அல்லாஹ்வின் பெயரை நீக்கிய ஆசிரியர் குழு

அல்லாஹ்வின் பெயரை நீக்கிய ஆசிரியர் குழு

Scofield Reference Bible – ஸ்காஃபீல்ட் பைபிள் விபரக் குறிப்பு!

இந்த பைபிளில் ELAH என்ற வார்த்தையை  ALAH அதாவது ஒரு ALLAH என்பதில் ஒரு L-ஐ நீக்கி விட்டு வாசிப்பது என்று அதன் ஆசிரியர் குழு முடிவு செய்கின்றது. இந்த ஆசிரியர் குழு எட்டு பேர்களைக் கொண்டது. இக்குழுவின் தலைவர் ரெவரென்ட் சி.ஐ. ஸ்காஃபீல்ட் டி.டி. ஆவார்.

“கடவுளின் பெயர் அல்லாஹ் என்று இவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அதை அப்படியே வாசிப்பதை விட்டு விட்டு ஒரு L-ஐ நீக்கி விட்டு வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்”

இவ்வாறு அஹ்மத் தீதாத் அவர்கள் தன்னுடைய சொற்பொழிவுகளில் குறிப்பிட்டது தான் தாமதம். அடுத்து வெளியான பதிப்பில் ALAH என்ற வார்த்தையை கச்சிதமாக, கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அப்படியே தூக்கி விட்டனர். பழைய ஏற்பாட்டின் முதல் புத்ககமான ஆதியாகமத்தில் தான் இந்த அநியாயம் நடந்தேறியுள்ளது.

கருத்துத் திருட்டு

தென்னாப்பிரிக்கா, கேப்டவுணில் நடந்த ஒரு கருத்தரங்கின் போது அஹ்மத் தீதாத், மக்களிடம் பைபிளின் ஏசாயா புத்தகத்தில் 37வது அத்தியாயத்தை எடுக்கச் சொல்கின்றார். மக்கள் அந்த அத்தியாயத்தை எடுக்கின்றனர். இப்போது தீதாத் அந்த அத்தியாயத்தை வாசிக்கின்றார்.

இடையிடையே, “நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஏசாயா 37வது அத்தியாயம் தானே!” என்று உறுதி செய்து கொள்கின்றார். மக்களும் ஆம் என்று ஆமோதிக்கின்றனர்.

அத்தியாயத்தின் முதல் வசனம் முதல் கடைசி வசனம் வரை வாசித்து நிறைவு செய்கின்றார்.

ஏசாயா 37

 1 ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2 அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.

4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

 5 இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

7 இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

 8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின் மேல் யுத்தம் பண்ணுகிறதைக் கண்டான்.

 9 அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படு வதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த வொட்டாதே.

11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?

12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.

14 எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

15 கர்த்தரை நோக்கி: 16 சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

17 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

18 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

19 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

20 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

 21 அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியா வுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை  நோக்கி விண்ணப்பம் பண்ணினாயே.

22 அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

23 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

24 உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்……..

38 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

அஹ்மத் தீதாத் அதை வாசித்து நிறைவு செய்தவுடன் “நான் இது வரை வாசித்தது ஏசாயா 37வது அதிகாரம் அல்ல! ராஜாக்கள் இரண்டாம் நூல், 19வது அதிகாரம்” என்று சொல்லி அதைக் கருத்தரங்கத் தலைவரிடம் அறிவிக்கச் செய்கின்றார்.

2 ராஜாக்கள் 19

1 ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2 அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.

4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

 5 இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

7 இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

 8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின் மேல் யுத்தம் பண்ணுகிறதைக் கண்டான்.

 9 இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படு வதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.

11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ    தப்புவாயோ?

12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே? என்று சொல்லுங்கள் என்றான்.

14 எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

15 கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

16 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லி யனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

17 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

18 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய் தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவை களை நிர்த்தூளியாக்கினார்கள்.

19 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

 20 அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியா வுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்.

21 அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

22 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?

23 உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத் தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்……….

37 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

அவ்வளவு தான்! அரங்கத்திலிருந்த கிறித்தவ மக்களுக்கு ஒரே அதிர்ச்சி! ஆச்சரியம்! பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன், மற்றொரு மாணவனைக் காப்பியடித்து தேர்வு எழுதினால் காப்பிடியடித்த மாணவனை மொத்தப் பள்ளிக் கூடமும் இழிவாகப் பார்க்கும்; அவன் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படுவான். தண்டனையும் வழங்கப்படுவான்.

பைபிளிலும் இது தான் நடந்திருக்கின்றது. இந்தக் கருத்துத் திருட்டை அஹ்மத் தீதாத் அவர்கள் அம்பலப்படுத்தியவுடன் பைபிளைப் படித்துப் பார்த்த கிறித்தவ மக்களிடம் ஒரு வாட்டம் ஏற்பட்டு விட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த ஆசிரியர், எந்த ஆசிரியரைக் காப்பியடித்தார் என்றே தெரியவில்லை.

காப்பியடிக்கும் கடவுள்?

இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், ஏசாயா நூலை யார் எழுதினார் என்று கேட்டால் கிறித்தவர்கள் தரும் பதில்: இதை முக்கியமாக எழுதியவர் ஏசாயா, இதன் பகுதியை மற்றவர்கள் எழுதினார்கள் என்று கூறுகின்றனர்.

பைபிள் என்ற வேதம் கடவுளுக்குரியதாம்! அதில் இடம் பெற்றிருக்கும் ஏசாயா புத்தகத்திற்கு ஆசிரியர்கள் ஏசாயாவும் இன்னும் சிலருமாம். இதற்குப் பெயர் இறை வேதம் என்றால் அது வெட்கக் கேடு தான்.

எல்லாவற்றிற்கும் மேலான வெட்கக் கேடு, ராஜாக்கள் இரண்டாம் நூல் என்பது புறம்போக்குப் புத்தகம் என்பது தான். இதற்கு ஆசிரியரே இல்லை. இதன் ஆசிரியர் ஓர் அனாமதேயம் என்று பைபிளின் மறு திருத்தம் செய்யப்பட்ட தரமிகு பதிப்பின் 32 ஆசிரியர்களைக் கொண்ட அறிஞர் குழு தெளிவாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றது.

(புனித பைபிளில் ஆசிரியர் இல்லாத அனாமதேயப் புத்தகங்கள் எத்தனை என்பதை இதே இதழில் “ஆங்கிலத்தில் வரும் அக்கார்டிங் டூ’ என்ற தனிக் கட்டுரையில் காண்க!)

இப்போது மீண்டும் தென்னாப்பிரிக்காவின் அரங்கிற்கு வருவோம்.

கேப்டவுண் பல்கலைக் கழகத்தின் தத்துவவியல் துறை தலைமைப் பேராசிரியர் கம்ப்ஸ்டை என்பவர், இது தொடர்பான கேள்வி நேரத்தின் போது பின்வருமாறு கூறினார்:

“வார்த்தைக்கு வார்த்தையான இறை அறிவிப்பைக் கொண்டது தான் பைபிள் என்று கிறித்தவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை”

மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மனிதக் கைகள் விளையாடிய ஒரு கற்பனை ஊற்று என்று குறிப்பிடுகின்றார்.

இல்லையெனில் இந்தக் கருத்துத் திருட்டை நடத்தியது கர்த்தர் என்றாகி விடும். அல்லது மறந்து போய் இரண்டாவதாக இப்படி ஓர் அத்தியாயத்தை இறைவன் இறக்கினான் என்றாகி விடும்.

இதில் கேலிக் கூத்து என்னவென்றால், பைபிளின் ஒவ்வொரு புள்ளியும், அரைப் புள்ளி, கால் புள்ளி அனைத்துமே இறை வாக்கு என்று இவர்கள் சொல்வது தான். கேப்பையில் நெய் வடிகின்றது; கோப்பையைத் தூக்கிக் கொண்டு வாருங்கள் என்று கிறித்தவ அறிஞர்கள் கூறுவது தான் வேடிக்கை!

“மூடி பைபிள் இன்ஸ்ட்டியூட்’ பொறுப்பாளர் டாக்டர் கிரஹாம் ஸ்கிராஜ்ஜி என்பவர் “பைபிள் இறை வேதமா?’ என்ற தன்னுடைய நூலில் டாக்டர் ஜோசப் பார்க்கர் என்பவரை மேற்கோள் காட்டிக் கூறுவதாவது:

“பைபிள் என்ன ஓர் அழகான நூல்! இதில் தான் எத்தனை எத்தனை விதமான செய்தி அடக்கங்கள்! அனைத்துப் பக்கங்களையும் அறிமுகமில்லாத பெயர்கள் அலங்கரித்துக் காட்சியளிக்கின்றன. நீதி நாளில் (மறுமையில்) நடைபெறும் அபாயங்களை, அதி பயங்கர நிகழ்வுகளைக் காட்டிலும் தலைமுறைகளின் கொடிவழிப் பட்டியல்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன. வெற்றி எங்கே என்று விடை காணும் முன் இரவு விடிந்து விடுகின்றது. அரை குறைப் பிரசவத்திலேயே சம்பவம் முடிந்து விடுகின்றது. இந்நூலுக்கு நிகரான வேறு நூல் எது?”

பைபிள் மனித வேதம் தான்; எனினும் புனித இறை வேதம் என்று வாதிடுபவர் டாக்டர் கிரஹாம் ஸ்க்ராஜ்ஜி!

இவர் தான் பைபிளைப் பற்றிய இந்த மேற்கோளைக் கூறுகின்றார். அழகிய வார்த்தை நடையில் அமைந்த ஜோசபின் கருத்து பாராட்டுப் பத்திரமல்ல! இறைவன் மீது சுமத்துகின்ற அவதூறுக் குற்றச்சாட்டாகும். கிறித்தவர்கள் இதை ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்வது உண்மையில் பரிதாபம் தான். என்ன செய்வது?

இவர்கள் எங்கே கருத்துத் திருட்டுக்களைப் பற்றிக் கவலைப்படப் போகிறார்கள்? பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காப்பியடிக்கும் கலை கோலோச்சி நிற்கின்றது. கொடி கட்டிப் பறக்கின்றது. இதில் புராட்டஸ்டண்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே வேறுபாடுகள் இல்லை.

கருத்துத் திருட்டுக்கள் அடங்கிய பைபிள் இறை வேதமா? என்று சிந்தியுங்கள்.