பிஜே சொன்னதும் நாம் சொல்வதும் ஒன்றா? – பாகம் 3

பிஜே சொன்னதும் நாம் சொல்வதும் ஒன்றா?
(பாகம் 3)

இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் இட்டுக்கட்டப்பட்ட, ஆக பலவீனமான செய்தியை தனக்கு சாதகமாக உள்ளதாகத் தெரிந்தவுடன் அதை ஸஹீஹான ஹதீஸ்? என்று கூறி நியாயப்படுத்த முனைந்த பிஜேவின் இழிசெயலை முன்பு விளக்கியிருந்தோம்.

தக்க ஆதாரங்களுடன் அது பலவீனமான செய்திதான் என்பதை சுட்டிக்காட்டியவுடன் வேறு வழியின்றி அச்செய்தியின் பலவீனத்தை பி்ஜே அவர்கள் ஒத்துக் கொண்டார்.

மேற்படி செய்தியைத்தான் பலவீனம் என்று ஒத்துக் கொண்டாரே தவிர நபிமீது இட்டுக்கட்டிக் கூறிய தன்னுடைய சுய கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

”மனைவியின் துரோகங்களை கணவன் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் நபியவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று தமது மனைவியரிடத்தில் இரவில் செல்வதைத் தடுத்தார்கள்” என்ற நாசகார கருத்தை பிஜே தனது இரண்டாவது முகநூல் நேரலை (09.10.18) விளக்கத்திலும் உறுதிப்படுத்துகின்றார்.

”கணவன் முன்கூட்டியே சொல்லிவிட்டு சென்றால் துரோகம் செய்யும் மனைவி சுதாரிப்பாக இருந்து கொள்வார்” என்பதற்காகத்தான் இரவில் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள் எனும் விஷக் கருத்தை அவ்வுரையில் பிஜே மீண்டும் விதைக்கின்றார்.

நபிகள் நாயகம் இவ்வாறு தான் போதனை செய்தார்கள் என்று பிஜே விளக்கம் கொடுப்பதின் மூலம் நபிகள் நாயகத்தை ரோஷம் இல்லாதவராக (அல்லாஹ் காப்பானாக) சித்தரிக்க முயல்கின்றார்.

அறிவிப்பாளர் தொடரில்லாத, மிக பலவீனமான செய்தியை அடிப்படையாக கொண்டு நபிகள் நாயகத்தின் மீதும், நபித்தோழர்களின் மீதும் சேற்றை வாரி இறைக்கும் விதமாக விளக்கமளித்த பிஜே அது பலவீனம் என்று தெரிய வந்ததும் முஸ்லிமில் இடம்பெறும் ஒரு செய்தியை குறிப்பிட்டு அச்செய்தி தனது கருத்தையே பிரதிபலிக்கின்றது என்கிறார்.

முஸ்லிமில் என்ன இடம்பெறுகிறது? அது ஆதாரப்பூர்வமானதா என்பதை காண்போம்.

முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா?

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).

நூல் : முஸ்லிம் (3897)

ஆண்கள் தமது மனைவியரிடம் இரவு நேரத்தில் திடீரென செல்லக் கூடாது என்று கூறிய நபிகள் நாயகம் அதற்கு காரணமாக இரண்டைக் குறிப்பிடுவதாக இச்செய்தி அமைந்துள்ளது.

வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும்

அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்

அவ்வாறு செல்வது முறையாகாது என்று இச்செய்தி தெரிவிக்கின்றது.

இந்த வாசகங்களை வைத்துக் கொண்டு பார்த்தீர்களா? நான் சொன்ன சம்பவம் தவறாக இருந்திருக்கலாம் ஆனால் கருத்து சரிதான்.

வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடும் நோக்கத்திலோ அவர்களின் குற்றங்குறைகளை கண்டுபிடிக்கும் நோக்கத்திலோ திடீரென்று இரவில் செல்லக் கூடாது என்றால் என்ன அர்த்தம்?

பெண்கள் பிற ஆண்களுடன் அப்படி இப்படி இருப்பார்கள். அதை கணவன்மார்கள் பார்க்க நேரிடும் என்பதாலேயே இரவில் திடீரென்று வீட்டாரிடம் செல்லக் கூடாது என்று நபிகள் நாயகம் தடுத்தார்கள் என்று முதலில் கக்கிய விஷத்தையே மீண்டும் கக்குகிறார்.

தான் கக்கும் விஷத்திற்கு முஸ்லிமில் இடம்பெற்றிருக்கும் மேற்படி செய்தியின் வாசகத்தை துணைக்கு அழைக்கின்றார்.

இந்த வாசகங்களில் இவர் சொல்லும் கருத்து உள்ளதா என்பதை அறியும் முன் இந்த செய்தியின் தரத்தை அறிந்து கொள்வோம்.

முஸ்லிமுடைய ஹதீஸை பொறுத்தவரை மேலோட்டமாக பார்த்தால் முழுச்செய்தியும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் போல தோன்றும்.

ஆனால் ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் அதில் சில வாசகங்கள் நபி கூறியதுதான் என்பதற்கு தெளிவான சான்றுகள் இல்லை என்ற உண்மையை விளங்கி கொள்ளலாம்.

முஸ்லிமில் இடம் பெறும் செய்தியில்

”(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.”

என்ற வாசகம் வரைதான் நபி சொன்னதாக சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்ட வாசகம் ஆகும்.

அதற்கு பின்னுள்ள வார்த்தைகள் நபி சொல்லாக இல்லாத நிலையில் ஹதீஸில் நுழைந்துள்ளது. இக்கருத்தினை உறுதிப்படுத்தும் சான்றுகளை காண்போம்.

நுழைக்கப்பட்ட வாசகம்

மேற்கண்ட முஸ்லிம் (3897வது) செய்தியை பதிவு செய்து விட்டு முஸ்லிம் இமாம் ஒரு தகவலைப் பதிவு செய்கின்றார். முஸ்லிம் இமாம் பதிவு செய்யும் அந்த தகவலைக் காண்போம்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (6/ 56)
5079 – وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا سُفْيَانُ بِهَذَا الإِسْنَادِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ سُفْيَانُ لاَ أَدْرِى هَذَا فِى الْحَدِيثِ أَمْ لاَ. يَعْنِى أَنْ يَتَخَوَّنَهُمْ أَوْ يَلْتَمِسَ عَثَرَاتِهِمْ.

மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது இல்லையா (அறிவிப்பாளர் முஹாரிப் அவர்களின் வாசகமா) என எனக்குத் தெரியவில்லை” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

(முஸ்லிம் 3897)

“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது அல்லது அறிவிப்பாளரின் சொந்த வாசகமா? எனத் தனக்குத் தெரியவில்லை என இந்த ஹதீஸை அறிவிக்கும் சுஃப்யான் அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

இதே தகவல் தாரமீ என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

سنن الدارمي (2/ 356)
قال سفيان قوله أو يخونهم أو يلتمس عثراتهم ما أدري شيء قاله محارب أو شيء هو في الحديث

சுஃப்யான் கூறுகிறார் “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம் முஹாரிப் என்பாரின் சொந்தக் கருத்தா? அல்லது ஹதீஸின் ஒரு பகுதியா? என்பதை நான் அறியமாட்டேன்.

நூல் : சுனனுத் தாரமீ

இதை இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரி விரிவுரையில் சுட்டிக்காட்டி உள்ளாரகள்.

فتح الباري – ابن حجر (9/ 340)
( قوله باب لا يطرق أهله ليلا إذا أطال الغيبة مخافة أن يتخونهم أو يلتمس عثراتهم )
كذا بالميم في يتخونهم وعثراتهم وقال بن التين الصواب بالنون فيهما قلت بل ورد في الصحيح بالميم فيهما على ما سأذكره وتوجيهه ظاهر وهذه الترجمة لفظ الحديث الذي أورده في الباب في بعض طرقه لكن اختلف في ادراجه فاقتصر البخاري على القدر المتفق على رفعه واستعمل بقيته في الترجمة فقد جاء من رواية وكيع عن سفيان الثوري عن محارب عن جابر قال نهى رسول الله صلى الله عليه و سلم أن يطرق الرجل أهله ليلا يتخونهم أو يطلب عثراتهم أخرجه مسلم عن أبي بكر بن أبي شيبة عنه وأخرجه النسائي من رواية أبي نعيم عن سفيان كذلك وأخرجه أبو عوانة من وجه آخر عن سفيان كذلك وأخرجه مسلم من رواية عبد الرحمن بن مهدي عن سفيان به لكن قال في آخره قال سفيان لا أدري هذا في الحديث أم لا يعني يتخونهم أو يطلب عثراتهم ثم ساقه مسلم من رواية شعبة عن محارب مقتصرا على المرفوع كرواية البخاري

இவ்வாறு பத்ஹூல் பாரியில் இடம் பெற்றுள்ளது.

இதில் தேவையான பகுதியை மட்டும் மொழியாக்கம் செய்யப்படுகிறது.

لكن اختلف في ادراجه فاقتصر البخاري على القدر المتفق على رفعه واستعمل بقيته في الترجمة

(“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம்) இடைச் செருகலா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. எது நபி சொன்னதாக கருத்து வேறுபாடின்றி உள்ளதோ அந்த அளவோடு இமாம் புகாரி சுருக்கிக் கொண்டார். மீதியை ஹதீஸின் தலைப்பிலே குறிப்பிட்டுள்ளார்.

(ஃபத்ஹூல் பாரி பாகம் 9 பக்கம் 340)

”(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.”

என்ற வாசகத்தை மட்டும்தான் இமாம் புகாரி அறிவித்துள்ளார். இதுதான் நபி சொன்னதாக உறுதிப்படுத்தப்பட்டது. அதிகப்படியான வாசகம் இடைச் செருகலாக இருக்கலாம் என்பதினால்தான் புகாரி இவ்வாறு செய்துள்ளார் என்பதை இப்னு ஹஜர் மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றார்.

”முஹாரிப்” என்பாரிடமிருந்து ”ஷூஃபா” அவர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளில் இந்த அதிகப்படியான வாசகங்கள் இல்லை.

”ஷூஃபா” அவர்கள் மிகவும் வலிமையான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் அவர் இதைக் குறிப்பிடவில்லை.

ஆனால் அதே ”முஹாரிப்” என்பாரிடமிருந்து ”சுஃப்யான்”அவர்கள் அறிவிக்கும் போது இந்த அதிகப்படியான வாசகத்தை குறிப்பிட்டுவிட்டு அது ஹதீஸின் பகுதியா? முஹாரிப் என்பாரின் சொந்தக் கருத்தா? என்பது தனக்குத் தெரியாது எனக் குறிப்பிடுகின்றார்.

இவர் சந்தேகத்துடன் அறிவிப்பதிலிருந்தும்
இந்த வாசகம் வேறு வலிமையான அறிவிப்புகளில் நபிசொன்னதாக வரவில்லை என்பதையும் பார்த்தால் மேற்படி வாசகம் நபியின் கூற்றல்ல என்ற முடிவிற்கே வரமுடியும்.

எனவே தான் இமாம் இப்னு ஹூமைத் அவர்கள் இந்த வாசகம் நபியின் வாசகமல்ல என உறுதிபட தெரிவிக்கின்றார்

المنتخب من مسند عبد بن حميد ت مصطفى العدوي (2/ 174)
1099- الجزء الأول من الحديث وهو: “نَهَى أَنْ يَطْرُقَ الرَّجُلُ أَهْلَهُ ليلا” صحيح وقد أخرجه البخاري “فتح” “9/ 339” كتاب النكاح، ومسلم “ص1527 و1528” من حديث شعبة عن محارب عن جابر به مرفوعا.
أما الجزء الأخير من الحديث: “يتخونهم أو يلتمس عثراتهم” فقد أخرجه مسلم وحده من طريق سفيان الثوري عن محارب، عن جابر به مرفوعا والصواب أنه مدرج

“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம் இடைச்செருகல் என்பதே சரியான கருத்தாகும்

நூல் அல்முன்தகப் பாகம் 2 பக்கம் 174

எனவே ஒரு வாசகத்தை நபி சொன்னார்களா? இல்லையா? என சந்தேகம் வந்துவிட்டால் , நபி சொன்னார்கள் என்பதற்கு வேறு உறுதியான ஆதாரங்கள் கிடைக்காத போது அதனை நபி சொல்லவில்லை என்று முடிவு செய்வதே இறையச்சத்திற்கு நெருக்கமான சரியான முடிவாகும்.

எனவே முஸ்லிமில் இடம் பெறும் இந்த அறிவிப்பு நபி சொன்னார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால் அதன் அடிப்படையில் சட்டம் எடுப்பது கூடாது.

இச்செய்தியின் உண்மையான தரத்தை அறிந்து கொள்ளாத போது நமது சகோதரர்கள் இச்செய்தியை முகநூலில் பதிவிட்டதை ஆதாரமாக்கி நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் வெவ்வேறா? இரண்டும் ஒன்று தானே என பிதற்றுகிறார்.

முஸ்லிமில் இடம்பெற்றுள்ள இந்த வாசகம் நபியின் வாசகமல்ல என்பதை மேலே நாம் விளக்கியுள்ளோம்.
ஒரு வாதத்திற்கு இதை நபியின் வாசகம் என்றே வைத்துக் கொண்டாலும் சந்தேகம் கொண்டு இரவு நேரத்தில் திடீரென்று செல்லாதே என்று நபி அறிவுரை கூறியதாகத்தான் ஆகுமே தவிர பிஜே சொன்ன கொச்சைப் பொருள் வராது.

மனைவியின் மீது தேவையின்றி சந்தேகம் கொண்டு திடீரென்று இரவு நேரத்தில் செல்லாதே என்ற அறிவுரைக்கும்

மனைவியர் துரோகம் இழைப்பார்கள் என்பதற்காகத்தான் இரவில் மனைவியரிடம் திடீரென்று செல்லக் கூடாது என்று நபி சொன்னார்கள் என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

முதலாவது சந்தேகம் கொள்ளாதே எனும் அறிவுரை

இரண்டாவது மனைவி தப்பானவளாக இருந்தாலும் கண்டு கொள்ளாதே, அட்ஜெஸ்மன்ட் செய்து கொள் என்ற கொச்சைப் பொருள்.

தனது ஒழுக்க கேட்டை ஒன்றுமில்லாமல் ஆக்க இரண்டின் அர்த்தத்தையும் சம்மாக்கி ஒழுக்க கேட்டை நபி சொன்னார்கள் என்ற பாரதூரமான கருத்தை மக்களிடம் போதிக்கின்றார்.

பிஜெ எந்த தவறான கருத்தை இதில் திணித்து தனது பாலியல் குற்றச்சாட்டை நியாயப்படுத்த முனைகிறாரோ அந்தக் கருத்து இச்செய்தியில் கிடையாது என்பது தெளிவு.

திருமணம் ஆன பெண்கள் கணவன் அல்லாதவர்களுடன் உறவு கொள்வது குற்றமில்லை என தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் வேண்டுமானால் பிஜேவின் ஒழுக்ககேடான சுயகருத்தை வரவேற்கலாம், நல்லொழுக்கத்தை விரும்பும் முஸ்லிம் சமூகம் ஒரு போதும் வரவேற்காது.

அஹ்மத் ஹதீஸின் நிலை என்ன?

பாகம் 4 ல் இன்ஷா அல்லாஹ்

பாகம் 4ஐ படிக்க…

http://stg.onlinetntj.com/articles/ahmed-hadees-shaheeh-part4