விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு
விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு
தொழுகையில் விரல் அசைத்தல் நபிவழி என்பதை ஆதாரத்துடன் சொல்லி வருகிறோம். ஆனால் இதை ஏற்காத மத்ஹப்வாதிகளும் ஹதீஸ் கலை பற்றிய ஞானமில்லாமல் தமக்குத் தாமே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்பவர்களும் சில பிரசுரங்களை வெளியிட்டு இது குறித்த ஹதீஸை பலவீனமானது என்பதை நிறுவ முயன்றுள்ளனர். இந்தப் பிரசுரங்களுக்கும், நூலுக்கும் தக்க மறுப்பை தயாரித்து அனுப்பியுள்ளோம். அதை சரிபார்த்து தேவையான மாற்றங்கள் செய்து இங்கே வெளியிடுகிறோம்.
தொழுகையில் விரலசைப்பது தொடர்பான ஆய்வுக் கட்டுரை
தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைப்பது பெரிய சர்ச்சைக்குரிய சட்டமாக இன்றைக்கு சிலரால் சமுதாயத்தில் ஆக்கப்பட்டு விட்டது.
இருப்பில் விரலை அசைப்பது நபிவழி என்றும் இந்த நபிவழியை தொழுகையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நாம் கூறி வருகிறோம். இதில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் விரலை அசைப்பது நபிவழி இல்லை என்றும் தொழுகையில் விரலசைப்பது பித்அத் என்றும் கூறிவருகின்றனர்.
மனோ இச்சைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அல்லாஹ்விற்குப் பயந்து நபிமொழிகளைப் படிப்பவர்கள் இதில் குழப்பம் அடைய மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைத்தார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொள்வார்கள். இந்த நபிவழியை கேலியும் கிண்டலும் செய்ய மாட்டார்கள்.
மனோஇச்சையை மார்க்கமாகக் கொண்டவர்கள் இந்தச் செய்தியில் எழுப்பும் தேவையற்ற சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவான பதிலை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆய்வுக் கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளோம். முதல் பகுதியில் விரலசைப்பது நபிவழி என்பதற்கான ஆதாரங்களையும் இந்த நபிவழிக்கு எதிராக வைக்கப்படும் தவறான வாதங்களுக்கு முறையான பதிலையும் தெளிவுபடுத்துவோம்.
இரண்டாம் பகுதியில் விரலசைப்பது கூடாது என்பவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக்க் காட்டும் செய்திகளின் உண்மை நிலையையும் அதற்கான சரியான விளக்கத்தையும் கூறுவோம்.
முதல் பகுதி
இருப்பில் விரலசைப்பதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாக அமைந்துள்ளது.
879أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي
வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன்.
அப்போது அவர்கள், எழுந்து நின்று “தக்பீர்’ கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் “ருகூஉ’ செய்ய விரும்பியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக்கால்களின் மீது வைத்தார்கள். பின்னர் தமது தலையை (“ருகூஉ’விலிருந்து) நிமிர்த்தியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் “சஜ்தா’ செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நூல் : நஸாயீ 870
விரல் அசைத்தல் தொடர்பான இந்த செய்தி செய்தி தாரமீ (1323), அஹ்மத் (18115), ஸஹீஹ் இப்னு ஹுஸைமா (814), ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (பாகம் 5, பக்கம் 170), தப்ரானீ கபீர் பாகம் 22, பக்கம் 35), பைஹகீ (பாகம் 1, பக்கம் 310), ஸுனனுல் குப்ரா (பாகம் 1, பக்கம் 376), அல்முன்தகா இப்னுல் ஜாரூத் (பாகம் 1, பக்கம் 62) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக்கொண்டிருந்தார்கள் என இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. இதை வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார்.
இந்த நபித்தோழர் ஹள்ர மவ்த் என்ற ஊரைச் சேர்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள் என்பதைக் கவனித்து அறிவதற்காகவே அவர் மதீனா வந்தார். நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு செயலையும் நன்கு கவனித்துள்ளார்.
இதை மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன் என்று இந்த நபித்தோழர் குறிப்பிடுகின்றார்.
எனவே நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற இந்த நபித்தோழரின் கூற்று தெளிவானதும் உறுதியானதுமாகும்.
இதே ஹதீஸ் தாரமியிலும் இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தியில் இருப்பில் விரலசைப்பதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் வாசகம் இடம்பெற்றுள்ளது.
1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي
இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தைப் பார்த்தேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல் : தாரமீ (1323)
நபி (ஸல்) அவர்கள் மட்டுமின்றி நபித்தோழர்களும் தொழுகையில் விரலசைத்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.
தவறான வாதங்கள்
1 ஆஸிம் பின் குலைப் பலவீனமானவரா?
விரலசைத்தல் சம்பந்தப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இப்னுல் மதீனீ அவர்கள் இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று விமர்சனம் செய்துள்ளார்கள். இதை அடிப்படையாக வைத்து சிலர் விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று கூறுகின்றனர்.
ஆஸிம் பின் குலைப் பல அறிஞர்களால் நம்பகமானவர் என்று நற்சான்று அளிக்கப்பட்டவர். இவர் நம்பகமானவர் என்று இமாம் அஹ்மது, இமாம் நஸாயீ, இமாம் அபூ ஹாதிம், இமாம் அஹ்மது பின் ஸாலிஹ், இமாம் இப்னு சஅத், இமாம் யஹ்யா பின் மயீன், இப்னு ஷிஹாப், இப்னு ஷாஹீன், இமாம் இஜ்லீ மற்றும் பலர் கூறியுள்ளனர். இமாம் அலீ பின் மதீனீ அவர்கள் மட்டுமே இவரைப் பற்றி குறை கூறியுள்ளார்.
ஒரு அறிவிப்பாளரைப் பற்றிக் குறை சொல்லப்பட்டால் அந்தக் குறை என்ன என்று தெளிவாகக் கூற வேண்டும். அவ்வாறு கூறினால் மட்டுமே அதைப் பரிசீலனை செய்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பாக ஒருவரைப் பற்றி பலர் நல்லவர், சிறந்தவர், நம்பகமானவர் என்று கூறியிருக்கும் போது குறை சொல்பவர் அவரின் குறையைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவரின் விமர்சனம் எந்த மதிப்பும் இல்லாததாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படும். இதுவும் ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ள விதியாகும்.
இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது ஆஸிம் பின் குலைப் என்பவரை இப்னுல் மதீனீ அவர்களைத் தவிர அனைவரும் பாராட்டியுள்ளனர், நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இவரைப் பற்றி விமர்சனம் செய்யும் இப்னுல் மதீனீ அவர்கள் அவர் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று காரணம் ஏதும் இல்லாமல் கூறியுள்ளார். ஆஸிம் பலவீனமானவர் என்பதற்கு ஏற்கத்தகுந்த எந்தக் காரணத்தையும் இப்னுல் மதீனீ அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.
மேலும் இப்னுல் மதீனீ அவர்கள் அறிவிப்பாளரை விமர்சனம் செய்வதில் கடினப்போக்குள்ளவர். நம்பகமானவர்களைப் பலவீனமானவர்கள் என்று தவறுதலாக கூறக்கூடியவர். இதை இமாம் இப்னு அபீ ஹாதிம் அவர்கள் அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
الجرح والتعديل لابن أبي حاتم (7 / 73):
يكتب حديثه (سئل أبو زرعة عن فضيل بن سليمان فقال لين الحديث روى عنه علي بن المديني وكان من المتشددين -) .
அலீ பின் மதீனீ அவர்கள் அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்வதில் கடினப்போக்குள்ளவராக இருந்தார் என அபூ சுர்ஆ தெரிவித்தார்.
நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் : 7 பக்கம் : 73
ஆஸிம் பின் குலைபைப் பற்றி மற்ற அறிஞர்கள் அனைவரும் நல்லவிதமாக கூறியிருக்கும் போது இமாம் இப்னுல் மதீனீ அவர்கள் மட்டும் காரணம் கூறாமல் விமர்சனம் செய்துள்ளதால் இமாம் இப்னுல் மதீனீ அவர்கள் அறிவிப்பாளர் ஆஸிம் விஷயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
ஆஸிம் பின் குலைப் நம்பகமானவர் என்பதால் இவரிடமிருந்து நான்கு ஹதீஸ்களை இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். எனவே ஆஸிம் பின் குலைப் இமாம் முஸ்லிம் அவர்களிடத்திலும் நம்பகமானவர் ஆவார்.
ஆஸிம் பின் குலைப் இடம்பெற்ற ஒரு செய்தியை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சரியான செய்தி என்று கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஹஜர் அவர்களைப் பொறுத்தவரை ஒரு அறிவிப்பாளர் விசயத்தில் அறிஞர்களின் ஒட்டமொத்த கருத்தையும் கவனத்தில் கொண்டு இறுதியாக சரியான முடிவை எடுக்கக்கூடியவர்.
ஆஸிம் பின் குலைப் பற்றி அலீ பின் மதீனீ அவர்கள் செய்த விமர்சனத்தை இந்த இமாம் கண்டுகொள்ளாமல் ஆஸிம் பின் குலைப் நம்பகமானவர் என்ற முடிவையே எடுத்துள்ளார். எனவே இப்னுல் மதீனீ அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இருப்பில் விரலசைப்பது தொடர்பான செய்தி ஆதாரப்பூர்வமானது என்பதை சான்றுகளுடன் நிறுபித்து விட்டோம். மேலதிக தகவலுக்காக பின்வரும் தகவல்களைக் கூறுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் ஆட்காட்டி விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று இமாம் நவவீ அவர்கள் நற்சான்று அளித்துள்ளார்கள்.
خلاصة الأحكام (1 / 428):
1391 – وَعَن وَائِل: ” أَنه وصف صَلَاة رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ وَذكر وضع الْيَدَيْنِ فِي التَّشَهُّد قَالَ: ثمَّ رفع أُصْبُعه، فرأيته يحركها يَدْعُو بهَا ” رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد صَحِيح.
நூல் : குலாசதுல் அஹ்காம் பாகம் : 1 பக்கம் : 428)
இமாம் இப்னுல் முலக்கீன் அவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்று நற்சான்று அளித்துள்ளார்.
البدر المنير (4 / 11):
عَن وَائِل بن حجر رَضِيَ اللَّهُ عَنْه أَنه وصف صَلَاة رَسُول الله – صَلَّى الله عَلَيْهِ وَسلم – وَذكر وضع الْيَدَيْنِ فِي التَّشَهُّد، قَالَ: ثمَّ رفع أُصْبُعه فرأيته يحركها يَدْعُو بهَا . هَذَا الحَدِيث صَحِيح رَوَاهُ الْبَيْهَقِيّ فِي سنَنه بِهَذَا اللَّفْظ بِإِسْنَاد صَحِيح،
நூல் : அல்பத்ருல் முனீர் பாகம் : 4 பக்கம் : 11
திரித்துக் கூறப்பட்ட ஹதீஸ் கலை விதி
ஒரு அறிவிப்பாளர் குறித்து பல அறிஞர்கள் நம்பகமானவர் என்றும் ஒரே ஒரு அறிஞர் பலவீனமானவர் என்று கூறினால் அந்த ஒரு அறிஞரின் கூற்றைத் தான் எடுக்க வேண்டும் என நாம் கூறுவதாகச் சிலர் பொய் கூறி வருகின்றனர்.
இந்த விதியை நாம் ஏற்றுக் கொண்டதாகவும் எனவே இதனடிப்படையில் விரலசைப்பதற்கு ஆதாரமாக நாம் கூறும் ஹதீஸ் பலவீனமானது என்றும் நிறுவ முயற்சிக்கின்றனர்.
ஆனால் இவர்கள் நாம் கூறாத விதியை இவர்களாக்க் கற்பனை செய்துகொண்டு நமக்கு பதில் தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
இவர்கள் கூறுவது போன்ற விதியை என்றைக்கும் நாம் சொன்னதில்லை. அதனடிப்படையில் எந்த ஹதீஸையும் பலவீனம் என்று கூறியதில்லை.
ஒரு அறிவிப்பாளர் குறித்து பல அறிஞர்கள் நல்ல விதமாகவும் ஒரு அறிஞர் குறையும் கூறினால் அப்போது குறை கூறிய அறிஞர் குறைக்கான காரணத்தை தெளிவாகக் கூறியுள்ளாரா? என்று பார்ப்போம்.
தக்க சான்றுடன் தெளிவாக குறை கூறப்பட்டிருந்தால் அதைக் கூறியவர் ஒருவராக இருந்தாலும் அவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று முடிவெடுப்போம்.
அந்த ஒரு அறிஞர் குறைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தாமல் மூடலாக விமர்சனம் செய்திருந்தால் அப்போது அவருடைய கூற்றை எடுக்காமல் மற்ற அறிஞர்களின் கூற்றையே எடுப்போம். இது தான் நமது நிலைபாடு.
ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறப்பட்டுவிட்டதா? என்று மட்டும் பார்க்க மாட்டார்கள். கூறப்பட்ட குறை காரணத்துடன் தெளிவாக உள்ளதா? என்பதையும் சேர்த்துத் தான் அறிஞர்கள் பார்ப்பார்கள். விமர்சனம் தெளிவில்லாமல் பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருந்தால் அது நிராகரிக்கப்படும்.
விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள ஆஸிம் பின் குலைபுடைய ஹதீஸில் இந்த நிலைபாட்டிற்கு மாற்றமாக நாம் முடிவெடுக்கவில்லை. மாறாக இந்த விதியின் அடிப்படையில் ஆஸிம் விஷயத்தில் இப்னுல் மதீனீ அவர்கள் கூறிய குறை தெளிவின்றி இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் என்று முடிவெடுத்துள்ளோம்.
அறிவிப்பாளர் அபூ பல்ஜ் அவர்களுடைய அறிவிப்பின் நிலை
பலருக்கு மாற்றமாக ஒரு அறிஞர் குறை கூறினாலும் அதை ஏற்க வேண்டும் என நாம் கூறியதாக இவர்களாக ஒரு விதியைக் கற்பனை செய்து கொண்டனர். இந்த விதியின் அடிப்படையில் பின்வரும் செய்தியை பலவீனம் என்று நாம் கூறுவதாகவும் வாதிடுகின்றனர்.
4535حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بَلْجٍ عَنْ زَيْدٍ أَبِي الْحَكَمِ الْعَنَزِيِّ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது கைகொடுத்து மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வை புகழந்து அவனிடம் அவ்விருவரும் பாவமன்னிப்புத் தேடினால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : அபூதாவுத் (4535))
இந்தச் செய்தியில் அபூ பல்ஜ் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி பல அறிஞர்கள் நல்லவிதமாகக் கூறினாலும் சில அறிஞர்கள் குறை கூறியுள்ளதால் குறை கூறிய அறிஞர்களின் கூற்றின் அடிப்படையில் இது பலவீனமானது என்று நாம் கூறியதாக வாதிடுகின்றனர்.
அபூ பல்ஜுடைய விசயத்தில் அவர் பலவீனமானவர் என்று நாம் முடிவெடுத்ததைப் போன்று ஆஸிம் பின் குலைபுடைய விசயத்திலும் அவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். எனவே இந்தச் செய்தியின் உண்மை நிலையை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
அறிவிப்பாளர் அபூ பல்ஜ் குறித்து சில அறிஞர்கள் நல்லவிதமாக்க் கூறினாலும் சிலர் இவரைப் பற்றி குறை கூறியுள்ளனர். இமாம் புகாரி அவர்களும், இமாம் யஹ்யா பின் மயீன் அவர்களும் குறைக்கான காரணத்தை தெளிவுபடுத்தாமல் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். ஆனால் இவரை குறை கூறிய மற்ற அறிஞர்கள் குறைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளனர்.
இவரைப் பற்றி குறை கூறிய அறிஞர்கள் ஆஸிம் விசயத்தில் இப்னுல் மதீனீ குறைக்கான காரணத்தை தெளிவுபடுத்தாமல் விமர்சனம் செய்தது போன்று விமர்சனம் செய்யவில்லை.
மாறாக இவரிடத்தில் உள்ள குறையை தெளிவாக்க் குறிப்பிட்டுள்ளனர். இவர் நம்பகமானவராக இருந்தாலும் தவறிழைக்கக் கூடியவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சில வேளைகளில் தவறிழைப்பார் என்று கூறியுள்ளார். இமாம் அஹ்மது அவர்கள் இவர் தவறான செய்திகளை அறிவிக்கக்கூடியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முஸாபஹா பற்றிய இந்தச் செய்தியில் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் அபீ ஷஃசாயி என்பவர் அறிவிக்கின்றார். இவர் நம்பகமானவர் என்று முடிவு செய்வதற்கு ஏற்கத் தகுந்த எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
மேலும் இந்தச் செய்தியை அபூ பல்ஜிடமிருந்து ஹுஸைம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் தத்லீஸ் எனும் இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர் என இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதாவது தனக்கு அறிவித்த அறிவிப்பாளரைப் போக்கிவிட்டு தான் கேட்காத அறிவிப்பாளரிடமிருந்து கேட்டதைப் போன்ற தோரணையில் அறிவிப்பார். இவரைப் போன்றவர்கள் நான் கேட்டேன் எனக்கு அறிவித்தார் என கேட்டதை உறுதிபடுத்தும் வாசகத்தை கூறினால் தான் இவர்களுடைய அறிவிப்பு ஏற்கப்படும்.
ஆனால் மேற்கண்ட ஹதீஸில் ஹுஸைம் அபூ பல்ஜிடம் நேரடியாக்க் கேட்டதைத் தெளிவுபடுத்தும் வகையில் எந்த வாசகத்தையும் கூறவில்லை என்பதால் இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாகின்றது.
எனவே தெளிவான சான்றுகளின் அடிப்படையில் பலவீனமாக உள்ள இந்த ஹதீஸை விரலசைப்பது தொடர்பான ஹதீசுடன் ஒப்பிடுவது முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சு போடும் செயலாகும்.
பலவீனமான அறிவிப்பாளர் இப்போது பலமுள்ளவராக மாறிவிட்டாரா?
தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்குச் செல்லும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு ஹதீஸில் மட்டும் பின்வருமாறு உள்ளது.
حدثنا هناد حدثنا وكيع عن سفيان عن عاصم بن كليب عن عبد الرحمن بن الأسود عن علقمة قال قال عبد الله بن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة قال وفي الباب عن البراء بن عازب قال أبو عيسى حديث ابن مسعود حديث حسن وبه يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين وهو قول سفيان الثوري وأهل الكوفة
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா? என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். ஒரு தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.
நூல்: திர்மிதி 238
ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை ஆஸிம் பின் குலைப் தான் அறிவிக்கிறார்.
அதன் காரணமாக இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறும் நீங்கள் விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸை மட்டும் ஏற்பது ஏன்? என்று மத்ஹப் உலமாக்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஒரு அறிவிப்பாளரை ஒரு நேரத்தில் பலவீனமானவர் என்று கூறிவிட்டு மற்றொரு நேரத்தில் பலமுள்ளவர் என்று மாற்றிக் கூறுவது முரண்பாடாக இல்லையா? என்றும் கேட்கின்றனர்.
ஒரு தடவை தான் கையை உயர்த்த வேண்டும் என்ற ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே! நம்மைப் போல் இன்னும் ஏராளமான அறிஞர்களும் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால் அதற்கு இவர்கள் கூறுகின்ற ஆஸிம் பின் குலைப் அறிவிக்கிறார் என்ற காரணத்திற்காக அந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்திலும், ருகூவின் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்தியுள்ளனர் என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு ஏராளமான வழிகளில் அறிவிக்கப்படுவதற்கு முரணாக ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என, ஒரே ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் அமைந்துள்ளது. அதிகமானவர்கள் அறிவிப்பதை மறுக்கும் வகையில் ஒரே ஒருவரின் அறிவிப்பு இருந்தால் அந்தக் காரணத்திற்காக ஒரே ஒருவரின் அந்த ஹதீஸை ஏற்காமல் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தான் இப்னு மஸ்ஊத் (ரலி) ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுகிறோம்.
அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்பதற்கு ஆஸிம் பின் குலைப் பலவீனமானவர் என்று நாம் கூறவில்லை. ஆசிம் பின் குலைபுக்கு பதிலாக யாராலும் குறை கூறப்படாத ஒருவர் அறிவித்தாலும் இந்த முடிவைத் தான் நாம் எடுப்போம். எனவே இந்த வாதமும் தவறான அடிப்படையின் மேல் எழுப்பப்பட்ட வாதமாகும்.
விரலசைப்பது பற்றி வரும் ஹதீஸ் ஷாத் வகையைச் சேர்ந்த பலவீனமான செய்தியா?
விரலசைப்பது தொடர்பான ஹதீஸை ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆயினும் இவரைத் தொடர்புபடுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சில மவ்லவிகள் செய்து வருகின்றனர்.
அவர்கள் செய்யும் விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன் ஹதீஸ் துறை சம்பந்தமான ஒரு விதியைப் புரிந்து கொண்டால் விளங்குவதற்கு எளிதாக இருக்கும்.
ஒரு செய்தியை சலீம் என்பவரிடமிருந்து ஐந்து பேர் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐந்து பேரில் நால்வர் ஒரு விதமாக அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் அந்தச் செய்தியை அதற்கு முரணாக அறிவிக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் நால்வர் அறிவிப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நேர் முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும் இவர் அறிவிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் அறிவிப்பது ஷாத் – அரிதானது – எனக் கூறப்படும்.
ஏனெனில் ஒருவரிடம் தவறு ஏற்படுவதை விட நால்வரிடம் தவறு ஏற்படுவது அரிதாகும். எனவே தங்கள் ஆசிரியர் கூறியதாக நால்வர் கூறியதை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரியர் கூறியதாக ஒருவர் கூறுவதை மறுத்து விட வேண்டும்.
விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸில் இந்த அம்சம் உள்ளது என்பதே இவர்களின் விமர்சனம்.
அதாவது நபிகள் நாயகம் தொழுத முறையை
வாயில் பின் ஹுஜ்ர் அறிவிக்கிறார்.
வாயில் பின் ஹுஜ்ர் கூறியதாக குலைப் அறிவிக்கிறார்.
குலைப் கூறியதாக அவரது மகன் ஆஸிம் அறிவிக்கிறார்.
ஆஸிம் கூறியதாக
1-சுப்யான்
2- காலித் பின் அப்துல்லாஹ்
3-இப்னு இத்ரீஸ்
4-ஸாயிதா
ஆகிய நால்வர் அறிவிக்கின்றனர்.
இவர்களில் ஸாயிதா மட்டுமே விரல் அசைத்தலைப் பற்றிக் கூறுகிறார். மற்ற மூவரின் அறிவிப்பில் விரல் அசைத்ததாகக் கூறவில்லை.
காலித் பின் அப்துல்லாஹ், சுஃப்யான் ஆகியோர் இதைப் பற்றிக் கூறும் போது இஷாரா (சைகை) செய்தார்கள் என்றே கூறுகிறார்கள். இப்னு இத்ரீஸ் அறிவிக்கும் போது விரலை உயர்த்தினார்கள் என்று கூறுகிறார். ஆனால் ஸாயிதா மட்டும் விரலை அசைத்ததாகக் கூறுகிறார்.
ஆஸிமுடைய நான்கு மாணவர்களில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஸாயிதா அறிவிப்பதால் இது ஷாத் என்ற தரத்திற்கு இறங்கி விடும். எனவே இது பலவீனமானதாகும் என்பது இவர்களின் விமர்சனம்.
ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். மேலோட்டமாக ஆராய்ந்தால் விபரீதமான முடிவுக்குத் தள்ளி விடும் என்பதற்கு இவர்களின் இந்த விமர்சனம் சான்றாகும்.
முரண்பாடும் கூடுதல் விளக்கமும்
ஒரு ஆசிரியரின் மாணவர்களில் பலர் அறிவிப்பதற்கு நேர்முரணாக ஒரு சிலர் அறிவிப்பது தான் ஷாத் ஆகும். ஒரு ஆசிரியரின் பல மாணவர்கள் அறிவித்ததை விட ஒரே ஒருவர் கூடுதலாக அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அது ஷாத் என்ற தரத்திற்கு இறங்காது.
முரணாக அறிவிப்பது வேறு! கூடுதலாக அறிவிப்பது வேறு! இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்காமல் நுனிப்புல் மேய்வதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
15-3-2007 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார் என்று ஐந்து பேர் கூறுகிறார்கள். 15-3-2007 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிடவில்லை என்று ஒருவர் மட்டும் கூறுகிறார்.
இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். ஒன்று உண்மையானால் மற்றொன்று தானாகவே பொய்யாகி விடும். இது தான் முரண்பாடு! இவ்வாறு வரும் போது அதிகமானவர்கள் கூறுவதை ஏற்க வேண்டும்.
15-3-2009 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார் என்று ஐந்து பேர் கூறுகிறார்கள். ஒருவர் மட்டும் 15-3-2009 அன்று காலை 10 மணிக்கு சலீம் சிக்கன் 65 சாப்பிட்டார் என்று கூறுகிறார். இவ்விரு செய்திகளும் முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று மறுக்கும் வகையில் இது அமையவில்லை.
கோழிக்கறி என்று பொதுவாகச் சிலர் கூறுகின்றனர். ஒருவர் மட்டும் உன்னிப்பாகக் கவனித்து அந்தக் கோழிக்கறி எந்த வகை என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்கும் நிலை இங்கே ஏற்படாது. சிக்கன் 65 சாப்பிட்டதை ஏற்கும் போது கோழிக்கறி சாப்பிட்டதையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறோம்.
மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா இறக்கவில்லை என்பதும் முரண்!
மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா கடலில் மூழ்கி இறந்தார் என்பதும் முரண் அல்ல!
இந்த அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பைக் கவனித்தால் ஸாயிதா கூறுவதும், மற்றவர்கள் கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல!
அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் கூறும் போது விரலை உயர்த்தினார்கள் என்று மட்டும் கூறுகிறார். ஸாயிதா கூறும் போது விரலை உயர்த்தி அசைத்தார்கள் என்று கூறுகிறார். அந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.
இது போல் சுஃப்யான், காலித் ஆகியோர் அறிவிக்கும் போது இஷாரா செய்தார்கள் என்று அறிவிக்கின்றனர். ஸாயிதா கூறும் போது அசைத்தார்கள் என்கிறார். இவ்விரண்டும் முரண் அல்ல!
இஷாரா என்பதின் பொருள்
இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும்.
அசைவுகளைக் கொண்ட இஷாராவும் உள்ளது. அசைவுகள் இல்லாத இஷாராவும் உள்ளது.
ஒருவரை எச்சரிக்கும் போது ஆட்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்துக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவுடன் கூடிய இஷாரா ஆகும்.
சிறுநீர் கழிக்கப் போவதைக் குறிப்பிட ஆட்காட்டி விரலை அசைக்காமல் நிறுத்திக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவு இல்லாத இஷாரா ஆகும்.
எனவே இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு விரிந்த அர்த்தம் உள்ள சொல்லை இவ்விருவரும் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வார்த்தையிலிருந்து அந்த இஷாரா அசைவுடன் கூடியதா? அசைவு இல்லாததா? என்பது தெளிவாகவில்லை. ஸாயிதா இதைத் தெளிவுபடுத்துகிறார்; முரண்படவில்லை.
மனிதன் வந்தான் என்று இவ்விருவரும் கூறுகிறார்கள்; உயரமான மனிதன் வந்தான் என்று ஸாயிதா கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால் இரண்டும் முரண் என்று யாருமே கூற மாட்டோம்.
மனிதன் என்பதில் உயரமானவரும் இருக்கலாம்; உயரம் குறைந்தவரும் இருக்கலாம். அதை மற்ற இருவர் தெளிவுபடுத்தவில்லை. உயரமான மனிதர் என்று ஒருவர் தெளிவாகக் கூறி விட்டார் என்று புரிந்து கொள்வதைப் போல் இதையும் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸை ஷாத் என்று கூற மாட்டார்கள்.
இஷாரா என்பது அசைத்தல் என்பதற்கு முரணானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் பின்வரும் ஹதீஸை சான்றாகக் கொள்ளலாம்.
باب إشارة الخاطب بالسبابة على المنبر عند الدعاء في الخطبة وتحريكه إياها عند الإشارة بها أنا أبو طاهر نا أبو بكر نا بشر بن معاذ العقدي نا بشر بن المفضل نا عبد الرحمن بن إسحاق عن عبد الرحمن بن معاوية عن بن أبي ذباب عن سهل بن سعد قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم شاهرا يديه قط يدعو على منبره ولا على غيره ولكن رأيته يقول هكذا وأشار بأصبعه السبابة يحركها قال أبو بكر عبد الرحمن بن معاوية هذا أبو الحويرث مدني – صحيح ابن خزيمة ج: 2 ص: 351
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரிலோ மற்ற இடங்களிலோ கைகளை உயர்த்தி துஆ செய்ததை நான் கண்டதில்லை. மாறாக தமது ஆட்காட்டி விரலால் இஷாரா செய்து அசைப்பார்கள் என்று ஸஹ்ல் பின் சஅது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் இப்னு குஸைமா
இந்த ஹதீஸ் அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது பற்றிக் கூறும் ஹதீஸ் அல்ல. இஷாரா என்ற சொல்லின் பொருளை விளக்குவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்
ஆட்காட்டி விரலை இஷாரா செய்து அசைப்பார்கள் என்று இதில் கூறப்படுகிறது. முரண்பட்ட இரு சொற்களை இணைத்துப் பேச முடியாது. இஷாரா என்பதும் அசைத்தல் என்பதும் நேர் முரண் என்றால் இஷாரா செய்து அசைப்பார்கள் என்று கூற முடியாது.
எனவே ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்பதும் இஷாரா செய்தார்கள் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.
செத்து சாகவில்லை என்று கூற முடியாது. சாப்பிட்டு சாப்பிடவில்லை என்று கூற முடியாது. சூடான குளிர் நீர் என்று சொல்ல முடியாது. ஆனால் அசைத்து இஷாரா செய்தார்கள் என்று கூற முடியும்.
ஒன்றுக்கொன்று முரணா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இரண்டையும் இணைத்துப் பேச முடியுமா என்று பார்க்க வேண்டும். இணைத்து பேச முடிந்தால் அது ஒன்றுகொன்று முரண் அல்ல. இரண்டையும் இணைத்துப் பேச முடியாவிட்டால் அது ஒன்றுக்கொன்று முரண் என்று பொருள்.
பலர் அறிவிப்பதற்கு முரணாக ஒருவர் அறிவித்தால் அது ஷாத் என்று விளங்கி வைத்திருப்பவர்களுக்கு முரண் என்றால் என்ன என்பது விளங்கவில்லை. இது தான் குழப்பத்துக்குக் காரணம்.
எனவே இந்த நுணுக்கத்தை இவர்கள் அறியாததால் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர். ஒருவர் அறிவிப்பதை விட மேலதிகமாக பலர் அறிவிக்கும் போது என்ன நிலை? ஒருவர் அறிவிப்பதற்கு எதிராக பலர் அறிவிக்கும் போது என்ன நிலை?
مقدمة فتح البارى – (ج 2 / ص 257)
وأما المخالفة وينشأ عنها الشذوذ والنكارة فإذا روى الضابط والصدوق شيئا فرواه من هو أحفظ منه أو أكثر عددا بخلاف ما روى بحيث يتعذر الجمع على قواعد المحدثين فهذا شاذ وقد تشتد المخالفة أو يضعف الحفظ فيحكم على ما يخالف فيه بكونه منكرا
பலர் அறிவிப்பதற்கு முரணாக ஒருவர் அறிவிக்கும் போது ஷாத் என்ற நிலை ஏற்படும். நம்பகமானவர் அல்லது உண்மையாளர் ஒன்றை அறிவிக்க, அவரை விட உறுதியானவரோ, அல்லது அவரை விட அதிக எண்ணிக்கை உடையவர்களோ இரண்டையும் இணைக்க முடியாத அளவுக்கு முரண்பட்டு அறிவித்தால் அது தான் ஷாத் ஆகும்.
ஃபத்ஹுல் பாரி முன்னுரையில் இப்னு ஹஜர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். எனவே அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் எந்த வகையிலும் பலவீனமாக்க முடியாத, வலுவான ஹதீஸ் என்பதே இதன் மூலம் உறுதியாகின்றது.
இவர்களின் வாதப்படி ஷாத் என்று கூறுவதாக இருந்தால் தொழுகையில் விரலை அசைக்கக்கூடாது என்பதற்கு இவர்கள் ஆதாரமாக்க் காட்டும் பின்வரும் ஹதீஸை தான் ஷாத் என்று கூற வேண்டும்.
இமாம் பைஹகீ அவர்களுடைய கூற்றின் நிலை என்ன?
இமாம் பைஹகீ அவர்கள் நாம் ஆதாரமாக்க் காட்டும் நபிமொழிக்கு சற்றும் பொருந்தாத வேறு ஒரு அர்தத்தைக் கொடுக்கின்றார்.
ஹதீஸில் கூறப்படும் அசைத்தல் என்பதன் கருத்து இஷாரா செய்வது தான். தொடர்ந்து அசைத்துக் கொண்டிருப்பது அல்ல என இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸிற்கு கீழ் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இமாம் பைஹகீ அவர்கள் ஆஸிம் பின் குலைப் இடம்பெற்றுள்ள விரலசைப்பது தொடர்பான ஹதீஸ் வலுக் குறைந்தது எனவும் முஹம்மது பின் அஜ்லான் இடம்பெற்றுள்ள விரலசைக்கக் கூடாது என்ற கருத்தில் உள்ள ஹதீஸ் அதை விடவும் வலிமையானது என்றும் கூறியுள்ளார்.
விரலசைப்பது பித்அத் என்று கூறுபவர்கள் தங்கள் கூற்றுக்கு இமாம் பைஹகீ அவர்களின் கூற்றை மிகப்பெரிய சான்றாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இமாம்களின் கருத்துக்களைப் பொறுத்தவரை அதை அப்படியே கண் மூடிக்கொண்டு ஏற்க இயலாது. அதில் ஏற்கத் தகுந்த விசயங்களும் ஏற்க முடியாத விசயங்களும் இருக்கும். ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்த சரியான விளக்கத்தை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்வோம்.
நாம் மட்டுமல்ல பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த நிலைபாட்டையே கொண்டிருக்கின்றார்கள். இமாம் பைஹகீ அவர்களின் கூற்று தவறானது என்பதை தக்க சான்றுகளுடன் நாம் முன்பு விளக்கி இருக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் தொடர்ந்து விரலசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற கருத்து அந்த ஹதீஸில் தெளிவாக உள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால் முஹம்மது பின் அஜ்லானுடைய அறிவிப்பு பலவீனமானது என்பதும் ஆஸிம் பின் குலைபுடைய அறிவிப்பு பலமானது என்பதும் தெளிவாகின்றது.
உண்மை தெளிவான பிறகு இதற்கு மாற்றமாக இமாம் பைஹகீ கூறினால் அதை எப்படி ஏற்க முடியும்?
இமாம்களின் சுய விளக்கங்களை ஆதாரமாக்க் காட்டும் இவர்கள் தங்களுக்கு எதிராக இமாம்கள் எதையாவது கூறியிருந்தால் அப்போது அதைக் கண்டுகொள்வதே இல்லை. இது தான் இவர்கள் இமாம்களை மதிக்கும் லட்சணம்?
விரலசைப்பது தொடர்பான ஹதீஸ் சரியானது என்று இமாம் நவவீ கூறியுள்ளார். ஏன் இவர்கள் ஆதாரமாக்க் காட்டும் இமாம் பைஹகீ அவர்கள் கூட இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறவில்லை. சரியானது என்றே கூறுகிறார்.
ஆனால் இவர்களோ இந்த இமாம்களுக்கு மாற்றமாக இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதம் வைக்கின்றனர்.
வாயில் பின் ஹுஜர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு இமாம் மாலிக் அவர்களும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த சில அறிஞர்களும் இருப்பில் தொடர்ந்து விரலை அசைப்பது விரும்பத் தகுந்த செயல் என்று கூறியுள்ளார்கள். அபூ ஹாமித் பன்தனீஜீ, அபுத் தைய்யுப் மற்றும் பலர் இவ்வாறு கூறுவதாக இமாம் நவவீ அவர்கள் ஷரகுல் முஹத்தப் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
جامع الأصول (5 / 404):
وقد استدل آخرون بحديث وائل على استحباب تكرير الأصبع، كمالك وغيره، وقال به بعض الشافعية، كما في ” شرح المهذب ” للنووي 3 / 454.
المجموع شرح المهذب (3 / 454):
(وَالثَّالِث) يُسْتَحَبُّ تَحْرِيكُهَا حَكَاهُ الشَّيْخُ أَبُو حَامِدٍ وَالْبَنْدَنِيجِيّ وَالْقَاضِي أَبُو الطَّيِّبِ وَآخَرُونَ وَقَدْ يُحْتَجُّ لِهَذَا بِحَدِيثِ وَائِلِ بْنِ حُجُرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ وَصَفَ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
இமாம்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவதாக இருந்தால் விரலசைத்தல் பிரச்சனையில் இவர்களுக்கு எதிராக நிறைய இமாம்களின் கருத்துக்களை நம்மால் காட்ட முடியும்.
குழப்பமான விளக்கம்
விரலசைப்பது தொடர்பாக வரும் நபிமொழியை வெறுப்பவர்கள் இதை ஓரங்கட்டுவதற்கு பல வகைகளில் முயற்சி செய்கிறார்கள்.
இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று தெளிவான வாசகம் இடம் பெற்றுள்ளது. இருப்பில் விரலசைப்பதற்கு இவ்வளவு தெளிவாக வாசகம் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இவர்கள் இந்தச் செய்திக்கு சற்றும் பொருந்தாத விசித்திரமான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். தங்கள் கருத்துக்குத் ஏற்ப இந்தச் செய்தியை அநியாயமாக வளைக்கின்றார்கள்.
அசைத்தார்கள் என்றால் விரலை உயர்த்தினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் விரலை உயர்த்தும் போது விரல் அசையும் நிலை ஏற்படும். குறிப்பாக ஹனஃபீ மத்ஹபின் கருத்துப்படி விரலை உயர்த்தி கீழே விட்டு விட வேண்டும். இப்போது விரலாட்டுதல் தெளிவாக நடக்கின்றது. இந்த அசைவைப் பற்றித் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வாதிடுகின்றனர்.
இவர்கள் கூறுவது போன்று ஹதீஸில் அசைத்தார்கள் என்ற வாசகம் இடம்பெறவில்லை. மாறாக அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது.
யுஹர்ரிகுஹா என்ற அரபுச் சொல்லுக்கு அரபு மொழிப்படி அசைத்தார்கள் என்று பொருள் செய்வது தவறாகும். இந்தச் சொல்லுக்கு அசைப்பார்கள் என்ற அர்த்தமும் அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற அர்த்தமும் மட்டுமே உள்ளது.
இந்தச் செய்தி நடந்து முடிந்த சம்பவத்தைப் பற்றி பேசுவதால் அசைப்பார்கள் என்ற வருங்கால அர்த்தத்தை இங்கே கொடுக்க முடியாது. அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற இன்னொரு அர்தத்தை மட்டுமே இங்கே கொடுக்க முடியும்.
எனவே நபி (ஸல்) அவர்கள் இருப்பு முழுவதிலும் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் எனும்போது இதற்கு விரலை நீட்டினார்கள் என்றும் நீட்டிவிட்டு மடக்கினார்கள் என்றும் பொருள் செய்வது மடமையாகும்.
விரலசைப்பது பற்றிய நபிமொழியைப் படித்தால் அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இவர்களின் இந்த கற்பனை விளக்கத்தை தகர்த்து எரியக்கூடிய வகையில் இருக்கின்றது.
ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي
வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலை உயர்த்தினார்கள். அழைப்பது போல் (அல்லது பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில்) அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நஸாயீ (870)
விரலை நீட்டும் போது உள்ள அசைவைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. விரலை நீட்டிய பிறகு அதை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றே இந்த ஹதீஸ் கூறுகின்றது.
ஆட்காட்டி விரலை உயர்த்தினார்கள். அதை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகம் இதைத் தெளிவாக கூறுகின்றது.
முதலில் விரலை உயர்த்த வேண்டும். பிறகு அதை அசைக்க வேண்டும் என்று வெவ்வேறான இரண்டு செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக கூறப்பட்டிருக்கும் போது உயர்த்துவதும் அசைப்பதும் ஒன்று தான் எனக் கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.
உதாரணமாக ஒருவர் கொடியை உயர்த்தி பிறகு அசைத்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் கொடி அசைக்கப்படவில்லை என்று யாராவது விளங்கினால் அவர் அறிவில்லாதவராகத் தான் இருக்க முடியும்.
அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு உயர்த்தினார்கள் என்று பொருள் செய்பவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.
கீழிருக்கும் விரலை மேல் நோக்கி உயர்த்தினால் விரல் ஆடாமல் இருக்காது அந்த அசைவைப் பற்றித் தான் இந்த ஹதீஸ் பேசுகின்றது எனவும் சிலர் கூறுகின்றனர்.
இதுவும் இவர்களின் அறியாமையைக் காட்டுகின்றது. விரலை நீட்டி வைத்திருக்கும் போது விரலில் ஏற்படும் நடுக்கத்தைப் பற்றி இந்த ஹதீஸ் கூறுவதாக வாதிடுகின்றனர்.
இந்த அசைவு விரலில் மட்டும் வராது. தொழுது கொண்டிருப்பவரின் தலையிலும் காலிலும் ஒட்டுமொத்த உடம்பிலும் இருக்கத்தான் செய்யும். இவற்றைப் பற்றி அறிவுள்ள யாரும் பேசமாட்டார்கள்.
இந்த ஹதீஸை ஆரம்பித்திலிருந்து கவனித்தால் தொழுபவர் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றாக்க் கூறப்படுகின்றது. அந்த வரிசையில் தான் விரலசைப்பதும் சொல்லப்படுகின்றது.
நடுக்கம் என்பது நமது விருப்பம் இல்லாமல் உடலில் ஏற்படக்கூடியது. ஆனால் இந்த செய்தியில் கூறப்படும் விரலசைத்தல் என்பது தொழுபவர் விரும்பி செய்ய வேண்டிய காரியமாக்க் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் விரல் நடுங்கியது என்று கூறப்படாமல் நபியவர்கள் அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுவதால் இது நபியவர்கள் விரும்பி செய்த தொழுகையின் காரியங்களில் ஒன்று என்பதை அறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
விரலை அசைக்க வேண்டுமா? அல்லது கைகளையா?
விரலசைப்பது தொடர்பான ஹதீஸில் உள்ள சில வார்த்தைகளை வைத்து சிலர் குதர்க்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
18115حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ أخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ ثُمَّ قَالَ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى فَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنْ الْبَرْدِ رواه أحمد
நபி (ஸல்) அவர்கள் தமது விரலை உயர்த்தினார்கள். பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இதன் பிறகு குளிர் காலத்தில் நான் (மறுபடியும்) வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்தனர். குளிரின் காரணத்தால் அவர்கள் போர்த்தியிருந்த ஆடைகளுக்குள் அவர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்ததை கண்டேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹ‚ஜ்ர் (ரலி)
நூல் : அஹ்மது (18115))
நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்று இந்த அறிவிப்பில் உள்ளது. எனவே விரலசைப்பதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாக்க் காட்டுபவர்கள் விரலை அசைக்காமல் இந்த செய்தியில் உள்ளவாறு கைகளை அசைக்க வேண்டும் என்று குதர்க்கம் செய்கின்றார்கள்.
இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்ற தகவல் மட்டும் கூறப்பட்டு அதை நாம் விரலசைப்பதற்கு ஆதாரமாக்க் காட்டினால் இவர்களின் கேள்வி நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்ற தகவல் மட்டும் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற தகவலும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஒரு காலத்தில் நான் மதீனா வந்த போதும் இது போல் நபித்தோழர்கள் நடந்தனர் என்று வாஇல் பின் ஹுஜ்ர் கூறுகிறார். அறிவிப்பவர் எந்தக் கருத்தில் இதைச் சொன்னார் என்று தெளிவாக தெரியும் போது அவர் சொல்லாத கருத்தை அவரது வாசகத்துக்கு கொடுப்பது அநியாயமாகும்.
எனவே இங்கே நபித்தோழர்களின் விரல்கள் அசைந்து கொண்டிருந்தது என்ற அர்தத்தில் தான் கைகள் அசைந்தது எனக் கூறப்பட்டுள்ளது. இதை ஹதீஸின் முன் பகுதி வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றது.
இவ்வாறு பேசக்கூடிய வழக்கம் அனைத்து மொழிகளிலும் உள்ளது. உதாரணமாக ஏதாவது ஒரு விரலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்தால் விரலில் என்ன காயம்? என்று கேட்போம். இதையே சற்று வித்தியாசமாக கையில் என்ன காயம்? என்றும் கேட்போம்.
விரல் கையின் ஒரு பகுதியாக இருப்பதால் அதையே கை என்று கூறும் வழக்கம் மக்கள் பேச்சில் சர்வசாதாரணமாக இருக்கக்கூடியது தான். இந்த அடிப்படையில் தான் நபித்தோழர்களின் கைககள் அசைந்து கொண்டிருந்தது என இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
குளிரின் காரணத்தால் கைகள் அசைந்ததா?
நபித்தோழர்கள் யாரும் விரும்பி விரலசைக்கவில்லை. குளிரின் காரணத்தால் தான் அவர்களுடைய கைகள் அசைந்தது. எனவே எல்லா நேரங்களிலும் விரலசைப்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர்.
குளிரின் காரணத்தால் தான் நபித்தோழர்களின் கைகள் அசைந்தது என்ற வாதம் தவறான வாதம். நபிமொழியை திரித்துக் கூறும் செயலாகும்.
தொழுது கொண்டிருந்த நபித்தோழர்கள் குளிரின் காரணத்தால் ஆடையை போர்த்தி இருந்தார்கள் என்று தான் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. கைகள் அசைந்ததற்கு குளிர் தான் காரணம் என்பது இவர்களின் சுய கற்பனையாகும்.
குளிர் வந்தால் கைகள் மட்டும் அசையாது. ஒட்டுமொத்த உடம்பும் அசையும். ஆனால் இந்த ஹதீஸில் கைகள் மட்டும் அசைந்தது என குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே இதற்கு குளிர் காரணமாக இருக்க முடியாது என்பதை அறியலாம்.
மேலும் தாரமியில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் நபித்தோழர்கள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي
இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தைப் பார்த்தேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹ‚ஜ்ர் (ரலி)
நூல் : தாரமீ (1323)
எனவே நபித்தோழர்கள் குளிரின் காரணத்தினால் ஆடையைக் கூடுதலாக தங்கள் மீது போர்த்தியிருந்தனர். அந்த ஆடைகளுக்குள் தங்களின் சுய முயற்சியால் தான் விரலை அசைத்துள்ளார்கள்.
இருப்பில் விரலை அசைக்கும் விதம்
விரலை எவ்வாறு அசைக்க வேண்டும்?
எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் நம்மால் பதில் கூறவே முடியாது என்று நினைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாத கேள்விகளை நம்மிடத்தில் கேட்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு கியாமத் நாள் வரை பதில் சொல்ல முடியாது என்று வீண் சவடாலும் விடுகின்றனர்.
- விரலசைத்தல் எந்த்த் திசையை நோக்கி இருக்க வேண்டும்.
- விரலை நீட்டி வைத்துக்கொண்டு அசைக்க வேண்டுமா?அல்லது குறுக்கி வைத்துக்கொண்டு அசைக்க வேண்டுமா?
- விரலை மேலும் கீழுமாக அசைக்க வேண்டுமா?
- முன்னாலும் பின்னாலுமாக ஆட்ட வேண்டுமா?
- தொடர்ந்தா அல்லது விட்டுவிட்டா?
- வேகமாகவா அல்லது மெதுவாகவா?
- வலது பக்கமா? அல்லது இடது பக்கமா?
இது போன்ற கிருக்குத்தனமாக கேள்விகள் இவர்களிடத்திலும் எழுமே என்ற அறிவு கூட இவர்களுக்கு இல்லை. இவர்கள் விரலை அசைக்காமல் நீட்டி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்போது இவர்கள் நம்மிடம் கேட்டது போன்ற கேள்வியை இவர்களிடம் கேட்க முடியும்.
- விரலை நீட்ட வேண்டும் என்றால் எந்த திசையை நோக்கி நீட்ட வேண்டும்?
- வலது பக்கமாக நீட்ட வேண்டுமா?
- இடது பக்கமாக நீட்ட வேண்டுமா?
- விரலை வானத்தை நோக்கி மேலே இருக்கும் வண்ணம் நீட்ட வேண்டுமா?
- தரையை நோக்கி இருக்குமாறு கீழே நீட்ட வேண்டுமா?
- அல்லது இரண்டுக்கும் மத்தியில் சீராக நீட்ட வேண்டுமா?
இதுபோன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் நபிமொழியை உதாசீனப்படுத்தி நபிவழியைக் கிண்டல் செய்பவர்கள். ஒரு நல்ல ஆய்வாளரிடத்தில் இப்படிப்பட்ட கேள்விகள் வர முடியாது.
இது தொடர்பாக வந்துள்ள நபிமொழிகளை இறையச்சத்துடன் படித்தால் விரலசைக்கும் விதத்தை அறிந்து கொள்ள முடியும்.
எந்த்த் திசையை நோக்கி விரலசைக்க வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள் இஷாரா செய்தார்கள் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்களை நாம் ஏற்றுக் கொள்வோம். விரலசைப்பது தொடர்பாக வரும் ஹதீசும் இஷாரா செய்தார்கள் என்று கூறும் ஹதீசும் ஒரே பொருள் கொண்டவை என்பது நமது நிலைபாடு.
இந்த ஹதீஸில் விரல் கிப்லாவின் திசையை நோக்கி இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
1148أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ عَبْدُ اللَّهِ لَا تُحَرِّكْ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ فَإِنَّ ذَلِكَ مِنْ الشَّيْطَانِ وَلَكِنْ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ وَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ فِي الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ رواه النسائي
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
“நபி (ஸல்) அவர்கள் தமது வலக்கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, பெருவிரலுக்கு அடுத்துள்ள (சுட்டு) விரலால் “கிப்லா’ பக்கம் சைகை செய்தார்கள். தமது பார்வையை அதை நோக்கி அல்லது அதன் பக்கம் செலுத்தினார்கள்” என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தேன்” என்றும் கூறினார்கள்.
நூல் : நஸாயீ (1148)
விரல் கிப்லாவை முன்னோக்கி இருக்க வேண்டும் என்றால் வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ அசைக்கக் கூடாது என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
அப்படியானால் விரலசைத்தல் மேலும் கீழுமாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.
விரலை முன்னாலும் பின்னாலும் ஆட்ட வேண்டுமா? என்ற கேள்வி முட்டாள்தனமாது. வலது கையை வலது தொடையின் மீது வைத்திருக்கும் போது விரல் மட்டும் முன்னாலும் பின்னாலும் செல்ல முடியுமா? என்பதை இந்த அறிவிலிகள் உணர வேண்டும்.
விரலை நீட்டி வைத்துக்கொண்டா? குறுக்கி வைத்துக்கொண்டா?
விரலசைப்பதற்கு நாம் ஆதாரமாக காட்டு வாயில் பின் ஹுஜ்ர் அவர்களுடைய ஹதீஸில் விரலை நீட்டி அசைக்க வேண்டும் என்று தெளிவாக்க் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நஸாயீ (870)
தொடர்ந்தா? விட்டுவிட்டா?
அத்தஹிய்யாத்து இருப்பில் அந்த அமர்வு முடியும் வரை தொடர்ந்து விரலை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும். விரலசைத்தல் தொடர்பாக வரும் செய்தியை முழுமையாகப் படித்தால் இதற்கு ஆதாரம் இருப்பதை தெளிவாக அறியலாம்.
பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நஸாயீ (870)
நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எனவே தொடர்ந்து விரலசைக்க வேண்டும் என்பதற்கு இது தெளிவான ஆதாரம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் இஷாரா செய்தார்கள் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இங்கே கூறப்படும் இஷாரா என்பது விரலசைப்பது தான் என்பதை ஆதாரங்களுடன் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் அமர்ந்தவுடன் அதன் ஆரம்பித்திலிருந்து இறுதிவரை இஷாரா செய்து கொண்டிருப்பார்கள் என்று ஹதீஸ் கூறுகின்றது.
14828حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رَاشِدٍ أَبِي سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ فَدَعَا وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ ثُمَّ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ رواه أحمد
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்துவிட்டால் பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் தனது வலக்கையை தொடையின் மீது வைத்து தன் விரலால் இஷாரா செய்து கொண்டிருப்பார்கள்.
நூல் : அஹ்மது 14828
எனவே இருப்பு முழுவதிலும் தொடர்ந்து விரலசைப்பதற்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைந்துள்ளது.
ஒரு பேச்சுக்கு விரலை அசைத்தார்கள் என இங்கே பொருள் கொண்டாலும் அப்போதும் தொடர்ந்து விரலை அசைக்க வேண்டும் என்ற கருத்தையே இந்தச் செய்தி உள்ளடக்கியுள்ளது.
இந்தச் செய்தி தொழுகையில் விரலசைப்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை. தொழுகையில் உள்ள மற்ற பல நிலைகளைப் பற்றியும் பேசுகின்றது.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலையில் நிற்கும்போது வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை.
விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் இவர்கள் நிலையில் வலது கையை இடது கையின் மீது வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே விட்டுவிட வேண்டும்.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவில் இருக்கும் போது கைகளை முட்டுக்கால்களின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. முட்டுக்கால்களின் மீது வைத்துக்கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை.
விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதை புரிந்தால் இவர்கள் ருகூவில் முட்டியின் மீது கையை வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே தொங்கவிட்டுவிட வேண்டும்.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஜ்தாவில் தம் உள்ளங்கைகளை காதுகளுக்கு நேராக வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக்கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதை புரிந்தால் இவர்கள் சஜ்தாவில் காதுகளுக்கு நேராக கைகளை வைத்துவிட்டு சஜ்தாவில் இருக்கும் போதே கைளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் தமது வலது கையை வலது தொடையின் மீதும் இடது கையை இடது தொடையின் மீதும் வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் தொடையின் மீது கையை வைத்துவிட்டு அந்ந நிலையில் இருக்கும்போதே கைகளை கீழே விட்டுவிட வேண்டும்.
ஆனால் இவ்வாறு யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நிலையில் ஒரு செயலைச் செய்தால் அந்த நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறுகின்ற வரை அந்தச் செயலைத் தொடர வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலசைத்தார்கள் என்பதையும் இவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைத்தார்கள் என்றால் அந்த அமர்வு முழுவதிலும் விரலை அசைத்தார்கள் என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.
மேலும் வருங்கால வினைச் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் அசைத்துக் கொண்டு இருந்தார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அதுவும் இந்தக் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது.
வேகமாகவா? அல்லது மெதுவாகவா?
இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. ஒரு செயலை நபியவர்கள் கற்றுக்கொடுத்து அதில் ஒரு அம்சத்தை அவர்கள் மூடலாக விட்டுவிட்டால் அந்த விசயத்தில் நடுநிலையைப் பேணிக்கொள்ள வேண்டும்.
அதி வேகமாகவும் அசைக்கக்கூடாது. அசைப்பது தெரியாத அளவுக்கு மிக மெதுவாகவும் அசைக்கக்கூடாது. இதில் நடுநிலையை பேணிக் கொள்ள வேண்டும்.
எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் மனமுரண்டாக நம்மிடம் இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்கள்.
இருப்பில் விரலை நீட்டி வைக்க வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு. இப்போது இவர்களிடம் ஒருவர் விரலை விரைப்பாக நீட்ட வேண்டுமா? அல்லது சாதாரணமாக நீட்டினால் போதுமா? என்று கேட்டால் சாதாரணமாக நீட்டினால் போதுமானது என்று கூறுவார்கள்.
இவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு விசயத்துக்கு எதிராக நம்மிடம் கேள்வி கேட்பது நியாயமற்ற செயல்.
இருப்பில் எப்போது இஷாரா செய்ய வேண்டும்?
விரலை அசைக்காமல் நீட்டி வைப்பது தான் இஷாரா என்று கூறுபவர்கள் இருப்பின் ஆரம்பத்திலிருந்து இந்தச் செயலைச் செய்வதில்லை. அத்தஹிய்யாத்தில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டிய இடம் வரும்போது தான் ஆட்காட்டி விரலை உயர்த்துவார்கள். இதற்கு முன்பு விரலை உயர்த்த மாட்டார்கள்.
இவ்வாறு இருப்பின் இடையிலிருந்து விரலை உயர்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் இல்லை. ஏன் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியைக் கூட இதற்கு ஆதாரமாக்க் காட்ட முடியாது.
ஆனால் இன்றைக்கு சிலர் விசித்திரமான விளக்கங்களைக் கூறி இச்செயலுக்கு ஆதாரம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள். பின்வரும் பலவீனமான செய்தியை அடிப்படையாக வைத்து தவறான விளக்கத்தை கொடுக்கின்றார்கள்.
1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي
அப்துல்லாஹ் பின் ஜ‚பைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தனது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.
நூல் : நஸாயீ (1253)
துஆ செய்யும் போது இஷாரா செய்வார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் தான் துஆ என்று கூறுகின்றனர். கலிமாவின் வாசகம் ஹதீஸ்களில் துஆ என்ற வார்த்தையால் கூறப்பட்டுள்ளது என்று சில ஹதீஸ்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே இருப்பில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது இஷாரா செய்ய வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
இவர்கள் மனோ இச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவர்கள் என்பதை இந்த விளக்கத்தைப் படிக்கும் யாரும் அறிந்து கொள்வார்கள்.
அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை துஆ எனக் கூறலாம் என்ற இவர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இதன் மூலம் இவர்களின் செயலை நியாயப்படுத்த முடியாது.
ஏனென்றால் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் உட்பட இருப்பில் ஓதப்படும் அனைத்துக்கும் துஆ என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
இருப்பில் அத்தஹிய்யாத்து லில்லாஹி என்று துவங்கி இறைவனைப் புகழ்கிறோம். கலிமா துஆ என்றால் இது துஆ இல்லையா?
மேலும் நபியே உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் கருணையும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும் என்று இருப்பில் கூறுகிறோம். இது தெளிவான பிரார்த்தனையாக இருந்தும் இந்த இடங்களில் இவர்கள் இஷாரா செய்வதில்லை. ஏன் இவையெல்லாம் துஆ இல்லையா?
பின்வரும் ஹதீஸ்கள் இருப்புக்கு வந்தவுடன் இஷாரா செய்ய வேண்டும் என்றும் துஆ என்பது அத்தஹிய்யாத் அமர்வு முழுவதையும் குறிக்கும் என்பதையும் தெளிவாகக் கூறுகின்றது.
910حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ عَجْلَانَ قَالَ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظ لَهُ قَالَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ ابْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ يَدْعُو وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَيَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ وَوَضَعَ إِبْهَامَهُ عَلَى إِصْبَعِهِ الْوُسْطَى وَيُلْقِمُ كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ رواه مسلم
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது (அத்தஹிய்யாத்) அமர்வில் பிரார்த்திக்க உட்கார்ந்தால் தமது வலக் கையை வலது தொடையின் மீதும், இடக் கையை இடது தொடையின் மீதும் வைத்துச் சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
நூல் : முஸ்லிம் (1015)
912و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ رواه مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
நூல் : முஸ்லிம் (1017)
911و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا رواه مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள் மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.
நூல் : முஸ்லிம் (1016)
913حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ أَنَّهُ قَالَ رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ نَهَانِي فَقَالَ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فَقُلْتُ وَكَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا وَأَشَارَ بِإِصْبَعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى رواه مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம்முடைய வலது முன் கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக் கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக்கொண்டு, பெரு விரலை ஒட்டியுள்ள (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள். இடது முன் கையை இடது தொடையில் வைப்பார்கள்” என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (1018)
902حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ حَلَّقَ بِالْإِبْهَامِ وَالْوُسْطَى وَرَفَعَ الَّتِي تَلِيهِمَا يَدْعُو بِهَا فِي التَّشَهُّدِ رواه إبن ماجه
நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல் : இப்னு மாஜா (902)
14828حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رَاشِدٍ أَبِي سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ فَدَعَا وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ ثُمَّ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ رواه أحمد
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்தால் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். தமது வலது கையை தொடையின் மீது வைத்து தமது விரலால் சமிக்கை செய்து கொண்டிருப்பார்கள்.
நூல் : அஹ்மது (14828)
எனவே அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது மட்டும் ஆட்காட்டி விரலால் இஷாரா செய்வது பித்அத்தாகும். நபிவழியில் இதற்கு ஆதாரம் இல்லை.
விரலசைப்பது ஏகத்துவத்துக்கு எதிரான செயலா?
இஷாரா என்றால் நாம் சொல்ல விரும்பும் கருத்தை செயலால் சொல்வதாகும். தொழுகையில் ஆட்காட்டி விரலை இஷார செய்வதன் மூலம் இறைவன் ஒருவன் தான் என்ற கருத்தை நமது செயலால் வெளிப்படுத்துகிறோம்.
எனவே இருப்பில் விரலை அசைக்காமல் நீட்டி வைப்பது தான் ஏகத்துவத்தை வெளிப்படும் செயல் என்றும். விரலை அசைத்துக் கொண்டிருப்பது ஏகத்துவத்துக்கு எதிரான செயல் என்றும் வாதிடுகின்றனர்.
இவர்களுடைய மனோஇச்சை விரலசைப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இதை ஏகத்துவத்துக்கு எதிரான செயல் என்று வாதிடுகிறார்கள்.
முதலில் இருப்பில் விரலசைப்பதற்கான காரணம் இது தான் என்பதை அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ கூறவில்லை. காரணம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பதால் மறு பேச்சு பேசாமல் இதற்குக் கட்டுப்படுவது அவசியம்.
ஒரு பேச்சுக்கு ஏகத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இஷாரா செய்கிறோம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் அது நமது நிலைபாட்டுக்கு எதிரான வாதம் இல்லை.
ஏனென்றால் ஒரு விரலை அசைப்பதால் இரண்டு இறைவன் என்ற கருத்தோ இறைவனே இல்லை என்ற கருத்தோ வராது. மாறாக இதுவும் ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தும் செயலாகும். விரலை அசைக்கும் போது தான் இறைவன் ஒருவன் என்ற கருத்தை பல முறை வெளிப்படுத்துகிறோம்.
ஒரு விரலை அசைப்பதற்கு பதிலாக இரண்டு விரலை அசைத்தால் அது ஏகத்துவத்துக்கு எதிரானது என்று கூறலாம். ஒரு விரலை அசைப்பதை இவ்வாறு கூற முடியாது.
இது ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான செயலாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் காலத்தில் நபித்தோழர்களும் இதை செய்திருக்க மாட்டார்கள்.
எனவே ஹதீஸிற்கு எதிரான இவர்களுடைய யூகத்தைக் கொண்டு நபிவழியை மறுத்துவிடக் கூடாது.
இரண்டாம் பகுதி
இந்தப் பகுதியில் விரலை அசைக்கக் கூடாது என்று கூறுபவர்கள் இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் ஹதீஸ்கள் என்ன? அந்த ஹதீஸ்கள் அவர்களின் கருத்துக்கு ஆதாரமாக அமைந்துள்ளதா? என்பதை தெளிவுபடுத்துவோம்.
இருப்பில் விரலசைக்கக்கூடாது என்று கூறுபவர்களுக்கிடையே விரலை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
சிலர் இருப்பின் ஆரம்பித்திலிருந்து விரலை நீட்டி வைக்க வேண்டும் என்கின்றனர்.
சிலர் அஷ்ஹது அன்லாயிலாஹ என்று சொல்லும் போது விரலை நீட்டி சலாம் கொடுக்கும் வரை இவ்வாறே விரலை வைத்திருக்க வேண்டும் என்கின்றனர்.
சிலர் லாயிலாஹ என்று சொல்லும் போது விலை உயர்த்தி இல்லல்லாஹ் என்று சொல்லும் போது விரலை விட்டுவிட வேண்டும் என்கின்றனர்.
ஹதீஸ்களை சரியான முறைப்படி விளங்காத காரணத்தால் இவர்களிடத்தில் இத்தகைய குழப்பம் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் விரலசைப்பதில் குழப்பம் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
இந்தக் குழப்பமான சட்டங்களுக்கு இவர்கள் ஹதீஸிலிருந்து நேரடியாக ஆதாரங்களைக் காண்பிக்க முடியாது.
விரலை அசைக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாக்க் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸ்கள் பலதாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒரே கருத்தைத் தரக்கூடியவை.
விரலசைக்கக் கூடாது என்பதற்கு பல ஆதாரங்கள் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
ஹதீஸ் 1
911و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا رواه مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள் மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.
நூல் : முஸ்லிம் (1016)
இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இருப்பில் சுட்டு விரலை உயர்த்துவார்கள் என்று இருப்பதால் விரலை நீட்டி வைத்திருக்க வேண்டும். அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
ஆனால் இந்தச் செய்தியில் நமக்கு எதிரான எந்தக் கருத்தும் சொல்லப்படவில்லை. இந்த ஹதீஸில் விரலை நீட்ட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அசைக்கக் கூடாது என்று சொல்லப்படவில்லை.
நாம் விரலை அசைக்கும் போது விரலை நீட்டிய நிலையில் தான் அசைத்துக் கொண்டிருக்கின்றோம்.
விரலை நீட்டுவதும் அசைப்பதும் ஒன்றுக்கொன்று முரணான காரியங்கள் இல்லை. இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்.
இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது.
879أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي
வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நூல் : நஸாயீ 870
இவர்கள் காட்டிய செய்தியில் விரலை நீட்டிய தகவல் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் நீட்டுதலும் அசைத்தலும் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது.
விரலசைத்தல் தொடர்பான ஹதீஸில் இவர்கள் காட்டிய ஹதீஸில் உள்ளதை விட கூடுதல் விளக்கம் இடம்பெற்றுள்ளது என்பதே உண்மை.
தலைவர் தேசியக் கொடியை உயர்த்திக் காட்டினார் என்று ஒருவர் கூறுகிறார். இன்னொருவர் கொடியை உயர்த்தி அசைத்துக் காட்டினார் என்று கூறுகிறார். இரண்டும் முரண்பாடான தகவல் என்று யாரும் புரிய மாட்டோம். மாறாக ஒருவர் சொன்னதை மற்றவர் விளக்கிக் கூறியுள்ளார் என்று புரிந்து கொள்வோம்.
இவர்கள் காட்டியுள்ள மேற்கண்ட ஹதீஸ் இது போன்றே அமைந்துள்ளது. எனவே விளக்கம் குறைவாக உள்ள ஹதீஸை வைத்து விளக்கமாக உள்ள ஹதீஸை மறுப்பது தவறான போக்காகும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஏராளமான நபிமொழிகளை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக.
நபி (ஸல்) அவர்கள் விரலை (ரஃபஅ) உயர்த்தினார்கள் என்ற கருத்தில் இப்னு மாஜாவிலும் (902) அபூதாவுதிலும் (840) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீஸ்களையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக்க் கூறுகிறார்கள்.
திர்மிதியில் 3511 வது இலக்கத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் பசதஸ் ஸப்பாபத என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சுட்டு விரலை நீட்டினார்கள் என்பது இதன் பொருள்.
உயர்த்தினார்கள் என்பதிலும் நீட்டினார்கள் என்பதிலும் வார்த்தை வேறுபாடு மட்டுமே உள்ளது. இரண்டின் பொருளும் ஒன்று தான்.
எனவே ஹதீஸ்கள் மொத்தம் நான்காக இருந்தாலும் அனைத்திலும் ஒரே விசயம் தான் கூறப்பட்டுள்ளது. எனவே மேல் சொன்ன அனைத்து விளக்கங்களும் இந்த செய்திகளுக்கும் பொருந்தக்கூடியது.
ஹதீஸ் 2
1147 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ أَضْجَعَ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَنَصَبَ أُصْبُعَهُ لِلدُّعَاءِ وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى قَالَ ثُمَّ أَتَيْتُهُمْ مِنْ قَابِلٍ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ رواه النسائي
வாஇல் பின் ஹுஜுர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது “ரக்அத்’தில் (இருப்பில்) அமர்ந்த போது, தமது இடக்காலைப் படுக்கவைத்து, வலக்காலை நட்டு வைத்தார்கள். தமது வலக் கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, (ஆட்காட்டி) விரலைப் பிரார்த்தனைக்காக நீட்டினார்கள். தமது இடக்கையை இடப்பக்கத் தொடையின் மீது வைத்தார்கள்.
நூல் : நஸாயீ (1147)
இந்தச் செய்தியில் நீட்டினார்கள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் நஸப என்ற அரபுச் சொல் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
நஸப என்ற அரபுச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இங்கே உயர்த்தினார்கள் நீட்டினார்கள் என்ற அர்த்தத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சொல்லுக்கு ரஃபஅ (உயர்த்தினார்கள்) என்ற பொருள் இருப்பதாக அரபு அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.
நாம் எந்தப் பொருளை உயர்த்தினாலும் அதற்கு நஸப என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
நாம் விரலசைப்பதற்கு ஆதாரமாக்க் காட்டும் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் விரலை உயர்த்தி அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு நஸாயீ கிரந்தத்தில் 870 வது அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ரஃபஅ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதே வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில் உயர்த்தினார்கள் என்பதைக் குறிக்க நஸப என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நஸாயீ கிரந்தத்தில் 1147 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.
1147 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ أَضْجَعَ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَنَصَبَ أُصْبُعَهُ لِلدُّعَاءِ وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى قَالَ ثُمَّ أَتَيْتُهُمْ مِنْ قَابِلٍ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ رواه النسائي
நஸப என்ற சொல்லும் ரஃபஅ என்ற சொல்லும் உச்சரிப்பதில் வேறுபட்டாலும் இரண்டின் பொருளும் ஒன்றுதான். விரலை உயர்த்தினார்கள் என்ற கருத்தையே இரண்டு வார்த்தைகளும் தருகின்றன.
எனவே ரஃபஅ என்ற சொல் இடம்பெற்ற ஹதீஸிற்கு நாம் அளித்த பதில் அனைத்தும் நஸப என்ற சொல் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸிற்கும் பொருந்தக்கூடியது.
முன்பு நாம் அளித்த விளக்கங்களை மீண்டும் ஒரு முறை படித்தால் இந்தச் செய்தியில் விரலை அசைக்கக் கூடாது என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படவில்லை என்பதை அறியலாம்.
நஸப என்ற சொல்லுக்கு மரம் செடி கொடிகளை நடுதல் என்ற பொருளும் உள்ளது. நடப்பட்ட மரம் செடி கொடிகள் அசையக்கூடியவையாகும். இவை அசைவதால் இவை நடப்படவில்லை என்று யாரும் சொல்ல மாட்டோம்.
இந்த அடிப்படையில் விரலை நஸப் செய்தார்கள் என்பதையும் விளங்கினால் இதில் விரலைப்பதற்கு எதிரான கருத்து ஒன்றும் இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள்.
அரபு மொழியில் நஸப என்ற சொல்லுக்கு கீழே தாழ்த்தி மேலே உயர்த்துதல் என்ற பொருளும் உள்ளது.
جمهرة اللغة (1 / 350):
نصب وَالنّصب من قَوْلهم: نصب الْقَوْم السّير نصبا إِذا رَفَعُوهُ. وكل شَيْء رفعته فقد نصبته.
கூட்டத்தினர் நடந்துசெல்லும் போது அடியெடுத்து வைப்பதற்கு நஸப என்று சொல்லப்படும். நீ எந்த பொருளை உயர்த்தினாலும் அதை நஸப் செய்துவிடுகின்றாய்.
நூல் : ஜம்ஹரதுல் லுஹா பாகம் : 1 பக்கம் : 350
لسان العرب (1 / 758):
. والنَّصِبُ: المريضُ الوَجِعُ؛ وَقَدْ نَصَبه الْمَرَضُ وأَنْصَبه. والنَّصْبُ: وَضْعُ الشيءِ ورَفْعُه
ஒரு பொருளைத் தாழ்த்தி அதை உயர்த்துவதற்கு நஸப் என்று சொல்லப்படும்.
நூல் : லிசானுல் அரப் பாகம் : 1 பக்கம் : 758
நடந்து செல்லும் போது காலை மேலே உயர்த்தி கீழே தாழ்த்துவோம். இவ்வாறு உயர்த்துவதும் தாழ்த்துவதும் இருந்தால் அதற்கு நஸப என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் என மேற்கண்ட அரபு அகராதி நூற்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த அர்த்தத்தை இவர்கள் ஆதாரமாக்க் காட்டிய செய்தியில் பொருத்தினால் நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை மேலே உயர்த்தி கீழே தாழ்த்தினார்கள் என்ற பொருள் தான் வரும்.
எனவே விரலை அசைப்பதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கும் இந்த ஹதீஸை இதற்கு எதிரான ஆதாரம் என்று இவர்கள் தவறாக விளங்கிக் கொண்டார்கள்.
ஹதீஸ் 3
நபி (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்று ஒரு செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي
அப்துல்லாஹ் பின் ஜ‚பைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தனது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்கமாட்டார்கள்.
நூல் : நஸாயீ (1253
இந்த ஹதீஸ் விரலசைப்பது நபிவழி என்று கூறும் ஹதீஸை விட வலிமையானது என்பதால் இதனடிப்படையில் விரலசைப்பது கூடாது என்று வாதிடுகின்றனர்.
ஆனால் இவர்கள் சொல்வது போல் இந்த ஹதீஸ் சரியானதல்ல. அபூதாவூத், நஸயீ ஆகிய நூற்களில் இந்த செய்தி இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் பின்வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)
- ஆமிர் பின் அப்தில்லாஹ்
- முஹம்மது பின் அஜ்லான்
- ஸியாத்
- இப்னு ஜுரைஜ்
- ஹஜ்ஜாஜ்
- அய்யூப் பின் முஹம்மது
இதில் மேலிருந்து மூன்றாவதாக முஹம்மது பின் அஜ்லான் என்ற நபர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களை தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை.
எனவே பலவீனமான இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள பலமான ஹதீஸைத் தட்ட முடியாது.
ஒரு பேச்சுக்கு இந்த ஹதீஸ் சரியானது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இந்தச் செய்தியை வைத்து விரலசைப்பது தொடர்பாக வரும் செய்தியை மறுக்க முடியாது.
ஏனென்றால் ஒரு செயல் நடந்தது என்று ஒருவரும் நடக்கவில்லை என்று இன்னொருவரும் கூறினால் ஹதீஸ் கலை விதியின் அடிப்படையில் செயல் நடந்தது என்று கூறுபவரின் கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
செயல் நடக்கவில்லை என்று அறிவிப்பவர் அந்தச் செயலை பார்க்காமல் விட்டிருப்பார். இவரல்லாத மற்றவர்கள் அதைப் பார்த்திருப்பார்கள் என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஒருவர் கொலை செய்ததை இரண்டு பேர் பார்த்து சாட்சி சொல்கிறார்கள். குறுக்கு விசாரணைக்குப் பின்னர் இவர்கள் நல்ல சாட்சிகள் என்று உறுதியாகி விடுகிறது. இப்போது ஊரே திரண்டு வந்து இவர் கொலை செய்யவில்லை என்று சொன்னால் அதை உலகின் எந்த நீதிமன்றமும் ஏற்காது. அவர் கொலை செய்வதை இவர்கள் பார்க்கவில்லை என்பதால் பார்த்தவர்களின் கூற்று பொய்யாகி விடாது.
இந்த விதியின் அடிப்படையில் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைக்கவில்லை என்ற செய்தியை ஏற்க முடியாது. மாறாக விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை ஏற்பது தான் சரியானது.
ஷாத் வகையைச் சார்ந்த பலவீமான செய்தி
மேலும் இந்தச் செய்தியை இவர்கள் ஆதாரமாக்க் காட்ட தகுதி அற்றவர்களாவர். ஏனெனில் பலர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்பதற்கு இவர்கள் கொடுத்த விளக்கத்தின் படி இதையும் இவர்கள் ஷாத் என்று தான் கூற வேண்டும்.
1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தனது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.
நூல் : நஸாயீ (1253)
மேற்கண்ட அறிவிப்பில் முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து ஸியாத் என்ற நபர் அறிவித்துள்ளார். முஹம்மது பின் அஜ்லானுடைய மாணவர்களில் பலர் இந்த ஹதீஸை முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து அறிவித்துள்ளனர்.
அவர்கள்
லைஸ் பின் சஅத்,
அபூ காலிதில் அஹ்மர்,
இப்னு உஐனா,
யஹ்யா பின் சயீத்
ஆகிய நால்வர் ஆவர்.
இந்த நால்வரும் தங்களுடைய அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஷாரா செய்வார்கள் என்ற தகவலை மட்டுமே அறிவிக்கின்றனர்.
முஹம்மது பின் அஜ்லானுடைய மாணவர்களில் ஸியாத் மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் கூறியுள்ளார்.
மேலும் இந்த ஹதீஸை ஆமிர் பின் அப்தில்லாஹ்விடமிருந்து முஹம்மது பின் அஜ்லான் மட்டும் அறிவிக்கவில்லை. உஸ்மான் பின் ஹகீம் மக்ரமா பின் புகைர் முஹம்மது பின் அஜ்லான் ஆகிய மூவர் இந்த ஹதீஸை ஆமிரிடமிருந்து அறிவிக்கின்றனர்.
இந்த மூவரில் முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அல்லாத மற்ற இருவரும் இந்த வாசகத்தை குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் இஷாரா (சமிக்கை) செய்வார்கள் என்று மட்டுமே அறிவித்துள்ளனர்.
எனவே இவர்களின் வாதப்படி ஷாத் என்று கூறுவதாக இருந்தால் இவர்கள் ஆதாரமாக்க் காட்டும் மேற்கண்ட ஹதீஸைத் தான் ஷாத் என்று கூற வேண்டும்.