(இறைஅருள் மீது) நம்பிக்கை வைப்பதின் சிறப்பு
قَالَ الله تَعَالَى إخباراً عن العبدِ الصالِحِ : ﴿ وَأُفَوِّضُ أَمْرِي إِلى اللهِ إنَّ اللهَ بَصِيرٌ بالعِبَادِ فَوَقَاهُ الله سَيِّئَاتِ مَا مَكَرُوا ﴾
அல்லாஹ் நல்லடியார்களைப் பற்றி பின் வருமாறு கூறுகிறான் :
என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன், அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்” (என்று கூறினார்) எனவே அவர்களின் சூழ்ச்சியின் கெடுதியிலிருந்து அல்லாஹ், அவரை காப்பாற்றினான்.
அல்குர்ஆன் 40 : 44,45
நபிமொழிகளிலிருந்து…..
440- وعن أَبي هريرة رضي الله عنه عن رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم أَنَّهُ قَالَ : (( قَالَ الله : أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنا معه حَيْثُ يَذْكُرنِي وَاللهِ للهُ أفْرَحُ بِتَوبَةِ عَبْدِهِ مِنْ أحَدِكُمْ يَجِدُ ضَالَّتَهُ بالفَلاَةِ وَمَنْ تَقَرَّبَ إلَيَّ شِبْراً تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعاً وَمَنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعاً تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعاً وَإِذَا أقْبَلَ إِلَيَّ يَمْشِي أقْبَلْتُ إِلَيْهِ أُهَرْوِلُ )) متفقٌ عليه وهذا لفظ إحدى روايات مسلم.
ஹதீஸ் எண் : 440
அல்லாஹ், “என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவு கூரும்போது அவனுடன் நான் இருப்பேன்’’ என்று கூறினான்.
அல்லாஹ்வின் மீதாணையாக! பாலைவனத்தில் தொலைத்துவிட்ட தமது ஒட்டகத்தைக் கண்டு பிடிக்கும்போது, உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்.
யார் என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்குகிறாரோ, நான் அவரிடம் ஒரு முழம் அளவு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் நெருங்குகிறாரோ, நான் அவரிடம் (வலம் இடமாக விரிந்த) இரு கை நீட்டளவு நெருங்குகிறேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால், நான் அவரை நோக்கி ஓடிச்செல்கிறேன் (என்று அல்லாஹ் கூறினான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (7405), முஸ்லிம் (5294)
இது முஸ்லிமின் அறிவிப்புகளில் ஒரு அறிவிப்பாகும்.
441- وعن جابر بن عبد الله رضي الله عنهما : أنه سمع رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قبلَ مَوْتِه بثَلاثَةِ أيّام يقولُ : (( لاَ يَمُوتَنّ أحَدُكُمْ إِلاَّ وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بالله )) رواه مسلم.
ஹதீஸ் எண் : 441
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், “உங்களில் ஒருவர் அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாமல் மரணிக்க வேண்டாம்‘’ என்று கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : முஸ்லிம் (5517)
442- وعن أنس رضي الله عنه قَالَ : سمعت رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : (( قَالَ الله تَعَالَى : يَا ابْنَ آدَمَ إنَّكَ ما دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ مِنْكَ وَلاَ أُبَالِي. يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغت ذُنُوبُك عَنَانَ السماءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ وَلاَ أُبَالِي. يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايا ثُمَّ لَقَيْتَنِي لاَ تُشْرِكُ بِي شَيْئاً لأَتَيْتُكَ بقُرَابِها مَغْفِرَةً )) رواه الترمذي وقال : (( حديث حسن ))
(( عَنَانُ السَّماءِ )) بفتح العين قيل : هو مَا عَنَّ لَكَ مِنْهَا أيْ : ظَهَرَ إِذَا رَفَعْتَ رَأسَكَ وقيل : هو السَّحَابُ. وَ(( قُرابُ الأَرض )) بضم القاف وقيل : بكسرها والضم أصح وأشهر وَهُوَ : مَا يقارب مِلأَهَا والله أعلم
ஹதீஸ் எண் : 442
ஆதமின் மகனே! நீ என் மீது நம்பிக்கை வைத்த போதும் பிராத்திக்கும் போதும் உன்னை நான் மன்னித்தேன். நீ எப்படி இருந்த போதிலும் அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆதமின் மகனே! வானத்தின் முகட்டளவு உனது பாவங்கள் இருந்தாலும் நீ என்னிடம் மன்னிப்பு கோரினால் உன்னை மன்னிப்பேன். ஆதமின் மகனே! எனக்கு இணை வைக்காமல் நீ பூமியின் அளவு பிழைகளைச் செய்து நீ என்னைச் சந்தித்தாலும் நான் உனக்கு பூமியின் அளவு மன்னிப்பைக் கொண்டு வருவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : திர்மிதீ (3463)
குறிப்பு : இச்செய்தியில் இடம்பெறும் கஸீர் பின் ஃபாயித் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்த செய்தி பலவீனமானதாகும். எனினும் இதே கருத்தில் முஸ்லிமில் (5215) வேறு அறிவிப்பாளருடன் இடம்பெற்றுள்ளது.
பயம், நம்பிக்கை வைத்தல் ஆகிய இரண்டிலும் ஒன்றிணைதல்
قَالَ الله تَعَالَى : ﴿ فَلاَ يَأمَنُ مَكْرَ الله إِلاَّ القَوْمُ الخَاسِرونَ ﴾
நஷ்டமடைந்த கூட்டத்தைத் தவிர (வேறெவரும்) அல்லாஹ்வின் தண்டனை குறித்து அச்சமற்று இருக்கமாட்டார்கள்.
அல்குர்ஆன் 7 : 99
وقال تَعَالَى : ﴿ إِنَّهُ لاَ يَيْأَسُ مِنْ رَوْحِ اللهِ إِلاَّ القَوْمُ الكافِرُونَ ﴾
நிராகரிக்கும் கூட்டத்தைத் தவிர (யாரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாடடார்கள்.
அல்குர்ஆன் 12 : 87
وقال تَعَالَى: ﴿ يَوْمَ تَبْيَضُّ وَجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ﴾
அந்நாளில் சில முகங்கள் பிரகாசமாகவும், சில முகங்கள் கருத்தும் இருக்கும்.
அல்குர்ஆன் 3 : 106
وقال تَعَالَى: ﴿ إنَّ رَبَكَ لَسَرِيعُ العِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ ﴾
உமது இறைவன் விரைந்து தண்டிப்பவன். மேலும் அவன் மிக்க மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்.
அல்குர்ஆன் 7 : 167
وقال تَعَالَى : ﴿ إنَّ الأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الفُجَّارَ لَفِي جَحِيمٍ ﴾
நல்லவர்கள், இன்பம் நிறைந்ததில் இருப்பார்கள். தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
அல்குர்ஆன் 82 : 13,14
وقال تَعَالَى : ﴿ فَأمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأمُّهُ هَاوِيَةٌ ﴾
எவனுடைய (நன்மையின்) எடை கனத்ததோ, அவன் திருப்தியுள்ள வாழ்க்கையில் இருப்பான். எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ அவன் தங்குமிடம் “ஹாவியா’தான்.
அல்குர்ஆன் 101 : 6-9
நபிமொழிகளிலிருந்து….
443- وعن أَبي هريرة رضي الله عنه : أنَّ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( لَوْ يَعْلَمُ الْمُؤمِنُ مَا عِنْدَ الله مِنَ العُقُوبَةِ مَا طَمِعَ بِجَنَّتِهِ أَحَدٌ وَلَوْ يَعْلَمُ الكَافِرُ مَا عِنْدَ الله مِنَ الرَّحْمَةِ مَا قَنَطَ مِنْ جَنَّتِهِ أحَدٌ )) رواه مسلم.
ஹதீஸ் எண் : 443
இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்விடமுள்ள தண்டனையைப் பற்றி நன்கறிவாரானால், (அதிலிருந்து தப்பித்தால் போதும் என்று கருதுவாரே தவிர,) அவனது சொர்க்கத்தின் மீது (இறை நம்பிக்கையாளர்களில்) யாரும் ஆசை கொள்ளமாட்டார்கள். இறைமறுப்பாளர் அல்லாஹ்விடமுள்ள கருணையைப் பற்றி நன்கறிவாரானால், அவனது சொர்க்கத்தைப் பற்றி (இறைமறுப்பாளர்களில்) யாருமே நிராசை கொள்ளமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (5316)
444- وعن أَبي سعيد الخدرِيِّ رضي الله عنه : أنَّ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( إِذَا وُضِعَتِ الجنازةُ واحْتَمَلَهَا النَّاسُ أَوِ الرِّجَالُ عَلَى أعناقِهِمْ فَإنْ كَانَتْ صَالِحَةً قالتْ: قَدِّمُونِي قَدِّمُونِي وَإنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قالتْ : يَا وَيْلَهَا ! أَيْنَ تَذْهَبُونَ بها ؟ يَسْمَعُ صَوْتَها كُلُّ شَيْءٍ إِلاَّ الإنْسانُ وَلَوْ سَمِعَهُ صَعِقَ )) رواه البخاري.
ஹதீஸ் எண் : 444
பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்’’ என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் “கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்’’ என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி (1314)
445- وعن ابن مسعود رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( الجَنَّةُ أقْرَبُ إِلى أحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ وَالنَّارُ مِثْلُ ذلك )) رواه البخاري.
ஹதீஸ் எண் : 445
சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப் போன்றே (மிக அருகில் உள்ளது) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : புகாரி (6488)
