தனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பிஜே
(பாகம் 2)
அடுத்தவரின் மனைவியுடன் ஆபாச உரையாடல் நடத்தி, அது ஆதாரத்துடன் நிரூபணம் ஆனதும் அது நான் பேசியதுதான் என்று ஒத்துக் கொண்டு, விசாரணைக்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்ட பிஜே அவர்கள் தன்னுடைய பாலியல் குற்றத்தை மடை மாற்றம் செய்வதற்காக மார்க்கத்தில் விளையாடி வருகின்றார்.
இஸ்லாத்திற்கு விரோதமான புதுப்புது பத்வாக்களை? அளித்து தனது அறியாமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அதை முந்தைய தொடரில் விளக்கியிருந்தோம்.
அந்த தொடரை கீழ்க்காணும் லிங்கில் சென்று படிக்கலாம்
https://www.facebook.com/
இப்போது ஹதீஸை தனக்கு தோதாக வளைத்து திரித்த பிஜேவின் கள்ள வேலை குறித்து பார்ப்போம்.
பிஜேவின் 07.10.18 நேரலையில் பிறரை துருவித்துருவி ஆராயக் கூடாது என்ற கருத்தைக் கூற திர்மிதியில் இடம் பெறுகிறது என்று பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகின்றார்.
وقد روي عن ابن عباس أن النبي صلى الله عليه و سلم نهاهم أن يطرقوا النساء ليلا قال فطرق رجلان بعد نهي النبي صلى الله عليه و سلم فوجد كل واحد منهما مع امرأته رجلا سنن الترمذي
இப்னு அப்பாஸ் வழியாக அறிவிக்கப்படுகிறது : நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களை இரவு நேரத்தில் மனைவிமார்களிடம் செல்வதை விட்டும் தடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தடுத்த பிறகு இரண்டு மனிதர்கள் சென்றனர். எனவே அந்த இருவரில் ஒவ்வொருவருமே தம் மனைவியுடன் அந்நிய ஆணைக் கண்டனர்.
நூல் : திர்மிதி
பிறரை துருவித் துருவி ஆராயக்கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீஸில் வலுவான எத்தனையோ சான்றுகள் இருக்க பிஜே மேற்கண்ட செய்தியை கூறுகிறார்.
அதாவது பெண்கள் பிற ஆண்களுடன் அப்படி இப்படியுமாகத் தான் இருப்பார்கள். சஹாபிய பெண்களே அப்படித்தான் இருந்தார்கள். அதையெல்லாம் கணவன்மார்கள் கண்டு கொள்ளக் கூடாது என்ற சமூக சிந்தனை கொண்ட அறிவுரையை மக்களுக்கு முன்வைக்கின்றார்.
இதிலிருந்தே பிஜேவின் சிந்தனையின் தரம் என்ன?
அவர் தன்னை நம்பிய சொற்ப நபர்களுக்கு எதை போதிக்கின்றார்? என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
திர்மிதியில் உள்ள ஹதீஸ்? சரியா?
மேற்படி திர்மிதி செய்தியை பிஜே ஆதாரமாக குறிப்பிடும் போது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் – ஸஹீஹான ஹதீஸ் என்று அழுத்தமாக சொல்லிவிட்டுத்தான் கூறுகிறார்.
ஆனால் திர்மிதியில் இடம் பெற்றிருக்கும் இந்தச் செய்திக்கு எந்த அறிவிப்பாளர் தொடரையும் திர்மிதி இமாம் அவர்கள் குறிப்பிடவில்லை .
அறிவிப்பாளர் தொடரே இல்லாமல் இடம் பெற்றிருக்கும் இந்தச் செய்தியைத்தான் பிஜே அவர்கள் தனது பாலியல் குற்றச் சாட்டை நியாயப்படுத்துவதற்காக போகிற போக்கில் ஸஹீஹ் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
அறிவிப்பாளர் தொடரே இல்லாத செய்தியை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று அழுத்தமாக சொல்லி போதிப்பது என்றால் என்னே ஒரு துணிவு வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் இது போன்று ஒரு பலவீனமான செய்தியை கூறிவிட்டால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து அவர்கள் மார்க்கத்தை வளைத்துவிட்டார்கள், மறைத்து விட்டார்கள் என்றெல்லாம் வரம்பு மீறி விமர்சிக்கும் பிஜே அவர்கள் முன்தயாரிப்புடன் செய்யும் முகநூல் நேரலையில் மிகவும் பலவீனமான செய்தியைக் குறிப்பிடுவதிலிருந்தே பிஜே நிதானமாக இல்லை என்பதையும் மிகுந்த பதட்டத்துடன் காணப்படுவதையும் உணர்த்தி விடுகிறது.
தப்ரானியின் அறிவிப்பு
திர்மிதியில் இடம் பெற்றிருக்கும் இந்தச் செய்தி தப்ரானிக்குரிய அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும், முஸ்னதுத் தாரமீ என்ற நூலிலும் முழுமையான அறிவிப்பாளர் தொடருடன் இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடர்கள் அனைத்திலும் ”ஸம்ஆ பின் ஸாலிஹ்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப்
பாகம் 3 பக்கம் 292
http://stg.onlinetntj.com/articles/thahteebut-tahteeb
கருத்து சரியா?
مصنف عبد الرزاق (7/ 495)
14018 – عبد الرزاق عن بن عيينة عن عبد الرحمن بن حرملة قال لما نزل رسول الله صلى الله عليه و سلم بالمعرس أمر مناديا فنادى لاتطرقوا النساء قال فتعجل رجلان فكلاهما وجد مع امرأته رجلا فذكر ذلك للنبي صلى الله عليه و سلم فقال قد نهيتكم أن تطرقوا النساء [ ص 496 ]
நபி (ஸல்) அவர்கள் முஅர்ரிஸ் என்ற இடத்தில் தங்கியிருந்த போது ”மனைவியிடம் (தகவல் தெரிவிக்காமல்) இரவில் செல்லவேண்டாம் என்று அறிவிக்குமாறு அறிவிப்பாளருக்கு கட்டளையிட்டார்கள். அவர் அறிவித்தார். அப்போது இரண்டு மனிதர்கள் விரைந்து சென்றார்கள். இருவருமே தம்மனைவியோடு அந்நிய ஆணைக் கண்டார்கள். அவர்கள் இதனை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் ”நான் உங்கள் இரவு நேரத்தில் மனைவிமார்களிடம் செல்லவேண்டாம் என உறுதியாகத் தடுத்துவிட்டேனே” எனக் கூறினார்கள்.
நூல் : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்.
திர்மிதியில் அறிவிப்பாளர் தொடரே இல்லாமலும்,
முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலில் முழுமையான அறிவிப்பாளர் தொடர் இல்லாமலும் பதிவு செய்யப்பட்ட இந்த செய்தியைத்தான் பிஜே தனது முதல் லைவில் ஸஹீஹானது என்று பேசியுள்ளார்.
இந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்.
இரண்டு ஸஹாபாக்கள் தன்னுடைய மனைவியோடு அந்நிய ஆணைப் பார்த்து விட்டு நபியிடம் வந்து முறையிட்ட போது
”நான் தான் தடுத்தேன் அல்லவா? ஏன் சென்றீர்கள்” என்று நபி கூறியதான கருத்தில் அமைந்துள்ளது.
இரண்டு நபித்தோழர்கள் மனைவியோடு அந்நிய ஆணைப்பார்த்து அதை நபியிடம் முறையிட்ட பிறகும் தவறு செய்தவர்களை நியாயப்படுத்தும் வண்ணம் நபியவர்கள் பேசுவார்களா?
கள்ள உறவிற்கு ஆதரவாக இருக்கும் இந்த பொய்யான செய்திக்கு பிஜே முட்டுக் கொடுப்பதின் நோக்கம் என்ன?
நபியையும், இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் இது போன்ற இட்டுக் கட்டப்பட்ட செய்திக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?
ஒழுக்க வாழ்வை கற்றுத் தந்ந இறைத்தூதர் இவ்வாறு கூறுவார்களா?
இன்றைய காலத்தில் ஒருவர் இரவு நேரத்தில் திடீரென்று தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார்.
அங்கே மனைவி அந்நிய ஆணுடன் இருப்பததை பார்க்கிறார்.
இதை பிஜே அவர்களிடம் முறையிட்டால் ஏன் சொல்லாமல் இரவில் சென்றாய்? என்று தான் கேட்பார் போலும்.
ஒருவர் சொல்லாமல் இரவு நேரத்தில் தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார். மனைவி அந்நிய ஆணுடன் இருப்பதைக் காண்கிறார். உடனே நான் வந்தது தான் தவறு? நபிவழிக்கு மாற்றம் செய்துவிட்டேன்.
நீங்கள் இருவரும் இரவு முடியும் வரை இங்கேயே இருங்கள். நான் காலையில் வருகிறேன் என்று திரும்பிவிட வேண்டுமா?
இச்செய்தி அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமாக இருப்பதுடன் இதன் கருத்தைக் கவனித்தால் இது இட்டுக்கட்டப்பட்டது என்ற முடிவிற்கே குறைந்த பட்ச மார்க்க அறிவுடையவர்களும் வரஇயலும்.
ஒருவனுடைய மனைவி அந்நிய ஆண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதை கணவன்மார்கள் அறிவதை நபியவர்கள் விரும்பவில்லை.
அதைத் தடுப்பதற்கு இவ்வாறு செய்தார்கள் என்ற கருத்தை இந்தச் செய்தி தருகிறது.
இறைத்தூதர் இப்படிப்பட்ட இழிவான விஷயத்தை கட்டளையிடுவார்களா?
இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் செய்திகளை நபிகள் நாயகத்துடன் தொடர்பு படுத்திக் கூறலாமா?
ஸஹீஹான அறிவிப்பாளர் தொடராக இருந்தால் கூட நபியை இழிவு படுத்தும் வகையில் அமைந்திருந்தால், குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அதனை ஏற்பது கூடாது என்பதை நன்றாக அறிந்த பிஜே அவர்கள் பலவீனமாகவும், நபியையும் இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் வகையிலும் அமைந்த இந்த செய்தியை ஆதாரமாகக் குறிப்பிட்டதிலிருந்து பிஜேவின் புத்திக் கூர்மை மங்கிப் போய் விட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
யார் வேண்டுமானாலும் அடுத்தவர் மனைவியுடன் ஆபாசமாக பேசிக் கொள்ளலாம், நடந்து கொள்ளலாம், அது அப்பெண்களின் கணவன்மார்களுக்கு தெரிந்தால் கூட அவர்கள் அதை கண்டு கொள்ளக் கூடாது என்று கூறி ஒழுக்கக்கேட்டிற்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் பிஜேவின் இச்செயலை நன்மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
விபச்சாரத்தை கண்டு கொள்ளாதீர்கள் என்ற இந்த பத்வாவின் மூலம் தன்னைப் போன்றே ஒட்டு மொத்த சமூகத்தையும் கருதிவிட்டாரோ என்று மக்கள் கருதும் அளவு பிஜேவின் நிலை ஆகிவிட்டது.
பாகம் 3ஐ படிக்க…
http://stg.onlinetntj.com/articles/pj-sonnathum-naam-solvathum-ondra