மந்திரத்தால் மாங்காய் காய்க்காது

மந்திரத்தால் மாங்காய் காய்க்காது

மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பது ஒரு நல்ல பழமொழி.

உழைப்பு, தியாகம் எதுவுமின்றி இந்த உலகத்தில் ஒருவன் எதையும் பெற்று விட முடியாது என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகின்றது. உண்ணுவதற்கு உணவு வேண்டுமாயின் விளைநிலத்தை உழ வேண்டும்; விதை விதைக்க வேண்டும்; நீர் பாய்ச்ச வேண்டும்; நாற்று நட வேண்டும்; இடையே முளைக்கும் களைகளைப் பறிக்க வேண்டும். பின்னர் அறுவடை செய்ய வேண்டும். களத்திற்குக் கொண்டு வந்து போரடிக்க வேண்டும். நெல்லிலிருந்து சாவிகளை அப்புறப்படுத்த வேண்டும்; உலற வைத்து உமி நீக்கிய பிறகு தான் உலை அரிசியாக வீட்டுக்கு வரும்.

இது அரிசிக்காக ஒரு மனிதன் செய்கின்ற உழைப்பாகும். அது போன்று மாங்காய் காய்க்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கவாறு உழைக்க வேண்டும். அதன் பின்னர் தான் மாங்காய் காய்க்கும். உழைப்பின்றி வெறுமனே மந்திரத்தின் மூலம் மாங்காய் கிடைத்து விடாது என்ற முதுமொழி இதைத் தான் உணர்த்துகின்றது. உலகக் காரியங்களுக்கு மட்டுமல்ல! மறுமைக் காரியங்களுக்கும் இது முற்றிலும் பொருந்தும். திருக்குர்ஆன் இதைத் தெளிவாகக் கூறுகின்றது.

மூஸா மற்றும் முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லைஎன்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? அவனது உழைப்பு (மறுமையில்) காட்டப்படும். பின்னர் முழுமையான கூலி கொடுக்கப்படுவான்.

அல்குர்ஆன் 53:36-41

உலகக் காரியங்களைப் போன்று தான் மறுமைக் காரியத்தையும் அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். இதற்குப் பொருத்தமாகவே ஏகத்துவத்தை ஒரு மரத்திற்கு ஒப்பாகக் கூறுகின்றான்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப் பட்டுள்ளது; அது நிற்காது.

அல்குர்ஆன் 14:24, 25, 26

ஏகத்துவம் என்ற மாங்காய் சும்மா காய்த்து விடவில்லை. மகத்தான உழைப்பு, மாபெரும் தியாகத்தால் இந்த மரம் நாட்டப்பட்டு, ஏகத்துவம் என்ற மாங்காய் காய்த்தது.

பத்ரு, உஹத் என்ற பல போர்களில் நபித்தோழர்களின் இரத்தம் நீராகப் பாய்ச்சப்பட்டு, அவர்களின் உடல்கள் உரமாகப் போடப்பட்டு இந்த மரம் நாட்டப்பட்டது. இது வெறுமனே வளர்ந்து விடவில்லை. மக்கள் தங்கள் உழைப்பைப் பயன்படுத்தினால் தான் இந்த மார்க்கம் வளரும்.

அல்லாஹ்வின் மார்க்கம் தானே! அவன் ஆற்றல் மிக்கவன்; அதை அவன் தானாக முளைக்கச் செய்து விடுவான் என்பது கிடையாது.

தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்

அல்குர்ஆன் 13:11

இவ்வாறு விதியை அல்லாஹ் நிர்ணயித்து விட்டான்.

ஓர் ஊரில் மூன்று பேர் தான் ஏகத்துவவாதிகள் என்றால் அந்த மூன்று பேரும் மற்ற மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லியாக வேண்டும். தவ்ஹீது தானாக முளைத்து விடும் என்று அவர்கள் வெறுமனே இருந்து விடக் கூடாது. மூலையில் முடங்கிக் கிடந்து விடக் கூடாது.

அவர்கள் தங்களால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளும் போது அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தனியாளாக நின்று இந்த ஏகத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்த போது, அல்லாஹ் அவரை ஒரு சமுதாயமாக்கி அவருக்கு உதவிகள் புரிந்தான்.

எனவே அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக உழைக்க மக்கள் முன்வர வேண்டும். உழைக்கா விட்டால் இந்த மார்க்கம் வளராது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

அல்குர்ஆன் 47:7

அல்லாஹ் மக்களிடம் உதவி கேட்கிறான் என்று இந்த வசனத்தில் கூறப்படுவது அவன் இயலாமையினால் உதவி கேட்கிறான் என்ற கருத்தில் இல்லை.

இந்த மார்க்கத்திற்காக மக்களை உழைக்கச் சொல்கிறான் என்பது தான் அதன் கருத்து. அவ்வாறு உழைத்தால் இந்த மார்க்கத்தை வளர்ப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ் கூறுவது போன்று அவனது தூதர் (ஸல்) அவர்களும், தோழர்களும் உழைத்தார்கள். அவ்வாறு உழைத்த போது அல்லாஹ் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். அவனது உதவியினால் இந்த மார்க்கத்தை வளர்ந்தோங்கச் செய்தான்.

அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 110வது அத்தியாயம்

நபித்தோழர்களைப் போன்று நாம் உழைக்கவில்லை. தியாகம் செய்திடவில்லை. ஆனாலும் நாம் செய்த ஒரு சிறிய, மிக அற்பமான உழைப்பின் மூலம் இன்று மக்கள் அணியணியாக தவ்ஹீதுக்கு வருகிறார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைத்தால் அல்லாஹ்வின் உதவியும் மிதமிஞ்சிக் கிடைக்கும்.

இந்த உழைப்பின் வேகத்தைக் கூட்டுவதற்காகத் தான் தஞ்சை ஏகத்துவ எழுச்சி மாநாடு!

இது நமது அழைப்புப் பணிக்கு ஓர் எரிபொருள். இந்த எரிபொருளைக் கொண்டு ஏற்றிடுவோம் ஏகத்துவ ஜோதியை தமிழகமெங்கும், இன்ஷா அல்லாஹ்!

மீலாதும் மவ்லிதும்

உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே!  யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 3456

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தது போன்றே இன்று முஸ்லிம்களிடம் பிறந்த நாள் கொண்டாடுதல், இறந்த நாள் அனுஷ்டித்தல் போன்ற காரியங்கள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் பிறந்த நாள் விழா, இறந்த நினைவு தினம் எல்லாமே யூத, கிறித்தவக் கலாச்சாரமாகும். இது இஸ்லாமியக் கலாச்சாரம் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித் தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை.

இது இஸ்லாமியக் கலாச்சாரம் என்றால், நன்மையான காரியம் என்றால் நன்மையில் எல்லா வகையிலும் முந்திச் சென்ற நபித்தோழர்கள் மற்றும் அதற்குப் பின் வந்த தலைமுறையினர் இதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 2651

சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்ன பிற கட்டளைகள் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது      என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.

வழிபாடல்ல! வழிகேடே!

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்துஎன்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாக்கிதுல் லைசி

நூல்கள்: திர்மிதீ 2106, அஹ்மத் 20892

மீலாது விழா, நினைவு நாள் போன்றவை யூத, கிறித்தவ, இணை வைப்பாளர்களின் கலாச்சாரம் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் இல்லை. இவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடாது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அப்படிப் பின்பற்றினால் அவர்கள் யூத, கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தானே ஒழிய முஸ்லிம்கள் கிடையாது. இதையும் நபி (ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸிலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார்

இந்த ஹதீஸின்படி மவ்லிது ஓதுபவர்கள், மீலாது விழா நடத்துபவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு ஒருவர் மவ்லிது ஓதுகிறார் என்றால், மீலாது விழா கொண்டாடுகிறார் என்றால் அவர் மறுமையில் கடுமையான தண்டனையைச் சந்திக்க நேரிடும்.

மவ்லிது, மீலாது என்பதெல்லாம் வணக்கம் என்ற அடிப்படையில் நடத்தப்படுகின்றது. இதற்கு நன்மை கிடைக்கும் என்று நம்பியே முஸ்லிம்கள் இதைச் செய்கிறார்கள். வணக்கம், நன்மை இவையெல்லாம் நபி (ஸல்) அவர்களால் இந்தச் சமுதாயத்திற்குக் கற்றுத் தரப்பட்டு விட்டது.

மவ்லிது நன்மை என்றால் நபியவர்கள் அதைக் காட்டித் தந்திருக்க வேண்டும். அவ்வாறு காட்டித் தரவில்லையெனில் தம்முடைய தூதுச் செய்தியை அவர்கள் சரியாக மக்களிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு நன்மையையும் இந்தச் சமுதாயத்திற்குக் காட்டித் தராமல் செல்லவில்லை; எந்த நன்மையையும் சொல்லாமல் விடவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, பிறர் செய்து அதை அங்கீகரிக்காத எந்தக் காரியத்தை, வணக்கம் என்ற பெயரில் யார் செய்தாலும் அது வழிபாடு கிடையாது. வணக்கம் கிடையாது. அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை  நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

இந்த ஹதீஸின் அடிப்படையில் மவ்லிது என்ற போலி வணக்கம் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் வணக்கமாகும். பின்வரும் ஹதீஸ் இதை இன்னும் தெளிவாக விளக்கி விடுகின்றது.

நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 3243

நல்ல நோட்டும் கள்ள நோட்டும்

இதற்குச் சிறந்த ஓர் உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். இன்று இந்திய அரசாங்கம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கின்றது. அந்த நோட்டுக்கள் தான் நல்ல நோட்டுக்கள். இந்த நோட்டை அச்சடிப்பது என்ன பெரிய சீமை வித்தையா? நானும் நோட்டடிக்கிறேன் என்று ஒருவன் தாராளமாக அடிக்கலாம். ஆனால் இந்த நோட்டை வெளியிட்ட மாத்திரத்திலேயே சிறையில் அடைக்கப்படுவான். அரசாங்கம் தாளில் தான் அச்சடித்தது. இந்த ஆசாமியும் தாளில் தான் அச்சடித்தான். அரசாங்கம் அடித்தால் நல்ல நோட்டு; இந்த ஆசாமி அடித்தால் கள்ள நோட்டு என்றாகிறதே, ஏன்?

ஏனென்றால் அரசாங்க நோட்டு என்பது அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அடிக்கப்படுகின்றது. அதனால் அது நல்ல நோட்டு! அரசாங்க உத்தரவு இல்லாமல் அச்சடித்தால் அது கள்ள நோட்டு!

மார்க்கத்தின் அதிபதி அல்லாஹ் தான். அல்லாஹ்வோ, அவனது தூதரோ அனுமதிக்காத எந்த வணக்கமும் நிராகரிக்கப்படும். இதன் அடிப்படையில் மவ்லிது, மீலாது விழாக்கள், ஊர்வலங்கள் அனைத்தும் இதைச் செய்தவரின் முகத்திலேயே தூக்கி வீசி எறியப்படும் என்பதையே இந்த ஹதீஸ்கள் காட்டுகின்றன. காரணம், அவை கள்ள நோட்டுக்கள்.

தடாகத்தை விட்டும் தடுக்கப்படுதல்

இத்தனையையும் தாண்டி ஒருவர் மவ்லிது ஓதுகின்றார், மீலாது விழா கொண்டாடுகின்றார் என்றால் அவருக்கு மறுமையில் இரண்டு விதமான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்என்று சொல்வான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6585

மவ்லிது ஓதுபவர்கள் தங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்கும், ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தான் ஓதுகின்றனர். ஆனால் மேற்கண்ட ஹதீஸின்படி இவர்கள் தடாகத்தை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.

சூரியன் தலைக்கு மிகவும் அருகில் கொண்டு வரப்பட்டு, வியர்வை வெள்ளத்தில் மூழ்கி, தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு, தடாகத்தில் உள்ள தண்ணீர் மட்டும் தான் விமோசனம். ஆனால் இந்தத் தண்ணீர் தடாகத்தை விட்டும் மவ்லிது, மீலாது கோஷ்டியினர் நிச்சயமாகத் தடுக்கப்படுவார்கள் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மார்க்கத்தில் இல்லாததைப் புகுத்தியவர்கள் என்ற அடிப்படையில் இது இவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான தண்டனையாகும்.

மார்க்கத்தில் புதிய வணக்கத்தைப் புகுத்தியதற்கு வேறு என்ன தண்டனை? தடாகத்தை விட்டுத் தடுக்கப்பட்டு விட்டால் அத்துடன் கதை முடிந்து விடுவதில்லை.

ஷஃபாஅத் கிடைக்கும் என்று நம்பி மவ்லிது ஓதும் இவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் சாபம் தான் கிடைக்கிறது. இப்படி சாபத்தைப் பெற்ற இவர்கள் எப்படி சுவனம் செல்ல முடியும்? நரகம் தான்.

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ 1560

இதன்படி மார்க்கத்தில் மீலாது, மவ்லிது போன்ற புது வணக்கங்களைச் செய்வோருக்கு நரகமே தண்டனையாகக் கிடைக்கிறது.

இதல்லாமல், நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கிய பாவத்திற்காகவும் நரகம் தண்டனையாகக் கிடைக்கிறது. அதுவும் நிரந்தர நரகம் கிடைக்கிறது.

மவ்லிதுப் பாடல்களில் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் கவிதை வரிகள் இடம் பெறுகின்றன.

நீங்களே பாவங்களை மன்னிப்பவர்

அழித்தொழிக்கும் குற்றங்களையும் மன்னிப்பவர்.

தவறுகளை மறைக்கக் கூடியவரும் நீங்களே!

சிரமங்களை நீக்கக் கூடியவரும் நீங்களே!

நன்மைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளவரே!

உயர்ந்த மதிப்புடையவரே! என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்.

என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்.

இவை அனைத்தும் சுப்ஹான மவ்லிதில் இடம் பெறும் கவிதை வரிகள். இது போன்ற ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்லிதுகளில் இடம் பெற்றுள்ளன.

முஹம்மத் (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் இந்தக் கவிதை வரிகளைப் படிப்பவருக்கு மறுமையில் என்ன நிலை?

மர்யமின் மகன் ஈஸாவே! “அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்என்று அவர் பதிலளிப்பார். “நீ எனக்குக் கட்டளையிட்ட படி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.

அல்குர்ஆன் 5:116, 117

மறுமை விசாரணையின் போது, தம்மைக் கடவுளாக்கியது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று ஈஸா (அலை) அவர்கள் பதிலளிக்கிறார்கள்.  இதே பதிலைத் தான் நபி (ஸல்) அவர்களும் கூறுவார்கள் என்று புகாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமை நாளில் கா-ல்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு பிறகு, “நாம் முதன் முதலாகப் படைத்ததைப்  போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்” (21:104) என்னும் இறை வசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். “இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்என்று (அவர்களை விட்டுவிடும் படி) நான் கூறுவேன். அப்போது, “நீர் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததி-ருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்என்று கூறப்படும். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா அலை அவர்கள்) கூறியதைப் போல், “நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்என்னும் (5:117-118) இறை வசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3349

அல்லாஹ்வை வணங்குவதை விட்டு விட்டு, அடியார்களை, அதிலும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையே கடவுளாக்கியதால் இவர்கள் இடது பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

மறுமையில் இடது பக்கம் இழுத்துச் செல்லப்பட்டு விட்டாலே நரகம் தான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.

அல்குர்ஆன் 56:41-44

மவ்லிதுப் பாடல்கள் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்குகின்றன. எனவே இந்த மவ்லிதுகளை ஓதுபவர்களுக்கு நிரந்தர நரகம் தண்டனையாகக் கிடைக்கிறது. எனவே மவ்லிது, மீலாதுகளைக் கொண்டாடலாமா? என்பதை ஒரு முறை நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் சிந்தித்துப் பார்த்து, இனியாவது இந்தக் கொடும் பாவத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

பள்ளிவாசலா? பாடல் அரங்கமா?

நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த மவ்லிதுக் குப்பைகளை வீடுகளில் ஓதக் கூடாது என்று தவ்ஹீது ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தினால் இன்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இந்தக் கவிதைகளைப் படிப்பது வெகுவாகக் குறைந்து வருகின்றது. மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கூட்டத்தினர், தற்போது இதைப் பள்ளிவாசல்களில் படிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ்வை அழைப்பதற்குப் பதிலாக, யா முஹம்மது என்று அழைத்து திக்ரு செய்பவர்கள் தான் இந்தக் கூட்டத்தினர். யா முஹம்மது என்று திக்ர் செய்வது தெளிவான இறை மறுப்பு (குஃப்ர்) என்று தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத் மதரஸாக்களில் கூட ஃபத்வா கொடுத்துள்ளனர். இந்தக் குஃப்ரைச் செய்து கொண்டிருக்கும் இறை நிராகரிப்புக் கும்பல் தான் இன்று பள்ளிவாசல்களைப் பாடல் அரங்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டிய பள்ளிவாசல்களில் இந்த ஆராதனைப் பாடல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதைச் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டிய ஆலிம்கள், வருவாய்க்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் இவர்கள் பாடச் சொல்லும் இடங்களில் பாடவும் ஆடவும் தயாராகி விட்டார்கள்.

இஸ்லாமிய சமுதாயமே! இந்தக் கூட்டத்தினர், நபிகளார் மீது மவ்லிது ஓதுகிறோம் என்று கூறி சுப்ஹான மவ்லிதை ஓதுவார்கள். இதை அனுமதித்தால், குளத்தில் போய் விடலைப் பெண்ணைத் தடவிப் பார்த்த ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற செக்ஸ் பாடல்களையும் பள்ளிவாசல்களில் வைத்துப் பாட வேண்டும் என்று சொல்வார்கள்.

எனவே இந்தக் கூட்டத்தினரின் வெறியாட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வாருங்கள். அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்கும் நிலையை ஏற்படுத்துங்கள். இல்லையேல் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் முஹல்லாவாசிகளும் இந்தப் பாவத்தில் பங்கெடுத்து நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கின்றோம்.

பள்ளிவாசல்களில் இந்த இணை வைப்புக் காரியங்களை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்தந்த பள்ளி முஹல்லாவைச் சேர்ந்த தவ்ஹீது சகோதரர்கள், பள்ளிவாசலில் தங்களுக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக சொற்பொழிவாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து மதரஸாக்களாலும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுக்கப்பட்ட இந்தக் கூட்டத்தினருக்கு பள்ளிவாசலில் மவ்லிது ஓத அனுமதியிருக்கின்றது என்றால், முஹல்லாவாசிகளான தவ்ஹீது சகோதரர்களுக்கு அங்கு பிரசங்கம் செய்வதற்கு உரிமை இருக்கின்றது என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

புகாரி தர்ஹாவில் புனித முடியா?

இந்த வழிகெட்ட கூட்டத்தினர் இன்னொரு மவ்ட்டீகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். கல்லறைகளைக் கட்டிக் கொண்டு அழும் இந்தக் கருத்துக் குருடர்கள் தற்போது புதிதாக முடி கலாச்சாரத்தையும் தூக்கி இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் முடி தங்களிடம் இருப்பதாகவும் அதைப் பாலில் நனைத்து பொதுமக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் புளுகியிருக்கின்றார்கள்.

தமது முடியைப் பாலில் நனைத்துக் குடிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்களா? அவ்வாறு குடித்தால் புனிதம் கிடைக்குமா? என்பதையெல்லாம் விட்டு விடுவோம்.

இது விஞ்ஞான யுகம். ஒரு முடியை வைத்து குளோனிங் முறையில் அந்த ஆளையே உருவாக்கி விடும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. அது போல் ஒரு முடியைக் கொடுத்தால், அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருடைய முடி என்பதை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். கார்பன் டேட்டிங் (ஈஹழ்க்ஷர்ய் க்ஹற்ண்ய்ஞ்) என்ற முறையில், புஹாரி தர்ஹாவில் உள்ள அந்த முடியை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்போம். அது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முடியா? என்பதை ஆய்வு செய்வோம்.

ஒரு வேளை அது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முடியாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்களின் முடி என்றாகி விடாது.

நம்முடைய மார்க்கத்தில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான பொருளாக இருந்தாலும், போதனையாக இருந்தாலும் அதற்கு ஸனது எனும் சங்கிலித் தொடரான ஆதாரம் வேண்டும்.

இன்று இவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த முடி விவகாரத்திற்கும், ஹதீஸ் கலை அறிஞர்கள் வகுத்திருக்கும் அடிப்படையிலான சங்கிலித் தொடர் வரிசை இருக்க வேண்டும். அதாவது அந்த முடி நபி (ஸல்) அவர்களிடமிருந்து, நபித்தோழர், பிறகு அவரிடமிருந்து தாபிஃ, பிறகு தாபிஃயிடமிருந்து தபவுத் தாபிஃ – இப்படித் தலைமுறை தலைமுறையாக வந்து புஹாரி தர்ஹாவுக்கு எப்படி வந்தது என்று நிரூபிக்க வேண்டும். இதை ஓர் அறைகூவலாகவே விடுக்கின்றோம். இவ்வாறு நிரூபிக்கவில்லையெனில் இது சரித்திர நாயகரான நபி (ஸல்) அவர்களின் முடியல்ல, ஏதோ தரித்திரம் பிடித்தவனின் முடி என்றாகி விடும்.