ஆதரவு வைத்தல்
قَالَ الله تَعَالَى : ﴿ قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللهِ إِنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعاً إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ﴾
தமக்கே எதிராகவே வரம்பு மீறி நடந்து கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிப்பான். அவன் மிக்க மன்னிப்பவன், நிகரில்லா அன்பாளான்.
அல்குர்ஆன் 39 : 53
وَقالَ تَعَالَى : ﴿ وَهَلْ نُجَازِي إِلاَّ الْكَفُور ﴾
நிராகரிப்போருக்கே தவிர, (இதுபோன்ற) கூலியை நாம் கொடுப்போமா?
அல்குர்ஆன் 34 : 17
وَقالَ تَعَالَى : ﴿ إِنَّا قَدْ أُوحِيَ إِلَيْنَا أَنَّ الْعَذَابَ عَلَى مَنْ كَذَّبَ وَتَوَلَّى ﴾
பொய் என்று சொல்லி புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு இறைச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 20 : 48
وَقالَ تَعَالَى : ﴿ وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ ﴾
எனது அருள் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்துள்ளது.
அல்குர்ஆன் 7 : 156
நபிமொழிகளிலிருந்து….
412- وعن عبادة بن الصامتِ رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( مَنْ شَهِدَ أنَّ لا إلهَ إلاَّ اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَأنَّ مُحَمداً عَبْدهُ ورَسُولُهُ وَأنَّ عِيسى عَبْدُ اللهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ ألْقَاهَا إِلَى مَرْيَمَ ورُوحٌ مِنْهُ وَأنَّ الجَنَّةَ حَقٌّ وَالنَّارَ حَقٌّ أدْخَلَهُ اللهُ الجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ العَمَلِ )) مُتَّفَقٌ عَلَيهِ.
ஹதீஸ் எண் : 412
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ அவன் தனித்தவன்,அவனுக்கு நிகராக யாருமில்லை என்றும் “முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் “ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும், “அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (“ஆகுக!’ என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)’ என்றும், “அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்’ என்றும், “சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், “நரகம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதா (ரலி), நூல்கள் : புகாரி (3435), முஸ்லிம் (46)
وفي رواية لمسلم : (( مَنْ شَهِدَ أنْ لا إلَهَ إلاَّ اللهُ وَأنَّ مُحَمَّداً رَسُولُ اللهِ حَرَّمَ اللهُ عَلَيهِ النَّارَ ))
முஸ்லிமின் (47) அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :
யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) நபி என்றும் உறுதி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்.
413- وعن أَبي ذر رضي الله عنه قَالَ : قَالَ النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( يقول الله : مَنْ جَاء بالحَسَنَةِ فَلَهُ عَشْرُ أمْثَالِهَا أَوْ أزْيَد وَمَنْ جَاءَ بالسَيِّئَةِ فَجَزاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أغْفِرُ. وَمَنْ تَقَرَّبَ مِنِّي شِبْراً تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعاً وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعاً تَقَرَّبْتُ مِنْهُ بَاعاً وَمَنْ أتَانِي يَمْشِي أتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيني بِقُرَابِ الأرْض خَطِيئةً لا يُشْرِكُ بِي شَيئاً لَقِيتُهُ بِمِثْلِهَا مَغفِرَةً )) رواه مسلم.
معنى الحديث : (( مَنْ تَقَرَّبَ )) إلَيَّ بطَاعَتِي (( تَقَرَّبْتُ )) إِلَيْهِ بِرَحْمَتِي وَإنْ زَادَ زِدْتُ (( فَإنْ أتَاني يَمْشِي )) وَأسرَعَ في طَاعَتي (( أتَيْتُهُ هَرْوَلَةً )) أيْ : صَبَبْتُ عَلَيهِ الرَّحْمَةَ وَسَبَقْتُهُ بِهَا وَلَمْ أحْوِجْهُ إِلَى المَشْيِ الكَثِيرِ في الوُصُولِ إِلَى المَقْصُودِ (( قُرَابُ الأَرضِ)) بضم القافِ ويقال : بكسرها والضم أصح وأشهر ومعناه : مَا يُقَارِبُ مِلأَهَا والله أعلم.
ஹதீஸ் எண் : 413
ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன்.
யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச்செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணைவைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர் கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : முஸ்லிம் (5215)
414- وعن جابر رضي الله عنه قَالَ : جاء أعرابي إِلَى النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَقَالَ : يَا رَسُول الله مَا الموجِبَتَانِ ؟ قَالَ : (( مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بالله شَيئاً دَخَلَ الجَنَّةَ وَمَنْ مَاتَ يُشْرِكُ بِهِ شَيْئاً دَخَلَ النَّار )) رواه مسلم
ஹதீஸ் எண் : 414
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : முஸ்லிம் (151)
415- وعن أنس رضي الله عنه : أن النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ومعاذ رديفه عَلَى الرَّحْل قَالَ : (( يَا مُعَاذُ )) قَالَ : لَبِّيْكَ يَا رَسُول الله وَسَعْدَيْكَ قَالَ : (( يَا مُعَاذُ )) قَالَ : لَبَّيْكَ يَا رَسُول الله وَسَعْدَيْكَ قَالَ : (( يَا مُعَاذُ )) قَالَ : لَبِّيْكَ يَا رَسُول الله وسَعْدَيْكَ ثَلاثاً قَالَ : (( مَا مِنْ عَبْدٍ يَشْهَدُ أن لا إلهَ إلاَّ الله وَأنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ صِدْقاً مِنْ قَلْبِهِ إلاَّ حَرَّمَهُ الله عَلَى النَّار )) قَالَ : يَا رَسُول الله أفَلاَ أخْبِرُ بِهَا النَّاس فَيَسْتَبْشِروا ؟ قَالَ : (( إِذاً يَتَّكِلُوا )) فأخبر بِهَا مُعاذٌ عِنْدَ موتِه تَأثُّماً. مُتَّفَقٌ عَلَيهِ.
وقوله : (( تأثُّماً )) أي خوفاً مِنْ الإثم في كَتْم هَذَا العلم.
ஹதீஸ் எண் : 415
(ஒரு பயணத்தில் வாகனமொன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும்போது, நபி(ஸல்) அவர்கள் “முஆதே!’ ‘’ என்று அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)’’ என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். “முஆதே!’ என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)’’ என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடைசெய்து விட்டான்’’ என்று கூறினார்கள். உடனே முஆத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதை கேட்டு) அவர்கள் நற்செய்தி பெறுவார்களே!’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்து விடுவார்கள்’’ என்று கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்கள் : புகாரி (128), முஸ்லிம் (48)
416- وعن أَبي هريرة – أَوْ أَبي سعيد الخدري رضي الله عنهما – شك الراوي – ولا يَضُرُّ الشَّكُّ في عَين الصَّحَابيّ ؛ لأنَّهُمْ كُلُّهُمْ عُدُولٌ – قَالَ : لَمَّا كَانَ غَزوَةُ تَبُوكَ أصَابَ النَّاسَ مَجَاعَةٌ فقالوا : يَا رَسُول الله لَوْ أذِنْتَ لَنَا فَنَحرْنَا نَواضِحَنَا فَأكَلْنَا وَادَّهَنَّا ؟ فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( افْعَلُوا )) فَجاء عُمَرُ رضي الله عنه فَقَالَ : يَا رَسُول الله إنْ فَعَلْتَ قَلَّ الظَّهْرُ وَلَكِن ادعُهُمْ بفَضلِ أزْوَادِهِمْ ثُمَّ ادعُ الله لَهُمْ عَلَيْهَا بِالبَرَكَةِ لَعَلَّ الله أنْ يَجْعَلَ في ذلِكَ البَرَكَةَ. فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( نَعَمْ )) فَدَعَا بِنَطْع فَبَسَطَهُ ثُمَّ دَعَا بِفضلِ أزْوَادِهِمْ فَجَعَلَ الرَّجُلُ يَجيءُ بكَفّ ذُرَة وَيَجيءُ بِكَفّ تمر وَيجيءُ الآخرُ بِكِسرَة حَتَّى اجْتَمَعَ عَلَى النّطعِ مِنْ ذلِكَ شَيء يَسيرٌ فَدَعَا رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم بِالبَرَكَةِ ثُمَّ قَالَ : (( خُذُوا في أوعِيَتِكُمْ )) فَأَخَذُوا في أوْعِيَتهم حَتَّى مَا تَرَكُوا في العَسْكَرِ وِعَاء إلاَّ مَلأوهُ وَأَكَلُوا حَتَّى شَبعُوا وَفَضَلَ فَضْلَةٌ فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( أشْهَدُ أنْ لا إلهَ إلاَّ اللهُ وَأنّي رَسُولُ الله لا يَلْقَى الله بِهِما عَبْدٌ غَيْرَ شَاكٍّ فَيُحْجَبَ عَنِ الجَنَّةِ )) رواه مسلم
ஹதீஸ் எண் : 416
தபூக் போரின்போது மக்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடவும் (அவற்றின் கொழுப்புகளை உருக்கி) எண்ணெய் எடுத்துக்கொள்ளவும் செய்வோமே!’’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறே) செய்துகொள்ளுங்கள்’’ என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு நீங்கள் செய்(ய அனுமதியளித்)தால் வாகனப் பிராணிகள் குறைந்துவிடும். இதைவிடுத்து, மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். பின்னர் அவற்றில் பெருக்கம் (பரக்கத்) ஏற்பட அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்லாஹ் அதில் (பெருக்கத்தை) ஏற்படுத்தக்கூடும்‘’ என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம்‘’ என்று கூறிவிட்டு, ஒரு தோல் விரிப்பைக் கொண்டுவந்து விரிக்கச் சொன்னார்கள். பிறகு மக்களிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொன்னார்கள்.
(மக்களில்) ஒருவர் ஒரு கையளவு கோதுமையைக் கொண்டுவரலானார். மற்றொருவர் ஒரு கையளவு பேரீச்சம் பழங்களுடன் வந்தார். இன்னொருவர் ரொட்டித் துண்டு ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த விரிப்பின் மீது சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு “உங்கள் பைகளில் நிரப்பிக்கொள்ளுங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே மக்களும் தம் பைகளில் நிரப்பிக் கொண்டனர். அந்தப் படையினர் தம்மிடம் இருந்த எந்தப் பையையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் நிரப்பிக்கொண்டனர். மக்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டனர். (இருப்பினும்) இன்னும் அது எஞ்சியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் நபி என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரண்டு உறுதிமொழிகளையும் சந்தேகம் கொள்ளாமல் நம்பிய நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியாரும் சொர்க்கத்தைவிட்டுத் தடுக்கப்படமாட்டார்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), அல்லது அபூசயீத் (ரலி), நூல் : முஸ்லிம் (45)
417- وعن عِتْبَانَ بن مالك رضي الله عنه وَهُوَ مِمَّن شَهِدَ بَدراً قَالَ : كنت أُصَلِّي لِقَوْمِي بَني سَالِم وَكَانَ يَحُولُ بَيْنِي وبَيْنَهُمْ وَادٍ إِذَا جَاءتِ الأَمْطَار فَيَشُقُّ عَلَيَّ اجْتِيَازُهُ قِبَلَ مسْجِدِهم فَجِئتُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فقلت لَهُ : إنّي أنْكَرْتُ بَصَرِي وَإنَّ الوَادِي الَّذِي بَيْنِي وبَيْنَ قَومِي يَسيلُ إِذَا جَاءتِ الأمْطَارُ فَيَشُقُّ عَلَيَّ اجْتِيَازُهُ فَوَدِدْتُ أنَّكَ تَأتِي فَتُصَلِّي في بَيْتِي مَكَاناً أتَّخِذُهُ مُصَلّى فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( سَأفْعَلُ )) فَغَدَا رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَأَبُو بكر رضي الله عنه بَعْدَ مَا اشْتَدَّ النَّهَارُ وَاسْتَأذَنَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَأذِنْتُ لَهُ فَلَمْ يَجْلِسْ حَتَّى قَالَ : (( أيْنَ تُحِبُّ أنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ ؟ )) فَأشَرْتُ لَهُ إِلَى المَكَانِ الَّذِي أُحبُّ أنْ يُصَلِّيَ فِيهِ فَقَامَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَكَبَّرَ وَصَفَفْنَا وَرَاءَهُ فَصَلَّى رَكعَتَينِ ثُمَّ سَلَّمَ وَسَلَّمْنَا حِينَ سَلَّمَ فَحَبَسْتُهُ عَلَى خَزيرَةٍ تُصْنَعُ لَهُ فَسَمِعَ أهلُ الدَّارِ أنَّ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم في بَيْتِي فَثَابَ رِجالٌ مِنْهُمْ حَتَّى كَثُرَ الرِّجَالُ في البَيْتِ فَقَالَ رَجُلٌ : مَا فَعَلَ مَالِكٌ لا أرَاهُ ! فَقَالَ رَجُلٌ : ذلِكَ مُنَافِقٌ لا يُحِبُّ الله ورسولَهُ فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( لا تَقُلْ ذلِكَ ألاَ تَرَاهُ قَالَ : لا إلهَ إلاَّ الله يَبْتَغي بذَلِكَ وَجهَ الله تَعَالَى )) فَقَالَ : اللهُ ورسُولُهُ أعْلَمُ أمَّا نَحْنُ فَوَاللهِ مَا نَرَى وُدَّهُ وَلاَ حَدِيثَهُ إلاَّ إِلَى المُنَافِقينَ ! فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( فإنَّ الله قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ : لا إلهَ إلاَّ الله يَبْتَغِي بذَلِكَ وَجْهَ الله )) مُتَّفَقٌ عَلَيهِ.
وَ(( عِتْبَان )) : بكسر العين المهملة وإسكان التاءِ المثناةِ فَوق وبعدها باءٌ موحدة. وَ(( الخَزِيرَةُ )) بالخاءِ المعجمةِ والزاي : هِيَ دَقيقٌ يُطْبَخُ بِشَحم. وقوله : (( ثَابَ رِجَالٌ )) بِالثاءِ المثلثةِ : أيْ جَاؤُوا وَاجْتَمَعُوا.
ஹதீஸ் எண் : 417
நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் என் சமுதாயத்தாரான பனூசாலிம் குலத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தி வந்தேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும் என் குலத்தாரு(டைய பள்ளிவாசலு)க்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் ஓடியது. ஆகவே, அதைக் கடந்து அவர்களின் பள்ளிக்கு வருவது சிரமமாகி விட்டது. எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழைவந்தால் எனக்கும் என் சமுதாயத்தாருக்குமிடையே வெள்ளநீர் வழிந்தோடுகிறது. என்னால் அதைக் கடக்க முடியவில்லை. எனவே, தாங்கள் வந்து எனது வீட்டில் தொழுகை நடத்த வேண்டும் என்றும் அவ்விடத்தை நான் (எனது) தொழுமிடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்’’ என்றேன். அதற்க நபி (ஸல்) அவர்கள், “(அல்லாஹ் நாடினால்) அவ்வாறே செய்கிறேன்’’ என்று கூறினார்கள்.
மறுநாள் நண்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (என்வீட்டிற்குள் வர) அனுமதி கோரினார்கள். நான் அனுமதியளித்தேன். (வீட்டில் நுழைந்ததும்) அல்லாஹ்வி.ன தூதர் (ஸல்) அவர்கள் உட்காரக்கூட இல்லை “(இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். அவர்கள் (என் வீட்டில்) எந்த இடத்தில் தொழவேண்டுமென நான் விரும்பினேனோ அந்த இடத்தை அவர்களுக்கு சுட்டிக் காட்டினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று (தொழுகைக்காக) தக்பீர் கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்தபோது நாங்களும் சலாம் கொடுத்தோம்.
நபி (ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த “கஸீரா’ எனும் (கோதுமைக் குறுணைக் கஞ்சி) உணவி(னை உண்பத)ற்காக அவர்களை நாங்கள் இருக்க வைத்தோம். நபி (ஸல்) அவாகள் என் வீட்டில் இருப்பதைக் கேள்விப்பட்ட கணிசமான மக்கள் எனது வீட்டில் திரண்டுவிட்டனர்.
அவர்களில் ஒருவர் “மாலிக் பின் துக்ஷுன் என்ன ஆனார் (அவர் ஏன் வரவில்லை)?’’ என்று கேட்டார். அங்கிருந்த மற்றொரு மனிதர் “அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர் (முனாபிக்) (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை)’’ என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு சொல்லாதீர்கள்! அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவர் “லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹுவைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறியதை நீங்கள் பார்க்கவில்லையா?’’’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவரது நேசமும் அவரது உரையாடலும் நயவஞ்சகர்களிடமே இருப்பதையே நாங்கள் காண்கிறோம்‘’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் திருப்தியை நாடி “லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னவருக்கு அல்லாஹ் நரகத்தை தடைசெய்துவிட்டான் (ஹராமாக்கி)விட்டான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஹ்மூத் பின் ரபீஉ (ரலி), நூல்கள் : புகாரி (1186), முஸ்லிம் (1052)
418- وعن عمر بن الخطاب رضي الله عنه قَالَ : قدِم رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم بسَبْيٍ فَإِذَا امْرَأةٌ مِنَ السَّبْيِ تَسْعَى إِذْ وَجَدَتْ صَبياً في السَّبْيِ أخَذَتْهُ فَألْزَقَتهُ بِبَطْنِهَا فَأَرضَعَتْهُ فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( أتَرَوْنَ هذِهِ المَرْأةَ طَارِحَةً وَلَدَها في النَّارِ ؟ )) قُلْنَا : لاَ وَاللهِ. فَقَالَ : (( للهُ أرْحَمُ بِعِبَادِهِ مِنْ هذِهِ بِوَلَدِهَا )) مُتَّفَقٌ عَلَيهِ.
ஹதீஸ் எண் : 418
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.)
அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா, சொல்லுங்கள்?’’ என்றார்கள். நாங்கள், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’’ என்று சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உமர் பின் அல்கத்தாப் (ரலி), நூல்கள் : புகாரி (5999), முஸ்லிம் (5315)
குறிப்பு : இது முஸ்லிமின் வாசகமாகும்.
419- وعن أَبي هريرة رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( لَمَّا خَلَقَ الله الخَلْقَ كَتَبَ في كِتَابٍ فَهُوَ عِنْدَهُ فَوقَ العَرْشِ : إنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبي ))
ஹதீஸ் எண் : 419
அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது, தனது அரியணைக்கு மேலே தனக்கு அருகிலுள்ள தனது பதிவேட்டில் “என் கருணை என் கோபத்தை மிகைத்து நிற்கும்‘’ என்று எழுதினான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (7404), முஸ்லிம் (5307)
குறிப்பு: இது முஸ்லிமின் வாசகமாகும்.
وفي رواية : (( غَلَبَتْ غَضَبي )) وفي رواية : (( سَبَقَتْ غَضَبي )) مُتَّفَقٌ عَلَيهِ.
புகாரியின் (3194) அறிவிப்பில் “என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது’’ என்று (இறந்த கால வினைச் சொல்லாக இடம்பெற்றுள்ளது.)
புகாரியின் (7422) அறிவிப்பில் “என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’’ என்று (இறந்த கால வினைச் சொல்லாக இடம்பெற்றுள்ளது.)
420- وعنه قَالَ : سَمِعْتُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : (( جَعَلَ الله الرَّحْمَةَ مِئَةَ جُزْءٍ فَأمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ وَأنْزَلَ في الأرْضِ جُزْءاً وَاحِداً فَمِنْ ذلِكَ الجُزءِ يَتَرَاحَمُ الخَلائِقُ حَتَّى تَرْفَعَ الدَّابّةُ حَافِرهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أنْ تُصِيبَهُ ))
ஹதீஸ் எண் : 420
அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (6000), முஸ்லிம் (5310)
குறிப்பு : இது முஸ்லிமின் வாசகமாகும்.
وفي رواية : (( إنّ للهِ تَعَالَى مئَةَ رَحمَةٍ أنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الجنِّ وَالإنس وَالبهائِمِ وَالهَوامّ فبها يَتَعاطَفُونَ وبِهَا يَتَرَاحَمُونَ وبِهَا تَعْطِفُ الوَحْشُ عَلَى وَلَدِهَا وَأخَّرَ اللهُ تَعَالَى تِسْعاً وَتِسْعينَ رَحْمَةً يرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ القِيَامَة )) مُتَّفَقٌ عَلَيهِ.
முஸ்லிமின் (5312) அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :
அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.
ورواه مسلم أيضاً مِنْ رواية سَلْمَانَ الفارِسيِّ رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( إنَّ للهِ تَعَالَى مِئَة رَحْمَةٍ فَمِنْهَا رَحْمَةٌ يَتَرَاحمُ بِهَا الخَلْقُ بَيْنَهُمْ وَتِسْعٌ وَتِسعُونَ لِيَومِ القِيَامَةِ ))
சல்மான் அல்ஃபாரிஸி (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் (5313) ஆவது அறிவிப்பாக பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :
அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் தமக்கிடையே பரிவு காட்டுகின்றன. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பு, மறுமை நாளுக்கு உரியவையாகும்.
وفي رواية : (( إنَّ الله تَعَالَى خَلَقَ يَوْمَ خَلَقَ السَّمَاواتِ وَالأَرْضَ مَئَةَ رَحْمَةٍ كُلُّ رَحْمَةٍ طِبَاقُ مَا بَيْنَ السَّماءِ إِلَى الأرْضِ فَجَعَلَ مِنْهَا في الأرضِ رَحْمَةً فَبِهَا تَعْطفُ الوَالِدَةُ عَلَى وَلَدِهَا وَالوَحْشُ وَالطَّيْرُ بَعْضُهَا عَلَى بَعْض فَإذا كَانَ يَوْمُ القِيَامَةِ أكملَهَا بِهذِهِ الرَّحمَةِ ))
(முஸ்லிமின்) மற்றொரு (5314) அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :
அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த நாளில் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒவ்வொரு பாகமும் வானம் பூமிக்கிடையே உள்ள (இடத்)தை அடைத்துக் கொள்ளும் அளவுடையதாகும். அவற்றில் ஒரு பாகத்தையே பூமியில் வைத்தான். அந்த ஒரு பாகத்தினால்தான் தாய் தன் குழந்தைமீது பாசம் கொள்கிறாள். மிருகங்களும் பறவைகளும் ஒன்றன் மீதொன்று அன்பு காட்டுகின்றன. மறுமை நாள் வரும்போது இந்த ஓர் அன்புடன் சேர்த்து அன்பை இறைவன் (நூறாக) முழுமையாக்குவான்.
421- وعنه عن النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فيما يحكِي عن ربهِ تبارك وتعالى قَالَ : (( أذْنَبَ عَبْدٌ ذَنْباً فَقَالَ : اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ الله تَبَاركَ وَتَعَالَى : أذنَبَ عبدي ذَنباً فَعَلِمَ أنَّ لَهُ رَبّاً يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بالذَّنْبِ ثُمَّ عَادَ فَأذْنَبَ فَقَالَ : أيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبي فَقَالَ تبارك وتعالى : أذنَبَ عبدِي ذَنباً فَعَلِمَ أنَّ لَهُ رَبّاً يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بالذَّنْبِ قَدْ غَفَرْتُ لِعَبْدِي فَلْيَفْعَلْ مَا شَاءَ )) مُتَّفَقٌ عَلَيهِ.
وقوله تَعَالَى : (( فَلْيَفْعَلْ مَا شَاءَ )) أيْ : مَا دَامَ يَفْعَلُ هكذا يُذْنِبُ وَيَتُوبُ أغفِرُ لَهُ فَإنَّ التَّوْبَةَ تَهْدِمُ مَا قَبْلَهَا.
ஹதீஸ் எண் : 421
நபி (ஸல்) அவர்கள், தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள் :
ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு “இறைவா! (நான் ஒரு பாவம் செய்துவிட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று கூறினார். உடனே இறைவன், “என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்’’ என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார்.
அப்போதும் இறைவன், “(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்’’ என்று சொல்கிறான்.
பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அப்போதும் இறைவன், “என் அடியான் (இம்முறையும்) ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்துவிட்டேன்’’ என்று சொல்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (7507), முஸ்லிம் (5322)
422- وعنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( والَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا لَذَهَبَ الله بِكُمْ وَجَاءَ بِقَومٍ يُذْنِبُونَ فَيَسْتَغْفِرُونَ الله تَعَالَى فَيَغْفِرُ لَهُمْ )) رواه مسلم
ஹதீஸ் எண் : 422
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றி விட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (5304)
423- وعن أَبي أيوب خالد بن زيد رضي الله عنه قَالَ : سَمِعْتُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : (( لَوْلاَ أنَّكُمْ تُذْنِبُونَ لَخَلَقَ الله خَلْقاً يُذْنِبُونَ فَيَسْتَغْفِرونَ فَيَغْفِرُ لَهُمْ )) رواه مسلم.
ஹதீஸ் எண் : 423
நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்து விட்டால், நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி), நூல் : முஸ்லிம் (5302)
424- وعن أَبي هريرة رضي الله عنه قَالَ : كُنَّا قُعُوداً مَعَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم مَعَنَا أَبُو بَكْرٍ وَعُمْرُ رضي الله عنهما في نَفَرٍ فَقَامَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم مِنْ بَيْنِ أظْهُرِنَا فَأبْطَأَ عَلَيْنَا فَخَشِينَا أنْ يُقتطَعَ دُونَنَا فَفَزِعْنَا فَقُمْنَا فَكُنْتُ أوَّلَ مَنْ فَزِعَ فَخَرَجْتُ أبْتَغِي رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم حَتَّى أتَيْتُ حَائِطاً للأنْصَارِ… وَذَكَرَ الحَدِيثَ بِطُولِهِ إِلَى قوله : فَقَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( اذهَبْ فَمَن لَقِيتَ وَرَاءَ هَذَا الحَائِطِ يَشْهَدُ أنْ لا إله إلاَّ الله مُسْتَيقِناً بِهَا قَلبُهُ فَبَشِّرْهُ بِالجَنَّةِ )) رواه مسلم.
ஹதீஸ் எண் : 424
நாங்கள் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் நபி (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன்… என்ற நீண்ட ஹதீஸை குறிப்பிட்டார்.
…அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!’’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்(52)
425- وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما : أنَّ النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم تَلاَ قَولَ الله في إبراهيم : رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيراً مِنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي [ إبراهيم : 36 ] الآية وقَولَ عِيسَى : إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ [ المائدة : 118 ] فَرَفَعَ يَدَيهِ وَقالَ : (( اللَّهُمَّ أُمّتي أُمّتي )) وبَكَى فَقَالَ الله : (( يَا جِبْريلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ -وَرَبُّكَ أعْلَمُ – فَسَلْهُ مَا يُبْكِيهِ ؟ )) فَأتَاهُ جبريلُ فَأخْبَرَهُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم بِمَا قَالَ – وَهُوَ أعْلَمُ – فَقَالَ اللهُ تَعَالَى : (( يَا جِبريلُ اذْهَبْ إِلَى مُحَمّدٍ فَقُلْ : إنَّا سَنُرْضِيكَ في أُمّتِكَ وَلاَ نَسُوءكَ )) رواه مسلم.
ஹதீஸ் எண் : 425
ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடர்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ள “இறைவா! நிச்சயமாக! இவை (சிலைகள்) மக்களில் அதிகம் பேரை வழிகெடுத்துவிட்டன; எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; என்ற (14:36ஆவது) வசனத்தையும், ஈசா (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள “(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்’’ என்ற (5:118 ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு “இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)’’ என்று பிரார்த்தித்தார்கள்; அழுதார்கள். அப்போது அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று -உங்கள் இறைவனுக்கு எல்லாம் தெரியும்; என்றாலும்- “நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேளுங்கள்’’ என்றான்.
அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், -அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும்- தாம் கூறியவற்றை (மேற்கண்டவாறு) தெரி வித்தார்கள். அதற்கு அல்லாஹ், “ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம்; உம்மை நாம் கவலையடையச் செய்யமாட்டோம்‘’ என்று கூறுக என்றான் ‘’ என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (346)
426- وعن معاذ بن جبل رضي الله عنه قَالَ : كُنْتُ رِدْفَ النَّبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم عَلَى حِمَارٍ فَقَالَ : (( يَا مُعَاذُ هَلْ تَدْرِي مَا حَقُّ الله عَلَى عِبَادِهِ ؟ وَمَا حَقُّ العِبَادِ عَلَى الله ؟ )) قُلْتُ : اللهُ وَرَسُولُهُ أعْلَمُ. قَالَ : (( فإنَّ حَقَّ اللهِ عَلَى العِبَادِ أنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيئاً وَحَقَّ العِبَادِ عَلَى اللهِ أنْ لاَ يُعَذِّبَ مَنْ لا يُشْرِكُ بِهِ شَيئاً )) فقلتُ : يَا رَسُول الله أفَلا أُبَشِّرُ النَّاسَ ؟ قَالَ : (( لاَ تُبَشِّرْهُمْ فَيَتَّكِلُوا )) مُتَّفَقٌ عَلَيهِ.
ஹதீஸ் எண் : 426
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், “முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?’’ என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’’ என்று பதில் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்‘’ என்று பதில் கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி(நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி), நூல்கள் : புகாரி (2856), முஸ்லிம் (49)
427- وعن البراءِ بن عازب رضي الله عنهما عن النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( المُسْلِمُ إِذَا سُئِلَ في القَبْرِ يَشْهَدُ أنْ لاَ إلَهَ إلاَّ الله وَأنّ مُحَمّداً رَسُول الله فذلك قوله تَعَالَى : يُثَبِّتُ اللهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَة [ إبراهيم : 27 ] )) مُتَّفَقٌ عَلَيهِ
ஹதீஸ் எண் : 427
ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்’’ என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் “(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப் படுத்துகின்றான்’ எனும் (14:27ஆவது) இறை வசனத்தின் கருத்தாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி), நூல்கள் : புகாரி (4699), முஸ்லிம் (5508)
428- وعن أنس رضي الله عنه عن رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( إنّ الكَافِرَ إِذَا عَمِلَ حَسَنَةً أُطعِمَ بِهَا طُعْمَةً مِنَ الدُّنْيَا وَأَمَّا المُؤْمِنُ فَإنَّ الله تَعَالَى يَدَّخِرُ لَهُ حَسَنَاتِهِ في الآخِرَةِ وَيُعْقِبُهُ رِزْقاً في الدُّنْيَا عَلَى طَاعَتِهِ ))
ஹதீஸ் எண் : 428
ஓர் இறைமறுப்பாளர் நற்செயல் ஒன்றைச் செய்தால், அதற்குரிய பலன் இவ்வுலகிலேயே அவருக்கு வழங்கப்பட்டுவிடும். இறைநம்பிக்கையாளரின் நிலை என்னவெனில், அவர் செய்த நற்செயல்களுக்குரிய நன்மைகளை இறைவன் மறுமை நாளில் வழங்குவதற்காகப் பத்திரப்படுத்துகிறான். மேலும், அவர் கீழ்ப் படிந்து நடப்பதற்கேற்ப இவ்வுலகிலும் அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (5409)
وفي رواية : (( إنَّ الله لاَ يَظْلِمُ مُؤْمِناً حَسنَةً يُعْطَى بِهَا في الدُّنْيَا وَيُجْزَى بِهَا في الآخِرَةِ. وَأَمَّا الكَافِرُ فَيُطْعَمُ بِحَسَنَاتِ مَا عَمِلَ للهِ تَعَالَى في الدُّنْيَا حَتَّى إِذَا أفْضَى إِلَى الآخرَةِ لَمْ يَكُنْ لَهُ حَسَنَةٌ يُجْزَى بِهَا )) رواه مسلم.
முஸ்லிமின்) மற்றொரு (5408) அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :
அல்லாஹ் எந்த இறைநம்பிக்கையாளருக்கும் (அவர் செய்த நற்செயலுக்கான) நன்மையில் அநீதி இழைப்பதில்லை. அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும். அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும். (ஏக) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் (மட்டும்) அவருக்கு உணவளிக்கப்படும். அவர் மறுமையை அடையும்போது, அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது.
429- وعن جابر رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( مَثَلُ الصَّلَوَاتِ الخَمْسِ كَمَثَلِ نَهْرٍ جَارٍ غَمْرٍ عَلَى بَابِ أحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْم خَمْسَ مَرَّات )) رواه مسلم. (( الغَمْرُ )) : الكَثِيرُ.
ஹதீஸ் எண் : 429
ஐவேளைத் தொழுகையின் நிலையானது, உங்கள் வீட்டு வாசலில் ஓடும் ஆழமான நதிக்கு ஒத்திருக்கிறது. அதில் அவர் நாள்தோறும் ஐந்து முறை குளித்துவருகிறார் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : முஸ்லிம் (1186)
430- وعن ابن عباس رضي الله عنهما قَالَ : سَمِعْتُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : (( مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيقُومُ عَلَى جَنَازَتهِ أرْبَعونَ رَجُلاً لاَ يُشْرِكُونَ بِاللهِ شَيئاً إلاَّ شَفَّعَهُمُ اللهُ فِيهِ )) رواه مسلم.
ஹதீஸ் எண் : 430
“ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (1730)
431- وعن ابن مسعود رضي الله عنه قَالَ : كُنَّا مَعَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم في قُبَّة نَحْوَاً مِنْ أربَعِينَ فَقَالَ : (( أتَرْضَونَ أنْ تَكُونُوا رُبُعَ أهْلِ الجَنَّةِ ؟ )) قُلْنَا : نَعَمْ. قَالَ : (( أتَرْضَوْنَ أنْ تَكُونُوا ثُلُثَ أهلِ الجَنَّةِ ؟ )) قُلْنَا : نَعَمْ قَالَ : (( وَالَّذِي نَفْسُ مُحَمّدٍ بيَدِهِ إنِّي لأَرْجُو أنْ تَكُونُوا نِصْفَ أهْلِ الجَنَّةِ وذلك أنَّ الجنَّةَ لاَ يَدْخُلُهَا إلاَّ نَفْسٌ مُسْلِمَةٌ ومَا أنْتُم في أهْلِ الشِّركِ إلاَّ كَالشَّعْرَةِ البَيْضَاءِ في جلدِ الثَّورِ الأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّودَاءِ في جلدِ الثَّورِ الأحْمَر )) مُتَّفَقٌ عَلَيهِ.
ஹதீஸ் எண் : 431
நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு கூடாரத்தினுள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?’’ என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்‘ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?’’ என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்‘ என்று சொன்னோம். அவர்கள் “சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?’’ என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்‘ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் “முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணை வைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கருப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்; அல்லது சிவப்புக் காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள் : புகாரி (6528), முஸ்லிம் (377)
432- وعن أَبي موسى الأشعري رضي الله عنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( إِذَا كَانَ يَوْمُ القِيَامَةِ دَفَعَ اللهُ إِلَى كُلِّ مُسْلِم يَهُودياً أَوْ نَصْرانِياً فَيَقُولُ : هَذَا فِكَاكُكَ مِنَ النَّارِ ))
ஹதீஸ் எண் : 432
அல்லாஹ், மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்’’ என்று சொல்வான் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல் : முஸ்லிம் (5342)
وفي رواية عَنْهُ عن النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( يَجِيءُ يَوْمَ القِيَامَةِ نَاسٌ مِنَ المُسْلِمينَ بِذُنُوبٍ أَمْثَال الجِبَالِ يَغْفِرُهَا الله لَهُمْ )) رواه مسلم.
(முஸ்லிமின்) மற்றொரு (5344) அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :
மறுமை நாளில் முஸ்லிலிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னித்து விடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்.
قوله : (( دَفَعَ إِلَى كُلِّ مُسْلِم يَهُوديّاً أَوْ نَصْرَانِيّاً فَيَقُولُ : هَذَا فِكَاكُكَ مِن النَّارِ )) مَعنَاهُ مَا جَاءَ في حديث أَبي هريرة رضي الله عنه : (( لِكُلِّ أَحَدٍ مَنْزلٌ في الجَنَّةِ وَمَنْزِلٌ في النَّارِ فَالمُؤْمِنُ إِذَا دَخَلَ الجَنَّةَ خَلَفَهُ الكَافِرُ في النَّارِ ؛ لأنَّهُ مُسْتَحِقٌّ لِذَلِكَ بِكفْرِهِ )) ومعنى (( فِكَاكُكَ )) : أنَّكَ كُنْتَ معْرَّضاً لِدُخُولِ النَّارِ وَهَذَا فِكَاكُكَ ؛ لأنَّ الله تَعَالَى قَدَّرَ للنَّارِ عَدَداً يَمْلَؤُهَا فَإذَا دَخَلَهَا الكُفَّارُ بِذُنُوبِهِمْ وَكُفْرِهِمْ صَارُوا في مَعنَى الفِكَاك للمُسْلِمِينَ والله أعلم.
“ஒவ்வொரு மனிதனுக்கும் சொர்க்கத்தில் ஒரு இடம் நரகத்தில் ஒரு இடம் இருக்கும். இறைநம்பிக்கையாளர் சொர்க்கத்தில் நுழையும் போது அவனை பின்தொடர்ந்து ஒரு இறை நிராகரிப்பாளன் நரகத்தில் நுழைவான். ஏனெனில் அவன் இறைநிகராகரிப்பின் காரணத்தால் அதற்கு தககுதியாகிறான்’“ என்ற நபிமொழி “அல்லாஹ், மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்’ என்ற நபிமொழியின் கருத்தை விளக்கிறது.
“உன்னை விடுதலை செய்தவன்’“ என்பதின் கருத்தாகிறது, உன்னை நரகத்திற்கு எடுத்துக் காட்டும் போது இவன் உன்னை விடுவிப்பனாக இருப்பான். ஏனெனில் அல்லாஹ் நரகத்திற்கு என்ற சிலரை நிர்ணயித்துள்ளான். அவர்களை அதில் நிரப்புவான். இறைநிராகாரிப்பவர்கள் அவர்களின் பாவத்தினால் அவர்களின் இறைநிராகரிப்பினால் நரகத்தில் நுழையும் போது முஸ்லிம்கள் நரகத்திலிருந்து விடுவிக்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதாகும்.
433- وعن ابن عمر رضي الله عنهما قَالَ : سَمِعْتُ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : (( يُدْنَى المُؤْمِنُ يَوْمَ القِيَامَة مِنْ رَبِّهِ حَتَّى يَضَعَ كَنَفَهُ عَلَيهِ فَيُقَرِّرُهُ بذُنُوبِهِ فيقولُ : أتعرِفُ ذَنْبَ كَذَا ؟ أتَعرفُ ذَنْبَ كَذَا ؟ فيقول : رَبِّ أعْرِفُ قَالَ : فَإنِّي قَدْ سَتَرْتُهَا عَلَيْكَ في الدُّنْيا وَأنَا أغْفِرُهَا لَكَ اليَومَ فَيُعْطَى صَحيفَةَ حَسَنَاتِهِ )) مُتَّفَقٌ عَلَيهِ. (( كَنَفَهُ )) : سَتْرُهُ وَرَحْمَتُهُ.
ஹதீஸ் எண் : 433
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர் ஒருவர் தம் இறைவனுக்கு அருகில் கொண்டுசெல்லப்படுவார். இறைவன் தனது திரையைப் போட்டு (அவரை மறைத்து)விடுவான். அப்போது அந்த இறைநம்பிக்கையாளர் இறைவனிடம் தம் பாவங்களை ஒப்புக் கொள்வார். “நீ (உலகத்தில் செய்த இன்னின்ன பாவங்களை) அறிவாயா?’’ என்று இறைவன் கேட்பான்.
அதற்கு அந்த நம்பிக்கையாளர், “என் இறைவா! நான் (அவற்றை) அறிவேன்’’ என்று கூறுவார். அப்போது இறைவன், “நான் அவற்றை உலகில் (மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்’’ என்று சொல்வான். பின்னர் அவருடைய நன்மைகளின் ஏடு அவரிடம் கொடுக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள் : புகாரி (6070), முஸ்லிம் (5345)
குறிப்பு : இது முஸ்லிமின் வாசகமாகும்.
434- وعن ابن مسعود رضي الله عنه : أنَّ رَجُلاً أصَابَ مِن امْرَأة قُبْلَةً فَأتَى النَّبيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَأخْبَرَهُ فَأنْزَلَ الله تَعَالَى : وَأَقِمِ الصَّلاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفاً مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَات [ هود : 114] فَقَالَ الرجل: أَليَ هَذَا يَا رَسُول الله ؟ قَالَ : (( لجميعِ أُمَّتِي كُلِّهِمْ )) مُتَّفَقٌ عَلَيهِ.
ஹதீஸ் எண் : 434
ஒரு மனிதர் ஒரு(அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், “பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன’’ எனும் (11:114ஆவது) வசனத்தை அருளினான். அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா)?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும்தான்’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள் : புகாரி (526), முஸ்லிம் (5332)
435- وعن أنس رضي الله عنه قَالَ: جاء رجل إِلَى النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَقَالَ : يَا رَسُول الله أَصَبْتُ حَدّاً فَأَقِمْهُ عَلَيَّ وَحَضَرَتِ الصَّلاةُ فَصَلَّى مَعَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَلَمَّا قَضَى الصَّلاةَ قَالَ : يَا رَسُول الله إنِّي أصَبْتُ حَدّاً فَأقِمْ فيَّ كِتَابَ الله. قَالَ : (( هَلْ حَضَرْتَ مَعَنَا الصَّلاةَ )) ؟ قَالَ : نَعَمْ. قَالَ : (( قَدْ غُفِرَ لَكَ )) مُتَّفَقٌ عَلَيهِ.
ஹதீஸ் எண் : 435
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்’’ என்றார். அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே, அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்.
தொழுகையை முடித்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ளபடி தண்டனையி)னை என் மீது நிறைவேற்றுங்கள்’’ என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், “எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?’’ என்று கேட்டார்கள். அவர் “ஆம் (தொழுதேன்)’’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்கள் : புகாரி (6823), முஸ்லிம் (5337)
وقوله : (( أصَبْتُ حَدّاً )) مَعنَاهُ : مَعْصِيَةً تُوجِبُ التَّعْزيرَ وَلَيْسَ المُرَادُ الحدّ الشَّرعيَّ الحَقِيقيَّ كَحَدِّ الزِّنَا وَالخمر وَغَيرِهِمَا فإنَّ هذِهِ الحُدودَ لا تَسْقُطُ بالصَّلاةِ وَلاَ يَجُوزُ للإمَامِ تَرْكُهَا.
“நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன்’’ என்பதின் கருத்தாகிறது, கண்டிக்கப்படுவதற்குரிய பாவம் என்பதாகும். விபச்சாரம், மது போன்றவற்றிக்குரிய தண்டனைப் போன்ற குற்றவியல் சட்டம் இல்லை. ஏனெனில் இந்த தண்டனைச் சட்டங்கள் தொழுகையால் நீங்காது. இதை (தண்டனை கொடுக்காமல்) விட்டுவிடுவதும் தலைவருக்கு கூடாது.
436- وعنه قَالَ : قَالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : (( إنَّ الله لَيرْضَى عَنِ العَبْدِ أنْ يَأكُلَ الأَكْلَةَ فَيَحْمَدُهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدُهُ عَلَيْهَا )) رواه مسلم.
(( الأَكْلَة )) : بفتح الهمزة وهي المرةُ الواحدةُ مِنَ الأكلِ كَالغَدوَةِ وَالعَشْوَةِ والله أعلم.
ஹதீஸ் எண் : 436
ஒரு முறை உணவு உண்ட பின்னர் அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற, அல்லது ஒரு முறை பானம் அருந்திய பிறகு அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் திருப்திக் கொள்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (5282)
437- وعن أَبي موسى رضي الله عنه عن النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( إنَّ الله تَعَالَى يَبْسُطُ يَدَهُ باللَّيلِ ليَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيلِ حَتَّى تَطلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا )) رواه مسلم.
ஹதீஸ் எண் : 437
அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவ மன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான்) என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா (ரலி), நூல் : முஸ்லிம் (5324)
438- وعن أَبي نجيح عمرو بن عَبَسَة – بفتح العين والباءِ – السُّلَمِيِّ رضي الله عنه قَالَ : كُنْتُ وأنَا في الجاهِلِيَّةِ أظُنُّ أنَّ النَّاسَ عَلَى ضَلاَلَةٍ وَأَنَّهُمْ لَيْسُوا عَلَى شَيْءٍ وَهُمْ يَعْبُدُونَ الأَوْثَانَ فَسَمِعْتُ بِرَجُلٍ بِمَكَّةَ يُخْبِرُ أخْبَاراً فَقَعَدْتُ عَلَى رَاحِلَتِي فَقَدِمْتُ عَلَيهِ فإِذَا رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم مُسْتَخْفِياً جرَءاءُ عَلَيهِ قَومُهُ فَتَلَطَّفَتُ حَتَّى دَخَلْتُ عَلَيهِ بِمَكَّةَ فَقُلْتُ لَهُ : مَا أنْتَ ؟ قَالَ : (( أنا نَبيٌّ )) قُلْتُ : وما نبيٌّ ؟ قَالَ : (( أرْسَلَنِي الله )) قُلْتُ : وبأيِّ شَيْء أرْسَلَكَ ؟ قَالَ : (( أَرْسَلَنِي بِصِلَةِ الأرْحَامِ وَكَسْرِ الأَوْثَانِ وَأنْ يُوَحَّدَ اللهُ لاَ يُشْرَكُ بِهِ شَيْء )) قُلْتُ : فَمَنْ مَعَكَ عَلَى هَذَا ؟ قَالَ : (( حُرٌّ وَعَبْدٌ )) ومعه يَوْمَئذٍ أَبُو بكرٍ وبلالٌ رضي الله عنهما قُلْتُ : إنّي مُتَّبِعُكَ قَالَ : (( إنَّكَ لَنْ تَسْتَطيعَ ذلِكَ يَومَكَ هَذَا ألا تَرَى حَالي وحالَ النَّاسِ ؟ وَلَكِنِ ارْجعْ إِلَى أهْلِكَ فَإِذَا سَمِعْتَ بي قَدْ ظَهرْتُ فَأتِنِي )) قَالَ : فَذَهَبْتُ إِلَى أهْلِي وقَدِمَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم المَدِينَةَ حَتَّى قَدِمَ نَفَرٌ مِنْ أهْلِي المَدِينَةَ فقلتُ : مَا فَعَلَ هَذَا الرَّجُلُ الَّذِي قَدِمَ المَدِينَةَ ؟ فقالوا : النَّاس إلَيهِ سِرَاعٌ وَقَدْ أرادَ قَومُهُ قَتْلَهُ فلَمْ يَسْتَطِيعُوا ذلِكَ فقَدِمْتُ المدينَةَ فَدَخَلْتُ عَلَيهِ فقلتُ : يَا رَسُول الله أَتَعْرِفُني ؟ قَالَ : (( نَعَمْ أنْتَ الَّذِي لَقَيْتَنِي بمكّةَ )) قَالَ : فقلتُ : يَا رَسُول الله أخْبِرنِي عَمَّا عَلَّمَكَ الله وأَجْهَلُهُ أخْبِرْنِي عَنِ الصَّلاَةِ ؟ قَالَ : (( صَلِّ صَلاَةَ الصُّبْحِ ثُمَّ اقْصُرْ عَنِ الصَّلاَةِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ قِيدَ رُمْحٍ فَإنَّهَا تَطْلُعُ حِينَ تَطلُعُ بَيْنَ قَرْنَيْ شَيطَان وَحينَئذٍ يَسجُدُ لَهَا الكُفَّارُ ثُمَّ صَلِّ فَإنَّ الصَلاَةَ مَشْهُودَةٌ مَحْضُورةٌ حَتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بالرُّمْحِ ثُمَّ اقْصُرْ عَنِ الصَّلاةِ فَإنَّهُ حينئذ تُسْجَرُ جَهَنَّمُ فإذَا أقْبَلَ الفَيْءُ فَصَلِّ فَإنَّ الصَّلاةَ مَشْهُودَةٌ مَحضُورَةٌ حَتَّى تُصَلِّي العصرَ ثُمَّ اقْصرْ عَنِ الصَّلاةِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ فإنَّهَا تَغْرُبُ بينَ قَرْنَيْ شَيطانٍ وَحِينَئذٍ يَسْجُدُ لَهَا الكُفّارُ )) قَالَ : فقلتُ : يَا نَبيَّ الله فالوضوءُ حدثني عَنْهُ ؟ فَقَالَ : (( مَا مِنْكُمْ رَجُلٌ يُقَرِّبُ وَضُوءهُ فَيَتَمَضْمَضُ وَيسْتَنْشِقُ فَيَسْتَنْثِرُ إلاَّ خَرَّتْ خَطَايَا وَجْهِهِ مِنْ أطْرَافِ لِحْيَتِهِ مَعَ المَاءِ ثُمَّ يَغْسِلُ يديهِ إِلَى المِرفقَيْن إلاَّ خَرَّتْ خَطَايَا يَدَيْهِ مِنْ أنَامِلِهِ مَعَ الماءِ ثُمَّ يَمْسَحُ رَأسَهُ إلاَّ خرّتْ خطايا رأسِهِ من أطْرَافِ شَعْرِهِ مَعَ الماءِ ثُمَّ يغسل قدميه إِلَى الكعْبَيْنِ إلاَّ خَرَّتْ خَطَايَا رِجلَيْهِ مِنْ أنَاملِهِ مَعَ الماءِ فَإنْ هُوَ قَامَ فَصَلَّى فَحَمِدَ الله تَعَالَى وأثنى عَلَيهِ ومَجَّدَهُ بالَّذي هُوَ لَهُ أهْلٌ وَفَرَّغَ قلبه للهِ تَعَالَى إلاَّ انْصَرفَ مِنْ خَطِيئَتِهِ كهيئته يَومَ وَلَدتهُ أُمُّهُ ))
فحدث عَمرُو بن عَبسَة بهذا الحديث أَبَا أُمَامَة صاحِب رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَقَالَ لَهُ أَبُو أُمَامَة : يَا عَمْرُو بنُ عَبسَة انْظُر مَا تقولُ ! في مقامٍ واحدٍ يُعْطَى هَذَا الرَّجُلُ ؟ فَقَالَ عَمْرٌو : يَا أَبَا أُمَامَة لقد كَبرَتْ سِنّي وَرَقَّ عَظمِي وَاقْتَرَبَ أجَلِي وَمَا بِي حَاجَةٌ أنْ أكْذِبَ عَلَى اللهِ تَعَالَى وَلا عَلَى رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم لَوْ لَمْ أسمعه مِنْ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إلاَّ مَرَّةً أَوْ مَرَّتَينِ أَوْ ثَلاثاً – حَتَّى عَدَّ سَبْعَ مَرَّات – مَا حَدَّثْتُ أبداً بِهِ وَلكنِّي سمعتُهُ أكثَر من ذلِكَ. رواه مسلم.
قوله : (( جُرَءاءُ عَلَيهِ قَومُه )) هُوَ بجيم مضمومة وبالمد عَلَى وزنِ عُلماءَ أيْ : جَاسِرونَ مُستَطِيلُونَ غيرُ هائِبينَ هذِهِ الرواية المشهورةُ ورواه الحُمَيْدِيُّ وغيرُهُ (( حِرَاءٌ )) بكسر الحاء المهملة وَقالَ : معناه غِضَابٌ ذَوُو غَمّ وهَمّ قَدْ عِيلَ صَبرُهُمْ بِهِ حَتَّى أثَّرَ في أجسامهم من قولِهِم : حَرَى جسمهُ يَحْرَى إِذَا نَقَصَ مِنْ ألمٍ أَوْ غَمٍّ ونحوهِ والصَّحيحُ أنَّهُ بالجيمِ.قوله : (( بَيْنَ قَرنَيْ شيطان )) أيْ ناحيتي رأسِهِ والمرادُ التَّمْثيلُ وَمعْنَاهُ : أنه حينئذٍ يَتَحرَّكُ الشَّيطَانُ وَشيعَتُهُ وَيتَسَلَّطُونَ. وقوله : (( يُقَرِّبُ وَضوءهُ )) معناه يُحضِرُ الماءَ الَّذِي يَتَوضّأ بِهِ وقوله : (( إلاَّ خَرَّت خطايا )) هُوَ بالخاءِ المعجمة : أيْ سقطت ورواه بعضُهم (( جَرَت )) بالجيم والصحيح بالخاءِ وَهُوَ رواية الجمهور. وقوله : (( فينْتَثرُ )) أيْ يَستخرجُ مَا في أنفهِ مِنْ أذىً والنَّثْرَةُ : طَرَفُ الأنْفِ.
ஹதீஸ் எண் : 438
நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்தபோது மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள்; அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் கிடையாது; அவர்கள் சிலைகளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணி (வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லிவருவதாகக் கேள்விப்பட்டேன். எனவே, நான் எனது வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு நபி (ஸல்) அவர்கள் தலைமறைவாக இருந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய சமுதாயத்தார் அவர்களுக்கெதிரான துணிகரச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எனவே, நான் ஆரவாரமின்றி மெதுவாக மக்காவுக்குள் நுழைந்து அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் நான், “நீங்கள் யார்?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நான் ஒரு நபி’’ என்றார்கள். நான் “நபி என்றால் என்ன?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்’’ என்று கூறினார்கள். நான் “என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?’’ என்று கேட்டேன். அதற்கு “இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்’’ என்று பதிலளித்தார்கள். நான் “இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் யார் உங்களுடன் இருக்கின்றார்கள்?’’ என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “ஒரு சுதந்திரவானும் ஓர் அடிமையும் உள்ளனர்’’ என்றார்கள். (அன்றைய நாளில் அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நபியவர்களை ஏற்று அவர்களுடன் இருந்தனர்.)
“நானும் தங்களைப் பின்பற்ற விழைகிறேன்’’ என்று நான் கூறினேன். அதற்கவர்கள் “இந்த நாளில் அவ்வாறு உம்மால் என்னைப் பின்பற்ற இயலாது. எனது நிலையையும் மக்களின் நிலையையும் நீர் பார்க்கவில்லையா? (தற்போது) நீர் உம்முடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும்! நான் எழுச்சி கண்டேன் என என்னைப் பற்றி நீர் கேள்விப்பட்டால் என்னிடம் வாரும்!’’ என்றார்கள். அதற்கேற்ப நான் என் குடும்பத்தாரிடம் சென்றேன்.
நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்குச் சென்றுவிட்டார்கள். நான் என் குடும்பத்தாரிடம் இருந்துகொண்டே செய்திகளைக் கேட்டு அறிந்துகொண்டிருந்தேன். அவர்கள் மதீனாவுக்குச் சென்றவுடன் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்தேன். ஒரு சமயம் மதீனாவாசிகளில் சிலர் என்னிடம் வந்தனர். அவர்களிடம் “மதீனாவிற்கு வந்துள்ள இந்த மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “மக்கள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர். (மக்காவில்) அவருடைய சமுதாயத்தார் அவரைக் கொன்றுவிடத் திட்டமிட்டனர். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்று கூறினர்.
பின்னர் நான் மதீனாவுக்குச் சென்று நபியவர்களைச் சந்தித்தேன். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என்னை அடையாளம் தெரிகிறதா?’’ என்று கேட்டேன். அவர்கள் “ஆம், மக்காவில் என்னை வந்து சந்தித்தவர்தாமே!’’ என்று கேட்டார்கள். நான் “ஆம்‘ என்றேன். பிறகு “அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்துள்ள, எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி ஈட்டியளவு உயரும் வரை தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும்போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர்வரைத் தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும் வரைத் தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்’’ என்று கூறினார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! அங்கத் தூய்மை (உளூ) செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (தண்ணீரோடு சேர்ந்து கீழே) விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்தி)டும்போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் தம் பாதங்களைக் கணைக்கால்கள்வரைக் கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. (அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்’’ என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) நபித்தோழர் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியபோது நான், “அம்ர் பின் அபசா! என்ன சொல்கிறீர்கள் என்பதை நன்கு யோசித்துச் சொல்லுங்கள்! ஒரே இடத்தில் (இத்தனையும்) அந்த மனிதர் வழங்கப்பெறுகிறாரா?’’ என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள், “அபூஉமாமா, என் வயது முதிர்ந்துவிட்டது; எனது எலும்பு நலிந்துவிட்டது; எனது தவணை நெருங்கி விட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் மீதோ அவன் தூதர் மீதோ பொய்யுரைப்பதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை. நான் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை (இவ்வாறு ஏழுவரை எண்ணிச் சொல்கிறார்) மட்டுமே செவியுற்றிருந்தால் இதை ஒருபோதும் நான் அறிவித்திருக்கமாட்டேன். ஆனால், அதைவிட அதிகத் தடவைகள் நான் செவியுற்றேன் (அதனால்தான் அறிவித்தேன்)’’ என்றார்கள்.
அறிவிப்பவர் : அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி), நூல் : முஸ்லிம் (1512)
439- وعن أَبي موسى الأشعري رضي الله عنه عن النَّبيّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : (( إِذَا أرادَ الله تَعَالَى رَحمةَ أُمَّةٍ قَبَضَ نَبيَّهَا قَبْلَها فَجعلهُ لَهَا فَرطاً وسلَفاً بَيْنَ يَديْهَا وإذَا أرادَ هَلَكَةَ أُمَّةٍ عَذَّبَهَا وَنَبِيُّهَا حَيٌّ فَأهلكَها وَهُوَ حيٌّ يَنظُرُ فَأقرّ عَينَهُ بهلاكِها حِينَ كَذَّبُوهُ وَعَصَوا أمْرَهُ )) رواه مسلم.
ஹதீஸ் எண் : 439
அல்லாஹ், தன் அடியார்களில் ஒரு சமுதாயத்தாருக்கு அருள் புரிய நாடினால், அதற்கு முன்னரே அதன் தூதரைக் கைப்பற்றி, அவரை அந்தச் சமுதாயத்தாருக்கு முன்பே சென்று (தக்க ஏற்பாடுகளுடன்) காத்திருக்கச் செய்கிறான். அல்லாஹ் ஒரு சமுதாயத்தாரை அழிக்க நாடினால், அந்தச் சமுதாயத்தாரின் தூதர் உயிருடனிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சமுதாயத்தாரை வேதனைக்குள்ளாக்கி அழிக்கிறான். அவரை நம்ப மறுத்து அவரது கட்டளைக்கு மாறு செய்யும்போது, அவர்களை அழிப்பதன் மூலம் அவரைக் கண் குளிர்ச்சி அடையச் செய்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல் : முஸ்லிம் (4596)
