளவுக்கு நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். வந்தவர்கள் உண்மைக்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாத சினிமாக்காரர்கள் என்பதும், நடித்து யாரையும் ஏமாற்றும் எத்தர்கள் என்பதும் இந்த இயக்கத் தலைவர்களுக்கு  எப்படித் தெரியாமல் போனது?

நீக்குவது என்றால் முஸ்லிம் சமுதாயத்தைத் தீவிரவாதிகளாகக் காட்டும் எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பதை, காட்சிகள் நீக்கப்பட்ட தற்போதைய படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

படம் வெளியாகி வசூல் வேட்டை முடிந்து விட்ட நிலையில் போராட்டம் நடத்தினால் அந்த அயோக்கியர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி, போதுமான அவகாசத்தை எடுத்துக் கொண்டார்கள்.

அந்தப் படத்திலுள்ள ஆட்சேபமான காட்சிகளை நீக்கி விட்டனர் என்று தவ்ஹீத் ஜமாஅத்திடம் கூறி, போராட்டம் நடத்த வேண்டாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகன் ஆகிய மூன்று அயோக்கியர்களுக்கும் வலிக்கக் கூடாது; நட்டம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது போல் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் கடுமையான உறுதிப்பாட்டை இவர்களால் காட்ட முடியாது என்றால் இது போன்ற பிரச்சனைகளில் தலையைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்ளுமாறு விட்டிருக்க வேண்டும்.

1995ஆம் ஆண்டு பம்பாய் திரைப்படம் இதுபோன்ற ஒரு விஷத்தைக் கக்கியது. அப்போது தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர்கள் மேடை தோறும் பம்பாய் பட இயக்குனர் மணிரத்னம் என்ற பார்ப்பனரின் விஷமத்தை விலாவாரியாக மக்களிடம் விவரித்து தோலுரித்துக் காட்டினர்.

அதன் ஒரு அம்சமாக அல்ஜன்னத் மாத இதழில் பம்பாய் படத்திற்கு எதிரான கட்டுரை வெளியாகியிருந்தது. புதிய ஜனநாயகம் என்ற பத்திரிகையில் வெளியான பம்பாய் பட விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்தக் கட்டுரை பார்ப்பனிய நரித்தனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டியது.

அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

பார்ப்பன சூழ்ச்சியும் பம்பாய் திரைப்படமும்

மேற்குக் கரையின் கடலும் மலையும் சங்கமிக்கும் தனது திருநெல்வேலி கிராமத்திற்கு பம்பாயிலிருந்து வருகின்றான் சைவப்பிள்ளை கதாநாயகன். எதிர்பாராமல் வீசிய காற்றில், எதிர்பாராமல் விலகிய பர்தாவினுள் தென்பட்ட கதாநாயகியை எதிர்பார்த்தபடி காதலிக்கின்றான்.

இரு தரப்புப் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நாயகியை பம்பாய்க்கே வரவழைத்துத் திருமணம் செய்து கொண்டு இரட்டைக் குழந்தைகளும் பெற்றுக் கொள்கிறான். மூன்றாவது குழந்தைக்கு டூயட் பாடிக் கொண்டிருக்கும் போது பாபரி மஸ்ஜித் பிரச்சனை குறுக்கிடுகின்றது.

பெற்றோர்களின் இடையூறையும் சமூகத்தின் இடையூறையும் கடந்து பம்பாய் வந்து சேரும் காதலர்களை நிம்மதியாக வாழவிடாமல் தோன்றுகின்றது இன்னொரு இடையூறு, கலவரம்.

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட பம்பாய் கலவரத்திற்கு மணிரத்னம் வழங்கியிருக்கும் அந்தஸ்து இது தான்.

“ஒரு முஸ்லிம் பெண்ணை இந்துப் பையன் காதலிப்பதா? என்று சில முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். இது சிறுபிள்ளைத்தனமானது” என்று ரொம்பவே பெருந்தன்மையாகப் பேசியிருக்கிறார் பால்தாக்கரே. கதாநாயகன் முஸ்லிமாகவும் நாயகி இந்துவாகவும் இருந்திருந்தால் அப்போதல்லவா தாக்கரேயின் பெருந்தன்மையைப் பார்க்க வேண்டும்.

ஆட்சியதிகாரத்திலிருந்த முகலாய மன்னர்கள் இராஜபுத்திரப் பெண்களை மணந்து கொண்டதை இந்துப் பெருமிதத்திற்கு நேர்ந்த இழுக்காக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கருதும் போது, தற்போது அரசியல் சமூக அரங்குகளில் இந்து மத வெறியர்களால் நசுக்கப்படும் முஸ்லிம்கள் இவ்வாறு கருதுவதில் வியப்பில்லை.

மதம் மீறிய காதலை மறுக்கும் மதப் பண்பாட்டிலிருந்து மதவெறி தோன்றுவதில்லை. மதம் மீறிய திருமணங்கள் மட்டுமே அதை ஒழிக்கப் போவதுமில்லை. மதவெறியின் பின்னணியில் இருப்பது அரசியல்.

அந்த வகையில் பம்பாய் கலவரத்தைத் தூண்டிய அரசியல் சக்திகள் யார்? அந்த அரசியலைப் பற்றிய தனது கருத்து என்ன என்பதை இயக்குனர் சொல்ல வேண்டும். அதைச் சொல்லக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருக்கிறார் இயக்குனர்.

“அயோத்தியில் கோயில் கட்டக் காசு கொடு” என்று வீட்டுக்கு வந்து கேட்கிறார்கள் இந்து மதவெறியர்கள். அதிர்ந்து பின்வாங்குகிறாள் கதாநாயகி. கதாநாயகன் உடனே அவர்களைத் தள்ளிக் கொண்டு போய் மனைவி கண்ணில் படாமல் காசு கொடுத்தாரா? மசூதியை இடிப்பது அநீதி என்று வாதாடினாரா? தெரியாது. உடனே வேறு காட்சிக்கு மாறுகிறார் மணிரத்னம்.

நடுவீதியில் நின்று ஊருக்கு உபதேசம் செய்யும் கதாநாயகனை அந்தக் காட்சியில் மணிரத்னம் ஊமையாக்கியது ஏன்? மசூதியை இடிப்பது குற்றம் என்ற ஒரு வார்த்தையைக் கூட வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் வேறு எதைப் பிடுங்குவதற்கு இந்தப் படம்?

தன் பெற்றோரை இழிவுபடுத்தும் மாமனாரின் கடிதத்தைக் கண்டு சீறும் கதாநாயகி, தன் மதத்தினர் புழு பூச்சிகளைப் போல் கொல்லப்படுவது ஏன்? என்று ஒரு கேள்வியை மட்டும் கணவனிடம் கேட்கவில்லை.

வீடு எரிகிறது; பெற்றோர் எரிகிறார்கள்; பிள்ளைகள் காணாமல் போகிறார்கள்; ஊரே எரிகிறது. ஆனால் அந்த உத்தம பத்தினியோ (கதாநாயகி) “ஏன் இந்தக் கலவரம்?” என்று ஒரு கேள்வியை மட்டும் தன் காதல் கணவனிடம் கேட்கவேயில்லை.

ஏன் என்று குழந்தையின் வாயால் கேட்க வைத்து, ஒரு அலியின் வாயால், தெரியவில்லை என்று பதில் சொல்கிறார்.

குற்றவாளி யார்? என்ற கேள்விக்கு வசனத்தில் பதில் சொல்ல வேண்டிய இடங்களிலெல்லாம் வாயை மூடிக் கொண்ட மணிரத்னம் கலவரக் காட்சிகளின் சித்தரிப்பில் தன் கைவரிசையைக் காட்டுகிறார்.

அமைதியான ரதயாத்திரை கலவரம் செய்யும் முஸ்லிம்கள்

நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களைக் காவு கொண்ட ரத யாத்திரை திரையில் அமைதியாகப் போகின்றது. அப்போது தெருவில் நிற்கும் கதாநாயகியின் முகத்தில் அனாவசியக் கலவரம் படர்ந்தாலும் ஊர்வலத்தில் போகின்ற எழுச்சி பெற்ற இந்துக்கள் அவளைச் சீண்டிக்கூடப் பார்க்காமல் ஆர்.எஸ்.எஸ்.க்கே உரிய கட்டுப்பாட்டுடன் செல்கின்றனர். எனில் அத்வானியின் டொயோட்டோ ரதச் சக்கரங்களில் நசுங்கியவை முஸ்லிம் தலைகளா? எலுமிச்சங்காய்களா?

பாபரி மசூதி இடிப்பு என்ற மிருகத்தனமான கொலை வெறியாட்டமோ உணர்ச்சியற்ற தலைப்புச் செய்திகளாக ஓடுகின்றது.

“யா அல்லாஹ்” என்ற பெருங்கூச்சலுடன் திரை உயிர் பெறுகின்றது. வெறி கொண்ட முஸ்லிம்கள் கடைகளைத் தாக்குகின்றனர். போலீசைத் தாக்குகின்றனர். கலவரக்காட்சி முதன்முதலாகத் திரையில் இப்படித் தான் துவங்குகின்றது.

பம்பாய் உள்ளிட்ட, நாடு முழுவதும் நடந்த முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களின் மூல காரணமான பாபர் மசூதி விவகாரத்தை, குழந்தையாயிருக்கும் கதாநாயகன் வாலிபனாகி விட்டான் என்று சக்கரத்தைச் சுழல விட்டுக் காட்டுவது போல் ஓட விடுகிறார் மணிரத்னம். இதன் மூலம் டிசம்பர் 6க்கு முன்னால் இந்து மதவெறியர்கள் திட்டமிட்டு நடத்திய காலித்தனங்களையெல்லாம் தனது கத்தரிக்கோலால் எடிட் செய்து விடுகிறார்.

காட்சிகளைத் தொகுத்துத் தருகின்ற முறையில், கலவரத்தைத் துவங்கிய குற்றம் முஸ்லிம்களின் மீது சுமத்தப்படுகின்றது. கலவரத்தைச் சித்தரிப்பதில் கூட, திரும்பத் திரும்ப வருகின்ற கும்பல்கள் மோதும் காட்சிகளில் தான் இந்து மதவெறியர்களின் தாக்குதல் காட்டப்படுகின்றது.

ஆனால் மனதில் பதியத்தக்க குறிப்பான வன்முறை நடவடிக்கைகளிலும், நெருக்கமான குளோசப் காட்சிகளிலும் முஸ்லிம்கள் நடத்தும் தாக்குதல் காட்டப்படுகிறது. மனதில் பதியக்கூடிய கலவரம் பற்றிய காட்சிப் படிமங்களை ஒப்பீடு செய்து பார்த்தால் அவற்றில் 80 சதவிகிதம் முஸ்லிம்களையே குற்றவாளிகளாக்குகின்றன.

ஜனவரி 5ஆம் தேதி, இரண்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட செய்தி படத்துடன் காணப்படுகின்றது. தொழிற்சங்கத் தகராறில் நடந்த கொலைக்கு மதச் சாயம் பூசி, பத்திரிகையில் தலையங்கம் எழுதி படுகொலையைத் துவக்கியது சிவசேனா தான் என்ற உண்மை காட்டப்படவில்லை.

மசூதி இடிப்பிற்குப் பின் முஸ்லிம்கள் தான் கலவரம் செய்தார்கள் என்று காட்டிய மணிரத்னம், ஜனவரி 6ஆம் தேதி சாம்னா பத்திரிகையில் தலையங்கம் எழுதி அதிகாரப்பூர்வமாகக் கலவரத்தைத் துவக்கிய தாக்கரேயைக் குற்றம் சாட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

முஸ்லிம்களிடம் அடிவாங்கும் போலீஸ்

“பம்பாய் போலீஸ் சிவசேனாவின் அடியாள் படையாகச் செயல்பட்டது” எனக் குற்றம் சாட்டினார் வழக்கறிஞர் பல்கிவாலா. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்.

ஆனால் மணிரத்னம் காட்டும் கலவரக் காட்சிகளில் முஸ்லிம்கள் போலீசைத் தாக்குகின்றார்கள். ஒரு வண்டிக்குத் தீ வைத்து போலீசின் மேல் தள்ளி விடுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றிரண்டு சம்பவங்கள் கூட நரவேட்டையாடிய போலீசிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தான். ஆனால் தற்காப்பு நிலையில் போலீஸ் இருந்ததாகக் கீழ்க்கண்ட காட்சி மூலம் கூறுகிறார் இயக்குனர்.

“செத்தவர்களில் 35 பேர் அப்பாவிகளாயிற்றே! ஏன் முழங்காலுக்கு மேல் சுட்டீர்கள்?” என்று கதாநாயகன் போலீஸ் அதிகாரியைக் கேட்கிறான். “எங்களையே கொல்ல வரும் கூட்டத்திலிருந்து (அதாவது முஸ்லிம்களிடமிருந்து) நாங்கள் தற்காத்துக் கொள்வது எப்படி? இந்தத் தொழிலின் மீது உங்களுக்கு மரியாதையே இல்லையா?” என்று மடக்குகிறார் போலீஸ் அதிகாரி. உடனே, “என் குழந்தையைக் காப்பாற்றிய தெய்வமே” என்று போலீசின் காலில் விழுகிறார் நிருபரான கதாநாயகன்.

அப்பாவி இந்துவின் அவலம்

தூரத்தில் முஸ்லிம் மதவெறியர்கள் வருவதைக் கண்ட பேரன் தாத்தாவின் நெற்றிப் பொட்டை அழிக்கிறான். இந்து நாட்டில் பொட்டு வைக்கக் கூட முடியாத நிலையில் ஒரு வயதான அப்பாவி இந்துவின் அவலம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

பிறிதொரு காட்சியில் தீப்பிடித்து எரியும் வீட்டிலிருந்து கதாநாயகியின் பெற்றோரைக் காப்பாற்றி விட்டுத் தன் உயிருக்கும் அஞ்சாமல் அவருடைய குர்ஆன் நூலை கதாநாயகனின் தந்தை (இந்து) பத்திரமாக எடுத்துச் செல்லும் போது இந்துவின் பெருந்தன்மை நிலைநாட்டப்படுகின்றது.

தனது மதச் சின்னத்தைக் கூட நெற்றியில் வைத்துக் கொள்ள அனுமதிக்காத முஸ்லிம்களின் வெறி! அவர்களது மத நூலையும் காப்பாற்றும் இந்துவின் பெருந்தன்மை!

மசூதிக்குள் புகுந்து மவ்லவியையும், தஞ்சமடைந்திருந்த அப்பாவி முஸ்லிம்களையும் வேட்டையாடிய சிவசேனா இந்துக்களின் கொலைவெறி? அந்த உண்மைச் செய்தியை பழைய பேப்பர் கடையில் தான் தேடிப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் கொள்ளி வைக்கிறான்! எரிகிறது இந்து வீடு!

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ரொம்பாடா என்ற குடிசைப் பகுதியைச் சுற்றியுள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களின் மேலிருந்து தீப்பந்தங்களையும் பெட்ரோல் குண்டுகளையும் எறிந்து அந்தச் சேரியையே சாம்பலாக்கினர் சிவசேனா குண்டர்கள்.

மசூதிக்குள் நுழைந்து மவ்லவியைக் கொன்றனர். முஸ்லிம் ராணுவச் சிப்பாய் ஒருவரின் வீட்டுக் கூரையைப் பிரித்து கொள்ளையடித்து தீ வைத்தனர். உயிருடன் எரிக்கப்பட்ட 17 முஸ்லிம்களின் படத்தைத் தனது பத்திரிகையில் வெளியிட்டு மகிழ்ந்தார் பால்தாக்கரே.

ஆனால் மணிரத்னமோ, ஜோகேஸ்வரி என்ற பகுதியில் ஒரு இந்துவின் வீடு கொளுத்தப்பட்ட விதிவிலக்கான சம்பவத்தைத் தேடிப் பிடிக்கிறார். இந்து வீடென்று தெரியாமல் போய் விடுமோ என்பதற்காகக் கதவில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருக்கின்றது. கேமரா அதை நெருக்கமாகக் காண்பிக்கின்றது. பிறகு முஸ்லிம்கள் அதை வெளிப்புறமாகத் தாளிடுவதையும் வீட்டுக்குத் தீ வைப்பதையும் நிதானமாகப் படம்பிடிக்கிறது. இச்செயலின் குரூரத்தை உணர்த்த இதுவும் போதாதென்று கருதும் மணிரத்னம், தீப்பிடித்த வீட்டிற்குள் அகப்பட்டுக் கொண்ட ஒரு ஊனமுற்ற சிறுமியின் தவிப்பையும் காட்டி, இந்து ரசிகர்களின் கோபத்தை விசிறி விடுகின்றார்.

கதாநாயகனின் குழந்தைகளை மண்ணெண்ணை ஊற்றிக் கொளுத்த முயலும் கும்பல், “சொல் நீ இந்துவா? முஸ்லிமா?” என்று திரும்பத் திரும்பக் கேட்கிறது.

ஆனால் உண்மையில், “நான் இந்து’ என்று சொன்னவுடன் யாரையும் விட்டுவிடவில்லை சிவசேனா குண்டர்கள். உள்ளாடையைக் களைந்து சுன்னத் செய்திருக்கிறானா என்று பார்த்துக் கொன்றார்கள். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால் மணிரத்னமோ அந்தக் கொலையாளிகளின் மத அடையாளம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

யா அல்லாஹ்… கோயபல்ஸ் தோற்றான்

கோயபல்ஸ் வேலையின் சிகரமாக வருகின்றது கடைசிக் காட்சி. இந்து வெறியர்களை இந்துக்களும் முஸ்லிம் வெறியர்களை முஸ்லிம்களுமே எதிர்த்து விரட்டுகிறார்கள். இந்து மதத் தலைவரின் (பால்தாக்கரே) கார் வருகின்றது. பிணக்காடாகக் காட்சியளிக்கும் தெருவைப் பார்த்து மேல் துண்டால் மூக்கைப் பொத்துகிறார். லேசான துயரம் அவர் முகத்தில் தோன்றி மறைகிறது.

அடுத்து அழுகுரல் ஒலிக்கும் ஒரு தெருவிற்குள் முஸ்லிம் மதவெறித் தலைவர் இறங்கி நடக்கிறார். காயம் பட்டுக் கிடக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தையைப் பார்த்தவுடன், “யா அல்லாஹ்” என்று கதறுகிறார். உடனே, “போதும், போதும் (பஸ், பஸ்) என்று தன் கையை உயர்த்துகிறார்.

முதல் காட்சியில், “யா அல்லாஹ்’ என்று கோபக் குரலுடன் முஸ்லிம்கள் கலவரத்தைத் துவக்குகின்றார்கள். இறுதிக் காட்சியில் “யா அல்லாஹ்’ என்று வருத்தம் தோய்ந்த குரலுடன் கலவரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு தன் ஆட்களுக்கு ஆணையிடுகிறார் முஸ்லிம் மதவெறித் தலைவர்.

கலவரத்துக்குக் காரணமானவர்களே தவறை உணர்ந்து கலவரத்தை முடித்துக் கொள்கிறார்களாம். இது தான் மணிரத்னம் காட்டும் பம்பாய்.

“அடுத்து வருகின்ற சில நாட்கள் நம்முடையவை” என்று தனது பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதி கலவரத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்ததும், “போதும். வெறியர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) உரிய இடத்தை நீங்கள் காட்டி விட்டீர்கள்” என்று எழுதி அதிகாரப்பூர்வமாகக் கலவரத்தை முடித்து வைத்ததும் தாக்கரே தான். ஆனால் இரண்டே காட்சிகள் மூலம் தாக்கரேயின் குற்றத்தை முஸ்லிம்களின் தோள்களுக்கு மாற்றி விட்டார் மணிரத்னம். அதற்காகத் தானே தாக்கரேயின் பாராட்டு.

முஸ்லிம் எதிர்ப்புக் கலவரம் என்று உலகமே கூறிய பம்பாய் கலவரத்தை தனது படத்தின் மூலம் இந்து முஸ்லிம் கலவரமாக மாற்றி விட்டார் மணிரத்னம்.

பம்பாய் முழுநீள கற்பனைப் படமல்ல. நடந்த சம்பவங்களை மட்டும் சித்தரிக்கும் செய்திப் படமுமல்ல. அரை உண்மைகளையும் அற்ப உணர்வுகளையும் கலந்து தயாரிக்கப்பட்ட மசாலா. முழுப் பொய்யை விட அபாயகரமானது அரை உண்மை தான். அரை உண்மைகளை வைத்துக் கொண்டு அரசியல் அரங்கில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்கிறதோ அதையே மதச் சார்பின்மை வேடத்தில் மணிரத்னம் செய்திருக்கின்றார்.

அல்ஜன்னத் மே 1995 இதழில் வெளியான, பார்ப்பன சூழ்ச்சியும் பம்பாய் திரைப்படமும் என்ற கட்டுரையின் சுருக்கமே இது!

பம்பாய் படம் வந்தபோது இதுபோன்ற இயக்கங்களின் கூட்டமைப்புக்கள் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்ய யாரும் இருக்கவில்லை. அப்போது மக்களாகக் கொடுத்த பதிலடிக்குப் பின் மணிரத்னம் இது போன்ற படங்களைப் பற்றிச் சிந்திப்பது கூட இல்லை.

முஸ்லிம்களை இப்படிப் பயங்கரவாதியாகவும் தீவிரவாதியாகவும் சித்தரித்து இயக்குனர்கள் படம் எடுப்பது திரையுலகில் வாடிக்கையாகி விட்டது. அதுபோன்ற திரைப்படங்களில் நடிப்பதும் நடிகர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இப்ராஹீம் ராவுத்தர் என்ற முஸ்லிம் பெயர்தாங்கி மூலம் திரையுலகிற்கு வந்த விஜயகாந்த், அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இதுபோன்ற பாத்திரங்களில் நடித்து முஸ்லிம்களை தேச விரோதிகளாகக் காட்டியுள்ளார்.

அடுத்து, “உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிய கமல்ஹாசன் என்ற பார்ப்பனரின் விஸ்வரூபம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. அந்தப் படத்தின் பெயரை அரபி வடிவத்தில் அமைத்திருப்பதும், அதில் கதாபாத்திரங்கள் முஸ்லிம் தோற்றத்தில் துப்பாக்கிகளுடன் காட்டப்படுவதுமே இது ஒரு முஸ்லிம் விரோதப் படம் என்பதைக் காட்டுகின்றது. எனினும் படம் வெளியான பின் அதில் சொல்லப்பட்ட விஷயங்களைப் பொறுத்து, அதில் முஸ்லிம் விரோதக் காட்சிகள் இருக்குமென்றால் முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பலைகளைப் பதிவு செய்தாக வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு தான் இருக்கும்.

இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் போன்ற சில முஸ்லிம்களைத் தவிர மற்ற முஸ்லிம் சமுதாயத்தினரும், பிற சமுதாயத்தினரும் திரைப்படங்களில் தான் மூழ்கிக் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தத் திரைப்பட ஊடகம் இல்லங்களிலும் மக்களின் உள்ளங்களிலும் ஊடுறுவி இருக்கின்றது.

படிப்படியாக பிற சமுதாயத்தினர் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பகை மற்றும் பழி உணர்வுடன் பார்க்கவும், முஸ்லிம்களை அந்நியப்படுத்தவும் இந்தத் திரைப்படங்கள் ஒரு காரணமாக அமையும். இது பார்ப்பனர்களின், இந்துத்துவா சக்திகளின் சதியும் சூழ்ச்சியும் ஆகும். இதன் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்படும். எனவே இஸ்லாமிய சமுதாயம் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் இந்தத் திரைப்படங்களுக்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும்.

முஸ்லிம்களைக் கருவறுக்கும் திட்டத்தை உள்ளடக்கிய திரைப்படங்களை முஸ்லிம்களே பார்த்து ஆனந்தப் பரவசமடைகின்றனர்.

பொதுவாகவே இன்று நடக்கின்ற கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது இந்தத் திரைப்படங்கள் தான். திரைப்படங்கள் தடை செய்யப்பட்டு விட்டால் இந்தத் தீமைகள் பெருமளவுக்குக் குறைந்து விடும்.

இப்படி தீமைகளின் மொத்த உருவமாக அமைந்துள்ள திரைப்படங்களை முஸ்லிம்கள் பார்த்து ரசிக்கின்றனர். அதன் சிடிக்களை வாங்கி, குறிப்பாக வெளிநாட்டு வாழ் முஸ்லிம்கள் இவற்றை ஊக்குவித்து நம்மை வேரறுக்கும் இந்த வெறியர்களை வாழ வைத்துக் கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை.

இத்துடன் நில்லாமல், நம்மை அழிக்கத் துடிக்கின்ற இந்தக் கோடரிக் காம்புகளுக்கு, கூத்தாடிகளுக்கு முஸ்லிம் பெயர் தாங்கிகள் ரசிகர் மன்றம் அமைப்பது சகிக்கவே முடியாத கொடுமையாகும்.

இதன் பின்னராவது சமுதாயம் திருந்துமா?

—————————————————————————————————————————————————————

இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்வோம்

அப்துந் நாசிர், கடையநல்லூர்

அல்லாஹ்வின் கிருபையால் உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் ஏகத்துவச் சிந்தனை நாளுக்கு நாள்  துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. இறையருளால் இந்ந ஏகத்துவக் கொள்கையின் வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்பவர்கள்  ஏகத்துவவாதிகள் தான்.  இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்கின்ற இந்த சத்தியக் கொள்கை அறியா மக்களிடமும், கொள்கை எதிரிகளிடமும் சென்றடைய வேண்டுமென்றால், மென்மேலும் வளர்ச்சி காண வேண்டுமென்றால் அல்குர்ஆனும், அண்ணல் நபிகளாரின் வாழ்வும் போதிக்கின்ற பண்புகளை கொள்கைச் சகோதரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பண்புகளில் மிக முக்கியமான ஒன்று தான் பிரச்சாரப் பாதையில் சந்திக்கும் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு, மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது. நமக்குத் துன்பம் விளைவித்தவர்களுக்கும் நாம் நன்மையை நாடும் போது நம்முடைய எதிரிகள் கூட  உற்ற தோழராக மாறிவிடுவார். ஆனால் இந்தத் தன்மையை நாம் பெறுவதென்பது இறைவன் நமக்கு செய்யும் பெரும் பாக்கியம் தான்.

இதோ திருமறைக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41:34, 35

இறை நம்பிக்கையாளர்கள், தீங்கிழைப்போருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதையும், மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் திருமறைக் குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்துகிறது.

நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் 23:96

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 24:22)

பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!  (அல்குர்ஆன் 7:199)

யுக முடிவு நேரம் வந்தே தீரும். எனவே அழகிய முறையில் அவர்களை அலட்சியப்படுத்துவீராக!  (அல்குர்ஆன் 15:85)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதையும், அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து விட வேண்டும் என்பதையும் நமக்குப் போதிக்கின்றன. ஏகத்துவப் பிரச்சாரக் களத்தில் இந்தத் தன்மைகள் மிக மிக அவசியமான ஒன்றாகும். கொள்கை விரோதிகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களிடமிருந்து ஏற்படக்கூடிய இடைஞ்சல்களையும், இன்னல்களையும்  மறுமை வாழ்க்கைக்காகப் பொறுத்துக் கொள்ளும் தன்மை தான்  சத்தியக் கொள்கையின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்.

மன்னிக்கும் தன்மை என்பது இரண்டு அடிப்படையிலாகும்.

ஒன்று: பிரச்சாரக்களத்தில் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்து இடர் ஏற்படுத்தியவர்களை மன்னித்தல்

இரண்டு: நாம் பலமிக்கவர்களாக, எதிரிகளைத்  தண்டிப்பதற்கு வலிமையுடையவர்களாக  இருக்கும் காலகட்டத்திலும்  எதிரிகள் செய்த பாவங்களை மன்னித்து அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவதாகும்.

முஃமின்களின் முன்மாதிரியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் இதற்கு ஏராளமான சான்றுகளை நாம் காணலாம்.

தாயிஃப் நகர் துயரச் சம்பவம்

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், (தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். கர்னுஸ் ஸஆலிப்என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்த போது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான் என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்) என்று கூறினார். உடனே, (வேண்டாம்😉 ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்) என்று சொன்னேன்.

நூல்: புகாரி 3231

நபியவர்களுக்கு கல்லடிகளாலும், சொல்லடிகளாலும் வேதனையளித்த தாஃயிப் நகர மக்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்திக்கவில்லை. அவர்கள் திருந்தாவிட்டாலும் அவர்களுடைய சந்ததிகளாவது திருந்துவார்கள் என்று கொள்கைக்காக அவர்கள் செய்த அநியாயங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டார்கள்.

அல்லாஹ் தாயிஃப் நகரத்தில் மிகப்பெரும் இஸ்லாமிய பேரெழுச்சியை ஏற்படுத்தினான். கொள்கைக்காக நாம் சந்திக்கும் இன்னல்களையும், இடறுகளையும் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் சத்தியக் கொள்கையை மேலோங்கச் செய்வான் என்பதற்கு தாயிஃப் நகரச் சம்பவம் மிகப்பெரும் சான்றாகத் திகழ்கிறது.

கொலை செய்ய வந்த கொடியவர்களுக்கும் மன்னிப்பு

சத்தியக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திற்காக நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு குரைஷிக் காஃபிர்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள். நபியவர்கள் மதீனாவிற்குச் சென்றடையவதற்கு முன்னால் அவர்களை எப்படியாவது கொலை செய்து விடவேண்டும் என்றும் சண்டாளர்கள் சதி செய்தார்கள்.

நபியவர்களையும், அவர்களின் அருமைத் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களையும் உயிருடனோ அல்லது கொலை செய்தோ கொண்டு வருபவர்களுக்கு நூறு, நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்று அறிவிப்புச் செய்தார்கள். நபியவர்களையும், அவர்களது அருமைத் தோழரையும் கொலை செய்து எப்படியாவது இருநூறு ஒட்டகங்களைப் பரிசாகப் பெறவேண்டும் என்று வெறிபிடித்து வந்தார் சுராகா பின் ஜூஃசும் (ரலி) அவர்கள். அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. இறையருளால் சுராகாவின் வஞ்சக எண்ணம் ஈடேறவில்லை. நபியவர்களையும், அவர்களது அருமைத் தோழரையும் அல்லாஹ் தனது வல்லமையால் காப்பாற்றினான்.

அத்தகைய கொடியவரான சுராகாவைக் கூட நபியவர்கள் மன்னித்தார்கள். இந்த மன்னிக்கும் தன்மை தான் கொடியவர்களிடம் கூட சத்திய மார்க்கத்தைக் கொண்டு சேர்த்தது. சுராக்கா (ரலி) அவர்களை இஸ்லாத்தில் இணைய வைத்தது.  இதோ ஸஹீஹூல் புகாரியில் பதிவு செய்யப் பெற்ற சுராகாவின் சம்பவத்தை சுருக்கமாகக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்ற போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரது குதிரை அவருடனேயே பூமியில் அழுந்தி விட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: பராஉ (ரலி), நூல்: புகாரி 3908, 5607

இந்த சம்பவம் புகாரி 3615வது ஹதீஸிலே விரிவாக இடம் பெற்றுள்ளது.

நஞ்சூட்டியவருக்கும் நன்மை செய்த நபிகள் நாயகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டின் மிகப்பெரும் அதிபராகவும் இருந்தார்கள். இறைத்தூதருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் இன்னுயிரைக் கொடுப்பதற்கும் இலட்சக்கணக்காண தோழர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகத்தின் ஆட்சியில் சிறுபான்மைச் சமுதாயமாக இருந்த  யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகள் நாயகத்திற்கு இறைச்சியில் விஷம் சேர்த்து உண்ணக் கொடுத்தாள். உயிரைப் பறிக்க நினைத்தாள். அல்லாஹ் தன்னுடைய அற்புதத்தால் தன்னுடைய தூதரைப் பாதுகாத்தான்.

இலட்சகணக்கான தோழர்கள் தம் உயிரினும் மேலாய் மதித்த இறைத்தூதருக்கு நஞ்சூட்டிய சிறுபான்மைச் சமுதாயமான யூத சமுதாயத்திற்கு எந்தப் பாதிப்பையும் இறைத்தூதர் ஏற்படுத்தவில்லை. இஸ்லாம் அவர்களைத் தடுத்தது. நஞ்சூட்டிய பெண்ணையும் மன்னித்து மாமனிதராக வாழ்ந்து காட்டினார்கள். மன்னிக்கும் தன்மைக்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல்: புகாரி 2617

மரணத்தை  வேண்டியவர்களுக்கு மறுப்பளித்த நபிகள் நாயகம்

மாபெரும் அதிபராக, மக்கள் நேசிக்கும் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் சிறுபான்மைச் சமுதாயமாக இருந்த யூதர்கள், மாமன்னர் நபிகள் நாயகத்தை வார்த்தையால் கேலி செய்தார்கள். பொங்கி எழுந்தார் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். ஆனால் நபியவர்களோ மென்மையைக் கடைபிடிக்குமாறு முஃமின்களின் அன்னைக்கு போதித்தார்கள். அழகிய முறையில் தீமைக்குப் பதிலடி கொடுத்தார்கள். இமாமின் புகாரியின் வார்த்தைகளிலே அந்த அழகிய வரலாற்றைக் காண்போம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யூதர்கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று (முகமன்) கூறினர். உடனே நான், (அது) உங்களுக்கு நேரட்டும். மேலும், அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும் என்று (அவர்களுக்கு பதில்) சொன்னேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்து கொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன் என்று சொன்னார்கள். அப்போது நான், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (அவர்களுக்கு அளித்த பதிலை) நீ கேட்கவில்லையா? (அஸ்ஸாமுஎனும் சொல்லைத் தவிர்த்து வ அலைக்கும்‘- அவ்வாறே உங்கள் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு நான் பதிலளித்துவிட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது என்று சொன்னார்கள்

நூல்: புகாரி 6030

பகைவரையும் நேசராக்கிய மன்னிக்கும் தன்மை

உலகத்தில் முதல் எதிரியாக நபிகள் நாயகத்தையும், வெறுக்கும் மார்க்கமாக இஸ்லாத்தையும், பகை நாடாக மதீனாவையும் கருதினார் ஸுமாமா பின் உஸால்.  அன்பு மார்க்கமாம் இஸ்லாத்தையும், அதைப் போதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அம்மார்க்கத்தைப் பின்பற்றும் அருமைத் தோழர்களையும் சில நாட்கள் பார்த்த ஸுமாமாவின் உள்ளம் இஸ்லாத்திற்கு முன்னால் அடிபணிந்தது. இந்த சுமாமாவை மாற்றியது நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் குணம். இதோ வரலாற்றில் என்றும் மங்காத பிரகாசமாய் ஒளிவீசும் சுமாமாவின் வரலாற்றைப் பாருங்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபாகுலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, (உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே? என்று கேட்டார்கள். அவர், நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள் என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்த போது அவரிடம், ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்த போது, நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன் என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லைஎன்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்என்றும் நான் உறுதி கூறுகிறேன் என்று மொழிந்துவிட்டு, முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர் என்று சொல்லிவிட்டு, மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், நீ மதம் மாறிவிட்டாயா? என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4372

வஞ்சகமாய் கொன்ற வஹ்ஷியை வாஞ்சையாய் மன்னிக்கும் தன்மை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேசத்திற்குரியவரான அன்னாரின் சிறிய தந்தையார் ஹம்சா (ரலி) அவர்களை உஹது யுத்தத்திலே வஞ்சகமாய்க் கொன்றார் வஹ்ஷி அவர்கள். ஹம்சா (ரலி) அவர்களின் உடல் எதிரிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டது. உடலைக் கண்டதும், அதன் நிலையைப் பார்த்ததும் கண்ணீர் வடித்தது நாயகத்தின் கண்கள். சிறிய தந்தையைக் கொன்றதற்காக எதிரிகளில் எழுபது பேரைப் பழிவாங்குவேன் என்று சீற்றம் கொண்டார்கள். மன்னிக்கும் மார்க்கத்தைப் போதிக்க வந்த நாயகமே சீற்றம் கொள்ளலமா? வரம்பை மீறலாமா? பொறுமையின் வடிவம் நிதானம் தவறலாமா?

மன்னிப்பாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மன்னிப்பாளனான அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான். அதில் பொறுமையைப் போதித்தான். வரம்பு மீறுவதை எச்சரித்தான்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்.

அல்குர்ஆன் 16:126, 127

நபிகள் நாயகத்தின் நேசத்திற்குரிய ஹம்சா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷியையும் இஸ்லாம் கவர்ந்தது. அவரைச் சத்தியத்தின் போராளியாக்கியது. வஹ்ஷியையும் மன்னித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். வஹ்ஷியின் வரலாற்றை அவரின் வாய்மொழியாகக் கேட்போம்.

நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (கவனிக்காமல்) நெருங்கி வந்த போது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அது தான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்போது, என்னிடத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்) என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்ட போது, நீ வஹ்ஷி தானே? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று கூறினேன். நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்? என்று கேட்டார்கள். நான், உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான் என்று கூறினேன். அப்போது அவர்கள், (உன்னைக் காணும் போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட போது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), நிச்சயம் நான் முஸைலமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல(வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம் என்று கூறிக் கொண்டேன். (அபூபக்ர் அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போது தான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது. அப்(போரின்) போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலை மீது ஓங்கி வெட்டி விட்டார். (அவன்தான் முஸைலமா.)

நூல்: புகாரி 4072

நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் தன்மைக்கு இன்னும் ஏராளமான சான்றுகளைக் கூறலாம். மக்கா வெற்றியின் போது எதிரிகள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னைப் பைத்தியம் என்றும், சூனியக்காரர் என்றும், சந்ததியற்றவர் என்றும் பழித்தவர்களையெல்லாம் மன்னித்தார்கள். அத்தன்மை தான் 23 ஆண்டுகளில் காட்டுமிராண்டிக் கூட்டத்தையும் உலகிலேயே கியாமத் நாள் வரை தோன்ற முடியாத சிறந்த தலைமுறையாக உருவாக்கியது.

சத்தியவாதிகளை வார்த்தெடுத்தது. அமைதி உலகத்தை அமைத்து. இத்தன்மையை நாமும் பெற்றால் நம்முடைய தலைமுறையும் சத்தியத்திற்கு சாட்சியாளர்களாய் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை, இன்ஷா அல்லாஹ்.

இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்பவர்களாய், உண்மையான முஃமின்களாய் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!