முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா? (பாகம்-1)

முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா?
(பாகம்-1)

(பிஜேவின் மறுப்புக்கு மறுப்பு)


பிஜே அவர்கள் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை திசைதிருப்ப, ஹதீஸ்களில் இல்லாத கருத்தை திணித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி பல கருத்துக்களை கூறிவருகின்றார்.

ஒருவன் நீண்ட நாட்கள் வெளியூரில் தங்கியிருந்து இரவு நேரத்தில் ஊருக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மனைவியிடம் செல்லக் கூடாது என்று நபி (ஸல) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

”மனைவி கணவனுக்காக தன்னை தூய்மைப்படுத்தி, அலங்கரித்துக் கொள்வதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டார்கள் என்பதும் ஹதீஸ்களில் தெளிவாக வந்துள்ளது.

ஆனால் பிஜே அவர்களோ மனைவி கணவனுக்கு செய்யும் துரோகத்தை அவன் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் இரவில் செல்வதை தடுத்தார்கள் என்ற நாசகார கருத்தை நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டி கூறி அதற்கு ஒரு பலவீனமான செய்தியையும் ஆதாரமாக முன்வைத்தார்.

அது பலவீனம்தான் என்பதையும் அதன் கருத்தைக் கவனித்தால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதையும் நாம் தெளிவு படுத்திய பிறகு அந்தச் செய்தி பலவீனம்தான் என்பதை வேறுவழியின்றி ஒத்துக்கொண்டார்.

செய்தியைத்தான் பலவீனம் என்று ஒத்துக் கொண்டாரே தவிர நபி மீது தான் இட்டுக் கட்டிய கருத்து சரிதான் என்றும் அதற்கான ஆதாரம் முஸ்லிமில் இருப்பதாகவும் விதண்டாவாதம் செய்தார்.

முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் செய்தியை அவர் எடுத்துக் காட்டினார்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).

நூல் : முஸ்லிம் (3897)

இந்தச் செய்தியில் ஒருவன் தன் மனைவியின் மீது வீண் சந்தேகப்பட்டு குற்றம் குறைகள் இருக்கிறதா எனத்தேடி தகவல் தெரிவிக்காமல் இரவு நேரத்தில் செல்வது கூடாது என்ற கருத்தைத் தருகிறது.

ஆனால் பிஜே அவர்களோ ”ஒரு பெண் தனது கணவனுக்கு செய்யும் துரோகத்தை கணவன் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டுச் சென்றால் துரோகம் செய்யும் மனைவி அலர்ட்டாக இருந்து கொள்வாள் என்றும் அதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்ற கேடுகெட்ட கருத்தைத்தான் இந்தச் செய்தி தருவதாக வாதிட்டார்.

இந்தச் செய்தியில் அந்தக் கருத்து இல்லை என்பதை நாம் தெளிபடுத்தியதுடன் சற்று ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் ”(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.”

என்ற வாசகம் வரைதான் நபி சொன்னதாக சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்ட வாசகம் ஆகும்.

” வீட்டார் மோசடி செய்கிறார் களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).”

என்ற வாசகம் நபி (ஸல்) அவர்கள் கூறியது கிடையாது. இது ஹதீஸ்களில் நுழைக்கப்பட்ட இடைச் செருகல் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அதற்கு பின்வரும் ஆதாரங்களை குறிப்பிட்டிருந்தோம்.

மேற்கண்ட முஸ்லிம் (3897வது) செய்தியை பதிவு செய்து விட்டு முஸ்லிம் இமாம் ஒரு தகவலைப் பதிவு செய்கின்றார்.

முஸ்லிம் இமாம் பதிவு செய்யும் அந்த தகவல் இது தான்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (6/ 56)

5079 – وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا سُفْيَانُ بِهَذَا الإِسْنَادِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ سُفْيَانُ لاَ أَدْرِى هَذَا فِى الْحَدِيثِ أَمْ لاَ. يَعْنِى أَنْ يَتَخَوَّنَهُمْ أَوْ يَلْتَمِسَ عَثَرَاتِهِمْ.

மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது இல்லையா (அறிவிப்பாளர் முஹாரிப் அவர்களின் வாசகமா) என எனக்குத் தெரியவில்லை” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

(முஸ்லிம் 3897)

“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது அறிவிப்பாளரின் சொந்த வாசகமா? எனத் தனக்குத் தெரியவில்லை என இந்த ஹதீஸை அறிவிக்கும் சுஃப்யான் அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

இதே தகவல் தாரமீ என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

سنن الدارمي (2/ 356)

قال سفيان قوله أو يخونهم أو يلتمس عثراتهم ما أدري شيء قاله محارب أو شيء هو في الحديث

சுஃப்யான் கூறுகிறார் “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம் முஹாரிப் என்பாரின் சொந்தக் கருத்தா? அல்லது ஹதீஸின் ஒரு பகுதியா? என்பதை நான் அறியமாட்டேன்.

நூல் : சுனனுத் தாரமீ

இதை இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரி விரிவுரையில் சுட்டிக்காட்டி உள்ளாரகள்.

فتح الباري – ابن حجر (9/ 340)

( قوله باب لا يطرق أهله ليلا إذا أطال الغيبة مخافة أن يتخونهم أو يلتمس عثراتهم )

இவ்வாறு பத்ஹூல் பாரியில் இடம் பெற்றுள்ளது.

இதில் தேவையான பகுதியை மட்டும் மொழியாக்கம் செய்யப்படுகிறது.

لكن اختلف في ادراجه فاقتصر البخاري على القدر المتفق على رفعه واستعمل بقيته في الترجمة

(“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம்) இடைச் செருகலா? இல்லையா? என்ற கருத்துவேறுபாடு உள்ளது. எது நபி சொன்னது என உறுதியாகியுள்ளதோ அந்த அளவோடு புகாரி சுருக்கிக் கொண்டார். மீதியை ஹதீஸின் தலைப்பில்தான் குறிப்பிட்டுள்ளார்.

(ஃபத்ஹூல் பாரி)

”(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.”

என்ற வாசகத்தை மட்டும்தான் இமாம் புகாரி அறிவித்துள்ளார். இதுதான் நபி சொன்னதாக உறுதிப்படுத்தப்பட்டது. அதிகப்படியான வாசகம் இடைச் செருகலாக இருக்கலாம் என்பதினால்தான் புகாரி இவ்வாறு செய்துள்ளார் என்பதை இப்னு ஹஜர் மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றார்.

முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த செய்தி முறையே பின்வரும் அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்படுகிறது.

நபிகள் நாயகம்

ஜாபிர்

முஹாரிப்

சுப்யான்

வகீஃ

அபுபக்கர் இப்னு அபீஷைபா

இமாம் முஸ்லிம்

இதில் முஹாரிப் என்பாரிடமிருந்து சுப்யான் அறிவிக்கும் அறிவிப்பில் தான் இந்த வாசகம் உள்ளது. அதையும் சுப்யான் இது நபியின் வாசகமா? அல்லது முஹாரிபின் வாசகமா என்ற சந்தேகத்துடன் அறிவிக்கின்றார்.

இதே செய்தியை ”முஹாரிப்” என்பாரிடமிருந்து ”ஷூஃபா” அவர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளில் இந்த அதிகப்படியான வாசகங்கள் இல்லை.

”ஷூஃபா” அவர்கள் மிகவும் வலிமையான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் அவர் இந்த வாசகங்களை குறிப்பிடவில்லை.

ஆனால் ”முஹாரிப்” என்பாரிடமிருந்து ”சுஃப்யான்”அவர்கள் அறிவிக்கும் போது இந்த அதிகப்படியான வாசகத்தை குறிப்பிட்டுவிட்டு அது ஹதீஸின் பகுதியா? முஹாரிப் என்பாரின் சொந்தக் கருத்தா? என்பது தனக்குத் தெரியாது எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த வாசகம் வேறு வலிமையான அறிவிப்புகளில் நபிசொன்னதாக வரவில்லை.

எனவே ஒரு வார்த்தையை நபி சொன்னார்களா? இல்லையா? என சந்தேகம் வலுத்துவிட்ட நிலையில் , இது நபியின் கூற்றுதான் என்பதற்கு வேறு உறுதியான ஆதாரங்கள் கிடைக்காவிட்டால் அதனை நபி சொல்லவில்லை என்று முடிவு செய்வதே இறையச்சத்திற்கு நெருக்கமான சரியான முடிவாகும்.

இந்த அடிப்படையிலேயே முஸ்லிமில் இடம் பெறும் அறிவிப்பில் உள்ள கூடுதல் வாசகங்கள் நபி சொன்னார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால் அதன் அடிப்படையில் சட்டம் எடுப்பது கூடாது என்றோம்.

பிஜேயின் பொம்மலாட்டம்

மேற்கண்ட முஸ்லிம் ஹதீஸில் “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம் நபி கூறியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்ற தகவலை அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் என்பவர் குறிப்பிடுகின்றார்.

சுஃப்யான் இவ்வாறு கூறினார் என்பதை அவருடைய மாணவர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ என்பவர் மட்டும் கூறவில்லை. முஹம்மது இப்னு யூசுப் என்பாரும் சுப்யான் இவ்வாறு கூறியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த இருவரும் மிக மிக உறுதியான அறிவிப்பாளர்கள் ஆவர். இவர்களின் அறிவிப்பு புகாரி, முஸ்லிம் உட்பட அதிகமான ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகிறது.

நம்பகமான அறிவிப்பாளர்கள் தன்னுடைய ஆசிரியர் கூறினார் என்று ஒரு அதிகப்படியான தகவலை தெரிவித்தால் அந்த வார்த்தை அந்த ஆசிரியர் கூறியதுதான் என்பது உறுதியாகிவிடும். சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்கள் பொய்யர்கள் அல்லது தவறிழைத்துள்ளார்கள் என்று ஆதாரத்துடன் நிறுவினாலே தவிர கூடுதலான வார்த்தையை இன்ன அறிவிப்பாளர் தான் கூறினார் என்பதை மறுக்க முடியாது.

இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு பிஜேவின் திருகுதாளத்தை காண்போம்.

மேற்படி செய்தியை சுப்யான் என்பவரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அபூ நுஐம்

வகீவு

அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ

முஹம்மது இப்னு யூசுப்

இவர்கள் அப்பட்டியலில் அடங்குவார்கள்.

இதில் “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம் நபி கூறியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுஃப்யான் அவர்கள் கூறிய கருத்தை அவரது மாணவர்களில் அப்துர் ரஹ்மான், முஹம்மத் பின் யூசுப் ஆகியோரே குறிப்பிடுகின்றனர்.

அபூ நுஐம் மற்றும் வகீவு ஆகியோர் இத்தகவலை குறிப்பிடவில்லை. அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே அறிவித்துள்ளனர்.

எனவே “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்”

என்ற வாசகம் நபி கூறிய வாசகம்தான் என உறுதியாகிவிட்டதாக பிஜே குறிப்பிடுகின்றார்.

ஹதீஸ்கலை தொடர்பான சில நுணுக்கமான விசயங்களில் தான் செய்யும் ஏமாற்று வேலைகளை தனது பாலியல் குற்றத்தை அலட்சியம் செய்யும் அப்பாவிகள் அறிந்து கொள்ள முடியாது என்பதுதான் பிஜே அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

அறிந்தவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ற எந்தக் கவலையும் பிஜே அவர்களுக்கு இல்லை என்பதைத்தான் பிஜேவின் இந்த அணுகுமுறை வெளிப்படுத்துகிறது.

இதன் காரணமாகத்தான் ஒரு செய்தியில் இடைச்செருகல் என சந்தேகிக்கப்பட்ட வாசகத்தை இடைச் செருகல் இல்லை என்பதை எவ்வாறு நிரூபிக்க வேண்டுமோ அவ்வாறு நிரூபிக்காமல் அதற்கு மாற்றமான முறையில் திசைதிருப்பும் வேலைகளைச் செய்கின்றார்.

இதன் தொடச்சி அடுத்த பாகத்தில் காண்போம்….

பாகம் 2ஐ படிக்க…

http://stg.onlinetntj.com/articles/muslim-hadees-saheeha-part2