இறைநேசர்களை நாம் தீர்மானிக்க முடியுமா?

இணை கற்பித்தல்      தொடர்: 5

இறைநேசர்களை நாம் தீர்மானிக்க முடியுமா?

இவ்வுலகில் நாம் யாரையும் இறைநேசர்கள் என்று தீர்மானிக்க முடியாது. இறைவனால் மட்டுமே தீர்மானிக்க முடியும். நம் கண் முன்னால் நல்லவராக வாழ்ந்து, அவரிடம் ஒரு தவறையும் காணாமல் இருந்த போதும் கூட அவரை அல்லாஹ்விடத்தில் நல்லவர் என்று சொல்லலாமா என்றால் சொல்லக்கூடாது. இவர்களுக்கே இந்த நிலை என்றால் நாம் பார்க்காத, யார் என்றே தெரியாத மனிதர்களை எப்படி இறைநேசர் என்று சொல்ல முடியும்? அவர்களுக்கு அவ்லியா, இறைநேசர், மகான் என்று எப்படிப் பட்டம் கொடுக்க முடியும்? இதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டோம் என்றால் ஆன்மீகத்தின் பெயரால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் “இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்என்று கூறிக்கொண்டே வந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி “இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)என்றார்கள்.

பிறகு (என்னிடம்) “கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, “இறைநம்பிக்கையாளர்கள் தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்என்று மக்களுக்கு அறிவித்து விடுங்கள்!என்றார்கள். அவ்வாறே நானும் சென்று, “அறிந்து கொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள் தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்என்று (மக்களிடையே) அறிவித்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 182

இந்தச் செய்தியில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட, உயிர்த்தியாகம் செய்தவர்களை பார்த்து இவர்கள் உயிர்த்தியாகிகள், இறைநேசர்கள் என்று சில நபித்தோழர்கள் சொல்ல, அதற்கு நபியவர்கள், “இல்லை! நான் இவரை நரகத்தில் பார்த்தேன்’ என்று கூறுகின்றார்கள். ஆகவே எந்த ஒருவரையும் நாம் அவருடைய செயலைப் பார்த்து இவர் மகான் என்றோ, அல்லாஹ்வின் நேசர் என்றோ சொல்வது கூடாது.

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கüன் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகüல்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லைஎன்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாüன் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாüன் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அüக்கிறேன்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி “அவர் நரகவாசிஎன்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்கüடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாüன் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கüன் வெüப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்கüன் வெüப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி 2898

இந்தச் செய்தியிலும் வெளிப்படையான செயலைப் பார்த்து நபித்தோழர்கள் சிலர் அவரை தியாகி, நல்லடியார் என்று கூற அதற்கு நபியவர்கள் இவரையும் நரகவாசி என்று கூறுகிறார்கள்.

ஆனால் நாம் யாரையெல்லாம் நல்லடியார் என்று சொல்கிறோம்? மஸ்தானை நல்லடியார் என்று சொல்கிறோம். அவருடைய பெயரை நாமும் சூட்டிக் கொள்கிறோம். பீடி மஸ்தான் அவ்லியா என்று சொல்கிறோம். பீடி குடிக்கிற செயலை மார்க்கத்தில் இறைநேசர்கள் செய்ய மாட்டார்கள் என்ற அறிவு கூட இல்லை. ஆனால் அவருக்குக் காணிக்கையாக நாம் பீடிகளைச் செலுத்துகிறோம். ஆனால் அவரிடம் அவ்லியா என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.

குளிக்காதவர், பல் துலக்காதவர். தலை வாரிக் கொள்ளாமல் அலங்கோலமாக வருபவர் இவர்களைப் பார்த்து இவர் தான் இறைநேசர் என்கிறோம். இன்னும் நாம் பார்க்காதவர்களையெல்லாம் அவ்லியாக்கள் என்றும் சொல்லி வருகிறோம். இவ்வாறு நாம் நம்பிக்கை கொண்டால் நம்முடைய செயல்கள் எவ்வாறு சரியாக அமையும் என்பதையும் நாம் இங்கே சிந்திக்கக் கடமைபட்டிருக்கிறோம். எனவே ஒருவரை இறைநேசர் என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் நமக்கு இல்லை என்பதற்கு  இவை ஆதாரங்களாக அமைந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார்.

அவர்களுக்கு “அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்குப்படி) “ஸபஃனா, ஸபஃனா‘ – நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறிவிட்டோம்என்று சொல்லலானார்கள். உடனே காலித் (ரலி) அவர்கள், அவர்கüல் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்கüல் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்கüல் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்கüல் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்கüடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, “இறைவா! “காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லைஎன்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்என்று இருமுறை சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 4339

இந்தச் செய்தியில் நபியவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம், “வெளிப்படையாக ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகச் சொன்னால் நீ வெளிப்படையைத் தான் பார்க்க வேண்டும். அவனுடைய உள்ளத்தில் ஈமான் இருந்ததா இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு நீ யார்?’ என்று அவர் செய்த அந்தக் காரியத்தைக் கண்டிக்கிறார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல் பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்கüடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள்: உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல் கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரலி). அப்போது நபித் தோழர்கüல் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்த வண்ணமுள்ளனஎன்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்கüல் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?” என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், “எத்தனையோ தொழுகையாüகள் தம் உள்ளத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கüன் உள்ளங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்கüன் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லைஎன்று கூறி விட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். பின்னர் கூறினார்கள்: “இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நிறைய ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெüயேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெüயேறி விடுவார்கள். நான் அவர்களை அடைந்தால் “ஆதுகூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்து விடுவேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி: 4351

இந்தச் செய்தியில் நபியவர்கள் கூட ஒரு மனிதருடைய வெளிப்படையான செயல்களைப் பார்த்துத் தான் நல்லவனா? கெட்டவனா? என்று முடிவு செய்கிறேன் என்று கூறுகின்றார்கள். அப்படியானால் நாம் எப்படி ஒரு மனிதரை, அவரைப் பற்றி கதைகளைக் கட்டி வைத்துக் கொண்டு, தண்ணீரில் நடந்தார்; ஆகாயத்தில் பறந்தார்; எனவே அவர் நல்லவர், மகான், இறைநேசர் என்று எவ்வாறு  முடிவு செய்ய முடியும்? இந்தச் செய்தியை நாம் முழுமையாக விளங்கிக் கொண்டாலே இத்தகைய செயல்களிலிருந்து விலகிக் கொள்ளலாம். இத்தகைய அதிகாரம் நமக்கு இல்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப் பிரிவொன்றில் அனுப்பி வைத்தார்கள். ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த “ஹுரக்காத்கூட்டத்தாரிடம் நாங்கள் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம்) அப்போது நான் ஒருவரைச் சந்தித்தேன். (அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டபோது) அவர், “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னார். நான் (எனது ஈட்டியால்) அவரைத் தாக்கி(க் கொன்று)விட்டேன். ஆனால் அது என் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. (திரும்பி வந்தபோது) நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். “ஆயுதத்தை அஞ்சித் தான் அவர் இவ்வாறு சொன்னார், அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினேன். “அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய உள்ளத்தை நீ பிளந்து பார்த்தாயா?” என்று (கடிந்து) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் (அதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றிராமல்) அன்றைய தினத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று கூட ஆசைப்பட்டேன்.

எனவே தான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! எந்த முஸ்லிமுடன் நான் போரிடுவதாக இருந்தாலும் அவருடன் இந்தச் “சின்ன வயிற்றுக்காரர்‘ – உசாமா – போரிடாதவரை போரிடமாட்டேன்என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் (சஅத் (ரலி) அவர்களிடம்), “(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்” (8:39) என்று அல்லாஹ் கூற வில்லையா? என்று கேட்டார். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) குழப்பம் முற்றிலும் நீங்கிவிட வேண்டுமென்பதற்காக நாங்கள் போரிட்டோம். ஆனால், நீரும் உம் தோழர்களும் குழப்பம் உருவாக வேண்டுமென்பதற்காகப் போரை விரும்புகிறீர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)

நூல்: முஸ்லிம் 158

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமாவிடம், “(அந்த மனிதர் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ உறுதிமொழியான) “லா இலாஹ இல்லல்லாஹ்மறுமை நாளில் (உனக்கெதிரான சாட்சியாக) வரும்போது நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்கள். இதைவிட அதிகமாக வேறெதையும் கேட்காமல், “லா இலாஹ இல்லல்லாஹ்மறுமை நாளில் வரும் போது நீ என்ன செய்யப்போகிறாய்?” என்றே (திரும்பத் திரும்ப) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 160

இந்த ஹதீஸில் போர்க்களத்தில் சண்டையிடும்போது ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, “நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று சொன்னால் அவன் அந்த வார்த்தையை மனதளவில் சொல்லவில்லை. வெறும் வாய் வார்த்தையாகத் தான் சொல்கிறான் என்று தெரிந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதை அவன் வெளிப்படையாக வாயளவில் சொல்கிறானா? இல்லை மனதளவில் சொல்கிறானா? என்று ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

அதுமட்டுமல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்று அங்கு மஸ்ஜிதுந் நபவி என்ற பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப் பள்ளிவாசலில் தங்கியவர்களில் கணிசமானவர்கள் நயவஞ்சகர்களாக இருந்தனர். நபியவர்கள் உள்ளத்தைப் பிளந்து பார்த்து, இவன் உண்மையான முஸ்லிம், இவன் முஸ்லிமாக நடிக்கிறான் என்று நினைத்து அவர்களை விரட்டி விட்டார்களா? இல்லை.

அந்த நயவஞ்சகர்கள்  நபியவர்களோடு நெருங்கி இருந்திருக்கிறார்கள்; அவர்களோடு தொழுதிருக்கிறார்கள்; அவர்களுடைய ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கின்றார்கள்; போர் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதும் இவர்கள்  கலந்து கொண்டார்கள்.

இத்தகைய சமயத்தில் இதில் யார் உண்மையான முஸ்லிம், யார் முஸ்லிமாக நடிக்கிறான் என்று பார்த்து அவர்களை நபியவர்கள் விரட்டிவிட்டார்களா? இல்லையே! அல்லது முனாஃபிக்குகள் யாரும் வரக்கூடாது என்று சொன்னார்களா? போர்க்களத்திற்குக் கூட இந்த முனாஃபிக்குகளை அவர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நபியவர்களால் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லாஹ் இறைச் செய்தியின் மூலம் “இவர்கள் நயவஞ்சகர்கள்’ என்று அறிவித்துக் கொடுத்த பிறகு தான் நபி (ஸல்) அவர்களால் கண்டறிய முடிந்தது.

எனவே ஒருவரை அல்லாஹ்விற்கு நெருக்கமானவர், அல்லாஹ்வின் நேசர் என்று நாம் சொல்லிவிட்டோம் என்றால் அது நம்முடைய ஈமானுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டவரைப் போன்று நாம் ஆகிவிடுவோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பத்ருப்போரில் கலந்துகொண்ட அன்சாரிகüல் ஒருவரான நபித்தோழர் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது பார்வை (மங்கிப்போய்) விட்டது. நான் என் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தி வருகிறேன். மழைக் காலங்கüல் என(து இல்லத்து)க்கும் அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் ஓடுவதால் அவர்கüன் பள்üவாசலுக்குச் சென்று என்னால் தொழுவிக்க முடியவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனது இல்லத்திற்கு வந்து அதில் (ஓர் இடத்தில்) தொழவேண்டும். அதை நான் தொழு(விக்கு)ம் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்என்று சொன்னார்கள். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால் அவ்வாறே நான் செய்வேன்என்று கூறினார்கள்.

(மறுநாள்) முற்பகல் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (எனது இல்லத்துக்குள்) நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியüத்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே, “உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென விரும்புகிறீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். உடனே நான் அவர்களுக்கு வீட்டின் ஒரு பகுதியைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) நின்று தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.

(கொத்துக் கறியும் மாவும் கலந்து) நபி (ஸல்) அவர்களுக்கு நாங்கள் தயாரித்து வைத்திருந்த ஒரு வகை உணவைச் சாப்பிட்டு விட்டுத் தான் செல்லவேண்டுமென நாங்கள் அவர்களை வற்புறுத்தினோம். கலைந்து சென்ற எனது குடும்பத்தார் பலர் மீண்டும் வீட்டில் குழுமி விட்டனர். அப்போது அவர்கüல் ஒருவர், “மாலிக் பின் துகைஷின் அல்லது “இப்னு துக்ஷுன்எங்கே?” என்று கேட்டார். மற்றொருவர், “அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (அதனால் தான் அல்லாஹ்வின் தூதரைக் காண அவர் வரவில்லை)என்று சொன்னார்.

(இதைச் செவியுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறு சொல்லாதே! அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாயிலாஹ இல்லல்லாஹ்) என அவர் சொல்லிவிட்டிருப்பதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்; அவரது முகமும் அவரது அபிமானமும் நயவஞ்சகர்களை நோக்கியே அமைந்திருக்கக் காண்கிறோமே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் திருப்தியை நாடி “லாயிலாஹ இல்லல்லாஹ்என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடை செய்துவிடுகிறான்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி)

நூல்: புகாரி 425

 இந்த செய்தியில், லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவரைப் பார்த்து எப்படி நீங்கள் முனாஃபிக் என்று சொல்லலாம் என்று நபியவர்கள் கண்டிக்கிறார்கள். வெளிப்படையை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர் தன்னை முஸ்லிம் என்று வாதிடுகிறார்; அதை நம்புங்கள். அவரை முனாஃபிக் என்று சொல்லி மார்க்கத்தை விட்டு விரட்டி விடாதீர்கள் என்று கூறுகின்றார்கள். அவருடைய உள்ளத்தில் நயவஞ்சகத்தனம் உள்ளது என்று இவர்களாகவே தீர்மானித்துக் கொண்ட காரணத்தினால் தான் நபியவர்கள் அதைக் கண்டிக்கிறார்கள்.

இந்தச் செய்திகள் அனைத்தும் நபித்தோழர்களால் கூட இறைநேசர்களை, அவ்லியாக்களைக் கண்டறிய முடியாது என்பதற்கான சான்றுகளாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்