வெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா?
நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?
سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 375)
3221- حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ الْحَمَّالُ ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُلاَثَةَ ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرٍ ، وَأَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : كَانَ إِذَا دَعَا عَلَى الْجَرَادِ قَالَ : اللَّهُمَّ أَهْلِكْ كِبَارَهُ ، وَاقْتُلْ صِغَارَهُ ، وَأَفْسِدْ بَيْضَهُ ، وَاقْطَعْ دَابِرَهُ ، وَخُذْ بِأَفْوَاهِهَا ، عَنْ مَعَايِشِنَا وَأَرْزَاقِنَا ، إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ فَقَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللهِ ، كَيْفَ تَدْعُو عَلَى جُنْدٍ مِنْ أَجْنَادِ اللهِ بِقَطْعِ دَابِرهِ قَالَ : إِنَّ الْجَرَادَ نَثْرَةُ الْحُوتِ فِي الْبَحْرِ.
قَالَ هَاشِمٌ : قَالَ زِيَادٌ : فَحَدَّثَنِي مَنْ رَأَى الْحُوتَ يَنْثُرُهُ.
நபி (ஸல்) அவர்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக பிராத்திக்கும் போது “யா அல்லாஹ்! அவற்றில் பெரியவற்றை அழிப்பாயாக! சிறியவற்றை கொன்றுவிடுவாயாக! அவற்றின் முட்டைகளை அழித்து அவற்றின் சந்ததிப் பெருக்கத்தை துண்டிப்பாயாக! எங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் உணவுகளை விட்டும் அவற்றின் வாய்களைத் தடுப்பாயாக! நீயே பிரார்த்தனைகளைச் செவியேற்பவன்” என்று கூறுவார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் படைகளின் ஒரு படைக்கு எதிராக அவற்றின் சந்ததிப் பெருக்கத்தை துண்டிக்குமாறு எப்படி பிரார்த்திக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “கடலில் மீனுடைய தும்மலே வெட்டுக்கிளிகளாகும். (அதாவது மீன் தும்முவதால் வெட்டுக் கிளிகள் உருவாகிறது) என்று கூறினார்கள்.
மீன் அதைத் தும்முவதைப் பார்த்த ஒருவர் (அதாவது மூஸா இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம் என்பவர்) இ(ந்த ஹதீ)தை தனக்கு அறிவித்ததாக ஸியாத் என்பார் கூறியதாக ஹாஷிம் என்பார் கூறியுள்ளார்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் ; இப்னுமாஜா (3221) திர்மிதி (1746)
இச்செய்தி நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “மூஸா இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம்“ என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் மாபெரும் பொய்யராவார். இவர்தான் மீன் தும்மியதால் வெட்டுக்கிளிகள் வெளிவந்தன என்றும் அதைத் தான் பார்த்தாகவும் ஸியாத் என்பவரிடம் கூறியவர். இதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய பொய்யர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த “மூஸா இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம்“ என்பாரை பல்வேறு அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
تهذيب التهذيب ـ محقق (10/ 328)
653 – ت ق (الترمذي وابن ماجة) موسى بن محمد بن ابراهيم بن الحارث التيمي أبو محمد المدني.
روى عن أبيه وأبي بكر بن أبي الجهم واسماعيل بن أبي حكيم وعبد الله بن ابان ابن عثمان. وعنه عقبة بن خالد السكوني المجدر ومحمد بن عبدالرحمن بن أبي ذئب وموسى ابن عبيدة الربذي وزياد بن عبدالله بن علاقة وعبد الله بن نافع الصائغ وغيرهم.
قال الدوري عن يحيى بن معين ضعيف الحديث وقال معاوية بن صالح عن يحيى ليس بشئ ولا يكتب حديثه وقال البخاري عنده مناكير وقال الآجري عن أبي داود كان أحمد يضعفه وقال أبو داود لا يكتب حديثه وقال الجوزجاني ينكر الائمة عليه حديثه وقال أبو زرعة منكر الحديث وقال أبو حاتم ضعيف الحديث وأحاديث عقبة بن خالد عنه من جناية موسى ليس لعقبة فيها جرم وقال الواقدي كان فقيها محدثا وكذا قال يعقوب بن شيبة.
قلت: تقدم من اخباره في ترجمة موسى بن ابراهيم المخزومي وقال والنسائي وأبو أحمد الحاكم منكر الحديث وقال الدارقطني متروك وقال ابن سعد كان كثير الحديث.وله أحاديث منكرة وتوفي سنة إحدى وخمسين ومائة وذكره البخاري في الاوسط في فصل من مات ما بين خمسين إلى ستين ومائة.
இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்றும், இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை, இவரது ஹதீஸ்கள் பதிவுசெய்யப்படாது என்றும் இமாம் யஹ்யா இப்னு மயீன் கூறியுள்ளார். “இவரிடம் நிராகரிக்கபடவேண்டியவை உள்ளன” என இமாம் புகாரி விமர்சித்துள்ளார். இவர் பலவீனமானவர் என இமாம் அஹ்மத் கூறியுள்ளார். இவரது ஹதீஸ்கள் எழுதப்படாது என இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். இவரது ஹதீஸ்களை இமாம்கள் மறுத்துவிட்டனர் என அல்ஜவ்ஸஜானி கூறியுள்ளார். ஹதீஸ்களில் நிராகரிக்கப்படவேண்டியவர் என இமாம் அபூசுர்ஆ விமர்சித்துள்ளார். இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் அபூ ஹாத்திம், நஸாயீ, ஹாகிம் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் ஹதீஸ்களில் விடப்படவேண்டியவர் என இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 10 பக்கம் 328)
இன்னும் பல இமாம்கள் இவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த விமர்சனங்களிலிருந்தே இது நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிலர் இது போன்ற செய்திகளை அதன் உண்மைத் தன்மை அறியாமல் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி)
நூல் : முஸ்லிம் (1)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்:
அறவிப்பவர் : முஃகீரா (ரலி)
நூல் : புகாரி (1291)
எனவே இது போன்ற பொய்யான செய்திகளைப் பரப்பவதை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.